திருக்குறள் காட்டும் இந்திரன் யார்?. (இந்திரனே சாலும் கரி)

1,756 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 18, 2017, 4:30:01 AM11/18/17
to mintamil

http://thiruththam.blogspot.in/2009/09/blog-post_17.html

திருக்குறள் காட்டும் இந்திரன் யார்?. (இந்திரனே சாலும் கரி)

குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி. - 25.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: புலன்களில் சொல்லுகின்ற ஐந்து ஆசைகளையும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இந்திரனே சான்றாவான் (சாட்சியாவான்).

உரைத்தவறுகள்:

நீத்தார் பெருமையைச் சுட்டுவதாக அமைந்திருக்கும் இக்குறளில் வரும் இந்திரன் என்ற சொல்லுக்குப் புராணக் கதைகளில் வரும் தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரனைப் பொருளாகக் கொண்டே அனைவரும் உரை எழுதியுள்ளனர். உண்மையில் யார் இந்த தேவேந்திரன்?. ஒரு மகா அயோக்கியன் என்று புராணம் கூறுகிறது.

தேவேந்திரன் - அகலிகை - கௌதமன் ஆகியோரின் முக்கோணக் காமக்கதை நாடறியும். கௌதமமுனிவர் வீட்டில் இல்லாத நேரம்பார்த்து அவரைப் போலவே பொய்வேடம் பூண்டு அவரது மனைவியாகிய அகலிகையிடம் சென்று தவறாக நடக்க முயற்சிசெய்து சாபம் பெற்றவன் இந்த தேவேந்திரன். பலர் பலவிதமாக இக் கதையினைக் கூறினாலும் ஒன்று மட்டும் உண்மை. இவன் புலனடக்கம் இன்றி அகலிகையின் மேல் காம விருப்பம் கொண்டு அவளை அடைய முயன்றான் என்பதே அது. இதைப்போல புலனடக்கம் இன்றி இவன் பல தவறுகளைச் செய்திருக்கிறான் என்று புராணம் கூறுகிறது. இதிலிருந்து தேவேந்திரன் புலனடக்கம் இல்லாதவன் என்பது மிகத் தெளிவாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவனை ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா வள்ளுவர்? ஒருபோதும் மாட்டார். நல்லது செய்தால் கிட்டும் நன்மைகளை ஒரு நல்லவரைக்கொண்டுதான் சான்றுகாட்ட வேண்டுமே ஒழிய ஒரு கேடுகெட்டவனைக் கொண்டா சான்று காட்டுவது?.

அதுமட்டுமின்றி வள்ளுவர் எந்தவொரு குறளிலும் புராணக் கதைகளையோ குறிப்பிட்ட சமயம் தொடர்பான பெயர்களையோ பயன்படுத்தவில்லை என்று பல குறள்களின் வாயிலாக அறிந்திருக்கிறோம். இப்படி அனைத்துச் சமயத்தார்க்கும் பொதுவாகக் கருத்துக்களைக் கூறியிருப்பதால்தான் உலகப்பொதுமறை என்று திருக்குறள் கொண்டாடப்படுகிறது. ஆனால், வள்ளுவர் மேல்கொண்ட அதிகமான பற்றினால் ஒவ்வொரு சமயத்தாரும் அவரைத் தமது சமயம் சார்ந்தவராகவே பார்க்கின்றனர். இதன் விளைவாக, அவரது கருத்துக்களைத் தமது சமயக்கருத்துக்கு ஏற்பத் திரித்துக் கூறுகின்றனர். இப்படித் திரித்துக்கூறப்பட்ட பல்வேறு குறள்களில் ஒன்றுதான் இது. இதில் வரும் இந்திரன் என்ற சொல்லை தேவேந்திரன் என்றும் திருமால் என்றும் அவரவர் விருப்பப்படி திரித்துக்கூறி வருகின்றனர்.

தேவேந்திரனும் திருமாலும் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களில் எத்தனைபேர் அறிவார் இவர்களை?. மக்கள் பரவலாக அறிந்திராத ஒரு கற்பனைப் பாத்திரத்தினை உவமையாகக் கூறி விளக்கினால் பாடலின் பொருளை அனைவரும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?. குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்வையற்ற ஒருவர் யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து கூறுவதைப் போன்றதே இது. புரியாதவற்றை மக்கள் அறியாதவற்றை வள்ளுவர் ஒருபோதும் உவமைப் பொருளாகக் கூறமாட்டார் என்பதால் இப்பாடலில் வரும் இந்திரன் என்பது தேவேந்திரனையோ திருமாலையோ குறிக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

குறளுக்கான திருந்திய விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய புதிய விளக்கத்தினைக் காணும் முன்னர் குறளில் வரும் சில சொற்களுக்குக் கீழே அகராதிகள் காட்டும் புதிய பொருட்களைக் கொள்ளவேண்டும்.

ஆர்¹-தல் ār- , 4 v. [T. K. M. āru.] intr. 1. To become full; நிறைதல். ஆரப்பருக (திவ். திருவாய். 10, 10, 5). 2. To spread over; பரவு தல். போதாரிவண்டெலாம் (திணைமாலை. 95, உரை). 3. To be satisfied; திருத்தியாதல். ஆராவமுதம் (திவ். திருவாய். 2, 5, 5). 4. To combine with, belong to; பொருந்துதல். சீரார்செழும்பந்து (திவ். இயற். சிறியதி. 11, கண்ணி). 5. To abide, stay; தங்குதல். (திவா.)--tr. 1. To eat, to drink; உண்ணுதல். அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (புறநா. 34, 14). 2. To experience; அனுபவித் தல். ஆர்வுற்றார் நெஞ்ச மழிய (கலித். 42, 13). 3. To resemble; ஒத்தல். மணியார்கண்டத் தெம்பெருமான் (பெரியபு. திருநா. 314). 4. To wear, put on; அணிதல். (பிங்.) 5. To get, obtain; பெறுதல். ஆர்கின்ற தின்றோ ரலரே (கந்தபு. தேவரையே. 11).

ஆற்றல் āṟṟal , n. < ஆற்று¹-. 1. Strength, power, prowess, ability; சக்தி. (திவா.) 2. Effort, endeavour; முயற்சி. (திவா.) 3. Abundance, copiousness; மிகுதி. (பிங்.) 4. Determinedness; கடைப்பிடி. ஆற்றலு மவள்வயி னான (தொல். பொ. 129). 5. Endurance, fortitude; பொறை. ஆற் றுவா ராற்றல் பசியாற்றல் (குறள், 225). 6. Manliness, courage; ஆண்மை. (பிங்.) 7. Victory; வெற்றி. (பிங்.) 8. Truth; வாய்மை. (பிங்.) 9. Wisdom, knowledge; ஞானம். (பிங்.) 10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென் னும் நியதி. (தர்க்கசங்.)

கோமான்¹ kōmāṉ , n. < கோ³. [M. kōmān.] 1. King; அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர (பெருங். உஞ்சைக். 44, 93). 2. Person of eminence, Lord; பெருமையிற் சிறந்தோன். கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவா. 1236, 1). 3. Spiritual preceptor; குரு. (பிங்.) 4. Elder; மூத்தோன். (திவா.)

இந்திரன் intira , n. < indra. (நாநார்த்த.) 1. The inner soul; அந்தரான்மா. 2. Sun; சூரியன்.

மேலே அகராதிகளில் கண்டபடி,

ஆற்றல் = ஞானம், அறிவு.
ஆர்தல் = நிறைந்திருத்தல்.
கோமான் = பெருமையில் சிறந்தோன்.
இந்திரன் = கதிரவன்.

இப்புதிய பொருட்களின் அடிப்படையில், குறளுக்கான திருந்திய விளக்கம்:

ஐம்புலன்களையும் அடக்கியவரின் அறிவுக்கு, அகன்ற வானத்துள் (ஒளியால்) நிறைந்திருப்பவனும் பெருமையில் சிறந்தோனுமாகிய கதிரவனே பொருத்தமான சான்று ஆவான்.

நிறுவுதல்:

பொதுவாக, புலவர்கள் தமது பாடல்களில் உவமைகளைக் கையாளும்போது மக்கள் நன்கறிந்த இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவர். இது திருக்குறளுக்கும் பொருந்தக்கூடியதே. அவ்வகையில், வள்ளுவர் இப்பாடலில் உவமையாகக் கதிரவனைக் கூறியிருக்கிறார்.

வள்ளுவர் இக்குறளில் கூறியிருக்கும் உவமையினைப் போலவே நாமும் இக்காலத்தில் பயன்படுத்தவே செய்கிறோம். வடமொழியில் ஞானசூரியன் என்றும் தமிழில் அறிவில்ஆதவன் என்றும் கூறுவது இந்த உவமையின் அடிப்படையில் தான். ஐம்புலன்களை அடக்கியாள்வதின் மூலம் அறிவு என்னும் ஒளியானது உள்முகமாகப் பாய்ச்சப்படுகிறது. இதனால் அகத்தில் இருக்கும் இருள் நீங்கி அகத்தில் இருக்கும் பொருட்களைப் பற்றிய பேரறிவினைப் பெறுகிறோம். இப் பேரறிவானது எல்லையற்ற தன்மைகொண்டது. கண்களை மூடிக்கொண்டு அகத்தில் நாம் காணும் பேரறிவுக்கு எல்லையே இல்லை என்பதால் அதனைக் கதிரவனின் ஒளியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர். சரி, அறிவுக்கும் கதிரவனுக்கும் என்ன தொடர்பு?. ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள்?. என்று பார்க்கலாம்.

ஒருபொருள் இருளில் இருக்கும்போது அதை நம்மால் காணவியலாது. அங்கே ஒளி பாயுமானால் அதனை நம்மால் காணமுடியும்; அப்பொருளைப் பற்றிய அறிவினையும் பெறமுடியும். ஆக, ஒளி பாயாதவரை அப்பொருளைப் பொருத்தமட்டிலும் நமக்குள் 'அறியாமை' யே நிறைந்திருக்கும் அல்லவா?. உண்மையில் அப்பொருளின்மீது ஒளிபாயும்போது விலகுவது அங்கிருக்கும் இருள்மட்டுமல்ல; நமது அறியாமையும்தான். இங்கே கூறப்பட்டிருக்கும் 'பொருள்' புறப்பொருளாகட்டும்; அகப்பொருளாகட்டும் இரண்டுக்குமே பொருந்துவதுதான். எனவேதான், மக்களின் அறியாமையினை இருளுக்கும் அறிவினை ஒளிக்கும் உவமையாகக் கூறுவது வழக்கமாயிற்று. வள்ளுவரும் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவினைப் பற்றிக் கீழ்க்காணுமாறு கூறுகிறார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண். - 421.

ஒருவரை அவரது அழிவில் இருந்து காப்பாற்றும் வல்லமை மிக்க கருவி அவரது அறிவே ஆகும் என்கிறார். ஏனைய கருவிகளை இவரிடமிருந்து அழித்துவிடலாம். ஆனால் இந்த அறிவென்னும் கருவியினை அழிக்க முடியாது. காரணம், இது பொருளின் வடிவாக இன்றி ஒளியின் வடிவாக இருப்பது.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. - 425

மேற்காணும் குறளில் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்று கூறுகிறார் வள்ளுவர். மலர்தலும் கூம்பலும் உடையது எது?. ஒரு மலர்தானே. பொதுவாக ஏதோ ஒருமலர் என்றில்லாமல் இங்கே அதனைத் தாமரைமலராகக் கருதலாம். ஏனென்றால், தாமரைமலரானது பகலிலே மலர்ந்தும் இரவிலே கூம்பியும் காணப்படும். இந்தத் தாமரைமலரினைப் போல நமது அறிவு இருக்கக்கூடாது என்கிறார். மாறாக, தாமரைமலரை மலரச்செய்யும் கதிரவனாக இருக்கவேண்டும் என்கிறார். ஏனென்றால், கதிரவன் மட்டுமே எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருப்பவன். இக்கதிரவன் நமக்கு மட்டுமின்றி உலகத்தார் அனைவருக்கும் உரியவனாய் இருப்பதைப்போல நமது அறிவானது நம்மோடு மட்டும் அமையாமல் உலகமக்களுடன் பொருந்தக்கூடியதாய் அவர்களுக்கும் பயன்படக்கூடியதாய் அமைவதே சிறப்பானது என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறளில் அறிவினைக் கதிரவனுடன் நேரடியாக ஒப்பிடாமல் மறைமுகமாக ஒப்பிட்டிருக்கும் நுட்பம் எண்ணி மகிழத்தக்கது. !

முடிவுரை:

அகக்கண்களில் தோன்றும் அறிவினைக் கதிரவனுடன் இப்பாடலில் ஒப்பிட்டிருப்பதைப்போல, புறக்கண்களில் தோன்றும் அழகினை நிலவுடன் ஒப்பிட்டும் பாடியிருக்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. - 1103.

இப்பாடலில் வரும் தோள் என்பது பெண்களின் அழகிய கண்களையும் தாமரைக்கண்ணான் என்பது நிலவினையும் குறிப்பதாகும். இதைப்பற்றித் தாமரைக்கண்ணான் உலகு என்னும் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

========== வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! ========= 

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

nkantan r

unread,
Nov 18, 2017, 4:59:03 AM11/18/17
to மின்தமிழ்
ஆதிபகவன் எனும் சொற்றொடரை, ஆ/தீ/பகவன். . இந்தவுலகம் நெருப்புக்கோளிலிருந்து பிறந்தது என்று அப்போதே சொல்லிவிட்டார்!

rnk
;)

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 18, 2017, 5:01:34 AM11/18/17
to mintamil
ஐயா, தொடர்பே இல்லாமல் எதையோ பறிகொடுத்ததைப்போல ஏன் எழுதுகிறீர்கள்?

துவக்கத்திலேயே இழையைத் திசைதிருப்பும் எண்ணமா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 18, 2017, 5:18:28 AM11/18/17
to மின்தமிழ்
உறுதியாகத் தெரியுமா சரவணன்.

இந்திரனே என்பது எழுத்துப் பிழை என நினைக்கிறேன்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
சந்திரனே சாலுங் கரி 

என்று இருந்து இடையில் யாரோ மாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். 

சந்திரன் = அறியாமை என்னும் "இருள்" அகற்றும் "நிலவையும்" வள்ளுவர் குறிப்பிட விரும்பியிருக்கலாம்.

.... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 18, 2017, 5:22:38 AM11/18/17
to mintamil
2017-11-18 15:48 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
உறுதியாகத் தெரியுமா சரவணன்.

இந்திரனே என்பது எழுத்துப் பிழை என நினைக்கிறேன்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
சந்திரனே சாலுங் கரி 

என்று இருந்து இடையில் யாரோ மாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். 

சந்திரன் = அறியாமை என்னும் "இருள்" அகற்றும் "நிலவையும்" வள்ளுவர் குறிப்பிட விரும்பியிருக்கலாம்.

.... தேமொழி

ஏங்க்கா ஏன் என்னாச்சு உங்களுக்கு? :)))

உடல்நலத்தில் ஏதும் குறைவில்லையே. :))
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 18, 2017, 5:23:46 AM11/18/17
to மின்தமிழ்
Hahaha.

Et tu thomizhi madam!!

எல்லோரும் திருந்துவோம். எல்லாவற்றையும் திருத்துவோம்

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 18, 2017, 5:26:33 AM11/18/17
to mintamil
On Sat, Nov 18, 2017 at 3:53 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
Hahaha.

Et tu thomizhi madam!!

அதுசரி, இது என்ன மலையாள மொழியா?. :))
 
 எல்லோரும் திருந்துவோம்.

இதெல்லாம் நடக்குற காரியமா?
 
எல்லாவற்றையும் திருத்துவோம்

இதுவும் நடக்காது ஐயா. :))
 
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 18, 2017, 1:52:46 PM11/18/17
to மின்தமிழ்
Jokes apart, my understanding till date was that it (this kural) uses Indra not as one who has control over his five-senses, but as a one who does not..

இப்படிப்பட்ட ஒருவனை ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா வள்ளுவர்?
=====

I believe paripadal, puram, silapathigaaram all have reference to Indira, Indira vizha etc. So thiruvalluvar is not using something uncommon as you mentioned

தேவேந்திரனும் திருமாலும் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களில் எத்தனைபேர் அறிவார் இவர்களை?. மக்கள் பரவலாக அறிந்திராத ஒரு கற்பனைப் பாத்திரத்தினை உவமையாகக் கூறி விளக்கினால் பாடலின் பொருளை அனைவரும் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?. குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்வையற்ற ஒருவர் யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து கூறுவதைப் போன்றதே இது. புரியாதவற்றை மக்கள் அறியாதவற்றை வள்ளுவர் ஒருபோதும் உவமைப் பொருளாகக் கூறமாட்டார்

====
rnk

தேனீ

unread,
Nov 18, 2017, 11:39:52 PM11/18/17
to மின்தமிழ்

சிவசிவ

நாற்சந்தியில் நின்று கொண்டு எந்த வழியில் செல்வதென்று புரியாமல் தடுமாறும்பொழுது நல்வழியறிந்த நாலுபேர் போன அடிச்சுவட்டையறிந்து போவதே அறிவுடமையாகும்.

திருவள்ளுவர் ஒரு சிறந்த ஞானி என்பதற்கும் சைவ சித்தாந்தம் அறிந்தவர் என்பதற்கும்  சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகள் அறிந்தவர் என்பதற்கும் 25வது குறளே தக்கச் சான்று.

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே இறை நம்பிக்கையுடையோர் இந்திரன் என்னும் வானோர் வேந்தனை ஆன்ம வர்க்கமென்றும் ஐம்புலன்களை அடக்க இயலாதவரென்றும் ஒருபுறம் கூற,  மற்றொருபுறம் விண்ணவனையும் சிவனையும் ஏற்கமாட்டாதோர் இந்திரன் என்பது ஒரு பதவியென்றும் அவ்வாறு பல இந்திரர்கள் இருக்கிறாரென்றும் அவரே ஐம்புலன்களை அடக்கி வென்று வானோர்களாக உள்ளனரென்றும் அவர்தம் புராண நூல்களில் கதைகளை எழுதி வைத்துக் கொண்டனர். இது முன்னவரை பின்னவர் மறுக்க எழுதி வைத்துக் கொண்ட புராணக் கூற்றுகளாகும். இது சமய அரசியல்.

இறை ஏற்புடையோர் ஒரு பக்கமும் இறை மறுப்பாளர் மற்றொரு பக்கம் நின்று கொண்டு  இந்திரனுக்கு வெவ்வேறு தன்மைகளைப் புகுத்தி அவரவர் புராணத்தை வைத்துக் கொண்டு இறைவன் யார் என்று சமய அரசியல் நடாத்திக் கொண்டிருந்த காலத்தில் சைவ சித்தாந்தம் அறிந்த திருவள்ளுவர் 25வது குறள் வழி அந்த முடிச்சை அவிழ்த்தார்.

அக்குறளில் இந்திரன் என்பது பொதுபெயர் என்ற இறை மறுப்பாளரின் கூற்றுக்கிணங்க திருவள்ளுவர் கூற விரும்பியிருந்தால் அகல்விசும்புளார் கோமான் என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் குறள் இயற்றியிருக்கலாம்.

அவ்வாறு செய்யாது அகல்விசும்புளார் கோமான் என்னும் அடைமொழியை இந்திரனுக்கு  கொடுத்துக் கூறியமையால் அது சிறப்புப் பெயராகின்றது. அவ்வாறு இந்திரனுக்கு சிறப்புப் பெயர் கொடுத்து முதலில் புராணங்களை இயற்றியோர் வேத நெறியாளரும், திருமேனி வழிபாடு செய்த சைவ வைணவ புராணிகர்களுமேயாகும்.

ஆகையால் இக்குறள் வழி திருவள்ளுவர் குறித்த இந்திரன் இறை ஏற்பாளர் கூற்றுக்கிணங்க கூறியது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்ட பிறகு, யார் ஐம்புலன்களை அவிக்கவல்ல நெறிகூறுவார் என்பதை அறியவேண்டும். அது ஐம்புலன்களை  அடக்க இயலாத தேவர் உலகத்துத்  தலைவனாகிய இந்திரனல்ல மாறாக அதற்கும் மேலுலகில் உள்ளோர் என்பதையறிந்து அவரே ஐம்புலனை அவிக்கவல்ல  நெறிகாட்டுவோராவார் என்பதாக நீத்தார் என்னும் அதிகாரத்தில் அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவர். இது மிகவும் நுட்பமான முறையில் 1¾ அடியில் உணர்த்திய கருத்தாகும். திருவள்ளுவர் என பெயர் கொண்ட பொய்யாமொழி புலவனுக்குரிய இலக்கணம் இதுவேயாம். வானுலகமென்று கூறப்படும் இந்திர உலகத்திற்கு மேலுலகமாக இருப்பது எது? இதற்கு சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகளை அறிந்திருந்தால்தான் பதில் கூற முடியும்.

இந்த அத்துவா (புவன) விதிகளை மூல சிவாகமங்களும் உபாகங்களும் கூறுகின்றன. இவ்விடம் கிரணாகமம் கூறும் அத்துவா விதிகளைக் கொண்டு மேலுலகம் எதுவென்று காண்போம்.

சுலோகம் 88:

பூலோகத்திற்கு மேல் துருவம் வரையில் பதினைந்து லட்சம் யோசனை புவர் லோகம். அதற்கு மேல் எண்பத்தைந்து லட்சம் யோசனை சுவர்லோகம். (புவர் லோகம் - வாயுமண்டலம் சந்திர மண்டலம் என்பவை. சுவர்லோகம் – சுவர்க்க லோகம் இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்வது)

சுலோகம் 89, 89 1/2:

அதற்குமேல் எட்டுக்கோடி யோசனை ஜனலோகம் (பிதிரரும், சனனு முதலிய முனிவர்கணங்களும் வாழ்வது) அதற்கு மேல் பன்னிரண்டு கோடி யோசனை தவலோகம் (சனகர் முதலியோர் வாழ்வது) அதற்குமேல் பதினாறு கோடி யோசனை சத்திய லோகம். இதில் இரண்டு கோடி யோசனை அளவான மேற்பகுதியில் பிரமதேவர் வீற்றிருகின்றார்.

சுலோகம் 90:

அதற்குமேல் மூன்று கோடி யோசனை திருமாலின் உலகம். அதற்கு மேல் நான்கு கோடி யோசனை உருத்திரர் உலகம்.

இந்திர லோகத்திற்கு மேலோகமென்பது பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகியோர் இருந்து படைத்தல், காத்தல், ஒடுக்குதலாகிய மூன்று தொழில்களையும் முறையே நடாத்தும் சத்தியலோகம், வைகுந்தம், உருத்திரலோகம் என்பதாகும்.

இம்மேலுலகத்திலிருந்து முத்தொழிலாற்றும் மும்மூர்த்திகள் வகுத்துக் கூறிய நெறியே உண்மை நெறியென்று அறிந்து அதன்வழி நடப்போரே ஐம்புலனடக்கி நீத்தார் என்னும் தகுதி பெறவல்லவர் என்பது 25வது குறள் வழி திருவள்ளுவர் கூறவரும் கருத்து.

இறை இருப்பை ஏற்க மாட்டாதோர் அவர்தம்வழி கருத்துக் கூற, உண்மைநெறி அறியாதோரும் அவ்வழியையே பின்பற்றி திருக்குறளின் உட்கிடையை அறியாது கடந்த நூற்றாண்டில் பல தமிழறிஞர் உரை வரைந்ததாலேயே இக்கால தமிழருக்கு இவ்வளவு மயக்கம்.

இதில் வேதாகாமங்களை ஓதியுணர்ந்த பரிமேலழகர் உண்மையறிந்து தனித்து நின்று சிறப்பான பொருள் விளக்கம் கொடுத்துள்ளார்.

இனி இந்திரன் என்பது கதிரவன் என்று கூறுவது இக்குறளின் உண்மைப் பொருளை விளக்கும் ஒளிவிளக்கல்ல என்பதையறிந்து நாலுபேர் போன வழிக்குத் திரும்புவது அறிவான செயலாகும். சிவசிவ.

அன்புடன் மு. கமலநாதன்.

Banukumar Rajendran

unread,
Nov 19, 2017, 6:37:48 AM11/19/17
to மின்தமிழ்
2017-11-19 10:09 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:

சிவசிவ

நாற்சந்தியில் நின்று கொண்டு எந்த வழியில் செல்வதென்று புரியாமல் தடுமாறும்பொழுது நல்வழியறிந்த நாலுபேர் போன அடிச்சுவட்டையறிந்து போவதே அறிவுடமையாகும்.

திருவள்ளுவர் ஒரு சிறந்த ஞானி என்பதற்கும் சைவ சித்தாந்தம் அறிந்தவர் என்பதற்கும்  சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகள் அறிந்தவர் என்பதற்கும் 25வது குறளே தக்கச் சான்று.

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே இறை நம்பிக்கையுடையோர் இந்திரன் என்னும் வானோர் வேந்தனை ஆன்ம வர்க்கமென்றும் ஐம்புலன்களை அடக்க இயலாதவரென்றும் ஒருபுறம் கூற,  மற்றொருபுறம் விண்ணவனையும் சிவனையும் ஏற்கமாட்டாதோர் இந்திரன் என்பது ஒரு பதவியென்றும் அவ்வாறு பல இந்திரர்கள் இருக்கிறாரென்றும் அவரே ஐம்புலன்களை அடக்கி வென்று வானோர்களாக உள்ளனரென்றும் அவர்தம் புராண நூல்களில் கதைகளை எழுதி வைத்துக் கொண்டனர். இது முன்னவரை பின்னவர் மறுக்க எழுதி வைத்துக் கொண்ட புராணக் கூற்றுகளாகும். இது சமய அரசியல்.

வேதத்தில் இந்திரனே முதல்வன். அவனுக்கு அடுத்து அக்னி, வாயு, வருணன் போன்றோரே சிறப்பான இடத்தில் குறிக்கப்படுகிறார்கள்.
அதற்கு பிறகே உருத்திரனும், விஷ்ணுவும் குறிக்கப்படுகிறார்கள். ஆனால், திடுதிப்பென்று சிவனாருக்கும், விஷ்ணுவிற்கு 
அடங்கியவனாக, ஆன்மவர்க்கத்தினனாக பின்னாளைய புராணங்களில் கூறிப்பிடுவது எங்ஙனம்? 

இறை ஏற்புடையோர் ஒரு பக்கமும் இறை மறுப்பாளர் மற்றொரு பக்கம் நின்று கொண்டு  இந்திரனுக்கு வெவ்வேறு தன்மைகளைப் புகுத்தி அவரவர் புராணத்தை வைத்துக் கொண்டு இறைவன் யார் என்று சமய அரசியல் நடாத்திக் கொண்டிருந்த காலத்தில் சைவ சித்தாந்தம் அறிந்த திருவள்ளுவர் 25வது குறள் வழி அந்த முடிச்சை அவிழ்த்தார்.

அக்குறளில் இந்திரன் என்பது பொதுபெயர் என்ற இறை மறுப்பாளரின் கூற்றுக்கிணங்க திருவள்ளுவர் கூற விரும்பியிருந்தால் அகல்விசும்புளார் கோமான் என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் குறள் இயற்றியிருக்கலாம்.

அவ்வாறு செய்யாது அகல்விசும்புளார் கோமான் என்னும் அடைமொழியை இந்திரனுக்கு  கொடுத்துக் கூறியமையால் அது சிறப்புப் பெயராகின்றது. அவ்வாறு இந்திரனுக்கு சிறப்புப் பெயர் கொடுத்து முதலில் புராணங்களை இயற்றியோர் வேத நெறியாளரும், திருமேனி வழிபாடு செய்த சைவ வைணவ புராணிகர்களுமேயாகும்.

ஆகையால் இக்குறள் வழி திருவள்ளுவர் குறித்த இந்திரன் இறை ஏற்பாளர் கூற்றுக்கிணங்க கூறியது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்ட பிறகு, யார் ஐம்புலன்களை அவிக்கவல்ல நெறிகூறுவார் என்பதை அறியவேண்டும். அது ஐம்புலன்களை  அடக்க இயலாத தேவர் உலகத்துத்  தலைவனாகிய இந்திரனல்ல மாறாக அதற்கும் மேலுலகில் உள்ளோர் என்பதையறிந்து அவரே ஐம்புலனை அவிக்கவல்ல  நெறிகாட்டுவோராவார் என்பதாக நீத்தார் என்னும் அதிகாரத்தில் அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவர். இது மிகவும் நுட்பமான முறையில் 1¾ அடியில் உணர்த்திய கருத்தாகும். திருவள்ளுவர் என பெயர் கொண்ட பொய்யாமொழி புலவனுக்குரிய இலக்கணம் இதுவேயாம். வானுலகமென்று கூறப்படும் இந்திர உலகத்திற்கு மேலுலகமாக இருப்பது எது? இதற்கு சிவாகமம் கூறும் அத்துவா (புவன) விதிகளை அறிந்திருந்தால்தான் பதில் கூற முடியும்.

இந்த அத்துவா (புவன) விதிகளை மூல சிவாகமங்களும் உபாகங்களும் கூறுகின்றன. இவ்விடம் கிரணாகமம் கூறும் அத்துவா விதிகளைக் கொண்டு மேலுலகம் எதுவென்று காண்போம்.

சுலோகம் 88:

பூலோகத்திற்கு மேல் துருவம் வரையில் பதினைந்து லட்சம் யோசனை புவர் லோகம். அதற்கு மேல் எண்பத்தைந்து லட்சம் யோசனை சுவர்லோகம். (புவர் லோகம் - வாயுமண்டலம் சந்திர மண்டலம் என்பவை. சுவர்லோகம் – சுவர்க்க லோகம் இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்வது)

சுலோகம் 89, 89 1/2:

அதற்குமேல் எட்டுக்கோடி யோசனை ஜனலோகம் (பிதிரரும், சனனு முதலிய முனிவர்கணங்களும் வாழ்வது) அதற்கு மேல் பன்னிரண்டு கோடி யோசனை தவலோகம் (சனகர் முதலியோர் வாழ்வது) அதற்குமேல் பதினாறு கோடி யோசனை சத்திய லோகம். இதில் இரண்டு கோடி யோசனை அளவான மேற்பகுதியில் பிரமதேவர் வீற்றிருகின்றார்.

சுலோகம் 90:

அதற்குமேல் மூன்று கோடி யோசனை திருமாலின் உலகம். அதற்கு மேல் நான்கு கோடி யோசனை உருத்திரர் உலகம்.

அப்ப கயிலாயமலை?

வேத ருத்திரனும் சிவனாரும் ஒன்றா?

இந்திர லோகத்திற்கு மேலோகமென்பது பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகியோர் இருந்து படைத்தல், காத்தல், ஒடுக்குதலாகிய மூன்று தொழில்களையும் முறையே நடாத்தும் சத்தியலோகம், வைகுந்தம், உருத்திரலோகம் என்பதாகும்.

கீழே வரும் கேள்விக்கு சைவ சித்தாந்ததின் படி விளக்கம் சொல்லவும்!

உலகுக்கு முதல்வன் சிவன். இவன் ஒருவனே பதி. மற்ற உயிர்கள் எல்லாம் ஆன்மவர்க்கம். திருமால், பிரம்மா போன்றவர்கள் ஆன்மவர்க்கம் என்றாகிறது. அவர்களு முக்தியை ஊட்ட சிவனார்தான்
முடியும் என்றாகிறது. பதியின் வேலையை மற்ற ஆன்மவர்க்கத்திற்கு பகிர்ந்து கொடுத்து படைத்தல், காத்தல் தொழில்களை அவர்களின் மூலம் பதி இவ்வுலகை
நடத்துகிறார் என்றாகிறது.

இங்கு படைத்தல் என்ற தொழிலை செய்யும் பிரம்மா அப்படி எதைத்தான் படைக்கிறார்?
உயிர் அனாதியானது. அப்படி ஏற்றுக்கொண்டால், பிரம்மா உயிர்களுக்கு உடம்பை படைப்பதுதான் அவர் மேற்கொண்டிருக்கும்
தொழிலா??

விஷ்ணு உயிர்களை காப்பவர் என்றால் பதியின் வேலையென்ன?

சிவனார் ஒடுக்குதல் தொழில் செய்கிறார் என்றால் உயிரை அழிக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது உயிர்
ஏற்கும் உடலை ஒடுக்குகிறார் அல்லது உடலை அழிக்கிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா??

சைவ சித்தாந்ததின் மூலம் விளக்கினால் நன்றாகயிருக்கும். அவரசம் இல்லை. கட்டுரைகளை படித்துவிட்டு
பொறுமையாக பதில் எழுதலாம்.

இம்மேலுலகத்திலிருந்து முத்தொழிலாற்றும் மும்மூர்த்திகள் வகுத்துக் கூறிய நெறியே உண்மை நெறியென்று அறிந்து அதன்வழி நடப்போரே ஐம்புலனடக்கி நீத்தார் என்னும் தகுதி பெறவல்லவர் என்பது 25வது குறள் வழி திருவள்ளுவர் கூறவரும் கருத்து.

மும்மூத்திகள் வகுத்துக்கூறிய நெறி என்ற கூற்றே பொருளற்றது. 
 
இறை இருப்பை ஏற்க மாட்டாதோர் அவர்தம்வழி கருத்துக் கூற, உண்மைநெறி அறியாதோரும் அவ்வழியையே பின்பற்றி திருக்குறளின் உட்கிடையை அறியாது கடந்த நூற்றாண்டில் பல தமிழறிஞர் உரை வரைந்ததாலேயே இக்கால தமிழருக்கு இவ்வளவு மயக்கம்.

இதில் வேதாகாமங்களை ஓதியுணர்ந்த பரிமேலழகர் உண்மையறிந்து தனித்து நின்று சிறப்பான பொருள் விளக்கம் கொடுத்துள்ளார்.

பரிமேலழகர் வேதங்களை சரியாக ஓதியுணரவில்லை என்று தெரிகிறது. வேதம் போற்றுவது இந்திரனை. உருத்திரனும், விஷ்ணுவும்
சிறு தெய்வங்கள் (வேதங்களின்படி மிக குறைந்த பாடல்கள் கொண்டவர்கள் - அதனால் சிறு தெய்வங்கள் - முக்கியத்துவம் இல்லாதவர்கள்)

இரா.பானுகுமார்

--

Thenee MK

unread,
Nov 19, 2017, 8:18:05 AM11/19/17
to mintamil

#வேதத்தில் இந்திரனே முதல்வன். அவனுக்கு அடுத்து அக்னி, வாயு, வருணன் போன்றோரே சிறப்பான இடத்தில் குறிக்கப்படுகிறார்கள்.
அதற்கு பிறகே உருத்திரனும், விஷ்ணுவும் குறிக்கப்படுகிறார்கள். ஆனால், திடுதிப்பென்று சிவனாருக்கும், விஷ்ணுவிற்கு 
அடங்கியவனாக, ஆன்மவர்க்கத்தினனாக பின்னாளைய புராணங்களில் கூறிப்பிடுவது எங்ஙனம்? #

இந்து மதமென்று ஒன்றை கையில் வைத்துக் கொண்டு எதுவென்று எதுவென்று, என்னவென்று தெரியாமல் வாழ்ந்தலால் தமிழர் அவர்தம்  சமயத்தை மறந்து வெகு காலமாகி விட்டது. 

வைதிக வேள்வி நெறியை ஏற்காமல் திருமேனி வழிபாட்டைக் கொண்டவர் புராணிகர். அப்பொழுதே இவ்விரு பிரிவினரிடமும்  பண்பாட்டுப் போர் துவங்கி விட்டது. இதை அறியாமால் ஒர் இந்திய நாட்டு குடிமகன் எம்மிடம் கேள்வி கேட்பது எமக்கே ஆச்சரியமாக இருக்கின்றது.   

அடியேன் சைவன் என்பதால் சைவ சமயத்தையொட்டி மட்டும் எமது கருத்தைப் பதிவேன்.

வடமொழி சைவ புராணங்களைப் படித்துப் பாருங்கள். அதில் சிவன் பரம்பொருள் என்றும் வானோர் கோமானாகிய இந்திரன் சிவனுக்குக் கீழ்பட்டோர் என்பதும் புரியும். அதனால் வேத நெறியாளர் செய்யும் வேள்வி வழிபாட்டில் இந்திரனுக்கே முதலிடம் கொடுப்பதை சைவ புராணிகர் ஏற்கவில்லை என்பதை உணர்த்தும் கதைதான் தக்கன் வேள்வி அழிப்பு. இதைப் புரிந்து கொண்டால் அடுத்தடுத்தப்  புராணங்களின் உண்மை நிலை புரியும்.

இதில் சமணர் ஒன்றும் சளைத்தவர் அல்லர். அருகரை விஷ்ணுக்கு நிகராக வைக்கவேண்டி கையில் சக்கரம் எய்தியிருப்பவர் என்பதை மக்களிடையே பரப்ப அருகர் அறஆழி ஏந்தியிருப்பவரென்று வடக்கே ஒரு புராணக்கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். அந்த தொன்மக் கதையைக் கொண்டுதான் தாங்களும் திருக்குறளில் கூறப்படும் 'அறஆழி' சமணரான அருகர் கையில் ஏந்தியிருக்கும் சக்கரமென்று கூறிக் கொண்டிருக்கின்றீர். தங்களின் கூற்றுக்கு மூலம் சமணரின் புராணக்கதை என்பதை தாங்கள் இவ்விடம் சொல்வதில்லை.  சமணரின்  புராணக்கதையைக் கை காட்டினால் அது பொய்யென்றாகிவிடும் என்ற பதைபதைப்பு தங்களுக்கும் உள்ளதென்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. 

சைவமும் வைணவமும் வடக்கே தனித்தனி மதங்களாக உருவெடுத்த முதலே அவரவர் புராணத்தில் அவரவர் வணங்கும் கடவுளரை  பரம்பொருளாகக் கூறி வழிபடலாயினர். இப்புராணங்கள் வேத நெறியின் பண்பாட்டுக்கு முரணானது. 

இது தாங்கள் கேட்ட கேள்விக்கான சுருக்கமான பதில். 
       
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 19, 2017, 8:30:41 AM11/19/17
to mintamil
அப்ப கயிலாயமலை?

பூலோகத்தில் உள்ளோர் சிவபெருமானை நினைத்து வழிபட ஓர் இடம். அதனையொட்டி வளர்ந்தவையே வடக்கே தோன்றிய சைவ புராணங்கள்.

வேத ருத்திரனும் சிவனாரும் ஒன்றா?

வேதத்தில் கூறப்படும் உருத்திரனும் சித்தாந்த சைவத்தில் கூறப்படும் சிவனும் ஒரு நிலையுடையோர் அல்லர்.

சித்தாந்த சைவத்தில் உருத்திரர் எனப்படுவோர் ஆன்ம வர்கமே.  இதில் ஏகதேச ஒடுக்கத்தைச் செய்பவர்  ஸ்ரீகண்ட பரமேசுவரன் அல்லது உருத்திரன் என்று ஆகமம் கூறும். ஒவ்வொரு யுகத்திலும் முற்றழிப்பைச் செய்பவன் சிவபெருமான் என்பது சித்தாந்தம். வடமொழி சைவ உபநிடதங்கள் மகா சங்காரன் என்று குறிக்கும். 

2017-11-19 19:37 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 19, 2017, 8:39:22 AM11/19/17
to mintamil
#இங்கு படைத்தல் என்ற தொழிலை செய்யும் பிரம்மா அப்படி எதைத்தான் படைக்கிறார்?#

உயிர்களுக்காக தனு கரண புவனங்களைப் படைத்து உயிர்கள் இன்ப துன்பங்களை நுகர்ந்து  உய்வடைய வேண்டி நுகர்ச்சிப் பொருட்களையும் அதனுள்  படைத்தருளுவது பிரம்மா. நவந்தருபேதம் என்றொரு கோட்பாட்டை 'தித்திக்கும் தமிழ்' என்றொரு இழையில் பதிந்ததைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
  
2017-11-19 19:37 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 19, 2017, 8:46:21 AM11/19/17
to mintamil
#உயிர் அனாதியானது. அப்படி ஏற்றுக்கொண்டால், பிரம்மா உயிர்களுக்கு உடம்பை படைப்பதுதான் அவர் மேற்கொண்டிருக்கும்
தொழிலா??#

இக்கேள்விக்கு இதற்கு முன் பதில் அளித்தாகி விட்டது. உயிர் என்று கூறும்பொழுது தங்கள் மனம் மாந்தரை மட்டும் நினைக்கின்றது அப்படியலல புல் முதல் வானோர் வரை  இதில் அடக்கமாகும்.
 
விஷ்ணு உயிர்களைக் காப்பவர் என்றால் பதியின் வேலையென்ன?

நவந்தருபேத கோட்பாட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உலக இயற்றியான் ஒருவனே. அவனே வெவ்வேறு நிலையில் தொழில்  காரணமாக வெவ்வேறு பேர் பெறுகிறான்.  

2017-11-19 19:37 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 19, 2017, 9:15:30 AM11/19/17
to mintamil
#மும்மூத்திகள் வகுத்துக்கூறிய நெறி என்ற கூற்றே பொருளற்றது.#

இதுதான் சித்தாந்தம் பயின்ற எமக்கும் தங்களுக்கும் உள்ள அறிவு நிலை வேறுபாடு.

உயிர்க்குலங்கள் உய்வடைய வேண்டியே வேதாகமங்களை சிவபெருமான் அருளினான். இவை குருசீட பரம்பரையாக உணர்த்தப் பட்டன.

இதனைச் சுருக்கமாக சொல்கிறேன்.

சதாசிவன், அனுசதாசிவர்கள் பதின்மருக்குச் சிவபேத ஆகமங்களையும் பதினெட்டு அநாதி உருத்திரருக்கு உருத்திர பேத ஆகமங்களையும் உபதேசித்தார்.  பின்னர் இவ்வாகமங்கள் சுத்த மாயையில் உள்ள அனந்தேசுவரருக்கு உபதேசித்தார். அவர் மூலம் சிவபேத ஆகமங்கள் சுத்த வித்தையில் நிலைபெற்றிருக்கும் பிரம்மா, விஷ்ணுக்கு உபதேசித்தார். உருத்திரபேத ஆகமங்களை அதே சுத்த வித்தையில் நிலைபெற்றிருக்கும் ஸ்ரீகண்ட உருத்திரருக்கு உபதேசித்தார். 

ஆகையால் ஆகமங்கள் கூறும் சித்தாந்தம் இப்படி குருபரம்பரையாக உபதேசிக்கப்பட்டு  நந்தியெம்பெருமானாடமிருந்து முனிவர்களும் ஏனையோரும் உபதேசமாகப் பெற்று உயிர்குலங்கள் உய்வடைகிறோம்.

இவ்வாறு குருபரம்பரையாக மும்மூர்த்திகளும் அவற்றைப்பெற்று அவர்தம் கடமைகளையாற்றுவதால் மும்மூர்த்திகள் வகுத்துக் கூறிய நெறியென்று கூறினேன். அதன் மூலம் சிவபெருமான் என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள்.

2017-11-19 19:37 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 19, 2017, 9:29:54 AM11/19/17
to mintamil
#பரிமேலழகர் வேதங்களை சரியாக ஓதியுணரவில்லை என்று தெரிகிறது. வேதம் போற்றுவது இந்திரனை. உருத்திரனும், விஷ்ணுவும்
சிறு தெய்வங்கள் (வேதங்களின்படி மிக குறைந்த பாடல்கள் கொண்டவர்கள் - அதனால் சிறு தெய்வங்கள் - முக்கியத்துவம் இல்லாதவர்கள்)#

பரிமேலகர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். காஞ்சியில் வாழ்ந்தவர். தொன்றுதொட்டு கற்றோருக்குப் புகலிடமாக இருக்குமிடம் காஞ்சி. அப்படிபட்ட இடத்தில் கற்றோருடன் வாழ்ந்தவர் என்பதை மறந்து அவர்தம் திறனைக் குறைத்து மதிப்பிடுவது நமது அறியாமையே.  

வைணவமும் வேத நெறிக்குத் தொடர்புடையது. மேலும் அவர்தம் திருக்குறள் உரையில் பல்வேறு மதங்களையும் துறைகளையும்  மேற்கோள்  காட்டி விளக்கவுரை எழுதியதால் அவர் நம்மைவிட சிறந்த ஞானமுடையவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் கற்றதோ கைய்யளவு. ஆனால் மின் தமிழில் அடித்துக் கொண்டு வீரகதி அடைவதைப் பார்த்தால் நாமே அறிவில் சிறந்தவரென்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவும் நமது அறியாமையே. சிவசிவ.

2017-11-19 19:37 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 19, 2017, 11:25:24 PM11/19/17
to mintamil
தேனீ ஐயா,

அடிப்படையில் நானும் தங்களைப்போல சிவநெறியாளன் தான். ஆனால்

நமக்குப் பிடித்த சமயக்கருத்துக்களையே எல்லாவற்றிலும் புகுத்துவது என்பது ஒரு நடுநிலையான ஆய்வாளருக்கு அழகல்ல.

வள்ளுவர் சமயச்சார்பற்றவர் என்றுதான் எனது அனைத்துக் கட்டுரைகளிலும் கூறிவரும் கருத்தாகும்.

இக்குறளுக்கு நீங்கள் கூறவரும் மாற்றுக்கருத்தினைச் சுருக்கமாகக் கூறுங்கள். :))

ipohsaivite

unread,
Nov 20, 2017, 12:28:25 AM11/20/17
to mint...@googlegroups.com
எது நேரிடைப் பொருளோ அதற்கு சுற்றி வளைத்துப் பொருள்  கூறுகின்றேன் என்று விருப்பம்போல்  கூறினால் எப்படி ஏற்றுக் கொள்வது? 

திருக்குறள் சமய சார்பற்ற நூல் அல்ல என்பது இங்கு கருத்து எழுதிக் கொண்டிருக்கும் சமணரான திரு. பானுகுமார் கருத்து. அது சமண சார்புடையது என்பது தேமொழி கருத்து. திருக்குறள் ஆசிவகர் நூல் என்பது திரு. இராம. கி அவர்களின் கருத்து.

இத்தனை பேரும் வெவ்வேறு சமய நூல் என்று ஆதாரமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சித்தாந்த சைவத்தைச் சார்ந்த சமய கருத்துக்கள் தெள்ளத்தெளிவாக திருக்குறளில் இருக்கும்பொழுது அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் முன் வைக்கும் பொழுது அதை மறுக்க முடியாதோர் பின் ஏன் திருக்குறள் சமணர் நூல் என்று கூற வேண்டும்?

திருக்குறள் சமயக் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக கூறும் பொழுது அது சமயம் சாராத நூல் என்று முத்திரை குத்துவதற்கு எவருக்குத் தகுதி உள்ளது? திருத்தம் என்ற பெயரில் திருக்குறளைச் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள் வது?

'இந்திரனே சாலும் கரி' என்று கூறியதில் எதிர்மறை கருத்தைச் சொல்லி அதன்வழி உடன்பாட்டு முறையில் ஐம்புலன் அடக்கைத்தை நீத்தார் அறியும் வழியைக் குறித்தக் குறள். அதுவே நேரிடைப் பொருள். 

Sent from my Samsung Galaxy smartphone.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/NcoCnOnaeZI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 20, 2017, 5:15:37 AM11/20/17
to mintamil
உயர்திரு தேனீ ஐயா ,

தங்களின் கருத்து வழி  
1) திருக்குறளின் காலம் என்ன  ?
2)  சைவ சித்தாந்தம்  தோன்றிய காலம் என்ன  ? 
3) முதல் சைவ சித்தாந்த நூல் எது ? அதனை எழுதிவர் யார்  ?

நன்றி 
சுரேஷ்குமார் .

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 20, 2017, 5:28:07 AM11/20/17
to mintamil
2017-11-20 10:58 GMT+05:30 ipohsaivite <ipohs...@gmail.com>:
எது நேரிடைப் பொருளோ அதற்கு சுற்றி வளைத்துப் பொருள்  கூறுகின்றேன் என்று விருப்பம்போல்  கூறினால் எப்படி ஏற்றுக் கொள்வது? 

திருக்குறள் சமய சார்பற்ற நூல் அல்ல என்பது இங்கு கருத்து எழுதிக் கொண்டிருக்கும் சமணரான திரு. பானுகுமார் கருத்து. அது சமண சார்புடையது என்பது தேமொழி கருத்து. திருக்குறள் ஆசிவகர் நூல் என்பது திரு. இராம. கி அவர்களின் கருத்து.

இத்தனை பேரும் வெவ்வேறு சமய நூல் என்று ஆதாரமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சித்தாந்த சைவத்தைச் சார்ந்த சமய கருத்துக்கள் தெள்ளத்தெளிவாக திருக்குறளில் இருக்கும்பொழுது அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் முன் வைக்கும் பொழுது அதை மறுக்க முடியாதோர் பின் ஏன் திருக்குறள் சமணர் நூல் என்று கூற வேண்டும்?

திருக்குறள் சமயக் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக கூறும் பொழுது அது சமயம் சாராத நூல் என்று முத்திரை குத்துவதற்கு எவருக்குத் தகுதி உள்ளது? திருத்தம் என்ற பெயரில் திருக்குறளைச் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள் வது?

'இந்திரனே சாலும் கரி' என்று கூறியதில் எதிர்மறை கருத்தைச் சொல்லி அதன்வழி உடன்பாட்டு முறையில் ஐம்புலன் அடக்கைத்தை நீத்தார் அறியும் வழியைக் குறித்தக் குறள். அதுவே நேரிடைப் பொருள். 

ஆஹா, பாலுக்குக் காவல் பூனைங்கிற கதையா,

ஐம்புலன் அடக்கியவருக்கு எடுத்துக்காட்டாக புலன் அடக்கமற்ற தேவேந்திரன்?.

ஏன், வள்ளுவர் காலத்தில் ஐம்புலன்களை அடக்கியவருக்குச் சான்றுகாட்ட யாருமே இல்லையோ?.

ஏன் தான் இப்படி வலிந்து எதிர்மறைப் பொருள்கொண்டு அனைவரையும் குழப்பி.. ....?

Thenee MK

unread,
Nov 20, 2017, 6:21:10 AM11/20/17
to mintamil
எமது கருத்தைத் தாங்கள் தவறாக புரிந்து கொண்டுளீர்.

'இந்திரனே சாலும் கரி' என்பது எதிர்மறை கருத்து என்று கூறினேன்.

இங்கே எதிர்மறை கருத்தென்று கூறியது, ஐம்புலனை அடக்கவேண்டுவோர் கோமான் இந்திரனைப் போல் அல்லாமல் என்பதாகும்.

'இந்திரனைப் போல் அல்லாமல்' என்றால் அதற்கு உடன்பாட்டு முறையில் பொருள் காண்பது நமது அறிவு.

அப்படியானால் நீத்தார் என்பார் இந்திரனைப் போல் அல்லாமல் அவர்தம் இச்சைகளை விட்டொழிதல் வேண்டும்.

இந்திரனைப் போற்றும் வேத, ஜைன மதத்தினர் கூறுவதென்ன?

வேத நெறியில் இந்திர வேந்தனும் அவனைச் சார்ந்த தேவர்களும் இன்பத்தை மட்டுமே வேண்டி நிற்போராவார். அப்புறம் அவர்கள் எங்கனம் இச்சைகளை விட்டொழிந்தவராவார்?

ஜைன மதத்தினர் ஐம்புலன்களை அடக்கியோர் வானுலகில் இந்திரனாக வாழ்வோராவார் என்று கூறுவார். அப்படியானால் திருவள்ளுவர் குறித்த வானுலக கோமான் இந்திரன் இவ்விரு நெறிகளார் சொல்லும் பொருளில் கூறப்பட்டதல்ல என்பது தெளிவு.

அதையடுத்துச் சைவ தொன்மக்கதைகளில் கூறப்படும் இந்திர வேந்தன் அவன்தன் இச்சையால் பட்ட இழிவுகளைக் கூறும் கதைகள் பல.

ஆகையால் சைவத்தொன்ம கதையை அடிப்படியாய் கொண்டு கூறப்பட்ட எதிர்மறை கருத்தைக் கொண்டு சைவத்தின் வழி ஆராய்வோமானால் 'பற்றுக பற்றற்றான் பற்றினை...' (350) பற்றுவதே ஐம்புலன் அடக்கல்ல நெறியாகும் என்பது சொல்லமலேயே புரியும்.

மு. கமலநாதன்
 
Thenee MK

unread,
Nov 20, 2017, 6:22:41 AM11/20/17
to mintamil
'இறுதி பத்தியில் 'அடக்கவல்ல நெறியாகும்' என்று திருத்தி வாசிக்கவும்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 20, 2017, 7:37:32 AM11/20/17
to mintamil
2017-11-20 16:51 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
எமது கருத்தைத் தாங்கள் தவறாக புரிந்து கொண்டுளீர்.

'இந்திரனே சாலும் கரி' என்பது எதிர்மறை கருத்து என்று கூறினேன்.

இங்கே எதிர்மறை கருத்தென்று கூறியது, ஐம்புலனை அடக்கவேண்டுவோர் கோமான் இந்திரனைப் போல் அல்லாமல் என்பதாகும்.

இந்திரனே சாலும் கரி = இந்திரனே போதுமான சான்றாகும்.

இதில் எதிர்மறைக் கருத்து எப்படி வருகிறது என்று கொஞ்சம் விளக்குங்கள்.

நாமாக வலிந்து அப்ப்டிக் கொண்டாலொழிய வராது. :)))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 20, 2017, 7:41:18 AM11/20/17
to mintamil
தேனீ ஐயா,

ஐந்தவித்தார் ஆற்றலுக்குச் சான்றாக இந்திரனை நேரடியாகவே உவமைப்படுத்தி இருக்கும்போது

ஏன் வலிந்து எதிர்மறைப் பொருள் கொள்ளவேண்டும்?. புரியவில்லை.

Thenee MK

unread,
Nov 20, 2017, 8:21:56 AM11/20/17
to mintamil
இந்திரனே எதற்கு போதுமான சான்றாகும் என்று கூறினார்?

பாலுக்கு பூனை காவலாகுமென்று குறிக்கவா போதுமான சான்று என்று கூறினார்? அப்படியல்ல கருத்து. பாலுக்குப் பூனை காவலாகாது என்பது திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்து.

ஐம்புலன் அடக்கத்திற்கு எதிரி காம இச்சைகளுக்கு அடிமையான இந்திரன் கதையே சான்றாகும் என்பது திருவள்ளுவர் வாக்கு.  இந்திரனின் பண்பைப் பின்பற்றாது நிற்பது என்பது நீத்தாருக்குரிய இலக்கணம். 

உடன்பாட்டு முறையில் கூறுவதை விடுத்து எதிர்மறையில் அவர்தம் கருத்தை அக்குறள் வழி கூறினார். 

மு. கமலநாதன்

Thenee MK

unread,
Nov 20, 2017, 8:26:00 AM11/20/17
to mintamil
நீங்கள் தானே பாலுக்குப் பூனை காவலாகுமா? என்று கேள்வி கேட்டீர். இப்பொழுது தங்கள் கருத்துக்கே முரணாக கேள்வி கேட்பது தங்கள் மொழியில் சொன்னால் 'திருத்தம்' என்பதோ?

தயவு செய்து எம்மை விதண்டாவாதமாகக் கருத்து எழுத வைக்காதீர்.

N. Ganesan

unread,
Nov 20, 2017, 8:33:47 AM11/20/17
to மின்தமிழ், vallamai
2017-11-20 5:21 GMT-08:00 Thenee MK <ipohs...@gmail.com>:
இந்திரனே எதற்கு போதுமான சான்றாகும் என்று கூறினார்?

பாலுக்கு பூனை காவலாகுமென்று குறிக்கவா போதுமான சான்று என்று கூறினார்? அப்படியல்ல கருத்து. பாலுக்குப் பூனை காவலாகாது என்பது திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்து.

ஐம்புலன் அடக்கத்திற்கு எதிரி காம இச்சைகளுக்கு அடிமையான இந்திரன் கதையே சான்றாகும் என்பது திருவள்ளுவர் வாக்கு.  இந்திரனின் பண்பைப் பின்பற்றாது நிற்பது என்பது நீத்தாருக்குரிய இலக்கணம். 

உடன்பாட்டு முறையில் கூறுவதை விடுத்து எதிர்மறையில் அவர்தம் கருத்தை அக்குறள் வழி கூறினார். 

இந்த இழையை நான் இன்னும் படிக்கவில்லை. இம் மடலையே பார்த்தேன்.

முக்கியமான கருத்து. இந்திரனை - வேதப் பெருங்கடலை - அந்தப் பீடத்தில் இருந்து இறக்கினோர்: சிரமண சமயிகள். அதாவது சமணர் (ஜைநர்) + பௌத்தர் -
இதை அர்த்தமாகதி, பாலி, ப்ராகிருத இலக்கியங்கள் தெளிவாகப் பல நூறு இடங்களில் காட்டுகின்றன. சம்ஸ்கிருத - ப்ராகிர்த ஊடாடலில் சமணர்கள்
செய்தது இந்திரன் பூனை ஆன கதை. அவனுக்கு உடலெல்லாம் ஆயிரம் “தாமரை” கண்கள் என்பது சங்க இலக்கியம். இங்கே தாமரை ஒரு குறியீடு.
கஷ்மீர நாட்டு சோமதேவர் தாம் எழுதிய கதா சரித சாகரம் ( https://en.wikipedia.org/wiki/Kathasaritsagara ) இந்திரன் கண்கள், பூனை ஆதல் பற்றி விளக்குகிறது.
பரிபாடலில் தான் தமிழில் இந்திரன் பூனை என்பது பதிவாகிறது. சமணர்கள் செய்த கதையைப் பதிவு செய்தார் புலவர். அதேபோல, பௌத்தர்கள்
தத்துவம் சூன்யம். அதைப் பாழி எனவும் மொழிபெயர்க்கிறார் பரிபாடற் புலவர்.

”இந்திரனே சாலுங் கரி” என்னுங் குறளுக்கான சுருக்கக் குறிப்புரை இஃது. சில பக்கங்களில் எழுதலாம்.

நா. கணேசன்
 
மு. கமலநாதன்

Thenee MK

unread,
Nov 20, 2017, 8:52:59 AM11/20/17
to mintamil
திடீரென வானத்திலிருந்து குதித்ததால் பூமியில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசுகின்றார் திரு. நா. கணேசனார்.

இக்குறளுக்குச் சமணரின்  பொருள் விளக்கத்தை கே.எம். வேங்கடராமையா அவர்கள் 'திருக்குறள் ஜைனவுரை' என்று ஒரு நூல் எழுதி சரசுவதி மகால் நூல் நிலையம் வெளியிட்ட (1991) நூலிலிருந்து இவ்விடம் பதிவு செய்கிறேன்.

ஐம்புலன்களையும் ஆசையின் வழியே போகவொட்டாம லடக்கினவனுடைய வலிமைக்குத் தேவலோகத்திலே தேவர்களுக்கெல்லாம் ராசாவாயிருக்கப்பட்ட தேவேந்திரனே சரி (சாட்சி), பின்னையொருவருஞ் சரியல்ல (சாட்சியல்ல) வென்பதாம்’.

ஒரு பக்கம் ஜைனர் இந்திரனை 'ஐம்புலனை அடக்கியவர்' என்று பெருமையாகக் கூறுகின்றார்.

ஜைனரின் திருக்குறள் விளக்கத்திற்கு எதிராக இந்திரனை,

'முக்கியமான கருத்து. இந்திரனை - வேதப் பெருங்கடலை - அந்தப் பீடத்தில் இருந்து இறக்கினோர்: சிரமண சமயிகள். அதாவது சமணர் (ஜைநர்) + பௌத்தர் -'

இந்திரனை சிறுமைப்படுத்திவர் சமண மதத்தினர் என்று திரு. நா. கணேசனார் கூறுகின்றார்.

இவ்வாறு ஜைனரும் அவர்களுக்கு ஒத்தூதிப் பழகிப்போன திரு. நா. கணேசனாருமே ஒருவருக்கு ஒருவர் மறுத்துக் கூறிக் கொண்டதால் எமது வேலை மிச்சமாகியது.

முதலில் ஜைனரும் திரு. நா. கணேசாரும் பின்புலத்தில் பேசி இனி இந்த தொடர்கதையை எப்படி நகர்த்தாலாம் என்றொரு முடிவு செய்து  'திருத்தம்' என்று தலைப்பிட்டு கருத்துப் பதிவு செய்யுங்கள் அதற்கப்புறம் எமது கருத்தைப் பதிவேன்.

அப்பப்பா மின் தமிழ் திருக்குறளைப் படுத்தும் பாடு இருக்கின்றதே! சொல்லவொணாதது.

மு. கமலநாதன்
  
Thenee MK

unread,
Nov 20, 2017, 9:45:16 AM11/20/17
to mintamil
'எமது கருத்து வழி' என்று கூற விரும்பவில்லை காரணம் தாங்கள் குறிப்பிட்ட நூல்களின் கால அளவுகளை தக்கார் கணித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளனர். அதனால் அவர் கருத்துகளே போதுமான சான்றாகும் என்பதால் அவ்வறிஞர்களின் கருத்தைப் பதிவு செய்கிறேன். 

திருக்குறளின் காலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் டாக்டர் ச. அகத்தியலிங்கம் தலைமையில் சில தமிழ்மொழி அறிஞர் (முனைவர் மற்றும் பேராசிரியர்) சேர்ந்து சங்கத் தமிழ் என்றொரு தலைப்பில் தொடர் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். அவர்தம் கருத்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் இதற்கு முன் கூறிய கருத்துகளை ஆராய்ந்து வெளியிட்ட முடிவு பின் வருமாறு:

சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 3 அல்லது கி.பி. 4 வரை.

திருக்குறள் சங்கம் மருவிய கால நூல் என்பதும் அது சிலப்பதிகாரத்திற்கு முந்தைய நூல் என்பதாலும் இந்நூலின்  காலம் கி.பி. 2 முதல் கி.பி. 3 வரை என்று கூறலாம். இதை முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ நகர்த்துவது அவரவர் விருப்பம் காரணம் திருக்குறளின் காலம் இன்னது என்று அறுதியிட்டுக் கூற வழியில்லை. 

சிவாகமத்தின் காலம்

இது இறைவனால் அருளப்பெற்ற நூல் என்பதால் இதற்கு காலம் கணிப்பது சுத்த சைவருக்கு ஆகாது என்பது மரபு. அதனால் சைவ அறிஞர் பெருமக்களும் குருமார்களும் சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளது போலவே அது படைக்கும் காலத்திலேயே இறைவன் அருளினான் என்றுதான் கூறுவார். அதற்கு மறுப்பேதும் சுத்த சைவர் கூற மாட்டார். ஆனால் இக்கருத்து மின் தமிழ் போன்ற இடத்தில் ஏற்கப்பட மாட்டாது என்பதை அறிவேன் காரணம் இங்கு மறை நூல்களையும் குறை கூற வல்லமை பெற்ற அறிஞர் பெருமக்கள் உள்ளனர். 

தாங்கள் கேட்டதற்காக ஆகம காலத்தை ஆராய்ந்த Dr. Surendranath Das Gupta அவர்கள் மூல ஆகமங்கள் சுமார் கி.பி. 2 முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்குமென்று கூறுகின்றார். இவ்வாறு கூறியது 'The History of Indian Philosophy - Vol V என்னும் நூலிலாகும்.  

வடக்கே தோன்றிய சில தொன்மையான வடமொழி புராணங்கள் தாந்திர நூல்களை மறுத்துள்ளதால் சிவாகமம் அப்புராணங்களை விட தொன்மையானதாக இருக்க வேண்டும் என்பது எமது கருத்து. அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளதாக இருக்க வேண்டும் என்பது எமது கருத்து. 

மேற்கூறியதற்கான ஆதாரத்தை இவ்விடம் இணைத்துள்ளேன்.

மு. கமலநாதன் 
 
AGE OF KURAL AND AGAMA.jpg
AGE OF KURAL AND AGAMA1.jpg
AGE OF KURAL AND AGAMA2.jpg
AGE OF KURAL AND AGAMA3.jpg

வேந்தன் அரசு

unread,
Nov 20, 2017, 11:39:28 AM11/20/17
to vallamai, மின்தமிழ்
இந்திரனே சாலுங் கரி:

இந்திரனுக்கு ஆயிரம் ரிஷிகள் அமைச்சராக (கண்ணாக/ கருத்தாக)  இருந்தார்களாம். அதனால் இந்திரனுக்கு ஆயிரங்கண்ணான் எனப்பேர் என்று கெளடில்யர் சொல்லுகிறார்.

20 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:33 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

தேமொழி

unread,
Nov 20, 2017, 3:56:54 PM11/20/17
to மின்தமிழ்

On Monday, November 20, 2017 at 6:45:16 AM UTC-8, தேனீ wrote:
'எமது கருத்து வழி' என்று கூற விரும்பவில்லை காரணம் தாங்கள் குறிப்பிட்ட நூல்களின் கால அளவுகளை தக்கார் கணித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளனர். அதனால் அவர் கருத்துகளே போதுமான சான்றாகும் என்பதால் அவ்வறிஞர்களின் கருத்தைப் பதிவு செய்கிறேன். 

திருக்குறளின் காலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் டாக்டர் ச. அகத்தியலிங்கம் தலைமையில் சில தமிழ்மொழி அறிஞர் (முனைவர் மற்றும் பேராசிரியர்) சேர்ந்து சங்கத் தமிழ் என்றொரு தலைப்பில் தொடர் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். அவர்தம் கருத்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் இதற்கு முன் கூறிய கருத்துகளை ஆராய்ந்து வெளியிட்ட முடிவு பின் வருமாறு:

சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 3 அல்லது கி.பி. 4 வரை.

திருக்குறள் சங்கம் மருவிய கால நூல் என்பதும் அது சிலப்பதிகாரத்திற்கு முந்தைய நூல் என்பதாலும் இந்நூலின்  காலம் கி.பி. 2 முதல் கி.பி. 3 வரை என்று கூறலாம். இதை முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ நகர்த்துவது அவரவர் விருப்பம் காரணம் திருக்குறளின் காலம் இன்னது என்று அறுதியிட்டுக் கூற வழியில்லை. 

இணைப்பிற்கு  நன்றி ஐயா, இந்தக்  காலவராய்ச்சி  நூலின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பு விவரங்கள் (பதிப்பு, பதிப்பாளர், பதிப்பிக்கப்பட்ட ஆண்டு) ஆகியவற்றையும் தர இயலுமா.  இதை மேற்கோள் காட்ட விரும்புபவருக்கு அந்தத் தகவல் உதவும். 

.... தேமொழி 

Thenee MK

unread,
Nov 20, 2017, 8:40:05 PM11/20/17
to mintamil
வணக்கம் தேமொழி,

தாங்கள் கேட்ட தகவல்களை இங்கே PDF கோப்பு வடிவில் இணைக்கிறேன்.

'சங்கத் தமிழ்' என்னும் ஆய்வு நூல்கள் 5 பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

திருக்குறள் கால ஆராய்ச்சியை முதற் பிரிவில் இரு வெவ்வேறு தலைப்பின் கீழ் காணலாம்.

மு. கமலநாதன்

சங்கத்.pdf

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 20, 2017, 8:47:35 PM11/20/17
to mintamil
நன்றி உயர்திரு தேனீ ஐயா , தங்களின் மடலுக்கு / பல்வேறு தகவல்கள் கொண்ட தரவுகளுக்கும் .

சைவ ஆகமங்கள் குறித்த பல்வேறு வினாக்கள் உள்ளன . வேறு ஒரு தனி  இழையில்  வருகின்றேன் .

நன்றி 
சுரேஷ்குமார் 

தேனீ

unread,
Nov 20, 2017, 8:54:50 PM11/20/17
to மின்தமிழ்
சிவசிவ

தேமொழி

unread,
Nov 20, 2017, 10:12:20 PM11/20/17
to மின்தமிழ்
நன்றி ஐயா. 

..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages