விறல், விறலி

468 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 2, 2011, 9:12:49 AM4/2/11
to மின்தமிழ்
நான் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் முனைவர் ராஜம்
அவர்களின் விறல் ஃபைலை எனக்கு அனுப்பிவைத்த
ஓம் சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கும், நண்பர்களுக்கும்
நன்றி.

கொடுத்திருக்கிற பாட்டுகளின் வரிகளில் விறல் என்றால்
ஆணை என்று எங்கேயும் காண முடியவில்லை.

அன்புடன்
நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 2, 2011, 9:46:31 AM4/2/11
to மின்தமிழ்

என் குப்பைத்தொட்டி என்று ஹரிகி எழுதுகிறார்.
நெற்குப்பை - செட்டிநாட்டு ஊர் - பல தமிழறிஞர்களை
தந்த ஊர் (சிலரை - தமிழண்ணல், சோமலெ - நானறிவேன்).

என் நெற்குப்பை தொட்டி இது.
----------------------------------------------------------

The exact reference to Dr. Saskia Kersenboom's paper is:

Kersenboom-Story, Saskia C,
ViRali (Possible sources of the devadasi tradition in the Tamil
bardic
period), Journal of Tamil Studies (Madras) 19 (Jun 1981) 19-41

She is an excellent Bharatanatyam dancer, and wrote
an important book on devadasis existing in big temples
of Tamil Nadu. Saskia, along with Nandini Ramani
(daughter of late V. Raghavan, prof. of Sanskrit, U Madras),
learnt Bharatam from T. Balasaraswati.

> viRal in viRali is strength/power. what's the "Power" of viRali?
> have written on this - the "power" to control dangrous forces, evil
> eyee etc.,
> Saskia Kersenboom-Story (Zvelebil's old student, has a nice book
> on Tolkappiyam) has written an important paper: viRali as precursor to
> Devadasi.
> Dr. Saskia K. studied KuuttiyaaL/devaraDiyaar culture, her book
> - Nityasumangali - is a great one. Ins Sangam literature, paaNans &
> viRalis
> getting "oil" from patrons, casting off "evil eye", what is meant by
> "saanthik kuuthu"? why viRal is called "satvam" (pacifying dangerous
> forces)
> - lot more can be done with Saskia, Hart books and study of Sangam
> literature.
> The genesis of caste, Dravidian contributions to it. Saiva agamas
> prescribing devadasi quarters next to brahmins homes near the temples.
> Pallavas and their followers developing devaradiyaaLs culture with
> royal grants in river delta districts.

> viRal in viRali - can be seen in the Kumbhaarathi taken in front
> of zamindar chiefs, deities in garbhagRhas, ...by Devadasis until
> recently.
> (now role taken over by cine actresses :) B. M. Sundaram has a nice
> book on early Tamil cinema actresses from Devadasi background.
> Scores of them indeed!

> N. Ganesan

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2011, 4:10:24 PM4/2/11
to mint...@googlegroups.com


2 ஏப்ரல், 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

”பழவிறல் மூதூர்” என்று சங்க பாடல்களில் வரும். பழம் பெருமைதான்.
 

வீ அகம் புலம்ப வேட்டம் போகியமாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!


வீறு கொண்ட புலி



வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

N. Ganesan

unread,
Apr 3, 2011, 2:17:40 PM4/3/11
to மின்தமிழ்

On Apr 2, 3:10 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஏப்ரல், 2011 8:12 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > நான் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் முனைவர் ராஜம்
> > அவர்களின் விறல் ஃபைலை எனக்கு அனுப்பிவைத்த
> > ஓம் சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கும், நண்பர்களுக்கும்
> > நன்றி.
>
> > கொடுத்திருக்கிற பாட்டுகளின் வரிகளில் விறல் என்றால்
> > ஆணை என்று எங்கேயும் காண முடியவில்லை.
>
> ”பழவிறல் மூதூர்” என்று சங்க பாடல்களில் வரும். பழம் பெருமைதான்.
>
> வீ அகம் புலம்ப வேட்டம் போகியமாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
> வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
> ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
> 'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
> பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
> வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
> நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
> அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
>
> வீறு கொண்ட புலி
>
> வேந்தன் அரசு
>

‘விறல்புகழ்’ என்ற தொடர் பல தமிழ் இலக்கிய நூல்களில்
பயில்கிறது. அவற்றையெல்லாம் தொகுத்து உரைகளைத்
தர ஆவலுடையேன். இருப்போர் தரலாம். பார்ப்பனவாகை
(பரிபாடல்), அரசவாகை (புறநானூறு, பதிற்றுப்பத்து)
விறல் = வெற்றி என்று பொருள் இருக்கிறது.

கிவாஜ, தமிழ் வையை என்ற நூலை பல ஆண்டுகளுக்கு
முன்னம் (1953) எழுதினார். பரிபாடலில் சில பாட்டுகளுக்கான
விளக்கம். அதில் இத் தொடருக்குப் பொருளை அழகாகச்
சொல்லியிருப்பார்கள். யாரிடமாவது கிவாஜ, தமிழ் வையை
இருக்கிறதா?

உவேசா, ந. சி. கந்தையாபிள்ளை, மீ. பொன். ராமநாதன், இரா. சாரங்கபாணி,
சவேசு (2009), குரோ (பிரெஞ்சு), சென்னை ஆங்கில மொழிபெயர்ப்பு (முத்துச்
சண்முகன்), ... எல்லாம் தொகுப்போம்.

பார்ப்பன வாகை என்று விளக்கவுரையை பெருமழைப்
புலவர் அருமையாய் தந்துள்ளார் (கழக வெளியீடு).

ஸ்ரீரங்கம் சுதர்சனர் அளிக்கும் உரை ரங்கன் கொடுத்துள்ளார்.
அதுவும் சிறப்பான உரையாய் இருக்கிறது.
------------------------------
”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே
பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக
இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ”
-- இவ்வாறு கூறுவர்
ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்,

ஸ்ரீ. ரங்கன் தரும் உரையில் உ. வே. கி. அய்யங்கார் பெரியாழ்வாரைக்
குறிப்பிடுள்ளார்.

ரா. ராகவையங்கார் கண்டறிந்து பதிப்பித்த நம்மாழ்வார்
தமிழ்ச் சங்கத்தில் வெற்றி கொண்ட அகவலையும் நினைவுக்குக் கொணர்கிறது.
நாஞ்சில்வேள் ஆகிய நம்மாழ்வார்
ஆரியத் தமிழால் ”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில்
புகழப்படும் திருமாலே பரம்பொருள்” என்று
நிலைநாட்டின நகரும் மதுரையே!

இச்செய்தி இருந்தையூர் என்று சங்க இலக்கியம் புகழும்
கூடல் அழகர் புராணத்தால் விளங்குகிறது.

அண்டகோள மெய்ப்பொருள்

தற்சிறப்புப்பாயிரம்

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.

---------*---------

ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்

----------*------------
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ் (10)
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.


இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற்
குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய
திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத்
தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப்
பாடலால் (13) துணியலாகும்.

அண்டகோள மெய்ப்பொருள்
(தட்டச்சு: திரு. குமரன்)
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_21.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_2604.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_3005.html

http://emperumaanaar.blogspot.com/2009/05/blog-post_22.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/1_22.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/2_25.html
http://emperumaanaar.blogspot.com/2009/05/3_28.html

http://emperumaanaar.blogspot.com/2009/06/4.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/5.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/6.html
http://emperumaanaar.blogspot.com/2009/06/7.html

உ.வே.கி., பெருமழைப் புலவர் போன்றோர்
உரைக்கும் வைதிகர்கள் நிறைந்த
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நம்மாழ்வார்
ஆரியத் தமிழ் அகவல் அரங்கேற்றியுள்ளார்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
நாராயணையங்கார் உரையும் இருக்கிறது.
மீளச்சு திரு. அ. ரா. அவர்கள் செய்துள்ளார்.

அன்புடன்,
நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Apr 3, 2011, 2:21:55 PM4/3/11
to mint...@googlegroups.com


2011/4/3 N. Ganesan <naa.g...@gmail.com>
பல கருத்துகளைத் திரட்டி ஓரிடத்தில் அறியத் தந்த கணேசனாருக்கு நன்றி. 

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Apr 3, 2011, 2:32:05 PM4/3/11
to மின்தமிழ்

On Apr 3, 1:21 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> பல கருத்துகளைத் திரட்டி ஓரிடத்தில் அறியத் தந்த கணேசனாருக்கு நன்றி.> --

”வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே


பரம்பொருள்” என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக
இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ”
-- இவ்வாறு கூறுவர் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்,

மேலே கண்ட வாசகம் எந்த எழுதினார்?
ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் - பரிபாடல் முழுக்க உரை எழுதியுள்ளாரா?

நன்றி,
நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Apr 3, 2011, 2:36:02 PM4/3/11
to mint...@googlegroups.com
சாதிமத ஆராய்ச்சி -- முதல் பாகம், இரண்டாம் பாகம் 

(சங்ககால சமயநிலை பற்றிய ஆராய்ச்சி) 
ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் வெளியீடு 

ஆசிரியர் -- ஸ்ரீ எஸ் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் 
1977 

பரிபாடலில் சில பாடல்களுக்கு உரை வரைந்துள்ளார். 
*

2011/4/4 N. Ganesan <naa.g...@gmail.com>

--

N. Ganesan

unread,
Apr 3, 2011, 4:54:55 PM4/3/11
to மின்தமிழ்

‘விறற்புகழ்’ என்னும் தொடரை அறிய, அது வரும்
இலக்கிய வழக்காறுகளைப் படிப்போம்.

ஓர் உதாரணம்: கொங்குவேள் செய்த பெருங்கதை.

3. மகத காண்டம்
2. மகதநாடு புக்கது


சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்
பாலையு நெய்தலும் வேலி யாகக்
40 கோல மெய்திக் குறையா வுணவொடு
துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
சிறப்பிடை யறாத தேசிக முடையது
மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
45 விறற்புக ழுடையது வீரிய மமைந்த .


மகத நாட்டின் சிறப்பு
36 - 45 : சிறந்த............அமைந்தது


(பொழிப்புரை) சிறந்த பெரும்புகழையுடைய குறிஞ்சி வளத்தையும் அந்நிலத்திலே
கால்கொண்டு சூழப்பட்டுக் கல்லென்னும் ஆரவாரத்தோடு முகில் சென்று பெயலை
மேற்கொண்ட முல்லையாகிய பழைய நிலத்திலுண்டாகிய வளங்களையும் பெற்று ஒருபால்
பாலை நிலத்தையும் மற்றொருபால் கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகிய
நெய்தலையும் தனக்குப் பாதுகாவலாகும் வேலியாகப் பெற்று ஐந்திணையழகும்
பெற்று என்றும் குறையாத உணவுப்பொருட் பெருக்கத்தோடு துறக்கத்தே வாழும்
தேவரும் விரும்புமாறு மிகப் பழங்காலத்தேயே தோன்றியதும், அன்றியும்
பிறப்பின்னாதென் றுணரும் பேரறிவோடு தோன்றிப் பிறப்பறுதற்குக் காரணமான
துறவற நெறியிலே நிற்கும் பெரியோர் பலரும் பிறத்தற்கிடனானதும்,
இடையறவில்லாதபுகழையும் ஒளியையும் உடையதும், மறப்பண்புடைமையிற்
பெருந்தகைமையுடையதும், எஞ்ஞான்றும். தன்னை வென்றடிப்படுத்தும் பகைவரை
இல்லாததும், பிறநாட்டை வெறறிகொண்டமையாலே எக்காலத்தும் புகழுடையதும்
அதற்கேற்ற மறப்பண்பமைந்ததும் என்க.

(விளக்கம்) சீர்த்தி - மிகுபுகழ். சும்மை- ஆரவாரம்- முதுதிணை - பழைமையான
நிலம். துறக்கம்-தேவர் . தொல்லை -பழைமை பெரியோர் ஈண்டுத் துறவோர்.
தேசிகம்-.ஒளியுடைமை மறப்பெருநதகை. மாசில்லாத வீரப்பண்பு. மாற்றோர் -
பகைவர் விறல்-வெற்றி வீரியம்-ஆண்மைத் தன்மை.

பெருங்கதை, உரையுடன், கழகம்.

பெருங்கதை, உவேசா பதிப்பிலும் விறலுக்கு வெற்றி
என்றே சொல்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 5, 2011, 8:31:07 AM4/5/11
to மின்தமிழ்


சங்க இலக்கியங்களில் விறற்புகழ் என்னும் stock phrase
பல இடங்களில் பயில்கிறது. மிகப் பழைய, சிறந்த
உரையாசிரியர்கள் உரை இயற்றியுள்ளனர் (உ-ம்: புறநானூறு).
விறற்புகழ் என்பதை அரச வாகையாகப் பாடும் இடங்களும்,
பார்ப்பன வாகையாகப் பாடும் இடங்களும் (உ-ம்: பரிபாடல் திரட்டு)
உள்ளன.

விறற்புகழ் என்று தமிழில் வரும் இடங்களைப் பாருங்கள்.
விறற்புகழ் என்றால் என்ன? என்று உரையாசிரியர்
(கழகம்) பார்க்கலாம். விறல் = ஆணை என்பதை விட
இப்பொருள் பொருத்தமாய் உள்ளது. வேறு இடங்களிலும்
விறல் = ஆணை இல்லை.

விறற்புகழைப் பொருத்தவரை பழைய உரையாசிரியர்கள்,
புலவர்கள விளக்கத்தை ஏற்கிறேன்.

நா. கணேசன்

பரிபாடல் - உரையுடன், கழகம்,

[Begin Quote]

விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.


---------------------

18 - 21: ஒருசார். . . . . . .பதி
(இ-ள்.) ஒருசார் - பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
பக்கத்தே, அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி - தத்தமக்குரிய அறநெறிக்கட்
பிறழாது நின்று வேதங்களைக் கடைபோக நன்கு பயின்று இவற்றாலே பொருந்துவதாகிய
தவவொழுக்கத்திலே முதிர்ந்தமையாலே எய்தாநின்ற, விறல் புகழ நிற்ப விளங்கிய
- வெற்றிப் புகழ் யாண்டும் பரந்து நிலைத்து நிற்பத் திகழாநின்ற,
கேள்வித்திறத்தில் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - வேதங்கூறிய ஒழுக்கத்தே
ஒரு சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிக்கு வாழ்தலானே, அறத்தில்
திரியா பதி - ஏனையோரும் தத்தமக்குரிய அறவொழுக்கத்தே பிறழா தொழுகுதற்
கிடமான நகரம் உளது;

(வி-ம்.) அறத்தொடு வேதம் தவம் முற்றிய அந்தணர், விறற்புகழ்
விளங்கிய அந்தணர், கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர்,
கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர் எனத் தனித்தனி கூட்டுக.

ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தை ஈண்ட எனச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.

அந்தணர் ஈண்டுதலானே ஏனையோரும் அறத்திற் றிரியாது
ஒழுகுதற்கு இடமான பதி என்க. பதி - நகரம்.

அறத்தொடு என்புழி அறம். அந்தணர்க்கு நூலோர் வகுத்த அறுவகைப்பட்ட
ஒழுக்கம் என்க. அவையாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்
என்பனவாம். இதனை,
"ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி" (24)
எனவரும் பதிற்றுப்பத்தானும் உணர்க.

வேதம் முற்றி என்றது வேதங்களைப் பொருளுணர்ச்சியோடே கசடறக் கற்று
நிரம்பி என்றவாறு. தவம் முற்றி என்றது கற்றதனால் உணர்வு பெருகிப்
பொறிபுலனடங்க நின்று என்க.

விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப் பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி விளங்கி
நிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக் கூறப்பட்ட
புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
அஃதாவது,
ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்--ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து" (புறப்பொருள் வெ - 163)
எனவரும்.

பார்ப்பனர் தம் அறத்திலே பிறழாது நிற்பவே, அவர் வழிப்பட்ட ஏனை
அரசர் வணிகர் வேளாண்மாந்தர் ஆகியோரும் தத்தம் அறத்திலே பிறழாது நிற்றல்
ஒருதலையாகலின், 'அந்தணர் ஈண்ட அறத்திற்றிரியாபதி' என்றார். ஈண்டு அறம்
என்றது,
"ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" (தொல். புற. சூ. 19)
என வகுக்கப்பட்ட அரசரும், வணிகரும் வேளாளருமாகிய ஏனையோர்க்குரிய
ஒழுக்கங்களை என்க.

[End Quote]

N. Ganesan

unread,
Apr 5, 2011, 8:57:08 AM4/5/11
to மின்தமிழ்
ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே ஆவயின் விறற்செயல் ஆணைக் கிளவி” (திவாகர
நிகண்டு: 11: 242)

ஆவயின் - அவ்விடத்தில்.

விறற்புகழ் - அரச (அ) பார்ப்பன வாகை.

திவாகரம் சூத்திரித்தது:
விறற்செயல் = வென்றிச் செயல்

விறற்புகழினின்று விறற்செயல் வெவ்வேறானவை என்பது தெளிவு.

அரசன் ஆணைக் கட்டளைகள் வென்ற இடத்தில் செயலாகும்.
அவனது முத்திரை (இலாஞ்சனை) செல்லுபடியாகும்.
விறற்செயல் - வெற்றிச் செயல் - இலாஞ்சனை, காசு, கட்டளை (ஆணை) வெற்றி (=
விறல்) அடைந்ததால் நடைமுறைப்படுத்தல்
நடக்கும். ஒரு மன்னர் அழிந்த பின் அவர் லாஞ்சனை, காசுகள்
செல்லா. வெற்றிச்செயலாக புதிய லாஞ்சனை, புதிய நாணயங்கள்
புழங்க தொடங்கும். பிரிட்டிஷ் ஆட்சி மாறிய பின் அவர்கள்
லாஞ்சனை, காசுகள் எத்தனையோ நாடுகளில் செல்லாதாயின என்பதையும ஈண்டு நினைவு
கூரலாம்.

விறற்செயல் வேறு, விறற்புகழ் (= அரச/பார்ப்பன வாகை) வேறு.
இரண்டிலும் விறல் = வெற்றி தான். புகழ் = வாகை என்பது இலக்கணம்.


நா. கணேசன்

N D Llogasundaram

unread,
Apr 5, 2011, 10:50:25 AM4/5/11
to mint...@googlegroups.com
மின் தமிழ் அன்பர்களுக்கு,
                                                   விறல்
                                                   விறலி
எனும் சொற்களின்  பொருள் பற்றி கருத்துக்கள் வந்தன
 
சங்க நூல்களில் அச்சொல்லின் (128) பயன்பாடுகளை   நோக்கினால் 
சரியான பொருள் தெரியும் எனும் கருத்தில் அவற்றின் நீண்டதொரு
நிரலை வைக்கின்றேன் காண்க
 
                 சங்க நூல்களில் விறல்
                     எனும் சொல் பயன்பாடு
 
                 குறிஞ்சிப்பாட்டு
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு   200
 
 
                   மலைபடுகடாம்
நோனாச் செருவின் வலம்படு நோன்றாள்
மான விறல்வேள் வயிரிய மெனினே  164
- - - - - - - -
நனிசேய்த் தன்றவன் பழவிறல் மூதூர்
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்  487
- - - - - - - -
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி  493
வந்தோர் மன்ற அளியர் தாமென
- - - - - - - -
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்தி           544
 
 
                 மதுரைக் காஞ்சி
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்            33
- - - - - - - -
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்  344
அழும்பில் அன்ன நாடிழந் தனரும்
- - - - - - - -
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி  371
 
 
                    நெடுநல்வாடை
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிகதில் அம்ம மின்அவிர்  197
 
 
           பெரும்பாணாற்றுப்படை
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி  178
- - - - - - - -
விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர்
அவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வாய்  411
 
                    திருமுருகாற்றுப்படை
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறல்கொடி  38
- - - - - - - -
வென்றடு விறல்களம் பாடித்தோள் பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க  55
- - - - - - - -
மாலை மார்ப நூலறி புலவி
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள  292
 
 
             சிறுபாணாற்றுப்படை
திறல் வேல் நுதியில் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்  174
- - - - - - - -
திறல்சால் வென்றியடு தெவ்வுப்புலம் அகற்றி
விறல்வேல் மன்னர் மன்எயில் முருக்கி  247
 
                       அகநானுறு 3
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்  6
                       அகநானுறு 17
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி  20
                       அகநானுறு 49
பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி   10
                       அகநானுறு 75
சென்றுபடு விறல்கவின் உள்ளி என்றும்  14
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்
                    அகநானுறு 137
சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்றெறி முரசின் விறல்போர்ச் சோழர்   5
                   அகநானுறு 141
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய   10
விழவுஉடன் அயர வருகதில் அம்ம
                   அகநானுறு 148
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
உறுபுலி உரறக் குத்தி விறல்கடிந்து   5
                   அகநானுறு 174
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்என  3
                   அகநானுறு 178
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்  1
வெண்தேர் ஓடும் கடம்கால் மருங்கில்
                   அகநானுறு 197
தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல்   10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
                   அகநானுறு 201
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறல்போர்ப் பாண்டியன்  3
                   அகநானுறு 213
வினைநவில் யானை விறல்போர்த் தொண்டையர்  1
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
                   அகநானுறு 218
புயலேறு உறைஇய விறல்இருள் நடுநாள்  6
விறல்இழைப் பொலிந்த காண்பின் சாயல்
- - - - - - - -
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல்இழை நெகிழச் சாஅய்தும் அதுவே  17
                   அகநானுறு 248
அருவழி விலக்கும்எம் பெருவிறல் போலும் என  9
எய்யாது பெயரும் குன்ற நாடன்
                   அகநானுறு 290
வெண்கோட்டு யானை விறல்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறை  12
                   அகநானுறு 318
முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட  7
                   அகநானுறு 375
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்  9
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
                   அகநானுறு 382
வறனுறல் அறியாச் சோலை
விறல்மலை நாடன் சொல்நயந் தோயே  13
                   அகநானுறு 400
புதுவது ஆகின்று அம்ம பழவிறல்   24
பாடுஎழுந்து இரங்கு முந்நீர்
 
                   புறநானுறு 11
விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்   6
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
                   புறநானுறு 12
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி  3
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
                   புறநானுறு 19
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன  14
                   புறநானுறு 22
ஓங்கு கொல்லியோர் அடு பொருந
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்   29
                   புறநானுறு 38
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே   4
                   புறநானுறு 42
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்    12
                   புறநானுறு 55
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த   3
                   புறநானுறு 56
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யனும்  6
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
                   புறநானுறு 63
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
விறல்புகழ் மாண்ட புரவி எல்லாம்   3
                   புறநானுறு 75
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்   2
                   புறநானுறு 120
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே  21
                   புறநானுறு 122
வீயாத் திருவின் விறல்கெழு தானை  4
மூவருள் ஒருவன் துப்பா கியர் என  
                    புறநானுறு 137
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை   2
                   புறநானுறு 151
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்  2
                   புறநானுறு 152
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்   வெய் யோனே   32
                   புறநானுறு 159
அதற்பட அருளல் வேண்டுவல் விறல்புகழ்  26
வசையில் விழுத்திணைப் பிறந்த
                    புறநானுறு 161
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்  20
                   புறநானுறு 174
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்  14
                    புறநானுறு 201
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல்போர் அண்ணல்  12
                    புறநானுறு 205
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே
விறல்சினம் தணிந்த விரைபரிப் புரவி  3
                    புறநானுறு 213
மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே  2
                   புறநானுறு 266
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்  6
வான்தோய் நீள்குடை வயமான் சென்னி
                   புறநானுறு 308
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்   8
                   புறநானுறு 313
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்  1
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி
                    புறநானுறு 336
அன்னோ பெரும்பே துற்றன்றுஇவ் வருங்கடிமூதூர்
அறன்இலன் மன்ற தானே விறல்மலை  8
                   புறநானுறு 339
கழி நெய்தற் பூக் குறூஉந்து
பைந்தழை துயல்வருஞ் செறுவிறல்   9
                   புறநானுறு 380
இன்னிசைய விறல் வென்றித்   4
தென் னவர் வய மறவன்
                   புறநானுறு 385
வேங்கட விறல்வரைப் பட்ட   11
ஓங்கல் வானத்து உறையினும் பலவே  
                   புறநானுறு 387
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
வென் றிரங்கும் விறல் முரசினோன்  19
 
                    கலித்தொகை 3
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல்நலன் இழப்பவும், வினைவேட்டாய் கேஎள்இனி  5
                    கலித்தொகை 8
விறல்மலை வெம்பிய போக்குஅரு வெஞ்சுரம்  6
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள்
                    கலித்தொகை 20
மணிதிகழ் விறல்மலை வெம்ப மண்பகத்  5
துணிகயம் துகள்பட்ட தூங்குஅழல் வெஞ்சுரம்
                    கலித்தொகை 30
உறலியாம் ஒளிவாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல்இழை யவரோடு விளையாடு வான்மன்னோ  14
                    கலித்தொகை 44
திருநயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல்வெற்ப  7
தன்எவ்வம் கூரினும், நீசெய்த அருள்இன்மை
                    கலித்தொகை  45
நறுவீய நனம்சாரல் சிலம்பலின், கதுமெனச்,
சிறுகுடி துயில்எழூஉம் சேண்உயர் விறல்வெற்ப 7
                    கலித்தொகை  46
'வேங்கை அம் சினை' எனவிறல் புலிமுற்றியும்  5
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்
                    கலித்தொகை  53
வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல்மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா  2
- - - - - - - -
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல்வெற்ப  7
                    கலித்தொகை  81
ஆல் அமர் செல்வன் அணி சால் பெருவிறல்  9
போல, வரும் என் உயிர்
                    கலித்தொகை  104
வேல்நுதி புரைவிறல் திறன்நுதி மருப்பின் மாறுஅஞ்சான்
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை  34
                    கலித்தொகை  124
நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்றவேல் நுதிஏய்க்கும் விறல்நலன் இழந்துஇனி ௧௫
 
                  குறுந்தொகை 125
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறல்  4
பறைவலந் தப்பிய பைதல் நாரை
                  குறுந்தொகை 218
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்  1
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
                  குறுந்தொகை 226
பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென  2
                  குறுந்தொகை 297
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறல்பகை பேணார்  2
                  குறுந்தொகை 338
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்  6
விளங்குநக ரடங்கிய கற்பின்   
                  குறுந்தொகை 359
புதல்வற் றழீஇயினன் விறலவன்   5
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே

                   பரிபாடல் 1
கடறரு மணியடும் முத்துயாத்த நேரணி
நெறிசெறி வெறிஉறு முறல்விறல் வணங்குஅணங்குவில் 18
- - - - - - - -
திரு மறு மார்ப நீ அருளல் வேண்டும்
விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும்   40
                   பரிபாடல் 1
பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பொரு விறல்மள்ள   90
                   பரிபாடல் 5
ஒருவனை வாழி ஓங்குவிறல் சேஎய்  54
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
                   பரிபாடல் 8
விறல்வெய்யோன் ஊர்மயில் வேல்நிழல் நோக்கி 67
அறவர்அடி தொடினும் ஆங்குஅவை சூளேல்
                   பரிபாடல் 9
மேஎ எ·கினவை
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை   80
                   பரிபாடல் 13
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல்மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்  32
                   பரிபாடல் 18
தண் தளிர் தருப் படுத்து எடுத்து உரைஇ
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்  23
                   பரிபாடல் 21
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண்
மீ நீர் நிவந்த விறலிழை ' கேள்வனை   40
                   பரிபாடல் திரட்டு 1
விறல்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்  19
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி
- - - - - - - -
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்
விடையோடு இகலிய விறல்நடையோரும்       ௪௦
 
                  பதிற்றுப்பத்து 11
கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எ·கம் விலங்குநர் அறுப்ப  6
                  பதிற்றுப்பத்து ௨௦ (பதிகம்)
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு   10
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
                  பதிற்றுப்பத்து 28
திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர்  1
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
                  பதிற்றுப்பத்து31
வடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே  18
                  பதிற்றுப்பத்து 49
கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த   16
பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே
                  பதிற்றுப்பத்து 61
பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்  2
                  பதிற்றுப்பத்து 80
மாமலையில் கணண்கொண்(டு)அவர்
எடுத்(து)எறிந்த விறல்முரசம்   3
                  பதிற்றுப்பத்து 90
அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
விறல்மாந்தரன் விறல்மருக   13
                  பதிற்றுப்பத்து திரட்டு 4
பகைவெம் மையின் அசையா ஊக்கலை
வேறுபுலத்(து) இறுத்த விறல்வெந் தானையடு  ௬
 
                ஐங்குறுநூறு 220
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு  3
                ஐங்குறுநூறு 226
வன்புடை விறல்கவின் கொண்ட   4
வன்பி லாளன் வந்தனன் இனியே
                ஐங்குறுநூறு 229
வந்தன னோமற்று இரவில்
பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே  4
                ஐங்குறுநூறு 230
பொன்போல் விறல்கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே  4
                ஐங்குறுநூறு 250
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்  4
                ஐங்குறுநூறு 332
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறநில மன்ற தாமே விறல்மிசை   2
                ஐங்குறுநூறு 391
வெம்சின விறல்வேல் காளையடு   5
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே
                ஐங்குறுநூறு 467
நம்மினும் விரையும் என்ப
வெம்முரண் யானை விறல்போர் வேந்தே  5
                 ஐங்குறுநூறு 488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே
பெருவிறல் காதலி கருதும் பொழுதே  ௨
 
                நற்றிணை 37
பிணங்கு அரில்வாடிய பழவிறல் நனந்தலை  1
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
                நற்றிணை 85
ஆய்மலர் மழைக்கண் தெள்பனி உறைப்பவும்
வேய்மருள் பணைத்தோள் விறல்இழை நெகிழவும்  2
                நற்றிணை 153
உண்டல் அளித்து என் உடம்பே விறல்போர்   7
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
                நற்றிணை 181
வந்தன்று பெருவிறல் தேரே   12
உய்ந்தன்றாகும் இவள் ஆய் நுதற் கவினே
                நற்றிணை 208
விறல்சால் விளங்குஇழை நெகிழ விம்மி  1
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப
                நற்றிணை 270
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோநின் விறல்தகை மையே  11
                நற்றிணை 293
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்  4
                நற்றிணை 304
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே  10
                நற்றிணை 320
இளையோள் இறந்த அனைத்தற்கு பழவிறல்  4
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
 
               திணை மொழி ஐம்பது 1
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறல்மலை நாட வரிஅரிதாங் கொல்லோ 
               திணை மொழி ஐம்பது  6
யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறல்மலை நன்னாட
 
                கார் நாற்பது 33
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணித்த
 
               நாலடியார் 116
விறல்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்
               நாலடியார்  347
வேகம் உடைத்தாம் விறல்மலை நன்னாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்
               நாலடியார்  368
வீழும் அருவி விறல்மலை நன்னாட
வாழ்வின் வரைபாய்தல் நன்று
 
           திருக்குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு
 
இது   ஓர் பண்புப் பெயர்ச் சொல்  எனவே காண்கிறது
 
 விறல் என்றால் வீரம் வெற்றி என  ஒன்றுதான் பொருள் என கூற முடியாது
 
                       செறிந்த (=அடர்த்தியான)
 
                       நன்கு தெரிந்த (=பெயர் போன)
 
                      உருண்டு திரண்ட
போன்ற பல பொருள்களிலும் பயன்பட்டுள்ளது
 
-----------------------------------------------------------------------
                            விறலி
 
விறலி = பாணினி = ஆட்டம் ஆடுபவள்
 
விறலி என்னும் சொல் சங்கம்
மற்றும் சில நூல்களில்
காணப்படும் வரிகளை
                  (46 +24)
 இணைப்பு கோப்பினில் காண்க
 
அன்புடன்
நு த லோ சு
 
 
2011/4/4 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்

viRali.pdf

N. Ganesan

unread,
Apr 5, 2011, 11:33:04 AM4/5/11
to மின்தமிழ்

On Apr 5, 9:50 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
>  மின் தமிழ் அன்பர்களுக்கு,
>                                                    விறல்
>                                                    விறலி
> எனும் சொற்களின்  பொருள் பற்றி கருத்துக்கள் வந்தன
>

> சங்க நூல்களில் அச்சொல்லின் *(128)* பயன்பாடுகளை   நோக்கினால்

>                             *விறலி*


>
>  விறலி = பாணினி = ஆட்டம் ஆடுபவள்
>
> விறலி என்னும் சொல் சங்கம்
> மற்றும் சில நூல்களில்
> காணப்படும் வரிகளை
>                   (46 +24)
>  இணைப்பு கோப்பினில் காண்க
>
> அன்புடன்
> நு த லோ சு
>

நன்றி, ஐயா! சிலம்பு, மணிமேகலை காப்பியங்களில்
இருந்தும் தொகுத்து வெள்ளுரை (ப்லெய்ன் - டெக்ஸ்ட்)
ஆக அனுப்புங்கள்.

எல்லா நிகண்டுகளையும் படித்தாய்ந்தபின் தமிழ்ப் புலவர்கள்
விறல் என்ற சொல்லுக்கு பொருள் தொகுத்துள்ளனர்.
லெக்சிகன் தரும் பொருள்கள்:

விறு-/வீறு- என்னும் வேரில் பிறப்பது விறல்.

விறப்பு viṟappu
, n. < id. 1. Crowdedness, density, intensity; செறிவு. (தொல். சொல்.
347.) 2. Increase; பெருக்கம். (W.) 3. Strength; பலம். (பிங்.) 4. cf.
விறல். Victory; வெற்றி. (சூடா.) 5. Battle; போர். (சூடா.) 6. Fear;
அச்சம். (தொல். சொல். 348.)

விறல்¹ viṟal
, n. cf. விற-. 1. Victory; வெற்றி. விறலீனும் வேண்டாமை யென்னுஞ்
செருக்கு (குறள், 180). 2. Bravery; வீரம். (யாழ். அக.) 3. Strength;
வலி. விறல்விசயனே வில்லுக்கிவ னென் றும் (தேவா. 647, 2). 4. Greatness;
பெருமை. (பிங்.) 5. Distinctive excellence; விசேடம். பெருவிறல்
யாணர்த்தாகி (புறநா. 42, 12). 6. Physical expression of emotion;
உள்ளக்குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு. (தொல். பொ. 249,
உரை.)

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 5, 2011, 11:47:05 AM4/5/11
to மின்தமிழ்

விறல் (< விற-)

விற-த்தல் viṟa-
, 12 v. intr. [K. veṟe.] 1. To be dense, close; to be intense;
செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 2. cf. இற-. To
abound, increase; மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள்
பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை). 3. To conquer;
வெற்றிபெறுதல். (W.) 4. To To fight; போர்செய்தல். (W.) 5. To fear;
வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348).

விறல் - அச்சம் என்ற பொருளும் உண்டு (தொல்காப்பியம்).

பேயோட்டும் சாமியாடிகளான நடன மாதர்.
http://groups.google.com/group/mintamil/msg/0e3d2582e703e5a2

முழுக்கப் புரிந்துகொள்ள பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோரின் 40+
சங்க இலக்கிய ஆய்வுகள் துணைகொள்ளலாம்.

நா. கணேசன்

PS:
தமிழின் முதல் கணினி எழுதுரு - ஹார்ட் செய்ததே
http://tamil.berkeley.edu/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d

http://groups.google.com/group/mintamil/msg/b459b02c9ebd85fb

Nagarajan Vadivel

unread,
Apr 5, 2011, 11:47:38 AM4/5/11
to mint...@googlegroups.com
The result obtained here is the indexing of the word Viral and Virali
It can further be analysed in terms of frequency count of the words according to the frequency of occurence
I used the PDF document supplied by NDLS and found Viraliar was the most frequently occuring
The concordance uses key word in context
The sad fact is that the PDF document's font is different from the fefault font thus making the whole document search encounters difficulty
Further there seems to be a classification of clan and kin where the virali and paraththai are differentiated.
virali1.jpg
virali2.jpg

Whereas Dr.N.Ganesan opined that the virali can be construed similar to Devadasi
Nagarajan
2011/4/5 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்


virali1.jpg
virali2.jpg

N. Ganesan

unread,
Apr 5, 2011, 12:43:51 PM4/5/11
to மின்தமிழ்

On Apr 5, 10:47 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> The result obtained here is the indexing of the word Viral and Virali
> It can further be analysed in terms of frequency count of the words
> according to the frequency of occurence
> I used the PDF document supplied by NDLS and found Viraliar was the most
> frequently occuring
> The concordance uses key word in context
> The sad fact is that the PDF document's font is different from the fefault
> font thus making the whole document search encounters difficulty
> Further there seems to be a classification of clan and kin where the virali
> and paraththai are differentiated.

Dear Prof.

Paraththai is the oldest profession as they say. The main job of
viRalis is to act as go-betweens for chieftains to bring parathais
in Sangam poetry. Usually, the thalaivi is mad at paaNan-s and
viRali-s for doing this service to chiefs.

This is common in land lords' houses all over India for ages.

Have a good day!
N. Ganesan

> [image: virali1.jpg]
> [image: virali2.jpg]
>
> Whereas Dr.N.Ganesan opined that the virali can be construed similar to
> Devadasi
> Nagarajan

> 2011/4/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »
>
>  virali1.jpg
> 30KViewDownload
>
>  virali2.jpg
> 56KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages