சமண சமயத்தில் பெண்களின் நிலை

174 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Mar 8, 2015, 5:55:05 AM3/8/15
to மின்தமிழ், vallamai
அன்பர்களே,

தேமொழியார், அரங்கனார் அவர்களின் கேள்விகளின் விளக்கமாக இவ்விழைத் தொடங்கப்பட்டாலும், சமண சமயத்தில் உண்மையான நிலை என்னவென்று அறிந்துக் கொள்ள உதவும். நிறைகளை மட்டுமே குறிக்காமல், குறைகளையும் சுட்டும் ஒரு இழையாக இருக்கவேண்டும் என்பதுவே என் எண்ணம்.

தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும், கேள்விகளையும் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம், கேட்கலாம். (கிண்டல், நய்யாண்டிப் போன்றவற்றைத் தவிர்த்தால், இவ்விழை இன்னும் நன்றாக வளரும்).

முதல் குறிப்பாக, கருநாடகத்தின் சமண சமயத்தில் கல்வியின் நிலைப்பற்றிய ஆழ்ந்த புலமைப்பெற்ற திருமதி.காமத் அவர்களின் வலைத்தளத்திலிருந்து இக்கட்டுரையைப் பகிர்கிறேன். அதில் வரும் சமண பெண்களில் கல்வி நிலையை தனியே ஒட்டுகிறேன்.

------------------------------------------------

http://www.kamat.com/database/books/kareducation/jaina_education.htm

”....

Special mention has to be made regarding the instruction available for women in Jaina system. It is well known that Buddha welcomed women to sangha or monastic organization after initial reluctance and hesitation. The Jaina order had no such dithering. From the times prior to Mahaveera, Jaina nunneries existed. Dharmadāna or imparting religious education was a mission with this class. Wandering nuns created cultural awareness through discourses, which were attended by all classes and without gender discrimination.

We come across grants to ajjis in inscriptions. This term is similar to ārye or āryake, a learned nun. An ajji or kanti was entitled to initiate disciples into renunciation. Ajjis with several male disciples (gudda) figure in inscriptions and literature5. These were well versed in Jaina cannon and religious practices, since they had to initiate various disciples of different caliber and attainment, they had to remember and practice elaborate injunctions and rites.

As late as 14th century C.E., the Tapogachha University in Gujarat conferred various degrees on learned women. They were 1) Ganini (leader of gana), 2) Pravarthini (Propagator), and 3) Mahattara (The great or superior) 6. The first and second category of female ascetics seems to have traveled across the country, providing spiritual guidance. Mahattara was a leader of nuns. We know one Mahattara par excellence by the name of Yakini. Haribhadrasuri is a great name in Indian literature. He wrote books on Jaina ethics, yoga, logic, rituals and commentaries on shāstras, besides stories. He calls himself Yakini-Mahattara-sunu or son of great nun Yakini! This suggests that she must have been a genius and a great influence on his scholastic life.

Many sādhvis and kantis mastered and preached Jaina Agamas or holy texts. Some of them have erected monuments in memory of their gurus. The kantis were employed as instructors to princesses, to teach reading, writing and various arts. There were nuns who specialized in astrology and logic. Administrators like Jakkiabbe who administered a division, and several queens who ruled provinces, towns and religious establishments were of Jaina faith. The legendary queen Shantala excelled in music, dance and drama. Undoubtedly they all availed the facilities of education in Jaina system of those times.

We have to go back to Shravanabelagola to have pictorial evidence of sādhvis who moved from place to place. In the wall-murals of the Jaina matha is a scene of instruction wherein a senior nun is engaged in reading out and explaining to juniors who are intently listening (see picture no.12) with folded hands. Another scene depicts a nun addressing an assembly. From the dress of the instructor we can guess that she is a visiting sādhvi from north or west India. This only proves that wandering and preaching nuns were quite common.

The basadis continued to impart popular education where shrāvaka-goshtis or listening assemblies were held. Women learnt to read and recite Jinagamas, participated in community singing and listened to the stories of great men in Jainism. Kannada classics speak of housewives attending such sessions and their men folk encouraging it.

Jaina devotees undertook copying out sacred texts and donating them to basadis and individuals. Attimabbe's grant of a thousand copies of Shantipurana was a landmark. Those who could not arrange donation on such a large scale engaged copyists on a moderate scale. Others undertook it upon themselves. Basadis in Kolhapur are in possession of such manuscripts of copies of holy texts made by nuns and commoners. These holy texts and classics were read out to the conglomeration on special days and weeks. The ajjis used to conduct story-sessions and recitals. In the days when education could not be separated from religion, both mingled to motivate individuals with character-building and leading a pious life.”

----------------------------------

வளரும்...

அனைத்துலகத்திலுமுள்ள தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த பெண்கள் தின வாழ்த்துகள்!



இரா.பானுகுமார்,

பெங்களூரு



N. Ganesan

unread,
Mar 8, 2015, 8:47:35 AM3/8/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Sunday, March 8, 2015 at 4:21:18 AM UTC-7, பவள சங்கரி wrote:
சமண சமயத்தில், உயர் ஞானம் மற்றும் கல்வியறிவு பெற்ற பெண் துறவிகளைக் காண்பது அசாதாரணமானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, குணா சத்வி என்பவர், கி.பி.905 இல், ‘உபமிதபவா- பிரபஞ்ச கதா’ என்ற, சித்தார்ஷி யின் இந்து மதம் சார்ந்த நினைவுச் சின்னங்களின் முதல் பதிவை உருவாக்கியவர். சித்தார்ஷியால் , தெய்வீகத்தன்மை வாய்ந்த அவதாரம் எடுத்து வந்த தேவதை என்று போற்றப்பட்டவரும் இவரே! கி.பி.1118, சித்தராஜா ஜெயசிம்மா 
காலத்தில், மகாநந்தா-ஸ்ரீ மஹாட்டாரா மற்றும் க(3)ணினி வீரமாத்தி ஆகிய இரு துறவிகள் மிக சூட்டிப்பாக, மலாதாரி ஹேமச்சந்திராவிற்கு, ஜினாபத்ராவின், ‘விஷேஷவஷ்யக-பாஷ்யா வின் மிக நீண்ட வர்ணனையைப் பதிவிடுவதற்கு உதவியிருக்கிறார்கள்.  கி.பி.1350இல் குணா-சம்ரித்தி மஹாட்டாரா, ‘அஞ்சனா-சுந்தரி-சரித்ரா’ என்ற ஒரு பிராக்கிருதப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். 


தமிழின் சமண நூல்களிலே பெண்களின் கல்வியை மிக வலியுறுத்தியுள்ளார்கள்:

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. - நாலடியார்

குஞ்சி = தலையின் முடியில் கட்டப்படும் குஞ்சம்
கொடுந்தானைக்கோடு = சீலை முந்தானை
மஞ்சள் அழகு = ‘மேக்கப்’ அழகு

கணிகளிலே மேதையான கணிமேதாவியார்
சமணர். அவர் பெண்கல்வியை நாலடியார்
போலவே ஏலாதியில் சிறப்பித்துச் சொல்கிறார்:

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்
நடை வனப்பும், நாணின் வனப்பும் - புடை சால் 
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு - ஏலாதி

தமிழ்ச் சமணர்களில் வணங்கப்படும் திருவள்ளுவர்
தெய்வீகமான பள்ளிகளில் கற்க நுழையும்போது
சுத்தமாகச் செல்க என்கிறார். இல்லாவிடில்,
கற்றோர் அவையிலே முட்டாள் நுழைவது போலாகும்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
இங்கே, பள்ளி = (சமணப்) பள்ளி  “School where the village youth got educated".

எல்லாவற்றுக்கும் மேலாக, சமணக் குரத்தியார்
ஔவையார் ஆத்திசூடி தீர்த்தங்கரரை வாழ்த்தி
தமிழர்க்கு என்றென்றைக்கும் தமிழ்க்கல்வியைத்
வித்தியாரம்பம் செய்துவிட்டார். ஆத்திசூடி கடவுள்வாழ்த்து
பற்றி முக்குடை சமணர் இதழில் வெளியான கட்டுரை:
(from Jaina texts and art historical evidence)


நா. கணேசன்


 
நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Banukumar Rajendran

unread,
Mar 10, 2015, 7:36:04 AM3/10/15
to மின்தமிழ், vallamai
தமிழகத்தில்...

-----------------------------------------
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=18

5. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

     ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் கந்தி அல்லது கௌந்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை?

    ‘‘நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்
    கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப.’’

என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு,

    ‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’

என்றும், திவாகர நிகண்டு,

     ‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’

என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற கௌந்தியடிகள், சமணசமயத்துப் பெண்பால் துறவியாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத்திருப்பதிகளுள் ஒன்றுமான சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள் உள்ள சிரவண பௌகொள என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களில் சில கந்தியார்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:- நாகமதி கந்தியார், சசிமதி நந்தியார், நவிலூர் சங்கம் ஆஜிகணத்தைச் சேர்ந்த ராஜ்ஞிமதி கந்தியார், அநந்தமதி கந்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ கந்தியார் முதலியன.

     சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்படுகிறது:- ‘‘ரிஷிகள் (சமண முனிவர்) பி¬க்ஷக்குப் புக்க கிருஹத்து ஆர்யாங்கனையைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்கவென்றும், அவர்களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பி¬க்ஷ கொள்ளாது மீள்க வென்றும், ரிஷிகள் இருக்கும் பள்ளியுள் ஆர்யாங்கனைகள் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்கனைகள் இருக்கும் பள்ளியுள் ரிஷிகள் இருக்கப் பெறாரென்றும், ரிஷிகள் ரிஷிகள்பாற் றுறக்க, ஆர்யாங்கனைகள் ஆர்யாங்கனைகள்பாற்றுறக்க வென்றும் , அத்யயனமும் இவ்வாறே செய்கவென்றும் விதிக்கின்ற பரமாகம முடையார் அவ்வாறே இன்றுகாறும் அனுஷ்டிக்கின்றார்கள்.’’

                        (நீலகேசி: மொக்கல: 57. உரை.)

     குரத்தி என்னும் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்கி வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற்பெயர் ஆகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், சாசனங்கள் முதலியவற்றில் குரத்தி என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது.

    ‘‘சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை
    நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்.’’

என்பது கயாதர நிகண்டு.

     ஸ்ரீ மிழலூர்க் குரத்தியார், சிறிவிசையக் குரத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், அரிட்டநேமிக் குரத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கூடற் குரத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

     வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டைத் தாலுகா விளாப்பாக்கத்தில் உள்ள நாகநாதேசுவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகள் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்வூரில் சமணப் பெண்பள்ளியை (மடத்தை) நிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது:-

     ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது, படுவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரிநாட்டு விளாப்பாக்கத்துத் திருப்பான் மலை அரிஷ்டநேமி படாரர் மாணாக்கியார் பட்டினி குரத்தி அடிகடேன் கண்ட கினறு. இது இவ்வூர் இருபத்து நால்வரை இரக்ஷ¤ப்பதாகவும், இம் மனையும் கிணறும் பெண்பள்ளி யாவதாகவும், இத் தர்மங் கெடுத்தார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவத்திற்படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான் இலாடாச்சனேன¢245.

     ஆர்யாங்கனைகள் என்றும் கௌந்திகள் என்றும் குரத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து வெள்ளிய ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் சமய நூலையும் இலக்கண இலக்கிய நூல்களையும் நன்கு பயின்று இருந்தனர். இவர்கள் பெற்றிருந்த கல்வியறிவின் சிறப்புக்குச் சிந்தா மணியின் இடைச் செருகல் பாட்டுக்களே சான்று பகரும்.

     திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்களை யுடையது. இக் காவியத்தில் இப்போது 450 செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அதிகப்படியான செய்யுட்களைக் கந்தியார் என்னும் ஆருகத சமயத் துறவியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்துவிட்டார் என்பர். திருத்தக்க தேவருடைய திருவாக்குப் போன்றே கந்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது கந்தியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கந்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற விளங்குகிறதன்றோ? இத்தகைய கந்தியார்களும் குரத்தியார்களும், இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு ஆருகதக் கொள்கைகளையும் அறவுரைகளையும் புகட்டிவந்தனர்.


----------------------------------------


வளரும்.....

தேமொழி

unread,
Mar 10, 2015, 11:00:38 PM3/10/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

////

திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்களை யுடையது. இக் காவியத்தில் இப்போது 450 செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அதிகப்படியான செய்யுட்களைக் கந்தியார் என்னும் ஆருகத சமயத் துறவியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்துவிட்டார் என்பர். திருத்தக்க தேவருடைய திருவாக்குப் போன்றே கந்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது கந்தியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கந்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற விளங்குகிறதன்றோ?
////


அம்மையார் நல்ல திறமையானவர்தான்....

புள்ளியியல் அடிப்படையில், கணினி உதவிகொண்டு மீண்டும் தற்காலத்தில் ஒருமுறை இடைச்செருகல்களை கண்டறிய முயற்சி செய்து பார்க்கலாமே.  

ஏனெனில் கீதையின்  மொழியிலும் நடையிலும் இடைச்செருகல்களில் வேறுபாடு உண்டு என்பது ஆய்வாளர் கருத்து 


என் கருத்து இழையில் இருந்து கொஞ்சம் விலகினாலும்... பிரித்தறிய முடியாத அளவிற்கு இலக்கியம் படைத்த துறவியாரின் இந்தத் திறமை என்னை வியக்க வைக்கிறது.  

..... தேமொழி

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 11, 2015, 3:38:07 AM3/11/15
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ பானுகுமார் ஐயா, சமணமும் பௌத்தமும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் என்று தாங்கள் வேறொரு இழையில் கருத்துப் பகிர்ந்ததை வாசித்ததாக நினைவு.

உத்தர பாரதத்தில் ............. குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் சமணப்பெண் துறவிகளை வெகுவாகப் பார்க்க முடிகிறது.  இவர்கள் உத்தரபாரதத்தின் மற்ற பகுதிகளிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். சமயக் கல்வி கற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

பௌத்த சமயத்தில் இன்று பெண் துறவிகள் ஏன் காணக்கிட்டுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.  ஹிந்துஸ்தானத்தில் வஜ்ரயானம் தழைக்கும் சிக்கிம், ஹிமாசலப்ரதேசம், லத்தாக் பள்ளத்தாக்கு, நம்மைச் சுற்றியுள்ள ஸ்ரீலங்கா, பாங்க்ளாதேஷ், பர்மா, போன்ற தேசங்களில் பௌத்தம் தழைத்தாலும் பெண் பௌத்தத் துறவிகளைப் பார்த்ததாக நினைவிலில்லை.

ஆனால் முற்காலத்தில் பௌத்தத்திலும் பெண் துறவிகள் இருந்ததாகத் தெரிகிறது.

சந்த்ரகாந்தா என்ற பிக்ஷுணி (பெண் துறவி) இயற்றியதாகச் சொல்லப்படும் ஆர்ய அவலோகிதேஸ்வர ஸ்தவம் என்ற சங்கத மொழியிலான ஸ்தோத்ரம் காணக்கிட்டுகிறது.


நாகர லிபியில் இந்த ஸ்தவத்தை மேற்கண்ட உரலில் வாசிக்கலாம். ரோமன் லிபியில் இதே ஸ்தோத்ரம் இந்த தளத்தில் கிட்டும்.

கமலா குச சூசுக குங்குமதோ.......... என்று வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தினூடே வரும் சங்கதப்பாவின் சந்தத்தில் இந்த ஆர்ய அவலோகிதேஸ்வர ஸ்தவம் காணக்கிட்டுகிறது.  

பௌத்த சமயத்தில் ஏன் பெண் துறவிகள் காணக்கிட்டுவதில்லை.  எப்போதிலிருந்து இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஏன் நிகழ்ந்தது. வரலாற்றுப் பின்னணி என்ன என பல கேழ்விகள் எழுகிறது.



Banukumar Rajendran

unread,
Mar 11, 2015, 4:59:04 AM3/11/15
to மின்தமிழ், vallamai
தமிழகத்தில்....

-------------------------

வேடல் சமணப் பெண் துறவியர் பள்ளி
(தொள்ளாயிரம் பேருக்கும் அதிக எண்ணிக்கையில் பயின்ற மகளிர் பல்கலைக் கழகம்.
                                                                         - டாக்டர் ஏ.ஏகாம்பரநாதன்
 
 
வந்தவாசியிலிருந்து ஏறத்தாழ இருபது கி.மீ தென்மேற்கில் அமைந்துள்ள சமணத்தலம் வேடல் என்பதாகும். பண்டைக் காலத்தில் இவ்வூர் விடால் எனவும், மாதேவி ஆரந்தி மங்கலம் எனவும் பெயர்களைப் பெற்றிலங்கியிருந்தது. விடால் என்ற இதன் பண்டைய பெயரே மருவி இப்போது வேடல் என அழைக்கப்பட்டு வருகிறது.
 
இவ்வூரை அடுத்து அமைந்துள்ள மலையில் இயற்கையான இரண்டு குகைகள் உள்ளன. இவை கி.பி.8ஆம் நூற்றாண்டிலிருந்து சமண சமயப் பெண் துறவியர் உறைந்து கல்விப் பணியாற்றிய பெரும்பள்ளியாகத் திகழ்ந்திருக்கின்றன. குரத்தியர்களால் நிர்வகிக்கப்பட்டுவந்த பெண்பள்ளிகள் வேடல், காமராசர் மாவட்டத்திலுள்ள குறண்டி, வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த விளாப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்தனவாக அறிய வருகிறோம்.
 
வேடலிலுள்ள குகைப்பள்ளியை கி.பி.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கனகவீரக் குறத்தி என்னும் பெண்துறவி கண்காணித்து வந்திருக்கிறார். இந்தப் பெந்துறவியரது பள்ளியினைப் பற்றிய செய்திகள் முதலாவது ஆதித்தசோழன் காலத்தைச் சார்ந்த கல்வெட்டொன்றில் (கி.பி.885) இடம் பெற்றிருக்கின்றன. அக்கல்வெட்டு பின்வருமாறு காணப்படுகிறது.
 
“ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரிபர்மர்க்கு யாண்டு பதினாலாவது சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆரந்திமங்கல முடைய குணகீர்த்தி படாரர் வழி மாணாக்கியார் கனகவீரக்குரத்தியாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபாஸிகள் நானூற்றுவர்க்கும் கொள்ளாதமையில் இக்கோயிற் பிள்ளைகள் ஐந்நூற்றுவர்க்கு வழிஇலாரும் காத்தூட்டு வோமானோம் எங்களுடைய ஸ்வரஷை. இது இரஷிப் பார் அடிநிலை, எங்கள் தலைமேலென மாதேவி ஆரந்தி மங்கலமுடைய கனகவீரக் குறத்தியார்த் தங்க..ர் மகளா தனமையில்... முக்கியருமிது காப்பார் அவர்கள் ஸ்வரஷை இதனை இரஷிப்பாரடி நிலை என் தலை மேலென...டறுங் காழாறும் முதலாகிய மாதேவி ஆராந்தி மங்கலமுடைய கனகவீரக் குரத்தியார் தங்கள் மகளாராதினமையில் இது வெல்லாந் தங்கள் காவில் இதனை தீங்கு நினைத்தாற் கங்கையிடைக் குமரியிடை எழுநூற்றுக் காதமும் செய்த பாவங் கொள்வார். காவலனுக்கு பிழைத்தாராவார்”!
 
1908ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளது. “கனகவீரக் குறத்தி வழி வந்த ஐநூறு பேருக்கும், இப்பள்ளியுடன் தொடர்பு கொண்ட நானூறு பெண் துறவியருக்கும் இந்தப் பள்ளி போதிய இடவசதி உடையதாக இல்லாமலும், அவர்களுக்கு உணவளிக்கிற நிலையில் இல்லாமலும் இருந்ததால், விடால் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்துக் காப்பதற்கு முன்வந்தனர் என்பது தெளிவாகும்.

-------------------------

வளரும்...


இரா.பா

Suba.T.

unread,
Mar 11, 2015, 12:07:10 PM3/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-11 8:38 GMT+01:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:


பௌத்த சமயத்தில் இன்று பெண் துறவிகள் ஏன் காணக்கிட்டுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

​தங்கள் கேள்வி​ குறிப்பாக இந்திய தேசத்தை மட்டும் நோக்கமாக கொண்டு கேட்கப்பட்டதா அல்லது பொதுவாகவா எனத் தெரியவில்லை..
பொதுவாக என்றால் மலேசியாவில் பௌத்த விகாரைகளில் பெண் துறவிகள் பலரை என இளமைக் காலம் முதலே நான் பார்த்து வந்திருக்கின்றேன். என் இல்லத்திற்கு பக்கத்தில் தான் Penang Recling Buddha Temple இருந்தது. ஆக பார்த்த நினைவு உண்டு. 
தாய்லாந்தில் பரவலாக பெண் பௌத்த பிக்குணியர்களை காணலாம். நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

சுபா

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 11, 2015, 12:35:41 PM3/11/15
to mint...@googlegroups.com
ஸ்ரீமதி சுபா

நான் ஹிந்துஸ்தானம் மட்டுமின்றி உலகளாவியே நிலவரம் என்ன என்று அறிய விரும்பினேன்.

லத்தாக் பள்ளத்தாக்கில் பல பௌத்த மடாலயங்களுக்கு (லே, ஆல்சி, போத்கர்பூ - சில ) சென்றிருக்கிறேன்.  வஜ்ரயான பௌத்தம் புழக்கத்தில் உள்ள அங்கெல்லாம் பிக்ஷுணிகளைக்  கண்டதில்லை.  இத்தனைக்கும் ஆர்யதாரா என்ற பெண் போதிசத்வர் உபாசனை வஜ்ரயான பௌத்தத்தில் அங்கம் வகிப்பதாகும். காரண்ட வ்யூஹ: ஸூத்ரம் எனப்படும் மஹாயான பௌத்த ஸூத்ரத்தின் ஏழாவது ப்ரகரணத்தில் (நன்றி ஸ்ரீ விநோத் ஜி) ஆர்ய அவலோகிதேஸ்வரரை சரணடைந்த உமாதேவியை வாழ்த்தும் அவலோகிதேஸ்வரர் உமாதேவி உமேச்வர என்ற போதிசத்வராக ஆவார் என ஆசீர்வதிக்கிறார்.

http://www.dsbcproject.org/node/4355


மலேயா மற்றும் தாய்லாந்தில் இன்னமும் பெண் பிக்ஷுணிகள் இருக்கிறார்கள் என்று அறிவதில் மகிழ்ச்சி. 

தேராவாத பௌத்த சமயம் தழைக்கும் ஸ்ரீலங்காவில் பெண் பிக்ஷுணிகள் உண்டா தெரியவில்லை.  பீஹாரில் உள்ள புத்த கயாவுக்கு சென்றிருக்கிறேன்.  ஸ்ரீ லங்காவிலிருந்து பௌத்தர் குழாத்தினர் தர்சனத்துக்கு அங்கு வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். அதில் பௌத்த பிக்ஷுக்களை மட்டிலுமே பார்த்ததாக நினைவு. பிக்ஷுணிகளைப் பார்த்ததாக நினைவு இல்லை.


Suba.T.

unread,
Mar 11, 2015, 12:44:08 PM3/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-11 17:35 GMT+01:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
ஸ்ரீமதி சுபா

நான் ஹிந்துஸ்தானம் மட்டுமின்றி உலகளாவியே நிலவரம் என்ன என்று அறிய விரும்பினேன்.

​பொதுவாக பௌத்த பிக்குணிகள் நான் நேரில் பார்த்த நாடுகள்..
​தென் கொரியா
மலேசியா
தாய்லாந்து
மியன்மார்
லாவோஸ்
இலங்கை
சுவிஸர்லாந்து
இங்கிலாந்து
ஜெர்மனி
சிங்கப்பூர்

கம்போடியா, சீனா, இந்தோனீசியாவில் இருப்பதாக வாசித்த நினைவு.
​சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Mar 11, 2015, 1:13:58 PM3/11/15
to மின்தமிழ்
தமிழ்நாட்டில் பெண்கள் பெளத்த சமயத்தில் சங்கத்தில் உறுப்பினராகச் சில விதிகள் இருந்தன.  இளம் சிறுமியாகப் பூப்படைவதற்குமுன் சங்கத்தில் சேரலாம்.  அதையடுத்துத் திருமணம் ஆனபின்னர் இருவருமோ ஒருவரோ சாட்சியக்காரராக பெளத்தம் தழுவி துறவு பூனாமல் இல்லற வாழ்க்கை வாழ்ந்துகொண்டே புத்த சமயப் பற்றாளராக இருக்கலாம்

சமணமும் பெளத்தமும் தமிழகத்தில் பரவியபோது அங்குள்ள குமுகநிலைக்கு ஏற்ப மாற்றம் பெற்றது.  சமண பெளத்தத் துறவிகள் குமுகத்துக்கு அப்பாற்பட்டு வெளியே வாழ்ந்த நிலையிலிருந்து குமுகத்துக்குள் வாழ்ந்து நீதிநெறிகளை வலியுறுத்தி மக்கள் சமயப் பற்றோடு வாழ வகை செய்தனர். பெளத்த விகாரங்களிலும் சமணப் பள்ளிகளிலும் பெண்கள் அதிகம் பங்குபெற்று சமயக் கருத்துகளைக் குமுகத்தில் பரவ வழிவகுத்தனர்

தாய்லாந்தில் குடும்பத்துக்கு ஒரு பிள்ளையை பெளத்தமடத்துக்கு அளிப்பது வழக்கம்.  பெளத்த துவவிகள் எளிதாகத் தங்கள் துறவுநிலையை விலக்கி பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வழியிருந்தது.

கணினிதாசன்

Suba.T.

unread,
Mar 11, 2015, 1:53:27 PM3/11/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-03-11 18:13 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​..

தாய்லாந்தில் குடும்பத்துக்கு ஒரு பிள்ளையை பெளத்தமடத்துக்கு அளிப்பது வழக்கம்.  பெளத்த துவவிகள் எளிதாகத் தங்கள் துறவுநிலையை விலக்கி பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வழியிருந்தது.

​இதில் உண்மையில் நான் ரசித்த விசயம்..
பௌத்த பிக்குணியாகவோ பிக்குவாகவோ ஒருவர்  சில ஆண்டுகள் 
பயிற்சி
​ ​
இருந்து விட்டு மீண்டும் கு
​டு
ம்ப வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பலாம். அவர்களை சமூகம் தவறாகப் பார்ப்பதில்லை.
​கேலி செய்வதில்லை. ​
ஒரு குறிப்பிட்ட கால சன்னியாச வாழ்க்கை என்ற வகையில் ஆண் பெண் இருவருக்கும் தாய்லாந்தில்  து
​ற​
வு நிலையை அனுஷ்டிக்கும் 
​ வாய்ப்பு இருக்கின்றது.

கடை நிலை மக்களிலிருந்து மன்னர் வரை சில காலம் துறவு நிலையை​
​ அனுஷ்டிக்க வேண்டும் என்ற ஒரு நடைமுறையும் இருக்கின்றது. இன்றைய மன்னர் பூமிபோல் 3 ஆண்டுகள் துறவியாக பயிற்சி எடுத்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனது தாய்லாந்து பயணக் கட்டுரையில் இதனை குறிப்பிட்டிருக்கின்றேன்.

சுபா

Banukumar Rajendran

unread,
Mar 12, 2015, 3:40:43 AM3/12/15
to மின்தமிழ், vallamai

http://en.wikipedia.org/wiki/Lakkundi

Attimabbe

Attimabbe built a Jain temple at Lakkundi[6] to which the king (Satyasraya) provided a golden Kalasa.

Attimabbe, known as Danachintamani is a well known personality of the Kalyani Chalukyas period. She made 1000 copies of great poet Ponna's Santi purana and distributed as Sastradana.

The Brahma jinalaya was constructed by Attimabbe. Attimabbe wife of Nagadeva who was the chieftain and soldier of Chalukya King Ahavamalla and mother of Ahniga Masavadi who was ruling Lakkundi for some time.

Attimabbe sheltered the poet Ranna.

-------------

http://www.jainglory.com/research/attimabbe

"Danachintamani" Attimabbe

Jainism had been enjoying royal patronage in Karnataka state during medieval centuries by Rashtrakutas, Early chalukyas of Badami,Feudatories Gangas monarchs and Chalukyas of Kalyani. Some monarchs of different dynasties were adherent to Jainism and devout to Jina’s feet.

Some of the greatest monuments of this era are dedicated to Jainism and some of them are lost and dilapidated. Jainism in Karnataka is indebted to some Jaina generals, Monarchs, Ministers and Businessmen to nourish Jaina culture by endowment made to construct the greatest monuments .One more fact is worthy to mention here that Such endowments were not only done by Male devotees but also by female devotees. Many Adherent Female Jain devotees are renowned in history of Karnataka.

Jakkiyabbe, Attimabbe, Queen Abbaka and Queen Chaina Bhaira devi are famous personalities of this category who are not only celebrated for their devotion to Jainism but also for their gallantry and political influence.

Western Chalukya Empire is witness of Jaina Ascendancy and strength due to noble support and patronage of rulers. Lakkundi Brahma Jinalaya has an inscription containing records of two martial, Jaina Families, Their contribution to raise the power of Chalukya Empire and Jaina cultural ascendancy. It has also records about one of the most renowned and esteemed Jaina personality of medieval Karnataka. The record of Lakkundi Brhama Jinalaya was discovered by Dr. T.N. Srikanth in 1945. There is one inscription lying in the complex of Brahma Jinalaya hailed from 1007 AD. This original record is effaced and fragmented in pieces and another record which is inscribed after some centuries of original one has additional information of fatalities and destruction to the Brahma Jinalaya. This bilingual inscription was composed in 88 Stanzas of Kannada and Sanskrit Language. The later inscription was composed by Bahubali son of Shripala. Bahubali was a proficient composer of Kannada and Sanskrit who caused to be renovated the Brahma Jinalaya in 12 century AD. Earlier inscription was perhaps composed by poet Ranna; composer of Ajitnatha Purana who enjoyed court poet designation in Chalukya court of Tailap II.and Irivabedanga satyasray.

Attimabbe: - Attimabbe was born in 950 AD to Feudatory Mallapa of chalukya king Tailap II. Mallapa was a devout adherent to Jainism and he was an impressive personality in imperial court of Tailap II. Attimabbe’s Father Mallapa belonged to “Vajiivamsa “of Kondniya gotra and known as Dandnayaka title bestowed by Tailap II. Attimabbe was married to Nagadeva in 965 AD. Nagadeva’s Father was Dhallapa ; Chief ministerand general in chalukyan court. Dhallapa is also mentioned in Lakkundi inscription as a brave, highly learned, intelligent, proficient and valiant in war. It also credits to triumph over Vengi, Malwa, Konkan and Tigules. Nagadeva was elder son of Dhallapa and had same qualities as father had. He was also devout to Jainism and considered a bright star of “Vajjivamsa”. Victory of Gujarat and Vengi is credited to Nagadeva as described in lakkundi Inscription. Lakkundi inscription describes Attimabbe as wife of Nagadeva, daughter of Mallapa and Daughter in law of Dhallpa. Attimabbe was mother of Paduvala Tailap or Anniga. Her noteworthy achievements are mentioned below.

1.) She caused the construction of 1500 Jain Shrines in her life and in addition one more at Lakkundi celebrated as Brahma Jinalaya. 2.) She caused 1500 Jina images to be made and gifted them along with Gold bells and lamp of daily worship of Lord Jina. 3.) She caused 1000 copies of Shantipurana to be made on palm leaves and distributed them to Jina preachers and scholars as “Shastra Daan”.

Her husband Nagadeva was killed in battlefield showing great valor when Attimabbe was only 34 years old in 984 AD. King Tailap II himself came to Attimabbe to express his condolence on death of Nagadeva .She led a pious life after husband’s death following Jaina creed. She was devout to Jainism and attributed many marvels and miracles to her in Lakkundi Inscription. She is compared to many famous personalities like Rukmini, Satyabhama,Chelini, Rohini, Prabhawati , Sulochna , Marudevi, Sushaine, Sivadevi, lakshmana and Vijayasena. In above mentioned names; five names are of Jina savior’s Mother. She was contemporary to Ganga general and chief minister Chavundraya. She is also honored by Poet Ranna as “DanaChintamani” means “Jewel among donors”. BrahmaShiva in Samayparikshe adores Attimabbe attributing many epitaphs like “gunadakhani”,”Vimala Charitre”, “Jain sasna rakshmani”, “Sajjanaka Chudamani”, “Akalanka Charite” and “Sarvakalavidhi”

About 22 lithic records in Karnataka refer to high esteemed woman of nobility who have been compared to Attimabbe for their acts of charity and chastity. Moreover, an award on the name of Attimabbe was given to a female candidate every year by Karnataka government every year. Year 1994 was also celebrated as the year of Attimabbe.

----------------------------


தொடரும்...

Banukumar Rajendran

unread,
Mar 12, 2015, 4:02:28 AM3/12/15
to மின்தமிழ், vallamai
The Great, Queen Abbakka.

பெரும்பாலோர்க்கு தெரியாத மகாராணி அப்பாக்கா! ஜான்சி ராணிக்கும் சுமார் 300 வருடங்கள் முன்னேயே பரங்கியர்களை எதிர்த்துப் போராடியவர்!

-------------------------------------------
http://en.wikipedia.org/wiki/Abbakka_Chowta


Rani Abbakka Chowta was the Jain Queen of Ullal who fought the Portuguese in the latter half of the 16th century. She belonged to the Chowta dynasty who ruled over parts of coastal Karnataka (Tulu Nadu), India. Their capital was Puttige. The port town of Ullal served as their subsidiary capital. The Portuguese made several attempts to capture Ullal as it was strategically placed. But Abbakka repulsed each of their attacks for over four decades. For her bravery, she came to be known as Abhaya Rani (The fearless queen).[1][2] She was also one of the earliest Indians to fight the colonial powers and is sometimes regarded as the 'first woman freedom fighter of India'.[3][4]

”....

Battles against the Portuguese

The Portuguese, clearly upset by Abbakka's tactics, demanded that she pay them tribute but Abbakka refused to yield. In 1555, the Portuguese sent Admiral Dom Álvaro da Silveira to fight her after she refused to pay them tribute.[6] In the battle that followed, Rani Abbakka once again managed to hold her own and repulsed the attack successfully.

In 1557, the Portuguese plundered Mangalore and laid waste to it. In 1568, they turned their attention to Ullal but Abbakka Rani resisted them yet again. João Peixoto, a Portuguese general and a fleet of soldiers were sent by the Portuguese Viceroy António Noronha. They managed to capture the city of Ullal and also entered the royal court. Abbakka Rani, however, escaped and took refuge in a mosque. The same night, she gathered around 200 of her soldiers and mounted an attack on the Portuguese. In the battle that ensued, General Peixoto was killed,[7] seventy Portuguese soldiers were taken prisoners and many of the Portuguese retreated. In further attacks, Abbakka Rani and her supporters killed Admiral Mascarenhas and the Portuguese were also forced to vacate the Mangalore fort.

In 1569 however, the Portuguese not only regained the Mangalore fort but also captured Kundapur (Basrur). Despite these gains, Abbakka Rani continued to remain a source of threat. With the help of the queen's estranged husband, they mounted attacks on Ullal. Furious battles followed but Abbakka Rani held her own. In 1570, she formed an alliance with the Bijapur Sultan of Ahmed Nagar and the Zamorine of Calicut, who were also opposing the Portuguese. Kutty Pokar Markar, the Zamorine's general fought on behalf of Abbakka and destroyed the Portuguese fort at Mangalore but while returning he was killed by the Portuguese. Following these losses and her husband's treachery, Abbakka lost the war, was arrested and jailed. However, even in prison she revolted and died fighting.’”

---------------------------------

தேமொழி

unread,
Mar 12, 2015, 4:05:53 AM3/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


நன்றி...நன்றி...பானுகுமார்

இது போன்ற பின்புலம் கொண்ட ஓர் அரசகுல சமண அம்மையாரைதான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.  


The Brahma jinalaya was constructed by Attimabbe. Attimabbe wife of Nagadeva who was the chieftain and soldier of Chalukya King Ahavamalla and mother of Ahniga Masavadi who was ruling Lakkundi for some time.

Jainism had been enjoying royal patronage in Karnataka state during medieval centuries by Rashtrakutas

One more fact is worthy to mention here that Such endowments were not only done by Male devotees but also by female devotees. Many Adherent Female Jain devotees are renowned in history of Karnataka.

Attimabbe was born in 950 AD to Feudatory Mallapa of chalukya king Tailap II. Mallapa was a devout adherent to Jainism and he was an impressive personality in imperial court of Tailap II. 
Attimabbe was mother of Paduvala Tailap or Anniga. Her noteworthy achievements are mentioned below.

1.) She caused the construction of 1500 Jain Shrines in her life and in addition one more at Lakkundi celebrated as Brahma Jinalaya. 2.) She caused 1500 Jina images to be made and gifted them along with Gold bells and lamp of daily worship of Lord Jina. 3.) She caused 1000 copies of Shantipurana to be made on palm leaves and distributed them to Jina preachers and scholars as “Shastra Daan"

Her husband Nagadeva was killed in battlefield showing great valor when Attimabbe was only 34 years old in 984 AD. King Tailap II himself came to Attimabbe to express his condolence on death of Nagadeva .She led a pious life after husband’s death following Jaina creed. She was devout to Jainism and attributed many marvels and miracles to her in Lakkundi Inscription. 



She led a pious life after husband’s death following Jaina creed


இதை கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா?

இளவயதிலேயே அரசனான கணவனை இழந்த அரசி அட்டிமாபீ (தமிழில் உச்சரிப்பு சரியில்லை எனில் திருத்தும் செய்யவும்) சமணத் துறவியானார் என்று பொருள் கொள்வது சரியா?

..... தேமொழி

Dhivakar

unread,
Mar 12, 2015, 4:31:11 AM3/12/15
to vallamai, மின்தமிழ்
அன்புள்ள தேமொழி,

ஆந்திராவிலும் இத்தகைய பெண்ணரசிகள் பலர் உண்டு. நாகமாம்பா எனும் பெயர் கொண்ட ஒரு பெண்மணி எத்தகைய வீரச்செயல்களால் ஜாதி அரசர்களைக் கட்டுப்படுத்தினாள் என்று மின் தமிழ் மரபு விக்கி’க்காக ஒரு தொடர் கட்டுரை எழுதியுள்ளேன்.. படித்த நினைவு உண்டா? கிடைத்தால் லிங்க் எடுத்துப் போடவும்.

அன்புடன்
திவாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 12, 2015, 4:34:37 AM3/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

Attimabbe பற்றி மேலும் சில தகவல்கள்... 

Attimabbe, the great patron-saint of literature, is gratefully remembered today by naming the highest award for women writers after her. The Government of Karnataka instituted this award on the thousandth anniversary of her birth in 1996. Attimabbe patronized the great poet Ranna, who in his writings praised her munificence. She had one thousand copies made of poet Ponna's Shantipurana, a work dealing with the life and message of Tirthankara Shantinatha, and distributed these copies among scholars. Jaina householders invariably arranged for the free distribution of palm-leaf books


_________________



History- Lakkundi is a place of complex temple archietecture.The place is also know by the famous 'Danachintamani Attimabbe'. She santified the place here by here patronage for Kannada literature and Jain religion. Her's is a historical name in the history of karnataka. 
Lakkundi

     Lakkundi is also called as LokkiGundi in the inscriptions.The Brahma jinalaya was constructed by Attimabbe. She was the beloved wife of Nagadeva who was the chieftain and soldier of Chalukya King Ahavamalla. She was also the mother of  Ahniga Masavadi who was ruling Lakkundi for some time.She sheltered the poet KaviRanna. Brahmajinalaya stands as the testimony of the high rank in the karnataka Archietecture and sculpture. Attimabbes great devotion, generosity, excellence and other virtues are well portrayed in this temple. Brahmajinalaya has awell fastened Mukha mantapa. and the court hall proped by central pillars decorated with beautifully carved dancers. The garbagudi holds the idol of Vardhamana  Mahavira tirthankar. More than all the cylindrical sculptor of Chaturmukha Brahma and Lordess Saraswathi temples attract the piligrims and the art lovers to the heart's content. 


_________________

  • The Belathur inscription of 1057 describes the end of a widow called Dekabbe who committed Sati despite the requests of her parents not to while some widows such as Chalukya queen Attimabbe long survived their deceased husbands (Kamath 2001, pp 112–113)

  • This also is in Champu style and was written at the request of Attimabbe, a pious widow of general Nagavarma who promoted the cause of Jainism (Sastri 1955, p356)

__________________



Education in Karnataka through the ages
by Jyotsna Kamat
Jaina System of Education

தேமொழி

unread,
Mar 12, 2015, 4:54:06 AM3/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


நான் தேடுவது குறிப்பாக "துறவியான சமண அரசி"களை திரு. திவாகர்.



கர்நாடகாவின் வீரச் செயல் பெண்மணிகள்  பற்றிய தகவல் சில இங்கு.  இவர்கள் சமணர்களா என்பது எனக்குத் தெளிவாகத்  தெரியவில்லை. 

In the higher strata, girls were taught state-craft, horse and elephant riding and wielding of various weapons. We have a rare sculptural representation of Saviyabe, falling in the battlefield fighting to save her husband.


K.L. Kamat/Kamat's Potpourri
 
Horse-mounted Saviyabbe Avanging her Husband's Death
A 10th century memorial depicts a woman killing a elephant mounted enemy

Princess Akkadevi, governor of Banavasi province (1024-1068 C.E.) defeated the rebellious chieftain of Gokage, when her military skills shone and won her the title of Ranabhairavi (goddess of battlefield.) The tradition continued till the 17th century. Mallamma, daughter of the chieftain of Sonda was taught martial craft along with her brother Sadashiva Nayaka. This included horse riding and wielding of various weapons. (Appendix A). She put to good use this initial training by coaching two thousand women of her principality who gave a tough time to the troops of Shivaji when her place was invaded.



..... தேமொழி

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Dhivakar

unread,
Mar 12, 2015, 5:26:50 AM3/12/15
to vallamai, மின்தமிழ்
//கர்நாடகாவின் வீரச் செயல் பெண்மணிகள்  பற்றிய தகவல் சில இங்கு.  இவர்கள் சமணர்களா என்பது எனக்குத் தெளிவாகத்  தெரியவில்லை. //

அந்தக் கால கட்டத்தில் அரசிகள் கணவனைச் சார்ந்தே மதத்தை அனுசரித்து வந்தார்கள். ஆனால் பிற மதங்களையும் பேணினார்கள். ராஜராஜனின் மகள் குந்தவி (வேங்கி விமலாதித்தனின் மனைவி) சமணர்களுக்கும் உதவி புரிந்ததை திருமலை (தமிழகம்) கல்வெட்டு ஒன்று எடுத்துக் காட்டுகிறது.

தி
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 12, 2015, 5:49:39 AM3/12/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, March 12, 2015 at 1:54:08 AM UTC-7, தேமொழி wrote:


நான் தேடுவது குறிப்பாக "துறவியான சமண அரசி"களை திரு. திவாகர்.



கர்நாடகாவின் வீரச் செயல் பெண்மணிகள்  பற்றிய தகவல் சில இங்கு.  இவர்கள் சமணர்களா என்பது எனக்குத் தெளிவாகத்  தெரியவில்லை. 

சிகாகோ இந்தியவியல் பேராசிரியை வெண்டி டானிகர் நல்ல குதிரைச் சவாரி போன்றன தெரிந்தவர். அவரது நூல்கள் பற்றி இந்தியா பிரெஸில் நீங்கள் படித்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் பழையகோட்டை மன்றாடியார்கள் மரபில் பல பெண்கள் குதிரை ஓட்டத்திலும், அங்கிருந்து வாள் பயிற்சியும் பெற்றவர்கள். தீரன் சின்னமலை அம் மரபினன்தான். திப்பு சுல்தான் பழைய கோட்டை குதிரை லாயத்திற்கு வந்து நல்ல குதிரைகளைப் பெற்றுச் சென்றது பதிவாகியுள்ளது. இன்று பழயகோட்டை மரபினர் காத்தளித்த காங்கயம் காளைகள்
ஜல்லிக்கட்டில் டிவிகளில் ஸ்போர்ட்ஸ் அனிமல் ஆகிவிட்டது. “பிரேசிலுக்கு எக்ஸ்போர்ட் ஆகுது, மச்சா” என்றார்கள்.

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 12, 2015, 6:28:02 AM3/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///அந்தக் கால கட்டத்தில் அரசிகள் கணவனைச் சார்ந்தே மதத்தை அனுசரித்து வந்தார்கள். ஆனால் பிற மதங்களையும் பேணினார்கள். ///

இது பல்லவ சமண அரசி சங்கா (நிருபதுங்கனின் அம்மா,  ராஷ்ட்ரகூட மன்னர் அமோகவர்ஷரின் மகள், நந்திவர்மனின் மனைவி) வகையில் சரியா தெரியவில்லை.  

அவள் சமண அரசி என்பதால் வெறுப்படைந்தவர்களின் சதித் திட்டத்தால் சிறையில் அடைக்கபட்டாள், கை வெட்டப்பட்டாள் என்று படித்த நினைவு...

..... தேமொழி

Dev Raj

unread,
Mar 12, 2015, 8:53:59 AM3/12/15
to mint...@googlegroups.com

Dev Raj

unread,
Mar 12, 2015, 9:24:03 AM3/12/15
to mint...@googlegroups.com
Attimabbe was born in 950 AD to Feudatory Mallapa of chalukya king Tailap II. Mallapa was a devout adherent to Jainism and he was an impressive personality in imperial court of Tailap II. 

On Thursday, 12 March 2015 01:05:53 UTC-7, தேமொழி wrote:
இளவயதிலேயே அரசனான கணவனை இழந்த அரசி அட்டிமாபீ (தமிழில் உச்சரிப்பு சரியில்லை எனில் திருத்தும் செய்யவும்) சமணத் துறவியானார் என்று பொருள் கொள்வது சரியா?
 

அத்திமப்₃பெ₃ - சரியான உச்சரிப்பு; இவரது சகோதரி குண்டமப்பெ.


அத்திமப்₃பெ₃ சரித்ரெ

மல்லபனிகெ₃  ஐது₃ க₃ண்டு₃மக்களு மத்து எரடு₃ ஹெண்ணு மக்களல்லி அத்திமப்₃பெ₃ - கு₃ண்ட₃மப்₃பெ₃ எம்பி₃ப்₃ப₃ரன்னு நாக₃தே₃வனிகெ₃ மது₃வெ மாடி₃கொட்டாக₃; அத்திமப்₃பெ₃ மக₃ அண்ணித₃தே₃வ மகு₃வாகி₃ருவாக₃லே நாக₃தே₃வ யுத்₃ட₃த₃ல்லி மடி₃த₃.ஸஹக₃மன மாட₃தே₃ மகு₃வன்னு நோடி₃கொள்ளுவ காரணதி₃ந்த₃ ப₃து₃கித₃ரூ ஜைனதீ₃‌ ஸ்வீகரிஸித₃ரு. அத்திமப்₃பெ₃யு (அ)ரன்னனிந்த₃(அ)ஜிதபுராண ப₃ரெஸித₃ளு எம்பு₃தா₃கி₃ ஸம்ʼஶோத₄கர அபி₄ப்ராய.




தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 12, 2015, 10:26:44 AM3/12/15
to மின்தமிழ், vallamai
அத்திமப்பெ

கன்னட மூலம் - ஹம்ப.நாகரஜய்யா
தமிழில் - முனைவர் தமிழ்ச்செல்வி

நூலிலிருந்து சில பக்கங்கள்....
Athimabbe.pdf

தேமொழி

unread,
Mar 12, 2015, 4:33:09 PM3/12/15
to mint...@googlegroups.com
நன்றி திரு தேவ்.  இது பெளத்த மத பிக்குணிகள் தளம் அல்லவா?


..... தேமொழி

தேமொழி

unread,
Mar 12, 2015, 4:35:40 PM3/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அத்திமப்பெ


நன்றி பானுகுமார், இந்த அம்மையார் பற்றி ஆர்வம் அதிகமாகிறது.  இணைப்பிற்கு நன்றி. 

இந்த நூலை தேடிப் படிக்க முயல்வேன்.

தேவ் அவர்களுக்கும்  நன்றி.

..... தேமொழி

Dev Raj

unread,
Mar 13, 2015, 1:55:58 AM3/13/15
to mint...@googlegroups.com
On Thursday, March 12, 2015 at 5:53:59 AM UTC-7, Dev Raj wrote:
 

On Thursday, 12 March 2015 13:33:09 UTC-7, தேமொழி wrote:
 இது பெளத்த மத பிக்குணிகள் தளம் அல்லவா?

ஆம், திருமிகு சுபா - திரு க்ருஷ்ணகுமார் இருவரும் பேசிக்கொண்டதன்
தொடர்ச்சி


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages