திருமதி. வித்யா சுப்பிரமணியத்தின் குருவாயூர் உண்ணிக்கண்ணனின் அதிகாலை தரிசனமும், மேல்சாந்தி அவனுக்குச் செய்யும் வாகைப்பொடிச்சாத்துப் பூசையும் பற்றி எழுதியிருந்ததைக் கண்டேன். என் பள்ளிப் பருவத்தே குருவாயூரில் தூக்கக் கலக்கத்துடன் தொழுத வாகைசாத்து நினைவுக்கு வர, பழய மலையாளத்தின் ஒரு பாட்டைத் தேடி எடுத்தேன். தமிழில் இந்த குருவாயூர்ப் பாட்டு வெளிவருவது இதுவே முதன்முறை ஆகலாம்.
வித்தியா குருவாயூர் ’வாகசார்த்து’ பற்றி எழுதியுள்ளதை சந்தவசந்தத்தில் குறிப்பிட்டேன்,
சலகை (சலகண்டாபுரம்) ப. கண்ணன் என்னும் நாடக நடிகர், திராவிடர் கழகர் தாசனாக வாழ்க்கையைத் தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் கடைசிகாலத்தில் உண்ணிக்கண்ணனைக் கண்டு பாடினார்; பி. சுசீலா பாடுகிறார்,
குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ....
----------------
வாகசார்த்து - குருவாயூர் கானம்
பி. லீலா பாடுகிறார்,
தமிழ் எழுத்தில்:
புலராந் ஏழர -- கானத்தின்றெ வரிகள்
புலராந் ஏழரை நாழிகயில் காற்றின்
சலனத்திலூடெ நீந்தி வரும்
(புலராநேழர )
புளகாங்குரம் நல்கும் ஶங்கநாதம்
புளகாங்குரம் நல்கும் ஶங்கநாதம்
நித்ரா நிலைமாற்றி கண்ணும் துறந்நீடும் - கண்ணும் துறந்நீடும்
மேல்ஶாந்தி ஸ்நாநம் கழிஞ்ஞு வந்நு
பரமாத்மா பகவான்றெ ஶ்ரீகோவில்
ஆத்மார்த்த பக்திபூர்வ்வம் துறந்நு
அழகில் வாகச்சார்த்தின் னொருங்ஙி
அழகில் வாகச்சார்த்தின் னொருங்ஙி
கேஶவ னுண்ணிக்கண்ணன்றெ ரூபம்
கேஶாதிபாதம் எண்ண தேச்சு
(கேஶவ னுண்ணி )
வாஸன வாகப்பொடி சார்த்தி - வாகப்பொடி சார்த்தி
வாஸுதேவன் மேனி நீராட்டி
ஒரு ஶுத்தவஸ்த்ரம் கொண்டுடனே தன்னெ
திருமுடி தோர்த்தி தேஹம் துடச்சு
குருவாயூரப்பன்றெ மோஹனமாம்
குருவாயூரப்பன்றெ மோஹனமாம்
மலர்மேனியாகெ அலங்கரிச்சு
நிறுகயில் பீலி நிரகெட்டி
நெற்றியில் கஸ்தூரித் திலகமிட்டு
கறுகறெ அஞ்ஜனம் கண்ணெழுதி
கனகக் குண்டலம் காதிலிட்டு
கனகக் குண்டலம் காதிலிட்டு
முத்துப்பதக்கம் கழுத்தி லணிஞ்ஞு
மோஹனப் பொன்வளை கையில் கிலுங்ஙி
கௌஸ்துபமாலா மணிமாரில் - கொச்சு
காலில் கிங்ஙிணி நிரைமின்னி
காலில் கிங்ஙிணி நிரமின்னி
அரிமுல்ல மாலிகாநிர போலெ - திரு
அரயில் பொன்னரஞ்ஞாண் விளங்ஙி
(அரிமுல்லை )
நாராயணா கோவிந்தா
என்ன திருநாம ஸ்தோத்ரம் எங்ஙும் முழங்ஙி - ஹரி
(நாராயணா )
நாராயணா நாராயணா ஹரி நாராயணா
நானாவிதமாய நைவேத்யங்ஙள்
நன்னாய் நிவேதிச்சு பூஜ செய்து
(நானாவிதமாய )
ஶ்ரீநாததேவன் வரப்ரஸாதம்
ஶ்ரீநாததேவன் வரப்ரஸாதம்
நாம் ஸதா ஸேவிச்சு புண்யம் நேடாம்
ப்ரத்யேகம் தீர்த்தக் கிணறேழும் என்
நிஸ்துல ஸௌக்யப்ரதமாணு
அத்யந்த ரோகபீட மாஞ்ஞிடும்
ஆதித்யகிரணத்தால் இருள் போலெ
அரவிந்தாக்ஷன்றெ ரூபம் கண்டு
பக்தி ஆனந்த பாஷ்பம் கண்ணில் கவிஞ்ஞு
(அரவிந்தாக்ஷன்றெ )
நரஜன்மபாபம் நஶிச்சு - பாரில்
சிரகாலம் ஸௌபாக்யம் ஓதுவானாய்- பாரில்
சிரகாலம் ஸௌபாக்யம் ஓதுவானாய்
குருவாயூரப்பா துண நீயே
குருவாயூரப்பா கதி நீயே
கருணாஸாகரா சாருமூர்த்தே
அருளேணம் வரமென்னும் பகவானே
அருளேணம் வரமென்னும் பகவானே
அருளேணம் வரமென்றும் பகவானே !
தமிழ் இலிபியில்,
நா. கணேசன்