மின் செய்தி மாலை - ரி - 17 - 2011 - பகுதி - 2.

7 views
Skip to first unread message

coral shree

unread,
Feb 16, 2011, 8:09:04 PM2/16/11
to மின்தமிழ்

T_500_289.jpg

வர்த்தகச் செய்தி மலர் :

* சுதந்திரமான வர்த்தகம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்

டோக்யோ, பிப்.16- இந்தியா-ஜப்பான் இடையே சுதந்திரமான வர்த்தகத்தை அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் இன்று டோக்யோவில் முறைப்படி கையெழுத்தானது.
இதன் மூலம் இருநாடுகளும் பரஸ்பரம் 90 சதவீத வரிகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடைமுறை 10 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

டோக்யோவில் உள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் செய்ஜி மெஹரா, இந்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

"இந்தியா-ஜப்பான் இடையே பொருளாதார கூட்டுறவு மேலும் வலுப்பட இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்" என்று இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
"சுதந்திரமான வர்த்தகத்துக்காக தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடியது" என்று ஜப்பான் அமைச்சர் மெஹரா கூறினார்.

*ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்

பிப்ரவரி 16,2011,15:57

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.10 புள்ளிகள் அதிகரித்து 18300.90 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.70 புள்ளிகள் அதிகரித்து 5481.70 புள்ளிகளோடு காணப்பட்டது

* தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

பிப்ரவரி 16,2011,12:49

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1903 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20460 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.55 க்கும், பார் வெள்ளி ரூ.47230 க்கும் விற்பனை செய்யப்பட்டது

விளையாட்டுச் செய்தி மலர் :

* சென்னை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி    

சென்னை: உலக கோப்பை பயிற்சி போட்டியில் மீண்டும் அசத்தியது இந்திய அணி. கேப்டன் தோனியின் அதிரடி சதம் கைகொடுக்க, நியூசிலாந்தை 117 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். 
சச்சின் ஏமாற்றம்:

துவக்க வீரராக வந்த சச்சின் அதிக நேரம் நீடிக்கவில்லை. 3 பவுண்டரி அடித்த இவர் 17 ரன்களுக்கு டிம் சவுத்தி பந்தில் போல்டானார். சிறிது நேரத்தில் ஜேக்கம் ஓரம் "வேகத்தில்' சேவக்(23) வெளியேறினார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து அசத்தலாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், கோஹ்லி(59) அவுட்டானார்.
 
மின்னல் வேக சதம்:

அடுத்து வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க காம்பிர் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். சவுத்தி ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த இவர், 89 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ரெய்னா மற்றும் தோனி சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். ஓரம் வீசிய போட்டியின் 43வது ஓவரில் தோனி வரிசையாக 5 பவுண்டரிகள் விளாச, சென்னை ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கு சென்றனர். 40 பந்துகளில் அரைசதம் கடந்த இவர், மெக்கலம் வீசிய அடுத்த ஓவரிலும் இரண்டு பவுண்டரி அடித்தார். ஓரம் வீசிய 45வது ஓவரில் ரெய்னா தன் பங்குக்கு 3 இமாலய சிக்சர்கள் அடித்தார். அரைசதம் அடித்த ரெய்னா(50), மில்ஸ் பந்தில் வீழ்ந்தார். தனது கலக்கல் ஆட்டத்தை தொடர்ந்த தோனி "மின்னல் வேக' சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 360 ரன்கள் எடுத்தது. தோனி 64 பந்துகளில் 108 (11 பவுண்டரி, 3 சிக்சர்), யூசுப் பதான் 3 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
 
 ஆன்மீகச் செய்தி மலர் :

* அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்.

மூலவர் : அட்டாள சொக்கநாதர்
  உற்சவர் : பிரதோஷ நாயனார்
  அம்மன்/தாயார் : அங்கயற்கண்ணி
  தல விருட்சம் :  சரக்கொன்றை 
  தீர்த்தம் :  கிணறு
  ஆகமம்/பூஜை :  காரணாகமம்
  பழமை :  500 வருடங்களுக்கு முன்  
   -
  ஊர் :  மேலப்பெருங்கரை
  மாவட்டம் :  ராமநாதபுரம்
  மாநிலம் :  தமிழ்நாடு


தல சிறப்பு:
   
  மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு.  
   
மதுரை சொக்கநாதர் சன்னதி போலவே, இங்கும் சுவாமி சன்னதியை எட்டு யானைகள் தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. "யோக பைரவர்' தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம் இல்லை. மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.

இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன், அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.

பிரார்த்தனை
   
  நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து, முன்பு ஒழுங்காக படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்குள்ள ஜுரதேவர் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை மூர்த்தியாவார்.

தலபெருமை:
ருத்ராட்ச சிவன்:

மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தவர் என்பதால், இங்கு சுவாமியை குருவாக கருதி வழிபடுகிறார்கள். முன்வினை பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வியாழக்கிழமைகளில் சிவன், தெட்சிணாமூர்த்தி சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். குருப்பெயர்ச்சியின்போது சிவன், தெட்சிணாமூர்த்தி இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொள்ள அஷ்டமா சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.

கல்வி பிரார்த்தனை: அம்பாள் அங்கயற்கண்ணி சுவாமிக்கு வலப்புறம் இருக்கிறாள். கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோஷங்களை நீக்குபவளாக அருளுவதால், விசேஷ நாட்களில் இவளுக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவித்து பூஜிக்கின்றனர். 

புதன் பரிகார தலம்: திருவிளையாடல் புராண வரலாறுடைய இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுடன் பல வகையிலும் ஒற்றுமையுடன் இருக்கிறது. இங்கு சிவன் சொக்கநாதர் என்றும், அம்பாள் அங்கயற்கண்ணி (மீனாட்சி) என்றே அழைக்கப்படுகின்றனர். இந்த அம்பிகை மதுரை கோயில் போலவே சுவாமிக்கு வலப்புறத்தில், சிறிய அம்பிகையாக காட்சி தருகிறாள். இவளுக்கு விசேஷ நாட்களில் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். புதன் கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவளது சன்னதியை சுற்றிலும் இச்சா, கிரியா மற்றும் ஞானசக்திகள் உள்ளனர். சுவாமி சன்னதியை சுற்றிலும், கோஷ்டத்தில் எட்டு யானைகள் இருக்கிறது. இந்த யானைகளே சுவாமி விமானத்தை தாங்கியபடி இருப்பதாக ஐதீகம். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் சுவாமி கோஷ்டத்திலுள்ள ஒரு யானை சிலையிடம் கரும்பை வைத்து இந்த பூஜையை செய்கின்றனர்.

ஜுரதேவ லிங்கம்: சொக்கநாதர், எட்டு யானைகளால் தாங்கப்படும் விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். எனவே இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். காய்ச்சல், உடல் பிணிகளை நீக்கும் ஜுரதேவர், கோயில்களில் சிலாரூபமாக மட்டும் இருப்பார். இக்கோயிலில் இவரை சிலை வடிவிலும், லிங்க வடிவிலும் தரிசிக்கலாம். ஒரே சன்னதியில் இவ்விருவரும் இருக்கின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் ஜுரதேவருக்கு மிளகு ரசத்தால் அபிஷேகமும், லிங்கத்திற்கு பாலபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு எதிரே பெரிய குளம் ஒன்று உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்த தலமென்பதால், "மேலப்பெருங்கரை' என்று இவ்வூர் பெயர் பெற்றது.

தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா? என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் மகரிஷி ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ""எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும் மதுரை தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்,'' என்றார்.

இதைக்கேட்டதோ இல்லையோ கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி, சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தார். அதனை தன் கையில் ஏந்தி, ""தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்,'' என குரு ஸ்தானத்தில் இருந்து உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி லிங்கமாக எழுந்தருளினார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி "சொக்கநாதர்' என்று பெயர் பெற்றார்

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும் உண்டு. 
 
திருவிழா:
   
  சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்  
   

ஆன்மீகச் சிந்தனை மலர் :

* அன்பான ஒரு வார்த்தை போதும்! - புத்தர்

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.

* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை. 

வினாடி வினா :

வினா - உலகத்தின் விண்வெளியில் முதல் காஸ்மோனேட் மனிதன் யார்?

விடை - யூரி காகரின் [ரஷியா - 1961]  
 
இதையும் படிங்க :

ஸ்டெம் செல் மூலம் நோய்கள் தீர்வு!: பெங்களூரூ டாக்டர்கள் சாதனை

பெங்களூரூ: இந்தியாவில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று பெங்களூரைச் சேர்ந்த டாக்டர்கள் தங்களது ஆராய்ச்சி மூலம் சாதனை படைக்க உள்ளனர். உலகம் முழுவதும் ஸ்டெம் செல் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் முயற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரூவை சேர்ந்த மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரி மற்றும் புதுடில்லி யை சேர்ந்த மேதாந்த மெடி சிட்டி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்தனர். முன்னதாக இவர்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் என்ற அமைப்பு அனுமதி வழங்கியது. அதனைதொடர்ந்து சர்க்கரை நோய் மற்றும் குடி பழக்கத்தால் பாழாகும் கல்லீரல் போன்றவற்றை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளுக்கு பரிசார்த்த முறையில் பரிசோதனை நடத்த உள்ளனர். இதற்காக கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து தற்போது நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 2014-15-ம் ஆண்டு முதல் ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்துவது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லியை சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சதிஷ்டோட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த மருந்து கம்பெனிகள் குறிப்பிட்ட சில நோய்களுக்கான ஸ்டெம் செல் மருந்துகளை அடுத்த ஆண்டு வெளியிட தயாராக உள்ளது. அதுபோல் இந்தியாவைசேர்ந்த சிப்லா பார்மா கம்பெனி வரும் 2013 முதல் ஸ்டெம் செல் மருந்து விற்பனையில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.



நன்றி - தின மலர். 

--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

T_500_289.jpg

பவள சங்கரி

unread,
Feb 16, 2011, 8:42:14 PM2/16/11
to மின்தமிழ்

On Feb 17, 6:09 am, coral shree <cora...@gmail.com> wrote:
> *
> *
> *[image: T_500_289.jpg]
> *
> *
> *
> *வர்த்தகச் செய்தி மலர் *:
> *
> *
> ** சுதந்திரமான வர்த்தகம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்*


>
> டோக்யோ, பிப்.16- இந்தியா-ஜப்பான் இடையே சுதந்திரமான வர்த்தகத்தை
> அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் இன்று டோக்யோவில் முறைப்படி கையெழுத்தானது.
> இதன் மூலம் இருநாடுகளும் பரஸ்பரம் 90 சதவீத வரிகளை குறைத்துக் கொள்ள முடிவு
> செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடைமுறை 10 ஆண்டுகள் அமலில்
> இருக்கும்.
>
> டோக்யோவில் உள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை
> கையெழுத்தானது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் செய்ஜி மெஹரா, இந்திய தொழில்துறை
> அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
>
> "இந்தியா-ஜப்பான் இடையே பொருளாதார கூட்டுறவு மேலும் வலுப்பட இந்த ஒப்பந்தம்
> உதவியாக இருக்கும்" என்று இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
> "சுதந்திரமான வர்த்தகத்துக்காக தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம்
> இருநாடுகளுக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடியது" என்று ஜப்பான் அமைச்சர் மெஹரா
> கூறினார்.
>

> **ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்*


>
> பிப்ரவரி 16,2011,15:57
>
> மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன்
> முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் ஏற்ற இறக்கத்துடன்
> காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
> சென்செக்ஸ் 27.10 புள்ளிகள் அதிகரித்து 18300.90 புள்ளிகளோடு காணப் பட்டது.
> தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.70 புள்ளிகள் அதிகரித்து 5481.70
> புள்ளிகளோடு காணப்பட்டது
>

> ** தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு*


>
> பிப்ரவரி 16,2011,12:49
>
> சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை
> சவரனுக்கு ரூ.96 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத்
> தங்கத்தின் விலை ரூ.1903 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20460 ஆகவும்
> இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.55 க்கும், பார் வெள்ளி ரூ.47230
> க்கும் விற்பனை செய்யப்பட்டது
>

> *விளையாட்டுச் செய்தி மலர் :*

>  *ஆன்மீகச் செய்தி மலர்* :
>
> ** அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்.*


>
> மூலவர் : அட்டாள சொக்கநாதர்
>   உற்சவர் : பிரதோஷ நாயனார்
>   அம்மன்/தாயார் : அங்கயற்கண்ணி
>   தல விருட்சம் :  சரக்கொன்றை
>   தீர்த்தம் :  கிணறு
>   ஆகமம்/பூஜை :  காரணாகமம்
>   பழமை :  500 வருடங்களுக்கு முன்
>    -
>   ஊர் :  மேலப்பெருங்கரை
>   மாவட்டம் :  ராமநாதபுரம்
>   மாநிலம் :  தமிழ்நாடு
>

> *தல சிறப்பு:*


>
>   மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில்
> காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து
> அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும்
> உண்டு.
>
> மதுரை சொக்கநாதர் சன்னதி போலவே, இங்கும் சுவாமி சன்னதியை எட்டு யானைகள்
> தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று
> அழைக்கப்படுகிறார். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு
> விசேஷமாக நடக்கும்.
>
> இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
>
> பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை
> இல்லை. "யோக பைரவர்' தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம்
> இல்லை. மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.
>
> இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன்
> கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன்,
> அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.
>

> *பிரார்த்தனை *


>
>   நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க இங்கு
> வேண்டிக்கொள்கிறார்கள்.
>
> மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து, முன்பு ஒழுங்காக
> படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில் இங்கு
> வேண்டிக்கொள்கிறார்கள்.
>
> இங்குள்ள ஜுரதேவர் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை மூர்த்தியாவார்.
>

> *தலபெருமை*:

> *தல வரலாறு:*


> முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன்,
> அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற
> பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு
> மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா?
> என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் மகரிஷி ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப்
> பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ""எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக
> இருந்தாலும் மதுரை தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம்
> கிடைக்கும்,'' என்றார்.
>
> இதைக்கேட்டதோ இல்லையோ கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு
> உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி,
> சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி
> தந்தார். அதனை தன் கையில் ஏந்தி, ""தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த
> சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த
> தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்,'' என குரு ஸ்தானத்தில் இருந்து
> உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி
> லிங்கமாக எழுந்தருளினார்.
>
> இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி
> "சொக்கநாதர்' என்று பெயர் பெற்றார்
>

> *சிறப்பம்சம்*:


>  அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு
> அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை
> ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச
> சிவன்' என்ற பெயரும் உண்டு.
>

> *திருவிழா:*


>
>   சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா,
> திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
>

> *திறக்கும் நேரம்:*


>
>   காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
> திறந்திருக்கும்
>

> *ஆன்மீகச் சிந்தனை மலர்* :
>
> ** அன்பான ஒரு வார்த்தை போதும்! - புத்தர்*


>
> * ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு
> வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும்
> நல்லவையாக இருக்க வேண்டும்.
>
> * நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை
> நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
>

> *வினாடி வினா *:
>
> *வினா* - உலகத்தின் விண்வெளியில் முதல் காஸ்மோனேட் மனிதன் யார்?
>
> *விடை* - யூரி காகரின் [ரஷியா - 1961]
>
> *இதையும் படிங்க *:
>
> *ஸ்டெம் செல் மூலம் நோய்கள் தீர்வு!: பெங்களூரூ டாக்டர்கள் சாதனை*

>  T_500_289.jpg
> 69KViewDownload

Tthamizth Tthenee

unread,
Feb 16, 2011, 10:22:39 PM2/16/11
to mint...@googlegroups.com
அட்டாள சொக்கநாதர் ஆலயத்தைப் பற்றி இந்த மடலில் அறிந்துகொண்டேன்
மிகவும் மகிழ்ச்சி
 
மின் செய்தி மாலைமேலும் மேலும் மெருகேறி வருகிறது

வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/17 பவள சங்கரி <cor...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages