Re: கிரந்த எழுத்தின் உபயோகம்

223 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 20, 2009, 7:47:12 AM3/20/09
to மின்தமிழ்

I think there are 4 or 5 stages when a foreign word enters Tamil and
for the idea behind the word to become completely tamilized, it takes
time. The first step is to write in Tamil script, and many English,
French,
Arabic, Persian words need Grantha leters to write. Then, given Time,
people come up with good working Tamil coinages (without grantha
letters, mostly).

My old mail:

--------
கிரந்த எழுத்துக்கு வருவோம்.


தமிழுக்குக் கிரந்தம் பெய்து எழுதுவது நல்லதல்ல. தமிழின் மூல
வேர்ச்சொற்களை எடுத்துவிட்டு ஆங்கிலம், வடமொழிச் சொற்களைத்
தங்கு தடையின்றி தமிழில் புகுத்தி மலையாளம் பிரிந்ததுபோல் இன்னொரு
மொழியை உருவாக்கி இன்னல் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மலையாளம் வடசொற்களைக் கிரந்தத்தால் எழுதி தமிழில் இருந்து
பிளந்ததுபோல், இன்றைய அச்சம் இளைஞர்கள் ஆங்கிலச் சொற்களை
மிகப்போட்டு எழுதுவதும் தொந்தரை கொடுக்கும். பல இளைஞர்கள்
தமிழே படிப்பதோ எழுதலோ இல்லை என்பது வேறு பிரச்சினை.
இவ்வகையில் பார்த்தால், பொன்னவைக்கோ போன்றோர்
முயற்சி எடுத்திருந்தால் இன்று வலைப்பதிவுகள் ஒரு லட்சம்
இருந்திருக்கும். சில தடைகளை ஏற்படுத்தினதால்
இணைய வளர்ச்சி பாதித்தது. இன்று கூகுள் காரன்
பேருந்து ஊர் ஊருக்கு அனுப்பி இணையம் பற்றிச் சொல்கிறான்.
நம் அரசு செய்ய வேண்டாமோ?

வேதம், ஆகமம், ...வல்லுநர்கள் எண்ணிக்கையில் குறைவுதான்.
ஆனால் அவர்கள் ஆற்றுப்படுத்தி தமிழர்களைக் கோவில்களுக்கும்,
இந்து சமயிகளாகவும் இருக்கச் செய்கின்றனர். பாரத சமயங்களில்
பழைய சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், ...
மக்களை நிலைநிறுத்தி சோசியம் போன்றவற்றிலும்,
நவக்கிரக வழிபாட்டிலும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லவா?
அதுபோல், தனித்தமிழ் அறிஞர்கள் சில ஆயிரம் இருந்தாலும்
தமிழுக்குச் சிறப்பே. மலேசியா சுப. நற்குணன், ... போன்றோர்
அங்கும் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்கிறார்கள்.
இணையத்தில் பல தனித்தமிழ் எழுத்தாளர்களை நானறிவேன்,
பழகியும் இருக்கிறேன். தமிழ்நடைச் செழுமைக்கு
தனித்தமிழ் இயக்கத்தின் கொடை பெரியது.
இதனை, 1940களின் விகடனையும், இன்றைய விகடன்
பிரசுரங்களையும் வாசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்னைப் பொருத்தவரையில் தொழில்நுட்ப வளர்ச்சி
"தாயெழுத்துக் கோட்பாடு" (motherscript) கொடுக்கவல்லது.
இந்தி, மலையாள, தெலுங்கு, வடமொழிப் பக்கங்களைக்
ஒரு சொடுக்கில் தமிழில் காட்டமுடிகிறது. தமிழ் அல்லாத
பிற் இந்திய மொழி எழுத்துக்களை தமிழில் காட்ட
கிரந்த எழுத்தை விரும்புவோர் அதில் காட்டலாம்.
நாக. இளங்கோவனார், மு. இளங்கோவனார் போல்
முழுக்கத் தவிர்த்தும் ஆவலுடையோர் எழுதலாம்.
பெரும்பான்மையான சனங்கள், ஏதோ ஒன்றிரண்டு
எழுத்துக்களைக் கிரந்தம் பெய்தால் எனக்குப் பிரச்சினையில்லை.
என் வீட்டில் இருந்தபோது, பெருங்கவிக்கோ
வா. மு. சேதுராமன் 'கூசுடன் மீனாட்சி பிள்ளைத்தமிழ்'
சில செய்யுள்கள் சொன்னார். தமிழ்ப் பயிற்சியுடையாருக்குக்
கூசுடன் என்றால் ஹூஸ்டன் என்று தெற்றென விளங்கும்.
ஆனால் இக்குழுமத்திலே கூட, கூசுடன்
என்பதைவிட ஹூஸ்டன் என்றால் சட்டென விளங்குவோர்
சிலர் இருக்கத்தானே செய்கின்றனர்?
அவர்களுக்காக, சிலர் ஹூஸ்டன் என்றெழுதினால்
எனக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை.
அப்படி எழுதத் தடை போடக்கூடாது என்கிறது ஆழ்மனம்.
(இந்நோக்கில் தான் சிற்பி பேசியிருக்கிறார்).

உதாரணமாக, யூனிகோட் இண்பிட் வழிகாட்டலில்
ஶ (sha) என்னும் கிரந்த எழுத்தைச் சேர்த்துள்ளது.
இதன் பயன் என்ன? முக்கியமாக,
வேதம், ஆகமம், ... படிக்க விரும்புவோருக்கு
உதவும் (உ-ம்: ராஜசங்கர் பழனிச்சாமியின் இன்றைய மடல்).
மேலும், இந்தி வலைப்பக்கத்தை தமிழ் எழுத்தில்
காட்டவும், தேவ், கமலம் போன்றோர் வேற்றுமொழி,
வடமொழி ஸ்லோகம், மஹாவாக்யம் தந்து
வியாக்கியானம் சொல்லவும் துணணகொடுக்கும்.


ஆக, எழுத்துப்பெயர்ப்புக்கு (transliteration from other Indic scripts
into Tamil script) கிரந்த எழுத்து அத்தியாவசியத் தேவை:


http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html


யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...
http://nganesan.blogspot.com/2008/01/sha.html


http://nganesan.blogspot.com/2008/01/unicode-chennai_7911.html


என்னைப் பொருத்தவரை, கணிதத்தில்
சொல்வதானால் தமிழ்நடை ஒரு வென் வரைவட்டப் படம்
(Venn Diagram):
http://en.wikipedia.org/wiki/Venn_diagram

தனித்தமிழ் (12 மெய், 18 உயிர்) - உள்வட்டம் - இதுவே தமிழ்.
தனித்தமிழ் வட்டிலை உள்ளடக்கின செல்வா-தமிழ் (வல்லினம் மீது
மீக்குறிகள்)
சற்றுப் பெரிய வட்டம்.
அதற்கும் வெளியே கிரந்த வட்டம்,
அதற்கும் வெளியே ஆங்கில (அ) வேறு இந்திய எழுத்து.

தமிழ் அறிவியலை உள்வாங்குகையில் சில படிநிலைகள் உள.
தனித்தமிழ் தனக்கு வேண்டியதை ஆக்கிக்கொள்ளும்.
அதற்குமுன் ஸ்ரீமான் பொதுஜனம் சில கிரந்தம் பெய்து
எழுதுவது யதார்த்தந்தானே. அந்த நிதர்சன நிலையில்
சங்கடம் இல்லாத பல தமிழர்களில் ஜெயகாந்தன், சிற்பி
உள்ளனர் போலும்.

அன்பிணை,
நா. கணேசன்

Did you read Tamilmanam today?
A mirror of Tamil mind and heart:
http://tamilmanam.net

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 9:45:45 AM3/20/09
to minT...@googlegroups.com


ஹூஸ்டன் போன்ற சிறப்பு பெயர்களை கிரந்தம் கொண்டு எழுதலாம். ஆனால் இஷ்டம், சஹாயம் போன்றவற்றை தவிர்க்க‌ வேண்டும்

கம்பனால் ஹிருதய எனும் கொடும் சொல் இதயம் என் இனிமையான‌து
 
Jalapeno என்ப‌தை அமெரிக்கர்களை தவிர  ஆங்கிலம் பேசுபவர் எவருக்கும் பலுக்க தெரியாது
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.

இராமதாசன்

unread,
Mar 20, 2009, 9:59:23 AM3/20/09
to minT...@googlegroups.com
On Fri, 2009-03-20 at 09:45 -0400, வேந்தன் அரசு wrote:
>
> ஹூஸ்டன் போன்ற சிறப்பு பெயர்களை கிரந்தம் கொண்டு எழுதலாம். ஆனால் இஷ்டம்,
> சஹாயம் போன்றவற்றை தவிர்க்க‌ வேண்டும்

சைக்காலஜி புரிஞ்சு போச்சு.

ஆங்கிலம்னா கிரந்தம் பயன்படுத்தலாம்.. அரபின்னா பயன்படுத்தலாம்..

சமஸ்கிருதம்னா கூடாது...

ரைட், ரைட்..

--

ஆமாச்சு

Narayanan Kannan

unread,
Mar 20, 2009, 10:01:42 AM3/20/09
to minT...@googlegroups.com
2009/3/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> கம்பனால் ஹிருதய எனும் கொடும் சொல் இதயம் என் இனிமையான‌து
>
எந்தச் சொல்லும் கொடுஞ்சொல் அல்ல. அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது அது.
கோபல்ல கிராமத்தில் கி.ரா எழுதுவார் வடுகர்கள் (தெலுங்கர்) தமிழை அரவபாஷை
என்பார்களாம். நாம் சுந்தரத்தெலுங்கு என்கிறோம். அவர்கள் இது ஓட்டைப்
பானைக்குள்ளே கல்லு உருளுற மொழி என்கிறார்கள். அதற்காக நாம்
ஒத்துக்கொள்வோமா? வெறுப்பின் அடிச்சுவட்டைக் கண்டு அழிக்க வேண்டும்!

> Jalapeno என்ப‌தை அமெரிக்கர்களை தவிர  ஆங்கிலம் பேசுபவர் எவருக்கும் பலுக்க
> தெரியாது

ஹலோபினோ, சரியா? முன்பு எனக்கொரு பெண் தெரியும். அவள் பெயர் Jesinta,
ஆனால் ஹசிந்தா என்றழைக்க வேண்டும்.

க.>

Kannan Natarajan

unread,
Mar 20, 2009, 10:40:00 AM3/20/09
to minT...@googlegroups.com
> Jalapeno என்ப‌தை அமெரிக்கர்களை தவிர  ஆங்கிலம் பேசுபவர் எவருக்கும் பலுக்க
> தெரியாது

{ஹலோபினோ, சரியா? முன்பு எனக்கொரு பெண் தெரியும். அவள் பெயர் Jesinta,
 ஆனால் ஹசிந்தா என்றழைக்க வேண்டும்.}

ஆனாலும், வேந்தருக்கு குறும்பு அதிகம்தான்! ஸ்பானிஷ் சொல்லை ஆங்கிலேயர்களின் உச்சரிப்பிற்கு கடினம் அன்றோ. அமெரிக்காவில் 460 இலட்சத்திற்கு மேலான ஹிஸ்பானிக் சமூகம் இருக்கும்போது, ஜலோபினோவை ஹலோபினோ என்று உச்சரிப்பதில் வியப்பில்லையே!

மேலும் அப்பெயர் ஒரு இடுகுறிப் (proper noun) பெயராகவுள்ளதால் - ஒலி உச்சரிப்பு, எழுத்திற்கு தகுந்த உச்சரிப்பாக இருந்தாலும் சரியே.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 10:51:41 AM3/20/09
to minT...@googlegroups.com


2009/3/20 இராமதா சன் <rama...@amachu.net>
ஐயா
நான் சொன்னது சிறப்பு பெயர்களை
மஹாராஷ்ட்ரா என்ற மாநில பெயரையும் சொல்லலாம்.
 
--

devoo

unread,
Mar 20, 2009, 10:59:51 AM3/20/09
to மின்தமிழ்
Mar 20, 7:51 pm, வேந்தன் அரசு
//ஆனால் இஷ்டம், சஹாயம் போன்றவற்றை தவிர்க்க‌ வேண்டும்//
//நான் சொன்னது சிறப்பு பெயர்களை
மஹாராஷ்ட்ரா என்ற மாநில பெயரையும் சொல்லலாம்.//


சஹாய ராஜ் ,சஹாய மேரியை எப்படி எழுத வேண்டும்?

தேவ்

Hari Krishnan

unread,
Mar 20, 2009, 11:11:39 AM3/20/09
to minT...@googlegroups.com
2009/3/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
2009/3/20 இராமதா சன் <rama...@amachu.net>

On Fri, 2009-03-20 at 09:45 -0400, வேந்தன் அரசு wrote:
>
> ஹூஸ்டன் போன்ற சிறப்பு பெயர்களை கிரந்தம் கொண்டு எழுதலாம். ஆனால் இஷ்டம்,
> சஹாயம் போன்றவற்றை தவிர்க்க‌ வேண்டும்

சைக்காலஜி புரிஞ்சு போச்சு.

ஆங்கிலம்னா கிரந்தம் பயன்படுத்தலாம்.. அரபின்னா பயன்படுத்தலாம்..

சமஸ்கிருதம்னா கூடாது...
 
 
ஐயா
நான் சொன்னது சிறப்பு பெயர்களை
மஹாராஷ்ட்ரா என்ற மாநில பெயரையும் சொல்லலாம்.
 

ரொம்ப சரி.

கரி கிருட்டிணன். 



--
அன்புடன்,
கரிகி.

வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 11:20:42 AM3/20/09
to minT...@googlegroups.com



 

2009/3/20 devoo <rde...@gmail.com>
என் முந்திய மடல்களை நீங்கள் கண்டு கொள்ளவில்லை போலும்
ஹ என்ற கிரந்த சொல் இருப்பதால்தான் சஹாய மேரி என பெயர் வைக்கிறார்கள். இல்லெனில் சூட்டும் போதே அருள்மேரி என வைத்துக்கொள்வார்கள்

வெள்ளையனிடம் போய் ஹூஸ்டன் என்று பெயர் வைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது.  சகாய மேரி என வைக்கசொல்லி தமிழனிடம் கோரலாம்.
 
தமிழனுக்கு சகாயமும் சஹாயமும் ஒரே பொருள்தான்
 

 
 



வேந்தன் அரசு

unread,
Mar 20, 2009, 11:24:12 AM3/20/09
to minT...@googlegroups.com


2009/3/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
அரி கிருட்டிணன் என்று எழுதலாம் என உங்களுக்கு தோன்றாமல் போனது வியப்பே.
 
உங்களை நேரில் கண்டிராததால் "கரி" பொருந்துமா என்பதும் புலப்ப‌டவில்லை
32B.gif

இராமதாசன்

unread,
Mar 20, 2009, 11:28:59 AM3/20/09
to minT...@googlegroups.com
On Fri, 2009-03-20 at 11:24 -0400, வேந்தன் அரசு wrote:
>
> உங்களை நேரில் கண்டிராததால் "கரி" பொருந்துமா என்பதும் புலப்ப‌டவில்லை

கிருஷ்ண - கரிய - கண் போன்ற ? கண்ணன் - கிருஷ்ணன்

--

ஆமாச்சு

செல்வா

unread,
Mar 20, 2009, 12:07:11 PM3/20/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com
> சஹாய ராஜ் ,சஹாய மேரியை எப்படி எழுத வேண்டும்?
>
> தேவ்

எப்படி எழுத வேண்டும் என்று கேட்பதால்:

சகாய ராசு, சகாய மேரி

இப்ப ஆங்கிலத்திலே ஞானசம்பந்தன், யாழினி, அழகப்பன், கண்ணன்,
வள்ளி, வள்ளியப்பன் என்னும் பெயர்களை எப்படி எழுத வேண்டும் என்று
கேட்டுப்பார்க்கலாம். Jesus என்னும் பெயரை எசுப்பானியர்
Hesoos என்பதாகத்தான் பலுக்குகிறார்கள் (ஒலிக்கின்றார்கள்).

மொழிக்கு மொழி ஒலித்திரிபுகள் நிகழ்வது இயல்பு, இயற்கை.
இதனைப் புரிந்து கொள்வது இவ்வளவு கடினம் என்று
நிறைய மேர் நினைத்திருக்க மாட்டார்கள்.

செல்வா

செல்வா

unread,
Mar 20, 2009, 12:34:32 PM3/20/09
to மின்தமிழ்
எழுத்துப்பிழை:
"நிறைய பேர் நினைத்திருக்க மாட்டார்கள்." என்று படிக்கவும்

> > தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வா

unread,
Mar 20, 2009, 12:47:35 PM3/20/09
to மின்தமிழ்
> எப்படி எழுத வேண்டும் என்று கேட்பதால்:
>
> சகாய ராசு, சகாய மேரி

இன்னும் ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்றால்,
சஃகாய ராசு சஃகாய மேரி என்றும் எழுதலாம்.

இன்னும் கூடுதலான தமிழ் இலக்கணப்படியும்
முறைப்படி காற்றொலி சகரமும் வர
எழுத வேண்டும் என்றால்,

இசஃகாய இராசு, இசஃகாய மேரி என்றும் எழுதலாம்.

தமிழ் எழுத்துகளைக் கொண்டே திரிபொலிகள்
காட்டி எழுதவேண்டும் என்றால் (இது ஏதும் ஏற்பு
பெற்றதல்ல, ஒலிப்புகாட்ட மட்டுமே)

˘சஃகாய ரா°ச், ˘சஃகாய மேரி என்றோ
˘சஃகாய ரா'ச் ˘சஃகாய மேரி என்றோ எழுதலாம்.

[ °க = ga °ச=ja, °ட= da, °த= dha, °ப= ba, °ச= fa, ˘ச=Sa, ^ச=sha,
*ச= za, °அ=ha, °இ=hi ...]

[ ° அல்லது ' பயன்படுத்தலாம், அல்லது வேறு சிறு குறிகள்]

செல்வா


On Mar 20, 12:07 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 20, 2009, 2:31:46 PM3/20/09
to minT...@googlegroups.com


2009/3/20 செல்வா <c.r.sel...@gmail.com>

> எப்படி எழுத வேண்டும் என்று கேட்பதால்:
>
> சகாய ராசு, சகாய மேரி

இன்னும் ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்றால்,
சஃகாய ராசு சஃகாய மேரி என்றும் எழுதலாம்.

இன்னும் கூடுதலான தமிழ் இலக்கணப்படியும்
முறைப்படி காற்றொலி சகரமும் வர
எழுத வேண்டும் என்றால்,

இசஃகாய இராசு, இசஃகாய மேரி என்றும் எழுதலாம்.

தமிழ் எழுத்துகளைக் கொண்டே திரிபொலிகள்
காட்டி எழுதவேண்டும் என்றால் (இது ஏதும் ஏற்பு
பெற்றதல்ல, ஒலிப்புகாட்ட மட்டுமே)

 ˘சஃகாய ரா°ச்,   ˘சஃகாய மேரி என்றோ
 ˘சஃகாய ரா'ச்  ˘சஃகாய மேரி  என்றோ எழுதலாம்.

[  °க = ga °ச=ja, °ட= da, °த= dha, °ப=  ba,  °ச= fa,  ˘ச=Sa, ^ச=sha,
*ச= za, °அ=ha, °இ=hi ...]

[  °  அல்லது ' பயன்படுத்தலாம், அல்லது வேறு சிறு குறிகள்]

செல்வா


 
 
இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
 
ஆங்கிலத்தில் ஒலித்துல்லியத்தை எதிர்பார்க்கும் செல்வா நமது பெயர்ச்சொற்களுக்கு அது தேவையற்றது என்று நினைக்கிறார் போலும்.
 
ஹ என்ற காற்றொலியைத் தருவதற்கு எப்படி எப்படியோ குறியீடுகளை தயார் செய்துகொண்டே போகலாம். ஆனால் மிக எளிமையானதும் வழக்கிலிருப்பதும் அனைவரும் அறிந்ததும் மிக முக்கியமாக மிகமிகச் சரியானதுமான ஒரு குறியீடு வேண்டாம். அப்படித்தானே!
 
எவ்வளவு வெருப்பு. மாமியார்களும் நாத்தனார்களும் மறுமகல்களும் கெட்டார்கள் போங்கள்!
 
நடராஜன்.

செல்வா

unread,
Mar 20, 2009, 3:54:43 PM3/20/09
to மின்தமிழ்
தமிழ் முறை சகாய ராசு, சகாய மேரி.

மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.
மாமியார் மருமகள் எல்லாம் என்ன பேச்சு?

சஃகாய என்று எழுதுவதும் தமிழ் எழுத்துகளில் எழுதுவதே.

கிரந்த எழுத்துக்களையோ பிற எழுத்துகளையோ
சேர்த்து எழுதுவதில் பல அடிப்படையான
நேர்மையான மறுப்புகள் உள்ளன.

அதை விடுத்து வேறு ஒரு நோக்கில்
சிலரிடம் இருக்கும்
பொதுவான ஓர் எண்ணம் என்னவென்றால்
தமிழில் G, J, D, Dh, B, F, S, Sh, Z , H முதலானவற்றின்
ஒலியைக் குறிக்க முறை இருந்தால் நன்றாக இருக்கும்
என்பது. இது நல்லதா கெட்டதா என்பது வேறு உரையாடல்.
நான் அதனை இங்கு கூற வரவில்லை. அடுத்து
சீன மொழிகளில் "ஓரெழுத்துச் சொல்" ஒலிகளில் பல்வேறு
ஏற்றத்தாழ்வுகள் உள்ளன , அவற்றால் சொல்லின் பொருளே
மிகவும் மாறுபடுகின்றது. இவற்றைக் குறிக்க முறைகள் வேண்டும்
என்றும் கருதுகின்றனர். எ.கா மா (ma) என்பதைக் குறிக்க
பல ஒலியேற்ற இறக்கங்கள் உள்ளன.

ஆங்கிலத்தில்

26 எழுத்துகளைக் கொண்டு, குறியீடுகள் (மேற்புள்ளி,
கீழ்ப்புள்ளி என்பதாக பற்பல ஒலித்திரிபுக்குறிகள்) இட்டு
உலகில் உள்ள பற்பல (நூற்றுக்கணக்கான)
மொழி இலக்கியங்களை எழுதுவது
மட்டுமன்றி மிக விரிவாக பேசி அலசுகின்றனர். அவர்கள்
தங்கள் அகரவரிசையில் புது எழுத்துகளைச் சேர்த்துக்கொள்ள
வில்லை. அரபு மொழியில் இருந்து சீன மொழிவரை.
அலசுகிறார்கள்.
சமசுக்கிருத அறிவு கூட உலகில் சில பல
ஆயிரம் மக்களிடமாவது (இந்தியர்கள் உட்பட)
பெருகுவதற்கும் அவர்களின் இந்த முறையே உதவியது.


அதுபோலவே ஒரே *ஒரு* குறியைக் கொண்டு
G, J, D, Dh, B, F, H ஆகிய 7 வேற்றொலிளையும் அவற்றின்
உயிரேறிய மெய்களையும்
(h நீங்கிய உயிர் 7 + உயிர்மெய் 8x12 = 79)
குறிக்க முடியும்.
S, Sh, Z ஆகியவற்றைக் குறிக்க இன்னும் 3 குறிகள்
(Z ஐ விட்டால் இரண்டு குறிகள்) போதும். இப்பொழுது
ஜ என்கிறோம். அதன் வழி ஜா, ஜி, ஜீ, ஜு,.. என்றெல்லாம்
எழுதுகிறோம், B, F, G, Dh, D ஆகியவற்றுக்கும் புதிய எழுத்துகள்
புகுத்தி இப்பொழுது இருக்கும் 66 ஐச்சேர்க்க்கூறும் எழுத்துகளுக்கு
மேல் இன்னும் 66 எழுத்துகள் சேர்க்க வேண்டுமா? அப்புறம்
சீனம் எப்படி, உருசிய மொழி எப்படி, நிப்பானிய, போலந்திய
மொழிகள் எப்படி...

பலர் நினைப்பது போல் கிரந்தம் 4 எழுத்துகள் அல்ல
ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ (5x12 + 5 (மெய்)+1 = 66) எழுத்துகள்.
247 எழுத்தே கூடுதல் என்று நினைக்கும்பொழுது
இன்னும் 66 சேர்ப்பார்களா?
அப்படிச் சேர்த்தாலும் "குறை" இருக்கும்,
இன்னும் 65 எழுத்துகள் சேர்க்க வேண்டும்.
அப்புறம் உசா என்பதில் வரும் சகரம் ஷ அல்ல அது கடின ஷ
என்று கூறி இன்னும் ஒரு 12 +1 = 13 சேர்ப்பர். எங்கே முடியும்??

ஒலித்திரிபுக் குறி இடுவதில் (பொது மொழிக்கு அல்ல, ஒலிப்பு
காட்ட அல்லது மிக மிகச்சிறுபான்மையான இடங்களில் பயன்படுத்த),
நன்மை என்னவென்றால் ஒரு குறி போதும் அல்லது 3-4 குறிகள் போதும்.
புது எழுத்துகள் ஏதும் கற்றவேண்டாம். °ச = ஜ என்று கொண்டால்,
°சா, °சி, °சீ, °சு, °சூ .. என்று தெரிந்த, உள்ள எழுத்துகளைக் கொண்டே
ஒலித்திரிபு காட்டலாம்.
இதே முறையை °ப, °பா, °பி, °பு °பூ.. என்று எழுதலாம்.
°பிரிட்டானிக்கா என்று எழுதலாம். புதிய எழுத்து சேர்க்க வேண்டியதிலை.
°காந்தி என்று எழுதலாம். °பில் கிளின்ட்டன் என்று எழுதலாம்.
°வெர்மி என்று எழுதலாம்.

குறைந்த குறியீடுகளைக் கொண்டு நிரைய
ஒலிகளைக் காட்ட இயன்றால் அது அறிவுடைய போக்கு அல்லவா?
எளிமைப் படுத்துதல் நல்லதல்லவா?

ஒலி முக்கியம் என்றால் இதில் நன்மைகள் கூட.

ஒலித்துல்லியம் என்று சொல்லி ஏராளமாகக் குறியீடுகள்
(அல்லது புது எழுத்துகள்)
இட்டு எழுதினால் படு கொலையாகும். தமிழ் மொழி சிதையும்.

இவை தேவையா, இல்லை. ஒலிப்பு காட்டஓரிடத்தில்
இடலாம். மற்ற இடங்களில் நம் மொழிவழக்குப் படி திரித்தே
எழுதுதல் வேண்டும். ஆனால் சிறப்பு நூல்களில் (வேற்று மொழி
இலக்கியத்தை மூல மொழி மொழியில் இட்டு எழுதி
அலசும் சிறப்பு நூல்களில் தெளிவான குறியீட்டுக் கொள்கை
வைத்து, குறிகள் பெய்தும் எழுதும் தேவை இருக்கும்).

செல்வா


On Mar 20, 2:31 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/3/20 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> நடராஜன்.- Hide quoted text -

செல்வா

unread,
Mar 20, 2009, 4:09:14 PM3/20/09
to மின்தமிழ்
பிழைகள் திருத்தி:

(h நீங்கிய உயிர் 6 + உயிர்மெய் 7x12 = 90)


குறிக்க முடியும்.
S, Sh, Z ஆகியவற்றைக் குறிக்க இன்னும் 3 குறிகள்
(Z ஐ விட்டால் இரண்டு குறிகள்) போதும். இப்பொழுது
ஜ என்கிறோம். அதன் வழி ஜா, ஜி, ஜீ, ஜு,.. என்றெல்லாம்
எழுதுகிறோம், B, F, G, Dh, D ஆகியவற்றுக்கும் புதிய எழுத்துகள்
புகுத்தி இப்பொழுது இருக்கும் 66 ஐச்சேர்க்க்கூறும் எழுத்துகளுக்கு

மேல் இன்னும் 65 எழுத்துகள் சேர்க்க வேண்டுமா? அப்புறம்


செல்வா

> (h நீங்கிய உயிர் 6 + உயிர்மெய் 7x12 = 90)


> குறிக்க முடியும்.
> S, Sh, Z  ஆகியவற்றைக் குறிக்க இன்னும் 3 குறிகள்
> (Z ஐ விட்டால் இரண்டு குறிகள்) போதும்.  இப்பொழுது
> ஜ என்கிறோம். அதன் வழி ஜா, ஜி, ஜீ, ஜு,.. என்றெல்லாம்
> எழுதுகிறோம், B, F, G, Dh, D ஆகியவற்றுக்கும் புதிய எழுத்துகள்
> புகுத்தி இப்பொழுது இருக்கும் 66 ஐச்சேர்க்க்கூறும் எழுத்துகளுக்கு

> மேல் இன்னும் 65 எழுத்துகள் சேர்க்க வேண்டுமா? அப்புறம்

> ...
>
> read more »- Hide quoted text -

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 21, 2009, 12:40:14 PM3/21/09
to minT...@googlegroups.com
2009/3/20 இராமதா சன் <rama...@amachu.net>
On Fri, 2009-03-20 at 09:45 -0400, வேந்தன் அரசு wrote:
 
அதேதான். அதேதான். மீண்டும் மீண்டும் இதைப் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
நடராஜன்.

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 21, 2009, 12:42:09 PM3/21/09
to minT...@googlegroups.com
2009/3/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
2009/3/20 இராமதா சன் <rama...@amachu.net>

On Fri, 2009-03-20 at 09:45 -0400, வேந்தன் அரசு wrote:
>
> ஹூஸ்டன் போன்ற சிறப்பு பெயர்களை கிரந்தம் கொண்டு எழுதலாம். ஆனால் இஷ்டம்,
> சஹாயம் போன்றவற்றை தவிர்க்க‌ வேண்டும்

சைக்காலஜி புரிஞ்சு போச்சு.

ஆங்கிலம்னா கிரந்தம் பயன்படுத்தலாம்.. அரபின்னா பயன்படுத்தலாம்..

சமஸ்கிருதம்னா கூடாது...
 
 
ஐயா
நான் சொன்னது சிறப்பு பெயர்களை
மஹாராஷ்ட்ரா என்ற மாநில பெயரையும் சொல்லலாம்.
 
--
 
 
ஆனால் மஹாலிங்கத்தை மகாலிங்கம் என்று எழுதவேண்டும். அப்படித்தானே!

Hari Krishnan

unread,
Mar 21, 2009, 12:50:53 PM3/21/09
to minT...@googlegroups.com
2009/3/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அரி கிருட்டிணன் என்று எழுதலாம் என உங்களுக்கு தோன்றாமல் போனது வியப்பே.

கமலகாசன், கெலிகாப்டர், மகாராச்ட்ரம்..... அதே தர்க்கம்தானே கரி கிருட்டிணனுக்கும்?  இல்லாவிட்டால் கமலஆசன், எலிகாப்டர் என்று எழுதச் சொல்லுங்கள். 

உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  கரிகிருட்டின குலம் என்றே சிலர் இருக்கிறார்கள்.  சென்னை பழவந்தாங்கல் சப்வே சாலையில் வந்து நங்கநல்லூருக்குத் திரும்பும் முனையில் ஒரு வீடு உண்டு.  கரிகிருட்டின குலம் என்றே அந்த வீட்டுக்குப் பெயர்.
 
 
உங்களை நேரில் கண்டிராததால் "கரி" பொருந்துமா என்பதும் புலப்ப‌டவில்லை

ராசேந்திரனுக்கு வேண்டுமானால் பொருந்தாமல் இருக்கலாம்.  எனக்குப் பொருந்தும். 


--
அன்புடன்,
ஹரிகி.
32B.gif

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 21, 2009, 1:05:59 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 செல்வா <c.r.sel...@gmail.com>

தமிழ் முறை சகாய ராசு,  சகாய மேரி.
 
சஹாய மேரியில் சஹாய என்பது பெயரடை. தமிழ்முறைப்படி என்றால் இதை மொழிபெயர்த்திருக்க வேண்டும். அப்படியே வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதாக இருந்தால் வழக்கத்தில் இருக்கும் சிறப்பு வரிவடிவங்கலைப் பயன்படுத்தவேண்டும்.

மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.
மாமியார் மருமகள் எல்லாம் என்ன பேச்சு?
மாமியாரைக் கண்டுகொண்ட நீங்கள் என் மற்ற கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
//இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப் பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின் உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?


சஃகாய என்று எழுதுவதும் தமிழ் எழுத்துகளில் எழுதுவதே.
சஃகாய என்று எழுதினால் சஹ்ஹாய என்கிற உச்சரிப்புக்கு அருகில் வரும்.

கிரந்த எழுத்துக்களையோ பிற எழுத்துகளையோ
சேர்த்து எழுதுவதில் பல அடிப்படையான
நேர்மையான மறுப்புகள் உள்ளன.
இதை தனி கட்டுரையாக எழுதுங்கள் அல்லது சுட்டி ஏதாவது இருந்தால் தாருங்கள்.



தமிழில் G, J, D, Dh, B, F, S, Sh, Z , H முதலானவற்றின்
ஒலியைக் குறிக்க முறை இருந்தால் நன்றாக இருக்கும்
என்பது.
இவற்றில் J, S, Sh, H ஆகியவற்றுக்கு ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. மற்ற ஒலிகளுக்கான தேவை ஏற்படுமாயின் புதிதாக வரிவடிவங்களை சேர்க்கலாம்.
 
26 எழுத்துகளைக் கொண்டு, குறியீடுகள் (மேற்புள்ளி,
கீழ்ப்புள்ளி என்பதாக பற்பல ஒலித்திரிபுக்குறிகள்)  இட்டு
உலகில் உள்ள பற்பல (நூற்றுக்கணக்கான)
மொழி இலக்கியங்களை எழுதுவது
மட்டுமன்றி மிக விரிவாக பேசி அலசுகின்றனர்.
இவை வேறு எழுத்துருக்களைச் சேர்ப்பதற்கான வேறு முறைகளே அன்றி அவர்களுடைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் என்பதாகாது.

 இப்பொழுது
ஜ என்கிறோம். அதன் வழி ஜா, ஜி, ஜீ, ஜு,.. என்றெல்லாம்
எழுதுகிறோம், B, F, G, Dh, D ஆகியவற்றுக்கும் புதிய எழுத்துகள்
புகுத்தி இப்பொழுது இருக்கும் 66 ஐச்சேர்க்க்கூறும் எழுத்துகளுக்கு
மேல் இன்னும் 66 எழுத்துகள் சேர்க்க வேண்டுமா?
பலர் நினைப்பது போல் கிரந்தம் 4 எழுத்துகள் அல்ல
ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ (5x12 + 5 (மெய்)+1 = 66) எழுத்துகள்.
247 எழுத்தே கூடுதல் என்று நினைக்கும்பொழுது
இன்னும் 66 சேர்ப்பார்களா?
ங எழுத்தின் வருக்கங்களுக்கு நீங்கள் கூறிய பதில் இதற்கும் பொருந்துமே1
 
அப்புறம் உசா என்பதில் வரும் சகரம் ஷ அல்ல அது கடின ஷ
என்று கூறி இன்னும் ஒரு 12 +1 = 13 சேர்ப்பர். எங்கே முடியும்??
இதற்கான தேவை பெரிதாக உணரப்படவில்லை என்பதாலேயே கிரந்த எழுத்துக்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாக ஏறாமல் இருக்கிறது.
 
 
நடராஜன்.

N. Ganesan

unread,
Mar 21, 2009, 1:19:12 PM3/21/09
to மின்தமிழ்

NATARAJAN SRINIVASAN wrote:
> 2009/3/21 செல்வா <c.r.sel...@gmail.com>
>
> > தமிழ் முறை சகாய ராசு, சகாய மேரி.
> >
>
> சஹாய மேரியில் சஹாய என்பது பெயரடை. தமிழ்முறைப்படி என்றால் இதை
> மொழிபெயர்த்திருக்க வேண்டும். அப்படியே வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதாக
> இருந்தால் வழக்கத்தில் இருக்கும் சிறப்பு வரிவடிவங்கலைப் பயன்படுத்தவேண்டும்.
>
> >
> > மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.
> > மாமியார் மருமகள் எல்லாம் என்ன பேச்சு?
>
> மாமியாரைக் கண்டுகொண்ட நீங்கள் என் மற்ற கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது
> ஏன்?
> //இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய
> மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப்
> பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின்
> உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?
>
> >
> >
> > சஃகாய என்று எழுதுவதும் தமிழ் எழுத்துகளில் எழுதுவதே.
> >
> சஃகாய என்று எழுதினால் சஹ்ஹாய என்கிற உச்சரிப்புக்கு அருகில் வரும்.
>
> >
> > கிரந்த எழுத்துக்களையோ பிற எழுத்துகளையோ
> > சேர்த்து எழுதுவதில் பல அடிப்படையான
> > நேர்மையான மறுப்புகள் உள்ளன.
>
> இதை தனி கட்டுரையாக எழுதுங்கள் அல்லது சுட்டி ஏதாவது இருந்தால் தாருங்கள்.
>

ஓகை நடராஜன்,

பேரா. செல்வகுமாரின் பழைய கட்டுரை (1999).

படிப்போருக்குச் சௌகர்யமாக இருக்கட்டும் என்று
முன்பு வலைப்பூ ஏற்றியது:
http://nganesan.blogspot.com/2008/01/1999.html

பலருக்கும் பயன்படும்.

----------------

என் பழைய பதிவு, யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...
http://nganesan.blogspot.com/2008/01/sha.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 21, 2009, 1:54:13 PM3/21/09
to மின்தமிழ்

அன்பின் ரெ.கா,

ஜ, ஹ, ஷ, ஸ, ஸ்ரீயின் ஶ - இவை 5 கிரந்த எழுத்தும்
சென்னை லெக்சிகனிலும், இண்பிட் பரிந்துரையால்
யூனிகோடிலும் உள்ளது, பலர் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
அதற்கான சார்பெழுத்துக்கள் (உயிர்மெய்கள்) இருக்கின்றன.
இவற்றின் உபயோகங்களில் மிக முக்கியமானது தமிழ் அல்லாத
பிற இந்திய மொழி வலைப்பக்கங்களைத் “தமிழ் எழுத்தில்”
காட்டல் தான் என்று கருதுகிறேன்.

தமிழ் மொழியில் கிரந்தப் புழக்கம் குறைந்தால் தனித்தமிழ் வளரும்.

Let us all note the differences between "Tamil script" (as defined by
computer
professionals) and Tamil language.


கிரந்த நீக்கம்:
----------------------------


பேரா. செல்வகுமாரின் பழைய கட்டுரை (1999).

http://nganesan.blogspot.com/2008/01/1999.html

இம்முறையை யாரும் பயன்படுத்துவதாய்த் தெரியவில்லை.
தனித்தமிழில் எழுதும் நாக. இளங்கோ முதலில் தொடங்கினார்
என்பதாக ஞாபகம், பிறகு விட்டுவிட்டார். இராமகி ஐயா
செல்வாவின் முறையை பயன்படுத்தியதாகவோ, பரிந்துரைத்ததாகவோ
நினைவில்லை. வேந்தன் அரசு அவர்களின் கருத்தறிய ஆவல்.

அன்புடன்,
நா. கணேசன்


வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 2:31:24 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Hari Krishnan <hari.har...@gmail.com>



2009/3/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


 
 
அரி கிருட்டிணன் என்று எழுதலாம் என உங்களுக்கு தோன்றாமல் போனது வியப்பே.

கமலகாசன், கெலிகாப்டர், மகாராச்ட்ரம்..... அதே தர்க்கம்தானே கரி கிருட்டிணனுக்கும்?  இல்லாவிட்டால் கமலஆசன், எலிகாப்டர் என்று எழுதச் சொல்லுங்கள். 


ஐயா
ஹ என்ற எழுத்து இல்லை என்றால் கமலஹாசன் என்ற பெயரை அவர் தந்தை வைத்து இருக்க மாட்டார், ஜ இல்லாமல் இருந்தால் எந்தையும் ராஜேந்திரன் என்று சூட்டி இருக்க மாட்டார்.

கெலிகாப்டர் என்பதை உலங்கு வானுர்தி என்று அழைக்கலாம்.

மகாராஷ்ட்ரம் என்பதை அப்படியே விரும்புவோர் எழுதலாம். மராட்டியம் என்று நாங்கள் எழுதினாலும்.  மஹாராஷ்ட்ரம் என ஏன் சூட்டினாய் என்று் மராட்டியர்களை  கேட்க எமக்கு உரிமை இல்லை.

நாங்கள் மொழியை எங்கள் பண்பாடு கலை நாகரிகம் போன்றவற்றை தலைமுறைக்கும் எடுத்து செல்லும் மரபணுவாக கருதுகிறோம். நீங்கள் அதை வெறும் கருவியாகவே கருதுகிறீர்கள்

எங்களை நீங்கள் புரிந்து கொள்ளும் வரையில் இந்த வாதம் தொடரும்தான்.

Va.Mu.Se. Kavi Arasan

unread,
Mar 21, 2009, 4:04:33 PM3/21/09
to minT...@googlegroups.com
அமெரிக்கர்கள் தெளிவாக ஃகாலபீனோ என்று தானே படிக்கின்றனர்.  அவருக்குக் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லையே...
 
அன்புடன்
.கவி.

--- On Fri, 3/20/09, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Mar 21, 2009, 4:12:05 PM3/21/09
to மின்தமிழ்

On Mar 21, 3:04 pm, "Va.Mu.Se. Kavi Arasan" <kaviara...@yahoo.com>
wrote:


> அமெரிக்கர்கள் தெளிவாக ஃகாலபீனோ என்று தானே படிக்கின்றனர்.  அவருக்குக் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லையே...
>  

ஞோ ஓசை இருக்கிறது. ஃகாலபீன்யோ, ஃகாலபீஞோ

> அன்புடன்
> .கவி.
>

> --- On Fri, 3/20/09, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

Va.Mu.Se. Kavi Arasan

unread,
Mar 21, 2009, 4:22:18 PM3/21/09
to minT...@googlegroups.com
நன்றி திரு. கணேசன்.
 
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு தானே.
 
எப்படி அமெரிக்கர் மட்டுமல்ல அமெரிக்கத் தமிழரும்  தெளிவாக  ஒலிக்கின்றனர்?
 
அதே முறை தமிழுக்கும் பொருந்தும் தானே :)
 
ஒரு முறை தவறாக ஒலிப்பவன், பின் தானாகவே திருந்திக் கொள்கிறான்.
 
இன்னும் ‘ழ’ வையே ஒலிக்கத் தெரியாத தமிழர்கள் மத்தியில்  பிறமொழி ஒலி தெளிவாக கிரந்தம் தேவை என வாதிடுவது ஏன்?
 
அன்புடன்
.கவி. 

--- On Sat, 3/21/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 4:46:55 PM3/21/09
to minT...@googlegroups.com
தமிழனே ஆங்கிலத்தில் சொல்லும் போது டமில், வடா,  தோசா என்பான்

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 4:52:26 PM3/21/09
to minT...@googlegroups.com
கிரந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன?

கிரந்த எழுத்துகள் பயன்பாட்டில் மாறுபாடுகள் இருந்தாலும், "திருமுறை", "அருள் நெறி" நூல்களைப் போல், கிரந்தமும் கற்புள்ளச் சொல் அல்லவா?

சீக்கிய சமூகமும் குரு "கிரந்த்" சாகிப் என்று தங்கள் சமயநூலாக கருதிவருகின்றனர். சுறுக்கமாக அதை "கிரந்த்" என்று எனது சீக்கிய நண்பர்கள் கூறுவதை கேட்டுவுள்ளேன். கிரந்தம் என்பதிற்கு சரிநிகர் தமிழப்பெயரை, தனித்தமிழ் ஆர்வளர்கள் ஏன் மாற்றவில்லை என்ற ஐயம் என்னுள் எழுகிறது! நம் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துகளை மாற்றுவதிற்கு முதற்படியாக கிரந்தத்தை தமிழ்ப்படுத்துதல் வழுவாத தமிழ்நெறியிற்கு சால்பன்றோ!

மற்ற மொழிச்சொற்களை மதிப்பளிக்கும் தமிழ் மொழிக்கு, கிரந்தத்தை விட்டுவிட்டு, அதன் தமிழாக்கப் பெயரில் கலந்துரையடால் இழையை தொடர்ந்தால், தமிழர் மற்ற மொழிச்சொற்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் ஒரு சில பிறமொழி எழுத்துகளுக்கு பதிலாக தமிழ் எழுத்துகளையும் பயன்படுத்தலாம் என்று வினைத்திறமாக கூறுவதினால் தமிழ் மொழியின்பால் மதிப்பு கூடும் அல்லவா!

அந்த இழையின் தலைப்பில் கிரந்த எழுத்தின் "உபயோகம்" - தமிழப்படுத்த இயலாதா?


தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

பி.கு: "கவி" என்பதிற்கு இரு சொற்களில் அடங்கும் தமிழ்ச்சொல் என்ன?

Va.Mu.Se. Kavi Arasan

unread,
Mar 21, 2009, 5:20:42 PM3/21/09
to minT...@googlegroups.com
கவி என்பதற்கான ஓரெழுத்துத் தமிழ்ச்சொல்
 
கவி => பா
கவிக்கோ => பாக்கோ
கவிஅரசன் => பாவரசன்
பெருங்கவிக்கோ =>  பெரும்பாக்கோ
சிறுங்கவிக்கோ =>  சிறும்பாக்கோ
கவிமழை => பாமழை
கவிமலை => பாமலை
கவிஞர் => பாவாணர் (பாஞர், எனப் படித்த நினைவில்லை)
 
என.......
 
உபயோகம் => பயன்பாடு
 
அன்புடன்
.கவி.
--- On Sat, 3/21/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 6:30:51 PM3/21/09
to minT...@googlegroups.com
நன்றி "பாவரசன்"!

இவ்விழையை தனியிழையாய் - "கிரந்த எழுத்தின் பயன்பாடு" என்று பிரிவதற்கு முன், "கிரந்தம்" என்பதற்கும் நல்ல தமிழ்ப் பெயரை அவையோர் தெரிவித்தால் நலம் பயக்கும்.

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 7:06:24 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

நன்றி "பாவரசன்"!

இவ்விழையை தனியிழையாய் - "கிரந்த எழுத்தின் பயன்பாடு" என்று பிரிவதற்கு முன், "கிரந்தம்" என்பதற்கும் நல்ல தமிழ்ப் பெயரை அவையோர் தெரிவித்தால் நலம் பயக்கும்.

கெட்ட எழுத்துகள்
349.gif
347.gif
360.gif
322.gif
364.gif
363.gif
32B.gif
33E.gif
33D.gif
35E.gif
338.gif
35F.gif
332.gif
330.gif
343.gif
361.gif
362.gif

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 7:32:18 PM3/21/09
to minT...@googlegroups.com
> கெட்ட எழுத்துகள்

கிரந்தம் என்பதிற்கு அதுவா தமிழாக்கம்?

உங்களைப் போல் எல்லோரும் அப்படிச் சிந்திப்பதில்லை வேந்தனாரே!

தனித்தமிழ் ஆர்வளர்களும் பண்பட்டவர்கள். வேற்றுமொழிச் சொற்கள் இருப்பினும். பரிவோடு சொற்களைப் புத்தாக்கம் செய்வதில் தான் "தமிழர்" என்று சொல்லுவோருக்குச் சிறப்பு.

இன்று நேற்றல்ல, 12 - 13ஆம் நூற்றாண்டில் விளைந்த ஒரு மாற்றத்திற்கு, பொறுமையோடும், தெளிவோடும், கூட்டுறவோடும் சிலர் செய்யவிழையும் புத்தாகத்திற்கு நீங்களே விளங்கம் செய்து விடுவீர்கள் போல் உள்ளது! இப்படியான கருணையற்ற வெளிப்பாடுகளால் தான் தனித்தமிழுக்கு வேண்டிய வெற்றி கிட்டாமல் தவிக்கிறது!

வாழ்க வேந்தனாரே! ஒரு இயக்கத்திற்கு எவ்வகையில் ஆதரவை குறைக்கவேண்டுமோ, அதை நீங்களே செய்துவிடுவீர் போல் உங்கள் தமிழாக்கம் விளக்குகிறது!


தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

349.gif
347.gif
360.gif
322.gif
364.gif
363.gif
32B.gif
33E.gif
33D.gif
35E.gif
338.gif
35F.gif
332.gif
330.gif
343.gif
361.gif
362.gif

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 7:41:55 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

> கெட்ட எழுத்துகள்

கிரந்தம் என்பதிற்கு அதுவா தமிழாக்கம்?

உங்களைப் போல் எல்லோரும் அப்படிச் சிந்திப்பதில்லை வேந்தனாரே!

என் வழி தனீ ஈ வழி கண்ணன் நடராசரே. :)

--
349.gif
347.gif
360.gif
322.gif
364.gif
363.gif
32B.gif
33E.gif
33D.gif
35E.gif
338.gif
35F.gif
332.gif
330.gif
343.gif
361.gif
362.gif

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 7:54:26 PM3/21/09
to minT...@googlegroups.com
> என் வழி தனீ ஈ வழி

உங்கள் வாழ்க்கையில் 30-40, ஏன் இன்றும் உங்கள் பெயரை எழுதும்போது கூட (கையெழுத்து), வேண்டிய போது கிரந்தத்தைப் பயன்படுத்துவது, பிறகு தனிவழி என்று கூறிக்கொண்டு தப்பிப்பது!

உங்கள் கூற்றும் தமிழ் மொழியில் இருந்தாலும், அக்கூற்றைச் சொன்னவர்களின் தனிவழியைத் தான், தமிழுலகமே பார்த்து ஏமாந்துள்ளதே! நீங்களும் அப்படிச் சொல்லி தமிழர்கள் உய்ய வழித்தேடுகிறீர்களா? பார்ப்போம்.

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 9:19:13 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

> என் வழி தனீ ஈ வழி

உங்கள் வாழ்க்கையில் 30-40, ஏன் இன்றும் உங்கள் பெயரை எழுதும்போது கூட (கையெழுத்து), வேண்டிய போது கிரந்தத்தைப் பயன்படுத்துவது, பிறகு தனிவழி என்று கூறிக்கொண்டு தப்பிப்பது!


ஐயா நான் பள்ளியில் இந்தி பாட ஏடுகளில் मु. इरासेन्थिरन् என்றுதான் எழுதுவேன். ஏன் ஆசிரியருக்கு அது பிடிககது. நான் தமிழை கொலை செய்கிறேன் என்று சொன்னார்.

நான் தாயகத்தில் இருந்த வரை வங்கி முதல் என் எல்லா ஆவணங்களிலும் மு. இராசேந்திரன் என்றே ஒப்பம் இடுவேன். என் தலைச்சன் மகனுக்கு  சதீஸ் என்றே பெயர். அது என் மனைவியின் விருப்பம். ஆனால் மகளுக்கு சுதா கன்னல்மொழி என்றே பெயர். சுதமதி மாதவியின் தோழி.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செய்வோம்

நான் கமல ஃஆசனின் இரசிகன்.

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 9:36:40 PM3/21/09
to minT...@googlegroups.com
> நான் கமல ஃஆசனின் இரசிகன்.

ஏன் அவரையும் "தாமரை ஆசான்" என்று கூறலாமே:-))

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 9:44:00 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

> நான் கமல ஃஆசனின் இரசிகன்.

ஏன் அவரையும் "தாமரை ஆசான்" என்று கூறலாமே:-))

ஒருகாலத்தில் திராவிட கழகத்தினர் அவ்வாறே தம் பெயர்களை மாற்றிக்கொண்டனர்

யேசு
யோவான்
தோமையார்
பாறையார்
யாக்கோபு
ஈசாப்பு

இவங்க யாருன்னு தெரியுமுங்களா?

Kannan Natarajan

unread,
Mar 21, 2009, 9:51:15 PM3/21/09
to minT...@googlegroups.com
> இவங்க யாருன்னு தெரியுமுங்களா?

நன்றாக! விவிலிய வித்தகர்கள் மற்றும் திராவிட நண்பர்கள் அன்றோ!

வேந்தன் அரசு

unread,
Mar 21, 2009, 10:12:02 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

> இவங்க யாருன்னு தெரியுமுங்களா?

நன்றாக! விவிலிய வித்தகர்கள் மற்றும் திராவிட நண்பர்கள் அன்றோ!

இறக்குமதி மதம் என்றாலும் தமிழ் மரபு அறிந்தவராக இருந்தனரே!!
வெளிநாட்டார் உணர்ந்த தமிழ் மரபு நம்மவர் உணர மறுக்கின்றனர்

Tirumurti Vasudevan

unread,
Mar 21, 2009, 10:25:14 PM3/21/09
to minT...@googlegroups.com
ஆது சரி!
மதம் மாத்த அது அவங்களுக்கு தேவையா இருந்தது.

2009/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

இறக்குமதி மதம் என்றாலும் தமிழ் மரபு அறிந்தவராக இருந்தனரே!!
வெளிநாட்டார் உணர்ந்த தமிழ் மரபு நம்மவர் உணர மறுக்கின்றனர்



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Hari Krishnan

unread,
Mar 21, 2009, 11:51:08 PM3/21/09
to minT...@googlegroups.com


2009/3/21 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>


//இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப் பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின் உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?

கடந்த பத்தாண்டு இணைய உலகப் பழக்கத்தில் எத்தனையோ தனிமடல்கள். எத்தனையோபேர் பற்பல விதங்களில் என் பெயரை மாற்றி எழுதப் பரிந்துரைகிறார்கள்.

:அரி
ஃஅரி
~அரி

போன்றவை அவற்றுள் சில.  எப்படி எழுதினால் என்ன? The aspirated sound of H continues to be the same irrespective of the letter that is employed to represent that sound.  வடிவம் மாறுமே ஒழிய, ஒலி மாறப் போவதில்லையே!  அப்படியானால் ஒலியை ஒப்புக்கொள்ளத்தானே செய்கிறார்கள்?  வடிவம்தான் பகை, ஒலி பரவாயில்லை என்றால், why reinvent the wheel? 

Narayanan Kannan

unread,
Mar 21, 2009, 11:59:57 PM3/21/09
to minT...@googlegroups.com
2009/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> போன்றவை அவற்றுள் சில.  எப்படி எழுதினால் என்ன? The aspirated sound of H
> continues to be the same irrespective of the letter that is employed to
> represent that sound.  வடிவம் மாறுமே ஒழிய, ஒலி மாறப் போவதில்லையே!
>  அப்படியானால் ஒலியை ஒப்புக்கொள்ளத்தானே செய்கிறார்கள்?  வடிவம்தான் பகை, ஒலி
> பரவாயில்லை என்றால், why reinvent the wheel?
> --

இதைத்தான் ஐயா! நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். பேச்சில் இல்லாத
'தீண்டாமை' எழுதும் போது எங்கிருந்து வருகிறது என்று?

கொரிய மொழி படித்துக்கொண்டு வருகிறேன். பல ஒலிகளுக்கு ஈடான தமிழ் ஒலி
இருக்கிறது. ஆனால் கொரிய வழக்கிற்கே உரித்தான சில ஒலிகளை நான் என்ன
முயன்றும் எழுத முடியவில்லை. ஏனெனில் அதற்கு எழுத்துக்குறிப்பு இல்லை.
அப்போதுதான் உணர்ந்தேன், அவர்கள் தரும் குறியீட்டை அப்படியே
ஏற்றுக்கொண்டு பழக வேண்டியதுதான் என்று (கிரந்த எழுத்துப் பயன்பாட்டின்
உளவியல் இதுதான் என்று நம்புகிறேன்). அகில உலகமும் பரவி நிற்கும் தமிழன்
முன் தமிழ் பணிந்து நிற்கிறது. முழுமையான எழுத்துச் சீர்திருத்தம்
வேண்டும். அரைகுறை சீர்திருத்தம் குழப்பத்தில்தான் நிறுத்தும்.
இல்லையெனில் மொழி தன்னளவில் எப்படி உள்வாங்கி வளர்கிறது என்று கவனித்து
மகிழ வேண்டியதுதான். கணினியின் மாற்றங்கள் வாழ்வை இன்னும் இலகுவாக்கும்
என்று எதிர்பார்ப்போம்!

அட! கைதட்டி விட்டேனே!! (மன்னிக்க)

க.>

devoo

unread,
Mar 22, 2009, 1:17:50 AM3/22/09
to மின்தமிழ்
Mar 22, 8:51 am, Hari Krishnan

why reinvent the wheel?

இப்படி எழுதுவதால்தான் ‘அண்ணா’ ஆனீர்கள்.
‘வார்ப்பும் வனப்பும்’- என்ன உழைப்பு ?
என்ன கருத்தாழம் ?
சில பகுதிகள் பிடிபடவில்லை.
நேரில் பாடம் கேட்டால் புரியலாம்.

தேவ்

Kannan Natarajan

unread,
Mar 22, 2009, 1:59:52 AM3/22/09
to minT...@googlegroups.com
> why reinvent the wheel?

சற்று மாறுபாடான கருத்திலிருந்து பார்க்க நான் விழைகிறேன்.

"reinventing" பதிலாக "renewing" என்ற கோட்பாடில் பார்த்தோமானால், "ஹ" என்ற எழுத்திற்கு சான்றான எழுத்து தமிழில் இல்லாததனால், புதியத் தமிழ் எழுத்தின் ஒலி மாறாதது போல் தோன்றினாலும், பல முறை உச்சரிக்கும் போது 'ஹ' விலிருந்து திரிந்த "க" அல்லது "ஃ" எழுத்திற்கு ஒலி வேறுபாடுகள் அதிகமாக இருப்பதை, அத்திருந்தியச் சொல்லிற்கு உள்ளதை மறுக்கவியலாது.

They are phonetically dissimilar but the measures are to achieve a formal equivalence!

Kannan Natarajan

unread,
Mar 22, 2009, 2:13:03 AM3/22/09
to minT...@googlegroups.com
> வெளிநாட்டார் உணர்ந்த தமிழ் மரபு நம்மவர் உணர மறுக்கின்றனர்.

புதியதாக ஒன்றை புகுத்தவேண்டுமானால், அயலார் முதற்கண் தாங்கள் இடம்பெயர்ந்த நாட்டின் மரபு, மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களை நன்கு உணர்ந்த பின் தான், தங்கள் கோட்பாடுகளை படிப்படியாக அமுலுக்குக் கொண்டுவருவர். நம்மவர் மறுக்கவில்லை, மறுக்கவைக்க பலரின் தன்னிலைப் போக்கினால் படாதப் பாடுபடுகின்றனர்!


> இறக்குமதி மதம் என்றாலும் தமிழ் மரபு அறிந்தவராக இருந்தனரே!!

ஆதலால், இறக்குமதி மதம் என்றெல்லாம் இல்லாமல், நம்மவரை  "இறக்குவதும்", "மதி"யால் மேண்மை பெறுவதும் தான் வெளிநாட்டாரின் வெற்றியின் மறைபொருள்!

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 21, 2009, 8:28:46 PM3/21/09
to minT...@googlegroups.com
திரு. கண்ணன் நடராசனின் கூற்றைச் செயல் படுத்த அன்பர்கள் முயல வேண்டும்.
 
தவறாக இருந்தாலும் நமக்குத் தெரிந்ததை அன்பு கூர்ந்து எழுதுங்கள்.
 
குழுமத்தின் நக்கீரர்கள் பிழை திருத்துவர், தேவைப்படின்.
 
முயன்றால் முடியாதது உண்டா?
 
அன்புடன்
.கவி.

2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 4:01:17 AM3/22/09
to minT...@googlegroups.com
பா என்ற பெயருடைய என் வலைப்பூவுக்கு முடிந்தால் ஒரு நடை சென்று வாருங்கள்.
 
 
நடராஜன்.

2009/3/22 Va.Mu.Se. Kavi Arasan <kavia...@yahoo.com>

Narayanan Kannan

unread,
Mar 22, 2009, 4:05:12 AM3/22/09
to minT...@googlegroups.com
2009/3/22 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>:

> பா என்ற பெயருடைய என் வலைப்பூவுக்கு முடிந்தால் ஒரு நடை சென்று வாருங்கள்.
>
> http://oagaippaa.blogspot.com/
>

அடேங்கப் 'பா' ;-)

க.>

Tthamizth Tthenee

unread,
Mar 22, 2009, 7:32:45 AM3/22/09
to minT...@googlegroups.com
அமாவாசை
===========

எங்கே சென்றனை நிலவே?
----- இன்றும் ஒருசிறு விடுப்பா?
 
மதிப்பிற்குரிய ஓகை நடராசன் ஸ்ரீனிவாசன் அவர்களே
தங்களின்  http://oagaippaa.blogspot.com/ சென்று படித்தேன்
 
படித்தேன் குடித்தேன்
 
ஒரு சந்தேகம்   அமாவாசை என்னும் சொல் தமிழா?
அல்லது அதற்கு ஈடான தமிழ்ச்சொல் வேறு ஏதேனும் உண்டா
 
அதேபோல் பௌர்ணமி என்கிற சொல்லும் தமிழா
அல்லது அதற்கு ஈடாக தமிழ்ச்சொல் ஏதேனும் உண்டா?
தயவு செய்து ஐய்யம் தெளிவிப்பீர்களா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

devoo

unread,
Mar 22, 2009, 7:45:27 AM3/22/09
to மின்தமிழ்
பௌர்ணமி – நிறைமதி
அமாவாசை – மறைமதி

தேவ்

Tthamizth Tthenee

unread,
Mar 22, 2009, 8:04:42 AM3/22/09
to minT...@googlegroups.com
ஒரு கவிதையில் நான் எழுதும்போது
எனக்கு இச்சந்தேகம் வந்தது
 
என் மனதில் தோன்றிய இரு சொற்களைப் பயன்படுத்தினேன்
 
 
அதிரூப சுந்தரிக்கும் அழகில்லாப் பெண்களுக்கும் அமைப்பெல்லாம் ஒன்றேதான் அளவில்தான் வேறுபாடு
வெறிக்கின்றார் வெறிக்கின்றார் அதிரூப சுந்தரியை
வெறுக்கின்றார் வெறுக்கின்றார் அழகில்லாப் பெண்களைத்தான்
அமைப்பெல்லாம் ஒன்றேதான் அளவில்தான் வேறுபாடு
 
 
 
கற்றறிந்த புலவர்களும் கல்வியில்லா மூடர்களும்
தன்னடக்கம் மிகக் கொண்டே தான் வணங்கி இருக்கின்றார்
அமைப்பெல்லாம் ஒன்றேதான் உள்ளடக்கம்தான் வேறுபாடு
 
 
முழு நிலவோ  மறை நிலவோ  அலைகடல்தான் ஆர்ப்பரிக்கும்
அமைப்பெல்லாம் ஒன்றேதான் உள்ளடக்கம்தான் வேறுபாடு
 
என்று எழுதினேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 

 

Tthamizth Tthenee

unread,
Mar 22, 2009, 8:05:58 AM3/22/09
to minT...@googlegroups.com
நன்றி தேவூ அவர்களே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ




--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

devoo

unread,
Mar 22, 2009, 8:18:08 AM3/22/09
to மின்தமிழ்
//முழு நிலவோ மறை நிலவோ அலைகடல்தான் ஆர்ப்பரிக்கும்//

அருமை.

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 9:14:19 AM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஒப்புக்கொள்ளவில்லை ஐயா

தமிழில் ஹ என்ற எழுத்து இல்லை என்றால் நுந்தை நுமக்கு என்ன பேர் வைத்து இருப்பார் என எண்ணிப்பார்க்கவும்

நானும் இதே சக்கரத்தை எத்தனை முறை சுழற்றுவேன். புதிய பானையில் நீர் ஊற்றி நிறப்பலாம். பழைய பானையை கழுவுவதிலேயே என் காலம் கழிகிறது.

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 9:24:03 AM3/22/09
to minT...@googlegroups.com

இங்கிஷ்சை ஆங்கிலம் என்று அழைத்ததும்,
ஃப்ரேங்க்கை பறங்கி என்று பறைந்ததும்
சைனாவை சீனம் என் செப்பியதும்
Gரீக்கையை கிரேக்க  என் கூறியதும்
ஈஜிப்டை எகிப்து என்று உரைத்ததும்
ஏராப்பை அரபுகள் என்ற அறைந்ததும்
மயன்மாரை காழகம் என கழறியதும்
ஜாவாவை சாவகம் என சொல்லியதும்

எங்கள் தமிழ் மரபு

நீங்கள் கட்டளை நிறுவி காப்பது என்ன மரபோ?

--

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 9:41:01 AM3/22/09
to minT...@googlegroups.com
சற்றே மகிழும் பிள்ளாய்!

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பஹ்வான் முதற்றே லோகம்

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாருக்கு அலலால்
மனஸ்கவலை மாற்றல் அரிது

கோளில் பொறியில் guணமிலவே எண்guணத்தான்
தாளை வணங்கா தலை


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
க்ஷணமேயும் காத்தல் அரிது

லோகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

அனிச்சமும் ஹம்சத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் ப்பலம்

N. Ganesan

unread,
Mar 22, 2009, 9:50:35 AM3/22/09
to மின்தமிழ்

:)

உலகு-தல் - நகர்தல், இயங்குதல் உலகு/உலங்கு பற்றிப் பேசினோமே.
தமிழ் உலகு > லோக ஆகியிருக்கலாம்.

மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கானோமே. (Esp. -k- sound in loka).

(Cf. nukam:nakam from the verb nuku-/uku-. From Tamil nakam, Sasnkrit
'nakha'
- here too the -k- sound is not from Indo-European, experts told me.
Also, nukir:ukir 'nail' can be compared).

~ ng

இராமதாசன்

unread,
Mar 22, 2009, 10:21:41 AM3/22/09
to minT...@googlegroups.com
On ஞா, 2009-03-22 at 09:14 -0400, வேந்தன் அரசு wrote:
>
>
> தமிழில் ஹ என்ற எழுத்து இல்லை என்றால் நுந்தை நுமக்கு என்ன பேர் வைத்து
> இருப்பார் என எண்ணிப்பார்க்கவும்

தமிழ் தோன்றிய போது எத்தனை எழுத்திருந்தது?

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Mar 22, 2009, 10:24:31 AM3/22/09
to மின்தமிழ்

30.

> --
>
> ஆமாச்சு

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 10:28:34 AM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>
இராமதாசர் கேட்பது குரங்கு மொழி தமிழ் மொழியான போது.

இராமதாசன்

unread,
Mar 22, 2009, 10:37:53 AM3/22/09
to minT...@googlegroups.com
On ஞா, 2009-03-22 at 07:24 -0700, N. Ganesan wrote:
>
> 30.

எப்படி?

--

ஆமாச்சு

இராமதாசன்

unread,
Mar 22, 2009, 10:45:57 AM3/22/09
to minT...@googlegroups.com
On ஞா, 2009-03-22 at 09:24 -0400, வேந்தன் அரசு wrote:
>
> இங்கிஷ்சை ஆங்கிலம் என்று அழைத்ததும்,
> ஃப்ரேங்க்கை பறங்கி என்று பறைந்ததும்
> சைனாவை சீனம் என் செப்பியதும்
> Gரீக்கையை கிரேக்க என் கூறியதும்
> ஈஜிப்டை எகிப்து என்று உரைத்ததும்
> ஏராப்பை அரபுகள் என்ற அறைந்ததும்
> மயன்மாரை காழகம் என கழறியதும்
> ஜாவாவை சாவகம் என சொல்லியதும்
>
ஹூஸ்டன் அப்படியே இருக்கலாம் என்று சொன்னதும்

> எங்கள் தமிழ் மரபு

--

ஆமாச்சு


வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 10:55:14 AM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/22 இராமதா சன் <rama...@amachu.net>

வண்ணத்திக்கு வாழ்க்கைப்பட்டால் விடிய விடிய வெள்ளாவி வைக்கணுமாமே (:

திரு கணேசர் ஒரு பேரை கண்டு சொல்வார்.

devoo

unread,
Mar 22, 2009, 12:22:26 PM3/22/09
to மின்தமிழ்
Mar 22, 6:24 pm, வேந்தன் அரசு
//இங்கிஷ்சை ஆங்கிலம் என்று அழைத்ததும்,

> > ஃப்ரேங்க்கை பறங்கி என்று பறைந்ததும்
> > சைனாவை சீனம் என் செப்பியதும்
> > Gரீக்கையை கிரேக்க என் கூறியதும்
> > ஈஜிப்டை எகிப்து என்று உரைத்ததும்
> > ஏராப்பை அரபுகள் என்ற அறைந்ததும்
> > மயன்மாரை காழகம் என கழறியதும்
> > ஜாவாவை சாவகம் என சொல்லியதும்//

ஆஹா , மன்னிக்க ஆகா !!
அழை,பறை,செப்பு,கூறு,உரை,அறை,கழறு,சொல்,பகர்,மொழி
மேலும் உள்ளனவா வேந்தரே ?

தேவ்

N. Ganesan

unread,
Mar 22, 2009, 12:23:46 PM3/22/09
to மின்தமிழ்

இராமதாசன் wrote:
> On ஞா, 2009-03-22 at 07:24 -0700, N. Ganesan wrote:
> >
> > 30.
>
> எப்படி?
>

வடமொழி எழுத்து 50,
அப்படி
தமிழ் எழுத்து 30.

மேலும் அறிய,

http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/170a76b09c6d7d4d/bcb23e8504eeb37d#


நா. கணேசன்

> --
>
> ஆமாச்சு

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:12:14 PM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/21 N. Ganesan naa.g...@gmail.com
 
ஓகை நடராஜன்,

பேரா. செல்வகுமாரின் பழைய கட்டுரை (1999).

படிப்போருக்குச் சௌகர்யமாக இருக்கட்டும் என்று
முன்பு வலைப்பூ ஏற்றியது:
http://nganesan.blogspot.com/2008/01/1999.html

பலருக்கும் பயன்படும்.

----------------

என் பழைய பதிவு, யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...
நா. கணேசன்
 
 
 

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:25:49 PM3/22/09
to minT...@googlegroups.com
நா.கணேசன் அவர்களே,
 
கிரந்தநீக்கம் சுட்டியில் பேரா, செல்வக்குமார் கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாக வேறு வழிமுறையை முன்வைத்திருந்தார். எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் வேறு சிலகுறியீடுகளைப்  பயன்படுத்தலாமென்று சொல்லியிருக்கிறார். மேலும் ஆங்கிலத்தின் சில மெய்யொலிகளிக்கும் குறியீடுகள் வேண்டும் என்று கூறுகிறார். இது தற்பவ தற்சம முறைகளில் அயல்மொழிச் சொற்களை மாற்றாமல் அவற்றை அப்படியே பயன்படுத்த தேவைப்படுகின்ற முயற்சிகள். குறியீடுகளோ அல்லது எழுத்துகளோ வேற்றொலிகள் தமிழில் எழுதுவதற்கு மறுப்பில்லை.
 
ஓம் ஒற்றை எழுத்துருவாக்கத்துக்கு நீங்கள் முன்னெடுத்த முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன்.
 
அன்புடன்
நடராஜன்.
 

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:31:50 PM3/22/09
to minT...@googlegroups.com
இறக்குமதி செய்து செழிக்க விரும்புபவர்கள் அந்நிய மொழிகளக் கற்று பாண்டித்யம் பெறுவது அவர்களின் வணிகம் செழிக்க உதவும்.

2009/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


2009/3/21 Kannan Natarajan <thar...@gmail.com>
> இவங்க யாருன்னு தெரியுமுங்களா?

நன்றாக! விவிலிய வித்தகர்கள் மற்றும் திராவிட நண்பர்கள் அன்றோ!

இறக்குமதி மதம் என்றாலும் தமிழ் மரபு அறிந்தவராக இருந்தனரே!!
வெளிநாட்டார் உணர்ந்த தமிழ் மரபு நம்மவர் உணர மறுக்கின்றனர்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.
 
இறக்குமதி செய்பவர்கள் அந்நிய மொழிகளைக் கற்று பாண்டித்யம் பெறுவது அவர்களின் வணிகம் செழிக்க உதவும்.

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:35:14 PM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/22 Narayanan Kannan <nka...@gmail.com>
கண்ணன் அவர்களே, நன்றி.
 
நடராஜன்.

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:42:17 PM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அமாவாசை
===========

எங்கே சென்றனை நிலவே?
----- இன்றும் ஒருசிறு விடுப்பா?
 
மதிப்பிற்குரிய ஓகை நடராசன் ஸ்ரீனிவாசன் அவர்களே
தங்களின்  http://oagaippaa.blogspot.com/ சென்று படித்தேன்
 
படித்தேன் குடித்தேன்
 
ஒரு சந்தேகம்   அமாவாசை என்னும் சொல் தமிழா?
அல்லது அதற்கு ஈடான தமிழ்ச்சொல் வேறு ஏதேனும் உண்டா
 
அதேபோல் பௌர்ணமி என்கிற சொல்லும் தமிழா
அல்லது அதற்கு ஈடாக தமிழ்ச்சொல் ஏதேனும் உண்டா?
தயவு செய்து ஐய்யம் தெளிவிப்பீர்களா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
தமிழ்த்தேனீ அவர்களுக்கு நன்றி.
 
அமாவசை என்பது அமாவாஸ்யை என்னும் வடமொழிச்சொல்லே. எல்லா திதிகளின் பெயர்களும் வடமொழியே. பழந்தமிழ் இலக்கியத்தில் திதிகளுக்கு என்ன பெயர் என்பதை ஆன்றோர் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 
தேவ் கொடுத்திருக்கும் நிறைமதி\மறைமதி சிறந்த சொல்லாக்கமாகப் படுகிறது. மேலும் ஆங்கிலச் சொற்கலைத் தமிழ்ப்படுத்தினால் முழுமதி\புதுமதி என்றும் கூறலாம்.
 
நடராஜன்.

இராமதாசன்

unread,
Mar 22, 2009, 1:45:46 PM3/22/09
to minT...@googlegroups.com
வேந்தன் எழுதியது
//
இறக்குமதி மதம் என்றாலும் தமிழ் மரபு அறிந்தவராக இருந்தனரே!!
வெளிநாட்டார் உணர்ந்த தமிழ் மரபு நம்மவர் உணர மறுக்கின்றனர்//

ம்ம்ம்..

எப்படி மத்தேயு 5:11 லூக் 6:12 சங்கீதம் 2:11 என்று மதில் சுவர்களிலெல்லாம்
திருக்குறளும் நாலடியாரும் இருப்பதை சொல்கிறீர்களா?

--

ஆமாச்சு

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 1:47:11 PM3/22/09
to minT...@googlegroups.com


2009/3/22 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
இருள் மதி என்பதும் உண்டு

உவவுமதி எனில் மூன்றும் ஒரு நேர் கோட்டில் நிற்பது

--

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2009, 1:47:54 PM3/22/09
to minT...@googlegroups.com
2009/3/22 இராமதா சன் <rama...@amachu.net>
வேந்தன் எழுதியது

இவற்றில் கிரந்தம் எவை எவை?

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 22, 2009, 1:48:12 PM3/22/09
to minT...@googlegroups.com
2009/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
 
எழுத்துக்கள் இருந்ததனால் பெயர் வைத்தனரா அல்லது
பெயர்களை எழுதவேண்டி எழுத்துக்கள் வந்தனவா?
 
தேவைக்கேற்ப ஆக்கமா அல்லது
ஆக்கத்துக்காக தேவையா?
 
Is the demand creates supply or suppaly creates demand?
 
நடராஜன்.

Kannan Natarajan

unread,
Mar 22, 2009, 5:06:32 PM3/22/09
to minT...@googlegroups.com
> வடமொழி எழுத்து 50,

முதற்ச்சங்கத்தில் எத்தனை புலவர்கள் இருந்தனர்?

தமிழகப் புலவர் குழுவில் எத்தனை புலவர்கள் உள்ளனர்?

அவ்வெண்ணிக்கைக்கும் வடமொழியில் உள்ள எழுத்துகளுக்கும் தொடர்பு உள்ளதா?

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

செல்வா

unread,
Mar 22, 2009, 8:39:14 PM3/22/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com
எப்படி அனுமான், அரன் அரி என்றனறோ அப்படித்தானே, அரி கிருட்டினன்?
உங்கள் கரி கிருட்டினன் குலம் செய்தி வியப்பூட்டியது. கரி
என்பதற்கு பிற பொருள்கள் உள்ளது தமிழறிஞர் ஆகிய உங்களுக்குத்
தெரியும். Helicopter என்பதைத் தமிழில் எழுதவேண்டும் என்றால்
எலிக்காப்டர் என்று எழுதுதல் வேண்டும். இலத்தீன் மொழியின்
வழி மொழியாகிய இத்தாலிய மொழியில் இதனை Elicottero என்கிறார்கள்.

உங்கள் கேள்வியை இங்கு வேறு நோக்கில்
why reinvent the wheel?

நான் ஃஅரி, 'அரி, °அரி என்றெல்லாம் எழுதலாம் என்பது பொதுமொழியில்
பயன்படுத்தவோ, அகரவரிசையை மாற்றவோ _அல்ல_. ஒலிக்குறிப்பைச் சுட்ட.
"why reinvent the wheel?" என்றால் 3-4 தட்டச்சுக் குறிகளைக்கொண்டு
_நூற்றுக்கும்_ கூடுதலான வேற்றுமொழி எழுத்துகளை
ஏற்கனவே உள்ள தமிழ் எழுத்துகளைக் கொண்டே
எழுதலாம் என்பது. தமிழில் G, J, D, Dh,B ஆகிய ஒலிகள் உள்ளன
என்றாலும் முதல் எழுத்தாகவும் தமிழில் விலக்கிய சூழல்களிலும்
வரலாகாது. அவ்விடங்களிலும் வரும் தமிழல்லா எழுத்தொலிகளைச்
சுட்ட பரிந்துரைத்தேன். அகரவரிசையில் சேர்க்கவோ, பரவலாகக்
பயன்படுத்தவோ இல்லை. தமிழில் தமிழ் எழுத்துகளில்தானே எழுதல்
வேண்டும்? ஆங்கிலேயர்கள், இத்தாலியர்கள், டாய்ட்சு மொழியாளர் எல்லாம்
தங்கள் தங்கள் மொழி எழுத்துகளில்தானே எழுதுகின்றனர்?

//The aspirated sound of H continues to be the same irrespective of


the letter that is employed to

represent that sound. //

நீங்கள் கூறும் , "The aspirated sound of H" தமிழில் கிடையாது. தமிழில்
இதற்கு சற்று
நெருக்கமான ஒலிப்புள்ள எழுத்து சார்பெழுத்து என்னும் ஆய்தம். நேர்சரியான
ஒலிப்பல்ல.
நெருக்கமான ஒலிப்பே.

செல்வா

On Mar 21, 11:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/3/21 NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com>


>
>
>
> > //இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய
> > மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப்
> > பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின்
> > உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?
>
> கடந்த பத்தாண்டு இணைய உலகப் பழக்கத்தில் எத்தனையோ தனிமடல்கள். எத்தனையோபேர்
> பற்பல விதங்களில் என் பெயரை மாற்றி எழுதப் பரிந்துரைகிறார்கள்.
>
> :அரி
> ஃஅரி
> ~அரி
>
> போன்றவை அவற்றுள் சில.  எப்படி எழுதினால் என்ன?

 வடிவம் மாறுமே ஒழிய, ஒலி மாறப் போவதில்லையே!
>  அப்படியானால் ஒலியை ஒப்புக்கொள்ளத்தானே செய்கிறார்கள்?  வடிவம்தான் பகை, ஒலி
> பரவாயில்லை என்றால், why reinvent the wheel?
>

> --
> அன்புடன்,
> ஹரிகி.

செல்வா

unread,
Mar 22, 2009, 9:14:40 PM3/22/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com
//வடிவம்தான் பகை, ஒலி பரவாயில்லை என்றால், why reinvent the wheel? //

ஏற்கனவே மறுமொழி தந்துள்ளேன், ஆனால் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்.
** பகை ** இல்லை! புரிந்துகொள்ளுங்கள். அவ்வொலி தமிழில் (எழுத்தொலியாக)
இல்லை.
தமிழில் எழுத்திலா ஒலிகள் என்று பல குறிப்பிடப்படுகின்றன. வீளை (கழுகு
ஒலி),
முற்கம் (அரிமா ஒலி), உச்சுவா ஒலி (ப்ட்ச்சு என்பது போன்ற வெறுப்பு
அல்லது சலிப்பு ஒலி),
மாட்டை மேய்ப்பவன் மாட்டை ஓட்ட எழுப்பும் ட்ற்ள்க் என்பது போன்ற
நாசொடுக்கு ஒலி, (இத்தகு ஒலிகளைப் பச்சிளம் குழந்தைகளின்
கவனத்தை ஈர்க்கவும் எழுப்புவர்) தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்து


கிடையாது.

தமிழ் எழுத்துகள் மூச்சுநுட்ப நுணுக்கங்கள் அறிந்து ஒலிசார்ந்த
மொழியியல் அறிவுடன் ஆக்கியுள்ளார்கள் என்பது செவிவழி வழிவழியாய்
வரும் கருத்து. தமிழர்கள் சமசுக்கிரத ஒலிகளையும், கிரேக்க இலத்தீன்
ஒலிகளையும்,
வேறு பல மொழிகளின் ஒலிகளையும் நன்கு அறிந்திருந்தனர் எனினும்
தங்கள் மொழியில் பிறமொழிகளின் (வடமொழிகள்; தமிழர்களின் நாடுகளுக்குத்
தெற்கே
பிறமொழியாளர்கள் இல்லை, கடல் எல்லை கொண்டிருந்தது)
சொற்களை எடுத்தாள முறை வகுத்து இருந்தனர். நீங்கள் கேட்கும்
"why reinvent the wheel?"


வடமொழியை வளர்த்தவர்களில் பலர் தமிழர், வளர்ந்ததும் நற்பகுதி
தமிழகத்தில் அல்லது தமிழகத்தை மிக அண்டிய எல்லைகளில்.

ஆங்கிலத்திலே நூற்றுக்கணக்கான
மொழிகளின் இலக்கியங்களை அவர்கள் தங்கள் மொழியில் அலசுகிறார்கள்.
தங்கள் மொழி எழுத்துகளைக் கொண்டு திரிபொலிகளை இட்டு ஒலிப்பை
சிறப்பான இடங்களில் காட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு
பள்ளியில் சொல்லிக்க் கொடுக்கும் அகரவரிசையில் சேர்த்துக்கொள்ளவில்லை.
சொல்லிக்கொடுப்பதும் இல்லை. அப்படிப் பரித்துரைத்துதான் நான் செய்ததும்
அதுவும் சற்று நெருக்கமான ஒலிப்பைக் காட்டவே. பொது மொழிக்காக அல்ல.

செல்வா

On Mar 21, 11:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/3/21 NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com>
>
>
>
> > //இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய
> > மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப்
> > பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின்
> > உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?
>
> கடந்த பத்தாண்டு இணைய உலகப் பழக்கத்தில் எத்தனையோ தனிமடல்கள். எத்தனையோபேர்
> பற்பல விதங்களில் என் பெயரை மாற்றி எழுதப் பரிந்துரைகிறார்கள்.
>
> :அரி
> ஃஅரி
> ~அரி
>

> போன்றவை அவற்றுள் சில.  எப்படி எழுதினால் என்ன? The aspirated sound of H


> continues to be the same irrespective of the letter that is employed to

> represent that sound.  வடிவம் மாறுமே ஒழிய, ஒலி மாறப் போவதில்லையே!

செல்வா

unread,
Mar 22, 2009, 11:42:27 PM3/22/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com

On Mar 21, 1:05 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/3/21 செல்வா <c.r.selvaku...@gmail.com>
>
> > தமிழ் முறை சகாய ராசு,  சகாய மேரி.
>
> சஹாய மேரியில் சஹாய என்பது பெயரடை. தமிழ்முறைப்படி என்றால் இதை
> மொழிபெயர்த்திருக்க வேண்டும். அப்படியே வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதாக
> இருந்தால் வழக்கத்தில் இருக்கும் சிறப்பு வரிவடிவங்கலைப் பயன்படுத்தவேண்டும்.
>

உங்களுடைய இரண்டு கூற்றும் ஏற்புடையதன்று.

1) பெயரடை என்பதால் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஏதும் முறைமை இல்லை.
அப் பெயரடையும் ஒருவரின் பெயரின் ஒரு பகுதி, ஆகவே மொழி
பெயர்க்காமலும் இருக்கலாம்.

2)//அப்படியே வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதாக
இருந்தால் வழக்கத்தில் இருக்கும் சிறப்பு வரிவடிவங்கலைப்
பயன்படுத்தவேண்டும்//

இல்லை. முறைப்படி தமிழ் எழுத்துகளில் எழுதுதல் வேண்டும்: "வடவெழுத்து
ஒரீ"
அனுமான், அரி, அரன், விபீடணன், இருடிகேசா என்பனவற்றை நோக்குங்கள்.


> > மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.
> > மாமியார் மருமகள் எல்லாம் என்ன பேச்சு?
>
> மாமியாரைக் கண்டுகொண்ட நீங்கள் என் மற்ற கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது
> ஏன்?


> //இன்னும் வேறு வேறு குறியீடுகளை முயன்றுகொண்டேஏஏஏ இருக்கலாம். அல்லது சஹாய
> மேரி என்று மிகச் சரியான உச்சரிப்பு வரும் ஹ என்ற பழைய குறியீட்டைப்
> பயன்படுத்தலாம்// - இதில் ஹ என்ற எழுத்தே மிகத் துல்லியமாக அச்சொல்லின்
> உச்சரிப்பைக் குறிக்க வல்லது என்பதை மறுக்க முடியுமா?
>

பயன்படுத்த முடியாது.ஏன்? அது தமிழ் எழுத்தில்லை.
சHaaய என்று என்னால் எழுத முடியும் என்பதால்
அதனைப் பயன்படுத்த முடியாது. ஒலித்திரிபுக் குறிகள் **தமிழ்
எழுத்தின்** முன்னே, பின்னே, கீழே, மேலே இடும் குறிகள்.
3-4 குறிகளைத் தமிழ் எழுத்துகளில் இட்டு எழுதுவதால்
கூடிய ஒலியன்களைக் காட்ட இயலுவதுடன், **நூறுக்கும்*
மேலான எழுத்துகளைச் சேர்த்து தமிழைக் குலைப்பதைத்
தடுக்கலாம். "பழைய" குறியீடு என்னும் வாதம் செல்லாது
ஏனெனில் பல பழைய குறியீடுகள் உள்ளன (நூற்றுக்கணக்கில்).
அதனால் அவற்றை எல்லாம் ஏற்க ஏதும் ஏதும்வழியில்லை.

தமிழை மதிப்போர் தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்தில் எழுதுவர்.
துல்லிய ஒலிப்பு வேண்டுவோர் அவ்வவ் மொழிகளில் வெளிகளி
எழுதட்டும். ஆங்கிலேயன் Yaaழிni என்று எழுதினால் ஏற்பானா?
தமிழை Thamiழ் என்றும் ஞாnasambanthan என்று எழுதுவானா?
ஒலிப்பு gna என்ப்பதை விட ஞா என்பது துல்லிய ஒலிதானே என்று
கேட்கமுடியுமா?

> > சஃகாய என்று எழுதுவதும் தமிழ் எழுத்துகளில் எழுதுவதே.
>
> சஃகாய என்று எழுதினால் சஹ்ஹாய என்கிற உச்சரிப்புக்கு அருகில் வரும்.

"அருகில்" வரும் என்பது உண்மை. சஃஆய என்றும் எழுதலாம். ஆனால் இடையே
உயிரெழுத்து வருவது சற்று நெருடும்.


> > கிரந்த எழுத்துக்களையோ பிற எழுத்துகளையோ
> > சேர்த்து எழுதுவதில் பல அடிப்படையான
> > நேர்மையான மறுப்புகள் உள்ளன.
>
> இதை தனி கட்டுரையாக எழுதுங்கள் அல்லது சுட்டி ஏதாவது இருந்தால் தாருங்கள்.
>

எழுத முயலலாம். அடிப்படையான காரணங்களில் சில:
தமிழில் எழுதும்பொழுது எழுத்துகளில்தானே
எழுதவேண்டும்? மற்ற மொழியாளர்களும் அவரவர் மொழிகளில்தானே
எழுதுகின்றனர்? வேற்று மொழி ஒலியன்களை மாற்றித் தமிழ்ப்படுத்தி எழுத
தமிழில் ஏற்கனவே முறைகள் உள்ளன.
ஒலிப்பின் திரிபுகள் நேர்வதும் மொழிக்கு மொழி மாற்றி எழுதும்பொழுது
நிகழ்வதே.
எல்லா மொழிக்கும் பொது இது.
வேற்று மொழி ஒலித்துல்லியம் என்பதற்காக தம் மொழி ஒழுகலாறுகளை இழப்பது
கூடாது.
தமிழ் எழுத்துகளும் ஒலிகளும் மிக நுட்பமாய் ஆய்ந்தமைத்தது. வேற்று
மொழி ஒலியன்களைப் புகுத்தினால் தமிழின் இனைமை, ஒலிநயம்
கெடும். தமிழ் இலக்கணம் (புணைர்ச்சி விதிகள் முதலானவை..),
ஒலிப்பு முறை இவை கெடும். தமிழ்ச் சொற்களுக்கு இடையே
இருக்கும் நுட்ப உறவைக் கெடுக்கும். அளவோடு தேவை கருதி ஏற்பு என்னும்
நிலை மாறி, இன்னும் மிகக்கூடுதலான எண்ணிக்கையில்
புரியாத சொற்களை கனக்கு வழக்கு இன்றி
இறக்குமதி செய்து தமிழின் புரிந்துகொள்ளும் தன்மையை வெகுவாக
இழப்பது மட்டும் அல்லாமல், இருக்கும் தமிழ்ச்சொற்களை இழக்கவும் நேரிடும்.


> > தமிழில் G, J, D, Dh, B, F, S, Sh, Z , H முதலானவற்றின்
> > ஒலியைக் குறிக்க முறை இருந்தால் நன்றாக இருக்கும்
> > என்பது.
>
> இவற்றில் J, S, Sh, H ஆகியவற்றுக்கு ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன.
> மற்ற ஒலிகளுக்கான தேவை ஏற்படுமாயின் புதிதாக வரிவடிவங்களை சேர்க்கலாம்.

2-3 குறிகளின் துணையுடன் மேலுள்ளவற்றைக் தமிழ் எழுத்தால்
குறிக்க இயலும் பொழுது,
ஏன் 65 உயிர்மெய் எழுத்துகளும், 5 மெய்யெழுத்துகளும் தேவை?.
இதுதவிர க்ஷ, ஸ்ரீ போன்ற
கூட்டெழுத்துகள் வேறு? இதிலிருந்து இன்னும் ஒரு 14 எழுத்துகள்.

>
> > 26 எழுத்துகளைக் கொண்டு, குறியீடுகள் (மேற்புள்ளி,
> > கீழ்ப்புள்ளி என்பதாக பற்பல ஒலித்திரிபுக்குறிகள்)  இட்டு
> > உலகில் உள்ள பற்பல (நூற்றுக்கணக்கான)
> > மொழி இலக்கியங்களை எழுதுவது
> > மட்டுமன்றி மிக விரிவாக பேசி அலசுகின்றனர்.
>
> இவை வேறு எழுத்துருக்களைச் சேர்ப்பதற்கான வேறு முறைகளே அன்றி அவர்களுடைய
> எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் என்பதாகாது.

வேற்று ஒலியன்களைக் குறிக்க அவர்களின் எழுத்துகளையே சிறு
ஒலித்திரிபுகளுடன்
பயன்படுத்துகிறார்கள் தானே? வேறு முறைதான், ஆனால் எளிதான முறை.
கூடுதலான பயன் தரும் முறை. ஆனால் அவர்கள் தங்கள் மொழியின் அகரவரிசையை
மாற்றத் தேவை இல்லாத முறை. குழந்தைகள் பள்ளியில் பயிலும்பொழுது
கற்கத் தேவை இல்லாத முறை. வளர்ந்தவர்கள்
அவ்வவ் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில்
படிக்க நேரும் பொழுது அந்நூல்களில் இருந்து அறிந்துகொண்டால் போதும்.

> >  இப்பொழுது
> > ஜ என்கிறோம். அதன் வழி ஜா, ஜி, ஜீ, ஜு,.. என்றெல்லாம்
> > எழுதுகிறோம், B, F, G, Dh, D ஆகியவற்றுக்கும் புதிய எழுத்துகள்
> > புகுத்தி இப்பொழுது இருக்கும் 66 ஐச்சேர்க்க்கூறும் எழுத்துகளுக்கு
> > மேல் இன்னும் 66 எழுத்துகள் சேர்க்க வேண்டுமா?
> > பலர் நினைப்பது போல் கிரந்தம் 4 எழுத்துகள் அல்ல
> > ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ (5x12 + 5 (மெய்)+1 = 66) எழுத்துகள்.
> > 247 எழுத்தே கூடுதல் என்று நினைக்கும்பொழுது
> > இன்னும் 66 சேர்ப்பார்களா?
>
> ங எழுத்தின் வருக்கங்களுக்கு நீங்கள் கூறிய பதில் இதற்கும் பொருந்துமே1

ஙகரம் தமிழ் எழுத்து. தமிழ் ஒலியன். ஆகவே இருக்கின்றன.
ஏராளமாக இப்படி தமிழல்லா எழுத்துகளை ஏற்க இயலாது.

> > அப்புறம் உசா என்பதில் வரும் சகரம் ஷ அல்ல அது கடின ஷ
> > என்று கூறி இன்னும் ஒரு 12 +1 = 13 சேர்ப்பர். எங்கே முடியும்??
>
> இதற்கான தேவை பெரிதாக உணரப்படவில்லை என்பதாலேயே கிரந்த எழுத்துக்களின்
> எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாக ஏறாமல் இருக்கிறது.


அதே போலத்தான் பிற எழுத்துகளுக்கும்.
"தேவை" இல்லையே!!
சகன்னாதன், சீனிவாசன், சிரீதரன், அரன், அரி, அனுமான்,
சம்புலிங்கம். சண்முகம், சங்கரன், சரசுவதி.... இப்படியாக.

>
> நடராஜன்.

செல்வா

இராமதாசன்

unread,
Mar 23, 2009, 2:09:06 AM3/23/09
to minT...@googlegroups.com
On ஞா, 2009-03-22 at 13:47 -0400, வேந்தன் அரசு wrote:
>
> இவற்றில் கிரந்தம் எவை எவை?

சுவிசேஷம், ஸ்தோத்திரம், ஹல்லேலுயா ;-)

வேதம் - வேதாகமம் - ஆசீர்வாதம் - பரமபிதா - இரட்சிப்பு இப்படி எவ்வளவோ இருக்கு.

டிட்டோ!

கேட்டீங்கன்னா நிறைய சொல்லலாம்.

--

ஆமாச்சு

இராமதாசன்

unread,
Mar 23, 2009, 2:20:55 AM3/23/09
to minT...@googlegroups.com
On ஞா, 2009-03-22 at 20:42 -0700, செல்வா wrote:
> துல்லிய ஒலிப்பு வேண்டுவோர் அவ்வவ் மொழிகளில் வெளிகளி
> எழுதட்டும். ஆங்கிலேயன் Yaaழிni என்று எழுதினால் ஏற்பானா?
> தமிழை Thamiழ் என்றும் ஞாnasambanthan என்று எழுதுவானா?
> ஒலிப்பு gna என்ப்பதை விட ஞா என்பது துல்லிய ஒலிதானே என்று
> கேட்கமுடியுமா?

ழ கரத்தை ஹிந்தி உள்ளிட்ட நாகர முறைகளில் எழுத அம்முறையை ஒத்த
0933 ळ DEVANAGARI LETTER LLA இருக்கிறது. அதே போல் ஸ ஹ ஷ எல்லாம்.
தேவைதான்.

நாம் நிறைய கண்டுபிடித்து ழ கரம் உள்ள பெயர்களை சூட்டினால் அவற்றை நிறைய
இடத்தில் ஒலிக்க வேண்டியிருப்பதால் ஐரோப்பியாவிலும் சேர்ப்பர்.

அதற்கான வழியை காண்போம். அதுவரை வடமொழி என்பதைத் தாண்டி அரபு - ஆங்கிலம் -
அறிவியல் போன்றவற்றிலும் கிரந்தத்தின் தேவையிருப்பதால் - அது இன்றைய
தமிழனுக்கு பழக்கப்பட்ட ஒலியாகிவிட்ட காரணத்தினாலும் - விரும்பி
ஆங்கிலத்தையே தமிழைக் காட்டிலும் தமிழர் கற்கின்றனர் என்பதாலும் - அதை
புதிதாக எப்படி எழுதலாம் என்று வேலை மெனக்கெட்டு ஆராயாமல் ஏற்கனவே
புழக்கத்தில் இருக்கும் திராவிட முறையான கிரந்த முறை கொண்டு எழுதுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

முற்றும்.
--

ஆமாச்சு

இராமதாசன்

unread,
Mar 23, 2009, 2:22:38 AM3/23/09
to minT...@googlegroups.com
On தி, 2009-03-23 at 11:50 +0530, இராமதாசன் wrote:
>
> ழ கரத்தை ஹிந்தி உள்ளிட்ட நாகர முறைகளில் எழுத அம்முறையை ஒத்த
> 0933 ळ DEVANAGARI LETTER LLA இருக்கிறது.

0934 ऴ DEVANAGARI LETTER LLLA

--

ஆமாச்சு

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 22, 2009, 9:12:40 AM3/22/09
to minT...@googlegroups.com
கண்டேன்.  சுவைத்தேன்.
 
பல மரபு மாணிக்கங்கள் மேலும் மேலும் ஒளி வீச வேண்டும்
 
மரபுக் கவிதை மாண்டு விட்டதா?
மண்டுகளே மாணிக்க நடராஜன்
மரபைப் பாரீர்! பல ஆல
மர விழுதாகப் பரந்திருப்பதை...
 
மண்ணைத் துடைத்து மரபு 
மாணிக்கத்தை ஒளிரவைத்து
மின்னுலகில் இட்டு மரபை
மீட்டிய தில்லைக்கோ வாழ்க!
 
 
(கோனினம் = அரசு என்று குறிப்பிட்டுள்ளீர்கள்)  
 
ஆரியக் கோன் என்ற இழையில் நீங்கள் இதைக் குறிப்பிட்டதாக நினைவில்லையே.
 
ஆரிய அரசன் என்று தானே பொருள் படும்....
 
 
அன்புடன்
.கவி.


2009/3/22 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>
பா என்ற பெயருடைய என் வலைப்பூவுக்கு முடிந்தால் ஒரு நடை சென்று வாருங்கள்.
 
 
நடராஜன்.

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 22, 2009, 9:44:07 AM3/22/09
to minT...@googlegroups.com
நண்பர்களே
 
இந்த இழையில் நோக்கம் அனைவரும் புரிந்து கொண்டோம்.
 
1.  தமிழ் மொழிச் சிறப்பு ஒலிகளான (’ழ-ள-ல”  , ”ற-ர” , “ந-ண-ன”, “ங”, “ஞ”) பிற மொழிகளில் எழுதும் போது அந்த மொழிகளில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே எழுதுகிறோம்.  அதே போல் பிறமொழி ஒலிகளைத் தமிழ் எழுத்துக்கள் கொண்டு மட்டும் எழுத வேண்டும்.  இதில் எவருக்கும் முரண்பட்ட கருத்து இருக்காது என்றே எண்ணுகின்றேன்.
 
2. பிற மொழி ஒலிகளை தமிழில் எழுதக் கிரந்தம் தவிர்க்கப் படலாம் எனப் பல அறிஞர்கள் பல இழைகளில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  முக்கியமாக தவறான பொருள் படும் எனும் போது, கவனம் தேவை.
 
3. கிரந்தப் பயன்பாடு பிறமொழி ஒலிகளுக்கு மட்டுமே என்று தெள்ளத் தெளிவாகவே நிருபிக்கப் பட்டுள்ளது.
 
4. தனிப்பட்ட முறையில் குறை கூறுவதால் கிரந்தப் பயன்பாடு, குறையப் போவதோ அல்லது அதிகரிக்கப் போவதோ இலலை.
 
ஆகவே அன்பு கூர்ந்து தனி நபர் விமர்சனம் தவிர்க்கவும்.
 
அன்புடன்.
.கவி.

2009/3/22 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

நீங்கள் கட்டளை நிறுவி காப்பது என்ன மரபோ?

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 22, 2009, 10:55:40 AM3/22/09
to minT...@googlegroups.com
 
கூசுடன்,ஃகூஃசுடன்,ஃகூசுடன் என்று குறிப்பிட்டால் தமிழர் அறிவர்.    தமிழில் எழுதுவது தமிழருக்கு என்றால், அவர் நிச்சயம் பிறமொழி ஒலி என்று உணர்ந்து ஒலிக்கக் கற்க வேண்டும். அமெரிக்கர் போல்.
 
ஆளைச் சொல்லு `ரூலை`(ruel)ச் சொல்றேன் என்பது எப்படித் தவறோ அதேபோல்
மொழியைச் சொல்லு `ரூலை`(ruel)ச் சொல்றேன் என்பதும் தவறே.
 
கம்ப்யூட்டர்,  கணினி ஆனது போல், மாற்றங்கள் வரும். வர வேண்டும்.
 
நாம் பயன்பாட்டில் கொண்டுவர முயல வேண்டும்.
 
அன்புடன்
.கவி.


 
2009/3/22 இராமதா சன் <rama...@amachu.net>

O தோழன்:-}

unread,
Mar 23, 2009, 6:13:47 AM3/23/09
to minT...@googlegroups.com
முதலில் கிரந்தம் என்கிற சொல்லை எப்படி உச்சரிப்பது யாரேனும்
அறிந்தால் சொல்லமுடியுமா
 kirantham girantham girandham kirandham?

2009/3/22 kaviarasan Va.Mu.Se. <vamus...@gmail.com>



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

N. Ganesan

unread,
Mar 23, 2009, 7:43:32 AM3/23/09
to மின்தமிழ்

"O தோழன்:-}" <gurukk...@gmail.com> wrote:
> முதலில் கிரந்தம் என்கிற சொல்லை எப்படி உச்சரிப்பது யாரேனும்
> அறிந்தால் சொல்லமுடியுமா
> kirantham girantham girandham kirandham?


Dear Sri. KurukkaL,

You can listen to the sound of how words like கிரந்தம், குருக்கள்,
குணம், ...
are pronounced by people from Ceylon. It will be unvoiced k, that is
kirantham, kurukkaL, kuNam, .... respectively.

Best regards,
N. Ganesan

N. Ganesan

unread,
Mar 23, 2009, 8:02:29 AM3/23/09
to மின்தமிழ்

இதற்கு ஒரு முக்கியமான வரலாற்றுக்காரணம் உண்டு.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணம்.
நைஷ்டிக பிரமச்சாரி.

முதலில் கிருஸ்துவ பாதிரிமார்களிடம் வேலைபார்த்தார்.
அவர்கள் பைபிளை மொழிபெயர்க்கச் சொல்லியபோது
ஏற்ற சம்ஸ்கிருதச் சொற்களைப் பொருத்தியமைத்தருளினார்.

வெள்ளைப் பாதிரியார்களின் தந்திரோபாயங்களைக் கண்டபின்
சைவ வளர்ச்சிக்கு அவற்றைப் பிரயோகித்தார்.
Catechism சைவத்திற்கு எழுதினார்.

தமிழை வசனநடன நடைக்குக் கொண்டுவந்தவர் ஸ்ரீ நாவலரவர்கள்தான்.
சென்னையிலும், சிதம்பரத்திலும் அச்சகம் தொடங்கினார்.
இலக்கணத்தை வசனத்தில் தந்தார். சைவத்தைக் காத்தருளினார்.
ஏடுதேடிப் பதிப்பதில் முன்னோடியாக விளங்கினார். அவரைப் பார்த்துத்தான்
சி. வை. தாமோதரனார், உவேசா, ....

நா. கணேசன்

பி.கு.: ஈழ நண்பர்கள் வரும்போது நான் சொல்வதுண்டு.
நாவலர் பிறந்திராது இருந்திருந்தால் ஈழம் முழுக்க கிறித்துவம்
ஆகியிருக்கும். ஒருவேளை மேல்நாட்டார், போப்பையர், ...
போன்றோர் அவர்கள் விடுதலைக்கு உதவியிருப்பரோ?

> --
>
> ஆமாச்சு

செல்வா

unread,
Mar 23, 2009, 8:44:53 AM3/23/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com
//நாம் நிறைய கண்டுபிடித்து ழ கரம் உள்ள பெயர்களை சூட்டினால் அவற்றை
நிறைய
இடத்தில் ஒலிக்க வேண்டியிருப்பதால் ஐரோப்பியாவிலும் சேர்ப்பர். //

நல்ல காதுகுத்துங்க!

ஆங்கிலேயருக்கு அருகிலேதானே
பிரான்சியரும், டாய்ட்சு மொழியரும், எசுப்பானியரும்
வாழ்கின்றனர். பிரான்சிய மொழியிலுள்ள பாரிசு நகரின்
பெயரிலுள்ள 'றகரத்தை (பாஃறீ என்பது போல ஆனால்
சற்று வேறுதலாக ஒலிக்கும்) அவ்வொலிக்கா
ஏதும் எழுத்தை எடுத்துக்கொண்டார்களா?
உம்லௌட் உள்ள டாய்ட்சு
ஒலிஎழுத்துகளை எடுத்துக்கொண்டார்களா?
எசுபானியத்தில் வரும் "ன்ய" என்பது போல் ஒலிக்கும்
ñ என்னும் எழுத்தை எடுத்துக்கொண்டார்களா?

இத்தலியர்க்ளே (இலத்தீன் மொழியர்களின் வழித்தோன்றல்களே)
Helium என்பதை Elio என்கின்றனர்
Helicopter என்பதை Elicottero என்கிறான்.
நாம் ஈலியம் என்றும், எலிக்காப்டர் என்றும் எழுதினால்
என்ன குறை. இத்தனைக்கும் இத்தாலியர்கள்
உரோமன் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதுகிறார்கள்!!

அவர்களே அப்படி எழுதவில்லை. தமிழில் எழுதும்பொழுது
கிரந்தம் கூடாது என்பதும் மட்டும் அல்ல, அப்படி
தமிழல்லா வேற்றொலியன்கள் உள்ள வடநாட்டு மொழிகளில்
உள்ள சொற்களை எப்படித் தமிழ்ப்படுத்தவேண்டும் என்றும் விதி
வேறு தந்து இருக்கின்றார்கள். பொதுவாக எம்மொழியும் வேற்றுமொழிச்சொற்களைத்
தம்மொழிக்கு உகந்தவாறுதான் திரித்து எழுதுகின்றனர்.

தமிழ் என்றால் கிள்ளுக்கீரையா? தமிழை ஏன் மதிக்கத் தவறுகிறார்கள்,
தங்களைத் தமிழர்கள் என்று கூறுவோர்?! Helium என்பதை ஏன் இத்தாலியர்
Elio என்று எழுதுகிறார்கள்? அது அவர்கள் மொழி வழக்கம்..
அப்படித்தானே மற்ற மொழியாளர்களும்
தங்கள் மொழி வழக்கப்படி தங்கள் மொழி எழுத்துகளில் எழுதுகிறார்கள்?
தமிழர்கள் மட்டும் கூடாதா?

செல்வா

Raja sankar

unread,
Mar 24, 2009, 12:33:37 AM3/24/09
to minT...@googlegroups.com
//பி.கு.: ஈழ நண்பர்கள் வரும்போது நான் சொல்வதுண்டு.

நாவலர் பிறந்திராது இருந்திருந்தால் ஈழம் முழுக்க கிறித்துவம்
ஆகியிருக்கும். ஒருவேளை மேல்நாட்டார், போப்பையர், ...
போன்றோர் அவர்கள் விடுதலைக்கு உதவியிருப்பரோ?//

முழுவதும் மதம் மாறிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளை விட்டுவிட்டீர்கள் போலும்.

அவர்கள் வரும்போது நாடு எங்கள் கையிலும் பைபிள் அவர்கள் கையிலும் இருந்தது. கண்மூடி பிரார்த்தனை செய்து பார்க்கும்போது பைபிள் எங்கள் கையிலும் நாடு அவர்கள் கையிலுன் இருந்த்து.

ராஜசங்கர்



2009/3/23 N. Ganesan <naa.g...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2009, 9:17:38 AM3/24/09
to minT...@googlegroups.com


2009/3/24 Raja sankar <errajasa...@gmail.com>

//பி.கு.: ஈழ நண்பர்கள் வரும்போது நான் சொல்வதுண்டு.

நாவலர் பிறந்திராது இருந்திருந்தால் ஈழம் முழுக்க கிறித்துவம்
ஆகியிருக்கும். ஒருவேளை மேல்நாட்டார், போப்பையர், ...
போன்றோர் அவர்கள் விடுதலைக்கு உதவியிருப்பரோ?//

முழுவதும் மதம் மாறிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளை விட்டுவிட்டீர்கள் போலும்.
 
அதனால்தான் நான் சொல்லுவது, பிள்ளைகளை என்னைபோன்ற நாத்திகர்களாக வளர்க்க‌ணும். அந்த கடவுளே வந்தாலும் எம்மை மதம் மாற்ற இய்லாது.
 
ஃஊ ஆர் யூ என்போம்
 


--

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2009, 9:47:37 AM3/24/09
to minT...@googlegroups.com
உங்களைப் போன்ற நாத்தீகர்களாக பிள்ளைகளை
வளர்க்கவேண்டுமா?
 
ஆத்தீகத்தை பரப்ப நல்ல வழி கண்டுபிடித்தீர்கள்
வேந்தே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

Vinodh Rajan

unread,
Mar 24, 2009, 5:28:56 AM3/24/09
to மின்தமிழ்
//எசுபானியத்தில் வரும் "ன்ய" என்பது போல் ஒலிக்கும்
ñ என்னும் எழுத்தை எடுத்துக்கொண்டார்களா? //

señorita'வை அப்படியே ஆங்கிலத்தில் பலர் புழங்க விடுவது தாங்கள்
அறியாததா ?

//உம்லௌட் உள்ள டாய்ட்சு
ஒலிஎழுத்துகளை எடுத்துக்கொண்டார்களா? //

Eüler என்று சொல்லையும் அப்படியே பலர் எழுதுகிறார்கள் என்பதையும் தாங்கள்
அறியாதவர் இல்லை

Cliché, Résumé, tête-à-tête, café போன்ற ஆங்கில அரிச்சுவடியில் இல்லாத
எழுத்துக்களை எழுதி அதை ஆங்கிலத்தில் வலுக்கட்டாயமாக புகுத்தி அதை
ஃப்ரெஞ்சு மொழி ஆக சிலர் ஆக்குகின்றனர்.

Đoković என்றெல்லாம் பலர் எழுதி செர்பிய மொழியினை ஆங்கிலத்தில் மீது
திணிக்கப்பார்கின்றனர். என்ன செய்வது ? :(

http://en.wiktionary.org/wiki/Category:English_words_spelled_with_nonstandard_characters

இவற்றை எல்லாம் என்னவென்பது ?

பிடித்தாமானதை மட்டும் மற்ற மொழிகளில் சுட்டுவது ஏனோ ? ஜப்பானியத்தில்
கைரைகோ என்று வேற்றுமொழிச்சொற்களை ஆள்கின்றனர். தமிழில் அப்படியே
செய்யலாமா ? தெலுங்கும் வேற்றுமொழிச்சொற்களை அப்படியேத்தான் ஆள்கிறது.
அதையும் நாம் பின்பற்றலாமே ?. எங்கோ இருக்கும் இத்தாலிய மொழியை
பின்பற்றுவதர்கு பக்கத்தில் இருக்கும் தெலுங்கு செய்வதை பின்பற்றாலாமே ?

யாரும் கிரந்த எழுத்த்தை தமிழ் மொழியில் சேர்க்க சொல்லவில்லை. எப்போதும்
இருந்தது போல, வரையறுக்கப்பட்ட மொழிக்கு வெளியே Auxiliary எழுத்துக்களாக
இருந்து விட்டு போகட்டுமே.

வரையறுக்கப்ட்ட மொழி என்பது வேறு. நடைமுறை மொழி என்பது வேறு.

//அப்படி


தமிழல்லா வேற்றொலியன்கள் உள்ள வடநாட்டு மொழிகளில்
உள்ள சொற்களை எப்படித் தமிழ்ப்படுத்தவேண்டும் என்றும் விதி

வேறு தந்து இருக்கின்றார்கள்.//

"டாய்ட்சு" என்று டகரத்தில் ஒரு தமிழ்ச்சொல் தொடங்கலாமா ? அதை தாய்ட்சு
என்று தானே எழுதி இருக்கவேண்டும் ?

தொல்காப்பியர் சொன்ன சில விதிகளை மட்டும் பின்பற்றுவோம் மற்ற விதிகளை
காற்றில் பறக்க விடுவோம் என்பது நியாயம் இல்லை. தொல்காப்பியர் கூறும்
அனைத்து விதிகளையும் இக்காலத்தில் பின்பற்றுவது அசாத்தியம். அதை
பின்பற்றியே தீருவோம் எனக்கூறுவது விதண்டாவாதம்.

மொழி மாறக்கூடியது. தொல்காப்பியர் சகரத்தில் சொற்கள் துவங்கக்கூடாது
என்று சொல்கிறார். அப்போது சடங்கு, சழங்கு முதலிய தொல்காப்பியருக்கு
பிறகு தொன்றிய சொற்களை என்ன செய்வது ? தமிழில் இருந்து நீக்கி விடலாமா ?

கிரந்த ஒலிகள் தமிழ் மொழியில் இரண்டற கலந்துவிட்டன. ஜமக்காளம்,
ஜல்லிக்கட்டு போன்ற சொற்களை என்ன செய்வது ? பாமரர்கள் புழங்கும்
"ஆ'ஸ்'பத்தரி" ?. பஸ் வந்துடுச்சா என்பதற்கு பதிலாக எவரேனும் ப'சு'
வந்துடுச்சா என்று எவரேனும் கேட்கிறார்களா ? எவரும் தான் க"சு"டத்தில்
இருப்பதாகவோ அல்லது க"ட்"டத்தில் இருப்பதாவே தங்களிடம் புலம்பி நான்
கேட்டதிலை. ஹ'கரம் வட்டாரவழக்கில் நிறைய உள்ளது.

இதையெல்லாம் என்ன செய்ய ?

மொழி அறிஞர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் மொழியை வைத்திருக்க வேண்டும்
என்று நினைப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. மொழி மாற்றம் பெறும்.
மாற்றத்தை தடுத்து நிறுத்துவது நல்லதில்லை. மொழியை பாதுகாத்து,
யாருக்கும் பயன்படாமல் காட்சிப்பொருளாக வைத்திருப்பதில் யாருக்கு என்ன
பிரயோஜனம் என்று சொல்லுங்கள் ?

செல்வா

unread,
Mar 24, 2009, 10:55:13 AM3/24/09
to மின்தமிழ், c.r.sel...@gmail.com
வினோத்,

உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் நான் மறுமொழி தருகிறேன்,
ஆனால் முதலில் ஒரே ஒரு
கேள்விக்கு விடை பகருங்கள் (மூன்று உட்கேள்விகள் கொண்ட கேள்வி).

*ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளில் எத்தனை விழுக்காட்டு
பள்ளிகளில், எந்தப் படிப்பாண்டில்,
26 எழுத்துகளுக்குக் கூடுதலாக ñ, ï, ü ä, ö, ü, ḧ, Đ போன்ற எத்தனை
எழுத்துகளை அன்போடு எடுத்துக்கொண்டு பயிற்றுவிக்கிறார்கள்?


செல்வா

On Mar 24, 5:28 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //எசுபானியத்தில் வரும் "ன்ய"  என்பது போல் ஒலிக்கும்
> ñ  என்னும் எழுத்தை எடுத்துக்கொண்டார்களா? //
>
> señorita'வை அப்படியே ஆங்கிலத்தில் பலர் புழங்க விடுவது தாங்கள்
> அறியாததா ?
>
> //உம்லௌட் உள்ள டாய்ட்சு
> ஒலிஎழுத்துகளை எடுத்துக்கொண்டார்களா? //
>
> Eüler என்று சொல்லையும் அப்படியே பலர் எழுதுகிறார்கள் என்பதையும் தாங்கள்
> அறியாதவர் இல்லை
>
> Cliché, Résumé, tête-à-tête, café போன்ற ஆங்கில அரிச்சுவடியில் இல்லாத
> எழுத்துக்களை எழுதி அதை ஆங்கிலத்தில் வலுக்கட்டாயமாக புகுத்தி அதை
> ஃப்ரெஞ்சு மொழி ஆக சிலர் ஆக்குகின்றனர்.
>
> Đoković என்றெல்லாம் பலர் எழுதி செர்பிய மொழியினை ஆங்கிலத்தில் மீது
> திணிக்கப்பார்கின்றனர். என்ன செய்வது ? :(
>

> http://en.wiktionary.org/wiki/Category:English_words_spelled_with_non...

செல்வா

unread,
Mar 24, 2009, 11:01:55 AM3/24/09
to மின்தமிழ்
சிறு திருத்ததுடன் என் கேள்வி கீழே:

வினோத்,

உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் நான் மறுமொழி தருகிறேன்,
ஆனால் முதலில் ஒரே ஒரு
கேள்விக்கு விடை பகருங்கள் (மூன்று உட்கேள்விகள் கொண்ட கேள்வி).


*ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளில் எத்தனை விழுக்காட்டு
பள்ளிகளில், எந்தப் படிப்பாண்டில்,
26 எழுத்துகளுக்குக் கூடுதலாக ñ, ï, ü ä, ö, ü, ḧ, Đ போன்ற எத்தனை

எழுத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்றுவிக்கிறார்கள்?


செல்வா

இராமதாசன்

unread,
Mar 24, 2009, 2:23:57 PM3/24/09
to minT...@googlegroups.com
On செ, 2009-03-24 at 09:17 -0400, வேந்தன் அரசு wrote:
>
> அதனால்தான் நான் சொல்லுவது, பிள்ளைகளை என்னைபோன்ற நாத்திகர்களாக
> வளர்க்க‌ணும். அந்த கடவுளே வந்தாலும் எம்மை மதம் மாற்ற இய்லாது. ஃஊ ஆர்
> யூ என்போம்

உங்க வீட்டுல ஒரு தயாளு அம்மா இருந்து யாராச்சும் சாமி பாபா காலில்
விழுந்து மானத்தை கப்பலேத்தாத வரைக்கும் சரி ;-)

--

ஆமாச்சு

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 24, 2009, 10:36:46 AM3/24/09
to மின்தமிழ்
அன்புள்ள திரு ஆமாச்சு

ந -> நண்பன்

ழ -> கிழி
ள -> கிளி
ல -> கிலி

ங => பங்கு
ஞ => பஞ்சு

ர => கரி
ற => கறி

தேவநாகரியில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்களேன்.

அன்புடன்
.கவி.

kaviarasan Va.Mu.Se.

unread,
Mar 24, 2009, 10:57:18 AM3/24/09
to minT...@googlegroups.com, Vinodh Rajan, kaviarasan Va.Mu.Se., kavia...@yahoo.com
அன்புள்ள திரு. வினோத்
 
எனது சில மடல்கள் தங்களை அடைவதில்லை, அல்லது நேரம் கழித்து அடைகின்றன். 
 
மட்டுப் படுத்துதலின் விளைவா, அல்லது இணையச் சிக்கலா என அறியோம்.
 
கிரந்தம் தவிர்த்து எழுதுவது என்பது தமிழ் அறிவின் அடுத்த நிலை.
 
கிரந்தத்தோடே எழுதுவோரை எவரும் தடுக்க இயலாது.
 
தமிழ் அறிவின் அடுத்த நிலையை அடைவது அவரவர் ஊக்கத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
 
எவரும் கட்டுப் படுத்த முடியாது. ஆணையிட முடியாது. 
 
தமிழறிவின் அடுத்த நிலை அறிய நான் முயல்கிறேன்.  என்னை முயலக் கூடாது என ஏன் தடை போடுகின்றீர்கள்?
 
அன்புடன்
.கவி.


 
2009/3/24 Vinodh Rajan <vinodh...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2009, 9:54:07 PM3/24/09
to minT...@googlegroups.com


2009/3/24 இராமதா சன் <rama...@amachu.net>



உங்க வீட்டுல ஒரு தயாளு அம்மா இருந்து யாராச்சும் சாமி பாபா காலில்
விழுந்து மானத்தை கப்பலேத்தாத வரைக்கும் சரி ;-)


 பக்திமான்கள் பக்தி எல்லாம் சும்மா சுயநலம்

திருநாவுகரசர் போல் சின்ன தலைவலிவந்தால் போதும் மதம் மாறி விடுவார்கள்.

மதம் மாறுவோர் எல்லாம் பக்தி மான்களே. பக்திமான்களால்தான் இந்துமதத்துக்கு ஆபத்து வரும்

kamaladevi aravind

unread,
Mar 24, 2009, 10:56:33 PM3/24/09
to minT...@googlegroups.com
சத்யம்தான்,
ஆனால் என் டெ தோழியின் நண்பரொருவர்கூடநாஸ்திகம் பேசுபவரே.
ஆனால்  அவரது சஷ்டியப்த பூர்த்திக்கு மட்டும் மனைவி சஹிதம் அம்பலத்துக்கு-[கோவிலுக்கு]போனாராம்.
அவருக்கு ஈஷ்வரனிடம் நலமா? அல்லது சுயனலமா?
அவரைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? வேந்தன் சார்?
கமலம்


It is loading more messages.
0 new messages