வெறியாடல் எனப்படும் பேயோட்டும்
நிகழ்வினைச் செய்யும் பூசாரியை வேலன் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள். இக்காலத்தில்
உடுக்கை அடித்துப் பேயோட்டும் நம் ஊர் கோடாங்கியைப் போன்றவனாக இந்த வேலனைக் கருதலாம்.
இந்த வேலன் என்பவன் முருகனை வழிபடும் பூசாரி ஆவான். இதற்கு அடையாளமாகத் தனது கையில்
முருகனுக்குரிய வேலைப் பிடித்திருப்பான். வயது முதிர்ந்த ஒரு வேலனின் தோற்றம் எவ்வாறு
இருக்கும் என்று கீழ்க்காணும் பாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
அருகில் உள்ள சோழிகளின்
படம் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது. வேலன் தனது வலது உள்ளங்கையில் பல சோழிகளை
அடக்கிக் குலுக்கித் தரையில் போடுவான். சோழியின் மேற்புறத்தினை மூடிய கண்ணாகவும் கீழ்ப்புறத்தினைத்
திறந்த கண்ணாகவும் கொண்டு எத்தனை சோழிகள் கண் திறந்திருக்கின்றன என்று எண்ணி அந்த எண்ணிக்கைக்கு
ஏற்பக் குறிசொல்வது வேலனின் வழக்கம். இவ் வழக்கத்தினை இன்றளவும் பல சாமியாடிகளும் குறிசொல்வோரும்
பின்பற்றுவதை அறிவோம். தற்காலத்தில் சிலவகை விளையாட்டுக்களில் கூட இதேமுறையினைப் பின்பற்றுகின்றனர்.
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?
2.8.2 வெறியாட்டு
வெறி - வள்ளிக் கூத்து ; ஆட்டு - ஆட்டம். ஆடுவோர், மறவரின் மனைவியர், ஆகோள் வினை (ஆநிரை கவர்தல்).நன்கு முடிய வேண்டி, முருகனின் வேலினைக் கையகத்தே கொண்ட வெறியாடுபவனுடன் வள்ளியைப் போல வேடம் பூண்டு ஆடும் ஆட்டம் ஆதலின், வெறியாட்டு எனப் பெயர் பெற்றது.
தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் பின்னர்ப் புரிய இருக்கும் போர்வினையை வெற்றியில் முற்றுவிக்கும் பொருட்டு, மறத்தியராம் மனைவியர்கள் வள்ளியைப் போல் வேடம் புனைந்து தெய்வம் ஏறப் பெற்ற வேலன் என்பானுடன் சேர்ந்து ஆடுவது வெறியாட்டு என்னும் துறையாம்.
| வால்இழையார்
வினைமுடிய வேலனொடு வெறியாடின்று. |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.
பின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த இரத்த நிறமுள்ள செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.
முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது. மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக் கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான்; தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதிகுதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.
பிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசுர கணங்கள் தவிடுபொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கைவேலைக் கீழே போட்டான்.
இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்று விட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. "சந்நதம் வந்து விட்டது" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, " வேலா! முருகா! தேவசேநாபதி! கந்தா! சூரசம்ஹாரா! அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டான்.
"கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சந்நதம் வந்தவன் கூவினான்.
"மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?" என்று பூசாரி கேட்டான்.
"மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!..." என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான்.
"என்ன பலி வேண்டும்?" என்று பூசாரி கேட்டான்.
"கேட்டால் கொடுப்பீர்களா?" என்றான் வெறியாடியவன்.
"கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்! என்றான் பூசாரி.
"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!" என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்.
மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.
சம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.
பூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம் போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.
சபை மௌனமாகக் கலைந்தது
[...]
அப்படி என்றால் வெறியாடல் என்பது பேயோட்டுவது அல்ல.
கள்வரின் வெறியாடல்:
பகை மன்னரை போருக்கு அழைத்தலின் பொருட்டு, ஆநிரைக்கள்வர் கால்நடைகளை கவர்தல் எனும் தொழில் சிறப்புர போருக்குச் செல்லும் கள்வரின் மனைவி வள்ளியாகவும், கள்வர் வேலனாகவும் இருந்து ஆடும் ஆட்டம் வெறியாடல் எனக் கொள்ளலாமா?
மறவரின் வெறியாடல்:
கள்வர் ஆநிரையைக் கவர்ந்த பின்னர் மறவர் கூட்டம் போருக்குச் சென்று வெற்றி பெற்று வந்ததும், மறவர் வேலனாகவும், மறத்தி வள்ளியாகவும் ஆடும் ஆட்டம் வெறியாடல் எனலாம். சரிதானே!
வெறியாடலின் போது குறிகேட்டல்:
வெறியாடலின் போது வேலனிடம் அதாவது வேலன் வேடம் பூண்ட கள்வர், மறவரிடம் குறிகேட்கும் நிகழ்ச்சி நடைபெரும்! அப்போது செவிலித்தாய் தன் வளர்ப்பு மகளான தலைவியின் உடல் மெலிதல் பற்றி கேட்பதால், தலைவியின் களவு, காதல் தெரிந்துவிடுகிறது சரியா?வெறியாடலில் பேய் எங்கே:
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வெறியாடலில் பேய் எங்கு வந்தது? சற்று. விளக்குங்களேன்.தொல். களவு 23 ம்பாடல்:
செவிலிக்கு தலைவியின் காதல் குறிசொல்லுதல் எனும் கூற்றால் தெரிய வருகிறது. கட்டு, கழங்கு, வெறி என்பன குறிசொல்லுதலின் முறை என்றே தோன்றுகிறது.ஆனால் தங்களின் கருத்தான பேயோட்டும் முறை எனப்படுவதாகத் தெரியவில்லை. பேய் என்ற கருதுகோள் தொல்காப்பியத்தில் களவியலில் 23ம் பாடலில், தலைவன் தலைவியின் களவியல் நடக்கு சமயத்தில் செவிலிக்குச் சேரும் கூற்றுகளாக உள்ள பாடலில், எங்கே பேய் வந்தது என எனக்கு விளங்கவில்லை ஐயா, விளக்கம் தந்தால் தெரிந்து கொள்கிறேன்.
---
குறிசொல்லும் கட்டுவிச்சியை வீட்டுக்கு அழைத்துவந்து குறிகேட்கிறாள். இக்குறியினைக் கட்டு என்று தொல்காப்பியம் கூறுகிறது. 'உன் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது' என்று கட்டுவிச்சிக் கூறுகிறாள். இதனை வெறி என்று குறிப்பிடுகிறது கீழ்க்காணும் தொல்காப்பியப் பாடல்.களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - தொல்.கள.24
பேயை ஓட்டித் தனது மகளை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பேயோட்டும் பூசாரியைத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். இப்பூசாரியை வேலன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பேயோட்டும் நிகழ்ச்சியை வெறியாட்டு, வெறியாடல் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெறியாட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாகப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் கட்டுரை உள்ளே இன்னும் புகவில்லை ஐயா, தொல்.களவியல் 24ம் பாடலியேயே இருக்கிறேன். அதாவது தங்களின் கட்டுரையின் ஆரம்பத்தில் நின்றுவிட்டேன்.
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்
ஒரே வரி. குறித்துக் கொள்ளுங்கள் ஒரே வரி.இவ்வரியை எடுத்துக் கொள்க.கட்டினும் என்றால் கட்டுவிச்சி கொண்டு குறி கேட்டல்,கழங்கினும் என்றால் கழங்குக் காய் கொண்டு குறிகேட்டல்சரியா? இரண்டுமே ஒரே மாதிரிப் பொருள் தருகிறது? அதனைத் தொடர்ந்துவெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்" என்பதன் முழுப்பொருள் தேவைப்படுகிறது. தாங்களே கூறுங்கள்.இந்த மூன்று நிகழ்ச்சியின் போதும், தலைவியின் களவு, காதல் பற்றி செவிலிக்கு செய்திகள் சொல்லப்படும் என்கிறார் தொல்காப்பியர்.தாங்கள் எனக்கு "வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்" என்பதன் முழுப்பொருள் மட்டும் கூறுங்கள் ஐயா.
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?
இசையினியன் ஐயாதொல்காப்பிய நூற்பாவில் வரும் வெறி என்பது குறிசொல்லுதல் அல்ல; அது அணங்காகிய பேயைக் குறிக்கும்.
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?
ஆனால், Fan என்பதற்கு வெறிஞன் சரியான மொழிபெயர்ப்பு. தமிழ்.நெட் காலத்தில் குறிப்பிட்டேன்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
660.வாரணச் சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை,
கணேசன் ஐயா அவர்களுக்கு,
நம்மாழ்வார்
அப்பதிகத்தை அறியத் தாருங்கள் ஐயா?!
தாங்கள் அணங்கு என்றால் பேய் எனச் சொல்கிறீர், ஆனால் எனக்குத் தெரிந்தவரை அணங்கு என்றால் தெய்வப்,அழகிய பெண் என திருக்குறள் உரைகள் கூறுகின்றன. ஆனால் தாங்களோ வெறியாடலை அணங்குஆடல் என்கிறீர்.
முதல் குறள்:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
இரண்டாம் குறள்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081மு.வ உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சரி, மீண்டும் விசயத்துக்கு வருவோம்,
வெறியாடலில் போர்போன்ற ஆட்டம் ஆடுவர் என்பர். ஆனால் தாங்கள் கூறிய படி வெறியாடல் என்றால் அணங்காடல் எனக்கொண்டால் தெய்வப்பெண் அ அழகியபெண் ஆடுவரோ எனத் தோன்றுகிறது. தெய்வப்பெண் ஆடும் ஆட்டம் உக்கிர தாண்டவமாக இருக்குமோ என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.
---
நம்மாழ்வார் அணங்குப் பேயாடலுக்கும் பெருஞ்சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பதிகமே பாடி விளக்கியுள்ளார்

, v. intr. < அணங்கு + அயர்¹-. To celebrate a festival; விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் (பெரியபு. திருக்குறி. 7).
அணங்காடு-தல் aṇaṅkāṭu-, v. intr. < id. + ஆடு-. To dance under the influence of a deity; தெய்வமாவேசித்தாடுதல். அணங்காடுதலன்றந் தோ (திவ். திருவாய். 4, 6, 5).
அணங்கியோன் aṇaṅḳiyōṉ, n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182).
அணங்கு¹-தல் aṇaṅku-, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).
அணங்கு² aṇaṅku, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).
அணங்குதாக்கு aṇaṅku-tākku, n. < id. +. Possession by a demoness of lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)
------------------
தமிழை நன்கு படித்து சிந்திப்போம். இந்தியா முழுதும் இருந்த தமிழ்/திராவிட மொழிகள் எவ்வாறு மிகக் குறுகிப் போயின. சமயம் எவ்வகையில் அதற்குப் பயன்பட்டது என ஒருவாறு விளங்கும். சென்ற நூற்றாண்டில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் அறிவித்து, அரசாங்கமே நடைமுறைப்படுத்திய திருவள்ளுவர் தொடர்ஆண்டு பற்றிய சான்றாவணங்களைப் பாருங்கள்.
முதல் குறள்:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
இரண்டாம் குறள்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081மு.வ உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சரி, மீண்டும் விசயத்துக்கு வருவோம்,
வெறியாடலில் போர்போன்ற ஆட்டம் ஆடுவர் என்பர். ஆனால் தாங்கள் கூறிய படி வெறியாடல் என்றால் அணங்காடல் எனக்கொண்டால் தெய்வப்பெண் அ அழகியபெண் ஆடுவரோ எனத் தோன்றுகிறது. தெய்வப்பெண் ஆடும் ஆட்டம் உக்கிர தாண்டவமாக இருக்குமோ என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.
---
நம்மாழ்வார் அணங்குப் பேயாடலுக்கும் பெருஞ்சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பதிகமே பாடி விளக்கியுள்ளார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி தேமொழி அவர்களே,
பெரியபுராணம் பாடல் ஒன்றை தந்து எனது கருத்துக்கு வலு சேர்பதாய் உள்ளது.
வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன் அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத் தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம்.
தொல்.கள.24 ம் பாடல் பற்றி என் கருத்து:
ஆக குறியோ/வரமோ கேட்பர். தொல்காப்பியத்தின் களவியல் 24 ம் பாடல் எதைக் குறிக்கின்றது என்றால், தலைவியின் களவியலைப் பற்றி எவ்வாறு எல்லாம் செவிலிக்கு (தலைவியின் வளர்ப்புத்தாய்) செய்திகள் போகின்றன என்று 13 கூற்றுக்களை தொல்காப்பியர் கூறுகின்றார். ஆனால் இந்த தொல்.கள.24-ம் பாடலை எடுத்துக் கொண்டு பேயோட்டினர் என்று "திருத்தம் சரவணன்" அவர்கள் தனது கட்டுரைக்கு சுழி போட்டு ஆரம்பித்து உள்ளார். இதைத்தான் தவறு என்கிறேன்.
தொல்காப்பியர் பாடலில் குறிகேட்டளைத் தான் கூறுகின்றார் என்கிறேன் ஆனால் சரவணன் பேயோட்டல் என்கிறார்:
பேயோட்டவில்லை தலைவியின் களவியல் பற்றி செவிலிக்கு கட்டு - குறி சொல்லுதல், கழங்கு - கழற்சிக்காய் கொண்டு குறி சொல்லுதல், வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - வெறியாடல் நிகழ்ச்சியின் போது தலைவன், தலைவி நெருங்கி ஆடல் புரிந்தனர் என்றோ, வெறியாடலில் குறி கேட்டலின் போது தலைவியின் களவு பற்றித் செவிலிக்குத் தெரிகிறது என்றோ என பொருள் கூற வேண்டுமே தவிர; பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினர் என பொருள் கொள்ளல் பிழை என்கிறேன்.
என் கூற்று தவறு எனில் கூறுங்கள், இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது.
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar...@gmail.com
சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே தோன்றியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை பழந்தமிழ் மக்களின் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.
குறிசொல்லல்
தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவர், மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வுகூறும் வகையில் அமைவதே குறிசொல்லலாகும்.
‘‘தெய்வத்தின் அருள்பெற்று தன்வயமிழந்த நிலையில், ஒருவர் மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வு கூறுவதே குறிசொல்லல் எனப்படும். இதனை ‘அருள்வாக்கு’ என்றும், ‘சாமி சொல்லுதல்’ என்றும் அழைப்பர்’’(கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப. 58)
இவ்வாறு குறிசொல்லும் குறமகள் ‘கட்டுவிச்சி’ அல்லது ‘அகவன் மகள்’ என அழைக்கப்பட்டாள். இதற்குச் சான்றாக,
‘‘அகவன் மகளே! பாடுக பாட்டே
இன்னும் பாடுக! பாட்டே!’’ (குறுந். பா.எ.,35)
என்ற வரிகளும் அகவன் மகள் கையில் சிறிய கோல் கொண்டிருப்பாள் என்பதை,
‘‘வெண்கடைச் சிறுகோல அகவன் மகளிர்’’(பொ.வெ.சோமசுந்தரனார் உரை)குறுந். ப.,445) என்ற வரியின் மூலமும் அறிய முடிகிறது.
மேலும் குறிசொல்லும் பெண்களின் முன்பு நெல் வைத்துக் குறிகேட்கும் பழக்கம் இருந்ததை,
‘செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கேற்கும் ஆயன் வெற்பில்’’(பா.எ.288)
என்ற நற்றிணைப் பாடலும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.
வெறியாடல்
தமிழரின் வழிபாட்டு முறைகளில் மிகவும் பழமையானது வெறியாடலாகும். மனிதர்மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் உருவானதே இது இதனை ஆவேசம் என்றும் கூறுவர். முருகப் பெருமானின் அருளைப் பெற்று வேலினைக் கையில் கொண்டு ஆடுபவன் வேலன் எனப்பட்டான்.
இவ்வெறியாடல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு,
‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்’’(தொல்.புறத்.நூற்பா, 63)
என்ற நூற்பாவே சான்றாகும்.
மகளின் உடல் மெலிவு கண்ட செவிலி, அதன் காரணத்தை அறிய வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவாள். வேலனும் சில சடங்குகளை செய்து, முருகனே அவளின் நிலைக்குக் காரணம் என்பான்.
வெறியாடல் பெண்களும் சூளுரைத்தனர் பொய் ஆளுரைத்தாரை வருத்தக்கூடிய தெய்வம் தண்டிக்கும் என்பதை,
‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியார் தெரூஉம்’’(குறுந்., பா.எ.127)
எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.
மேலும் வெறியாட்டின் போது தெய்வத்திற்கு இட்ட படையலாகிய கதிரை அறியாது உண்ட மயில் நடுங்கியது. இதனை,
‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’’(குறுந்., பா.எ.153)
என்ற குறுந்தொகைப் பாடல் வழி அறிய முடிகிறது. இவ்வாறு வெறியாடிய களத்தில் செந்நெல்லின் பொரிகள் சிதறிக் கிடந்ததை,
‘‘வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன’’( குறுந்., பா.எ.78)
என்ற குறுந்தொகை வரிகள் வெளிப்படுத்துகின்றன.
வெறியாடலை வழிபட வந்த மகளிர் தம்முள் கைகோர்த்து குரவைக் கூத்தாடினர். இதனை,
‘சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉம் பிணையூஉ
மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி’’
(மதுரைக்காஞ்சி, 614-617வரிகள்)
மதுரைக் காஞ்சியின் வரிகள் வாயிலாகவும் அறிய முடிகின்றது.
[...]
நன்றி தேமொழி அவர்களே,
பெரியபுராணம் பாடல் ஒன்றை தந்து எனது கருத்துக்கு வலு சேர்பதாய் உள்ளது.
வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன் அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத் தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம்.
தொல்.கள.24 ம் பாடல் பற்றி என் கருத்து:
ஆக குறியோ/வரமோ கேட்பர். தொல்காப்பியத்தின் களவியல் 24 ம் பாடல் எதைக் குறிக்கின்றது என்றால், தலைவியின் களவியலைப் பற்றி எவ்வாறு எல்லாம் செவிலிக்கு (தலைவியின் வளர்ப்புத்தாய்) செய்திகள் போகின்றன என்று 13 கூற்றுக்களை தொல்காப்பியர் கூறுகின்றார். ஆனால் இந்த தொல்.கள.24-ம் பாடலை எடுத்துக் கொண்டு பேயோட்டினர் என்று "திருத்தம் சரவணன்" அவர்கள் தனது கட்டுரைக்கு சுழி போட்டு ஆரம்பித்து உள்ளார். இதைத்தான் தவறு என்கிறேன்.
தொல்காப்பியர் பாடலில் குறிகேட்டளைத் தான் கூறுகின்றார் என்கிறேன் ஆனால் சரவணன் பேயோட்டல் என்கிறார்:
பேயோட்டவில்லை தலைவியின் களவியல் பற்றி செவிலிக்கு கட்டு - குறி சொல்லுதல், கழங்கு - கழற்சிக்காய் கொண்டு குறி சொல்லுதல், வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - வெறியாடல் நிகழ்ச்சியின் போது தலைவன், தலைவி நெருங்கி ஆடல் புரிந்தனர் என்றோ, வெறியாடலில் குறி கேட்டலின் போது தலைவியின் களவு பற்றித் செவிலிக்குத் தெரிகிறது என்றோ என பொருள் கூற வேண்டுமே தவிர; பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினர் என பொருள் கொள்ளல் பிழை என்கிறேன்.
என் கூற்று தவறு எனில் கூறுங்கள், இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது.
2018-05-13 0:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருத்தம் அவர்களே,
இந்த ஒரே வரிக்கு மட்டும் பொருள் கூறுங்கள்
வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி:
சரி உங்களது வழிக்கே வருகிறேன்,
வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி இதில் முன்னர் இரண்டு வார்த்தைகள் உள்ளன. விட்டு விட்டோம் எனக் கொள்வோம்.
கட்டும் - கருத்தில் கொள்ள வேண்டாம்
கழங்கும் - கருத்தில் கொள்ள வேண்டாம்
வெறி - பேய்
என - என்று
இருவரும் - தலைவனும் தலைவியும்? இல்லை பேயும் தலைவியும்!
ஒட்டிய - நெருங்கி இருத்தல்
திறத்தான் - திறமை
செய்தி - கூற்று
கண்ணும் - இதன் பொருட்டும்
தெளிவுரை:
தலைவியும் பேயும் ஒட்டி இருக்கின்ற திறமையால் என்ற கூற்று. என்றுதானே பொருள் வருகிறது. இங்கு பேயோட்டல் எங்கு கூறப்படுகிறது? பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினாள், என்ற செய்தி உளதோ?
இதனை மேற்கண்ட வரியை வைத்து எனக்குப் பொருள் கூறுங்கள். நேரடியான பொருளாக இருத்தல் வேண்டும். கட்டுக்கதை வேண்டாம்.
மேலும் களவில் தலைவன் தலைவி தவிர தலைவி பேய் களவு பற்றி தொல்காப்பியர் பேசி இருப்பாரோ?
அருஞ்சொற்பாெருள் கூறீவிட்டீர் ஐயா. தெளிவுரையையும் கூறிடிங்களேன்.
அப்படிலாம் விட முடியாது. தொல்காப்பியத்தின் வெட்சித்திணை இருக்கு, அகப்பொருள் வெண்பாமாலை இருக்கு.அங்கெல்லாம் போகாம விடுரதா! பேயோட்டல் என்பதை சங்க இலக்கியம் கூறுதுனு தலைப்பு அல்லவா போட்டு இருக்கீங்க. ஆரய்ந்தே தீர வேண்டும்.தாங்கள் எழுதிய கட்டரையின் முதல் பாடல் மட்டும்தான் வந்திருக்கு. மிச்சப் பாடலும் ஆராயனும்.ஆகவே தயை கூர்ந்து தெளிவுரை கூறுங்கள், உங்கள் கட்டுரையின் மிச்சப் பகுதியை படிக்க வழி விடுங்கள் ஐயா!
சரவணன்,
அணங்கு என்னும் சொல்லை நான்மணிக்கடிகை யிலும் கண்டேன்.
இங்கும் பேயோட்டல் என்னும் பொருளா என்பதுதான் எனது கேள்வி. முடிந்தால் பதில் கூறுங்கள்.
மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண். 88
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
------------------------------------------------------------------எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்லஎதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டுஎதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!----------------------------------------------------------------எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.comதமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
<div class="m_-8763097377563089798m_173505209831