Groups
Groups

சிலப்பதிகாரம் - சில ஐயங்கள்

485 views
Skip to first unread message

mukunthan

unread,
Jul 6, 2016, 11:40:49 AM7/6/16
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன்.  மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...

1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557
இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..

கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

2.
பூங்கண் இயக்கிக்குப் (சமண தெய்வம்??) பான்மடை கொடுத்த மாதரி பின்பு ஆய்ச்சியர் குரவையில் மாயவனையும் ஆயவனையும் போற்றிப் பாடுகிறார்... அக்காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று எல்லாத்தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ?

3. கொலைக்களக் காதை (18)
சாவக நோன்பிக ளடிக ளாதலின்

எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். 
சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா ?
(தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல)

ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994

இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ?

இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

4. இது வசந்தமாலை பற்றியது...

கடலாடு காதை (171)
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்..

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=324

கோவலன் மாதவியுடன் இருக்கும்போது , வசந்தமாலை ஏன் வருந்தி நின்றாள் ?

5.
மனையறம்படுத்த காதை
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.
 (உரை : அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்)
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=110
(
வெண்பா இளங்கோவடிகளால் பாடப்படவில்லையென்பது ஒருசாரார் கருத்து. )

இங்கே நாமந் தொலையாத இன்பம் (அழகு கெடாத இன்பம் ) என ஏன் கூறப்படுகின்றது ? 

6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)

இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?

இதற்கும்
வேட்டுவ வரி (47)
 கொங்கச் செல்வி குடமலை யாட்டி

இருக்கும் தொடர்பு இருக்குமா?

நன்றி,
முகுந்தன்

Prakash Sugumaran

unread,
Jul 6, 2016, 3:28:58 PM7/6/16
to mintamil
ஜெமோ போன்ற சில அதிபுத்திசாலிகளின் வார்த்தை புரிதல்களை இடைச்செருகலாக சிந்தையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

("பாய்கலை ஏறிய பாவை" என்பதை "பாயும் கலை அறிந்த பெண்" என்றெல்லாம் விவரிப்பவர் பலருண்டு; பாய் என்பதற்கு படுக்கை என்றும் பொருள் உள்ளது)

பாண்டிய வழிபோக்கின் நீதிமுறையில் பாவை மன்றம், பாவை கோட்டம், பாவை தெய்வம் என்றெல்லாம் சிலம்பு விரிவாக செப்பும். அதன் வழி சென்றால் எல்லா கேள்விகளுக்கும் விடை எளிதில் கிடைக்கும்.

புறஞ்சேரி, மூதூர் எல்லாம் வேறு வேறு என்பதை விளம்பும் சிலம்பின் ஒலியில், இயக்கியும், இசக்கியும் யார் யார் என்ற புரிதல் வேண்டும்.

ஆயர்குல முதுமகள் மாதரி, கவுந்தி போன்ற கிழவிக்கு பால் சோறு கொடுத்து மரியாதை செய்வதையும், ஆயர்குல பெண்களின் கனவு நாயகன், ஆடு மேயும் ஆயவன், மாயம் புரி மாயோனை சிலாகிப்பதையும் ஒன்று சேர்த்து குழம்பி, குழப்பிக் கொள்ளவே கூடாது.

தவிர, "பூங்கண் இயக்கி" கவுந்தியை குறிக்குமோ ? உள்ளத்தாலும், உடலாலும், மேலணிந்த உடையாலும் நிலைகுலைந்து நின்ற போதும் கண்களில் ஆக்கமும், ஊக்கமும், இயக்கமும் நிறைந்த இளவயது பெண்ணான கண்ணகியையும் குறிக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Mukunthan Pathmanesan

unread,
Jul 7, 2016, 4:31:51 AM7/7/16
to mint...@googlegroups.com
​​
நன்றி ப்ரகாஷ்

> ஆயர்குல முதுமகள் மாதரி, கவுந்தி போன்ற கிழவிக்கு பால் சோறு கொடுத்து மரியாதை செய்வதையும்,
கவுந்திக்குப் பாற்சோறு கொடுத்ததாக வருகிறதா?
 பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் - பான்மடை  கொடுத்துத் திரும்பிப்போகும் போதுதான் கவுந்தியைக் கண்டதாக வருகின்றதே?

> கவுந்தி போன்ற கிழவிக்கு
கவுந்தி வயது முதிர்ந்தவர் என்று எங்கேனும் வருகின்றதா?

நன்றி
முகுந்தன்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:36:21 PM7/9/16
to மின்தமிழ், vallamai
On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன்.  மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...

1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557
இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..

கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர். சிங்க வாகனத்துடன்
கொற்றவையை சமணக் குகைகளில் நிறையப் பார்க்கலாம்.
எல்லோரா சமணக் குகையில் கொற்றவை,
etc. etc.,

சமணக் கொற்றவை - நளினி பல்பீர் கட்டுரை
 
ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994

இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ?

இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

பார்க்கவேண்டும். நீறிடாமை காரணமோ?
கோவலன் - கண்ணகி பெயர்கள் கிருஷ்ணன் - லட்சுமி பெயர்கள் என மதுராபதி தெய்வம் சொல்லும் கதையில் இருக்கிறது.

6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)

இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?

இதற்கும்
வேட்டுவ வரி (47)
 கொங்கச் செல்வி குடமலை யாட்டி

இருக்கும் தொடர்பு இருக்குமா?

நல்ல வரிகளைக் காட்டியுள்ளீர்கள். கண்ணகை மற்ற நாட்டாரால் வழிபாடு பெற்றாலும் முதலில்
கொண்டாடியவர்கள் கொங்கர்களே. அதைப் பதிவு செய்கிறார் அடிகள்.

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்

[...]
சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா னறிக.

கொங்குத் தாராபுரத்தில் பரம்பரைக் கவிராயர்கள் உண்டு - மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் பாண்டிநாட்டில் இருப்பது போல.
சங்கரண்டாம்பாளையம் ஆதீனப்புலவர் கருந்தும்பிப் புலவர். கருந்தும்பிப் புலவர் மகன் பழனிச்சாமிப் புலவர் “கொங்கச் செல்வி”
என விரிவாக நூல் எழுதியுள்ளார். கிடைத்தால் படித்துப்பாருங்கள்.

ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி - என்பது லக்ஷ்மியின் அவதாரமாக விளங்கும் கர்ணகியை (கர்ணகீ = தாமரைப் பொகுட்டு).
இதை விளக்கி மு. ராகவையங்கார் ஒரு நூற்றாண்டு முன்னர் நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.

கொங்கர்களுக்கு இன்றும் செல்லாண்டி அம்மன் முக்கியக் குலதெய்வம். இவள்தான் கண்ணகி என்பர் கொங்குப் புலவர்கள். உ-ம்: புலவர் அ,மு. குழந்தை,
கருந்தும்பிப்புலவர், மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், ....

புகார் நீங்கி மதுரை செல்லும்போது கொங்குநாட்டுக்கு வந்ததை இளங்கோ அடிகள் பாடுகிறார். நேற்றைய மடலில், தேவநேயப் பாவாணர்
“வடபெருங்கோடு” என்று இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் கூறுவது மேற்குத் தொடர்ச்சி மலையே என எழுதியிருப்பதை
முனைவர் சிங்கநெஞ்சன் அவர்களுக்கு தெரிவித்தேன். தென்பெருங்கோடு என காவிரி தென்கரை குறிப்பதில்லை. படித்துப்பாருங்கள்.
கடைச்சங்க இலக்கியமான சிலம்பில் ‘வடபெருங்கோடு’ என்பதற்கு முன்னரே குறுங்கோழியூர் கிழார், மாங்குடி மருதனார் தமிழ்நாட்டு
எல்லைகளைக் குறிக்க அதேபொருளில் ‘வடபெருங்கல்’ என்கிறார். வட பெரும் கோடு (அ) கல் = Western Ghats.
மூன்று நாடுகளுக்கும் - சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு - பாத யாத்திரை செல்கின்றனர் கோவலன் - கண்ணகி தம்பதியர்கள்.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(புறநானூறு,17:1-2)

(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)

புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(மதுரைக்காஞ்சி:70-71

வடபெருங்கோடு/கல் - ஒரு stock phrase. தமிழ்நாட்டு எல்லைகளைக் குறிக்கப் புலவர்கள் கையாள்வது.

வஞ்சி (இன்றைய கரூர்) தான் சேரர் தலைநகர் என தொல்லியல் ஆய்வுகளும், ரா. ராகவையங்கார் சேரர் வஞ்சி ஆய்வு நூலும் காட்டிவிட்டன.
தன் தலைநகருக்கும், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிக்கும் வந்து “கொங்கச் செல்வி, குடமலையாட்டி” ஆகப்போகிற கண்ணகிக்கு அந்த
மலைநாட்டைக் காட்டுகிறார் காவிய ஆசான் என்க. 

இது எதனால் தெரிகிறது என்று ஆராய்வதற்கு காவதம் (= காவ்தம் > காதம்) எத்தனை தூரம் என ஆராய்ந்தால் புரிந்துகொள்ளலாம்.
கண்ணகி இன்னும் மதுரை எவ்வளவு தூரம் எனக் கேட்டபோது, மெல்ல நகைத்து 6, 5 காதம் என்கிறான் கோவலன். அதாவது 30 காதம்
என்றால் அஞ்சுவாள் என்று பிரித்து அஞ்சு ஆறு காதம் என்கிறான். காதம் சுமார் 10 மைல் என்கிறது சென்னைப் பேரகராதி. ஆனால்
காவதம்/காதம் 12 - 14 மைல் என்பது கல்வெட்டுக்களால் வெளியாகும் செய்தி. 10 - 12 - 14ல் ஒரு சராசரியாய் 12 மைல் என்று எடுத்தால்
கூட 30 காதம் 360 மைல் என்றாகும். பூம்புகாரும், மதுரையும் 360 மைலில் இல்லை. அது மிக அதிகம். அந்த அதிக (extra) மைல்களைக் கொண்டு
வஞ்சியும், வடபெருங்கோடும் (ஸஹ்யாத்ரி) காட்டி மதுரைக்கு அழைத்துச் சென்றான் கோவலன் எனப் புரிந்துகொள்ளலாம்.

காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்
Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.
ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.

See B. L. Rice, 1897, pg. 548, 

Mysore, by districts

"Gaavada or Gau = a distance of about 12 miles"

Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles

Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar...

A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar...

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:40:22 PM7/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Singanenjam Sambandam
காவதம் (=காதம்) 12 மைல் என்றால், நிச்சயம் கொங்குநாட்டுக்கு புகாரிலிருந்து வந்து அங்கிருந்து
‘கொங்கச் செல்வி’ கண்ணகி மதுரை சென்றிருக்கவேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 9:54:19 AM7/10/16
to மின்தமிழ்

On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன்.  மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...

அன்பின் முகுந்தன்,

சிலம்பில் உங்கள் ஐயங்கள் எனப் பார்த்ததும் வயதானவராக இருப்பார் என நினைத்தேன். இப்பொழுது தான் கண்டறிந்தேன்:

தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிலம்பு பக்கமெல்லாம் போவது குறைவாக இருக்கும் காலகட்டமிது.
பேராதனைப் பல்கலையில் படித்து கொழும்ம்பில் வாழும் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

பேராதனையில் பேரா. ஆ. வேலுப்பிள்ளை எனக்கு பல பத்தாண்டுகளாக நண்பராக விளங்கினவர்.
மொழியியல், கல்வெட்டு, இலங்கையில் பௌத்தம், ... கரைகண்டவர். அண்மையில் தான் மறைந்தார் :(
அவரைப் பற்றி எழுதக் கேட்டதன் விளைவு, அவர் அனுப்பிய ஒளிப்படங்கள்,

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

Mukunthan Pathmanesan

unread,
Jul 10, 2016, 10:52:45 AM7/10/16
to mint...@googlegroups.com
​நன்றி கணேசன் ஐயா,

>
​கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர்.
சமணக் கொற்றவைக்கும் மானுக்கும் தொடர்புள்ளதா?

புறஞ்சேரியிறுத்த காதை
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம் (105)
................
பாய்கலைப் பாவை பாடற் பாணி (111)​

இங்கேயிம் கோவலன் பாணருடன் சேர்ந்து பாய்கலைப் பாவைப் பாடலை யாழில் இசைக்கின்றார்..

மேலும் வேட்டுவவரியில் கூறப்படும் பலி கேட்கும் கொற்றவையும் கோவலன் வணங்கும் கொற்றவையும் பாய்கலைப் பாவை எனத்தான் அழைக்கப்படுகிறாள்..

>நீறிடாமை காரணமோ?
இருக்கலாம்.. நீறிடாமையால் மதம் கண்டிருக்கலாம்...

>வடபெருங்கோடு
நீங்கள் கூறுவதுபோல வடபெருங்கோடு என்பது மேற்குத்தொடர்ச்சி மலையாயின்,

பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையி னெயிற்புறம் போகித்

தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி் வாயிற் கடைமுகங் கழிந்து

குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்

சிவப்பு நிறத்தால் காட்டப்படுவது கண்ணகி-கோவலன் செல்வழி அன்று, காவிரியின் பாதை எனக்கூறுகின்றீர்களா?

>அந்த அதிக (extra) மைல்களைக் கொண்டு
>வஞ்சியும், வடபெருங்கோடும் (ஸஹ்யாத்ரி) காட்டி மதுரைக்கு >அழைத்துச் சென்றான் கோவலன் எனப் புரிந்துகொள்ளலாம்.
புகார் தாண்டமுதலே வெயிலால் மிக வருந்திய கண்ணகியைக் கோவலன் வஞ்சிக்குக் கொண்டுசென்றிருப்பார் என நினைக்கவில்லை...

>நிச்சயம் கொங்குநாட்டுக்கு புகாரிலிருந்து வந்து அங்கிருந்து
>‘கொங்கச் செல்வி’ கண்ணகி மதுரை சென்றிருக்கவேண்டும்.

மற்றும் சீரங்கம் தாண்டி மேற்குத்திசை சென்றதாகக் குறிப்புகள் இல்லை என நினைக்கின்றேன்...

>வஞ்சி (இன்றைய கரூர்) தான் சேரர் தலைநகர் என
அறுதியிட்டுக் கூறமுடியுமா?
(இதையும் பார்க்கலாம், எனக்கு உறுதியாகத் தெரியாது : http://valavu.blogspot.com/2010/05/8.html)

அநேகமாக அக்காலத்தில் கரூர் மாந்தரஞ்சேரலின் கீழ் இருந்திருக்கவேண்டும்.  (கட்டுரை காதையில் வரும் பராசரனுக்குக் கொடைகொடுத்தவன் ? )

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

நன்றி,
முகுந்தன்​

--

Singanenjam Sambandam

unread,
Jul 10, 2016, 11:23:06 AM7/10/16
to mint...@googlegroups.com
வணக்கம் முகுந்தன், நீங்கள் சிகப்பு வண்ணத்தில் குறிப்பிட்டிருப்பது கோவலன் கண்ணகி கவுந்தி அடிகள் குடிலுக்கு சென்ற பாதை. அதன் பின் மூவரும் காவேரி ஓரமாகவே  திருவரங்கம் வரை வருவதை அடிகள் வெகு அழகாக நேர்முக வர்ணனை போல் எழுதி யுள்ளார். நீங்கள் சொல்வதுபோல் திருவரங்கத்திற்கு மேற்கே அவர்கள் சென்றதாக குறிப்பு எதுவும் இல்லை. திருவரங்கம் நெருங்கிய பின் அவர்களுக்கு திருச்சி மலை தெரிந்திருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை அவர்கள் வழியில்   எங்கிருந்தும் தெரியாது. புகாருக்கும் திருவரங்கத்திற்கும் இடையே கச்ச மங்களம் வரை (கல்லணைக்குக்  கிழக்கே).படிவப் பாறைகளே உள. மலைகள் ஏதும் இல்லை.

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 10, 2016, 12:13:23 PM7/10/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
அன்பின் முகுந்தன்,

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
இதனைக் கருத்தில் கொண்டுதான் அடியார்க்குநல்லாரை விட்டுவிட்டுச் சரியான
பொருளை பாவாணர் கூறியுள்ளார்: வடபெருங்கோடு = மேற்குத் தொடர்ச்சி மலை.

சிங்கநெஞ்சன் ஐயா கொள்ளும் கோடு என்றால் நீர்க்கரை என்பது இளங்கோ அடிகள்
கொண்ட பொருளில்லை. ஏனெனில் காவிரி ஆற்றைப் பாருங்கள். இரண்டு கரைகளும்
ஒரே உயரந்தான். வேறுபாடு இல்லை. மேலும் சற்றே உயர்ந்த கரை என்றால்
நிவப்பு, நிவந்த கரை எனச் சொல்லியிருப்பார் அடிகள். அவ்வாறு காவிரிக் கரை இருமருங்கிலும்
இல்லை. 

எனவே தான், வடபெருங் கோடு = ஸ்ஹயாத்ரி மலைத் தொடர். தமிழ் தேசிய காப்பியம்
எழுதிய இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் மூன்று நாடுகளையும் காப்பியத்
தலைவன் தலைவியை நடத்திக் காட்டுகிறார். ஒரு காதம் என்பது ஒரு நாள் நடை.
ஓராண் நடப்பது. நடந்து பழக்கம் இல்லாத கண்ணகியும் கூட வருவதால், ஒரு 45 நாள் கூட
எழுத்திருக்கும் 30 காதம் கடக்க. பொறுமையாக 3 நாடும் கண்டிருப்பர்.

ஒரு புத்த பிட்சுணி காகந்தி (புகார்) பட்டினத்தில் இருந்து வடமதுரையில் கி.பி. 2-ஆம்
நூற்றாண்டில் கொடுத்த தானக் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதுபோல, சமணக் குரத்தி
கவுந்தி அடிகளைப் பற்றி காவியம் முழுக்கப் பேசுகிறார் அடிகள். 
“கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்று போற்றுவது சமண நாடுகள் ஆகிய கன்னாடு (இன்றைய கர்னாடகம்),
கொங்கு என்ன பொருள் என விரிவாகப் பார்ப்போம். தமிழ், கன்னட, சமண அறிஞர் (ஜெர்மனியில்
பேரா. Zydenbos) கவுந்தி  அடிகள் பற்றிய கட்டுரை படித்தேன். 

பொழில் என்று அடிகள் வடபெருங்கோட்டில் சொல்வது மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய
ஒரு டெக்னிக்கல் வார்த்தை. அதுபற்றியும் பேசலாம். தெய்வம் என்று கண்ணகியை முதலில்
அழைத்தது கவுந்தி அடிகள் தான் என்பது அறிவீர்கள். அதற்கு சமண சமயப் பொருள் என்ன?
- இதைக் காட்டத் தான் கவுந்தி அடிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி - கோவலனை 30 காதம்
பிரயாணம் செய்யவைக்கிறார். 
 
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.
அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.
அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்
அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,
சுற்றிவர மலைகள் அகலின் விள்ம்பாகவும் இலங்குகிற நாடு கொங்குநாடு.
பார்க்க: புலவர் அ. மு. குழந்தை, கொங்குநாட்டு வரலாறு.
உம்பர் என்றால் உச்சி, உயரம். அகல் (விளக்கு) போல உள்ள
கொங்குநாட்டின் உச்சியாகிய மேற்குத்தொடர்ச்சி மலைகளில்
இருந்து, புருஷனைக் வினாவும் கண்ணகிக்கு சிரித்துக்கொண்டே
சொல்கிறான் 30 காதம் தான் என. அதாவது மதுரைக்கு வடக்கே ~360 மைல் 
தூரத்தில் கன்னாட்டுப் பகுதியில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.

இந்த இடத்திலே “நம்” என்பது “உன்” என்ற கொங்கு வழக்கை ஆள்கிறார்
அடிகள். அவரே வஞ்சி ஊரர். பஸ் ஸ்டாண்டில் பார்த்து, “நம்ம வீட்டுகு போலாங்களா?”
என்றால், உங்கல் வீட்டுக்கு போகலாமா? - எனப் பொருள். 
இளங்கோ அடிகள் பின் வருவதை முன்னர் சொல்வார்: கவவுக்கை நெகிழாமல் ... முகூர்த்தத்தின்
போது சொல்கிறார். பின்னர் “கொங்கச் செல்வி, குடமலையாட்டி” ஆவதை துர்க்கா தேவி
கோட்டத்தில் கவுந்தி அடிகளுடன் தங்கி செல்கையில் “இவளோ! கொங்கச் செல்வி, குடமலையாட்டி!”
- அதாவது சமண சமயத்தின் படி கண்ணகி தெய்வம் என்றால் என்ன பொருள்? பார்ப்போம்.
அகல் நாட்டு உம்பர் ஆறைங் (30) காதம் - அதாவது, கொங்கு நாட்டு உச்சியிலே 30 காதம் (ஒரு காதம் = சராசரியாக, 12 மைல்).
 - மதுரைக்கு வடக்கே ஸஹ்யாத்திரி (வடபெருங்கோட்டில்) 360 மைல் தொலைவில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.
சமண தேசத்தில் - இன்றும் கர்நாடகாவில் சமணம் சிறந்து வாழ்கிறது. மௌர்ய சக்ரவர்த்திகள் அரசாட்சியை
மக்களிடம் கொடுத்தபின்னர் வடக்கிருந்து உயிர்துறக்க வந்த நாடு கன்னாடு தான். கன்னடிய இலக்கியம் முதல் நூற்றாண்டுகளில்
எல்லாம் சமணம் தான். கவுந்தி/கந்தி, காவதம்/காதம் - கன்னட தேச சொற்கள். அங்கே தான் அடிகள் கூறும்
காவதம்/காதம் நீட்டலளவை நீளம் நமக்குப் புலனாகிறது. விபரங்கள் கொடுத்துளேன்.

காவிரிக்கு வடகரை மலைபோல உயரமானது எனவே கோடு. தென்கரை தாழ்ந்துள்ளது எனவே கரை என்றெல்லாம்
சொல்லமுடியாது. காவிரிக்கரையை திருச்சி வந்து பாருங்கள். இரண்டு கரையும் ஒரே உசரம்தான்.

பாவாணர் சரியாக விளக்கிவிட்டார்:

குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)

விரிவாகப் பின்னர் பார்ப்போம்,

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:54:03 PM7/10/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?

ஏற்கனவே அரைத்த மாவுதான். இனியும் அரைக்க விருப்பம் இல்லை.

10 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:00:04 PM7/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sunday, July 10, 2016 at 9:54:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?

கண்ணகம் என்னும் தமிழ்ச்சொல் கர்ணகம் என்றானது என ஒத்துக்கொண்டேனே. 

கர்ணகீ > கண்ணகி, வர்ணம் > வண்ணம் போல.

கண்ணன் இருக்கிறான். அவன் புகழ் அகிலமறியும். எனவே, for disambiguation, நூற்றுவர் கன்னர் என்கிறார்.
க்ருஷ்ண > கண்ஹ (கண்ணையன்) - ப்ராகிருதம் > கண்ணன். இது பரவலாக இருப்பதால்
குந்திமகன் கன்னன், சதகன்னர்

தேமொழி

unread,
Jul 10, 2016, 1:08:57 PM7/10/16
to மின்தமிழ்
///
வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
///

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது  stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லை

இங்கு  வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.

குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து

கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ; 
நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.

காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது

என் வழியில் பொருள் கொண்டால்....

காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....

கவுந்தியின்  பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.

தெற்கில் நின்று பார்த்தால்  இதுதான்  வட பெருங் கோடு   

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:21:45 PM7/10/16
to மின்தமிழ், vallamai

On Sunday, July 10, 2016 at 10:08:57 AM UTC-7, தேமொழி wrote:

ஆனால், பிரச்சினை என்னவென்றால் திருச்சியில் இருந்து மதுரை 30 காதம் தொலைவில் இல்லையே.

காதம் = 12 மைல். முனைவர் காளைராசன் ஐயா காட்டும் பூவணப் புராணம் 12.5 மைல் என்கிறது காதத்தை.

மதுரைக்கு 360 மைல் வடக்கே சமண நாடாகிய கருனாடகத்து மேற்குத் தொடர்ச்சி மலை
இளங்கோ அடிகள் குறிக்கும் தூரத்துக்குப் பொருந்துகிறது.

பொழில் என்ற சொல்லின் அர்த்தம் என்ன? ஏன் கவுந்தி அடிகள் பார்வையில் தெய்வம் கண்ணகி?
கவுந்தி அடிகள் தான் கண்ணகியை தெய்வம் என முதலில் அடையாளம் காட்டினவர்.
ஏன் இளங்கோ அடிகள் 
“இவளோ,
கொங்கச் செல்வி! குடமலையாட்டி!”
என முதலில் வைத்துப் பாடுகிறார்? இந்நாடுகளில் சமணம் சிறப்பா? 

இக் கேள்விகள், பாவாணர் கூறும் வடபெருங்கோடு - மேற்குத்தொடர்ச்சி மலை என்பதாக விடைகள் தருகின்றன.

வட கரை உயரத்தில், தென் கரை கீழே என்பதெல்லாம் காவிரியைப் பார்த்தால் பொருந்துவதில்லை.

பாவும் உரையும் பருந்தும் நிழலும் எனப் பொருந்தவேண்டும் என்பார்கள். அதற்கு, வடபெருங்கோடு = மேற்குத் தொடர்ச்சி மலையே
இருக்கின்ற சான்றாதாரங்களால் உறூதியாகிறது.

30 காதம் - 360 மைல்கள் - என்பதால், இளங்கோ அடிகள் தெளிவுபடுத்திவிடுகிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:24:13 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com

தெற்கில் நின்று பார்த்தால்  இதுதான்  வட பெருங் கோடு   

திருச்சி மலை - சிறு குன்று. வட பெருங்கோடு என்று யாரும் கூறமாட்டார். இளங்கோ அடிகள் அவ்வாறு சொல்வாரா? மாட்டார். 

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 10, 2016, 1:27:45 PM7/10/16
to மின்தமிழ்

On Sunday, July 10, 2016 at 10:21:45 AM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, July 10, 2016 at 10:08:57 AM UTC-7, தேமொழி wrote:
///
வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
///

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது  stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லை

இங்கு  வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.

குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து

கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ; 
நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.

காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது

என் வழியில் பொருள் கொண்டால்....

காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....

கவுந்தியின்  பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால் திருச்சியில் இருந்து மதுரை 30 காதம் தொலைவில் இல்லையே.

காதம் = 12 மைல். முனைவர் காளைராசன் ஐயா காட்டும் பூவணப் புராணம் 12.5 மைல் என்கிறது காதத்தை.

மதுரைக்கு 360 மைல் வடக்கே சமண நாடாகிய கருனாடகத்து மேற்குத் தொடர்ச்சி மலை
இளங்கோ அடிகள் குறிக்கும் தூரத்துக்குப் பொருந்துகிறது.

மதுரைக்கு வடக்கே இருக்கும்  திருச்சிராப்பள்ளி என்ற பெயரிலேயே பள்ளி இருக்கிறது

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:40:35 PM7/10/16
to மின்தமிழ், vallamai

On Sunday, July 10, 2016 at 10:27:45 AM UTC-7, தேமொழி wrote:

மதுரைக்கு வடக்கே இருக்கும்  திருச்சிராப்பள்ளி என்ற பெயரிலேயே பள்ளி இருக்கிறது

ஆம். அதன் பழைய பெயர் திருச் சினப் பள்ளி. சினன் = ஜிநன். 
மக்கள் பேச்சுவழக்கில் திரு-சினப்பள்ளியை திரு-சினாப்பள்ளி என அழைத்தனர்.
ஆங்கிலேயர் அப்படியே பதிவு செய்துள்ளனர். இன்றும் Trichinopoly திரிசினாப்பள்ளி தான்

சைவர்கள் (உ-ம்: சம்பந்தர்) சினப்பள்ளியில் உள்ள ஜிநனை (சினனை) கழற்றிவிட்டுவிட்டு
சிராப்பள்ளி என்று ஆக்கினர். த்ரிசிரஸ் என்னும் அரக்கர்கள் என்னும் புராணங்களை புனைந்தனர்.

வேந்தன் ஐயா அவர்களுக்கு கோயமுத்தூர், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், ... எல்லாம் புதிசு.
கோயம்புத்தூர் (< கோசம்புத்தூர். உயிர் < உசிரு, முயிரி < முசிறி, ஆயிரம் < ஆசிரம்/சாசிரம், ... போல)
என விளக்கமான ஒரு இழை உள்ளது.

Trichinopoly மிகப் பழைய சொல். திருச்சிராப்பள்ளி அதை மாற்றிய பெயராகும். 
Coimbatore, Trcihinopoly, .... தெரிவிக்கும் ஆழமான தமிழ்வரலாறுகள் சுவையானவை.

-------------------------

ஆனால், வடபெருங்கோடு என்று திருச்சிமலையை முத்தமிழ் விநோதர் இளங்கோ அடிகள்
ஒருக்காலும் பாடமாட்டார். சிறுகுன்று அது, பெருங்கோடு அல்ல,

மேலும், 30 காதம் (360 மைலிலும்) திருச்சியில் இருந்து மதுரை இல்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:42:20 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly

தேமொழி

unread,
Jul 10, 2016, 1:59:13 PM7/10/16
to மின்தமிழ்

On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly

திருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம்.  அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம்.  கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்

``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.

..... தேமொழி

On Sunday, July 10, 2016 at 10:40:36 AM UTC-7, N. Ganesan wrote:

Mukunthan Pathmanesan

unread,
Jul 10, 2016, 2:04:30 PM7/10/16
to mint...@googlegroups.com
>பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.
>அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.
>அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்
>அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,

காட்சிக் காதை(114)
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற;

இப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமோவெனப் பார்ப்போமா?

‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
கண்ணகி மதுரை மூதூர் எங்கே எனக் கேட்கின்றார். அக்காலத்தில் இரண்டு மதுரை இருந்திருக்கலாம்... கோவலன் நகைச்சுவைக்காக, மற்றைய மதுரையைப் பற்றிக் கூறியிருக்கலாம்...
அந்த மதுரை - அகல் நாட்டு உம்பர் 30 காத தொலைவில் இருந்திருக்கலாம்.

ஆனைமலை - உம்பற்காடு - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
அகுதை - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88
இந்தக் கூடல் ஆன்பொருநை ஆறு காவிரியில் கூடுமிடத்தில் உள்ளது - wikipedia
ஆன்பொருநை என்பது அமராவதி ஆகின், அது காவிரியில் கூடுமிடம் கரூரா?
(இது எனது கற்பனையே )

(இந்த அகுதைக்கும் -  கொங்கிளங் கோசருக்கும் (கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ) - நன்னனுக்கும் - , மாசாணியம்மன் (மயானசயனி ) க்கும் தொடர்புண்டு. பின்னர் பார்ப்போம்)

நன்றி,
முகுந்தன்​

--

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:09:07 PM7/10/16
to மின்தமிழ், vallamai

On Sunday, July 10, 2016 at 10:59:13 AM UTC-7, தேமொழி wrote:

பிழைபட்ட செய்தி. அப்படி ஒரு கல்வெட்டும் திருச்சியில் இல்லை. சமணத் தொடர்பு தெரிகிறது - கற்படுக்கைகளால். ஆனால், சிரா என்ற பெயரை எப்படி விளக்குவது?
இதற்கு பண்டாரத்தார் இவ்வழி கண்டுள்ளார். ஆனால், சிரா என்று சினாப்பள்ளியில் எங்கும் கல்வெட்டில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளை துருவி
ஆராய்ந்த ஐராவதம் நூலிலும் இதத் தெளியலாகும். எத்தனையோ கல்வெட்டு நூல்கள் வந்துவிட்டன. எனவே, சிரா என்ற சொல்லே திருச்சி கல்வெட்டுகளில் கி.பி. 10 நூற்றாண்டுவரை இல்லை.

”சிராப்பள்ளியின் முன்னொட்டாக நிற்கும் 'சிரா' எனும் பெயர், இவ்வூர்க் குன்றின் குகைத்தளத்திலுள்ள கற்படுக்கைகளின் தலையணைப்பகுதி ஒன்றில் வெட்டப்பட்டிருப்பதாக இந்தியக் கல்வெட்டறிக்கையில் (பக்.78/1937-38) கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பெயர், அதே அறிக்கையில் இக்குகைத்தளத்தில் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில் (பக். 21-22, 1937-38) இடம்பெறவில்லை. கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் குழுவினருள் ஒருவராகச் சென்று இக்குகைத்தளத்தில் ஆய்வு மேற்கொண்ட மைய ஆய்வாளர் மு.நளினி இப்படியொரு பொறிப்பு அக்குகைத்தளத்தில் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். முந்து கண்டுபிடிப்புகள், அறிவிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாவது உணர்க.”

சினாப்பள்ளி ஜிநனைத் தூக்கிவிட்டு சைவர் சிராப்பள்ளி எனப் பொருத்தியுளர்.

~NG
 
..... தேமொழி

On Sunday, July 10, 2016 at 10:40:36 AM UTC-7, N. Ganesan wrote:

ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly 

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:16:41 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
Some fellow, in British colonial period, wrote wrongly that ciraa is found in Trichinopoly inscription of 5th century CE. But no such inscription ever, just to cover the name, ciraappaLLi, this was inserted in 1938.
This info obviously misled Tiru. TVS Pandarathar aiya.

The ancient names, Trichinopoly, Coimbatore, ... tell a deeper story of Tamil history. ~ng

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:19:21 PM7/10/16
to மின்தமிழ்

On Sunday, July 10, 2016 at 11:04:30 AM UTC-7, mukunthan wrote:
>பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.
>அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.
>அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்
>அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,

காட்சிக் காதை(114)
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற;

இப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமோவெனப் பார்ப்போமா?
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
கண்ணகி மதுரை மூதூர் எங்கே எனக் கேட்கின்றார். அக்காலத்தில் இரண்டு மதுரை இருந்திருக்கலாம்... கோவலன் நகைச்சுவைக்காக, மற்றைய மதுரையைப் பற்றிக் கூறியிருக்கலாம்...
அந்த மதுரை - அகல் நாட்டு உம்பர் 30 காத தொலைவில் இருந்திருக்கலாம்.

ஆனைமலை - உம்பற்காடு - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
அகுதை - https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88
இந்தக் கூடல் ஆன்பொருநை ஆறு காவிரியில் கூடுமிடத்தில் உள்ளது - wikipedia
ஆன்பொருநை என்பது அமராவதி ஆகின், அது காவிரியில் கூடுமிடம் கரூரா?
(இது எனது கற்பனையே )

(இந்த அகுதைக்கும் -  கொங்கிளங் கோசருக்கும் (கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ) - நன்னனுக்கும் - , மாசாணியம்மன் (மயானசயனி ) க்கும் தொடர்புண்டு. பின்னர் பார்ப்போம்)

முகுந்தன் ஐயா, மாசாணியம்மன் எங்களூர்க்காரி. எழுதுங்கள். படிக்கிறோம். (பலர் எழுதியுள்ளனர் முன்பும்).

நா. கணேசன் 

Mukunthan Pathmanesan

unread,
Jul 10, 2016, 2:21:25 PM7/10/16
to mint...@googlegroups.com
நன்றி சிங்கநெஞ்சம் ஐயா, கணேசன் ஐயா மற்றும் அனைவருக்கும்..

குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்

காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
என்பதற்கு காவிரியின் வட கரை பெரிதாக வளைந்திருக்கின்ற இடத்தில்
(அதாவது காவிரி வளைந்து ஓடும் இடத்தில் ) உள்ள மலர்ப்பொழிலில் நுழைந்து எனப் பொருள் கொள்ளலாமா..

--

தேமொழி

unread,
Jul 10, 2016, 2:24:11 PM7/10/16
to மின்தமிழ்

On Sunday, July 10, 2016 at 11:09:07 AM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, July 10, 2016 at 10:59:13 AM UTC-7, தேமொழி wrote:

On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly

திருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம்.  அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம்.  கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்

``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.

பிழைபட்ட செய்தி. அப்படி ஒரு கல்வெட்டும் திருச்சியில் இல்லை. சமணத் தொடர்பு தெரிகிறது - கற்படுக்கைகளால். ஆனால், சிரா என்ற பெயரை எப்படி விளக்குவது?
இதற்கு பண்டாரத்தார் இவ்வழி கண்டுள்ளார். ஆனால், சிரா என்று சினாப்பள்ளியில் எங்கும் கல்வெட்டில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளை துருவி
ஆராய்ந்த ஐராவதம் நூலிலும் இதத் தெளியலாகும். எத்தனையோ கல்வெட்டு நூல்கள் வந்துவிட்டன. எனவே, சிரா என்ற சொல்லே திருச்சி கல்வெட்டுகளில் கி.பி. 10 நூற்றாண்டுவரை இல்லை.

”சிராப்பள்ளியின் முன்னொட்டாக நிற்கும் 'சிரா' எனும் பெயர், இவ்வூர்க் குன்றின் குகைத்தளத்திலுள்ள கற்படுக்கைகளின் தலையணைப்பகுதி ஒன்றில் வெட்டப்பட்டிருப்பதாக இந்தியக் கல்வெட்டறிக்கையில் (பக்.78/1937-38) கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பெயர், அதே அறிக்கையில் இக்குகைத்தளத்தில் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில் (பக். 21-22, 1937-38) இடம்பெறவில்லை. கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் குழுவினருள் ஒருவராகச் சென்று இக்குகைத்தளத்தில் ஆய்வு மேற்கொண்ட மைய ஆய்வாளர் மு.நளினி இப்படியொரு பொறிப்பு அக்குகைத்தளத்தில் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். முந்து கண்டுபிடிப்புகள், அறிவிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாவது உணர்க.”

சினாப்பள்ளி ஜிநனைத் தூக்கிவிட்டு சைவர் சிராப்பள்ளி எனப் பொருத்தியுளர்.

பெயர்க் குழப்படி இருந்தாலும்....

கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் துணைகொண்டும், இம்மாவட்டத்தில் கிடைத்திருக்கும் சிற்பங்களின் வாயிலாகவும் இலக்கியம் சார்ந்தும் அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி, இம்மாவட்டத்திலிருந்த சமண முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உறையூர், வெள்ளனூர், பழநாகப்பள்ளி, அமுதமொழிப்பெரும்பள்ளி, புலிவல்லம், அமண்குடி, பழையசங்கடம், சீயாலம், குத்தாலம், வீரப்பட்டி, ஜம்புகேசுவரம், திருமலைவாடி, பெரியம்மாபாளையம், அம்பாபுரம், ஜயங்கொண்டசோழபுரம், வண்ணம், லால்குடி, மகாதானபுரம், சிவாயம், சுண்டைக்காப்பாறை, வெட்டுவாந்தலை ஆகிய இருபத்தோரிடங்களைத் தம் நூலில் (சமணமும் தமிழும், 1970, பக். 126-130) குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நாடுகளில் சமணம் சிறப்பா?  (ref:  https://groups.google.com/d/msg/mintamil/IPn8083EQLQ/DAFFo8obBgAJ)

என்ற உங்கள் கேள்விக்கு.... திருச்சிப் பகுதியில் அக்காலத்தில் சமணம் செழித்திருந்ததை மயிலை. சீனி. வேங்கடசாமியும்  குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கொடுத்த வரலாறு.  தளத்தின் பக்கமே காட்டுகிறது.

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:29:07 PM7/10/16
to மின்தமிழ்

On Sunday, July 10, 2016 at 11:24:11 AM UTC-7, தேமொழி wrote:

என்ற உங்கள் கேள்விக்கு.... திருச்சிப் பகுதியில் அக்காலத்தில் சமணம் செழித்திருந்ததை மயிலை. சீனி. வேங்கடசாமியும்  குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கொடுத்த வரலாறு.  தளத்தின் பக்கமே காட்டுகிறது.

எல்லா ஊரிலும் சமணம் பார்க்கலாம்.  சினப்பள்ளி ஊர்ப்பேரே இருக்கிரதே.  ஆனால், கொங்கு, கர்னாடகா போல் சமணம் மற்ற இடங்களில் உண்டா?

முக்கிய கேள்வி:
Trichinopoly - Madurai : is it 360 miles, i.e., 30 kaadam-s??
 
..... தேமொழி

தேமொழி

unread,
Jul 10, 2016, 4:26:02 PM7/10/16
to மின்தமிழ்
அக்கால அளவையை  குறித்து என்னால்  உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை.  

இடக்குறிப்புகள் எதைக் குறிக்கின்றன என்று அதன் வழி முடிவெடுக்க விரும்பினேன்.

..... தேமொழி  
 
..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2016, 5:05:14 PM7/10/16
to மின்தமிழ், vallamai
இளங்கோ அடிகள் சமணர். கர்நாடகம் நன்கு அறிந்தவர். 
அவர்தான் கன்னடச் சொற்கள் ஆகிய காதம்/காவதத்தை தமிழில் முதலில் சொல்கிறார்.

அடிகள் குறிப்பிடும் காதம்/காவதம் எவ்வளவு தூரம் என கன்னட கல்வெட்டு, இலக்கியம்
மூலம் உறுதிசெய்யலாம். 10 - 14 மைல். சராசரியாக 360 மைல்கள். அதுவே,
வடபெருங்கோடு ஆகிய வெஸ்டெர்ன் காட்ஸ் - அகல் நாட்டு உம்பர் மலை -
மதுரைக்கு வடக்கே 360 மைலில் கோவலன் மனைவி கண்ணகியிடம் பேசுகிறான்
எனக் காட்டுகிறது.

நா. கணேசன்

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 4:08:10 AM7/11/16
to mint...@googlegroups.com
கணேசன் ஐயா,
நீங்கள் கூறும் வடபெருங்கோடு பற்றி என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை...
கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லும் தேவையிருந்திருக்காது என நினைக்கின்றேன்.. 
30 காதம் என்பது எத்தனை மைல் என்பது அவரவர்களின் வேகத்தைப் பொறுத்ததாக இருக்கலாம்..

காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
என்பதற்கு காவிரியின் வட கரை பெரிதாக வளைந்திருக்கின்ற இடத்தில்
(அதாவது காவிரி வளைந்து ஓடும் இடத்தில் ) உள்ள மலர்ப்பொழிலில் நுழைந்து எனப் பொருள் கொள்ளலாமா..

அகல் நாட்டு உம்பர்
உம்பர் என்பதற்று பல பொருள் உண்டு...
அப்பால் என்பதும் ஒரு பொருள்

அகநானூறு - கல்லாடனார்
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
- பகைவர்க்குப் புறக்கிடாத பாணன் என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட;

இதையும் பாருங்கள்
http://www.akaramuthala.in/sangailakkiyam/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%ae/
உம்பர்என்பது உயர்ச்சியைக் குறிக்கிறது. எனினும் சில இடங்களில் ஓரிடத்திற்குஅ ப்பால் உள்ள தொலைவு அல்லது உயரத்தைக்குறிக்கிறது.

---
ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து

அடியார்க்கு நல்லார் உரை :
நீ கூறிய மதுரை நம் அகன்றநாட்டிற்குமேல் ஆறைங்காவதங் காண்,இனி அண்ணிதென்றுகூறி நக்கென்க.

---

ஆகவே, சோழநாட்டிற்கப்பால் மதுரை 30 காத தொலைவில் இருக்கின்றது எனக் கோவலன் கூறியிருக்கலாம்..

நன்றி,
முகுந்தன்

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 5:57:45 AM7/11/16
to mint...@googlegroups.com
வடபெருங்கோடு , வடபெருங்கல் இரண்டும் வேறு வேறு எனக் கொள்ளலாம்.

வடபெருங்கல் - வேங்கடமலை
வடபெருங்கோடு என்பதைப்பற்றிப் பார்ப்போம்..

இரண்டு இடங்களில் வடபெருங்கோடு  வருகின்றது.

1. சிலப்பதிகாரம் - குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி

வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து

2.
அடியார்க்கு நல்லார் உரையில் வருகின்றது. அதைப்பற்றிப் பார்ப்போம்.

Inline image 1

வேனிற் காதை
நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

--------
பௌவம் - உப்பு ; கடல் ; நீர்க்குமிழி ; ஆழம் ; நுரை ; மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம்

குன்றக் குரவை (7)
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே;

இங்கே வரும் பௌவம் என்பது கடலைக் குறிக்கும்.

தொடியோள் பௌவம் என்பதற்கு நேரடிப்பொருள் குமரிக்கடல்...
ஆனால், அடியார்க்கு நல்லார் இவ்வாறு கூறுகின்றார்.
தொடியோள் நதியென்னாது பௌவமும் என்பது - குமரி நதி என்னாது குமரிக்கடல் எனக் கூறுவது ஏனெனின்,
தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.

இங்கே அவர் குமரிநதியின் வடபெருங்கோட்டின்  காறும் கடல் கொண்டு இப்போது அது குமரிக்கடல் எனப் பொருள்படக்கூறுகின்றார்..

வடபெருங்கோடு என்பது வட கரை போலத்தான் தெரிகின்றது.... கணேசன் ஐயா கேட்டதுபோல ஏன வடகோடு எனச் சொல்லாமல் வடபெருங்கோடு எனச் சொல்லப்படுகின்றது என விளங்கவில்லை...

நன்றி,
முகுந்தன்

Singanenjam Sambandam

unread,
Jul 11, 2016, 11:15:37 AM7/11/16
to mint...@googlegroups.com

அன்பின் முகுந்தன் , 

தாங்கள் கீழ்கண்ட இணையதளத்தினை  அறிவீர்கள். 

அதில் கோவலன் –கண்ணகி என்ன செய்தார்கள் என்பது வரிசையாக வழங்கப் பட்டிருக்கிறது. காண்க.

http://www.tamilvu.org/library/libindex.htm

"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்"

"மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்"

" இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்"

" சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்"

" புகார் நகரின் வாயிலைக் கடத்தல்"

"இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்"

"காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்"

தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"

ஆக,வடபெருங்கோட்டு மலர்ப் பொழில்  நுழைந்து கோவலன் –கண்ணகி கவுந்தி அடிகள் வாழும் பள்ளி சென்றார்கள் என்பதுதான் நேரடியான பொருள்.

அதை விடுத்து இங்கே மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுவருவது அறியாமை.

மேலும் பாவாணர் சிலம்பிற்கு உரை ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்த இடம் பற்றி எங்கேயும் அவர் பேசியதாகத் தெரியவில்லை.

“தொடியோள் பௌவம்.....” தொடருக்கு அடியார்க்குநல்லார் உரை எழுதுகையில் “ கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற்......”  எனக் கூறுமிடத்து , “வடபெருங்கோடு” என்பதற்கு பாவாணர் மேற்குத்தொடர்ச்சிமலை என பொருள் கொள்கிறார். அவ்வளவே.

இந்த இடத்தில் குமரிக்கு வடக்கே இருப்பதால் அது  “வடபெருங்கோடு” எனப்பட்டது. இந்த இடத்தில் கோடு , மலையென பொருள் படுகிறது.

புகாருக்கும் கவுந்தி அடிகள் பள்ளிக்கும் இடையே எந்த மலையும் இல்லை. இங்கே கோடு , கரை எனப்  பொருள் தருகிறது.

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 11:40:57 AM7/11/16
to mint...@googlegroups.com
நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,
​கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..

வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..

N. Ganesan

unread,
Jul 11, 2016, 12:04:10 PM7/11/16
to மின்தமிழ்

On Monday, July 11, 2016 at 8:15:37 AM UTC-7, singanenjan wrote:

அன்பின் முகுந்தன் , 

தாங்கள் கீழ்கண்ட இணையதளத்தினை  அறிவீர்கள். 

அதில் கோவலன் –கண்ணகி என்ன செய்தார்கள் என்பது வரிசையாக வழங்கப் பட்டிருக்கிறது. காண்க.

These are the recent additions of titles, given in 20th century. Not ancient.
 
http://www.tamilvu.org/library/libindex.htm

"கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்"

"மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்"

" இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்"

" சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்"

" புகார் நகரின் வாயிலைக் கடத்தல்"

"இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்"

"காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்"

தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"

ஆக,வடபெருங்கோட்டு மலர்ப் பொழில்  நுழைந்து கோவலன் –கண்ணகி கவுந்தி அடிகள் வாழும் பள்ளி சென்றார்கள் என்பதுதான் நேரடியான பொருள்.

அதை விடுத்து இங்கே மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுவருவது அறியாமை.

I don't think so. Kavunth aDikaL's paLLi is in vaDa perum kODu, the Western Ghats region.

NG
 
N. Ganesan

unread,
Jul 11, 2016, 12:18:28 PM7/11/16
to மின்தமிழ், vallamai

சிங்கநெஞ்சன் ஐயாவை முன்பு கேட்ட கேள்விதான்.
நாடுகாண் காதையில் "வடபெரும்கோடு" வட கரை என்றால், ஏன் தென் கரையை "தென் பெரும் கோடு" என இளங்கோ அடிகள் பாடவில்லை? காவதம் = தொலைவு. நீண்ட தொலைவில், இருந்த கவுந்தி  அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.

நா. கணேசன்
 
தேமொழி

unread,
Jul 11, 2016, 1:01:12 PM7/11/16
to மின்தமிழ்
எனக்கு இதை நம்ப சிரமமாக  இருக்கிறது.  

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என்று கவுந்தி அடிகளும்  கண்ணகி பற்றி அறிந்து வைத்திருக்கிறார்
ஆனால் இத்தகைய பெண்ணை கோவலன் எதற்காக கன்னட நாட்டிற்கு கொண்டு போய் மலைபகுதியில் இழுத்தடிக்க  வேண்டும்?

..... தேமொழி 

N D Logasundaram

unread,
Jul 11, 2016, 1:19:38 PM7/11/16
to mintamil

வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - 35,
           10-நாடுகாண் காதை புகார்க்காண்டம் சிலப்பதிகாரம் 

பொழில் (சோலை) எனும் சொல் உள்ளதால் 
'வட' எனும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும் 
(CE 630+) = 7 நூற்றாண்டு தேவாரத்தில் இதே சோழ நாட்டு
இடைத்தருகே 'ஆலம்பொழில்' எனும் தலம் உண்டு 

கோடு என்றால் மரக்கிளை ஆகும் 

நூ த லோ சு 
மயிலை 

N D Logasundaram

unread,
Jul 11, 2016, 1:28:50 PM7/11/16
to mintamil
"பெரும் கோடு"
என்பதால் ஆலமரத்தின் விழுதுகள் மிகவும் தடித்து 8-10 அங்குல விட்டம் வரை வளரும் 
அவைதான் இன்றும் ஆலயங்களில் கடவுளரை எழுந்தருளச் செய்ய பயன்படும் 'தண்டு; செய்ய படுகின்றன. 

நூ த லோ சு 
மயிலை 

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 1:53:57 PM7/11/16
to mint...@googlegroups.com
நன்றி நூ த லோ சு  ஐயா..
பெருங்கோடு பற்றி வேறு சில..

1.கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை
http://www.tamilvu.org/slet/l3600/l3600uri.jsp?id=13819
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவுகண் ணுற்ற பொழுதிற் பலருடன்
 பெருங்கோட்டூர்தி என்றது முன்பு வண்ணிக்கப்பட்ட சிவிகை வண்டிகளை

2.
பதிற்றுப் பத்து
நெடுமதில் நிரைப் பதணத்   
தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூச லினம்பழிக் குநரும்
இங்கே பெருங்கோட்டகப்பா - அரண்

(
கணேசன் ஐயாக்கு ஒரு செய்தி
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=293&pno=40
மயிலை சீனி. வேங்கடசாமி ஐயா  ‘அண்ணலம் பெருங்கோடு’ - கோபி வட்டம் எனக் குறிப்பிடுகின்றார்... கோபி வட்டம் ஈரோட்டிலுள்ளது..
)

வடபெருங்கோடு என்பது எப்பொருளில் வரும் என்பது அது வரும் இடத்தைப் பொறுத்தே..

கணேசன் ஐயா, இத்தொடரை விளக்குங்களேன்?
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

நூ த லோ சு  ஐயா

அவைதான் இன்றும் ஆலயங்களில் கடவுளரை எழுந்தருளச் செய்ய பயன்படும் 'தண்டு; செய்ய படுகின்றன.
ஆலமரத்தில் சிவிகை செய்யப்படுகின்றதா? அப்படியாயின் பெருங்கோட் டூர்தி என்பதை ஆலமரத்தால் செய்த ஊர்தி எனவும் பொருள் கொள்ளலாம்..

நன்றி

N D Logasundaram

unread,
Jul 11, 2016, 2:08:12 PM7/11/16
to mintamil
திரு முகுந்தன் இவ்வாறு எழுதினார் 
நூ த லோ சு  ஐயா
அவைதான் இன்றும் ஆலயங்களில் கடவுளரை எழுந்தருளச் செய்ய பயன்படும் 'தண்டு; செய்ய படுகின்றன. 
ஆலமரத்தில் சிவிகை செய்யப்படுகின்றதா? அப்படியாயின் பெருங்கோட் டூர்தி என்பதை ஆலமரத்தால் செய்த ஊர்தி எனவும் பொருள் கொள்ளலாம்..
நன்றி

பெரும்பாலும் சிவிகைகள் மூங்கிலினால் செய்யப்படுகின்றன 
நெருப்பு கொண்டு சூடாக்கி வளைப்பர் 
பிரம்பு நாற்காலிகள் செய்யும்போது பார்த்திருப்பீர்கள் சூடேற்றி தான் வளைப்பார் 

அதே போல் இந்த விழுதினையும் சூடேற்றி வளைக்க முடியும் 
மூங்கில் பளு  குறைவாகும் /  தண்டு அதிகமாகும் அவ்வளவே  
எனினும் விட்டத்தில் சிறியவை பயன் கொள்ளலாம் 

தண்டுகள் இந்நாளில் இலட்சம் ரூபாய்க்குமேல் விலைக்குள்ளாகும் 
 
நூ த லோ சு 
மயிலை 

Mukunthan Pathmanesan

unread,
Jul 11, 2016, 2:17:43 PM7/11/16
to mint...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி நூ த லோ சு  ஐயா..

N. Ganesan

unread,
Jul 11, 2016, 3:34:23 PM7/11/16
to மின்தமிழ்
சமண நாடுகளில் கொங்கு, குடமலை (மேற்குத் தொடர்ச்சி மலை “குடமலைப் பிறந்த” என்று காவிரியை நாடுகாண் காதையில் விவரிக்கிறார்).
கொங்கச் செல்வி, குடமலையாட்டி என்பதன் பொருள் சமணர்கள் கொள்வதை விளக்க கவுந்தியடிகளைச் சந்திக்க அழைத்துச் செல்கீரான் கோவலன்.
மாதவியை விட்டாச்சு. reconciliation & relaxed country tour. 

N. Ganesan

N. Ganesan

unread,
Jul 11, 2016, 3:37:35 PM7/11/16
to மின்தமிழ்

On Monday, July 11, 2016 at 10:53:57 AM UTC-7, mukunthan wrote:

கணேசன் ஐயா, இத்தொடரை விளக்குங்களேன்?
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

வடபெரும்கோட்டு மலர்ப் ”பொழில்” 
பொழில் என்னும் வார்த்தைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் என்ன தொடர்பு

some hints:
(1) ஐம்பொழில் - நானாதேசிகள் (2) பொழில்வாச்சி 
(3) முருகன் அன்றிலங்கிரியை (கிரவுஞ்சகிரியை) வதம் செய்த இடம் - சண்டூர்.
பரிபாடலில் முருகன் பாட்டில் “பொழில்” பார்க்கவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 11, 2016, 4:11:00 PM7/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Monday, July 11, 2016 at 9:18:28 AM UTC-7, N. Ganesan wrote:

On Monday, July 11, 2016 at 8:40:57 AM UTC-7, mukunthan wrote:
நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,
​கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..

வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..

வடபெருங்கோடு என்று என்பதைப் புரிந்துகொள்ள இளங்கோ அடிகள் திருச்சினப்பள்ளி (திருச்சி) வருமுன்
வர்ணிப்பதைப் பார்க்கவேண்டும். மேற்குத்தொடர் மலைகளிலே கவுந்தியைப் பார்த்து, அவரும் வருகிறேன்
என்றதால், கண்ணகிக்குத் துணையாய் இருக்கும் வாருங்கள் என்கிறான் கோவலன். மூவரும்
காவிரி அருகே உள்ள நாட்டுவளம், இயற்கைவளம் கண்டுவருகின்றனர். இன்றும் காவிரி குடமலையில்
பிறக்கும் இடத்தில் இருந்து திருச்சி வரும்வரை இயற்கை அழகு கொஞ்சுகிறது. பார்க்கிற எல்லாப் புள்ளினங்களையும்
தொகுத்துச் சொல்கிறார் அடிகள்.

கவுந்தி அடிகளைச் சந்திக்க மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது:
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
 
மதுரை 30 காதம் (~360 மைல்) தூரத்தில் உள்ளது என அறிவித்தல்:

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்குப் பொருந்தி-

(அகல் நாடு = கொங்கு நாடு. அதன் உயரத்தில் (அ) அப்பால் விளங்கும் மதுரை.
Pazhani, Tirumuurthi malai, Anaimalai hills)

திருச்சியை அடைவதன் முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின்
பழவிறல் முது  ஊர்களில் வேளாளர் வேளாண்மை.

வடபெருங்கோட்டு பள்ளியில் புறப்பட்டு தெற்கே மதுரை நோக்கி
வருகின்றனர். தூற்றாப் பொலியும், ஆலைப் புகையும் காவிரி
பாய்ந்து ஓடிவரும் மலைகளின் மேகங்களோடு சேர்கின்றன.

தலைக் காவேரி போன்ற இடங்களில் யாகங்கள் நடப்பதை
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
என்றார்.

ஆனால், மலைநாட்டில் காவிரி பாயும் ஊர்களைச் சொல்லும்போது
மாண, போல, ஒக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை.
மலையில் தோன்றும் ஊர்களின் வெள்ளாமையைப் பேசுகிறார்.

பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு

காவதம் அல்லது கடவார் ஆகி
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

காவிரியின் புதல்வர் திருச்சியில் இருந்து பூம்புகார் மட்டும் வாழவில்லை.
குடமலையில் பிறந்து திருச்சி வரும்வரை உள்ள மலைநாட்டு
ஊர்களின் வளப்பத்தை வர்ணிக்கிறார் அடிகள்.

இவ்வடிகளில் தெளிவாக காவிரிப்பாவை புதல்வர்கள் என்று
குடமலைத் தோற்றம் முதல் கடலில் கலக்கும் எல்லா உழவர் குடிகளையும்
சொல்லிவிடுகிறார். யாராவது காவிரிப்பாவை தன் புதல்வர் திருச்சிக்கும்
கிழக்கேதான் என்று சொல்வார்களா? இன்றும் மேற்குத் தொடர்ச்சிமலைக்
காவிரி தன்புதல்வோர் விட்டால்தால் திருச்சிக்குக் கிழக்கே தண்ணீர் வருகிறது.

மலைநாட்டு ஊர்களைச் சொல்லுதலால் “வட பெரும் கோடு” ஸஹ்யாத்ரி
என்பது தெளிவு.

N. Ganesan

unread,
Jul 11, 2016, 8:49:51 PM7/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
இன்னொரு கேள்வி: ஆயுநருக்கு எல்லாம்.

மலைநாட்டின் கண்ணே உள்ள காடும், ஊர்களும் தாண்டிக்,
கௌந்தி அடிகளும், கோவலன், கண்ணகி ஆற்றிடைக் குறையாகிய
அரங்கத்தில் தீர்த்தங்கரரைத் தொழுகின்றனர்:

மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,

பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-

அது எந்த அரங்கம்? மலைநாட்டின்  சீரங்கபட்டினமா? ஏனெனில் திருச்சி உறையூருக்குக்
கடைசியில் தான் செல்கின்றனர் மூவரும்.

இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும் கோட்டின் மலைநாட்டு அரங்கம் இது என்க.

N. Ganesan

unread,
Jul 11, 2016, 9:30:26 PM7/11/16
to மின்தமிழ்
அடியார்க்கு நல்லார் கூறும் வடபெருங்கோடு, இளங்கோ அடிகள் கூறும் வடபெருங்கோடு தான். A stock phrase.
அதன் பொருளை பாவாணர் தந்துள்ளார்:

குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. 

ஏற்கெனவே, கொடுத்துள்ளேன் - பாவாணர் கூற்றை.

ng

Singanenjam Sambandam

unread,
Jul 12, 2016, 1:38:27 AM7/12/16
to mint...@googlegroups.com

அன்பின் கணேசன் அய்யா அவர்களுக்கு, வணக்கம்

“சிங்கநெஞ்சனுக்கு விளக்கியிருக்கிறேன்” என  நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் குழம்பிப்  போய்  என்னையும் குழப்ப முயன்று தோற்றுப் போயிருக்கிறீர்கள் என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக கவுந்தி  அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.என்று எழுதியுள்ளீர்கள். பாடலைப் பாருங்கள் கீழே,

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்

பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"

40

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க

,
மதுரை மூதூர் யாது?’ என வினவ-
ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்துஎன நக்கு

"
கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்"

இங்கே கவுந்தி அடிகள் பள்ளியிலிருந்து/ அல்லது புகாரிலிருந்து,  மதுரை முப்பது காதம்  எனும் பொருள் வருகிறதா அல்லது கவுந்தி அடிகள் பள்ளி முப்பது காதம்  எனும் பொருள் வருகிறதா.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Jul 12, 2016, 1:45:10 AM7/12/16
to mintamil
அன்பின் திரு முகுந்தன் 

திரு நாசா கணேசன் அவர்களின் மடல் பற்றி எப்போதும் ஒதுங்கியே இருப்பேன்
ஏனெனில் அவர் இணையதள த்த்தில் உள்ள குப்பைகளை(சேர்மானங்கள்) எல்லாம்
சங்கிலியாக ஏதோ ஓர் சொல் தொடர்பு கட்டி கொட்டி தீர்த்து குழப்புவார் 
அதில் நிறைய அனுபவித்தவர்கள் மின் தமிழில் நிறைய உண்டு நீங்கள்  புதியவர் 
அதனால் அறி யமாட்டீர் 
சோழ நாட்டு கடலோரம் உள்ள காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மதுரை செல்ல
கொங்கு நாடு மட்டும் அல்ல அதன் மேற்கு எல்லையாக உள்ள இன்றைய மேற்கு-
-தொடர்ச்சி மலைவரை சென்றார்கள் என்றல் அறிவினுக்குப் புறம்பானது
இன்றைய தஞ்சை புதுக்கோட்டை அழகர் கோயில் என நிற்கும் பழம்பதிகள்
வழிதான் நெடுவழிகள்  அக்காலத்தில் பாரியின் பறம்புமலை என இருந்திருக்கும்   
இன் றைய மேலுர் என செல்லும் தடம்தான். 

 திண்டுக்கல் வரை சென்று சிறுமலையைச் சுற்றிவருவது திருச்சியை தலைமை இடமாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் போட்ட SOUTH INDIAN RAILWAY இரயில் வழிதான் அதுதான் மிக்க தெற்கான தென் கொங்கு நாட்டு மலைத்தொடர் (பழனி) அடிவாரம் வரை செல்லும் 

சேக்கிழார் காலத்திலும் அவர் எழுத முயன்ற 13ம் நூறாண்டடு அறிவினாலும்  ஏழாம் நூற்றாண்டு தி ருஞசம்பந்தரின் மதுரை செலவு திருப்பத்தூர் முதலிய இப்போதைய சிவகங்கை மாவட்டம் வழிதான் குறிக்கப்பட்டுள்ளது இந்த பெருவழிதான் பற்பல பழம் பதி கள் இராமேசுவரம் செல்லும் வழி திருப்புத்தூர்தி ருமாலிருஞ்சோலை திரு மோகூர் திருவாதவூர் திருப்பூவணம்  முதலியன 

மேலும்
வட பெ ருங்கோ டு எனும் சொல் எப்படி சோழ நாட்டிற்கு மேற்காக உளத்தைக் குறிக்கும்??  வேறு இடத்தில் படித்த ஓர் சொல் தன் மனதில் வந்ததால் அதற்குரிய சான்றுகளைத் தேட முயலும் மனப்போக்கு அவ்வளவே 

மேலும் காதம் எனும் சொல் பற்றி சில முறை இதே மின் தமிழில் மடல் இழைகள்வளர்ந்ததுண்டு அதனை பார்த்தல் தெரியும் 
தி ருமதி   தேமொழி அவர்களுக்கு நே ரம் கிடைத்து தேடிமுயன்றால் நலம்

என் பழம் நினைவு அடியார்க்குநல்லார்  உரையில் திருச்செங்கோட்டிற்கும் கரூருக்கும் இடையே உள்ள தூரம் குறிக்கும் போது இததனை காதம்  என இப்போதைய ஊர் ர்களாவதா ல் பிழையின்றி கணித்த நினைவு 
  
நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 12, 2016, 2:42:36 AM7/12/16
to மின்தமிழ்

On Monday, July 11, 2016 at 10:45:10 PM UTC-7, selvi...@gmail.com wrote:

மேலும் காதம் எனும் சொல் பற்றி சில முறை இதே மின் தமிழில் மடல் இழைகள்வளர்ந்ததுண்டு அதனை பார்த்தல் தெரியும் 
தி ருமதி   தேமொழி அவர்களுக்கு நே ரம் கிடைத்து தேடிமுயன்றால் நலம்

இதுவரை கிடைத்தது .....

--------------

ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

--------------

ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.
[தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து....து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்]

------------
தமிழர் அளவை முறைகள்

1 காதம் (1200 கஜம்)

மேலும் தேடிப் பார்க்கிறேன் ஐயா.

..... தேமொழி 

N. Ganesan

unread,
Jul 12, 2016, 3:00:44 AM7/12/16
to மின்தமிழ்

On Monday, July 11, 2016 at 10:38:27 PM UTC-7, singanenjan wrote:

அன்பின் கணேசன் அய்யா அவர்களுக்கு, வணக்கம்

“சிங்கநெஞ்சனுக்கு விளக்கியிருக்கிறேன்” என  நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் குழம்பிப்  போய்  என்னையும் குழப்ப முயன்று தோற்றுப் போயிருக்கிறீர்கள் என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக கவுந்தி  அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.என்று எழுதியுள்ளீர்கள். பாடலைப் பாருங்கள் கீழே,

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"

40

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
மதுரை மூதூர் யாது?’ என வினவ-
ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்துஎன நக்கு

"
கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்"

இங்கே கவுந்தி அடிகள் பள்ளியிலிருந்து/ அல்லது புகாரிலிருந்து,  மதுரை முப்பது காதம்  எனும் பொருள் வருகிறதா அல்லது கவுந்தி அடிகள் பள்ளி முப்பது காதம்  எனும் பொருள் வருகிறதா.

சிங்கநெஞ்சன் ஐயா அவர்களுக்கு வணக்கம். 

கவுந்தி அடிகள் பள்ளியில் அவரைத் தொழுகின்றனர் இருவரும், பிறகு  பேசுகிறான் கோவலன். கவுந்தி அடிகள் இடத்தில் இருந்து
பேசுவதால், வட பெரும் கோடு வந்தாயிற்று:

குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

கவுந்தியின் பள்ளியில் இருந்து தெற்கே 30 காதம் மதுரை என்பது என் புரிதல்.
காதம் 12 மைல் எனக் கொள்ளின், 360 மைல். மதுரைக்கும், வடபெருங்கோட்டு (மேற்குத் தொடர்ச்சி மலையின்)
கவுந்தி தங்கியிருந்த பள்ளிக்கும் தொலைவு.

காவதம் கடந்து - பல காதம் கடந்து எய்திய பள்ளி.
காவதம் - இங்கே நெடுந்தூரம், 
http://www.tamilvu.org/slet/l3800/l3800uri.jsp?song_no=4114&book_id=57&head_id=54&sub_id=1416
காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி.

கவுந்தி அடிகள் வட பெருங்கோட்டில் ஒரு பள்ளியில் வாழும் குரத்தியார்.
அந்த இடத்திற்கும், மதுரைக்கும் 30 காதம் தொலைவு, அதாவது ~360 மைல்.
என்பது என் புரிதல். 

பின் அந்த வட பெரும் கோட்டு மலையூர்களை எல்லாம் தாண்டி, சீரங்கபட்டினம்
வந்தடைந்து தருமம் சாற்றும் சாரணரைத் தொழுகின்றனர். பின்னர் உறையூர் (திருச்சி)
நோக்கிப் பயணம் செய்கின்றனர்.

நா. கணேசன்
 
Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 3:29:17 AM7/12/16
to mint...@googlegroups.com
​​
நன்றி கணேசன் ஐயா,

>மாதவியை விட்டாச்சு. reconciliation & relaxed country tour.
​அப்படியில்லை... உற்றார் உறவினருக்குத் தெரியாமல் இரவோடிரவாகத்தான் செல்கின்றனர்.

>
​(அகல் நாடு = கொங்கு நாடு. அதன் உயரத்தில் (அ) அப்பால் விளங்கும் >மதுரை. Pazhani, Tirumuurthi malai, Anaimalai hills)

அகல் நாடு என்பது அகன்ற நாடாகத்தான் இருக்கவேண்டும்... கொங்கு நாடு எனக் குறிக்கமுடியாது..

கனாத்திறமுரைத்த காதை

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=412
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
(அகல் நகர்- புகார்)
கண்ணகி தேவந்தியைச் சந்திக்கும் முன்...
(இதைப்பார்த்து கண்ணகி இருந்தது கொங்குநாடு எனக் கூறுவீர்களா ஐயா :) )

​நாடுகாண் காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=443
ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்
(அகல் நாடு - புகார்)

காட்சிக் காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
(அகல்நாடு - சேரநாடு)
செங்குட்டுவனின் மாபெருந்தேவி கூறுவது

​>மலைநாட்டு ஊர்களைச் சொல்லுதலால் “வட பெரும் கோடு” >ஸஹ்யாத்ரி என்பது தெளிவு.​
அடியார்க்கு நல்லார் கூறிய
​​
வடபெருங்கோடு பார்த்தீர்களா?
(
​தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் )

---

>கவுந்தி அடிகள் பள்ளியில் அவரைத் தொழுகின்றனர் இருவரும், >பிறகு  பேசுகிறான் கோவலன். கவுந்தி அடிகள் இடத்தில் இருந்து
இது பிழையான கருத்து ஐயா, கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..

>அடியார்க்கு நல்லார் கூறும் வடபெருங்கோடு, இளங்கோ அடிகள் >கூறும் வடபெருங்கோடு தான். A stock phrase.
>அதன் பொருளை பாவாணர் தந்துள்ளார்:
பாவாணர் எதனை அடிப்படையாகவைத்து அவ்வாறு கூறுகின்றார்?
-------------------------------------

நன்றி நூ த லோ சு  ஐயா,
வடபெருங்கோடு என்பது காவிரியின் வடபுறம் இருந்த அரண்/அணை ஆக இருந்திருக்கலாம்
(எனக்கு தமிழ்நாட்டுப் புவியியல் தெரியாது, பிழையெனின் மன்னிக்கவும்)

--------------------------

நன்றி,
முகுந்தன்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 3:41:44 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 12:29:17 AM UTC-7, mukunthan wrote:
​​
நன்றி கணேசன் ஐயா,

>மாதவியை விட்டாச்சு. reconciliation & relaxed country tour.
​அப்படியில்லை... உற்றார் உறவினருக்குத் தெரியாமல் இரவோடிரவாகத்தான் செல்கின்றனர்.

>
​(அகல் நாடு = கொங்கு நாடு. அதன் உயரத்தில் (அ) அப்பால் விளங்கும் >மதுரை. Pazhani, Tirumuurthi malai, Anaimalai hills)

அகல் நாடு என்பது அகன்ற நாடாகத்தான் இருக்கவேண்டும்... கொங்கு நாடு எனக் குறிக்கமுடியாது..

ஏன்? அகல் போன்று இருக்கும் நாடு கொங்குநாடு, அதன் நடுவே திரி போன்று காவிரி ஓடுகிறது.

> (எனக்கு தமிழ்நாட்டுப் புவியியல் தெரியாது, பிழையெனின் மன்னிக்கவும்)

கொங்குநாட்டுப் புவியியல் வந்து பாருங்கள். ஏன் புலவர்கள் அகல், திரி உவமை கூறுகின்றனர்
எனப் புரிந்துகொள்ள இயலும்.

​நாடுகாண் காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=443
ஆறைங் காதநம் மகனாட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்தென நக்குத்
(அகல் நாடு - புகார்)

காட்சிக் காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=2700&subid=2700015
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
(அகல்நாடு - சேரநாடு)
செங்குட்டுவனின் மாபெருந்தேவி கூறுவது

அகல்நாடு - சேரநாடு. கொங்குநாடு சேர நாடுதானே.
அங்கே தானே, இளங்கோ அடிகள் நாடாகிய வஞ்சி இருக்கிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 3:43:56 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 12:29:17 AM UTC-7, mukunthan wrote:
​​
வடபெருங்கோடு என்பது காவிரியின் வடபுறம் இருந்த அரண்/அணை ஆக இருந்திருக்கலாம்
(எனக்கு தமிழ்நாட்டுப் புவியியல் தெரியாது, பிழையெனின் மன்னிக்கவும்)

முகுந்தன் ஐயா,

ஆற்றுக்கு வடக்கே அணை இருக்குமா??

வட பெரும் கோடு என்றால் ஆற்றுக்கு வடக்கே இருக்கிற பெரிய அணையா??

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Jul 12, 2016, 3:55:08 AM7/12/16
to mintamil
மடல் வைத்தவுடன் தேடிப்பிடித்து வைத்தமைக்கு
 நன்றி திருமதி தேமொழி 

நூ த லோ சு 
மயிலை 

--

N. Ganesan

unread,
Jul 12, 2016, 3:57:47 AM7/12/16
to மின்தமிழ்

ஒன்று தெளிவாக தெரிக்றது. இளங்கோ அடிகள், அடியார்க்கு நல்லார் சொல்லும் “வட பெரும் கோடு” = ஒரு ஸ்டாக் ஃப்ரேஸ்.

இது ஆல மரத்துக் கோடு (கிளை) (அ) புளிய மரக் கோடு (அ) அரச மரக் கோடு அல்ல.

வடபெருங்கோடு = வடக்கே உள்ள பெரிய மலைத் தொடர் (ஸஹ்யாத்ரி). அடியார்க்கு நல்லாரின் வடபெருங்கோடு இதுதான் என பாவாணர் விளக்கம்.

Singanenjam Sambandam

unread,
Jul 12, 2016, 4:07:18 AM7/12/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா,  நான் புவியியல் மாணவன் , பூமியில் இருப்பவன். காண்பதை இது ...இன்னது ...இப்படி.....என்று அறிய முயல்பவன். 

தாங்கள் வானம் பார்ப்பவர் என நினைக்கிறேன். உங்கள் இடுகைகளில் ஏகப்பட்ட self -contradiction  காண்கிறேன்.

உங்கள் பாதையும் அடியேனின் பாதையும் வேறு வேறு.
 உங்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. 
நன்றி. வணக்கம்.

--

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 4:12:08 AM7/12/16
to mint...@googlegroups.com
 
​​
>ஆற்றுக்கு வடக்கே அணை இருக்குமா??
>வட பெரும் கோடு என்றால் ஆற்றுக்கு வடக்கே இருக்கிற பெரிய அணையா??
இருக்கக்கூடாதா ஐயா, காவிரி வளைந்து வளைந்துதானே ஓடுகின்றது.... நிறைய அணைகள் இருந்திருக்கலாம்...

இக்கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே?

கனாத்திறமுரைத்த காதை
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=412
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
(அகல் நகர்- புகார்)
கண்ணகி தேவந்தியைச் சந்திக்கும் முன்...
(இதைப்பார்த்து கண்ணகி இருந்தது கொங்குநாடு எனக் கூறுவீர்களா ஐயா :) )

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 4:18:02 AM7/12/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா,
புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?

நன்றி..

N. Ganesan

unread,
Jul 12, 2016, 4:40:13 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:07:18 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ஐயா,  நான் புவியியல் மாணவன் , பூமியில் இருப்பவன். காண்பதை இது ...இன்னது ...இப்படி.....என்று அறிய முயல்பவன். 

தாங்கள் வானம் பார்ப்பவர் என நினைக்கிறேன். உங்கள் இடுகைகளில் ஏகப்பட்ட self -contradiction  காண்கிறேன்.

உங்கள் பாதையும் அடியேனின் பாதையும் வேறு வேறு.
 உங்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. 
நன்றி. வணக்கம்.

இளங்கோ அடிகள் எழுதியிருப்பது புனைவிலக்கியம். Supernatural Elements நிறைய இருப்பது.
அது ஓர் கற்பனைக் காவியம். கண்டவியூக சூத்திரத்திலும் இதைப் பார்க்கலாம்.
அதை மாதிரியாகக் கொண்டு, கவுந்தி அடிகள் சமணம் போதிப்பதற்காக ஒரு கேரக்டர் படைத்து,
மூவரும் பயணிப்பதாக சொல்லும் இடங்கள் வானை நோக்கியவை. 
உ-ம்: சீரங்கபட்டினத்தில் சாரணர் வருகையும் வாழ்த்தும். இதனையெல்லாம்
வெறும் புவியியல் நோக்கில் பார்க்கவியலாது.

குமரிக்கோடு - கொற்றிகோடு என்னுமிடத்துக்கு கற்பனையாக இளங்கோ அடிகள் கொடுத்த பெயர் -
குமரிக் கண்டம் என 19-ஆம் நூற்றாண்டில் வளர்ந்த கட்டுக்கதைகள். இவற்றை அறிய
ஸூப்பர்நேச்சுரல் தன்மை கொண்ட இலக்கியங்கள் துணைசெய்யும். புவியியல் விஞ்ஞானம்
பிரகாரம் இளங்கோ அடிகள் கவுதி அடிகள் கேரக்டர் படைக்கவில்லை.
மூவரும் பயணம் செய்யும் இடங்களும் அவ்வாறு அவர் அமைக்கவில்லை என்பது என் புரிதல், ஐயா.

நா. கணேசன்

2016-07-12 13:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Jul 12, 2016, 4:41:42 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:12:08 AM UTC-7, mukunthan wrote:
 
​​
>ஆற்றுக்கு வடக்கே அணை இருக்குமா??
>வட பெரும் கோடு என்றால் ஆற்றுக்கு வடக்கே இருக்கிற பெரிய அணையா??
இருக்கக்கூடாதா ஐயா, காவிரி வளைந்து வளைந்துதானே ஓடுகின்றது.... நிறைய அணைகள் இருந்திருக்கலாம்...

அணைகளை இளங்கோ பாடவில்லை. ஆற்றுக்கு வடக்கே எதற்கு அணை கட்டுகின்றனர்?

N. Ganesan

unread,
Jul 12, 2016, 4:43:46 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:18:02 AM UTC-7, mukunthan wrote:
அன்பின் கணேசன் ஐயா,
புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?

நன்றி..

எதற்காக மதுரை என்று புகார்க் காண்டத்தில் வருகிறது? அதற்குத்தான் மதுரைக் காண்டம் உள்ளதே.

கவுந்தி அடிகள் பாத்திரம் ஏன் படைத்தார் என்றால் உங்களுக்கு வடபெரும்கோட்டு மலர்ப்பொழில் விளங்கும்
என நினைக்கிறேன். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 4:51:51 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:07:18 AM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் ஐயா,  நான் புவியியல் மாணவன் , பூமியில் இருப்பவன். காண்பதை இது ...இன்னது ...இப்படி.....என்று அறிய முயல்பவன். 

தாங்கள் வானம் பார்ப்பவர் என நினைக்கிறேன். உங்கள் இடுகைகளில் ஏகப்பட்ட self -contradiction  காண்கிறேன்.

உங்கள் மடல்களை ஆர்வமுடன் படிப்பவன். நீங்கள் செய்யும் தமிழ் ஆய்வுகளால் என் தமிழறிவு வளரும் என்பது நிச்சயம்.
குறைபாடுகளை திருத்திக்கொள்ள முயல்வேன்.

கானிங்காம், ரைஸ், புக்கானன், ... சென்னைப் பேரகராதி கொடுக்கும் காதம் அளவை பயனுடையதாகலாம்.
அதனால் தான் கவுந்தியடிகள் பள்ளிக்கும் மதுரைக்கும் சுமார் 360 மைல் என்பது என் புரிதல்.

அன்புடன்
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jul 12, 2016, 5:00:38 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:18:02 AM UTC-7, mukunthan wrote:
அன்பின் கணேசன் ஐயா,
புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?

புகார்க் காண்டம் தொடங்குவதைப் பாருங்கள், திரு. முகுந்தன்:

குணவாயில் கோட்டத்து அரசுதுறந்துஇருந்த 
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக் 
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப் 
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் 
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு

(5)

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள் 
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம் 
கட்புலம் காண விண்புலம் போயது 
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென, 
அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன்

(10)

யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்: 

வஞ்சிக் காண்டம் இருக்கிறதே.  ஏன் சேர நாட்டுச் செய்தி கொண்டு தொடங்குகிறார்?

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 5:14:48 AM7/12/16
to mint...@googlegroups.com
​அது பதிகம் ஐயா, உரைபெறு கட்டுரைக்குப்பின் தான் புகார்க்காண்டம்..

>பிரகாரம் இளங்கோ அடிகள் கவுதி அடிகள் கேரக்டர் படைக்கவில்லை.
>மூவரும் பயணம் செய்யும் இடங்களும் அவ்வாறு அவர் அமைக்கவில்லை >என்பது என் புரிதல், ஐயா.
சரி ஐயா....

>அணைகளை இளங்கோ பாடவில்லை. ஆற்றுக்கு வடக்கே எதற்கு அணை >கட்டுகின்றனர்?
இதுபற்றிப் போதுமான விளக்கம் என்னிடம் இல்லை ஐயா.. பிறிதொரு நேரம் பார்ப்போம்...

எனது ஆரம்பக் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557
இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..

கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

புறஞ்சேரியிறுத்த காதை
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம் (105)
................
பாய்கலைப் பாவை பாடற் பாணி (111)​

இங்கேயிம் கோவலன் பாணருடன் சேர்ந்து பாய்கலைப் பாவைப் பாடலை யாழில் இசைக்கின்றார்..

இதற்கு கணேசன் ஐயா இவ்வாறு விடையளித்திருந்தார்..
> கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர். சிங்க வாகனத்துடன்
கொற்றவையை சமணக் குகைகளில் நிறையப் பார்க்கலாம்

வேட்டுவவரியில் கூறப்படும் பலி கேட்கும் கொற்றவையும் கோவலன் வணங்கும் கொற்றவையும் பாய்கலைப் பாவை எனத்தான் அழைக்கப்படுகிறாள்..
சமண அம்பிகாவும் பலிகேட்கும் கொற்றவையும் ஒன்றா?

2.
பூங்கண் இயக்கிக்குப் (சமண தெய்வம்??) பான்மடை கொடுத்த மாதரி பின்பு ஆய்ச்சியர் குரவையில் மாயவனையும் ஆயவனையும் போற்றிப் பாடுகிறார்... அக்காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று எல்லாத்தெய்வங்களையும் வழிபடும் முறை இருந்திருக்கின்றதா ?

இதற்கு பிரகாஷ் சுகுமாரன் ஐயா இவ்வாறு விடையளித்திருந்தார்..
>முதுமகள் மாதரி, கவுந்தி போன்ற கிழவிக்கு பால் சோறு கொடுத்து மரியாதை செய்வதையும், ஆயர்குல பெண்களின் கனவு நாயகன், ஆடு மேயும் ஆயவன், மாயம் புரி மாயோனை சிலாகிப்பதையும் ஒன்று சேர்த்து குழம்பி, குழப்பிக் >கொள்ளவே கூடாது.

3. கொலைக்களக் காதை (18)
சாவக நோன்பிக ளடிக ளாதலின்

எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். 
சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா ?
(தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல)

ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994

இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ?

இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

இதற்கு கணேசன் ஐயா இவ்வாறு விடையளித்திருந்தார்..
>பார்க்கவேண்டும். நீறிடாமை காரணமோ?

4. இது வசந்தமாலை பற்றியது...

கடலாடு காதை (171)
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்..

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=324

கோவலன் மாதவியுடன் இருக்கும்போது , வசந்தமாலை ஏன் வருந்தி நின்றாள் ?

5.
மனையறம்படுத்த காதை
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.
 (உரை : அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்)
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=110
(
வெண்பா இளங்கோவடிகளால் பாடப்படவில்லையென்பது ஒருசாரார் கருத்து. )

இங்கே நாமந் தொலையாத இன்பம் (அழகு கெடாத இன்பம் ) என ஏன் கூறப்படுகின்றது ? 

6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)

இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?

இதற்கும்
வேட்டுவ வரி (47)
 கொங்கச் செல்வி குடமலை யாட்டி

இருக்கும் தொடர்பு இருக்குமா?

N. Ganesan

unread,
Jul 12, 2016, 5:32:20 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 2:14:48 AM UTC-7, mukunthan wrote:

>அணைகளை இளங்கோ பாடவில்லை. ஆற்றுக்கு வடக்கே எதற்கு அணை >கட்டுகின்றனர்?
இதுபற்றிப் போதுமான விளக்கம் என்னிடம் இல்லை ஐயா.. பிறிதொரு நேரம் பார்ப்போம்...

முகுந்தன், உங்கள் தொழில் என்ன என அறியேன். நீங்கள் சொன்னீர்கள்:
வடபெருங்கோடு என்பது காவிரியின் வடபுறம் இருந்த அரண்/அணை ஆக இருந்திருக்கலாம்”

காவிரிக்கு வடக்கே அணை எதற்கு கட்டியிருப்பர்? 

வடபெருங்கோடு என்பதற்கு பாவாணர் கொடுக்கும்பொருள் என்ன?
வடபெருங்கல் என்றால் பொருள் என்ன? - எனப் பார்க்கவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 5:47:29 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 1:18:02 AM UTC-7, mukunthan wrote:
அன்பின் கணேசன் ஐயா,
புகார் முதல் உறையூர் வரை புகார்க் காண்டம் . இதற்குள் கொங்குநாட்டை இழுப்பது சரியல்ல.... அதற்குத்தான் வஞ்சிக்காண்டம் உள்ளதே?

நன்றி..

புகார்க் காண்டத்தில் மதுரை ஏன் வருகிறது?

மதுரைக் காண்டத்தில் வஞ்சி ஏன் வருகிறது?
 
Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 5:53:12 AM7/12/16
to mint...@googlegroups.com
புகார்க்காண்டத்தில் மதுரையில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?
மதுரைக் காண்டத்தில் வஞ்சியில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?

​>“வடபெருங்கோடு என்பது காவிரியின் வடபுறம் இருந்த அரண்/அணை ஆக >இருந்திருக்கலாம்”
>காவிரிக்கு வடக்கே அணை எதற்கு கட்டியிருப்பர்?
எனது கருத்து பிழையாக இருக்கலாம் ஐயா.. இதைப்பற்றித் தெரியவில்லை.. தெரிந்தால் வேறொரு இழையில் விவாதிக்கலாம்... நன்றி...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 12, 2016, 5:55:50 AM7/12/16
to மின்தமிழ்

NG>கவுந்தி அடிகள் பள்ளியில் அவரைத் தொழுகின்றனர் இருவரும், >பிறகு  பேசுகிறான் கோவலன். கவுந்தி அடிகள் இடத்தில் இருந்து

On Tuesday, July 12, 2016 at 12:29:17 AM UTC-7, mukunthan wrote:
​​ 
இது பிழையான கருத்து ஐயா, கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..

முகுந்தன் ஐயா, நீங்கள் சொல்வது சரிதானா? எனக்கு விளக்கவும், நன்றி ஐயா.

இளங்கோ அடிகள் தானெழுதிய நாடுகாண் காதையில்
கவுந்தி அடிகள் பள்ளி - வடபெருங்கோட்டில் இருப்பது - ஸ்தலத்தில் தானே, கௌந்தி முன்னிலையில் 30 காதம் (~360 மைல்) மதுரை எனச் சொல்கிறான் கோவலன்.

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

-------- சிலம்பு, நாடுகாண் காதை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 6:17:46 AM7/12/16
to மின்தமிழ்
2016-07-12 2:52 GMT-07:00 Mukunthan Pathmanesan <muku...@gmail.com>:
புகார்க்காண்டத்தில் மதுரையில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?
மதுரைக் காண்டத்தில் வஞ்சியில் நடந்த நிகழ்வுகள் நேரடியாக வருகின்றதா?

தலைக்காவேரி வரை சோழன் ஆட்சி அப்போது நடந்தது என இளங்கோ குறிப்பிடுகிறார்
பார்க்கவில்லையா? அதனால் தான் வடபெருங்கோட்டு (ஸஹ்யாத்ரி மலைத் தொடர்)
கவுந்திப் பள்ளி நிகழ்வுகளை, ஸ்ரீரங்கபட்டினத்திலே சாரணர் விண்ணவர் வருகையைப்
பாடியுள்ளார்.
 
நா. கணேசன்

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 6:17:52 AM7/12/16
to mint...@googlegroups.com
​>கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
இது தவறுதான்.. மன்னிக்கவும்

N. Ganesan

unread,
Jul 12, 2016, 6:23:08 AM7/12/16
to மின்தமிழ்

On Tuesday, July 12, 2016 at 3:17:52 AM UTC-7, mukunthan wrote:
​>கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
இது தவறுதான்.. மன்னிக்கவும்

நன்றி.

அன்பின் முகுந்தன். ஆற்றுக்கு வடக்கே யாரும் அணை கட்டார். 
சமண அம்பிகாவும், பலிகேட்கும் அம்பிகாவும் ஒன்றா?- என்கிறீர்கள். நீங்களே யோசிங்க, தேடுங்க, சொல்லியிருக்கேன் பல வருஷமாய்.

உங்கள் இழையின் முதல் மடலுக்கு விடைகள் கொடுத்துள்ளேன். பொறுமையாக என் மடல்களைப் படித்தால் விளங்கிவிடும்.

நேரம் இருக்கும்போது விரிவாக, கோர்வையாக சொல்கிறேன்.

Best wishes,
N. Ganesan

N D Logasundaram

unread,
Jul 12, 2016, 12:46:42 PM7/12/16
to mintamil, vallamai, Sivakumar M A, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan
திரு முகுந்தன் 

வடபெருங்கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து 
என்பதில் "வடபெருங்கோட்டு" என்பது நுழையும் மலர்ப்பொழிலுக்குகொடுக்கப்படும்
சிறப்புப் பண்பு விளக்கம் 
கோ டு அல்ல கோ ட்டு  னும் சொல்லை  நுணுகி நோக்குக

காவிரியின் கடைமுகம் (இன்றைய கடைமுடி எனும் தேவரத்தலம் காவிரியின் கடைமுகத்தில் உள்ளது என்பர்) கடந்தவுடன் நுழையும் பொழில் வடபெருங்கோட்டுடன்  விளங்குவது எனக் கொள்வது பொருந்தும் விளக்கம் 
அல்லாது வேறு எங்கோ உள்ள வடபெருங்கோடு எனும் இடத்தில்  உள்ள பொழிலில் நுழைந்தார்எ னபது சிறிதாவது பொருந்துமா எனப்பார்க்கவும் 

அடுத்து
காதம் எனும் சொல் கன்னடமொழி என்றால் தகுமா? 

என்னிடமுள்ள 18 நிகண்டுக்களில் பார்த்த சிலவற்றில் நான்கினில் 
காதம் என்பதும் காவதம் என்பதும் ஒன்றாகும் எனவே உள்ளது 
காதம் = காவதம்  // திவாகரம் 1022
காதம் = காவதம்  // பிங்கலம் 715 
காதம் = காவதம் //சூ டாமணி நிகண்டு 412
காதம் = காவதம் //ஆசிரிய நிகண்டு/ 166
காதம் = காவதம் //நாமதீப  நிகண்டு/

மேலும் இச்சூத்திரங்களிலேயே 
கூப்பிடு தூரம் = குரோசம் என்கின்றன 

காதம் = மூன்று குரேச தூரம் //நாநார்த்ததீபிகை

நிகண்டுகளில் வருவது நேரடியான பொருந்தும்
 பொருள்களின் நிரல் 
------------------------------------
The normal intelligible outdoor range of the male human voice in still air is 180 m (590 ft 6.6 in).
The silbo, the whistled language of Spanish-speaking inhabitants
of the Canary Island of La Gomera, is intelligible under ideal conditions at 8 km (5 miles). There is a recorded case, under optimal acoustic conditions, of the human voice being detectable at a distance of 17 km (10.5 miles) across still water at night
-------------------------------
Also let's assume the human ear can only hear sounds till about 0 db ( falling leaf, again ideal healthy ear ) 
Therefore our man screaming at 90 db would ideally be audible till 32764ft. But due to our environment and variable air pressure and densities the sound usually gets dampened or absorbed and is only audible till a couple of hundred feet !
--------------------------------

காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்  133  // ஒலி  செல்லும் தூரம் //
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்       
         சிலம்பு 5 புகாக்காண்டம் இந்திர விழவு ஊர் எடுத்த காதை

காவிரி வாயில் கடைமுகம் கழிந்து
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து 35
காவதம் கடந்து கவுந்திப் பள்ளி           // தூரம்  //
        சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

மதுரை மூது¡ர் யாதுஎன வினவ
ஆறுஐங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்  // தூரம்  //
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்கு
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும் 45
     சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்   // தூரம்  //
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: 155
      சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்  // தூரம்  //
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் 115
    சிலம்பு மதுரைக் காண்டம் 3 புறஞ்சேரியிறுத்த காதை

 மணிமேகலை

11. பாத்திரம் பெற்ற காதை
      மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் 1
      மணிபல்லவத்திடை மணிமேகலை தான் 
      வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் 
      தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் 
      காவதம் திரிய கடவுள் கோலத்துத்   // தூரம்  //
      தீவதிலகை செவ்வனம் தோன்றி

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
      தெற்கண் குமரி ஆடிய வருவேன் 
      பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க் 
      காவதம் கடந்து கோவலர் இருக்கையின் 85  // தூரம்  //
      ஈன்ற குழவிக்கு இரங்கேனாகி

16. ஆதிரை பிச்சையிட்ட காதை
      போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 100
      யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் 
      உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்   // தூரம்  //
      கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை

26 வஞ்சி மாநகர் புக்க காதை
     "இது நீர் முன் செய் வினையின் பயனால் 
      காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் 
      தாய மன்னவர் வசுவும் குமரனும் 
      சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும் 
      அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் 
      மூ இரு காவதம் முன்னுநர் இன்றி       // தூரம்  //
      யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் 020
      பல் கலன் கொண்டு பலர் அறியாமல் 
      எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
      தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்

     திருக்கோவையார்
கருங்கழி காதல் பைங்கானவில் தில்லை எம் கண்டர் விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்ற ஒற்றைச் சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்(று) அலந்துகண்ணீர் // தூரம்  //
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க் கைகளே 190 

      திருமந்திரம்
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே 1881  தூரம்  //

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்   தூரம்  //
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே 2879 

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்   தூரம்  //
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டா§ 2900 

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்   தூரம்  //
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே 2914

      11. 1307 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று  தூரம்  //
தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. 92

     12 -744 பெரியபுராணம் கண்ணப்ப நாயனார் புராணம்
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்   தூரம்  //
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 3.3.95

      கல்லாடம் 86
இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட அக்காவதம்
சுற்றுடல் பெற்று துணைப்  பதினாயிரம் 5

நூ த லோ சு 
மயிலை 

--

Mukunthan Pathmanesan

unread,
Jul 12, 2016, 3:25:34 PM7/12/16
to mint...@googlegroups.com
​​
நன்றி ​நூ த லோ சு ​ ஐயா, வடபெருங்கோட்டு என்று தனி இழை ஆரம்பித்துள்ளேன்.. பின்னொருகாலத்தில் யாரும் இதுபற்றித் தேடும்போது ஒரேயிடத்தில் பார்ப்பது இலகு.

தலைக்காவேரி வரை சோழன் ஆட்சி அப்போது நடந்தது என இளங்கோ குறிப்பிடுகிறார்
பார்க்கவில்லையா? அதனால் தான் வடபெருங்கோட்டு (ஸஹ்யாத்ரி மலைத் தொடர்)
கவுந்திப் பள்ளி நிகழ்வுகளை, ஸ்ரீரங்கபட்டினத்திலே சாரணர் விண்ணவர் வருகையைப்
பாடியுள்ளார்.
 
நா. கணேசன்
பார்க்கவில்லை ஐயா... அந்த வரிகளைக் குறிப்பிடுவீர்களா?

Mukunthan Pathmanesan

unread,
Jul 15, 2016, 7:25:49 AM7/15/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் ஐயா,

​ தலைக்காவேரி வரை சோழன் ஆட்சி அப்போது நடந்தது என இளங்கோ குறிப்பிடுகிறார்
பார்க்கவில்லையா?​

தாங்கள் குறிப்பிடும் வரிகளைக் குறிப்பிடமுடியுமா?

இராம.கி

unread,
Jul 15, 2016, 8:07:07 AM7/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, abans...@gmail.com, podh...@gmail.com, vas_...@hotmail.com, ara...@gmail.com, tami...@gmail.com
அன்பிற்குரிய முகுந்தன்,

வடபெருங்கோடு என்பது இந்த இடத்தில் மலையெல்லாம் கிடையாது. அது காவிரியாற்றின் வடக்கிலுள்ள பெரிய கரை. புகார் நகரத்தின் அகலம் ஒரு காதம். காவிரி ஊருக்கு நடுவில் ஓடுகிறது.  ஓர் ஆற்றின் இரு கரைகளும் மேடுகளாகத்தான் இருக்கும். வடக்கேயுள்ள கரை சற்று அகன்ற மேடு. அவ்வளவுதான். (இங்கே சென்னையில் கூவம், அடையாறு இரண்டின் கரைகளும் மேடுகள் தான். பல இடங்களின் பெருங்கோடுகள் உள்ளன.) புகார் நகரின் ஊடே ஒரு காத தூரம் நடந்து ஊருக்குச் சற்று வெளியே வந்து அங்கேயுள்ள கவுந்தியின் பள்ளிக்கு வந்துசேருகிறார்கள். வடபெருங் குவட்டில் (குவடு>கோடு = கரை) உள்ள மலர்ப்பொழிலில் கவுந்தியின் பள்ளியுள்ளது. இதற்கு அப்புறம் மதுரைக்குப் புறப்படுகிறார்கள்.  இதுதான் உள்ளமை நிலை. இங்கு பலர் புரிந்துகொண்டது மெத்தச் சரி.

நாசாக்காரர் விண்வெளிக்கதையெல்லாம் விடுவார். கொங்குநாட்டிற்கு எப்படியாவது இழுத்துப்போவார். இல்லாவிட்டால் அவருக்குப் பொழுதுபோகாது. கொங்கை விட்டால் தமிழகமே இல்லையென்றுவிடுவார். நாகசாமியின் உரைகளைக் கேட்டு நம் காதில் பூசுற்றப் பார்ப்பார். சிலப்பதிகாரம் ஒரு “நாவல்” என்பார். எதையும் உருப்படியாய் உணரவிட மாட்டார். அவர் பேச்சைக் கேட்டீர்களானால் தலைசுற்றிவிடும். நாசாக்காரர் ஒரு குழப்பவாதி. நீங்கள் இந்த இழையில் வேறு பங்காளர்களிடமிருந்து கருத்துக்கேட்டுப் பாருங்கள். பலனிருக்கும்.

சிலப்பதிகாரம் என்பது சற்றே புனைவு கொண்டு பெரிதும் உண்மையாய் நடந்த கதை; ஒரு வரலாறு. அதை எங்கு வேண்டுமானாலும் மெய்ப்பிக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Mukunthan Pathmanesan

unread,
Jul 15, 2016, 8:12:46 AM7/15/16
to mint...@googlegroups.com
அன்பின் இராம.கி ஐயா..

நன்றி, வடபெருங்கோடு என்பது காவிரிக்கரை என்பது தான் எனது புரிதலும்...

ஐயா, உங்கள் வளவு தளத்தைப் பலமுறை படித்துள்ளேன்.. நேரமிருப்பின் எனது இக்கேள்விகளுக்கும் விடையளியுங்கள் ஐயா..
 
1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557
இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..

கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?

புறஞ்சேரியிறுத்த காதை

நன்றி,
முகுந்தன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 15, 2016, 8:13:32 AM7/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Friday, July 15, 2016 at 5:07:07 AM UTC-7, இராம.கி wrote:
அன்பிற்குரிய முகுந்தன்,

வடபெருங்கோடு என்பது இந்த இடத்தில் மலையெல்லாம் கிடையாது. அது காவிரியாற்றின் வடக்கிலுள்ள பெரிய கரை. புகார் நகரத்தின் அகலம் ஒரு காதம். காவிரி ஊருக்கு நடுவில் ஓடுகிறது.  ஓர் ஆற்றின் இரு கரைகளும் மேடுகளாகத்தான் இருக்கும். வடக்கேயுள்ள கரை சற்று அகன்ற மேடு. அவ்வளவுதான். (இங்கே சென்னையில் கூவம், அடையாறு இரண்டின் கரைகளும் மேடுகள் தான். பல இடங்களின் பெருங்கோடுகள் உள்ளன.) புகார் நகரின் ஊடே ஒரு காத தூரம் நடந்து ஊருக்குச் சற்று வெளியே வந்து அங்கேயுள்ள கவுந்தியின் பள்ளிக்கு வந்துசேருகிறார்கள். வடபெருங் குவட்டில் (குவடு>கோடு = கரை) உள்ள மலர்ப்பொழிலில் கவுந்தியின் பள்ளியுள்ளது. இதற்கு அப்புறம் மதுரைக்குப் புறப்படுகிறார்கள்.  இதுதான் உள்ளமை நிலை. இங்கு பலர் புரிந்துகொண்டது மெத்தச் சரி.

நாசாக்காரர் விண்வெளிக்கதையெல்லாம் விடுவார். கொங்குநாட்டிற்கு எப்படியாவது இழுத்துப்போவார். இல்லாவிட்டால் அவருக்குப் பொழுதுபோகாது. கொங்கை விட்டால் தமிழகமே இல்லையென்றுவிடுவார். நாகசாமியின் உரைகளைக் கேட்டு நம் காதில் பூசுற்றப் பார்ப்பார். சிலப்பதிகாரம் ஒரு “நாவல்” என்பார். எதையும் உருப்படியாய் உணரவிட மாட்டார். அவர் பேச்சைக் கேட்டீர்களானால் தலைசுற்றிவிடும். நாசாக்காரர் ஒரு குழப்பவாதி. நீங்கள் இந்த இழையில் வேறு பங்காளர்களிடமிருந்து கருத்துக்கேட்டுப் பாருங்கள். பலனிருக்கும்.

சிலப்பதிகாரம் என்பது சற்றே புனைவு கொண்டு பெரிதும் உண்மையாய் நடந்த கதை; ஒரு வரலாறு. அதை எங்கு வேண்டுமானாலும் மெய்ப்பிக்க முடியும்.

ராமகி ஐயா, என்னைத் திட்டுவது ஒன்று தான் உங்கள் தொழிலா?

நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். என்னைப் பற்றி எழுதத் தேவையில்லை. 

சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.
நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.

நா. கணேசன்
 
அன்புடன்,

Singanenjam Sambandam

unread,
Jul 15, 2016, 8:14:38 AM7/15/16
to mint...@googlegroups.com
>வடக்கிலுள்ள பெரிய கரை. <

மிக்க நன்றி   ஐயா 

2016-07-15 17:37 GMT+05:30 இராம.கி <p...@giasmd01.vsnl.net.in>:

N. Ganesan

unread,
Jul 15, 2016, 8:17:39 AM7/15/16
to மின்தமிழ்
நாடுகாண் காதையில் கொற்றவ என்னும் வார்த்தை வரும் வரியைத் தேடிப் பாருங்கள்.
இளங்கோ அடிகள் சோழன் வெற்றி கொண்டதைச் சொல்லுவது போல,
மதுரைக் காஞ்சியில் பாண்டியன் நெடுஞ்செழியன் மேற்குக் கடற்கரை துறைமுகம், சாலியூரை
வெற்றி கொண்டதைக் குறிக்கிறது.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jul 15, 2016, 8:19:19 AM7/15/16
to vallamai, மின்தமிழ்

15 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.
நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.

நா. கணேசன்
 
மதுரை எரிந்துபோன கதைகூட சென்குட்டுவனுக்கு தெரியவில்லை. என்றால் அது கட்டுக்கதை அல்லது தொன்மக்கதை.
 
N. Ganesan

unread,
Jul 15, 2016, 8:30:53 AM7/15/16
to வல்லமை, mint...@googlegroups.com
கண்ணகி கொங்கையில் என்ன பாஸ்பரஸா இருந்தது? - பெரியார்.

தமிழரின் சமயம் பெண்-மன்னன்- தலித் என அடிப்படையாகக் கொண்டது என்பது சங்க இலக்கியத்தால் வெளிச்சம் ஆகிறது.
கண்ணகியின் அணங்கு சென்று மதுரையை எரித்தது என இளங்கோ சொல்கிறார். 

நாடுகாண் காதை சோழன் ஆட்சிக் கீழே இருந்தததாகவும் குறிப்பிடுகிறார். காவிரி நீருக்கு தடங்கல் இல்லாமல் செய்ய
சோழர்கள் எப்போதும் அம்மன்னர்களை அடக்க முயன்றனர் என்பது வரலாறு. அதைப் பயன்படுத்தி
வடபெருங்கோடு - மதுரைக்கு வடக்கே ~360 மைல் - கவுந்தி அடிகளை சந்திப்பதும் சீரங்கபட்டினத்தில் அந்தர சாரணர்
வருகையும், தொழுகையும் எல்லாம் தன் நாவலில் குறிப்பிடுகிறார். கண்டவியூகம் போல அமைத்துள்ளார் இக் காதையை.

அகல்நாடு - அப்போதைய சேரநாடு, அதன் தலைநகர் வஞ்சி இருந்த கொங்கு. இதனைக் குறிப்பிடுகிறார். 
காவிரி அகல் (விளக்கு) நடுவே உள்ள திரி என்பதால் கொங்குக்கு அகல்நாடு என்றார். அவரும் அங்கேயும்,
முசிறி போன்ற ஊரிலும் வாழ்ந்தார் எனலாம்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Jul 19, 2016, 9:38:23 AM7/19/16
to மின்தமிழ்

On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:

3. கொலைக்களக் காதை (18)
சாவக நோன்பிக ளடிக ளாதலின்

எனக் கோவலன் விளிக்கப்படுகின்றார். 
சாவக நோன்பிகள் என்பவர்களுக்கென்று ஏதாவது வெளியடையாளம் உள்ளதா ?
(தலைப்பாகை, மாலை , உடையின் நிறம் இதுபோல)

ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994

இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ?

இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )

பரதன் என்ற முற்பிறப்பில் இருந்தபோது கொலைசெய்யப்படுகிறான், விரதம் நீங்கியதால்.
கோவலன் என்ற பெயரை கிருஷ்ணன் என்பதன் குறியீடாக அமைக்கிறார் என்று விளக்குவது மதுராபதித் தெய்வம் முற்பிறப்புக் கதைகளைக் கூறும் பகுதி.

சுவேதாம்பர சமயத்தில் திலகம் எல்லாம் உண்டு. ஆனால், அது வட இந்தியாவில்.

தமிழ், கன்னட நாடுகளில் திகம்பர சமயம். துறவிகளுக்கும், தீர்த்தங்கரர் படிமைகளுக்கும் திலகமிட்டு ஆராதனை இல்லை.
சிலப்பதிகாரத்தில் கவுந்தி அடிகள் நெற்றி வெறும் நெற்றி. பூம்புகார் படத்தில் கருணாநிதி-சுந்தராம்பாள் எப்படி நீறில்லாமல் நடிப்பார்? http://muruganarul.blogspot.com/2011/01/kbsundarambal.html
எனவே, கவுந்தி அடிகள் கீற்றுபோல வைத்தார்.

சமண இலக்கியங்களில் திலகம் பற்றி ஏதாவது குறிப்பு உண்டா? - எனப் பார்க்கணும். கோவலன், சீவகன், போன்ற சிராவக (சாவக) நோன்பிகலுக்கு - Jain householders
சமயச் சின்னம் அணிந்தனரா என.

நா. கணேசன்

ஸ்வேதாம்பர மூர்த்தி:

N. Ganesan

unread,
Jul 19, 2016, 9:47:04 AM7/19/16
to மின்தமிழ்

> இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ? 

அப்போது சந்தனத்தில் பொட்டு வைத்திருந்ததாலா? 

  • Jains use Tilaka to mark the forehead of Jaina images with sandalwood paste, during Puja ceremonies.[15]
  •  Robert Williams (1998), Jaina Yoga: A Survey of the Mediaeval Śrāvakācāras, Motilal Banarsidass, ISBN 978-8120807754, pages 221-222
will be interesting to find out from southern (Kananda or Tamil) medieval 'Sravakaachaara traditiions recorded in texts. will try.

(திலகம் - சிவப்பு நிறம். பூசல் = போர். பூசையைக் குறிக்க அரத்த நிறம். குழந்தை பெறும் தகுதி - சுமங்கலியர் அணிதல் பொட்டு செந்நிறம். விதவை - திருநீறு.)

N. Ganesan

unread,
Jul 19, 2016, 10:11:46 AM7/19/16
to மின்தமிழ்

இந்த வரைபடம் பல தளங்களில் உள்ளது.

எந்த வரலாற்று நூலில் உள்ள வரைபடம் எனக் குறிப்பிடவில்லை?
வட நாட்டு ஆசிரியரின் இப் படத்தில் வஞ்சி காவிரிக் கரையில் உள்ளதாகக் காட்டப்படல் வேண்டும்.
அதையே தொல்பொருள் ஆய்வுகள், இலக்கியச் சான்றுகள் நிறுவியுள்ளன.

சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டம் தமிழ்நாட்டில் எனக் கொள்ளவேண்டும். பாலக்காட்டுக் கணவாய்
வழியாக முசிறி அருகே போய்வந்தாலும், தலைநகர் கணவாய்க்குக் கிழக்கே தான்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu