Re: சொற்பொருள் ஆய்வு--A Tryst With Words

488 views
Skip to first unread message

devoo

unread,
Sep 2, 2010, 2:40:02 PM9/2/10
to மின்தமிழ்
இந்திர விழவூரெடுத்த காதை (சிலப்பதிகாரம்)-

”வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்

கால்கோள் *விழவின்* கடைநிலை சாற்றித்

தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து

மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து”

தேவ்


On Sep 2, 1:05 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> *விழவு சரியா? விழா சரியா? *
>
>  திருவிழவில் என்பது முற்றிலும் இலக்கணமும், இலக்கியச் சான்றும் ஒப்பிய பாடம்.
>
> இலக்கியச் சான்றுகளைக் கீழ்க்கண்டவாறு தருகிறேன்.
>
> 1)புறநானூறு 9 --
>
> “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
> முந்நீர் விழவின் நெடியோன்
> நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.”
>
> (விழவின் -- விழாவின்  திரு உ வே சா பதிப்பித்த பழைய உரை)
>
> 2 புறநானூறு 31 --
> “செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
> விழவுடை யாங்கண் வேற்றுப் புலத்திறுத்து”
>
> விழவுடை யாங்கண் -- ஓசைஉண்டான விழாவினை உடைய அவ்விடத்து (உ வே சா ப)
>
> 3) புறநானூறு 33 --
> “நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே”
>
> விழவு என்பது சிறுசோற்று விழவினை; வேள்வி என்றுரைப்பினும் அமையும்.
>
> இங்கு புறநானூறு விழவு என்பதற்கு வேள்வியைப் பொருளாகக் கொண்டுள்ளமை காண்க.
> திருவோணத் திருவிழவில் என்பது யக்ஞம் என்ற பொருளும் விழவு என்னும் பதத்தால்
> தரும் என்பது சங்கத் தமிழ் ஆதரித்தது என்பதும் உணரப்படும்.
>
> 4) புறநானூறு 65 --
>
> “உழவ ரோதை மறப்ப விழவும்
> அகலுள் ஆங்கட் சீறூர் மறப்ப”
>
> விழவும் அகலுள் ...மறப்ப --அகன்ற தெருவினை உடைய சீறூர் விழாவினை ஒழிய
>
> 5) புறநானூறு 84 ---
>
> “கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்”
>
> விழவு -- விழா
>
> 6) புறநானூறு 88 --
>
> “கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
> விழவு மேம்பட்ட நற்போர்
> முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே”
>
> விழவு மேம்பட்ட -- களவேள்வி முதலாகிய விழாச்சிறந்த நல்ல போரைச் செய்யும்
>
> இங்கும் விழவு களவேள்வி என்ற பொருள் கொண்டமை காண்க.
>
> சான்றுகள் இன்னும் போகின்றன. திருநாவுக்கரசர் தேவாரத்தில் “விழவனை வீரட்டம்
> மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை அழகனை” என்று பயன்படுத்துகிறார்.
> ”விழவின் ஓசை ஒலியறாத் தண் பொழில் பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி” என்று
> திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை ’விழவின்’ என்றே சொல்லாட்சி செய்கிறது.
>
> திருக்கடைக்காப்பு பாசுரத்திலும் விழவு என்ற ஆட்சி காணப்படுகிறது.
>
> திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில்
> அரியுருவாகி அரியை அழித்தவனை
> பந்தனை தீரப் பல்லாண்டு பாடுதுமே.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

devoo

unread,
Sep 3, 2010, 12:04:37 AM9/3/10
to மின்தமிழ்
பயணம் - இலக்கியத்தில் ஆளப்படும் சொல்லா ?

‘எனது இலங்கைச் செலவு’ என்ற ஒரு பயணக் கட்டுரையைப் பல ஆண்டுகளுக்கு முன்
படித்துள்ளேன்; ’செலவு’ தற்போது பணச்செலவில் மட்டுமே பயனாகும் சொல்லாகி
விட்டது


தேவ்

Innamburan Innamburan

unread,
Sep 3, 2010, 12:50:12 AM9/3/10
to mint...@googlegroups.com
'தமிழ் தென்றல்' என்ற விருது திரு.வி.க. அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்டது. அந்த பயணத்தை சங்கத்தமிழ்சொல்லாகிய 'செலவு' அளிக்கும் பொருளில், அவர் கூறியிருக்கிறார். வடமொழிச்ச்சொற்க்களை அறவே ஒதுக்காத அவர், தமிழில் பொருத்தமான சொற்களை உருவாக்கியிருக்கிறார். சான்று, 'நாடாளும் மன்றம்' அவர் வ்ழி நடந்து,'செலவு' என்ற சொல்லை பயன்படுத்துதல் சாலவும் தகும்.

இன்னம்பூரான்


2010/9/3 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Sep 3, 2010, 1:16:02 AM9/3/10
to mint...@googlegroups.com
மோஹன்,
அருமை
சேச்சி




From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
Subject: [MinTamil] சொற்பொருள் ஆய்வு--A Tryst With Words

விழவு சரியா? விழா சரியா?
 
சான்றுகள் இன்னும் போகின்றன. திருநாவுக்கரசர் தேவாரத்தில் “விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை அழகனை” என்று பயன்படுத்துகிறார். ”விழவின் ஓசை ஒலியறாத் தண் பொழில் பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி” என்று திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை ’விழவின்’ என்றே சொல்லாட்சி செய்கிறது.
 
திருக்கடைக்காப்பு பாசுரத்திலும் விழவு என்ற ஆட்சி காணப்படுகிறது..

S.Krishnamoorthy

unread,
Sep 3, 2010, 1:20:03 AM9/3/10
to mint...@googlegroups.com
தெலுகு மொழியில் “செலவு” என்றால் விடை பெற்றுக்கொள்ளுகிறேன் என்று பொருள்படும்.
வழிப்போக்கன்

2010/9/3 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

Vinodh Rajan

unread,
Mar 19, 2011, 3:55:27 PM3/19/11
to mint...@googlegroups.com, min tamil
தேவநாகரி வடிவத்தையும் தந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்

கதை < कथा kathā கதா²

காதை < गाथा gāthā கா³தா²

V

N. Ganesan

unread,
Mar 19, 2011, 4:11:46 PM3/19/11
to மின்தமிழ்

Vinodh,

an aside:

Aksharamukha converter needs some bug fix.
viTThala, ADisi in Jagadhodharana songs don't convert well.

thx,
NG

Vinodh Rajan

unread,
Mar 19, 2011, 4:38:43 PM3/19/11
to mint...@googlegroups.com
Send me the source Text and the source script, target script for your conversion.

I will look into it.

Thanks !

V

venkatachalam Dotthathri

unread,
Jul 31, 2011, 1:38:07 AM7/31/11
to mint...@googlegroups.com
ஓம்
’உட்கார்ந்தான்’
தமிழ்ச்சொல்லின் பயன்பாடு முன்பு இருந்ததில்லை என்கிறார். ஞானியார் அடிகள்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.

 

Innamburan Innamburan

unread,
Oct 6, 2011, 2:40:02 PM10/6/11
to mint...@googlegroups.com

Many Thanks,


One of the most brilliant minds to traverse the philosphical mine-fields 

of the 20th Century, LW holds sway on the Meaning of the Language 

and as a commentator,Lois Shawver  is lagging far behind, unsurprisingly 

though. Of course, LW is making up things. I am reminded of Mark Twain meeting the great Helen Keller, who could not see, hear or speak, but grasped all the nuances. He was smiling, but, was sad. Helen Keller wrote later that she knew he was sad, just by touching his face, even though he was smiling!


Innamburan


2011/10/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னங்க? ஹாலிடேயா? ஜாலி. 


coral shree

unread,
Jul 15, 2012, 3:23:27 AM7/15/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு ரங்கன் ஜி,

அருமையான இழை. தயவுசெய்து இதை தொடருங்கள்... மிகவும் பயனுள்ளதாக அமையும். திசைக்களவு புதிய வார்த்தை.. அழகான சொல்லாடல். தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

அன்புடன்
பவளா

2011/3/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

கதை ~ காதை; இது என்ன என்று சிறிதே பார்ப்போமா? 

கதை இந்தச் சொல்லின் உருவாக்கம் எப்படி? 

காதை -- இந்தச் சொல்லின் உருவாக்கம் எப்படி? 

கதைக்குக் கால் முளைத்துக் காதை ஆயிற்றா? 

இல்லை. இரண்டும் இருவேறு சொற்களா? 

ஒரு குறிப்பு. பொதுவாக ஆ என்று முடியும் வடமொழிச் சொற்கள் தமிழில் ஐ என்று முடிவு பெற்று வரும். 

கதா -- கதை; காதா -- காதை 

கதா சரித் சாகரம் 

காயே தவ ஜய காதா 


இந்தக் ’கதை’ என்பது எதிலிருந்து வருகிறது? 

நான் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இந்த மாதிரி எதிலிருந்து எது வருகிறது என்ற கேள்வியெல்லாம் மொழியின் கிளவியாக்கம் என்றபடி தமிழ் லெக்ஸிகன், வரலாற்றியல் அகராதி, இலக்கியங்கள், அரும்பொருள் விளக்க நிகண்டுகள் -- இவை வடமொழியிலும், தமிழிலும் உள்ளன கொண்டு ஒப்ப நாடி ஒரு முடிவுக்கு வருவதைத்தான் சொல்கிறேன். இப்படி வந்திருக்கலாமோ, என்று சில இடங்களில் ஊகிக்க நேரிட்டால் அதையும் சொல்வேன். ஆனால் இவை எதுவுமே இப்படித்தானா என்றால் பொருளைப் பிடித்துச் சொல்வதுபோல் சொல்ல முடியாது. பெரும்பாலும் இப்படி வந்திருக்க வாய்ப்புள்ளது -- அவ்வளவுதான். அதுவும் நூல்களின் சான்றாண்மை இல்லாமல் வெற்று சொந்தக் கற்பனை வெட்டிப் பொழுதுபோக்கு. அதில் எனக்குச் சிறிதும் மரியாதையில்லை. அதில் இன்னும் அரசியல்தனங்கள் சேர்ந்துகொண்டால் அக்கியைச் சொறிந்துவிட்டுக்கொள்ளும் பிழைப்பாகத்தான் முடியும். 

சொற்கள் பலவேறு விதங்களில் உருவாகின்றன. ஒரு சொல்லின் முடிந்த தோர்றத்தைப் பார்த்து இது இப்படித்தான் உருவாகியிருக்கும் என்று தடாலடியாக அடிப்பது மொழி இயலில் ஆழ்ந்த ஆய்வுள்ளவர்கள் அருவருக்கும் ஒரு நடத்தையாகும். இந்த விதமான pseudo-etymology எவ்வளவு பேதைமை நிறைந்தது என்பதைச் சில உதாரணங்கள் கொண்டு பின்னர் விளக்குவேன். 

இங்கு பெரும்பாலும் தமிழ்ச் சொற்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்றாலும், மர்ற மொழிகளின் சொற்களும் பொருத்தப்பாடும், விளக்க்த்துணையும் கருதி எடுத்துக்கொள்ளப்படும். 

மனித குலத்தில் மொழியும், சொற்களும் எப்படி உருவாகி மனித நாகரிகத்தைக் கட்டமைக்கின்றன என்று புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அணுகுங்கள். வேலிகள் வேண்டாம். 


இப்பொழுது ‘கதை’ என்பதையே எடுத்துக்கொள்வோம். கதா என்னும் வடமொழிச் சொல் ஐ முடிவு பெற்று கதை என்றாகும் என்று சொன்னேன். சரி வடமொழியில் கதா என்றால் சொல்லுதல், விவரித்தல், உரையாடல் என்ற பொருள். இந்த ‘த’ இரண்டாவது வர்க்க எழுத்தான ‘த’. அதாவது ‘பத்து’ என்பதில் நடு த் என்பதற்கு என்ன உச்சரிப்போ அந்த த. tha. 

அதுமட்டுமன்று. இந்த இரண்டாவது த வைப் பயன்படுத்தி கதம் என்றால் எப்படி? என்ற அர்த்தம். 

அதுவே மூன்றாவது ‘த’ அதாவது, மரகதம் எனபதில் உள்ள ‘த’ ஒலிப்புடைய த வைப் பயன்படுத்தி ‘கதம்’ என்றால் குழப்பம், கொலை என்று பொருள். வேதங்களில் சில இடங்களில் ‘கத’ என்பது ’பயனற்ற’ என்ற பொருளில் வருவதுண்டு. (மூன்றாவது த) 

தமிழ் லெக்ஸிகன், வரலாற்று இலக்கிய அகராதி, நிகண்டுகல், இலக்கியங்கள் இவை தரும் சான்றுகளை வைத்துப் பார்த்தாலும், ‘கதை’ என்பது சொல்லுதல், ஸ்டோரி, இதிகாசம், என்ற பொருட்கள் வருகின்றன. 

இதை வைத்துக்கொண்டு என்ன யோசிக்க முடியும்? katha என்று எப்படி, எப்படி என்று கேட்டு அதிலிருந்து கதா என்ற பொருள் வடிவம் வந்தது என்று சொல்வோமா? அவ்வாறு யூகம் செய்தால் அது அப்படியேதான் இருந்திருக்கிறது என்று முடிவு கட்ட முடியாது. ஏன்? மொழியின் பயன்பாடு மனிதனிடம் மிக அடிப்படையானது, விரைந்த மாற்றங்கள் கொண்டது. கண் முதலிய புலன்களைப் போல மொழி என்பது என்ன என்று தெரிவதற்கு முன்னமேயே மனிதன் நெடுக அதைப் பயன் படுத்திவிடுகிறான். அப்பொழுதுதான் அவனுடைய வாழ்வை அவன் வாழ முடியும். கண்ணால் பார்த்தது, காதில் விழுந்த ஓசைகள் என்று அனைத்தும் அவனுடைய சொல்லாக்கத்தில் உள்புகுந்து இருக்கும். எனவே ஓரளவிற்கு சொற்கள் இப்படி அமைப்பு கொள்கின்றன என்று அறிந்தால் தெளிவு. அதையே மிகவும் நோண்டி, கற்பனைக் கூத்துகள் ஆடினால் குழப்பம். குளத்தில் கலக்காமல் நீர் அருந்துபவன் புத்திசாலி அல்லவா. 

சரி. ’காதை’ என்பது என்ன? கதைதான் காதை ஆயிற்று. அப்படியா? ஆம். அப்படியும் அகராதிகள் கூறுகின்றன. ஆனாலும் ’காதை’ என்பது பாடுவது என்பதனோடு தொடர்புடையது. Gatha, Ganam தவ ஜய காதா என்றால் உன் வெற்றியைப் பாடுதல். 

ராம காதை -- ராமனின் கதையைப் பாடியது. 

காதா சப்த சதி -- ஹலர் என்ற சாளுக்கியர் செய்த பாட்டுகள் 700. சப்த சதி -700, காதா-- பாட்டு. அவை பாட்டுகள், சங்கப் பாட்டுகள் போன்று காதல் பாட்டுகள். அங்கு கதை என்பது பொருள் இல்லை. 

இப்பொழுது ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் மக்கள் கதைகளைப் புனைந்து, அல்லது வழிவழிக் கதைகளை நினைவில் கொண்டு எப்படி மற்ற ஒருவருக்குத் தெரிவித்திருப்பார்கள்? இணையம் கிடையாது. அச்சு கிடையாது. புத்தகம் கிடையாது. ஓலை, தாள்கள், இலைகள், தோல்கள் இருக்கலாம். ஆனால் அதற்கும் முன்னும், பின்னும் வாய்மொழியாகப் பாடுவது. எனவே காதா என்பதுதான் கதை சொல்ல வாய்ப்பான மீடியம். அதுவே கதைக்கும் பெயராக வழங்கவும் பட்டிருக்க வேண்டும். 

எனவே ராமன் கதையைச் சொல்கிறான் என்றால் என்ன? அல்லது ராமன் கதையைப் பாடுகிறான் என்றால் என்ன? இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருளாக ஆன காலத்தில் கதை == காதை என்று ஆகியிருக்கலாம் அல்லவா? 

ஆனால் கதை நீண்டால் காதை என்று நாம் பாட்டுக்கு ஒரு பொருளைச் சொன்னால் எங்கு பொருந்துகிறது? கதை என்ற சொல் வந்த விதம் வேறு. காதை என்ற சொல் வந்த விதம் வேறு. கடைசியில் தமிழில் அச்சுத் தாளில், இணையப் பக்கத்தில் நம் கண்ணில் கதை, காதை இரண்டும் வெறுமனே ஒரு கால் வாங்குவதுதான் வித்யாசம் என்ற ஏமாற்றுத் தோற்றத்தில் எளிமையாகக் காட்சி தருவதால் வாய்க்கு வருவதை அடித்து விடக்கூடாது அல்லவா? 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
***


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

DEV RAJ

unread,
Jul 17, 2012, 9:11:06 AM7/17/12
to mint...@googlegroups.com
sAdhuka -

 साधुक
(H2) साधुक [p= 1201,3] [L=241739]     m. N. of a low or degraded tribe ib.


http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/



On Tuesday, 17 July 2012 05:57:58 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
சாதுகை மாந்தர் 

செந்தமிழ் இதழில் ஒரு காலத்தில் பேசப்பட்ட சொல்லாய்வு இந்தச் ‘சாதுகை மாந்தர்’. 

கம்பராமாயணத்தில் இந்தச் சொல் வரக்கூடிய ஓரிடம் -- 

யுத்த காண்டம் 37. 54 

மீட்சிப் படலம் 

ஆதலான் அரக்கர் கோவே 
அடுப்பதன் றுனக்கும் இன்னே 
சாதுகை மாந்தர் தம்மைத் 
தடுப்பது என்றருளி, செங்கண் 
வேதநாயகந்தான் நிற்ப, 
வெய்துயிர்த் தலக்கண் எய்தி 
கோதிலா மனனும் மெய்யும் 
குலைந்தனன் குணங்கள் தூயோன். 

*

யார் இந்தச் சாதுகை மாந்தர்? 

செந்தமிழில் இந்த வாதம் நடந்த போது மூன்று அறிஞர்கள் மூன்றுவிதமான கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர் என்று பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பட்டியலிடுகிறார். இற்றைக்கு 90 வருஷங்களுக்கு முன்னர் நடந்த சமாசாரம்.

1) திரு டி என் அப்பனையங்கார் -- 

சாதுகை என்பது உண்மையில் சாதகை என்றிருத்தல் வேண்டும். அதாவது மூப்பால் முதிர்ந்து தளர்வெய்திச் சாவக்கடவ மாந்தர் - என்பது பொருள். 

2) திரு இராமையங்கார் -- சாதகை என்பதுதான் பாடமாதல் வேண்டும். அது ஸாகேதம் என்பதன் மரூஉ. அயோத்தியா நகர மக்கள். 

3) திரு கே ஜி சேஷய்யர் - சாதுகை என்பது ஸாதுக: என்ற சொல்லின் திரிபு. பொருள் -- சற்குணம், சாந்தம். 

(ஸாதுக: - இப்படி ஒரு சொல் வடமொழியில் உண்டா? - பேரா எஸ் வையாபுரிப்பிள்ளையின் கேள்வி) 

இதில் எது சரி என்று கேட்டு ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை. 

முடிவில் அவருடைய கருத்தையும் தந்துள்ளார். 

ஆனால் நாமும் இது என்னவாக இருக்கலாம் என்று யோசிக்கலாமே ! 

இல்லை ஒரு வேளை நன்கு தீர்மானமான விஷயத்தை மீண்டும் தூசி தட்டுகிறேனோ? -- பாரதியார் பாடிய ‘நாட்டுக் கல்வி’க்கான ஆங்கிலப் பாடல் கேட்டு அரைத்த மாவையே முன்னர் நான் அரைத்ததாக பெருங்கைகள் எல்லாம் கேலி பேசினவே அது போல்? 

அப்படித்தான் என்றால், என்ன தீர்மானம் ஆகியிருக்கிறது என்று சொன்னால் அறிந்துகொள்ள வாய்ப்பு எனக்கு. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


DEV RAJ

unread,
Jul 17, 2012, 9:57:48 AM7/17/12
to mint...@googlegroups.com
On Tuesday, 17 July 2012 06:48:43 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>> ஸாதுக: -- இந்தச் சொல்லே வடமொழியில் உண்டா என்று ஐயப் படுகிறார் திரு
வையாபுரிப்பிள்ளை.<<<


உண்டு எனத் தெரிகிறது என்று மட்டும்
சொல்ல முடிகிறது; மேலதிக விளக்கம்
கிடைத்தால் நல்லது



தேவ்


On Tuesday, 17 July 2012 06:48:43 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
நீங்கள் தந்திருக்கும் அகராதிக் குறிப்பு தாழ்ந்த குடி, ஹீன குலம் என்று அர்த்தமாகிறது. ஆனால் கம்ப ராமாயணத்தில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பமானது இதற்கு ஒவியதாய் இல்லையே. 

சீதையை மீட்டு, பிராட்டியை நெடுங்காலத்திற்குப் பின் அண்ணல் காண நேரும் அரிய சந்தர்ப்பத்தைக் காண நெருக்கிக்கொண்டு வரும் முனிவர்கள், வானவர்கள், அவர்கள் தேவிமார்கள் ஆகிய உயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக அமைந்திருக்கிறது. 

ஸ்ரீராமன் தேவர்கள், தேவ மாதர்கள், ரிஷிகள், ரிஷி பத்தினிகள், வித்யாதரர், வித்யாதர ஸ்த்ரீகள் ஆகியோர் நெருக்கும் பொழுது ராஜ சேவகர்களை வைத்து விலக்கிய விபீஷ்ணனைக் கடிந்துகொண்டு, ‘இவ்வண்ணம் நீ சாதுகை மாந்தர் தம்மை விலக்குவது நூலறிவும், தூயமதியும் உடைய உனக்கு அடுக்காது’ என்று கூறியதாக வருகிறது. 

இந்தச் சாதுகை என்ற சொல்லின் பொருள் உருவாக்கம் என்ன என்று அன்றைய ப்ரச்சனை. 

இன்றைக்குத் தீர்ந்துவிட்டதோ என்பது என் ப்ரச்னம். 

ஸாதுக: -- இந்தச் சொல்லே வடமொழியில் உண்டா என்று ஐயப் படுகிறார் திரு வையாபுரிப்பிள்ளை. 

திரு கே ஜி சேஷய்யர் ஸாது என்பதனோடு ககரம் ஸ்வார்த்தித ப்ரத்யயமாகச் சேருகிறது என்று சொல்கிறாராம். 

நீங்கள் சாதுக என்பதற்குக் காட்டும் அகராதிக் குறிப்பும் அதன் பொருளும் இந்தச் சொல் வந்த சூழலில் பொருந்துவது எப்படி என்று மேற்கொண்டு விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும். 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கம் 

*


2012/7/17 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

விஜயராகவன்

unread,
Jul 17, 2012, 10:09:37 AM7/17/12
to மின்தமிழ்
மோஹனரங்கம் குறிப்பிடும்
“சொற்பொருள் ஆய்வு என்பதற்கு மொழியியல் ஆய்வுகளின் வரலாறு தெரிந்திருக்க
வேண்டும். மொழியியல் கொள்கைகளைப் பற்றிய நிரூபிக்கப்பட்ட அறிவு நெறிகள்
சார்ந்த
புரிதல் மிகவும் அவசியம்.


அதற்கு ஒரு சிறு துணை இந்தச் சுட்டி --


http://en.wikipedia.org/wiki/History_of_linguistics

இதற்கு தகுந்த பதிலளிப்பவர் ஜான் - லக் செவியா.

அவர் “மொழியியலின் சரித்திரம்” என்ற பத்திரிக்கைக்கு எடிடர்

http://htl.linguist.univ-paris-diderot.fr/hel/HEL0.html

வகொவி

Raja sankar

unread,
Jul 17, 2012, 10:24:53 AM7/17/12
to mint...@googlegroups.com
இவ்வண்ணம் நீ சாதுகை மாந்தர் தம்மை விலக்குவது போல இவர்களை விலக்குவது நூலறிவும், தூயமதியும் உடைய உனக்கு அடுக்காது

இது சரியா வருமா?

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jul 17, 2012, 10:37:16 AM7/17/12
to mint...@googlegroups.com
திரு விஜயராகவன் ! நீங்க கொடுத்த சுட்டியில் Sylvain AUROUX Catégories de métalangages (pp. 3-14) என்ற சுட்டியை வாசித்தேன். ஓ காட் ! என் ப்ரெஞ்சு மொழிப் பழக்கம் எவ்வளவு தேய்ந்துவிட்டது என்பதைத்தான் உணர்ந்தேன். செந்தமிழும் மட்டுமன்று; எம்மொழியும் விடாமல் பழக்கத்தில் இருந்தால்தான் போலும். 

ஆனால் நான் சொன்னதற்குச் சரியாக பதில் அதில் இருக்கிறது என்றீர்கள். என்ன என்று சுருக்கமாகச் சொல்ல முடியுமா? 

அல்லது என் கருத்துக்கு ஆதரவு சேவியார் கூறியதில் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? 

எப்படியும் சுட்டிக்கு நன்றி. I must refresh my French a lot :-(( 

***


2012/7/17 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Jul 17, 2012, 10:43:19 AM7/17/12
to மின்தமிழ்
நான் சொல்ல வந்தது என்னவென்றால் மொழியியல் சரித்திரத்தைப் பற்றிய
கேள்விகள் யாருகாவது இருந்தால், அதற்கு ஆதாரத்துடன் அல்லது அதிகாரத்துடன்
பதில் அளிக்க கூடியவர் ஜால்செ , நம் குழு உறுப்பினர். ஏனெனில் ஜால்செ
மொழியியல் சரித்திர சொசைடியின் பிரதான அங்கத்தினர்,
சஞ்சிகையின் எடிடர்.


பிரெஞ்சை பற்றி கவலை பட வேண்டாம்,இங்கு ஆங்கிலத்திலேயோ, தமிழிலோ அவர்
பங்களிக்கிறார்.


வகொவி

On Jul 17, 4:37 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> திரு விஜயராகவன் ! நீங்க கொடுத்த சுட்டியில் Sylvain AUROUX Catégories de
> métalangages (pp. 3-14) என்ற சுட்டியை வாசித்தேன். ஓ காட் ! என் ப்ரெஞ்சு
> மொழிப் பழக்கம் எவ்வளவு தேய்ந்துவிட்டது என்பதைத்தான் உணர்ந்தேன். செந்தமிழும்
> மட்டுமன்று; எம்மொழியும் விடாமல் பழக்கத்தில் இருந்தால்தான் போலும்.
>
> ஆனால் நான் சொன்னதற்குச் சரியாக பதில் அதில் இருக்கிறது என்றீர்கள். என்ன
> என்று சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
>
> அல்லது என் கருத்துக்கு ஆதரவு சேவியார் கூறியதில் இருக்கிறது என்று சொல்ல
> வருகிறீர்களா?
>
> எப்படியும் சுட்டிக்கு நன்றி. I must refresh my French a lot :-((
>
> ***
>

> 2012/7/17 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
> > மோஹனரங்கம் குறிப்பிடும்
> > “சொற்பொருள் ஆய்வு என்பதற்கு மொழியியல் ஆய்வுகளின் வரலாறு தெரிந்திருக்க
> > வேண்டும். மொழியியல் கொள்கைகளைப் பற்றிய நிரூபிக்கப்பட்ட அறிவு நெறிகள்
> > சார்ந்த
> > புரிதல் மிகவும் அவசியம்.
>
> > அதற்கு ஒரு சிறு துணை இந்தச் சுட்டி --
>
> >http://en.wikipedia.org/wiki/History_of_linguistics  “
>
> > இதற்கு தகுந்த பதிலளிப்பவர் ஜான் - லக் செவியா.
>
> > அவர் “மொழியியலின் சரித்திரம்” என்ற பத்திரிக்கைக்கு எடிடர்
>
> >http://htl.linguist.univ-paris-diderot.fr/hel/HEL0.html
>
> > வகொவி
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

வேந்தன் அரசு

unread,
Jul 18, 2012, 9:57:06 PM7/18/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com
தமிழ் பல்கலை தளத்தில்:

அவ் ஊர் -
அந்த அயோத்தி நகரத்தில் வாழும்;  கற்பின் மிக்கார்
மாதர்கள் - 
கற்பிற் சிறந்த முதிய மகளிர்கள்;  கோசலை மனத்தை
ஒத்தார்
-இராமனுடையதாய் கோசலையின் மனம் போன்ற மனம்
உடையவர் ஆயினர்;  வேறு உள மகளிர்எல்லாம் - மற்ற இளம்
பெண்கள் எல்லாம்; சீதையை ஒத்தார் - மகிழ்ச்சியில்சீதையைப்
போன்றவர் ஆயினர்;  அன்னாள் திருவினை ஒத்தாள் - அந்தச் சீதை
இலக்குமியை ஒத்தவள்ஆயினாள்;  வேதியர்  வசிட்டன் ஒத்தார் -
மறையவர்கள் வசிட்டமுனிவரைப் போன்றவர் ஆயினர்;
சாதுகை மாந்தர்
எல்லாம் - சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்;  தயரதன் தன்னை
ஒத்தார் -
தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர்.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Kannan

unread,
Jul 19, 2012, 3:11:59 AM7/19/12
to mint...@googlegroups.com
2012/7/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> சாதுகை மாந்தர் எல்லாம் - சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்; தயரதன் தன்னை
> ஒத்தார் - தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர்.
>

இந்த ஸாது எனும் சொல் வேடிக்கையானது. தமிழில் சாதுவான ஆசாமி என்றால்
தொந்தரவில்லாத அப்பாவி மனிதன் என்று பொருள். ‘சாது மிரண்டால் காடு
கொள்ளாது’ என்ற பழமொழி இதை விளக்கும். சாதுகா என்பது சுருங்கி வெறும்
சாது ஆகிவிட்டது இப்போது. மின் தமிழ் சாதுக்களை மிரட்டும் இந்த
சாதுகைக்கு என்னதான் பொருள்? :-)

க.>

DEV RAJ

unread,
Jul 19, 2012, 5:04:55 AM7/19/12
to mint...@googlegroups.com
           *சாதுகை மாந்தர்*         


கபி - சூரியனையும் குறிக்கும், குரங்குக்கும் அதுதான்.
‘ஸ்ரீ’ சப்தமும் மாறுபட்ட பொருளில் பயனாகும்.
சங்கதத்தின் அரிதான சொற்பிரயோகங்களை T.Burrow தந்துள்ளார்.
digamy, nelipot போன்ற சொற்கள் ஆங்கிலத்திலும் உள்ளன.


அரங்கனாரின் வினா அறிவினாவைப்போல்தான் தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்




தேவ்

Hari Krishnan

unread,
Jul 19, 2012, 10:20:39 PM7/19/12
to mint...@googlegroups.com


2012/7/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அப்படியென்றால் கம்பன், அயோத்தியா காண்டம் சாதுகையில் ஸ்வஜனமா? 

ஒன்று மட்டும் நிச்சயம். சாதுகை சாதுவாக இல்லை. படுத்துகிறது. :-) 

சாதுகை cātukai : (page 1369)
சாதுகம் cātukam

, n. < jātuka. Asafoetida; பெருங்காயம். (மூ. அ.).

சாதுகை cātukai

, n. perh. sātvika. See சாத்துவிகம். சாதுகை மாந்தரெல்லாம் (கம்பரா. கைகேசி. 66).

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&matchtype=exact&display=utf8

--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Jul 20, 2012, 12:59:46 PM7/20/12
to mint...@googlegroups.com

On Friday, 20 July 2012 08:38:47 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>>> ஆனால் ஆழ்வாரின் பாடல் துணைக்கு வரவில்லை <<<


மகா​வித்​து​வான் மே.வீ.வேணு​கோ​பா​லப்​பிள்ளை,​​ "திரு​ம​ழி​சைப்​பி​ரா​னின்
நான்​மு​கம் திரு​வந்​தா​தி​யில் உள்ள,
"சாது​வ​ராய்ப் போது​மின்​கள்" என்​றான் நம​னும் ​தன்
 தூது​வ​ரைக் கூவிச் செவிக்கு". ​(68)
​என்​னும் வெண்​பா​வைக் காட்டி,​​ "சாதுகை மாந்​தர்" என்​பது "சாதுவ மாந்​தர்"
என்று இருத்​தல் வேண்​டும் என்று குறித்​துள்​ளார்.

இது நல்ல பாட​மா​கத் தோன்​று​கி​றது.


https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/71e5015cd1965736/13745a7e21f1686c?hl=pl%E3%96%B1a7e21f1686c



 பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற
 கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்
 சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
*சாதுவ ரன்றி யாரே சரண்நமக்  குலகி னாவார்.                                                                                    
                                    - யசோதர காவியம்

   
                                                
ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
*சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி
                        - மணிமேகலை


சாதுவர், சாதுவன் தமிழில் பெருவழக்காய் இருந்துள்ளன. அப்படியே ஏற்பதில் என்ன தடை ?
சாதுவ மாந்தர், சாதுகை மாந்தர் எனப் பதியப்பட்டிருக்கலாம். 


ஓலைச்சுவடி மறைந்து, காகிதத்தில் அச்சேறிய பாரதியார், புதுமைப்பித்தன் நூல்களிலும்
பாடபேதம் நேர்ந்துள்ளதை டாக்டர். கைலாசபதி பல ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதியுள்ளார்




தேவ்

On Friday, 20 July 2012 08:38:47 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
சாதுகை என்ற பயன்பாடு முதன்முதலில் கம்பர்தான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அப்படியென்றால் ஏதாவது வடமொழிப் பதத்தைத் தமிழ்ப் படுத்துகிறாரா? அல்லது அவர் காலத்தில் வழக்கத்தில் இருந்து பின் மறைந்த ஒரு சொலலா? தமிழ்ச் சொல்லாயிருந்தால் மற்றையோரும் கையாண்டிருப்பார்களே? 

பேராசிரியர் தெ ஞானசுந்தரம் ஆழ்வாரின் பாடலை மேற்கோள் காட்டியும், டி கே சி சொன்ன திருத்தத்தை மறுத்தும் கூறிய கருத்துகள் தினமணியில் வந்தது டிசம்பர் 2009ல் 

இங்கு டி கே சியை மறுத்தது சரியே. ஆனால் ஆழ்வாரின் பாடல் துணைக்கு வரவில்லை. எனவே தெ ஞா கூறுவது சரியென்று தோன்றவில்லை. 

அதாவது எல்லோருக்கும் சாதுகை என்பதற்கு எப்படியாவது சாதுவாக என்ற பொருள் ஏற்படுத்துவது குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் காவியச் சூழல்களில் முழு கவனம் தரப்படுகின்றனவா?

அதனால்தான் சொல்கிறேன் சாதுகை சாதுவாக இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்னமேயே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த சொல் கோவை. என்னால் ஆன உபகாரம் அடைத்து வைத்தப் புட்டியின் வாயைத் திறந்துவிடுகிறேன். :-) 

***


2012/7/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

N. Kannan

unread,
Jul 20, 2012, 4:11:30 PM7/20/12
to mint...@googlegroups.com
2012/7/20 DEV RAJ <rde...@gmail.com>:

> சாதுவர், சாதுவன் தமிழில் பெருவழக்காய் இருந்துள்ளன. அப்படியே ஏற்பதில் என்ன
> தடை ?
> சாதுவ மாந்தர், சாதுகை மாந்தர் எனப் பதியப்பட்டிருக்கலாம்.
>
>
> ஓலைச்சுவடி மறைந்து, காகிதத்தில் அச்சேறிய பாரதியார், புதுமைப்பித்தன்
> நூல்களிலும்
> பாடபேதம் நேர்ந்துள்ளதை டாக்டர். கைலாசபதி பல ஆண்டுகளுக்கு முன்னர்
> எழுதியுள்ளார்
>

கம்பன் இராமாயணத்திற்கு பிரபலமான படிகளுண்டு. அவைகளை அலசி ஒரு critical
edition அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அளித்துள்ளது. ஆனால் வெவ்வேறு படிகள்
இன்னும் அச்சாகவில்லை. தமிழ் போன்ற ஒரு செம்மொழிக்கு, அதுவும் கம்பன்
போன்ற ஒரு மாகவிக்கு பல்வேறு படிகளை அச்சிட்டுக் காண்பதில் நமக்கேன்
அசட்டை?

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Jul 20, 2012, 11:57:57 PM7/20/12
to mint...@googlegroups.com
உறைக்காமல் பார்த்து, உரைக்க மன்றாடுகிறேன்.


2012/7/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வெறும் சொல் என்ற அளவில் ‘சாதுகை’ என்பதைப் பார்க்கும் பொழுது ஏதாவது அண்மையான வடிவம் இருந்திருக்கலாம் என்று யோசிப்பது சரி. ஆனால் கம்பர் போன்ற பெரும் காவியக் கவிகள் ஒரு குறிப்பிட்ட சூழல்களில் மட்டும் இது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது அந்தச் சூழல்களுக்கேற்பச் சொல்லின் பொருளையும், மாற்று வடிவங்களையும் உறைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
(அதுவும் இந்தச் சொல்லுக்கு முந்தையர் பயன்பாடு இல்லையென்னும் போது, அதுவும் நெடுங்காலமாகப் பதிப்பித்தவர்கள் அனைவரும் மற்ற பாட பேதங்களை அடிக்குறிப்பிட்டுவிட்டு இந்தப் பாடத்தையே நூலில் ஏற்றி வைத்துள்ளதைக் கருதும் பொழுது) அதுதான் யோசனையாய் இருக்கிறது. மற்றபடிச் சாது என்ற பகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு ஏதோ ஒன்று என்று முடிவு செய்துவிடக்கூடும். 

*** 


2012/7/20 DEV RAJ <rde...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Jul 21, 2012, 6:00:17 AM7/21/12
to mint...@googlegroups.com
//உதைக்காமல் பார்த்து, உரைக்க மன்றாடுகிறேன்.//
இங்கு குறிப்பிடப்படும் மாந்தர், அவர் பண்பு நலன் படைத்த பாத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்

மாதர்கள் கற்பின் மிக்கார் 
கோசலை மனத்தை ஒத்தார் 
வேதியர் வதிட்டன் ஒத்தார் 
வேறுள மகளிரெல்லாம் 
சீதையை ஒத்தார் அன்னாள் 
திருவினை ஒத்தாள் அவ்வூர்ச் 
சாதுகை மாந்தர் எல்லாம் 
தயரதன் தன்னை ஒத்தார்.

1. கற்பின் மாந்தர்            கற்பு                                   கோசலை

2. வேதியர்                       இறையுணர்வு                    வதிட்டன்

3. வேறுள மகளிர்           திருவுரு                               சீதை

4. சாதுகை மாந்தர்            ????????                             தயரதன்

தயரதனின் குறிப்பிட்ட பண்பை அறிய முடிந்தால் சாதுகை மாந்தரை அறியலாமே.  அயோத்தியில் உள்ள கற்பின் மாந்தர், வேதியர், வேறுள மகளிர் தவிர எஞ்சியிருப்போர் யார் என்பதையும் பார்க்கலாமே

நாகராசன்

நாகராசன்



2012/7/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2012/7/21 Innamburan Innamburan <innam...@gmail.com>

உறைக்காமல் பார்த்து, உரைக்க மன்றாடுகிறேன்.
இ 

ஓ வல்லினம் ஆகிவிட்டதா? நன்றி ஐயா. ‘உரைத்தல்’ ’உரைகல்’ என்பதுவே சரி. 

Mohanarangan V Srirangam

unread,
Jul 21, 2012, 6:01:40 AM7/21/12
to mint...@googlegroups.com
நன்று ஐயா. சரிதான். 

***


2012/7/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Anbu Jaya

unread,
Jul 28, 2012, 6:46:56 PM7/28/12
to mint...@googlegroups.com
'பச்சை' என்பதற்கு 'தோல்' என்றும் ஓர் அர்த்தம் உள்ளது கழகத் தமழ் அகராதியில்.
 
'பொன்னால் செய்த கம்பி போன்ற முறுக்கிய நரம்பும், மின்னலைப் போன்ற தோலுமுடைய யாழினால் வண்டு ரீங்காரம் செய்வது போலக் கேட்பவர் விரும்பி மேலும் கேடகத் தூண்டும் வண்ணம் நல்லிசை பாடம் பாணனே.....' என்று ஓர் உரை ஆசிரியர் விளக்கம் கூறியுள்ளார்.  
2012/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் 
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரல் சீறியாழ் 
நன்மை நிறைந்த நயவரு பாண -- 

என்பது புறநானூற்றில் வரும் வரிகள். இதில் மின்னேர் பச்சை என்பதில் உள்ள பச்சை என்பது என்ன? 

மின் ஒத்த பச்சை என்றால் பொருந்துகிறதா? 

***

Anbu Jaya

unread,
Jul 28, 2012, 6:51:44 PM7/28/12
to mint...@googlegroups.com
'கேட்கத் தூண்டும்,' 'பாடும் பாணனே' என்று திருத்தி வாசிக்கவும்.

2012/7/29 Anbu Jaya <anbuja...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jul 28, 2012, 7:01:12 PM7/28/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com


28 ஜூலை, 2012 4:19 pm அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் 
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரல் சீறியாழ் 
நன்மை நிறைந்த நயவரு பாண -- 

என்பது புறநானூற்றில் வரும் வரிகள். இதில் மின்னேர் பச்சை என்பதில் உள்ள பச்சை என்பது என்ன? 

மின் ஒத்த பச்சை என்றால் பொருந்துகிறதா? 

பச்சை என்றால் மேனி எனும் பொருள் உண்டாம்

ஜில்ஜில் என்று ஆடி கிட்டே வா பொன்வண்டு

Innamburan Innamburan

unread,
Jul 29, 2012, 1:25:59 AM7/29/12
to mint...@googlegroups.com
சந்தேகமில்லாத சந்தேகம்


2012/7/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்று. ஆனால் மின் நேர் பச்சை என்பது? பச்சை என்ற சொல் தோலைக் குறிக்கும் என்றால், மின் நேர் தோல் என்பது என்ன பொருள்? ஆக பச்சை என்ற சொல்லின் அமைப்பும், பொருளும், ஆய்வும் என்ன? இது சந்தேகம். 

*** 


2012/7/29 Anbu Jaya <anbuja...@gmail.com>
800.gif

DEV RAJ

unread,
Jul 29, 2012, 4:00:24 AM7/29/12
to மின்தமிழ்
பச்சை - தோல், மேனி ;
சரியாகப் பொருள் தந்துள்ளனர் ;
அரங்கனார் மேலும் நயம் காட்ட விரும்புகிறார் போல

TUV தரும் பொருள் -

பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் - பொற் கம்பியினை
யொத்த முறுக்கட்ஙகின் நரம்பினையும்,
மின் நேர் பச்சை - மின்னலைப்போலும் தோலினையும்,
மிஞிற்றுக் குரல் - வண்டிசைபோலும் இசையினையுமுடைய;

வித்யுத் லேகேவ பாஸ்வரா - Shining like a streak of lightning

தேவ்

On Jul 28, 10:23 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> நன்று. ஆனால் மின் நேர் பச்சை என்பது? பச்சை என்ற சொல் தோலைக் குறிக்கும்


> என்றால், மின் நேர் தோல் என்பது என்ன பொருள்? ஆக பச்சை என்ற சொல்லின்
> அமைப்பும், பொருளும், ஆய்வும் என்ன? இது சந்தேகம்.
>
> ***
>

> 2012/7/29 Anbu Jaya <anbujaya2...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > 'பச்சை' என்பதற்கு 'தோல்' என்றும் ஓர் அர்த்தம் உள்ளது கழகத் தமழ் அகராதியில்.
>
> > 'பொன்னால் செய்த கம்பி போன்ற முறுக்கிய நரம்பும், மின்னலைப் போன்ற தோலுமுடைய
> > யாழினால் வண்டு ரீங்காரம் செய்வது போலக் கேட்பவர் விரும்பி மேலும் கேடகத்
> > தூண்டும் வண்ணம் நல்லிசை பாடம் பாணனே.....' என்று ஓர் உரை ஆசிரியர் விளக்கம்
> > கூறியுள்ளார்.

> > 2012/7/29 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>


>
> >> பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
> >> மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரல் சீறியாழ்
> >> நன்மை நிறைந்த நயவரு பாண --
>
> >> என்பது புறநானூற்றில் வரும் வரிகள். இதில் மின்னேர் பச்சை என்பதில் உள்ள
> >> பச்சை என்பது என்ன?
>
> >> மின் ஒத்த பச்சை என்றால் பொருந்துகிறதா?
>
> >> ***
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

vnagarajan

unread,
Jul 29, 2012, 11:09:11 AM7/29/12
to mint...@googlegroups.com, min tamil


காமதேவரின் நிறம் பச்சை
காமதேவன் தாக்கினால் மேனி அடையும் நோய் பசலை
நாகராசன்
On Thursday, 2 September 2010 23:35:06 UTC+5:30, Srirangam V Mohanarangan wrote:
விழவு சரியா? விழா சரியா?
 
 திருவிழவில் என்பது முற்றிலும் இலக்கணமும், இலக்கியச் சான்றும் ஒப்பிய பாடம்.
 
இலக்கியச் சான்றுகளைக் கீழ்க்கண்டவாறு தருகிறேன்.
 
1)புறநானூறு 9 -- 
 
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த 
முந்நீர் விழவின் நெடியோன் 
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.” 
 
(விழவின் -- விழாவின்  திரு உ வே சா பதிப்பித்த பழைய உரை) 
 
2 புறநானூறு 31 -- 
“செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் 
விழவுடை யாங்கண் வேற்றுப் புலத்திறுத்து” 
 
விழவுடை யாங்கண் -- ஓசைஉண்டான விழாவினை உடைய அவ்விடத்து (உ வே சா ப) 
 
3) புறநானூறு 33 --
“நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே” 
 
விழவு என்பது சிறுசோற்று விழவினை; வேள்வி என்றுரைப்பினும் அமையும்.
 
இங்கு புறநானூறு விழவு என்பதற்கு வேள்வியைப் பொருளாகக் கொண்டுள்ளமை காண்க. திருவோணத் திருவிழவில் என்பது யக்ஞம் என்ற பொருளும் விழவு என்னும் பதத்தால் தரும் என்பது சங்கத் தமிழ் ஆதரித்தது என்பதும் உணரப்படும்.
 
4) புறநானூறு 65 --
 
“உழவ ரோதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கட் சீறூர் மறப்ப”
 
விழவும் அகலுள் ...மறப்ப --அகன்ற தெருவினை உடைய சீறூர் விழாவினை ஒழிய
 
5) புறநானூறு 84 ---
 
“கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்”
 
விழவு -- விழா
 
6) புறநானூறு 88 --
 
“கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நற்போர்
முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே”
 
விழவு மேம்பட்ட -- களவேள்வி முதலாகிய விழாச்சிறந்த நல்ல போரைச் செய்யும்
 
இங்கும் விழவு களவேள்வி என்ற பொருள் கொண்டமை காண்க.
 
சான்றுகள் இன்னும் போகின்றன. திருநாவுக்கரசர் தேவாரத்தில் “விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை அழகனை” என்று பயன்படுத்துகிறார். ”விழவின் ஓசை ஒலியறாத் தண் பொழில் பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி” என்று திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை ’விழவின்’ என்றே சொல்லாட்சி செய்கிறது.
 
திருக்கடைக்காப்பு பாசுரத்திலும் விழவு என்ற ஆட்சி காணப்படுகிறது.
 
திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில்
அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பாடுதுமே.

N. Kannan

unread,
Jul 29, 2012, 11:49:29 AM7/29/12
to mint...@googlegroups.com
2012/7/29 vnagarajan <radius.co...@gmail.com>

> காமதேவரின் நிறம் பச்சை
> காமதேவன் தாக்கினால் மேனி அடையும் நோய் பசலை
> நாகராசன்
>

அவருக்கு பச்சைக்கிளி வாகனம்!
பச்சைக் கரும்பு வில் வைத்திருப்பார்.
இவர் செய்யற விஷயத்தை பச்சை, பச்சையாய் எழுதிவிட்டு அதை மஞ்சள்
பத்திரிக்கை என்பார்கள் தமிழர்கள் ;-)

க.>

Tthamizth Tthenee

unread,
Jul 29, 2012, 12:03:55 PM7/29/12
to mint...@googlegroups.com
ஒரு பிள்ளையைப் பெத்துவிட்டால்  உடனே பச்சை உடம்புக்காரி என்பார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2012/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நல்ல ரூட் சிந்தனை. பச்சை, மன்மதன், பசலை... பார்ப்போம் 



2012/7/29 vnagarajan <radius.co...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 12:27:31 PM7/29/12
to mint...@googlegroups.com
பிறந்தது பச்சை மண்
நாகராசன்

2012/7/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 1:36:31 PM7/29/12
to mint...@googlegroups.com
//ஷைலஜா சீறினால் நாகராசன் ஐயா காக்க காக்க !)//
நல்லாயிருக்குதே கதை
தர்க்கப்படி நான் சீறனும்.  காக்க காக்கன்னு காக்கா பிடிச்சா அவிங்க காக்கனும்

செகப்பிரியரின் பன்னிரண்டாம் இரவிலோ அல்லது ஆம்லெட் நாடகத்திலோ டோண்ட் டாக் லைக் கிரீன் கெர்ல் என்று வருவதாக என் ஆங்கில ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பச்சை பற்றி பச்சை பச்சையாய்

http://www.youtube.com/watch?v=0xA-oWnJAWA

நாகராசன்

2012/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பச்சை என்பதற்குப் பல பொருட் சாயைகள் இருக்கின்றன. 

பச்சை ஊன் -- uncooked; 
பச்சூன் என்றும் பயன்பாடு 

அந்த விஷயம் 
பச்சை யாகியது. -- வெளிப்பாடு 

(சம்பந்தர்) பச்சை மேனியர் -- bare bodied 

பச்சை உடம்புக்காரி என்று தமிழ்த்தேனியார் சொல்லியதில் இந்தப் பொருள் பொருந்தாதோ? இங்கு பச்சை -- இளமையான, பதமான என்ற பொருள் போலும். 

பசலையின் நிறம் பொன் என்று இலக்கியம் சொல்கிறது. ஆனால் இதைக் காணும் நல்வாய்ப்பு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை நமது நாட்களில். 
(ஷைலஜா சீறினால் நாகராசன் ஐயா காக்க காக்க !)

ஆங்கிலத்தில் bare என்பதன் பொருளும் ‘பச்சை’ -- வெளிப்பாடு என்ற பொருளும் ஒப்புமை தற்செயலாவது காண்க. 

பச்சை - போர்வை என்ற பொருளும் உண்டு. 

இங்கு பச்சை என்பது குறிப்பாக யாழுக்குப் போர்த்தி ஒட்டப்படும் தோலைக் குறிக்க வருகிறது. ஒரு விதத்தில் இது யாழ், வீணை இசைத்துறையின் துறைப்பெயர். 

மேலும் தொடர்வோம். 

***


2012/7/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Kannan

unread,
Jul 29, 2012, 2:22:25 PM7/29/12
to mint...@googlegroups.com
2012/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>
> இவுரு ஒத்தரு சௌண்ட் சர்வீஸ் கோணக்கால் சித்தப்பா சினிமாவுல வரமாதிரி ஆனா
> ஊன்னா ஏதாவது படம் பொட்டுட்றாரு..... :-)
>
> இது linguistics class .
>
> ***

ஒண்ண மறந்திர்ரேங்க!
படம் எடுப்பதால்தான் அவர் நாகராசன். உக்கும்.

க.>

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 2:37:07 PM7/29/12
to mint...@googlegroups.com
படம் போட்டா ரசிக்கனும்
கால் கோனக் காலா இருந்தாப் பரவாயில்லை சமாளிச்சுக்கலாம். முகம்
கோணலாயிருந்தா நினைக்கவே பயமா இருக்கு
அப்புச்சி நாங்களும் 1970-ல் எங்க ஆராய்ச்சிக்கு சைக்கோ லிங்க்விஸ்டிக்ஸ்
படிச்சவய்ங்கதான்
ரொம்பத்தான் மெரட்டிரீங்களே
இப்பெல்லாம் லிங்க்விஸ்டிக் கிளாஸ் எல்லாம் படமாத்தான் காட்டுறாய்ங்க
Noam Chomsky, a world-renowned linguist, intellectual and political
activist lectured at the University of Arizona on Feb. 7, 2012, on
"What is Special About Language?"

http://www.youtube.com/watch?v=Omg4lUwOZII&feature=related

நாகராசன்


2012/7/29 N. Kannan <navan...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 2:44:55 PM7/29/12
to mint...@googlegroups.com
அப்படியே செய்யறேன் ஐயா. மேலைநாட்டில் ஷைலக் என்றொரு ஆள் உடம்பை
அறுத்துத் தசையெல்லாம் எடுத்துவிடும் ஆள் அவர்கிட்டமட்டும் உங்க
முகவரியைக் கொடுக்க மனமிறங்கனும்
நாகராசன்

2012/7/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஐயா! சரிங்கய்யா. ரசிக்கிறோமய்யா. ஆனால் அந்த ஷை___ங்கிற ஆள்கிட்ட மட்டும்
> போட்டுக் குடுத்துடாதீங்கய்யா.... ப்யம்லாம் ஒன்னும் கிடையாது.... சும்மா ஒரு
> தற்காப்பு....
>
> ***
>
>
> 2012/7/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jul 29, 2012, 3:29:43 PM7/29/12
to mint...@googlegroups.com


2012/7/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அப்படியே செய்யறேன் ஐயா.  மேலைநாட்டில் ஷைலக் என்றொரு ஆள் உடம்பை
அறுத்துத் தசையெல்லாம் எடுத்துவிடும் ஆள் அவர்கிட்டமட்டும் உங்க
முகவரியைக் கொடுக்க மனமிறங்கனும்
நாகராசன் 

அப்படீன்னா.... இவங்களே பரவாயில்ல.... 
:-( 

shylaja

unread,
Jul 29, 2012, 9:59:20 PM7/29/12
to mint...@googlegroups.com
நான் உறங்கப்போனதும் இங்க நீங்க ரெண்டுபேரும் விழித்துக்கொண்டாயிற்று போலும்?:)அந்த பயம் இருக்கட்டும்! ஆனாசெட்டு சேர்ந்துகொள்வதில் அரவணையாருக்கும்  அரங்கனாருக்கும் ஈடு இணை இல்லை::):) பச்சைமாமலைபோல் மேனியான் இருவரையும் காக்கட்டும்!!

2012/7/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 29, 2012, 10:06:06 PM7/29/12
to mint...@googlegroups.com
இவுக ரண்டு பேரையும் ரவுண்டு கட்டணும், ஷைலஜா.
இன்னம்பூரான்

2012/7/29 shylaja <shyl...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jul 29, 2012, 10:07:19 PM7/29/12
to mint...@googlegroups.com
அவரும் சரி நீங்களும் சரி காக்க காக்கன்னு சொல்லியே பயமுறுத்துறீங்களே
அவர் பெரிய அறிஞர் தவறு கண்டால் தடி எடுப்பவர் நான் சின்ன ஜீவன் தவறு
செய்யாமல் இருக்க முடியாது
இப்படி இருக்கும் இரண்டுபேரும் செட் சேர முடியுமா நீங்களே சொல்லுங்கள்
அவர் உங்கமேல் உள்ள பயத்தில் காலே இல்லாத எனக்குக் கோனக்கால் என்று சொல்லுகிறார்
முதலில் அவரைக் காக்க காக்க காக்க
நாகராசன்

2012/7/30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Jul 29, 2012, 10:09:26 PM7/29/12
to mint...@googlegroups.com
நாம் என்னத்த ரவுண்டுகட்டறது இ சார் அதான்  ஆல்ரெடி அறிதுயிலரங்கன் என்று அறிஞர்களே சொல்லிட்டுப்போயிட்டாங்களே!சும்மா நம்மை டபாய்க்கிறாங்க ரெண்டுபேரும் அதுக்கெல்லாம்  ஏமாந்துடுவோமா என்ன?:)

2012/7/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

shylaja

unread,
Jul 29, 2012, 10:11:23 PM7/29/12
to mint...@googlegroups.com
இப்பவும்  அவரைக்காக்கத்தான் பாடுபடறீங்க! இனப்பற்று:)

2012/7/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jul 29, 2012, 11:48:46 PM7/29/12
to mint...@googlegroups.com
மாட்டோம்லெ.


2012/7/29 shylaja <shyl...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 29, 2012, 12:08:12 PM7/29/12
to மின்தமிழ்

On Jul 29, 8:49 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/7/29 vnagarajan <radius.consulta...@gmail.com>

yellow magazine என்பதை மஞ்சள் பத்திரிகை என்று மொழிபெயர்த்துள்ளனர்.
ஸ்க்ரு ட்ரைவர் - திருப்புளி என்னாமல் ஆணியோட்டி என்று மொழிபெயர்ப்பது
போல்.

நா. கணேசன்

N. Kannan

unread,
Aug 10, 2012, 3:13:14 AM8/10/12
to mint...@googlegroups.com
2012/8/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

> வேட்கை என்பது பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம்.
>
> அவா என்பது அப்பொருள்களைப் பெற வேண்டும் என்று மேன்மேல் நிகழும் ஆசை.
>
> எனவே வேட்கையால் உண்டாகிய அவா என மூன்றனுருபு விரிந்தது.
>
> அல்லது இதனை வேட்கையும், அவாவும் என அல்வழி என்பாரும் உளர்.
>
> இந்த நுட்பப் பொருள் சொன்னது யார்?
>
> நச்சினார்க்கினியர்.
>
> ***


மிக்க நன்றி அரங்கனாரே! எவ்வளவு கற்றுக்கொள்ள இருக்கிறது? வேணவாதான் இல்லை ;-)

க.>

DEV RAJ

unread,
Aug 10, 2012, 2:02:03 PM8/10/12
to mint...@googlegroups.com
2012/8/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
> வேள் என்றால் விருப்பம் என்றும் விருப்பத்திற்குரிய நாட்டம் என்றும்  பொருள்.
> அவா என்றாலும் விருப்பம்தான். இரண்டு சொற்களும் இணைந்து மிகு விருப்பத்தைக்
> குறிக்கின்றன. எனினும் பொதுவாக மிகுதியான நீர்  வேட்க‌ையை வ‌ேணவா என்பது
> குறிப்பிடும்.




தொல்காப்பியர்  தனிப்படச்  சூத்திரமாகவே இயற்றி,  வேட்கையும்
அவாவும் சேர்ந்து, ‘கை’ என்பது மறைந்து,  டகாரம்  ணகாரமாகி ’வேணவா’
எனும் சொல் கிடைக்கிறது என்று எழுத்ததிகாரம் 288ம் சூத்திரத்தில்
அவரே கல்வெட்டாக ஆக்கி வைத்திருக்க,
அதை நச்சினார்க்கினியர் உரையோடு  பதிப்பித்த தேவநேயர்
அதற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் சம்பந்தமே இல்லாமல்
’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,
‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார்.


மூலநூல் ஆசிரியரான தொல்காப்பியருக்கே தெரியாத தமிழ்
தேவநேயருக்குத் தெரிந்திருந்ததால் அவரை ‘மொழி ஞாயிறு’
என அழைத்தனரோ தெரியவில்லை :))


தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை
புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் எம். ஏ
எழுதிய அடிக்குறிப்புகளுடன்.

பக்கம் 174

நூற்பா 288


தென்னிந்திய  சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு
திருநெல்வேலி
ஆகஸ்ட் 1955


ஒருவேளை  ‘நூலே கரகம்.... ‘ இடைச் செருகல்
என்றதுபோல் எழுத்ததிகாரம் 288ம் சூத்திரத்தையும்
இடைச் செருகல் என்பரோ ?



தேவ்


On Thursday, 9 August 2012 07:08:48 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
நன்றி ஐயா.

***

2012/8/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com>
வேள் என்றால் விருப்பம் என்றும் விருப்பத்திற்குரிய நாட்டம் என்றும்  பொருள். அவா என்றாலும் விருப்பம்தான். இரண்டு சொற்களும் இணைந்து மிகு விருப்பத்தைக் குறிக்கின்றன. எனினும் பொதுவாக மிகுதியான நீர்  வேட்க‌ையை வ‌ேணவா என்பது குறிப்பிடும்.

நீர் வே ட்கையின் தொடர்ச்சியாக மிகு பசியையும் இச் சொல் குறிக்கும்.
2012/8/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வேணவா

இந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம்.

அது என்ன வேணவா?

அவா -- என்றால் புரிகிறது.

வேணவா என்றால் வேண்டப்பட்ட அளவு அவா என்று பொருளோ?

***



-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Nagarajan Vadivel

unread,
Aug 10, 2012, 3:29:22 PM8/10/12
to mint...@googlegroups.com
வேணவா என்ற சொல்லை ரங்கனார் அறிமுகப்படுத்தியுள்ளார்

வேணவா என்ற சொல்லுக்கு இந்த இழையில் தமிழ் லெக்சிகன் ஒன்றே ஆதாரமாகக்
காட்டப்பட்டுள்ளது
வேட்கையும் அவாவும் ஒரே பொருளைத்தரும் இரு சொற்கள். இவை இரண்டும்
இணைந்து புதிய சொல்லாக ஆனது எப்படி என்பதை முதலில் அறிய வேண்டும்

தேவ்ஜி அவர்கள் பாவாணர் கூறியதாக


தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை
புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் எம். ஏ
எழுதிய அடிக்குறிப்புகளுடன்.

பக்கம் 174

நூற்பா 288
குறிப்பிட்டுள்ளார்

பாவாணர் பற்றிய நம்பகமான தகவல் ஒரே இடத்தில் இருக்க சிங்கப்பூரில்
பாவாணர் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது
அறக்கட்டளையின் இணையதளம்

http://www.devaneyam.net/default.aspx

அங்கு அவர்கள் குறிப்பிட்டுள்ள பாவாணரின் புத்தகங்கள், பாவாணார்
கட்டுரைகள் பாவாணர் தொடர்பிலான புத்தகங்கள் என்ற பிரிவுகளில் இந்த நூலின்
பெயர் காணக் கிடைக்கவில்லை

http://www.devaneyam.net/book.aspx?id=11

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரைக்குறிப்பு 1944-ல் வெளியானது தேடலில்
இருப்பதாகக் குறிப்புள்ளது

பாவாணர் சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடுகள் என்று சிறு
தொகுப்பை 1961 -ல் வெளியிட்டுள்ளார்.

http://www.devaneyam.net/bookonline.aspx?id=20

அதில் அவர் இதுபற்றி ஆங்கிலத்தில் !!!!!!!
A Critical Survey of the Madras University Tamil Lexicon
ஒரு அறிக்கை தயாரித்து சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு
17-6-1955-ல் அனுப்பியதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து மறுமொழி எதுவும்
வரவில்லை என்று குறிப்பிடுகிறார்

சென்னைப் பல்கலைக்கழக அகராதியும் பாவாணரும் இங்கே அதிகம் அடிபடுபவர்கள்.
எனவே நாம் குறிப்பிடும் ஆதாரங்கள் தவறின்றி சரியான ஆவணங்களையும்
ஆதாரங்களையும் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும்

இதுவரை வெளிச்சத்துக்கு வராத சென்னைப் பல்கலைக்கழக அகராதி பற்றிய குற்றச்
சாட்டு முறையாக உற்று நோக்கப்பட்டு முன் வைக்கப்படும் வாதங்களில் உள்ள
கருத்துக்களைச் சிர்தூக்கிப் பார்க்க வேண்டும்
நாகராசன்


2012/8/10 DEV RAJ <rde...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Aug 10, 2012, 5:20:54 PM8/10/12
to mint...@googlegroups.com
ஞா.தேவநேயன் அவரது கட்டுக்கதைகளின் அடிப்படியில் எழுதிய `ஆய்வுகளை`  மற்றவர்கள் ஏற்காதது பற்றி கோபப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
 
அவரது “ஆய்வுகளை”  தமிழ்நாட்டுக்கு வெளியில் எந்த மொழியியலாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
ஞாதே தமிழ் கடலில் முழுகிய முமரிக்கண்டத்தில் தோன்றியது ( 50000 ஆண்டு முன்னால்), 10000 ஆண்டு முன்பே சிறந்த தமிழ் இலக்கியங்கள் இருந்தன, ஆரியர் கி.மு 2500 ஆண்டு நாவலத்தீவில் வந்தனர், சம்ஸ்கிருதத்தில் 2/5 தமிழ் வேர்கள்தான்  (பக்கம் 25) , இதைப்போல் கட்டுக்கதைகலையே திருப்பிச் சொல்லி, அதன் ஆதாரத்தில் தன் வேற்சொல் “ஆய்வுகளை”  நம்பச் சொல்கிறார்.
 
 
G.Devaneyan is a charlatan.
 
தமிழர்கள் ஞாதேவின் கருத்துகளை குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தால், அறிவுச்சரிவு இன்னும் மோசமாக இருக்கும் வருங்காலத்தில்.
 
 
வகொவி

Vij

unread,
Aug 10, 2012, 6:00:57 PM8/10/12
to mint...@googlegroups.com
-----Original Message-----
From: Nagarajan Vadivel

> பாவாணர் சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடுகள் என்று சிறு
> தொகுப்பை 1961 -ல் வெளியிட்டுள்ளார்.

> http://www.devaneyam.net/bookonline.aspx?id=20


ஞா.தேவநேயனின் புருடாக்களின் ஒரு சாம்பிள்:

==========
குமரிக்கண்டத் தமிழ் வடக்கே சென்று திரவிடமாய் திரிந்தது. வட கோடி திரவிடம்
நாளடைவில் பிராகிருதமாய் மாறியது. வேத காலத்தில், விந்திய மலைக்கு வடக்கில்
பைசாசம், சூரசேனம், மாகதம் ஆகிய என மூன்று பிராகிருதங்களும் , அதற்கு தெற்கில்
தமிழ், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்து
திராவிடங்களும் (பஞ்ச திராவிடம்) வழங்கி வந்தன. பிற்காலத்தில் ஐந்திரவிங்களுள்,
மகாராட்டிரம் ஒரு பிராகிருதமாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றும்
சேர்ந்து (திராவிடீ என்னும்) ஒரு பிராகிருதமாகவும்
கொள்ளப்பட்டன................

சமற்கிருதத்திற்க்கு முந்தியது பிராகிருதம், பிராகிருதத்திற்க்கு முந்தியது
திரவிடம், திரவிடத்திற்க்கு முந்தியது தமிழ். இவ்வுண்மையை மறைத்துப் பின்
வருமாறு பல தமிழ் சொற்கட்கு தலைகீழாய் மூலங்காட்டப்பட்டு வருகின்றது;
சென்னையகராதியிலுங் காட்டப்பட்டுள்ளது


சம்ற்கிருடம் பிரா தமிழ்
வ்ருத்த > வட்ட > வட்டம்
ஸ்நேக> நேயம்> நேயம்
==================


ஞா.தே. இந்திய மரபுச் சொற்களையும் அறியவில்லை. மேற்கத்திய மொழியியல்
சொற்களையும் அறியவில்லை. ஏதோ தான் தோன்றித்தனமாக எழுதியுள்ளார்.



வகொவி

seshadri sridharan

unread,
Aug 11, 2012, 1:23:20 AM8/11/12
to mint...@googlegroups.com


//விஜயராகவன் 
ஞா.தேவநேயன் அவரது கட்டுக்கதைகளின் அடிப்படியில் எழுதிய `ஆய்வுகளை`  மற்றவர்கள் ஏற்காதது பற்றி கோபப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

அவரது “ஆய்வுகளை”  தமிழ்நாட்டுக்கு வெளியில் எந்த மொழியியலாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.//

என்றைக்கு வெளிநாட்டு மொழியியலாருக்கு பேராளராக மாறினீர். உங்கள் சொந்தக் கருத்து ஏற்கப்படமாட்டாது .      
//ஞாதே தமிழ் கடலில் முழுகிய முமரிக்கண்டத்தில் தோன்றியது ( 50000 ஆண்டு முன்னால்), 10000 ஆண்டு முன்பே சிறந்த தமிழ் இலக்கியங்கள் இருந்தன, ஆரியர் கி.மு 2500 ஆண்டு நாவலத்தீவில் வந்தனர், சம்ஸ்கிருதத்தில் 2/5 தமிழ் வேர்கள்தான்  (பக்கம் 25) , இதைப்போல் கட்டுக்கதைகலையே திருப்பிச் சொல்லி, அதன் ஆதாரத்தில் தன் வேற்சொல் “ஆய்வுகளை”  நம்பச் சொல்கிறார். 

குமரிக்கண்டத் தமிழ் வடக்கே சென்று திரவிடமாய் திரிந்தது. வட கோடி திரவிடம் நாளடைவில் பிராகிருதமாய் மாறியது. வேத காலத்தில், விந்திய மலைக்கு வடக்கில் பைசாசம், சூரசேனம், மாகதம் ஆகிய என மூன்று பிராகிருதங்களும் , அதற்கு தெற்கில் தமிழ், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிடங்களும் (பஞ்ச திராவிடம்) வழங்கி வந்தன. பிற்காலத்தில் ஐந்திரவிங்களுள், மகாராட்டிரம் ஒரு பிராகிருதமாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றும் சேர்ந்து (திராவிடீ என்னும்) ஒரு பிராகிருதமாகவும் கொள்ளப்பட்டன................ //.

அவருடைய மேற்சொன்ன கருத்துகள் P .T. சீனிவாச ஐயங்கார், V .R . இராம சந்திர தீட்சிதர் ஆகியோரது  கருத்து  அடிப்படையில் உருவானவை.   அப்படியானால் இந்த இருவரும் வயிறு  பிழைக்கத்  தான்  இவ்வாறு வரலாறு வரைந்தனரா?   

//தமிழர்கள் ஞாதேவின் கருத்துகளை குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தால், அறிவுச்சரிவு இன்னும் மோசமாக இருக்கும் வருங்காலத்தில்.//

உமது கருத்தே குப்பை சரக்கு தான். அதை முதலில் குழி தோண்டி புதையுங்கள். பரவினால் அது கொலை நோய் தான்.  

சேசாத்திரி 

DEV RAJ

unread,
Aug 11, 2012, 2:06:14 AM8/11/12
to mint...@googlegroups.com

பேராசிரியர் ஐயா,


முத்துவீரியத்திலும் ’வேள்+ அவா’ காட்டப்படவில்லை.
அரங்கனார் அவர்கள் சொல்வதுபோலவே உள்ளது.


முத்துவீரியம் -

ஆசைப்பெருக்கத்தை யுணர்த்து மவாவென்னுஞ் சொல்வரின் வேட்கையென்னு
மொழியிறுதி ஐகார வுயிரும், ககர வொற்றுங்கெட்டு நடுநின்ற டகரமெய் ணகரவொற்றாகத்
திரியும்.

(வ-று.) வேட்கை + அவா = வேணவா.

(வி-ரை.) வேட்கை . பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம். அவா - அவற்றைப்
பெறவேண்டுமென மேன்மேல் நிகழும் ஆசை.

(தொல் - எழுத்து - 288 - நச்சர் உரை.) (134)

http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=16&pno=83

                        *************************************      


>>>> ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும் <<<<
>>>> ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ .......<<<<

பெண்மை, ஆண்மை, உண்மை, ஒண்மை, திண்மை,
வண்மை, வெண்மை, கேண்மை உள்ளன.

‘வேள்’ வேரை ஒட்டிய ‘வேண்மை’ இலக்கிய
ஆட்சி உள்ளதா?

இதைக் குழும அளவில் விவாதமாக்குவதை விட
உலக அளவில் தமிழ் அறிஞர்களின் கவனத்துக்கு
எடுத்துச் சென்று, ‘வேணவா’ வேள் வேரிலிருந்து
பிறந்த சொல்லா ? தொல்காப்பியர் ஏன் ‘வேள்’
வேர் காட்டவில்லை ? போன்ற வினாக்களுக்குரிய
விடை காண முயலலாம்.

காய்தல், உவத்தல் தவிர்க்கப்பட வேண்டும்



தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Aug 11, 2012, 6:50:48 AM8/11/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், thamiz...@googlegroups.com
மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த இழையில் மரபுச் செல்வங்களான நூல்கள், அவற்றிற்கான பண்டைய உரைவளங்கள், தற்காலத்தில் நன்கு வளர்ந்து செழித்துள்ள உலகளாவிய மொழியியல் ஆய்வு முடிவுகளான linguistics principles இவையும்தான் அடிப்படைச் சான்று மிக்க வழிகாட்டிகளாய்க் கொள்ளப்படுகின்றன. இந்தத் துறையில் நம் கற்பனைகள் எல்லாம் முக்கியமற்றவையே. மொழியியலில் நாம் கற்க வேண்டியது மிக அதிகம்.

எனவே ஆளுக்காள் இப்படி இருந்திருக்கும் அப்படி இருந்திருக்கும், இதிலிருந்து இது வந்திருக்கும் என்பது போன்ற அபிப்ராய குடிசைத் தொழில்கள் எல்லாம் பண்டைய நூல்களின் சான்றும், மொழியியலின் ஆதரவும் இருந்தால் மட்டுமே கவ்னத்திற்குரியன. இன்றேல் நிர்தாட்சண்யமாக ஒதுக்கப்பட வேண்டியன.

இந்த விஷயத்தில் பத்தாம் பசலி, துறை சார்ந்த ஆய்வுகளுக்கு நம்பிக்கையாளன், என்று என்ன நீங்கள் என்னைக் குறை கூறினாலும் சரி. மொழியில் சொல்லுருவாக்கம் என்பது செம்பாதி மரபில் ஊன்றி நிற்பது. இன்றைய உலகளாவிய மொழியியல் ஆய்வுகள் இத்துறையில் கூடுதல் விளக்கம், தெளிவாக்கமும் நல்கக் கூடியது.

வேணவா என்பதற்கு அரங்கனார் சொன்ன கருத்தன்று இது. தொல்காப்பியர் தெளிவாக நூற்பா இட்டிருக்கும் விஷயம் இது.

தொல்காப்பியரைச் சொல்லி மொழி வெறி ஏற்படுத்த பலருண்டு. தொல்காப்பியருடைய சமயம், குடும்பம், குழந்தைகுட்டிகள், அவர் எந்த ஆபீஸில் வேலை பார்த்தார், என்ன சம்பளம் வாங்கினார் என்று அதிகமாகக் கவலைப்படும் census அதிகாரிகள் நிறைய பேர் உண்டு. தொல்காப்பியத்தில் இல்லாததையெல்லாம் இருப்பது போன்று மாயாஜாலம் செய்யும் மண்ட்ரேக்குகளும் உண்டு.

ஆனால் உருப்படியாகக் கருத்தூன்றித் தொல்காப்பியத்தைப் படித்த பேர்வழிகள் கிடையாது. தொல்காப்பியர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அக்கறை யாருக்கும் இல்லை.

எனவே இந்த இழையில் என் கவனம் எல்லாம் மூல நூல் ஆசிரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? மொழியியல் ஆய்வுகள் அவற்றுக்கு என்ன விளக்கம் தருகின்றன, என்ன தெளிவாக்கம் பெய்கின்றன என்பதுதான்.

எனவே இந்த இழையில் பங்கேற்போர் தயவுசெய்து, இந்த அணுகுமுறைகள் தங்களுக்கு உடன்பாடு என்றால் மட்டுமே கலந்துகொள்ளவும் என்பதை ப்ரார்த்தனையாகச் சொல்லிக் கொள்கிறேன்.



***

விஜயராகவன்

unread,
Aug 11, 2012, 12:09:53 PM8/11/12
to mint...@googlegroups.com
On Saturday, 11 August 2012 04:31:18 UTC+2, Srirangam V Mohanarangan wrote:
G.Devaneyan is a charlatan.
 
தமிழர்கள் ஞாதேவின் கருத்துகளை குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தால், அறிவுச்சரிவு இன்னும் மோசமாக இருக்கும் வருங்காலத்தில்.
 
 
வகொவி
 
 


திரு விஜயராகவன்,

உங்களுக்கு ஒருவரின் கருத்து உடன்பாடு இல்லையெனில் அதற்கான மறுப்புகளைச் சொல்லுங்கள். அதைவிடுத்து இதைப் போன்று தனி நபர் தாக்குதலான எழுத்துகளைத் தவிர்க்கவும்.
 
 
திரு மோகனரங்கன்
 
இதுதான் charlatan என்பதன் அர்த்தம்
 

char·la·tan
   [shahr-luh-tn] Show IPA
noun
a person who pretends or claims to have more knowledge or skill than he or she possesses; quack.
 
 
ஞா.தேவநேயன்  பூகோளம், சரித்திரம், இந்திய  மரபு சொற்கள் , மொழியியல் ஒன்றையும் மதிக்காமல் புருடா விட்டு வைத்துள்ளார்.
 
50000 ஆண்டுகளுக்கு முன் - தற்போது கடலில்  குமரிக்கண்டத்தில் தமிழ் பிறந்தது, பின்பு வட இந்தியா செண்று திராவிடீ ஆகிவிட்டது , அதிலிருது பிராகிருதம் வந்தது , அதனால்தான் சமஸ்கிருத சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்ற சரமாரியாக பொய்களை உதிர்க்கிறார். 
 
 
 
GD abused knowledge of geography, history, traditional Indian terms, Linguistics. What do you call such a man , other than charlatan. It is not as if knowledge was not available when he was living and working. All he had to do was to read few books. That he failed to do; or he did read some books, but was confident he can write any nonsense and Tamils will accept it.
 
 
Even a cursory glance into his writings will show these things.
 
 
Vijayaraghavan
 
 
 

rajam

unread,
Aug 11, 2012, 1:42:34 PM8/11/12
to mint...@googlegroups.com

ஆனால் உருப்படியாகக் கருத்தூன்றித் தொல்காப்பியத்தைப் படித்த பேர்வழிகள் கிடையாது. தொல்காப்பியர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அக்கறை யாருக்கும் இல்லை. 
இந்தப் பொத்தாம் பொதுவான கூற்று என்னை மிகவும் வருத்தியது.



Nagarajan Vadivel

unread,
Aug 11, 2012, 2:14:25 PM8/11/12
to mint...@googlegroups.com
//ஆனால் உருப்படியாகக் கருத்தூன்றித் தொல்காப்பியத்தைப் படித்த

பேர்வழிகள் கிடையாது. தொல்காப்பியர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அக்கறை
யாருக்கும் இல்லை. //

ஐயா கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரேபோடாப் போட்டுட்டார்

இன்றளவும் இணையத்தில் தேடுபொறி மூலம் தொல்காப்பியம் என்று ஆய்வு தொடர்பான
இணையத்தைத் தேடினால் அதில் கிடைக்கும் பட்டியலில் முதன்மை பெறுவது
பேரா.வி.எஸ்.ராஜம் என்ற பெயர். அடிக்கடி அந்தப் பெயரைப் பார்க்கும்போது
(அவர் மின் தமிழுக்கு வருவதற்குமுன்) பயமுறுத்தும் தோற்றம் உள்ள ஆண்
தமிழ்ப் பேராசிரியர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

தமிழுக்கென்று ஒரு தர நிர்ணயம் உண்டு. தொல்காப்பியம் பற்றிப்பேசத்
தமிழ்ப் பேராசிரியர்கள் என்று பச்சை குத்தியிருக்க வேண்டும் என்பது
ஒன்று.

நாகராசன்


2012/8/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
>
>
> 2012/8/11 rajam <ra...@earthlink.net>


>>
>>
>> ஆனால் உருப்படியாகக் கருத்தூன்றித் தொல்காப்பியத்தைப் படித்த பேர்வழிகள்
>> கிடையாது. தொல்காப்பியர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அக்கறை யாருக்கும்
>> இல்லை.
>>
>> இந்தப் பொத்தாம் பொதுவான கூற்று என்னை மிகவும் வருத்தியது.
>
>

> தனிமரம் தோப்பாக ஆகாதே அக்கா..!
>
> வருந்தற்க. விதிவிலக்குகளை வைத்துக் கூறப்படும் கருத்து அன்று. என்றும் உங்கள்
> இலக்கணப் புலமைக்கு என் வணக்கங்கள்.
>
> ***

Nagarajan Vadivel

unread,
Aug 11, 2012, 2:54:42 PM8/11/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள், thamiz...@googlegroups.com

From Tamil Studies (1914) Chapter Place of Tamil in Philology Author M.Srinivasa Iyengar கோ என்பது தூய டமிழ்ச் சொல் என்றும் அது சமஸ்கிரிதத்தில் காணவியலாது என்றும் குறிப்பிடுகிறார்

ஆவிற்கு வடமொழிச் சொல்லான கோ என்பதை இட்டோ?

நீங்கள் கோ என்பது வடமொழிச் சொல் என்று கூறுகிறீர்கள்

அருள் கூர்ந்து விளக்கம் சொல்லவும்
நாகராசன்

On Saturday, 11 August 2012 22:48:40 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
கோ இல் பிரச்சனை

ஆலயப் பிரச்சனை எதுவும் அன்று. அஞ்சவேண்டா.

ஓ என்று முடியும் சொல் நிலைமொழியாக இருக்க வருமொழியோடு சேரும் போது வல்லெழுத்து மிகுமா? அல்லது இயல்பாகச் சேருமா? அல்லது வல்லெழுத்து மிகும் ஆனால் அதற்கு முன்னால் ஓர் ஒ, அதாவது குறில் ஒகரம் ஒன்று தோன்றிப் பின்னர் வல்லெழுத்து மிகுதல் நடக்குமா? என்றெல்லாம் தொல்காப்பியர் ஆராயும் கட்டம் எழுத்ததிகாரத்தில்.

(ஏன்யா இந்த இலக்கணத்தையெல்லாம் படிச்சுத் தொலைச்சுக் கழுத்தறுக்கற என்று கடுப்படிக்கிறீர்களோ! :-) )

அல்வழிப் புணர்ச்சியாகச் சேரும் பொழுது ஒற்று மிகும். ஓக்கடிது, சோக்கடிது போல்வன.

சில சமயங்களில் இதுவோ அதுவோ என்று மாறுபாட்டினைக் கொண்ட பொருள் எஞ்சி நிற்க அமையும் சொற்கள். உ - புற்றோ புதலோ, சில சமயம் வினாவும், வினாப்பொருளும் ஓகாரத்தின் உள்கிடையாய் வரும். (நீயோ கொண்டாய்). இந்த இடத்தில் எல்லாம் ஒற்று மிகுதல் இல்லை.

வேற்றுமை தொகும் படியாகச் சேரும் போது அங்கு ஓர் ஒகரம் வந்து பின் வல்லெழுத்து மிகும். கோஒக்கடுமை போல்வன.

இங்கு ஓ என்னும் எழுத்தில் முடிந்த நிலைமொழியோடு வருமொழி இல் என்பதாக இருந்தால் அப்பொழுது இயல்பாகச் சேரும் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

உதாரணம் கோ + இல் = கோவில் (நச்சினார்க்கினியர்) கோயில் (இளம்பூரணர்)

இங்கு பத்தாம் நூற்றாண்டு இளம்பூரணரும், 14ஆம் நூற்றாண்டு (?) நச்சினார்க்கினியரும் ஒருபோல இங்கு ஒரு கேள்வி எழுப்புகின்றனர்.

என்ன எனில் கோ என்பது உயர்திணை ஆயிற்றே, அப்படியிருக்கும்பொழுது இங்கு இயல்புப் புணர்ச்சியாக கோயில் ~கோவில் என்று வருமா?

அதற்கு விடையாக அவர்கள் இருவரும் கூறுவது கோ என்பது உயர்திணைப் பொருளதாக இருந்தாலும், ‘கோ வந்தது’ என்று அஃறிணையாய் முடிபு ஏற்க வழங்கப்படுதலின் கோ என்பது பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை போலும். அதனால் இயல்புப் புணர்ச்சி வந்தது என்று பொருள்பட உரைக்கின்றனர்.

அப்படி என்றால் கோ என்பது அஃறிணை ஆவது எப்படி? அரசன் வந்துச்சு, வேந்து வந்துது என்று குறிப்பார்களா? அப்பொழுது இங்கு கோ என்றால் பசு என்றுதானே பொருள். கோ என்பது அஃறிணைக்கும் உயர்திணைக்கும் வழங்கும் ஒரே சொல்லாக இருப்பது பற்றி இந்தச் சமாதானமா?

அப்படியென்றால் தமிழில் சொற்களுக்குப் பால், திணை கூறுதல் வழக்கம் இல்லை. சொற்கள் குறிக்கும் பொருட்களின் பால் திணைதான் சொல்லானது ஏற்கும் என்ற கருத்து என்னாயிற்று?

293 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையின் கீழ் அடிக்குறிப்பிட்டு உரைக்கும் திரு ஞா தேவநேயப் பாவாணர் -- ‘அஃறிணைப்பாற்படுதலாவது சொல்லால் அஃறிணையாயும் பொருளால் உயர்திணையாயும் இருத்தல்’ என்று வரைகிறார்.

சொல்லுக்குத் திணையுரைத்தலும், பாலுரைத்தலும் வடமொழி இலக்கணக் கொள்கை அன்றோ! உதாரணமும் கோவந்தது என்பது ஆவிற்கு வடமொழிச் சொல்லான கோ என்பதை இட்டோ?

இதுதான் நான் இங்கு உரைக்கவந்த ’கோ இல் பிரச்சனை.’

***


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

வேந்தன் அரசு

unread,
Aug 11, 2012, 4:49:11 PM8/11/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com


9 ஆகஸ்ட், 2012 10:33 am அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:


எழுத்து 288

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐயென் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகார மாதல் வேண்டும்.



வேணவா எனும் ஒரே சொல்லுக்காக அவரு இலக்கணம் எழுதி யுள்ளாரா?
அல்லது இன்னும் பல சொற்கள் உளவா?


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Nagarajan Vadivel

unread,
Aug 11, 2012, 9:58:29 PM8/11/12
to mint...@googlegroups.com
வடமொழி தென்மொழி அறிஞர்கள் ஒருமொழிச் சார்பின்றி மொழியியல் சார்ந்த தமிழ்
சமஸ்கிரித ஒப்பியல் ஆய்வு செய்ய முனையும் ஆர்வம் வரவேற்கத் தக்கது

விவாதங்கள் தன்மய மொழி உணர்ச்சிக்கு ஆட்படாது ஒருதலை ராகமான தாக்குதல்
இல்லாமல் நிகழ ஆவண் செய்து உதவுவோமாக

முதலில் சில தொன்மங்களுக்கும் புனைவுகளுக்கும் இடமில்லாத மொழியியல்
வரையரைக்குள்ளான விவாதத்துக்கு வழி வகுக்க வேண்டும்

1. தேவபாஷை என்ற அனுமானம் தெளிவு படுத்தப்படல் வேண்டும்
வடபுலம் இருந்து தென்புலம் வந்த அகத்தியன் தமிழைத் தோற்றுவித்தார்
என்றும் தமிழ் இலக்கணம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்றும் இருவேறு
கருத்துக்கள் உள்ளன. தமிழ்க்கடவுள் சுப்பிரமணியரே அகத்தியருக்குத்
தமிழ்மொழியைச் சொல்ல அவர் தமிழை உருவாக்கியதாக என்று ஒரு தொன்மம் உள்ளது.
விவாதங்களில் இந்தத் தொன்மமும் புனைவும் கலக்காமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்

2. அகத்தியர் காலம் அவர் யாத்த இலக்கணம் பற்றி நம்பகத்தன்மையுள்ள ஆவணமாக
நம்மிடம் இல்லை. தொல்காப்பியர் அவரின் சீடர் அவர் யாத்த இலக்கணம்
அகத்தியர் இலக்கணச் சிந்தனையை அடியொற்றீ வரும் என்ற கருத்தே இங்கு
மேலோங்கி நிற்கிறது

3. கோழியிலிருந்து முட்டையா அல்லது முட்டையிலிருந்து கோழியா என்பது போன்ற
முடிவில்லாத விவாதம் தமிழ் இலக்கணத்துக்கு அடிப்படை தமிழ் இலக்கியமா
அல்லது இலக்கண அடிப்படையில் தமிழ் இலக்கியம் படைக்கப்பட்டதா என்ற இரு
பிரிவு வாதங்கள் தொடரும் நிலைதான் உள்ளது

4. தொல்காப்பியரின் படைப்பு வடமொழித் தொடர்பில்லாமல் ஐந்திரம் என்ற
இடைநிலை இலக்கணத்தை அடியொட்டி எழுதப்பட்டது என்றும் அது வடபுலத்துக்கும்
தென்புலத்துக்கும் இடைப்பட்ட பல்லவ நாட்டில் இருந்து தமிழுக்கு
வந்திருக்கக்கூடும் என்ற தகவலும் உண்டு

5. தொல்காப்பியம் என்பது அவர் வாழ்ந்த காலத்தில் வழக்கில் இருந்த
தமிழ்மொழி இலக்கியத்துக்குப் பொருந்தும் விதிகள் எனவே அவரின் விதிகளைப்
பிற்கால மொழிவளர்ச்சிக்கு ஆதாரமாகக் காட்டுவது தவறு என்றும் நேரடியாக
வடமொழி இலக்கணத்துடன் ஒப்புநோக்குவது சரியான நெறிமுறையன்று என்ற
விவாதமும் உள்ளது

6. அதே சமயம் புதிய வார்த்தைகளின் வரத்து வரவேற்கக்கூடிய ஒன்று என்று
தொல்காப்பியர் கருத்து வெளியிட்டிருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்
தொல்காப்பியர் வடபுலத்திலிருந்து வந்த அந்தணர் என்றும் அவர் காலத்துக்கு
முன்னரே குறைந்த அளவு வடமொழிச் சொற்கள் தமிழ்க் குமுகத்தில் வழக்கில்
இருந்தது என்பதை மறுக்கும் தரவுகளும் ஆவணங்களும் இல்லை

7. மானுடவியல் ஆய்வில் கூறும்போது இரு குமுகங்களின் தொடர்பும் கருத்துப்
பரிமாற்றமும் ஜவ்வூடல் போன்று ஒரு திசையில் இருந்து மற்றொரு
திசைக்குமட்டுமே நிகழும் மாற்றம் அல்ல என்றும் கடல் அலை போன்று கரையைத்
தாக்கும்போது புதியதைத் தரையில் விட்டுப் பின் வாங்கும்போது தரையில்
உள்ளதை எடுத்துச் செல்லும் இருதிசைப் போக்குவரத்து என்ற நியதி கவனத்தில்
நிற்க வேண்டும்

8. எனவே தொல்காப்பியரின் விதிகள் அவர் வாழ்ந்தகாலத்தில் நின்று நிலவிவந்த
இலக்கியங்களின் அடிப்படையில் தோன்றி அவர் வாழ்ந்த காலத்தில் வழக்கில்
இருந்த எழுத்து சொல் போன்ற வளங்களுக்கு மட்டும் அவரின் இலக்கண விதிகள்
பொருந்தும் என்ற வாதத்தை அறிஞர்கள் உற்றுநோக்க வேண்டும்

9. மொழி வளர்ச்சி தொடர்ச்சியாக மாற்றும்பெறும் தன்மையுடையது.
தமிழுக்குப் புதியன வந்தபோது அவற்றைத் தமிழுக்கு ஏற்ற முறையில் மாற்றப்
புதிய இலக்கண விதிகள் உருவாக்கப்பட்டன என்றும் இந்த மொழித்தாக்கம்
தொல்காப்பியர்காலத்தில் இல்லாமையால் அவர் வேற்றுமொழி வார்த்தைகள் தமிழில்
மாற்றம்பெரும் என்ற விதிமுறைபற்றிச் சிந்திக்க வாய்ப்பில்லை என்ற
கருத்தும் ஆய்வு செய்யப்படவேண்டும்

நாகராசன்


2012/8/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த இழையில் மரபுச் செல்வங்களான
> நூல்கள், அவற்றிற்கான பண்டைய உரைவளங்கள், தற்காலத்தில் நன்கு வளர்ந்து
> செழித்துள்ள உலகளாவிய மொழியியல் ஆய்வு முடிவுகளான linguistics principles
> இவையும்தான் அடிப்படைச் சான்று மிக்க வழிகாட்டிகளாய்க் கொள்ளப்படுகின்றன.
> இந்தத் துறையில் நம் கற்பனைகள் எல்லாம் முக்கியமற்றவையே. மொழியியலில் நாம் கற்க
> வேண்டியது மிக அதிகம்.
>
> எனவே ஆளுக்காள் இப்படி இருந்திருக்கும் அப்படி இருந்திருக்கும், இதிலிருந்து
> இது வந்திருக்கும் என்பது போன்ற அபிப்ராய குடிசைத் தொழில்கள் எல்லாம் பண்டைய
> நூல்களின் சான்றும், மொழியியலின் ஆதரவும் இருந்தால் மட்டுமே கவ்னத்திற்குரியன.
> இன்றேல் நிர்தாட்சண்யமாக ஒதுக்கப்பட வேண்டியன.
>
> இந்த விஷயத்தில் பத்தாம் பசலி, துறை சார்ந்த ஆய்வுகளுக்கு நம்பிக்கையாளன்,
> என்று என்ன நீங்கள் என்னைக் குறை கூறினாலும் சரி. மொழியில் சொல்லுருவாக்கம்
> என்பது செம்பாதி மரபில் ஊன்றி நிற்பது. இன்றைய உலகளாவிய மொழியியல் ஆய்வுகள்
> இத்துறையில் கூடுதல் விளக்கம், தெளிவாக்கமும் நல்கக் கூடியது.
>
> வேணவா என்பதற்கு அரங்கனார் சொன்ன கருத்தன்று இது. தொல்காப்பியர் தெளிவாக நூற்பா
> இட்டிருக்கும் விஷயம் இது.
>
> தொல்காப்பியரைச் சொல்லி மொழி வெறி ஏற்படுத்த பலருண்டு. தொல்காப்பியருடைய சமயம்,
> குடும்பம், குழந்தைகுட்டிகள், அவர் எந்த ஆபீஸில் வேலை பார்த்தார், என்ன சம்பளம்

> வாங்கினார் என்று அதிகமாகக் கவலைப்படும் census அதிகாரிகள் நிறைய பேர் உண்டு.


> தொல்காப்பியத்தில் இல்லாததையெல்லாம் இருப்பது போன்று மாயாஜாலம் செய்யும்
> மண்ட்ரேக்குகளும் உண்டு.
>

> ஆனால் உருப்படியாகக் கருத்தூன்றித் தொல்காப்பியத்தைப் படித்த பேர்வழிகள்

> கிடையாது. தொல்காப்பியர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அக்கறை யாருக்கும்
> இல்லை.
>
> எனவே இந்த இழையில் என் கவனம் எல்லாம் மூல நூல் ஆசிரியர்கள் என்ன
> சொல்லியிருக்கிறார்கள்? மொழியியல் ஆய்வுகள் அவற்றுக்கு என்ன விளக்கம்
> தருகின்றன, என்ன தெளிவாக்கம் பெய்கின்றன என்பதுதான்.
>
> எனவே இந்த இழையில் பங்கேற்போர் தயவுசெய்து, இந்த அணுகுமுறைகள் தங்களுக்கு
> உடன்பாடு என்றால் மட்டுமே கலந்துகொள்ளவும் என்பதை ப்ரார்த்தனையாகச் சொல்லிக்
> கொள்கிறேன்.
>
> ***
>
>
>
>

> 2012/8/11 DEV RAJ <rde...@gmail.com>


>>
>>
>> பேராசிரியர் ஐயா,
>>
>>
>> முத்துவீரியத்திலும் ’வேள்+ அவா’ காட்டப்படவில்லை.
>> அரங்கனார் அவர்கள் சொல்வதுபோலவே உள்ளது.
>>
>

Nagarajan Vadivel

unread,
Aug 11, 2012, 11:02:10 PM8/11/12
to mint...@googlegroups.com
வரவேற்கிறேன் என்று நயமாகக் கூப்பிட்டு பின்னர் சனியனே வெளியேறு என்று
சொல்லும் பாணி மின் தமிழுக்குப் புதிதல்லவே.

உங்கள் கருத்துக்கு அடியொட்டி மட்டும் எழுதவேண்டும் என்ற உங்களின் விதி
இந்த மரமண்டைக்குப் புரியவில்லை

மாற்றுக்கருத்துத் தேவையில்லை என்று மனதை நீங்கள் மூடிக்கொண்டபின் என்ன
சொல்லி என்ன பயன்?

இனியும் இந்த விவாதத்தில் பங்குபெற என்கென்னத் தீர்க்கமுடியாத மன நோயா
அல்லது உங்களுக்குத் தொல்லலை கொடுக்க நேரத்தைச் செலவு செய்யவேண்டிய
டைம்பாஸ் ஆசாமியா?

நன்றி
நாகராசன்

2012/8/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> இந்தக் கருத்துகள் இந்த இழையில் தேவையற்றவை. மிக உயர்ந்த ஆய்வியல் கோட்பாடுகளாக
> இவை இருக்கலாம். ஆனால் இந்த இழையின் அணுகுமுறை இன்னது என்று பலமுறையும்
> தெளிவுபடுத்தியிருக்கிறேன். வேறு குழப்பங்கள் தேவையில்லை.
>
> உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
>
> ***
>
>
> (இல்லை உங்கள் கருத்துகள் மிக முக்கியம் என்று உங்களுக்குத் தோன்றினால் அவற்றை
> அடிப்படையாக இட்டு தொல்காப்பிய ஆய்வு என்று புது இழையை நீங்கள் ஆரம்பித்து
> அங்கு அலசுவதில் எந்தத் தடையும் இல்லை.)
>
> *
>
>
> 2012/8/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 11, 2012, 11:19:48 PM8/11/12
to mint...@googlegroups.com


2012/8/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

3. கோழியிலிருந்து முட்டையா அல்லது முட்டையிலிருந்து கோழியா என்பது போன்ற
முடிவில்லாத விவாதம் தமிழ் இலக்கணத்துக்கு அடிப்படை தமிழ் இலக்கியமா
அல்லது இலக்கண அடிப்படையில் தமிழ் இலக்கியம் படைக்கப்பட்டதா என்ற இரு
பிரிவு வாதங்கள் தொடரும் நிலைதான் உள்ளது

ஆர்தர் ஹெய்லி, மருத்துவ மனைகளை மையப்படுத்தி The Final Diagnosis என்றொரு நாவல் எழுதினார்.  அதில் ஒரு வாசகம் வரும்.  கிட்டத்தட்ட இப்படி இருக்கும்: ‘தன் இனம் அழியாமல் இருப்பதற்காக, முட்டை செய்யும் தந்திரம்தான் கோழி‘.  கோழியினம் முட்டையிருகிறது என்பதை மாற்றி, முட்டையினம் கோழியிடுகிறது என்று வேடிக்கையாக எழுதியிருப்பார்.

வேடிக்கை கிடக்கட்டும்.  தமிழ் இலக்கண விதிகள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம்.  முதலில் எழுந்தது இலக்கியம்தான்.  இலக்கிய வழக்கையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கையும் ஒருங்குகூட்டி அமைக்கப்பட்டதுதான் இலக்கணம். ‘எள்நின்று எண்ணெய் எடுபடல் போல, இலக்கியத்தின்றும் எடுபடும் இலக்கணம்’ என்று அகத்தியத்திலிருந்து கிடைத்த (ஒரே!) மேற்கோளாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்

என்று தொல்காப்பியம் போகிற போக்கில் சூத்திரமே செய்திருக்கிறது.  இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பதும் உண்மைதான்; மக்களுடைய பேச்சு வழக்கிலிருந்தும் இலக்கணம் உருவாகத்தான் செய்கிறது என்பதும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் பேச்சு வழக்கு இலக்கணமேற நெடுநாள் பிடிக்கும்.  மக்கள் ஒரு சொல்லின் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்; அல்லது பயன்படுத்த மறுக்கிறார்கள் என்றால், அதற்கேற்றவாறு இலக்கணம் அமையும்.

பலமுறை இதனைச் சொல்லியிருக்கிறேன்.  -அன் விகுதி ஆண்பால்; -அள் விகுதி பெண்பால்.  ஒருவன் என்பது ஆண்பால் என்றால், ஒருவள் என்பது பெண்பால் என்பது இலக்கண விதிகளின்படி சரி; ஆனால், மக்கள் ஒருவள் என்று சொல்வதில்லை.  ஒருத்தி என்றுதான் சொல்கிறார்கள்.  ஆகவே அது மட்டும்தான் சரி என்பது இலக்கணம்.  வீட்டிலிருந்து புறம்-படுதல், புறப்படுதல் என்று சொல்லப்படுகிறது.  அதாவது வெளில போறதுக்குக் கிளம்பும் செயல் புறப்படுதல்.  புறம் படுதல்.  ஆனால், வீட்டுக்குத் திரும்பி வரும் செயலுக்கு, அகம்-படுதல், அகப்படுதல் என்று சொல்லமுடியுமா?  இலக்கண விதிகளின்படி அது லாஜிகலாகப் பொருந்துகிறது.  But it does not have the sanction of the general, the lay public!  ஆகவே, அகப்படுதல் என்றால் வேறு பொருள். வீட்டுக்குள் வருவது என்று இல்லை.

‘பழையன கழிதலும்’ என்று நன்னூல் வகுத்திருக்கும் சூத்திரமும் இதை உறுதிப்படுத்துகிறது.

எனவே. the yardstick is made of both the written word and the spoken word.  இலக்கணைத்தை உருவாக்கி அதைப் பயன்படுத்தி மொழியை ‘இன்ன வகையில்தான் பயன்படுத்தவேண்டும்’ என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.  ஒரு மொழி மெல்ல மெல்ல உருவானது.  பேச்சும் எழுத்துமாக வடிவெடுத்தது.  நிறைய இலக்கியங்கள் படைக்கப்பட்டன.  பேச்சு, எழுத்து ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, இது சின்டாக்ஸ். இந்த மொழியில் பெயர்ச்சொல் வினைச்சொல் உரிச்சொல் போன்றவை இன்ன இன்ன விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.... என்று ஒவ்வொரு மொழியிலும் இலக்கணம் தெளிவுபடுத்துகிறது.  லட்சணம்.  Comparative Grammar என்று எடுத்துக் கொண்டால் ஆங்கிலத்தில் pre-position இருக்கிறதா?  தமிழில் அது இல்லை.  தமிழில் இருப்பது post-position.  The book is ON the table என்று ஆப்ஜெக்ட்டுக்கு முன்னால் பொசிஷன் சொல்லப்படுவதால் ஆங்கிலத்தில் ப்ரீ-பொசிஷன்.  புத்தகம் மேஜைக்கு மேல் இருக்கிறது என்று ஆப்ஜெக்டுக்குப் பிறகு பொசிஷன் சொல்லப்படுவதால், தமிழில் இருப்பது போஸ்ட் பொசிஷன்.  தமிழ் விதிப்படி ஆங்கிலத்தில் சொன்னால், The books is table on என்றல்லவா சொல்லவேண்டிவரும்.

மன்னிக்கவும்.  தலைப்பை விட்டு விலகியிருந்தாலும் ஒரு வகையில் தலைப்புக்குத் தொடர்பான விஷயத்தைத்தான் பேசியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  இருந்தாலும் தவறியிருந்தால் மன்னிக்கவும்.  இலக்கணத்திலிருந்து இலக்கியமா, இலக்கியத்திலிருந்து இலக்கணமா என்ற கேள்வி எழுந்ததால் அதற்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.  செய்தது பிழையென்றால் மன்னிக்கவும் என்று மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Aug 11, 2012, 11:27:14 PM8/11/12
to mint...@googlegroups.com
On Saturday, 11 August 2012 10:18:40 UTC-7, Srirangam V Mohanarangan wrote:

>>>> இங்கு ஓ என்னும் எழுத்தில் முடிந்த நிலைமொழியோடு வருமொழி இல் என்பதாக
இருந்தால் அப்பொழுது இயல்பாகச் சேரும் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

உதாரணம் கோ + இல் = கோவில் (நச்சினார்க்கினியர்) கோயில் (இளம்பூரணர்)

இங்கு பத்தாம் நூற்றாண்டு இளம்பூரணரும், 14ஆம் நூற்றாண்டு (?)
நச்சினார்க்கினியரும் ஒருபோல இங்கு ஒரு கேள்வி எழுப்புகின்றனர்.

என்ன எனில் கோ என்பது உயர்திணை ஆயிற்றே, அப்படியிருக்கும்பொழுது இங்கு
இயல்புப் புணர்ச்சியாக கோயில் ~கோவில் என்று வருமா?

அதற்கு விடையாக அவர்கள் இருவரும் கூறுவது கோ என்பது உயர்திணைப் பொருளதாக
இருந்தாலும், ‘கோ வந்தது’ என்று அஃறிணையாய் முடிபு ஏற்க வழங்கப்படுதலின் கோ
என்பது பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை போலும். அதனால் இயல்புப்
புணர்ச்சி வந்தது என்று பொருள்பட உரைக்கின்றனர்.<<<



கோ , இல் -> கோயில், கோவில்.
ஐயத்துக்கிடமின்றி அரசன் அல்லது
ஆண்டவன் உறையும் இடத்தைக்
குறிப்பதான சொல். பசுவைக் கட்டும்
கொட்டிலை ஒருநாளும்
இச்சொல் சுட்டப்போவதில்லை.

இதில் ஏன் அஃறிணை நுழைய வேண்டும்
என விளங்கவில்லை; கட்டாயம் உயர்திணைக்குரிய
புணர்ச்சி விதியே இதில் பொருந்துவதாக
இருக்க வேண்டும்.

சொல்லுக்குப் பாலும், திணையும் கற்பிக்கும் வடமொழி இலக்கணம்
இங்கு ஏன் வரவேண்டும் ?

விளக்கம் கிடைத்தால் நல்லது



தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 11, 2012, 9:16:35 PM8/11/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com
வேட்கைக்கும் அவாவுக்கு  ஒரு சின்ன வேற்றுமை இருக்கு
 தேவை காரணமாக எழுவது வேட்கை
ஆசை காரணமாக எழுவது அவா


நீர் வேட்கை, காம வேட்கை,  இவை மனிதனின் தேவைகளை நிறைவு செய்ய. இரை வேட்டை விலங்குகளின் தேவையை நிறைவு செய்யும்

DEV RAJ

unread,
Aug 12, 2012, 8:32:36 AM8/12/12
to mint...@googlegroups.com
On Sunday, 12 August 2012 04:53:50 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>>> கோ வந்தது -- இந்த உதாரணத்திலும் கோவாகிய அரசன் வந்தான் என்னும் பொருள்பட ‘கோ
வந்தது’ என்னும் அஃறிணைப்பாற்பட்டு முடிந்த பயன்பாடு அந்தக் காலத்தில்
இருந்ததை உரையாசிரியர்கள் உணர்த்துகின்றனரோ? <<<


         ‘கோ வந்தது’

அஃறிணைப்பாற்பட்டு முடியும் பயன்பாடு இருந்திருக்க
வாய்ப்பில்லை என்று சொல்ல முடியுமா ?


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
                         [குறள் 774]


'நப்பின்னை காணில் சிரிக்கும்’
               [பெரியாழ்வார் திருமொழி]


நெல்லை, நாஞ்சில் வட்டாரங்களிலும்
இவ்வழக்கு நிலவுகிறது.


இதையொட்டி ‘அச்சன் வன்னு’, ‘அனியன் வரும்’
எனும் மலையாள வழக்கும் பின்னர் தோன்றியிருக்க
வாய்ப்புள்ளது.

’கோ’ அரசனைச் சுட்டுவது; பொருளால்  உயர்திணை



தேவ்




On Sunday, 12 August 2012 04:53:50 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
பசுவைக் கட்டும்
கொட்டிலை ஒருநாளும்
இச்சொல் சுட்டப்போவதில்லை<<<<<

இதுவும் சரியே. அதாவது ‘கோ வந்தது’ என்னும் உதாரணத்திற்காக ‘கோ=பசு’ என்னும் வடமொழி வடிவத்திற்குப் போக வேண்டியதில்லை என்கிறீர்கள்.

அப்பொழுது ‘கோ’ என்றால் அரசன் என்ற பொருளிலேயே கொள்வோம்.

கோ வந்தது -- இந்த உதாரணத்திலும் கோவாகிய அரசன் வந்தான் என்னும் பொருள்பட ‘கோ வந்தது’ என்னும் அஃறிணைப்பாற்பட்டு முடிந்த பயன்பாடு அந்தக் காலத்தில் இருந்ததை உரையாசிரியர்கள் உணர்த்துகின்றனரோ?

அப்படி என்றாலும் ஒரு சிக்கல் வருகிறதே. ’கோ’ என்னும் சொல்லின் பொருள் உயர்திணை அல்லவா? அப்படியிருக்க பதிப்பாசிரியர் குறிப்பிலும் சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை என்று இந்தச் சொல் வகைபடுத்தப் பட்டிருப்பதைப் பார்த்தால், சொல்லுக்குத் திணையும், பாலும் உரைத்தல் தமிழில் உண்டா?

***





2012/8/12 DEV RAJ <rde...@gmail.com>
--

DEV RAJ

unread,
Aug 12, 2012, 9:02:23 AM8/12/12
to mint...@googlegroups.com
>>>> வேற்றுமை தொகும் படியாகச் சேரும் போது அங்கு ஓர் ஒகரம் வந்து பின் வல்லெழுத்து
மிகும். கோஒக்கடுமை போல்வன. <<<

>>> கோ என்பது உயர்திணை ஆயிற்றே, அப்படியிருக்கும்பொழுது இங்கு
இயல்புப் புணர்ச்சியாக கோயில் ~கோவில் என்று வருமா? <<<


இயல்புப்  புணர்ச்சிக்கு இடமில்லை.


>>> அப்படியென்றால் சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை என்று பதிப்பாசிரியர்
காட்டும் குறிப்பு......<<<


சொல் ஒருகால் திணையையோ, பாலையோ  ஏற்குமாயின் அது வடமொழி
இலக்கணச் சார்பையே குறிக்கும்; முந்தைய பதிவில் ஹரிகி அவர்கள் சுட்டியபடி
இலக்கியம் வழியே இலக்கணம் என்பதால் இச்சார்பும் தொன்மை என ஏற்றாக வேண்டும்.

அறிஞர் முடிவு செய்வராக



தேவ்

On Sunday, 12 August 2012 05:39:00 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
அப்படியென்றால் சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை என்று பதிப்பாசிரியர் காட்டும் குறிப்பு நுட்பத்தை நன்கு விளக்குகிறது என்று கொள்ளலாம் அல்லவா.

N. Ganesan

unread,
Aug 12, 2012, 12:04:01 PM8/12/12
to மின்தமிழ்
On Aug 10, 11:02 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> 2012/8/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...<http://groups.google.com/groups/unlock?_done=/group/mintamil/browse_t...>@gmail.com>

>
> > வேள் என்றால் விருப்பம் என்றும் விருப்பத்திற்குரிய நாட்டம் என்றும்
>
>  பொருள்.
>
> > அவா என்றாலும் விருப்பம்தான். இரண்டு சொற்களும் இணைந்து மிகு விருப்பத்தைக்
> > குறிக்கின்றன. எனினும் பொதுவாக மிகுதியான நீர்  வேட்க‌ையை வ‌ேணவா என்பது
> > குறிப்பிடும்.
>
> தொல்காப்பியர்  தனிப்படச்  சூத்திரமாகவே இயற்றி,  வேட்கையும்
> அவாவும் சேர்ந்து, ‘கை’ என்பது மறைந்து,  டகாரம்  ணகாரமாகி ’வேணவா’
> எனும் சொல் கிடைக்கிறது என்று எழுத்ததிகாரம் 288ம் சூத்திரத்தில்
> அவரே கல்வெட்டாக ஆக்கி வைத்திருக்க,
> அதை நச்சினார்க்கினியர் உரையோடு  பதிப்பித்த தேவநேயர்
> அதற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் சம்பந்தமே இல்லாமல்
> ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
> என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
> ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,
> ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார்.
>
> மூலநூல் ஆசிரியரான தொல்காப்பியருக்கே தெரியாத தமிழ்
> தேவநேயருக்குத் தெரிந்திருந்ததால் அவரை ‘மொழி ஞாயிறு’
> என அழைத்தனரோ தெரியவில்லை :))
>

தொல்காப்பியருக்குத் தெரியாது எனச் சொல்ல முடியாது.
ஆனால், தேவநேயப் பாவாணர் சிந்தித்த வழியில் காப்பியர் சிந்தனை
2300 ஆண்டு முன் செல்லாமல் இருக்கலாம் அல்லவா?

” [பாவாணர்] ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்


 என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
 ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,

 ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார்.” ” (தேவ்)

திராவிட மொழிஞாயிறு பாவாணர் சரியாகத்தானே  கூறியுள்ளார்.
இதில் என்ன “விபரீதச் சொல்லாக்கம்” இருக்கிறது என தேவ்
விளக்கினால் தெரிந்துகொள்வேன்.

திராவிடமொழிகளிலே -ள்-/-ண்-/ட்- இரண்டாம் எழுத்தாக வரும்
சொற்றொகுதிகள் ஏராளம். அடிப்படையான பொருளமதி
கொண்டவையாக இருக்கும். பல உதாரணங்களை பல்லாண்டாய்க்
காட்டியுள்ளேன். ஒரு சில சான்றுகளாய், -ள்-/-ண்-/-ட்- வேர்த் தொகுப்புகள்
பத்து உதாரணங்கள் இங்கே பார்ப்போம்:

(1) நள்-/நட்-/நண்- “நெருங்கு’ என்ற வேர்.
நட்பு, நண்பு (நண்பர்), நட்டார், நள்ளார், நண்ணார்.

(2) நிரஞ்சனின் 9, 90, 900 பற்றியகேள்வியை எடுத்துக்கொள்வோம்.
தொண்டு = 9 என்னும் தொல்காப்பியர் காட்டும் திராவிட
மொழியின் அடிப்படையான சொல்லில்
தொள்-/தொண்-/தொட்-  என்ற வேர் உள்ளது.
தொள்- வேரில் பிறக்கும் சொற்களாக, தொள்ளை, தொண்ணை,
தொட்டி, தோண்டு-, ... என்று பல சொற்கள் உள்ளன.
தொள்- என்றால் ஓட்டை, குறைவு (= slack) என்பது பொருள்.
உதாரணம். தொண்டு, தொண்டுமுட்டி என்ற சொற்களின்
பொருள்கள் காட்டி நிற்கின்றன. நிரஞ்சனின் 9, 90 பற்றிய
கேள்விக்கு 2002-ல் யானெழுதிய மடலைத் தரலாம்:
http://www.treasurehouseofagathiyar.net/18600/18651.htm

போத்து கோவை மாவட்டத்திலும் அன்றாடம் வழங்கும் சொல்.
போத்து = ஆண்கன்று. எருமைக்கன்றில் ஆணுக்குப் போத்து
என்பது வழக்கம். வயல்வெளியில் சேற்றுழவின்போதும், சும்மா
திரியும்போதும் போத்துக்குத் தொண்டுமுட்டி கட்டப்படும்.
தொண்டு - குறைவான நடத்தை. "அவள் தொண்டு" என்றால் அர்த்தம் வேறு.
(தொல்காப்பியத்தில் வரும் தொண்டு (9) பேரெண் 10க்குக் குறைவாக
இருப்பதால் ஏற்பட்ட பெயர்). கேரளாவில் வயலுழவுக்கு போத்தேர்
தான் (போத்து + ஏர்). தொல்காப்பியத்தில் யாடுகளின் பெண்குட்டிக்கு மூடு
என்றுவரும். இதுவும் கொங்குநாட்டில் நடைமுறைவழக்கிலுள்ள
ஒரு சொல்.

(3) விள்-/விண்-/விட்-
விள்ளுதல், விண்ணு/விண்டு, விட்டு (விட்டுசித்தன்).
விட்டல் - பாண்டுரங்க விட்டலன்.
விஷ்ணு என்னும் சம்ஸ்க்ருதச் சொல் இத் தமிழ்ச்
சொல்லில் இருந்து வடமொழி பெற்ற கடன் என்பர்
மேலைநாட்டு ஸம்ஸ்க்ருத மொழியியல் பேராசிரியன்மார்.

(4) குள்-/குண்-குட்- வேரைப் பார்த்தால்,
குளம், குண்டம் (உ-ம்: ஓம குண்டம்), குண்டா, குண்டுகுழி, குட்டை

(5) எள்-/எண்-/எட்-
எள்- என்பதன் பொருள் “மிகக் குறுகிய”
எனவே, குறுவிதை கொண்ட தாவரம் எள், அது எண் என்பது
சங்க இலக்கியம். பொருள்களை திராவிட ஜனங்கள்
எள் தானியம் கொண்டு “எண்ண” தொடங்கினர். அது முடியும்
இடம் எட்டு. தமிழ் எண்களுக்கு எட்டு அடிப்படையா (octal base)
அல்லது பஃது (decimal base) என்பது ஆதி காலத்தில் பல காலமாய்
ஒரு போராட்டம் நிகழ்ண்டிருக்கிறது.

(6) புள்-/புண்-/புட்- குழி,
அலகால் நிலங்கொத்தி குழியாக்கித் தின்பதால்
பறவை = புள். எள் = எண், அதுபோல், புள் = புண் குழி,
புட்டம் (< புள்-) = காக்கை. புட்டில் அம்பறாத்தூணி.
விள்- விண்ணு/விட்டு/விண்டு (> viSNu in Sanskrit
from Dravidian). அதுபோல், புள்- வேரால் த்ராவிட
மொழிகளில் பெண்ணின் உடற்குறி.

(7) துள்-/துண்-/துட்-
துளி - சிறு துளி, துணி(த்தல்) - சிறு பாகம் ஆக்கல்,
துண்டித்தல், துண்டு, துட்டு - சிறுகாசு.

(8) வள்-/வண்-/வட்- வளைதல்
வள்ளை, வண்டி, வடம், வட்டம் ....
எதிரியை வளையச் செய்வது வாள்.
வளைந்து செக்காட்டி எள்ளை எண்ணெய்
ஆக்கும் வாணியன் (< வாள்- ). இம் மரபினரில்
வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர் வாணியன்
தாதன் கம்பன் பாடாத உத்தரகாண்டம் பாடியவர்.

(9) பிள்-/பிண்-/பிட்-
பிளத்தல், பிணா, பிடுதல், ...

நேற்று இறந்துபோன தெலுங்கு அறிஞர் ப. கிருஷ்ணமூர்த்தி
உ/ஒ மற்றும் இ/எ உயிர்கள் முதலெழுத்தில் மாறுதலைக்
காட்டி ஒரு முக்கியக் கட்டுரை வரைந்துள்ளார்,
துளை/தொளை, குடு/கொடு, முய்/மொய், கிடை/கெடை, ..

பிள்-/பெள்- வேர் இதில் முக்கியமானது. [BTW, முகம் தமிழ்
ஸம்ஸ்க்ருதத்துக்கு அளித்த கடன்சொல் (லோன்வொர்ட்)
என்பர் அறிஞர். முக்யம் முகம் என்ற தமிழ்ச் சொல்லில்
இருந்து வடமொழியில் உருவாகியுளது.] இந்த
பிள்-/பெள்- வேரைத் தான் தமிழறிஞர் பாவாணர் ஐயா தன் நுண்மாண்
நுழைபுலத்தினால் விளக்கியுள்ளார்.

> அதை நச்சினார்க்கினியர் உரையோடு  பதிப்பித்த தேவநேயர்
> அதற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் சம்பந்தமே இல்லாமல்
> ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
> என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
> ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,

> ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார். (தேவ்)

பிள்-/பெள்- வேரில் பிறந்தது பெண்- என்னும் சொல்.
அதனால் தான் பெண்பனைக்கும் (=பெண்ணை),
நிலத்தைப் பிளந்து செல்லும் யாற்றுக்கும் பேராக
த்ராவிட ஜனங்கள் 10+ ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே
அமைத்துக் கொண்டனர். இந்த பிள்-/பெள்- வேரை
முன்னர் ஆய்ந்துள்ளேன். பிள்- என்ற வேரில் பிறக்கும்
சொல்லுக்குச் சூத்திரம் தொல்காப்பியர் தருகிறார்.

http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
”பெண்ணை (< பெண்-): ஆறுகளுக்கு ஒரு காரணப்பெயர்
பெண் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை வேர் பிள- என்னும் வினைச்சொல் ஆகும்.
பிணா (< பிள்- ) என்றும் பெண் அழைக்கப்படுகிறாள். ”பெண்ணும் பிணாவும்
மக்கட்குரிய” - தொல். மரபியல் 62. மலையில் இருந்து மழைநீர் நிலத்தைப்
பிளந்து பள்ளம், படுகைகளை உருவாக்கி ஓடும் ஆறுகளுக்குப் பெண்ணை என்ற
பெயர் ஏற்படுதல் இயற்கையே. நிலத்தைப் பிளந்து ஓடும் நதிகள் சில பெண்ணை
என்றே காரணப் பெயர் பெறுகின்றன:
கரும்பெண்ணை (கண்ஹபெண்ணா, ஆந்திராவின் க்ருஷ்ணா நதி), வடபெண்ணை,
தென்பெண்ணை.”

(10) வேள்-/வேண்-/வேட்- விழைதல்/விரும்புதல்
வேள் ‘காமன்’ (காமன் என்பதும், அனங்கன் என்பதும்
திராவிட மொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் சென்ற
சொற்கள், கருத்தாக்கங்கள்.)
வேள், வேட்டை, வேள்வி, வேண்டு-, வேட்டல், ...

வேள் - இந்த வேரைத் தமிழ்த்திரு பாவாணர் அழகாக விளக்கியுள்ளார்கள்.
வேள் + அவா, வேணவா, வேட்பவா.

பாவாணர் கூறும் வேள்- என்னும் வேரினின்றும் வேணவா பிறந்தது
என்னும் கருத்து திராவிட மொழிகளின் அடிப்படையான சொற்பிறப்பு
விதிகளில் ஒன்று. மேலும், பல -ள்-/-ண்-/-ட்- சொற்றொகுதிகளில்
இந்தத் தமிழமைப்பு விதி இயங்குதலை அறிய முடியும்.
சில சான்றுகளே தரப்பட்டன.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Aug 15, 2012, 3:30:29 AM8/15/12
to mint...@googlegroups.com
On Tuesday, 14 August 2012 20:39:29 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
//// கருத்துப் பொருளாகிய உருவு, காட்சிப் பொருளாகிய வடிவு என்று உருவு >< வடிவு
என்பதை conceivable >< visible ////

ஆகா, அருமை.
பண்டைய அறிஞர்களின் கருத்துகளை ஒரே
தொகுப்பாகக் காண முடிகிறது.


//// அகரம் மெய்யிலும், உயிரிலும் கலந்தும், அவைதாமாகவே ஆகியும்,
அவற்றோடு கலந்த காலையும் அவற்றால் திரியாமலும், மெய்யின் இயக்கம்
தன்னால் என்னும் படி அமைந்தும், உயிரின் இயக்கம் தன்னால் என்பதை
உணர்தலன்றிக் காட்ட இயலாத தன்மைத்தாக இருப்பதும் ........////


’உடல்மிசை உயிர் எனக் கரந்து உறைதல்’  [அவஸ்திதி]
எனும் நுண்ணிய ஆன்மிகக் கருத்தியல் தமிழ் இலக்கணத்தில்
எத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது !



தேவ்



On Tuesday, 14 August 2012 20:39:29 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
எழுத்துகளில் நான் அகரம்

எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன என்பது திருக்குறள், கண்ணன் வாக்கு இரண்டிலும் காணக் கிடைக்கிறது. முதலாக உடையது என்றால் என்ன? பேரேட்டில் அகர முதலிப் படி அ என்னும் எழுத்து முதலில் அட்டண்டன்ஸ் கூப்பிடப் படுகிறதா? அவ்வாறு முதன் முதலில் வருவதால் ‘அகர முதல’ அன்று என்பது நச்சினார்க்கினியர் காட்டும் தெளிவு. பின் ‘அகர முதல’ என்றால் என்ன?

இதற்கு அகரம் என்பதன் இயல்பைச் சிறிது புரிந்துகொள்ள வேண்டும்.

உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் - என்றார் திருக்குருகூர் நம்பி.

மொத்த தமிழ் எழுத்துகளின் அமைப்புமே இந்த உடல் உயிர் கருத்தில் அமைந்ததுதான்.

தமிழின் இலக்கணத்தில் புலவர் பெருமக்கள் அமைத்து வைத்த சூட்சுமமும், சடகோபன் செந்தமிழ் விண்டு விளக்கிய சூத்திரமும் ஒன்றே என்பதைத்தான் செந்நாப்போதார் செப்பேடாக்கினாற்போல் சொல்லிப் போந்தார்.

இந்தக் கருத்தில் அமைந்தது போல்தான் தொல்காப்பியனாரின் சூத்திரமும் பேசுகிறது.

“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்”

இங்கு மெய்யின் இயக்கத்திற்கு இரண்டு வகைகளைக் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.

என்ன அந்த இரண்டு வகை?

நாவால் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கம்.

மூவகையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கம்.

இந்த இரண்டு இயக்கமும் அகரமொடு சிவணும். (மூவகையால் - வன்மை, மென்மை, இடைமை)

சிவணும் என்றால் பொருந்தி நடக்கும்.

அதாவது தனி மெய்யைச் சொல்லிக் காட்ட வேண்டும் என்றாலும், கண்ணுக்குப் புலப்பட எழுதிக் காட்ட வேண்டும் என்றாலும் அகரம் துணைகொண்டுதான் அவற்றைச் செய்ய முடியும்.

இக். இச், இப் என்பது போன்ற செவிக்குப் புலப்படாத அதாவது பொருள்படாத அரவமாக இன்றி உருவு கொண்டு துலங்கும் ஒலியாகக் காட்ட வேண்டும் என்றால் ககரம், சகரம், பகரம் என்று சொல்ல வேண்டும். மெய்யெழுத்துகள் அனைத்தையும் அகரம் கொண்டுதான் ஒலித்துக் காட்ட முடியும்.

சரி எழுதிக் காட்டுவோம் என்றால் என்ன எழுதுவோம் தனி மெய்யைக் குறிப்பிட்டுக் காட்ட?

க், ச், ப் -- என்று எழுதிக் காட்டுவோம்.

காட்சிப் படும் இந்தத் தனி மெய்யின் வடிவுகளைக் காணுங்கள்.

முதலில் க என்று அகரத்தோடு சிவணிய வடிவில் எழுதிப் பின்னால் தனி மெய் என்பதைக் குறிக்கப் புள்ளி குத்திக் காட்டப் படுகிறது.

கருத்துப் பொருளாகிய உருவு, காட்சிப் பொருளாகிய வடிவு என்று உருவு >< வடிவு என்பதை conceivable >< visible என்ற நுட்பமாகக் காட்டியிருக்கும் நச்சினார்க்கினியர் திறம் வியக்கத் தக்கது.

அகரம் தனிமெய் எழுத்துகளைக் காட்டும்போதும் அவற்றுள் கலந்தே உள்ளது. உயிர்மெய் எழுத்துகளில் அகரம் சிவணுவது வெளிப்படை. இங்கு ஒரு கேள்வி. மெய்யெழுத்துகளில் அகரம் கலந்து நிற்கிறது என்பதைப் போல உயிர் எழுத்துகளிலும் அகரம் கலந்து நிற்குமோ? ஆம். ஆனால் அதனை அவரவரே உணர்தலன்றிப் பிறரால் பிறர்க்குக் காட்டுதல் அரிதாம். எந்த உயிரெழுத்தின் ஒலி வடிவிலும் அகரம் அடிப்படையாக அமைந்து வாயில் நா, அண்பல், இதழ்கள் ஆகியவற்றின் மாற்றங்களாலும், நெடுமை, குறுமை அடைவதாலும் வேறுபடும்.

இவ்வாறு அகரம் மெய்யிலும், உயிரிலும் கலந்தும், அவைதாமாகவே ஆகியும், அவற்றோடு கலந்த காலையும் அவற்றால் திரியாமலும், மெய்யின் இயக்கம் தன்னால் என்னும் படி அமைந்தும், உயிரின் இயக்கம் தன்னால் என்பதை உணர்தலன்றிக் காட்ட இயலாத தன்மைத்தாக இருப்பதும் ஆகிய தன்மைகளால் அகரத்தை இறைவனுக்கு ஏற்ற உதாரணமாகக் காட்டுகிறார் திருவள்ளுவரும், கண்ணனும்.

இந்த நுட்பத்தை மிக அழகாக நச்சினார்க்கினியர் விளக்கிக் காட்டுகிறார்.

“எனவே ஒருவன் தனிமெய்களை நாவால் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், மூவகையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு”

“இங்ஙனம்  மெய்க்கண்   அகரங்  கலந்துநிற்குமாறு   கூறினாற்போலப்
பதினோருயிர்க்கண்ணும்   அகரங்   கலந்து   நிற்குமென்பது   ஆசிரியர்
கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு
உணர்த்துதல்      அரிதாகலானுமென்று        உணர்க.      இறைவன்
இயங்குதிணைக்கண்ணும்   நிலைத்திணைக்கண்ணும்   பிறவற்றின்கண்ணும்
அவற்றின் தன்மையாய்  நிற்குமாறு  எல்லார்க்கும்  ஒப்ப  முடிந்தாற்போல
அகரமும்    உயிர்க்கண்ணுந்   தனிமெய்க்கண்ணுங்  கலந்து   அவற்றின்
தன்மையாயே   நிற்குமென்பது     சான்றோர்க்கெல்லாம்   ஒப்பமுடிந்தது
.
'அகரமுதல'     என்னுங்    குறளான்,    அகரமாகிய    முதலையுடைய
எழுத்துக்களெல்லாம்;     அதுபோல    இறைவனாகிய   முதலையுடைத்து
உலகமென     வள்ளுவனார்    உவமைகூறிய   வாற்றானுங்,   கண்ணன்
எழுத்துக்களில்  அகரமாகின்றேன்  யானேயெனக்   கூறியவாற்றானும்
  பிற
நூல்களானும் உணர்க.” (பகுதியை அச்சுகொட்டிக் காட்டியிருக்கிறேன்)

http://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=46&book_id=1&head_id=1

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

N. Kannan

unread,
Aug 15, 2012, 3:58:57 AM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 DEV RAJ <rde...@gmail.com>:

> ’உடல்மிசை உயிர் எனக் கரந்து உறைதல்’ [அவஸ்திதி]
> எனும் நுண்ணிய ஆன்மிகக் கருத்தியல் தமிழ் இலக்கணத்தில்
> எத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது !
>

மிக அழகான கட்டுரை!

பண்டைய அகரமுதலிகள் ‘அ’ என்றால் கண்ணன் என்றே சொல்லும்.

‘எங்குமுளன் கண்ணன்’ - திருக்குருகூர் நம்பி

நா.கண்ணன்

rajam

unread,
Aug 15, 2012, 4:22:14 PM8/15/12
to mint...@googlegroups.com
எவ்வளவு நேரம் தலைகீழ் நின்றாலும் "ஒன்பது + பஃது = தொண்ணூறு" "ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்" என்ற சொல்லாராய்ச்சி எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. அது பற்றி நான் கவலைப்படப் போவதும் இல்லை.
சரி, அது கிடக்கட்டும். நான் இனிமேல் மெனக்கிடவேண்டாம் என்று தோன்றுவதால் ஒரு வேண்டுகோள். இந்த இழையைத் தாங்கள் தொடங்கியதால் இதன் தலைப்புக்கு ஏற்ப இன்னும் இரண்டு சொற்களை மின்தமிழ்ப்  பாமரர்களுக்கு விளக்கக் கேட்டுக்கொள்கிறேன். அந்தச் சொற்கள்: மிசை, இம்பர். Boeing பணியாளர் வந்து எடுத்துக்கொண்டுபோய்த் தனிக்கடை பரப்புவதற்குமுன் எங்கே நீவிர் செய்யுங்கள்,  பார்ப்போம். அக்கையின் மனது குளிரும். :-) :-) :-) 

On Aug 15, 2012, at 11:40 AM, Mohanarangan V Srirangam wrote:

தொண்டின் சிறப்பு

தொண்டு என்பது தெய்வப் பணிவிடை, அடிமை என்னும் பொருள் சாதாரணமாக நாம் அறிந்தது. தொண்டுக்கே அடிமை பூண்ட குலம் தொண்டக்குலம்.

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலத்தில் சேருமாறு அழைக்கிறார் பெரியாழ்வார்.

ஆனால் தொல்காப்பியர் காலத்தை ஒட்டியும், அவருக்கு முன்னும் ‘தொண்டு’ என்னும் சொல்லுக்கு 9 என்னும் எண்ணும் பொருளாக இருந்திருக்கிறது.

மலைபடு கடாம் 21ஆம் வரி கூறுகிறது -- தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் -- ஒன்பது வார்க்கட்டு என்பதை தொண்டு படு திவவு என்னும் சொல் குறிப்பதாக டாக்டர் உ வே சா அவர்கள் குறிப்பு காட்டுகிறார்.

தொல்காப்பியரும் 9 என்னும் எண் கடைசியில் வந்து முடிந்த ஒரு பேரெண்ணைக் குறிக்கும் போது

‘தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃது’ என்று கூறுகிறார்.
(செய்யுளியல் 406 )

http://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=1352&book_id=1&head_id=3


தலையிட்ட -- கூட்டிய

மூன்று தலையிட்ட முப்பது = 30+3
இரண்டு தலையிட்ட இருபஃது = 20+2

வடமொழியிலும்

த்வா விம்சதி = 22, சதுர் விமசதி என்று கூட்டும் கடையெண்ணை முதலில் சொல்லி முழு எண்ணைப் பின்பு கூறுதல் ஒப்பு நோக்கத்தக்கது.

ஆக, தொண்டு என்பது 9 என்ற எண்ணைக் குறித்த பழைய பயன்பாடு என்பது உரைக்காரர்களும், மூல நூல் ஆசிரியனாகிய தொல்காப்பியரும், மலைபடுகடாத்து பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரும் காட்டும் பயன்பாடுகளில் தெரியவருகிறது.

இப்பொழுது 9, 90, 900, 9000 என்ற டெசிமல் பெருக்கத்துக்கு வருவோம்.

இதற்குப் பெயர்கள் முறையே ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதினாயிரம் என்பன.

8, 80, 800, 8000 என்னும் எட்டின் டெசிமல் பெருக்கம் எட்டு, எட்டு பஃது = எண்பது, எட்டு நூறு = எண்ணூறு, எட்ட் ஆயிரம் எண்ணாயிரம் என்று வருகின்றன. அதைப் போலவே மற்ற எண்களுக்கும்.

ஆனால் ஒன்பதுக்கு மட்டும் பத்தாம் இடத்தைக் குறிக்கும் சொல்லான ஒன்பது ஒன்றாம் இடத்தில் நிற்கும் ஒற்றை எண்ணான 9 க்கு ஆகிவருகிறது. தொண்ணூறு என்று நூறாம் இடத்தின் பெயர் பத்தாம் இடத்தில் நிற்கும் 90 என்பதுக்கு ஆகிவருகிறது. தொள்ளாயிரம் என்று ஆயிரத்து இடப்பெயர் நூறாம் இடத்து 900 என்பதற்கு ஆகிவருகிறது.
ஏன் இந்த இடப்பெயர்வு?

அதாவது முதலாம் இடத்தில் முற்காலத்தில் இருந்த 9க்கு நேர் பெயரான தொண்டு என்பது வழக்கு ஒழிய அதன் மேல் அடுக்கிய பத்தாம் இடப்பெயர், நூறாம் இடப்பெயர், ஆயிரத்தாம் இடப்பெயர் ஆகியன எல்லாம் முதலாம் இடத்தை நோக்கி நகர்ந்து விட்டன போன்ற காட்சி தென்படுகிறது.

எப்படி இது நேர்ந்திருக்கலாம், அப்படி ஒரு வேளை இப்படி நேர்ந்திருக்குமானால்?

ஒரு யூகம் செய்வோம். யூகம் தான். சான்றாண்மை மிக்க முடிபு என்று கொள்ள முடியாது.

தொல்காப்பியரின் காலத்துக்கு முன் தொண்டு என்னும் 9ன் பெயரின் அடிப்படையிலேயே பத்தின் பெருக்கம் இருந்தது என்று கொள்வோம்.

அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று.

இப்பொழுது 9க்கு தொண்டு என்னும் அரிய பயன்பாடு வழக்கு ஒழிந்ததும் தொண்பது என்று 90ஐக் குறித்த பெயர் முதலிடத்தை நோக்கி நகர்ந்து 9ஐக் குறிக்க புழக்கத்தில் அமைந்துவிட்டது. தொண்பது என்பது ஒன்பது என்று சொல்வழக்கில் வந்துவிட்டது.

அதேபோல் தொண்ணூறு என்று 900 என்பதைக் குறித்த பெயர் பத்தாம் இடத்தை நோக்கி நகர்ந்து 90ஐக் குறிக்க புழக்கத்தில் வந்துவிட்டது.

9000 என்பதைக் குறித்த தொள்ளாயிரம் என்பது 900 என்பதைக் குறிக்க நகர்ந்தது.

9000 என்பது எப்படிக் குறிக்கப்படும். அமைந்துவிட்ட வழக்கத்தின்படி?

ஒன்பது ஆயிரம் என்று குறிக்கப்படல் வேண்டும். நூற்பாவின்படி இன் ஒன்று சேர்ந்து ஒன்பதின் ஆயிரம் = ஒன்பதினாயிரம் என்று ஆனது.

இது பதிப்பாசிரியரான திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டுகின்ற யூகம். ஆனால் சிந்தனைக்குரிய யூகம்.

ஏன் சிந்தனைக்குரியது என்பது ஒன்பது என்னும் சொல்லுக்கான நூற்பாவையும், அதன் உரையையும் காணும் போது புலப்படும்.

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.
(எழுத்து 445)

இந்த நூற்பா எண்ணுப் பெயரொடு பத்து சேருங்கால் எப்படி வரும் என்று விவரிக்கும் இடத்தில் ஒன்பதோடு பத்து சேரும் போது என்ன ஆகும் என்று நூற்பா விவரிக்கிறது.

ஒன்பது என்னும் சொல்லில் உள்ள ஒகரத்தின் முன் தகர ஒற்று தோன்றி நிற்கும். ஏற்கனவே இருக்கும் ன் என்னும் ஒற்று ணகாரமாய் இரட்டிக்கும். இப்பொழுது ஒன் என்பது தொண் என்று ஆயிற்றா? வருமொழியாகிய பஃது என்பதில் உள்ள பகரமும் ஆய்தமும் கெட்டுப் போக ஊகாரக் கிளவி நிற்றலை ஆசிரியன் விரும்பும். அப்பொழுது தொண்+ஊ ஆயிற்று.

பஃது என்பதில் ப, ஃ இரண்டும் போய்விட்டது. மிச்சம் து என்பதுதான். இந்த து என்பதில் த்+உ இதில் உள்ள உகரம் கெடாது நிற்கும். தகரம் றகரமாக ஆகிவிடும். தொண்+ஊ+ற்+உ = தொண்ணூறு என்ற சொல் கிடைக்கும்.

உள்ளபடியே பார்த்தால் தம் காலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்ட தொண்ணூறு என்னும் சொல்லை நூற்பா விவரிக்க முயற்சி செய்கிறதேவொழிய சொல்லுக்கான நியாயமோ, விளக்கமோ, அமைதியோ இருப்பதாகத் தோன்றுகிறதா?

http://www.tamilvu.org/slet/l0100/l0100noo.jsp?song_no=445&head_id=1

இந்த நூற்பாவிற்கு அடிக்குறிப்பில் திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டியிருக்கும் யூகக் கருத்தைத்தான் முதலில் விவரித்தேன். இந்த யூகத்திற்குத் தொண்டு என்பது 9ஐக் குறிக்கும் என்று தொல்காப்பியரும், மலைபடுகடாத்துப் புலவரும் காட்டும் சான்று பக்க பலம். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற வழக்குகள் கெடாமல் வந்துள்ளமை ஒரு பலம். ஆனால் ஒரு கேள்வி இந்த யூகத்திலும் எழாமல் இல்லை. என்ன? யூகம் கூறும் பண்டைய முறையில் 90 என்பதைக் குறித்த தொண்பது வழக்கில் மாறி தொண்டு என்னும் சொல் பொருள் வழக்கு வீழ, ஒன்பது என்று ஆகிவிட்டது என்றால், ஏன் தொண்ணூறு என்பதும், தொள்ளாயிரம் என்பதும் தகரம் மறைந்துபடாமல் அப்படியே வந்தது என்னும் கேள்வியும் எழும். ஆனால் இந்த யூகம் கண்மூடித்தனமான யூகம் இல்லை என்பதும், சிந்தனைக்குரியது என்பதும் சரிதானே?

ஒன்பது என்பது பத்தில் ஒன்று குறைந்தது என்பதைச் சுட்டும் சொல் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. எனில் தொண்ணூறு என்பது நூறில் எவ்வளவு குறைந்தது என்பதைக் காட்டுகிறது? தொள்ளாயிரம்?

ஆக மொத்தம் 9க்கு உரிய பழம் பெயரான தொண்டு என்பதன் சிறப்பு அரிய/அறிய சிறப்பன்றோ!

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*


DEV RAJ

unread,
Aug 16, 2012, 1:22:57 AM8/16/12
to mint...@googlegroups.com
On Wednesday, 15 August 2012 11:40:47 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>>>> ஒன்பது என்னும் சொல்லில் உள்ள ஒகரத்தின் முன் தகர ஒற்று தோன்றி நிற்கும்.
ஏற்கனவே இருக்கும் ன் என்னும் ஒற்று ணகாரமாய் இரட்டிக்கும். இப்பொழுது ஒன்

என்பது தொண் என்று ஆயிற்றா? வருமொழியாகிய பஃது என்பதில் உள்ள பகரமும் ஆய்தமும்
கெட்டுப் போக ஊகாரக் கிளவி நிற்றலை ஆசிரியன் விரும்பும். அப்பொழுது தொண்+ஊ
ஆயிற்று.

பஃது என்பதில் ப, ஃ இரண்டும் போய்விட்டது. மிச்சம் து என்பதுதான். இந்த து
என்பதில் த்+உ இதில் உள்ள உகரம் கெடாது நிற்கும். தகரம் றகரமாக ஆகிவிடும்.
தொண்+ஊ+ற்+உ = தொண்ணூறு என்ற சொல் கிடைக்கும். <<<<<


ஒன்பது + பஃது

’ஒன்’ ‘தொண்’ ஆகிவிட்டது.
சரி சார்,

’பஃது’ என்பதில் பகரமும் ஆய்தமும் கெட்டுப்போக ஊகாரக் கிளவி
எஞ்சும் என்பதிலும் தெளிவு ஏற்படவில்லை; சரி, அதை
அப்படியே ஏற்போம். 

[“ஆசிரியன் விரும்பும் “ ??!! இலக்கணம் என்ன, தனி நபர் விருப்பமா ?]

இடைப்பட்ட ‘பது’ என்ன ஆயிற்று ? இலக்கணத்தைக் காட்டிலும்
எண்ணற்ற சொற்சிதைவே இதில் வெளிப்படையாகத் தெரிகிறது.

டாக்டர் ராஜம் கருதும்படியே இது சற்றும் பொருத்தமாக இல்லை.

எண்ணுப்பெயர்களில் உள்ள சங்கதச் சாய்வையும் எடுத்துக்காட்டியுள்ளீர்கள்;
கணேசனாரும் இதை மற்றோர் இழையில் சொல்லியுள்ளார்;
திருத்தக்க தேவர் காலத்தில் வழக்கம் மாறுபட்டதையும்
சுட்டியுள்ளார்.

திரு.தேவநேயர் இது குறித்து எழுதியுள்ளாரா, தெரியவில்லை


தேவ்

N. Kannan

unread,
Aug 16, 2012, 3:31:18 AM8/16/12
to mint...@googlegroups.com
2012/8/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> தலையிட்ட -- கூட்டிய
>
> மூன்று தலையிட்ட முப்பது = 30+3
> இரண்டு தலையிட்ட இருபஃது = 20+2
>
> வடமொழியிலும்
>

> த்வா விம்சதி = 22, சதுர் விமசதி என்று கூட்டும் கடையெண்ணை முதலில் சொல்லி முழு
> எண்ணைப் பின்பு கூறுதல் ஒப்பு நோக்கத்தக்கது.
>


ஆச்சர்யமான சேதி ரங்கன்! இம்மாதிரி எண்ணுதல் உலகில் இரண்டு மொழிகளிலேதான்
உள்ளது (கற்றது கைமண்!) ஒன்று சங்கதம் மற்றது ஜெர்மன் மொழி. தமிழிலும்
இப்படியான முறை இருந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இரண்டு தலையிட்ட இருபஃது = 2 + 20 = 22
zwei und zwanzig = 2 + 20 = 22
த்வா விம்சதி = 2 + 20 = 22

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Aug 20, 2012, 4:26:11 AM8/20/12
to thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
நீங்க லேசுப்பட்டவர் இல்லைனு புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

2012/8/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இலேசு பட்டவரா நீங்க?


எனவே நச்சினார்க்கினியர் எழுதுகிறார் --

”இனி முன்னரென்றதனானே  மாவிற்கும்  இவ்வாறே  கொள்க. மானை
மாவினை  மானொடு  மாவினொடு  மாற்கு  மாவிற்கு என ஒட்டுக. ஆகார
ஈறென்னாது   ஆவினிறுதியென்று    ஓதினமையின்    மா   இலேசினாற்
கொள்ளப்பட்டது.”

உங்களை நான் சொல்லலை. ஆனால் நான் உங்களைச் சொன்னதாகப் பொருள் கொண்டு முதலில் முறைச்சீங்களே அப்ப நீங்க இலேசினால் தானே அப்படி முறைச்சீங்க?

அப்படீன்னா இலேசு பட்டவரா நீங்க?

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

360.gif

Oru Arizonan

unread,
Oct 7, 2014, 4:30:18 PM10/7/14
to mint...@googlegroups.com
சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.

2014-10-07 11:30 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
தமிழ் எழுத்து, உருவா, வடிவா, ஓசையா...பழம் உரையாசிரியர்கள் 
தொல்காப்பியரில் கண்ட எழுத்தினுள் ஒளிந்திருக்கும் தத்துவங்கள் 
பற்றிய ஒரு சுவையான கட்டுரை -- படிக்க வேண்டுமா? 



***


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Oct 8, 2014, 12:01:16 AM10/8/14
to mint...@googlegroups.com
நச்சினார்க்கினியர் உரையில் காணக் கூடிய ஓர் அருங்கருத்து script பற்றியது. அந்தக் காலத்தில் எந்த வடிவத்தில் எழுதப்பட்டாலும் படிக்கக் கூடிய ஒரு மாஸ்டர் கீ இருந்திருக்கிறது என்பது உரையில் புலனாகிறது. அந்தச் சாவி ஜியோமிதி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை வெளிப்படையாக எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். வட்டம், சதுரம் முதலிய 32 வடிவங்களில் ஒன்றால் அமையும் என்கிறார். 

அப்படியென்றால் 
Were the various scripts generated by recursive projections of any of the 32 basic geometric shapes? Do we have that key now, if at all there was any such key in the first place? 


வெகுநாளாக மனத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சிந்தனை.
அரங்கனார் நுட்பம் உணர்ந்து தெளிவு தந்துவிட்டார்.
ஜைந நூல்கள் 70க்கும் மேற்பட்ட லிபிகள் இருந்ததாகச்
சொல்கின்றன; நாடு தாங்குமா ? ஒரு தாலுகாவுக்கு
ஒரு லிபி என இருந்திருக்குமோ :))
ஒரு எழுத்துரு மற்றப் பிராந்தியத்தினருக்கு எப்படிப் பிடிபடும் ? 
அரங்கனார் சொல்வதுதான் அப்ளை ஆகிறது.
அரங்கனாருக்கு நன்றி.

மாஸ்டர் கீ யாரிடமாவது இருக்கிறதா ?
வழக்கம்போல் வெளிநாட்டுக்கு வாரிக்
கொடுத்து விட்டோமோ ?


தேவ்
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages