கொடுத்திருக்கிற பாட்டுகளின் வரிகளில் விறல் என்றால்
ஆணை என்று எங்கேயும் காண முடியவில்லை.
அன்புடன்
நா. கணேசன்
என் நெற்குப்பை தொட்டி இது.
----------------------------------------------------------
The exact reference to Dr. Saskia Kersenboom's paper is:
Kersenboom-Story, Saskia C,
ViRali (Possible sources of the devadasi tradition in the Tamil
bardic
period), Journal of Tamil Studies (Madras) 19 (Jun 1981) 19-41
She is an excellent Bharatanatyam dancer, and wrote
an important book on devadasis existing in big temples
of Tamil Nadu. Saskia, along with Nandini Ramani
(daughter of late V. Raghavan, prof. of Sanskrit, U Madras),
learnt Bharatam from T. Balasaraswati.
> viRal in viRali is strength/power. what's the "Power" of viRali?
> have written on this - the "power" to control dangrous forces, evil
> eyee etc.,
> Saskia Kersenboom-Story (Zvelebil's old student, has a nice book
> on Tolkappiyam) has written an important paper: viRali as precursor to
> Devadasi.
> Dr. Saskia K. studied KuuttiyaaL/devaraDiyaar culture, her book
> - Nityasumangali - is a great one. Ins Sangam literature, paaNans &
> viRalis
> getting "oil" from patrons, casting off "evil eye", what is meant by
> "saanthik kuuthu"? why viRal is called "satvam" (pacifying dangerous
> forces)
> - lot more can be done with Saskia, Hart books and study of Sangam
> literature.
> The genesis of caste, Dravidian contributions to it. Saiva agamas
> prescribing devadasi quarters next to brahmins homes near the temples.
> Pallavas and their followers developing devaradiyaaLs culture with
> royal grants in river delta districts.
> viRal in viRali - can be seen in the Kumbhaarathi taken in front
> of zamindar chiefs, deities in garbhagRhas, ...by Devadasis until
> recently.
> (now role taken over by cine actresses :) B. M. Sundaram has a nice
> book on early Tamil cinema actresses from Devadasi background.
> Scores of them indeed!
> N. Ganesan
On Apr 2, 3:10 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஏப்ரல், 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
> > நான் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் முனைவர் ராஜம்
> > அவர்களின் விறல் ஃபைலை எனக்கு அனுப்பிவைத்த
> > ஓம் சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கும், நண்பர்களுக்கும்
> > நன்றி.
>
> > கொடுத்திருக்கிற பாட்டுகளின் வரிகளில் விறல் என்றால்
> > ஆணை என்று எங்கேயும் காண முடியவில்லை.
>
> ”பழவிறல் மூதூர்” என்று சங்க பாடல்களில் வரும். பழம் பெருமைதான்.
>
> வீ அகம் புலம்ப வேட்டம் போகியமாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
> வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
> ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
> 'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
> பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
> வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
> நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
> அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
>
> வீறு கொண்ட புலி
>
> வேந்தன் அரசு
>
‘விறல்புகழ்’ என்ற தொடர் பல தமிழ் இலக்கிய நூல்களில்
பயில்கிறது. அவற்றையெல்லாம் தொகுத்து உரைகளைத்
தர ஆவலுடையேன். இருப்போர் தரலாம். பார்ப்பனவாகை
(பரிபாடல்), அரசவாகை (புறநானூறு, பதிற்றுப்பத்து)
விறல் = வெற்றி என்று பொருள் இருக்கிறது.
கிவாஜ, தமிழ் வையை என்ற நூலை பல ஆண்டுகளுக்கு
முன்னம் (1953) எழுதினார். பரிபாடலில் சில பாட்டுகளுக்கான
விளக்கம். அதில் இத் தொடருக்குப் பொருளை அழகாகச்
சொல்லியிருப்பார்கள். யாரிடமாவது கிவாஜ, தமிழ் வையை
இருக்கிறதா?
உவேசா, ந. சி. கந்தையாபிள்ளை, மீ. பொன். ராமநாதன், இரா. சாரங்கபாணி,
சவேசு (2009), குரோ (பிரெஞ்சு), சென்னை ஆங்கில மொழிபெயர்ப்பு (முத்துச்
சண்முகன்), ... எல்லாம் தொகுப்போம்.
பார்ப்பன வாகை என்று விளக்கவுரையை பெருமழைப்
புலவர் அருமையாய் தந்துள்ளார் (கழக வெளியீடு).
ஸ்ரீரங்கம் சுதர்சனர் அளிக்கும் உரை ரங்கன் கொடுத்துள்ளார்.
அதுவும் சிறப்பான உரையாய் இருக்கிறது.
------------------------------
”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே
பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக
இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ”
-- இவ்வாறு கூறுவர்
ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்,
ஸ்ரீ. ரங்கன் தரும் உரையில் உ. வே. கி. அய்யங்கார் பெரியாழ்வாரைக்
குறிப்பிடுள்ளார்.
ரா. ராகவையங்கார் கண்டறிந்து பதிப்பித்த நம்மாழ்வார்
தமிழ்ச் சங்கத்தில் வெற்றி கொண்ட அகவலையும் நினைவுக்குக் கொணர்கிறது.
நாஞ்சில்வேள் ஆகிய நம்மாழ்வார்
ஆரியத் தமிழால் ”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில்
புகழப்படும் திருமாலே பரம்பொருள்” என்று
நிலைநாட்டின நகரும் மதுரையே!
இச்செய்தி இருந்தையூர் என்று சங்க இலக்கியம் புகழும்
கூடல் அழகர் புராணத்தால் விளங்குகிறது.
அண்டகோள மெய்ப்பொருள்
தற்சிறப்புப்பாயிரம்
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.
---------*---------
ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்
----------*------------
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ் (10)
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற்
குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய
திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத்
தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப்
பாடலால் (13) துணியலாகும்.
அண்டகோள மெய்ப்பொருள்
(தட்டச்சு: திரு. குமரன்)
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_21.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_2604.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_3005.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_22.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/1_22.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/2_25.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/3_28.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/4.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/5.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/6.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/7.html
உ.வே.கி., பெருமழைப் புலவர் போன்றோர்
உரைக்கும் வைதிகர்கள் நிறைந்த
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நம்மாழ்வார்
ஆரியத் தமிழ் அகவல் அரங்கேற்றியுள்ளார்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
நாராயணையங்கார் உரையும் இருக்கிறது.
மீளச்சு திரு. அ. ரா. அவர்கள் செய்துள்ளார்.
அன்புடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Apr 3, 1:21 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> பல கருத்துகளைத் திரட்டி ஓரிடத்தில் அறியத் தந்த கணேசனாருக்கு நன்றி.> --
”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே
பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக
இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ”
-- இவ்வாறு கூறுவர் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்,
மேலே கண்ட வாசகம் எந்த எழுதினார்?
ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் - பரிபாடல் முழுக்க உரை எழுதியுள்ளாரா?
நன்றி,
நா. கணேசன்
--
ஓர் உதாரணம்: கொங்குவேள் செய்த பெருங்கதை.
3. மகத காண்டம்
2. மகதநாடு புக்கது
சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்
பாலையு நெய்தலும் வேலி யாகக்
40 கோல மெய்திக் குறையா வுணவொடு
துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
சிறப்பிடை யறாத தேசிக முடையது
மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
45 விறற்புக ழுடையது வீரிய மமைந்த .
மகத நாட்டின் சிறப்பு
36 - 45 : சிறந்த............அமைந்தது
(பொழிப்புரை) சிறந்த பெரும்புகழையுடைய குறிஞ்சி வளத்தையும் அந்நிலத்திலே
கால்கொண்டு சூழப்பட்டுக் கல்லென்னும் ஆரவாரத்தோடு முகில் சென்று பெயலை
மேற்கொண்ட முல்லையாகிய பழைய நிலத்திலுண்டாகிய வளங்களையும் பெற்று ஒருபால்
பாலை நிலத்தையும் மற்றொருபால் கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகிய
நெய்தலையும் தனக்குப் பாதுகாவலாகும் வேலியாகப் பெற்று ஐந்திணையழகும்
பெற்று என்றும் குறையாத உணவுப்பொருட் பெருக்கத்தோடு துறக்கத்தே வாழும்
தேவரும் விரும்புமாறு மிகப் பழங்காலத்தேயே தோன்றியதும், அன்றியும்
பிறப்பின்னாதென் றுணரும் பேரறிவோடு தோன்றிப் பிறப்பறுதற்குக் காரணமான
துறவற நெறியிலே நிற்கும் பெரியோர் பலரும் பிறத்தற்கிடனானதும்,
இடையறவில்லாதபுகழையும் ஒளியையும் உடையதும், மறப்பண்புடைமையிற்
பெருந்தகைமையுடையதும், எஞ்ஞான்றும். தன்னை வென்றடிப்படுத்தும் பகைவரை
இல்லாததும், பிறநாட்டை வெறறிகொண்டமையாலே எக்காலத்தும் புகழுடையதும்
அதற்கேற்ற மறப்பண்பமைந்ததும் என்க.
(விளக்கம்) சீர்த்தி - மிகுபுகழ். சும்மை- ஆரவாரம்- முதுதிணை - பழைமையான
நிலம். துறக்கம்-தேவர் . தொல்லை -பழைமை பெரியோர் ஈண்டுத் துறவோர்.
தேசிகம்-.ஒளியுடைமை மறப்பெருநதகை. மாசில்லாத வீரப்பண்பு. மாற்றோர் -
பகைவர் விறல்-வெற்றி வீரியம்-ஆண்மைத் தன்மை.
பெருங்கதை, உரையுடன், கழகம்.
பெருங்கதை, உவேசா பதிப்பிலும் விறலுக்கு வெற்றி
என்றே சொல்கிறார்.
நா. கணேசன்
சங்க இலக்கியங்களில் விறற்புகழ் என்னும் stock phrase
பல இடங்களில் பயில்கிறது. மிகப் பழைய, சிறந்த
உரையாசிரியர்கள் உரை இயற்றியுள்ளனர் (உ-ம்: புறநானூறு).
விறற்புகழ் என்பதை அரச வாகையாகப் பாடும் இடங்களும்,
பார்ப்பன வாகையாகப் பாடும் இடங்களும் (உ-ம்: பரிபாடல் திரட்டு)
உள்ளன.
விறற்புகழ் என்று தமிழில் வரும் இடங்களைப் பாருங்கள்.
விறற்புகழ் என்றால் என்ன? என்று உரையாசிரியர்
(கழகம்) பார்க்கலாம். விறல் = ஆணை என்பதை விட
இப்பொருள் பொருத்தமாய் உள்ளது. வேறு இடங்களிலும்
விறல் = ஆணை இல்லை.
விறற்புகழைப் பொருத்தவரை பழைய உரையாசிரியர்கள்,
புலவர்கள விளக்கத்தை ஏற்கிறேன்.
நா. கணேசன்
பரிபாடல் - உரையுடன், கழகம்,
[Begin Quote]
விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
---------------------
18 - 21: ஒருசார். . . . . . .பதி
(இ-ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
பக்கத்தே, அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி - தத்தமக்குரிய அறநெறிக்கட்
பிறழாது நின்று வேதங்களைக் கடைபோக நன்கு பயின்று இவற்றாலே பொருந்துவதாகிய
தவவொழுக்கத்திலே முதிர்ந்தமையாலே எய்தாநின்ற, விறல் புகழ நிற்ப விளங்கிய
- வெற்றிப் புகழ் யாண்டும் பரந்து நிலைத்து நிற்பத் திகழாநின்ற,
கேள்வித்திறத்தில் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - வேதங்கூறிய ஒழுக்கத்தே
ஒரு சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிக்கு வாழ்தலானே, அறத்தில்
திரியா பதி - ஏனையோரும் தத்தமக்குரிய அறவொழுக்கத்தே பிறழா தொழுகுதற்
கிடமான நகரம் உளது;
(வி-ம்.) அறத்தொடு வேதம் தவம் முற்றிய அந்தணர், விறற்புகழ்
விளங்கிய அந்தணர், கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர்,
கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர் எனத் தனித்தனி கூட்டுக.
ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தை ஈண்ட எனச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.
அந்தணர் ஈண்டுதலானே ஏனையோரும் அறத்திற் றிரியாது
ஒழுகுதற்கு இடமான பதி என்க. பதி - நகரம்.
அறத்தொடு என்புழி அறம். அந்தணர்க்கு நூலோர் வகுத்த அறுவகைப்பட்ட
ஒழுக்கம் என்க. அவையாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்
என்பனவாம். இதனை,
"ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி" (24)
எனவரும் பதிற்றுப்பத்தானும் உணர்க.
வேதம் முற்றி என்றது வேதங்களைப் பொருளுணர்ச்சியோடே கசடறக் கற்று
நிரம்பி என்றவாறு. தவம் முற்றி என்றது கற்றதனால் உணர்வு பெருகிப்
பொறிபுலனடங்க நின்று என்க.
விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி விளங்கி
நிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக் கூறப்பட்ட
புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
அஃதாவது,
ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்--ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து" (புறப்பொருள் வெ - 163)
எனவரும்.
பார்ப்பனர் தம் அறத்திலே பிறழாது நிற்பவே, அவர் வழிப்பட்ட ஏனை
அரசர் வணிகர் வேளாண்மாந்தர் ஆகியோரும் தத்தம் அறத்திலே பிறழாது நிற்றல்
ஒருதலையாகலின், 'அந்தணர் ஈண்ட அறத்திற்றிரியாபதி' என்றார். ஈண்டு அறம்
என்றது,
"ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" (தொல். புற. சூ. 19)
என வகுக்கப்பட்ட அரசரும், வணிகரும் வேளாளருமாகிய ஏனையோர்க்குரிய
ஒழுக்கங்களை என்க.
[End Quote]
ஆவயின் - அவ்விடத்தில்.
விறற்புகழ் - அரச (அ) பார்ப்பன வாகை.
திவாகரம் சூத்திரித்தது:
விறற்செயல் = வென்றிச் செயல்
விறற்புகழினின்று விறற்செயல் வெவ்வேறானவை என்பது தெளிவு.
அரசன் ஆணைக் கட்டளைகள் வென்ற இடத்தில் செயலாகும்.
அவனது முத்திரை (இலாஞ்சனை) செல்லுபடியாகும்.
விறற்செயல் - வெற்றிச் செயல் - இலாஞ்சனை, காசு, கட்டளை (ஆணை) வெற்றி (=
விறல்) அடைந்ததால் நடைமுறைப்படுத்தல்
நடக்கும். ஒரு மன்னர் அழிந்த பின் அவர் லாஞ்சனை, காசுகள்
செல்லா. வெற்றிச்செயலாக புதிய லாஞ்சனை, புதிய நாணயங்கள்
புழங்க தொடங்கும். பிரிட்டிஷ் ஆட்சி மாறிய பின் அவர்கள்
லாஞ்சனை, காசுகள் எத்தனையோ நாடுகளில் செல்லாதாயின என்பதையும ஈண்டு நினைவு
கூரலாம்.
விறற்செயல் வேறு, விறற்புகழ் (= அரச/பார்ப்பன வாகை) வேறு.
இரண்டிலும் விறல் = வெற்றி தான். புகழ் = வாகை என்பது இலக்கணம்.
நா. கணேசன்
நா. கணேசன்
On Apr 5, 9:50 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> மின் தமிழ் அன்பர்களுக்கு,
> விறல்
> விறலி
> எனும் சொற்களின் பொருள் பற்றி கருத்துக்கள் வந்தன
>
> சங்க நூல்களில் அச்சொல்லின் *(128)* பயன்பாடுகளை நோக்கினால்
> *விறலி*
>
> விறலி = பாணினி = ஆட்டம் ஆடுபவள்
>
> விறலி என்னும் சொல் சங்கம்
> மற்றும் சில நூல்களில்
> காணப்படும் வரிகளை
> (46 +24)
> இணைப்பு கோப்பினில் காண்க
>
> அன்புடன்
> நு த லோ சு
>
நன்றி, ஐயா! சிலம்பு, மணிமேகலை காப்பியங்களில்
இருந்தும் தொகுத்து வெள்ளுரை (ப்லெய்ன் - டெக்ஸ்ட்)
ஆக அனுப்புங்கள்.
எல்லா நிகண்டுகளையும் படித்தாய்ந்தபின் தமிழ்ப் புலவர்கள்
விறல் என்ற சொல்லுக்கு பொருள் தொகுத்துள்ளனர்.
லெக்சிகன் தரும் பொருள்கள்:
விறு-/வீறு- என்னும் வேரில் பிறப்பது விறல்.
விறப்பு viṟappu
, n. < id. 1. Crowdedness, density, intensity; செறிவு. (தொல். சொல்.
347.) 2. Increase; பெருக்கம். (W.) 3. Strength; பலம். (பிங்.) 4. cf.
விறல். Victory; வெற்றி. (சூடா.) 5. Battle; போர். (சூடா.) 6. Fear;
அச்சம். (தொல். சொல். 348.)
விறல்¹ viṟal
, n. cf. விற-. 1. Victory; வெற்றி. விறலீனும் வேண்டாமை யென்னுஞ்
செருக்கு (குறள், 180). 2. Bravery; வீரம். (யாழ். அக.) 3. Strength;
வலி. விறல்விசயனே வில்லுக்கிவ னென் றும் (தேவா. 647, 2). 4. Greatness;
பெருமை. (பிங்.) 5. Distinctive excellence; விசேடம். பெருவிறல்
யாணர்த்தாகி (புறநா. 42, 12). 6. Physical expression of emotion;
உள்ளக்குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு. (தொல். பொ. 249,
உரை.)
நா. கணேசன்
விறல் (< விற-)
விற-த்தல் viṟa-
, 12 v. intr. [K. veṟe.] 1. To be dense, close; to be intense;
செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 2. cf. இற-. To
abound, increase; மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள்
பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை). 3. To conquer;
வெற்றிபெறுதல். (W.) 4. To To fight; போர்செய்தல். (W.) 5. To fear;
வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348).
விறல் - அச்சம் என்ற பொருளும் உண்டு (தொல்காப்பியம்).
பேயோட்டும் சாமியாடிகளான நடன மாதர்.
http://groups.google.com/group/mintamil/msg/0e3d2582e703e5a2
முழுக்கப் புரிந்துகொள்ள பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோரின் 40+
சங்க இலக்கிய ஆய்வுகள் துணைகொள்ளலாம்.
நா. கணேசன்
PS:
தமிழின் முதல் கணினி எழுதுரு - ஹார்ட் செய்ததே
http://tamil.berkeley.edu/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d
http://groups.google.com/group/mintamil/msg/b459b02c9ebd85fb


நா. கணேசன்
On Apr 5, 10:47 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> The result obtained here is the indexing of the word Viral and Virali
> It can further be analysed in terms of frequency count of the words
> according to the frequency of occurence
> I used the PDF document supplied by NDLS and found Viraliar was the most
> frequently occuring
> The concordance uses key word in context
> The sad fact is that the PDF document's font is different from the fefault
> font thus making the whole document search encounters difficulty
> Further there seems to be a classification of clan and kin where the virali
> and paraththai are differentiated.
Dear Prof.
Paraththai is the oldest profession as they say. The main job of
viRalis is to act as go-betweens for chieftains to bring parathais
in Sangam poetry. Usually, the thalaivi is mad at paaNan-s and
viRali-s for doing this service to chiefs.
This is common in land lords' houses all over India for ages.
Have a good day!
N. Ganesan
> [image: virali1.jpg]
> [image: virali2.jpg]
>
> Whereas Dr.N.Ganesan opined that the virali can be construed similar to
> Devadasi
> Nagarajan
> 2011/4/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
>
> virali1.jpg
> 30KViewDownload
>
> virali2.jpg
> 56KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -