தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.
எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.
+++++++++++++++
தமிழர் அறுபதாண்டு அட்டவணை
[இவை தமிழ் ஆண்டுகள் அல்ல; தமிழர் ஆண்டுகள்]
| எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |||
| 01. | பிரபவ | சங்க முதல்ஆண்டு | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | திவாகரர்ஆண்டு | Hevilambi | 2017–2018 | |||
| 02. | விபவ | ஔவையார்ஆண்டு | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அருணகிரிஆண்டு | Vilambi | 2018–2019 | |||
| 03. | சுக்ல | திருவள்ளுவர்ஆண்டு | Sukla | 1989–1990 | 33. | விகாரி | தியாகராஜர்ஆண்டு | Vikari | 2019–2020 | |||
| 04. | பிரமோதூத | புத்தர்ஆண்டு | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | ஜி.யூ. போப்ஆண்டு | Sarvari | 2020–2021 | |||
| 05. | பிரசோற்பத்தி | தொல்காப்பியர்ஆண்டு | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கட்டப் பொம்மன்ஆண்டு | Plava | 2021–2022 | |||
| 06. | ஆங்கீரச | நக்கீரர்ஆண்டு | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | வீரமாமுனிஆண்டு | Subakrith | 2022–2023 | |||
| 07. | ஸ்ரீமுக | இளங்கோஆண்டு | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | கால்டுவெல்ஆண்டு | Sobakrith | 2023–2024 | |||
| 08. | பவ | கண்ணகிஆண்டு | Bhava | 1994–1995 | 38. | குரோதி | தாயுமானர்ஆண்டு | Krodhi | 2024–2025 | |||
| 09. | யுவ | மணிமேகலைஆண்டு | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | நாயக்கர்ஆண்டு | Visuvaasuva | 2025–2026 | |||
| 10. | தாது | சாத்தனார்ஆண்டு | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | குமர குருபரர்ஆண்டு | Parabhaava | 2026–2027 | |||
| 11. | ஈஸ்வர | கம்பர்ஆண்டு | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | ஆறுமுக நாவலர் ஆண்டு | Plavanga | 2027–2028 | |||
| 12. | வெகுதானிய | ஒட்டக்கூத்தர்ஆண்டு | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | குமரிஆண்டு | Keelaka | 2028–2029 | |||
| 13. | பிரமாதி | ஆழ்வார்கள்ஆண்டு | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | திருத்தணிஆண்டு | Saumya | 2029–2030 | |||
| 14. | விக்கிரம | சித்தர்கள்ஆண்டு | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | காந்தியார்ஆண்டு | Sadharana | 2030–2031 | |||
| 15. | விஷு | ஆண்டாள்ஆண்டு | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | காமராசர்ஆண்டு | Virodhikrithu | 2031–2032 | |||
| 16. | சித்திரபானு | ஜெயங்கொண்டார்ஆண்டு | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | இராஜாஜிஆண்டு | Paridhaabi | 2032–2033 | |||
| 17. | சுபானு | பெருந்தேவனார்ஆண்டு | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | பரிதிமால்ஆண்டு | Pramaadhisa | 2033–2034 | |||
| 18. | தாரண | திருத்தக்கர்ஆண்டு | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | சிதம்பரனார்ஆண்டு | Aanandha | 2034–2035 | |||
| 19. | பார்த்திப | வளையாபதிஆண்டு | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பாரதியார்ஆண்டு | Rakshasa | 2035–2036 | |||
| 20. | விய | சேக்கிழார்ஆண்டு | Viya | 2006–2007 | 50. | நள | பாரதிதாசன்ஆண்டு | Nala | 2036–2037 | |||
| 21. | சர்வசித்து | பூங்குன்றனார்ஆண்டு | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பெரியார்ஆண்டு | Pingala | 2037–2038 | |||
| 22. | சர்வதாரி | நாலடியார்ஆண்டு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | அண்ணாதுரைஆண்டு | Kalayukthi | 2038–2039 | |||
| 23. | விரோதி | முத்தொள்ளாயிரம்ஆண்டு | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | வரதராசர்ஆண்டு | Siddharthi | 2039–2040 | |||
| 24. | விக்ருதி | அப்பர்ஆண்டு | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | மறைமலையார்ஆண்டு | Raudhri | 2040–2041 | |||
| 25. | கர | சுந்தரர்ஆண்டு | Kara | 2011–2012 | 55. | துன்மதி | கல்யாண சுந்தரர் ஆண்டு | Dunmathi | 2041–2042 | |||
| 26. | நந்தன | சம்பந்தர்ஆண்டு | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | விசுவநாதம்ஆண்டு | Dhundubhi | 2042–2043 | |||
| 27. | விஜய | வாசகர்ஆண்டு | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | கண்ணதாசன்ஆண்டு | Rudhrodhgaari | 2043–2044 | |||
| 28. | ஜய | வில்லிபத்தூரார்ஆண்டு | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | அப்துல் கலாம் ஆண்டு | Raktakshi | 2044–2045 | |||
| 29. | மன்மத | புகழேந்திஆண்டு | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | இளையராசர்ஆண்டு | Krodhana | 2045–2046 | |||
| 30. | துன்முகி | பட்டினத்தார்ஆண்டு | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | ரகுமான்ஆண்டு | Akshaya | 2046–2047 | |||
தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
நூலுதவி :
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி,ஆங்கிலத் தொடர் ஆண்டே தமிழருக்குப் போதும்.
சித்திரை முதல் தமிழாண்டு உங்களுக்கு வேண்டாம். நல்லது. ஆனால் மற்ற தமிழருக்குத் தேவை.
இதுவரை 60 ஆண்டுச் சுற்றுத் தமிழாண்டு பயன்படுத்திய, பண்டை நூல்களைத் தெரிந்து கொள்ள, 60 ஆண்டுத் தமிழாண்டுகள் தமிழருக்குத் தேவை. வடமொழி வெறுப்பாளரக்கு, தமிழர் பெயர்கள் இட்டால் பிடிக்கலாம்.
தை முதல் தமிழாண்டைப் பாதி திமுக நபர் தவிர, பாதி அதிமுக நபர் வெறுக்கிறார். தனித் தனிக் குதிரையில் எதிர்த்திசையில் போவது அவரவர் உரிமை. ஆனால் ஆண்டு தோறும் நேரும் சண்டைகள் நிற்கா !!!
இரண்டு பேரும் ஒரு குதிரையில் அமர்ந்து ஒரு திசை நோக்கிச் சவாரி செய்வது தான், மற்ற தமிழர் விரும்புவது.
சித்திரை முதல் தமிழாண்டைப் பின்பற்ற விரும்பாதவர், பின்பற்ற விழைபவரைத் தடுக்க வேண்டாம்.
ஐயா, எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் .. .கண்மணி கூறியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டும்.நீங்கள் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த ஆண்டு வரிசை பட்டியலை ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர் விழுக்காடு மிக மிகக் குறைவு.என்னைப்போன்று உலக நடைமுறையை ஒட்டி நடந்துவிட்டவர்கள் டைனோசார் ஒன்றை மியூசியத்தில் பார்த்துவிட்டு கடந்துவிடும் மனப்பான்மையில் இருப்பார்கள்.உண்மையான அக்மார்க் 60 ஆண்டு சோதிட அடிப்படைக்காரர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்குத் தமிழ் மொழியைவிட சமஸ்கிரத சோதிடம் முக்கியம். உங்களைப் பார்த்து நகைத்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?உண்மையான அக்மார்க் தமிழார்வலர் தொடராண்டு முறைக்கு மாறிவிடுவதால் அவர்களுக்கு சுழற்சியாண்டின் புதுப்பெயர்களால் ஒரு பயனுமில்லை. கசப்பு மாத்திரைக்கு இனிப்பு தடவி மிட்டாய் எனக் கொடுக்கிறீர்கள் என்று எளிதாகவே பகுத்தறிந்து ஏற இறங்கப் பார்த்துவிட்டு இடத்தைக் காலி செய்து விடுவார்கள்.
வரும் தலைமுறை இப்பொழுதே ஆங்கிலப்புத்தாண்டிற்கு மரீனாவிலும், ஆலயங்களிலும் (ஏதோ ஒரு சமயத்தின் கோயில்) கொண்டாடுகிறார்கள்.எஸ்கிமோவிடம் கூட பிரிட்ஜ் வாங்க யாரவது இருக்கக்கூடும். ஆனால் தங்களுக்குத் தேவையில்லை என்ற கூட்டத்திடம் இந்த தமிழாண்டை கொடுக்க நினைத்தால் வாங்க ஆளில்லை.
--
தேமொழி,
தை முதல் தமிழாண்டு எங்காவது, தமிழக மாந்தர் பயன்படுத்த, அச்சிட்டு விற்பனை ஆகிறதா ?
உங்களைப் போல் பேசும் பெரியார் சீடர் 3% - 5% கூட தமிழ்நாட்டில் இருப்பாரா ?
ஆங்கில ஆண்டு போதும் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மரபு பற்றி சுபாவுடன் எப்படி எழுதி வருகிறீர் ?
தமிழ் நாட்டரசின் சின்னத்தில் ஏன் இந்துக் கோயில் உள்ளது ???
திரு. ஜெயபாரதன் அவர்களே,
தாங்களும் தேமொழி அவர்களும் மடலாடுகின்றீர். இதில் தங்கள் இருவரின் கருத்து மட்டுமே பேசப்படுகின்றது.
ஆதலால்,
#தமிழருக்குத் தமிழாண்டுப் பெயர்கள் தேவையில்லை, தமிழாண்டு வேண்டாம், ஆங்கில ஆண்டே போதும் என்பது தமிழ் மரபை இகழ்வதாகும்.#
என்பது தேமொழி அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் அது தமிழரின் ஒட்டுமொத்த கருத்து என்பதுபோல் பொதுப்பட எழுதுவது முறையாகாது.
தமிழறிஞர் ஒன்று கூடி நீங்கள் வார மாதங்களை உள்ளபடியே வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மொழியையோ அல்லது மரபையோ பிரதிபலிக்காத 60 சுழற்சி ஆண்டு பெயர் கொண்ட முறையை மாற்றி திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டு தொடர் ஆண்டு முறையாகக் கொள்வோம் என்றுதானே கூறினார். அதனை ஏற்றுக் கொள்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?
அதனை ஏற்க மாட்டாது, தாங்கள் விரும்பியபடி 60 ஆண்டு சுழற்சி முறைக்குப் ஏதோ பல பெயர் வைத்து, இதனைப் பின்பற்றலாமா என்று கேள்வி கேட்டு விவாதத்தை வளர்ப்பது எதனால்? இத்தகைய விவாதத்தால் பயன் ஏதும் உண்டா?
சித்திரைப் புத்தாண்டு என்று சொல்வதிலும் அதனை ஏன் தமிழ் புத்தாண்டு என்று தமிழையும் உடன் அழைக்கின்றீர்? தமிழ் இல்லாமல் தமிழர் அதனை தமிழ் புத்தாண்டு என்று ஏற்க மாட்டார் என்று அறிந்துதானே ஒரு சாரர் இத்தகைய மடைமாற்றத்தைச் செய்கின்றார்.
தமிழ் நாடு அல்லாத மற்ற இந்திய மாநிலங்களில் சித்திரை முதல் நாளை 'தமிழ் புத்தாண்டு' என்று கூறுவதை என்றாவது கேட்டிருக்கின்றீர்களா? பிற இந்திய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டோர் எவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று அவரவர் தாய் மொழியில் கூறுவது கிடையாது.
அப்படியானால் சித்திரை முதல் நாளை “தமிழ் புத்தாண்டு” என்று கூறுவோர் தமிழரை கேனையன் என்று நினைத்துதானே இத்தகைய பித்தாலாட்டத்தைச் செய்கின்றனர்.
இனி சித்திரை புத்தாண்டு என்றே குறியுங்கள். அதுவே முறையாகும். சித்திரை தமிழ் புத்தாண்டு என்று குறிப்பது தமிழரை மடைமாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சியாகும். தமிழ் மரபு அறவாரியம் நடத்தும் மின் தமிழ் மடலாடல் குழுவில் அயலாரின் மரபை விடுத்து தமிழரின் அடையாளத்தை நிலை நிறுத்த முயலுவது எவ்வகையிலும் தவறாகாது.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழருக்குத் தமிழாண்டுப் பெயர்கள் தேவையில்லை, தமிழாண்டு வேண்டாம், ஆங்கில ஆண்டே போதும் என்பது தமிழ் மரபை இகழ்வதாகும். தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது என்று பெரியார் ஊதிய பழைய ஓட்டைச் சங்கொலி மீண்டும் கேட்கிறது !!!தமிழக ஆட்சிச் சின்னத்தில் இருப்பது தமிழரின் கட்டிடக் கலை, கலாச்சார மரபுச் சின்னமான இந்துக் கோபுரம் !!! இதற்குப் பூதக் கண்ணாடி தேவை யில்லை. சுபா தமிழகத்தில் ஊர் ஊர்ராய்ச் சென்று இந்து, சமண, புத்த மரபுச் சின்னங்களைக் கண்டெடுக்கிறார்.
சண்டே, மண்டே போதும். ஞாயிறு, திங்கள் வேண்டாம் !!!சனவரி, பிப்ரவரி போதும். சித்திரை, வய்காசி வேண்டாம் !!!ஆனால் தய் மாசம் மட்டும் வேண்டும். பொங்கல் வய்க்க !!!
பெரியாரின் சீடர்கள் திராவிடர்; தமிழர் அல்லர்.
பெரியாரின் ரோபாட்டுகளை இயக்குபவர் ஈவேரா. ரோபாடுகள் ஆங்கிலச் சொல் ஆணைகட்கு மட்டும்தான் கட்டுப்படும்.மெட்ரிக் ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, இந்தி படிக்க வேண்டாம் என்று தடுப்பவர். தமிழ் மரபை மதிக்காதவர், இந்தி தமிழை விழுங்கி விடும் என்று ஏன் முதலைக் கண்ணீர் விட வேணும் ???
<<பித்தலாட்டம்>> என்று அடிக்கடி சொல்லும் பெரியார் போல் பேசாதீர்.
உமது ஊசிக் கொடுக்கை உறைக்குள் மடக்கி வைத்துக் கொள்வீர்.
சி. ஜெயபாரதன்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
////இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன ////+++++++++++++++++சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்குதமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.
இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான். இவற்றில் புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம்,
On Tuesday, May 1, 2018 at 8:56:17 PM UTC-7, jayabarathans wrote:////இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன ////+++++++++++++++++சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்குதமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.
ஐயா, உங்கள் தமிழார்வம் மிகப் பாராட்டத்தக்கது.ஆனால் நீங்கள் இப்படி மிக வெள்ளந்தியாக காலத்திற்கேற்ப மக்களை அறிந்து செயல்படுவதை மறக்கிறீர்கள் என்பது வருத்தத்திற்குரியது.
நீங்கள் அளித்துள்ள ஆண்டுகளைத் தமிழர் ஏற்றுக் கொண்டதாலும் கொள்வர். அதைப் பிறகு பார்ப்போம்.
சார்வரி க்குப் பதில் ஜி.யூ. போப்ஆண்டு - Sarvari 2020–2021சுபகிருது க்குப் பதில் வீரமாமுனிஆண்டு - Subakrith 2022–2023சோபகிருது க்குப் பதில் கால்டுவெல்ஆண்டு - Sobakrith 2023–2024என்று குறித்துள்ளீர்களே அதன் அடிப்படையில் இந்து சமயத்தினர் நீங்கள் கூறும் இம்முறையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்) சித்திரை புத்தாண்டுக்கு நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று"பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின் பஞ்சாங்கம் ???!!!! வாய்ப்புண்டா?
2018-05-02 9:55 GMT-04:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:///இந்து சமயத்தினர் நீங்கள் கூறும் இம்முறையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்) சித்திரை புத்தாண்டுக்கு நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று"பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின் பஞ்சாங்கம் ???!!!! வாய்ப்புண்டா?நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்...///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?/// என்று.இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். ////++++++++++++தேமொழி,தமிழ்க்கடலில் நான் ஒரு கல்லைப் போடுகிறேன். அலை வேகத்தை அமுக்கி அது ஓர் சிற்றலை உண்டாக்குவதைக் காணாமல் போகலாம். அது எழுப்பும் ஓசை காதில் கேட்காமல் போகலாம்.ஆனால் குறள் என்ன சொல்கிறது ?எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணிய ராகப் பெறின்.வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றவை எல்லாம் பிற.எனது குறிக்கோள் :தமிழரிடையே ஒருமைபாட்டை உருவாக்குவது.
///வாழ்த்துகள் கனவு காண யாவருக்குமே உரிமையுண்டு ஐயா.இது போலத்தான் தொடராண்டு முறை வகுத்தபொழுதும், தைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் வகுத்தோரும் தங்கள் மனதில் எண்ணியிருப்பார்கள். ////தேமொழி,இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.
பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி, தீராத பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.
சி. ஜெயபாரதன்
--
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
///வாழ்த்துகள் கனவு காண யாவருக்குமே உரிமையுண்டு ஐயா.இது போலத்தான் தொடராண்டு முறை வகுத்தபொழுதும், தைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் வகுத்தோரும் தங்கள் மனதில் எண்ணியிருப்பார்கள். ////தேமொழி,இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.
பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி, தீராத பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.
திமுகவும், அதிமுகவும்தான் தை முதல் தமிழாண்டையும், சித்திரை முதல் தமிழாண்டையும் மாற்றி, மாற்றி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் புகுத்தி/நீக்கித் தம் ஆட்சி ஆதிக்கத்தைக் காட்டி வருகிறார்.பெரியார் கறுப்புக் கண்ணாடி மூலம் தமிழ்நாட்டைப் பார்த்தால் திராவிடக் கட்சியின் தவறுதல்கள் சீடர்களுக்குத் தெரியா !!!திமுக பிளவு பட்டு அதிமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது கருணாநிதியால் தான் !!!எங்கள் ஊர் திருமங்கலத்தில் [மதுரை] எனக்கு 12 வயதாகும்போதே நான் கேட்டுள்ளேன். மாரி அம்மன் கோயிலில் சித்திரை முதல் தமிழாண்டில் குருக்கள் புது வருடப் பஞ்சாங்கம் படித்துப் பருவக் கால விளவுகளை எடுத்துச் சொல்லுவார். அம்முறை 2017 ஆண்டிலும் வாடிக்கையாக நடந்து வருகிறது. அறிஞர் மட்டும் நினைத்த தை மாதத் தமிழாண்டு எங்கள் ஊருக்கு வரவே இல்லை.தமிழ்நாட்டில் எந்த எந்த ஊர்க் கோயில்களில் தை மாத தமிழாண்டில் பஞ்சாங்க வாசிப்பு இப்போது நடக்கிறது ???
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
This article gives a list of various almanacs. Note that almanac can also be spelled almanack, and some of the publications listed use this form.
உலகவாழ் தமிழர்களுக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க என்னும் இரு தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?மலேசிய தமிழர் என்ன இக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு அவர்களைத் தேர்ந்தெடுத்தனரா?தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் மரபைச் சார்ந்தது. அவ்வாறு இருந்தால் அது உலக வாழ் தமிழருக்கு ஏற்புடையதாக இருக்கும். அதனால் தமிழக கட்சிகளை உள்ளே நுளைத்து தமிழறிஞர் முன் வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை
திருவள்ளுவர் (Thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்.
கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும்,முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில்
அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.[சான்று தேவை]
சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
தையே தமிழர் புத்தாண்டு என்ற குரல் 2000களில் மிக வலுவாக எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்கள், தை புத்தாண்டு என்று பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலையடிகள் முதலான நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் முன்மொழிந்தார்கள் என்று ஆதாரம் சொன்னார்கள்.[8][9] பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று.[1][2][5] தமிழறிஞர்கள் ஒன்று கூடி ப்ரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.[5]
தமிழக அரசின் அரசாணையுடன் 2008இல் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு, 2012 ஆட்சிமாற்றத்தில், மீண்டும் சித்திரைக்கே தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட்டது. எனினும் சமகாலத்தில், தைப்புத்தாண்டு எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ் சார்ந்த தேவைகளின் போது, திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றிய திருத்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலும், இலக்கிய அரசியல் சார்ந்த தன்னிச்சையான முடிவுகளாலும், அது முன்மொழியப்படுவதன் படி, தை ஒன்றே இன்றும் திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது.[4][10]
+++++++++++--
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
சிவசிவ
தமிழ் நாட்டுத் தமிழருக்கு எது தமிழர் புத்தாண்டு என்பது சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழை உயர் கல்விக்கூடங்களிலும் அரசாங்க அலுவல்களிலும் முதன்மை மொழியாக்க முன்னெடுத்த நடவடிக்கைகள் எதுவும் இன்று நம்மவர் கண்ணுக்குத் தெரிவதில்லை மாறாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்பது மட்டுமே முதன்மை வாதமாக உள்ளது. அதன் உண்மையை அறிய வேண்டுமானால் அதன் மூலம் எங்குள்ளது என்பதை அறிந்து அதனைத் தீர விசாரித்து அறிவதே நமக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும். அதற்கு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1924ஆம் ஆண்டு முதல் வெளியிட்ட ‘செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழை ஆராய்ந்தால் உண்மை கிட்டும்.
வைக்கிப்பீடியா தமிழ் பிரிவில் எழுதப்படும் தகவல்களெல்லாம் ஒரு தகவல் சேகரிப்பு மையம் என்பதன் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டு கூறப்படுகின்றது. அவை முதன்மை தரவாகாது. ஆகவே அங்கிருந்து எதனையும் வெட்டி இங்கே ஒட்டினால் நமது கேள்விக்குத் தெளிவான பதில் கிட்டப்போவதில்லை என்பது உண்மை.
திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை ஏற்படுத்தப்பட்டு பின்பற்ற வேண்டுமென்று 1921ஆம் ஆண்டு முடிவெடுத்தப் பிறகு பூனைக்கு யார் மணிகட்டுவது என்னும் பிரச்சனையும் கூடவே எழுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு காரணம் அன்று கூடிய தமிழறிஞர் கூட்டத்தில் ஒரு பிரிவினர் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையை எதிர்த்துப் போர் கொடி தூக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மறைமலை அடிகளார். அவரை சுற்றியிருந்தோரில் பலர் சைவ தமிழ் அறிஞர் மற்றும் கிறித்துவ, முசுலிம் மதங்களைச் சார்ந்த தமிழறிஞரும் அடங்குவர். அக்கூட்டத்திற்கு வந்தோரில் பிராமணரும் வைணவ தமிழறிஞரும் அடங்குவர். பின்னவரே தமிழ் நாட்காட்டி என்பது திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையாக இருக்க வேண்டும் என்னும் பரிந்துரையை எதிர்த்தவர்.
அப்படியானால் திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி முறை வேண்டுமானால் அதனை பிராமணரோ அல்லது வைணவரோ எழுதும் பஞ்சாங்கத்தில் அச்சடித்து நடைமுறைக்கு கொண்டு வர இயலாது. இது முதல் தடை.
இம்முதல் தடையைத் தாண்ட சைவர் வழி பஞ்சாங்கம் வெளியிட வேண்டிய அவசியம் அத்தமிழறிஞருக்கு ஏற்பட்டது. அந்த தடையை நிவர்த்தி செய்தவர் மறைமலை அடிகளின் மருமகனாகிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முதல் தலைவர் திருவரங்கனார் ஆவார்.
1929ஆம் ஆண்டு கழகத்தினர் முதற் தடைவையாக சைவ ஆகமப்படி பஞ்சாங்கம் ஒன்றைக் கணித்து வெளியிட்டனர். அதில் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையும் கொடுக்கப்பட்டது. திருவள்ளுவர் நாட்குறிப்பு அப்பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்னும் தகவல் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு மலரில் (1961) குறிக்கப்பட்டுள்ளது. ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வரலாறு’ என்னும் கட்டுரை இத்துடன் இணைக்கப்படுகின்றது. அக்கட்டுரையில் பி.டி.எப் கோப்பின் 10வது பக்கத்தில் இத்தகவலைக் காண்க.
இதனையடுத்து 1932ஆம் ஆண்டு முதல் கழகம் திருக்குறள் நாட்குறிப்பு ஒன்றை அச்சடித்து வினியோகித்துள்ளனர். இதற்கான தரவை மேற்கூறிய கட்டுரையில் இறுதி பக்கத்தில் காண்க. அதன் பின்னரே, 1935ஆம் ஆண்டு சென்னையில் தமிழறிஞர்களால் திருவள்ளுவர் திருநாட் கழகம் நிறுவப்பெற்று திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது என்பதை மின் தமிழார் அறிய வேண்டும்.
ஆகையால் தமிழ் வைக்கிப்பீடியாவில் கொடுக்கப்பட்ட கீழ்காணும் தகவல் உண்மையறியாது கூறியது என்பதை அறிவோம்:
#இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,[19] 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்[20] 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.[14]” #
மேற்கூறிய இறுதிக் கூற்றுக்கு ஆதாரமாகக் குறிக்கப்படுவது,
“பால கௌதமன் (23 பெப்ரவரி 2013). ‘திரிபே வரலாறாக.’ தமிழ்ஹிந்து.”
முதலாவதாக “தமிழ்ஹிந்து” தளம் எத்தகைய தன்மையுடையது. அவர் எவர் சார்புடையோர் என்பதையறிந்து கொண்டால் அத்தளத்தின் சில தகவல்கள் நம்பகத்தன்மையானதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
1929ஆம் ஆண்டு முறையாகக் கணிக்கப்பெற்ற சைவ பஞ்சாங்கத்தின் வழி திருவள்ளுவர் ஆண்டு முறை பின்பற்றப்பட்டதும் அதனையொட்டி திருக்குறள் நாட்குறிப்பு 1932ஆம் ஆண்டும் கழகத்தாரால் வெளியிடப்பட்டது என்றால் 1935ஆம் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுவதற்கு முன்னமே திருவள்ளுவர் ஆண்டு முறை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை அறியலாம். இவ்வுண்மையை அறியாது திரு. பால. கௌதமன் என்பவர் எழுதிய கருத்தை மேற்கோற் காட்டும் தமிழ் வைக்கிப்பீடியா என்ன உண்மையான தகவலா? இப்பொழுது ‘திரிபே வரலாறாக’ கூறுவது ‘தமிழ்ஹிந்து’ தளமா அல்லது தமிழரா என்பதை மின் தமிழாரே புரிந்து கொள்வார்.
திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை 1929ஆம் ஆண்டு முதலே சைவ பஞ்சாங்கத்தின் வழி ஆவணப்படுத்தப்பட்டதென்றால் இவ்வுண்மையை எவர் மறுக்க இயலும்? அன்று முதலே திருவள்ளுவர் ஆண்டு முறை தொடக்கம் தை முதல் நாள் என்றுதானே கூறப்பட்டு வந்துள்ளது. அப்படியானால்,
#பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று.[1][2][5] தமிழறிஞர்கள் ஒன்று கூடி ப்ரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள்கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.[5]#
என்று பொய்யுரைப்பது
எங்ஙனம் உண்மையாகும்? அவ்வாறு திருவள்ளுவர் திருநாள் 1935ஆம் ஆண்டு
தொடங்கி ஆண்டுதோரும் நடாத்தி வந்துள்ளனர் என்னும் உண்மையை மேற்கூறிய கட்டுரையின் ‘திருக்குறள்
திருப்பணி’ என்னும் குறுந்தலைப்பின் கீழ் (பக். 10) காண்க.
அறைகுறை அறிவோடு எவராவது ஒரு கருத்து எழுதினால் அதுதான் உண்மை என்பது போல எடுத்துக்கொண்டு கொண்டாடுவதை மின் தமிழார் நிறுத்த வேண்டும். இல்லையேல், மின் தமிழ் மடலாடலின் தரம் தாழ்ந்து போகும். திருவள்ளுவர் திருநாள் என்பது ஏற்பாட்டாளர் வசதிகேற்ப ஒரு நந்நாளில் வைக்கப்பட்டது. இவ்வுண்மையை அறியாது அத்திருநாள் 1935ஆம் மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் வைகாசி மாதத்தில் வைக்கப்பட்டதால் தமிழறிஞர் முன்மொழிந்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை வைகாசி தொடக்கத்தைக் கொண்டது என்பதும் தை முதல் நாளை கொண்டதல்ல என்பதும் தவறான புரிதலால் கூறப்பட்டதாகும். இவ்வுண்மையை மறுத்தால் மேலும் தரவுகளுடன் எழுதுவேன்.
இதுகாறும் எழுதிய கருத்து இவ்விழையை தொடர்ந்து பின்பற்றி வருவோருக்கு உண்மை நிலையை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று நம்பி இத்துடன் நிறுத்துகிறேன். சிவசிவ.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
1) திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது அவர் இயற் பெயரல்ல.2) தமிழர் இனம் அவர்தம் ஒற்றுமையின்மையால் அயலாரால் தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவர்களுக்கென்று ஒரு தொடர் ஆண்டு முறையை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்பதை எழுதிக்காட்ட இயலாது போனது.
3) இப்படி தமிழரின் வரலாற்றை தொடர் ஆண்டு முறையில் எழுதி வைக்காது போனதால்தான் இன்று தங்களுக்கும் எனக்கும் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தமிழர் வரலாற்றை இத்தகைய குறையின்றி எழுதிக்காட்டதான் ஒரு தொடர் ஆண்டு முறை தமிழருக்குத் தேவைப்பட்டது. இதன் அவசியத்தை உணர்ந்த தமிழறிஞர் அதற்கு மறைமலை அடிகளின் தலைமையில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது:(அ) இனி தமிழர் வரலாற்றை எழுத நமக்கு ஒரு தொடர் ஆண்டு முறை வேண்டும் என்பதாகும்.(ஆ) தமிழர் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வாழ்வதால் ஆங்கே எவ்வொரு சமயத்தைச் சார்ந்த அல்லது அடையாளப்படுத்தும் வண்ணம் அத்தொடர் ஆண்டு முறைக்குப் பெயர் வைப்பதானது தமிழரிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தனர்.
தமிழர் அனைவரும் ஒன்று கூடி போற்றும் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருக்கு அத்தகைய பெருமை சென்று சேர வெண்டுமென்று அறிந்து உணர்ந்து அத்தகைய தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தனர்.
இதில் தமிழரின் ஒற்றுமை முன் வைக்கப்பட்டது. அதை நிலை நிறுத்தவே அவர் பாடுபட்டனர்.
நெடுநல்வாடை யில் வானியல்
.... நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக 160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு ....
பரிபாடலில் வானியல்
கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,
சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு?
11. வையை
“உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்”
தங்களின் மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதில் கொடுத்தாகி விட்டது.
ஐயா தேனீ அவர்களுக்கு வணக்கம்.எனது முதலிரண்டு கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.1) திருக்குறள் எந்த ஆண்டு யாரால் இயற்றப்பட்டது?2) திருவள்ளுவருக்கும் தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு?2018-05-05 7:49 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:1) திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது அவர் இயற் பெயரல்ல.2) தமிழர் இனம் அவர்தம் ஒற்றுமையின்மையால் அயலாரால் தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவர்களுக்கென்று ஒரு தொடர் ஆண்டு முறையை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்பதை எழுதிக்காட்ட இயலாது போனது.இயர்பெயர் இன்னதென்று அறியமுடியாத ஒருவரை,அதுவும் அவர் திருக்குறளை எந்த ஆண்டு இயற்றினார் என்பதை எழுதிக்காட்ட இயலாது போதுதிருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணக்கிட்டதை எதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியும்?
திருவள்ளுவர் என்பது ஸ்ரீவல்லபர் என்ற வடசொல் பல நூற்றாண்டுகளாகத் தற்பவமாக இயங்கியிருக்கும். வேளிர் குலத்தார் இருமொழி வல்லவர்கள்.
அவ்வாறு, சுமார் கி.பி. 4 (அ) 5 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த தமிழ்க் கவிஞர்களிலே ஒப்பற்ற புலவர் பெருமான் திருவள்ளுவர். குறளில் தம் சமண
சமயத்தில் இருந்து தமிழர்கள் அனைவர்க்கும் பொதுவாக வள்ளுவர் எழுதிய அற நூல். இந்தியாவின் தேசிய நூல் என்றால் எல்லா சமயத்தவர்க்கும்,
எல்லா ஜாதியினர்க்கும் பொருந்துகிற நூல் குறள் ஒன்றே, பகவத் கீதை ஒரு ஜாதியினர் புகழ் பாட அவர்கள் எழுதிய நூல் ஆகும்.
வள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று மறைமலையடிகள் அறிவித்தார். எல்லிஸ், கால்ட்வெல் போன்றோர் உலக மொழியியல் துறையில் செய்த சாதனைகளின் தாக்கத்தால்
தமிழ் மறுமலர்ச்சி கண்டது. தனித்தமிழ் இயக்கத் தந்தை அவர். எவ்வாறு வள்ளுவர் காலத்தைத் தப்பிதமாய்க் கணித்தாரோ அதே போல, மாணிக்கவாசகரை
(கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) கி.பி. 3-ஆம் நூற்றாண்டு என்றார் மறைமலை அடிகள்.
அதனால்தான் , தமிழ்நாட்டு ராஜாங்கம் நடைமுறைப்படுத்திய தைப்பொங்கல் புத்தாண்டு என்னும் தொடராண்டு கி.மு. 31-ல் தொடங்குகிறது. மறைமலை அடிகளுக்கு தமிழ்மக்கள் செலுத்தும் மரியாதையாக கி.மு.31-ல் தொடங்கும் திருவள்ளுவர் தொடராண்டு - தைப் பொங்கல் புத்தாண்டு தினமாகக் கொள்ளவேண்டும்.
எனது மூன்றாவது கேள்வியும் தங்களது பதிலும்.3) தொடர் ஆண்டு முறைக்குத் திருவள்ளுவரின் பெயரை ஏன் வைக்க வேண்டும்?
தமிழ்க் கவிஞர்களில், தமிழர் சமுதாயத்தில் திருவள்ளுவரைப் போல் தமிழர் சமூகம் என்றும் வாழ வழிகாட்டி யாருமில்லை.
எனவே தான், தமிழர் தொடராண்டு திருவள்ளுவருக்கு என தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். உ-ம்: மறைமலை அடிகள், கா. நமச்சிவாயர், நாவலர் சோமசுந்தர பாரதியார், ....
ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இவ்வாறு சிந்தித்துச் செயல்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களின் பெற்றியை, அறிவுத்திறத்தை வியக்காமல் இருக்கமுடியாது.
3) இப்படி தமிழரின் வரலாற்றை தொடர் ஆண்டு முறையில் எழுதி வைக்காது போனதால்தான் இன்று தங்களுக்கும் எனக்கும் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தமிழர் வரலாற்றை இத்தகைய குறையின்றி எழுதிக்காட்டதான் ஒரு தொடர் ஆண்டு முறை தமிழருக்குத் தேவைப்பட்டது. இதன் அவசியத்தை உணர்ந்த தமிழறிஞர் அதற்கு மறைமலை அடிகளின் தலைமையில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது:(அ) இனி தமிழர் வரலாற்றை எழுத நமக்கு ஒரு தொடர் ஆண்டு முறை வேண்டும் என்பதாகும்.(ஆ) தமிழர் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வாழ்வதால் ஆங்கே எவ்வொரு சமயத்தைச் சார்ந்த அல்லது அடையாளப்படுத்தும் வண்ணம் அத்தொடர் ஆண்டு முறைக்குப் பெயர் வைப்பதானது தமிழரிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தனர்.தமிழர் அனைவரும் ஒன்று கூடி போற்றும் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருக்கு அத்தகைய பெருமை சென்று சேர வெண்டுமென்று அறிந்து உணர்ந்து அத்தகைய தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தனர்.ஐயா,தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்றிடும் திருவள்ளுவருக்கும் தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு? எனது கேள்வி.தொல்காப்பியத்தைத் தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்ற வில்லையா? ஏன் தொல்காப்பியரை முன்னிலைப் படுத்தலாமோ.
திருவள்ளுவர் திருநாள் என்பது தைப் பொங்கல் தினம். தமிழர்களின் தொடராண்டு திருவள்ளுவர் ஆண்டு என தமிழர்களின் அரசாங்கம் செயல்படுத்திவருகிறது.
திருவள்ளுவருக்கு அடித்தளம் அமைத்தவர் தொல்காப்பியர் தாம். தொல்காப்பியர் திருநாள், 60-ஆண்டுச் சுழற்சி ஆண்டின் வருஷப் பிறப்பு ஆகிய சித்திரைத்
திருநாள் என்று கொண்டாடலாம். தொல்காப்பியரே சித்திரை, வைகாசி, ... 12 அமாந்த மாதங்களின் பெயர்களுக்கு இலக்கணம் தந்தவர். எனவே,
அவரது திருநாள் என சக வருஷம் பிறக்கும் சிதிதிரைக்கணியைக் கொள்ளுதல் பொருத்தம்.
இதுபற்றி விரிவாக டில்லியில் இருந்து வெளியான வடக்குவாசல் இதழில் பல ஆண்டு முன்னரே விரிவான கட்டுரை வரைந்துள்ளேன். மின்தமிழ் ஆவணக்
களரியில் கிடைக்கும்.
தைப்பொங்கல் - திருவள்ளுவர் ஆண்டு - தமிழர்களின் தொடராண்டு. தொடக்கம் கி.மு. 31
சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.
சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.
ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்.
ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்
படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில் ”ஆடு தலையாக” என்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்
இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை ஆர். நீலகண்டன் விடுத்த வினாவின் பதிலிலும், பல்லாண்டு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.
நிச்சயமாக, பிரம்மகுப்தர் (பிறப்பு: கி.பி. 598) பின்னர் தான் சித்திரை முதல் நட்சத்திரம். ஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக் கார்த்திகையை
முதல் நட்சத்திரம் எனப் பாடிச் சென்றுள்ளார். வட இந்தியாவில் பிரம்மகுப்தர், வராகமிகிரர் போன்றோர் கார்த்திகையை, சித்திரை நட்சத்திரம்
ஆக்குவது ஏழாம் நூற்றாண்டிலே தான். எனவே, தமிழர் சித்திரை முதல் நக்ஷத்திரம் எனக் கொள்வது 8 (அ) 9 நூற்றாண்டே,
பொம்பெய் (Roman empire) போன்ற நகரங்களில் அரச மாளிகைகளில் வரைந்த யவனர்கள் பாண்டியர் அரண்மனைகளில் வரைந்தது
ராசி சக்கரத்தின் முதல் படி எனலாம். அப்போது கேப்ரிகார்ன், ஏரிஸ் இரண்டும் ஆடுதான். கேப்ரிட் என்றாலே ஆடுகள் தாம் விஞ்ஞானத்தில்.
ஏரிஸ் (மேழம், sheep), கேப்ரிகார்ன் (ஆடு, goat). எனவே, நெடுநல்வாடை பாடுவது சித்திரை நட்சத்திரம் பௌரணமியாக வரும் மாதம் என்பது பிழை.
கார்த்திகை தான் சங்க கால நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம். கார்த்திகை பற்றியே சங்க இலக்கியங்களில் மிகக் குறிப்புகளை ஓர்க.
மேலும், ஆடு தலையாக (நெடுநல்வாடை) என்பதில் ஆடு எது? கேப்ரிகார்னா? ஏரிஸா? - இதுவும் உறுதியாய்க் கணிக்க இயலாது.
மட்டஞ்சேரி பேலஸ் போய்ப் பாருங்கள். அதன் சித்திரங்களும் யவனர்களைக் கொண்டு வரைந்தனவே.
கேப்ரிகார்ன் ஆடு தலையாகக் கொண்ட மகராயனம் (உத்தராயனம்) பொங்கலை தமிழறிஞர்கள் திருவள்ளுவர் தொடராண்டு என
அறிவித்தனர்.
The wheel of Philology turns slowly, like the Buddha's Wheel of Dharma.
பிற பின்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
////திருவள்ளுவருக்கு அடித்தளம் அமைத்தவர் தொல்காப்பியர் தாம். தொல்காப்பியர் திருநாள், 60-ஆண்டுச் சுழற்சி ஆண்டின் வருஷப் பிறப்பு ஆகிய சித்திரைத் திருநாள் என்று கொண்டாடலாம். தொல்காப்பியரே சித்திரை, வைகாசி,.....12 அமாந்த மாதங்களின் பெயர்களுக்கு இலக்கணம் தந்தவர். எனவே, அவரது திருநாள் என சக வருஷம் பிறக்கும் சிதிதிரைக்கணியைக் கொள்ளுதல் பொருத்தம்.
நா கணேசன்////
சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.
சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.
ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்.
ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்
படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில் ”ஆடு தலையாக” என்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்
இருக்க வாய்ப்புகள் உண்டு.
11. வையை
“உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்”
மகரம் = திருவாசியில் இரண்டுபக்கமும் காணப்படும் உருவம்.
அன்பன்
கி.காளைராசன்
இமயமலைக்கு மேலே பறந்தாலும் காக்கை அன்னமாக முடியாது என்ற சிந்தனையுடன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
2018-05-05 11:12 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.
>தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை. நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்.தொல்காப்பியம் (அகத்திணையியல், நூற்பா-5) திணைகளை வரிசைப்படுத்துகிறபோது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறிவிட்டு, அடுத்ததாக அவற்றுக்குரிய பருவங்களை வரிசைப்படுத்தும்போது கார்காலம் தொடங்கி வரிசைப்படுத்தப்படுகிறது. இதற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர், சிங்கவோரை தொடங்கி கற்கடகவோரை முடிய ஓர்யாண்டாதலின் தொல்காப்பியர் இவ்வாறு வரிசைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார்.சிங்க மாதம் 1-ஆம் தேதி தான் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான புத்தாண்டு. தமிழ்நாட்டு அரசுக்கு திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கல் திருநாள் போல, கேரளாவிலும் சித்திரைத் திருநாளும் (விஷு என்னும் விழுவ நாள்), ஆவணி 1 (= சிங்கம் 1) என இரண்டு புத்தாண்டு தினங்கள் உள்ளன.நா. கணேசன்
The Malayalam calendar or the Kolla Varsham has been in place since CE 825. 1193 Kolla Varsham or Malayalam Year of the Malayalam calendar began on 17 August, 2017. This calendar is referred to when most of our events and festivals are held. It has 12 months and following is name of the month in the Malayalam calendar and the corresponding month in the English calendar:
| Sl.No | Malayalam Month | Corresponding English Months (Approximate Dates) |
| 1. | Chingam | August 16th - September 15th |
| 2. | Kanni | September 16th - October 15th |
| 3. | Thulam | October 16th - November 15th |
| 4. | Vrischikam | November 16th - December 15th |
| 5. | Dhanu | December 16th - January 15th |
| 6. | Makaram | January 16th - February 15th |
| 7. | Kumbham | February 16th - March 15th |
| 8. | Meenam | March 16th - April 15th |
| 9. | Medam | April 16th - May 15th |
| 10. | Edavam | May 16th - June 15th |
| 11. | Mithunam | June 16th - July 15th |
| 12. | Karkidakam | July 16th - August 15th |
(The dates may vary by two or three days on either side. For example, the 1st day of Chingam, may fall between August 13th - August 17th)
> அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் "சித்தெறும்பும்" கூறும்.
>
> சி. ஜெயபாரதன்.
>
>>
>> 2018-05-05 19:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>>
>>> சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.
>>>
>>>
>>>
>>> சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.
>>>
>>> ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்.
>>>
>>>
>>>
>>> ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்
>>>
>>> படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில் ”ஆடு தலையாக” என்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
>>>
>>> ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்
>>>
>>> இருக்க வாய்ப்புகள் உண்டு.
>>
>>
>>> இதனை ஆர். நீலகண்டன் விடுத்த வினாவின் பதிலிலும், பல்லாண்டு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.
>>>
>>>
>>>
>>> நிச்சயமாக, பிரம்மகுப்தர் (பிறப்பு: கி.பி. 598) பின்னர் தான் சித்திரை முதல் நட்சத்திரம். ஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக் கார்த்திகையை
>>>
>>> முதல் நட்சத்திரம் எனப் பாடிச் சென்றுள்ளார். வட இந்தியாவில் பிரம்மகுப்தர், வராகமிகிரர் போன்றோர் கார்த்திகையை, சித்திரை நட்சத்திரம்
>>>
>>> ஆக்குவது ஏழாம் நூற்றாண்டிலே தான். எனவே, தமிழர் சித்திரை முதல் திங்கள் என பௌர்ணமியில் வரும் நக்ஷத்ரத்தை வைத்துக் கொள்வது 8 (அ) 9 நூற்றாண்டே,
>>>
--
--
60 மீள்சுற்று ஆண்டுகள் என்று திருத்திக் கொள்ளவும்.
இப்போது ஆளும் ஜெயலலிதாவின் அதிமுக பின்பற்றுவது சித்திரை முதல் தமிழாண்டு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
/////தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது. /////
>/////தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை.நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்./////சித்திரை முதல் தமிழாண்டு எதுவெனச் சொல்லாமல் அந்தண மேதை தொல்காப்பியர் 2000 ஆண்டுக்கு முன்பு தொல்காப்பியம் நூல் எழுதியிருக்கார் என்று ஆராய்ச்சியாளர் நா. கணேசன் கூறுகிறார்.
பூனையின் கண்ணுக்கு யானை தெரியாவிட்டால், யானையே இல்லை என்று பூனை நினைக்கிறது.
////உதாரணமாக, இபிஎஸ், ஓபிஎஸ் அரசாங்கம் மண்சோறு உண்டு,தீச்சட்டி எடுத்து ஆடும் என்னும் அதிமுக பெண்மணிக்கு (பா. வளர்மதி) “பெரியார் விருது”கொடுத்து கௌரவித்துள்ள்ளது. திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்.
///’பெரியார் விருது’ பெற்ற பா. வளர்மதி தன் தலைவி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளால்ஊழலுக்கு தடங்கல் இல்லாமல் தொடர வேண்டும் என்ற மனமார்ந்த பிராத்தனைகளைமாரியம்மன் ஏற்கவில்லை. இப்பொழுது வளர்மதியின் தலைவி, பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில்வளர்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆகினார் - இருந்திருந்தால் வெங்காலூர் பாப்பன அக்கிரகாரம் வெஞ்சிறையிலே///<<திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்>> இந்த வேடிக்கை நடந்ததாக நா. கணேசன் என்பவர் எழுதிக் காட்டியிருக்கிறார். பலே, பலே ஆராய்ச்சி.ஜெயலலிதாவின் அதிமுக ஒருநாளும் தைமுதல் தமிழாண்டைஏற்றுக் கொண்டதில்லை. வரலாற்றை மாற்றாதீர் !!!சி. ஜெ.
வணக்கம் ஐயா,தங்கள் மடலைக் கண்டேன்.திருக்குறளை இயற்றிய சான்றோன் தான் இன்னாரென்று குறியாது போனது அவர்தம் பெருமையைக் காட்டும். எதையும் தன் செயலன்றி இறைவன் செயலென்று போற்றும் பண்புடையோர் மட்டுமே இத்தகைய அரிய செயலைச் செய்யவல்ல பெரியோர் ஆவார்.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுஎன்னும் குறளுக்கான சைவத்தின் பொருள் புரிந்தாருக்கு மட்டுமே ஏன் திருவள்ளுவர் தம் பெயரைக் குறிக்காமல் போனார் என்பது புரியும்.சங்ககால புலவர் முதற்கொண்டு வள்ளுவனார் என்று போற்றிப் பாடிய பாடல்களை திருவள்ளுவமாலையில் காணலாம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பெயரை தாங்கள் ஏற்றுக் கொள்ளாமால் போனால் அது திருவள்ளுவருக்கோ அல்லது திருக்குறளுக்கோ எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தாது.அத்தகைய நம்பிக்கையில்லாத தாங்கள்
திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் புறக்கணித்துப் பேசுவதானது அகத்தின் அழகை முகத்தில் காட்டுகின்றது.திருவள்ளுவர் பிறந்த ஆண்டு அல்ல மாறாக திருக்குறள் இயற்றிய காலத்தை கி.மு. 31ஆக வைத்தது ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு காரணம் தமிழரிடையே தொடர் ஆண்டு முறை ஏதும் அன்று தொட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடங்கிய நாள் வரை இருந்ததற்கான சான்று ஏதுமில்லை.
அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம்.திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் நெறியைக் கூறும் ஓர் அற்புத நூல். அது தமிழர் என்பாருக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயன்படும் நூல். அதனால்தான் அது பொது மறை, உலகு மறை என்றெல்லாம் சிறப்பு பெயர் பெற்றது.திருக்குறள் காலத்தை அறுதியிட்டுச் சொல்ல வக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு அதற்கு முந்தைய நூலான தொல்காப்பியத்தின் காலத்தை எந்த நாளில் வைப்பீர்? ஏனையா எழுதத் தெரியுமென்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்லாம் அறிவுடைமையாகாது. ஏதோ ஒரு விதண்டாவாதத்திற்காக எழுதலாம். ஆனால் அதன் பயன் சுழியமாகும்.
தமிழருக்கு ஓர் தொடர் ஆண்டு முறை வேண்டுமென்ற பரிந்துரையை முன் வைத்த பொழுது அது தமிழர் அனைவருக்கும் ஒவ்வக்கூடியதாக இருக்க வேண்டுமென்பது தமிழறிஞரின் வேண்டுதலாக இருந்தது.
அன்றே தமிழரில் இந்து, கிறித்துவர், முசுலிம் மதத்தவர் என்று மத வாரியாகப் பிரிந்து கிடந்தோரை இத்திருவள்ளுவர் ஆண்டு முறையானது இணைப்புப் பாலமாக அமையும் என்னும் ஒருமைப்பாட்டு நோக்குடன்தான் முன் வைக்கப்பட்டது.
இதில் தமிழரின் ஆண்டு முறை அடையாளமென்பது சமயத்தைச் சார்ந்து நில்லாமல் அவர்தம் பண்பாட்டைச் சார்ந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
அவ்வாறு செய்வது தகாது. தமிழர் ஆண்டு முறை இந்துக்கள் என்பாருக்கு மட்டுமே உடையதாக இருக்க வேண்டுமென்று தாங்கள் வாதிடுவீர்களானால் இம்மடலாடல் குழுவில் இடம் பெற்றிருக்கும் முனைவர் ஐயா பாண்டியராஜா போன்ற நல்லதொரு மனம் படைத்த தமிழர் பலரை மின் தமிழ் மடலாடல் குழுவிலிருந்து நீக்கி விட்டு தங்களைப் போன்றோர் மட்டுமே மடலாட முடியும். இது தமிழரின் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பிரிக்குமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தங்களின் நெடுநல்வாடை மற்றும் பரிபாடலுக்கான பதிலை தனியே பதிவிடுவேன். நன்றி.
வணக்கம் ஐயா.
தங்கள் கருத்துக்கு பதில் எழுதுவதானது எமது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. இருப்பினும் தாங்கள் முன் வைக்கும் சில கருத்துக்கள் இவ்விழையின் நோக்கத்திற்கு உதவி புரிவதாக இல்லை.
அவை,
#தனது பெயரையே காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா? இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.#
திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா தமிழறிஞர் திருவள்ளுவர் பெயர் கொண்ட தொடர் ஆண்டு முறையை வைக்க முற்பட்டனர்? திருவள்ளுவர் விருப்பு வெறுப்பை அறிந்து கொண்டா கலைஞர் வள்ளுவர் கோட்டத்தையும் தென்குமரி முனையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கவும் ஆவண செய்தார். திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா திருவள்ளுவர் திருநாட் விழாவை தமிழறிஞர் முன்னெடுத்தனர். இதையெல்லாம் திருவள்ளுவரை கேட்டு எவரும் செய்யவில்லை. அவர் இயற்றிய திருக்குறளின்பால் காதல் கொண்டு அதன் மீது தமிழறிஞர் வைத்துள்ள மதிப்பால் செய்யப்படும் போற்றுதலாகும், ஒருவரின் நற்செயலைப் போற்றுவதை திருவள்ளுவர் ஏற்கின்றார்.
திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஒப்பமாட்டார் என்பதானது தமிழ்ச் சான்றோனுக்கு தமிழர் காட்டும் மரியாதைக்கு ஊறு விளைவிப்பதாகும்.
#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#
தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.
#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#
திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா? பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.
#சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.
ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.#
தமிழறிஞர் முன்வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு பஞ்சாங்கத்தின் மூலம் பின்பற்றப்படும் வானியல் சாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு துவக்கத்தை தமிழர் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டி தை திங்கள் முதல் நாளில் வைத்துக் கொண்டனர். மரபுகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறலாம். மாற்றமே என்றும் மாறாதது என்னும் உண்மையை தாங்கள் ஏற்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்.
சீனர் எம்மதத்தவராயினும் அவர்தம் சீனப் புத்தாண்டை அனைவரும் மத பேதம் பாராது ஒருங்கே கொண்டாடுவர். அது அவர்தம் பண்பாட்டு நிகழ்வாகத் திகழ்கின்றது. சீனர் புத்தாண்டு சமயம் சார்ந்த நிகழ்வாகக் கொண்டாடப்படுவதில்லை. இது மலேசியாவில் கண்ட உண்மை.
தமிழர் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலைப் போன்று ஒரு பண்பாட்டு விழாவாகக் கொண்டாடினால் நம் ஒற்றுமை குலைந்து விடுமா என்ன? மதத்தால்தான் வேறுபட்டு வாழ்கிறோம். மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்டு வாழ்வதாகாதா? இது யார் கொடுத்த சாபம்? அயலார் பண்பாட்டு திணிப்பால் நமக்கு நாமே எழுதிக் கொண்ட தலையெழுத்து. இதுதான் தாங்கள் வேண்டும் தமிழர் ஒற்றுமையா?
--
திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் புறக்கணித்துப் பேசுவதானது அகத்தின் அழகை முகத்தில் காட்டுகின்றது.திருவள்ளுவர் பிறந்த ஆண்டு அல்ல மாறாக திருக்குறள் இயற்றிய காலத்தை கி.மு. 31ஆக வைத்தது ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு காரணம் தமிழரிடையே தொடர் ஆண்டு முறை ஏதும் அன்று தொட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடங்கிய நாள் வரை இருந்ததற்கான சான்று ஏதுமில்லை.தனது பெயரையே காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா? இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.
அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம்.திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் நெறியைக் கூறும் ஓர் அற்புத நூல். அது தமிழர் என்பாருக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயன்படும் நூல். அதனால்தான் அது பொது மறை, உலகு மறை என்றெல்லாம் சிறப்பு பெயர் பெற்றது.திருக்குறள் காலத்தை அறுதியிட்டுச் சொல்ல வக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு அதற்கு முந்தைய நூலான தொல்காப்பியத்தின் காலத்தை எந்த நாளில் வைப்பீர்? ஏனையா எழுதத் தெரியுமென்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்லாம் அறிவுடைமையாகாது. ஏதோ ஒரு விதண்டாவாதத்திற்காக எழுதலாம். ஆனால் அதன் பயன் சுழியமாகும்.திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர்ஆண்டுமுறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது.
தமிழருக்கு ஓர் தொடர் ஆண்டு முறை வேண்டுமென்ற பரிந்துரையை முன் வைத்த பொழுது அது தமிழர் அனைவருக்கும் ஒவ்வக்கூடியதாக இருக்க வேண்டுமென்பது தமிழறிஞரின் வேண்டுதலாக இருந்தது.கலியாண்டு எண்ணைத் தொடராண்டு முறைக்குப் பயன்படுத்துவதே வானியல் அடிப்டையில் ஏற்புடையது.
அன்றே தமிழரில் இந்து, கிறித்துவர், முசுலிம் மதத்தவர் என்று மத வாரியாகப் பிரிந்து கிடந்தோரை இத்திருவள்ளுவர் ஆண்டு முறையானது இணைப்புப் பாலமாக அமையும் என்னும் ஒருமைப்பாட்டு நோக்குடன்தான் முன் வைக்கப்பட்டது.இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.இதில் தமிழரின் ஆண்டு முறை அடையாளமென்பது சமயத்தைச் சார்ந்து நில்லாமல் அவர்தம் பண்பாட்டைச் சார்ந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.
அவ்வாறு செய்வது தகாது. தமிழர் ஆண்டு முறை இந்துக்கள் என்பாருக்கு மட்டுமே உடையதாக இருக்க வேண்டுமென்று தாங்கள் வாதிடுவீர்களானால் இம்மடலாடல் குழுவில் இடம் பெற்றிருக்கும் முனைவர் ஐயா பாண்டியராஜா போன்ற நல்லதொரு மனம் படைத்த தமிழர் பலரை மின் தமிழ் மடலாடல் குழுவிலிருந்து நீக்கி விட்டு தங்களைப் போன்றோர் மட்டுமே மடலாட முடியும். இது தமிழரின் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பிரிக்குமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஐயா பாண்டியராஜா அவர்கள் மீதும், தங்கள் மீதும் மற்றும் மின்தமிழ் மடலாடற் அனைவர் மீதும் நான் மட்டற்ற மதிப்பு மரியாதை வைத்துள்ளேன். ஆனால், மேலுள்ள கருத்துக்கள் யாவும் நாம் இங்கே பேசக்கூடிய பொருளுடன் தொடர்பற்றன.தங்களின் நெடுநல்வாடை மற்றும் பரிபாடலுக்கான பதிலை தனியே பதிவிடுவேன். நன்றி.நன்றி ஐயா.அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சிவசிவ
நெடுநல்வாடையில் வரும் ‘திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக’ என்னும் வரிக்குப் பொருளும், பாடப்பட்டதின் நோக்கமும், அவ்வாறு பாடியதற்கான காரணம் அயலார் வானியல் சாத்திர தொடர்புமே என்று முன்னமே கூறப்பட்டது.
மேற்காணும் சுட்டியில் அதன் விளக்கத்தைக் காண்க. அரைத்த மாவையே அரைக்க எமக்கு நேரமில்லை.
தாங்கள் முன்வைத்த பரிபாடலின் ‘வையை’ என்னும் தலைப்பிலான பதினோராவது பாடலுக்கு மட்டும் இங்கே சுருக்கமான விளக்கத்தைக் கொடுக்கின்றேன்.
பரிபாடல் ஒரு தொகுப்பு நூல். அப்பாடல்கள் பாடப்பெற்ற காலம் அறியப்படவில்லை. ஆயினும் சங்கநூற் ஆய்வாளர் அதனை பின் பழந்தமிழ் நூல் என்று வகைப்படுத்தியுள்ளனர். பின் பழந்தமிழ் நூல் என்பது சங்கம் மருவிய காலமாகும். அதாவது தோராயமாக மூன்றாம் திருவள்ளுவர் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும். அவ்வாறாயின் நெடுநல்வாடைக்குப் பிற்பட்ட காலத்தையுடையது என்பது மிகையாகாது.
மழை பொழியும் காலத்தைச் சுட்டிக் காட்ட நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பாட்டைச் சுட்டிக் காட்டி, அதன் அடிப்படையில் கூறப்பட்ட சோதிட கட்டடத்தில் வீற்றிருக்கும் வின்மீன்களின் நிலையைக் கொண்டு பருவ காலத்தைக் கூறிய பாடல்.
விரி கதிர் மதியமொடு வியல்
விசும்புபுணர்ப்ப
எரி
சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு
இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு
வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்ப பொருள் தெரி 5
புந்தி மிதுனம் பொருந்த புலர்
விடியல்
…….
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
……….
இணையத் தேடலில் இவ்வாறு ஏதேனும் ஒன்று தங்கள் கண்ணுக்குக் கிட்டப்பெற்றால் தங்களின் ஆர்வகோளாறினால் உடனே அதனைப் பதிவேற்றி ‘இதோ பார் தமிழர் நாளையும் கோளையும் அன்றே அறிந்து வைத்துள்ளனர்’ என்று கூற முற்பட்டுவிடுகின்றீர். அதனால் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாள் என்னும் பல்லவியைப் பாட ஆரம்பித்து விடுகின்றீர். அப்பாடலை தாங்கள் முழுமையாக வாசித்திருந்தால் அப்பாடல் பாடப்பெற்றதற்கான காரணத்தை அறிந்து அதனை இங்கு பதிவிடாமல் தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
அதே பாடலில், வையையில் மகளிர் தை நீராடுதலைக் குறிக்கும் வரிகளை இவ்விடம் பதிவிடுகிறேன்.
கனைக்கும் அதிகுரல் கார் வானம்
நீங்க
பனிப்படு
பைதல் விதலைப் பருவத்து 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின்
குளத்து
மா
இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க
புரி
நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
வெம்பாதாக
வியல் நில வரைப்பு என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்
முனித்துறை
முதல்வியர் முறைமை காட்ட
பனிப்
புலர்பு ஆடிபரு மணல் அருவியின்
ஊதை
ஊர்தரஉறை சிறை வேதியர்
நெறி
நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர
வையை
நினக்கு மடை வாய்த்தன்று
………..
மேற்கூறிய பாடல் வரிகளின் உரை விளக்கமானது (பரிபாடல் மூலமும் உரையும் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் – 2011ஆம் ஆண்டு பதிப்பு),
(74-79) “கார்காலத்தில் மேகத்தின் முழக்கத்தால் திசைகள் எல்லாம் அதிர்வதற்குக் காரணமான இடியொலி நீங்கியது. பனி மிகுதியானதால் குளிரால் நடுக்கம் தரக்கூடிய முன்பருவத்தில் கதிரவன் வெப்பம் தராத குளிர்ந்த கடைசி மழையுடைய மார்கழித் திங்கள் தொடங்கியது. மிகப்பெரிய திங்கள் தன்னுள்ளே பெற்ற களங்கத்தோடு வளர்ந்து நிறைந்த திருவாதிரை நாளில், விரிந்த மெய்ப்பொருள் நூல்களை அறிந்து உணர்ந்த திருவாதிரைக்குக் கடவுளும், ஆதிரையான் என அழைக்கப்பெறுபவனுமாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கினர். முப்புரி நூலை அணிந்த அந்தணர்கள் அவ்விழாவில் இறைவனுக்குப் பலிப்பொருள் அடங்கிய பொற்கலங்களையும் பிறவற்றையும் கைகளில் ஏந்தினர்;
(80-87) அகன்று பரந்த இம்மண்ணுலகம், கதிரவன் காய்தலால் வெப்பமுடையதாகாமல் மழையினால் குளிர்ச்சி பெறுவதாக என்று வாழ்த்தி, அம்பா ஆடலையுடைய ஆராய்ந்திட்ட வளையலையணிந்த கன்னிப் பருவப் பெண்கள் சடங்கு அறிந்த முதுபார்ப்பனிமார் (‘பரிமேலழகர் உரைபடி’) நோன்பு செய்யும் முறையினை அறிவிக்க, பனி மிக்க வைகறைப் பொழுதிலேயே நீராடினர்; ஆடியபின் பெரிய மணலிலே ஒழுகுகின்ற நீரில் குளிர்வாடை தவழ்ந்து வருதலால் வையையே! உனது நீர் உராய்ந்து சென்ற கரையில் தங்கியுள்ள அந்தணரது வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட வளைந்து எரியும் தீயினை வலம் வந்து வழிபட்டு ஒப்பனையையுடைய அக்கன்னி மகளிர்சென்று அதனிடத்தில் தம் ஈர ஆடையை உலர்த்தி நின்றனர். வையையே அத்தீயில் கொடுக்கும் அவிப்பொருள் உனக்கு வாய்ப்புடையாதாயிருந்தது”.
அப்பாடலின் 80 முதல் 87 வரிகளின் வழி உணர்த்தப்படுவதாவது, பார்பனிய கன்னிப்பெண்கள் அவர்தம் தாய்மாரோடு வையையில் நீராடிய பின் வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட தீயினை வலம் வந்து தமது நோன்பை நிறைவேற்றினர் என்பதாக அப்பாடல் முடிவு பெறும்.
ஆங்கே பதினோராவது பாடலின் முற்பகுதியில் கூறப்படும் சோதிட நாட்காட்டி விளக்கங்கள் வைதிக பண்பாட்டையுடையோர் தை மாத இறுதியில் நீராடி மார்கழி திங்கள் முதல் திருவாதிரை விழாவைக் கொண்டாட மேற்கொள்ளும் நோன்பைக் கூறுகின்றது.
இதிலிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், அச்சோதிட நாட்காட்டியைக் கூறுங்கால் வைதிகப்பண்பாடு தென்னகத்தே வந்து விட்டது என்பதாகும். அவர்கள் கொண்டு வந்த சோதிட நாட்காட்டி முறையை வைத்துக் கொண்டு அது தமிழருடைய பண்பாடு அல்லது அப்பார்பனியர் தமிழரின் சோதிட நாட்காட்டியைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்று கூறுவது பொருந்தாது. வைதிகப் பண்பாடும் அவர்தம் சோதிட நாட்காட்டி முறையும் தமிழரிடையே அக்காலத்திலேயே பரவியதால்தான் சித்திரை முதல் நாள் ஆண்டு தொடக்கமென்று ஆயிற்று என்பதை இதன் வழி அறிந்து கொள்ளுங்கள். இனியும். தமிழரை வைதிகப் பண்பாட்டில் திளைக்க வைத்து தமிழர் பண்பாட்டை மாற்றாமல் இருந்தால் தங்களுக்குக் கோடி புண்ணியம். சிவசிவ.
--
சிவசிவ
நெடுநல்வாடையில் வரும் ‘திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக’ என்னும் வரிக்குப் பொருளும், பாடப்பட்டதின் நோக்கமும், அவ்வாறு பாடியதற்கான காரணம் அயலார் வானியல் சாத்திர தொடர்புமே என்று முன்னமே கூறப்பட்டது.
எப்பொழுது தேவை ஏற்படுகின்றதோ அப்பொழுது வழியும் பிறக்கும்.
மலேசிய வாழ் தமிழறிஞர் ஒன்று கூடி தமிழ் நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை முறைப்படுத்தி வெளியிட்ட தமிழ் மரபு நாட்காட்டி இத்துடன் இணைக்கப்படுகின்றது.
மேற்காணும் சுட்டியில் அதன் விளக்கத்தைக் காண்க. அரைத்த மாவையே அரைக்க எமக்கு நேரமில்லை.
வணக்கம் ஐயா.
தங்கள் கருத்துக்கு பதில் எழுதுவதானது எமது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது.
இருப்பினும் தாங்கள் முன் வைக்கும் சில கருத்துக்கள் இவ்விழையின் நோக்கத்திற்கு உதவி புரிவதாக இல்லை.
அவை,
#தனது பெயரையே காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா? இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.#
திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா தமிழறிஞர் திருவள்ளுவர் பெயர் கொண்ட தொடர் ஆண்டு முறையை வைக்க முற்பட்டனர்? திருவள்ளுவர் விருப்பு வெறுப்பை அறிந்து கொண்டா கலைஞர் வள்ளுவர் கோட்டத்தையும் தென்குமரி முனையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கவும் ஆவண செய்தார். திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா திருவள்ளுவர் திருநாட் விழாவை தமிழறிஞர் முன்னெடுத்தனர். இதையெல்லாம் திருவள்ளுவரை கேட்டு எவரும் செய்யவில்லை. அவர் இயற்றிய திருக்குறளின்பால் காதல் கொண்டு அதன் மீது தமிழறிஞர் வைத்துள்ள மதிப்பால் செய்யப்படும் போற்றுதலாகும், ஒருவரின் நற்செயலைப் போற்றுவதை திருவள்ளுவர் ஏற்கின்றார்.
திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஒப்பமாட்டார் என்பதானது தமிழ்ச் சான்றோனுக்கு தமிழர் காட்டும் மரியாதைக்கு ஊறு விளைவிப்பதாகும்.
#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#
தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.
#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#
திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?
பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.
#சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.
ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.#
தமிழறிஞர் முன்வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு பஞ்சாங்கத்தின் மூலம் பின்பற்றப்படும் வானியல் சாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு துவக்கத்தை தமிழர் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டி தை திங்கள் முதல் நாளில் வைத்துக் கொண்டனர்.
மரபுகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறலாம்.
மாற்றமே என்றும் மாறாதது என்னும் உண்மையை தாங்கள் ஏற்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்.
சீனர் எம்மதத்தவராயினும் அவர்தம் சீனப் புத்தாண்டை அனைவரும் மத பேதம் பாராது ஒருங்கே கொண்டாடுவர். அது அவர்தம் பண்பாட்டு நிகழ்வாகத் திகழ்கின்றது. சீனர் புத்தாண்டு சமயம் சார்ந்த நிகழ்வாகக் கொண்டாடப்படுவதில்லை.
இது மலேசியாவில் கண்ட உண்மை.
தமிழர் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலைப் போன்று ஒரு பண்பாட்டு விழாவாகக் கொண்டாடினால் நம் ஒற்றுமை குலைந்து விடுமா என்ன? மதத்தால்தான் வேறுபட்டு வாழ்கிறோம்.
மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்டு வாழ்வதாகாதா? இது யார் கொடுத்த சாபம்? அயலார் பண்பாட்டு திணிப்பால் நமக்கு நாமே எழுதிக் கொண்ட தலையெழுத்து. இதுதான் தாங்கள் வேண்டும் தமிழர் ஒற்றுமையா?
இனியும். தமிழரை வைதிகப் பண்பாட்டில் திளைக்க வைத்து தமிழர் பண்பாட்டை மாற்றாமல் இருந்தால் தங்களுக்குக் கோடி புண்ணியம். சிவசிவ.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#
தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.
#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#
திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?
மாந்தரிடையே ஒற்றுமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமானால்அந்தக் குறளை நானும் அறிந்து கொள்வேன் ஐயா.
பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.
பாலர்பள்ளி வகுப்பு நடத்த வேண்டாம் ஐயா.பகைமையை மறந்து வாழத் திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளை மட்டும் சொன்னால் போதும் ஐயா.
2018-05-08 9:30 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#
தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.
#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#
திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?
மாந்தரிடையே ஒற்றுமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமானால்அந்தக் குறளை நானும் அறிந்து கொள்வேன் ஐயா.இல்வாழ்க்கை என்ற அதிகாரம் பார்க்கவும். ஒருவன் சமுதாயத்தோடு ஒட்ட ஒழுகி,பிறருக்கு உதவி வாழவேண்டும் என்று பல குறள்களில் சொல்கிறார்.இறுதியாய், அப்படிப்பட்டவனை,வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
சி. ஜெயபாரதன், கனடா
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++தமிழ் நண்பர்களேஒரு கல்லடிப்பில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் !தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெற்றது !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திரயுத்தம் ஓய்ந்திடுமா ?