வெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை

2,380 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 9, 2018, 4:51:06 AM5/9/18
to

https://thiruththam.blogspot.in/2018/05/blog-post_9.html

வெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை


முன்னுரை:

வீரமும் காதலும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து என்றால் மிகையில்லை. சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் இந்த இரண்டுக்குமே முதலிடம் கொடுப்பவர்கள் தமிழர்கள். இதில் வீரம் என்பதற்கான விளக்கம் தற்காலத்தில் சற்று மாறிப்போய் இருந்தாலும் இன்னும் தமிழர்களின் உள்ளத்தில் இருந்து நீங்கவில்லை. இதற்குச் சான்றாக பல போராட்டங்களைத் தமிழக மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதைப் பார்க்கிறோம். உள்ளத்தில் வீரம் இல்லாத யாராலும் இத்தகைய போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது என்பது உலகறிந்த உண்மை. வீரம் குறையாத நம் தமிழ் மண்ணில் என்றென்றும் சாகாவரம் பெற்று விளங்கும் இன்னொரு பண்பாட்டுக் கூறே காதலாகும். 'காதல், இல்லையேல் சாதல்' என்று காதலுக்காக உயிரையும் துச்சமாகக் கருதும் இனம் தமிழ் இனம். காதலுக்காக உயிரை மாய்த்த தமிழர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இத்தகைய அளப்பரிய காதல் உணர்வு என்பது தமிழர்களுக்கு இன்று நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவருவதுதான். சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் காளையரின்மேல் கொண்ட அளப்பரிய காதலை ஏராளமான பாடல்களில் பதிவு செய்துவைத்துள்ளனர் சங்கத் தமிழ்ப் புலவர்கள்.

பருவமடைந்த ஆணும் பெண்ணும் யாருக்கும் தெரியாமல் ஒருவரையொருவர் சந்தித்துக் கண்டு மகிழ்தலைக் களவு என்று கூறுகிறது தொல்காப்பியம். இப்படிக் களவில் சந்தித்து வளர்த்த காதல் ஒருநாள் ஊர்மக்களுக்குத் தெரியவருகிறது. ஊரார் வாய்க்குவந்தபடி இவர்களைப் பேசுவதனை அலர் என்று கூறுகிறது தொக்காப்பியம். இந்த அலரை அறிந்த காதலியின் அன்னை, காதலியை வீட்டுக்குள் அடைக்கிறாள். காதலனைக் காணாத ஏக்கத்தில் காதலியானவள் பெரும் துன்பம் அடைகின்றாள்; உண்ணாமல் உறங்காமல் அழுது அழுது கண்கள் சோர்ந்த நிலையில் உடல் மெலிகிறாள். இதனைக் காமம் மெய்ப்படுத்தல் என்று கூறுகிறது தொல்காப்பியம். சிலநேரங்களில் மகளின் காதலை தாய் அறியாமல் போவதுமுண்டு. இந்நிலையில், மகளின் உடல்மெலிவையும் அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கண்டு அஞ்சுகின்ற தாய் அவள் எதையாவது பார்த்து அஞ்சியிருப்பாளோ என்று நினைக்கிறாள். குறிசொல்லும் கட்டுவிச்சியை வீட்டுக்கு அழைத்துவந்து குறிகேட்கிறாள். இக்குறியினைக் கட்டு என்று தொல்காப்பியம் கூறுகிறது. 'உன் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது' என்று கட்டுவிச்சிக் கூறுகிறாள். இதனை வெறி என்று குறிப்பிடுகிறது கீழ்க்காணும் தொல்காப்பியப் பாடல்.

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - தொல்.கள.24

பேயை ஓட்டித் தனது மகளை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பேயோட்டும் பூசாரியைத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். இப்பூசாரியை வேலன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பேயோட்டும் நிகழ்ச்சியை வெறியாட்டு, வெறியாடல் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெறியாட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாகப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வெறியாடல் - பொருள்விளக்கம்:

வெறியாடல் என்னும் சொல்லில் வரும் வெறி என்பதற்குப் பல பொருட்களை அகராதிகள் கூறுகின்றன. அவை கீழே தரப்பட்டுள்ளன.

வெறி³ vei , n. [T. verri, K. vei, M. veri.] 1. Toddy; கள். (பிங்.) 2. Drunkenness, drunken fury, intoxication; குடிமயக்கம். (W.) 3. Giddiness; மயக்கம். (W.) 4. Bewilderment; confusion, perturbation; கலக்கம். (பிங்.) 5. Madness, insanity; பயித்தியம். வெறிநாய். 6. Frenzy; மதம். 7. Anger; கோபம். (W.) 8. Quickness, hastiness; விரைவு. (அக. நி.) 9. Fragrance; வாசனை. வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57). 10. See வெறியாட்டு. (பிங்.) வெறிபுரி யேதில் வேலன் (அகநா. 292). 11. See வெறிப் பாட்டு. வேலனேத்தும் வெறியுமுளவே (பரிபா. 5, 15). 12. Savagery, wildness; மூர்க்கத்தனம். 13. Devil; பேய். (பிங்.) 14. Deity; தெய்வம். வெறி யறி சிறப்பின் (தொல். பொ. 60, உரை). 15. Sheep; ஆடு. இறும்பகலா வெறியும் (மணி. 19, 97). 16. Ignorance; பேதைமை. (பிங்.) 17. Fear; அச்சம். (பிங்.) வெறிகொளாக மாயை யாதலின் (ஞானா. 59, 5). 18. Disease; நோய். (பிங்.)

எதைப்பற்றியும் கவலையின்றி எதையோ எங்கோ வெறித்துப் பார்த்தமாதிரி அமர்ந்திருக்கும் நிலையினை வெறி என்று கூறுவர். காதல் வயப்பட்டு அது கைகூடாத பெண்களின் நிலை ஏறத்தாழ இந்நிலை தான். தன் மகளின் இந்நிலைக்குக் காதல் தான் காரணம் என்று அறியாத தாய், பேய்தான் காரணம் என்று கருதி பேயோட்ட முனைவாள். ஆக, அவளைப் பொறுத்தமட்டிலும் வெறி என்றால் பேய். வெறியாடலின் போது முருகக் கடவுளுக்குப் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட வாசனைப் பூக்களைப் பலியாகக் கொடுப்பர். இதனால் வெறி என்றால் முருகன் என்றும் வாசனை என்ற பொருளும் ஏற்பட்டது எனலாம். இதுவரையிலும் கூறப்பட்ட விளக்கங்களையெல்லாம் தொகுத்து, வெறியாடல் என்ற ஒற்றைச்சொல்லுக்கு, முருகக் கடவுளுக்கு வாசனை மலர்களைப் பலியாகக் கொடுத்து பேயோட்டுதல் என்ற விளக்கத்தைக் கொள்வது சாலவும் பொருத்தமாக அமைகின்றது.

வேலனின் தோற்றம்:

வெறியாடல் எனப்படும் பேயோட்டும் நிகழ்வினைச் செய்யும் பூசாரியை வேலன் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள். இக்காலத்தில் உடுக்கை அடித்துப் பேயோட்டும் நம் ஊர் கோடாங்கியைப் போன்றவனாக இந்த வேலனைக் கருதலாம். இந்த வேலன் என்பவன் முருகனை வழிபடும் பூசாரி ஆவான். இதற்கு அடையாளமாகத் தனது கையில் முருகனுக்குரிய வேலைப் பிடித்திருப்பான். வயது முதிர்ந்த ஒரு வேலனின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்று கீழ்க்காணும் பாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல்
ஆகுவது அறியும் முதுவாய் வேல - அகம். 195

வேலன் தன் தலையில் முண்டாசு கட்டியிருக்கிறான். அதற்கு மேல் உச்சியில் பெரிய குடுமி ஒன்று இருக்கிறது. கையில் வளைந்த கோல் ஒன்று வைத்திருக்கிறான். இந்தக் கோலின் தலையில் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒரு சிறிய பையினை இந்தக் கோலில் கட்டித் தொங்க விட்டிருக்கின்றான். நம்மூரில் குறிசொல்லவரும் கோடாங்கியும் இந்த வேலனைப்போலவே தலையில் முண்டாசு கட்டிக் கையில் கோல் வைத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி, வேலன் என்பான் முருகனுக்குரிய கடம்ப மலர்களைச் சூடியிருப்பான் என்றும் தனது கையில் உடுக்கையும் கொண்டிருப்பான் என்றும் கீழ்க்காணும் பாடல்வழி அறியமுடிகிறது. இப்பாடலில் வரும் பாணி என்பது உடுக்கையைக் குறிப்பதாகும்.

வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் - அகம். 98

இதுவரைக் கண்டதில் இருந்து, சங்ககால வேலனின் தோற்றமானது, (கடம்ப மலர்களை அணியாமல்) கையில் உடுக்கை அடித்துக் கொண்டுவரும் நமது உள்ளூர்க் கோடாங்கியைப் போலவே இருக்கும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

வேலனின் பொருட்கள்:

வேலனின் கையில் உடுக்கை இருக்கும் என்றும் இதற்குப் பாணி என்ற பெயருண்டு என்றும் மேலே கண்டோம். பாணி என்னும் சொல்லுக்குப் பாட்டு, தாளம், ஒலி என்றெல்லாம் பொருள்கூறிய தமிழ் அகராதிகள் பறை / உடுக்கை என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன. பாணன் கையில் இருக்கும் பறை / உடுக்கை போன்ற இசைக்கருவியே சங்ககாலத்தில் பாணி என்று அழைக்கப்பட்டது. வேலனும் தன் கையில் இந்த பறை / உடுக்கை போன்ற ஒன்றையே வைத்திருந்தான். இந்த உடுக்கைக்குப் பாணி என்ற பெயர் மட்டுமின்றி, கன்னம் என்ற பெயரும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களின் வழி அறியமுடிகிறது.

வேலன் கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி .. - ஐங்கு.245
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் ... - ஐங்கு. 247

மேற்காணும் பாடல்களில் வரும் கன்னம் தூக்குதல் என்பது உடுக்கையை ஒலிக்கச்செய்தலைக் குறிப்பதாகும். தூங்குதல் என்ற தன்வினைச் சொல்லுக்கு ஒலித்தல் என்ற பொருளைக் கூறிய தமிழ் அகராதிகள், தூக்குதல் என்னும் பிறவினைச் சொல்லுக்கு ஒலிக்கச்செய்தல் என்னும் பொருளைக் கூறத் தவறிவிட்டன. ஆனால், தூக்கு என்னும் பெயர்ச்சொல்லுக்கு மட்டும் இசை, தாளம் என்று பொருள்கூறி இருக்கின்றன. இதைப்போலவே கன்னம் என்ற சொல்லுக்குப் பறை / உடுக்கை என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன தமிழ் அகராதிகள். கன்னம் என்ற சொல்லுக்குப் பறை / உடுக்கை என்ற பொருள் பொருத்தமாய் அமைவதனைக் கீழ்க்காணும் அகப்பாடலின் மூலமும் அறியலாம்.

.. பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப - அகம். 317

வண்டுகள் மொய்த்து ஊதுதலால் பெரிய வாயகன்ற மஞ்சள்நிறக் கிண்ணம் போன்ற கோங்கின் மலர்களின்மேல் குரவ மலரின் சிறிய வெண்ணிற மலர்மொட்டுக்கள் உதிர்ந்து விழுகின்றன. இக்காட்சியானது, பொன்னால் செய்யப்பட்ட ஒரு வலிய பறையின்மேல் மோதிய வெள்ளியால் ஆன கோல் (பறை அடிக்க உதவுவது) ஒன்று உடைந்து பல சிறுசிறு துண்டுகளாக விழுவதைப் போலத் தோன்றியதாகக் கூறுகின்றன மேற்காணும் பாடல்வரிகள். இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமைகளின் மூலம், இப்பாடலில் வரும் கன்னம் என்பது உடுக்கை / பறையினையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

வேலனின் பொருட்களில் மேற்கண்ட உடுக்கை மட்டுமின்றி கழங்கு என்ற பொருளும் அடங்குவதாகும். இக் கழங்கு என்பதனை இக்காலத்துச் சோவி / சோழியுடன் ஒப்பிட்டுக் கூறலாம். சிலவகைச் சிப்பிகளின் மேல் ஓட்டினையே சோழி என்று அழைக்கிறோம். இக் கழங்கு என்னும் சோழியின் கீழ்ப்புறமானது தட்டையாகச் சிறிய பிளவுடன் காணப்படும். இதன் குவிந்த மேற்புறமானது பார்ப்பதற்குப் புலியின் உடலிலுள்ள புள்ளிகளைப் போலத் தோன்றும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறியமுடிகிறது.

கல் முகை வயப்புலிக் கழங்கு .... - ஐங்கு. 246

அருகில் உள்ள சோழிகளின் படம் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது. வேலன் தனது வலது உள்ளங்கையில் பல சோழிகளை அடக்கிக் குலுக்கித் தரையில் போடுவான். சோழியின் மேற்புறத்தினை மூடிய கண்ணாகவும் கீழ்ப்புறத்தினைத் திறந்த கண்ணாகவும் கொண்டு எத்தனை சோழிகள் கண் திறந்திருக்கின்றன என்று எண்ணி அந்த எண்ணிக்கைக்கு ஏற்பக் குறிசொல்வது வேலனின் வழக்கம். இவ் வழக்கத்தினை இன்றளவும் பல சாமியாடிகளும் குறிசொல்வோரும் பின்பற்றுவதை அறிவோம். தற்காலத்தில் சிலவகை விளையாட்டுக்களில் கூட இதேமுறையினைப் பின்பற்றுகின்றனர்.

வெறியாடும் களம்:

வெறியாடல் என்னும் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வெறியாடும் களம் என்று பெயர். இந்த வெறியாடல் களமானது வீட்டின் முன்புறத்தில் ஆற்றுமணல் கொண்டு அமைக்கப்படும். பொதுவாகவே சங்ககாலத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் துவங்கும் முன்னர் அந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் வீட்டிற்கு முன்னால் புதிய ஆற்றுமணலைக் கொண்டுவந்து கொட்டிப் பரப்பிச் சமமாக்கித் தளம் அமைப்பார்கள். இச் செய்தியினைப் பல்வேறு சங்கப் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. இவ்வாறு அவர்கள் செய்ததன் காரணம், வீட்டின் முன்னால் மண்தரையில் இருக்கும் மேடுபள்ளங்களைச் சமப்படுத்தவும் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சேற்றினை மூடிமறைத்துச் சீர்படுத்தவுமே ஆகும். இவ்வாறு மணல்கொண்டு அமைக்கப்பட்ட களத்தில் வெறியாடல் நிகழ்ந்ததைக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின் ...- நற். 268
வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களம்தொறும் - குறு.53
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு.....- ஐங்கு. 249

வெறியாடலின்போது பலவண்ண வாசமலர்களை முருகக் கடவுளுக்குப் பலியாகத் தூவுவான் வேலன். இதனால் அந்த வெறியாடல் களம் முழுவதிலும் வண்ணவண்ணப் பூக்கள் ஆங்காங்கே பரவிக் கிடந்து பார்ப்பதற்குப் பூத்துக் குலுங்கும் ஒரு பூக்காடு போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலன் வெறிஅயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் - அகம். 114.

வெறியாட்டின்போது பலவண்ணப் பூக்களைப் பலியாகக் கொடுத்தாலும் முருகனுக்குப் பிடித்தமான செந்நிறக் கடம்ப மலர்களை மிகுதியாகத் தூவுவான் வேலன். இதனால் வெறியாடும் களத்தில் குருதிநிறப் பூக்கள் அதிகம் காணப்படும். இதனை அழகான ஒரு இயற்கை நிகழ்வுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்வரிகள்.

தீயின் அன்ன ஒண் செங்காந்தள்            
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்        
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் - மலை.150

செந்தீயைப் போன்று சிவப்புடன் விளங்கிய செங்காந்தளின் பெரிய மலர்முகையினை இறைச்சித்துண்டு என்று தவறாகக் கருதிய கழுகு ஒன்று அதைக் கால்களால் பறித்துச் சென்றது. மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு தனது அலகினால் அதைக் குத்தவும் அது இறைச்சி இல்லை என்று தெரியவர உண்ணாமல் அதைக் கைவிட்டது. அப்போது மரத்தின் மேலிருந்து உதிர்ந்த அந்த செங்காந்தள் மலரின் இதழ்கள் நிலத்தில் பரவிக் கிடக்க அதைப் பார்ப்பதற்கு வேலனின் வெறியாடும் களம் போலத் தோன்றியதாகக் கூறுகிறார் புலவர். என்ன ஒரு உவமை !.

வெறியாட்டும் முறை:

கழங்குகளைக் கொண்டு கோட்டம் பார்த்து தலைவியின்மேல் அணங்கு அதாவது பேய் இறங்கியிருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்த பிறகே வெறியாட்டுவதற்கான ஏற்பாடுகளை வேலன் செய்யத் துவங்குவான். முதலில் வெறியாடுவதற்கான களத்தினை அமைத்த பின்னர் தனக்கு முன்னால் தலைவியை அமரச்செய்வான். இக்காலத்தில்கூட கோடாங்கியானவர் பேய் பிடித்திருப்பவர்களைத் தன்முன்னால் அமரவைத்து உடுக்கையினை அடித்துப் பேயோட்டுவதைப் பார்க்கிறோம். தலைவிக்குப் பிடித்திருக்கும் பேயினை முருகக் கடவுளின் உதவியால் ஓட்டச் செய்யவேண்டி முதலில் முருகக் கடவுளைத் தனக்குள் இறங்கச் செய்வான். இதற்காக முருகனுக்குப் பிடித்தமான கடம்பு, காந்தள் போன்ற செந்நிற நறுமண மலர்களைத் தானும் அணிந்து கொள்வான். பின்னர் முருகனுக்குப் பல்வேறு பொருட்களைப் பலியாகக் கொடுக்கத் துவங்குவான். பலவித உணவுப் பொருட்களையும் மலர்களையும் அரிசி, தினை முதலானவற்றையும் பல சிறிய பிரம்புக் கூடைகளில் வைத்துக் கடவுளுக்குப் பலியாகக் கொடுப்பான். இதைப் பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு - குறு. 362
பல்பிரப்பு இரீஇ அறியா வேலன் தரீஇ - அகம். 242

முதலில் முருகனுக்குகந்த செந்நிற மலர்களை நீரொடு தூவி வணங்குவான். பின்னர் உயிர்ப்பலியைக் கொடுக்கத் துவங்குவான். சிறிய இளைய ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து அதன் குருதியினை முருகனுக்குப் பலியாகக் கொடுப்பான் வேலன். தான் கொல்லப்படப் போவதை அறியாமல் இலைகளைத் தின்றுகொண்டிருப்பதும் தாயிடம் பால்கூடக் குடிக்காத பச்சிளம் குழந்தையுமான ஆட்டுக்குட்டியினைப் பலிகொடுப்பதைப் பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மென்முறி சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ மறி கொலைப்படுத்தல் ... - அகம். 292
பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு சிறுமறி கொன்று - குறு.362
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து .. - நற். 47

இக்காலத்தில் ஆட்டுக்குட்டிக்குப் பதிலாகச் சேவல் கோழியைப் பலிகொடுக்கின்றார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியாக அறுத்த வேலன் அதன் குருதியினைச் செந்நெல், அரிசி, செந்தினை போன்றவற்றுடன் கலந்து அவற்றையும் முருகனுக்குப் பலிப்பொருட்களாகத் தூவுவான். இதைப்பற்றிக் கூறும் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய்      - அகம். 22 

பலிகொடுத்த ஆட்டுக்குட்டியின் குருதியினைத் தொட்டு முருகனை வணங்கிக்கொண்டே பேய்பிடித்திருக்கும் தலைவியின் நெற்றியில் பூசி அவளைப் பிடித்திருக்கும் பேயினை விலகியோடுமாறு ஆணையிடுவான். இதுபற்றிய பாடல் ஒன்று கீழே:

சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் .... - குறு. 362

பின்னர் வேலன் உடுக்கையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அடிக்கத் துவங்குவான். அடிக்க அடிக்க அந்த உடுக்கை ஒலியில் பேய் பிடித்தவர்கள் மனம் ஒருநிலைப்பட்டுச் சாமியாடத் துவங்குவர். இக்காலத்தில் கோடாங்கி பேயோட்டும்போது பேய்பிடித்தவர்கள் தன் தலையினையும் உடலையும் பம்பரம் போலச் சுழற்றியவாறு ஆடுவர். இப்படிச் சாமியாடுவது இக்காலத்தில் மட்டுமல்ல சங்க காலத்திலும் உண்டு. வெறியாடலின்போது பெண்கள் சாமியாடிய விதத்தினைச் சில உவமைகளின் வழியாகக் கீழ்க்காணும் பாடல்களில் கூறியுள்ளனர்.

முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல
தாவுபு தெறிக்கும் ஆன் .. - புறம். 259

வெறியாடலின்போது சாமியாடும் பெண்ணைப் போல மாடானது தாவித் துள்ளிக் குதித்ததாக மேற்பாடல் கூறுகிறது. கடவுளுக்குப் படைத்தத் தினையினை அறியாது உண்ட மயிலொன்று வெறியாடலின்போது வெறிகொண்டு ஆடும் பெண்ணைப் போல ஆடியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கடி உண் கடவுட்கு இட்ட செழும்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறிவுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்..  - குறு.105

முடிவுரை:

சங்க காலத்தில் நடைபெற்ற வெறியாடல் நிகழ்வினைப் பற்றிய பல செய்திகளை மேலே விரிவாகக் கண்டோம். இந்த வெறியாடல் நிகழ்வானது இரவுநேரத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடலின் மூலம் தெரிய வருகிறது.

உருவ செந்தினை குருதியொடு தூஉய்       
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள் - அகம். 22

இக்காலத்திலும் பேயோட்டும் நிகழ்வானது இரவுநேரத்தில்தான் நடைபெறுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இக்கட்டுரையில் பாணி, கன்னம், தூக்குதல் ஆகிய சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் கூறாத புதிய பொருட்கள் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழ் அகராதிகளில் சேர்ப்பதன் மூலம் பழந்தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பல வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அவற்றை விரைந்து சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை இக் கட்டுரை முன்மொழிகிறது.

*************** வாழ்க தமிழ் ! *********************




--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 10, 2018, 12:40:28 AM5/10/18
to mintamil

2018-05-10 9:12 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?

அப்படி ஒரு கருத்தும் இருப்பதாகவே தோன்றுகின்றது. இதோ கீழே:

2.8.2 வெறியாட்டு

வெறி - வள்ளிக் கூத்து ; ஆட்டு - ஆட்டம். ஆடுவோர், மறவரின் மனைவியர், ஆகோள் வினை (ஆநிரை கவர்தல்).நன்கு முடிய வேண்டி, முருகனின் வேலினைக் கையகத்தே கொண்ட வெறியாடுபவனுடன் வள்ளியைப் போல வேடம் பூண்டு ஆடும் ஆட்டம் ஆதலின், வெறியாட்டு எனப் பெயர் பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் பின்னர்ப் புரிய இருக்கும் போர்வினையை வெற்றியில் முற்றுவிக்கும் பொருட்டு, மறத்தியராம் மனைவியர்கள் வள்ளியைப் போல் வேடம் புனைந்து தெய்வம் ஏறப் பெற்ற வேலன் என்பானுடன் சேர்ந்து ஆடுவது வெறியாட்டு என்னும் துறையாம்.

வால்இழையார் வினைமுடிய
வேலனொடு வெறியாடின்று.




 ஆகக்கூடி வெறியாட்டு என்பது வேலனுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. இக்கட்டுரையானது பேயோட்டும் முறையைப் பற்றியது என்பதால்தான் தலைப்பில் அவ்வாறு கூறினேன். நன்றி. :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 10, 2018, 1:14:43 AM5/10/18
to மின்தமிழ்
பொன்னியின் செல்வன்  கதையில் வரும் ஒரு வெறியாட்டு காட்சி 

பொன்னியின் செல்வன் 
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
புது வெள்ளம்: குரவைக் கூத்து

[...]

குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.

பின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த இரத்த நிறமுள்ள செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.

முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது. மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக் கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான்; தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதிகுதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.

பிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசுர கணங்கள் தவிடுபொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கைவேலைக் கீழே போட்டான்.

இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்று விட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. "சந்நதம் வந்து விட்டது" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, " வேலா! முருகா! தேவசேநாபதி! கந்தா! சூரசம்ஹாரா! அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டான்.

"கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சந்நதம் வந்தவன் கூவினான்.

"மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?" என்று பூசாரி கேட்டான்.

"மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!..." என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான்.

"என்ன பலி வேண்டும்?" என்று பூசாரி கேட்டான்.

"கேட்டால் கொடுப்பீர்களா?" என்றான் வெறியாடியவன்.

"கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்! என்றான் பூசாரி.

"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!" என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்.

மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.

சம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.

பூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம் போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.

சபை மௌனமாகக் கலைந்தது


[...]

Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 10, 2018, 2:21:49 AM5/10/18
to mintamil
இசையினியன் ஐயா

தொல்காப்பிய நூற்பாவில் வரும் வெறி என்பது குறிசொல்லுதல் அல்ல; அது அணங்காகிய பேயைக் குறிக்கும்.

கட்டுரையை நன்கு ஊன்றிப் படித்துப் பாருங்களேன். :))

2018-05-10 11:37 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

அப்படி என்றால் வெறியாடல் என்பது பேயோட்டுவது அல்ல.

கள்வரின் வெறியாடல்:

பகை மன்னரை போருக்கு அழைத்தலின் பொருட்டு, ஆநிரைக்கள்வர் கால்நடைகளை கவர்தல் எனும் தொழில் சிறப்புர போருக்குச் செல்லும் கள்வரின் மனைவி வள்ளியாகவும், கள்வர் வேலனாகவும் இருந்து ஆடும் ஆட்டம் வெறியாடல் எனக் கொள்ளலாமா?

மறவரின் வெறியாடல்:

கள்வர் ஆநிரையைக் கவர்ந்த பின்னர் மறவர் கூட்டம் போருக்குச் சென்று வெற்றி பெற்று வந்ததும், மறவர் வேலனாகவும், மறத்தி வள்ளியாகவும் ஆடும் ஆட்டம் வெறியாடல் எனலாம். சரிதானே!

வெறியாடலின் போது குறிகேட்டல்:

வெறியாடலின் போது வேலனிடம்  அதாவது வேலன் வேடம் பூண்ட  கள்வர், மறவரிடம் குறிகேட்கும் நிகழ்ச்சி நடைபெரும்! அப்போது செவிலித்தாய் தன் வளர்ப்பு மகளான தலைவியின் உடல் மெலிதல் பற்றி கேட்பதால், தலைவியின் களவு, காதல் தெரிந்துவிடுகிறது சரியா?

வெறியாடலில் பேய் எங்கே:

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வெறியாடலில் பேய் எங்கு வந்தது? சற்று. விளக்குங்களேன்.

தொல். களவு 23 ம்பாடல்:

செவிலிக்கு தலைவியின் காதல் குறிசொல்லுதல் எனும் கூற்றால் தெரிய வருகிறது. கட்டு, கழங்கு, வெறி என்பன குறிசொல்லுதலின் முறை என்றே தோன்றுகிறது. 

ஆனால் தங்களின் கருத்தான பேயோட்டும் முறை எனப்படுவதாகத் தெரியவில்லை. பேய் என்ற கருதுகோள் தொல்காப்பியத்தில் களவியலில் 23ம் பாடலில், தலைவன் தலைவியின் களவியல் நடக்கு சமயத்தில் செவிலிக்குச் சேரும் கூற்றுகளாக உள்ள பாடலில், எங்கே பேய் வந்தது என எனக்கு விளங்கவில்லை ஐயா, விளக்கம் தந்தால் தெரிந்து கொள்கிறேன்.


---


குறிசொல்லும் கட்டுவிச்சியை வீட்டுக்கு அழைத்துவந்து குறிகேட்கிறாள். இக்குறியினைக் கட்டு என்று தொல்காப்பியம் கூறுகிறது. 'உன் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது' என்று கட்டுவிச்சிக் கூறுகிறாள். இதனை வெறி என்று குறிப்பிடுகிறது கீழ்க்காணும் தொல்காப்பியப் பாடல்.

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்


அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும்


கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்


ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - தொல்.கள.24


பேயை ஓட்டித் தனது மகளை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பேயோட்டும் பூசாரியைத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். இப்பூசாரியை வேலன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பேயோட்டும் நிகழ்ச்சியை வெறியாட்டு, வெறியாடல் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெறியாட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாகப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Message has been deleted
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 10, 2018, 4:26:13 AM5/10/18
to mintamil
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - தொல்.கள.24


கட்டினாலும் கழங்கினாலும் முறையே கட்டுவிச்சி, வேலன் ஆகிய இருவரின் திறத்தினால் அன்னை அறிந்துகொள்ளும் செய்தி: மகளுக்கு வெறி அதாவது பேய் பிடித்திருக்கிறது.  இதுதான் இதன் பொருள்.

நீங்கள் கட்டுரையை முழுதும் படித்திருந்தால் இந்த ஐயமே வந்திராது என்பது என் எண்ணம். :))




2018-05-10 12:46 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
நான் கட்டுரை உள்ளே இன்னும் புகவில்லை ஐயா, தொல்.களவியல் 24ம் பாடலியேயே இருக்கிறேன். அதாவது தங்களின் கட்டுரையின் ஆரம்பத்தில் நின்றுவிட்டேன்.


கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்

ஒரே வரி. குறித்துக் கொள்ளுங்கள் ஒரே வரி.


இவ்வரியை எடுத்துக் கொள்க.

கட்டினும் என்றால் கட்டுவிச்சி கொண்டு குறி கேட்டல்,
கழங்கினும் என்றால் கழங்குக் காய் கொண்டு குறிகேட்டல்

சரியா? இரண்டுமே ஒரே மாதிரிப் பொருள் தருகிறது? அதனைத் தொடர்ந்து

வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்" என்பதன் முழுப்பொருள் தேவைப்படுகிறது. தாங்களே கூறுங்கள்.

இந்த மூன்று நிகழ்ச்சியின் போதும், தலைவியின் களவு, காதல் பற்றி செவிலிக்கு செய்திகள் சொல்லப்படும் என்கிறார் தொல்காப்பியர்.


தாங்கள் எனக்கு "வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும்" என்பதன் முழுப்பொருள் மட்டும் கூறுங்கள் ஐயா.
Message has been deleted

N. Ganesan

unread,
May 10, 2018, 10:37:19 AM5/10/18
to மின்தமிழ்


On Wednesday, May 9, 2018 at 8:42:21 PM UTC-7, இசையினியன் wrote:
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?

வெறி என்பது fanaticism, பேய் என்ற பொருள். Fanatic என்பது ஆங்கிலத்தில் Fan எனச் சுருங்கிற்று. எம்ஜிஆர் விசிறி என பத்திரிகைகள் தவறான மொழிபெயர்ப்பைத் தந்தன.
ஆனால், Fan என்பதற்கு வெறிஞன் சரியான மொழிபெயர்ப்பு. தமிழ்.நெட் காலத்தில் குறிப்பிட்டேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 10, 2018, 10:51:43 AM5/10/18
to மின்தமிழ், vallamai
2018-05-09 23:21 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
இசையினியன் ஐயா

தொல்காப்பிய நூற்பாவில் வரும் வெறி என்பது குறிசொல்லுதல் அல்ல; அது அணங்காகிய பேயைக் குறிக்கும்.


வெறியாடல் என்பது அணங்காடலே. அணங்குப் பேயைக் கட்டுப்படுத்தலுக்கான தமிழர் சமயம்
மிகப் பழையதானது. இது பற்றி, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் 1960களில்
சங்க இலக்கியம் பற்றிய முதல் ஆய்வுகள் நடந்தன. அப்போது வெளியான தமிழ்ச் சமயம், சமூகம்
செய்திகள் குறித்து எழுதியுள்ளேன். சங்க இலக்கியம் காட்டும் அச் சமயம் பனிப்பாறையின் நுனி.
அதன் பின்னர் தான் வேதம், வர்ணாசிரமம் அடிப்படையிலான மேட்டிமைச் சமயம் உருக்கொண்டது.
இந்தியாவின் அடிப்படையான சமயம் அணங்கும் அதன் ஆடலும் தான்.

நம்மாழ்வார் அணங்குப் பேயாடலுக்கும் பெருஞ்சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பதிகமே
பாடி விளக்கியுள்ளார். 


On Wednesday, May 9, 2018 at 8:42:21 PM UTC-7, இசையினியன் wrote:
வெறியாடல் என்பது போருக்குப் பின் வெற்றி பெற்ற மறவர் கொற்றவை முன் ஆடும் ஆட்டம் என எண்ணி இருந்தேன், இது தவறா?

Message has been deleted

வேந்தன் அரசு

unread,
May 10, 2018, 9:19:58 PM5/10/18
to vallamai, மின்தமிழ்


10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
சரியாக மொழிபெயர்க்கணும் என்ற கட்டாயம் இல்லை. அதை இடுகுறியாகக்கொள்க, வீளையர் எனவும் சொல்லலாம்.(விசிலடிச்சான் குஞ்சுகள்)


 
ஆனால், Fan என்பதற்கு வெறிஞன் சரியான மொழிபெயர்ப்பு. தமிழ்.நெட் காலத்தில் குறிப்பிட்டேன்.

நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சேது

unread,
May 10, 2018, 11:51:44 PM5/10/18
to மின்தமிழ்
நாலாயரத்திவ்யப்பிரபந்த த்தில் திருமாலைச்சுவையன் என்பார். விசிறிக்குப்பதில்  சுவையன் பொருத்தமாக  இருக்கும்..
Message has been deleted
Message has been deleted

தேமொழி

unread,
May 12, 2018, 3:00:53 PM5/12/18
to மின்தமிழ்

பெரிய புராணம்

660.
வாரணச் சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத் 
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப் 
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப் 
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை, 

(இதன் பொருள்) வெளிப்படை. அந்நெறியிலே சேவற் கோழிகளையும் வரிகளையுடைய மயில்களையும் காணிக்கையாக விட்டும், தோரணமாக மணிகளைத் தொங்க வைத்தும், வண்டுகள் மொய்க்கும் அழகிய கடப்ப மாலைகளைத் தொங்கவிட்டும், போரில் வல்ல அழகிய நீண்ட வேலேந்திய முருகப் பெருமானுக்குப் புகழ் புரியும் குரவைக் கூத்தாடப் பெரிய அணங்காடல் செய்வித்தும் பெருவிழா எடுத்துச் செய்த பின்னர்,


[...]

அணங்காடல் - வெறியாடல் செய்து முருகனை ஆவேசித்துவர வழைத்தல். "வேலன் றைஇய வெறியயர்களனும் "திருமுருகாற்றுப்படை.
"வெறியாட றான்விரும்பி வேலன்வருகென்றாள்", "மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்" (குன்றக்குரவை) என்ற சிலப்பதிகாரமுங் காண்க. இவ்வெறியாட்டில் பயின்றவன் வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன் அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத் தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம். இதற்கு இவ்வாறன்றி

அணங்கு - பெண் என்று கொண்டு, பெரிய தேவராட்டியை வெறியாட்டயர்வித்து என்றும், தேவராட்டி சன்னதம் வந்து சொல்லி என்றும் உரைப்பினுமமையும். ஆடல் செய்து சன்னதம் சொல்லி, அதனாற் பெருவிழா எடுத்தபின் என்று உரைப்பாரு முண்டு.

[...]

______________

On Saturday, May 12, 2018 at 11:31:38 AM UTC-7, இசையினியன் wrote:

கணேசன் ஐயா அவர்களுக்கு,

நம்மாழ்வார்

அப்பதிகத்தை அறியத் தாருங்கள் ஐயா?!

தாங்கள் அணங்கு என்றால் பேய் எனச் சொல்கிறீர், ஆனால் எனக்குத் தெரிந்தவரை அணங்கு என்றால் தெய்வப்,அழகிய பெண் என திருக்குறள் உரைகள் கூறுகின்றன. ஆனால் தாங்களோ வெறியாடலை அணங்குஆடல் என்கிறீர்.

முதல் குறள்:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918

மு.வ உரை:

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

இரண்டாம் குறள்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081

மு.வ உரை:

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

சரி, மீண்டும் விசயத்துக்கு வருவோம்,

வெறியாடலில் போர்போன்ற ஆட்டம் ஆடுவர் என்பர். ஆனால் தாங்கள் கூறிய படி வெறியாடல் என்றால் அணங்காடல் எனக்கொண்டால் தெய்வப்பெண் அ அழகியபெண் ஆடுவரோ எனத் தோன்றுகிறது. தெய்வப்பெண் ஆடும் ஆட்டம் உக்கிர தாண்டவமாக இருக்குமோ என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

---

நம்மாழ்வார் அணங்குப் பேயாடலுக்கும் பெருஞ்சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பதிகமே பாடி விளக்கியுள்ளார்

--

N. Ganesan

unread,
May 12, 2018, 6:39:31 PM5/12/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-05-12 11:31 GMT-07:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

கணேசன் ஐயா அவர்களுக்கு,

நம்மாழ்வார்

அப்பதிகத்தை அறியத் தாருங்கள் ஐயா?!

தாங்கள் அணங்கு என்றால் பேய் எனச் சொல்கிறீர், ஆனால் எனக்குத் தெரிந்தவரை அணங்கு என்றால் தெய்வப்,அழகிய பெண் என திருக்குறள் உரைகள் கூறுகின்றன. ஆனால் தாங்களோ வெறியாடலை அணங்குஆடல் என்கிறீர்.

அன்பின் பிச்சைமுத்து ஐயா,

அணு- என்ற சொல் இந்தியா முழுதும் உள்ளது. அணுக்கு-/அணுங்கு- (அணக்கு-/அணங்கு-) இந்தியாவின் பழைய சமயம் அணங்கு வழிபாடுதான். 
வருத்துதல், பொடியாக்குதல் என்பது அடிப்படைப் பொருள். தாக்கணங்கு என்றால் தாக்கும் அணங்கு (குறள்). சங்க காலச் சமயமும்,
அதனால் அதற்கும் முந்தைய வேளாண் சமுதாயத்தின் சமயமும் இச்சொல்லோடு தொடர்புடையன எனலாம். அடும்பங்கொடி
அடம்பங்கொடி என்போம் அதுபோல், அணுங்குதல் அணங்குதல். ண ன ஆதலை ‘பல்லவம் அனுங்க’ என்பான் கம்பன். அனங்கன்
என்று மன்மதனுக்கு சம்ஸ்கிருதப் பேரும் அணக்குதலால் வரும்

அணு என்ற சொல்லின் தோற்றம் இதனில் உண்டு. வடமொழியில் இயங்கும் தமிழ்ச்சொல் இஃது. கணாதரின் அணுக் கோட்பாடு: 

அனங்கன் என்று காமவேளின் பெயரும் உருவாவது அணங்கினாலே தான் (ஜி. யு. போப்).
அணுங்குதல் = அழுங்குதல். அழுங்கு (அ) அணுங்கு என்னும் Indian Pangolin.  இதனை மலசர் பதிகளில் பிடித்து வைத்திருப்பர்.
எங்கள் தோட்டங்களில் சிறுபருவத்தே அவர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளேன். புற்றுகளை அணுக்குதலால் ஏற்படும் பெயர்.



கற்பனா மிருகமாகிய யாளியின் குட்டிக்கும் இலக்கியத்தில் அணங்கு எனப் பெயர் வரும்.
அணங்கு : சொல்லாய்வு http://www.vallamai.com/?p=53239

I will give some entries from MTL, please think thru' these vocabulary.
அணங்கயர்-தல் aṇaṅkayar-

, v. intr. < அணங்கு + அயர்¹-. To celebrate a festival; விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் (பெரியபு. திருக்குறி. 7).

அணங்காடு-தல் aṇaṅkāṭu-

, v. intr. < id. + ஆடு-. To dance under the influence of a deity; தெய்வமாவேசித்தாடுதல். அணங்காடுதலன்றந் தோ (திவ். திருவாய். 4, 6, 5).

அணங்கியோன் aṇaṅḳiyōṉ

, n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182).

அணங்கு¹-தல் aṇaṅku-

, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).

அணங்கு² aṇaṅku

, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).

அணங்குதாக்கு aṇaṅku-tākku

, n. < id. +. Possession by a demoness of lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)

------------------

தமிழை நன்கு படித்து சிந்திப்போம். இந்தியா முழுதும் இருந்த தமிழ்/திராவிட மொழிகள் எவ்வாறு மிகக் குறுகிப் போயின. சமயம் எவ்வகையில் அதற்குப் பயன்பட்டது என ஒருவாறு விளங்கும். சென்ற நூற்றாண்டில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் அறிவித்து, அரசாங்கமே நடைமுறைப்படுத்திய திருவள்ளுவர் தொடர்ஆண்டு பற்றிய சான்றாவணங்களைப் பாருங்கள்.


NG
 

முதல் குறள்:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918

மு.வ உரை:

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

இரண்டாம் குறள்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081

மு.வ உரை:

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

சரி, மீண்டும் விசயத்துக்கு வருவோம்,

வெறியாடலில் போர்போன்ற ஆட்டம் ஆடுவர் என்பர். ஆனால் தாங்கள் கூறிய படி வெறியாடல் என்றால் அணங்காடல் எனக்கொண்டால் தெய்வப்பெண் அ அழகியபெண் ஆடுவரோ எனத் தோன்றுகிறது. தெய்வப்பெண் ஆடும் ஆட்டம் உக்கிர தாண்டவமாக இருக்குமோ என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

---

நம்மாழ்வார் அணங்குப் பேயாடலுக்கும் பெருஞ்சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பதிகமே பாடி விளக்கியுள்ளார்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Message has been deleted

தேமொழி

unread,
May 13, 2018, 2:52:15 AM5/13/18
to மின்தமிழ்
வெறியாடல் குறித்து பேராசிரியர் ஒருவரது கட்டுரை 



11 ஆகஸ்ட் 2011

பேராசிரியர் அ.பாண்டுரங்கன் 

சங்க இலக்கியங்களில் வெறியாடல்

    சமயம் பற்றி மானுடவியல் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. ஒவ்வொருவரும் தாம் மேற்கொண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் சமயத்தை விளக்க முயன்றுள்ளனர். மானுடவியல் அறிஞரான எமில் துர்க்கைம் என்பார் ‘சமயம் என்பது சமூகம் சார்ந்த ஒரு நிறுவனமாகும்; மக்கள் தங்களுக்குரிய நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளை யும் வழிபாட்டு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமயங்களைக் கட்டமைக்கின்றனர்’ என்பர். எட்வர்ட் பர்ணட், டைலர், ஜேம்ஸ் ஜார்ஜ், பிரேசர் போன்ற மானுடவியலாளர்கள் சமயத்தை ‘மனித மனத்தைச் சார்ந்தது’ என்று விளக்குகின்றனர். இராபர்ட் லோவி, எப்.மலினாவிஸ்கி, சிக்மண்ட் பிராய்டு, விக்டர் டார்னர், கிளிப்போர்டு, ராட்கிளிப் பிரவுன் போன்றோரும் சமயத்தைச் ‘சமூகம் சார்ந்தது’ என்று விளக்குகின்றனர்.

இன்று சமயம் என்று நாம் கருதும் கருத்தமைப்பு ஒரு நிறுவனமாகும். அந்நிறுவனம் புனிதச் சடங்குகளை ஒருங்கிணைத்து அதற்கு ஒரு தெய்வத்தைப் படைத்து, அந்நிறுவனத்தைச் சார்ந்த மக்கள் கூட்டம் தமக்கெனச் சில வழிபாட்டு முறைகளையும் நடத்தை முறைகளையும் வகுத்துக் கொண்டு, அது வகுத்துக் கொண்ட நெறிமுறைகளுக்கு இசைவாக நடந்து கொள்வதாகும். அதன் நடத்தை விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டியவை; அவ் விதிகளை மீறி நடப்பவர்கள் அச்சமயக் குழுவிலிருந்து விலக்கப் பெறுகின்றனர் அல்லது தள்ளிவைக்க பெறுகின்றனர். இந்நிறுவனத்தைத் தோற்று வித்து அதற்குத் தலைமை தாங்குபவராக; வழிநடத்துபவராக வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் அமைகின்றார். யூதம், கிறித்தவம்; இஸ்லாம், பௌத்தம், சமணம் போன்ற சமயங்கள் அச்சமயங்களைத் தோற்றுவித்த வரலாற்று மனிதரை நமக்குத் தெரிவிக்கின்றன. இச்சமயங்கள் ஒரே ஒருவரைக் கடவுளாகக் கொண்டு ஏகத்துவத்தை வற்புறுத்து கின்றன.

இந்து சமயம் என்று நாம் கொண்டுள்ள கருத்தமைப்பு இதற்கு நேர்மாறானதாகும். உண்மையில், இது ஒரு சமயம் அன்று. மாறாக, இது சில வாழ்வியல் நடத்தைகளின் தொகுப்பு ஆகும். யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம் போன்றவை வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த ஒருவரால் நிறுவப்பட்ட சமய நிறுவனங்களாகும். ஆனால், இந்து சமயம், சநாதன தர்மம், அதாவது, அது என்று தோன்றியது? அதனைத் தோற்று வித்தவர் யார்? போன்றவற்றை விளக்க இயலாத-வரலாற்றுக்கு முற்பட்ட- காலத்திற்குரியதாக அது கருதப்படுகின்றது. அது காலந்தோறும் காலத்தின் தேவைக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளதால், இத்தனைப் பல்கடவுட் கோட்பாட்டுச் சமயம் என்பர். இவ்விரண்டுமே இயல் உலகிற்கு அப்பாற்பட்ட பொருள்களை ஆராய்கின்றன. அதாவது, உலகம் எவ்வாறு தோன்றியது? அதனைத் தோற்றுவித்தவர் யார்? உலகில் காணப்படும் பொருள்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுகள் யாவை? தோன்றிய பொருள்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றன என்றால் அவை எங்கே போய்ச் சேர்கின்றன? அவை மீண்டும் பிறக்கின்றனவா? அப்படிப் பிறக்கும் போது அவை எத்தன்மையுடன் பிறக் கின்றன? என்பன போன்ற பல வினாக்களை ஆராய்வது சமயம் ஆகும். சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் போன்ற கருத்தாக்கங்களும் சமயம் என்னும் சொல்லுக்குள் புதைந்துள்ளன.

‘தொல்சமயம்’ என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். உண்மையில், அதனைச் ‘சமயம்’ என்று கூறுவதே பிழையாகும். நாம் ஆதிச் சமூக மக்களின் நடத்தை முறைகளை விளக்குவதற்காகவே, தொன்மையோடு சமயத்தை யும் சேர்த்துத் ‘தொல் சமயம்’ என்கின்றோம். உண்மையில் புராதன மக்களிடம் மறு உலகம் பற்றிய நம்பிக்கையோ கோட்பாடோ இருந்ததாகத் தெரியவில்லை. அறிவு வளர்ச்சி குன்றியிருந்த நிலையில் அவர்கள் இயற்கையில் காணும் ஒவ் வொரு பொருளும் தம்மைப்போல் உயிர்ப் பாற்றலை பெற்றிருப்பதாகக் கருதினர். அவ்வுயிர்ப் பாற்றலைத் தம் வசப்படுத்திக் கொண்டு தம் வாழ்க்கையை வளமுறச் செய்வதற்காகப் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட அந்நடவடிக்கைகளையே நாம் ‘தொல் சமயம்’ என்று வரையறுத்துக் கூறுகின்றோம்.

பூசாரியம்:

இனக்குழுக்கள் சிலவற்றில் பூசாரி என்பவர் மிகப் பெரும்பங்கு வகித்துள்ளார். ‘பூசாரி’ என்னும் சொல் பூசை செய்பவர் என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இதனை வடசொல் என்பர். ஆனால், வடமொழியிலுள்ள பூஜை என்னும் சொல்லே திராவிட மொழிகளிலுள்ள ‘பூ செய்’ என்பதிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல் என்று வடமொழியிலும் வல்லுநர்களான எமினோ, பர்ரோ ஆகியோர் கூறுகின்றனர். இன்றும் கிராமதேவதை வழிபாட்டில் ‘பூச் சொரிதல் என்பது ஒரு முக்கியமான சடங்காகத் திகழ்கின்றது. திருமுருகாற்றுப்படை முருகனுக்குப் பூச்சொரிதலைக் ‘கொழுமலர் தூஉய்’ என்று சுட்டியுள்ளது. உக்கிரமான தேவதைக்கு உயிர்ப்பலி கொடுப்பதோடு பூச்சொரிதலும் நடைபெறு கின்றது. பூச்சொரிகின்றவன் ‘பூசாரி’ என்று கருதப் பட்டான் என்பது மேலாய்விற்குரியது.

வேதங்கள் குறிப்பிடும் யாகங்களில் உயிர்ப்பலி இருந்தது. ஆனால், திராவிடர்களின் வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுத்தலோடு பூப்பலி செய்தலும் பெரும் வழக்காக இருக்கின்றது. வழிபடும் பொருளுக்கும் வழிபடுபவனுக்குமிடையில் ஓர் இடைத்தரகராக அல்லது இணைப்பாளராகப் பூசாரி விளங்குவதைக் காண முடிகின்றது.

சங்க இலக்கியங்களில் பூசாரியின் பாத்திரம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகனு டைய பூசாரியான ‘வேலன்’ முருகனின் ஆயுதமான வேலைத் தாங்கி ஆடுவதால், அவன் ‘வேலன்’ எனப் பெறுகிறான். முருகனை அழைத்து அவன் புகழைப் பாடிக்கொண்டு வரும்போதே அவன் ஒரு வகையான மருளுக்குள்ளாகிறான். முருகு அவன் மேல் ஆவேசித்ததாகக் கருதப்படுகின்றது. அந் நிலையில், அவன் வேலைக் கையில் தாங்கி மருளோடு ஆடுகின்றான்; இறுதியில், முருகனின் அருட்பிரசாதமாக பலியாக முருகனுக்குப் படைக்கப்பட்ட பூக்களைத் தருகின்றான். இது ஒரு சாந்தி வழிபாடாகத் தோன்றுகின்றது.

முருகனுடைய பூசாரியான வேலன் நடத்தும் இம்மருளாடல் வெறியயர்தல், வெறியாடல், வெறியாட்டு எனச் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பட்டுள்ளது. ‘வெறி’ என்னும் சொல்லே ‘மணம்’ என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டா, குவி, பிராகூய் போன்ற பல திராவிட மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது. கோண்டா மொழியில் இச்சொல் ‘வெறி ஆ’ என வழங்கு கின்றது. மானுடவியலாளர் குறிப்பிடும் சாமனிசத்தோடு தொடர்புடையதாக இச்சொல் கோண்டா மொழியில் இன்றும் வழங்குவது குறிப்பிடத்தக்கது. வேலன் வெறியாடலும் சாமனிசத்தை நினைவூட்டுகின்றது.

மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்றவை தீண்டித் துன்புறுத்துவதாகப் பழந்தமிழ் மக்கள் நம்பினர். சூர், அணங்குகள் போன்றே திருமணமாகாத கன்னிப் பெண்களை முருகனும் தீண்டி அணங்குறுத்துவான் என்று பழந்தமிழ் மக்கள் நம்பினர். பெண் ஒருத்தி ஓர் ஆண்மகன்மேல் காதல் கொண்டு உறவு கொள்ளும் போது அவளுடைய உடலில் மாற்றங்கள் சில உண்டாகின்றன. அவற்றிற்குரிய உண்மையான காரணத்தை உணராத பெண்ணின் தாயும் செவிலி யும் அவள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடு வேலனை அழைக்கின்றனர். வேலன் முருக வழிபாடான வெறியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று நன்கு அறிந்தவன். அதனைத் தொல்காப்பியம் ‘வெறியறு சிறப்பின் வெவ்வாய் வேலன்’ என்று குறித்துள்ளது.

பெண்ணைப் பெற்றவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வேலன், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றான். பெண்ணின் வீட்டின் முற்றத் தில் வெறியாடும் களம் அமைக்கப்படுகின்றது. முருகனுக்குரிய சேவல் கொடி அங்கே ஏற்றப்படுகின்றது. களம் மலர் மாலைகளால் அழகுபடுத்தப்படுகின்றது; வெறியாடும் வேலனும் தன்னைத் தழைகளாலும் பூக்க ளாலும் அணி செய்து கொள் கிறான். பல்வேறு வகைகளில் தன்னை அலங்கரித்துக் கொண்டு நறுமணப் புகையை எழுப்பி மணிகளை ஒலித்து முருகனை வேலன் அழைக் கின்றான். முருகன் அவன்மேல் ஆவேசமுற்றதும், அவன் ஒரு வகையான மயக்க நிலையில் துள்ளிக்குதித்து ஆடிப் பாடுகின்றான். வெறிக்களத்தில் கட்டப்பட்டிருக்கும் கொழுத்த ஆட்டுக்கிடாயின் கழுத்தை அறுத்து அதிலிருந்து பெருகும் குருதியினைச் செந்தினை அரிசியுடன் கலந்து முருகனுக்குப் பலியாக அதனைத் தூவு கின்றான்.

பலிக்காகக் கொடுக்கப்படும் ஆட்டு கிடா இன்றும் நடைபெறுவது போல் சடங்கு முறையில் வேலனால் வெட்டப்பட்டதா அல்லது அறுக்கப்பட்டதா என்பதனை உறுதி செய்து கொள்ளத் தொகைநூல் பாடல்களில் சான்றுகள் இல்லை. தமிழ்ப் பண்பாட்டின் வைதீகச் சமயத்தின் தாக்கம் திணிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றுவரை அடித்தட்டு மக்களிடத்தில் தொன்மையான பழந்தமிழ்ப் பண்பாடே தொடர்ந்து கொண்டிருப்பதால், மருளாடிய நிலையில் சடங்கு செய்யப்பட்ட ஆட்டுக்குட்டியை வேலன் வெட்டியிருக்க வேண்டும் என்று இவ் வாய்வாளன் கருதுகின்றான். வேலன் முருக னுக்குப் பலியாகத் தூவப்பட்ட பூக்களை அணங் குறுத்தப்பட்ட பெண்ணுக்குப் பிரசாதமாகத் தரு கின்றான். குறுந்தொகைப்பாடல் ஒன்றிலிருந்து பலியிடப்பட்ட கிடாயின் கழுத்திலிருந்து பெருகிய குருதியை எடுத்து அப்பெண்ணின் நெற்றியில் வேலன் தடவுகின்றான் என்று அறிகிறோம். இது இக்காலத்தில் பெண்ணின் நெற்றியில் பூசாரி குங்குமம் இடுவதை நினைவூட்டுகின்றது.

ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில் வெறியாடும் வேலன் ‘கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும்’ என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. ‘கன்னம்’ என்பது முருகனின் மந்திரத்தை எழுதிய ஒரு தகடு என்று ஐங்குறு நூற்றுக்கு உரை வரைந்த அவ்வை துரைசாமி அவர்கள் விளக்குகின்றார்.

வெறியாடலை ஒத்த நிகழ்ச்சி பல இனக்குழுச் சமூகங்களில் இன்றும் காணப்படுவதாக மானுட வியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதனை, அவர்கள் சாமனிசம்(ளுhயஅயnளைஅ) என்கின்றனர். ‘சாமன்’ என்பது துங்கிஸியன் மொழிச் சொல்லாகும். அது உணர்ச்சிவயமுற்று ஆடுகின்ற அல்லது மேலோக்கி எழுகின்ற ஒருவனைக் குறிக்கின்றது. மானுடவியலாளர்கள் ‘சாமனிசம்’ என்பது ஒரு சமயமன்று; அது ஒரு தொன்மையான வழிபாட்டு நடத்தை என்பர். சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் ‘சாமன்கள்’ இன்றும் இருக் கின்றனர். அவர்களைப் பற்றி மானுடவிய லாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். வெறியாடுதலையும் சாமனிசத்தையும் ஒப்பிட்டுக் காண முடிகின்றது. கேரள மாநிலத்தின் வடபகுதியிலுள்ள மலபார், காசர்கோடு மாவட்டங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் வேலன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் பூசாரி இனத்தவர் இன்றும் வாழ்கின்றனர். அவர்கள் ‘வேலன்மார்’ என்று அழைக்கப் பெறுகின்றனர். குறிப்பிட்ட விழாக்காலங்களில் இவர்கள் வேலன் கோலம் அணிந்து ஆடுகின்றனர். அது வேலனாட்டம் அல்லது தெய்யம் (தெய்வம்) என்று அழைக்கப்படுகின்றது.

சங்க இலக்கியங்களில் வேலனாகிய ஆண் பூசாரியைப் போன்றே கட்டுவிச்சி என்னும் பெண் பூசாரியும் இடம் பெறுகின்றாள். கட்டுவிச்சியைப் பெண் பூசாரி என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்யாதபோதிலும், அவளும் வேலன் செய்யும் முருக வழிபாட்டைச் செய்வதாகத் திரு முருகாற்றுப்படை பதிவு செய்துள்ளது. திரு முருகாற்றுப்படை, காலத்தால் பிற்பட்ட நூல் என்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆயினும், அந்நூலில் முருக வழி பாட்டிற்குரிய தொன்மையான கூறுகள் (அம்சங்கள்) அனைத்தும் பதிவு செய்யப் பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையும் பரிபாடலி லுள்ள செவ்வேள் பாடல்களும் குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வடமொழிக் கந்தனோடும் (ஸ்கந்தன்) சுப்பிரமணியனோடும் (மேலான தெய்வம், சு+ப்ரமணியம்) கார்த்திகேயனோடும் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்) இணைக்கப்பட்டுள்ளதைத் தெளிவுறக் காட்டு கின்றன.

கட்டுவிச்சி என்பவள் கழங்கு நெல் முதலிய வற்றை முறத்தில் வைத்து எண்ணிப் பார்த்துக் குறி கூறுபவள்; அதனால் இவள் ‘கட்டுவிச்சி’ எனப் பெறுகின்றாள். இவள் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவள்; இவள் கட்டுப்பார்த்துக் குறிசொல்லும் போதுதான் வழிபடும் தெய்வங்களை விளித்துப் (அகவி-அழைத்து) பாடுவதால் இவள் ‘அகவன் மகள்’ என்றும் அழைக்கப் பெறுகின்றாள். இவள் முதுமை அடைந்தவள்; இவள் தலைமயிர் நரைத்திருக்கின்றது; இவள் சங்கு மணிகளால் ஆகிய மாலையை அணிந்துள்ளாள்; இவள் தன்கையில் ஒரு சிறு கோலை ஏந்தியிருக்கின்றாள்; அவள் குறி சொல்லத் தொடங்கும் முன் கோலை ஆட்டி ஆட்டித் தெய்வத்தை அகவிப்பாடுகிறாள்; தான் வழிபடும் தெய்வத்தை அழைக்கின்றாள்; அத்தெய்வம் இருப்பதாகக் கருதும் மலையைப் பாடுகின்றாள். சங்க இலக்கியங்களில் அகவுநர் கையில் ஒரு கோல் இருப்பதாகக் குறிக்கப் பட்டுள்ளது. புறநானூற்றில் இடம்பெறும் அச் சொல்லுக்கு ‘அவர் தம் பிறப்பை உணர்த்தும் கரிய கோல்’ (புறம் 152:18) என்று உரை வரையப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து அதனை ‘நுண்கோல்’ (43:27) என்கிறது. பதிற்றுப்பத்து உரையாசிரியரும் புறநானூற்று உரையாசிரியரைப் போன்றே உரை செய்துள்ளார். இவ்வுரை பொருத்தமானதன்று என்று இவ்வாய்வாளன் கருதுகின்றான்.

தன் முன்னால் உள்ள தலைவர் களின் பிறப்பையும் அவனது முன்னோர் களின் சிறப்பையும் தான் வழிபடும் தெய்வத்தின் உதவி யால் அகவன் மகள் அழைத்துக் கூவிப்பாடு கின்றாள் என்பதே பொருந்தும். அவ்வகையில், இது ஒரு மந்திரக்கோலாகப் பயன்பட்டுள்ளது. முன்னோர்களின் பெருமையைப் பாடும் பாண மரபினர் இன்றும் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சிற்றூர்களில் வாழ்ந்து வருகின்றனர். மத்திய இந்தியாவில் உள்ள கோண்டு என்னும் நடுத் திராவிட மக்களிடம் அவர்களின் குடிப்பிறப்பை உணர்த்தும் ‘அகவுநர் கள்’ இருப்பதாக மானுடவியல் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்களிடையில் அவர்களின் முன்னோர்களின் சிறப்பைப் பாடும் அகவுநர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

தலைவனோடு காதல் கொண்டதால் உடல் வேறுபாடுற்ற தன்மகளின் நோய்க்குக் காரணம் என்ன என்று பெண்ணின் தாயும் செவிலியும் கட்டுவிச்சியை அழைத்துக் கேட்கின்றனர். அவள் கட்டு வைத்தும் கழங்கு வைத்தும் தலைவி உற்ற நோய்க்குக் காரணம் கூறுகின்றாள். திருமுரு காற்றுப்படையில் முருக வழிபாடு நடத்தும் அகவன் மகள் ‘குறமகள்’ என்றே குறிக்கப் பெறுகின் றாள். இவள் முருகனை வழிபடும் முறை காண்பார்க்கு அச்சம் தருவதாக உள்ளது; இவள் முருகனுக்குரிய மந்திரத்தை யாரும் கேட்க முடியாதபடி தனக்குள் மெல்ல உரைக்கின்றாள்; அவள் முருகனைக் குனிந்து வணங்கி மலர்களைத் தூவி வழிபடுகின்றாள். இது இன்றும் பெருஞ் சமய வழிபாட்டில் ‘மந்திரபுஷ்பம்’ எனப்படு கின்றது. பூக்களைப் பலியாகத் தூவும் முன் அவள் தன் கைவிரல்களில் பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கிக் கொண்டு இரண்டு பெருவிரல்களையும் தன் நெஞ்சில் வைத்து முத்திரை காட்டுவதாகத் திருமுருகாற்றுப்படை யில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவளும் வேலனைப் போன்று காப்புக் கட்டிக் கொள்கிறாள்; ஆட்டுக்கிடாயைப் பலியாகக் கொடுத்து அதன் குருதியை வெள்ளரிசியில் பிசைந்து பலியாகத் தூவுகின்றாள்; பல இசைக் கருவிகள் முழங்கு கின்றன; நறுமணப் புகையைத் தூபமாகக் குறமகள் எழுப்புகின்றாள்; முருகனுக்குரிய மலையைக் குறிஞ்சிப் பண்ணில் பாடுகின்றாள்.

வேலன் செய்யும் வழிபாட்டிற்கும் குறமகள் செய்யும் வழிபாட்டிற்கும் நுட்பமான வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகின்றது. குறமகள் செய்யும் முருக வழிபாடு மலை வளத்திற்காகச் செய்யப் படும் ஒரு வளமைச் சடங்காகத் தோன்றுகின்றது. இவள் ஆவேசமுற்றுத் தெய்வ மேறிப்பாடுவதாகத் தோன்றவில்லை. ஆனால், வேலன் வெறியாடுகின்றான். அதனைச் ‘சாந்திக் கூத்து’ எனலாம். அதாவது, துன்புறுத்தும் ஒரு தெய்வத்தினை அமைதிப் படுத்தும் முறையில் அதனுக்குரிய பொருள்களைக் கொடுத்துப் பரிகாரம் செய்வது போன்று வெறி யாடல் அமைந்துள்ளது.

தமிழர்களின் தொன்மையான சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது என்பதற்கான எச்சங் களில் இதுவும் ஒன்றாகும். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே பூசாரியாக இருந்துள்ளாள் என்று கருதுவதற்குத் திருமுருகாற்றுப்படையின் பழ முதிர்சோலைப் பகுதி இடம் தருகின்றது. சிலப் பதிகாரத்தில் வேட்டுவர்களின் தெய்வமான கொற்றவையின் பூசாரி சாலினி என்னும் பெண்ணாகக் குறிக்கப்பட்டிருப்பதும் நம் கருத்துக்கு அரண் செய்கின்றது. தொகைநூல் பாடல்களில் அயிரை மலையிலுள்ள கொற்றவை யையும் முரசிலுள்ள தெய்வத்தையும் பூசை செய்பவன் ஆணாகவே குறிக்கப் பெற்றுள்ளான். தாய்வழிச் சமூகம் உடைந்து தந்தைவழிச் சமூகம் உருவாகி, அச்சமூகம் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, ஆணே பூசாரியாகப் படிமலர்ச்சி பெற்றது சமூகத்தின் இயங்கியல் தளத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியே ஆகும்.

வெறியாடல் தொடர்பான பாடல்களைத் தொகுத்துக் காணும்போது தலைவியும் அவள் தோழியும் முருகன்தான் தலைவியை அணங் குறுத்தினான் என்று நற்றாயும் செவிலியும் கருதியதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை; அவர்கள் வெறியாடலையே உண்மை என்று நம்ப வில்லை. தலைவன் ஒருவன் மீது காதல் கொண்டதால், தான் பசலை நோயுற்று வருந்துவதை அறியாத செவிலி தான் முருகனால் அணங் குறுத்தப்பட்டதாக செவிலி கருதுவதைத் தலைவி ஏற்றுக் கொள்ளவில்லை. வெறியாடல் பற்றிய பாடல் ஒன்றில் முருகன், ‘மடவன் மன்ற முருகன்’ என்று தோழியால் எள்ளி நகையாடப்படுகின்றான். இதனை எண்ணிப் பார்க்கும்போது இத்தகைய பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் வெறியாடல் பற்றிய பாடல்கள் என்பது புலவர்களின் புலனெறி வழக்கமாகப் பாடப்பட்டனவாக இருக்கலாமோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

வெறியாடல் போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நாகரிக முதிர்ச்சியில்லாத இனக்குழுக்களிடம் மட்டுமே இருந்திருக்கக் கூடுமோ என்று இவ்வாய்வாளன் கருதுகின்றான். சங்க இலக்கியங்கள் பெரும் பாலும் நாகரிக வளர்ச்சியடைந்த சமூகம் பற்றிய ஆவணங்களாக உள்ளன. அவற்றில் இடம் பெற்றுள்ள வெறியாடல் போன்ற சடங்குகளைக் குறிக்கும் பாடல்கள் இனக்குழு நினைவுகளை பதிவு செய்யும் முகத்தான் பாடப்பட்டனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது. அதற்கேற்பப் பரிபாடலில் வெறியாடல் ‘பேஎவிழவு’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ‘அச்சம் ஊட்டும் பேய்விழா’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடலைப் பாடிய ஆசிரியர் ‘அது வாயுமல்ல, பொய்யுமல்ல’ என்ற இரட்டைக்குரலில் பேசுகின் றார். அதாவது, ‘வெறியாடல் உண்மையுமல்ல பொய்யுமல்ல என்று அவர் கூறுகின்றார். பக்தி இலக்கியக் காலத்தில் வெறியாடல், ஓர் இழிவான வழிபாடாகத் தூற்றப்பட்டுள்ளது. நம்மாழ்வார் தம் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் இம்மாறு பட்ட சிந்தனையைப் பதிவு செய்துள்ளார்.




On Saturday, May 12, 2018 at 11:07:19 PM UTC-7, இசையினியன் wrote:
நன்றி தேமொழி அவர்களே,

பெரியபுராணம் பாடல் ஒன்றை தந்து எனது கருத்துக்கு வலு சேர்பதாய் உள்ளது.


வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன் அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத் தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம்.

தொல்.கள.24 ம் பாடல் பற்றி என் கருத்து:

ஆக குறியோ/வரமோ கேட்பர். தொல்காப்பியத்தின் களவியல் 24 ம் பாடல் எதைக் குறிக்கின்றது என்றால், தலைவியின் களவியலைப் பற்றி எவ்வாறு எல்லாம் செவிலிக்கு (தலைவியின் வளர்ப்புத்தாய்)  செய்திகள் போகின்றன என்று  13 கூற்றுக்களை தொல்காப்பியர் கூறுகின்றார். ஆனால் இந்த தொல்.கள.24-ம் பாடலை எடுத்துக் கொண்டு பேயோட்டினர் என்று "திருத்தம் சரவணன்" அவர்கள் தனது கட்டுரைக்கு சுழி போட்டு ஆரம்பித்து உள்ளார். இதைத்தான் தவறு என்கிறேன்.

தொல்காப்பியர் பாடலில் குறிகேட்டளைத் தான் கூறுகின்றார் என்கிறேன் ஆனால் சரவணன் பேயோட்டல் என்கிறார்:

பேயோட்டவில்லை தலைவியின் களவியல் பற்றி செவிலிக்கு கட்டு - குறி சொல்லுதல், கழங்கு -  கழற்சிக்காய் கொண்டு குறி சொல்லுதல், வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - வெறியாடல் நிகழ்ச்சியின் போது தலைவன், தலைவி நெருங்கி ஆடல் புரிந்தனர் என்றோ, வெறியாடலில் குறி கேட்டலின் போது தலைவியின் களவு பற்றித் செவிலிக்குத் தெரிகிறது என்றோ என பொருள் கூற வேண்டுமே தவிர; பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினர் என பொருள் கொள்ளல் பிழை என்கிறேன்.

என் கூற்று தவறு எனில் கூறுங்கள், இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது.

தேமொழி

unread,
May 13, 2018, 3:00:44 AM5/13/18
to மின்தமிழ்
ref: http://puthu.thinnai.com/?p=10983

குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்

முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar...@gmail.com

சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே தோன்றியிருக்க வேண்டும்.  சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை பழந்தமிழ் மக்களின் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.

குறிசொல்லல்

தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவர், மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வுகூறும் வகையில் அமைவதே குறிசொல்லலாகும்.

‘‘தெய்வத்தின் அருள்பெற்று தன்வயமிழந்த நிலையில், ஒருவர் மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வு கூறுவதே குறிசொல்லல் எனப்படும். இதனை ‘அருள்வாக்கு’ என்றும், ‘சாமி சொல்லுதல்’ என்றும் அழைப்பர்’’(கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப. 58)

இவ்வாறு குறிசொல்லும் குறமகள் ‘கட்டுவிச்சி’ அல்லது ‘அகவன் மகள்’ என அழைக்கப்பட்டாள். இதற்குச் சான்றாக,

‘‘அகவன் மகளே! பாடுக பாட்டே

இன்னும் பாடுக! பாட்டே!’’ (குறுந். பா.எ.,35)

என்ற வரிகளும் அகவன் மகள் கையில் சிறிய கோல் கொண்டிருப்பாள் என்பதை,

‘‘வெண்கடைச் சிறுகோல அகவன் மகளிர்’’(பொ.வெ.சோமசுந்தரனார் உரை)குறுந். ப.,445) என்ற வரியின் மூலமும் அறிய முடிகிறது.

மேலும் குறிசொல்லும் பெண்களின் முன்பு நெல் வைத்துக் குறிகேட்கும் பழக்கம் இருந்ததை,

‘செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கேற்கும் ஆயன் வெற்பில்’’(பா.எ.288)

என்ற நற்றிணைப் பாடலும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.

வெறியாடல்

தமிழரின் வழிபாட்டு முறைகளில் மிகவும் பழமையானது வெறியாடலாகும். மனிதர்மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் உருவானதே இது இதனை ஆவேசம் என்றும் கூறுவர். முருகப் பெருமானின் அருளைப் பெற்று வேலினைக் கையில் கொண்டு ஆடுபவன் வேலன் எனப்பட்டான்.

இவ்வெறியாடல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு,

‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட் டயர்ந்த காந்தளும்’’(தொல்.புறத்.நூற்பா, 63)

என்ற நூற்பாவே சான்றாகும்.

மகளின் உடல் மெலிவு கண்ட செவிலி, அதன் காரணத்தை அறிய வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவாள். வேலனும் சில சடங்குகளை செய்து, முருகனே அவளின் நிலைக்குக் காரணம் என்பான்.

வெறியாடல் பெண்களும் சூளுரைத்தனர் பொய் ஆளுரைத்தாரை வருத்தக்கூடிய தெய்வம் தண்டிக்கும் என்பதை,

‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியார் தெரூஉம்’’(குறுந்., பா.எ.127)

எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

மேலும் வெறியாட்டின் போது தெய்வத்திற்கு இட்ட படையலாகிய கதிரை அறியாது உண்ட மயில் நடுங்கியது. இதனை,

‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்

வெறியறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’’(குறுந்., பா.எ.153)

என்ற குறுந்தொகைப் பாடல் வழி அறிய முடிகிறது. இவ்வாறு வெறியாடிய களத்தில் செந்நெல்லின் பொரிகள் சிதறிக் கிடந்ததை,

‘‘வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்

செந்நெல் வான்பொரி சிதறி யன்ன’’( குறுந்., பா.எ.78)

என்ற குறுந்தொகை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

வெறியாடலை வழிபட வந்த மகளிர் தம்முள் கைகோர்த்து குரவைக் கூத்தாடினர். இதனை,


‘சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉம் பிணையூஉ

மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ

வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி’’

(மதுரைக்காஞ்சி, 614-617வரிகள்)

மதுரைக் காஞ்சியின் வரிகள் வாயிலாகவும் அறிய முடிகின்றது.


[...] 

தேமொழி

unread,
May 13, 2018, 3:17:12 AM5/13/18
to மின்தமிழ்
பொதுவாக வெறியாடல் செய்பவர்,  தன்னை மீறிய சக்தி  ஒன்று  தன்னை ஆட்டுவிப்பதாகக் கூறி வெறிகொண்ட ஆட்டம் ஆடிக் குறி சொல்வதாகத்தான் எனக்குப் புரிகிறது.

இந்தக் குறி சொல்வது ஒரு பெண்ணின் "காதல் நோய்" குறித்தும் குறி கேட்கப் பயன்பட்டுள்ளது.

அந்தக் காதல் நோய் என்பது அணங்கு/முருகு  பெண்ணை ஆட்கொண்டுள்ளதாக (பேய் பிடித்துள்ளதாக?) வெறியாடும் வேலனால் சொல்லப்படுகிறது.  அதற்காக வேலனுக்குப்  பலிகள் கொடுக்கப்படுகிறது.
  1. இது பேயோட்டுவதில்  அடங்குமா? 
  2. பெண்ணின் குடும்பத்தார் வேலனிடம்  அந்தப்பேயை விரட்டி அனுப்பச் சொல்கிறார்களா?
இது போன்ற தகவல் உள்ளனவா?

..... தேமொழி

தேமொழி

unread,
May 13, 2018, 3:28:25 AM5/13/18
to மின்தமிழ்
///வேலன் வெறியாடுகின்றான். அதனைச் ‘சாந்திக் கூத்து’ எனலாம். 
அதாவது, துன்புறுத்தும் ஒரு தெய்வத்தினை அமைதிப் படுத்தும் முறையில் அதனுக்குரிய பொருள்களைக் கொடுத்துப் பரிகாரம் செய்வது போன்று வெறி யாடல் அமைந்துள்ளது.///

இது பரிகாரம் என்று குறிப்பு கொடுக்கிறது.  அணங்கை அமைதிப்படுத்துகிறார்களாம் (உனக்கு இவையிவை பலி  தருகிறேன் இந்தப்  பெண்ணை விட்டுவிடு  என்ற சமாதான உடன்படிக்கை?)


..... தேமொழி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2018, 3:28:55 AM5/13/18
to mintamil
2018-05-13 11:37 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
நன்றி தேமொழி அவர்களே,

பெரியபுராணம் பாடல் ஒன்றை தந்து எனது கருத்துக்கு வலு சேர்பதாய் உள்ளது.
வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன் அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத் தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம்.

தொல்.கள.24 ம் பாடல் பற்றி என் கருத்து:

ஆக குறியோ/வரமோ கேட்பர். தொல்காப்பியத்தின் களவியல் 24 ம் பாடல் எதைக் குறிக்கின்றது என்றால், தலைவியின் களவியலைப் பற்றி எவ்வாறு எல்லாம் செவிலிக்கு (தலைவியின் வளர்ப்புத்தாய்)  செய்திகள் போகின்றன என்று  13 கூற்றுக்களை தொல்காப்பியர் கூறுகின்றார். ஆனால் இந்த தொல்.கள.24-ம் பாடலை எடுத்துக் கொண்டு பேயோட்டினர் என்று "திருத்தம் சரவணன்" அவர்கள் தனது கட்டுரைக்கு சுழி போட்டு ஆரம்பித்து உள்ளார். இதைத்தான் தவறு என்கிறேன்.


தொல்காப்பியர் பாடலில் குறிகேட்டளைத் தான் கூறுகின்றார் என்கிறேன் ஆனால் சரவணன் பேயோட்டல் என்கிறார்:

வெறி என்பதற்குக் குறிசொல்லுதல் என்ற பொருள் எந்த அகராதியில் இருக்கிறது?

எந்தப் பாடலில் அப்பொருளில் வருகிறது?. அதை முதலில் காட்டுங்கள்.


 

பேயோட்டவில்லை தலைவியின் களவியல் பற்றி செவிலிக்கு கட்டு - குறி சொல்லுதல், கழங்கு -  கழற்சிக்காய் கொண்டு குறி சொல்லுதல், வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - வெறியாடல் நிகழ்ச்சியின் போது தலைவன், தலைவி நெருங்கி ஆடல் புரிந்தனர் என்றோ, வெறியாடலில் குறி கேட்டலின் போது தலைவியின் களவு பற்றித் செவிலிக்குத் தெரிகிறது என்றோ என பொருள் கூற வேண்டுமே தவிர; பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினர் என பொருள் கொள்ளல் பிழை என்கிறேன்.

என் கூற்று தவறு எனில் கூறுங்கள், இன்னும் ஆராய வேண்டி இருக்கிறது.
2018-05-13 0:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
Message has been deleted
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2018, 3:49:59 AM5/13/18
to mintamil
:))

எத்தனை முறைதான் கூறுவது?.

அப்பாடலில் வரும் வெறி என்பது பேயைக் குறிக்கும். அகராதிகளிலும் அப்பொருள் இருப்பதைக் காட்டி இருக்கிறேன்.

மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று அறிய வேலனின் கழங்கைக் கொண்டும் கட்டுவிச்சியின் கட்டினைக் கொண்டும் அன்னை உறுதிசெய்து கொள்கிறாள். அதன்பின்னரே பேயோட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.

வெறி அதாவது பேயே பிடிக்கவில்லை என்றால் ஏன் அன்னை வேலனைக் கொண்டு வெறியாட வேண்டும்?.

உங்களுக்கு என்னதான் சிக்கல் என்று எனக்குப் புரியவில்லை.

வெறி வேறு குறி வேறு. வெறி = பேய். வெறியாடல் = பேயோட்டுதல். குழப்பம் வேண்டாம்.




2018-05-13 13:05 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
திருத்தம் அவர்களே,

இந்த ஒரே வரிக்கு மட்டும் பொருள் கூறுங்கள்

வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி:

Message has been deleted
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2018, 4:54:02 AM5/13/18
to mintamil
இன்னும் உங்கள் ஐயம் தீரவில்லையா?

கட்டினும் - கட்டினாலும்
கழங்கினும் - கழங்கினாலும்
வெறி என - பேய் என்று
இருவரும்- - கட்டுச்சி, வேலன் ஆகிய இருவரும்
ஒட்டிய - ஒன்றுபட்ட
திறத்தான் - செயலால்
செய்திகண்ணும் - பெற்ற செய்தியின் கண்ணும்


2018-05-13 14:06 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
சரி உங்களது வழிக்கே வருகிறேன்,
வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்தி இதில் முன்னர் இரண்டு வார்த்தைகள் உள்ளன. விட்டு விட்டோம் எனக் கொள்வோம்.

கட்டும் - கருத்தில் கொள்ள வேண்டாம்
கழங்கும் - கருத்தில் கொள்ள வேண்டாம்

வெறி
- பேய்
என
- என்று
இருவரும்
- தலைவனும் தலைவியும்? இல்லை பேயும் தலைவியும்!
ஒட்டிய
- நெருங்கி இருத்தல்
திறத்தான்
- திறமை
செய்தி
- கூற்று
கண்ணும்
- இதன் பொருட்டும்

தெளிவுரை:
தலைவியும் பேயும் ஒட்டி இருக்கின்ற திறமையால் என்ற கூற்று. என்றுதானே பொருள் வருகிறது. இங்கு பேயோட்டல் எங்கு கூறப்படுகிறது? பூசாரியை கூப்பிட்டு வந்து பேயோட்டினாள், என்ற செய்தி உளதோ?

இதனை மேற்கண்ட  வரியை வைத்து எனக்குப் பொருள் கூறுங்கள். நேரடியான பொருளாக இருத்தல் வேண்டும். கட்டுக்கதை வேண்டாம்.

மேலும் களவில் தலைவன் தலைவி தவிர தலைவி பேய் களவு பற்றி தொல்காப்பியர் பேசி இருப்பாரோ?
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2018, 5:45:35 AM5/13/18
to mintamil


2018-05-13 15:02 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
அருஞ்சொற்பாெருள் கூறீவிட்டீர் ஐயா. தெளிவுரையையும் கூறிடிங்களேன்.


நீங்க ரொம்ப பெரிய ஆளுங்க ஐயா.

உங்களுக்கு அருஞ்சொற்பொருளும் தேவையில்லை; உரையும் தேவையில்லை.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கொள்ளுங்கள்.

கட்டுரையை முழுதும் படிக்காமல் கருத்து கூறும் உங்களுடன் கருத்தாடியது தவறே.

ஆள விட்டா போதும் சாமீ இ இ இ ..
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2018, 6:17:56 AM5/13/18
to mintamil
ஆகா`, விடமாட்டார் போலிருக்கே. :))

சரி, உரைகூறுகிறேன். உரை கீழே:

கட்டினாலும் கழங்கினாலும் பேய் என்று கட்டுவிச்சி, வேலன் ஆகிய இருவரும் ஒன்றுபட்டு உறுதிசெய்த செய்தியின் கண்ணும்..

போதுமா?. இன்னும் .....?


2018-05-13 15:26 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:
அப்படிலாம் விட முடியாது. தொல்காப்பியத்தின் வெட்சித்திணை இருக்கு, அகப்பொருள் வெண்பாமாலை இருக்கு.

அங்கெல்லாம் போகாம விடுரதா! பேயோட்டல் என்பதை சங்க இலக்கியம் கூறுதுனு தலைப்பு அல்லவா போட்டு இருக்கீங்க. ஆரய்ந்தே தீர வேண்டும்.

தாங்கள் எழுதிய கட்டரையின் முதல் பாடல் மட்டும்தான் வந்திருக்கு. மிச்சப் பாடலும் ஆராயனும். 

ஆகவே தயை கூர்ந்து தெளிவுரை கூறுங்கள், உங்கள் கட்டுரையின் மிச்சப் பகுதியை படிக்க வழி விடுங்கள் ஐயா!

kanmani tamil

unread,
May 13, 2018, 2:16:33 PM5/13/18
to mintamil
வெறியாட்டு என்பது பண்டைத் தமிழர் வழிபாட்டு முறை .
இவ்வழிபாட்டு முறையை அகப்பாடலில் களவுக்கால நிகழ்ச்சிகளில் ஒன்றாக வைத்துப் பாடுவது சங்க இலக்கிய மரபு.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவியின் உடலில் தோன்றும் மாறுபாடுகளைக் கண்ட தாய் 'ஏதோ தெய்வக்குற்றம் காரணமாகத் தலைவி நோயுற்று உடல் மெலிகிறாள் ;இந்த நோய் ஏதேனும் அணங்கினால் ஏற்பட்டிருக்க வேண்டும்; எனவே முருகனுக்கு பலி கொடுத்து வழிபாடு நிகழ்த்த வேண்டும்' என்று ஏற்பாடு செய்வாள். 
இங்கே பிரச்னைக்குக் காரணம்' பேய் ' என்னும் சொல் தான். இன்றைய தமிழில் பேய் என்பது இறந்த பிறகு சாந்தியடையாமல் சுற்றித் திரியும் ஆவி.
ஆனால் 'அணங்கு' என்னும் சொல்லின் பரிணாமம் வேறு.(இழையை முற்றிலும் படித்த பிறகு தொடர்கிறேன்.)
அகப்பொருள் வெண்பா மாலை எதுவும் இல்லை; புறப்பொருள் வெண்பாமாலை தான் உண்டு.
கண்மணி 
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 27, 2018, 5:42:10 AM8/27/18
to mintamil

On Sun, Aug 26, 2018 at 11:22 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
சரவணன்,

அணங்கு என்னும் சொல்லை நான்மணிக்கடிகை யிலும் கண்டேன்.

இங்கும் பேயோட்டல் என்னும் பொருளா என்பதுதான் எனது கேள்வி. முடிந்தால் பதில் கூறுங்கள்.

ஐயா,

அணங்கு என்றால் பேய் என்றும் பொருள் உண்டே ஒழிய பேயோட்டல் அன்று.
பேய்க்கும் பேயோட்டலுக்கும் வேறுபாடு உண்டு.

பேயோட்டல் = பேய் + ஓட்டல் ( பேய்கள் நடத்தும் ஓட்டலா என்றெல்லாம் கேட்கப்படாது ஐயா. :))

இன்னும் தெளியலன்னும்போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. :()




 


மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண். 88
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/CNtpgutscmA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
<div class="m_-8763097377563089798m_173505209831

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
0 new messages