22.5.15
கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?-பெரியார்
கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?சிலப்பதிகாரத்தில், 'கண்ணகி என்ற பெண் மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள் கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றி எரிகிறது!' என்று எழுதியிருப்பதுடன் இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள்!
இன்று எந்த ஒரு பெண்ணாவது - அவள் எவ்வளவு தான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் - இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரி காரியம் நடந்திருக்க முடியுமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் தீய்க்கு ஆணையிடுகிறாள், 'பார்ப்பனர்களை'த் தவிர்த்து, மற்றவர்களை அழித்து விடு என்று! பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுகிறவள், தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!
அவளது கற்புக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது தன் கணவனான கோவலன், மாதவி என்ற ஒரு தாசியோடு கூடிக் குலாவியிருந்த காலத்து அவன் தன்னைப் புறக்கணித்து விட்டு தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வராமலிருந்தும் கூட, அவன் கஷ்டப்படுகிறான் என்றறிந்து, அவனுக்காக வேண்டித் தனது விலையுயர்ந்த ஆபரணங்களையும், சேலைகளையும் மாதவி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் என்பதாகும்.
இத்தகைய முட்டாள்தனமான கற்பு எங்காவது சிறந்த வீரத் தமிழ்ப் பண்பாகுமா? தமிழ்ப் பண்பு இத்தகைய கற்பையா தமிழ் மக்களுக்குப் போதித்து இருக்கிறது? உண்மை தமிழச்சியானால் அவள் ஒன்று மாதவி வீடேறி அந்தக் கோவலைக் கட்டி இழுத்து வந்திருக்க வேண்டும். அல்லது அவனை அவன் விருப்பப்படியே விட்டு விட்டுத் தான் வேறொரு ஆடவனை மணந்திருக்க வேண்டும். அது தனக்கு விருப்பமில்லையானால் சும்மாவாவது இருக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதை விட்டு தன் கணவன், மேலும் ஒரு தாசியோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கட்டும் என்று தன் நகையையும், சேலையையும் அந்தத் தாசிக்கு அனுப்பி வைப்பதா தமிழ்ப் பண்பு? இல்லை; இல்லை.
இது பெண் ஆணுக்கு அடிமை என்ற ஆரியக் கருத்தைத் தமிழர்களிடையே புகுத்துவதற்காகத் தமிழன் கையைக் கொண்டே எழுதச் செய்யப்பட்ட ஒரு பித்தலாட்டக் கதையே. இதை நம் பண்டிதர்கள் இன்னும் உணராது அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறுகிறார்களே! இது சரியா?
சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தமிழர் பண்பை எடுத்துக்காட்டக் கூடிய தனித் தமிழ் நூல்களை எல்லாம் ஓரளவுக்கு இந்துமதக் கடவுளும், பெருமளவுக்கு ஆரிய சூ ழ்ச்சியால், ஆடி ஆற்றுப் பெருக்கின் போது பழம் சுவடிகளுடன் நதிப் பெருக்கில் இடும் மூடப் பழக்கமும் கொள்ளை கொண்டு விட்டன. எஞ்சி நின்ற ஒன்றிரண்டும் ஆரியத்திற்கு எதிர்ப்பாயிருப்பதால் அவற்றிற்கும் மக்களிடையே செல்வாக்கு ஏற்படாமல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஓர் எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?
----------------------- தந்தை பெரியார் அவர்கள் 'மொழி' என்னும் பொருள் குறித்தும், 'எழுத்து' என்னும் பொருள் குறித்தும் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் 20-ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய விரிவுரைகளின் தொகுப்பு. "விடுதலை", 05.01.1968
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சரி...பெண்களை ஏமாற்ர எழுதபட்ட இக்கதைகள் நமக்கெதுக்கு? தூக்கிபோட்டுவிடுவோமே? வள்ளுவரும், இளங்கோவும் ஆரியகைகூலிகள், ஆனாதிக்கவாதிகள் என்ற பெரியார் கருத்து உண்மை என்றால் அவர்கள் எழுதிய நூல்களை ஏன் பள்ளிகளில் சொல்லிகொடுக்கவேன்டும்? படிக்கவேண்டும்?
2015-05-23 1:37 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பாவம் ...மனிதர்களின் முட்டாள்தனம் அவருக்கு எரிச்சலூட்டுகிறது.இதுவரை வந்த மூன்று கட்டுரைகளிலும் பெண்களை ஏமாற்ற எழுதப்பட்ட கதைகள் இவை என்ற கோணத்தில்தான் பேசுகிறார்அதுவே இக்கட்டுரைகளின் மையக்கருத்து...... தேமொழி
On Friday, May 22, 2015 at 11:27:00 PM UTC-7, செல்வன் wrote:ஐம்பெரும்காப்பியம் எல்லாவற்றையும் தூக்கி போட்டு அழித்துவிடலாம். தொல்காப்பிய்ன் ஆரியகைகூலி என்றார் பெரியார். அதையும் தூக்கிபோட்டுவிடலாம். குறளும் மோசம் என்றுவிட்டார். அதுவும் காலி....இப்படியே எல்லா சங்கைலக்கியத்தையும் காலி செய்துகொண்டே வந்தால் அடுத்து கம்பன், பக்தி இலக்கியம், காளமேகம், அருனகிரிநாதர்....விடலாமா இதை எல்லாம்? அதையும் தூக்கிபோடு. கடைசியில் மிச்சமிருப்பது பாரதி...அவனும் கண்ணன் பாட்டு எழுதியவன். ஆக ஒட்டுமொத்த தமிழல்க்கியத்தையும் அழித்தால் தான் தமிழரை காப்பாற்ற முடியும்...வெயிட், வெயிட்...தமிழே வேண்டாம் என வேறு சொல்லியிருக்கிறார். அதையும் தூக்கிபோட்டு இங்கிலீஸ் பேசலாம். அப்பதான் தமிழ்நாடு சிறக்கும், ரைட் :-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
உடனே பத்தினித் தெய்வம்...கோயில் ...குளம்..என்ற வகையில் போவதைவிட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவதை புத்திசாலிப் பெண்கள் கவனிக்க வேண்டும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மிகச்சரியாக.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
எப்போதும் கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது. யாரோ எழுதியது !!!
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ? - சி. ஜெயபாரதன்.
அண்ணாவும் கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .
அண்ணாவும் கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .
--
நல்ல கேள்வி !!! ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?
///அண்ணாவோ பெரியாரோ தங்களை இலக்கியவாதி என்று தங்களைக் குறிப்பிட்டுள்ளார்களா ?////நல்ல கேள்வி !!! ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?
அண்ணாதுரை, கருணாநிதி படைத்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் பல பேர் ஆராய்ச்சிகளைபல்கலைக்கழகங்களில் செய்வதும் பார்க்கிறோம்
ஆழ்ந்த தமிழ் இலக்கிய ஞானமுள்ள அரசியல்வாதிகள் அண்ணாதுரை, கருணாநிதி, ப. ஜீவானந்தம், மா.போ.சி, ஆகியோர் இலக்கியவாதிகள் அல்லர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜெயபாரதன் ஐயா தொல்காப்பியம் பூங்காவானது எப்படி யாரால் என்பதையும்
மதுரைப் பல்கலை வட்டாரத்தில் இருந்து தெரிந்து
அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிலம்புச் செல்வர் மா.போ.சி இலக்கியவாதி அல்லரா ?
சிலம்புச் செல்வர் மா.போ.சி இலக்கியவாதி அல்லரா ?
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?
| பாவேந்தர் பாரதிதாசன் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | சுப்புரத்தினம் ஏப்ரல் 29, 1891 புதுவை |
| இறப்பு | ஏப்ரல் 21, 1964(அகவை 72) சென்னை |
| புனைப்பெயர் | புரட்சிக் கவிஞர், பாவேந்தர் |
| தொழில் | தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி |
| இனம் | தமிழர் |
| நாட்டுரிமை | இந்தியர் |
| துணைவர்(கள்) | பழநி அம்மையார் |
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார்மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
| சி. இலக்குவனார் | |
|---|---|
செந்தமிழ்ச் சுடர் | |
| பிறப்பு | இலட்சுமணன் நவம்பர் 17, 1909[1] நாகபட்டணம் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வாய்மைமேடு |
| இறப்பு | செப்டம்பர் 3, 1973(அகவை 63) |
| இருப்பிடம் | மதுரையை அடுத்த திருநகர் |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | வித்துவான், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்டி. |
| பணி | பேராசிரியர் |
| பணியகம் | கல்லூரிகள், உசுமானியா பல்கலைக் கழகம் |
| அறியப்படுவது | மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி |
| பெற்றோர் | சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி |
| வாழ்க்கைத் துணை | மலர்க்கொடி, நீலகண்டேசுவரி |
| பிள்ளைகள் | திருவேலன் மறைமலை திருவள்ளுவன் மதியழகி நல்லபெருமாள் செல்வமணி நாகவல்லி அங்கயற்கண்ணி அருட்செல்வி அம்பலவாணன் |
| உறவினர்கள் | மறைமலை இலக்குவனார் |
பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909[1] - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.
திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் (ஆங்கில ஆண்டு 1909 நவம்பர் 17ம் நாள்)தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்குஅருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.
வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று.
தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். இங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், "இலக்குவன்" என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார். அங்கு பொன்னண்ணா களத்தில்வென்றார் என்பவரிடம் பயின்று பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றார். [2]
திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். [3] அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]
அன்னாளைய சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்றவர் இடைநிலை வகுப்பிலும் கலை இளவர் வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், அவருக்கு கீழைமொழிகளில் இளவர் (BOL) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார்.
பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (MOL) பட்டமும் பெற்றார்.
இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து 53 அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்துபோற்றின. குமரி முதல்சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார்.
1936 சூன் மாதம் முதல் 1942ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியப் பணிபுரிந்தார்.
கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் 1942 முதல் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார், அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியமர்த்தம் பெற்றார். பின்னர்திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில்தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கு. காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட கோ. து. நாயுடு (G. D. நாயுடு)வை ஆதரித்துப் பரப்புரை செய்தார். இதனால் விருதுநகர் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்டார். [5]
பின்னர் 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். [6]
1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரைநாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரைதியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஐத்திராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், 31.12. 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றிஉளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது திராவிடக்கூட்டரசுமதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார்,1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார். விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ் நிறுத்தப்பட்டது.
வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு குறள்நெறி என்னும் இதழை 15.1.1964ஆம் நாள் சி. இலக்குவனார் தொடங்கினார். [7]
Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.
25 – சனவரி – 1965ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 ஆம் நாள் சி. இலக்குவனார் கைது செய்யப்பட்டார். அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார். [7]
உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். எனவே 1.5.1965ஆம் நாள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். [7]
2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார்.
மதுரையை அடுத்த திருநகரில் 6. 8. 1962 ஆம் நாள் தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது. [7]
இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தம்மை விரும்பியவரும் தம் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கையுமான நீலகண்டேசுவரியை மணந்துகொண்டார். [2]
திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதினொரு மக்களை இலக்குவனார் பெற்றனர். [4]
1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை. அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும் ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்கவேண்டாமெனவும் இவர் கூறியமையே இவரது வேலைக்கு உலைவைத்த செய்தி தமிழ்நாடு அறிந்த ஒன்றே. அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.
பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள், [சேடபட்டி முத்தையா]]
• பேராசிரியர் இலக்குவனார் ஒரு மாபெரும் தமிழ் இயக்கம் – முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், முன்னாள் துணைவேந்தர், புதுவை பல்கலைக்கழகம் [8]
முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையினரால் 26 நவம்பர் 2009 அன்று தமிழறிஞர் சி.இலக்குவனாருக்கு எடுக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில் சிறப்புக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன; தமிழகத்தின் நிதியமைச்சரான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பித்த, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன் தலைமையேற்ற இந்த விழாவில் பேசப்பட்ட இலக்குவனாரின் நற்பணிகளின் விபரம்:
Maraimalai, சி.இலக்குவனார், சாகித்திய அக்காதெமி.
தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்| பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் | ![]() | ![]() | ![]() |
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Monday, 10 August 2009 21:28 |
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் பி.தயாளன்
ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம்கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்" என்று இவ்வாறெல்லாம் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனால் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர் கா.அப்பாதுரையார்.
கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை - முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் "நல்லசிவம்" என்பதாகும். தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தி மொழியில் "விஷாரத்" தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார். திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரை பணியாற்றினார். அப்போது, "இந்தியாவின் மொழிச்சிக்கல்" என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது வேலையை இழந்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார். திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் முதலிய இதழ்களில் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது. அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டபோது, 1938 - 39ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார்.
முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார்.
அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று,
ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் அந்நூலைப் போற்றுகின்றனர்.
தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, "இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்" என்று வியந்து கூறியுள்ளார்!
மற்றும்,
உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். மேலும் சங்க காலப் புலவர்களில், |
|
முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் அப்பாதுரையார்.
ஆகிய மூவரைப் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.
திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர். அவரது "திருக்குறள் மணி விளக்க உரை" என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்" வார இதழிலும், "அன்னை அருங்குறள்" என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே "முப்பால் ஒளி" என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது எனலாம்.
"உலக இலக்கியங்கள்" என்ற நூலில்,
எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார்.
|
|
என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் அப்பாதுரையார்.
இப் பன்மொழிப் புலவர் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். எனினும், அவனியை விட்டு என்றென்றும் நீங்காமல் அவரது புகழும், அவரது படைப்புகளும் நின்று விளங்கும்.
நன்றி:- தினமணி |
| Last Updated on Monday, 10 August 2009 21:33 |
பாரதிதாசன், இலக்குவனார் குறித்து முன்பு படித்துள்ளேன். பன்மொழிப்புலவர்
குறித்துப் படித்தறிந்தேன்.
இன்னும் கவிஞர் முடியரசனார் போன்று பலர்
இருக்கிறார்கள்.
| கவியரசு முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் | |
| |
| 01. | கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு) |
| 02. | கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு) |
| 03. | காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு) |
| 04. | காவியப் பாவை (நான்காம் பதிப்பு) |
| 05. | ஞாயிறும் திங்களும் |
| 06. | தமிழ் முழக்கம் |
| 07. | தாய்மொழி காப்போம் |
| 08. | நெஞ்சிற் பூத்தவை |
| 09. | நெஞ்சு பொறுக்கவில்லையே |
| 10. | பாடுங்குயில் |
| 11. | புதியதொரு விதி செய்வோம் |
| 12. | மனிதனைத் தேடுகிறேன் |
| 13. | |
| 14. | முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி) |
| 15. | முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) |
| 16. | முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்) |
| 17. | முடியரசன் தமிழ் வழிபாடு |
| 18. | வள்ளுவர் கோட்டம் |
| |
| 19. | ஊன்றுகோல் |
| 20. | பூங்கொடி |
| 21. | வீரகாவியம் |
| |
| 22. | |
| 23. | |
| 24. | எக்கோவின் காதல் |
| |
| 25. | எப்படி வளரும் தமிழ் |
| 26. | சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் |
| |
| 27. | கவியரசர் முடியரசன் கடித இலக்கியம் |
| 28. | |
| |
| 29. | |
| 30. | |
| 31. | |
| 32. | |
--
பாரதிதாசன் தீவிர நாத்திகராக இருந்து கடவுள் மேல் கவிதை புனையாமல் வாழ்ந்து மறைந்த இலக்கியவாதி என்று கூறல்மா?
பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.
பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர். [இதுதான் இழையின் உட்கருத்து]
--
பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர். முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.
எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றிச் சொல்லியுள்ளார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
வணக்கம் சுபா,பெரியாரின் வாய்மொழியாக கடவுளை மதிப்பவரை முட்டாள்கள் என்று இகழ்வதும், கண்ணகி போன்ற இலக்கிய நாயகிகள் பற்றிய தமிழ் இலக்கியங்களை இலக்கியமல்ல வென்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.ஒழுக்கமற்ற பகுத்தறிவாளர் இலக்கிய ஒழுக்கத்தைப் பற்றித் தமிழருக்குக் கூறுவதும் வலையில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவை விமர்சிக்கப்படும்.
கணவனைப் போற்றி வாழ்ந்த அக்காலப்பெண் ஒருத்தியை அவர் கதைத்தலைவி ஆக்கியிருக்கிறார் அவ்வளவே. அவள் ஏன் கணவனைக் கண்டிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். புகார்க் காண்டத்தில் கண்ணகி கோவலனைக் கண்டிப்பதாக அவர் காட்டவில்லையே தவிர, தொடர்ந்து வரும் மதுரைக் காண்டத்தில் (சரியான தருணத்தில்) கண்ணகி கோவலனைக் கண்டிக்கவே செய்கின்றாள்; கோவலனும் தன் தவறுணர்ந்து வருந்துகிறான்.
ஆணைவிட பெண்ணுக்குத்தான் தன் காப்பியத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இளங்கோ. கணவனைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கத் தவறாத கண்ணகி, நீதி தவறிய அரசனையே கண்டிக்கவும் தயங்கவில்லை என்பதைக் காப்பியம் பேசுகிறது. இவையெல்லாம் இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய புரட்சிச் சிந்தனைகள் இல்லையா?வஞ்சிக் காண்டத்தைக் கருத்தில்கொண்டால் சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளைத் தனக்குச் சமமான இடத்திலேயே வைத்து நடத்துகின்றான். அவளுடைய ஆலோசனைகளையும் கேட்டு நடக்கிறான் என்பதையும் ஆசிரியர் நமக்கு அறியத் தருகின்றார். இவற்றையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை; கருத்துக்கூறுவதுமில்லை. :-(