தமிழில் இருப்பவை 30 எழுத்துக்கள் என்று தொல்காப்பியத்தில்
*முதல்* சூத்திரத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது,
12 மெய், 18 உயிர். அவ்வளவே தமிழ் எழுத்துக்கள்.
"எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப.” (தொல். முதல் சூத்திரம்)
உதாரணமாக, எல்லா இந்திய மொழிகள், தென்கிழக்கு ஆசிய
மொழிகளைப் பாருங்கள். எந்த மொழியின் யூனிகோட்
அட்டவணையிலும் மெய், உயிர் இரண்டுமே இருக்கும்.
உயிர்மெய்கள் இருக்கா, தேவையுமில்லை ஏனென்றால்
உயிர்மெய் எழுத்துக்கள் சார்பு எழுத்துக்கள்.
http://www.unicode.org/charts/
தமிழ்:
http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf
(உயிர்மெய்களைத் தனிஎழுத்தாக யூனிகோட் மதிப்பதில்லை,
எனவே கோட்பாய்ண்ட் இல்லை).
12 X 18 = 216 உயிர்மெய்கள் ஒருவகை சார்பெழுத்துக்கள் தாம்.
அவற்றை நாம் ஒரு மேட்ரிக்ஸ் போல் அணியணியாக உருவாக்கிக் கொள்கிறோம்.
அவ்வளவுதாம். ஆனால் உயிர்மெய்களுக்கு தனி எழுத்து என்ற
தகுதி பெறா.
உயிர்மெய் வடிவங்களில் கற்பித்தலில் (குழந்தைகளுக்கு,
எளிய சாதாரணர்களுக்கு, பல்வேறு காரணங்களால் தமிழ்
இளமையில் படிக்கமுடியாமல் போய் 30-40 வயசில்
தமிழ் படிக்கலாம் என்று வருவோருக்கு (அவர்கள்
தமிழினத்தாராகவோ, வெளியாளாகவோ இருக்கலாம்)
உ/ஊ புணர்ந்த உயிர்மெய்களை மலையாளம் போல்
உடைத்தும் எழுதலாம் என அரசாணை பெறவேண்டும்.
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
அன்புடன்,
நா. கணேசன்
PS: There has been a long debate to classify Tamil
script - whether it's a syllabary or an abugida.
Looking at the long-term trend of Tamil script
evolution, the way to go is to break the ligation
of u/uu ligated uyirmey glyphs which will lead
to a great simplifcation to teach Tamil as
a full Matrix with consonants as the first column
and vowels as the top row of the Uyirmey matrix
to kids (or adults who want to pick up Tamil script).
மேலும்,
கிரந்த எழுத்தின் உபயோகம்:
http://groups.google.com/group/minTamil/msg/e68eb2970b393c93
10 ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்தகத்தை புரட்டி பாருங்கள் ஐயா.
On Mar 20, 10:09 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
>
> நீங்கள் விளக்குவது எனக்கு புரியவில்லை
>
ராஜசங்கர்,
முதலில் யூனிகோட் அட்டவணை தயாரிக்கும் போது,
தமிழ் தனிமெய்களை விட்டுவிட்டார்கள். அகரம் ஏறிய மெய்களை
ஏற்றியுள்ளனர் (வடமொழி போல்), அப்போது அதை எடுத்து
எந்த தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரியும் சொல்லலை போலும்.
மற்ற இந்திய அகராதிகளைப் பாருங்கள், தமிழ் அகராதியும்
பாருங்கள். தமிழ் அகராதி சொற்கள் பட்டியல் முதலில்
தனிமெய் எழுத்தை வைத்து ஆரம்பிக்கும். இது தமிழுக்கே உள்ள
சிறப்பு. மேலும், என்னைக் கேட்டால் எப்படி யூனிகோட் சார்ட்
இருந்திருந்தால்
சிறப்பு என்று எழுதினேன் (02/01/2008). படித்தருள்க.
http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html
யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்
பொருளும், காலமும் செலவிட்டுச் சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளில்
மூழ்கித் தமிழுக்குப் பொருத்தமான 'யுனிகோட் சார்ட் எது?' தமிழ் ப்ளாக்
(block) அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்க வேண்டுமே என
நினைந்தேன். அப்படித் தான் மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம்
யூனிக்கோடில் அமைந்துள்ளது என்பது அறியற்பாலது.
யூனிக்கோடில் மாலத் தீவின் எழுத்து
மேலோட்டமாக, மாலத்தீவின் எழுத்து (தானா) எனப்படுவது அரபி போலத்
தோன்றினாலும், அதன் அடிப்படை விஞ்ஞான பூர்வமானது. அதில் தனிமெய்களும்,
உயிர்களும் உள்ளன. யுனிக்கோடில் 'தானா' எழுத்து பாருங்கள்:
http://www.unicode.org/charts/PDF/U0780.pdf
நம் தொல்காப்பியனாரும், கொங்கின் விளக்கு பவணந்தியாரும் சொன்ன க்+அ = க
என்னும் அடிப்படையில் ' தானா' (Thaana) இயன்றதாகும். பார்வைக்குச்
சிங்களம், அரபி போன்ற சட்டைகள் போட்டிருந்தாலும் உறவின்முறை (kinship),
எழுத்து (Thaana) எல்லாம் மாலத்தீவு அடிப்படையில் தமிழ்வேர்களைக்
கொண்டது.
Where Did the Maldives People Come From? Dravidian substratum in
Maldives:
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html
மாலத்தீவின் எழுத்தமைதியைக் கண்ணுறுங்கள், அங்கே முழுக்க இசுலாமியர்
வாழ்தலினால் எழுத்தின் சட்டை அராபிக் போல இருக்கிறது. ஆனால், தனி
மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டதே மாலத்தீவின் எழுத்து:
http://www.omniglot.com/writing/thaana.htm
தஞ்சை ராசராசன் ஆண்ட பூமியல்லவா மாலத்தீவுகள்? அவர்கள் மெய்யெழுத்தில்
அகரம் ஏறவில்லை, கண்டீர்களா?
கணிக்குறியேற்றத்தில் மெய்யெழுத்துக்களின் இன்றியமையாமை:
ஆனால், தமிழ் எழுத்துக்களை யுனிகோடில் பாருங்கள். தமிழர் குலவிளக்குகள்
காப்பியனாரும், எங்கள் ஊர்க்காரர் பவணந்தி முனிவரும் போற்றிக்காத்த
மெய்யெழுத்துக்களே காணோம்!! தமிழ் யுனிகோட் பிளாக்:
http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf
இந்நிலை ஏன் வந்தது? அடிப்படையில் இந்திய மொழிகளுக்கு இஸ்கி/யுனிகோட்
ஸம்ஸ்க்ருதம்/இந்தி மேலாண்மை அளிப்பது. எனவே அக்ஷரம் (அட்சரம்/அக்கரம்)
அதன் மூல அடிப்படை ஆகும். அதாவது அகரம் ஏறிய உயிர்மெய்கள் தான்
மெய்யெழுத்துக்கள் என்கிறது யுனிகோட். அப்பிழையைத் தமிழ்நாட்டு
அதிகாரிகள் யுனிகோட் அமைக்கும் போழ்து சுட்டிக்காட்டி எடுத்துரைக்கத்
தவறிவிட்டனர். அதனால்தான், தமிழின் வேராகிய தனி மெய்யெழுத்துக்களை
யுனிகோட் கோட்சார்ட்டில் காணோம். எனவே தான், மெய்யெழுத்துக்களை தமிழ்
பிளாக்கிலேயே கேளுங்கள் என்று தமிழ்நாட்டு அரசின் அதிகாரிகளிடம்
வேண்டியுள்ளேன்.
டாக்டர். உமா அவர்களால் திருத்தப்பெற்ற (edited) யுனிகோட் கேரக்டர்
வரையறைகள்: http://std.dkuug.dk/JTC1/SC2/WG2/docs/n2352r.html இதன்படி
பார்த்தாலும், மெய்யெழுத்துக்கள் தனி கோட்பாய்ண்ட் பெறும் 'கேரக்டர்'
என்பதன் எல்லாத் தகுதியும் கொண்டவை. வேண்டுமானால், தனி மெய்யும், உயிரும்
புணர்ந்து தோன்றும் உயிர்மெய்யை 'லெட்டர்' என்றடக்கலாம். (1)
மெய்யெழுத்தின் சிறப்பால்தான் தமிழ் இந்திபோலல்லாது கூட்டெழுத்து
(சம்யுக்தாக்ஷரம்) இல்லாமல் இயங்குகிறது. இதற்கு எதிர்ப்பதமாக, இந்தியின்
வலை அல்லது அச்சில் ஒரு பக்கம் பாருங்கள், ஒரு விராமமும் (=ஹல்(லு)
அந்தம்/அக்ஷராந்தம்; நம் மெய்யின் புள்ளிக்கு இணையானது) அனேகமாக
இருக்காது. ஆக, நம் மெய்யெழுத்துத் தத்துவம் இந்தி எழுத்தின் வேரன்று.
(2) மேலும், மெய்யெழுத்துக்கள் தமிழின் எந்த நூலிலும் ~1/3 பாகம்
இருக்கும்; கண்களுக்குத் தெரியும். இதற்கு நேர்மாறாக, இந்திப்
பக்கங்களில் அனேகமாக விராமம் இருப்பதே கண்களுக்குத் தெரியாது.
தொல்காப்பியர் முதற் சூத்திரத்தாலேயே "எழுத்து எனப் படுப அகரமுதல் னகர
இறுவாய் முப்பஃது என்ப" இலக்கணகர்த்தர் எழுத்து என்றால் மெய் 18, உயிர்
12 என்று சொல்லிவிட்டார். உயிர்மெய்களை இளம்பூரணர் தன் தொல்காப்பிய
உரையிலே குறிப்பிடுகிறார்: "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும்,
உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன."
ஆக, தொல்காப்பிய முதற் சூத்திரத்திலே குறிக்கப்படும் மெய்கள் யுனிகோடின்
'கேரக்டர்', தொல்காப்பியத்தின் சிறப்பில்லா எழுத்துக்களாம் உயிர்மெய்கள்
'லெட்டெர்' என்று கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, உயிர்மெய்கள் என்பவை
உரைகாரர்களின் 'விரியுள் விரி' என்ற வகையில் அடங்குவன. 12 X 18 = 216
உயிர்மெய்கள் (in matrix format).
மெய்உயிர் என்கோடிங் - என் பரிந்துரை
மேலே கண்ட 'தானா' போல, ஒரு தமிழ்க் குறியேற்றத்தை நாம் அமைத்து ஃபாண்ட்
செய்திருக்கலாம், விட்டுவிட்டோம். வருங்காலத்தில் செய்யமுடியும். என்
பரிந்துரையாம் 'மெய்உயிர்' என்கோடிங்கும் மூலக்கூறுகளை இங்கே
சுருக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலத்தில் உரைப்பதானால்,
(a) In the MeyUyir encoding, only vowels and consonants
(மெய்யெழுத்துக்கள்) of Tamil are encoded atomically.
(b) All uyirmey letters are generated by font intelligence: that is க்
followed by உ will automatically produce கு. Nowadays, in Open Type
fonts this is trivial, no rendering engine etc., So, Tamil grammar is
followed: க் + உ = கு.
(c) In few and rare instances where தமிழ்இனம், mey and uyir letters
have to be shown separated, use zwnj (zero-width non-joiner).
(d) க்ஷ is left as non-conjunct by default. E.g., பக்ஷி (bird, name
of a Muslim male). Conjunct க்ஷ் is created only when needed using zwj
(zero width joiner).
Pure Consonant and Vowels encoding model (my MeyUyir model): If
Unicode is newly designed today, my choice is this model for Tamil
(and, it will not be optimal for Hindi/Sanskrit). Now, unfortunately,
current Indic Unicode is optimal for Hindi, and the overhead on Tamil
is high. எனவே தான், தமிழக அரசு டேஸ் குறியீட்டினை நாடுகிறது எனலாம்.
இந்த மெய்உயிர் என்கோடிங்கில், உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் தனி
கோட்பாய்ண்ட்களுடன் விளங்கும். இதுவரை அப்படி ஓர் என்கோடிங் தமிழுக்கு
இல்லை. விசைப்பலகையைக் காட்டிலும் தமிழின் என்கோடிங்கில்
அவ்வெழுத்துக்கள் அனைத்தும், முக்கியமாய் மெய்கள், இடம் பெற்றிருக்க
வேண்டும். காலம் கனியும், காத்திருப்போம்.
நா. கணேசன்
On Mar 20, 10:09 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> //ராஜசங்கர் பழனிச்சாமி எழுதினார்://
> என்னுடைய பெயர் ராஜசங்கர் மட்டுமே.
>
Sri. Rajasankar,
Sorry for the mistake. I mistook you for Rajamohan Palanisamy.
anbudan,
N. Ganesan
இத்துடன் பொன்.திரு. அவர்களின் நன்னூற் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது.
>எனக்கு ஒன்று புரியவில்லை.
>தமிழ் எழுத்துக்கள் 30 தா அல்லது 247 ஆ?
>முப்பது தான் உபயோகப்படும் என்றால் அட்டவணை எதற்க்கு?
>வரிசையில் வருவன முறைப்படி எழுவன என்பதெல்லாம் சாக்குப்போக்குகள்.
>ஏன் வந்தன எதற்க்கு இருக்கின்றன என சொல்ல முடியுமா?
வடமொழி நோக்கில் இதற்கு ஒரு விடை தரும்
ஆய்வேடு தருகிறேன்.
http://dakshinatya.blogspot.com/2008/12/staal-sanskrit.html
இதில் தமிழ் - திராவிட - சிந்துச் செய்திகளை
அறிஞர்கள் ஏற்றவேண்டும். அவைபற்றி
பேரா. பிரிட்ஸ் ஸ்டால் (வேத அறிஞர், பெர்க்கிலி பல்கலை)
குறிப்பிடவில்லை. அறியார் போலும்.
--------
சுருக்கமாக, உயிர்மெய் என்பவை வெறும் சார்பெழுத்துக்களே
(dependent characters) அவை சிறப்பற்றவை,
காலப்போக்கில் அவற்றின் வரிவடிவம் எளிமையாகும்.
முதன்மை, உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் தான்.
உயிர்மெய் பிராமி எழுத்துக்களில் - பாரதம், தென்கீழ்
ஆசிய நாடுகள் யாவிலும் உள்ளன. அதனால் தான்
அவை அபுகிடா, ஆல்பாபெட் (alphabet : alpha = உயிர்,
beta = மெய்) அல்ல.
கணேசன், அபுகிடா முறை.
க்அண்ஏச்அன், ஆல்பாபெட் முறை.
நா. கணேசன்
அன்பு கணேசன்,
நீங்கள் விளக்குவது எனக்கு புரியவில்லை
அதாவது 30 எழுத்துக்கள் தான் தமிழ் எழுத்துகள் என்றால் அதன் சேர்ந்தும் பிரிந்தும் வருவதான மற்றய எழுத்துகள் எல்லாம் வேண்டுமானால் புழங்குவதற்க்கா? அவைகள் உபயோக்கப்படுத்தியே ஆகவேண்டும் என்பதில்லையா?
வேந்தன் அரசு wrote:
> 2009/3/20 Raja sankar <errajasa...@gmail.com>
>
> > அன்பு கணேசன்,
> >
> > நீங்கள் விளக்குவது எனக்கு புரியவில்லை
> >
> > அதாவது 30 எழுத்துக்கள் தான் தமிழ் எழுத்துகள் என்றால் அதன் சேர்ந்தும்
> > பிரிந்தும் வருவதான மற்றய எழுத்துகள் எல்லாம் வேண்டுமானால் புழங்குவதற்க்கா?
> > அவைகள் உபயோக்கப்படுத்தியே ஆகவேண்டும் என்பதில்லையா?
> >
>
>
> ராஜ சங்கர்
>
> வடமொழியில் எத்தனை எழுத்துகள்?
>
வடமொழி இலக்கணங்களில் 50 என்கிறார்கள்.
திருமந்திரத்திலும் (மந்திர மொழியான சங்கதத்திற்கு) 50 எழுத்து
குறிக்கப்படுகிறது.
சங்கதம் மாத்திரம் முன்வைக்கும் பேரா. பிரிட்ஸ் ஸ்டால்
கட்டுரை:
http://dakshinatya.blogspot.com/2008/12/staal-sanskrit.html
அவர் தமிழ் அறியார்.
30-லிருந்து விரிந்தது 50 - ஆரியர் வருகை சிந்திற்குப் பின்
என்று காட்ட வேண்டும். விரிவாக எழுதுவேன்.
அன்புடன்,
நா. கணேசன்
வடமொழி இலக்கணங்களில் 50 என்கிறார்கள்.
திருமந்திரத்திலும் (மந்திர மொழியான சங்கதத்திற்கு) 50 எழுத்து
குறிக்கப்படுகிறது.
வேந்தன் அரசு wrote:
> வடமொழியில் உயிர் மெய் என்ற பாகுபாடு ஓரளவுக்குதான் பொருத்தம்.
> மெய்யும் மெய்யும் புணரும் எழுத்துக்களும் உளவே. அதன் எண்ணிக்கை
> எண்ணுக்குள் அடங்குமா?
>
consonant conjuncts - அவையெல்லாம் சார்பெழுத்தே,
50-ல் ஏறா.
நா. கணேசன்
வேந்தன் அரசு wrote:
தமிழுக்கு 30 எழுத்து என்று தொல்காப்பியன் வரையறை
கொடுப்பது போல, வடமொழிக்கு
எழுத்து 50. இவ்வுண்மையைத்
திருமூலர் தன் திருமந்திர வாக்காக
அருளியுள்ளார்:
திருமந்திரப் பாடல்:
965.
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. 52
அன்புடன்,
நா. கணேசன்
>>ராசசங்கர்:
--------
க்அண்ஏச்அன், ஆல்பாபெட் முறை.
நா. கணேசன்
தொல்காப்பியத்தில் "சார்ந்து வரல் மரபில் மூன்று அலங்கடையே."
என்னும் சூத்திரத்தில் மூன்று அல்லாத மற்றவை என்னும் வகையில்
உயிர்மெய் எழுத்துகள் அடங்கும்.
ஆய்தம் தனியாக வரும் ஆகையால்
அதனை தனிநிலை என்றும் கூறுகின்றனர்.
எப்படியாயினும் தமிழில் எழுத்துகளை
வரையறை செய்து இருக்கும் முறை
பிறமொழிகளில் இருப்பதாகத் தெரியவில்லை.
இதனைத் தமிழ் முறை என்று கூறுவது பொருந்தும்.
இது கட்டாயம் அபுகிடா, ஆல்'வ'பெட், அபுகிடா ஆகிய
மூன்றும் இல்லை. நான்காவது முறையாகிய தமிழ்முறை.
செல்வா
வேந்தன் அரசு wrote:
திருமந்திரம் 1710
ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.
அக்கரம் = அக்ஷரம்
The One Letter ``Aum`` is beyond the Fifty Letters distributed over
the Adharas
In the body where the Centres Six are,
Do seek the Adharas and above,
Over the letters five times ten
Rises the one Letter (Aum) that is basic to all.
இந்த ஓங்காரம், ௐ (U+0BD0) யூனிகோடில் இருக்கிறது
(விஸ்டா இருந்தால் தெரியும், இன்னும் சிறிது காலத்தில்
இப்பொழுது உங்கள் கணினியில் தெரியலன்னாலும்
புதுக்கணியில் தெரியும்).
தமிழுக்கு 30 எழுத்து என்று தொல்காப்பியன் வரையறை
கொடுப்பது போல, வடமொழிக்கு
எழுத்து 50. இவ்வுண்மையைத்
திருமூலர் தன் திருமந்திர வாக்காக
அருளியுள்ளார்:
965.
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. 52
அன்புடன்,
நா. கணேசன்
பாயிரம்-தொல்காப்பியம்
சிவணிய நிலம் என்றால் எது? ஜாவா? சீவணியம்?
முந்து நூல் எது? அகத்தியம்?
க.>
இசையொடு சிவணிய* நரம்பின் மறைய என்மனார் புலவர்
பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலனியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய* திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.
- பாம்பன்
சுவாமிகள்
சிவணித்தல் – ஒன்றுதல் எனும் பொருளில் வருவதாகத் தெரிகிறது. ஒரு நாட்டின்
பெயரில்லை.
தேவ்
நல்லது. அவருக்கு முந்தைய நூற்குறிப்பைத்தருதலால், முந்தைய நிலப்பரப்பைப்
பற்றிய குறிபேதும் தருகிறாரோ? என்ற ஆவல். வேறொன்றுமில்லை!
க.>
ஐ யா! தமிழில் எழுத்துகள் 30 து தான் இதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம். அதிலும் உயிரெழுத்து 12 ல் அடிபடை எழுத்துகள் 7 மட்டுமே (அ,இ,உ,எ,இ,ஒ,ஔ) எப்படி இசையில் 7 ஓ,அப்படியே ஒலிகளும் 7 ஏ, இந்த அடிப்படை 7 ஒலிகளில் 5 மட்டும் குறைந்த ஒலி அளவில்(மாத்திரை) உள்ள அ.இ.உ.எ ஆகியவைகளை ஐ,ஔ அளவுக்கு நீட்டி ஒலிக்க 5 நெடில்கள்.
இவ் உயிரெழுத்துகள் அனேகமாக எல்லா மொழிகளிலும் பொதுவாகவே அறியப்படுகிறது.
வேந்தன்,
ஏன் அடங்காதா என்ன?
கணக்கு போட்டு தரவேண்மானால் சொல்லுங்கள் போட்டுவிடலாம்.
நல்ல போட்டி! :)
கணக்கிட முடியும், கணக்குக்குள்ளும் அடங்கும்தான் (சில
இயல் வரம்புகள் கொள்ளின்) ஆனால்
எண்ணிக்கையில் பெரியது. துல்லியமாய் கணக்கிட
வேண்டியதில்லை. வெட்டி வேலை.
கருத்தளவில் கணக்கில் அடங்காது
என்று வேந்தன் கூறுவதுபோல வாதிடவும் முடியும்
ஏனெனில் எத்தனை எழுத்துகள் கூட்டெழுத்துகளாக
வரலாம் என்னும் வரையறை சமசுக்கிருதத்தில்
இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரிவிக்க
வேண்டுகிறேன்).
.
தமிழின் எளிமை அவற்றில் இல்லை.
தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக செழிப்புடன் இருந்து,
இன்னும் சீரிளமையுடன் இருப்பதற்கும்
இந்த எளிமையும் ஓர் அடிப்படைக் காரணம்
இதனைக் குலைக்க அரும்பாடு படுகிறார்களே!!
செல்வா
On Mar 23, 10:41 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2009/3/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
On Mar 22, 11:52 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> கணேசன்,
>
> அல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று கிரேக்க எழுத்து வரிசை போகும்.
> பார்க்கhttp://en.wikipedia.org/wiki/Greek_alphabet
>
> அல்பாபெட் என்றால் உயிர்மெய் என குறிக்கிறது என இன்றுதான் கேள்விபடுகிறேன்.
>
who said this, may I know?
N. Ganesan
ps: I get an idea on your library and books' reading.
> ராஜசங்கர்
>
> 2009/3/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
மெய்யாலுமா?
கூட்டி கழிச்சு வர்ர கணக்குள்ள இல்லாத எழுத்தா?
கூட்டெழுத்த சேர்த்துதான?
வேனும்னா சொல்லுங்க சுருக்கா எக்செல்லையே போட்ருவம்