ஆசீவகம் அறிவோம்

7,361 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 9, 2018, 6:54:01 PM12/9/18
to மின்தமிழ்
ref: http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/nov/29/மத-அரசியல்-34-ஆசீவகம்-3048375.html

மத அரசியல்-34: ஆசீவகம் 
C.P.சரவணன்  |    29th November 2018 


ஆசீவகம் (Aseevagam / Ājīvika)

தமிழரின் அழிக்கப்பட்ட நெறி 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. 

இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆஸ்த்திரேலியரான ஏ.எல். பாசம் (Arthur Llewellyn Basham) ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார். பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம், இரா. விஜயலட்சுமி, முனைவர் க.நெடுஞ்செழியன், ஆதி.சங்கரன் ஆகிய தற்கால அறிஞர்கள் ஆசிவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர்

 ‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம் (Ajivikism: a vanished Indian religion)’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மௌரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல்.பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

ஆசீவகம் என்றால் என்ன?
ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. 

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.

ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?

1.அமணம்
அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.

ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

இதன்மூலம்,

அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது
அருகம் – ஜைன நெறியைக் குறித்தது

என்பது நமக்குப் புலப்படும்.

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, ஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள் 
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

1.அமணர்

2.ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்

3.ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்

4.அண்ணர் (அ) அண்ணல்

 

References:
1.    History and Doctrines of the Ajivikas: A Vanished Indian Religion,1951 by A.L. Basham 
2.    தமிழகத்தில் ஆசிவகர்கள் by முனைவர் ர. விஜயலக்ஷ்மி

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தேமொழி

unread,
Dec 9, 2018, 7:04:59 PM12/9/18
to மின்தமிழ்
ref: http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/03/மத-அரசியல்-35-ஆசீவக-மதச்-சின்னங்கள்-3050974.html


மத அரசியல்-35: ஆசீவக மதச் சின்னங்கள் 

By C.P.சரவணன்  |   03rd December 2018

ayyanar_elephanat

 

ஆசீவக மதச் சின்னங்கள் (Symbols of Aseevagam)

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர்..எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. 

எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. 

 

1. திருநிலை

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.

இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள்  கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.

மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.

கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.

மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்க
மாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்க
மாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்
மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!

(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு – கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல் இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.

 

2. சுழற்குறி (Swastika)

துறவு        நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

 

3. கந்தழி (Infinity)

ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம் உலகியலைக் கடந்து மெய்ப்பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.

வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப்படுவதும் உண்டு.

இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

புதிர்நிலைகள் (Labyrinths / Mazes) எனப்படும் தொல்லியல் சின்னத்திற்கும் கந்தலிக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்யவேண்டியுள்ளது. புதிர்நிலையை “சம்சார பந்தத்திலிருந்தும் கர்ம வினைகளிலிருந்தும் விடுபட உதவும் அமைப்பாக” ஜெ.சி.கூப்பர் தன்னுடைய An Illustrated Encyclopedia of Traditional Symbols என்ற நூலில் சொல்லுகிறார்.

 

4. இருபுற முத்தலைக் கோல் (Double sided soolam)

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.

இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.

இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.

இருபுற முத்தரைக்கோள் ,ராக்காச்சி ,வஜ்ஜிரம்  என்று வழங்கி வரும் பண்டைய மனிதனின் முதல் குறியீடு இதுவாகும் . பொதுவாக  உயர்ந்த மனிதனைக் குறிக்கப் பட்ட"ஐ " குறியீட்டிலிருந்து பிற வரி வடிவங்கள் தோன்றி இருக்க வேண்டும் . இன்றும் நம் வீடுகளில் பொங்கல் பண்டிகையின் பொது வரையப்படும்  இந்தக் குறியீடு தமிழின் முதல் எழுத்து வடிவாக இருக்கலாம்.

 

5. ஐம்முக்கோணம் (Penta-traiangle)

ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.

அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.

 

6. முப்புள்ளி (Ellipsis) 

அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்.

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன.

அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.

ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.

ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.

பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.

 

7. புள்நகக் கீற்று

பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.

 

8. யானை

ஆசீவகத்தின் குறியீடாகக் கொள்ளப்பெறுவது ஆண் யானையாகும். யானை பிறக்கும்போது கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல் நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று நீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறும் இயற்கை நிகழ்வு இதுவாகும். இதன் காரணாக அசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டிற்கு ஒத்துவரும் அடையாளமாக யானை என்ற விலங்கு அமைந்துள்ளது.
பல ஐயனார் கோவில்களில் வெள்ளை யானை நிறுவப்பெற்றிருப்பது இவ்வடிப்படையில்தான். வெள்ளை நிறைநிலைக்கானது. யானை ஆசீவகத்தின் குறியீடு. ஆக வண்ணமயமான சமயமாக விளங்குவது ஆசீவகம் ஆகும்.

 

9. மாங்காய்க் கொத்து

பகவதி சூத்திரத்தில் சொல்லப்படும் மாங்கொட்டை-மாங்காய்த் தோல் ஐயனாருடன் தொடர்பு கொண்டவை. மற்கலி தன் இறுதி வேளையில் மாங்காயை வைத்திருந்ததாக ஃகோர்ன்லே குறிப்பது இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

 

Reference:
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் by ஆதி. சங்கரன்

செல்வன்

unread,
Dec 9, 2018, 7:07:59 PM12/9/18
to mintamil
ஆசிவகம் வடநாட்டில் தோன்றிய சமயம்.

அதில் பிழை எதுவுமில்லை. தமிழ்நாட்டில் தோன்றிய சமயங்களை தான் தமிழர் பின்பற்றவேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை.

ஆனால் ஆசிவகம் தமிழ்நாட்டில் தோன்றிய சமயம் என இகட்டுரை பிழையான வரலாற்றை போதிக்கிறது.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

தேமொழி

unread,
Dec 9, 2018, 7:10:38 PM12/9/18
to மின்தமிழ்
ref: http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/06/மத-அரசியல்-36-ஆசீவகம்ndashஆசீவர்களின்-கடுந்ததவம்-3052897.html

மத அரசியல்-36: ஆசீவகம்–ஆசீவர்களின் கடுந்தவம்


By C.P.சரவணன்  |   06th December 2018 

aseevagam_dp

 

காமம் எப்படித் தோன்றுகிறது?

இந்தியாவில் வைதிக நெறி பரவலாக்கம் பெற்றபோது ஓரணியில் நின்று அதனைக் கடுமையாக எதிர்த்தவை இம்மூன்று சமயங்களுமே.

ஏனெனில் இம்மூன்று சமயக் கொள்கைகளிடையே சில ஒற்றுமைகள் இருந்தன. இவை மூன்றும் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வருணாச்சிர தர்மங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.

வேள்விகள், அதில் உயிர்ப்பலியிடுதல் போன்றவற்றை இம்மூன்று சமயங்களுமே எதிர்த்தன. வேதத்தினை ஏற்காமை கருதி இவை அவைதிக சமயங்கள் என அழைக்கப்பட்டன. பள்ளிகளில் சமண பௌத்த வரலாறு குறித்துக் கற்பிக்கப்படும் அளவிற்கு ஆசீவகம் குறித்து கற்பிக்கப்படுவதில்லை. ஏனெனில் ஆசீவகம் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ பேசும் நூல்கள் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால், அப்படி அவர்கள் கொள்கைகளை விளக்கும் நூல் இருந்திருக்கிறது என்பதற்கும், அவர்களால் முதல்வராகக் கருதப்பட்ட மக்கலி கோசாலர் என்பார் இருந்திருக்கிறார் என்பதற்கும் வரலாற்றில் ஆதாரஙகள் உள்ளன. இதில் வியக்கத்தகுந்த செய்தி என்னவென்றால், ஆசீவகர் குறித்தும் அவர்தம் கொள்கைகள் குறித்தும் பெரிதும் பேசும் நூல்கள் சமண பௌத்த நூல்களே!

தம் கொள்கைகளை வலியுறுத்த முயன்ற இச்சமயங்கள், மாற்றுச் சமயத்தினரின் கொள்கையை எடுத்துக்காட்டித் தக்க காரணங்களுடன் பிற சமயக்கொள்கைகள் தவறு என்பதை நிறுவவும் தம் சமயக் கொள்கையே சரி என நிலைநாட்டவும் போராடின. அந்நூல்கள் மறுப்பதற்காகக் காட்டும் செய்திகளில் இருந்துதான் நாம் இன்று ஆசீவகம் அதன் கொள்கைகள்  பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையின் மகாவம்சம், அசோகனின் கல்வெட்டுக்கள் போன்றவற்றிலும் ஆசீவகம், ஆசீவகப் பள்ளி போன்றன பற்றிச் சிறுகுறிப்புகள் வருகின்றனவேனும் அவை இச்சமயிகளின் கொள்கைகள் குறித்து அறிந்திடப்போதுமானவையாய் இல்லை. இந்நிலையில், தமிழகம் பெற்ற நற்பேறென்னவெனில் இந்தியாவில் வேறெந்த மொழியிலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகம் பற்றிய செய்திகள் தமிழிலக்கியங்களில் உள்ளன என்பதுதான்.

முதலில் இந்த ஆசீவகம் என்ற சொல், ஆய்வு நிலையில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

சமண இலக்கியமான நீலகேசியில்,
“அருகிருந்தார் தாமறிய ஆசீவகனை ” என்ற தொடர்வருகிறது.
அதற்குப் பொருளுரைக்கும், நீலகேசியின் உரையாசிரியரான, சமயதிவாகரர்,
ஆசீவகன் என்பதற்கு  ஜீவிக்கிறவன் எனப் பொருள் காண்கிறார்.

அயல்நாட்டு அறிஞர்கள் இச்சொல்லுக்கு மூன்றுவிதமான பொருள்களைக் காண்கிறார்கள்.,

ஐீவன் – அஜீவன் எனச் சீவனுக்கு அசீவன் என்பது எதிர்ச்சொல். எனவே வாழ்தல் ஜீவனெனில் அஜீவன் என்பது வாழாமை. எனவே வாழ்வதற்கு வேண்டிய எதையும் செய்யாமல் பிறரை நம்பி இரந்து தம் வாழ்நாளைக் கழித்தவர் ஆசீவகர் என்பது ஒரு கருத்து.

ஆஜீவன் என்பது உயிரற்றது. எனவே உயிருள்ளவற்றைக் கொன்று உண்ணாமல், உயிரில்லாதவற்றை உணவாக உட்கொள்பவர்கள் அசீவகர் என்பது மற்றொரு கருத்து.

ஆசீவ என்ற சொல் வாழ்க்கைமுறை என்ற பொருளுடையது. மனிதர்கள் வாழும் முறை என்பதே இச்சொல்லின் விளக்கம் என்பது மூன்றாவது கருத்து.

ஆசீவகம் என்ற பெயருக்கான காரணத்தை விளக்கும் இக்கருத்துக்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் பொருத்தமுடையனவே. ஏனெனில், ஆசீவகம் உயிர் வாழ்க்கை பற்றி பேசுகிறது.

அது, வாழ்க்கையை அதன்போக்கில் விட்டுவிடுதல் என்பதைத் தன் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தது. கொல்லாமையை வலியுறுத்தியது. 

ஆசை அல்லது ஒன்றன்மேல் உள்ள காமம் துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர். இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது பௌத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

ஆசீவகம், காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது. அப்படித்தோன்றும் காமத்தைத் தடுக்க ஆசீவகர் தேர்ந்தெடுத்த வழிமுறை அதிர்ச்சியானது.

 

தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்

வெளியில் உள்ள பொருட்களின் தூண்டுதலே காமத்தை விளைவிக்கும் எனக் கருதிய ஆசீவகர் அதனைத் தவிர்க்கும் முயற்சியாக வெளியுலகிற்கும் தமக்கும் உள்ள தொடர்பினை நீக்கிக்கொள்ள முயன்றனர். மலையிலோ காட்டிலோ குகைகளிலோ இருப்பினும் வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று கூற முடியாது. அதற்கென அவர்கள் கண்ட வழிமுறைதான், தாழிகள். நாம் முதுமக்கட்தாழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பொதுவாக அவை இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பண்டைக்காலத்தில் பயன்பட்டது என்பதை அறிந்திருப்போம். கொஞ்சம் கூடுதலாக, உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும்  சிலர் அறிந்திருக்கலாம்.

ஆனால் வாயகன்ற பெரிய தாழிகளுள், சம்மணமிட்ட நிலையில் அமர்ந்து இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்துத் தவம் இயற்றும் முறையை ஆசீவகர் கையாண்டனர். சங்க இலக்கியத்தில் ஆசீவகர்களின் கொள்கைகள் குறித்தும், தாழிகள் குறித்தும் குறிப்புகள் இருப்பினும் அதில் ஆசீவகர் என்ற சொல் இல்லை.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணியில் இத்தாழியில் ஆசீவகர் செய்யும் தவம் பற்றி வெளிப்படையான குறிப்பு வருகிறது.

“தாழியிற் பிணங்களும் தலைப்பட வெறுத்தவப்
பாழியிற் பிணங்களுந் துளபெழப் படுத்தியே” (376)

இவ்வரிகளுக்கு அதன் பழைய உரையாசிரியர்,

“தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களில் புக்குத் தவம் செய்வாராதலின் அவரைச் சுட்டி நின்றது ”

என்று  பொருள் கூறுகிறார்.

இக்குறிப்பு, ஆசீவகர் தாழிக்குள்ளே இருந்து தவம் செய்து தம் உயிரையும் போக்கிக் கொள்வர் என்பதைக் காட்டுகிறது.

இங்கு வந்திருக்கும் ஆருகதர் என்ற சொல் பொதுவாகச் சமணரைக் குறிக்க இன்று வழங்கப்பட்டாலும் துறவு நெறியை வலியுறுத்தியோர் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இது இங்கு ஆளப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இதைப்போன்றே சிரமணர்கள் என்ற சொல்லும், ( சிரமம் அதாவது ) உடலை வருத்தி இதுபோன்ற தவமுயற்சிகளில் ஈடுபடுவோரை பொதுவாகக் குறிக்கும் சொல்லாகும்.

இதுவும் நாளடைவில் சமணரைக் குறிக்கும் பொதுச்சொல்லாக அமைந்தது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர்,

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேழன்” ( தொல்.பொருள்-60 )

என்னும் சூத்திரத்தின் பொருள்விளக்குமிடத்து மேற்கோளாக,

“தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை – யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டன னின்மாட்டோ கல்”

என்னும் பாடலைக்காட்டுகிறார்.

இதில், தாழி கவிப்பத் தவஞ்செய்வார் என்னுந் தொடர் ஆசீவகரைக் குறிப்பதாகும்.

ஆசீவகம் சமணம் பௌத்தம் ஆகிய இச்சமயங்களிடையே உள்ள இன்னொரு ஒற்றுமை, அவை இத்தகு தவநெறிக்குக் கொடுத்த முக்கியத்துவமாகும். வைதிக சமயங்கள் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற படிநிலைகளின் இறுதியாய்த் துறவினை அணுகினாலும், வீடுபேறடையத் துறவே வழி என்ற என்ற நிலைப்பாடுடையனவாய் இந்த மூன்று அவைதிக சமயங்களும் விளங்கின.

வேதங்கள் இந்தியாவில் கால்கொளும் முன்பே துறவு என்னும் சிந்தனை இங்கு வாழ்ந்த தொல்குடிகளிடையே நிலைபெற்றிருந்தது என்பதை நாம் மனதிருத்த வேண்டும். உலகில் ஒருவருக்குப் பற்று என்பது இந்த உடலின் மூலமாக ஏற்படுகிறது. இந்த உடலுக்கென எதனையும் வேண்டாததன் மூலம், அதனைப் பொருட்படுத்தாதன் மூலம், இன்னும் சற்று மேலே போய், இவ்வுடலைக் கடுமையாக வருத்திக்கொள்வதன் மூலம் சுயநலமற்ற, பற்று நீங்கிய சிந்தனையையும் அதன் விளைவாக வீடுபேற்றையச் செய்யும் ஞானத்தையும் பெறமுடியும் என இவர்கள் நம்பினர். அதிலும் சமண பௌத்தரை நோக்க, ஆசீவகர் மேற்கொண்ட தவமுயற்சிகள் மிகக்கடுமையானவை.

 

நெருப்பினுள் இருக்கலாம்!

சமண பௌத்த சமயங்களை ஒப்பிடும் போது, ஆசீவகரின் நெறி தவம் செய்வதைக் கடுமையாக வலியுறுத்துவதைப் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் தவமுயற்சியில்  நீரையும் அவரை விதைகளையும் மட்டுமே உண்டு உயிரினைத் தக்க வைத்துக் கொண்டனர்.  இதுபோன்ற தவமுயற்சிகளின் வழியாகப் பிறர்க்கு இல்லா ஆற்றலைத் தாம் அடைய முடியும், வீடுபேறடைய முடியும்  எனக் கருதினர்.

குறிப்பாக, உடலை வருத்துவதன் மூலம் தம் புலன்களை அடக்கிவிடலாம் என்பதும், அதனால் மனதை ஒருமுகப்படுத்தி, இறந்தகாலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஒருவர் தம் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறமுடியும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.
லோமஹம்ஸ ஜாதகா என்னும் நூல் இவர்கள் செய்த நான்கு வகை தவமுயற்சிகள் குறித்துப் பேசுகிறது. அவை,

1.உக்கிடிக்கப் பதானம் – சம்மணமிட்ட நிலையில் உணவொழித்துத் தன்னை வருத்திச் செய்யும் தவம்.
2.வகுளி வதம் -  வவ்வாலைப் போன்று ஏதேனும் ஒன்றைப் பிடித்துத் தொங்கியபடி செய்யும் தவம்.
3.கண்டகப்பசயம் – முள் படுக்கை அமைத்து அதன்மேல் படுத்துக் கொண்டு செய்யும் தவம்.
4.பஞ்ச தபனம் – ஐந்து புறம் நெருப்பினை மூட்டி அதன் நடுவில் இருந்து செய்யும் தவம்.

இன்று நாம் இதனைப் படிக்கும்போது இம்முயற்சிகள் ஒரு கேலிப்பொருளாய்ப் பார்க்கப்படக்கூடும். ஆயினும் எத்தனை எத்தனை வழிகளில் இவர்கள் ஞானம் பெற விரும்பினார்கள் புலன்களை அடக்கப் பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள  இக்குறிப்புகள் உதவும்.

இந்தத் தவ முறைகளில் பஞ்சதபனம் என்பதில் ஐந்துபுறமும் நெருப்பு என்பது ஐம்புலன்களைப் பாதிக்கும் புறத்தாக்கங்களின் குறியீடாக இருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது. இவை மட்டுமன்றி, ஒற்றைக் காலில் தவமிருத்தல், மண்ணுள் உடலைக் கழுத்துவரை புதைத்துத் தவமியற்றல் போன்ற முறைகளையும் ஆசீவகர் பின்பற்றியிருப்பதைக் காண முடிகிறது.

Suba

unread,
Dec 11, 2018, 6:37:49 AM12/11/18
to மின்தமிழ்
நல்லதொரு இழை. நான் பயணத்தில் இருந்தமையால் இதுவரை வாசிக்க வாய்ப்பில்லாது இருந்தது. புக் மார்க் செய்துள்ளேன். வாசிக்கின்றேன். தகவலை தொடர்ந்து தாருங்கள் தேமொழி. நன்றி🌷

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Dec 11, 2018, 7:43:06 PM12/11/18
to மின்தமிழ்

REF:  http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/10/மத-அரசியல்-37-ஆசீவகம்---காட்சியியல்-3055374.html


மத அரசியல்-37: ஆசீவகம் - காட்சியியல்


C.P.சரவணன்  |   Published on : 10th December 2018 


atom

 

ஆசீவகக் காட்சியியல் (Philosophy of Aseevagam)

ஆசீவர்கள் பழங்காலத்தில் “அறிவர்’ என்றழைக்கப்பட்டனர். அவர்கள் பின்னாளில் சித்தர்கள் என்றாயினர். மேலும் இவர்கள் ஆரம்பத்தில் விண்ணாராய்ச்சியில் இருந்ததால் விஞ்ஞானி என்றும் அழைக்கப்பட்டனர். சிவனும் விண்ணாராய்ச்சியில் இருந்தவரே.

விண் + ஞானி = விஞ்ஞானி
         (ஆகாயம்) (அறிவர்) (ஆகாயம் அறிந்தவர்)

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப்படும் முன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு கொடுத்தவர்கள் ஆசீவர்கள். 

இவர்கள் சைனப்படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

 

ஆசீவகக் கோட்பாடுகள் (Theories of Aseevagam)

ஆசீவகம் ஒருமையியம், அண்டவியல் கோட்பாடு, தற்செயல் கோட்பாடு, அணு கோட்பாடு, ஊழ்க் கோட்பாடு, சிதைவுக் கோட்பாடு மற்றும் அபிசாதிக் கோட்பாடு போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது ஆசிவக நெறியாகும். 

 

ஒருமையியம் (Singularity/ oneness)

‘ஒன்றாய், வேறாய், உடனாய்’ என்ற ஒருமையிய கோட்பாட்டை ஆசீவகம் கடைபிடித்தது.

 

தற்செயல் கோட்பாடு (Coincidence theory)

சீவர்களுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது. நன்மையும் கிடையாது தீமையும் கிடையாது. எல்லாம் தானே ஏற்றுக் கொள்வதால் தற்செயல் என்றே கொள்கிறார்கள். ஒரு மனிதன் செய்யும் நல்ல செயல்கள் அவனை மோட்சத்திற்கு இட்டுச் செல்ல வல்லன என்ற கருமக் கோட்பாட்டை ஆசிவர்கள் ஏற்கவில்லை.

 

அண்டவியல் கோட்பாடு (Big Bang Theory)

தமிழரின் அண்டவியல் கோட்பாடு கருந்துளையில் தொடங்கும். இது பக்குடுக்கையாரின் ‘இன்மை’யோடு தொடர்பு கொண்டது.

 

(ஊழிகளின் தோற்றம்)

தொல் முறை இயற்கையின் மதிய
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

பாடியவர்: கீரந்தையார்
இசையமைத்தவர்: நன்னாகனார்
பண்: பாலையாழ்

நமது  அண்டத்திற்கு மா வெடிப்பு, ஒரு காலத்தொடக்கம் இருந்திருக்க வேண்டும் என்று ரோஜர் பென்ரோஸ் 1965-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஆனால் மேற்கண்ட பெரிபாடல் கருந்துளையும் (Black Hole), மா வெடிப்பையும் (Big Bang) இணைத்து அண்டத்தின் தோற்றத்தை அன்றே விளக்கியுள்ளது.

 

அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory)

லியூசிபஸ்

அணுக் கோட்பாடு அல்லது அணுவியல் கொள்கை (Atomic theory) என்பது பொருள்களின் இயல்பை விளக்கும் ஓர் அறிவியல் கொள்கை ஆகும். எல்லாப் பொருள்களையும் தொடர்ந்து சிறிய சிறிய கூறுகளாகப் பிரித்துக் கொண்டே இருக்க முடியும் என்று முன்னர் நிலவி வந்த கருத்துருவாக்கத்திற்கு எதிராக, பொருள்கள் அணு என்னும் தனித்தனி அலகுகளால் ஆனவை என்னும் கருத்தை அணுவியல் கொள்கை முன்வைக்கிறது. 

கி.மு. 5-ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க அறிஞர் லியூசிபஸ் (Leucippus) ஒவ்வொரு பொருளும் அழிக்கமுடியாத பிரிக்கமுடியாத ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒன்று அது “அணு” என்று விளக்கினார். ஆனால், ஜான் டால்டன் (John Dalton) 1800 களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் 

 

ஜான் டால்டனின் அணுக் கோட்பாடு

1.ஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.
2.அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
3.ஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்.
4.வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்.
5.மாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்.
6.வேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.

ஆசிவர், ஐம்பூதக் கோட்பாடு, அணுக்கோட்பாடு என்றும் இயல்புக் கோட்பாடு என்றும் அழைக்கப்படும் அண்டத்தின் தோற்றம், அணுக்களின் இயல்பு, பெரு வெடிப்பு இ=உயிர்களின் தோற்றம் என முற்றான அறிவியல் வளர்ந்த இக்கோட்பாட்டினை எண்ணியம் என்பர். இக்கோட்பாடினை உருவாக்கியவர் தொல்கபிலர் ஆவார். அணுக்கோட்பாட்டின் விரிவே “சிறப்பியம்’ எனும் வைசேடிகம் ஆகும். இதனை உருவாக்கியவர் கணியாதன் (கணி+ஆதன்) என்பார்.

ஆசீவக அணுவியம் (Atomic nature of the bodies) மூல அணுவை அழிக்க  முடியாது என்கிறது. விளைவணு நீரணுவும், நிலவணுவும், வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன, எனவே இயங்கணு எனவும் மூல அணுவால் விளைவிக்கப்படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படுகிறது, நீரணு நிலவணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கிற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது.

அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும், புரிதலும்) வெப்பத்தின் முன்னிலையில் மட்டுமே நிகழும். இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப்படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.

நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்
நீரணு பாய்சீரும்
வளியணு கிடைச்சீரும்
தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.
சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும்.

ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும்.

ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுரைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. ஒரு ஆற்றல் வலப்புலையில் காற்று கூடுதலாகவும், இடப்புலையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும் ஆண்நாடி என்றும் சூரிய கலை என்றும் சொல்லப்படும் அணு உலகைப் பற்றிய புதிய அறிவை உண்டாக்கியது. அறிவியலின் இயல்புத் தன்மை என்பதை, கடுமையான முடிவுகளை மேற்கொள்ளும் தன்மையை சார்ந்திருப்பதிலிருந்து விடுவித்தது. தமிழரின் அணுவியம், கிரேக்க அணுவியத்தைவிட மிகவும் முந்தையது. மணிமேகலை, நீலகேசி முதலான நூல்களில் காணப்படும் தமிழரின் அணுக் கோட்பாடு, கிரேக்க அணுக்கோட்பாட்டைவிடச் செறிவானது, செம்மையானது, மேம்பட்டது. 

மற்கலி என்பாரின் அணுக்கோட்பாட்டைத் தழுவிக் கணி ஆதன் (கணாதன்) என்பார் வடித்த தனி மெய்யியல் பள்ளியே சிறப்பியமாகும். அம்மற்கலி, ஒன்பதாம் கதிர் என்னும் நூலை இயற்றினார். அந்நூலின் திருட்டு வடிவமே கணி ஆதன் சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) இயற்றிய வைசேடிக சூத்திரம் என்ற நூல்.

 

ஊழ்க்கோட்பாடு (Destiny theory)

ஊழ்

"விழு" என்பது ‘வீழ்’ என குறிப்பிடப்படுவது போல் உழு எனும் சொல் “ஊழ்” எனும் சொல்லாக கிளர்ந்தது. ‘உழு’ என்ற சொல் நிலத்தை உழுதல் என்ற பொருளிலும் குறிக்கப்படும். இது ஊழ்கம் அதாவது யோகம் என்ற சொல்லுக்கு எவ்வாறு தொடர்பு படுகிறது என்று திரு. ஆதி சங்கரன் அவர்கள் தனது ஆதி தமிழர் மெய்யியல் எனும் புத்தகத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

நிலத்தில் பஞ்ச பூதங்களை சேமிக்கும் ஒரு அற்புதமான செயலே உழுதலாகக் கொள்ளலாம். நிலத்தை முதலில் புரட்டி விடுதல் என்று சொல்லும் பொழுது மண்ணோடு (பிருத்வி) காற்று (வளி) சேர்வதும், மேலும் பின்னர் நீர் (ஜலம்) சேர்ந்து ஒளி (நெருப்பு, தேயு) உமிழும் கதிரவன் பார்வையில் கிளர்ந்து விடப்படும் பொழுது மண்ணின் நுண் உள்ளறைகளில் (அணுவில்) உயிர்காற்று (வாயு, வளி) அதாவது உயிர்சத்து சேமிக்கப் படுகிறது. இந்த மண்ணின் நீர் சத்து குறைந்ததும் அந்த வெற்றிடங்களில் ஆகாயச் சத்து வந்து நிறைகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்தர் உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் அதாவது அணுக்கள் எஞ்சி, மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது என்கிறது ஆசீவகக் கோட்பாடு. அவை எதுவெனக் கண்டால்.

1. கடைமிடறு, 2. இறுதிப்பாடல், 3. இறுதி ஆடல், 4. இறுதி வரவேற்பு, 5. காரிருள், 6. நிறையா வழிகை அமிழ்தூற்று, 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு, 8. ஐயன் நிலை அடைதல்.

மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.

வைதிக சமயங்கள்  அதைத் தெய்வசித்தம் என்கின்றன. உலகாயதம் நீங்கிய சமண பௌத்த சமயங்கள் அதை வினைப்பயன் அல்லது கருமம் என்கின்றன. ஆசீவகம் அதனை ஊழ் என்கின்றது. அனைத்திற்கும் காரணம், தெய்வச்செயல் என்பவரை விட்டுவிடுவோம்.

வினைப்பயன் அல்லது வினைக்கொள்கை என்பது ஒருவர் அடைகின்ற நன்மை தீமைகளுக்குக் காரணம், அவர்கள் சென்ற பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ செய்த செயல்கள்தான் என்று சொல்வது. வடமொழியில் இது கர்மா ( கருமம் ) எனப்பட்டது.

ஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. அதனைத் தமிழில் ஊழ், என்றும்  முறை என்றும் ஏன் அந்த ஆற்றல்தான் தெய்வம் என்றும் கூட வழங்கினர். வடமொழியில் இதனை நியதி என்றனர்.

வினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதிருத்த வேண்டும்.

ஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலநூறாண்டுகளாகத் தமிழில் நிகழ்ந்து வந்துள்ளது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று நாம் இயல்பாக வழங்குகிறோம். ஆனால் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை.

ஏழையால் பிறந்துவிட்ட ஒருவன் செல்வனாவதற்கும், படிப்பறிவற்ற பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கும் முயற்சி ஒன்று போதாதா? முயன்றால் முடியாதது உண்டோ? என்று ஆசீவகரைக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில், அப்படிச் செல்வனாகவோ, கல்வியறிவுள்ளவனாகவோ அவனுக்கு ஊழ் இருந்தால் ஒழிய அவன் என்ன முயன்றாலும் அவனால் அந்த நிலையை அடைய முடியாது. எனவே ஊழே வலிது. 

“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா”

“வருந்தி அழைத்தாலும் வாரத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா”

இந்தப் பாடலின் வரிகளையும் இதைப்போன்று நம்மிடையே உள்ள பாடல்கள் மற்றும் பழமொழிகளையும் நினைவு படுத்திப்பாருங்கள். இறந்து போன ஆசீவகக் கோட்பாட்டைத் தெரிந்தோ தெரியாமலோ இப்பாடல்கள் உட்பொதிந்து வைத்திருக்கின்றன.

நம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும்  நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த  நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே! வினைக்கொள்கையின் படி, இவை ஒருவன் செய்த செயல்களைச் சார்ந்து அமைபவை. அது முற்பிறப்போ இப்பிறப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், நடந்து முடிந்தனவே இனி நடப்பவற்றைத் தீர்மானிக்கும் என்று வினைக்கொள்கை சொல்ல, நடப்பதனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என ஆசீவகரின் ஊழ்க்கோட்பாடு சொல்கிறது.

இங்கு, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்ட அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ளும் ஊழும் சிலருக்கு அமைகிறது என்பதையும் அவர்களே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் நிகழ்வதைக் கணித்து அறியும் வல்லமை பெறுகிறார்கள் என்றும் ஆசீவகம் நம்புகிறது. 

சாணன், கலந்தன், கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயனன், கோமாயபுத்தன் ஆகிய ஆறு ஆசீவகத்துறவிகளும், மற்கலியிடம் இருந்து பெற்ற, இன்பம், துன்பம், பேறு, பேறின்மை, பிறப்பு, இறப்பு ஆகிய கோட்பாடுகளைத் தொகுத்து எட்டுப் பகுதிகள் உடைய நூலை அமைத்தனர். இந்த மகாநிமித்தங்கள் எனப்படும் எட்டும், ஆசீவகக் கோட்பாட்டின்படி, வரையறுக்கப்பட்டுவிட்ட இவ்வுலகின் எதிர்காலத்தைக் கணித்து உரைக்கும் பகுதிகளாக விளங்கின. இன்றைய சோதிட நூல்களனைத்திற்கும் ஆதிநூல் என மகாநிமித்தத்தை நாம் துணிந்து கூறலாம். நகைமுரண் என்னவென்றால், இப்படித் தொகுக்கப்பட்ட ஆசீவகரின் நூலொன்று இருந்தது. அதில் இந்த ஆறுபேரும் எட்டு நிமித்தகங்களை இன்னின்னவாறு தொகுத்துரைத்துள்ளனர் என்று நாம் இன்று தெரிந்துகொள்ளத் துணைபுரிவன இந்தச் சமண நூல்கள் தாம்.

இந்த நேரத்தில் இரு முக்கியமான விடயத்தையும் நாம் மனதிருத்த வேண்டும்.

1.வினைக்கொள்கையும், ஊழ் கோட்பாடும் ஆரியர் வருகைக்கு முன்பே தொல் தமிழ்க் குடிகளிடையே வழக்கில் இருந்த கோட்பாடுகள். 
2.ஆசீவகம் என்னும் சமயமும் அவர்தம் கொள்கைகளும் இந்தியப்பெருநிலத்தில் இருந்து முற்றிலும் அழிந்திருந்தாலும் அவர் பற்றிய செய்திகளையும், கொள்கைகளையும் நாம் அறிந்து கொள்ள உதவுவன சமண, பௌத்த நூல்கள் மற்றும் அவற்றிற்கு எழுதப்பட்ட உரைகள்தாம். இன்னொருபுறம், வேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.

 

சிதைவுக் கோட்பாடு (Theory of Atomic Disintegration)

ஃபிரெட்ரிக் சோடி 

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபிரெட்ரிக் சோடி (Frederick Soddy) 1902-ல் அணுக்கரு சிதைவுக் கோட்பாட்டை (Theory of Atomic Disintegration) நிறுவினர். இவர் நோபல் பரிசு பெற்றவர்.

பக்குடுக்கை நன்கணியார் அணுவியலில், நிலம், நீர், தீ, வளி என நால்வகை அணுக்கள் கூடுவதை ஆகூழ் என்றும் அவ்வாறு கூடியவை பிரிவதை போகூழ் என்றும் கூறுகிறது. இதையே மணிமேகலையின், முன்னுள் வூழே பின்னுமுறுவிப்பது என்ற வரிகள் புலப்படுத்தும் ஆசீவகர்கள் இன்று இருந்திருந்தால் அனைத்து நோபல்பரிசுகளும் ஆண்டுதோறும் அவர்களுக்கே என்பது திண்ணம்.

அபிசாதிக் கோட்பாடு (Abisadik Theory)

உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நிறத்தின் அடிப்படையில் அவற்றின் பிறப்பை வகைப்படுத்தும் ஆசீவகக் கொள்கைக்கு அபிசாதிக் கோட்பாடு என்று பெயர். ஆசீவகம் போதித்தவர்களுள் ஒருவரான பூரண காசியபர் என்பாரது கோட்பாடு இது. மணிமேகலையில் இது

                        
கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்…

(மணி 27:150-153)

என்று கூறப்பட்டுள்ளது. பாலி நூல்களில் இவை பின்வருமாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

• கரும்ம் பிறப்பு - கொலைஞர், வேட்டுவர், வலைஞர், கள்வர், சூதர் முதலானோர்
• கருநீலப் பிறப்பு - தீயொழுக்கம் கொண்ட துறவியர்
• பசும்ம் பிறப்பு - ஆசீவகத்தின் இல்வாழ்வினர்
• செம்ம் பிறப்பு - சமணத் துறவியர்
• வெண்ண் பிறப்பு - ஆசீவகத் துறவியர்
• கழிவெண் பிறப்பு - நந்தவச்சர், இச சங்கிச்சர், மற்கலி கோசாலர்

செய்கை அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் கோட்பாடாக இது உள்ளது.

முக்குணக் கோட்பாடு: ஆத்ம குணங்கள் பற்றிய வைதிகத்தின் கோட்பாடு இதுவாகும். ஆத்மாவின் குணங்கள் மூன்று. அவை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம். இவற்றை சத்துவம், ராஜசம், தாமசம் எனவும் வழங்குவர். சத்துவ குணத்தவர்கள் தேவத்தன்மை உடையவர்கள். ரஜோ குணத்தவர்கள் வீரத் தன்மையும் தமோ குணத்தவர்கள் விலங்குத் தன்மையும் உடையவர்கள். அதாவது அந்தணரும் தேவர்களும் சத்துவ குணம் உடையவர்கள் (மனு 12:48). சத்திரியரும் போர் வீரர்களும் ரஜோ குணம் உடையவர்கள் (மனு 12:45,46). மற்றவர்கள் தமோ குணம் உடையவர்கள்.

இலேசியைக் கோட்பாடு: ஆசீவகரின் அபிசாதிக் கோட்பாட்டுடன் ஒப்புமை உடைய சமணக் கோட்பாடு இதுவாகும். உயிருக்கு வண்ணம் கூறும் சமணக் கொள்கை லேசியை ஆகும். லேசியை ஆறு வகைப்படும். கிருட்டிண லேசியை, நீல லேசியை, கபோத லேசியை, பீத லேசியை, பதும லேசியை, சுக்கில லேசியை ஆகியனவே அவை. இவற்றுள் முதல் மூன்றும் தீய குணத்தால் ஆவன. பிந்தைய மூன்றும் நற்குணத்தால் ஆவன. பழங்கள் நிறைந்த ஒரு மரத்தை எடுத்துக்காட்டி இவற்றை விளக்குகிறார் முனைவர் சு. சுனந்தாதேவி.

• கிருட்டிண லேசியை (கறுப்பு) -   மரத்தையே வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
• நீல லேசியை (நீலம்) -     பெரிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
• கபோத லேசியை (பச்சை) - சிறிய கிளையை வெட்டி பழங்களை உண்ண நினைப்பது
• பீத லேசியை (மஞ்சள் அல்லது பொன்) – நான்கைந்து பழக் கொத்துக்களை உடைய கொம்பினைப் பறித்து பழங்களை உண்ண நினைப்பது
• பதும லேசியை (சிவப்பு) - ஒரேயொரு பழக் கொத்தை மட்டும் எடுத்து பழங்களை உண்ண நினைப்பது   
• சுக்கில லேசியை (வெள்ளை) - கீழே உதிர்ந்து கிடக்கும் பழங்களை மட்டும் உண்ண நினைப்பது

இவற்றிலிருந்து லேசியை என்பது மனத்தில் உருவாகும் எண்ணங்களை வகைப்படுத்தும் நிறக் கோட்பாடு என்பது தெளிவாகிறது. ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியின் நான்காவது செய்யுளுக்கு விளக்கம் தரும் நீலகேசி உரையாசிரியர் சமய திவாகரவாமன முனிவர் லேசியை பற்றித் தனது அஷ்ட பதார்த்த சாரம் பகுதியில்  விளக்குகிறார்.

 

References:
1. தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும் by முனைவர் க. நெடுஞ்செழியன்
2.    நீலகேசி  1984,  தமிழ்ப் பல்கலைக் கழகம்  தஞ்சாவூர்.
3.    நீலகேசியில் சமயக் கோட்பாடுகள்  2002, பீ.மூ. மன்சூர், தி பார்க்கர்
4.    சமணக் காப்பியங்கள்  1988, சு. சுனந்தாதேவி
5.    செப்படு வித்தை: சீர் மேவும் நுண்மொழி By மானெக்ஷா
6.    வள்ளுவத்தின் வீழ்ச்சி by குணா

தேமொழி

unread,
Dec 22, 2018, 10:48:17 PM12/22/18
to மின்தமிழ்

ref: https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/15/ஆசீவகம்-நிறக்-கோட்பாடு-ஏழுநிலைக்-கோட்பாடு-இறுதி-எட்டுக்-கோட்பாடு-3058589.html


மத அரசியல்-38: 


ஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு


By C.P.சரவணன்  |   Published on : 15th December 2018



aseevagam_color

 

ஆசீவக நிறக் கோட்பாடு (Aseevagam-Colour Level Concept)

ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப்பட்டது. துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக காட்சியியலில் (மெய்யியல்) முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது காட்சியியல் படிநிலையினை (philosophical Stage) அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, காட்சியியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

 

ஆறு நிறங்களும், 18 படிகளும் ( Six colors and 18 Steps)

  • கருமை & சாம்பல் - துவக்க நிலை - இரவு விண்ணின் நிறம்
  • நீலம் - இரண்டாம் நிலை - விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
  • பசுமை - மூன்றாம் நிலை - கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு இருக்கும் நிறம்
  • செம்மை - நான்காம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
  • மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
  • வெள்ளை - இறுதி நிலை - கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்

 

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

  • துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.
  • இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
  • கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

 

18 படிகள் (18 steps)

 
கரும்பிறப்பில்
கருமை முதல் படி
கருமை இரண்டாம் படி
சாம்பல் மூன்றாம் படி

நீலப் பிறப்பில்
கருநீலம் முதல் படி
நீலம் இரண்டாம் படி
வான்நிறம் மூன்றாம் படி

பசும் பிறப்பில்
அடர்பச்சை முதல் படி
பச்சை இரண்டாம் படி
வெளிர்பச்சை மூன்றாம் படி

செம்பிறப்பில்
செம்மை முதல் படி
இளம்சிவப்பு இரண்டாம் படி
காவி மூன்றாம் படி

மஞ்சள் பிறப்பில்
அடர் மஞ்சள் முதல் படி
இளமஞ்சள் இரண்டாம் படி

பொன்மை மூன்றாம் படி
வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

 

நல்வெள்ளை (Pure white)

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே.

மேலும், புத்த நெறியிலும் ஜைன நெறியிலும் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாட்டின் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர். ஆனால், ஜைன நெறியின் கொடியில் ஆசீவகத்தின் நீல நிறத்தைத் தவிற மற்ற நிறங்கள் முறை மாற்றி இருக்கும். அவர்கள் நீல நிறத்த்துடன் கருப்பு நிறத்தையும் சேர்த்து கருப்பு நிறமாக அவர்கள் கொடியில் கூறுகின்றனர். ஆனால், இந்நிறங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடுகளின் பொருளாக இருந்தாலும் அவர்கள் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர்.

 

நிர்வாணம் எனும் இறுதி நிலை நிறமிலி (Nirvana / Colorless)

ஆசீவகத்தின் ஏழாம் நிறமான நீர்வண்ணம் பரிநிர்வாணம் அடைந்த சித்தர்களின் அடையாளமாகும்.
நீர்வண்ண(நீர்+வண்ணம் = நிர்வாணம் ) நிலையை அடைய தொடர்ந்து தவம் இருந்து ஐம்புலன்களை வெல்லவேண்டும்!!!!

இங்கு ஆய்தற்குரிய மற்றொரு ஒரு விடயம் என்னவென்றால், கிறித்துவ நெறியில் உள்ள “Bracelet of Christianity” எனும் கோட்பாடும் இதே நிறங்களைக் கொண்டவை. அங்கும், இறுதியில் மோட்சம் எனும் வீடுபேறு கோட்பாடு தான் உள்ளது.

இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.

 

பெரியவர் / அண்ணர் / அண்ணல்

சித்தன்னவாசல் (அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.
அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன. 


ஏழுநிலைக் கோட்பாடு (Seven stage Concept)
             
எழுபிறப்பு (Seven Births)

கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண்பிறப்பு ஆகிய அறுவகை பிறப்புகளையும் கடந்து கழிவெண்பிறப்பு என்னும் ‘நீர்வண்ணத்தை’ அடைவதென்பதே பிறப்புகளுக்கு வண்ணங்களை ஊட்டிய ஆசீவகரின் நிலைப்பாடு. அதுவே ‘எழுபிறப்பு’ எனப்பட்டது.

அந்த எழுபிறப்புக் கோட்பாடு ஆசீவக காட்சியியல் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்க வேண்டுமெனக் கருதத் தூண்டுகிறது. உயிர்களை ஆறு வகையாக உருவகப்படுத்தும் தொல்காப்பியம் (நூற்பா 1526) ஊறு, நா, மூக்கு, கண், செவி, மனம் எனும் புலனுணர்வுகளை அவ்வவ் உயிர்களுடன் உறவுப்படுத்துகிறது. மனத்திலிருந்து பிறக்கும் அறிவை அகத்தியத் தருக்க நூற்பா என்னும் நூல் ‘உள்ளம்’ எனச் சொல்லி ஏழாவதாக வைக்கிறது (“அறிவுப் பண்பிற் றான்மா வென்க” 19:1). அதை ‘உயிர்’ என்றும் அது குறிப்பிடுகிறது (“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்” 19:3). அதுவே ‘ஆன்மா’ என்றும் கூறப்படுகிறது. ‘மனம்’ என்பது ஐம்புலன்களின் வழியாகக் கிடைக்கின்ற காட்சியளவை (Perceptual Knowledge); ‘உள்ளம்’ என்பது மனத்தின் வழியாகப் பிறக்கின்ற கருத்தளவை (Conceptual Knowledge). ‘மனம்’ வேறு, ‘உள்ளம்’ வேறென மீமிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டுகிறது, தமிழரின் காட்சியியல்.

இதை ஆசீவகத் துறவி வள்ளுவரும்...

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)

என்பார். மேலும், ‘எழுபிறப்பு’ எனும் கருத்து திருக்குறளில் (62, 107, 398, 538, 835) வருவதை காணலாம். திருக்குறள் சொல்லும் எழுமையும் எழுபிறப்பும் ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டை நினைவுறுத்துகிறது.

 

எழுமை (Hepta)

• முளை, துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என நிலத்திணை(செடி)யின் திரிவாக்கத்தில் காணப்படும் எழுமை;
• கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இனுக்கு என மரத்தில் எழுமை;
• புல், தாள், மடல், தோகை, ஓலை, தழை, இலை என இலையில் எழுமை;
• நாற்று, கணு, குருந்து, மடலி, பிள்ளை, குட்டி, பைங்கூழ் எனப் பயிரில் எழுமை;
• செய், தோப்பு, தோட்டம், காடு, சோலை, கானல், அடவி என மர அடர்த்தியில் எழுமை;
• புனம், புலவு, கொல்லை, வானவாரி, புன்செய், நன்செய், மிசை என உழுவுநிலத்தில் எழுமை;
• அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் எனப் பூவில் எழுமை;
• பூப்பிஞ்சு, பிஞ்சு, கருங்காய், பழக்காய், காய்ப்பழம், பழம், கனி எனக் காயில் எழுமை;
• தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று எனப் உணவுக்கூலத்தில் எழுமை;
• பொட்டு, உமி, தொலி, தோல், கோது, தோடு, ஓடு என உணவுக்கூலத்தின் மேல்தோல்களில் எழுமை;
• சாறு, சோறு, சுளை, சதை, முத்து, அரிசி, பருப்பு என விளைப்பொருள்களில் எழுமை;
• வளி, சூறாவளி, புயல், கொண்டல், கோடை, தென்றல், வாடை எனக் காற்றில் எழுமை;
• குட்டை, குளம், பொய்கை, ஊருண்ணி, ஏரி, கண்வாய், தடாகம் என நீர்நிலைகளில் எழுமை;
• ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிர்நெடில்களை வைத்துக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என முறையே அமைந்த இசையின் (சுரங்களின்) எழுமை;
• வில்யாழ், பேரியாழ், சுறவியாழ், சகோடயாழ், முண்டகயாழ், செங்கோட்டியாழ், சீறியாழ் என யாழில் எழுமை;
• பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என ஆடவரின் பருவங்களில் எழுமை;
• பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவங்களில் எழுமை
• ஐம்புலன்கள்+மனம்+உள்ளம் என்பதில் எழுமை
• ஏழு முனிவர்கள்
• ஏழு கன்னியர்கள்.
• ஏழு சுரங்கள்
• ஏழுமுனிகள்-இவர்கள் அண்ணன் தம்பிகள் –மூத்தவர் “மெய் ஐயனார்” எனும் மெய்யப்பன். இவருக்கு திருமெய்யத்தில் கோவில் உண்டு.

என்றெல்லாம் எழுமை என்னும் கோட்பாடு தமிழரின் வாழ்வியலில் பற்றிப் பரவிக் கிடப்பதை  நீக்கமறக் காணலாம்.

 

ஊழ்கமும் காட்சியியலும் (Destiny and Philosophy)

ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை.

 

ஊழ்கமும் உடலும்

உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும்.

வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும்.

இடகலை நாடி வாதமென்றும்
பிங்கலை நாடி பித்தமென்றும்
சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும்.

வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும்
பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும்
ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும்

சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர்.

இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும்.

சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)

உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும்.

1. வாயில் பாலூற்றுதல்.
2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.
3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல்
4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி)
5. நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.)
6. தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)
7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல்.
8. உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல்.
9. நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.

இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர்.

ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,

நிலப்பூதியத்தில் 11/2
நீர்ப்பூதியத்தில் 11/4
நெருப்புப்பூதியத்தில் 1
வளி பூதியத்தில் 3/4 
வெளிபூதியத்தில் 1/2

ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம்.

இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.

ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல்,
ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)
போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)
சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)
கூறுகின்றது.

இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும். இவ்வாறு, பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும்.

 

இறுதி எட்டு (Last Eight Concept)

அறப்பெயர் சாத்தானாகிய மற்கலி, தாம் வீடு வேறு அடைவதற்கு முன்பாக எட்டு உறுதிப் பெருள்களை வெளியிட்டுள்ளார், அதன் பின்னரே அவர் பெரியவர் என்றழைக்கப்பட்ட தீர்த்தங்கரராக உயர்ந்தார். இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது.
அவையாவன:

1. கடைமிடறு (last Drink)

இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான்.

2. இறுதிப் பாடல் (Last Song)

இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து.

3. இறுதி ஆடல் (Last Dance)

கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்.

4. இறுதி வரவேற்பு (Last Reception) 

ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே.

5. காரிருள் (Last Great Cloud)

இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது.
 
6. நிறையாவழிகையமிழ்தூற்று (Last Sprinkling Scent)

உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர்.

7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு (Last Battle with stones)

ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க காட்சியியல் கூறுகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

8. ஐயன் நிலை அடைதல் (Attain Divine / Iyen)

இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.

இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.

References: 
ஆய்வுக் கட்டுரைகள் By ஆதி.சங்கரன்
‘மெய்ம்மை’ by அகன்.

 

Malarvizhi Mangay

unread,
Dec 23, 2018, 6:26:56 AM12/23/18
to mint...@googlegroups.com
வள்ளல் பெருமான் கூட எழு திரை நீக்கி ஜோதி தரிசனம் செய்யுமாறு 
வடிவமைத்துள்ளார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Dec 23, 2018, 6:36:34 AM12/23/18
to mintamil
தொன்மம் வேறு; ஆன்மீகம் வேறு; மதாபிமானம் வேறு; சாதி வேற்றுமை வேறு.

ஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு,ஐயன் நிலை அடைதல் (Attain Divine / Iyen) ஆகியவை மதாபிமானத்தைக் கடந்து, ஆன்மீக பாதையில் தொன்மத்தை விளக்குபவை.



தேமொழி

unread,
Dec 24, 2018, 1:28:34 AM12/24/18
to மின்தமிழ்
ref:   https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/17/மத-அரசியல்-38-ஆசிவகம்-நிறுவனர்கள்காட்சியியலாளர்கள்-3059819.html

மத அரசியல்: 
ஆசிவகம்-நிறுவனர்கள்/காட்சியியலாளர்கள்

By C.P.சரவணன்  |   Published on : 17-12-2018


asee

 

ஆசிவகம்-நிறுவனர்கள்/காட்சியியலாளர்கள் (Founders and Philosophers of Aseevagam)

எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; சாங்கியம் என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; அளவையியல் எனப்படும் நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார். இவர்கள் அனைவரும் ஆசிவக அறிஞர்கள் ஆவர்.

 

மற்கலி கோசாலர் (Makkhali Gosala)

ஆசீவக நெறிமுறைகள் ஏற்கனவே வழக்கத்தில் இருப்பினும் மற்கலி கோசாலர் என்பவர் ஆசீவகம் என்ற இயக்கத்தை நிறுவனமாக மாற்றியவர். இவர் இயற்பெயர் மாசாத்தன் மற்றும் மன்கலி. இவர் பிறப்பு கி.மு 523 என்பர்.  இவர் மேலும் ஐயனார் என்றும் சாத்தன் என்றும் அழைக்கப்படுவர். திருப்பட்டூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குறுநிலமன்னன் மரபைச் சேர்ந்தவர். திருப்பட்டூர் இன்றைய திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவர் வடநாடு சென்று திகம்பரப்பிரிவைத் தோற்றுவித்த மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் பணியாற்றி, பின் கருத்து வேறுபாடு காரணமாக தமக்கென்று சங்கம் அமைத்துக் கொண்டார்.

பகவதி சூத்திரத்தின் படி இரந்துண்பதை தொழிலாகக் கொண்ட “மன்கலி’ என்பவருக்கு மகன் எனும் பொருள்படும் “மன்கலிபுத்தர்’ என அழைக்கப்பட்டார். மேலும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த காரணத்தால் ‘கோசாலர்’ என அழைக்கப்பட்டார் என்கிறார் ஏ.எஃப்.ஆர்.ஹார்ன்லி (Augustus Frederic Rudolf Hoernlé). இவரே முதலில் வினைக் கொள்கையை மறுத்து, நியதிக் கொள்கையை உரைத்தவர். 

இவர்கள் சாண, கலந்த, கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயணன், அச்சுண்ண கோமாயு புத்தன் என்பவர்களாகும்.  இவர்களே மக்கலி கோசாலரின் கோட்பாடுகள் எண்ணங்கள் ஆகியவற்றை எல்லாத் திசைகளிலும் பரப்பியவர்கள். புத்தர், மகாவீரர், இந்து மதத்தினர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொண்டது போல் மக்கலி கோசலர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக்கொண்டது விதி எனப்படும் கொள்கையே. இதை நியதி ,தைவம் என்ற வேறு பெயர்களாலும் அழைப்பர். இவர்கள் கொள்கைகளடங்கிய  ஆசீவகர்களால் எழுதப்பட்ட நூல் என்பது இதுவரை கிட்டவில்லை. மற்கலி நூல், ஒன்பதுவாங்கதிர், என்ற நூல்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆசீவகர்களிடையே வழக்கில் இருந்ததாகத் தெரிய வருகின்றது (மணிமேகலை 27:165),
 
ஐயனார் பிறந்த ஊர் திருப்பட்டூர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள், திருப்பட்டூர் அய்யனார் கோயிலில் உள்ளன என பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார். யானை, மற்கலி  ஐயனாரின் வாகனத்தையும், குதிரை, படைத்தளபதியான ஐயனாரின் வாகனத்தையும் குறிப்பன.

மற்கலியின் இயற்பெயர் கலியன் அன்ற்ம், இவர் கலிவாகு என்னும் அரச மரபில் பிறந்ததால் கலியன் எனப் பெயர் பெற்றதாக அயோத்திதாசர் கூறுகிறார். தமிழரின் ஆண்டு முறையில் கலியாண்டு என்றும் கலியுகம் என்றும் அழைப்பர். கலி என்றால் மகிழ்ச்சி, வலிமை ஆரவாரம் என தமிழ் மரபு பொருள் கூறுகிறது.

இன்று மற்கலி கோசாலரே அறப்பெயர் சாத்தன் ஆவர். அறப் பெயர் சாத்தானே “தரும சாஸ்தா’ ஆகும். தமிழகத்தில் ஊர்புறக் காவல் தெய்வமாக இடம் பெற்றுள்ளவர் இந்த ஐயனார்.  ஐயனார், முனியப்பன், போன்றோர் போன்றோர் உலக மாமனிதர்களோடு ஒப்பிடமுடியாத பேரறிவாளர் ஆவர்.

இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.

"மற்கலி கோசலர் கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் வெயிலில் நின்றவாறே தவம் செய்து வந்தவராம். பகவதி சூத்திரம் என்னும் சைன நூலை காட்டி அதைக் குறிப்பிடுவர். அவ்வாறு தவம் செய்கையில் அவர் ஆறு வேளைகள் உண்ணவே மாட்டாராம். மொச்சைக் கொட்டையும் அரிசிக் கஞ்சியும் மட்டுமே அவரது உணவாம். தவத்தைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு வாய் நீரை மட்டுமே குடித்துவிட்டு அவர் ஒரு முறை ஆறு திங்கள் வரை கடுந்தவம் செய்தாராம். இதன் விளைவாக, இறுதியில் உக்கிரமான ஓர் ஆற்றலை அவர் பெற்றாராம். ஆசீவகர், சம்மணம் கொட்டிய (கொள்ளுதல் என்பது கொண்டுதல்/கொட்டுதல் என்றும் பலுக்கப் படும்; இன்றைக்கும் எங்கள் ஊர்ப் பக்கம் சம்மணம் கொட்டு என்றுதான் சொல்லுவார்கள்.) நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு கடுந்தவம் புரிந்து வந்தனர். இதை அவர்கள் சம்மணத் தவம் என்றனர். 

 

ஆசீவக மூவர்

அருகம், ஆதிநாதர் முதலான 23ஆம் திருத்தங்கரரான பார்சுவநாதர் வரையிலானவர்களின் போதனைகளின் அடிப்படையில் மகாவீரர் போதித்த நெறிகளைப் பின்பற்றுகிறது. மகாவீரரை 24வது திருத்தங்கரராகக் கொண்டாடுகிறது.ஆசீவகம், பார்சுவநாதருக்குப் பின் மற்கலியைத் திருத்தங்கரராகக் கொண்டு, மற்கலியின் போதனைகளையே பின்பற்றுகிறது.

திருப்பிடவூர் ஐயனார்/மற்கலி கோசாலர்
மாங்குளம் நந்தாசிரியன்/நந்தவாச்சா
மறுகால்தலை கிசசாங்கிசா/வெண்காசியபன்

ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி, கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலி கோசாலரைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆசீவகம் என்ற சங்கத்தை சாவத்தி நகரில் வாழ்ந்த ஆலகாலா எனும் குயப்பெண் வீடே தலைமையகமாக விளங்கியது. "வைதிகநெறி" எனும் விதிக் கொள்கைக்கு எதிரான வாழ்க்கை முறை. குறிப்பாக, கிமு 600 முதல் கிபி 250 வரை தமிழ் மக்களின் பேரியக்கமாகத் தழைத்தோங்கி வாழ்ந்த ஒரு சமய நெறி.

பாழி (பாளி), பாகதம் (பிராகிருதம்) முதலான வடமொழிகளில், துறவிகளைப் பொதுவாக 'சமண' என்றழைப்பதே மரபு. ஆனால், 'சிரமண (Sramna) என்னும் சங்கதச் சொல்லில் இருந்தே 'சமணன்' என்னும் தமிழ்ச் சொல் வந்தது என்பது ஒரு தலைகீழ்ப் பாடம். அது போலவே அம்மணமான நிலையில் துறவிகளாக இருந்தவர்கள் அமணர். ஆசீவகத் துறவிகளும் அம்மணமானவர் என்பதனால் "ஆசீவகன் அமணர்களில்" எனச் சிவஞான சித்தியார் கூறும்.

சம்மணத் தவம் போக, முள்படுக்கையின் மீது கிடந்த வண்ணம் ஆசீவகர் செய்து வந்தது முள்தவமாம். ஐந்து நெருப்புகளுக்கிடையில் அமர்ந்தவண்ணம் ஆற்றி வந்த தவம் 'ஐந்தீத் தவ'மாம். பேசாமை, அசையாமை, காலை மடித்துக் குந்தியிருத்தல், கழுத்துவரை மண்ணில் புதையுண்டு நிற்றல் போன்ற கடுந்தவங்களையும் கூட ஆசீவகர் செ;ய்து வந்தனராம். வவ்வால் தவமும் உண்டு. பெருந்தவம் செய்து வந்த ஆசீவகரை மாதவர்   என்றனர்."

 

பூரணகாயபர் (Poorana Kayapar)

சிவகத் தோற்றுநர்களில் ஒருவராகிய பூரணகாயபர் ஒரு தமிழர்தான் என  பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார்.. “ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல்” எனும் தனது நூலில் 30 பக்கங்களில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் கல்வெட்டுகள் பிற இந்தியத் தமிழகத் தத்துவநூல்களின் துணைகொண்டு ஆய்வு செய்து பூரணகாயபர் தமிழர்தான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதற்கான காரணங்களாக பின்வரும் விளக்கங்களை அவர் அதில் கூறியுள்ளார்.  ஆசிவகத்தில் நிறக்கொள்கையை அறிமுகப்படுத்திய பூரண காயபர் தமிழகக் கல்வெட்டுகளில் காயபன், செங்காயபன், மூத்த அமணன் செங்காயபன், வெண்காயபன் எனச் சுட்டப்பட்டுள்ளார் என்கிறார் அவர். புத்தரின் தலைமாணாக்கர் ஆனந்தர், ஆசிவக நெறியில் கழிவெண்பிறப்பு நிலையை அடைந்த மூவருள் ஒருவர் பூரணகாயபர் என்கிறார். அவரது கூற்றை தமிழ் இலக்கியமான நற்றிணையில் (பாடல் எண்கள்; 250, 369) வரும் மதுரை ஓலைக்கடையத்தனார் நல்வெள்ளையார் எனும் பூரணகாயபரின் பெயர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியங்களில் வரும் நல்வெள்ளையார் என்பது கழிவெண்பிறப்பு நிலையை அடைந்தவர்களைக் குறிக்கிறது. மதுரை ஓலைக்கடை என்பது ஆசிவகச் சமயத்தின் தலைமை இடமாக இருக்கலாம். மாங்குடி மருதனார் எழுதிய “மதுரைக்காஞ்சி” மதுரையில் ஆசிவகப்பள்ளிகள் இருந்ததை உறுதி செய்கிறது. தமிழ் மரபுக்கு ஏற்ப பூரணரும் தாழியில் தவம் இருந்தநிலையில் உயிர்விட்டுள்ளார். இவை பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் தரும் தகவல்கள். 

பக்குடுக்கை நன்கணியார் (Pakkudukkai Nankaniyar)

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈரத்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்ப்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே
 
                                                                                                          -பக்குடுக்கை நன்கணியார்.
 

இதன் பொருள், ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்க, இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். ஒரு வீட்டில் இளம் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்வர், இன்னொரு வீட்டில் கணவனைப் பிரிந்த மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். இவ்வாறு இரண்டு வகையாக உலகைப் படைத்துவிட்டான் பண்பில்லாதவன். துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்னாதவற்றை சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டுமே கண்டு மகிழ் என்பது.

 

அஜித கேசகம்பாளர் / நரிவெரூஉத்தலையார் (Ajitha Kesakambalar)

உத்தேசம் என்ற சொல்லிற்கு சிதைவு என்று பொருள். உலகில் யாஅவும் நிலைத்திருப்பதில்லை அழிகின்றன எனும் சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர். கேச கம்பாளர் என்பது மனிதரின் தலைமயிரிலிருந்து ஆடைகளை அணிந்தவர் எனும் பொருளில் அமைந்தவை. நரிகளே அஞ்சி ஓடக் கூடிய தலைமை உடையவர் என்பது பொருள். உலகாயத கோட்பாட்டை பேசியவர்.

 

பகுத காசாயனர் (Bakutha Kachayanar)

’ஒருமையியம்‘ எனும் கோட்பாட்டை நிறுவியவர்.

 

சஞ்சய பேலட்டபுத்தன் (Sanjaya Pelataputhan)

ஒவ்வொரு பொருளிலும் தீர்மானத்துக்கு வரமுடியாத ஓர் ஐயுறவுத் தன்மையே ஐயுறவுக் கோட்பாடாகும். இக்கோட்பாடு பின்னாளில் வர்தமானரின் சன சமயத்துடன் இணைந்துவிட்டது.

 

பிடவூர்ப் பெருஞ்சாத்தன்  (Pidavur Perunchathanan)

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர் சாத்தன் கிளையேம் பெரும"

எனும் புறநானூற்றுப் பாடல்,. சோழநாட்டுப் பிடவூர்க் கிழானின் மகன் பெருஞ்சாத்தன் திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில் வாழ்ந்ததாகக் கூறுகிறது.. சாத்தன் எனும் சொல் தமிழ்வழக்கில் ஐயனார் என்றே அறியப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என்று பொருள். பொதுவாக, வணிகக் கூட்டங்களை சாத்து என்று அழைப்பர். வணிகக் கூட்டங்களின் காவல் தெய்வமாக விளங்கிய ஐயனார்க்குச் சாத்தன் எனும் பெயர் வழக்காயிற்று. வணிகக் கூட்டங்களின் தலைவனும் சாத்தன் என்றே அழைக்கப்பெறுகிறான்.

நந்தவாச்சாவும் கிசசாங்கிசாவும்
"கணிய் நந்த அஸிரிய் இகுவ்அன் கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்
கடல்அன் வழுத்திய் கொட்டுபித்த அபளிஇய்"
"என கிமு 3ஆம் நூற்றாண்டு  மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் கணி நந்தாசிரியனே நந்தவாச்சா என பாலி மொழியில் குறிப்பிடப் படுகிறார்.. வானவியல் கணிப்பதில் வல்லவரான கணி நந்தாசிரியன் பேச்சு வழக்கில் நந்தவாச்சா ஆகியிருக்கிறார். 

ஆசிரியன் - ஆச்சாரியன் -ஆச்சான்
பெரியவாசிரியன் - பெரியவாச்சான்
நந்தாசிரியன் - நந்தவாச்சான் - நந்தவாச்சா

நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவிகளுள் முதன்மையானவர்

"வெண்காசிபன் கொ(ட்)டுபித்த கல் கஞ்சணம்"
தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலையில் ஆசீவகப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டபோது காணப்பட்ட கிபி.2ஆம் நூற்றாண்டு 'தமிழி' எழுத்து இது.இந்த மறுகால்தலை கற்படுக்கைக்குரிய வெண்காசிபன் என்பவரே கிசசாங்கிசா.

இவ்விருவரையும் பௌத்த தமிழ் இலக்கியங்களிள்கூட  ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுவதைக் காண்கிறோம். இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் வியப்பே.
"ஆசீவகமானது பண்டைய தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்தது" என  அமெரிக்க இந்தியாவில்  ஆராய்ச்சியாளர் அறிஞர் ஹென்ரிக் ராபர்ட் ஜிம்மர் (Heinrich Robert Zimmer )தனது ‘இந்திய தத்துவவியல்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

 

மக்கலி மறைவு

மகாவம்சம் நூலின் அடிப்படையில் வரலாற்று அறிஞர், ஏ. எல். பாசம் (A. L. Basham), மக்கலி கோசாளர், கிமு 484ல் மறைந்ததாக கருதுகிறார்.
தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

References:
Philosophies of India by Heinrich Robert Zimmer

தேமொழி

unread,
Dec 24, 2018, 1:56:11 AM12/24/18
to மின்தமிழ்
ref:  https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/20/மத-அரசியல்-39-ஆசிவர்கள்-வானியல்-3061767.html

மத அரசியல்-39: 
ஆசிவர்கள் வானியல் 

By C.P.சரவணன்  |   Published on : 20th December 2018

vaniyal

 

ஆசிவர்கள் வானியல் (Astronomy and Aseevagam)

தொழில்நுட்பமும் அறிவியலும் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நூற்றாண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் உருண்டை என்பதையே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 16ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தனர். ஆனால் சங்க காலத் தமிழர்கள் விண்ணையும் அதிலிருக்கும் கிரகங்களையும், காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அதனை அளவிடும் வானியல் அறிவியலையும் அறிந்து அதை இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் பதிவு செய்துள்ளனர். 7 கிரகங்கள் வரை அறிந்திருந்தனர். இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்கத்திய நாடுகள் அறிவதற்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் அறிந்திருந்தனர். தேசத்தின் வடக்கே வாழ்ந்தவர்களுக்கு ஐம்பூதங்களில் சதுர்ப்புதமாகிய நான்கு கூறுகளை மட்டுமே தெரியும். காற்றை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் காற்றையே கணக்கச்சிதமாக கணித்து வைத்திருந்தார்கள் நம் தமிழர்கள்.

 

வானியல் நூல்கள்

பண்டைய அறிவர்களிடம் ஐந்திரம் (Aintiram), கோள்நூல் கடைக்கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை, இதில் கோள்நூல் இப்போதில்லை என்கிறார் தேவநேய பாவாணர். ஐந்திரம் மட்டும் கணபதி ஸ்தபதி அவர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்கலி வகுத்த “நவகதிர்’ இத்தகைய வான்நூல்-கோள்நூல் பற்றியது. 

 

கோள்கள் பற்றிய அறிவரின் கருத்து

செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுனர்கள் செவ்வாய் கோளில், மண் சிவப்புநிறமாய் இருப்பதனை அறிவியல் ஆய்வு மூலம் புலப்படுத்தியுள்ளனர். வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என அழைத்தனர்.வெள்ளிக்கோளில் வெள்ளித்தாது இருப்பதனை இன்று அறிவியல்ஆய்வு புலப்படுத்தியுள்ளது. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதனால் இதனை விடிவெள்ளி என்றனர். புதிதாகக் கண்டறிந்த கோளைப் புதன் என அழைத்தனர். புதிதாகஅறிந்ததனால் அதற்கு  ‘அறிவன்’ எனவும் பெயருண்டு.வியா என்றால் பெரிய, நிறைய எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே  வியாழன்  என்றனர். சனிக்கோளைக் காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது. ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்,
அந்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் 
சூழ்ந்த மண்டிலமும்

தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும்,ஞாயிற்றிடமிருந்து ஒளிப்பெற்று ஒளி விடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர். தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளைக் கொண்டது. ஒன்று வான் இயற்பியல் (Astro Physics) மற்றது கணியத்தோடு கூடிய பிறப்பியம் (Astrology). இந்த வான் இயற்பியலை மற்கலியின் முன்னோர்கள் செழுமைப் படுத்தியுள்ளனர். இத்தகைய அறிஞர்கள்களை தொல்காப்பியர் “அறிவர்” எனப் பாராட்டுவார். அறிவர்களே கணியர்கள்,

பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
தனிவுற் றறிந்த கணிவன் முல்லை

அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்று தலாவது `பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் `நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்:

புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி.

இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார். ஏறத்தாழ கி.மு.14 ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் தொல்காப்பியர், தம் இலக்கண நூலில் வானியல் குறிப்புகளைத் தெளிவாக குறித்திருக்கிறார்.இனி, சூத்திரம்:

‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூவகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது’ என்மனார் புலவர். 

– தொ.கா, பொருளதிகாரம், புறத்திணையியல், 74

இதன் ஒவ்வொரு வரிக்கும் நீண்ட விளக்கங்களை உரையாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இதில் விரிவானதும், மிகச்சிறப்பானதும் நச்சினார்க்கினியரின் உரை. முழு உரையையும்  காணலாம். அறிவன் என்பதற்கு கணியன் (சோதிடன்) என்று இளம்பூரணர் பொருள் கொள்கிறார். இது ஞானியைக் குறிக்கவில்லை, மூவகைக் காலம் என்பது மழையும் பனியும் வெயிலும் என்கிறார். நடைமுறை சார்ந்த அவரது யதார்த்தவாதம் இதில் வெளிப்படுகிறது.

“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” – குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்.

இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், “பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை” எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் ‘மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்’ என்றார்.

தமிழரது அறுபது ஆண்டுகள் என்ற ஆண்டுக் கணிப்பும், கதிரவன், திங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வகுத்துள்ளனர். 12 ஆண்டுகளை ஒரு மாமாங்கம் எனக் கணிக்கும் தமிழர் வழக்கம் தமிழரிடம் இருந்துள்ளது. தமிழர் கண்டறிந்து வழக்கிற் கொண்ட வானியல் செய்திகளை உலகப் பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். சிலேட்டர் என்னும் “அறிஞர் தமிழரின் வானவியல் கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணித முறைகளிலும் நிதானமானது” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ.தட்சணாமூர்த்தி தமிழர் நாகரிகமும் பண்பாடும் (பக்: 166) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர், வானியலை நன்கறிற்தோரைக் ‘கணியர்’என குறிப்பிட்டிருக்கின்றனர். வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை தீமைகளைக் கூறுபவராகக் கணியர் திகழ்ந்துள்ளனர். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் என்ற அறிவர்களின் பெயர்கள் இக் கூற்றுக்குச் சான்றாகின்றன. அரசர் அவையில் பெருங்கணிகன் என்ற வானியல் அறிஞன் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.

 

விசும்பு (Space)

ஆங்கிலத்தில் “space” என அழைக்கப்படுகின்ற விண்வெளியைத் தமிழர் விசும்பு எனக் குறிப்பிட்டனர். விண்ணுக்கும் (sky) விசும்பிற்கும் (Space) உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தனர். விசும்பிற்கும் அப்பால் பரந்து விரிந்த வெளியை அண்டவெளிகள் (Galaxy) என்றனர். இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ (Galileo தொலைநோக்கி வாயிலாக அண்டங்களைக் கண்டறிவதற்கு முன்பாகவே தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு வியப்பை ஏற்படுத்துகின்றது. பழம் பெரும் இலக்கணமான தொல்காப்பியம்,

“நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்”   
(தொல்:  பொரு: 90)

என அக்கால ஐம்பூத இயல்பைக் குறிப்பிடுகின்றது.

முதலில் விசும்புதான் இருந்தது. அங்கே சூரியக் குடும்பங்கள் தோன்றின. அவை சுழலும் போது தீ உண்டாயிற்று. அதிலிருந்து ஒளி பிறந்தது. சூரியக் குடும்பங்கள் உதிர்ந்த தீப்பிழம்புகள் கோள்கள் ஆயின. அவை சுழலும்போது காற்று ஏற்பட்டது. காற்றோடு கலந்த கோள்களில் தண்ணீர் கிடைத்தது. அக்கோள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று.  (திரு. இராசகோபாலன் - இலக்கியத்தில் வானியல் பக்:17-18) புறநானூறு என்ற சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள இச் செய்தி இன்றைய அறிவியலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வானியல் உண்மையாகும்.

“மண் திரிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)

மண்ணிருந்து பார்க்கும் போது விண் நீலமாகவே தெரியும். ஆயினும் விசும்பு இருள் மயமானது என்பதைக் கண்டறிந்து சொல்கிறது மலைபடுகடாம் என்ற இலக்கியம்.

“திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்..” (மலைபடு: 1-2)

யுகம் என்பதனை தமிழர் அக்காலத்தே ஊழி என அழைத்தனர். ஊழிகளைத் தொடர்ந்தே வானம், காற்று, தீ, நீர், நிலம் என்பன தோன்றின என்பதை பரிபாடல் என்ற இலக்கியம் தெளிவாகக் கூறுகின்றது.

“விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு” - பரிபாடல்-2

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றின. பூமியின் தோற்றம் பற்றிய தமிழரது இத்தெளிவான செய்தியை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

 

ஞாயிறு (Sun)

ஞாயிறை நன்கு ஆராய்ந்த அறிவியலாளர் கதிரவன் ஒரு திடப்பொருள் அல்ல என்றே கூறுகின்றனர். கதிரவனில் காணப்படும் பல தாதுப்பொருட்கள் (Minerals) ஆவி உருவில் இருக்கின்றன என்றும் அவை எரிவதாலேயே நமக்கும் வெப்பமும் ஒளியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பெரும்பாணாற்றுப்படை கதிரவனைப் “பகல் செய் மண்டிலம்” எனக் கூறகின்றது.

கதிரவனுடைய தன்மைகளையும் பயன்களையும் நன்கு உணர்ந்த தமிழர் பழங்காலந் தொட்டே கதிரவனை வழிபட்டு வந்துள்ளனர். சிலப்பதிகாரம் என்ற ஒப்பற்ற இலக்கியத்தை ஆக்கிய இளங்கோவடிகள் தன் கடவுள் வாழ்த்தில் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’எனக் கதிரவனுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.     (*?????????)

வெண்மை என்பது தனி நிறம் அல்ல, அது ஏழு நிறங்கள் முறைப்படி சேர்ந்த கலவை என அறிவியலாளர் கூறுகின்றனர். கதிரவனில் VIBGYOR என்கின்ற ஏழு வண்ணங்கள் உண்டு என்பதை அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை சங்கப் புலவரான கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கியத்தில் கதிரவன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் உலா வருகின்றான் என்கிறார்.

“எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு)

இரவுப் பொழுதில் துருவ மீனைக் கொண்டு திசையறிந்த தமிழர் பகலில் நான்கு திசைகளையும் கதிரவன் துணை கொண்டு அறிந்தனர். சித்திரைத் திங்கள் பத்தாம் நாளுக்குப் பின் கதிரவன் தமிழகப் பரப்புக்கு மேல் தலை உச்சியில் இருப்பதைக் கண்டறிந்தனர். அன்றைய நாளில் இரண்டு கோல்களை நட்டு, அக் கோள்களின் நிழல் தரையில் விழும் நிலையைக் குறித்துத் திசைகளைக் கணக்கிட்டனர் என்பதை நெடுநல்வாடை என்ற இலக்கியம்,

“விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதன் கயிறிட்டு”   (நெடுநல்வாடை)

எனக் கூறுகிறது.

கதிரவனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியற் கூற்றைக் கி.பி 1543 இல் கண்டறிந்து வெளியிட்டவர் கொப்பர்னிக்கஸ் என்ற வானவியல் அறிஞராவர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கதிரவனை முதலாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டறிந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரி என்பார்,

“என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்” (பரி. 19:46-47)

என்ற பரிபாடல் வரிகளை ஆதாரம் காட்டிக் கூறியுள்ளார். (தமிழர் மரபுச் செல்வங்கள் பக்: 119)
“சுடர் சக்கரத்தைப் பொருந்திய ஞாயிறு முதலான கோள்களது நிலைமையை வரைந்த ஓவியங்களால் அறிவோரும்” எனப் பொருள் தருகின்றன இவ்வரிகள். 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட சூரிய மையக் கொள்கை சங்கத்தமிழரால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது.

“வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு”      (சிறுபாண் - 242 243)

‘ஒளி மிக்க வானில் கோள்மீன்களால் சூழப்பட்ட இளம் கதிர்களைக் கொண்ட கதிரவன்’ என்பது இவ் வரிகளின் பொருளாகும். கதிரவனின் மையப் பகுதியில் வெப்பம் கனன்று கொண்டிருப்பதை நற்றிணை ‘அகங்கனலி’ எனக் கூறுகின்றது. கதிரவனில் இருந்து வெளியேறும் தீ நாக்குகளை ‘நெடுஞ்சுடர்க் கதிர்’ எனக் குறிப்பிடுகின்றது.

 

கோள்கள் (Planets) 

உலகம் தட்டையா ? உருண்டையா ?

விசும்பு அண்டம் (Outer Space) எங்கும் பரவிக் கிடக்கும் கோள்களைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். கோள் என்பது கோளம் (Globe) என்ற உருண்டை வடிலான பொருளைக் குறிக்கும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். பூமி உட்படக் கோள்கள் யாவும் உருண்டையானது எனத் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். கோள் என்பதற்கு வளைதல் என்ற பொருளும் உண்டு. விசும்பு வெளியில் இவை வளைந்து சுழன்று வருவதால் கோள் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர். 

பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் காபர்நிகஸ் (Nicolaus Copernicus) என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என முறையாகக் கணித்து கூறினார். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியது திருக்குறள்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

விசும்பில் ஒளிரும் பொருட்களை மீன் என்றே அழைத்தனர். தாமே ஒளிவிடக் கூடியவற்றை நாண்மீன் எனக் குறிப்பிட்டனர். கதிரவனின் ஒளி கொண்டு ஒளிர்வனவற்றைக் கோள்மீன் எனக் குறிப்பிட்டனர். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன ஞாயிறின் ஒளி கொண்டு ஒளிரும் கோள்களாகும்.

அகன்ற மன்றத்தில் ஆட்டுக்கிடாய்களும் சிவலைப் பறவைகளும் விளையாடும் காட்சி நீலவானில் நாண்மீன்களும் கோள்மீன்களும் கலந்திருப்பதைப் போல் இருந்தது எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
நீநிற விசும்பின் வலனேர்பு திரிதரு

நாண்மீன் விராய கோணமீன் போல
மலர்தலை மன்றத்து......   (பட்டி. 67-77)

கதிரவக் குடும்பத்தில் ஒன்பது கோள்மீன்கள், அவற்றின் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் என்பன உள்ளதாக விண்ணியல் அறிஞர் கூறுவர். இக்கோள்களைப் பரிபாடற் பாடலொன்று பட்டியலிடுகின்றது.

“தீவளி விசும்பு நிலம் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் மறனும் ஐவரும்” (பரி. 3: 4-5)

இப்பாடல் தீ, காற்று, விண், நிலம், நீர் என்ற ஐம்பூதங்களோடும்  ஞாயிறு திங்கள் என்ற முதன்மைக் கோள்களோடும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஐந்து கோள்களையும் குறிப்பிடுகின்றது. கோள்களைப் பற்றிய தெளிவான செய்திகள் சிலவற்றைப் பரிபாடல் தருகின்றது.

“விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.   (பரிபாடல் 11: 1-15)

இப்பாடலின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது சிறப்பானது.

 

திங்கள் (Moon)

மதி, நிலா என தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட துணைக் கோள் திங்களாகும். இதனை இப்போது சந்திரன் என்ற வடமொழிச் சொல்லால் அழைத்து வருகின்றோம்.திங்களானது கதிரவனோடு சேர்வதுவும், பிரிந்து எதிர்ப்பக்கமாகச் சேர்வதுவும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். இதனை,

“மாசு விசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறை முற்ற”  (புறம் 400)

என்பதால் அறியலாம். திங்கள் வளர்கையில் 15 நிலைகளை உடையது. அது போல் தேய்கையிலும் பதினைந்து நிலைகளை உடையது. எட்டாம் நாள் பிறை நிலவு ‘எண்ணாட்டிங்கள்’ (புறம் 118) எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுநிலாவை உவவுமதி என அழைத்துள்ளனர். முழுமதி நாளில் கதிரவனும் திங்களும் எதிரெதிராக இருக்கும். இதனை,

“உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்

புண்கண் மாலை மறைந்தாங்கு”  (புறம் 65) என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

 

செவ்வாய் (Mars)

பூமியில் இருந்து நோக்கும் போது செந்நிறம் உடையதாகத் தோன்றும் கோள் செவ்வாய் ஆகும். செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்பதையும் நம்மவர் என்றைக்கோ கண்டுபிடித்துச் சொல்லிவிட்டனர். மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. அக்காலத்திலேயே இதைக் கண்டறிந்து பொருத்தமுறச் செவ்வாய் எனப் பெயரிட்டுள்ளனர். கடலின் மேல் தோன்றுகின்ற சிறிய திடலின் மேல் ஏற்றப்பட்ட சிறு விளக்குப் போல் செவ்வாய் தோன்றுகின்றது என்பதை

முந்நீர் நாப்பன் திமிற்சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாவிசும்பின்” (புறம். 60: 1-2)

புலவரான மருத்துவன் தாமோதரனார் கூறுகின்றார்.

 

வெள்ளி (Venus)

பழந்தமிழர் வானவியலில் பெரிதும் பேசப்பட்ட மற்றுமொரு கோள் வெள்ளி ஆகும். இக்கோள் வெண்மை நிறமுடையது, ஆகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றது என்பர். பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம்.இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. இது காலையிலோ மாலையிலோ தோன்றும். காலையில் தோன்றுவதை விடிவெள்ளி என்பர். வெள்ளியை மழைக்கோள் என்றும் அழைப்பர். வெள்ளி தெற்கு நோக்கி நகர்ந்தால் மழை பொழியும் என நம்பினர். (????????)

“வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை”  (புறம். 339)

 

சனி (Saturn)

கோள்களில் தொலைவில் இருப்பதுவும் கரிய நிறமுடையதுவும் சனி ஆகும். கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள்  மற்றும் மைம்மீன் என்றனர். காரி என்பதே இதன் தூய தமிழ்ப் பெயராகும். பின்னாளில் வடமொழிப் பெயரான சனி செல்வாக்குப் பெற்றுவிட்டது. சனியானது புகைக்கின்ற போதும் ( அதாவது ஓரைகளான இடபம், சிங்கம், மீனம் என்பவற்றில் சனி நுழைகின்ற போதும்) தூமம் என்ற வால் வெள்ளி தோன்றுகின்ற போதும் தென்திசை நோக்கி வெள்ளி ஓடினாலும் பெரும் தீங்கு விளையும் என பழந்தமிழர் நம்பினர்.

“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்...” (புறம் 117)

எனத் தொடர்கின்ற இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவர். சனி சில (இடபம், சிம்மம், மீனம்) ஓரை(இராசி)களில் நுழையும் போதும், வால் வெள்ளி தோன்றினாலும், வெள்ளி தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. பெருந்தீங்கு விளைவிக்கவல்ல நிலைகளில் கோள்கள் இருந்தாலும் பாரியின் பறம்பு செழிப்புக் குன்றாத நாடு. ஆயினும் பாரியை இழந்ததால் பறம்பு வளம் குன்றியது என இப்பாடலில் கபிலர் குறிப்பிடுகின்றார்.இதையே சிலப்பதிகாரம்,

“கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
 விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்” சிலம்பு (10-102-10) எனக் கூறுகின்றது.

 

புதன் (Mercury)

புதிதாக கண்டறிந்தத கோள் புதன் என அழைக்கப்பட்டது. ஞாயிறுக்கு மிக அருகில் இருந்ததால் ”உடன்” என்று அழைக்கப்பட்டு, புதன் என்றானது. இதே பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு.

 

வியாழன் (Jupiter)

"வியா" என்றால் பெரிய என்ற பொருள். வியாழனை ”ஆண்டளப்பான்” என்றும் ”ஆசான்” என்றும்  தமிழ் வள்ளுவர்கள் வடித்தனர். வியாழக் கணிதம் எனும் தனிக்கணக்கு  கணியத்தில் உள்ளது. வியாழன் பெயர்ச்சியை (குரு பெயர்ச்சி) வைத்தே இன்றுவரை கணியம் சொல்லி வருகின்றனர்.

 

பொழுது

நம் முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிப்பதாகும். அதாவது 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களைக் குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம். அவ்வாறெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24-6 1440 ஆகும். ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர்.

இவ்வாறான இந்தக் காலப்பகுப்பு வானியல் பற்றிய அறிவின்றி வகுக்க முடியததாகும்.

அறிவியற்துறை பெருவளர்ச்சி கண்டிருக்கும் இக்காலத்தில் வானவியற் பற்றிய ஆராய்வுகளுக்குப் பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. தொழில் நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் விசும்பில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வகையறிந்து, அவற்றின் இயக்கங்களை அறிதியிட்டு, அவை உயிர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை முன்னோர் கணித்திருக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பற்றிய ஆராய்வுகளுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரது வானியற் சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன.

தமிழரது வானியற் கருத்துகள் எதுவும் மாணவரது பாடநூல்களில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இவை பெரும்பாலும் ஐரோப்பியரது வானியல் ஆய்வுகளை மையப்பபடுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. வானியற்துறை மட்டுமல்ல, தமிழர்  சிறந்து விளங்கிய துறைகள் பலவும் தமிழ் மாணவரது அறிவியல், வாழ்வியற் கல்வியில் இடம்பெறாதிருப்பது வேதனைக்குரியதே. இலக்கியக் கல்வியிலும், அரிதாகச் சிலர் ஆய்வுகளில் ஈடுபடும் பொழுதுகளிலும் மட்டுமே இத்துறைகள் பேசப்படுகின்றன.

 

வான்வழிப்பயணம் (Space Travel)

பழந்தமிழ் இலக்கியங்களில் வான்வழிப் பயணங்கள் பற்றி கூறுகின்றன. வலவன் ஏவா வானூர்தி (புறம் 27 : 8) என்னும் புறப்பாடல் வரி, சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தியைத் தருகிறது.


Reference
பழந்தமிழர் வானியலும் வடிவியலும்_ஆதி.சங்கரன் 

தேமொழி

unread,
Dec 24, 2018, 1:59:39 AM12/24/18
to மின்தமிழ்


On Sunday, December 23, 2018 at 10:56:11 PM UTC-8, தேமொழி wrote:

மத அரசியல்-39: 
ஆசிவர்கள் வானியல் 

By C.P.சரவணன்  |   Published on : 20th December 2018

vaniyal

 

 சிலப்பதிகாரம் என்ற ஒப்பற்ற இலக்கியத்தை ஆக்கிய இளங்கோவடிகள் தன் கடவுள் வாழ்த்தில் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’எனக் கதிரவனுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.     (*?????????)


 
புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

"வாழ்த்தும் வணக்கமும்"






5




10
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

தேமொழி

unread,
Dec 29, 2018, 5:11:06 AM12/29/18
to மின்தமிழ்
ref: https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/24/மத-அரசியல்-41-ஆசீவகம்-ஆசு-மருத்துவம்-3064187.html

மத அரசியல்-41: ஆசீவகம்-ஆசு மருத்துவம்
By C.P.சரவணன்  |   Published on : 24th December 2018 

asu_medicine

 

ஆதி தமிழனின் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க ஓர் இயற்கையே ஆகும் எவ்வளவோ பெரிய நோய்களுக்கு எல்லாம் மூலிகையிலேயே மருத்துவம் செய்து வந்துள்ளனர். மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

 

ஆசு / சித்த மருத்துவம் (Asu / Siddha Medicine)

காடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு  இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்று நோய்களும்தான். மாந்தரினம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களுக்குத் தீர்வு காணும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும்,  குமரிக் கண்டத்துத் தமிழன் தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓர் மாந்தரினம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால். உலகில் முதன்முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளர்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாகும்,  ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம் மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மையான நிலையில் இருந்திருக்கும். உலகில் முதன்முதலாக முதலுதவிப் பெட்டியைப் பயன்படுத்தியவர்கள் ஆசீவக மரபினரே.

 

முதலுதவிப் பெட்டியும், பயன்பாடும் (First Aid Box and Utility)

1. முதலுதவிப் பெட்டியில் சில மிளகாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும், ஒருவரைப் பாம்பு கடித்து விட்டதென்றால் இதிலிருந்து ஒரு மிளகாயைச் சுவைக்கத் தருவர், அதன் சுவையைக் கொண்டு எந்தப் பாம்பு அவரைக் கடித்ததென்று அறிந்து கொள்ளலாம் (மிளகாய் புழக்கத்திற்கு வருமுன் இதற்குப் பதில் உப்புக்கல் வைக்கப்பட்டிருந்தது, பிற்காலத்திலேயே மிளகாய் பயன்படுத்தப்பட்டது, உப்பும் இவ்வாறே பயன்படும்).
2. படிகாரம் ஒரு துண்டு இருக்கும். பாம்புக் கடிபட்டவருக்குப் படிகாரம் கொஞ்சம் தூள் செய்து வாயில் போட்டால் பாம்பு விஷம் நீங்கும்.
3. ஓர் கம்பளிக் கயிறும் அதனுடன் இருக்கும், பாம்பு நஞ்சைக் கயிறு கட்டி இறுக்க இது உதவும்.
4. ஓர் குமட்டிக்காய் இதனுடன் இருக்கும், உணவு நஞ்சினால் வயிறு உப்பிசம் கண்டால் உடனே இக்காயை நறுக்கி உள்ளுக்குத் தரப் பேதிகண்டு உணவுநஞ்சு முறிக்கப்படும்.
5. இதனுடன் எலுமிச்சம் பழமும் இருக்கும், மயக்கம், ஆராட்டம், வாந்தி கண்டவருக்கு இதன்சாற்றினைப் பிழிந்து தருவர்.
6. இதனுடன் ஒரு சோற்றுக் கற்றாழைச் செடிமிருக்கும், இச்செடி எளிதில் ஈரம் இழக்காது வெறும் காற்றிலேயே வளரும், வெப்பச் சூலையினால் வயிறு இழுத்துப்பிடித்துக் கொண்டால் இக்கற்றாழையின் மடலிலுள்ள சோற்றினைக் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.
7. இதனுடன் ஒரு சங்குப் பாலாடையும் இருக்கும், ஏனெனில் மூலிகைகளின் சாற்றினை இதில் பிழிந்து நோயாளியின் வாய்க்குள் புகட்ட இது பயன்படும், சங்குப் பாலாடையில் வைப்பதனால் எந்த மூலிகைச் சாறும் கெடாது, பக்க விளைவுகளும் ஏற்படாது (உலோகப் பாலாடைகள் வெளிக்காற்றில் வினைபுரிந்து உலோகக் களிம்பினை ஏற்படுத்தும்), 
8. வெட்டுக் காயங்கள் கட்டி போன்றவற்றை உலோகங்களால் கீறினால் உலோக ஆக்சைடுகள் கிருமித் தொற்றினை உருவாக்குமாதலால் தோலினைக் கீறி மருத்துவம் செய்ய நீளமான முட்கள் கொண்ட ஒரு குச்சியும் இதனுடன் இருக்கும். 
இப்பொழுது புரியும். இந்த முதலுதவிப்பெட்டி எது? என்று ஆம் ஒவ்வோர் வீட்டின் முன்னும் தொங்கவிடப்பட்டிருக்கும் திருஷ்டிக் கயிறுதான் அது! தன் அறிவுக்கு எட்டாதனவும், தனக்குத் தெரியாதனவும் ஆகிய செய்தினை மூடநம்பிக்கைகள். அறிவுக்கு ஒவ்வாதன என மறுக்கும் பகுத்தறிவு ஒன்று அண்மைக் காலமாகத் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். பதிவு பெறாத அறிவு மரபும். மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு மருத்துவமுறை ஏதேனும் சில காரணங்களுக்காகக் கையாளப்பட முடியாதபோது. அதற்கு மாற்றாகப் பகரமாகக் கையாளப்படும் மருத்துவமுறை.

 

ஆசு-மருத்துவமுறை

”மாற்றுமருத்துவமுறை” என வழங்கப்படும், ஆனால் நம் நாட்டிலோவெனில் ஐம்பதாண்டுக் காலமாக ஆதிக்கம் பெற்ற ஓர் மருத்துவமுறைக்கு, மாற்று மருந்துவமாக. ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மைமிக்க மருத்துவத்தினைக் காட்டும் விந்தை நகைப்பிற்குரியதே. இன்றைய புரிதலில் உலகெங்கும் மருத்துவம் என்பது யாக்கையினை நோயிலிருந்து மீட்டு விடுவதே எனும் பொருள்கொண்டு இயங்குகிறது, ஆனால் நமது முன்னோராகிய அறிவர்களோ மருத்துவம் என்பது நோயினை நீக்குவதோடு நில்லாமல்.

மீண்டும் அந்நோய் வாராதிருக்கச் செய்தலும் எளிதில் இறப்பினை அணுகாதுகாத்தலும் மருத்துவத்தின் பொருள்மிக்க அடிப்படை என்றனர், இத்தகு அறிவர் மரபில் இயல்மாந்தர் பின்பற்றிய மருத்துவ முறையும். அறிவர் ராவணனால் உரைக்கப்பட்டு மருத்துவர்களால் கையாளப்பட்ட சிந்தாமணி மருத்துவமுறையும் ஆசீவகத் துறவியரின் பிறங்கடைகளால் தொடர்ந்து கையாளப்பட்ட ஆசு மருத்துவமும் குறிப்பிடத்தக்கன.

ஒரு துயரர் (sufferer) தன்னை வந்தடைந்தபோதே அவர் இன்ன நோயினால் துன்புறுகின்றார் என்பதனை ஓர் ஆசு மருத்துவன் உணரவல்லான். பொதுவாகவே அறிவர் மருத்துவமாகட்டும் தமிழக நாட்டுப்புற மருத்துவமாகட்டும் அவர்கள் துயரின் கையைப் பிடித்து நாடி பார்த்தே நோயினை அறிய வேண்டும் என்றும் அவ்வாறு நாடி பார்த்து நோய் நாடுபவரே சரியான மருத்துவர் எனவும் ஒரு நம்பிக்கை மக்களிடம் இன்றும் உண்டு. ஆனால் மக்களின் நம்பிக்கைகையைப் பெறுவதற்காகவே நாடித் துடிப்பினைக் காதால் கேட்கும் கருவி போன்றவை கையாளப்படுகின்றன, அந்தக் கருவியினைக் கையாளும் முறை யாதெனில். ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நாடித்துடிப்பு இயக்கம் நடைபெறுகிறது என்பதனை அறிய ஓரிரு மாத்திரை நேரம் கூடக்கருவினையினைப் பயன்படுத்தாமல் பத்து மாத்திரை நேரத்திற்குள் உடலில் பன்னிரண்டு முறை இடம் மாற்றிப் பரிசோதிக்கின்றனர். இதனையும் மக்கள் நம்பித்தான் வாழ்கின்றனர், இக்கருவி கண்டறியப்பட்ட போது மூன்று நிமிடத்திற்கான நாடித்துடிப்பு கணக்கிடப்பட்டு அதனை மூன்றால் வகுத்து ஒரு நிமிடத்திற்கான நாடித்துடிப்பினைக் கணக்கிட்டனர், இந்தச் சரியான நடைமுறை இப்போது பின்பற்றப்படுவதில்லை.

தமிழ் மருத்துவம் செய்வதாகக் கூறுபவர்கள் கூட எந்த நேரத்தில் தம்மிடம் நோயர் (Patient) வந்தாலும் உடனே நாடிபார்த்து மருந்து கொடுக்கின்றனர், இந்தமுறை சரியா?  எண்வகைக் குறி குணங்களைக் கொண்டு நோய் நாடலாம் என்பது மரபு, அவையாவன:

1, நாடித்துடிப்பு 
2, குரல்
3, உடல்தோற்றம்
4, கண் 
5, நா 
6, தொடுஉணர்வு 
7, நீர்க்குறி 
8, மலக்குறி

இருப்பினும் அந்த எட்டினுள் சிறப்பாகக் கூறப்படும் நாடி பார்த்தல் மக்கள் நம்பிககையைப் பெறா ஒன்று, ஆனால் மது அருந்தியவன், உறங்கி எழுந்தவன், நடந்து களைத்தவன், கடின வேலை செய்தவன். ஐம்பொறி முயங்கியவன். நீர்முழ்கி வந்தோன், அதிர்ச்சியுற்றோன், சினங்கொண்டோன், நஞ்சுண்டோன் ஆகியோரின் நாடி நடை இயல்பாயிருக்காது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. அதனையும் மீறி ஒருவருக்கு நாடி பார்த்துத்தான் நீங்கள் நோய் நாட  வேண்டும் என்றால் நீங்கள் நினைத்த போதெலலாம் நாடி பார்ப்பதனை அறிவர் மருத்துவம் தடை சொல்கிறது, நாடி பார்க்கப்படும் மாதங்களும் அவற்றில் நாடி பார்க்க வேண்டிய நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருந் தன்னில்
அத்தமா மானியாடி யைப்பசி கார்த்திகைக்கு
மத்தியா னத்திற்பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகன் கதிரோன் மேற்கில் விழுகின்ற நேரந்தானே
தானது பங்குனிக்கும் தனது நல்லாவணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கும் மற்று ராத்திரியில் பார்க்கத்
தேனென மூன்று நாடி தெளிவாகக் காணுமென்று
கானமா முனிவர் சொன்ன கருத்தை நீகண்டு பாரே,
என வரும் ‘வைத்திய ஆனந்தக் களிப்பில்’,

1, சித்திரை வைகாசி மாதங்களில்- கதிர்உதய நேரத்திலும்
2, ஆனி. ஆடி. ஐப்பசி. கார்த்திகை மாதங்களில்- நண்பகலிலும்
3, மார்கழி. தை. மாசி ஆகிய திங்கள்களில்- எற்பாட்டிலும்(மாலை)
4, ஆவணி. புரட்டாசி. பங்குனி ஆகிய மாதங்களில்- நள்ளிரவிலும்

நாடி பார்க்க வேண்டும் என்றொரு பழைய வரையரை இருப்பதனையே இம்மருத்துவர் பலரும் அறியார், அறிந்த சிலரோ அதனைப் பின்பற்றி நடவார். இவ்வாறு மரபொற்றி நாடி பார்க்கினும், நோயர் தம் மணிக்கட்டில் நெய்யில் நனைக்கப்பட்ட பாளைச் சீலையினைச் சுற்றிவைத்து. ஓர் மூழ்த்தம் கழித்து அதனையகற்றி விரல்களை நெட்டிப் பரித்து உள்ளங் கைகளைச் சூடு பரக்கத் தேய்ப்பித்து. அதன் பின்னர் நாடி பார்க்க வேண்டுவது மரபு, நாடி பார்த்தபின் நாடியைப் பார்த்த மூன்று விரல்களையும் தரையில் தட்டி விடுவது மரபு, யாவரேனும் பின்பற்றுகின்றனரோ? அது நடவாது, ஏனெனில் இவ்வாறு நோய்நாடுதல் நோயர்க்கு மட்டுமே நலம் பயக்கும், மருத்துவரின் நலங்கள் பயக்கப்படுமா? எனும் விரைவு கருதிய அச்சமேயாம்! 

நாடி பார்க்கும் வரையறை கருதி. பங்குனி மாதம் காலையில் மயங்கி விழுந்த ஒருவனை மருத்துவரிடம் கொணடு வந்தால், அவனை நான் இன்று நள்ளிரவுதான் நாடி பார்த்து மருத்துவம் செய்வேன் என்று மருத்துவர் அன்று நள்ளிரவு வரை விட்டு வைத்தால் அவன்கதி என்னாவது. இத்தகு சூழலில்தான், எண்வகைக் குறிகளாலும் அறியப்பட முடியாத நோய்நாடலைச் செய்ய ஆசு மருத்துவம் துணை செய்கிறது, மயங்கினவனின் யாக்கையின் எண்வகைக் குறிகுணங்களும் சரியான நிலையில் இலவாமாதலின். மெய்யியல், ஊழ்கம், சரஊழ்கம், புளநூல் போன்ற பயிற்சிகளைக் கைவரப் பெற்ற அறிவர்களோவெனின், அத்துயரரின் நோய் நிலையாது என்பதனை உய்த்தறிவர். யாருடைய யாக்கையினையும் தொடாது சரியான நோய் நாடல் செய்து மருத்துவத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றோர் இன்றும் உண்டு என்கிறார் அறிவர் ஆதி.சங்கரன்.

இன்றைய மருத்துவ உலகம் உடலினை முதன்மைப்படுத்தி மட்டுமே மருந்தியலை வளர்க்கிறது. அது நிறைவேறாத போது உளவியிலை நோக்கித் துயரரை அனுப்பிவைக்கிறது. ஆனால், ஆசு மருத்துவமோ ஊழ்க மெய்யியிலை அடிப்படையாகக் கொண்டதாகையால் உளவியலுக்கும் உளவியல் அடிப்படையிலான நம்பிக்கை மருத்துவத்திற்கும் இம்மெய்யியல் அடிப்படையிலான தீர்வுகளை முதன்மைப்படுத்துவதாயிற்று. பிறிதொன்றும் நோக்கற்பாலதியாதெனின், இன்றுள்ள பிறமருத்துவ செய்பவனின் முடிவுக்கோ ஒப்பமருத்துவம் செய்யாது, துயரரை ஆய்வு செய்யுமோர் கருவியின் தீர்ப்புக்கொப்பவே மருத்துவம் செய்யப்படும் அவலம் கண்கூடு, இதில் பிழைப்பட உணரப்பட்ட நோய்க்குச் செய்யப்படும் மருத்துவம் துயரருக்குத் தீர்வாகாமையின், அத்துயரர் மனநலமருத்து வரை நோக்கி அனுப்பப்படும் இழிவும் வெளிப்படை, ஆசு மருத்துவம் யாக்கையின் கட்டுமானத்திற்கான மருத்துவமாக மட்டும் அமையாது, அறிவு, மனம் எனும் அந்தக் காரணியங்களையும் ஏதுக்களாக்கி. முற்றும் மலத்தினீங்கள் உடலையும். மலததினீங்கிய அறிவையும் மலத்தின் நீங்கியும் நீங்கா மனத்தினையும் ஒருங்கிணைத்தே உயிர்புள்ள ஒருங்கமைவு ஒன்றினைப் பின்வரும் பதினெட்டு மண்டலங்களாகப் பிரிக்கிறது: 

 

பதினெட்டு மண்டலங்கள் (18 Systems)

1. என்பு மண்டலம் 
2. என்பீற்று மண்டலம் (நகம். குருத்தென்பு) 
3. நரம்பு மண்ட லம் 
4. குருதி மண்ட லம் 
5. தசை மண்ட லம் 
6. தோல்(தொடுவுணர்) மண்ட லம் 
7. உணவுமண்ட லம் 
8. சுரப்பி மண்ட லம் 
9. கழிவுமண்ட லம் 
10. இனப்பெருக்க மண்ட லம் 
11. நிண மண்டலம் 
12. நீர்மண்டலம் 
13. திரிவாக்க மண்டலம் 
14. மனம் 
15. இன்மையிலுண்மை மண்டலம் 
16. ஆளுமை மண்டலம் 
17. வளிச்செயல்மண்டலம் 
18. மெய்யியல்மண்டலம் என்பனவாம் 

 

1. என்புமண்டலம் 

என்பு மற்றும் முட்டுக்கள் அம்மூட்டின் கண்ணியைந்த உயவு, கீல்கள் போன்றவை இத்தொகுதியின் கண்ணடங்கும் எலும்பு முறிவு, மூட்டு நழுவுதல், நீல்வாயுபிடிப்பு, உயவு உலர்தல் மற்றும் எலும்புப் புற்று. மசசையாக்கம் போன்ற மருத்துவங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் நடைமுறைகள். 

2. என்பீற்று மண்டலம் 

விரல்நுனிகள், நகங்கள் மற்றும் குருத்தென்பு இவற்றுடன்  இவற்றின் கண்ணமைந்த வர்வ ஒடி முடிவு மற்றும் இளக்கம் தொடர்பான மருத்துவம் மற்றும் தொடுவர்மம் சார்ந்த மருத்துவ முறைகள் இப்பிரிவிலடங்கும். 

3. நரம்பு மண்டலம் 

யாக்கையின் தொழிற்பாட்டிலேற்படும் முடக்கம், வர்ம சந்திகளில் ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகள் ஆகியவற்றையும், அவை சார்ந்த மருத்துவ நடைமுறைகளும் இதன் கண்ணேயடங்கும். 

4. குருதிமண்டலம் 

இதயத்தினின்றும் குருதி பீச்சப்பட்டு யாக்கை முழுதும் பரவி மீண்டும் திரும்பி வந்து உயிர்வளியினை உள்வாங்கி மீண்டும்பரவிச் செல்லுமாதலால் இச்செயல் சார்ந்த கருவிகளும், உறுப்புக்களும் இம்மண்டலத்துள்ளடங்கும், அரத்தசோகை. அரத்தபித்தம், நஞ்சு, நஞ்சு முறிவு மருத்துவ முறைகள் இதில் அடங்கும், 

5. தசை மண்டலம் 

இயங்கு தசைகள் தவிர்த்த இயக்கு தசைகளான யாக்கையின் பலவிடத்தும் தசை நாண்களால் தொடுக்கப் பெற்றுப் பழுவென்புகளின் மீது அமையப் பெற்ற தசை மற்றும் தசை நார்கள். இவற்றின் கண் ஏற்படும் வெட்டுக்காயம், வீக்கம், புண்கள், புழுத்தாக்கு, கட்டிகள், வர்மத்தாக்கு, புரைகள் தொடர்பான மருத்துவமுறை இதில் அடங்குவதாம், 

6. புறத்தோல் மண்டலம் 

யாக்கையின் புறப்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள நுண்புழைகள் கொண்டதும் சிறு மயிர்க்கால்கள் கொண்டதுமான இத்தோல் மாந்தருக்குப் புறசூழலையும், தொடு உணர்வினையும், அறிவித்து நிற்பதாம், உணர்திறன் நரம்புகள், வியர்ப்பித்தல். மயிர்கள், மற்றும் பொது நிலை மருத்துவங்கள் இதிலடங்கும், 

7. உணவுமண்டலம் 

உண்ணுந் தொழிற்குதவியாய் வாய், பல், நாக்கு, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை,  குடல் முதலிய துணையுறுப்புக்கள் தொடர்பான மருத்துவமும், உணவு செரியாமை. குடற்புண், பசியின்மை, சுவையறிதலின்மை போன்ற மருத்துவங்களையது.

8. சுரப்பி மண்டலம் 

உணவு செரிப்பு, உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு உடலின் வெப்ப நிலைச் சமன்பாடு, சிந்தனைச் செயல்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமான நீர்களைச் சுரக்கவல்ல சுரப்பிகள் உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர், கணைய நீர்போன்ற சுரப்பிகளின் மருத்துவமும். நொதியங்களும் இதிலடங்கும், 

9. கழிவுமண்டலம் 

மலக்குடல், குதம், வியர்வைச் சுரப்பிகள், சிறுநாத் தடங்கள்,சிறுநீரகம், (நீரிழிவு மூலம் போன்றவையும்) தொடர்பான மருத்துவம் சார்ந்தது, 

10. இனப்பெருக்க மண்டலம் 

கருப்பை, கருவறை, பாலுறுப்புக்கள், விந்தகம், குறியுறுப்புக்கள், ஆண்மைத்தன்மை, மலடு, உறவு நாட்டம் தொடர்பான மருத்துவ முறைகள். 

11. நிண மண்டலம் 

யாக்கையின் இயக்கத்திற்குத் தேவையான வெப்பத்தினைத் தரவேண்டி உடலில் ஆங்காங்கே சேமிக்கப்படும் கொழுப்பு மற்றும்  குடல் சார்ந்த கொழுப்புகள் இவற்றின் தேக்கம் மற்றும் நீக்கம் தொடர்பான மருத்துவம், 

12. நீர்மண்டலம் 

உடலின் கண்ணாங்காங்கு நின்று பயன்படும் நீர்ப்பொருள்களையும் மற்றும் தேவையற்றுத் தேங்கிநின்று உடலைப் பருக்கச் செய்யும் நீர்பற்றியதும், சிறுநீர் தவிர்த்த உப்புத்தன்மைகளையும் பற்றிய மருத்துவம். 

13. திரிவாக்க மண்டலம் 

மிகுந்துவரும் முக்குற்றங்களால் ஏற்படும் நரை, திரை, மூப்பு மற்றும் தளர்வுகளைப் பற்றிய வளி, அழல், ஐயச் செயல்பாடுகளைக்  குறித்த மருத்துவம். 

14. மனம் 

பருப்பொருளான உடலினை ஆட்டுவிக்கும் அருவமான மனம் பற்றிய நுண்ணறிவு மருத்துவம், சித்தப்பிரமை எனப்படும், மனநோய் மற்றும் மறதி சார்புடைய மருத்துவம் மற்றும் கவனகம் சார்ந்த செய்திகள். 

15. இன்மையிலுண்மை மண்டலம் 

இன்மையாகிய கற்பனை, கனவு ஆகியவற்றில் விழிப்பு நிலையிலும், உறக்க நிலையிலும், அரையுறக்க நிலையிலும் தன் மனலோட்டங்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளல, அதனை உண்மையென நம்பும் பேராசை, மனம் சார்ந்த மருத்துவம், பொய் பேசுதுல், மூட நம்பிக்கைகள், பேராசை போன்ற பெரும்கேட்டினைச் சார்ந்த உளவியல் மற்றும் நம்பிக்கை மருத்துவம், 

16. ஆளுமை மண்டலம் 

அறிவினைக் கொண்டு தன்னாளுமை நடத்தும் திறன், தனித்திறன்கள், நற்பண்புகள், தவற்றினை உணர்ந்து கொள்ளல் போன்ற மாற்றத்தக்க மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும் மனநலம் சார்ந்த தன்னை ஊக்கிக்கொள்ளும் ஊக்கம் சார்ந்த மனநல மருத்துவம், உடல், மனம், அறிவு, நன்மை, தீமை எனும் பலவற்றையும்  உணர்த்தலும், ஒருங்கிணைத்து வாழ்வதுமாய், செயல்பாடுகள் தொடர்பானது, 

17. வளி மண்டலம் 

நாசிப்புழை, வளிக்குழல், நுரையீரல், வளியறைகள் தொடர்பானதும், உயிர்வளியினை உடலுக்குள் செலுத்தத் தேவையான செயற்பாடுகளையும், அச்செயல்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மூச்சுக்குழல் பாதையின் நோய்கள் மற்றும் மூச்சடைப்பு தொடர்பானது. இம்மட்டோடன்றி ஊழ்கம் பயிலுகையில் நாசிப் புழைகளின் கண்வளியோட்டம் மாறிச்செல்ல வேண்டிய ஒழுக்கங்கள் பற்றியது - ஒழுங்கு தப்பிய மூச்சோட்டததால் ஏற்படும் தீமைகள், மரணம் முதலியவற்றைத் தவிர்ப்பது சார்ந்த மருத்துவம்.

18. மெய்யியல்மண்டலம் 

பிற மருத்துவ முறைகள் உடலினை உயிர் வாழ்வதற்குரிய கருவியாக மட்டுமே பார்க்கின்ற வேளையில் அறிவர் மரபோ உடலினை அதற்கும் மேலாக, அதாவது வீடு பேறுடையவதற்குத் துணை நிற்கும் ஊடகமாகக் கருதியதால் ஊழ்க மெய்யியலுக்கும், வீடு பேறுடைதலுக்குமான செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்தும் கரணியங்களைத் தாங்கள் நன்கு அவதானித்து அத்தடைகள் நீங்கி ஊழ்கம் பயின்று வீடுபேறடையத்தக்கதாய் உணவு மற்றும் பயிற்சி முறைகளை வகுத்தனர், இத்தகு பயிற்சிகளில் ஏற்படும் தவறுகள், தோல்விகளுக்கும், நோய்களுக்கும் காரணியமாம். வாய்ப்புள்ளதாதலின் இதனைக் களையுமுகத்தான் ஏற்படுத்திய நடைமுறைகளை உள்ளடக்கிய மருத்துவ முறைகளைக் கூறும் பகுதியாகும். இது, முதுகுத்தண்டு, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சுகத்திரதளம் எனும் சக்கரங்கள் அவற்றின் கண் உயிர்வளியின் தொழிற்பாடு மற்றும் அவ்விடங்களில் தோன்றும் உடல் மற்றும் மனத்திற்கான தளர்வு நிலைகளை இப்பகுதி ஆய்ந்துரைக்கும். 

அறிவர் மரபும் பதினெட்டும் மிக்க தொடர்புடையன, அறிவர் மரபினைப் பதிணெண்மராகக் காட்டும் மரபும், நம்மிடையே உண்டு , அறிவர் மரபின்படி நிலைகளும் பதினெட்டு , மேற்கணக்குநூல்களும் பதினெட்டு கீழ்க்கணக்குநூல்களும் பதினெட்டு, மெய்யியல் மண்டலத்தில் விளையும் நோய்களைப் பார்க்கில் இதுவும் பொருந்துகிறது. கீழ்மூலாதாரம் எனப்படும் முதுகுத்தண்டினின்றும் நாபியினைப் பிணைக்கும் குறிநரம்பின் மீது தோன்றும் பவுந்திரம் என்னும் கட்டியானது ஒன்றன்பின் ஒன்றாகப் பதினெட்டு கட்டிகள் தோன்றும். மேல் மூலாதாரத்துக்கும் மூச்சுக்குழலுக்கும் இணைப்புதரும் கண்டத்தில் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றுவதும் விந்தையாகவே உள்ள து, இவ்விரு வகைகளிலும் பதினேழு கட்டிகளுக்குள் அதனைத் தீர்க்காவிடில் பதினெட்டாம் கட்டி மாந்தற்கு இறுதியாய் அமைந்துவிடுதலும் நோக்கத்தகும்.

 

வலியுணரா மருத்துவம் (Anesthetic Treatment)

பிற மருத்துவ முறைகள் நம்மிடம் கலவாதபோது, கண்போன்ற நுண்ணுறுப்புகளில் தைக்கப் பெற்ற முள் போன்றவற்றை எடுக்க அப்போதும் வலியுணரா மருத்துவம் செய்யப்பட்டதென்று சொன்னால் நமக்கு வியப்பாகவே இருக்கும், அரசர்களின் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்தே முதனாட்போரில் வாட்புண்ணுற்ற வீரர்கள் இரவு மருத்துவம் செய்துகொண்டு மறுநாள் மீண்டும் போருக்குச் செல்வர், அப்படியாயின் ஓர் இரவுப் போழுதுக்குள் அவர் தம் வலியும் வெட்டுக்காயமும் சரிப்படுத்தப்பட்டு விடும், என்ன வியப்படைகிறீர்களா? ஆம், அன்றைய மருத்துவர்கள் நத்தைச் சூரி எனும் மூலிகையின் வேரை வலியுணர்வு நீக்கியாகப் பயன்படுத்தினர், இன்று அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் வலியுணர்வோடு மனிதனின் உணர்வு நிலை அறிவையும்  இல்லாது செய்து மயக்கமுறச் செய்கின்றன, ஆனால் பழங்கால மருத்துவ முறையில் வலிமட்டும் இராது மனிதனின் அறிவு நிலை விழிப்பிலேயே இருக்கும், மகப்பேறு காலப் பெண்களுக்கும் வலியுணரா மருந்துகள் பயன்படுத்தப்பட்டன, தீக்காயங்களின் எரிச்சலைப்போக்கவும் வலியுணரா மூலிகைகளைப் பண்டைய மருத்துவர்கள் பயன்படுத்தினர் என்பது நம் மரபு வழிப்பதிவு.

 

அறுவை மருத்துவம் (Surgery)

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து, மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" 

பதிற்றுப்பத்து 5: 2:1-3

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம். புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்  என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

 

விலங்கு' தாவர மருத்துவம் (Veterinary Medicine)

பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல, மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது. - புறநானூறு. செய்.91

கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

 

உயிர்அடக்கமும், உயிர் பிரிதலும் 

வர்ம முடிச்சுககளில் தாக்கப்பட்டோர்,  நஞ்சுக் கடியுற்றோர்,மரத்திலிருந்து கீழே விழுந்தோர், தண்ணீரில் அமிழ்ந்தோர் ஆகியோர்தம் உயிரானது உடலை விட்டுப் பிரியுமுன் சிறிது நேரம் அடங்கியிருக்கும், அதாவது உயிர்ச் செயல்பாடுகள் அடங்கிப் பிணம் போல்தோற்றுவர், ஆயினும் அவ்வுடலுக்குள் உயிர் இருக்கும், அறிவர் மருத்துவத்தில் சிறந்தோர் அவ்வுடலை ஆய்வுசெய்யும் போது விரல்களில் நெட்டிபரியாவிட்டால் உயிர் பிரிந்ததென்றும், நெட்டிபரிந்தால் உயிர் உள்ள தென்றும் அறிவர், விழியானது மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ. ஒதுங்கிய  பார்வையாய் இருப்பின் உயிர் அடங்கியிருக்கிறதென்றும், விழி நேராகப் பார்த்தால் உயிர் பிரிந்ததாகவும். அறியலாம், அவ்வுடலினைத் தண்ணீரில் வைத்தால் நீருக்குள் ஆழ்ந்தால் உயிர் உள்ள தென்றும், நீரில் மிதந்தால் உயிர்பிரிந்ததென்றும் அறியலாம்.

இவ்வாறு உயிர் அடங்கியிருப்போரை மீண்டெழக் கூடிய நிலையில்உயிர்ப்பிக்கும் மருத்துவ முறைக்குக் குடோரி மருத்துவம் என்று பெயர், மயங்கிவிழுந்த யாருக்கேனும் முதலுதவி செய்யும் போது “சுக்கு வைத்து ஊதுகிறாயா? எனக் கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டு , வெள்ளெருக்கம் பாலில் ஊறவைத்த சுக்கை  நன்கு அரைத்துத் தூளாக்கிக் துணியால் வடிகட்டிப் பேச்சசுரைக் குடுக்கையில் வைத்திருந்து அதனை மயங்கினவர் நாசியில் வைத்து ஊதும் குடோரி முறைகளுள் ஒன்றான மருத்துவத்தையே இது குறிக்கும்.

 

Reference:
அறிவர் மரபுகண்ட ஆசு மருத்துவம்_ ஆதி.சங்கரன்

தேமொழி

unread,
Jan 2, 2019, 3:09:52 AM1/2/19
to மின்தமிழ்
மத அரசியல்-42: ஆசீவகம் குருகுலக் கல்வி, வர்ணாசிரமம், ஏழு கன்னிமார்
27-12-2018
https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/27/மத-அரசியல்-42-ஆசீவகம்-குருகுலக்-கல்வி-வர்ணாசிரமம்-ஏழு-கன்னிமார்-3066127.html

மத அரசியல்-42: 
ஆசீவகம் குருகுலக் கல்வி, வர்ணாசிரமம், ஏழு கன்னிமார்
By C.P.சரவணன்  |   Published on : 27th December 2018

ashram

 

தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில் சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார். ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது. 

         “தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ. பாண்டுரங்கன்.

           பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும்  எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத்தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர் நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.  

         அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர் நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது,

கல்வி கற்றத் தமிழ் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்(புறம்-47).

 

ஆதி குரு

குருக்குலக் கல்வியை ஆதியில்  தொடங்கியவர் சிவ சித்தர். அதனால் அவர் ஆதிகுரு என்றழைக்கப்படுகிறார். அதன்பின் குருக்குலக் கல்வி நடத்தியவர்கள் ஆசீவர்கள். 

 

ஆசீவக அறிவர் பள்ளி / குருகுலக் கல்வி

நமது முன்னோர்கள் குருகுலக் கல்வி பயின்றவர்கள்.அங்கே இருந்த சித்தர்கள் மாணவர்களுக்கு அனைத்து வகையான கலைகளையும் கற்றுத்தந்தனர். இந்த இடங்கள் “பள்ளி” எனப்பட்டன. ஆசீவகத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர் பள்ளி என முடிவதை நாம் காணலாம். தென் இந்தியா முழுவதும் ஆசீவகம் பரவி இருந்த பொழுது,இன்றைய ஆந்திராவிலும் ,கர்நாடகாவிலும் பல ஊர்களின் பெயர்கள் பள்ளி என முடியும். வானியல், இசை, இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், போர் உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

ஆசிரியர் என்ற வார்த்தை ஆசு+ இரியர் என ஆசீவகத் தொடர்புப் பெயரே ஆகும். இதுவே பின்னாளில் ஆச்சாரியன் என்றானது. தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி என்ற ஊரின் பெயர் திருச்சிறார்பள்ளி என்ற சொல்லில் இருந்து வந்தது.  திரு+சிறார்+பள்ளி=திருச்சிராப்பள்ளி. அதாவது சிறுவர்கள் கல்வி கற்றுவந்த பள்ளிகள் நிறைந்த ஊர் என்று பொருள். இந்தப் பள்ளிகளை நடத்தியவர்கள் சித்தர்கள் வழி வந்த குருமார்கள். இந்தப் பள்ளிகளில் அனைத்து இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி கற்க அனுமதி உண்டு.

ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற மனிதர்களிடமும் பரிவுடன் இருப்பர்.

குருகுலக்காலம் என்பது மொத்தம் 18 ஆண்டுகள். 6 ஆம் அகவை முதல் 24 ஆம்
அகவை வரை அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும்.இதற்குப் பிறகு ஒரு இளைஞனானவன் அவனுக்குப் பிடித்த தொழிலை செய்யமுடியும். பெற்றோரின் தொழில் அவன் மீது ஒரு போதும் திணிக்கப்பட்டது கிடையாது!!!!இது தான் தமிழ் கல்வி முறை.ஒரு மாணவன் அனைத்து கலைகளையும்
கற்றுக்கொண்ட பிறகு அவனுக்கு கை வந்த கலையை மட்டும் தேர்ந்தெடுத்து தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.

கல்வி கற்கும் இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மாணவர்களை அவர்களது மூளை வளர்ச்சிக்கும், திறமைக்கும் ஏற்றாற்போல் வகைப்படுத்த குருகுல சித்தர்கள் கொண்டு வந்த முறையே வர்ணப் படிநிலை.

ஆசீவகத்தின் ஏழு நிறங்கள் யாதெனின் கருப்பு,நீலம்,பச்சை,சிவப்பு,பொன்மஞ்சள்,வெள்ளை மற்றும் எழாவதாக நீர்வண்ணம்( நிர்வாணா ). ஆசீவகத்தின் வழிவந்த சித்தர்கள் நடத்திய குருகுலத்தில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது. அதாவது ஒரு மனிதனின் மூளைவளர்ச்சியை இந்த நிறங்கள் குறிக்கின்றன.

 

வர்ணாசிரமம் / ஆசீவகக் கல்விக் கோட்பாடு 

நாம் இன்று பேசும் மனுவின் வர்ணாசிரமம் என்பது பின்காலங்களில் தோன்றியது. ஆனால் ஆசிவக வர்ணாசிரமம் என்பதே ஆதி. குருகுலக் கல்வி அதாவது ஆசீவகக் கல்விமுறை சொல்லித்தரப்படும் இடம் ஆசிரமம் என்றும் அழைக்கப்படும்..அந்த ஆசிரமத்தில் பின்பற்றப்பட்ட வர்ணப் படிநிலை தான் வர்ணாசிரம (வர்ணம்+ஆசிரமம்=வர்ணாசிரமம் ) முறை.

 

ஆறு நிறங்கள்

ஞாயிறு உதிக்கும் முன்பு இருள் சூழ்ந்து இருக்கும்.ஒளிக்கதிர்கள் வரத்தொடங்கும் பொழுது வானில் கருநீல நிறம் தெரியும்.அடுத்ததாக தரையின் மேல் உள்ள பச்சைநிறம் நமது கண்களுக்குத் தெரியும். அதன்பிறகு சிவப்பு நிறப் பந்து போல ஞாயிறு மேல் எழும்பும்.சிறிது நேரம் கழித்து பொன்மஞ்சள் நிறத்தில் ஞாயிறு மின்னும். ஞாயிறு மேல் எழுந்தவுடன் வெள்ளைநிற ஒளி நமது வளிமண்டலத்தை நிரப்பியிருக்கும்.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி இந்த நிறங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இயற்கையைக் கண்ட மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என முடிவு செய்து இதுபோன்ற வரிசையைத் தேர்ந்தெடுத்தான்.

குருகுலத்தில் ஒரு இளம்பருவ மாணவன் உள்நுழையும் பொழுது அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இருள் சூழ்ந்த இந்த நிலைக்கு ஏற்றாற்போல் அந்த மாணவனுக்கு கரிய நிற சீருடை அளிக்கப்பட்டது.

குருகுலத்தில் ஒரு மாணவன் ஒவ்வொரு பருவத்தைக் கடந்து செல்லும் பொழுதும் அவனுடைய மூளை வளர்சியடையத் தொடங்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.திறமைகள் வளரும்.இதன் அடிப்படையில் ஒரு மாணவனுக்கு நிறப்படிநிலையின் அடுத்த நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.

மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வி!!! ஆனால் ஆறு நிறங்கள் தான் உள்ளன.அதனால் பதினெட்டு ஆண்டுகளை மூன்று மூன்று ஆண்டுகளாக மொத்தம் ஆறு பருவங்களாகப் பிரித்தனர் குருமார்கள்.ஒரு பருவத்துக்கு ஒரு நிறம் என வகைப்படுத்தினர்.

கரிய நிறத்தில் ஆடை அணிந்து குருகுலத்தில் சேரும் ஒரு ஆறு வயதுப்பாலகன், குருகுலம் முடிந்து வெளியில் செல்லும் பொழுது அறிவாற்றல் மிக்கவானாக ,ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறான்.அதாவது இருளில் இருந்து ஒளியை நோக்கிய குருகுலப் பயணத்தின் இறுதியில்
ஒளிபொருந்தியவனாய் மாறுகிறான்.

ஏழாவது நிறமான நீர்வண்ண நிலையை அடைவது மிகக் கடினம்.அது மாணவர் பருவத்துக்குத் தேவைப்படாது என்றதால் ஆறாவது நிறமான வெள்ளை அவர்களின் இறுதி பருவமாகக் கருதப்பட்டது. தமிழக குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ண முறையானது ஆசியக் கண்டம் முழுதும் பரவியிருந்தது.

எடுத்துக்காட்டாக இன்றைய கராத்தே பயிற்சியில் ,இந்தத் தற்காப்புக் கலையைக் கற்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் இடுப்புப் பட்டைகள் வழங்கப்படுவதை அறிவோம். தொடக்க நிலையில் இருப்பவனுக்கு வெள்ளைநிறப் பட்டையும் ,இக்கலையை முழுதும் கற்றுத் தேரியவனுக்கு கருப்பு நிறப் பட்டையும் கொடுக்கப்படும். இந்த முறை எதைக் குறிக்கும் என்றால் உடல் வலிமையில்லாத ஒருவன் ,வலிமை பெற்ற ஒரு போராளியாக மாறுவதைக் குறிக்கிறது.

தற்காப்புக் கலைகளைக் கற்கும் பொழுதுமட்டும் நிறங்களின் வரிசை தலைகீழாக இருக்கும். காரணம் கரிய நிறத்தில் ஆரம்பித்து வெள்ளை நிறம் வரை செல்வது அறிவு வளர்ச்சியைக் குறிக்கும்.வெள்ளை நிறத்தில் இருந்து கரியநிறத்துக்குச் செல்லுதல் உடல் வலிமை அடைவதைக் குறிக்கும்.

ஆனால் இன்றைய கராட்டேவில் நிறங்கள் சரியான வரிசையில் அமைந்து இருக்காது. நீலம், பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகியவை மாறிமாறி வரும். இதற்குக் காரணம் காலத்தினால் வந்த சிதைவுகள்.தமிழ்நாட்டில் உருவான இம்முறை ஆசிய நாடுகளுக்குச் சென்று நடைமுறைக்கு வரும் பொழுது சிறிய மாற்றங்கள் வருவது இயற்கைதான்.

மேலும் ஆசியாவில் உருவான தற்காப்புக் கலைகளான கராட்டே,ஜூடோ ,குங்க்பூ போன்றவற்றிற்கு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் உலக அளவில் பள்ளிகள் அமைந்தன.ஆக இராயிரம் ஆண்டுகளில் உண்மையான நிற வரிசையில் சில தவறுகள் நடந்திருக்கலாம்.ஆனால் கொள்கையின் கரு மாறவில்லை என்பதே சிறப்பு! நிற வரிசை என்பது, ஒன்று வெள்ளையில் தொடங்கி கருப்பில் முடியும் அல்லது கருப்பில் தொடங்கி வெள்ளையில் முடியும்.

 

சப்தகன்னிகளே குருகுலம் மருத்துவம் தந்த பெண் சித்தர்கள்

ஆசீவக வண்ணப்படிநிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர்.அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் அல்லது பூடம் மட்டுமே உண்டு. குருக்குல வகுப்புகள், மாணவர்கள் குடிநீர் மற்றும் பிற நீர்த்தேவைகளுக்காக நீர்நிலைகள் அருகிலேயே இருந்தன, அதனால் கன்னிமார் கோயில்கள் பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந்துள்ளன. 

 

ஏழு கன்னிமார்

தமிழர்கள் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள். அதன்படி ஆசீவக வண்ணப்படிநிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர். அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் அல்லது பூடம் மட்டுமே உண்டு!

1. அமரி நிறமற்ற நிலை(72-84)
2. குமரி வெள்ளை(60-72)
3. கவுரி பொன்(48-60)
4. சமரி சிவப்பு(36-48)
5. சூலி பச்சை(24-36)
6. நீலி நீலம்(12-24)
7. கொற்றி கருப்பு(0-12வயது)

 

ஏழாம் நிலை கொற்றவை

கொல்+தவ்வை = வேட்டையாடுதலின் குறியீடாவாள்.இவளது நிறம் அடர்கருப்பு.இவள் பாலைநில மறவர்/கள்வர்களின் தெய்வம். ஆசீவக வாழ்வியல் இருள்நிலையில் இருந்து துவங்குவதைக் குறிக்கவே கருமைநிறம்!

 

ஆறாம் நிலை

பெதும்பைப்பருவம். நீலி இவளது நிறம் நீலம். கண்ணுக்கு புலப்பட்டாலும் அதன் மறைபொருள் விளங்கப்படாமையைக் குறிப்பதற்காக இந்நிறம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பிலிருந்து நீலம்..

ஐந்தாம் நிலை

மங்கைப்பருவம் #சூலி இவளது நிறம் பச்சை. மருதநிலத்தின் பச்சையம்மனாக வளர்ச்சியின் தெய்வமாக இவள் வணங்கப்படுகிறாள். காரணகாரியங்களை சிந்திக்கும் திறனானது துளிர்விடுவதை (நெற்கதிர் போல) இந்நிலை குறிக்கிறது.

நான்காம் நிலை

மடந்தைப்பருவம்.. சமரி இவளது நிறம் சிவப்பு. கோட்டைகளின் காவல் தெய்வமாக வணங்கப்படுபவள். ஆசீவகக் கல்வியின் முதல் பாதி இந்நிலையில் நிறைவுபெறும்.

மூன்றாம் நிலை

அரிவைப்பருவம், கவுரி இவள் பொன்னிறத்தவள்(மஞ்சள்) செல்வத்தை வாரி வழங்குபவளாக கருதப்படுபவள். ஆசீவக வழக்கில் 'மாதங்கி' என்று அழைக்கப்படும் சிறப்புடையவள்.

இரண்டாம் நிலை

தெரிவைப்பருவம் #குமரி இவளது நிறம் வெண்மை. கழிவெண் நிலைக்கு முந்தையது. ஞானத்தின் குறியீடாக போற்றப்படுபவள்.குன்றாத இளமை உடையவளாகக் கருதப்படுகிறாள். அதாவது இறப்பில்லா நிலையை நோக்கி செல்லுதலைக் குறிக்கவே!

முதல் நிலை

பேரிளம்பெண் #அமரி இவள் காற்றைப்போல கண்ணுக்கு புலப்படாதவள். கழிவெண் (அ) நிறமிலி நிலையினைக் குறிப்பவள். இறப்பினை வென்றவள்.இவளே பழையோள்,தவ்வை,மாமுகடி என இலக்கியத்தில் பலவாறு புகழப்படும் மூத்தோள்! அனைத்து வளங்களின் மூலமாக பழந்தமிழரால் போற்றப்பட்டவள்.

“நாட்டுப்புறசமயத்தில் தமிழகத்தின்; தென்மாவட்ட கிராமங்களில் மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், அரியநாச்சியம்மன் காந்தாரியம்மன், வண்டிமலைச்சியம்மன், உமையம்மாள் ஆகிய எழுவரை வழிபடுகின்றனர்” என்று டாக்டர் துளசிராமசாமி குறிப்பிடுவதிலிருந்து தென்தமிழகத்தில். கன்னியர் எழுவருக்கும் வழங்கியப் பெயர்களை அறியமுடிகிறது.

 

ஆந்திரம் மற்றும் கருநாடகத்தில் கன்னியர் எழுவர்

           கர்நாடகத்திலும் ஏழுசகோதரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. வொய்ட்கெட் என்பவர் தமது நூலில் எழுமாரித் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

“அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மாஆகியவை அந்த ஏழுதெய்வங்களாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாகமுனிஸ்வரர் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கண்டுகுறு வட்டத்தில் பொதுவாக கீழ்க்  கண்டவாறு ஏழு சகோதிரிகள் பற்றி அழைக்கிறார்கள்.

“போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மாஆகியனவாகும், பாலேரம்மா என்பது அம்மை நோய் கடவுளாகும். இது நம் மாரியம்மன் போன்றதெய்வமாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக போத்திராஜ் என்ற ஆண்தெய்வம் இருக்கிறது”.

ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏழு சகோதிரிகளும் வீட்டுத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றனர். இன்றைய காலத்தில் ஏழு கன்னியர்கள், சப்த மாதாக்கள் எனவுன் பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி,இந்திராணி,சாமுண்டி என்றழைக்கப்படுகின்றனர்.

References:
1.தமிழர் கல்விச் சிந்தனைகள் by சபா.ஜெயராசா சேமமடு பதிப்பகம் 2017
2.An epigraphic perspective on the antiquity of Tamil – Iravatham Mahadevan, The Hindu.  dt 24.6.2010.
3.‘தொகை இயல்’ பேராசிரியர் அ. பாண்டுரங்கன், 
4.கன்னியர் எழுவர் வழிபாடு, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், பேரா.அ.அன்புவேல், 2018, 
5.நாட்டுப்புறத்தெய்வங்கள், டாக்டர் துளசிராமசாமி, விழிகள் பதிப்பகம், 2000
6.அறிவோம் ஆசீவகம், சிவத்தமிழன் சேயோன்

தேமொழி

unread,
Jan 2, 2019, 4:00:50 AM1/2/19
to மின்தமிழ்
மத அரசியல்-43: ஆசீவகம்-எண்ணியல்
31-12-2018
https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/31/மத-அரசியல்-43-ஆசீவகம்-எண்ணியல்-3068506.html

மத அரசியல்-43: ஆசீவகம்-எண்ணியல்
By C.P.சரவணன்  |   Published on : 31st December 2018


tamil_num

 

ஆசீவகம்-எண்ணியல் (Aseevagam-Metrology and Number System)

எண்ணியல் (Number System)

”எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” எனக் கொன்றை வேந்தனில் எதிரொலித்தார் ஒளவையார். எண்ணியலை முதலில் வைத்து எழுத்தியலைப் பின்னர்க் குறித்தவாறு முதலில் மனத்தில் எண்ணிய பிறகே எழுத்துப் பிறக்கும் என்க. அவ்வாறு எண்ணுதலான் தானே தோன்றிய எண்ணியலைப் பற்றிப் புகுமுன், பிற எண்ணியலுக்கும், ஆசீவக அறிவர் மரபின் எண்ணியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டினை அறிய வேண்டியது முதலாம் என்க. கணியன் பூங்குன்றனார், கணக்காயன் தத்தனார், மதுரைக் கணக்காயனார், கணியாதனார், பக்குடுக்கை நன்கணியார், தொல்கணியாதன் என எண்ணற்ற கணக்கியலாளர்கள் (Mathematicians) வாழ்ந்துள்ளனர்.

 

கணிதவியல் நூல்கள் (Mathematical books)

கணிதவியலைப் பற்றி ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு தமிழ் மண்ணில் வாழ்ந்தன. இன்று கணக்கதிகாரம், ஆஸ்த்தான கோலாகலம், கணித தீபிகை ஆகியவை மட்டும் இருக்கின்றன.


மேல்வாய் இலக்கம், கீழ்வாய் இலக்கம் (Positive integers, Negative integers)

கணிதத்துறையில் பழந்தமிழர் ஓங்கித் திகழ்ந்தனர். கணிதத்திற்கு அடிப்படையான எண்களை மேல்வாய் இலக்கம் (ஏறுமுக எண்கள்), கீழ்வாய் இலக்கம் (இறங்குமுக எண்கள்) என்று இரண்டாகப் பிரித்தனர். ஒன்று என்ற எண்ணுக்கு மேற்பட்டது, மேல்வாய் இலக்கம். ஒன்றுக்குக் கீழ்ப்பட்டது கீழ்வாய் இலக்கம்."ஐ, அம், பல் எனவரு உம்'' என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (தொல்.எழுத்து. 394) உரை கூறிய உரையாசிரியர்கள் தாமரை, வெள்ளம்,  ஆம்பல் என்னும் பேரெண்களைச் சொன்னார்கள். நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்களைப் பரிபாடலும் குறிப்பிட்டது. இவை எத்தனைக் கோடிகள் என்பது இன்று தெரியவில்லை.

 

சுழியம் (Zero)

உலகம் ஐம்பூதங்கள் கலந்த அணுக்கொள்கையின் அடிப்படை என்று முடிவு கண்ட அறிவர், இந்த அளவையில் இன்மை ஓர் உள் பொருளாகக் கருதப்பட்டதால், இன்மையைக் குறிக்க சுழியம் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. பிற எண்ணியலின் ஏறுமுக இலக்கங்கள் முறையே சுழியத்தில் தொடங்கி (0) உயர் இலக்கங்களைக் குறிக்கும் அவ்வாறே இறங்கு முக இலக்கங்கள் உயர் இலக்கங்களில் தொடங்கிப் படிப்படியாகக் குறைந்து சுழியத்தில் முடியும், அதாவது இலக்கங்களின் கடையிறுதியாகச் சுழியம் குறிக்கப்படும், ஆனால் அறிவர் எண்ணியலிலோ ஒன்று, இரண்டு எனும் இலக்கங்களைப் போல கால், அரை, முக்கால் எனும் வின்னங்களைப் போல ”0’ சுழியம் என்பதும் ஒரு நிலையே.
சுழியம் என்பதை வெறும் குறியீடாகக் கருதாமல், எண்ணாக முதலில் பாவித்தவர்கள் தமிழர்கள். சுழியம் தமிழில் இருந்தே தோற்றம் பெற்றது என்பார் பேராசிரியர் முனைவர் கு. அரசேந்திரன். இன்மைக்கொள்கை தமிழருடையது. அணுக்கொள்கையில் ஏரணப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இதனை

அண்மையின் இன்மையின் எண்மையின்
வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும்
….. தொல். செய்யுள் 214.

எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வித்திலிருந்து மரம் உண்டாகிறது. வித்தினைப் பார்க்கும்பொது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியாகும்போது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியான பிறகு வித்தினைப் பார்க்க முடிவதில்லை.

வித்தில் மரம் தெரியாதது இன்னை. அதனால் மரம் இல்லை என்று பொரு கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ஆதலால் சுழியத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படாத உண்மையாயிற்று. இதனைப் பக்குடுக்கை நன்கணியர், கணியாதன் ஆகிய கணியவியல் அறிவர்கள் உலகிற்கு உணர்த்தினர். நாளடைவில் ஆசிவகம் எனப்பட்ட இக்கோட்பாடு சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் எனும் பெயர்களில் நாலாத் திசையும் பரவிற்று.

பக்குடுக்கை நன்கணியார், கணியாதன் ஆகியோர்க்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கணியர் மரபில் தோன்றிய தொல்கணியாதன் (Tholkaniyathan) என்பவரே முதன்முதல் இன்மைக் கோட்பாட்டினையும் சுழியத்தையும் வண்டிச்சக்கரத்தின் சுற்றளவு வாய்பாட்டையும் கண்டறிந்தவர் என்பார் பேராசிரியர், இரா.மதிவாணன்.

அணுக்கொள்கையின் உட்பிரிவாகிய இன்மைக்கொள்கை சுழியமாகக் கருதப்பட்டது. இது மெய்யியல் ஓகம், ஊழிகம் (தியானம்) மந்திரம் ஆகிய பழந்தமிழர் நான்மறைக் கொள்கைக்கு வித்தாயிற்று. அறம், பொருள், இன்பம், எனும் முப்பால் பகுப்பு இல்லற வாழ்க்கைக்கும் மெய்யியல் முதலாகிய நான்கும் துறவறக் கோட்பாட்டுக்கும் நிலைக்களங்களாயின.

பக்குடுக்கை நன்கணியாரும் கணியாதனாரும் கண்டறிந்த சிறப்பியம் எனும் ஆசீவக அணுக்கொள்கையை வடநாட்டிலும் பரப்பியதால் மற்கலிகோசலர் இதனை மேலும் விரித்துரைத்தார். வடபுலத்தார் சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளை வளர்த்துக்கொள்ளவும் புத்த, சமண சமயத்தார் அணுக்கொள்கையையும் இன்மைக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொள்ளவும் இது வழி வகுத்தது.

எண் கணிதம் இடையறவின்றிப் பல அடுக்கு எண்களாக வளர இன்மைக்கொள்கையின் புற வடிவமாகிய சுழியம் உதவியது. இதனால் தமிழில் பத்து லட்சத்தைக் குறித்த நெய்தல், கோடியைக் குறித்த குவளை அதன் பன்னூறு மடங்கு அடுக்குகளைக் குறித்த ஆம்பல், தாமரை, வெள்ளம், ஊழி போன்ற பேரெண்கள் மிக எளிதாக உருவாயின.

சுழியத்தின் பயன்பாட்டால் வணிகம், வானநூல் கணிப்பு, கணிதக் கலையின் வளர்ச்சி கட்டடக் கலை, பொறியியல் ஆகிய பல்வகை அறிவியல் வளர்ச்சி விரைவுபட்டது. உலக மக்கள் தமிழரின் சுழியம் கண்டுபிடிப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

அவ்வாறெனின் அறிவர் கணக்கியல் இன்மையைக் குறிக்க எந்த எண்ணுருவைத் தெரிவுசெய்துள்ளது எனும் கேள்வி எழக்கூடும், அறிவர் கணக்கியல் இன்மையைப் ”புற்புதம்” எனும் குறியீட்டால் குறித்துள்ளது, “புற்புதம்” என்பது நீர்க்குமிழியைக் குறிக்கும் சொல்லாகவும் பொருள்படும், நீர்க்குமிழி என்பது இன்மையின் பரிமாணத்தினை இயல்பே வரையறுக்கும் காட்டு பொருளாகவும், இன்மை பற்றிய கருதுகோள்களை வரிசைப்படுத்தும் ஒரு எடுகோளாகவும் திகழ்வது வெளிப்படை. 

 

π  (  Pi)

வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது.

 

அளவைகள் (METROLOGY)

விரிக்குங்கால், நீரினின்றும் வெளியேறும் காற்றானது குமிழியினை உண்டாக்கும் குமிழி எளிதில் அழியும். அங்கு அதன்நிலை முன்னின்மை, பின்னின்மை, ஒன்றிலொன்றின்மை, முற்றின்மை எனும் அனைத்து இன்மைக் கூறுகளையும் உணர்த்தி நின்றது, இன்மையைப் பேசாத பொருண்மை சிறப்புறாது இன்மைக்கு இலக்கம் கொடுத்து நமது முன்னோர் கணக்கியல் தொடங்குகிறது எனலாம். இவையன்றியும் அளவை முறையினங்கள் முறையே

 1. நீட்டலளவை
 2. நிறுத்தலளவை
 3.பெய்தலளவை
 4. முகத்தலளவை
 5. எண்ணலளவை 
 6. உய்த்தலளவை 

எனப் பலதிறப்பட்டவாறு கையாளப்பட்டன, அவற்றில் சிலவற்றைக் காண்போம், 

1. நீட்டலளவை   (units of length)

10 கோன் = 1 நுண்ணணு 
10 நுண்ணணு = 1 அணு 
8 அணு = 1 தேர்த்துகள் 
8 தேர்த்துகள் = 1 ப”சிழை அலலது துசுமபு 
8 ப”சிழை = 1 மயிர்அல்ல து மயிர்நுனி 
8 மயிர்நுனி = 1 நுண்மணல் 
8 நுண்ம ணல் = 1 சிறுகடுகு 
8 சிறு கடுகு = 1 எள் 
4 எள் = 1 கொள் 
8 எள் = 1 நெல் 
8 நெல் = 1 விர்ற்கிடை அல்லது விரல் 
12 விரல் = 1 சாண் 
2 சாண் = 1 முழம் 
4 முழம் = 1 பாகம் அல்ல து கோல் 
150 பாகம் = 1 கூப்பிடு  
600 பாகம் (4 கூப்பிடு) = 1 காதம் (1200 கெசம்) 
4 காதம் = 1 யோசனை 

 

2. நிறுத்தலளவை 

பொன்நிறுத்தல் 
8 நெல்எடை = 1 குன்றிமணி 
2 குன்றிமணி = 1 மஞ்சாடி 
2 மஞ்சாடி = 1 பணவெடை 
8 பணவெடை = 1 வராகனெடை 
10 பணவெடை = 1 கழஞ்சு 
2 கழஞ்சு = 1 கஃசு 
4 கஃசு = 1 பலம் அல்லது தொடி 

 

பண்டங்கள் நிறுத்தல் 

32 குன்றிமணி = 1 வராகனெடை 
10 வராகனெடை = 1 பலம் 
40 பலம் = 1 வீசை 
50 பலம் = 1 தூக்கு 
6 வீசை = 1 துலாம் 
8 வீசை = 1 மணங்கு 
20 மணங்கு = 1 பார்ம் 

 

பெய்தலளவை மற்றம் முகத்தலளவை 

300 நெல் = 1 செவிடு அல்லது சிற்றாழாக்கு 
5 செவிடு = 1 ஆழாக்கு அல்லது அரைக்கால்படி 
2 ஆழாக்கு = 1 உழக்கு அல்லது காற்படி 
2 உழக்கு = 1 உரி அல்லது அரைப்படி 
2 உரி = 1 படி 
4 படி = 1 மர்க்கால் அல்லது குறுணி 
2 குறுணி = 1 பதக்கு 
2 பதக்கு = 1 தூணி 
5 மர்க்கால் = 1 பறை 
80 பறை = 1 கரிசை 
12 மர்க்கால் அல்லது 48 படி = 1 கலம் 
120 படி = 1 பொதி 

(பிற்காலத்தில் வணிகர்கள் பொருளாசையினால் படி மற்றும் மரக்கால் அளவுகளைச் சிறுபடி, பெரும்படி, லிட்டர் படி மற்றும் பட்டணம்படி எனப் பல்வேறான நிலையில்லாத நம்பகத் தன்மையற்ற அளவுமுறைகளை உருவாக்கிக் குழப்பினார்கள்.) 

 

எடுத்தலளவை (மருத்துவ மரபு) 

1. இரு விரல்களால் எடுக்கும்அளவு = ஒரு சிட்டிகை அல்லது 
                                   விரற்கடி (வெருகடி)

 2. மூன்று விரல்களால் எடுப்பது    = ஒரு திரிகடி
 3. ஐந்து விரல்களால் பிடித்து மூடி 
        எடுக்கும் அளவு           = ஒரு கைப்பிடி

 4. ஐந்து விரல்களை ஒன்று சேர்த்து 
   நீட்டி அள்ளும்அளவு
                                 = ஒரு சிறங்கை அல்லது கதனை

 5. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி 
  விரலுக்கும் சேர்த்துப் பிடிக்கும் அளவு
                               = ஒரு கைப்பாங்கு (கப்பாங்கு) 

6. ஐந்து விரல்களையும் பிரித்துக் 
  பாய்ச்சி அள்ளும்அளவு             = ஒரு குத்து 

 

எண்ணலளவை 

ஒன்று 
பத்து 
நூறு ஆயிரம் 
பத்தாயிரம் 
நூறாயிரம் அல்லது ஒரு இலக்கம் 
நூறு நூறாயிரம் = ஒரு கோடி 
பத்து கோடி = 1 அற்புதம் 
பத்து அற்புதம் = 1 நிகழ்புதம் 
பத்து நிகழ்புதம் = 1 கும்பம் 
பத்து கும்பம் = 1 கணம் அல்லது கணிகம் 
பத்து கணம் = 1 கற்பம் 
பத்து கற்பம் = 1 நிகற்பம் 
பத்து நிகற்பம் = 1 பதுமம் அல்லது தாமரை 
பத்து பதுமம் = 1 சங்கம் 
பத்து சங்கம் = 1 வெள்ளம் அல்லது வாரணம் 
பத்து வெள்ளம் = 1 அன்னியம் 
பத்து அன்னியம் = 1 அருத்தம் 
பத்து அருத்தம் = 1 பராருத்தம் 
பத்து பராருத்தம் = 1 பூரியம் 
பத்து பூரியம் = 1 மும்முக்கோடி 
பத்து மும்முக்கோடி = 1 மாயுகம் 
நூறு மாயுகம் = 1 பர்தம் 

 

இறங்கு முக இலக்கங்கள்அல்லது கழவாயிலக்கம்  (Fraction)

ஓன்று எனும் முழு எண்ணுக்குக் கீழ்ப்பட்ட வின்னங்களின் வரிசை) ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட கீழ்வாய் இலக்கங்களிலும் தமிழர் வியக்கத்தக்க எண் முறையை வகுத்தார்கள். இது முக்காலே மூன்று வீசத்தில் தொடங்கி, தேர்த்துகள் வரை ஆழமாகச் சென்றுள்ளது. இவற்றுள் அடங்கிய அணு, இம்மி என்னும் சொற்கள் மட்டும் சிலருடைய பேச்சு வழக்கில் உள்ளது.

3⁄4 - முக்கால் 
1⁄2 - ஆரை 
1⁄4 - கால் 
1/5 - நாலுமா 
3/16 -மூன்று வீசம் 
3/20 - மூன்று மா 
1/8 - அரைக்கால் 
1/10 - இருமா 
1/16 - மாகாணி (வீசம்) 
1,20 - ஒருமா 
3/64 - முக்கால்வீசம் 
3/80 - முக்காணி 
1/32 - அரைவீசம் 
1/40 - அரைமா 
1/64 - கால்வீசம் 
1/80 - காணி 
3/320 - அரைக்காணி முந்திரி 
1/160 - அரைக்காணி 
1/320 - முந்திரி அல்லது முத்திரை 
1/102400 – கீழ் முந்திரி 
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி 
1/165580800 - ஆணு 
1/1490227200 - குணம் 
1/7451136000 - பந்தம் 
1/44706816000 - பாகம் 
1/312047712000 - விந்தம்; 
1/5320111104000 - நாகவிந்தம் 
1,744815554556000 - சிந்த 
1/48963110912, - கதிர்முனை 
1/9585244364800000 - குரல்வனைப்பிடி 
1/57511466188800000 - வெள்ளம் 
1/57511466188800000000 - நுண்மணல் 
1/2323824530227200000000 - தேர்த்துகள் 

 

கீழ்வாய்ச் சிற்றலக்க வாய்பாடு 

வினனங்களின் ஏறுவரிசை = (ஒன்று எனும் முழு எண்ணை நோக்கி) 
65 தேர்த்துகள் = 1 நுண்மணல் 
100 நுண்மணல் = 1 வெள்ளம் 
60 வெள்ளம் = 1 குரல்வளைப்பிடி 
40 குரல் வளைப்பிடி = 1 கதிர்முனை 
20 கதிர்முனை = 1 சிந்தை 
14 சிந்தை = 1 நாகவிந்தம் 
17 நாகவிந்தம் = 1 விந்தம் 
7 விந்தம் = 1 பாகம் 
6 பாகம் = 1 பந்தம் 
5 பந்தம் = 1 குணம் 
9 குணம் = 1 அணு 
7 அணு = 1 மும்மி 
11 மும்மி = 1 இம்மி 
21 இம்மி = 1 கீழ்முந்திரி 
320 கீழ்முந்திரி = 1 மேல்முந்திரி 
320 மேல்முந்திரி = 1 ஒன்று (1 எனும் முழு எண்) 

பண்டைத் தமிழர்தம் கணக்கியலின் மிக நுண்ணிய அளவை முறைமைகளைக் கணக்காயர் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் தமிழகத்தினின்றும் பல வேறிடங்களுக்கும் சென்று தமது கணக்கியல் அறிவினைப் பரப்பினர், அறுதியிட்டுக் கண்ட எண்ணிக்கைகளைப் பார்த்தோம், ஆனால், அறுதியிட்டு எண்ணிச் சொல் இயலா எண்ணிக்கைகளை உய்த்தலளவு எனும் ஓர்தலறிவினாலும், எண்ணிலடங்காத் தொடர் எண்களின் ஏரண அடுக்கத்தினாலும் அறிவர் பாடங்களாலும், சில மாறிலிநிலை எண்களைக் கொண்டே  அரங்கிற்கு ஒளியூட்டு நிகழ்முறைகளையும் பழந்தமிழர் கடைபிடித்தனர்.

பித்தகோரசின் தேற்றமாவது  போதையனாரின் செங்கோணமுக்கோண கோட்பாட்டிற்கு பின்னியது (Pothyanar Principle is prior to Pythagoras theorem)

பித்தாகரசுக்கு முன் செங்கோண முக்கோணம் குமரிக் கண்டத்து மாந்தன் நிலவலகெங்கும் பலகிப் பெருகிப் பன்னாட்டிலும் வேரரூன்றி நிலைத்த பின் தனது முன்னோர் இன்னாரென்பதனை அறியாது மயங்கித் தம்மை மேனாட்டுக் குடிகளாகவே கருதி வாழ்வாராயினர், அவர்தம் அறிவியல் கண்டு பிடிப்புகள் யாவும் தாம் புதிதாகக் கண்ட றிந்தவையே என நம்பியும், இருந்து வருகின்றனர், ஆயினும் இன்று அவர்கள் படைத்துள்ளன யாவும், தமிழனின் பழைய கள்ளினைப் புதிய மொந்தையில் ஊற்றித் தரும் செயலாகும். வானியல், வான் இயற்பியல், கோளியல், புவி இயக்கவியல். வானூர்தியியல், பொது இயற்பியல், பொறியியலின் அனைத்துப் பிரிவுகள் என வளர்ந்து நிற்கும் துறைகள் யாவும், கணக்கியலடிப்படையிலான அறிவியல் (Mathematical Sciences) என அழைக்கப்பெறுகின்றன.  இக் கணக்கியலில், குறிப்பாக வடிவக் கணக்கியலில் செங்கோணம் என்பது ஓர் இன்றியமையாத நுட்பமாக இருந்து வருகின்ற து, பல்வேறு அளவை முறைகளிலும் தொலைவு. 

உயரம், நீளம் போன்னறவற்றைக் கணக்கிடச்  செங்கோண முக்கோணமும் அதன் அடிப்படைச் சூத்திரமாகப் பித்தகோரசின் தேற்றமும் இன்று முதன்மை பெற்றுள்ளன, இந்தப் பித்தகோரசின் தேற்றம் தமிழனிடமிருந்து கற்றுச் சென்ற பாடமே. 

பித்தகோரசின் தேற்றமாவது  (Pythagoras theorem) ஒரு செங்கோண முக்கோணத்தின் (Right-angled triangle) கர்ணத்தின் (Hypotenuse) வர்க்கம் (square root) மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம். பித்தகோரசின் விளக்கமாவது பின்வரும் அ,ஆ, இ என்னும்  மூலைகள் கொண்ட ஓர் செங்கோண முக்கோணத்தின் க, ங,ச எனும் பக்கங்கள் அமைந்துள்ளன.

 


 
இதில், 
க என்ற பக்கத்தின் அளவு= 3 செ.மீ 
ங என்ற பக்கத்தின் அளவு= 4 செ.மீ 
எனில், 
ச என்ற பக்கத்தின்அளவு = க வின்இருமடி,  +ங வின் இருமடி 
= க + ங 
= 3 + 4 
= 9 + 16 
= 25 
= 5 
ச என்ற பக்கத்தின் அளவு 5 செ.மீட்டர்களாகும்.

பழந்தமிழ்க் கணக்கியல் முறையில் இச்செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் அளவு காண உதவும் சூத்திரப் பாடல் கீழ்வருமாறு 

ஏற்ற நீளந்தன்னில் எட்டிலொன்றைத் தள்ளி 
சாற்று முயரத்தில் சரிபாதியைக் கூட்டி 
மீற்று கரணந் தன்னை மின்னிடையே நீகாண்டி 
போற்று மூன்றொன்றெனவே பொலன்குழையே வீதங்காண். 

மேலும்,

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
                                                                             - போதையனார்

இதன் விளக்கமாவது, முன்னர்க் கூறிய செங்கோண முக்கோணம் அ, ஆ, இ எனும் முனைகளுடனும் க, ங, ச என்ற பக்கங்களுடனும் இருப்பதாகக் கொள்க. இதில், க என்ற பக்கத்தினளவு (உயரம் எனப் பாடலில் குறிப்பிடப்பட்ட து) = 3 செ,மீ, 
ங என்ற பக்கத்தினளவு (நளம் எனக் குறிக்கப்பட்டது)= 4 செ.மீ எனில் 
ச எனும் பக்கத்தினளவு காணும்முறையாவது, 
நீளப்பக்கத்தில் எட்டிலொரு பங்கினைக் கழிக்கவும், 
அதாவது 4ல் எட்டிலொன்றைக்  கழிக்க 3 1⁄2 செ,மீ, ஆகும், 
அதனுடன் உயரத்தில் பாதியைக் கூட்டவும், 
அதாவது 3ல் பாதியைக்(1 1⁄2 ) கூட்டவும், 
ச என்ற பக்கத்தினளவு 5 செ,மீ ஆகும்.

நீள்ப் பக்கத்தினளவில் உயரப்பக்கம் மூன்றில் ஒரு பங்கு அளவேனும் இருத்தலே பயன்படு முக்கோணமாகும். அதாவது ஓர் வீட்டில் அமைக்கப்படும் தூலத்தின் நீளம் ஒன்பதடி எனில் அதன் நடுவில் வைக்கப்படும் குத்து மரம் 3 அடிக்குக் குறையாது வைக்கப்படுதலே அதிகமான சுமை தாங்கும் திறனையளிக்கும் என்பதால் மூன்றில் ஒரு பங்குக்கும் (மூன்றில் ஒன்றுக்குக்) குறைந்த குத்துயரங்கள் கணக்கில் வைக்கப்படவில்லை எனலாம், இங்கே மாதிரிக் கணக்குகள் சில பித்தகோரசின் படியும், பழந்தமிழர் கணக்கின் படியும் பட்டியலிடப்படுகின்றன. போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். அட்டவணை:-

நீளமானது உயரத்தை விட மூன்று பங்குக்கு மிகாமல் இருக்கும் வரை இவை பொருந்தி வருதல் காண்க. மூன்றிலொன்றின் குறைந்த உயரம் முக்கோணப் பயன்பாட்டில் குறைவுபடுதலின் அது வேண்டற்பாற்றன்றெனத் தமிழர் கடிந்தனராம். 

References:
தமிழாய்வில் கண்ட உண்மைகள் பேராசிரியர் இரா.மதிவாணன் 2005
எண்ணியல் ஆதி. சங்கரன்
எண்ணும் எழுத்தும் By முனைவர் மலையமான்

தேமொழி

unread,
Jan 5, 2019, 10:30:38 PM1/5/19
to மின்தமிழ்
மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி
https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/jan/03/மத-அரசியல்-44-ஆசீவக-மத-நூல்-ஐம்பூதக்-கோட்பாடு-தருக்கவியல்-எண்ணியக்-கோட்பாடு-தந்திர-உத்தி-3070367.html
03-01-2019


மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி

By C.P.சரவணன்  |   Published on : 03rd January 2019



asee_iyen

 

ஆசீவக மத நூல்

ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவ கதிர்' என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

நவகதிரையன்றி, 'ஆதித்தியம்' என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, 'ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்' என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும் என்பார் மயிலை, சீனி. வேங்கடசாமி

ஐம்பூதக் கோட்பாடு (Doctrine of Five Energy)

ஐம்பூதக் கோட்பாடு தமிழரின் மெய்யியல் காட்சிப் பொருளின் அடிப்படையில் உருவானது. இது தேகவாதம் என்றுனும் அதாவது கண்ணுக்குப் புலனாகும் பொருள்களைப் பற்றிய அறிவு - பின்னர் அதைப்பற்றிய ஆய்வு எனத் தொடங்கியது. அதன் காரணமாகவே மெய்யியலைக் காட்சி’ என்றனர்.

திருக்குறள்,

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

எனச் சுட்டுவதும், புறநானூற்றில்,

‘..... ...... .......... திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் 
எனவும்,
‘ஐய மறாஅர் கசபீண்டு காட்சி’ 

எனவும் குறிப்பதும் மெய்யியல் என்ற அடிப்படையிலேயாகும். எந்தப் பொருள் கண்ணுக்குப் புலனாகின்றதோ அந்தப் பொருளே உள் பொருளாகும். அதாவது தோற்றமுடைய பொருளையே காணமுடியும் என்பது அதன் கருத்து. அதன் காரணமாகவே மனித உடம்பை - காணத்தக்க உள்பொருள் - உண்மைப்பொருள் - எனும் அடிப்படையில் ‘மெய்’ என்றனர். மெய்யை - மனித உடம்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காரணத்தால் - அக்கோட்பாட்டை ‘மெய்யியல்’ என்றனர். அந்த வகையில் இந்திய மெய்யியல்களுக்கெல்லாம் மூல ஊற்றாக அமைந்த கோட்பாடு ‘தேக வாதம்’ எனப்பட்டது. ஆனால்,மெய்யியல் என்பது சரியான சொல்லல்ல, காட்சியியல் என்பதே சரி என்கிறார் முனைவர்.நிர்மல் செல்வமணி

பொருள் திணைகளில் ஏழாவதாக இடம்பெறும் இன்மை மிகச் சிறந்த அறிவியலின் வெளிப்பாடாகும். உயிர்களின் திரிவாக்கக் கோட்பாட்டை (Theory of Evolution) விளக்கும் நுட்பத்தைக் கொண்டது.இவ் இன்மை தொல்காப்பியரால் அதே பொருளில் சுட்டப்பட்டிருப்பதை முதன் முதல் வெளிப்படுத்திய பெருமை கோ. வடிவேலு செட்டியார் அவர்களுக்கே உரியதாகும். இவ் இன்மையை முன்னின்மை, பின்னின்மை, ஒன்றில் ஒன்றின்மை, முற்றுமின்மை என நான்காக வகைப்படுத்தும் அகத்தியத் தருக்க நூற்பா. இவ்இன்மை எனும் கருத்தியலின் மூல வடிவமாகவே தொல்காப்பியரின்,

‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே’

எனத் தொடங்கும் நூற்பா அமைந்துள்ளது. படிமுறைக் கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்த அந்நூற்பா தமிழ் அறிவு மரபின் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகும்.”

3400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலைப் பாருங்கள்.

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே;
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

 

ஐந்தின் சேர்க்கை (Combination of Five Elements)

ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து  ஜீவராசிகள். ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் தோன்றின. இதற்கு ’ஐந்தின் சேர்க்கை” என்று பொருள்.  பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள், ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின்  (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்பர்.

பூமி (பகுதி) செயல்படா சூக்கும பஞ்சபூதங்களின் கலவையினால் எவ்வாறு செயல்படும் ஜட பூமி (ஸ்தூல பூமி) உருவாகிறது எனில் = ½ பங்கு சூக்கும பூமி + 1/8 பங்கு நீர் + 1/8 பங்கு நெருப்பு + 1/8 பங்கு காற்று + 1/8 பங்கு ஆகாயம் - இந்த விகிதத்தில் பஞ்ச சூக்கும பூதங்களின் கலவையினால் (பஞ்சீகரணத்தினால்) செயல்படும் இந்த ஜட பூமி உருவாகிறது. இது போன்ற கலவையால் (பஞ்சீகரணத்தால்) மற்ற ஜடமான பஞ்ச பூதங்களான காற்று, நெருப்பு, நீர் ஆகிய ஜட பூதங்கள் உருவாகிறது.

 

ஐந்தின் சேர்க்கையின் விளைவுகள் 

ஆகாயம் 

முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோன்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து ஜடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது. ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரைபடாதது. 

காற்று 

’ஆகாயம்’எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’காற்று’(வாயு) எனும் பூதம், ’தொடு உணர்வு’ (ஸ்பர்சம்) எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது. 

நெருப்பு 

காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’எனும் பூதம் ’உருவம்’(ரூபம்) எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.

நீர்

தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம்  எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்த குணமான சுவை எனும் குணத்துடன், நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.

நிலம் 

நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் , சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண்  எனும் பூதம்.

தேகம் (Body)

மனித உடம்பைத் தேகம் என்றனர் வடமொழியாளர். தமிழர் உருவாக்கிய ‘மெய்யியல், அதன் காரணமாக வடமொழியாளர்களால் ‘தேக வாதம்’ என்றாயிற்று. மேலும் தந்திரம் என்பது அதன் தலையாய பண்புகளால் தேக வாதத்தின் முடிவாகக் கருதப்பட்டது. அதாவது காணப்படும் பொருண்மிய வடிவம் கொண்ட மனித உடலானது அண்டத்தின் நுண்ணிய வடிவமே என்பதை வற்புறுத்தியது தந்திரமாகும். அத்துடன் மனித உடம்பிற்கும் அண்டத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பதை அக்கோட்பாடுகள் வற்புறுத்தி வந்ததும் தெளிவாகிறது.

அண்டமும் பிண்டமும் (Space and Flesh)

இப்பேரண்டம் என்பது அணுக்களின் திரட்சியால் உருவானது. அணு ‘கரு’ நிலையில் ஏற்பட்ட சிதைவில் பெரிய அளவிலான வெப்பம் உருவானது. அதனை அடுத்து காற்று தோன்றியது. காற்று வெப்பத்தில் மோதியதால் தீயாகிய பூதம் தோன்றியது. தீயை அடுத்து மழை - பனி - தோன்றின. பின்னர் நிலமாகிய பூதம் தோன்றியது எனப் பரிபாடல் இப்பேரண்டத்தின் தோற்றத்தினை விவரிக்கும். இதன் அடிப்படையில்தான் தொல்காப்பியரும்,

நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம்............. 

எனக்கூறுவார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐந்து பூதங்களையும், ‘ஐம்பெரும் பூதங்கள்’ எனக்குறிக்கும் புறநானூறு.

இப்பூதக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதே எண்ணியம், உலகாய்தம் ஆகிய மெய்யியல்களாகும். எண்ணியம், இப் பேரண்டத்தை, அதன் கண் தோன்றியுள்ள பல்வேறு உயிர் உள்ள, உயிர் இல்லாப் பொருள்களின் தோற்ற ஒடுக்கங்களை விரிவாகப் பேசுகின்றது. முதலில் ‘மான்’ (மகத்து) என்னும் பெரியது தோன்றியது; ‘மான்’ என்பது அறிவைக் குறிப்பது. அவ் அறிவிலிருந்து ‘விசும்பு’ (வானம்) வெளிப்பட்டது. விசும்பிலிருந்து வளி பிறந்தது. வளியிலிருந்து தீ வெளிப்பட்டது. தீயிலிருந்து நீர் எழுந்தது. நீரிலிருந்து மண் பிறந்தது. வான், வளி, தீ, நீர், மண் ஆகிய ஐம்பூதத் திரட்சியின் வாயிலாக ‘உள்ளம்’ (மனம்) பிறந்தது; எனும் பொருளில் அமைந்த எண்ணியக் கருத்தை மணிமேகலை பின்வருமாறு விளக்கக் காணலாம்.

........... .......... ............ சித்தத்து
மானென் றுரைத்த்த புத்த்தி வெளிப்பட்டு
அதன்க்கண் ஆகாயம் வெளிப்பட்டு, அதன்க்கண்
வாயு வெளிப்பட்டு, அதன்க்கண் அங்கி
யானது வெளிப்பட்டு, அதன்க்கண் அப்பின்
தன்மை வெளிப்பட்டு, அதின்ம்மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு 

என்பது அதன் கூற்று. மேற்காட்டிய பாடற்பகுதியில் ‘ஐம்பூதங்களின் சேர்க்கையால் ‘மனம்’ வெளிப்பட்டது. எனும் பொருளில் அமைந்த ‘அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு’ எனும் பாடலடி உயிரின் தோற்றத்தை விளக்குவதாகும். மேலும், அணு - ஐம்பூதங்களாகப் பெற்ற வளர்ச்சி - இவ்வளர்ச்சியின் தொகை மாற்றங்கள் - அம்மாற்றங்களின் விளைவால் ஏற்பட்ட உயிர்த்தொகுதிகள் ஆகிய அனைத்துக் கூறுகளையும் எண்ணியக் கோட்பாடு விரிவாக ஆராய்ந்துள்ளது. இதனை,.... அகம் என்னும் தமிழ்ச் சொல்லிற்கு “உள்ளம்” அல்லது ‘உயிர்’ என்னும் பொருள்கள் உண்டு..

அத்தகைய அகந்தையின் பிறப்போடு, விசும்பினால் செவியில் எழுகின்ற செவியொலியும், வளியினால் மாந்தரின் மெய்க்குத் தோன்றும் ஊறு எனப்படும் தொடுஉணர்வும், தீயினால் கண்ணுக்குப் புலனாகும் ஒளியும், நீரினால் நாவில் தோன்றும் சுவையும்; நிலத்தினால் மூக்கின் வழியாய் நுகரப்பெறும் “நாற்றமும்” முதலான புலனுணர்வுகள் எழுந்தன. சுருங்கச் சொல்லின், காது, மெய், கண், நாக்கு, மூக்கு முதலான புலனுறுப்பு;புகள் ஐந்தும் ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்பெறும் உணர்ச்சிகள் ஐந்தும் தோன்றின. அவற்றுடன் செயல்பாட்டிற்குரிய வாய் (மொழி), கைகள், கால்கள், எருவாய் (anus), குய்யம் (பெண் அல்லது ஆண் உறுப்பு), முதலான ஐவகை வினையுறுப்புகளும் பிறந்தன.

ஐம்பூதக் கோட்பாட்டின் கூட்டுறவில் உயிர் எப்படித் தோற்றம் கொள்கிறது? 

‘... ஆத்திப் பூவும் கருப்புக் கட்டியும் இட்டு வேறுசில பொருட்களையும் அதனுடன் சேர்த்திடின் மதுவாகிய ‘பானம்’ பிறக்கின்றது. அதுபோன்றே நால்வகைத் தனிமங்களாலும் சிலவகை உறவுகளில் ஒன்றுபடத் தன்னுணர்வு பிறக்கின்றது. தனிமங்களின் கூட்டு அழிபடுகையில் அவையாவும் வெவ்வேறாகப் பிரிந்துவிடுகின்றன. பறையின் ஒலி பையப் தேய்ந்து இறுதியில் அழிவது போல, அவையாவும் மீண்டும் தத்தம் மூலப்பொருட்களுடன் கலந்து ஒன்றிவிடுகின்றன’. இக்கருத்தை,

தாதகிப் பூவும் கட்டியும் இட்டு,
மற்றும் கூட்ட, மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத்து, உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வ் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் 

என விளக்கும் மணிமேகலை.

பூதங்கள் ஐந்து எனும் தமிழ் மரபுக்கு மாறாக, நான்கே பூதங்கள் எனக் கூறுவது வட மரபாகும். வெளியாகிய ஆகாயத்தைக் காண முடியாது என்பதால் வடமரபில் அதனை ஒரு பூதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அனைத்துப் பூதங்களும் தோன்றவும், வளரவும் காரணமாக இருப்பது வெளியாகிய ஆகாயம் என்பதால் அதனையும் ஒரு பூதமாகத் தமிழ் மரபில், ஏற்றுக்கொண்டனர். அதனால் வானத்தையும் சேர்த்து ‘ஐம்பெருபூதத்தியற்கை’ என ஆராய்ந்தனர்.

இவ்வாறு அண்ட வெளியின் தோற்றத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களின் சேர்க்கை - உயிர்களின் - குறிப்பாக மாந்தர் இனத்தின் தோற்றத்திற்கும் காரணமாக இருப்பதால் ‘அண்டத்தையும் பிண்டத்தையும்’ அதாவது அண்ட வெளியையும் மாந்த உடலையும் ஒன்றெனக் கூறினர். அக்கருத்தின் அடிப்படையில் தோன்றியதே ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ எனும் உலகுரை ஆகும். அண்டங்களின் தோற்றத் திற்கு அடிப்படையாக அமைந்த அணுக்கருவைப் ‘பரமாணு’ என்பர். இப் பரமாணுவை - தேகவாதத்தின் அடிப்படையில் உருவான தந்திர நூலார் ‘பக்தி’யின் வடிவமாகக் குறிப்பர். இதனை,

அண்டத்தி னுள்ளே அளப்ப்ரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்க்ளே

எனத் திருமந்திரமும் குறிக்கும்.

‘அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சக்தியின் தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில், மந்திரம், கிரியை, பாவனைகளால் காண முற்படுகின்றனர். ஆயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்றலை அவர்கள் அறிந்தார்கள் இல்லை’ என்பது அப்பாடலின் பொருளாகும். தேகவாதம் வைதிகத்திற்கு எதிரானது என்பதை விளக்கும் சிறந்த சான்றாகவும் அப்பாடல் அமைந்துள்ளது. ‘உலகம் மாயை, வாழ்வும் மாயை, பிரம்மம் ஒன்றே நிலையானது’, எனக்கூறிய மாயாவாதிகளை மறுத்த பொருண்மியக் கோட்பாடாகவும் தேக வாதம் திகழ்ந்தது. இதனை,

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே 
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

எனவரும் திருமந்திரப் பாடல்களால் தெளியலாம். அண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையே நிலவும் ஒற்றுமையைத் தந்திரநூல்கள் விரிவாக விளக்கியுள்ளன.

இதுபற்றி ஆராய்ந்த தி.கணேசர், “எமது உடலில் உள்ள பொருள்கள் யாவும் பிரபஞ்சத்திலும் உள்ளன. தந்திரக் கோட்பாட்டின்படி உடலும், பிரபஞ்சமும் ஒரே தன்மையான பொருட்களைக் கொண்டு ஒரே தத்துவ அடிப்படையில் அமைக்கப் பெற்றதால் ஒரே சக்தி ஒரே விதத்த்தில் தொழிற்பட வேண்டும்.ஆகவே உடலிற் பொதிந்துள்ள சக்தியை முழுவதும் வெளிப்படுத்தி, எமது கட்டுப்பாட்டுக்குள் இயக்கு வித்தால், இயற்கைச் சூழலின் ஆற்றலைப் பெருக்கி எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து எமக்கு வேண்டிய வகையில் தொழிற்படுத்த முடியும். மனித உடல் போன்ற மிக நுட்பமான பொறியினை ஒருவரும் உருவாக்கிவிட முடியாது.

பேரண்டமும் இதுபோன்ற நுட்பமானதொரு, பொறியே. இவை இரண்டிலும் பொதிந்துள்ள சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பும் உறவும் பிரமிக்கத் தக்கவை. இந்த உறவினைப் புரிந்து அதன் அடிப்படையில் செயற்பட்டு, அவ் ஆற்றல்களை எமக்கு அடிமையாக்குவதே தந்திரச் சாதனைகள் எனப்படும். இச்சாதனைகளுக்கான அடிப்படை நோக்கம் தேகவாதம் அல்லது உடலை வணங்குதல் எனப் பண்டோபாத்தியாயாவின் மேற்கோளைக் காட்டி விளக்குவார்.

பேரண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைக் கூறுகளை விளக்கிய இவ் அறிவியல் இருபெரும் கிளைகளாகக் கிளைத்தது. ஒன்று மருத்துவம் மற்றது வான் இயற்பியல். இவ் இருபெரும் அறிவியல் மரபுகளும் கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட பொருண்மைக் கோட்பாடுகளாகும்.

மருத்துவம் (Medicine)

உடம்பை மையமாகக் கொண்ட இவ் ஆராய்ச்சி மருத்துவத்தின் அடித்தளமாக அமைந்தது. உடம்பில் உள்ள மூன்று தாதுக்களில் (நாடிகளில்) ஏற்படும் முரண்பாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் நோய்களுக்கான காரணிகளாக அமைந்தன.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று 

எனும் வள்ளுவர் கூற்றில் அவ்வுண்மையைக் காணலாம்.

தேகவாதம் எனும் கொள்கையே,உடற்கூறியல் (Anatomy) உடல் தொழிலியல் (Physiology) மற்றும் வேதியியல், மருந்தியல் முதலானவை தோன்றி வளர்வதற்கு வேண்டிய நிலைகளை அமைத்து கொடுத்தது. மூளையின் தொழிலை, ஓரளவு தெளிவாக அறிய முனைந்தவர்கள் தந்திரக்கோட்பாட்டினரேயாவர். இந்திய மருத்துவக் கலையின் அடிப்படை நூல்களை ஆக்கிய சரகரும், சுசுருதரும் அறிவின் இருப்பிடம் - உணர்வின் மூலம் இருதயமே என நம்பினர். கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டிலும் இவ்வாறே கருதினார். ஆனால் தந்திர இலக்கியங்கள் உணர்வின் இருப்பிடம் மூளை’ எனத் தேக வாதத்தின் அறிவு மரபை அடையாளம் காட்டுவார் தி. கணேசர். மேலும், இத்தேகவாதம் மருத்துவத் துறைக்கு எந்தெந்த வகையில் உதவியது என்பதையும் விரிவாக ஆய்ந்துரைக்கின்றார்.

உடல் மெய்யானது எனும் பொருள் முதல் வாதக் கண்ணோட்டமே, உடல் பற்றிய ஆராய்ச்சியில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டியது. மாறாக, ஆன்மீக வாதிகள், உயிர் ஆன்மா என்ப்பவற்ற்றின் மெய்யியல் விசாரணையில் இறங்கியதால் உடலுக்கு முக்கியத்தும் அளிக்கத் தவறினர். அத்துடன் தந்திரமானது ஏற்கனவே கூறியபடி மக்கள் கோட்பாடாக மலர்ந்ததால், சமுதாயத்தின் கீழ்ப்படியில் உள்ள மக்களிடம் பரவிக்கிடத்தது. இறந்த உடலைத் தீண்டுவதோ ஆராய்வதோ இவர்களால் ஆபாசமாகக் கருதப்படவில்லை. தந்திரத்தில் கூறப்படும் சவச் சாதனை எனும் முறையும் உடலை ஆராய்வதற்கு உதவியது. உயர்மட்டத்தினர் இறந்த உடலைத் தீண்டுவதற்கு மறுத்தமை மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகவே அமைந்தது. கல்கத்தா மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட போது மாணவர்களைச் சேர்ப்பது பெரும்பாடாக இருந்ததென அறியும்போது இந்திய ஆன்மீக வாதத்தின் தாக்கம் தெளிவாகின்றது என்பது அவரின் கூற்றாகும்.

உடலை மையமாக வைத்துத்தொடங்கிய இம்மருத்துவம் வைதிகர்களின் கருமக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். மனிதன் செய்யும் ‘பாவ - புண்ணியங்களுக்கு’ ஏற்பவே பிறவிகள் அமைகின்றன. அவரவர் துய்ப்பதற்குக் காரணமான நுகர்வுகளும் அமைகின்றன என்பது வைதிக நெறியாகும். மனிதன் தான் செய்த பாவங்களுக்குக் கழுவாய் தேடாமல் இறந்துவிட்டான் என்றால் அவன் ‘வீட்டுலகை எய்த முடியாது என்பதுடன் நரகத்திலும் உழல்வான்’ என்றும் கூறிய வைதிகம், ஜீவன் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ற பிறவிகளில் (உடல்களில்) உயிரைத் தானே புகுத்துகிறான்; வினைகளுக்கு ஏற்பத்தானே அச்செயலையும் புரிகின்றான். மற்றொருவர் அதைச் செய்ய முன்வருவதில்லை. தீவினைகளைப் புரிவதில் சுதந்திரமுள்ளவன் அவற்றிற்கான தீயபிறவிகளையும் தனக்குப் பிடிக்காவிடினும் தானே ஏற்கிறான். தான் செய்த வினைப்பயனை தான் தான் அனுபவிக்க வேண்டும்.எனும் கூற்றில் அவ்வுண்மையைத் தெளியலாம். இத்தகைய ‘கருமத்தை’த் தேகவாதிகள் ஏற்கவில்லை, என்பதுடன் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தனர். உடம்பைப் பேணவேண்டிய தேவையையும் வற்புறுத்தினர்.

உடலினை மெய் என ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டுத் தந்திரக்கோட்பாட்டினரான சித்தர்கள் தீராத நோய்கள் என எதுவும் இல்லை என்றும், மக்கள் மாறாத இளமையுடன் வாழமுடியும் எனவும் நம்பினர். கர்ம நோய்களைத் தீர்க்க முடியாது, அவற்றை அடைந்தோர், அந்நோய்களின் கொடுமையை அனுபவித்துத்தான் தீரவேண்டுமெனும் வைதிகர்களின் கொள்கையைச் சித்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் இவ்வுலகில் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்துடன் வாழமுடியும், துன்பம் இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழியுண்டு என்பது சித்தர்களின் முடிவு’ என்னும் தி. கணேசரின் கூற்று எண்ணத்தக்கது.

சித்த மருத்துவம் அல்லது ஆயுள் வேதம் பெற்ற வளர்ச்சி சில சிந்தனையாளர்களுக்குப் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அம்மருத்துவர்களின் சிந்தனையும் செயலும் நால்வண்ண வகுப்பினையுடன் உடன்படவில்லை என்பதே அதற்கான காரணம். அம் மருத்துவத்திற்கு இயல்பாய் அமைந்து நின்ற குடியாட்சி உணர்வே அத்தகைய எதிர்ப்ப்பிற்குக் காரணம் எனலாம். அதனைக் கருதியே சில சமற்கிருத சட்ட நூல்கள், மருத்துவர்களைப் பொல்லாதவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் கருதின. மருத்துவன் அல்லது அறுவை ‘மருத்துவனிடமிருந்து பெறப்படுகின்ற உணவு இழிவானது; அதனை உயர் சாதியினர் ஏற்கக் கூடாது’ என ஆபச்தம்ப ( Apasthamba Sastra) சட்ட நூல் கூறுகிறது. மருத்துவனிடமிருந்து பெறுகின்ற உணவு வேசியிடமிருந்து பெறுகின்ற உணவுபோல் கேடானது என வசிட்டரின் அறநூலும் கூறுகின்றது. மேற்சொன்ன சட்ட நூல்கள் யாவும் மனுநூலுக்கு முந்தியவை. மருத்துவனிடமிருந்து பெற்ற உணவு சீழாகிய குருதியைவிட இழிவானது என மனுநூலும் கூறுகிறது. மருத்துவர்களைப் போன்ற தூய்மையற்றவர்கள் வேள்விச் சடங்குகளில் பங்கெடுப்பதால் அவ்வேள்வியின் தூய்மையே கெட்டுவிடும் என அம்மனுநூல் கூறுகின்றது. மருத்துவம் செய்து பிழைக்கின்ற உயர்சாதியினர் இருபிறப்பாளனாக இருக்கத் தகுதியற்றவன் என வசிட்டர் கூறுகின்றார். 

உணவின் பிண்டம் (Flesh of Food)

ஐம்பூதங்களின் கூட்டுறவால் ஆனதே இவ்வுடலும் உயிரும் என ஆய்ந்துணர்ந்த இவ் அறிவர்கள், அப்படி அமைந்த இவ் உடம்பை வளர்ப்பது உணவே என்றும் உரைத்தனர். அவ் உணவும் உழவன் மண்ணையும் - நீரையும் இணைத்து உருவாக்கிய உழைப்பின் விளைவு என்றும் விளக்கினர். சங்கப்புலவராகிய குடபுலவியனார்,

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்ட்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே (புறம். 18:18)

என விளக்குவார். ஐம்பூதங்களினால் உருவானது இம் மானிட உடம்பு; அதனை வளர்ப்பது உணவு; அந்த உணவோ, நிலமும் நீரும் இணைந்த இணைப்பால் வருவது, என்பதே அப்பேருண்மையாகும். இதனால் நிலனும் நீரும் எவ்வளவு இன்றியமையாதன என்பதை உணரலாம். நிலமும் நீரும் உணவுப்பொருளை உருவாக்க மட்டுமா செய்கின்றன? மனிதனுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களையும் சேர்த்தல்லவா விளைவிக்கின்றன. அதனால் அவ்விரண்டின் தூய்மையும் கூட தனிக் கவனத்தைப் பெருகின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் நீரும் நிலனும் வகிக்கும் பங்களிப்பை,

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

எனக் குறிப்பார் வள்ளுவர்.

இந்த நான்குமே மருந்திற்கான மூலிகைகள் வளர்தற்கான நிலைக்களன்களாகவும் இருப்பன. மண்ணின் தன்மை பயிர்க்குளவாகுதலால் மூலிகைகளை விளைவிக்கும் இடம் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மருத்துவ முறைகள் தொடங்கியபோதே மண்-நீர் ஆகியவற்றின் தேர்வும் தொடங்கிவிட்டதைச் சரக சம்கிதை நன்கு உணர்த்துகின்றது.

..... நிலம் போன்ற ஐம்பெரும் பூதங்களிலும், குணங்களில் நான்கில் ஒருபகுதி அழிந்தது. அதனால் பயிர்களில் நைப்புத்தன்மை, தூய்மை, சுவை, வீரியம், விபாகம், பிரபாகம், குணம் இவற்றில் நான்கில் ஒருபங்கு குறைவுபட்டது. இவ்விதக் குறைபாடுகள் உள்ள உணவு வகைகளை உண்டதினால் முன் காலத்தில் போலில்லாமல் மனிதர்களுடைய உடலில் வாதம் சடராக்கினி இவற்றின் குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாகக் காய்ச்சல் முதலான நோய்கள் தோன்றின. ஆகவே மக்களுடைய ஆயுளும் முறையாகக் குறைவுபடத் தொடங்கியது. இவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் அறத்தின் நான்கில் ஒரு பகுதி குறைவுபட்டு ஐம்பெரும் பூதங்களிலும் ஒவ்வொரு பகுதி குறையத் தொடங்கியது. இவ்விதம் ஒவ்வொன்றின் ஒவ்வொரு பகுதியும் குறைபாடு அடைந்து உலகம் அழிகிறது’என்பது அதன் கூற்றாகும்.

‘சுற்றுச் சூழல் மாசடைகின்றபோது உயிர் இனங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன’ என விளக்குவதன் வாயிலாகச் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் தேவை விளக்கப்படுகிறது. நோய்களுக்கான காரணங்களை விளக்கும் சரக சம்கிதை,
கேடடைந்த காற்று
கேடடைந்த நீர்
கேடடைந்த நாடு
கேடடைந்த பருவம் (காலம்) 

எனப் பகுத்து விரிவாக ஆராய்ந்துள்ளது. கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இந்நான்கின் மாறுபாடுதான் ஒரு நாடு அழிவடைவதற்குக் காரணம் எனச் சிறந்த மருத்துவர்கள் கருதுகின்றனர். இயற்கையான நிலைமையிலுள்ள காற்று, நீர், நிலம், காலம் இவை நாட்டிற்கு நன்மை பயப்பவை என அறிஞர்கள் கருதுகின்றனர். கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இவற்றால் நாட்டை அழிக்கக் கூடிய நோய்கள் தோன்றிடின் முறைப்படி சேகரித்து, வைத்திருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தினால் நோய்களின் பயம் ஏற்படாது.

நாடு, காலம், காற்று, நீர் இவை கேடடைவது நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. எனச் சூழலின் தூய்மையை வற்புறுத்துகின்றது. இப்பேரண்டம் ஐம்பூதங்களால் ஆனது; அதைப்போன்றே மனித இனமும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானது. ஐம்பூதங்களில் ஏற்படும் குற்றங்குறைகள் மனித இனத்தை மட்டுமின்றி இப்பூவுலகையே பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் வள்ளுவர்,

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு 

எனக் கூறினாரென எண்ணத் தோன்றுகின்றது. ஓரறிவுயிரை முதலாகக் கொண்டு உருவான இந்த உயிரினத் தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டின் சூழலியலைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம்முன் உள்ளது. இதனை மறந்தால் எதிர்காலம் இருண்டுவிடும் என்பதில் ஐயமில்லை. இச்சூழலியல் பற்றிய அறிவியலே தமிழர் வகுத்த திணைக்கோட்பாடாக மலர்ச்சி பெற்றது. வான் இயற்பியலை முதல் பொருளாகவும், மனித இனப் பெருக்கத்திற்கான அடிப்படையாகிய இன்பியற் கோட்பாட்டை உரிப்பொருளாகவும் வகுத்தளித்த தமிழர், சூழலியலைக் கருப்பொருளாக வடிவமைத்தனர்.

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழி 

என்பது கருப்பொருள் இலக்கணம். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை ஆகியவற்றுடன் மனிதனின் முயற்சியோடும், கலையுணர்வோடும் இணைந்த உழைப்பு, அதாவது தொழில், பறை, யாழ் மற்றும் அவற்றுடன் இணைந்த பூ, நீர், ஆகியவற்றையும் கருப்பொருளாகக் கொண்டனர். இக் கருப்பொருள் பற்றிய சிந்தனை மரபே, இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய எண்ணத்தை இவர்கட்கு ஊட்டியிருக்கவேண்டும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்தாம்,

நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே 

எனும் பாடலடிகள் என்பதை நாம் மனங்கொளவேண்டும். இத்தகு சிந்தனை மரபுதாம் திணைக்கோட்பாட்டினை உயிர்ம நேயத்தின் அடையாளமாக உயர்த்துகிறது, தமிழ் மரபின் பெருமைகளையும் பறை சாற்றுகிறது.

ஒருவர் கருத்திலிருந்து மற்றவர் மாறுபாடு கொள்ளுதல் எனும் பொருளில் உருவான தமிழ்ச் சொல்லே தருக்கம் என்பதாகும். வாதத்தில் பெற்ற வெற்றியினால் ஏறபடும் பெருமிதமும் சிறப்பும் கருதி இச்சொல் ‘தருக்கம்’ (பெருமிதம்) எனக் காரணப்பெயராகவும் அமைந்தது என்பார் ர.கா.முருகவேள். வாதமேடையில் சொற்களை அளந்து பேசும் முறையினை விளக்கியதால் இதற்கு ‘அளவை’ என்றும் பெயர் உண்டு.

உலகத்துப் பொருள்களையெல்லாம் எண்ணல். எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறுபோல, உயரிய நுண்பொருள்கள் பலவற்றையும் மனத்தின் எண்ணி, மாசற அளந்துணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாதல் பற்றித் தருக்கநூல் ‘அளவைநூல்’ எனவும் வழங்கப்பெறும். அளவைகளும் பொருந்துமாறுகளும் ஆகிய நல்லாற்றான் நாடி அவையஞ்சா மாற்றங் கொடுத்து, வெல்லுஞ்சொல் இன்மையறிந்து சொல்லி, அவையத்து முந்தியிருந்து, தோலா நாவின் மேலோராகத் தருக்கு (பெருமிதம்) மிக்க நிலையில் வீற்றிருக்கச் செய்யும் மாட்சிமை உடையதாகலின் அளவைநூலைத் தருக்கநூல் எனப் பண்டைச் சான்றோர்கள் சிறப்பித்து வழங்குவோராயினர் எனும் விளக்கங்கள் மேற்கூறிய கருத்தினை விளக்கும்.

எண்ணூல், அளவைநூல், தருக்கநூல் என்பவற்றைப்போலவே தருக்கத்தைக் குறிக்கும் மற்ற தமிழ்ச் சொற்கள் ‘ஏரணம்’ (Logic) ஆகும். ‘எண் என்பது தருக்க நூல்களுக்கும் எழுத்தென்பது இலக்கண நூலுக்கும் பெயர்.ழகும் அணியும் பெறப் பயன்படுத்தும் இலக்கணமாதலின் தருக்கம், அழகு எனும் பொருளில் ஏரணம் எனவும் வழங்கலாயிற்று. அளவை, தருக்கம், ஏரணம் எனப்பல சொற்கள் தமிழில் வழக்காறு பெற்றிருந்தமை, தமிழுக்கும் தருக்கத்திற்கும் இருந்த தொடர்பினைப் புலப்படுத்தக் காணலாம். இவ்வாறு தமிழில் பெருவழக்காறு பெற்றிருந்த தருக்கம் வடமொழியில் செல்வாக்குப் பெறத்தொடங்கியது எப்போது? எப்படி? என்பது குறித்து இனிக் காணலாம்.

நிலம், நீர, தீ, வளி, விசும்பு எனும் ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளை அறிவியல் நோக்கில் ஆராய்ந்த சிந்தனைப் பள்ளியே ஐந்திரம் என்பதாகும். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர். இதனை பனம்பாரனார்.

“மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்
நிறைந்த தொல்காப்பியன்.........”

எனப் பாராட்டுவார் ‘மல்குநீர் வரைப்பின் ஐந்திரம்’ எனும் அடிக்கு உரை எழுதிய இளம்பூரணர்.

‘மிக்க நீரையுடைய கடலாகிய
எல்லையையுடைய உலகின் கண்ணே
இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர
வியாகரணத்தினை..............’

என விளக்குவார். இவ்விளக்கம் குறித்து, நூல்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களுக்காக உலகில் உள்ளோரால் மட்டுமே இயற்றப்படுபவைதான். அப்படியாயின், ‘உலகின்கணணே இந்திரனாற் செய்யப்பட்ட’ என்ற இளம்பூரணரின் பொருள்விளக்கம் முரண்போலத் தோன்றுகின்றது. ஆனால் ‘மல்குநீர் வரைப்பின்’ என்ற தொடருக்குக் ‘கடலால் சூழப்பட்ட உலகினது ஐந்து திரங்கள் ’ என்று ‘அது’ வெனும் ஆறன் உருபைப் பயன்படுத்தும்போது பொருள் சிறக்கின்றது.ஆறாம் வேற்றுமையை,
ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும் 
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (வேற். 18)

என விளக்குவார் தொல்காப்பியர். சேனாவரையர், எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரண்டென்றும் கூறியவராம். தன்னென்றது தன்னோ டொற்றுமையுடைய பொருளை, பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை என்று உரை விளக்கம் தருவார்.

இவ்வாறு மல்குநீர் வரைப்பினது ஐந்திரம் எனப் பொருள்காணின், ‘கடலால் சூழப்பட்டது உலகம் அவ்வுலகம் ஐந்து கூறுகளால் அருதாவது ஐந்தன் திரங்களால் அமைந்துள்ளது என்ற விளக்கம் கிடைக்கின்றது. எனும் ஆய்வுரை கருதத் தக்கதாய் உள்ளது. நிலம், நீர்,தீ, வளி, விசும்பு எனும் ஐந்து பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்பதே தொல்காப்பியரின் கோட்பாடு ஆகும். இதனைத் தொல்காப்பியர், நிலந்தீ நீர்வளி விசும்போடைந்தும் கலந்த மயக்க முலகமாதலின் எனக் கூறுவதால் உணரலாம். இத்தகைய ஐந்திரக்கோட்பாடு கற்றறிந்த அறிஞர்களால் போற்றப்பட்ட பெருமைக்குரியதாக இருந்தது. சஞ்சயன், திருதராட்டினரிடம் இதுபற்றிக் கூறுவது இங்கே குறிக்கத் தக்கதாகும்.

மகாராசரே! கற்றறிந்தவர்கள் உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் இந்த மகா பூதங்கள் என்றும், சமமாயிருப்பவைகள் என்றும் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவையெல்லாம் மேன்மேல் ஒன்றுக்கொன்று ஒவ்வொரு குணத்தால் மேம்பட்டிருக்கின்றன. அவைகளுள் பூமியே தலைமைப் பெற்றுள்ளது என ஐம்பூதக் கோட்பாட்டின் பரவலையும் சிறப்பையும் கூறக்காணலாம்.

இந்திய மெய்யியல் வரலாற்றிற்கு மட்டுமின்றி உலக மெய்யியல் வரலாற்றிக்கும் ஐம்பூதக்கோட்டை வழங்கியவர்கள் தமிழர்களே. இதற்கான மிகவும் தொன்மையான சான்றாகத் திகழ்வது புறநானூற்றில் இரண்டாம் பாடலாகும்.

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரு மென்றாங்
கைம்பெறும் பூதத் தியற்கை போல (பாடல் 2:1-6)

எனும் பாடற்பகுதி ஐம்பெரும் பூதத்து இயற்கையை விவரிக்கும் இவ் ஐம்பெரும் பூதங்களின் இயல்பினை ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் எனும்’ தொல்காப்பிய நூற்பாவின் உரையில்.

‘நிலம் வலிது, தீ வெய்து, நீர் தண்ணென்றது, வளி யெறிந்தது, விசும்பு அகலியது’. எனச் சேனாவரையர் விளக்குவார்.

அறிவியல், தருக்கவியல் ஆகிய இரண்டின் அடிப்படையில் உருவான இவ் ஐந்திர மெய்யியலைக் கற்கவேண்டி கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் வடநாட்டிலிருந்து பலரும் தென்னாடு வந்துள்ளனர் என்பதைப் பௌத்த நூலான அவதான சாதகம் குறித்துள்ளது. கி.மு.7 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கபிலர், இவ் ஐந்திரக் கோட்பாட்டில் வேத எதிர்ப்பையும் கடவுள் மறுப்பையும் இணைத்துள்ளார். அதனால் ஐந்திரம் மூன்று கிளைகளாகப் பிரிகிறது. அவை எண்ணியம் - ஓகம்- உலகாய்தம் என்பன.

இந்தக் காலக்கட்டத்தில் உருவான நூல்களே திருக்குறளும் மருத்துவ நூலான சரக சம்கிதையும் ஆகும். தமிழ் மருத்துவ நூலைச் சரகர் எனும் மருத்துவ அறிஞர் வடமொழியில் சுலோக வடிவில் இயற்றியதாகவும், இந்தச் சுலோகங்களை வகைப்படுத்தி கி.பி.முதல் நூற்றாண்டளவில்தான் எழுத்து வடிவமாக்கினார் என்றும் அந்நூலின் வரலாறு வருகிறது. வாய்மொழியாக வழங்கப்பட்ட அந்நூலில் எழுத்து வடிவம் பெற்ற நூலுக்குரிய இலக்கணங்கள்- தருக்கமுறைக்கான வரையறைகள் யாவும் விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால், சரக சம்கிதையின் மூலவடிவம் எழுத்துக்களைக் கொண்ட ஓர் இந்திய மொழிக்கு உரியதாக இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளில் எழுத்துவடிவம் பெற்றிருந்த ஒரே மொழி தமிழே என்பதால் சரக சம்கிதையின் மூலவடிவம் தமிழுக்குரியது என்பது தெளிவாகிறது. சரகசம்கிதையையும்-தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, தொல்காப்பியம் மூலநூலாகவும் சரக சம்கிதை வழிநூலாகவும் அமைந்துள்ளமை புலனாயிற்று.

எண்ணியக் கோட்பாடு

சரகசம்கிதை, எண்ணியத்தின் பெயரைச் சுட்டியும் சுட்டாமலும் எண்ணியக் கோட்பாட்டை விரிவாகக் கூறிச்செல்கிறது. ஆனால் தொல்காப்பியமோ ஓரிடத்தில் கூட எண்ணியத்தையோ, அல்லது ஓக - உலகாய்தத்தையோ பெயர் சொல்லி சுட்டவில்லை. ஆனாலும் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி அறிஞர்கள் குறிப்பாக பொருள்முதற் சிந்தனையாளர்கள் எண்ணியத்தின் மூலவடிவத்திற்கு அதாவது (வடமொழியாளர் நிரீச்சுரசாங்கியம் என்பர்) கடவுள் மறுப்புச் சாங்கியத்திற்கு உரியன என்றும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை என்றும் எவற்றையெல்லாம் வகைப்படுத்தியுள்ளனரோ அவற்றையெல்லாம் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் குறித்துள்ளது.

• படிமுறைக்கோட்பாடு (Theory of Evolution)
• ஐம்பூதக்கோட்பாடு (Theory of Universe)
• அளவையியல் கோட்பாடு (Theory of Logic)
• காரண - காரியக் கோட்பாடு (Theory of Cause and Effect)
• இன்பியல் கோட்பாடு (Theory of Hedonism)

ஆகிய அறிவுசார் துறைகளைக் குறிப்பிடும் இடங்கள் எல்லாம்,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
‘என்ப’
‘என்மனார் புலவர்’
‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’

எனத் தொல்காப்பியம் சுட்டுவது மேலே குறிப்பிட்ட ஐந்திர மரபைச் சார்ந்த மூலவர்களை எனலாம். எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்கள் தனித்தனி பெயரால் தனித்தனி அமைப்புகளாகச் செயல்பட்டுள்ளன. அப்படி அவர்கள் தனி அமைப்புகளாகச் செயல்பட்ட போதும் மூலக்போட்பாடுகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. உயிர் பற்றிய கருத்தில்தான் எண்ணியம் - ஓகம் இரண்டும் உலகாய்தத்தோடு மாறுபட்டுள்ளன. மற்றபடி அவற்றுள் வேறுபாடுகள் இல்லை. அம்மூன்று கோட்பாடுகளும், வேதங்களையும், வேத வழிப்பட்ட சடங்குமுறைகளையும் கடவுளையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளன. ஆனால் தொல்காப்பியத்தில் வேத - வைதிககடவுள் மறுப்புக்கான அடிப்படைக் கருத்துக்கள் இருந்தும் அவற்றைப் பெயர் குறித்து மறுக்கவில்லை. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது, தொல்காப்பியர் காலத்தில் வேதப்பண்பாடு தனித்துச் சுட்டும் தகுதியைப் பெறவில்லை.

வேதங்கள் மூன்றாகவோ நான்காகவோ வகுக்கப்படாமல் இருக்கு (ரிக்) வேதம் ஒன்று மட்டும் தொகுக்கப்பட்டிருந்தது. அப்படித் தொகுக்கப்பட்டதும் தமிழ்நாட்டில்தான். இருக்குவேதம் தொகுக்கப்பட்டபோது அதனை எழுத்து வடிவில் கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சியில் ஈடுபட்டவர் அதங்கோட்டாசான். துணை நின்றவர் தொல்காப்பியர். வேதமொழிக்கு எழுத்தை அறிமுகப்படுத்தவும், அமைத்துக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே தொல்காப்பியம். அதனால்தான் பனம்பாரனார் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என அந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கி.மு. 14-ம் நூற்றாண்டு என்பதால், தொல்காப்பியர் காலமும் கி.மு. 14-ஆம் நூற்றாண்டு என்பது உறுதி.

அந்நூற்றாண்டில் வேதப்பண்பாடு என ஒன்று உருவாகவில்லை என்பதாலும், வைதிகர்களே தமிழைச் சார்ந்து நின்றதாலும், தொல்காப்பியருக்கு அவர்களையோ அவர்களின் பண்பாட்டையோ எதிர்க்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனும் உண்மைகள் புலனாயின. மேலும், பிற்காலத்தில் இந்தியா முழுமையிலும் பரவிய எண்ணிய - ஓக- உலகாய்தம் உள்ளிட்ட வைதிக எதிர்ப்பிற்கான மூலநீருற்றே தொல்காப்பியமாக உள்ளது. இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலக மொழிகள் என்ற அடிப்படையிலும் எழுதப்பட்ட முதல் நூல் தொல்காப்பியம் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

தருக்கவியல் (Logic / Argumentation)

தருக்கவியல் மூன்று கூறுகளைக் கொண்டது அவை, 1. காரியாபினி விருத்தி 2. பரிக்சா 3. வாதவிதி என வகைப்படுத்துவார் சதீசு சந்திரா. இந்த மூன்றையும் தொல்காப்பியம்,

1. தொழில் முதல்நிலை
2. தேர்வு
3. தந்திர உத்தி

எனக் குறிப்பார். இம்மூன்றனுள், தொல்காப்பியர் குறிப்பிடும் தொழில் முதல்நிலை என்பது சிறப்பியம் எனும் மெய்யியலின் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒருவேளை வைசேடிக மெய்யியலின் தொடக்க காலத்தில் அம் மெய்யியலுக்கு உரியதாக அது இருந்திருக்கலாம். என்பது சதீசு சந்திராவின் கூற்று. வடமொழியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் சைசேடிகம் எனும் மெய்யியலை உருவாக்கியதுடன் அதற்கான நூலை இயற்றியவராகவும் போற்றப்படுவர் கணாதர் ஆவார். இக் கணாதர் எனும் வடமொழிப்பெயர் கணி ஆதன்- எனும் தமிழ்ப் பெயரின் சிதைவாரும். கனி - கணியர் எனும் சொற்கள் தொடக்கத்தில் தமிழ் வானியல் அறிஞர்களைக் குறித்த ஒரு பொதுப் பெயராகும். பின்னாளில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகம் நிறுவனம் தோன்றிய பின்னர் ஆசீவக வானியல் அறிஞர்களைச் சுட்டும் சிறப்புப் பெயராக மாறியது.

கணி ஆதனின் இச்சிறப்பியம், பக்குடுக்கை நன்கணியாரின் இயல்புக் கோட்பாட்டிலிருந்து உருவானதாகும். தருக்கத்தையும் அணுவியலையும் உள்ளடக்கிய இச்சிறப்பியமே வடமொழியில் “சிறப்பானது” எனும் பொருளில் வைசேடிகமாக மொழிமாற்றம் பெற்றுள்ளது. இச்சிறப்பியத்தை ஆசீவக மெய்யியலாகவே கருதுவார் குணா. வைசேடியமாக மொழிமாற்றம் பெற்ற சிறப்பியத்திற்குரிய இக் காரியாபினிவிருத்தியைச் சரக சம்கிதை மருத்துவர்களின் இலக்கணமாக வரையறுக்கின்றது. தொல்காப்பியத்தின் “தொழில் முதல்நிலை” என்பது எட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாகும் . இதனை,

“வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி யென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே”

எனச் சொல்லதிகாரம் வேற்றுமை இயலில் விளக்குவார் தொல்காப்பியர். இத்தொழில் முதல்நிலையைச் சரகசம்கிதை, மருத்துவர்கள் அறிந்துகொள்ளவேண்டியவை எனும் தலைப்பில் விளக்குகின்றது. தொல்காப்பியம், சரகசம்கிதை ஆகிய இருநூல்களில் இடம்பெற்றுள்ள இத்தொழில் முதல்நிலை பற்றிய ஒப்பாய்வு குறிக்கத்தக்கதாகும்.

செயல்களின் முதல்நிலைகளைத் தொல்காப்பியர் எட்டாக வகைப்படுத்த, சரகசம்கிதை ஆசிரியரோ அவ் எட்டோடும் முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து பத்தாகக் குறித்துள்ளார். எந்த ஒரு செயலுக்கும் மனித முயற்சி இருந்தாக வேண்டும். முயற்சியின் வெளிப்பாடுதான் இயக்கம். எனவே ஒரு செயல், வடிவம் கொள்ளுதல் என்பதே முயற்சியின் வெளிப்பாட்டினால்தான் என்பது வெளிப்படை. அத்துடன் கருவி என்று கூறிய பின்னர் துணைக்கருவி என்ற ஒன்று தேவையில்லை. ஆகத் தொல்காப்பியர் குறிப்பிடும்,

• வினை
• செய்து
• செயப்படுபொருள்
• நிலன்
• காலம்
• கருவி
• இன்னதற்காக
• இதுபயன்

ஆகிய எட்டும் மூலவடிவமாக (Original source) அமைந்து நிற்றல் வெளிப்படை. சம்கிதை ஆசிரியர் குறிப்பிடும் முயற்சியும், துணைக்கருவியும்கூட அவ்வெட்டனுள் அடங்கிவிடுதல் தெளிவு. அத்துடன் ‘ஆயெட் டென்ப’ என்பதால் இவ்வரையறை தொல்காப்பியரால் அமைக்கப்பட்டதன்று என்பதும் அவருக்கு முன்பே வரையறுக்கப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. எனும் விளக்கம் இந்திய அறிவு மரபிற்கெல்லாம் மூலவடிவமாக விளங்குவது தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தக் காணலாம். தேர்வு தருக்கத்தின் அடிப்படை நோக்கம் உண்மை காணுதல் ஆகும். மாறுபட்ட கருத்துக்களைக்கொண்ட இருவர் வாதிடும்போது மாறுபாடுகளுக்கான காரணங்களைக் களைந்து உண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளும் வழிமுறைகளைத் ‘தேர்வு’ என்பர். தேர்வின் வாயிலாக உண்மைப் பொருளைத் துணிந்து கண்டறிவதால் தொல்காப்பியர் இதனை ‘துணிவு’ என்பர்.

மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்
தன்னூ லானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇத்
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்

என்பது நூற்பா. பேராசிரியர்,இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் இந்நூற்பாவிற்கு உரையின் இலக்கணம் என்ற நிலையில் பொருள் கண்டனர். எனினும் இவையாவும் பேச்சுக்கலைக்கான இலக்கணமாக இருந்து பின்னர் உரைக்கான இலக்கணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. மேற்காட்டிய நூற்பாவுக்கு, உரையாவது, மறுதலைக்கடா, மாற்றமும் உடைத்தாக, ஐயப்பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல், அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளிய ஒரு பொருளை ஒற்றுமைப்படுத்துதல், இதுவே பொருளெனத் துணிதல்’ என இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத்தக்கது. இதனால்

• எதிரி வினா எழுப்புதல்
• அவ்வினாவிற்கு உரிய விடைகளைத் தனது நூல், அல்லது அப்பொருள் குறித்த பிறநூல்களில் இருந்து மேற்கோள் காட்டி விடைகூறல்.
• ஐயம் மருட்கை இவற்றை முற்றாகக் களைதல்.
• பின்னர் இதுவே முடிந்த முடிபெனத் துணிதல்.
எனும் நான்கு கூறுகளைக் கொண்டது துணிவு என்பது தெளிவாகும். இந்நான்கையும் வடமொழியாளர், ஆப்தோபதேசம் - மேற்கோள் (அல்லது) முதல்நூல் பிரத்தியட்சம் - காட்சி அனுமானம் - உய்த்தறிவு யுக்தி - தொடர் ஆய்வு - உத்தி என வகைப்படுத்தி இந்நான்கு கூறுகளையும் கொண்டதே ‘தேர்வு’ என்பர்.

தந்திர உத்தி

இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூலவடிவங்கள் அனைத்தும் தமிழுக்கு மட்டுமே உரியன என்பதை உணர்த்தும் சான்றுகளில் தலையாயது ‘தந்திர உத்தி’ ஆகும். தந்திரம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு “நூல்” என்பது பொருள்”. “உத்தி” என்ற தமிழ்ச் சொல்லிற்கு முறை என்பது பொருள். இரு தமிழ்ச் சொற்களும் நூல் எழுதும் முறை எனப்பொருள் தந்தாலும் அவையும் கூட பேச்சுக்கலைக்கான வரைவிலக்கணம் என்பதே உண்மை. இத்தகைய வரைவிலக்கணத்தைக் கொண்டதே தந்திர உத்தி தமிழ்ச்சொற்களான இவற்றை வடமொழியாளர் தந்திரயுக்தி என்று அழைத்தனர். இத்தந்திர உத்தியின் வரலாற்றை உபநிடதங்களில் இருந்தும். ஆரண்யங்களில் இருந்தும் தொடங்குவார் சதீசுசந்திரா. கி.மு.900- த்திலிருந்து கி.மு.500 வரையிலான காலகட்டத்தில் தோன்றியதாகக் கருதப்படும் தைத்ரேய ஆரண்யம் எனும் நூலில் காணப்படும்

• சுமிர்தி
• பிரத்தியட்சம்
• ஐதிகம்
• அனுமானம்

முதலான சொற்கள் தருக்கவியலுக்குரியனவாகக் குறிக்கப்படுவதை அவர் எடுத்துக் காட்டுவார். அத்துடன் கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கு உரியது என நம்பப்படும் கௌடில்யரின் பொருள்நூலில் குறிக்கப்பட்டுள்ள 32 தந்திர உத்தியையும் எடுத்துக்காட்டி விரிவாக ஆராய்கின்றார்.

அரசியல் நெறிகளைக் கூறும் பொருள்நூலின் இறுதி அத்தியாயத்தில் 32 வகையான கலைச்சொற்களைத் ‘தந்திரஉத்தி’ அல்லது அறிவியல் அடிப்படையிலான ‘வாதமுறைகளின் அமைப்பு’ எனக் குறித்துள்ளார். இதே பட்டியல் சரக சம்கிதை, சுசுருத சம்கிதை என்ற இரண்டு மருத்துவ நூல்களிலும் காணப்படுகிறது. இத்தந்திர உத்தி கௌடில்யராலோ அல்லது அவ்விரு சம்கிதைகளின் ஆசிரியர்களாலோ தொகுக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி. மாறாக இவை பட்டிமன்றங்களில் தமது கருத்துக்களை அறிவின் அடிப்படையில் நிலைநாட்ட யார் விரும்பி இருப்பாரோ அவர் அல்லது அவர்களால்தான் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரின் முடிவாகும்.

தருக்கம் தொடர்பான அடிப்படையான சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களைக் கொண்டே அமைந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாக உள்ளது. தருக்கம் பற்றிய நூல்களை ஏது சாத்திரம் என்பர். காரண- காரிய முறையினை உணர்த்தும் இச்சொல் தொல்காப்பியரால் பல இடங்களில் ஆளப்பட்ட பெருமைக்குரியதாகும் இன்னான் ஏது ஈங்கென வரூஉம் எனவும், ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் எனவும் வரும் இடங்கள் அதற்கான சான்றுகளில் சில இத்தந்திரஉத்தி யாவும் தருக்கவியலுக்குரியவை என்பதைத் சிசுருத சம்கிதையின் வழியாக விளக்குவார் சதீசு சந்திரா. சிசுருத சம்கிதை, ‘தந்திர உத்தி’யின் வாயிலாகப் பட்டி மன்றத்தில் ஒரு வாதி, தன் எதிரிகளை மிக எளிதாக வீழ்த்தித் தன் பெருமைகளை நிலைநாட்ட முடியும் என்று தெளிவாக வரையறை செய்கின்றது. ஏது சாத்திரம் என்னும் அளவைஇயல் துறையில் வாதத் தன்மைகளையும், பட்டிமன்ற நெறிமுறைகளையும் வகைப்படுத்தி அமைந்த நூல்களில் ‘தந்திர உத்திக்கு’ ஈடான பழமையான நூல் எதுவும் இல்லை.என்பது அவரின் முடிவாகும்.

இவ்வாறு பட்டிமன்ற நெறிமுறைகளை விளக்கும் தந்திர உத்தியைத் தொல்காப்பியர் நூலுக்குரிய இலக்கணமாகக் கூறுகின்றார். அவ்விலக்கணமும் தமிழர்மரபின்படி முன்னோர்களால் தொகுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பால் உணர்த்துகின்றார். அந்நூற்பா. ஒத்த காட்சி உத்திவகை விரிவிப்பின் எனத் தொடங்கி, இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும். நுனித்தகு புலவர் கூறிய நூலே என அமையும். தொல்காப்பியர் 32 என வரையறை செய்த தந்திர உத்தியைச் சரக சம்கிதை அவற்றுடன் இரண்டைக் கூடுதலாகக் சேர்த்துக் கொண்டு 34 எனக் குறித்துள்ளது. இத்தந்திர உத்தியைச் சரக சம்கிதை, சிசுருதசம்கிதை முதலான மருத்துவ நூல்களும் கௌடில்யரின், பொருள் நூலும் எடுத்துக்காட்டியுள்ள போதிலும், அத்தந்திர உத்தி அவர்களுக்கு - வட மொழியாருக்கு உரியன அல்ல எனச் சதீசு சந்திரா உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தமிழ்கூறு நல்லுலகத்தின் வாழ்வையும் செய்யுளையும் ஆராய்ந்து தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரோ, அதனைத் தமிழ் ‘நூலுக்குரிய இலக்கணமாக’ வரையறை செய்கின்றார். மேலும் சரக சம்கிதை கி.மு.6- ஆம் நூற்றாண்டில் பாடல் வடிவில் தொகுக்கப்பட்டு ஏறத்தாழ கி.பி.முதல் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. வாய்மொழிப்பாடல்களால் அமைந்திருந்த நிலையில், எழுதப்படும் குறிப்பிடும் மெய்யியல் கோட்பாட்டிற்குரிய பல செய்திகள், எண்ணியம்,ஓகம், உலகாய்தம் ஆகிய கோட்பாடுகளுக்குரியனவாகச் சரக சம்கிதை குறிப்பிடுகின்றது.

இம்மூன்றுகோட்பாடுகளும் ஐந்திர மரபின் சிந்தனை மரபிலிருந்து கிளைத்தவை. அதனாலும் தொல்காப்பியத்தின் காலம் சரக சம்கிதைக்கு மிகவும் முந்தியது என்பது தெளிவு. தொல்காப்பியர் நூலுக்குரிய குற்றங்களாக, 1. கூறியது கூறல் 2. மாறுகொளக் கூறல் 3. குன்றக் கூறல் 4. மிகைபடக் கூறல் 5. பொருளின்றிப் பேசுதல் 6. தெளிவின்றிப் பேசுதல் 7. கேட்போர்க்கு இனிமை பயக்காது கூறல் 8. முடிவில்லாமல் சொற்களைக் கூறிச் செல்லுதல். 9. தானே ஒரு பொருளைக் கருதிக்கொண்டு பேசுதல். 10. பொருள் அறியமுடியாதபடி பேசுதல். என வரையறை செய்வார். இவற்றைச் ‘சிதைவு’ என்பார் தொல்காப்பியர. வாதில் எதிரியை வீழ்த்த முனையும் ஒருவர், இத்தகைய குற்றங்கள் இல்லாமல் பேச வேண்டும் அப்படியில்லாமல் குற்றம் ஏற்படுமாறு பேசினால் வாதில் தோற்பதுடன் மீளாப்பழியும் ஏற்படும் என்றும் எச்சரிப்பதே அந்நூற்பாவின் நோக்கம். தொல்காப்பியர் குறிப்பிடும் இச் சிதைவை வள்ளுவர் ‘சோர்வு’ என்பார். ஆக்கமும் கேடும் அதனான் வருதலால் காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு என்பது குறள். இவ்வாறு தமிழ் மரபில் சிதைவு, சோர்வு என்பவற்றை வடமொழியாளர் தோ‘ம் என்றும் நிக்கிரகஸ்தானம் என்றும் மொழியாக்கம் செய்துகொண்டனர். இதனை நியூனம் எனவும் குறிப்பர். தமிழ்மரபில் குற்றங்களைப் பத்தாகக்கூற, வடமொழியாளர் அவற்றை ஐந்தாகக் சுருக்கிக்கொள்கின்றனர். தமிழில் இருப்பவற்றைக் கூட்டியும் குறைத்தும் கொள்வது அவற்றின் மூலவடிவத்தை அடையாளம் காணமுடியாதபடிச் செய்வதற்கேயாம்.

தமிழரின் தருக்கவியல் மட்டுமின்றி, தமிழர் உருவாக்கிய அறிவுசார் நெறிகள் அனைத்தும் வடமொழியில் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழின் ‘மயங்கா மரபின் எழுத்து முறையே’ வடமொழிக்கும் அதன் வழியாக, அதன் கிளை மொழிகளுக்கும் உரிய எழுத்து வடிவமாக மாறியது. தமிழன் வகுத்தளித்த எண்ணியம் வடமொழியில் சாங்கியமானது உலகாய்தம் லோகாயதமாயிற்று சிறப்பியம் வைசேடிகமாயிற்று, ஓகம், நியாய சாஸ்திரமாயிற்று. இவ்வாறு வடமொழி வடிவம் கண்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழின் கொடையை வெளி உலகிற்கு அடையாளம் காட்டமுடியும். 

References
1.   தேகவாதம் எனும் ஐம்புதக் கோட்பாடு முனைவர் க.நெடுஞ்செழியன்
2.   இந்திய தருக்கவியலில் தமிழின் கொடை முனைவர் க.நெடுஞ்செழியன்
3.   உலகாயதம்_தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா 
4.   தமிழர் மெய்யியல்_குணா -
5.   தாந்தீரீகமும் மானுடத் தத்துவமும்_ தி.கணேசர் 
6.   சரகசம்கிதை 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2019, 2:22:37 AM1/6/19
to mintamil

ஆசீவகம் குறித்து நிறைய எழுதிய வருகின்றீர்கள்.  ஆசீவகம் என்ற சொல் முதன்முதலாக எந்தநூலில் வந்துள்ளது?  எந்தக் ஆசீவகம் என்ற பெயர் எந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது?

என்று அன்புடன் கூறி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி. காளைராசன்


 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2019, 2:23:07 AM1/6/19
to mintamil


On Sun, 6 Jan 2019 at 12:51, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

ஆசீவகம் குறித்து நிறைய எழுதிய வருகின்றீர்கள்.  ஆசீவகம் என்ற சொல் முதன்முதலாக எந்தநூலில் வந்துள்ளது?  ஆசீவகம் என்ற பெயர் எந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது?

தேமொழி

unread,
Jan 6, 2019, 2:49:43 AM1/6/19
to mint...@googlegroups.com
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் - வஞ்சி 27/99
ஆசீவக நூல் அறிந புராணனை - மணி 27/108

சிலம்பிலும் மணிமேகலையிலும் வருகிறது.  கட்டுரை ஆசிரியரும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். 


ஆசீவகம் என்பது குறித்து கட்டுரை எழுதும் அளவிற்கு நான் கற்றதில்லை.

அதை நானும் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும்  என்னைப்போல ஆர்வமுள்ளோருக்கும் உதவக்கூடும் என்ற எண்ணத்தில்தான் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இது குறித்து எனக்கென ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவிற்கு  நான் அறிந்து கொண்டேன் என்றும் கூறுவதற்கில்லை.

ஆகவே, என் மனதில் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ கருத்தை உருவாக்கிக் கொள்ளாமல் கட்டுரை ஆசிரியரின் கருத்தை மட்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475  எழுதும் கட்டுரைகள் இவை.  உங்களுக்கு மேலும் தகவல் வேண்டுமென்றால் குழுமத்திலும் கேள்வி கேட்டுப் பார்க்கலாம் அல்லது கட்டுரை ஆசிரியரையும் தொடர்பு  கொண்டு அறிந்து கொள்ளலாம்.  செல்வனும் முனைவர் விஜய லட்சுமி  நூல் குறித்து தகவல் பகிர்ந்திருந்தார்.  

இது போன்ற ஆய்வாளர்களிடம்தான் உங்கள் கேள்வியை வைக்க வேண்டியிருக்கும்.



----




...

தேமொழி

unread,
Jan 6, 2019, 3:32:17 AM1/6/19
to மின்தமிழ்


Ashoka's Seventh Pillar Edict mentions Ajivikas.[8][29] 

Above in the second column is the seventh edict in the Brahmi script (3rd century BCE).

---------------------------
...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2019, 6:51:07 AM1/6/19
to mintamil
On Sun, 6 Jan 2019 at 14:02, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


Ashoka's Seventh Pillar Edict mentions Ajivikas.[8][29] 

Above in the second column is the seventh edict in the Brahmi script (3rd century BCE).

---------------------------

On Saturday, January 5, 2019 at 11:49:43 PM UTC-8, தேமொழி wrote:
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் - வஞ்சி 27/99
ஆசீவக நூல் அறிந புராணனை - மணி 27/108

சிலம்பிலும் மணிமேகலையிலும் வருகிறது. 
நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

சேதுராமன்

unread,
Jan 6, 2019, 11:14:24 PM1/6/19
to மின்தமிழ்
நீலகேசி நூலில் ஆஜீவகவாதச்சருக்கம் உள்ளது.

தேமொழி

unread,
Jan 14, 2019, 12:24:30 AM1/14/19
to மின்தமிழ்
https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/jan/07/மத-அரசியல்-45-ஆசீவகம்---எழுத்தியல்-3072536.html

மத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்
By C.P.சரவணன்   07th January 2019 

ai

 

அறிவர் காட்டிய எழுத்தியல் 

தமிழில் அறிவியல் கருதுகோள்களும் அண்டவிசைக் கோட்பாடுகளும் பொதிந்துள்ள இலக்கண நுட்பத்தினை விளக்கு முன் தமிழ் என்ற மொழியின் பெயர்க் கிளவியினை முதற்கண் விளக்குவோம் சுவர் ஒன்றின் அமைப்பினை ஆய்வு செய்ய வேண்டுமாயின் முதலில் அதன் காரைப் பூச்சினை உரித்துக் கற்களின் இயல்பு நலனைக் காட்ட வேண்டும் பின்னர் அக்கற்களின் அமைப்பு அவை இயல்பில் (இசை > எசை) பதிக்கப்பட்ட பங்கு, கற்களின் தரம், அவை செய்யப்பட்ட முறையின் நேர்த்தி, கற்களுக்கு இடையில் பெய்யப்பட்டுள்ள பசைக் கலவையின் பயன்பாடு பொருள்களின் அளவு வீதங்கள் ஆகியவற்றை ஆய்வது போல் தமிழ் எனும் உயர்தனி முதன் மொழியின் பெயர் கிளவியின்கண் பொதிந்துள்ள எழுத்துக்களை ஆய்வாம். 

தமிழ் > த + மி + ழ் 
தமிழ் மொழியின் எழுத்துக்கள் ஒலி வடிவில் பிறக்கும் இடத்தின் அடிப்படையிலும், ஓலியின் ஒலிப்பு அழுத்த வேறுபாடுகளின் அடிப்படையிலும். 

வல்லினம் = கசடதபற
மெல்லினம் = ஙஞநணமன
இடையினம் = யரலவழள

என மூவகை இனங்களாகப் பகுக்கப்படுகின்றன, இம்மூவகை இன எழுத்துக்களும் தமிழ் எனும் சொல்லில் பயின்று வருகின்ற பாங்கும் ஒரு சிறப்பாகும்.

த = வல்லினம்
மி = மெல்லினம்
ழ் = இடையினம்

இனி இவ்வெழுத்துக்களில் அமைந்துள்ள உயிர்மெய் உறவினைப் பகுத்தாய்வோம், 

தமிழ் > த + மி + ழ்
த > த் + அ
மி > ம் + இ
ழ் > ழ் (உ)

அடிவயிறு (உந்தி) மிடறு (கண்டம்) அண்ணம் (நாசியீற்று) எனும் மூவகை எழுத்துப்பிறப்பியல் நிலைகளின் கண்தோன்றும் த், ம், ழ் எனும் மெய்யெழுத்துக்களின் மீது ஊர்ந்த உயிர் எழுத்துக்களைக் காண்போம்.

‘த்’எனும் எழுத்தின் மீது ‘அ’ கரமும் 
‘ம்’எனும் எழுத்தின் மீது ‘இ’ கரமும் ஊர்ந்து வந்தன, 
‘ழ்’ எனும் மெய்யெழுத்தின் மீது கட்புலனாகும் வண்ணம் உயிர் எழுத்துக்கள் ஏதும் ஊர்ந்து வரவில்லையாயினும் மெய்யெழுத்துக்கள் யாவும்,  ‘உ’ கரத்தினை விடுப்பொலியாகக் கொண்ட வையாதலால், இம்மூன்றெழுத்துக்களின் மீதும் முறையே அகர, இகர, ஊகரம் ஊர்ந்து நின்ற தாய்உணர்க , ஊழ்க மெய்யியலார் இப்பகுப்பினைப் பின்வருமாறு பிரித்துப் பொருளுரைப்பர்.
ஆசீவக மெய்யியலார் எழுத்துக்களை, ஆணெழுத்து. பெண்ணெழுத்து. அலிஎழுத்து எனும் பகுப்புக்களாகவும், அமிழ்த எழுத்து, நஞ்செழுத்து எனும் பகுப்புக்களாயும் பிரித்துக் கையாளுவர் இம்மரபு ஆசுகவிகளுக்கு  தெரிந்த செய்திதான் எனினும். இன்றைய பாடத்திட்டங்களிலும் இலக்கண நூற்பாக்களாகவும் இடம்பெறவில்லை என்றே கருதலாம். இருப்பினும் தமிழ்த் துறவியர் மரபில் இவை இன்று வரை கற்பிக்கப்பட்டு வரும் பாடமாகும்.

தமிழ்> த்+ அம்+ இழ் 

மாந்த உடலில் நஞ்சு நிலை ஒவ்வோர் உவாவிலும்(திதி) உடலின் ஒவ்வோர் தானத்திற்கும் (இடம்) இடப்பெயர்ச்சியுறும், இவற்றை அறிந்து ஊழ்கம் பயின்றவர்தம் ‘அம்’எனும் ஒலியினை உடைய அண்ணப் பகுதியிலிருந்து வெளிப்படும் மொழி என்று பொருள்படும், இழ் > இழி> ‘இழிதல்’ எனும் சொல் வெளிப்படுதல் எனப் பொருள்படும்.

இதன் பொருளாவது நஞ்சு நிலைத் தானட்தையும் தமது ஊழ்க (யோக) வலிமையினால் அமிழ்த நிலைக்கு மாற்றவல்ல ஊழ்கிகளிடமிருந்து வெளிப்பட்ட (அவர்கள் வாயினின்றும் சிந்திய) மொழி எனப்பொருள் கோடலுமாம், இக்காரணம்பற்றியே பாவேந்தரும் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடினார், அதனைத் தருவிக்கும் வழி கீழ்வருமாறு 

தமிழ் > த்+ அம்+ இ + ழ் 
முதன்மாற்றாக > அம்+ இ + ழ்+ த் 
                                        > அமிழ்த்(உ*) > அமிழ்து எனவரும், 
(*உகரம் விடுப்பொலிக் கண்பிறந்த எழுத்துப்பேறு)

தமிழ் அமிழ்தான வகையும், அமிழ்தே தமிழான வகையும், கண்கூடாம், இனி இச்சொல்லின் கண்பயின்று வந்துள்ள மெய்யெழுத்துக்களின் மீது ஊர்ந்து வரும் உயிரெழுத்துக்களான அ,இ, உ எனும் மூன்றெழுத்துக்களின் இயல்பு கூறுவாம்.

சுட்டெழுத்துக்களுக்கான இலக்கணத்தில், அ, இ, உ, இம்மூன்றுந் தனிவரிச்சுட்டே எனும் ஊற்பா இவ்வெழுத்துக்கள் மூன்று மட்டுமே இருதினை ஐம்பால் மூவகையிடத்தும், பிறயாவற்றையும்ம் சுட்டி விளக்க வல்லன என்பதாம்.

ஆசீவக மெய்யியலில் குறிப்பிடப்படும் முப்புள்ளி எனும் சின்னம் அஃஉ எனும்வடிவம்கொண்ட தாகும், இதில் இடையில் பயின்று வரும் ஃ எனும் ஆய்த எழுத்தின் வடிவினை ஒத்தே ”இ” இருக்கும், அதாவது மூன்று வட்டங்களை முக்கோணமாக வலஞ்சுழியில் வரைவதே இகரமாகும், 
[ இ] முப்புள்ளியின் மீது கந்தழி ஊர்ந்த வடிவமே இகரமாகும் ஃ +  = இ 

இக்கந்தழியானது அண்ட வெளியின் பேராற்றல் நிலையினை உணர்த்தும் ஒரு அறிவியல்குறியீடாகும், அகரத்தினை ஆண்நாடியாகவும், உகரத்தினை பெண்நாடியாகவும், இகரத்தினை அலிநாடியாகவும், ஊழ்க மெய்யியல் வரையறுக்கும்.

இவற்றை முறையே அறிவியலின் நேர்முனை, எதிர்முனை. பொதுவம் என்பனவாகக் கொள்ளலாம், இம்மூவகை ஆற்றல் முனைகளின்றி இயக்கம் இல்லை என்பது அறிவியல்கூறு, அத்தகைய இயக்க ஆற்றல் நிலைகளைச் சுட்டும் உயிரெழுத்துக்களையும், ஆற்றல் நிலைக்குறியீடுகளையும்,தமிழ்த்தாய் தன் பெயரிலேயே சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள். 

இனி இம்மூவகை ஆற்றல் முனைகளின் ஆதாரமாக மின்னூட்டம், காந்தப்புபலம், விசை இயக்கம் ஆகியவற்றைச் சுட்டும் மூவகை இனங்களே மெய்யெழுத்துக்களின் மூவகைப் பகுப்புக்களான வல்லினம். மெல்லினம். இடையினம் எனும் மூவகை இனங்களாகும். 

இம்மூவகையினங்களையும் சார்ந்த பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மாந்தரின் உடலின் பதினெட்டுப் புள்ளிகளிலும் பொருத்தி ஒப்பிடப்படுகின்றன. இந்த பதினெட்டுப் புள்ளிகளையும்,(படிகளையும்) கடந்து அமிழ்த நிலை அண்ணத்தையடையும், என்பது ஊழ்க மெய்யியல். அதற்கான ஒழுக்க வரைவுகளும், தமிழின் சார்பெழுத்துக்களின் இலக்கணத்தினை ஒத்தவை. இம்மெய்யெழுத்துக்கள் குறியீடுகளாக மாந்தர் உடலில் காட்டப்டும் படிநிலைகள் ஆசீவக மெய்யியலில் பதினெட்டுப் படிகளாம் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு அறிவர் மரபினரைப் பதினெண்மராகவே காட்டும் மரபு இன்றும் உண்டு , (பதினெண்சித்தர்கள் என்பது), இனி, இலக்கண நூற்பாக்களை மெய்யியல் கண்ணோட்டத்தில் பொருள்காணுங்கால், 

” உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” 
”உடம்பும் உயிருமாம் அது” 
” அ இ உ இம்மூன்றும் தனிவரிச்சுட்டே”

எனும் நூற்பாக்களும், எழுத்துப் பிறப்பியல் இலக்கணமும் இந்த மெய்யியல் தொடர்பினை நமக்குணர்த்தும் புணர்ச்சி விதிகள் பற்றிய இலக்கணம் மூச்சுப்பயிற்சியின் (ஊழ்க மெய்யியல்) இயைபினை உணர்த்துவதாகவே உள்ள து, புணர்ச்சியிலக்கணத்தில் வரும் நிலைமொழி வருமொழியென்பன உட்செல்லும் மூச்சுக்கும். வெளிப்படுத்தும்  மூச்சுக்கும் குறியீடாகும்.

ஒரு மூச்சோட்டம் உட்செல்லும் நாசி வழியே வெளிப்படும் நிலையினைத் (இயக்கப்படுவதனைத்) தோன்றல் விகாரம் எனவும், ஒரு மூச்சோட்டம் வேறு மூச்சோட்டமாக (இடது நாசியில் நுழைவது வலது நாசியில் மீள்வது அல்லது வலப்பிழையில் உட்செல்லும் மூச்சு இடப்பிழையில் வெளிப்படுவது திரிதல் விகாரம் எனவும், மூச்சோட்டம் சூழுமுனையில் (உலகியல் கெடுநிலையில் செல்வது) கெடுதல் விகாரம் எனவும்,மூச்சின் இயைபினைத்தமிழ் இலக்கணம் கூறும்.

தமிழ் மொழியானது துறவிகளால் குகைகளிலும் பள்ளிகளிலும் பேணி வளர்க்கப்பட்டு காலந்தோறும் பல்வேறு வரிவடிவ மாற்றங்கள் பெற்ற போதும், ஒலிப்பில் அண்மைக்காலம் வரை, அரை வேக்காட்டுப் பகுத்தறிவு சிதறும் வரை, எந்தக் கேடும் சூழப்படாமல் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தது, தமிழ் மொழியின் மாத்திரையிலக்கணத்துக்கும். ”ஐ” கார ”அய்” கார வரி வடிவத்தால் நேர்ந்த பெருதீங்கு யாப்பிலக்கணத்திலும் மாத்திரை வேறுபாட்டினைத் தோற்றுவித்து பெருங்குழப்பம் விளைவித்துள்ளது என்கிறார் அறிவர் ஆதி.சங்கரன்.

இக்கட்டுரையில் நாம் தமிழ் எனும் மூன்றுறெழுத்துக்களுக்குக் கொடுத்துள்ளவை சிறுவரைவுகள் மட்டுமே முழுமையானவையல்ல எனவும், இதனை மேலும் விரித்து வரைவுகொடுத்தல் அது ஒரு மாபெரும் நூலாகும். முகம் தொலைந்து போன தமிழர்கள் தமது முகவரியினைத் தேடவேண்டிய இடத்தினை மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் எனும் மொழியை ஒரு கருவிமொழியாகவும், கருமொழியாகவும், மட்டுமே நோக்காது கருத்தியலில் ஊழ்கம் மற்றும் மெய்யியலுக்கான எளிய தரவுகளைக் கொண்ட ஓர் நுண்மொழியாகவும், காணவேண்டும் எங்ஙனமெனில் இம்மொழியின் கண்கூறப்பட்டுள்ள இலக்கணக் கூறுகள் இம்மொழியினைப் போற்றி வளர்த்த அறிவர் மெய்யியலுக்கும் இலக்கணம் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம், எடுத்துக்காட்டாக இம்மொழியின் கண்ணுள்ள அ, இ, உ என நாம் கண்ட எழுத்தொலிகள் முறையே ஊழ்க மெய்யியலின் மூன்று வகை வளிநிலை (வாசியோகம்) களைக் குறிப்பதுடன் எந்தவோர் பொருளையும்,சுட்ட இம்மூன்றெழுத்துக்களே சுட்டெழுத்துக்களாக அமைவன, இது பற்றியே வள்ளுவரும், 

”மிகினும் குறையினும் நோய்செயும் நூலோர் 
வளிமுதலா யெண்ணய மூன்று” 

என்பார். உடலின் கண்தோன்றும் வாத, பித்தம் கோழை எனும் மூன்றும் இக்குறிப்பிட்ட வளிநிலைகளின் விளைவேயாம். தமிழின் முதலெழுத்துக் ள் எனப்பட்ட முப்பதின் கண்ணுள்ள மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் அறிவர் மெய்யியலின் பதினெட்டுப் படிநிலைகளைக் குறிப்பதாம், இவை முறையே ”க்” முதல் ”ன்” ஈறாக உடலின் காற்பெருவிரல் முதல் நெற்றிப்பொட்டு ஈறாகப் பதினெட்டு இடங்களில் வைத்துக் குறிப்பிடப்படுகின்றன. இக்குறிப்பு உடலின் கண் அமிழ்த நிலை, நஞ்சுநிலை ஆகியவற்றின் இடங்களை உள்ளடக்கியதாய் வளருவாவில் ஏறுநிலையில் (பாதம் முதல் தலைவரை) காட்டப்பெறும் இத்தொடர் வரிகை. தேயுவாவில் (தலைமுதல் பாதம் வரை) இறங்கு வரிசையில்குறிக்கப்படும், இவற்றுள் வல்லின மெய்களால் குறிக்கப்படும் இடங்கள் எலும்பு முட்டுக்களின் மீதும், இடையின மெய்களால் குறிக்கப்படும் இடங்கள் தசைநாண் முடிச்சுகளிலும் மெல்லின எழுத்துக்களால் குறிக்கப்படும் இடங்கள் வரம் சந்திகளின் குருதி இணைப்புகளிலும் அமையும், இவ்வாறு மெய்யெழுத்தென்பது மொழிக்கு இலக்கணம் கூறும் அதே வேளையில் உடலுக்கும் (மெய்) இலக்கணங் காட்டி நிற்பன. 

அடுத்து உயிரெழுத்துக்களான பன்னிரண்டினுள் ”ஐ” காரம் அண்ட வெளியான (சிதாகாயம்) உச்சந்தலையினையும், (உயிர்இருப்பு). உடலுக்குள் அமைந்த சூரிய, சந்திர மணடலங்களை அகரம், உகரம்,ஆகியவை குறிக்க,. இகரம் சூழு முனையையும், உகரம் குருதி இயக்கத்தினையும், ஏகாரம் வளியினை உறிஞ்சி வெளியேற்றும் தொழிற்கட்டுப்பாட்டையும், ஒகரம் அறியும், செயலின் தொழிற்பாட்டையும், (உணர்நிலை) ஓகாரம் இன வளர்ச்சி (பாலின) தொழிலையும், செயற்படுத்துவன.

ஒளகாரம் பற்று நீக்கிய துறவியர் கண்ணும், ”ஆ”காரம் உண்ணுந் தொழிற்கொண்ட உயிரிகள் கண்ணும் ஊகாரம் புலாலுடம்பைப் பேணுதலையும், ஈகாரம் முதல் எட்டுப் படிநிலைகள் வரையிலும் உடலினின்றும் இயக்குவன. இவ்வுயிர்ச் செயல்பாடுகளை நிகழ்த்துதலானே, இக்குறிப்புரைக்கும் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன, இவ்வுயிர்ச் செயல்பாடுகள் மெய்யியுடலில் இயைபு பெறுவதனைக் குறிப்பதே ஆய்த (ஃ) ஆகும், இம்முப்புள்ளிகள் முப்பரிமாணத்தில் நீளம், அகலம், ஆழம் எனும் மூவச்சுக்களையும், குறித்து நின்றன.
 
எழுத்துப்பாலியல் எழுத்துக்கள் ஆணெழுத்துக்களெனவும், பெண்ணெழுத்துக்களெனவும், அலி எழுத்துக்களெனவும், மூவகைப்படும், இவற்றுள் அலி எழுத்துக்கள் ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும், இவற்றின் பகுப்பு, எழுத்துக்களின் வலிமையின் அடிப்படையில் எழுந்ததேயாகும், இரு பெயர்கள், அல்லது ஒப்புச் சொற்களின் முதலெழுத்துக்களை ஆயுங்கால் ஆணெழுத்து பெண்ணெழுத்தினை வெல்லும். அதாவது, ஆணெழுத்தில் தொடங்கும் சொல் பெண்ணெழுத்தில் தொடங்கும் சொல்லை (அதாவது அச்சொல் குறிக்கும் வினையை அல்லது பொருளை) வெல்லும் என்பதாம், இவற்றின் தன்மைக்கேற்ப எழுத்து வலிமையும், அமையும்.  ஆணெழுத்திலும், பால் கடந்தவற்றிலும் தொடங்கும் சொற்களைப் பயன்படுத்தினால், பிற சொற்களால் இவற்றை வெல்லுதல் இயலாவாம்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து 

எனும் குறளும் ஈண்டுக் கருதத்தகும். அடுத்ததாக அமிழ்த எழுத்துக்கள், நஞ்செழுத்துக்கள் எனும் பகுப்பாகும். மொழி முதல் வாரா எழுத்துக்கள் என்பன நாம் அறிந்தவையே. நச்சுத்தன்மையினை இயல்பாகக் கொண்ட மையான இவ்வெழுத்துக்களைத் தொடக்கமாகக் கொண்டு சொற்களை அமைப்பதில்லை, இவற்றுள் அரைநஞ்சு கொண்ட எழுத்துக்களும்உண்டு, (எடுத்துக்காட்டாக ”ய” காரத்தில் ”யா” எனும் எழுத்து மொழி முதல் வரும், ஆயினும் யகரத்தின் பிறவெழுத்துக்கள் மொழி முதல் வாரா. எனவே யகரம்அரை நெஞ்செழுத்துகட்கோர் சான்று. 

அமிழ்த எழுத்துக்கள் என்பவை தம்மை பயன்படுத்தும் சொற்களின் பொருளை நெடிது உயர்வு பெறுமாறு விளங்கிடச் செய்யும் தன்மையினாலும், ஓலிப்போர்க்கும் தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவகையிடத்தும் நல்வினையையே காலங்கடந்தும் விளைத்தலானும் இப்பெயர் பெற்றன. வணங்குதலும் வாழ்த்தொலியும்(வாயுறை வாழ்த்து) அமிழ்த எழுத்துக்கள் பயின்று வரும் வெண்பாவானும் ஆசிரியப்பாவானும்அமைதல் வழக்காகும். 

அழிந்து படவேண்டுவனவும், தீதும், வசையும், பழிப்பும், நஞ்செழித்திலமைய வேண்டுமெனவும் நம் அறிவர் மரபு கூறும் கொள்கையாகும். வசையாடுதலில்வசை, வசைமீட்சி. வஞ்சப் புகழ்ச்சி, பழிப்பு, அறம் பாடுதல் எனப் பலவகையுண்டு.

 அறம்பாடுதலின் கண். எழுத்து, நஞ்சு, சொல் நஞ்சு, பொருள் நஞ்சு, எதிர்மறை. உடன்பாட்டு எதிர்மறை, பழிப்பு, பாடாண் நஞ்சு, எதுகை நஞ்சு, சந்த நஞ்சு (இவை இரண்டும் ஒலி நஞ்சு வகையின) எனப் பல்கூறுகளும், ஆணையிடல், சான்றிடல், தேற்றம், தனி நஞ்சு எனப் பல உறுப்புகளும் பயின்று வரப்பாடப்படுவதும் உண்டு. பெரும்பாலான அறம்பாடிகள் வசை மீட்சியும், உடனே பாடிவிடுவர் அவர்தம் சான்றாண்மையே அதற்குக் காரணமாம். வரி நஞ்சு, ஒலி நஞ்சு ஆகிய இரு திறத்து  நஞ்சினும், ஊழ்கநஞ்சு வலிமையுடையதென்றறிக.

ஐயனார் தந்த ஐகாரமும், ஐகாரம் தந்த வள்ளுவரும் தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்போது, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை.

இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும்.

ஐயம் > ஐ+ய்+அம்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அம் – விகுதி

ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம். இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது.

ஐயன் > ஐ+ய்+அன்
ஐ – பகுதி
ய் – உடம்படுமெய்
அன் – ஒருமை ஆண்பால் விகுதி

இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எனும் சிறப்புத் தகுதி நிலையினால் தமிழர்களால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று.

இவ்வாறு பல்லாற்றானும் சிறந்த நிலையில் போற்றத் தக்க கருத்துகளைத் தம் நூலில் வழங்கிய காரணத்தாலேயே திருவள்ளுவரைக் கூட அண்மைக் காலத்தில் ஐயன் திருவள்ளுவர் என வழங்கும் வழக்கு தோன்றியது.

இந்த ஐகாரம் எனும் எழுத்திற்கான பிறப்பிலக்கணத்தினைத் தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர் பலரும் வரையறை செய்துள்ளனர். இவ்வெழுத்தொன்றும் தமிழுக்கோ, அல்லது தமிழ் மொழியினைப் போற்றி வளர்த்த ஆசீவகத் துறவிகளுக்கோ புதிதன்று.

ஐ எனும் எழுத்தின் வரி வடிவினை நோக்குங்கால் இரண்டு யகரங்கள் ஒன்றுடன் ஒன்று உள் நோக்கிப் புணர்ந்த நிலையினைக் குறிக்கும்.

தமிழில் உயிரெழுத்துக்களின் வரிவடிவங்கள் யாவும் வட்ட வடிவத்துடனேயே தொடங்கும் எனும் ஆசீவக மரபின் கருத்துக்கொப்ப ஐகாரத்தின் மேற்பகுதியில் உள்ள யகரம் ஒரு வட்டச் சுழியுடன் தொடங்கப்படுகிறது.

இந்த யகரம் ஆசீவகத்திற்கும் பின்னாளில் தமிழகத்தில் பரவிய சிவனியத்தில் கூட ‘நமசிவய’ எனும் மந்திரத்தில் விண்ணைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிரைக் குறிக்கும் இடுகுறியாகவும் காட்டப் பெறுகிறது.

யகரம் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் இணைக்கப் பெறுவதே ஐகாரத்தினைத் தோற்றுவிக்கும் வரிவடிவாம். இந்த யகரம் இருபகுதியிலும் (மேலும் கீழும்) வெளி நோக்கியவாறு எழுதினால் ஆசீவகக் குறியீடான இருபுற முத்தலைக்கோல் தோன்றும். இரண்டையும் ஒரு சிறு கோட்டால் இணைத்து இக்குறியினைப் பெறலாம். ஆசீவகர்களின் முதுமக்கள் தாழிகளிலும் இக்குறியீட்டினைக் கண்ட ஆய்வாளர்கள் யகரம் உயிரைக் குறிக்கும் எழுத்தாகையால் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் உள்ள யகரம் உயிர் பிறப்பதனையும் இறப்பதனையும் (அல்லது உயிர் ஒடுங்குதலையும்) குறிக்கும் குறியீடே இது எனக் கண்டுரைத்தனர்.

இவ்வளவு சிறப்புக்குரிய ஐகாரமும் அதன் இரு (மேல், கீழ்) பகுதிகளாய் இயங்கும் யகரமும் பிரிக்க இயலாதன. இந்த ஐகாரம் பயின்று வரும் தமிழிக் கல்வெட்டுகளில் கூட யகரத் தொடர்புடனே எழுதப்பட்டுள்ள வழக்கினைக் காணலாம். 

பெரிய சுவர் ஒன்றினை முழுதுமாக அழிக்க வேண்டுமாயின் ஆங்காங்கு ஒரு சில செங்கற்களைப் பிடுங்கினால் போதும். நாளடைவில் அந்த சுவரும் அந்த சுவரினால் அடைக்கப்பட்ட கட்டடமும் சிதைந்து அழியும் என்ற அடிப்படையில் தமிழ் மொழியினை வேரறுக்கத் துணிந்த வல்லடியினரின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டிய செயல் இது.

மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை “ஐ“ என்று குறிக்கும் வழக்கு சங்க காலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை பொய்யா மொழிப் புலவராம் திருவள்ளுவரும் தமது 771-ஆம் திருக்குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளார். திருவள்ளுவரை ஐயன் திருவள்ளுவர் என்று வழங்கும் இந்த அரசு திருவள்ளுவராலும் முதுபெரும் மொழி ஆர்வலர்களாலும் போற்றப்படும் ஐகாரத்தினை காப்பதன் மூலமாக மட்டுமே திருவள்ளுவரையும் அவர்தம் அறிவு மரபினையும் ஆன்றோர் வளர்த்த தமிழையும் உண்மையில் மதிப்பதாகக் கருதப்படும் என அறிக.

இந்த மொழிச்சிதைவு எழுத்துச் சீர்திருத்தம் இருப்பதனை தமிழர் உணர்ந்து கொண்டு இந்த ஐகாரம் மட்டுமன்றி ஏனைய எழுத்து வடிவங்களையும் காக்க முனைவோம்.

தேமொழி

unread,
Jan 15, 2019, 7:12:50 PM1/15/19
to மின்தமிழ்
https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/jan/12/மத-அரசியல்-46-ஆசீவகம்--விநாயகர்-முருகன்-எப்படி-ஆசீவக-நெறியின்-கடவுளர்-3075683.html

மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?

By C.P.சரவணன்  12th January 2019


asee

 

ஆசீவகர்கள் உருவ வழிபாடற்ற அறிவியல் சார்ந்த நெறியை தழுவியுள்ளனர். பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். அறிவர்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர்கள், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார்கள்.


யானை ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளது? 
 
யானையின் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், பொறுமை, மனவலிமை, குழுவாக இயங்கும் பண்பு போன்றவற்றை ஒரு ஆசீவகர் பெற்றால்தான் பல படிநிலைகளைக் கடந்து நிறமிலி(கழிவெண்நிலை)யை அடையமுடியும்.அதனைக் குறிக்கவே சாத்தன் கோயில்களில் வெள்ளையானைச் சிற்பங்கள் உள்ளன.

ஆசீவக மதத்தவர்களின் சின்னமாக யானை இருந்துள்ளது. அதன்படியே, திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோயிலில் சுவாமிக்கு எதிர்புறம் உள்ள வாகனமாக யானை சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெள்ளறை கோயிலின் கருவறை இரண்டு வெள்ளையானைகளின் மீதே அமைக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் குடைவறை ஓவியத்திலும் யானை இடம்பெற்றுள்ளது. சமயச் சண்டைகள் நிலவிய காலத்தில், வேதங்களை எதிர்த்த ஆசீவக சமயத்தின் குறியீடான யானையை, சைவ மத குறியீடான முதலை கடிப்பது போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் ஆசீவக மதம் அழிக்கப்பட்டு, சைவ மற்றும் வைணவ மதங்கள் தமிழகத்தில் தழைத்தோங்கியதை காண முடிகிறது. 

 

யானையும் நிறக்கோட்பாடும்

யானை, தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல் நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல் (Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். யானை, தான் குட்டியாக(கருப்பு நிறம்) இருக்கும் பொழுது, தன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன் பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக் கொண்டது. தாய் யானையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானை, தான் வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும். மேலும், தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில் தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும், ஆனை பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருக்கும்.

இதே போல, ஆறு படிநிலைகளில் கீழ் நிறப்படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.

யானையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர் பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை அடையமுடியுமென்பதால், ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம். அதனால், ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர் உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத் தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும் (Inspiration)  இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம்.

ஆசீவக சித்தர்கள் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள். இதற்கு முதன்மையான தேவையாக இருப்பது மூக்கும் மூச்சுக்குழாயும் தான். ஆனையின் மூச்சுக்குழாய் நீளமாக இருப்பதால் அது மூச்சுப்பயிற்சியின் முதன்மைத்துவத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

 

"வினாயகர்" தோற்றம்

அது ஒரு தத்துவ உருவமே தவிர கடவுள் இல்லை. ஆசிவர்கர்கள் கடல்கடந்து ஆராய்ச்சிக்குச் செல்ல வணிகச் செட்டியார்கள் உதவினர். அதன்படி, ஆசீவகச் சின்னம் யானை. ஆசீவகத்துக்கு உதவிகள் புரிந்து, உறுதுணையாய் நின்றவர்கள் வணிகர்களாகியச் செட்டியார்கள். ஆகவே, செட்டியார் உடலில் யானைத் தலையைப் பொருத்தி "வினாயகர்" தோற்றம் உருவானது. 

மேலும், ஜைன, புத்த நெறிகளிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவநெறியிலும் விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவநெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால், பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவநெறியில் வந்தார் என நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை சிவநெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர். பலர் மாறவில்லை. அதனால், எண்ணாயிரம் (8000) ஆசீவகர்கள் கழுவேற்றம் செய்து கொல்லப்பட்டனர். இப்படி சிவநெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர் வழிபாடு, பிள்ளையார் சுழி, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு,  பல அறிவியல் கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன. அதனால் தான், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும் இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில், விநாயகர் பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது. 

மேலும், பிள்ளையார்பட்டி (காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன் மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 400ஆம் ஆண்டின் காலத்தியது எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால், விநாயகர் சிவ நெறியைச் சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.

மேலும், ஜைன புத்த சிவ நெறிகளில் விநாயகர் வழிபாடு ஏன் செய்கிறோம் என்ற விளக்கமும் சரியாக இல்லை. ஆனால், ஆசீவக நெறியில் இருப்பதைப் போல விநாயகர் அந்நெறிகளிலும் கடவுளாகவோ அல்லது முழுமுதற் கடவுளாக இருக்கிறார். மேலும், விநாயகரைக் குறிக்கும் அனைத்து பெயர்களும் தமிழ்ச் சொற்களே.

விநாயகர்    = வி + நாயகர் = உயர்ந்த தலைவன்
பிள்ளையார் = புல் + ஐ + ஆர் = வியக்கத்தகு அருகம்புல் கொண்ட் ஆன்றோன்
கணேசன்       = கணம் + ஈசன் = கூட்டத்தின் கடவுள்/மக்களின் கடவுள்
கணபதி      = கணம் + பதி = கூட்டத்தின் தலைவன்/மக்களின் தலைவன் 

விநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது ‘சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்|’ என்றுக் கூறுவர். “சசிவர்ண” அப்படியென்றால், ‘நிலா மாதிரி நிற’ என்றால் ‘வெள்ளை நிற உடை அணிந்தவனே’ என்று பொருள். ஆசீவகத்தில் கடை நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு அப்படி ஒரு சிறப்பு. மேற்கூறியவற்றை வைத்து, விநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம். 


விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?.  ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த ஆசீவக சித்தர்கள். அதற்காக, சிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தர் தான். மேலும், ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழி,  சுழற்றியம் (ஸ்வஸ்திகா – சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம்).

அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே உள்ளே செல்லும் வழக்கம் இன்று உள்ளது. இது ஆசீவகத்தின் செல்வாக்கு மறையவில்லை என்பதனை உணர்த்துகிறது. பழந்தமிழரின் குரு (சாத்தன்) வணக்கமே தற்போது பிள்ளையார் வழிபாடாக மாறியுள்ளது. 

 

முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்

பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக அழிக்க முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் என்பர். 
இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.  முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்

1.முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.

2.முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர் (குறத்தி,  குறவன்),  பொருப்பன்,  வெற்பன்,  சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.

3.ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி (பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாதவர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன் (ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர். முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். 

முருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

வீடு – உயரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடம்

ஒப்புநோக்குக:
வீ – உயர்வானது, பூவின் வாடும் நிலையைக் குறிக்கும்(வாடி மேலிருந்து கீழே விழும் நிலை)
வீழ் – உயரத்திலிருந்து விழுவது
விண் – மேல்(உயரத்தில்) இருக்கும் வானம்
அருவி – உயரத்திலிருந்து விழும் நீர்அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
படை என்ற சொல்லின் விளக்கம்,
படை – கொல்லும் தன்மை கொண்ட ஒன்று

முருகன் மலையின் கீழிருக்கும் எதிரிகளை மலையை அரணாகக் கொண்டு போர் புரிந்து விரட்டியமையால்(சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல), அம்மலைகளை நாம் படைவீடு என்றழைக்கிறோம்.

படைவீடு – உயரத்தில் இருந்து கொல்லும் தன்மையைக் கொண்டது.

அறுபடைவீடுகளில் ஐந்து படைவீடுகள் மலை மேல் இருக்கின்றன. திருச்செந்தூர் மட்டும் விதிவிலக்கு. கோயில் மலை மேல் இல்லாமல் கடலோரம் இருக்கிறது என்றாலும், முருகன், அயலாரை போர் புரிந்து வெற்றி பெற்றதை இன்றும் சூரசம்ஹாரம் என இன்றுவரை கொண்டாடுகிறோம். படைவீடு எனும் சொல் காலப்போக்கில் பொதுவான படை இருக்கும் இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, வீடு எனும் சொல் பொதுவான தங்குமிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சூரசம்ஹாரம் = சூரன்+சம்ஹாரம் = முருகன் சூரபத்மனை கொன்ற நிகழ்வு
சூரபத்மன் = சூரன்+பத்மன்
சூரன் எனும் சொல் ஆரியர்களைக் குறிக்கும். எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.
சுரா – ஆரியர்கள் அருந்திய ஒரு வகை மதுபானம்
சுரன்>சூரன் – ஆரியர்கள் இம்மதுவை அருந்துபவர்களை சுரன் என்றழைத்தனர்.
அசுரன் - ஆரியர்கள் இம்மதுவை அருந்தாதவர்களை அசுரன் என்றழைத்தனர்.

இந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது. அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம்.முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது. அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.

வேல்

வேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம். வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.

இதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம். மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின.  பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும்.  இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.

காவடி

அடுத்து, காவடி என்பது முருகனுடன் எப்படித் தொடர்புடையது என்பதைப் பார்ப்போம். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். முதலில், காவடி என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். ‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்ற சொல்லின் திரிபு எனக் கூறுவர். கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். முருகன் இந்தக் காவுதடியைப் பயன்படுத்துபவனாக இருந்திருக்க வேண்டும்.

பழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், ஆசீவகர், சமணர்கள் மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே (ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).

(சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும்.) ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரர் = தீர்த்த + ங் + கரர்

இதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று. இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் ‘போதி சத்துவர்’ எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்.

ஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து (தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம் (அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் என்பர்.

பொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.

இது மட்டுமல்ல, கீழுள்ள கோட்பாடுகள் ஆசீவக ஜைன பௌத்த இந்து நெறிகளில் பொதுவாக உள்ளதை நாம் பார்க்கலாம்.
1.    விநாயகர் வழிபாடு
2.    முருகன் வழிபாடு
3.    ஓம் எனும் மந்திரச் சொல்
4.    சுழற்றியம் (ஸ்வஸ்திகா)
5.    ஊன் உண்ணாமை
6.    உண்ணா நோன்பு
7.    தலையில் மொட்டை அடிப்பது

இன்னும் பல...

சமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால்,தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.

ஐயா 

இதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன் (எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

"டிரேகன்" (DRAGON) பற்றிய உண்மை வரலாறு அறிவோம்!

கீழை நாடுகளில் அறியப்படும் "ட்ரேகன்" என்பது முருகனையேக் குறிக்கிறது எனும் ஆய்வுக்கட்டுரை. "ட்ரேகன்" என்பது கிழக்கு நாடுகளில் நல்ல சக்தியாகவும், மேற்கு நாடுகளில் தீய சக்தியாகவும் கருதப்படுகிறது. நல்ல சக்தியாக விளங்கும் கிழக்கு நாடுகளின் "ட்ரேகன்" பற்றி முதலில் காண்போம். சிவன், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு சித்தர் மற்றும் புராதனக் கடவுள். உலகத்தின் அனைத்து மனித குலங்களிலும் நிறைந்து இருப்பவர் சிவனே! 

கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அடுத்த சித்தர் மற்றும் புராதன கடவுள் முருகன். லெமூரியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது வாழ்ந்தவர். சிவனைப் போலவே உலகின் அனைத்து நாகரிகங்களிலும் நிறைந்திருப்பவர். குமரிக் கண்டம் கடலில் மூழ்கியபோது மக்களைக் காப்பாற்றியவர். குமரிக் கண்டத்தில் வாழ்ந்த அவர், கடல் அழிவுக்குப்பின் இலங்கைப் பகுதிக்குள் தன் மக்களுடன் குடியேறினார். 

"கும்பலாய் மரித்த கண்டம்" என்பதிலிருந்து உருவானதே "குமரன்" என்ற முருகனுக்கான இன்னொரு பெயர். 

கடலில் மூழ்கி மக்கள் இறந்ததை ஈடுகட்ட, அவர் மக்கள் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்தினார். அதனால், இனப்பெருக்கத்திற்கான கடவுளானார். 

முருகன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்; முதன்முதலாய் உலகத்துக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுத்தவர். விவசாய விளைபொருள்கள் திருடர்களால் களவாடப் படுவதைத் தடுக்க போர்க்கலைகளை முதலில் உருவாக்கியவர். ஆதலினால், அவர் "போர்க்கடவுள்" எனவும் அழைக்கப்பட்டார். போர்க்கலைகளை உருவாக்கிய முருகன் மயில், சேவல், ஆடு ஆகியவற்றுடன் அடையாளம் காணப்பட்டார். குண்டலினி யோகக் கலையை மேம்படுத்தியவர் என்றமுறையில் பாம்பு அடையாளப்படுத்தப்பட்டது. விவசாயம் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன், அவர் மாடு மேய்ப்பவராகவும், மேய்ச்சல் சமூகத்தின் அரசராகவும் விளங்கினார். 

விவசாயம் மழை சார்ந்ததாகையால், அவர் பருவ நிலை சார்ந்த ஒரு காலண்டரை உருவாக்கினார். 

சிவனின் முதலாம் தமிழ்ச் சங்கத்தையடுத்து, அவர் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். "கவாடபுரம்" அவரது தலை நகரமாக விளங்கியது. கவாடம் என்றால் முத்து. 

முருகன் "முத்து"டன் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவர் முத்துக்குமரன், முத்தரசன், முத்துசாமி என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 

விவசாயம் செய்வதற்காக பனைமரங்கள் நிறைந்த காட்டை எரித்து விளை நிலங்களை முருகன் உருவாக்கியதால் இலங்கை மலைக்குறவர்கள் அதனை எதிர்த்தார்கள். அதன்பொருட்டு நடந்த போரில் முருகன் வென்றதைக்குறித்தே பங்குனி மாதம் பௌர்ணமி நாளன்று "பங்குனி உத்திரம்" கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் என்றால் வீரத்துடன் வெற்றிபெறுதல் (Valiantly Subduing) என்று பொருள். 

மேலும், முருகன் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு சப்த கன்னிகள் என்ற ஆசீவகக்கோட்பாடை உருவாக்கினார். அதில் ஒரு கன்னி விவசாயத்தைக் குறிக்கும் பச்சையம்மா. பச்சையம்மாவை வெள்ளி கிரகத்துடனும் உருவகப்படுத்தினர். போரின் வெற்றி விவசாயத்தின் வெற்றியானதால் விவசாயத்தைக் குறித்த வள்ளியை (வெள்ளி) முருகன் மணந்ததாக கூறப்பட்டது. முருகன் விளை நிலம் வேண்டி பனைமரக்காட்டை எரிக்க தீமூட்டியதால் அவர் "அக்னிதேவன்" எனவும் அழைக்கப்பட்டார். 

குமரிக் கண்டம் கடலில் மூழ்கிய காலத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பதால் அவர் மனிதகுலம் அனைத்தும் அறிந்தவராக இருக்கிறார். ஆனால், வேறு, வேறு பெயர்களில், முறைகளில் அவர் அறியப்படுகிறார். 

உதாரணமாக, யாசிதியர் அவரை "தவுசி மேலக்" என்றும் மயிலாகவும் வழிபடுகின்றனர். எகிப்தியர்கள் அவரை "ஆமுன்" என்றழைத்தனர்; ரேம் என்று வழிபடுகின்றனர். பிளிஸ்டியன்கள் அவரை மீன்கடவுள் என்றும் டாகன் என்றும் மனித மீனாகவும் வழிபடுகின்றனர். பாபிலோனியன்கள் அவரை "மர்துக்" என்றும் சுமேரியர்கள் "தம்முஸ்" என்றும் கானனைன்கள் "பால்காடு" என்றும் அழைகின்றனர். 

இஸ்லாமியர்கள் முருகனை "அல்கிதிர்" என்று வழிபடுகின்றனர். ஆப்கானிஸ்தானின் "கந்தகார்" நகரத்தின் பெயரும் முருகனான கந்தனைக் குறித்தே பெயரே! இப்போது டிரேகன் உருவானவிதம் காண்போம். முருகனின் குண்டலினி யோகக் கலையைக் குறித்த பாம்புடன், மயிலின் இருகால்கள், சேவலின் இரு கால்கள், ஆட்டின் இரு கொம்புகள் அனைத்தையும் இணைத்தால் கிடைப்பது, "ட்ரேகன்". முருகன் அக்னி தேவன் என்பதால் ட்ரேகன் நெருப்பைக் கொட்டுகிறது. முருகனின் தலை நகரம் கவாடபுரம் என்கின்ற முத்து நகரம் ஆனதால் சீன ட்ரேகன் முத்துடன் காணப்படுகிறது. முருகன் பெரும் அரசன் என்பதால், சீன அரசர்களின் அடையாளமாக ட்ரேகன் காணப்படுகிறது. 

முருகன் தோற்றுவித்த விவசாயத்தால் மக்கள் செழிப்புற்று விளங்கியதால் ட்ரேகனை செல்வச்செழிப்புடனும், முருகன் மழைக்காலம் அறிந்து விவசாயம் செய்த மழைக்கடவுள் என்பதால் ட்ரேகனை மழையுடனும், அடைப்படைக் காலண்டரை உருவாக்கியவர் என்பதால் சீன வருடப்பிறப்பன்று ட்ரேகனுடன் நடனமாடியும் உருவகப்படுத்தி முருகனை நினைவு கூறுகின்றனர். 

ஆதியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் சீனர்கள் என்பதால் அவர்கள் தங்களை முருகன் வழித்தோன்றல்கள் என்பதைக்குறிக்கும் "ட்ரேகனின் வழிவந்தவர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். 

ட்ரேகன் சொல்லாய்வு

முருகன் வாழ்ந்த காலத்தில் மக்கள் மலைகளில் வசித்ததால் மலை அரசர்களே மிகுதியாக இருந்தனர். குமரிக்கண்டம் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தபோது மக்களைக் காப்பாற்றி இலங்கையில் குடிபுகுந்தபோது அவர்களுக்கு மலையில் குடியேற இடமில்லாமல் மலைக்குறவர்கள் நிரம்பியிருந்ததால் தரையில் தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. உலகின் முதல் தரை அரசனாக முருகன் விளங்கினான். 

தரை+கோன்
த்ர+கோன்
ட்ரே+கோன்
ட்ரேகன்
இப்படியாக முருகனே "ட்ரேகன்" என அழைக்கப்பட்டான். ட்ரேகன் என்பது தரை அரசனான முருகனையே குறிக்கிறது. 

(ஆசீவகம் பற்றிய மேலும் அறிய, புத்தகமாக விரைவில்)


References:
முனைவர். பாண்டியன், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை ஆய்வுகள்

 


C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475


***ஆசீவகம் குறித்த பதிவுகள் இத்துடன் நிறைவுறுகிறது***



தேமொழி

unread,
Jan 15, 2019, 7:15:00 PM1/15/19
to மின்தமிழ்
நன்றி:  தினமணி 


மத அரசியல்-34: ஆசீவகம் 

மத அரசியல்-35: ஆசீவக மதச் சின்னங்கள்
03-12-2018

மத அரசியல்-36: ஆசீவகம்-ஆசீவர்களின் கடுந்தவம்
https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/dec/06/மத-அரசியல்-36-ஆசீவகம்ndashஆசீவர்களின்-கடுந்ததவம்-3052897.html
6-12-2018

மத அரசியல்-37: ஆசீவகம்-காட்சியியல்
10-12-2018

மத அரசியல்-38: ஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு
மத அரசியல்-39: ஆசிவகம்-நிறுவனர்கள்/காட்சியியலாளர்கள்
17-12-2018

மத அரசியல்-40: ஆசிவர்கள் வானியல் 
20-12-2018
24-12-2018

மத அரசியல்-42: ஆசீவகம் குருகுலக் கல்வி, வர்ணாசிரமம், ஏழு கன்னிமார்
27-12-2018

மத அரசியல்-43: ஆசீவகம்-எண்ணியல்
31-12-2018

மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி
03-01-2019

7-01-2019

மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?
12-01-2019


தேமொழி

unread,
Jan 17, 2019, 12:19:53 AM1/17/19
to மின்தமிழ்
ref:

மின்தமிழ் ›
youtube - facebook Tamil research


On Wednesday, January 16, 2019 at 6:37:01 PM UTC-8, நரசிங்கபுரத்தான் wrote:
இன்று முகநூல் மற்றும் youtube சேனல் மூலம்  ஆய்வு என்கின்ற பெயரில் பல்வேறு குழப்பங்களை இளைய தலைமுறையினரிடம் விதைக்கின்றனர் .

தமிழனாக இருந்தால் பகிரவும் .
உலகின் முதல் மொழி ,

என்பது போன்ற பதிவுகள் கூட ஏதெனும் ஒரு வகையில் பரவாயில்லை .

ஆனால் இல்லுமினாட்டி ?, யார் தமிழர் ? , தமிழரின் மெய்யியல் எனும் பெயரில் உலக மதங்களோடு உள்ள தொடர்புகள் குறித்த ஆய்வு ? 

இவைகள் பெரும்பாலும் குழப்பத்தையும் கலகத்தையும் மட்டுமே ஏற்படுத்துகின்றன .

உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆய்வுக் கட்டுரைகள் தரும் ஆய்வாளர்கள் இன்று மிகவும் குறைவு .

அரசியல் காரணங்களுக்காக தமிழர் புகழ் பாடும் அமைப்புகளும் சரியான ஆய்வுகளை முன் எடுப்பதாகத் தெரியவில்லை .

ஆசீவிகம் குறித்த  தினமணி கட்டுரைகளின் தகவல்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவை எனும்  youtube மூலம் எடுக்கப்பட்டவை .
இவர்களின்  youtube ஆய்வுகள் உண்மையில் யாரையும் குழப்பிவிடும் . இவை  என்னையும் பாதித்தது உண்மை.

சரியான வழிகாட்டல் இல்லாமல்  இத்தகைய ஆய்வுகள் . இளைய தலைமுறையைச்  சிதைத்து வருகின்றது .

இதற்கு மற்றும் ஒரு உதாரணம் .



இத்தகைய ஆய்வுகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு 
இல்லுமினாட்டி  - தமிழர்கள் தானாம் .
இத்தகைய ஆய்வுகளின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை 
மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன் .

Banukumar Rajendran

unread,
Jan 18, 2019, 2:40:30 AM1/18/19
to mintamil
ஆசீவகம் அறிவோம் என்ற இழையின் பெயரை குழப்பம் அறிவோம் என்று இருந்திருக்கலாம்.

யான் தேமொழியாரைக் குற்றம் சொல்லவில்லை. அவர் தாம் படித்ததை இங்கு பகிர்கிறார். 

சிற்சில உண்மைகளுக்கிடையே, பெரிய பெரிய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார்
இக்கட்டுரையின் ஆசிரியர். இதெற்கெல்லாம் என்ன சான்றுகள் (மூலநூல்). எல்லாவற்றையும்
ஆசிவகத்திற்கு ஏற்றுகிறார் ஆசிரியர். என்னத்தை சொல்ல...!

ஆசீவகத்தின் மெய்யியியலில் ஆழங்கால் பட்டிருந்தால், இக்கட்டுரைகளில் வரும் புளுகு
மூட்டைகளை எளிதில் புறம்தள்ள முடியும்.

இரா.பா

தேமொழி

unread,
Jan 25, 2019, 1:33:08 AM1/25/19
to மின்தமிழ்

சுட்டியில் முனைவர் சாந்தலிங்கம் உரையின் காணொளி >>> https://www.youtube.com/watch?v=cMEN8Xexn0g&feature=youtu.be&t=1366

சுட்டி காட்டும் பகுதியில் இருந்து 8-10 மணித்துளிகள் பார்க்கவும்.

இந்த ஆசீவக இழைக்குத் தொடர்புடையது குறிப்பிடும் இப்பகுதி.



நேரம் உள்ளவர் காணொளி முழுமையையும் காண பரிந்துரைக்கிறேன்.

காண்பதானால் அறியக்கூடியவை:
1. தொல்லியல் சான்றுகளுடன்  இலக்கிய ஒப்பீட்டுடன் தமிழகம் கண்ட பல்வேறு சமயங்கள் குறித்த விளக்கங்கள்.
2. கல்வெட்டுத் தமிழ் எழுத்துகள் வளர்ந்த முறை, தமிழி எழுத்தின் தோற்றம் குறித்து முனைவர் சாந்தலிங்கம் கொடுக்கும் விளக்கம் 
3. பல்வேறு காலகட்டங்களிலும் தமிழகம் (அரசர்களும் மக்களும்) இயற்கை தாய் நடுகல் வைதிக அவைதிக என பல சமயக் கொள்கைகளை ஆதரித்து வந்தமை.(குறிப்பாக முடிவுரை இரண்டு மூன்று மணித்துளிகள்) 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Jan 25, 2019, 8:59:42 AM1/25/19
to mintamil
அருமையான விழியம்!

அப்படியே என் எண்ணவோட்டத்தைக் காட்டுவதாக இருக்கிறது இந்த காணொளி. :-)


இரா.பா

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 19, 2019, 2:16:51 AM5/19/19
to மின்தமிழ்

ஆசீவகம் குறித்து அறிய உதவும் நூல்கள்


ஆசீவகமே பண்டைத்தமிழர்களின் மெய்யியல் என்றும், அய்யனார் கோயில்கள் எல்லாம் அவற்றின் எச்சம் என்றும் பேரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூல்களைப் பின்பற்றிப் பலர் இன்று சமூக ஊடகங்களில் எழுதுவதைப் பார்க்கிறோம். 

ஆசீவகர்கள் பற்றி  ஆர்த்தர் இலெ. பாஷம் எழுதிய "History And Doctrines Of Ajivikas"  Arthur L Basham நூலையும்,
பேரா. ர. விஜயலட்சுமி எழுதிய "தமிழகத்தில் ஆசீவகர்கள்" என்ற நூலையும்
படித்தால் இத்தகைய கோட்பாடுகளைக் கறாராக எடைபோட முடியும்.   ஆசீவகர்களின் கோட்பாடு பற்றித் தமிழ்நூல்களில் தெளிந்து கொள்ள முடியும் அளவுக்குப் பிறமொழிகளில் இல்லை என்பது பேரா. விஜயலட்சுமி அவர்களின் கூற்று. 

தொகுப்பு: மணி மணிவண்ணன்

________________________


1. 
தமிழகத்தில் ஆசீவகர்கள்
ஆசிரியர் :  விஜயலட்சுமி, ர.
பதிப்பாளர்:  சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1988
http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2l0ty&tag=தமிழகத்தில்%20ஆசீவகர்கள்#book1/

2.
History and Doctrines of Ajivikas,  AL Basham, 1951

3.
The Ajivikas,   Beni Madhab Barua, 1920



Suba

unread,
May 19, 2019, 5:53:20 AM5/19/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram
On Fri, Jan 25, 2019 at 7:33 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

சுட்டியில் முனைவர் சாந்தலிங்கம் உரையின் காணொளி >>> https://www.youtube.com/watch?v=cMEN8Xexn0g&feature=youtu.be&t=1366


சில பகுதிகளை பார்த்தேன். அருமையான உரை.
மிக முக்கியமான பல தகவல்களை தெளிவாக விளக்கும் உரை.

பகிர்வுக்கு நன்றி தேமொழி

சுபா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
May 19, 2019, 5:59:04 AM5/19/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram
தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிகின்றோம். ஆனால் ஆசிவகம்  என்ற கோட்பாடு தமிழகத்தில் தான் தோன்றியதா.. தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்ததா என்பது மிகுந்த ஐயத்தையே எழுப்புகிறது.  பேரா.நெடுஞ்செழியனின் சில உரைகளை கேட்டுள்ளேன். அவை வலிந்து சமணத்தை ஆசிவமகாம மாற்றிப் பார்ப்பது போல நினைக்கத் தூண்டுகிறது. 
தமிழகத்தில் ஆசிவகத்தை நான் முற்றிலுமாக மறுக்கவில்லை.  இது ஆய்விற்குறிய ஒரு  துறை என்பதில் சந்தேகமில்லை. பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் தனித் துறை  அமைத்து இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஐயனாரை இன்று சமணர், பௌத்தர், ஆசீவகர் மூவருமே தங்களுடைய சின்னமாக குறிப்பிடுகின்றனர்.  இதுவும் உறுதி செய்யப்படாத நிலையிலேயே இருப்பதாக நினைக்கின்றேன்.

-சுபா

 

தேமொழி

unread,
May 21, 2019, 6:09:49 AM5/21/19
to மின்தமிழ்


தமிழகத்தில் ஆசீவகர்கள்

ர.விஜயலட்சுமி

கிழக்கு பதிப்பகம்-2019

₹ 200.00


தென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், நீதிநூல்களில் பொதிந்து கிடக்கும் ஆசீவகத்தின் கருத்துகளை ஆசிரியர் நமக்குத் தேடி அளித்திருப்பது தமிழ் மொழிக்கு அவர் செய்திருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் படித்துப் பயனடையவேண்டிய நூல்.

---

முனைவர் சுதர்சன் பத்மனாபன் இணைப் பேராசிரியர், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆசீவகர்களைப் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. உலக வரலாற்றில், கி.மு. ஆறாம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாக விளங்குகிறது. ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் அரும்பியது அப்போதுதான். பிராகிருத மொழிகளிலும் தமிழிலும் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வடமொழி நூல்களின் குறிப்புகளைத் தேவையான இடங்களில் துணையாகக் கொண்டும் இந்த ஆய்வுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழி வளம் பெறும் என்று நம்புகிறேன்.

- பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு

தேமொழி

unread,
May 24, 2019, 9:24:53 PM5/24/19
to மின்தமிழ்
source: https://mymintamil.blogspot.com/2019/05/blog-post_24.html

ஐயனார்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



நூலின் ஆசிரியர் - திரு பொன். சந்திரன்
அய்யனார் பதிப்பகம் சென்னை
வெளியீடு 2017

          இந்நூலின் ஆசிரியர் தமிழகத்தில் கிராமங்களின் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளின் கரைகளில் கோயில் கொண்டுள்ள, பல பிரிவு மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வரும் ஐயனார் யார், அவரின் பிரிவுகள், இருப்பிடங்கள் போன்றவற்றை மேற்கோள்காட்டி இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

          ஆசீவகம் சமயத்தை உருவாக்கிய மற்கலி  கோசாலர் என்பவரே சாத்தன் என்ற முதல் ஐயனார் என்றும் இவர் சங்கப் புலவர் ஆக விளங்கியுள்ளார் என்ற விடயத்துடன் நூல் ஆரம்பமாகிறது. 

          இரண்டாவது ஐயனாராக நந்தவாச்சா என்ற சின்ன ஐயனார், பெருமுக்கல் செல்லும் பாதையில் மலைக்கு முன்பாக இவர் வீற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

          முத்தியாலீசுவரர் என்ற மூன்றாம் ஐயனாராக  பெருமுக்கல் மலையின் தென்புறச் சரிவில் வேல், ஈட்டி என கோயில் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

          மேலும் ஐயனார் வகுத்த ஒன்பது கதிர் என்பது வானியல், கோளியல் பற்றிய அறிவியலாக இருந்துள்ளது. ஆசீவக கொள்கையான ஊழ் கொள்கை மற்றும் கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, மிக வெண்மை என்ற ஆறு சாதிகளை மேற்கோள் காட்டியுள்ளார் .

          பாண்டி என்ற சொல் வெள்ளை என்றும் ஐயனாரே என்றும், ஆசீவகத்தில் வெள்ளை பிறப்பு நிலையை அடைந்த துறவியரைக் குறிப்பதாகவும், மதுரை பாண்டி  முனி கோயிலே இதற்குச் சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

          திருப்பத்தூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளில் ஐயனாரைத் திருமண் தவமுடைய ஐயனார் என பாண்டியர்கள் குறித்துள்ளார்கள் என்றும், திருமறைக்காடு சிவன் கோயிலில் ஆசீவகத்திற்குரிய அறப் பெயர் சாத்தன், பூரணம், பொற்கலை யோடு உள்ள பூரண காயபர், பார்கவ நாதர் ஆகியோரைக் கொண்ட  ஆசீவக கோவில்களாகக் காட்டுகிறார்.

          பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கையைத் தெய்வலோகத்தில் தொடங்கும் சேக்கிழார், திருப்பிடவூர் ஐயனார் கோயிலில் முடிக்கிறார். மேலும் அந்த சருக்கத்திற்கு வெள்ளானைச் சருக்கம் எனவும் வெள்ளை யானை அறப்பெயர் சாத்தனுக்கு உரியது என்றும் தெரியப்படுத்துகிறார்.

          சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் உள்ளன. அங்கு உள்ள  குகை ஓவியத்தில் உள்ள மாங்காய் கொத்து, சாத்தனோடு தொடர்பு உடையது என்றும் அழகர் மலை குகைத்தளம், திருச்சி மலைக்கோட்டை ஐயனார், கஞ்சமலை கலியபெருமாள் ஐயனார், பெரும பெட்டி 5 இலவ மரத்து ஐயனார் போன்ற கோயில்கள் ஆசீவகத்தைச் சேர்ந்தவை  என்று விளக்கியுள்ளார்.

          ஐயனாரின் பிரிவுகள், கரந்தமலை ஐயனார், ஆகாச ஐயனார், பரம ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார் என்று பல்வேறு பெயர்களுடன் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார்.

          மேலும் சான்றுகளாக, பள்ளன் கோயில் செப்பேடு, சிங்கம்புணரி கோயில், இலக்கியங்களில் பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, புறநானூறு, பெரிய புராணம், சினேந்திர மாலை மற்றும் ஐயனார் பிள்ளைத்தமிழ் போன்றவற்றை மேற்கோள் காட்டி ஆசீவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஐயனார் என்பதை வரலாற்றுச் சான்றுகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.




தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.



தேமொழி

unread,
May 30, 2019, 8:23:25 PM5/30/19
to மின்தமிழ்
ஆசீவகம்


—   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            பௌத்த ஜைன மதங்களைப் போலவே ஆசீவக மதம் வட இந்தியாவில் தோன்றி அழிந்த மதம்.  இந்த மதத்தை உண்டாக்கியவர் மஸ்கரி புத்தரா, மற்கலி புத்த, மக்கலி கோசாலர் (Makkhali Gosala)  என்று அழைக்கப்படுகிறார்.  இவர் ஜைன  மதத்தைச் சார்ந்த மகாவீரர், பௌத்த மதத்தைச் சார்ந்த கௌதம புத்தர் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்திலிருந்தவர்.  மகாவீரர் ஆருகத மதக் கொள்கைகளை உலகத்தாருக்குப் போதித்த அந்த காலத்தில் அவருடன் மற்கலி  சில ஆண்டுகள் தங்கியிருந்தார்.
 
            பின்னர் பகைமையால் தனியே பிரிந்து ஆசீவக மதம் என்ற மதத்தை உண்டாக்கினார். ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு நவ கதிர் என்று பெயர். இந்த மதம் தமிழ் நாட்டில் பரவி இருந்ததாகத் தெரிகிறது. இந்த மதத்தைப் பற்றிய செய்திகள் மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார், சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருப்பதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

இம் மதத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட நூல்கள் துணைபுரிகின்றன.
1. Encyclopedia of religion and ethics - James Hastings.
2. History and doctrines of ajivikas - A.L.Basham
3. The Ajivikas- B.M.Barua
4. ஆசீவகமும் ஐயனார் வரலாறும்- க. நெடுஞ்செழியன்
5. தமிழகத்தில் ஆசீவகர்கள்- ர.விஜயலட்சுமி
6. ஐயனார்- பொன் சந்திரன்
7. வள்ளுவத்தின் வீழ்ச்சி -குணா

குமுதன்

unread,
Jun 1, 2019, 2:37:38 AM6/1/19
to மின்தமிழ்
ஆசீவகம் பற்றி  தற்காலத்தில் தமிழ் உணர்வாளர்களால் நிறையவே பேசப்பட்டு வருகின்றது. தமிழரது தத்துவஞான அடையாளமாக அது உருவகப்படுத்துப்படுகின்றது.....



இருந்தபோதிலும் சில கேள்விகளுக்கான தெளிவான விடைகள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.


1. ஆசீவகம் பற்றி சங்க இலக்கியத்தில் ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றனவா ?

2. ஆசீவகம் பற்றி சங்க மருவிய, பக்தி இலக்கிய கால இலக்கிய குறிப்புகள் ஏதேனும் உண்டா ?
   (சிலப்பதிகார, மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் தவிர்த்து)

3. ஆசீவகம் பற்றிய கல்வெட்டுகள் ஏதேனும் தமிழில் கண்டறியப்பட்டுள்ளவா ? (ஆசுவக்கடமை)

4. மற்கலி கோசலரே ஐயனார் என தெளிவாக நிறுவத்தக்க சான்றுகள் எவை ?

5. கிசசாங்கிசாவை எவ்வாறு எவ்வாறு வெண்காசிபர் என உறுதியாக அடையாளப்படுத்த முடிந்தது ?

6. பற்குடுக்கை நன்கணியர், நரிவெருஉத்தலையர் மற்றும் நன்வெள்ளையர் முதலிய சங்க புலவர்களை எவ்வாறு ஆசீவுக  கோட்பாட்டாளர்களென நிறுவியது (ஒரிரு பாடல்கள் மற்றும் பெயர் ஒற்றுமை மட்டும் போதுமெனலாமா?)


இவற்றை நிறுவத்தக்க ஆதாரங்களை அறிந்தவர்கள், அனைவரும் அறியத்தக்கவாறு தெரியப்படுத்தினால் நாம் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். 



நன்றி
குமுதன்.

Reply all
Reply to author
Forward
0 new messages