ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள் - ஓர் அலசல்

468 views
Skip to first unread message

coral shree

unread,
Jan 30, 2011, 4:16:03 AM1/30/11
to mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com
ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள்: ஓர் அலசல்


என்றும் இருக்க உளங்கொண்டாய்!
  இன்பத் தமிழுக் கிலக்கியமாய்:
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
  இறவாத் தமிழோ டிருப்பாய்நீ!
ஒன்று பொருளஃ தின்பமென
  உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
  நில்லா இகத்தும் நிற்பாய்நீ!

தமிழ் கூறும் நல்லுலகோருக்கு! 

வணக்கம். ஓர் படைப்பிலக்கியம் என்பது, அடிப்படையில் ஓர் மூலக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதனை எடுத்தாள்பவர்களின் போக்கிற்கிணங்க, பல்வேறு பரிமாணங்களைப் பெறுவதும் நிதர்சனமாகிறது. அந்த வகையில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் இன்றளவும் இரசிக்கத்தக்கதாய் இருப்பதே நித்யமான தமிழன்னையின் இனிமை மற்றும் இளமைக்குச் சான்றாகிறது. 

எழுத்தாளர் திரு நா.கண்ணன் அவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு 108 மடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின்படி, வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது என்றும், இந்திய மெய்யியல் இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகுமுறைதான் காரணம் என்றும் கூறுகிறார் ஆசிரியர். இந்த பன்னோக்கு அணுகுமுறையைத் தான் தன்னுடைய பாசுர மடல்களாக வடித்துள்ளார் ஆசிரியர். கருத்தாழமிக்க இப் பாசுரங்கள் நயமாக எடுத்துரைக்கப் பட்டிருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பல பகுதிகள்,  தமிழறிஞர்களின் பார்வைகளில் மூலம் மேலும் பல பரிமாணங்களைக் காணக்கூடுமே என்ற ஆவலும் மிகுதியாவதன் காரணமே இதனை படித்தான் படித்துரையில் யான் எடுத்துக் கொண்டதன் நோக்கம். தயை கூர்ந்து தமிழறிஞர்கள் இதனைத் தொடர்ந்து படித்து மகிழ்வுறுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி

.
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


 பாசுரங்கள், நாம் பன்முறை கேட்டு இன்புற்ற ஒன்றுதான் என்றாலும், ஆழ்வார்கள் முதன் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வு, ஒரு சுவாரசியமான கதையன்றோ. ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க எனும் அந்த அழகிய பழம் புராணக் கதையை ஆசிரியர்  
“ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.”, என்று வர்ணித்திருப்பது மூலம் அவர்தம் பாசுரமடல்களின் போக்கின் திசையை ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாசுரங்களின் நிகழ்வுகள் உண்மையா, புனைவா என்ற தேவையில்லாத வாதத்தை விட்டு, தற்காலத்திற்கேற்றவாரு அதன் மூலம் பயன்பெறும் தந்திரம் அறிந்துள்ளார். 

’ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக’, என்று பழைய பழமொழி கொண்டு, பகிர்தல் தரும் இன்பம் குறித்து மிக யதார்த்தமான இன்றைய வாழ்வியல் சூழல்கள் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பு.

இவர் இறைவனை எளிதாக அடையும் மார்க்கம், கீதையில் கண்ணன் காட்டிய கர்ம யோகத்திற்கு ஒத்ததாகவே உள்ளது.

பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி என்ற தலைப்பில், 
”பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.” - அறிவியலையும் ஆன்மீகத்தையும் அற்புதமாக இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

’ஸ்ரீ’ என்ற சொல்லிற்கும் ‘ திரு’ என்ற சொல்லிற்கும் பொருளை வெகு நேர்த்தியாக விளக்கிய பாங்கு, பூனைக்கும் சோறு - பாலுக்கும் காவல்!

சமண, பௌத்த மற்றும் ஜென் மதங்களையும் ஒப்பிட்டு, வரலாற்றுத் தகவல்களையும் வழங்கத் தவறவில்லை இந்த பன்முக நாயகர்.

ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசனம் மற்றும் நாயன்மார்கள் அருளிய பாடல்களையும் அழகுற ஒப்பிட்டு, ஹரியும், சிவனும் ஒன்றே என்பதையும்,

”இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து..... ” என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி என்னும் பாடல் மூலம் தெளிவுபடுத்தியது அருமை.

பொதுவாக ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற மகான்களின் வாக்கை அருளியதாகவே சொல்வது மரபு. அதற்கான ஆசிரியரின் வியாக்கியானம் வரவேற்கத்தக்கது.

”வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது)” - என்ற ஆசிரியரின் விளக்கம் தேர்ந்த ஞானமுள்ளவையாக இருப்பது இயல்பு.

” விதையாக நற்றமிழை வித்திட்டாய்.” - என்ற அழகிய தலைப்பில், மொழியின் ஆதியும், அந்தமும் திறம்பட ஆய்ந்தளித்திருக்கிறார், ஆசிரியர், திருமழிசை ஆழ்வாரின் பாசுரத்தின் ஆதாரம் கொண்டு.

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து , என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்கள் தமிழ் மொழி பால் கொண்ட காதலை நயம்பட விளக்கியுள்ளார்.

ஆன்மீக வளர்ச்சி சீராக அமைய, மனம் ஒருநிலைப்பட்டு இருக்க வேண்டும் என்பதையும் வாசகருக்கு எளிதாக புரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.

”இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்” என்று, தன்னுடைய ஊகத்தையும், தெளிவாக்கியிருக்கிறார் இவர்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் தனிச்சிறப்பே அதன் தலைப்புக்கள் தான். 

ஆழ்வார்கள் கி.பி. 7ம்நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது போன்ற வரலாற்றுப் பின்னனித் தகவல்களும் அளித்திருப்பதால், சமூக ஆர்வலர்களுக்கும் இம்மடல் பயன் தர வல்லதாக அமைந்திருக்கிறது எனலாம்.

”இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதைசொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!” - ஆசிரியரின் ஆழ்ந்த தத்துவ ஞானங்கள் விளங்கச் செய்கிறது.

ஆழ்வார்களின் ஆழ்ந்த பக்தி நெறியை, கி.மு. 400 - 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைத் துணை கொண்டு, மனித உறவுகளின் பசலை நோயுடன், ஒப்பு நோக்கி, வாசகரை பல்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்வதிலும் வெற்றி கண்டிருக்கிறார், இந்த வித்தகர்.

” சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும்” - இப்படி வெகு யதார்த்தமான நடையில், அத்தோடு நில்லாமல் பாரதியையும் துணைக்கழைத்துக் கொண்டு, ஆழ்வாரின் அன்பை உணரச் செய்திருப்பது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற தலைப்பில், சங்க கால இலக்கியங்களையும், சாதி வேறுபாட்டையும்,முகம்மதிய, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் பிறகு வந்த மாற்றங்கள் போன்றவற்றை பல உன்னத உதாரணங்கள் மூலம் உணரச் செய்திருப்பது வாசகருக்கு, பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் அறிந்து கொண்ட திருப்தியையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது நிதர்சனம்.

பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை, அழகுணர்ச்சி.........இப்படி இளைஞர்களயும் பக்தி மார்கத்தில் கொண்டு செலுத்தும் உபாயமும் கையாளப் பட்டிருக்கிறது..............

“ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.” - எப்படி புரட்சிகரமாக கொண்டு செல்கிறார், பாருங்கள். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை சத்தியமாக்கும் பகுதி இது...........

ஆழ்வார்களின் அழகுணர்ச்சி மெய்சிலிர்க்கச் செய்வதாக உள்ளதும் நிதர்சனம்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் முழுமையான சுவையை அனுபவிக்க விரும்பினால், கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்கி உள்ளே சென்றால், புதியதோர் உலகானுபவம் பெறலாம் என்பதும் நிதர்சனம்.









                                                    

--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

பவள சங்கரி

unread,
Jan 30, 2011, 4:19:10 AM1/30/11
to மின்தமிழ்

>    - பாசுரமடல் 001 - ஆழ்வார்களின்
> அறிமுகம்<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
>    - பாசுரமடல் 002 - எல்லோரும் எல்லாமும் பெற
> வேண்டும்<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
>    - பாசுர மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ்
> மறுமலர்ச்சி<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
>    - பாசுர மடல் 004 : ஆழ்வார்கள் அனுபவித்த
> இறைமை.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>    - பாசுர மடல் 005 : காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை
> நீ.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>    - பாசுரமடல் 006 : விதையாக நற்றமிழை
> வித்திட்டாய்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>
>    - பாசுர மடல் 007 : சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார்
> வல்லரே ?<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
>
>    - பாசுர மடல் 008 : அதீத காதலும் பக்தி
> இலக்கியமும்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>    - பாசுர மடல் 009 : சாதிகள் இல்லையடி
> பாப்பா.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>    - பாசுர மடல் 010 : என் அமுதினைக் கண்ட
> கண்கள்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>    -

Mohanarangan V Srirangam

unread,
Jan 31, 2011, 12:34:18 PM1/31/11
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com
கோரல்ஸ்ரீ அவர்கள் ஆர்வத்துடனும், சிரமப்பட்டும் இவ்வளவு தூரம் படித்து விமரிசனம் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது. 

திரு கண்ணனின் ஆரம்பகால முயற்சி இது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரே இதில் காணும் சிலபல கருத்துக்களை இப்பொழுது ஒப்ப மாட்டார். இருப்பினும் தம்முடைய இன்றைய தெளிவுகளைக் கொண்டு அன்றைய, தம் ஆர்வமே துணையாகக் கொண்டு எழுந்த ஒரு பிரதியைத் திருத்தக் கூடாது என்ற சீரிய அறிவியல் அணுகுமுறைக் கடைப்பிடியோடு வெளியிட்டுள்ளமை போற்றற்குரியது. 

தமிழழகும், ஆழ்வார்களைப்பற்றி மற்றவ்ர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற உற்சாகமும், பல்துறைக் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ரசனைக்கு விருந்தாய் இருக்கின்றன. 

இணையத்தில் ஆழ்வார்களைப் பற்றி ஒன்றும் அறியாத பலபேருக்கு அறிமுக வாயிலாய் இருந்திருக்கின்றன இந்த மடல்கள் என்பது இதன் சிறப்பு. நன்றி கண்ணன். 
நன்றி கோரல்ஸ்ரீ.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
***

2011/1/30 coral shree <cor...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

N. Kannan

unread,
Jan 31, 2011, 6:23:02 PM1/31/11
to mint...@googlegroups.com
அன்பின் பவளசங்கரி:

முதலில் பெருத்த நன்றி. பொதுவாக மக்களுக்கு இறைமை, பக்தி என்பதெல்லாம்
களிக்கும் மற்றொரு பொருளாகிப் போன காலத்தில் என்றோ நான் எழுதிய
பாசுரமடல்களை தாங்கள் சிரமப்பட்டு விக்கியில் ஏற்றி இருப்பதுடன் அதற்கு
விமர்சனம் இங்கு அளிப்பது இறைச்செயல் என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆழ்வார்
சொல்வது போல் நம் வாழ்வு, `அத்தைத்தின்று அங்கே கிடக்கும்` என்ற நிலையில்
ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் பொக்கிஷம் மண்மூடிக்கிடக்க அதன்
மீது உட்கார்ந்து புலம்பும் தரித்திரனாக நாமுள்ளோம்.

நான் வைணவ குடும்பத்தில் பிறந்தாலும் அதன் ஆழமான, தத்துவம் முகிழும்.
நீண்ட தமிழ் மரபை அறிந்தேன் அல்ல. எனவே என் வேர்களைத்தேடி நான் மேற்கொண்ட
ஒரு பயணம்தான் இப்பதிவுகள். கிருஷ்ணன் பாதமென்று கோகுலாஷ்டமியன்று
வைக்கும் சிறுபாதங்கள் போன்றவை அவை. மூழ்க, மூழ்க ஆழம் காண முடியாத
துறையாக இது இருப்பதை அறிகிறேன். ஆயினும் ஓர் திருப்தி, பாற்கடல் இனிப்பு
என்பதை கரையில் கொஞ்சம் தொட்டு வாயில் வைத்துக் கொண்டாலும் உணரலாம்தானே!
அது போல்தான் இதுவும் என்று தெரிகிறது.

திருமங்கை ஆழ்வார் நினைவிற்கு வருகிறார். அவர் கள்ளன். மூர்க்கன்.
காமுகன். ஆனால், அவருக்கு அசாதாரணமான அழகுணர்ச்சி உண்டு. இறைவன் நம்மிடம்
உள்ள குறைகளைவிட கிஞ்சித்து உள்ள நிறைகளைக் கொண்டு தன்னிடம் கவர்கிறான்.
கலியனின் ருசியை தூண்டிலாக வைத்து இறைவன் அவரைத் தடுத்தாண்டு விடுகிறார்.
அதுபோல் என்னிடமுள்ள அறிவியல்/ஆன்மீகம் எனும் அல்ப, சொல்ப ஆசைகளை ஒரு
பொருட்டாகக் கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டி அருளுகிறான்.
நாலாயிரமும்தான் அந்த விஸ்வசொரூபம். அது தவிர வேறொரு சக்தி பீடம் தேவை
இல்லை. அதனுள் கால் வையுங்கள். You will experience a time warp.

மாறன் பத மலர் வெல்க! எங்கள் கோன் இராமானுச முனி வழி வெல்க!

உங்கள் முயற்சி வெல்க!

அன்புடன்
நா.கண்ணன்

பிகு: இப்போதெல்லாம் தனியாக நடக்காமல் எனக்கொரு உற்ற துணையாக ரங்கனாரை
அனுப்பி வைத்திருக்கிறானே. அதுதானே கருணை.

coral shree

unread,
Feb 3, 2011, 9:04:52 AM2/3/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan
ஆழ்வார்க்கடியான் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி - 2. 



" ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும்

ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும்” என்ற

ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
 
 ஒருமொழி ’நமச் சிவாய’ வென்பர்;

‘ஹரிஹரி’யென் றிடினும்மஃதே ‘ராம ராம’

‘சிவசிவ’வென் றிட்டாலும் அஃதே யாகும்

தெரிவுறவே ‘ஓம்சக்தி’ யென்று மேலோர்

ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.
              
என்பான் பாரதி. பக்தி இலக்கியங்களில் மொழி பேதங்களின் சமண்பாடுகளை கருத்தில் கொண்டே இப்பாடல் யாத்திருக்கலாம்.அல்லவா. 

’வேதம் தமிழ் செய்த மாறன்’, எனும் மடலில் ஆசிரியர், பாரதியின் கருத்துக்களோடு ஒத்தேயிருப்பினும், ’இத்தொண்மையான மொழி, சமஸ்கிருதத்தில் தாக்கம் ஏற்படுத்துவது இயல்பானது என்று கூறுவதோடு, சமய உணர்வையையும் பரிணாம வளர்ச்சியில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும், அறிவியல் ஆதாரங்கள் கொண்டு விளக்கியிருந்தாலும், 

"ஆழ்வார்கள் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட உன்னத தமிழர்கள். இவர்கள் பல குலங்களிலிருந்து வந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் தமிழின் மீது ஆறாக்காதல் இருந்திருப்பதை அவர்கள் செய்வித்த பாசுரங்களில் காணலாம். இவர்கள் அன்று இப்பெரும் முயற்சி எடுக்கவில்லையெனில் இன்று மெல்லத் தமிழ் செத்திருக்கும்."

என்று குறிப்பிட்டிருப்பதன் அடிப்படை ஆதாரங்கள் ஆய்விற்குட்பட்டதாகவே உள்ளது தெளிவு. 


”அண்ட கோளத்தாரென்ற ஆரியத்தமிழாலன்று தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபா ............”

என்ற பாசுரம் மூலம் ’ஆரியத் தமிழ்’ என்பது தனித்தமிழ் இயக்கத்திற்கு தலையிடி கொடுக்கும் வார்த்தை - என்று கூறுவதும் சிந்திக்கச் செய்வதாகவே உள்ளது..............

மனிதனை ஒருவருடன் ஒருவர் இணைப்பதுடன், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள ஆழ்ந்த 
தொடர்பை மீட்பித்து அவனை மகிழ்வாக வாழ வைக்கும் நோக்குடன் தான் வேதங்கள் எழுதப்பட்டது என்ற ஆசியரின் வியாக்கியானம், - பகவத் கீதையில், 

“யோகஸ்த: குரு கர்மாணி”, என்று கடவுள் சொல்லுவதை , அதாவது யோக நிலையில் நின்று தொழில் செய், என்பதனை ஒப்பு நோக்கக் கூடிய வகையில் சிந்திக்கச் செய்திருப்பது சிறப்பு. 

 ஆரிய மொழியில், மட்டுமே தத்துவ விசாரணைகள் இருந்த காலத்தில் புத்தபிரான், மக்களுக்கு எளிதாக புரியக் கூடிய மொழிகளில் தன் போதனையை இயற்றி, புரட்சிகரமான சாதனை புரிந்த வரலாற்றுத் தகவல், ஆசிரியரின், முற்போக்கு எண்ண வெளிப்பாடு. 

பண்டைய மராட்டிய தேசத்து கணேச பூசை தொடங்கி, இன்றைய தமிழரின் விநாயகர் வழிபாடு வரை ஆசிரியரின் விளக்கம் எளிமை,மற்றும் யதார்த்தம்.

உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையுய்ம் எல்லாம் கண்ணனாக இருக்கிற பட்சத்தில் சாதி எங்கிருந்து வரும்? என்ற ராமானுசரின் சாதி பேதத்திற்கு எதிரான வாதத்தை நயம்பட எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர், இதத்தாய் ராமானுசன், என்ற தலைப்பில்.

1)சமயப்புரட்சி என்ற வார்த்தை அவசியம்தானா?

2) மெய்ஞானத்தையும் mundane
மொழி பிரச்சனையையும் சேர்த்து குழப்ப வேண்டுமா என்று? 

அன்பர் ஒருவரின் ஐயப்பாட்டை நீக்கும் பொருட்டு, ஆசிரியரின் விளக்கவுரை,

சுவாமி விவேகானந்தரின்,
“ We have to find our way between the Scylla of old superstitious orthodoxy and the Charybdis of materialism - of soullessness.of the so called reforms..............

Swamiji also stressed that local customs should not be mistaken for religion. He pointed out that the essence of our religion lies in the vedas. என்ற வியாக்கியானங்களை நினைவு கூறச் செய்வதுடன், 

ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புரட்சி மற்றும் அதன் வரலாற்றுக் கண்ணோட்டம் குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

”பாசுர வரலாறு சொல்வதால் என்னை "சுத்த வைணவன்" என்று ஒதுக்காதீர்கள். வைணவம் தமிழுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. தமிழின் இன்றைய செழுமைக்கு வைணவம் பெரும் பங்காற்றி இருக்கிறது. தனிப்பட்ட அளவில் எனக்கு எம்மதமும் சம்மதம்தான்”, என்ற ஆசிரியரின் ஆதங்கம் வெளிப்படையாகிறது. 

”பற்றுடை அடியவர்க்கு எளியவன்” என்ற தலைப்பில், திருமூலரின் அனுபவமும் - ஆழ்வாரின் அனுபவமும் இயைந்த இன்பம்.

பெரியாழ்வார் திருமொழியில் [2/8] தாய்மை அனுபவங்களின் விளக்கம், பட்டர்பிரானின் பிரத்யேகமான தன்னிலை அனுபவங்கள் என்று சொல்வது, ஆச்சரியப் படச் செய்கிறது.

பௌத்தமும், சமணமும் கொண்ட கருத்து வேறுபாடுகள் திருமழிசையின் பாடல்களில் பதிவாகியிருப்பது நல்ல வரலாற்றுத் தகவல்.
இதை ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கிய பாங்கு இனிமை. 

”ஆனால் பாவம் ஸ்ரீவைஷ்ணவரான திருமழிசை இப்படி யெல்லாம் பாடவில்லை. ஆனாலும் இவர் வாழ்வு மர்மம் நிறைந்தாய் உள்ளது. இவர் சிவவாக்கியர் என்பது கட்டுப்பாடற்ற ஊகம் என்று பேராசிரியர். இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார்” - மர்மக் கதை பாணியில் சொன்ன விதம் வாசகருக்கு விருந்து. நல்ல கதை சொல்லியாக தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர், ”பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!” என்ற தலைப்பில்.
வியாக்கியானத்திற்கொரு வியாக்கியானம்....அழகு. 

குலந்தரும்; செல்வந் தந்திடும் அடியார்
படுதுயராவின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற
தாயினுமாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்

அபிராமிப் பட்டர் அருளிய, அபிராமி அந்தாதியின்,

தனம் தரும் கல்வி தரும், என்ற பாடலின் ஓசையுடன் அமைந்த இப்பாடலின் 
கருத்துக்கள் குறித்து, ஆசிரியர், 

”இப்பாட்டை வரிக்கு, வரி உண்மையென ஆக்கிய பெருமான் இராமானுச முனி (அதை வேறொரு சமயம் பார்ப்போம்).”

என்று வாசகரின் சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிய பாங்கு வரவேற்கத்தக்கது.

சூடிக் கொடுத்த சுடர் கொடியை நாடி நயம்பட உரைத்த விதம்.........உவகை.......

பாசுரங்களுக்கு ராகம் .......

பாசுரங்கள் அத்தனைக்கும் பண் உண்டு. ராகங்கள் உண்டு. இப்பாடல் காம்போதி ("கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம் எதுவோ பிரபோ?" - சம்பூர்ண இராமாயணம்) ராகம். எம்.எல்.வி. பாடிய திருப்பாவையோ, இல்லை அவர் சிஷ்யை சுதா ரகுநாதன் பாடிய திருப்பாவையையோ பின்னணியாகப் போட்டுக் கொள்ளுங்கள்! - சுவையான தகவல்.

ஆழி மழைக்கண்ணாவின் வியாக்கியானத்திற்கு வள்ளுவனையும், அறிவியலையும், கூட்டி, சுவையாக்கியிருக்கிறார் இந்த அறிவியல் வல்லுநர். 

இந்த மடல் பலவகையில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின்,அறிவியல் புனைவை நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது சிறப்பு.

”ஊமையின் கனவு” என்ற மடல், பேச்சு வழக்கில் எளிமையாக அமைத்திருப்பது வாசகருக்கு படிக்கும் ஆவலை அதிகப் படுத்தக் கூடியதாகும். ஒரு சிறுகதை படிக்கும் இனிய அனுபவத்தைக் கொடுக்கவல்ல மடல் இது.

இணையத்தில் வலம் வந்த இனிய தனிப்பாடலை, அழகிய புனைவாக மாற்றிய பாங்கு அருமை......என்னே தத்துவ விளக்கம்!...........

”எனக்கு இனி கதி என்ன? என்ற கேள்வி எப்போதாவது வரும் போது ஆழ்வார்களுக்குள் வாருங்கள். அங்கு பதில் இருக்கிறது.”-- தத்துவ முத்து........

கண்ணனுக்கே ஆமது காமம் ! - இம்மடல், பல்வேறு புனைவுகளும், எடுத்துக்காட்டுகளும், வரலாற்றுச் செய்திகளும், தத்துவங்களும், உணர்வுப்பூர்வமானச் செய்திகளும், மட்டுமல்லாது,

” தனது அகங்காரத்தை விட்டு தனக்கும் மேலுள்ள ஒரு சக்தியிடம் காதல் கொள்வதென்பது மிக, மிக விசாலமான மனதை உடையவர்களால்தான் முடியும். அவ்விசாலமான மனது வந்துவிட்டால் தனது சகியும் இத்தேடலில் பங்கு கொள்ளும் தோழியாகவே படும். அப்போது ஆண் மேலாதிக்கம் என்பது வருவதற்கு வாய்ப்பு இல்லை. சாதீய கட்டுப்பாடும், ஆண் மேலாதிக்கமும் கொண்ட இந்தியா போன்ற இருகிப் போன நாட்டில் "கண்ணனுக்கே ஆமது காமம்" என்பது கவிதை (தத்துவ) அளவிலேயே நிற்பதுதான் நிதர்சனமான உண்மை!” - என்ற மிகப் பரந்த நோக்கும் கொண்ட, இதுவரை ஊடுறுவிய, பத்து மடல்களுக்கும் முத்தாய்ப்பாக அமைந்த மடல் என்பதும் நிதர்சனம்...............

பின் குறிப்பு - ஒவ்வொரு மடலுக்கும் அதற்கேற்றாற் போல வித்தியாசமான பல படங்களையும் இணைத்திருப்பது மூலம் ஆசிரியர் இம்மடல்களை மேலும் சிறப்படையச் செய்திருப்பதும் நிதர்சனம்.

பாசுர மடல்களைச் சுவைக்க கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்கவும். 
 
 





பவள சங்கரி

unread,
Feb 3, 2011, 9:20:18 AM2/3/11
to மின்தமிழ்

On Feb 3, 7:04 pm, coral shree <cora...@gmail.com> wrote:
> *ஆழ்வார்க்கடியான் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி - 2. *
>
> *" ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும்*
> *
> *
> *ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும்” என்ற*
> *
> *
> *ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்*
> * *
> * ஒருமொழி ’நமச் சிவாய’ வென்பர்;*
> *
> *
> *‘ஹரிஹரி’யென் றிடினும்மஃதே ‘ராம ராம’*
> *
> *
> *‘சிவசிவ’வென் றிட்டாலும் அஃதே யாகும்*
> *
> *
> *தெரிவுறவே ‘ஓம்சக்தி’ யென்று மேலோர்*
> *
> *
> *ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.*
> *              *

> என்று...
>
> read more »

Subashini Tremmel

unread,
Feb 5, 2011, 2:49:45 AM2/5/11
to mint...@googlegroups.com

பவளா,
 
அருமையாக வந்திருக்கின்றது உங்களின் அலசல். மரபு விக்கியில் இணைத்த போதே மிகுந்த ஈடுபாட்டுடன் இப்பணியைச் செய்தீர்கள். 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இவை. உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
 
அன்புடன்
சுபா
 
2011/2/3 பவள சங்கரி <cor...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

coral shree

unread,
Feb 5, 2011, 3:54:36 AM2/5/11
to mint...@googlegroups.com
நன்றி சுபா. 

2011/2/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

N. Kannan

unread,
Feb 5, 2011, 9:50:17 PM2/5/11
to mint...@googlegroups.com
அன்பின் பவளா

காலை எழுந்ததிலிருந்து மாலை முயங்கும்வரை நம் கவனத்தை ஈர்க்க ஆயிரம்
விஷயங்கள் இருக்கும் போது இறைச்சிந்தனை இடையில் எதற்கு? எனும் கலி
காலமிது!

இதில் தாங்கள் இறைச்சிந்தனை தாங்கும் ஒரு அலசலை மேற்கொண்டு இருக்கிறீர்கள்.

பின்னூட்டம் என்பது கூட நுண் அரசியலாகிவிட்ட மடலாடற்குழு அமைப்பில்
தாங்கள் தொடங்கியிருக்கும் தொடருக்கு அதிகமாக யாரும் பதிலிடவில்லையெ என
வருந்த வேண்டாம். கட்சிகள் பெருகிவிடும் அரசியலைப்பில் ஆன்மீகத்திற்கும்
கட்சிகள், தொண்டர்கள், lobbying தேவைப்படுவது ஆச்சர்யமில்லை :-)

ஆன்மீகம் என்றால் கூட அதிலும் நம்மைக் கவரும் விஷயங்கள். ஒதுங்கும்
விஷயங்கள் என்று இருக்கின்றன. எல்லாம் எல்லைக்கட்டி, பாத்திகட்டி
விவசாயம் செய்யப் பழகிவிட்டதன் காரணம் :-) இது `நம்மவர் விஷயம்` இது
`பரவிஷயம்` என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது :-)) இந்த எல்லையை நாம்
எப்படிக் கடப்பது?

நாம் நினைப்பதை விடத்தமிழன் ஒரு 2000 ஆண்டுகளுக்கு முன் sophisticated ஆக
வாழ்ந்திருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. திணைக்கோட்பாடு ஒன்றே போதும்.
எப்படி நாம் வாழும் சூழல் நம்மை மாற்றி அமைக்கிறது எனும் அறிவு. ஏன்
நம்முள் இத்தனை வேற்றுமைகள் எனும் திறனாய்வு!

பக்தி காலத்தில் ஒருங்கிணைந்த, உலகு தழுவிய பார்வையை முன்வைக்கிறான்
தமிழன். எந்த வழியில் உட்புகுந்தாலும் சேரும் இடம் ஒன்றாகத்தான் உள்ளது.
அது ஆழ்வார்கள் வழியாகட்டும், நாயன்மார்கள் வழியாகட்டும். இரண்டு பேரும்
ஒரே விஷயத்தை வெவ்வேறு உருவகங்கள் கொண்டு வெவ்வேறு விதமாக விளக்க
முற்படுகின்றனர். அதுவும் நம் அறிவுவகை வேறுபடுவதால், நம்மிடையே
ருசிபேதம் இருப்பதால் தேவைப்படுகிறது. அல்வா சாப்பிட்டாலும், இட்லி
சாப்பிட்டாலும், கோதுமைக்களி உண்டாலும் இறுதியில் அவை சக்தி ரூபமாக மாறிய
பின்தான் யாக்கையின் செயற்பாடு நடைபெறுகிறது. சிலர் சாகபக்ஷிணி, சிலர்
மாமிச பக்ஷிணி. ஆயினும் உள்ளே நடக்கும் வேதிம மாற்றம் ஒன்றுதான்.
உயிர்சக்தி அடிப்படையாக ஒன்றுதான்.

உங்கள் அலசலில், உங்களுக்குள் தோன்றும் கேள்விகளை இறுதியாகப் பட்டியல்
இடுங்கள். அது ஒருக்கால் வாசகர் ஆர்வத்தைத் தூண்டலாம். பாசுரமடல்கள்
தோன்றிய காலத்தில் பெருத்த சூறாவளிகளைச் சந்தித்து உள்ளது. ஆயினும்
இறுதியில் அது பலரை நன்னெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. குறைந்த பட்சம்
சிந்திக்க வைத்திருக்கிறது!

இறைச்சிந்தனை இல்லையெனில் ஆரோக்கிய வாழ்வு இல்லை. இறைச்சிந்தனை
இல்லையெனில் முறையான அரசியல் இல்லை, இறைச்சிந்தனை இல்லையெனில் அழகியல்
இல்லை, இலக்கியமில்லை, ஆக்கமில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ள ஒரு
முக்கிய துறை பற்றிய உங்கள் அக்கரை உங்கள் சமூக ஈடுபாட்டைக் காட்டுகிறது.

இம்மடல்கள் கேள்வி கேட்பதன் மூலம், மீள்பார்வை செய்வதன் மூலம் நம் மரபை
அறிந்து கொள்ளத் தோன்றிய ஓர் முயற்சி. இதுவொரு தொடக்கமே! மீண்டுமொரு
ஞானவேள்வியைத் துவக்கியுள்ளீர்கள், எல்லோரும் வந்து குளிர்காயட்டும் :-)

நன்றி,

கண்ணன்

coral shree

unread,
Feb 6, 2011, 11:56:29 AM2/6/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணண் 

வணக்கம். தங்கள் ஊக்குவிப்பிற்கு முதற்கண் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

தங்கள் பாசுர மடல்களை முதன்முதலில் சுபா அவர்கள் என்னை தமிழ் மரபு விக்கியில் பதிவிடும் படி வேண்டிக்கொண்ட போது நான் பேராவலுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டதன் நோக்கம், சைவ சமயப் புராணங்கள், நாயன்மார்களின் வரலாறு என்று என் புகுந்த வீட்டின் ஆன்றோர்கள் மூலம்   செவிவழி ஞானம் சிறிதளவே கொண்டிருந்தேன்

.ஆழ்வார்கள் பாசுரம் அதிகமான பரிச்சயம் இல்லாததால், சுபா கூறியவுடன், அந்த ஆழ்வார் பெருமானே என மீது கருணை பொழிந்து பாசுர மடல்களை படித்து இன்புறும் பேரானந்தத்தை அளிக்க முன்வந்துள்ளதாகவே எண்ணி அப்பணியை மேற்கொண்டேன். 

ஒவ்வொரு மடலையும் படித்து சிந்திக்கக்கூடிய இனிய அனுபவமும் பெற்றேன். ஆம் அதில் சிந்திக்க வேண்டிய விசயங்கள் நிறைந்திருப்பதும் உண்மையே.

இன்று மதங்களுக்குள் இருக்கும் சண்டை போதாதென்று, உள்நாட்டுப் போர் போல இந்து மதத்திற்குள்ளேயே நீ வைணவன், நான் சைவன் என்றெல்லாம் வழக்காடுவதை பல இடங்களில் பல வடிவங்களில் காண முடிகிறது.

ஆழ்வார்க்கடியானின் இந்த பாசுர மடலில் என்னைக் கவர்ந்த மிக மேலான விடயம் என்னவென்றால், திரு கண்ணன் அவர்களின், ஹரியும், சிவனும் ஒன்று என்கிற மேன்மையான தத்துவங்கள் தான். பல இடங்களில் அதனை பல்வேறு நிகழ்வுகள் மூலமும், யதார்த்த சிந்தனைகள் மூலமும், பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிஞர்களின் மேற்கோள்கள் மூலமும் அதை நிரூபிக்கும் பெரும் முயற்சியும் மேற் கொண்டிருக்கிறார். 

ஆன்மீகத்தையும், அறிவியலையும் அழகாக இணைத்து அதை ஆன்றோர்களும், சான்றோர்களும் ஒப்புக் கொள்ளும் வகையில், பெரு முயற்சி எடுத்து, 108 மடலாக [ தன்னுடைய 2 வருட உழைப்பு என்று உவகையுடன் தானே ஒரு முறை கூறினார்.] வடிவமைத்துள்ளார்.

இத்துணை பெரு முயற்சியும் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதை விட, மத வாதம் சாதி பேதம் இவை முற்றிலும் ஒழிய வேண்டும் என்ற அவருடைய உயரிய நோக்கம் என்னை பெரிதும் கவர்ந்ததே, உண்மை. 

அதனை முடிந்தவரை மிக இயல்பாகவும், அடுத்தவர் மனம் நோகாத வகையிலும் மிக நாசூக்காக எழுதிய பாங்கும் என்னை இது பற்றி எழுதத் தூண்டியது. 

பின்னூட்டம் வரவில்லை என்பதால் யாரும் இதை ப்டிக்க முன்வரவில்லை என்று என்னால் எடுத்துக் கொள்ள இயலவில்லை. காரணம் நம் மின் தமிழ் மற்றும் தமிழ் வாசல் அன்பர்கள் அனைவரும் பெரும் ஞானம் உடையவர்களாகவும், ஏற்கனவே ஆழ்வார்களின் பாசுரங்களை ஆழமாக கற்றறிந்தவர்களாக இருப்பதாலும் பின்னூட்டம் போட எண்ணாமல் இருக்கலாம்.

ஆனாலும் இம்மடல்களில் வித்தியாசமான கோணத்தில் விளக்கங்கள் அளித்திருப்பதும் படிக்கும் ஆவலை தூண்டுவதும் நிதர்சனம்.

தாங்கள் கூறியுள்ளது போல இந்த ஞானவேள்வியின் பலன் அனைவரையும் சென்றடையும் படி ஆழ்வார் பெருமக்களின் அருள் வழிநடத்தும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் எனக்குண்டு.

நன்றி,

2011/2/6 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kamala Devi

unread,
Feb 6, 2011, 7:21:52 PM2/6/11
to mint...@googlegroups.com
பவழம்
முன்னெல்லாம் கண்ணனிடம் கவிதை எங்கே என்று கேட்பேன்.
உடனே மறுநாளே அவரும் கவிதை அனுப்புவார்,இப்பொழுது அதுவும் காணோம்
மின்தமிழில் உள்ளார்ந்த பிறகு ,இவரது இலக்கியம் குறைந்தது வருத்தமளிக்கும் விஷயம்.
இவரது கற்கக்கசடற ,அற்புதமான ஒரு சிறுகதை.இப்பொழுதெல்லாம்
விஞ்ஞானியாக மட்டுமே பல தருணங்களில் காட்சியளிக்கிறார்.
வாழ்க்கையும் அதானே, அவ்வப்போது மலேசிய நிகழ்வில் மட்டும் பொற்கணங்கள்
வாழ்த்துவோம்
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: coral shree <cor...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 7 February 2011 00:56:29
Subject: Re: [MinTamil] ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள் - ஓர் அலசல்

அன்பின் திரு கண்ணண் 

வணக்கம். தங்கள் ஊக்குவிப்பிற்கு முதற்கண் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

தங்கள் பாசுர மடல்களை முதன்முதலில் சுபா அவர்கள் என்னை தமிழ் மரபு விக்கியில் பதிவிடும் படி வேண்டிக்கொண்ட போது நான் பேராவலுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டதன் நோக்கம், சைவ சமயப் புராணங்கள், நாயன்மார்களின் வரலாறு என்று என் புகுந்த வீட்டின் ஆன்றோர்கள் மூலம்   செவிவழி ஞானம் சிறிதளவே கொண்டிருந்தேன்

.ஆழ்வார்கள் பாசுரம் அதிகமான பரிச்சயம் இல்லாததால், சுபா கூறியவுடன், அந்த ஆழ்வார் பெருமானே என மீது கருணை பொழிந்து பாசுர மடல்களை படித்து இன்புறும் பேரானந்தத்தை அளிக்க முன்வந்துள்ளதாகவே எண்ணி அப்பணியை மேற்கொண்டேன். 

ஒவ்வொரு மடலையும் படித்து சிந்திக்கக்கூடிய இனிய அனுபவமும் பெற்றேன். ஆம் அதில் சிந்திக்க வேண்டிய விசயங்கள் நிறைந்திருப்பதும் உண்மையே.

இன்று மதங்களுக்குள் இருக்கும் சண்டை போதாதென்று, உள்நாட்டுப் போர் போல இந்து மதத்திற்குள்ளேயே நீ வைணவன், நான் சைவன் என்றெல்லாம் வழக்காடுவதை பல இடங்களில் பல வடிவங்களில் காண முடிகிறது.

ஆழ்வார்க்கடியானின் இந்த பாசுர மடலில் என்னைக் கவர்ந்த மிக மேலான விடயம்மை. 


--

நா.கண்ணன்

unread,
Feb 6, 2011, 7:46:07 PM2/6/11
to மின்தமிழ்
அன்பின் கமலம்:

மூன்றாவது ஆள்!
ஒருநாள் ரங்கன் கூப்பிட்டு திட்டிவிட்டார் (அன்புத்திட்டு).
எல்லாவற்றையும் விட்டுவிட்டு கவிதை உலகிற்கு மீண்டும் வாருமென்று.
மலேசியா நயனம் பத்திரிக்கை ஆசிரியர் ‘இணையம்’ இலக்கியத்தைக்
கெடுத்துவிடும், ஓடி வந்துவிடுங்கள் என்று பயமுறுத்திவிட்டார்.
தாங்களும், மீனாவும் கவிதை ஊற்று என்னுள் அடைபட்டுவிடாமல் காக்கும்
தேவதைகள்!
இந்த மின்தமிழுக்கென்று வலுவான மட்டுறுத்தர், ஆசிரியர் குழு
அமைந்துவிட்டால் ‘அக்கடா!’ என்று இலக்கியப்பிரவேசம் செய்யலாம்!

ஆயினும் புதுவருட விடுமுறையில் 3 புத்தக வேலைகள் செய்துள்ளேன். இன்னும்
வெளிவரத்தக்க விஷயங்கள் நிரம்ப உள்ளன. என் கவிதை இன்னும் அச்சுலகம்
காணவில்லை.

தங்கமீன் (சிங்கப்பூர்) பாலு வலிந்து என்னிடமிருந்து ஒரு கட்டுரை
வாங்கிவிட்டார். ‘பிரம்படி’ வாங்கி, பிட்டுக்கு மண் சுமந்த எம் ஆலவாய்
அண்ணல்போல் பிரம்படிக்கு இப்போது இலக்கியம் நடந்துகொண்டுள்ளது :-))

க.>

Raja sankar

unread,
Feb 7, 2011, 12:16:30 AM2/7/11
to mint...@googlegroups.com
அன்பின் பவள சங்கரி,

இணையத்தில் எழுதும் மடல்களை படித்து அதற்கு கருத்துரை எழுதுவது அரிது. தாங்கள் அதை செய்ய வந்துள்ளது ஒரு முன்னோட்டாக அமையட்டும். கண்ணனின் பாசுர மடல்களை இன்னமும் படிக்கவில்லை. படித்தால் தான் நீங்கள் எழுதியது புரியும். ஆகவே அதை முதலில் படித்து விட்டு பின் உங்கள் கட்டுரைக்கு விமர்சனம் எழுதுகிறேன். 


ராஜசங்கர்



2011/1/30 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Feb 7, 2011, 12:49:43 AM2/7/11
to mint...@googlegroups.com
நன்றி திரு ராஜா.

2011/2/7 Raja sankar <errajasa...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 7, 2011, 1:56:20 AM2/7/11
to mint...@googlegroups.com
அன்புடைய கண்ணன் அவர்களே
உங்கள் படைப்பைத் திறனாய்வு செய்யவும் தங்கள் படைப்புக்கு மறுமொழி கூறுவதன் மூலமும் ஆழ்வார்க்கடியானின் பாசுர மடல்கள் புதிய பரிமாணத்தை அடைய முடியும்
தங்கள் மூலப் படைப்பை மின்தமிழ் சான்றோர்கள் திறனாய்வுசெய்ய அதற்கு நீங்கள் மறுமொழி கூறுவதன் மூலம் உங்கள் படைப்பு மேம்பாடடைந்து அத்தொகுப்பை மின்தளத்திலும் அச்சிலும் வெளியிடலாம்.
ஆய்வு தொடர்பான சில பருவ இதழ்களில் ஒரு ஆய்வுக் கட்டுரை சமநிலை ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பாளர்கள் சுட்டிக்காட்டிய கருத்துக்களுக்கு விளக்கத்தை ஆய்வாளரிடம் கேட்டுப் பெற்று - கட்டுரை, மதிப்பீடு, மறுமொழி என்று வெளியிடப்படுவதுண்டு
அதுபோன்றே ஒரு தொடக்கமாக உங்கள் ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல் படைப்பையும், பவளா திறனாய்வையும் உங்கள் மறுமொழியையும் மின்நூலாக புத்தகமாக வெளியிடலாம் என்று கருதுகிறேன்.
நாகராசன்

2011/1/30 coral shree <cor...@gmail.com>

Kamala Devi

unread,
Feb 7, 2011, 5:02:47 AM2/7/11
to mint...@googlegroups.com
ரங்கனே திட்டிவிட்டாரா? பிறகென்ன? பிகு பண்னாமல் எழுதுங்கள்,
மோஹனின் த்ரிலோகர் கட்டுரை என்ன அற்புதம்.?
ஒழுங்காய் படிக்கமுடியாமல் , பாடுபட்டு சேகரித்து படிக்கிறேன்.
ஆனால் ஞான் மோஹனை மட்டும் வாழ்த்தமாட்டேன்.
அவர் கிண்ணாரம் சொல்வார்.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

N. Kannan

unread,
Feb 7, 2011, 6:34:41 AM2/7/11
to mint...@googlegroups.com
அன்பின் பேராசிரியரே!

தாங்கள் மின்னுலகை நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அதன் செயற்பாட்டு
நுணுக்களைச் சட்டென இனம் காட்டிவிடுகிறீர்கள்.

தமிழின் முதல் மடலாடற்குழு! பல்வேறு பரிசோதனை முயற்சிகள் ஒரே சமயத்தில்
ஓடிக்கொண்டிருந்த காலம்!

என்புருகும் அன்பு என்றால் என்ன என்பது கேள்வி. நான் ஆய்வு செய்து
கொண்டிருந்த காலம். எங்களோடு ஒரு பேராசிரியரும் ஆய்வு செய்தார். நிறைய
வயது வித்தியாசம். அப்போது கல்லூரிப் பேராசிரியர்கள் இப்படி வந்து
முனைவர் பட்ட ஆய்வு செய்வதுண்டு. அவரோடு மதுரை கூடல் அழகர் சந்நிதிக்குப்
போகும் போது பெருமாளைப் பார்த்து கண்ணீர் சொரிந்து கொண்டு இருந்தார்.
அப்போது நான்லெல்லாம் கோயிலுக்குப் போனால் கன்னத்தில் நாலு மாற்றி,
மாற்றி போட்டுக்கொண்டு, சாமிக்கு முன்னால் இறுக்க கண்ணை மூடிக்கொண்டு
வழிபடும் வழக்கம். இவர் வழிபட்டது மிக வித்தியாசமாக இருந்தது. அது
நெஞ்சிலேயே நின்று விட்டது! விடை தெரியாமல்.

உண்மையில் எனக்கு ஆழ்வார்களை அறிமுகப்படுத்தியவர் ஒரு பிரெஞ்சு மாது.
தன்னிடம் இருந்த நாலாயிர திவ்யப் பிரபந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டு
பிரான்சு போய்விட்டாள். எத்தனையோ புத்தகங்களை அங்கங்கே விட்டு விட்டுப்
போய்விடுபவன் (ஜே.கே எபெஃக்ட்). ஆனால் இது மட்டும் என்கூடவே வந்து கொண்டு
இருந்தது. சரி, என்னதான் இந்த மாஜிக் பாக்ஸ் குள்ள இருக்குன்னு
ஆரம்பிச்சேன்.

நல்ல சமயம் அப்போது புரோஜெக்ட் மதுரை எனக்குத் தோதாக மின்வடிவ
திவ்யப்பிரபந்தத்தைக் கொடுத்தது. தேடுவது எளிதாக இருந்தது.

அப்போது இருந்த புரிதலில் எதோ தைர்யத்தில் தொடங்கிவிட்டேன். அமோக
வரவேற்புக் கிடைத்தது. அதன் நடை, கருப்பொருள் அன்றைய தமிழ்.நெட்
தீர்மானித்தது. அதுவொரு தேவை அறிந்து கொடுக்கப்பட்ட மருந்து
(நா.கணேசனாருக்கு நினைவில் இருக்கும். அவர் சொல்லி ஒரு
பத்துப்பாசுரத்திற்கு மடல் எழுதி இருக்கிறேன்). பாராட்டு வரும் போது
எதிர்ப்பும் வருதல் சகஜம்தானே! எனவே எனது “வை+நவம்” கொஞ்சம் ஆசாரமாக
இருக்கக்கூடியவர்களுக்கு உறுத்தியது. எனவே ஒவ்வொரு மடலுக்கு அப்புறமும்
சண்டைதான் :-) ஆனால், ஜாலியாக இருக்கும். ஏனெனில் எனக்கு நிறைய
கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பாராட்டு + எதிர்குரல்களை இங்கே
தொகுத்துள்ளேன் (ஒரு கால ஆவணமாக இருக்கட்டுமென்று):

http://www.subaonline.net/nakannan/articles/comments.html

பரனூர் பெரியவரின் பாதஸ்பரிசம் படும் பாக்கியம் ஒருமுறை கிடைத்தது. அவரது
வைணவ உரைகளைத் தொடர்ந்து கேட்டபோது, “அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன்”
என்பது போன்ற நிலைகள் என்னவென்று புரிந்தது. அதன் பின் என்
வழிபாட்டுமுறையே முற்றும் முழுவதுமாக மாறிவிட்டது. பாசுரத்தின் ஆழமான
உட்பொருள் விளங்கத்தொடங்கியது.

மிகப்பின்னால் (அதாவது ஆழ்வார்க்கடியான் வலைப்பதிவு நிறைவுற்ற நிலையில்)
ரங்கன் வந்து சேர்ந்தார். அவரது காலக்ஷேபத்தில் நிறைய ஆழம் காண
முடிந்தது. இப்போது எழுதினால் வேறு மாதிரி எழுதுவேன். ஆயினும் அன்று
இருந்த கண்ணன் ஒரு பரிணாம நிலை. அதை மறுதலித்து இப்போது
என்னவாகப்போகிறது? அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டேன்.
என்னைத்திட்டியவர்கள் சொல்லிலும் பொருள் உள்ளதே! மரபு என்பது
கோமாளித்தனமா வேஷங்களை மேலே பூசிக்கொண்டு ஆழமாக இருக்கிறது. அதன் இருப்பே
அப்படி! என்ன செய்ய!

இவ்வளவு நாளுக்குப் பிறகு மீண்டும் பவளா இக்கட்டுரைகளை வாசித்து அதனோடு
பயணப்பட்டு, தன் உள அனுபவங்களோடு ஒப்பிட்டு ஒரு புதிய பார்வையை
வைக்கிறார். அதுவும் மகிழ்வே! எதிர்வினை வந்தாலும் மகிழ்வே! முன் போல்
இல்லாமல் இச்சபையில் துணை நிறைய உள்ளது. நல்லது சொல்லி திருத்துவோர்
உள்ளனர். எனவே பயமில்லை. பயமற்று இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்ம
கேள்விகளை, `ப்பூ` என்று சொல்லும் அளவிற்கு அக்காலத்திலேயே! ஏன்
இராமானுஜர் முன்னிலையிலேயே கேட்டுள்ளனர். வைணவம் பெருமாளை நம்பு என்று
சொல்வதே இல்லை. “பார்” என்றுதான் சொல்கிறது. எனவே கேள்விக்கு பயப்படுபவன்
உண்மையான வைணவனாக இருக்கமுடியாது. கிருமி கண்ட சோழன் மகன் சொன்னானாம்,
“திருவாய்மொழியும், இராமாயணமும் என்ற மிகப்பலமான தூண்களின் மேல்
எழுப்பப்பட்டுள்ள இதற்கு எப்பயமும் இல்லையென்று”. நம் ஆச்சார்ய சீலர்கள்
கோட்டை, கோட்டையாக அரண் அமைத்துவிட்டுப் போயிருக்கின்றனர். எனவே
பயமில்லை. பாசுரமடல்கள் உடைந்து போன வழிகாட்டியாக இருந்தாலும்
கோட்டைக்குள் போய்விட்டால் கவலை இல்லை. திசை காட்டுவதுதான் இதன் வேலை.

இப்போதைக்கு இது போதும்....

நா.கண்ணன்

2011/2/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Feb 7, 2011, 6:35:25 AM2/7/11
to mint...@googlegroups.com
அது என்ன கிண்ணாரம். ஏதோ!! கேட்க நன்றாக உள்ளது :-))

க.>

2011/2/7 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

coral shree

unread,
Feb 11, 2011, 10:02:53 AM2/11/11
to mint...@googlegroups.com
ஆழ்வார்க்கடியான் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி - 3.


 இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். குறை இருந்தால் தானே தேவைகள் உண்டாகும்.’குறைவிலா நிறைவே’, என்று இறைவனை மணிவாசகர் அழைக்கின்றார். உயிர்கள் இன்பம் பெற வேண்டியே தேடல்களைத் தொடர்கின்றன. இறைவனோ இன்பமே வடிவானவன். 

‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்’ என்று தொல்காப்பியம் அருள்கின்றது. அதாவது, இறைவன் இயல்பாகவே வினைகளினின்றும் நீங்கி விளங்கிய அறிவினை உடையவன் என்பதாகும். அதனால் அவன் முற்றறிவினன் ஆகின்றான். 

‘நேரிழையைக் கலந்திருத்தே புலனைந்தும் வென்றான்’, என்று அப்பர் பெருமான் அருள்கின்றார். இறைவன் அம்மையைக் கூடியிருத்தல் ‘போக வடிவம்’, என்பர். இவ்வாறு அவன் இருத்தல், தான் போகம் அனுபவிக்க அன்று, உயிர்கள் போகம் அனுபவிக்க வேண்டியே அம்மையப்பராக இருக்கின்றான் 


கோதை நாச்சியாரின், மழலைப்பருவம் முதல் கன்னிப்பருவம் வரையிலான அவள் அழகை, அதே கொஞ்சு மொழியில் விளக்கி தன்னை நல்ல கதை சொல்லியாகவும் நிரூபித்துள்ளார் ஆசிரியர்.வாலிபப் பருவத்தின் கோதை கொள்ளும் பசலை நோயையும், கண்ணனின் லீலையையும் வழக்கு மொழியிலேயே சொல்லிய விதம் இனிமையைக் கூட்டத்தான் செய்கிறது.

அவ்வையின் அமுத மொழியை, ஸ்டீபென் ஜே குட் என்கிற அறிஞரின் மேற்கோள்கள் கொண்டு உவமைப்படுத்தியிருப்பது சுவை. பாசுரங்களில் அழகான வார்த்தைகளின் பிரயோகம் பற்றிய ஆசிரியரின் விளக்கம் கருத்தாழம் மிக்கது.

தான் பிறந்த ஊராகிய திருப்பூவணம், காசியை விட வீசம் மடங்கு அதிக புண்ணியம் வாய்ந்தது, என்று அழகான வட்டார வழக்கு மொழியில் வரைந்திருப்பது வரவேற்கத் தகுந்தது.இம்மடலில் பல இரசிக்கத்தகுந்த உவமைகள் இருந்தாலும், அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைவது, ஆசிரியரின் மத நல்லிணக்கத்திற்கொரு எடுத்துக்காட்டானதொரு உவமானம்தான்!

ஆண்டாளின் காதலையும், வள்ளுவனின் காமத்துப்பாலையும் கணக்காக இணைத்து, புணர்தலை, இன்றைய தமிழனின் பாசாண்டித்தனமற்ற மதிப்பீடு குறித்தும் விளக்கிய பாங்கு வித்தியாசம்.

’வாழ்வு நிலையே கண்ணம்மா”, என்ற மடலில், பெரும் சர்ச்சைக்குரிய வினாவான, பெரியாழ்வார்தான் ஆண்டாளா என்கிற வினாவை எழுப்பிய பேராசிரியர் கார்த்திகேசு,அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்குமளவிற்கு வைணவமும், பாசுரமும் அறிந்த பெரியோன் தான் இல்லை என்பதை நிறைந்த தன்னடகத்துடன் குறிப்பிட்டாலும், அதற்கான விளக்கத்தை மிகத் தெளிவாக, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையையும் துணைக்கழைத்துக் கொண்டு, பலரகமான பக்தி ரசம் மற்றும் இஷ்ட தெய்வ உபாசனை இப்படி அனைத்தையும் ஊடுறுவி விளக்கியிருப்பதும் தெளிவு.

"தாழ்குழலாள் துணிந்த துணிவை", என்ற வரிகள் முக்கியமானவை என்பதற்கு ஆசிரியர் கூறும் கருத்து சற்றே துணிச்சலானதும் கூட.

”ஆண்டாளை பெண்தானா என கேள்வி கேட்க வைத்தது எது? அவளது விரகக் கவிதைகள். விரகக் கவிதைகளை ஆண்கள் எழுதலாம், ஆனால் பெண் எழுதினால் தப்பு என்னும் ஆணாதிக்க மனோ பாவம். இதற்கு மாற்று உண்டா? ஸ்ரீராமானுஜர் சொல்கிறார், "கண்ணனுக்கே ஆமது காமம்" எனவே நாமெல்லோரும் பெண்கள்தான் என்று!
என்ன ரெ.கா சார்? இப்போ நீங்க ஆம்பிளையா? பொம்பளையா?” -

 என்ற வரிகள், “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பாடிச் சென்ற பாரதியை நினைவில் கொள்ளச் செய்கிறது.

சுதந்திரமான படைப்பிலக்கியம் பற்றிப் பேசும் ஆசிரியரின் வியாக்கியானம் மிக நவீனத்துவம்.சிம்பொனியைப் படைத்த பீத்தோவனின் பார்வையையும், ராம ஸ்மரனையில் மூழ்கிக் கிடந்த தியாகராஜரையும், ராகதேவதைகள் கொஞ்சிச் சீராட்டியதைச் சுவைபட விளக்கியது இனிமை.

அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இடையே உறுதியான பாலமைக்க ஆசிரியர் எடுத்திருக்கும் முயற்சி ஒப்புக் கொள்ளும் வகையிலேயே இருப்பதாக அமைகிறது.ஐன்ஸ்டீனின் குவாண்டம் பற்றிய கிண்டலான தத்துவத்தையும், நம்மாழ்வார் என்ற தமிழ் கவி அவ்விஞ்ஞானியோடு ஒத்துப் போவதையும் திறம்பட விளக்கியுள்ளார்.

திருநாவுக்கரசரின்,” யாமார்க்கும் குடியல்லோம்” மற்றும் திருமூலரின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, என்று சமூகக் கொடுமைகளைச் சாடிய பாடல்கள் இலக்கியச் சுதந்திரப் போக்கின் முகவுரையாகக் காட்டியிருப்பது சிறப்பு. 

“ இத்தகைய பாலியல் சுதந்திரம் தற்போதைய எழுத்துகளில் அம்பை, வாசந்தி இவர்களிடம் காணக்கிடைக்கிறது. ஆனால் அதற்கு தமிழகம் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 1200! இருபதாம் நூற்றாண்டில் பெரும் சமூக மாற்றங்களுக்குப் பிறகுதான் மேலைத்தேசத்து பெண்களாலும் இப்படிப் பட்ட துணிவுடன் இப்போது பேசமுடிகிறது, எழுத முடிகிறது. ஆனால் ஆண்டாள் இதைச் சொன்ன காலமோ எட்டாம் நூற்றாண்டு!” - இது ஆசிரியரின் முற்போக்குச் சிந்தைக்கு ஒரு எடுத்துக்காட்டு!

சில்லென்று அழையேல், என்ற இதமான மடல், திருப்பாவை அனைத்தையும் எழுச்சி கீதங்கள் என்று வருணித்தாலும், ஆசிரியரின், இயல்பான சொற்பிரயோகம், நல்ல அனுபவ மொழியாகவும், இதமான வாசிப்பனுபவம் அளிப்பதாகவும் இருப்பதும் இனிமை.

”எல்லே, இளங்கிளியே! என மதுரமாய் அழைக்கிறாள், மானுட மேன்மைக்கு! விழித்தெழுவோம் தோழர்களே! ”- என்று சமூக நல்லுணர்வையும் இணைத்தே பயணித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆண்டாளின், சிற்றில் பருவம், விடலைப் பருவம், வாலிபப் பருவம், திருமணப் பருவம், தாய்மைப் பருவம், இப்படி அனைத்தையும் அழகான மொழி நடையில், விரிவாக விளக்கியிருக்கும் மடல், ‘விண்ணில் மேலாப்பு’.

சைவமும், வைணவமும் தோள் சேர்த்து, சங்கம் வளர்த்து, தமிழ் காத்த மதுரையம்பதியை திரிபுரம் எரித்த அங்கயற்கன்னி, ஆணுக்கு நிகராக ஆட்சி செய்தாள், என்று அழகுற விளக்கிய நடை நல்ல வாசிப்பனுபவம். அது மட்டுமன்றி, தெய்வ பக்தி நிலையின் மூலம் சகோதரத்துவத்தையும், சகமனிதத்துவத்தையும் போற்ற முடியும் என்பதையும் விவரித்திருக்கும் பாங்கு போற்றுதற்குரியதாகும்.

”எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே”, என்ற மடல், முழுவதும் சரணாகதி தத்துவத்தை அழகுற விளக்கப்பட்ட மடலாகும்.

”என்று, உலகு என்பது "நாம்"தான் என்று உணர்கிறோமோ அன்று பெரும் பொறுப்பை நாம் உணர்வதுடன், இந்த உணர்வுக்கும் உள்ளிருந்து இயங்கும் ஒரு சக்தியைக் கண்டு கொண்டவராவோம். அந்நிலையில், மனப்பூர்வமாய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உலகு தழுவிய தாக்கம் தானாகவே அமைந்துவிடுகிறது. இந்த நோக்கில்தான் நம்மாழ்வார்/இராமானுசர் செய்த சரணாகதியை பார்க்க வேண்டும்.” - என்ற ஆசிரியரின் கூற்று, நல்ல சமுதாய நல்லிணக்கச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதும் சிறப்பு.

மேற்கண்ட பாசுர மடல்களின் மூலப்பிரதியை படித்து மகிழ, கீழே சொடுக்கவும். நன்றி.

.பாசுர மடல் 021 : சின்னஞ்சிறு கிளியே !
பாசுர மடல் 022 : செய்ய தாமரைக் கண்ணினாய் !
பாசுர மடல் 023 : செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா !
பாசுர மடல் 024 : வாழ்வு நிலையே கண்ணம்மா !
பாசுர மடல் 025 : வேங்கடவற்கு என்னை விதி.
பாசுர மடல் 026 : படைப்பிலக்கியமும் சுதந்திரமும் .
பாசுர மடல் 027 : சில்லென்று அழையேல்.
பாசுர மடல் 028 : விண்ணீல மேலாப்பு !
பாசுர மடல் 029 : நின்மலா ! நெடியாய் !
பாசுர மடல் 030 : எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே !


-- 

                                                                           

Consent to be nothing..!

unread,
Feb 11, 2011, 10:27:55 AM2/11/11
to மின்தமிழ்
அகராதியில் இருந்து
பொருள்: , கின்னரம், s. a large fiddle, வீணை; 2. an organ. , கின்னரம்,
s. a large fiddle, வீணை; 2. an organ.
உச்சரிப்பு: kiṇṇāram kiṇṇāram
ஆங்கில விளக்கம்:

கிண்ணாரம் - உதாரணம்
கிண்ணாரக்காரன், கிண்ணாரம் வாசிக்கிற வன், --கொட்டுகிறவன், an organist,
a fiddler, one that plays upon an organ or a fiddle.
கிண்ணாரக்காரன், கிண்ணாரம் வாசிக்கிற வன், --கொட்டுகிறவன், an organist,
a fiddler, one that plays upon an organ or a fiddle.

thanks to senthamil.org

shylaja

unread,
Feb 11, 2011, 10:33:49 AM2/11/11
to mint...@googlegroups.com
ஏதமில் தண்ணுமை எக்கம்மத்தளி
யாழ்குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர், கருடர்கள்
கந்தர்வர்வர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பளிய் எழுந்தருளாயே!
 
பாடுபவர்கள்கின்னரர்கள் என தெரிகிறது.
 
 

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்


2011/2/11 Consent to be nothing..! <kris...@gmail.com>

N. Kannan

unread,
Feb 11, 2011, 11:04:01 PM2/11/11
to mint...@googlegroups.com
நம்ம ரங்கனுக்கு நன்றாகப் பாடவரும் என்பதற்காக அவரை நம் கமலம் கின்னரர்
என்று சொல்ல வேண்டியதில்லை :-))

க.>

2011/2/12 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Feb 11, 2011, 11:42:04 PM2/11/11
to mint...@googlegroups.com
கிண் என்று இருப்பதாலும் அப்படி சொல்லி இருக்கலாமே கண்ணன்:)  மோGUN   ரங் GUN   இதுக்கு என்னை சுடாமலிருக்கக்கடவது:)

2011/2/12 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 11, 2011, 11:49:11 PM2/11/11
to mint...@googlegroups.com
மோGUN   ரங் GUN இரட்டைக் குழல் DOUBLE BARREL. அடடா GUNணனை மறந்து விட்டீர்களே.
நாகராசன்

2011/2/12 shylaja <shyl...@gmail.com>

N. Kannan

unread,
Feb 11, 2011, 11:50:53 PM2/11/11
to mint...@googlegroups.com
2011/2/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> மோGUN   ரங் GUN இரட்டைக் குழல் DOUBLE BARREL. அடடா GUNணனை மறந்து
> விட்டீர்களே.
> நாகராசன்

ஆகா! நம்மைத் தீவிரவாதிகளாக்கும் ஒரு முயற்சி நடக்கிறதே இங்கே!! :-)))

க.>

Nagarajan Vadivel

unread,
Feb 11, 2011, 11:56:46 PM2/11/11
to mint...@googlegroups.com
GUN ணேசனார் GUN னில் பட்டால் இதுபோன்ற ஒருங்குறியீட்டுக்ககுத் தீவிரமாய்ப் போராடுவார்
நாகராசன்

2011/2/12 N. Kannan <navan...@gmail.com>

--

devoo

unread,
Feb 12, 2011, 12:33:24 AM2/12/11
to மின்தமிழ்
>> எனவே எனது “வை+நவம்” கொஞ்சம் ஆசாரமாக இருக்கக்கூடியவர்களுக்கு உறுத்தியது <<

இதுவும் உண்மைதான்; ஆனால் இந்த ‘வைநவம்’ வேணுவை ஏந்தியிருக்கும்
’வைணவ’னான கண்ணபிரானுக்கு உகப்பை அளிப்பது.

’தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே’ என்னும் மனப்பாங்கோடு
எழுதியுள்ளீர்கள். ’அண்டம் மோழை எழ’ ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாசுர
மடல், பின் நவீனத்துவம் இழையோடினாலும்


தேவ்

> 2011/2/7 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:


>
> > அன்புடைய கண்ணன் அவர்களே
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Feb 12, 2011, 3:53:25 AM2/12/11
to mint...@googlegroups.com
2011/2/12 devoo <rde...@gmail.com>:

>
> ’தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே’ என்னும் மனப்பாங்கோடு
> எழுதியுள்ளீர்கள். ’அண்டம் மோழை எழ’  ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாசுர
> மடல், பின் நவீனத்துவம் இழையோடினாலும்
>

போகப்போக அவன் உவப்பே முக்கியமாகப் படுகிறது. ஆரம்பத்தில் மழலை மொழியில்
அப்பா சிரிக்கப் பேசினாலும் போகப்போக பேசாமல் கண்ணீர் மல்கவே
ஆசைப்படுகிறது உள்ளம். பாவம்! அவனொரு ஜோக்கரை இழந்துவிட்டான் :-)

க.>

coral shree

unread,
Feb 12, 2011, 4:29:13 AM2/12/11
to mint...@googlegroups.com

coral shree

unread,
Feb 17, 2011, 1:45:23 PM2/17/11
to mint...@googlegroups.com
’ஆழ்வார்க்கடியான் பாசுர மடல் - ஓர் அலசல் - பகுதி - 4.

” உற்றநோய் நோன்றல் உயிக்கு உறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற்கு உரு “
                   [குறள் - 261]

      ’ தவம் ’ என்பதற்கு ஆன்றோர்கள் பல்வேறு கருத்துக் கொண்டிருந்தாலும், ஐயன் திருவள்ளுவனார், உருவமைக்கும் தவம் என்பது மிக எளிதான வாழ்வியல் தத்துவமாகும். வேடம் புனைந்து, வீட்டைத் துறந்து, காட்டை நோக்கிச் சென்று உணவைத் துறந்து, மூச்சையடக்கி, உடலை வருத்தச் சொல்லவில்லை. மற்று,அவர் பிறவுயிர் படும் துன்பங்கள் கண்டிரங்கி அவற்றின் துன்பம் களைந்து அவை இன்புறச் செய்தல்., மற்றவுயிர்கள் துன்புறுமாறு தீமை செய்யாதிருத்தல், இவையே தவமாகும் என்று உணர்த்துகிறார். 

’கடவுள்’ என்பவன் அனைத்துப் பொருட்களையும் கடந்து உள்ளிருப்பவன். கட+ உள் . ஆணாகி, பெண்ணாகி, அலியுமாகி நிற்பவன். ஆண்டவனை பல்வேறு வடிவங்களில் வழிபடுதல் மனிதனின் இயல்பு. புராணங்கள் இது பற்றியே தெளிவாக விளக்குகின்றன. இப்புராணங்கள் தத்துவ ஞானத்தை உணரும் பக்குவத்தை எளிதாக உணர்த்தி, நம்பிக்கையையும், பக்தியையும் நிலைபெறச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டதாகும். கடவுள் உயிர்களாகிய நம்மிடத்து பேரருள் கொண்டு, இயல்பாகவே நம்மிடத்துள்ள ஆணவம் என்னும் மன அழுக்கைப் போக்குவதற்கு பல வகையிலும் செயல்படுகிறார். அந்த ‘ஆணவம்’ அழியுங்கால், அன்பே சிவம் என்ற பக்குவம் நிலைபெற்று, மேலும் பக்குவமடைந்த நிலையில் ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மிக உன்னத நிலையை சென்றடையும் பேறும் பெறுகிறான், மனிதன் என்பதும் கண்கூடு.

அந்தவகையில்ஆழ்வார்க்கடியானின,பாசுரமடல்கள்,

’பாவம்’ என்பதன் மூலம் மற்றும் சாதி மத பேதத்தினால் விளையும் குழப்பம், அதனைத் தெளியச் செய்யும் உபாயம் இப்படி சமூக வாழ்வியல் அவலங்களின் கூறுகளை, அறிவியல், அடிப்படை மரபுத் தொடர் மூலக் கூறான டி,என்.ஏ.வை எடுத்துக் கொண்டு, இறைமை கொண்ட உள்ளத்தின் போக்கின்  கூறுகளையும் , நம்மாழ்வாரின் ‘கதறல்’ கொண்டு,
"என் சரண் என் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே" என்று !!சரணாகதித் தத்துவத்தை திறம்பட விளக்கியிருப்பது சிறப்பு. 

சரணாகதி என்ற உயர்ந்த தத்துவத்தை, கீதையின் பாதையில், 

"கண்ணன் திருவடி எண்ணுக மனமே....
சிவனும் வானோர் எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே
கண்ணன் திருவடி எண்ணுக மனமே

என்பான் பாரதி. இதே கருத்தை நம்மாழ்வார்,

கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
யாயவர்க் கேயி றுமினே.

என்று, பாரதியையும், ஆழ்வாரையும் ஒப்புமைப் படுத்தி, அத்தோடு நில்லாமல், பிரெஞ்சு சிந்தனையாளன் சார்த்தா மற்றும் நம் தெய்வப் புலவன் வள்ளுவன் இப்படி அனைவரையும் கோர்த்து விட்டு, சரணாகதித் தத்துவத்தை ஊடுறுவும் அந்தப் பயணம் வெற்றிப் பாதையை எட்டியிப்பதும் நிதர்சனம்........

” ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்காள் “ என்ன ஒரு அருமையான தத்துவம் இது........இதனை நம் ஆசிரியர் நிசிகேதன் புராணக் கதை கொண்டு விளக்கியிருப்பதோடு, அறிவியலில், மரணத்தை வெல்லும் நிகழ்ச்சியாக ஒரு ஜெர்மானியப் பெண் பற்றிய சம்பவம்........அதிசயம், ஆனாலும் உண்மை.

’தான்’ என்ற உணர்வின் பரிமாணங்கள்,இறைமை அனுபவத்தின் உயர்ந்த நிலை மற்றும் திரௌபதியின் பூரண சரணாகதி தத்துவம் என்று மிகப் பெரிய விசயங்களை, போகிற போக்கில் அப்படியே பேச்சு வழக்கிலேயே சொல்லிவிட்டுப் போனது, எளிமையும் இனிமையும்....

வாழ்க்கையின் மிக உன்னத நிலையான சரணாகதி பற்றிப் பேசும் போது இயேசு பிரானின் பிரபலமான மலை பிரசங்கம், எளிய நடையில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதும் நன்றாகவே உள்ளது.

//இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள்.//   எம்மதமும் சம்மதம் என்ற பரந்த நோக்குடன் எழுதப்பட்ட மடல். இது போன்ற மதநல்லிணக்கத்திற்கான நற்சிந்தையை ஏற்படுத்தக் கூடிய சமூக நலம் சார்ந்த எழுத்துக்கள் சரியான முறையில் மக்களைச் சென்று அடையும் வேளைதான் நாட்டின் பொன்னான காலம் எனலாம். 

குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் முறைமை குறித்து, வெகு சுவாரசியமாகவும் , நையாண்டியாகவும் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது ரசிக்கும்படியாகவே உள்ளது... 

//காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர் வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம் என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல் (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார். அதற்குப் பதில் முகில் வண்ணன் பெயரிட்டு கோத்துக் குழைத்து குலாவி ஆனந்தித்து திரியுங்கள் என்கிறார்.//

பெயர் வைப்பது குறித்து மேலும் பலவகையான தகவல்களையும் வஞ்சமின்றி கொடுத்துள்ளார், ஆசிரியர்.

அடுத்த மடல், ’நாம் தகவல் நிரம்பிய உலகில் வாழ்கிறோம்.’ என்று தகவல் களஞ்சியமாக ஐம்புலன்கள் குறித்த தெளிவான அறிவியல் விளக்கங்கள்.

//உள்ளத்தே உரையும் திருமாலை உள்ளுணர்வு இல்லாததால் இவ்வளவு நாள் உணர்ந்தேன் இல்லை (உள்ளுணர்வு புலன் அடக்கத்தால் வரும் என்று கண்டோம்). இவ்வளவு நாள் பெரிய தொண்டன் என்று கள்ள வேடம் போட்டு அலைந்தேன் (நம்மூர் சாமியார்களும், மடாதிபதிகளும் இதை உணரும் காலம் எப்போது வரும்?), உள்ளுவார் உள்ளிலெல்லாம் உறைந்திருப்பவன் ஹரி என்ற ஞானம் இப்போதுதான் வந்ததையா! வெட்கிக் போனேன்! விலா ஒடியச் சிரிக்கின்றேன் நான்! என்று முடிக்கிறார் ஆழ்வார்.// நகைசுவையையும் பதமாக கலந்து நல்ல சுவையான விருந்தாக ஆக்கியிருக்கிறார், இந்த அறுசுவை படைப்பாளி!

பிரபஞ்ச சுழற்சியை அறிவியல் மற்றும் ஆன்மீகப் பார்வையில் மிக அழகாக விளக்கியுள்ள பாங்கு நவீன இலக்கியம் நோக்கிய பயணமாகும்.....

பிறப்பின் தத்துவமும் வெகு இயல்பாகவே விளக்கிய பாங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

”காதலியின் கண்ணில் தெரியும் கவர்ச்சி காதலுக்கு கண் இல்லை என்று ஆக்குகிறது! ஆணுக்கும், பெண்ணுக்கும் மாளாத காதலை வைத்து பல் உருப் பெருக்கம் நடைபெருகிறது இவ்வுலகில். மண்ணாய், வளியாய் இருந்த ஒன்று ஊனாய் உடலாய் மாறும் போது விதிப் பயன் தொடர்கிறது. ஊனை உண்டு, ஊன் வளர்கிறது. உயிரை ஒட்டி உயிர் வாழ்கிறது. ஊனைப் பெற்று விட்டு நோயை வேண்டாம் என சொல்ல இயலாது. இவ்விதிகள் பொதுவானவை.”

அமுதம் போன்றது திருவாய்மொழி என்றும், வைணவ இலக்கியங்களில் மதுரை தமிழ் சங்கத்தால் ஆங்கீகரிக்கப்பட்ட பெரும் தகுதி வாய்ந்த நூல் என்பதையும், அழகான பாசுரம் கொண்டு விளக்குகிறார்.

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1

செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் 

"ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்ஆழி வண்ணம் என் அம்மான் போன்ற அழகான பாசுரங்கள் கொண்டு விளக்கியுள்ளார்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா - பாரதியின் தலைப்புடன் ஆரம்பிக்கின்ற இம்மடலில் ஆழ்வாரையும், பாரதியையும் அழகாக  ஒப்புமைப்படுத்தியிருப்பது சுவை.......

”ஆழ்வார்களின் கடைக் குட்டியான ஆண்டாள் தோன்றி ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்குப் பின் பாரதி தமிழகத்தில் தோன்றுகிறான். பாரதியை ஆழ்வாராதிகளின் கோஷ்டியுடன் சேர்த்து அவருக்கு விக்ரகமும் செய்து வைத்து விட்டனர். பாரதிக்கு ஆழ்வார்களின் அத்தனை குணாதிசயங்களும் இருக்கின்றன. ஆழ்வார்கள் போல் முற்போக்கு பேசியவன் பாரதி.”

ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தியாவில் இல்லையே

என்றும்,

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே...

என்றும் சொல்கிறார். அதாவது, இது ஆணவத்திற்கு எதிரான குரல், அதிகாரத்திற்கு எதிரான குரல். ஆன்மீக ஒருமைப் பாடு கூறும் குரல். ஆனால் இதையெல்லாம் யாரும் கணக்கில் கொண்டார்களாவெனத் தெரியவில்லை. பாரதியின் கிருஷ்ணபக்தி, அவனது கண்ணன் பாட்டு அவனை ஆழ்வாராக்கிவிட்டது.”

இது போன்று பல்வேறு சுவையுடன் கூடிய பாசுர மடல்களை முழுமையாக வாசித்து மகிழ,கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கவும்.
 

                                                                       


                                                          




பவள சங்கரி

unread,
Feb 17, 2011, 1:54:32 PM2/17/11
to மின்தமிழ்

On Feb 17, 11:45 pm, coral shree <cora...@gmail.com> wrote:
> *’ஆழ்வார்க்கடியான் பாசுர மடல் - ஓர் அலசல் - பகுதி - 4*.

> வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு ...
>
> read more »

N. Kannan

unread,
Feb 17, 2011, 6:06:29 PM2/17/11
to mint...@googlegroups.com
நன்றி, பவளா!
 
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!
 
எனும் படி தெய்வச் சிந்தனை நம்மைத் தீங்கிலிருந்து காப்பாற்றுகிறது.
நமக்கு வேறு அரண் (ரக்ஷை) வேண்டாம். அவன் சிந்தனை ஒன்றே போதும். எனவே இது
குறித்து சிந்திக்கும் உங்கள் மடல்கள் வாழ்க!
 
நாம் தமிழனாய்ப் பிறந்ததற்கு பேறு பெற்றிருக்க வேண்டும். எத்தனை
மகான்கள்! எத்தனை ஆக்கங்கள்!! ஆழ்வார்களைப் போல் ஓர் உற்றதுணைவன் இனி
தமிழனுக்குக் கிடைப்பானா? கிறிஸ்து யுகத்தின் நான்காம் நூற்றாண்டு
தொடக்கம் 13ம் நூற்றாண்டுவரை தமிழகம் ஜொலித்து இருக்கிறது. ஆழ்வாராதிகள்
இம்மண்ணில் உலாவி, அருளிச்செயல் செய்து, ஆச்சார்ய சீலர்கள் தோன்றி
அவைக்கு நல்லுரை செய்து நம்மையெல்லாம் உய்யக்கொண்ட காலம். நல்லவேளையாக
அம்மரபு இன்றும் வாழ்கிறது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு
அலைகிறான் சமகாலத் தமிழன். நித்யாநந்தா, அந்தனாந்தா, இந்தானந்தா என்று
ஏன் அலைய வேண்டும்? ஏமாந்து துன்புற வேண்டும். அற்புதமான ஒரு ராஜபாட்டை
இருக்கும் போது!
 
எந்தை இராமானுசர் ஏற்படுத்திய வழி காலம் சோதனை செய்து நல்வழி என
நிரூபித்த வழி. அது எல்லோர்க்கும் ஏற்ற வழி. அவர் போல் புரட்சிகரமாக
சமயத்தை நோக்கியவர் இல்லை. வைகுந்த வாசலை எல்லோர்க்கும் திறந்துவிட்டவர்.
அது இன்னும் திறந்துதான் கிடக்கிறது. உள்ளே இருப்பதின் அருமை தெரியாததால்
மேய்ப்பர் இல்லாத ஆடுகள் போல் வேறு எங்கோ அலைந்து கொண்டு இருக்கிறோம்.
இம்மடல்கள் அவ்வகையில் ஒரு மேய்ப்பன். எங்க ஊரு கோனாரு :-)
 
நா.கண்ணன்

coral shree

unread,
Feb 18, 2011, 4:23:28 AM2/18/11
to mint...@googlegroups.com
நண்பர்களே,

திருக்குறளில் ஒரு சிறு எழுத்துப் பிழை வந்துவிட்டது மன்னிக்கவும்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

2011/2/18 coral shree <cor...@gmail.com>

மின் செய்தி மாலை படியுங்கள்!
 
                                                    

Tthamizth Tthenee

unread,
Feb 18, 2011, 8:33:14 AM2/18/11
to mint...@googlegroups.com
”காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர் வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம் என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல் (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார்.”


சமீபத்தில் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர் அவர்கள் துபாயில் இருக்கும் இந்துக்கள், இந்தியர்

அவர்கள் இருவரும் தங்கள் பெண் குழந்தைக்கு  

”துஹாயா ”   என்று பெயரிட்டிருக்கிறார்

துஹாயா என்றால் என்ன பொருள் என்று அவர்களிடம் கேட்டேன்

அவர்கள் சொன்னார்கள்

துஹாயா!       நபிகள் நாயகத்தின் இரண்டாவது பெண்ணிற்கு பெயர் 


துஹாயா என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் God Bless  என்று பொருள்

துஹாயா என்றால் மஹாலக்‌ஷ்மி என்றும் பொருளும் வரும் என்றார்

 மஹாலக்‌ஷ்மிக்கு துஹாயா என்னும் சொல் உளதா?

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/2/18 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Feb 18, 2011, 9:07:34 AM2/18/11
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம் ஐயா. துஹாயா என்பதன் பொருள் தெரிந்தவர்கள் சொல்வார்களா பார்க்கலாம். மிக்க நன்றி ஐயா.

2011/2/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--





































































மின் செய்தி மாலை படியுங்கள்!
  Take life as it comes.

devoo

unread,
Feb 18, 2011, 9:28:08 AM2/18/11
to மின்தமிழ்
>>> துஹாயா என்றால் என்ன பொருள் என்று..... <<<

’தில காஷ்ட மஹிஷ பந்தநம்’ என்னுமோர் அரிய நூல் உள்ளது;
அதில்தான் இதுபோன்ற சொற்களுக்குப் பொருள் தேட வேண்டும்


தேவ்

On Feb 18, 7:33 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ”காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர்
> வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி
> வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று
> பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம்
> என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல்
> (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று
> கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார்.”
>
> சமீபத்தில் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர் அவர்கள் துபாயில் இருக்கும்
> இந்துக்கள், இந்தியர்
>
> அவர்கள் இருவரும் தங்கள் பெண் குழந்தைக்கு
>
> ”துஹாயா ”   என்று பெயரிட்டிருக்கிறார்
>
> துஹாயா என்றால் என்ன பொருள் என்று அவர்களிடம் கேட்டேன்
>
> அவர்கள் சொன்னார்கள்
>
> துஹாயா!       நபிகள் நாயகத்தின் இரண்டாவது பெண்ணிற்கு பெயர்
>
> துஹாயா என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் God Bless  என்று பொருள்
>
> துஹாயா என்றால் மஹாலக்‌ஷ்மி என்றும் பொருளும் வரும் என்றார்
>
>  மஹாலக்‌ஷ்மிக்கு துஹாயா என்னும் சொல் உளதா?
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> 2011/2/18 coral shree <cora...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 18, 2011, 9:32:32 AM2/18/11
to mint...@googlegroups.com
எருமை கட்டும் கயிறிலா?

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/18 devoo <rde...@gmail.com>
330.gif

Hari Krishnan

unread,
Feb 18, 2011, 9:34:37 AM2/18/11
to mint...@googlegroups.com


2011/2/18 devoo <rde...@gmail.com>

தில காஷ்ட மஹிஷ பந்தநம்’ என்னுமோர் அரிய நூல் உள்ளது;
அதில்தான் இதுபோன்ற சொற்களுக்குப் பொருள் தேட வேண்டும்

அதில் கிடைக்காவிட்டால் முசலகிசலயத்தில் கிடைக்கும்.:)

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Feb 18, 2011, 9:35:21 AM2/18/11
to mint...@googlegroups.com


2011/2/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

எருமை கட்டும் கயிறிலா?

எள் விழ இடமில்லையோ, எருமைக்கு முன்னால்?
330.gif

coral shree

unread,
Feb 18, 2011, 9:37:14 AM2/18/11
to mint...@googlegroups.com
ஐயா, இது போன்ற அரிய தகவல்களுக்காக காத்திருக்கிறேம். தொடருங்கள் ஐயா. நன்றி.

2011/2/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--





































































மின் செய்தி மாலை படியுங்கள்!
  Take life as it comes.

Tthamizth Tthenee

unread,
Feb 18, 2011, 9:41:33 AM2/18/11
to mint...@googlegroups.com
உலக்கைக் கொழுந்துகள் படிக்கும் நூலல்லவா அது ?

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/2/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
முசலகிசலய

360.gif

Tthamizth Tthenee

unread,
Feb 18, 2011, 10:03:50 AM2/18/11
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் எருமைகூட எண்ணெய் என்றால் எள்ளாக நிற்கிறது

எள்ளைச் சொல்லாமல் எருமைக்கு போனது தவறுதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
330.gif

coral shree

unread,
Feb 25, 2011, 8:30:12 PM2/25/11
to மின்தமிழ், thamiz...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: coral shree <cor...@gmail.com>
Date: 2011/2/26
Subject: Re: ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள் - ஓர் அலசல்
To: Narayanan Kannan <nka...@gmail.com>


நன்றி திரு கண்ணன்.

2011/2/26 Narayanan Kannan <nka...@gmail.com>

2011/2/26 coral shree <cor...@gmail.com>:
> ஆழ்வார்க்கடியானின் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி- 5.
> சூடுவேன் பூங் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
> கூடுவேன் ! கூடி முயங்கி, மயங்கி நின்று,
> ஊடுவேன் ! செவ்வாய்க்கு உருகுவேன் ! உள் உருகித்
> தேடுவேன் ! தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் ;
> வாடுவேன் ! பேர்த்தும் மலர்வேன் ; அனல் ஏந்தி
> ஆடுவான் ! சேவடியே பாடுதும் காண் ; அம்மானாய் !
>

பவளா! இதுவொரு நல்ல முயற்சி.

இறையனார் களவியலை உருவாக்கியவன் ஆலவாய் அண்ணல். அது கண்டு உருகியவன் அவன்
பிள்ளை கந்தவேள். ஆனால், அதைக் கடத்திக் கொண்டு போய்விட்டவர்கள்
ஆழ்வார்கள். இந்த அதிசயம் ஏன் என்று ஆராயலாம்! சைவ சமயக் குரவர்களில்
ஆழ்வார் எனத்தக்கவர் மாணிக்கவாசகர். எங்க ஊர் பக்கம். இது போல் இன்னும்
நிறைய ஒப்புமை காட்டுங்கள். எனக்கு சைவ சமய இலக்கியப் பரிட்சயம்
மிகக்குறைவு.

பனிசூழும் நாடு என நான் குறிப்பது ஜெர்மனியை. நான் ஜெர்மன் குடிமகன்
என்பதை மறக்க வேண்டாம்! `எம் தந்தையர் நாடு!` (Vaterland) :-))

நா.கண்ணன்



     > ’உறவுகளில் உறையும் இறைவன்’, அழகான தலைப்பு..... ஆசிரியர் தான்
வாழும் இடத்தின்
> அபரிமிதமான குளிர் பற்றி மிக யதார்த்தமாக விளக்கும் ஆசிரியர் அந்த நாட்டின்
> பெயரைக் குறிப்பிடாமல் விட்டது வாசகருக்கு அதை அறிந்து கொள்ளும் ஆவலில்
> தொடர்ந்த மடல்களைப் படிக்கும் எண்ணமும் ஏற்படுத்துகிறது.........


Innamburan Innamburan

unread,
Feb 26, 2011, 2:18:49 AM2/26/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
பவளா! இதையெல்லாம், நான் படித்து மகிழ்கிறேன். 'ஜொனாதன் லிவிங்ஸ்டன்
ஸீகல்'லை மறக்கவேண்டாம்.
இன்னம்பூரான்
26 02 2011

2011/2/26 coral shree <cor...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 26, 2011, 3:06:05 AM2/26/11
to mint...@googlegroups.com
ஆகா!

அதுவொரு குட்டிக்காவியமன்றோ!

நினைவுறுத்தியதற்கு நன்றி.

க.>

2011/2/26 Innamburan Innamburan <innam...@gmail.com>:

coral shree

unread,
Feb 26, 2011, 3:46:48 AM2/26/11
to mint...@googlegroups.com
ஐயா மறக்கக் கூடிய காவியமா அது.....?

2011/2/26 Innamburan Innamburan <innam...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages