Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

293 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
May 21, 2015, 12:09:15 PM5/21/15
to mintamil, vallamai, tamilmantram, Elangovan N, vannan vannan

---------- Forwarded message ----------
From: தமிழ் ஓவியா <oviyat...@gmail.com>
Date: 2015-05-21 9:31 GMT-04:00
Subject: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
To: thantha...@googlegroups.com


21.5.15

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!


இந்த நிகழ்ச்சியானது இதுவரைத் தமிழ் மக்களாகிய நம்மிடையே நடைபெற்று வந்த முறைக்கு மாறாகப் பகுத்தறிவு கொண்டு, திருத்தத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது இங்கு நடைபெற்ற இம்முறை நிகழ்ச்சியானது இதுவரை சட்டப்படிச் செல்லத்தக்கதாக இருந்ததை, இப்போது வந்துள்ள பகுத்திவாளர்கள் ஆட்சியானது சட்டப்படிச் செல்லுமென்றாக்கி இருக்கிறது. முதலில் நாம் அதற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

நம்முடைய சமுதாயத்தில் இம்மாறுதலான நிகழ்ச்சியை நடத்துவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த திருமணங்கள் யாவும் வைதிகத் திருமணங்களேயாகும். இப்போது இங்கு நடைபெற்றது பகுத்தறிவுத் திருமணமாகும். வைதிகத் திருமணத்திற்கும், பகுத்தறிவுத் திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால், வேதத்தின் கருத்துப்படியானது வேத முறை என்றால் இந்து மத முறை. வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனரல்லாதார் தொடக் கூடாது, படிக்கக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது, வைதிகத் திருமணத்தைத் தமிழன் செய்து கொள்கிறானென்றால், அவன் தனது மானமற்றத் தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கின்றான் என்பதே பொருளாகும்.

வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், ஜாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவற்றைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு அவசியத்தைக் கருதி, தேவையானவற்றைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மனிதன் தனது இழிவற்று வாழ வேண்டுமானால், கடவுள் - மதம் - புராணம் - இதிகாசங்களும் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் ஒழித்தால் தான் நம் இழிவு - மானமற்றத் தன்மையும் நீங்கும். இந்நிகழ்ச்சியின் தத்துவம் பெண் சமுதாயம் ஆணிற்கு அடிமையல்ல, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெண்கள் பெற வேண்டுமென்பதற்காகவேயாகும்.

பெண்ணடிமையை வலியுறுத்தவும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக்காமல் மடமையில் ஆழ்த்துவதாகவும், ஜாதிப் பிரிவினை, இழிவினை நிலைநிறுத்துவதாகவும் இருந்ததால் இதனை மாற்றிப் பெண்ணடிமையை நீக்கவும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாகவும், ஜாதி இழிவுகளை ஒழிக்கவுமென்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இம்முறைத் திருமணங்களைச் சீர்திருத்தத் திருமணம், பகுத்தறிவு திருமணம், சுயமரியாதைத் திருமணம் - தமிழர் திருமணம் என்னும் பெயரால் 1926-முதல் சுமார் 40, 43-வருடங்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லாது என்று இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது.

இப்போது அமைந்திருக்கும் ஆட்சி தமிழர்களாட்சியானதாலும், திராவிடர் கழகக் கொள்கையை உடைய ஆட்சியானதாலும் இதனைச் சட்டப்படிச் செல்லுமென்றாக்கியுள்ளது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இந்த அரசுக்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதற்கென்றே பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிமையோடு ஆண்களுக்குச் சமமாக வாழக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்தத் தான் நம்முடைய இலக்கியங்கள் என்பவைகள் இருக்கின்றன.

நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.

பெண் சாகும் வரை தன் கணவனோடு இருக்கத் தக்கவள் என்று சொல்லி - ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், எவ்வளவு பெண்களோடு வேண்டுமாலும் சுகம் அனுபவிக்கலாம்.

ஆனால், பெண்கள் கணவனைத் தவிர மற்றவனை நினைத்தாலே கற்புக் கெட்டு விடும் என்கின்றான். நம் கடவுள் கதைகள் - புராணங்கள் - இதிகாசங்கள் யாவும் இதைத்தான் சொல்கின்றன. நம் கடவுள் கதைகளாக இருப்பதில் - ஒரு பக்தன் தன் மனைவியை இன்னொருவனுடன் தன் மனைவியை அடகுப் பொருளாக வைத்திருக்கின்றான் என்பது போன்று பல கதைகள் எழுதி வைத்திருக்கின்றான்.

நம் அரசு கண்ணகிக்குச் சிலை வைத்து நம் சமுதாயத்தை - குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டேன். ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றேன் என்றால், எதற்காக ஒரு பெண், தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் போனதற்காக உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்க வேண்டும்? இது மடத்தனத்தைக் காட்டுகிறதே தவிர, கற்பைக் காட்டுவதாக இல்லை.

எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றுவிட்டாள் என்பதற்காக எவனாவது உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்கின்றானா? இருந்திருக்கின்றானா? என்றால் கிடையாது. மனைவிக்குக் கொஞ்சம் உடல் நிலை நலம் இல்லை என்று தெரிந்தாலே ஆண்கள் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். கண்ணகிக் கதை பெண்களை மடைச்சியாக்கப் பயன்படுமே தவிர, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாது.

தமிழகத்தில், கற்புடையவள் கண்ணகி - அவளைப் பின்பற்றி அவளை வழிகாட்டியாகக் கொண்டு பெண்கள் வாழ வேண்டும் என்றால், தமிழகத்திலிருக்கிற மூன்று கோடி பெண்களில் கண்ணகி ஒருத்தித் தான் கற்பு உடையவள் என்றால், மற்றப் பெண்கள் எல்லாம் விபசாரிகள் என்பதுதானே பொருள். இதை மானமுள்ள எவனும், அறிவுள்ள எவனும் ஒத்துக் கொள்ள முடியாதே. எதற்காக ஒரு பெண் ஆணிற்கு அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.

இரண்டாவது மூட நம்பிக்கையை வளர்ப்பது திருமணம் என்றால், நேரம் பார்க்க வேண்டும், நாள் - நட்சத்திரம் பார்க்க வேண்டும், சாமி கேட்க வேண்டும், பொருத்தம் - ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதன் மூலம் மடமையையும், சடங்குகள் என்பதாகச் சிறிதும் தேவையும், அவசியமும், சம்பந்தமும் அற்ற முறையில் பானைகள் அடுக்குவது, குத்துவிளக்கு வைப்பது, அம்மி - அரசாணி வைப்பது, ஓமம் வளர்ப்பது என்பதெல்லாம் எதற்காக என்று கேட்கக் கூடாது என்பதன் மூலம் மூடநம்பிக்கையையும் வளர்க்கின்றன. நேரம், காலம், பொருத்தம், ஜாதகம் எல்லாம் பார்த்துச் செய்யப்பட்டவை தான் சீதை, திரவுபதை, கண்ணகி, சாவித்ரி ஆகியோரின் திருமணங்கள் ஆகும் என்று கதை எழுதி இருக்கின்றார்கள். அந்தக் கதைகளில் இவர்கள் எப்படி எப்படி துன்பப்பட்டார்கள், என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பொருத்தமும், ஜாதகமும், காலமும், நேரமும் ஏன் அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதைச் சிந்தித்தால் இவை யாவும் நம்மை மடையர்களாக்கவும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கவும் பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும்.

அடுத்தது ஜாதி இழிவைப் பாதுகாப்பது. ஒருவனுக் கொருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் - தீண்டப்படாதவன், பஞ்சமன் - சூத்திரன் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் நம்மை விட உயர்ந்தவன் என்று பார்ப்பானை அழைத்து அவனைக் கொண்டு திருமணம் செய்வது என்பது நம் ஜாதி இழிவை நிலை நிறுத்துவதேயாகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டின் காரணமாக இப்போது ஜாதி விட்டு ஜாதி செய்யும் திருமணங்கள் 100-க்கு 50-நடைபெறுகின்றன. பெண்கள் நிறைய படிக்க ஆரம்பித்தால் இன்னும் இது அதிகமாகும். பெண்கள் 20, 22-வயது வரைப் படிக்க வேண்டும். அத்தோடு தங்கள் வாழ்விற்கான ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் திருமணம் ஆனாலும் பெண்கள் ஆண்களோடு சமத்துவமாக வாழ முடியும்.

இதுவரை அமைந்த ஆட்சிகளின் இலட்சியம் என்னவென்றால், மக்களைப் படிக்கவிடாமல் பாதுகாப்பதோடு, மதம், ஜாதி, சாஸ்திரம், பழமை ஆகியவற்றிலிருந்து மாறாமல் நம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நேற்று வரை நடைபெற்ற ஆட்சி இதைக் காப்பதாகத் தான் இருந்தது. இப்போது வந்திருக்கும் தி.மு.க ஆட்சிதான் இதை உடைத்தெரிந்து சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறியபடி சமத்துவத்தோடு பழக வேண்டும். முட்டாள்தனமான, மூடநம்பிக்கையான, காட்டுமிராண்டித் தன்மையுடைய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடக் கூடாது. வரவுக்கு அடங்கிச் சிக்கனமாகச் செலவிட வேண்டும். பொதுத் தொண்டு செய்வதுதான் இல்லறம் என்று கருத வேண்டும். கூடுமான வரையில் குழந்தை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியவில்லையென்றால் ஒன்று இரண்டு அத்தோடு நிறுத்திவிட வேண்டும்.

------------------ 09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 17.03.1969

--
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiy...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 23, 2015, 2:09:47 AM5/23/15
to mint...@googlegroups.com, jayaba...@gmail.com

On Friday, May 22, 2015 at 3:33:21 AM UTC-7, தமிழ் ஓவியா wrote:

22.5.15

கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?-பெரியார்

கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?

சிலப்பதிகாரத்தில், 'கண்ணகி என்ற பெண் மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள் கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றி எரிகிறது!' என்று எழுதியிருப்பதுடன் இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள்!

இன்று எந்த ஒரு பெண்ணாவது - அவள் எவ்வளவு தான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் - இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரி காரியம் நடந்திருக்க முடியுமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் தீய்க்கு ஆணையிடுகிறாள், 'பார்ப்பனர்களை'த் தவிர்த்து, மற்றவர்களை அழித்து விடு என்று! பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுகிறவள், தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!

அவளது கற்புக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது தன் கணவனான கோவலன், மாதவி என்ற ஒரு தாசியோடு கூடிக் குலாவியிருந்த காலத்து அவன் தன்னைப் புறக்கணித்து விட்டு தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வராமலிருந்தும் கூட, அவன் கஷ்டப்படுகிறான் என்றறிந்து, அவனுக்காக வேண்டித் தனது விலையுயர்ந்த ஆபரணங்களையும், சேலைகளையும் மாதவி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் என்பதாகும்.

இத்தகைய முட்டாள்தனமான கற்பு எங்காவது சிறந்த வீரத் தமிழ்ப் பண்பாகுமா? தமிழ்ப் பண்பு இத்தகைய கற்பையா தமிழ் மக்களுக்குப் போதித்து இருக்கிறது? உண்மை தமிழச்சியானால் அவள் ஒன்று மாதவி வீடேறி அந்தக் கோவலைக் கட்டி இழுத்து வந்திருக்க வேண்டும். அல்லது அவனை அவன் விருப்பப்படியே விட்டு விட்டுத் தான் வேறொரு ஆடவனை மணந்திருக்க வேண்டும். அது தனக்கு விருப்பமில்லையானால் சும்மாவாவது இருக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதை விட்டு தன் கணவன், மேலும் ஒரு தாசியோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கட்டும் என்று தன் நகையையும், சேலையையும் அந்தத் தாசிக்கு அனுப்பி வைப்பதா தமிழ்ப் பண்பு? இல்லை; இல்லை.

இது பெண் ஆணுக்கு அடிமை என்ற ஆரியக் கருத்தைத் தமிழர்களிடையே புகுத்துவதற்காகத் தமிழன் கையைக் கொண்டே எழுதச் செய்யப்பட்ட ஒரு பித்தலாட்டக் கதையே. இதை நம் பண்டிதர்கள் இன்னும் உணராது அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறுகிறார்களே! இது சரியா?

சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தமிழர் பண்பை எடுத்துக்காட்டக் கூடிய தனித் தமிழ் நூல்களை எல்லாம் ஓரளவுக்கு இந்துமதக் கடவுளும், பெருமளவுக்கு ஆரிய சூ ழ்ச்சியால், ஆடி ஆற்றுப் பெருக்கின் போது பழம் சுவடிகளுடன் நதிப் பெருக்கில் இடும் மூடப் பழக்கமும் கொள்ளை கொண்டு விட்டன. எஞ்சி நின்ற ஒன்றிரண்டும் ஆரியத்திற்கு எதிர்ப்பாயிருப்பதால் அவற்றிற்கும் மக்களிடையே செல்வாக்கு ஏற்படாமல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஓர் எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

----------------------- தந்தை பெரியார் அவர்கள் 'மொழி' என்னும் பொருள் குறித்தும், 'எழுத்து' என்னும் பொருள் குறித்தும் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் 20-ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய விரிவுரைகளின் தொகுப்பு. "விடுதலை", 05.01.1968


... 

செல்வன்

unread,
May 23, 2015, 2:27:00 AM5/23/15
to mintamil
ஐம்பெரும்காப்பியம் எல்லாவற்றையும் தூக்கி போட்டு அழித்துவிடலாம். தொல்காப்பிய்ன் ஆரியகைகூலி என்றார் பெரியார். அதையும் தூக்கிபோட்டுவிடலாம். குறளும் மோசம் என்றுவிட்டார். அதுவும் காலி....இப்படியே எல்லா சங்கைலக்கியத்தையும் காலி செய்துகொண்டே வந்தால் அடுத்து கம்பன், பக்தி இலக்கியம், காளமேகம், அருனகிரிநாதர்....விடலாமா இதை எல்லாம்? அதையும் தூக்கிபோடு. கடைசியில் மிச்சமிருப்பது பாரதி...அவனும் கண்ணன் பாட்டு எழுதியவன். ஆக ஒட்டுமொத்த தமிழல்க்கியத்தையும் அழித்தால் தான் தமிழரை காப்பாற்ற முடியும்...வெயிட், வெயிட்...தமிழே வேண்டாம் என வேறு சொல்லியிருக்கிறார். அதையும் தூக்கிபோட்டு இங்கிலீஸ் பேசலாம். அப்பதான் தமிழ்நாடு சிறக்கும், ரைட் :-)

தேமொழி

unread,
May 23, 2015, 2:37:26 AM5/23/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
பாவம்   ...மனிதர்களின் முட்டாள்தனம் அவருக்கு எரிச்சலூட்டுகிறது.  

இதுவரை வந்த மூன்று கட்டுரைகளிலும்  பெண்களை ஏமாற்ற எழுதப்பட்ட  கதைகள் இவை என்ற கோணத்தில்தான் பேசுகிறார் 

அதுவே இக்கட்டுரைகளின் மையக்கருத்து.

..... தேமொழி 

செல்வன்

unread,
May 23, 2015, 2:40:24 AM5/23/15
to mintamil
சரி...பெண்களை ஏமாற்ர எழுதபட்ட இக்கதைகள் நமக்கெதுக்கு? தூக்கிபோட்டுவிடுவோமே? வள்ளுவரும், இளங்கோவும் ஆரியகைகூலிகள், ஆனாதிக்கவாதிகள் என்ற பெரியார் கருத்து உண்மை என்றால் அவர்கள் எழுதிய நூல்களை ஏன் பள்ளிகளில் சொல்லிகொடுக்கவேன்டும்? படிக்கவேண்டும்?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 23, 2015, 2:52:16 AM5/23/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
படிக்கும் பொழுது இலக்கியத்தை இலக்கியமாகப் படியுங்கள்...பிறகு எளிது...படிப்பது  கதை என்பது தெரிய வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா...

உடனே பத்தினித் தெய்வம்...கோயில் ...குளம்..என்ற வகையில் போவதைவிட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவதை புத்திசாலிப் பெண்கள் கவனிக்க வேண்டும்

அரசனையும் சாதாரணப் பெண் கேள்வி கேட்டது  கதையின் சிறப்பு.
..... தேமொழி


On Friday, May 22, 2015 at 11:40:24 PM UTC-7, செல்வன் wrote:
சரி...பெண்களை ஏமாற்ர எழுதபட்ட இக்கதைகள் நமக்கெதுக்கு? தூக்கிபோட்டுவிடுவோமே? வள்ளுவரும், இளங்கோவும் ஆரியகைகூலிகள், ஆனாதிக்கவாதிகள் என்ற பெரியார் கருத்து உண்மை என்றால் அவர்கள் எழுதிய நூல்களை ஏன் பள்ளிகளில் சொல்லிகொடுக்கவேன்டும்? படிக்கவேண்டும்?
2015-05-23 1:37 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பாவம்   ...மனிதர்களின் முட்டாள்தனம் அவருக்கு எரிச்சலூட்டுகிறது.  

இதுவரை வந்த மூன்று கட்டுரைகளிலும்  பெண்களை ஏமாற்ற எழுதப்பட்ட  கதைகள் இவை என்ற கோணத்தில்தான் பேசுகிறார் 

அதுவே இக்கட்டுரைகளின் மையக்கருத்து.

..... தேமொழி 


On Friday, May 22, 2015 at 11:27:00 PM UTC-7, செல்வன் wrote:
ஐம்பெரும்காப்பியம் எல்லாவற்றையும் தூக்கி போட்டு அழித்துவிடலாம். தொல்காப்பிய்ன் ஆரியகைகூலி என்றார் பெரியார். அதையும் தூக்கிபோட்டுவிடலாம். குறளும் மோசம் என்றுவிட்டார். அதுவும் காலி....இப்படியே எல்லா சங்கைலக்கியத்தையும் காலி செய்துகொண்டே வந்தால் அடுத்து கம்பன், பக்தி இலக்கியம், காளமேகம், அருனகிரிநாதர்....விடலாமா இதை எல்லாம்? அதையும் தூக்கிபோடு. கடைசியில் மிச்சமிருப்பது பாரதி...அவனும் கண்ணன் பாட்டு எழுதியவன். ஆக ஒட்டுமொத்த தமிழல்க்கியத்தையும் அழித்தால் தான் தமிழரை காப்பாற்ற முடியும்...வெயிட், வெயிட்...தமிழே வேண்டாம் என வேறு சொல்லியிருக்கிறார். அதையும் தூக்கிபோட்டு இங்கிலீஸ் பேசலாம். அப்பதான் தமிழ்நாடு சிறக்கும், ரைட் :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
May 23, 2015, 3:12:28 AM5/23/15
to mintamil

2015-05-23 1:52 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உடனே பத்தினித் தெய்வம்...கோயில் ...குளம்..என்ற வகையில் போவதைவிட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவதை புத்திசாலிப் பெண்கள் கவனிக்க வேண்டும்


எப்போதுமே ஒருவர் என்ன சொல்கிறார் என பார்ப்பதை விட ஒருவர் எப்படி வாழ்ந்தார், என்ன கொள்கைகளை தன் வாழ்வில் செயல்படுத்தினார் என்பதை மட்டுமே நான் பார்ப்பது வழக்கம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லியவண்ணம் செயல் என்பது அய்யன் வாக்கு

அதனால் பெரியார், மார்க்ஸ், இராமன், கிருஷ்ணன், முருகன், ஏசு என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.


--

சி. ஜெயபாரதன்

unread,
May 23, 2015, 9:57:03 AM5/23/15
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan
தந்தை ​பெரியார் "திராவிடஸ்தான் பிதா" திராவிடர் [தமிழர்]  மூவாயிர ஆண்டுகாலமாய்ச் சேமித்த கலாச்சார அடையாளச் சின்னங்களை அழிக்கவோ, எரிக்கவோ, இகழவோ செய்தார்.

இதுதான் நான் புரிந்து கொண்டது.

சி. ஜெயபாரதன.​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
May 23, 2015, 12:23:13 PM5/23/15
to mint...@googlegroups.com

மிகச்சரியாக.

Nagarajan Vadivel

unread,
May 23, 2015, 1:05:01 PM5/23/15
to மின்தமிழ்

2015-05-23 19:26 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
இதுதான் நான் புரிந்து கொண்டது.

​தவறான புரிதல். அவருடைய சுயஎஊபத்தை எடைபோடாமல் அரசியல் மாச்சரியங்கள் உருவாக்கிய பிம்பத்தை மட்ட்ம் புரிந்து கொண்ட கருத்து 
பல்களைக்கலகன்​

சி. ஜெயபாரதன்

unread,
May 23, 2015, 1:32:43 PM5/23/15
to mintamil
​தவறான விளக்கம்.

சி. ஜெ.​

தேமொழி

unread,
May 26, 2015, 3:14:39 AM5/26/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?


ஒன்றே குலம்- ஒருவனே தேவன்னா நமக்கு எதுக்கு உதவும் அது?



இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.

நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?

இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?

யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.

இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.

*** அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.

நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?

ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.

--------------26.8.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து

சி. ஜெயபாரதன்

unread,
May 26, 2015, 8:41:47 AM5/26/15
to mintamil, vallamai, jsthe...@gmail.com
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா  பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?

சி. ஜெயபாரதன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 26, 2015, 9:01:10 AM5/26/15
to tamilmantram, mintamil, vallamai
எப்போதும் ​கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு ​முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.  

தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது.  யாரோ எழுதியது !!!

சி. ஜெயபாரதன்
2015-05-26 8:43 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

ram kumar

unread,
May 26, 2015, 9:12:34 AM5/26/15
to mint...@googlegroups.com, vanna...@gmail.com, tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, nela...@gmail.com
அன்பர்களே ..

     கற்புடையவள் கண்ணகி என்ற தளைப்பால் தான் பிரச்சனை.

    கண்ணகி பற்றிய தகவல் அவர்கள் வாழ்ந்த காலம் ,நேரம் ஆகியவை சேர்த்து பார்த்தல் .கதை கூர வருவது  பாரதியார் கருத்தை 'பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா....! ' .

    பெண்களின் உர்ணர்வை அவர்களின் உரிமையை எடுத்து கூரி இருக்கலாம் அல்லவா !

   கற்பு  என்ற வார்த்தை இதை பற்றி ஒரு பதிவை  கீழ் உள்ள வலையில் பார்க்கவும் 

   ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி .
 
நன்றி 
கொ . ராம்குமார் 

குறிப்பு  : நம் கலாச்சாரங்கள் முத்தமிழ் மற்றும் பல . ஆனால் எல்லாவற்றையும் .(காலம் , நேரம் , உணர்வு ) ஆகியவை கொண்டுதான் பார்க்கவேண்டும் .இல்லையேல் மழை இன்று நிற்காது .

Nagarajan Vadivel

unread,
May 26, 2015, 9:30:57 AM5/26/15
to மின்தமிழ்

2015-05-26 18:30 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
எப்போதும் ​கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு ​முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.  

தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது.  யாரோ எழுதியது !!!

​உங்கள் கருத்து சரியானதே.  பெரியாரின் பத்திரிக்கையில் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் பல பலரால் பெரியாரின் பெயரால் எழுதப்பட்டது என்பது பலருக்க்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் அவரின் பொழிவுகள் அவையெல்லாம் அவர் எழுதிப்படிக்காமல் மேடையில் பேசுபவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் மேடைப்பேச்சில் சிறந்து விளங்கியவர்கள் மூவர்
1. பெரியார்
2.திரு.வி.க
3.வரதராஜுலு

பெரியாரை நடுநிலைப்பார்வையுடன் பார்க்காமல் பெண் சார்ந்து பார்க்கும் பார்வை மின்தமிழில் என்பது என் காத்துட்டுக்கருத்து
பல்களை​

Innamburan S.Soundararajan

unread,
May 26, 2015, 10:17:54 AM5/26/15
to mintamil
அக்காலத்தில் இந்த மூவரையும் நாயக்கர், முதலியார், நாயுடு என்றி பெருமிதத்துடன், இனபேதமில்லாமல் குறிப்பார்கள்.

Seshadri Sridharan

unread,
May 27, 2015, 5:57:11 AM5/27/15
to mintamil


2015-05-26 18:11 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா  பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ? - சி. ஜெயபாரதன்.

அண்ணாவும்  கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .

கைத்தொழுவான்  

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 27, 2015, 6:15:31 AM5/27/15
to mintamil

2015-05-27 15:27 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அண்ணாவும்  கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .


கம்பராமாயணத்தைக் காமாயணமாகக் காட்டினார் அண்ணா.

சங்க இலக்கியத்தை சங்கம இலக்கியமாகக் காட்டியவர் கருணாநிதி.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள்
கடமையைச் செய் ! அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 6:35:11 AM5/27/15
to மின்தமிழ்
2015-05-27 15:27 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அண்ணாவும்  கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .

​அண்ணா காமச்சாறு கொட்டும் இலக்கியம் படைத்தாரா?  கம்பன் என்ற தமிழ்க்கவிஞரின் படைப்பில் காமரசம் மிகுந்திருப்பதாகச் சொல்லி அரசியல் செய்தவர் அண்ணா.  தமிழ் இலக்கியம் நாடகம் சினிமா போன்றவற்றின்மீது வெறுப்புக் கொண்டிருந்தவர்​ பெரியார்

இவர்களை எல்லாம் முழுக்க முழுக்க அரசியல் நடத்தியவர்களை நீங்களே இலக்கியவாதிகள் என்று முடிவுகட்டிக்கொள்வீர்களா?  மூன்றுபேரும் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்கு என்ன?
பல்களைக்கலகன்

Seshadri Sridharan

unread,
May 27, 2015, 6:51:45 AM5/27/15
to mintamil
அண்ணாவின் காமரசம்  ரோமபுரி ராணிகள், 1982,  கபோதிபுரக் காதல்

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 7:33:24 AM5/27/15
to mintamil, vallamai, tamilmantram
அண்ணாவின் ரோமாபுரி ராணிகள்.

சி. ஜெ.

--

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 8:19:45 AM5/27/15
to மின்தமிழ்
ஆங்கிலச் சிந்தனையின் தமிழாக்கம்தானே.  அசலில் இருந்ததைத்தானே அவரின் சொந்த நடையில் அளித்தார். ஒருவிதமான மொழியாக்கம்தானே.
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஆங்கில அரசின் தணிக்கை முறை கடுமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது.  பெரியார் அவர் பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகளுக்காகச் சிறை சென்றுள்ளார்.  அவர் தனது அண்ணன் பெயரில் நடத்திய இதழியலும் முடக்கப்பட்டது.  விடுதலைபெற்ற இந்தியாவில் போன்று அவர்களுக்கு மட்டற்ற சுதந்திரம் இல்லை

அண்ணாவோ பெரியாரோ தங்களை இலக்கியவாதி என்று தங்களைக் குறிப்பிட்டுள்ளார்களா?
பல்களை

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 9:12:15 AM5/27/15
to mintamil
///அண்ணாவோ பெரியாரோ தங்களை இலக்கியவாதி என்று தங்களைக் குறிப்பிட்டுள்ளார்களா ?////

நல்ல கேள்வி !!!  ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?

///ஆங்கிலச் சிந்தனையின் தமிழாக்கம்தானே.  அசலில் இருந்ததைத்தானே அவரின் சொந்த நடையில் அளித்தார். ஒருவிதமான மொழியாக்கம்தானே.///

இலக்கியம் அல்ல எனப்படும் மகா பாரதமும், இராமாயணமும் வட மொழி மூலம் கொண்டவைதானே.

சி.ஜெயபாரதன்

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 9:21:40 AM5/27/15
to மின்தமிழ்

2015-05-27 18:41 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நல்ல கேள்வி !!!  ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?

​அவர்கள் அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் அல்ல. அவர்களுடைய தொண்டர்களுக்குப் பகுத்தறிவைவளர்க்க​ சில இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து கருவியாகப் பயன்படுத்தினர் என்பதோடு கதை முடிகிறது. விஞ்ஞானியின் கட்டுரையை விமரிசிக்க ஒரு விஞ்ஞானியாக இருக்கவேண்டும் என்பது அடிப்படைத் தகுதி.  தமிழ் இலக்கியங்களை யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்துக்கேற்பக் கையாளலாம் என்ற நிலையில் நானும் இலக்கியவாதி என்று கருதிக்கொள்ள வாய்ப்புள்ளது
மின்தமிழ் பெரியாரைப்பற்றி விவாதித்துப் பெறப்போவது ஒன்றும் இல்லை.  அவருக்கும் காங்கிரசில் இருந்த சில பிராமணர்களுக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடு கருத்துமோதலாக முற்றி அதுவே தமிழ்நாட்டு அரசியலில் சம்தாயத்தில் பிரிவினையையும் குழப்பத்தையும் உருவாக்கியது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரவருக்குச் சாதகமாகப் பெரியாரை நடுநிலையின்றி விமரிப்பதால மின்தமிழுக்கு என்ன லாபம்?
பல்களை

N. Ganesan

unread,
May 27, 2015, 9:27:30 AM5/27/15
to mint...@googlegroups.com


On Wednesday, May 27, 2015 at 6:12:15 AM UTC-7, jayabarathans wrote:
///அண்ணாவோ பெரியாரோ தங்களை இலக்கியவாதி என்று தங்களைக் குறிப்பிட்டுள்ளார்களா ?////

நல்ல கேள்வி !!!  ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?

அண்ணாதுரை, கருணாநிதி படைத்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் பல பேர் ஆராய்ச்சிகளை
பல்கலைக்கழகங்களில் செய்வதும் பார்க்கிறோம். விரைவில் நல்ல வேலை, பதவியுயர்வு அமைய
இத் தலைப்புகளை சொன்னால் மந்திரிகளுக்குப் புரியும்.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 9:29:00 AM5/27/15
to mintamil, vallamai, tamilmantram
ஆழ்ந்த தமிழ் இலக்கிய ஞானமுள்ள அரசியல்வாதிகள் அண்ணாதுரை, கருணாநிதி, ப. ஜீவானந்தம், மா.போ.சி, ஆகியோர் இலக்கியவாதிகள் அல்லர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சி. ஜெயபாரதன்

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 9:34:23 AM5/27/15
to மின்தமிழ்

2015-05-27 18:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அண்ணாதுரை, கருணாநிதி படைத்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் பல பேர் ஆராய்ச்சிகளை
பல்கலைக்கழகங்களில் செய்வதும் பார்க்கிறோம்

அண்ணாவைப்பற்றிச் சென்னைப் பல்கலையில்  ஓரிரு ஆய்வுகள் அதுவும் பொருளாதாரச் சமுகவியல் தளங்களில் ​நடந்துள்ளது.  கலைஞரைப்பற்றித் தமிழ்த்துறையில் நிறைய முனைவர் பட்ட ஆய்வுகள் நடந்துள்ளன.  சென்னைப்பல்கலைக்கழகம் பாரம்பரியம் மிக்க பல்கலைக்கழகம். நான் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் இருக்கக்கூடாது என்று என் தலைப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்துவிட்டது.  அதற்கப்புறம் நடப்பதெல்லாம் தாம்பரம் விழுப்புரம்தான்
பல்களை

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 9:42:14 AM5/27/15
to மின்தமிழ்
ஐயா நான் கேட்டது அண்ணாவோ பெரியாரோ தங்களைச் சுயசோதனையில் தமிழ் இலக்கியவாதிகல் என்று எப்போதாவது குறிப்பிட்டுள்ள்னரா என்பதுதான்.  கம்பரசம் பற்றிய வாதத்தில் அண்ணா ரா.பி.சே வை வென்றபோதும் தான் கம்பரசத்தை இலக்கிய நோக்கிலில்லாமல் அரசியல்நோக்கில் படைத்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார்
சுயமரியாதைக்காரர்களின் வார்த்தை ஜாலங்களுக்கு அவர்களுக்குப் பெரிதும் உதவியது நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் திருப்புகழும் என்றால் மிகையாகாது
அவை அளித்த அடுக்குமொழியே அவர்களை மேடைத்தமிழில் ஒளிரவைத்தது
பல்களை

N. Ganesan

unread,
May 27, 2015, 9:44:53 AM5/27/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, May 27, 2015 at 6:29:00 AM UTC-7, jayabarathans wrote:
ஆழ்ந்த தமிழ் இலக்கிய ஞானமுள்ள அரசியல்வாதிகள் அண்ணாதுரை, கருணாநிதி, ப. ஜீவானந்தம், மா.போ.சி, ஆகியோர் இலக்கியவாதிகள் அல்லர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ம.பொ.சி. பெரியார் நீங்கள் சொல்லும் இவர்களைப் போல இலக்கியவாதி இல்லை என்றாலும்,
விஞ்ஞானப் பார்வையில் எல்லா இலக்கியங்களையும் நோக்கச் சொல்லியவர் என்றும் நோக்கலாம்.
உ-ம்: அகத்தியர் என்பவர் தமிழ் இலக்கணம் படைக்கவில்லை. இன்றைய தமிழ் ஆராய்ச்சிகளும்
அகத்தியர் பிற்காலத்தில் வந்த ஒரு கதாபாத்திரம். அவர் செய்த நூல் ஒன்றும் தமிழ் இலக்கணம்
தோற்றுவிக்கவில்லை என்கின்றன.

நா. கணேசன் 

Malarvizhi Mangay

unread,
May 27, 2015, 10:51:14 AM5/27/15
to mint...@googlegroups.com

ஜெயபாரதன் ஐயா தொல்காப்பியம் பூங்காவானது எப்படி யாரால் என்பதையும்
மதுரைப் பல்கலை வட்டாரத்தில் இருந்து தெரிந்து
அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 10:53:25 AM5/27/15
to mintamil, vallamai
சிலம்புச் செல்வர் மா.போ.சி இலக்கியவாதி அல்லரா ?

சி.ஜெ.

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 10:55:09 AM5/27/15
to mintamil
புரியவில்லை மலர்விழி.

சி. ஜெ.

N. Ganesan

unread,
May 27, 2015, 10:58:03 AM5/27/15
to மின்தமிழ்
2015-05-27 7:52 GMT-07:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சிலம்புச் செல்வர் மா.போ.சி இலக்கியவாதி அல்லரா ?

அவர் பெயர் ம. பொ. சி. எனக் குறித்தேன். ம.பொ.சி. இலக்கியவாதி
- அவரது தாலி பற்றிய கட்டுரை கொடுத்தேன்.

Nagarajan Vadivel

unread,
May 27, 2015, 11:04:43 AM5/27/15
to மின்தமிழ்

2015-05-27 20:22 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சிலம்புச் செல்வர் மா.போ.சி இலக்கியவாதி அல்லரா ?

​​ம.பொ.சி யின் சொந்தக்கதை சோகக்கதை சொல்லி மாளாது.  அவர்போல் அரசியலிலும் இலக்கிய உலகிலும் எதிர்நீச்சல்போட்டவர்கள் யாரும் இருக்க முடியாது.  காங்கிரசினால் கையுதறப்பட்டுத் தான் எதிர்த்த திராவிடக்கட்சியுடன் தன்னை இணைத்தே அவரால் தமிழுலகில் வலம்வர முடிந்தது
பல்களை

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 1:07:14 PM5/27/15
to mintamil, நா. கணேசன்


வலைத் தேடலில் மா.போ.சி. என்று போட்டாலும் விபரம் வருகிறது.

சி. ஜெ.

தேமொழி

unread,
May 27, 2015, 1:47:06 PM5/27/15
to mint...@googlegroups.com, jayaba...@gmail.com


On Tuesday, May 26, 2015 at 5:41:47 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா  பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?


இதை நான் விளையாட்டாகக் கேட்ட கேள்வி என நினைத்தேன் ஐயா 

பெரியார் "இலக்கியம்" என்பது எப்படி இருக்க வேண்டும் என வரையறுப்பது மிக எளிதான  ஒரு விளக்கம் 

படிப்பது வாழ்க்கைக்கு உதவ வேண்டும் ...அது மக்களை நல்வழிப் படுத்த  வேண்டும்... 

படிப்பது  மக்களிடம் மடமையை வளர்த்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும்.

இதுவே அவர் கூறுவதன் மையக் கருத்து... அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை, அத்துடன் அவர் கூறுவது நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாததும் அல்ல.

காலம் மாறிய நிலையில் யோசித்தால் நாமும் இதைத்தானே இப்பொழுது சொல்கிறோம்?

தொலைக்காட்சியில் டிஸ்கவரி, ஹிஸ்டரி, பயொக்ராபி, செய்திகள்  என அறிவை வளர்க்கும்... வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் காட்சிகள் இருக்க, மக்கள் அழுமூஞ்சி மெகாதொடர் பார்த்து நேரத்தை விரையம் செய்வதை குறை சொல்கிறோம் அல்லவா?

அதைத்தான் பெரியாரும் எழுத்திலக்கியதிற்குச் சொல்கிறார்.  

மக்களிடம் மடமை வளர்ப்பதை இலக்கியமாக ஒப்புக் கொள்ள முடியாது என்கிறார்.

கருணாநிதி இலக்கியவாதியா என்பது தேவையற்ற விவாதம்.  அவரது வசனங்கள் புது ஊடகம் வந்தபொழுது அதைப் புரட்டிப் போட்ட எழுத்துகள்.  அவர் போன்று எழுதுவதை பிறரும் கடைபிடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் கூட அவர் எழுதியது என மக்கள் நம்ப விரும்புகிறார்கள்.  ஏ பி நாகராஜனின் வசனங்களும் அதே பாணியில் புகழ் பெற்றது. இதற்கு வழி வகுத்தவர கருணாநிதி.

குறளோவியம் எழுதியவர்.  பிடிக்காவிட்டாலும் அவர் திறமையான இலக்கியவாதி என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

எனக்கு முதலில் நினைவு வந்தவர் பாரதிதாசன்  ...பிறகு மேலும் சிலர்.

இவர்கள் தமிழிலக்கிய பங்களிப்பை யாராலும் புறந்தள்ள முடியாது.

..... தேமொழி



தேமொழி

unread,
May 27, 2015, 1:48:17 PM5/27/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com

http://ta.wikipedia.org/s/73d

பாரதிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவேந்தர் பாரதிதாசன்

பிறப்புசுப்புரத்தினம்
ஏப்ரல் 291891
புதுவை
இறப்புஏப்ரல் 211964(அகவை 72)
சென்னை
புனைப்பெயர்புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
தொழில்தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
இனம்தமிழர்
நாட்டுரிமைஇந்தியர்
துணைவர்(கள்)பழநி அம்மையார்

பாரதிதாசன் (ஏப்ரல் 291891 - ஏப்ரல் 211964பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார்மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு[தொகு]

பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்[தொகு]

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்[தொகு]

  1. அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
  2. அமைதி, செந்தமிழ் நிலையம்,
  3. அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
  4. இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
  5. இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
  6. இசையமுது (கவிதை நூல்)
  7. இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
  8. இருண்ட வீடு (கவிதை நூல்)
  9. இருண்ட வீடு, முத்தமிழ் நிலையம்
  10. இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
  11. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  12. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  13. எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
  14. எதிர்பாராத முத்தம், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
  15. எது பழிப்பு, குயில் (1948)
  16. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
  17. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  18. கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
  19. கதர் இராட்டினப்பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
  20. கலை மன்றம் (1955)
  21. கற்புக் காப்பியம், குயில் (1960)
  22. காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
  23. காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
  24. காதலா? - கடமையா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
  25. குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
  26. குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
  27. குடும்ப விளக்கு (கவிதை நூல்)
  28. குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  29. குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  30. குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
  31. குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
  32. குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
  33. குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
  34. குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
  35. சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
  36. சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
  37. தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
  38. தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
  39. தமிழியக்கம், செந்தமிழ் நிலையம்
  40. தமிழுக்கு அமுதென்று பேர்
  41. தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)
  42. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
  43. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
  44. தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
  45. நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
  46. நீலவண்ணன் புறப்பாடு
  47. பாண்டியன் பரிசு (காப்பியம்)
  48. பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
  49. பாரதிதாசன் ஆத்திசூடி (1946)
  50. பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி (1963)
  51. பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
  52. பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
  53. பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
  54. பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
  55. பாரதிதாசன் பதிப்பகம் (1952)
  56. பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
  57. பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
  58. பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
  59. புகழ் மலர்கள் நாள் மலர்கள்
  60. புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
  61. பெண்கள் விடுதலை
  62. பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
  63. மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
  64. மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
  65. முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
  66. விடுதலை வேட்கை
  67. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  68. வேங்கையே எழுக

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

சான்றாவணங்கள்[தொகு]

  • தமிழகம்.வலை தளத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய மின்னூல்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

தேமொழி

unread,
May 27, 2015, 1:49:52 PM5/27/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
http://ta.wikipedia.org/s/1amn

சி. இலக்குவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. இலக்குவனார்
செந்தமிழ்ச் சுடர்
பிறப்புஇலட்சுமணன்
நவம்பர் 171909[1]
நாகபட்டணம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வாய்மைமேடு
இறப்புசெப்டம்பர் 31973(அகவை 63)
இருப்பிடம்மதுரையை அடுத்த திருநகர்
தேசியம்இந்தியர்
கல்விவித்துவான், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்டி.
பணிபேராசிரியர்
பணியகம்கல்லூரிகள், உசுமானியா பல்கலைக் கழகம்
அறியப்படுவதுமொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி
பெற்றோர்சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி
வாழ்க்கைத் துணைமலர்க்கொடி, நீலகண்டேசுவரி
பிள்ளைகள்திருவேலன்
மறைமலை
திருவள்ளுவன்
மதியழகி
நல்லபெருமாள்
செல்வமணி
நாகவல்லி
அங்கயற்கண்ணி
அருட்செல்வி
அம்பலவாணன்
உறவினர்கள்மறைமலை இலக்குவனார்

பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 171909[1] - செப்டம்பர் 31973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

பொருளடக்கம்

  [மறை

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்)தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்குஅருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.

கல்வி[தொகு]

தொடக்கக் கல்வி[தொகு]

வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று.

நடுநிலைக் கல்வி[தொகு]

தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். இங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி[தொகு]

பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். அங்கு பொன்னண்ணா களத்தில்வென்றார் என்பவரிடம் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றார். [2]

புலவர் பட்டக் கல்வி[தொகு]

திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். [3] அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

கீழைமொழி இளவர் பட்டம்[தொகு]

அன்னாளைய சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்றவர் இடைநிலை வகுப்பிலும் கலை இளவர் வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், அவருக்கு கீழைமொழிகளில் இளவர் (BOL) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார்.

கீழைமொழி முதுவர் பட்டம்[தொகு]

பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (MOL) பட்டமும் பெற்றார்.

முனைவர் பட்டம்[தொகு]

இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல்சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.

ஆசிரியப் பணி[தொகு]

திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார்.

1936 சூன் மாதம் முதல் 1942ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியப் பணிபுரிந்தார்.

தமிழறிஞர் கா. அப்பாதுரையுடன்இலக்குவனார்

கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் 1942 முதல் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தம் பெற்றார். பின்னர்திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில்தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கு. காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட கோ. து. நாயுடு (G. D. நாயுடு)வை ஆதரித்துப் பரப்புரை செய்தார். இதனால் விருதுநகர் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்டார். [5]

பின்னர் 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். [6]

1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரைநாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரைதியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஐத்திராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், 31.12. 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.

1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றிஉளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.

இதழ்கள் வெளியிடல்[தொகு]

இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.

இலக்குவனாரின் நடைப்பயணம்

விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசுமதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார்,1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு குறள்நெறி என்னும் இதழை 15.1.1964ஆம் நாள் சி. இலக்குவனார் தொடங்கினார். [7]

Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.

நூல்கள்[தொகு]

  1. எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933)
  2. மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
  3. துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
  4. தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
  5. என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
  6. அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
  7. அம்மூவனார் (ஆராய்ச்சி)
  8. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
  9. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
  10. திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
  11. தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
  12. மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956)
  13. வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
  14. வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
  15. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
  16. கருமவீரர் காமராசர் (வரலாறு)
  17. அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
  18. பழந்தமிழ்
  19. தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
  20. தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
  21. சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
  22. Tholkappiyam in English with Critical Studies
  23. Tamil Language (1959)
  24. The Making of Tamil Grammar
  25. Brief Study of Tamil words

சிறைவாழ்க்கை[தொகு]

முதற் சிறை வாழ்க்கை[தொகு]

25 – சனவரி – 1965ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 ஆம் நாள் சி. இலக்குவனார் கைது செய்யப்பட்டார். அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார். [7]

இரண்டாம் சிறை வாழ்க்கை[தொகு]

உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். எனவே 1.5.1965ஆம் நாள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். [7]

வெளிநாட்டுப் பயணம்[தொகு]

2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்க் காப்புக் கழகம்[தொகு]

மதுரையை அடுத்த திருநகரில் 6. 8. 1962 ஆம் நாள் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது. [7]

குடும்பம்[தொகு]

இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தம்மை விரும்பியவரும் தம் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கையுமான நீலகண்டேசுவரியை மணந்துகொண்டார். [2]

திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதினொரு மக்களை இலக்குவனார் பெற்றனர். [4]

இறுதிக் காலம்[தொகு]

1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே. அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.

சி. இலக்குவனாரின் மாணவர்கள் சிலர்[தொகு]

பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதிமுனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன்நல்லகண்ணுமுனைவர் க. காளிமுத்துநா. காமராசன்பா.செயபிரகாசம்இன்குலாப்முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள், [சேடபட்டி முத்தையா]]

புகழ்மொழிகள்[தொகு]

• பேராசிரியர் இலக்குவனார் ஒரு மாபெரும் தமிழ் இயக்கம் – முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், முன்னாள் துணைவேந்தர், புதுவை பல்கலைக்கழகம் [8]

பெற்ற பட்டங்கள்[தொகு]

முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்

நூற்றாண்டு விழா[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009 அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின் நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்:

  • இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வும் மொழிபெயர்ப்பும்
  • இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆய்வு
  • இலக்குவனாரின் குரளுரையும் குரள் பரப்புப் பணியும்
  • இலக்குவனாரின் கவிதைப் படைப்புகள்
  • இலக்குவனாரின் இதழியற்பணி
  • இலக்குவனாரின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்.[9]

ஆதாரங்கள்[தொகு]

Maraimalai, சி.இலக்குவனார், சாகித்திய அக்காதெமி.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ↑ Jump up to:1.0 1.1 அலுவலகக் குறிப்புகளில் இவரது பிறந்தநாள் 17/11/1910 என்றே இடம்பெற்றுள்ளது.
  2. ↑ Jump up to:2.0 2.1 தமிழியக்க வேர்கள் : முனைவர் சி. இலக்குவனார், மணிவாசகர் பதிப்பகம், சென்னை; 1994, பக்கம் 101
  3. Jump up சி. இலக்குவனார் எழுதிய எனது வாழ்க்கைப்போர், குறள்நெறி வெளியீட்டகம், திருநகர், 1972 பக். 95
  4. ↑ Jump up to:4.0 4.1 குன்றக்குடி பெரிய்பெருமாள் எழுதிய முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் முனைவர் சி. இலக்குவனார் என்னும் கட்டுரை, தமிழரசி 9.7.1995
  5. Jump up வ. வேம்பையன் எழுதிய தமிழ் எழுச்சி விழா என்னும் கட்டுரை, தன்மானத் தமிழர் இலக்குவனார் தொகுப்பு, ஆண்டு 2000, பக்.26
  6. Jump up அ. மறைமலையான் எழுதிய அண்ணாவின் பார்வையில் தமிழ் இலக்கியச் சிற்பிகள், அன்றில் பதிப்பகம், சென்னை, பக்.114
  7. ↑ Jump up to:7.0 7.1 7.2 7.3 புலவர் இரா. இளங்குமரன் எழுதிய தமிழ்த்தாய் என்னும் கட்டுரை, தன்மானத் தமிழர் இலக்குவனார் தொகுப்பு, ஆண்டு 2000, பக்.7
  8. Jump up கி. வேங்கடசுப்பிரமணியன் எழுதிய இவர் ஒரு தமிழ் இயக்கம் என்னும் கட்டுரை, தினமணி, 3.9.1998
  9. Jump up மின் தமிழ் - அழைப்பிதழ்

வெளி இணைப்புகள்[தொகு]

தேமொழி

unread,
May 27, 2015, 1:51:07 PM5/27/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=226&Itemid=308

Home  தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு  பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்PDFPrintமின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 10 August 2009 21:28

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

பி.தயாளன்

 

ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம்கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்" என்று இவ்வாறெல்லாம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனால் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர் கா.அப்பாதுரையார். 

 

 

கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை - முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் "நல்லசிவம்" என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  இந்தி மொழியில் "விஷாரத்" தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.  திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரை பணியாற்றினார். அப்போது, "இந்தியாவின் மொழிச்சிக்கல்" என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது வேலையை இழந்தார்.  சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.  திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் முதலிய இதழ்களில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.  அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டபோது, 1938 - 39ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார். 

 

  • குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
  • தென்னாட்டுப் போர்க்களங்கள்
  • சரித்திரம் பேசுகிறது
  • சென்னை நகர வரலாறு
  • ஐ.நா.வரலாறு
  • கொங்குத் தமிழக வரலாறு

முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

  • திராவிட நாகரிகம்
  • திராவிடப் பண்பு
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிட மொழி

என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார். 

 

அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று,

  • போர்க்காரணங்கள்
  • போர்களின் பின்புலங்கள்
  • போர்ச் செயல்கள்
  • போரின் விளைவுகள்
  • போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள்

ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் அந்நூலைப் போற்றுகின்றனர். 

 

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, "இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்" என்று வியந்து கூறியுள்ளார்! 

 

  • கிருஷ்ண தேவராயர்
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  • டேவிட் லிவிங்ஸ்டன்
  • அரியநாத முதலியார்
  • கலையுலக மன்னன் இரவி வர்மா
  • வின்ஸ்டன் சர்ச்சில்
  • அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
  • அறிவுலக மேதை பெர்னாட்ஷா
  • கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

மற்றும்,

 

  • ஆங்கிலப் புலவர் வரலாறு
  • சங்க காலப் புலவர் வரலாறு
  • அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்

உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார்.

மேலும் சங்க காலப் புலவர்களில்,

    • பிசிராந்தையார்
    • கோவூர்கிழார்
    • ஒளவையார்
    • பெருந்தலைச் சாத்தனார்

    முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் அப்பாதுரையார். 

    • அலெக்ஸாண்டர்
    • சந்திரகுப்தர்
    • சாணக்கியர்

    ஆகிய மூவரைப் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

     

    இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.

     

    திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். அவரது "திருக்குறள் மணி விளக்க உரை" என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்" வார இதழிலும், "அன்னை அருங்குறள்" என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே "முப்பால் ஒளி" என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது எனலாம். 

     

    "உலக இலக்கியங்கள்" என்ற நூலில்,

    • பிரெஞ்ச்
    • சீனம்
    • உருசியா
    • உருது
    • பாரசீகம்
    • கன்னடம்
    • தெலுங்கு
    • ஜெர்மனி
    • வடமொழி
    • கிரேக்கம்

    எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார். 

    • வரலாறு
    • வாழ்க்கை வரலாறு
    • மொழிபெயர்ப்பு
    • இலக்கியத் திறனாய்வு
    • சிறுகதை
    • நாடகம்
    • பொது அறிவு நூல்
    • அகராதி
    • உரைநூல்
    • குழந்தை இலக்கிய நூல்

    என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் அப்பாதுரையார். 

     

    இப் பன்மொழிப் புலவர் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும், அவனியை விட்டு என்றென்றும் நீங்காமல் அவரது புகழும், அவரது படைப்புகளும் நின்று விளங்கும்.

     

    நன்றி:- தினமணி

    Last Updated on Monday, 10 August 2009 21:33

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 27, 2015, 2:27:30 PM5/27/15
    to mint...@googlegroups.com, jsthe...@gmail.com
    பாரதிதாசன், இலக்குவனார் குறித்து முன்பு படித்துள்ளேன். பன்மொழிப்புலவர்
    குறித்துப் படித்தறிந்தேன். இன்னும் கவிஞர் முடியரசனார் போன்று பலர்
    இருக்கிறார்கள். அன்றைய இலக்கியவாதிகள் பலரிடமும் பகுத்தறிவுச்
    சிந்தனைகளின் தாக்கமுண்டு.
    நன்றி

    --
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    தேமொழி

    unread,
    May 27, 2015, 3:20:51 PM5/27/15
    to mint...@googlegroups.com, karu...@gmail.com


    On Wednesday, May 27, 2015 at 11:27:30 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
    பாரதிதாசன், இலக்குவனார் குறித்து முன்பு படித்துள்ளேன். பன்மொழிப்புலவர்
    குறித்துப் படித்தறிந்தேன்.
    இன்னும் கவிஞர் முடியரசனார் போன்று பலர்
    இருக்கிறார்கள்.

    நன்றி ஐயா..


    கவியரசு முடியரசன் 
    அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
     
    கவிதைத் தொகுதிகள்
    01.
    கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)
    02.
    கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)
    03.
    காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு)
    04.
    காவியப் பாவை (நான்காம் பதிப்பு)
    05.
    ஞாயிறும் திங்களும்
    06.
    தமிழ் முழக்கம்
    07.
    தாய்மொழி காப்போம்
    08.
    நெஞ்சிற் பூத்தவை
    09.
    நெஞ்சு பொறுக்கவில்லையே
    10.
    பாடுங்குயில்
    11.
    புதியதொரு விதி செய்வோம்
    12.
    மனிதனைத் தேடுகிறேன்
    13.

    மனிதரைக் கண்டுகொண்டேன்

    14.
    முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி)
    15.
    முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
    16.
    முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்)
    17.
    முடியரசன் தமிழ் வழிபாடு
    18.
    வள்ளுவர் கோட்டம்
     
    காப்பியங்கள்
    19.
    ஊன்றுகோல்
    20.
    பூங்கொடி
    21.
    வீரகாவியம்
     
    கதைகள்
    22.

    இளம்பெருவழுதி

    23.

    ஊன்றுகோல்-2

    24.
    எக்கோவின் காதல்
     
    கட்டுரைகள்
    25.
    எப்படி வளரும் தமிழ்
    26.
    சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்
     
    கடித இலக்கியம்
    27.
    கவியரசர் முடியரசன் கடித இலக்கியம் 
    (அன்புள்ள பாண்டியனுக்கு, இளவரசனுக்கு)
    28.
     

    பாட நூல்கள்

    29.

    தமிழ்ச் சோலை

    30.

    பாடுங்குயில்கள்

    31.

    முடியரசன் தமிழ் இலக்கணம்

    32.

    முடியரசன் தமிழ் உரைகள்


    ..... தேமொழி

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 27, 2015, 11:31:17 PM5/27/15
    to mintamil, சொ. வினைதீர்த்தான்
    பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.  

    பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர்.  [இதுதான் இழையின் உட்கருத்து]

    சி. ஜெ.

    --

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 27, 2015, 11:50:12 PM5/27/15
    to mintamil, சொ. வினைதீர்த்தான்
    தேமொழி,

    பெரியார் தமிழ் இலக்கியங்கள் பற்றியும், கண்ணகி பற்றியும் தமிழோவியா மூன்று கட்டுரைகளும், நீங்கள் ஒரு கட்டுரையும் இழையில் போட்டிருந்தீர்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட பாரதிதாசன், இலக்குவனார் போன்ற உன்னத இலக்கியவாதிகள் பெரியார் போல் தமிழ் இலக்கியங்களைக் கொச்சைத் தமிழில் இகழ்ந்தவரா ?

    சி. ஜெயபாரதன்

    Nagarajan Vadivel

    unread,
    May 27, 2015, 11:50:14 PM5/27/15
    to மின்தமிழ்
    பாரதிதாசன் தீவிர நாத்திகராக இருந்து கடவுள் மேல் கவிதை புனையாமல் வாழ்ந்து மறைந்த இலக்கியவாதி என்று கூறல்மா?
    பல்களை

    செல்வன்

    unread,
    May 28, 2015, 12:20:59 AM5/28/15
    to mintamil

    2015-05-27 22:50 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
    பாரதிதாசன் தீவிர நாத்திகராக இருந்து கடவுள் மேல் கவிதை புனையாமல் வாழ்ந்து மறைந்த இலக்கியவாதி என்று கூறல்மா?

    தேமொழி

    unread,
    May 28, 2015, 12:35:25 AM5/28/15
    to mint...@googlegroups.com, jayaba...@gmail.com


    On Wednesday, May 27, 2015 at 8:31:17 PM UTC-7, jayabarathans wrote:
    பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.  


     பெரியாரும் கூட ஆன்மிகவாதியாக இருந்தவரே 


    பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர்.  [இதுதான் இழையின் உட்கருத்து]

    இழையின் உட்கருத்து... மடமையை வளர்ப்பவற்றை  இலக்கியங்கள் என ஒப்புக் கொள்ள இயலாது என்பதே.

    இலக்கியங்களை யாரும் விமர்சிக்கலாம், எழுதியவர்களையும் விமர்சிக்கலாம்.  

    உங்களுக்கு பெரியாரின் எழுத்தை விமர்சிக்க இருக்கும் உரிமை பெரியாருக்கும் மற்றவர் எழுத்தை விமரிசிக்க  இருக்கக்கூடாதா ஐயா?

    பெரியாரின் கூற்றிலேயே ...

    என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
                                                   -------------------------------------------பகுத்தறிவு 1935

    கீழே ... முன்னர் கொடுக்கப் பட்ட கட்டுரையின் ஒரு பகுதி...



    நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

    இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?


    ... நான் புரிந்து கொண்டது ....சுருக்கமாக, பயன்படும் நூல்களைப் படிக்கக் கூடாதா?  இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற நீதி நெறி நூல்களை படிக்கக்கூடாதா? குன்றக்குடி அடிகளார் கூறுவது போல திருக்குறளை படிக்கக் கூடாதா? என்பது அவர் எண்ணமாக இருக்கிறது. எல்லா தமிழ் இலக்கியமும் உருப்படாதவை என்று அவர் இந்தக் கட்டுரையில் கூறியதாகத் தெரியவில்லை. 

    பெரியாரின் மற்றொரு கருத்து கீழே....

    இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவதே கிடையாது.

    இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது. இதை நான் சொல்வது வேண்டுமென்றோ விரோதமென்றோ கருதக் கூடாது. அவர்கள் மனதில் பட்டதை அவர்களுக்குச் சரியென்று பட்டத்தைத்தான் எடுத்துச் சொல்வார்கள். அதனைச் சிந்தித்து உண்மையென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சொல்வது அத்தனையும் உண்மை, எழுதி நெருப்பில் போட்டால் வேகாது என்று சொல்லவில்லை. நானும் பொய் சொல்லலாம்; நீங்கள், நான் சொல்வதை மற்றவர்கள் சொன்னதைப் போல் உடனே ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அறிவைக் கொண்டு சிந்தித்து யார் சொன்னது சரியென்று படுகின்றதோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.


    ------------------------- 03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" -06.08.1968

    ..... தேமொழி

     

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 28, 2015, 8:25:39 AM5/28/15
    to mintamil, vallamai, tamilmantram
    ​பாரதிதாசன் ஓர் காவிய இலக்கியவாதி.  பாரதியார் வழியில், பாரதியார் பெயரில் ஆன்மீகக் கவிஞராய் உருவாகி, "எங்கெங்கும் காணினும் சக்தியடா," என்று பாடியவர். 

    பிற்காலத்திலும் பாரதியார் பெயரில், பாரதி பெயரை மாற்றாமல் நாத்திகக் கவிஞராய் நடித்தவர்.  இந்த இரு வேடங்களில் மெய்யான அவர் வேடம் என்ன ?  

    காற்றடிக்கும் பக்கம் திரும்பிக் கொண்டவர். 

    பாரதியார் பெயரில் ஒளிந்திருந்த ஆன்மீக வேடமே உண்மை என்பது என் கருத்து. 

    சி. ஜெயபாரதன்.

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 28, 2015, 8:38:09 AM5/28/15
    to mintamil, vallamai, tamilmantram
    தேமொழி

    ​பெரியார் பேச்சுரிமை பற்றியோ, உங்கள் கருத்துரிமை பற்றியோ இங்கு யாரும் வினா எழுப்பி உள்ளரா ?  

    பெரியார் ஆத்திகர் எல்லாரையும் ​முட்டாள் என்று திட்டிக் கொண்டு, தெரியாமல் தன் காலையும் இடையே சுட்டுக் கொள்வார்.  

    பெரியாரின் இலக்கிய பார்முலாவில் யாராவது இலக்கியம் படைத்துள்ளாரா என்பதே என் கேள்வி.

    சி. ஜெயபாரதன் 

    --

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 28, 2015, 8:45:19 AM5/28/15
    to mintamil, vallamai, tamilmantram
    ////இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டு மென்று பாடுபடுவதே கிடையாது.

    இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது.  ////


    மேற்கூறிய பெரியார் மேலோட்டப் பொது விதிகளில் தேமொழி குறிப்பிட்ட பாரதிதாசன், இலக்குவனார் போன்ற பல இலக்கியவாதிகள் இலக்கியப் படைப்புக்களும் அடங்குமா ?

    சி. ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 28, 2015, 9:10:14 AM5/28/15
    to mintamil, vallamai, tamilmantram
    மனிதருக்கு நன்னெறி கூறும் திருக்குறள், பைபிள், பகவத் கீதை ஆன்மீக நூல்களாக இருப்பதால் இலக்கியம் அல்ல என்று பெரியார் சொல்வது சரியா ?

    மதங்களை ஒருமைப் படுத்தும் "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்று சொல்லும் உன்னத தத்துவம் இலக்கியமில்லையா ?  இதைத் தெரிய வேண்டாம் என்று சொல்கிறார் பெரியார்.

    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++++

    Bala Sundara Vinayagam

    unread,
    May 30, 2015, 4:41:54 AM5/30/15
    to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, vall...@googlegroups.com
    ஒரு மக்களின் வாழ்க்கை பண்பாடிலிருந்து (கலாச்சாரம்) இலக்கியம் உருவாக்கப்படுகிறது. அதற்கும் சற்றும் தொடர்பில்லாமல் எழுதப்படுவது குழந்தைக் கதைகள். அவை இலக்கியமெனப்படா.  கலாச்சாரத்திலுள்ள குறை, நிறைகளைப்பிரதிபலிப்பது இலக்கியம்.  தமிழ் பண்டை இலக்கியம் அப்படியே.  சிலப்பதிகாரத்தில் குறை கண்டால், அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தில் குறை காண்பதே.

    பெரியார் நமக்குக் காட்டியது கண்ணகி-கோவலன் கதை நடந்த கலாச்சாரத்தின் குறைகளைத்தான். இலக்கியம் இப்படியிருக்கும்போது, நாம் செய்ய வேண்டியதென்ன? அக்குறைகளையும் எடுத்துப்படித்து இவை அக்கால வாழ்க்கையிது ! என்று போகலாம். அவற்றின் இலக்கிய இன்பத்தை மட்டும் நுகரலாம் அன்னப்பறவை போல!  இதையும் தாண்டி, அக்குறைகளை நீக்கிவிட்டு, படிக்க முடிந்தால் செய்யலாம். மூன்றாவதைச் செய்ய எவரும் முன்வராததால், பெரியார் ஓங்கியுரைக்க வேண்டிய அவசியமாகிறது.

    ஆங்கில நாடகாசிரியர் செகப்பிரியரின் நாடகங்கள் பாடநூல்களாக இருக்கின்றன.   ஆங்கிலப்புலமை மிக்கோர் செகப்பிரியர் எங்கே செக்சுவலாக எழுதுகிறார் என்றறிவர். ஆசிரியருக்கும் தெரியும்.  ஆனால் அப்பகுதிகளை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அடுத்தபகுதிக்குப் போய்விடுவார்.  வடமாநிலங்களில் குழந்தைகளுக்கென்றே இராமாயாணம் நூலாக வைக்கப்படும்: அதில் எவை குழந்தைகளுக்குச் சரியோ, அவை மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவ்விதிகாசத்தில் சொல்லவொண்ண செக்சுவல் பகுதிகள் உண்டல்லவா? இன்னூலைப்படிக்கவும் Caroline Spurgeon's Shakespeare's Imagery

    செசில் ஃப்ரான்சஸ் அலெக்ஸாண்டர் எழுதிய ஆல் திங்க்ஸ் பிரைட் அன்ட் பியூட்டிஃபுல் என்ற குழந்தைப்பாடலில் ஒரு ஸ்டான்சாவே எடுத்துவிட்டுத்தான் சொல்லிக்கொடுப்பார்கள். ஏனெனில், அதில், ஏழையை பணக்காரன் வீட்டுவாயிலில் பிச்சைக்காக ஏங்கி நிறகவும், பணக்காரன் வகைவகையாக உணவுகளை உட்கொள்ளும் நிலையையும் இறைவனே செய்து வைத்தான் என்ற இந்து கர்ம வினைச் சட்டத்தை உள்ளடக்கியது. அதைப்படிக்கும் குழந்தை, தன் நிலையை மாற்ற முயற்சி செய்யாது; ஆண்டான்-அடிமை சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் என்று பயந்து நீக்கி அப்புகழ்பெற்ற குழந்தைப்பாடல் போதிக்கப்படுகிறது.

    திருக்குறளிலிருந்து பெண்ணடித்தனத்தை ஓங்கியோ, நாசூக்காகவோ சொல்லும் பாடல்கள்; கம்பராமாயணத்தில் அண்ணா காட்டிய காம ரசப்பாடல்கள்; பிரபந்த்த்தில் அந்நிய மதத்தினரின் தலைகளைக்கொய்ய அருள் தருவாயென கேட்கும் தொண்டரிப்பொடியாழவாரின் பாடலகள்; சம்பந்தரின் சமணர்களைக் குண்டர்கள் என்று திட்டும் பாடலக்ள்,. கந்த சஸ்டிக்கவசத்தில் உடலுறுப்புகளைச்சொல்லும் பாடல்கள் - இப்படியாக ஏராளம் - இவற்றை நீக்கித்தான் போதிக்கப்படவேண்டும். ஆனால், நடப்பதென்ன? அவை அப்படியே இருக்கின்றன ! அவை தவறு என்று காட்டுவோர் தமிழ் இலக்கியத்துக்கு எதிரிகள் என்று தூடணை செய்யப்படுகின்றார்கள். 

    பக்தி என்ற பெயரிலும் இலக்கியம் என்ற பெயரிலும் - எல்லாவற்றையுமே பூசி மெழுகக்கூடா.  

    சிலப்பதிகாரம் போன்ற காவியத்தில் முழுக்கதையுமே தள்ளிவிட வேண்டும். ஆனால் செய்ய முடியாது. எனவே, அஃதொரு கற்பனைக்காவியம் என்ற நினைப்பிலேயே படியுங்கள் என்றாவது சொல்லித்தர வேண்டும். வையாபுரிப்பிள்ளை, கண்ணகியும் ,கோவலும் கற்பனை மாந்தர்களே என்று தெளிவாகச்சொல்லிவிட்டார் (இலக்கியச் சிந்தனைகள்).

    நாம் செய்யவில்லை. எனவே பெரியாரின் கோபம் தார்மீகக்கோபம்.; சமூக நலனே அதன் அடிப்படை.

    பெரியாரின் மேல் வைக்கப்படும் வசவுகளைப்படிக்கும்போது: செகப்பிரியரின் மேகப்த் நாடகத்தில் முதற்காட்சி நினைவுக்கு வருகிறது: அவர் சொல்கிறார் மேக்பத் நாட்டில்,  Fair is foul! Foul is fair !!


    - Bala Sundara Vinayagam

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 30, 2015, 9:52:07 AM5/30/15
    to mintamil, tamilmantram, vallamai
    சுதந்திர நாட்டில் தமிழர் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று சொல்லவோ, தடை செய்யவோ தந்தை பெரியாருக்கு என்ன தகுதி இருக்கிறது ?  

    ஆங்கில, பிரென்ஞ் இலக்கியங்களில் இல்லாத காமப் படைப்புகளா தமிழ் இலக்கியங்களில் உள்ளன ? 

    பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர்.  முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.

    சி. ஜெயபாரதன். 

    Nagarajan Vadivel

    unread,
    May 30, 2015, 10:07:53 AM5/30/15
    to மின்தமிழ்

    2015-05-30 19:21 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
    பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர்.  முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.

    ​முதல் பாதி உண்மை அதை அவரே ஏற்றுக்கொண்டு எழுத்தில் பதித்தது.  இரண்டாம்பகுதி உங்கள் வக்கிரபுத்தியைக் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது.  முதல் மனைவி இறந்தபின் இரண்டாம் மணம் செய்துகொள்ளாமல் பலபத்து ஆண்டுகள் காமவேட்கையுடன் பெண்ணின் பின்னால் சென்றார் என்ற ஒரு சிறு களங்கமும் இல்லாமல் வாழ்ந்தவருக்கு உடலுறவுக்கான ஏக்கம் இறுதிக்காலத்தில் வந்து உடலுறவு வைத்துக்கொண்டார் என்று நீங்கள் நேரில் பார்த்ததுபோல் கூறுகிறீர்களே.  எந்த ஆதாரம் உங்களிடம் உள்ளது உங்களின் இரண்டாம்பகுதியை நிலை நிறுத்த
    கல்வியிற்சிறந்த விஞ்ஞானிக்குள் இவ்வளவு மாச்சரியமா ஆச்சரியம்தான்
    நவகேடிநாகன்​

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 30, 2015, 10:34:08 AM5/30/15
    to mintamil, vallamai, tamilmantram
    யாகாவாராயினும் நாகாக்க வேண்டும் நண்பரே.  முதலில் வலைநெறிப்படி நாகரீகமாகப் பேசக் கற்றுக் கொள்வீர். அநாகரீகமாய்ப் பேசி உங்கள் மதிப்பைக் கீழாக்கிக் கொண்டீர் !!!

    திண்ணையில் பெரியாரைப் பற்றி மலர்மன்னன் [www.thinnai.com] எழுதி இருக்கிறார்.  எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றி​ச் சொல்லியுள்ளார்.

    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++++++++
     

    Nagarajan Vadivel

    unread,
    May 30, 2015, 10:48:11 AM5/30/15
    to மின்தமிழ்

    2015-05-30 20:03 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
    எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றி​ச் சொல்லியுள்ளார்.

    ​ஐயா அந்தத் தனிமடலைப் பொது மடலாக வெளியிடுங்கள் உண்மை புல்னாகும்.  திண்ணையில் மலர்மன்னன் சொன்னது என்று நீங்கள் கூறியிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்காது.  அவருக்குப் பெர்யாரின் படுக்கை அறை வரை செல்லும் உரிமை இருந்து அதன் அடிப்படையில் எழுதி இருக்கலாம். 
    உங்களுக்குப் பெரியார் கேவலமான தமிழ்நாட்டு அரசியல் அவலமாகத் தோன்றலாம் அது உங்கள் தனிப்பட்ட கருத்து.  மின்தமிழில் பொது மடலில் அவர் வயதான கால்த்தில் உடலுறவு கொண்டார் என்று ஒரு தனிமடலை அடிப்படையாகக் கொண்டு பொதுமன்றில் எழுதுவது இணைய நாகரிகமா

    ​இதற்குமேல் என்ன சொல்வது?
    நவகேடிநாகன்

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 30, 2015, 10:54:10 AM5/30/15
    to mintamil, vallamai, tamilmantram
    உண்மை தமிழ் உலகுக்குத் தெரிய வேண்டும்.  யாராய் இருந்தால் என்ன ?  ஆண்-பெண் இசைந்த உடலுறவு கேவலம் என்று நீங்கள்தான் அநாகரீகமாக எழுதுகிறீர்.

    சி. ஜெ.

    Nagarajan Vadivel

    unread,
    May 30, 2015, 11:03:55 AM5/30/15
    to மின்தமிழ்
    வயதில் முதியவன் இளம்பெண்ணை மணப்பதும் உடலுறவுகொள்வதும் அயோக்கியத்தனம் என்று அவரே எழுதியுள்ளார்.  அவர் மணியம்மையை மணந்த அன்று விடுதலையில் அந்தக் கட்டுரை மறுபதிப்பானது வரலாறு
    நவகேடிநாகன்

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 30, 2015, 11:12:34 AM5/30/15
    to mintamil
    பெரியார் இப்படித்தான் சில சமயம் தன்காலிலே தானே சுட்டுக் கொள்வார்.  

    நீங்களே அவரைப் பற்றித் தெளிவாய்ச் சொல்லி விட்டீர். 

    நன்றி நண்பரே.

    சி. ஜெ.

    Nagarajan Vadivel

    unread,
    May 30, 2015, 11:16:41 AM5/30/15
    to மின்தமிழ்
    நன்றி ஐயா
    ஒரு பக்கம் மட்டும் பார்த்தால் உண்மை புரியாது மறுபக்கமும் பார்க்கவேண்டும் 


    இத்துடன் நான் என் பின்னூட்டத்தை நிறுத்திக்கொள்கிறேன்
    மீண்டும் நன்றி
    நவகேடி

    Bala Sundara Vinayagam

    unread,
    May 30, 2015, 11:31:01 AM5/30/15
    to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com
    ஜெயபாரதன் போன்ற பெரிய ஆட்கள் இப்படி எழுதக்கூடாது; அதாவது, நேரில் அறியாமல் சொல்லக்கூடாது.  நம்மால் நேரில் அறிய எல்லாவற்றையும் முடியாதபோது, அவைபற்றி நன்கறிந்தவர் சொன்னதாகச் சொல்லலாம்.

    //முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.//

    நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்றறியலாமா?

    வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர் என்பதை வைத்து ஒருவரை எடைபோட்டு தூக்கியெறிய வேண்டுமென்றால், இவர்களையும் எறிய வேண்டும்:

    அருணகிரிநாதர்
    அகஸ்டின்


    இருவருமே விலைமாதர்களே உலகம் என்று கிடந்தோர். அதில் முதல்வருக்கு உடலெங்கும் வி டி. தற்கொலை செய்யப்போனவர் மாற்றப்பட்டார்.  அகஸ்டின் தன் தாயால் இறைப்பணிக்காளாக்கப்பட்டார். எனவேதான், தமிழர் சொன்னார்: நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக்கூடா.  In English, every saint has a past; and every man has a future !

    தப்பியும் தவறியும் முட்டியும் மோதியும்தான் இறை நிலை அல்லது ஆன்மாவின் உயர் நிலையை அடைய முடியும் என்பது கிருத்துவரான ஜெயபாரதனுக்கு நான் சொல்லவேண்டுமா? ஜான் புன்யன் சொன்னாரே?  I am referring to John Bunyan's Pilgrim's Progress :-)

    ஆக, திரு ஜெயபாரதன் அவர்களே, ஒருவன் என்ன செய்தான் எனபது கேள்வியில்லை. அதன் பிறகு எப்படி பின் வாழ்ந்தான் என்பதே கேள்வி.

    //சுதந்திர நாட்டில் தமிழர் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று சொல்லவோ, தடை செய்யவோ தந்தை பெரியாருக்கு என்ன தகுதி இருக்கிறது ?  //

    Then, why do many books get banned by Government and why some people demand the book be banned? e.g. Mathoru Bhagan. Why was Anna's Kambarasam banned? Why was Karunanidhi's Parasakti banned by Rajaji? Why was DHL's Sons and Lovers banned by British government then?

    Periyar didn't say to you what you should read. Because he knows quite well people like you are quite incorrigible. He gave the suggestions to the open minds.  Remember your religious hero Jesus: He gave many many pieces of advice to people but added a rider at the end: Those who have ears to hear, let them hear! eyes to see, let them see!! (It all means no compulsion. You are free to plunge into deep well and die disregarding my warning.  Similarly EVR is said to have told his listeners; You are free to accept or reject all that I have said according to your rational conclusion.

    Bala Sundara Vinayagam

    unread,
    May 30, 2015, 11:32:23 AM5/30/15
    to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com
    Malarmannan is a known hater of EVR.  Citing him to your support is calling Judas Iscariat to denounce Jesus !

    Bala Sundara Vinayagam

    unread,
    May 30, 2015, 11:39:44 AM5/30/15
    to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, vall...@googlegroups.com
    Personally, I don't accept this argument namely, any sex is ok so long as it is consensual.  Consensual sex between normal age group alone is ok.  It if it is between a small girl and a 80 year old man, it is a deviant behavior.  Charlie Chaplin was accused of this behavior.  We have to draw the line somewhere; otherwise, norms of morals,  personal and public, in society will go haywire, Dr Jeyabarathan ! Scientifically too, it is bad. Because, sex between an old person and a young person can only be forced and consent can only be a pretension out of forced circumstances and the exploitation of the other party's weakness for any reason.  Sexual morals is a separate subject.  Kindly know them deeply and till then, don't make sweeping statements.

    Suba.T.

    unread,
    May 30, 2015, 12:11:57 PM5/30/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம் திரு.ஜெயபாரதன்.
    தங்களது விஞ்ஞானக் கட்டுரைகளை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன் என்பதோடு அது சமூகத்துக்கு ஏற்ற ஒரு எழுத்து என்றும் காண்கின்றேன். அதே வேளை இந்த இழையில் திரு.ஈ.வே.ரா அவர்களின் பெயரை வேண்டுமென்றே களங்கப்படுத்தும் நோக்கமாக தங்கள் மடல்கள் பதிவுகள் இருப்பதைக் காண்கின்றேன்.

    தனிப்பட்ட வகையில் திரு.ஈ.வே.ரா அவர்களைப் பிடிக்காத காரணம் ஏதாகினும் உங்களுக்கு இருக்கலாம். அவர் ஒரு தத்ததுவவாதியோ இலக்கியவாதியோ அல்ல, தன்னை அவர் அப்படிக் காட்டிக் கொண்டதும் இல்லை. சமூக அவலங்களைப் பார்த்து அதற்காக குரலெழுப்பியவர் தனது இறுதி காலம் வரை மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென உழைத்தவர். அவருக்கும் மணியம்மை அவர்களுக்கும் உள்ள தொடர்பினை இங்கே கொச்சை படுத்துவதை  அனுமதிக்க இயலாது.  அவர்கள் தனிப்பட்ட உறவு எத்தகையது என்பது நமக்கு தேவையற்றது. அது அவர்களது சொந்த வாழ்க்கை. அவரது சமூக நீதிக் கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு உடன்பாடில்லையென்றால் அதனைப் பற்றி விவாதிப்போம். அதனை விட்டு அவரது வீட்டிற்குள் நுழைவது அனாகரிகம்.

    புரிதலுக்கு நன்றி

    சுபா
    மின்தமிழ் மட்டுறுத்துனர்.
    --
    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com - Suba's Musings
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
     

    Velmurugan Subramanian

    unread,
    May 30, 2015, 12:53:58 PM5/30/15
    to tamilmanram, mintamil, vallamai
    60 வயதில் 20 வயதுப்பெண்ணை இரண்டாவதாக  திருமணஞ்செய்தவர் பெண்விடுதலைபற்றி பேசவியலுமாவென்ற கேள்வி மிகவும் நியாயமானது. ஆனால், பெரியாரை நாம் இவ்வாறு அறிமுகப்படுத்திவிடமுடியாது. ஆனாலும், இப்படி வாதிட்டுக்கொண்டேயிருக்கமுடியும்.  

    எனவே, தமிழருக்கான  அறிவுடைமை யாதெனில்  சங்கவிலக்கியங்களை குறைகாண்பதிலில்லை. ஒருபோதுமில்லை!. எந்தநிலையிலுமில்லை.   காலத்திற்கேற்ப அதை விளக்கி அதன் தொடர்ச்சியை நீட்டுவதில்தான் அறிவுடைமையிருக்கிறது.  அது கண்டிப்பாக புரைதீர்ந்தநன்மையைக்கொடுக்கும்.    

    ஆனால், பெரியாரோ இதுபோன்ற எந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தாகத்தெரியவில்லை. தமிழின் இலக்கியச்செழுமையை  நிலைக்கச்செய்யவேண்டுமெனது அவரின் குறிக்கோளாக ஒருபோதும் இருந்ததுமில்லை. 

    "நான் பகுத்தறிவாதி,  (எந்த இழப்பைக்கொடுத்தாலும்) உண்மையை  ஆராய்வேன்; இலக்கியங்களை இழிவுபடுத்துவேன்" என்பதுபோன்ற வசனங்கள் விலைமாதரை தேடிச்சென்ற "பெண்ணுரியமைவாதிகளுக்கு" பொருந்துவதில்லை.   

    தமிழர்களுக்குமட்டுமேயான  தளங்களில்  பெரியாரை வன்மையாக எதிர்க்கும் எனால் மாந்தர்களுக்கான பொதுவான தளத்தில் அவரை போற்றவியலுகிறது. 


    எழுத்தாளர் செயமோகன் ஒருமுறை சொல்லியிருந்தார். "சிலப்பதிகாரத்தைப்போன்ற பழமையை  சாட ஒருவருக்கு பெரிய நுணுக்கம் தேவையில்லை. அதை ஒரு முகநூலெழுத்தாளர் செய்யமுடியும். ஆனால், அந்தப்பழமையை  காலத்திற்கேற்ப விளக்கி அதை நிலைபெறச்செய்ய சிறந்த நுண்ணறிவும்  உழைப்பும் வேண்டும்." 

    பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்குமெனில்.  - இது அறமட்டுமல்ல. மாந்தர்களுக்கான அறிவியல். 
    ===========================

    நன்றி
    வேல் 


    --
    You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
    To post to this group, send email to tamil...@googlegroups.com.
    Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

    சி. ஜெயபாரதன்

    unread,
    May 30, 2015, 1:17:38 PM5/30/15
    to mintamil
    வணக்கம் சுபா,

    பெரியாரின் வாய்மொழியாக கடவுளை மதிப்பவரை முட்டாள்கள் என்று இகழ்வதும், கண்ணகி போன்ற இலக்கிய நாயகிகள் பற்றிய தமிழ் இலக்கியங்களை இலக்கியமல்ல வென்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
     
    ஒழுக்கமற்ற பகுத்தறிவாளர் இலக்கிய ஒழுக்கத்தைப் பற்றித் தமிழருக்குக் கூறுவதும் வலையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  அவை விமர்சிக்கப்படும்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

    Velmurugan Subramanian

    unread,
    May 30, 2015, 1:22:52 PM5/30/15
    to tamilmanram, mintamil, vallamai
    சில பிழைகளை நீக்கி மீண்டும் பதிவிடுகிறேன். பொறுத்தருள்க. 


    60 வயதில் 20 வயதுப்பெண்ணை இரண்டாவதாகத்திருமணஞ்செய்தவொருவர்  பெண்விடுதலையைப்பற்றி பேசவியலுமாவென்ற கேள்வி மிகவும் நியாயமானது. ஆனால், பெரியாரை நாம் இவ்வாறு அறிமுகப்படுத்திவிடமுடியாது. ஆனாலும், இப்படி வாதிட்டுக்கொண்டேயிருக்கமுடியும்.  

    அந்தவகையில், தமிழருக்கான  அறிவுடைமை  சங்கவிலக்கியங்களை குறைகாண்பதிலில்லை. ஒருபோதுமில்லை!. எந்தநிலையிலுமில்லை.   காலத்திற்கேற்ப அதை விளக்கி அதன் தொடர்ச்சியை நீட்டுவதில்தான் அறிவுடைமையிருக்கிறது.  அது கண்டிப்பாக புரைதீர்ந்தநன்மையைக்கொடுக்கும்.    

    ஆனால், பெரியாரோ இதுபோன்ற எந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தாகத்தெரியவில்லை. தமிழின் இலக்கியச்செழுமையை  நிலைக்கச்செய்யவேண்டுமென்பது அவரின் குறிக்கோளாக  இருந்ததுமில்லை. 

    "நான் பகுத்தறிவாதி,  (எந்த இழப்பைக்கொடுத்தாலும்) உண்மையை  ஆராய்வேன்; இலக்கியங்களை இழிவுபடுத்துவேன்" என்பதுபோன்ற வசனங்கள் விலைமாதரை தேடிச்சென்ற "பெண்ணுரிமைவாதிகளுக்கு" பொருந்துவதில்லை.   

    தமிழர்களுக்குமட்டுமேயான  தளங்களில்  பெரியாரை வன்மையாக எதிர்க்கும் என்னால் மாந்தர்களுக்கான பொதுவான தளத்தில் அவரை போற்றவியலுகிறது. 


    எழுத்தாளர் செயமோகன் ஒருமுறை சொல்லியிருந்தார். "சிலப்பதிகாரத்தைப்போன்ற பழமையை  சாட ஒருவருக்கு பெரிய நுணுக்கம் தேவையில்லை. அதை ஒரு முகநூலெழுத்தாளர் செய்யமுடியும். ஆனால், அந்தப்பழமையை  காலத்திற்கேற்ப விளக்கி அதை நிலைபெறச்செய்ய சிறந்த நுண்ணறிவும்  உழைப்பும் வேண்டும்." - அது உண்மை. 

    பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்குமெனில்.  - இது அறமட்டுமல்ல. மாந்தர்களுக்கான அறிவியல். பகுத்தறிவாதத்தின் உச்சம். பெரியாரின் பகுத்தறிவாதக்கண்களுக்கு இது புலப்படுமா? அநேகமாக இல்லை. 
    ===========================

    நன்றி
    வேல் 

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 30, 2015, 2:12:12 PM5/30/15
    to mintamil, tamilmanram, vallamai
    அருகிருந்து கண்டதுபோல பெரியார் இன்னாருடன் உடலுறவுகொண்டார் என்று எழுதுவதும் அருணகிரிநாதருக்கு VD நோயென்று எழுதுவதும் வருத்தமளிக்கின்றன.

    Suba.T.

    unread,
    May 31, 2015, 2:19:50 AM5/31/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-05-30 19:16 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
    வணக்கம் சுபா,

    பெரியாரின் வாய்மொழியாக கடவுளை மதிப்பவரை முட்டாள்கள் என்று இகழ்வதும், கண்ணகி போன்ற இலக்கிய நாயகிகள் பற்றிய தமிழ் இலக்கியங்களை இலக்கியமல்ல வென்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
     
    ஒழுக்கமற்ற பகுத்தறிவாளர் இலக்கிய ஒழுக்கத்தைப் பற்றித் தமிழருக்குக் கூறுவதும் வலையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  அவை விமர்சிக்கப்படும்.

    ​திரு.ஜெயபாரதன் அவர்களே,
    பெரியாரின் தனிப்பட்ட சொந்த விஷயங்களைத் தாங்கள் பொது மேடையில் விமர்சிக்க விரும்பினால் ​
     
    ​அதற்கு 
    மின்தமி
    ​ழில் இடம் கிடையாது என்பதோடு ​
    மின்தமிழ் அனுமதி தராது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ​ இவை  பொதுமக்களின் சிந்தனைக்குத் தேவையற்ற விஷயங்கள் என்பதை கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

    புரிதலுக்கு நன்றி.
    சுபா

    Bala Sundara Vinayagam

    unread,
    May 31, 2015, 4:14:50 AM5/31/15
    to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, vall...@googlegroups.com
    போன வாரம் நான் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தேன்.  எனக்கு அருணகிரிநாதரின் சரிதம் முன்பே தெரியும்: அதாவது அவரின் அவதாரம் அவ்வூரில்தான் என்று.  (ஒரு காலத்தில் யான் முருகபக்தன்) ஆனால், அருணாசலேசுவரர் கோயிலுள் நுழைந்தவுடனேயே அவரின் அவதார இடம் இருக்குமென்று தெரியாது. அது போக, அவர் தன் வி டி நோயால் (இச்சொல் பிடிக்கவில்லையென்றால், விலைப்பெண்டிரின் தொடர்பிலிருந்து வரும் பாலியில் நோயென்று படித்துக்கொள்க) கடுமையாகப்பீடிக்கப்பட்டு அதன் வலி தாங்காமல் அங்கிருந்த மலை உச்சியில் ஏறி தற்கொலை செய்யப்போகும்போது முருகனின் திருக்கரங்களால் தடுக்கப்பட்ட இடமும் அங்கு இருக்கின்றன. அது போக, அவரை ஓர் அமைச்சர்: //பாடினால் கந்தன் வருவானா?// என்ற இகழ பதிலுக்குப் பாடியதாகவும் அதில் கந்தன் வந்ததாகவும் அந்நிகழ்ச்சி இங்குதான் நடந்தது என ஒரு சிறு இடமும் கோயிலுள் நுழைந்த மாத்திரத்திலேயே இருக்கின்றன. அருணகிரியாரின் அவதார இடத்தில் கோயில்காரர்கள் எழுதிய அவரின் சிறு வாழ்க்கை வரலாற்றிலேயே நான் எழுதியவை இருக்கின்றன.

    உலகமெங்கும் மக்கள் வந்து வாசிக்கும் சொற்கள் அவை.. அஃது அவருக்கு இழுக்கென்றால் கோயில்காரர்கள் எழுதிப்போட்டிருப்பார்களா?  அல்லது அவரின் சரித நூல்களில் எழுதப்பட்டிருக்குமா?

    பெரியாரை ஒப்பிடுவது சாலப்பொருத்தம். அருணகிரிநாதரின் பூர்வாசிரம வாழ்க்கையே அவரின் புனிதத்தன்மையும் முருகபக்திக்கும் மென்மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன. அவ்வாறே அகஸ்டினின் வாழ்க்கையும். திருநாவுக்கரசரின் தவறான மத வாழ்க்கையைத் (தருமசேனன் என்று சமணத்தில் இருந்தது).  

    எப்படி வாழ்க்கையைத்தொடங்கினார்கள் என்பதன்று; எப்படி முடித்தார்கள் அவற்றிலிருந்து என்ன நாம் கற்றோம் என்பதைப்பார்ப்பதுதான் உயர்ந்த வாழ்க்கைப்பண்பாடு.

    - பால சுந்தர விநாயகம்

    Bala Sundara Vinayagam

    unread,
    May 31, 2015, 4:16:41 AM5/31/15
    to mint...@googlegroups.com
    விமர்சிப்பதில் தவறேயில்லை. அவருக்குத் தகுதியில்லையென்பதுதான் தவறு. தமிழறிந்த அனைவரும் தமிழ் இலக்கியத்தை வாசிக்கலாம். விமர்சிக்கலாம். அதற்கு வேறு தகுதிகளும் இருக்கவேண்டுமென்பது தாலிபானித்தனம்.

    Bala Sundara Vinayagam

    unread,
    May 31, 2015, 6:34:02 AM5/31/15
    to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com
    தவறான பார்வை. ஏனெனில், இலக்கியமென்றால் வெறும் சொற்கள் நல்கும் இன்பம் என்றெடுப்பதா? இல்லை, சொற்களோடு கருத்துக்களும் சேர்ந்ததே இலக்கியம் என்பதா?

    சங்க இலக்கியம் என்பது 2000 ஆண்டுகளுக்கு எப்படி தமிழ்மக்கள் சமூகம் இருந்தது என்று காட்டுவதும்கூட.  வரலாற்றாராய்ச்சியாளர்களுக்கு, அக்காலத்தை அறிய சங்க இலக்கியம் வெகுவாக உதவுகிறது. அவர்கள் அவ்விலக்கியத்தில் எதுகை, மோனை, உவமை என்று இலக்கிய இன்பம் தேடுவது இல்லை. என்ன சொல்லப்படுகிறது என்பதுதான் பார்ப்பார்கள். அஃதே அவர்களுக்கும் வேண்டும்.

    ஆக, இலக்கியம் மூவகையில் பார்க்கப்படுகிறது:

    1. வெறும் சொற்கள் தரும் இன்பம்; 
    2.வெறும் கருத்துக்கள் தரும் இன்பம் அல்லது உதவி; 
    3. இரண்டையுமே நோக்கி வரும் இலக்கிய இன்பம்.   

    முதல்வகையைச் சேர்ந்தவர்தான் வேல் போலும். இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் சோ கால்டு பகுத்தறிவாளர்கள்; மூன்றாம் வகையைச்சேர்ந்தவன் யான்.

    இரண்டாம் வகையைச்சேர்ந்தவர்கள் அவ்விலக்கியம் காட்டும் சமூகம் அதன் வாழ்க்கை முறை எங்கேனும் ஒத்துவரவில்லையென்றால் அதைச்சுட்டிக்காட்டுவர்.  அச்சமூகத்தில் பலபல விடயங்கள் தற்போது ஒத்துவாரா என்பது திண்ணம். ஆனால், ஒத்துவருவது போல க‌ற்றுக்கொடுத்து இளம் உள்ளங்களைத் தவறான வழிகளுக்கு இட்டுச்செல்லல் கண்டிக்கப்படுகிறது இரண்டாம் வகையினரரால்தான். அவர்களுள் ஒருவர்தான் பெரியார்.

    இப்படித்தான் இலக்கியம் படிக்கப்பட வேண்டும் என்பது இலக்கியத்தை நசுக்கச்செய்யும் சட்டாம்பிள்ளைத்தனாமாகும்.

    //தமிழருக்கான  அறிவுடைமை  சங்கவிலக்கியங்களை குறைகாண்பதிலில்லை. ஒருபோதுமில்லை!. எந்தநிலையிலுமில்லை.   காலத்திற்கேற்ப அதை விளக்கி அதன் தொடர்ச்சியை நீட்டுவதில்தான் அறிவுடைமையிருக்கிறது. //

     A vague statement unless cleared.  அறிவுடைமை என்பது இலக்கியத்தில் சொல்லப்படும் நச்சுக்கருத்துக்களை தூக்கியெறிவது. அல்லது அவை நச்சுக்கருத்துக்கள் என்பதை விளக்கிவிட்டு கற்றுக்கொடுப்பது.  அவை நச்சுக்கருத்துக்களே என்று சொல்வது குறை காண்பதுதான். அதைக்காணக்கூடாதென்கிறாரா?

    கண்ணகி தன் கணவன் பரத்தையரோடு சென்று கூத்தடிக்கும்போது கண்டிக்கவேயில்லை. திரும்பி வந்தவனை கை நீட்டி வரவேற்றாள்.  அந்தப்பாவி ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கி விட்டு வந்ததைக்கூட இவள் பாராமுகமாக இருந்துவிட்டாள். இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? அப்பெண் எப்படி குழந்தை பெறுவாள்? அவளுக்கு எவரேனும் துணையுண்டா? பெற்றால் குழைந்தையை எப்படி வளர்ப்பாள்? என்று சிந்திக்கவேயில்லை. தன் கணவன் எத்தனை பேரை வேண்டுமானாலும் பெண்டாளலாம்; எனக்கு அவன் மாசு மருவற்ற மணாளன்!

    என்ன கொடூரம் இது வேல் அவர்களே!

    மாதவியோ, தன் பாட்டில் தவறானப் பொருள் கொண்டு ஓடியவனைப் போய் தட்டிக்கேட்கமுடியவில்லை; காரணம்: அவள் குலம். ப்ரத்தையர் குலம். அவர்களுக்கு சிற்காலம் வைப்பாட்டியாகத்தான் இருக்க முடியும். எந்த உரிமையும் கோர முடியாது.  கர்ப்பமாக இருந்தாலும் அவளைத் தனியே விட்டுவிட்டு ஓடினான். இக்கேடுகெட்டவனை இலக்கிய நாயகனாக சிறப்பு செய்ய முடியுமா? எதை நீட்டிக்கச் சொல்கிறார் வேல்? நச்சுக்கருத்துக்களையுமா?

    பரத்தையர் சிஸ்டத்தைப் போற்றும் இலக்கியம் (இளங்கோ அதைப்பற்றி ஒரு சொல்கூட சொல்லவில்லை); ஆணுக்குப் பெண் அடிமையே கணவனைத் தட்டிக்கேட்க பெண்ணுக்கு உரிமையில்லை. கணவனே கண்கண்ட தெய்வம். என்று அமைப்பு.  காவிய நெடுக பலபல இன்றைய காலகட்டத்தில் ஏற்க முடியா வாழ்க்கை பண்பாடுகள் - இவற்றைத் தட்டிக்கேட்க எவரும் முன் வரவில்லை. முன் வந்தவர் குறை கண்டார்; இலக்கியத்தை இகழ்ந்தார்; அவருக்கு  இலக்கியம் படிக்கத் தகுதியில்லை என்று சொல்வோர் பெண்ண்டிமைத்தனத்தைப் பேணும் கொடிய மனத்தினர் என்றுதான் சொல்வேன்.

    இவை நச்சுக்கருத்துக்களல்லவா? பரத்தையர் கலாச்சாரத்தை வள்ளுவராவது அக்ண்டித்தார். இளங்கோ செய்யவில்லை.  ஏற்கனவே தமிழ்நாட்டில் பையன்கள் பெண் என்பவள் கிண்டலுக்கு ஆளாக வேண்டியவள்; ஆணின் இன்பத்துக்காகவே உருவாக்கப்பட்டவள் என்று திரைப்படங்கள் பார்த்து வள்ரும்போது இலக்கியமும் அவர்கள் மனத்தில் இதையே வளர்க்கவேண்டுமா? இதுதான் பெரியாரின் கோபத்துக்குக் காரணம். 

    சிலப்பதிகாரம் ஒரு நல்ல இலக்கியம். இலக்கியச்சுவை நிறைந்தது. பல நற்கருத்துக்களையும் கொண்டது. அதே சமயம் அதில் நச்சுக்க்கருத்துக்களும் உள. அவற்றைச் சுட்டிக்காட்ட நீங்கள் விரும்பவில்லையென்றால், விடுங்கள்.  பெண் ஆணின் போகப்பொருள் என்று வளர்ந்தவர்களை நாம் என்ன செய்ய முடியும். ஆனால் பெரியார் செய்யட்டும்.

    I can on this epic more harshly than EVR. But this thread is on his views. 

    Megala Ramamourty

    unread,
    May 31, 2015, 10:11:33 AM5/31/15
    to மின்தமிழ்
    //பரத்தையர் சிஸ்டத்தைப் போற்றும் இலக்கியம் (இளங்கோ அதைப்பற்றி ஒரு சொல்கூட சொல்லவில்லை); ஆணுக்குப் பெண் அடிமையே கணவனைத் தட்டிக்கேட்க பெண்ணுக்கு உரிமையில்லை.//

    ஐயா பாலசுந்தரம் அவர்களே!

    சிலப்பதிகாரத்தில் பரத்தையர் குலத்தை இளங்கோ போற்றவுமில்லை; புழுதிவாரித் தூற்றவுமில்லை. பரத்தையர் சிஸ்டத்தை அவர் போற்றினார் என்று எழுதுவது காப்பியத்திற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. அதுபோல் ஆணுக்கு பெண் அடிமையாக வாழவேண்டும் என்று சிலம்பில் எங்குமே கூறப்படவில்லை.

    கணவனைப் போற்றி வாழ்ந்த அக்காலப்பெண் ஒருத்தியை அவர் கதைத்தலைவி ஆக்கியிருக்கிறார் அவ்வளவே. அவள் ஏன் கணவனைக் கண்டிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். புகார்க் காண்டத்தில் கண்ணகி கோவலனைக் கண்டிப்பதாக அவர் காட்டவில்லையே தவிர, தொடர்ந்து வரும் மதுரைக் காண்டத்தில் (சரியான தருணத்தில்) கண்ணகி கோவலனைக் கண்டிக்கவே செய்கின்றாள்; கோவலனும் தன் தவறுணர்ந்து வருந்துகிறான்.

     ஆணைவிட பெண்ணுக்குத்தான் தன் காப்பியத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இளங்கோ. கணவனைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கத் தவறாத கண்ணகி, நீதி தவறிய அரசனையே கண்டிக்கவும் தயங்கவில்லை என்பதைக் காப்பியம் பேசுகிறது. இவையெல்லாம் இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய புரட்சிச் சிந்தனைகள் இல்லையா?

    வஞ்சிக் காண்டத்தைக் கருத்தில்கொண்டால் சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளைத் தனக்குச் சமமான இடத்திலேயே வைத்து நடத்துகின்றான். அவளுடைய ஆலோசனைகளையும் கேட்டு நடக்கிறான் என்பதையும் ஆசிரியர் நமக்கு அறியத் தருகின்றார். இவற்றையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை; கருத்துக்கூறுவதுமில்லை.  :-(

    கண்ணகி தன் கணவனைக் கண்டிக்கவில்லை; பெண்ணடிமையை இளங்கோ போற்றுகிறார் என்றெல்லாம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்புவது காப்பியத்தைக் கவனமாகக் கற்காததனால் ஏற்படும் விளைவுகளே!

    அன்புடன்,
    மேகலா




    சி. ஜெயபாரதன்

    unread,
    May 31, 2015, 10:28:24 AM5/31/15
    to mintamil
    வணக்கம் சுபா.  

    தந்தை பெரியார் கண்ணகி இலக்கிய நாயகியை இகழ்ந்து, கற்பு என்றால் என்ன, பத்தினிகள் யார் என்று மனிதர் அந்தரங்க வாழ்வைப் பற்றித்தான் உபதேசிக்கிறார்.  அவை தீவிர தர்க்கத்துக்கு உரியவை,  அவற்றுக்கு மின்தமிழில் ஆதரவும், எதிர்ப்பும் பற்பல வந்துள்ளன.

    பெரியாரது கருத்துக்களை ஆதரிப்பவர் கருத்து மட்டும் மின்தமிழில் வரவேண்டும், எதிர்க்கருத்துக்களுக்கு இடமில்லை என்பது உங்கள் விதியாயின் ஏற்றுக் கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்.

    Nagarajan Vadivel

    unread,
    May 31, 2015, 11:32:51 AM5/31/15
    to மின்தமிழ்
    பெரியாரைப் பற்றிய பல மாற்றுக்கருத்துக்களை நான் மின்தமிழில் வைத்துள்ளேன்.  மின்தமிழ் திராவிடப் பாசறையல்ல.  அறிவார்ந்த பிராமணர்களும் உயர் சாதியினரும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தையும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தையும் நிறவேற விடாமல் தடுத்தபோது பெண் விடுதலைக்காக பெண் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர் பெரியார் என்ற அடிப்படையில் அவர் கருத்துக்கள் அலசப்படுவதை நீங்கள் அறியமுடியும்.  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விதவைத் திருமணம் பற்றி வாய்கிழியப் பேசியவர்கள் மத்தியில் தன்வீட்டில் விதவை மறுமணத்தை நடத்திக் காட்டியவர் என்ற முறையில் பெரியார் பெண்கள் பார்வையில் சிகரம் தொட்டு நிற்கிறார்
    பெரியார் ஒரு முழுமைபெற்ற ஆளுமையல்ல.  மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவருமல்ல.  அவருடைய சில சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தத்துக்குப் பெரிதும் வலுச் சேர்க்கும்விதமாக இருந்தது.  அவை மட்டுமே மின்தமிழில் எடுத்துக்கொள்ளப்பட்டடு விவாதிக்கப்படுவதைக் காணலாம்
    இலக்கியவாதிக்கும் இலக்கிய கர்த்தாவுக்கும் இடையே வேறுபாடுள்ளது.  பெரியார் இலக்கிய கர்த்தா அல்ல அவர் ஒரு விமரிசகர் அவர் கோணத்தில் அவர் ஆதரவாளர்க்ளுக்குச் சொல்லும் வாசகங்கள் சாகாவரம் பெற்றவையல்ல.  பெரியாரை அவருடைய சீட கோடிகளே மறந்து பல ஆண்டுகள் ஆகியும் பழைய விரோதம் பார்ப்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் ஆப்படிக்கலாம் என்று அலைவது விந்தையிலும் விந்தையே
    நவகேடி

    Innamburan S.Soundararajan

    unread,
    May 31, 2015, 11:37:22 AM5/31/15
    to mintamil
    அதே! அதே!
    தசகோடி இ

    சொ. வினைதீர்த்தான்

    unread,
    May 31, 2015, 12:06:14 PM5/31/15
    to mintamil
    2015-05-31 19:41 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

    கணவனைப் போற்றி வாழ்ந்த அக்காலப்பெண் ஒருத்தியை அவர் கதைத்தலைவி ஆக்கியிருக்கிறார் அவ்வளவே. அவள் ஏன் கணவனைக் கண்டிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். புகார்க் காண்டத்தில் கண்ணகி கோவலனைக் கண்டிப்பதாக அவர் காட்டவில்லையே தவிர, தொடர்ந்து வரும் மதுரைக் காண்டத்தில் (சரியான தருணத்தில்) கண்ணகி கோவலனைக் கண்டிக்கவே செய்கின்றாள்; கோவலனும் தன் தவறுணர்ந்து வருந்துகிறான்.

     ஆணைவிட பெண்ணுக்குத்தான் தன் காப்பியத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இளங்கோ. கணவனைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கத் தவறாத கண்ணகி, நீதி தவறிய அரசனையே கண்டிக்கவும் தயங்கவில்லை என்பதைக் காப்பியம் பேசுகிறது. இவையெல்லாம் இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய புரட்சிச் சிந்தனைகள் இல்லையா?

    வஞ்சிக் காண்டத்தைக் கருத்தில்கொண்டால் சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளைத் தனக்குச் சமமான இடத்திலேயே வைத்து நடத்துகின்றான். அவளுடைய ஆலோசனைகளையும் கேட்டு நடக்கிறான் என்பதையும் ஆசிரியர் நமக்கு அறியத் தருகின்றார். இவற்றையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை; கருத்துக்கூறுவதுமில்லை.  :-(

    அருமை. சிறப்பான மொழிதல்.

    Seshadri Sridharan

    unread,
    May 31, 2015, 12:38:32 PM5/31/15
    to mintamil
    இலக்கியவாணர் என்றால் தம்கால வாழ்கை நடைமுறை, மற்ற இலக்கியவாணர் நடைமுறையையும் பின்பற்றித்தான் எழுதுவர். பெரியார் சொல்லுவதுபோல் அதில் பகுத்தறிவுக் கருத்து இடம்பெறவேண்டும் என்பது அப்பட்டமான தவறு. 

    எத்தனையோ ஆங்கிலப் புதினங்களில் பாலுறவு நிகழ்வு குறித்த வர்ணனை அதில் இடம்பெறுகிறது. அது அந்த நாட்டுமக்களின் சமகால வாழ்க்கைமுறையை தழுவியது. அதனால் அந்த இலக்கியமே தவறு என்று சொல்லும் தகுதி யாருக்கும் கிடையாது. 

    பெரியார் தமிழ் இலக்கியங்களை பகுத்தறிவின் பெயரில் கொச்சைப்படுத்தியது போல தெலுங்கு கன்னட திராவிட இலக்கியங்களை கொச்சைப்படுத்தியது இல்லை. அவை கூட ஆரியத்தை தழுவியவை தாம். திட்டமிட்டே தமிழர் அறிவை பகுத்தறிவின் பெயரில் குழப்பி தமிழரே தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் வெறுக்கவேண்டும் என்று வெறுப்பு மனப்பான்மையை ஊட்டியவர்.

    எண்டிமீனன்   
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages