நாராயணீயம்100 வது தசகம் - தமிழாக்கம்

63 views
Skip to first unread message

Varalakshmi Niranjan

unread,
Nov 2, 2014, 11:35:42 AM11/2/14
to santhav...@googlegroups.com

எனது தந்தை திரு.வெங்கடாசலம், மடிந்து ஒரு வருடம் ஆகிறது. தனது இறுதிக் காலத்தில், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட நேரத்தில், வாய் ஓயாமல் அவர் பாடியது நாரயணீயத்தின் 100 வது சதகம். இதன் பின்னணி எனக்குப்  பிறகு தெரிந்தது. நாரயணிய பட்டருக்கும்  பக்கவாதம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு வருடம் பூர்த்தியாகும் வேளையில்,  என் சகோதரிகள் இந்தியாவில் திவசம் செய்து அவரை ஸ்வர்கத்திற்கு வழியனுப்பி வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த படி என்னால் செய்ய முடிந்தது இந்த மொழியாக்கம் மட்டுமே!  இதை சந்தவசந்தத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாராயணீயம்100 வது தசகம் - தமிழாக்கம்

உண்மையை உணர்த்தும் உபநிடதம் சூழந்திட
மண்ணிலே யோகிகள் மன்றாடித் தொழுதிட
கண்ணைக் கவரும் காயம்பூ ஒளியில்
என்னெதிரே தெரிந்திடும் எழிலான இளைஞனே

கருங்கூந்தல் அடர்ந்து காற்றிலே ஆடிட
சுருண்ட கேசத்தை சுற்றிய பீலீயே
இருளை நீக்கிடும் இரத்தின ஒளியே
புருவத்தின் இடையே பூத்திட்ட பிறைநிலவே

விசையால் இமைகள் விளையாடித் திறந்திட
அசையும் புருவங்கள் அலையாய் அருள்சொரிய
தசையை இயக்கிடும் தாமரை விழிகளே
இசைக்கும் அநாதையை இனிதே காக்குமே

நாசியின் எடுப்பில் நளினம் கூடுமே
வீசிடும் குண்டலங்கள் விளையாடும் கன்னமே
பேசிடும் புன்னகை பேரழகைப் பெருக்குமே
மாசில்லா உன்னுருவம் மனதிலே நிற்குமே

கரங்கள் இரண்டும் கலையாய் வளையுமே 
தரமான குழலைத் தாளத்துடன் இசைக்குமே 
குரலின் இனிமையில் குளிரும் நாதத்தில்
சிரம்தாழ செவியும் சிந்தையும் மகிழுமே

கழுத்தில் கௌஸ்துபம் கலையாயத் தவழ்ந்திட
விழுந்த முத்துமாலை விரிந்த மார்பிலாட
எழுந்து அருளும் எழிலான திருமகளுடன்
முழுதானக் கடவுளாய் முன்னே தெரிபவனே

மேனியில் சந்தனம் மேவியே மணந்திட
பேணிய உலகம் பொலிவான இடையாக
பூணியப் பட்டாடைப் பொன்னிற ஒளியாக
ஞாணில் கிங்கிணி நடனம் ஆடுமே

உறுதியைத் தந்தே உன்தொடை ஒளிர்ந்திட
உருண்ட முழங்கால் உலகைக் காத்திட
பருத்த கணுக்கால் பட்டாடை கீழிருக்க
கருத்தும் வணங்கி கலங்கி நிற்குமே 

கழலடிப் பணிந்திடக் கால்நுனித் தெரியுமே
உழலும் மனமும் உணரும் பேரின்பமே
தழலான துன்பத்தைத் தளிர்விரல் துடைக்குமே
அழகான நிலவை அடைக்கலம் அடையுமே

குருவாயூர் தலைவனே கொடுக்கும் காருண்யமே
திருவடி சரணடைய தீர்ந்திடும் கவலைகளே
விரும்பியதை வழங்கிடும் விருட்சமான கற்பகமே
அருளிடு மோட்சத்தை அழகான கிருஷ்ணனே!

கிருஷ்ணா! காருண்ய சிந்தோ!!
கருணைக்கடலே! கிருஷ்ணனே!!!
அருளிடு மோட்சத்தை அழகான கிருஷ்ணனே !!



மூலம்- நாரயணீயம்- 'அக்ரே பஸ்யாமி'
நாரயணபட்டர் 1587 AD அருளியது


Siva Siva

unread,
Nov 2, 2014, 3:09:41 PM11/2/14
to santhavasantham
A nice way to remember your father.



2014-11-02 11:35 GMT-05:00 Varalakshmi Niranjan <varathi...@gmail.com>:

எனது தந்தை திரு.வெங்கடாசலம், மடிந்து ஒரு வருடம் ஆகிறது. தனது இறுதிக் காலத்தில், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட நேரத்தில், வாய் ஓயாமல் அவர் பாடியது நாரயணீயத்தின் 100 வது சதகம். இதன் பின்னணி எனக்குப்  பிறகு தெரிந்தது. நாரயணிய பட்டருக்கும்  பக்கவாதம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு வருடம் பூர்த்தியாகும் வேளையில்,  என் சகோதரிகள் இந்தியாவில் திவசம் செய்து அவரை ஸ்வர்கத்திற்கு வழியனுப்பி வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த படி என்னால் செய்ய முடிந்தது இந்த மொழியாக்கம் மட்டுமே!  இதை சந்தவசந்தத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாராயணீயம்100 வது தசகம் - தமிழாக்கம்

உண்மையை உணர்த்தும் உபநிடதம் சூழந்திட
மண்ணிலே யோகிகள் மன்றாடித் தொழுதிட
கண்ணைக் கவரும் காயம்பூ ஒளியில்
என்னெதிரே தெரிந்திடும் எழிலான இளைஞனே


-->  /காயம்பூ /
Typo? காயாம்பூ?
An english translation is available here: http://www.narayaneeyam-firststep.org/dashaka100.html




VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 2, 2014, 10:14:31 PM11/2/14
to சந்தவசந்தம்
பாராட்டத் தக்க முயற்சி. மூலத்தைக் கூடியவரையில் பின்பற்றி, எதுகை, மோனையுடன் நன்கு அமைத்துள்ளீர்கள். நாராயண பட்டத்ரியின் இந்தத் துதி  சம்ஸ்கிருத யாப்பின் முழு அழகோடு அமைந்து,  கேசாதி பாதமாய் கண்ணனின் திருவுருவின் ஒவ்வொரு அங்கத்தையும் பூண்டுள்ள அணிவகைகளையும்  மிக நுணுக்கமாக  வருணிக்கும் அற்புதப் படைப்பு. அதை முழுமையாக யாப்பில் தமிழாக்கம் செய்வது கடினமான செயல். எனவே உங்கள் கவிதை ஆங்காங்கு மூலத்திலிருந்து மாறுபடுவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம்.
 
மறைந்த உங்கள் தந்தையாருக்கு மிக உன்னதமான நினைவாஞ்சலி இது.

.. அனந்த்
http://vsa-pradoshappaadalgal.blogspot.ca/
http://chandhamanantham.blogspot.ca/      

2014-11-02 11:35 GMT-05:00 Varalakshmi Niranjan <varathi...@gmail.com>:

நாராயணீயம்100 வது தசகம் - தமிழாக்கம்


உண்மையை உணர்த்தும் உபநிடதம் சூழந்திட
மண்ணிலே யோகிகள் மன்றாடித் தொழுதிட
கண்ணைக் கவரும் காயம்பூ ஒளியில்
என்னெதிரே தெரிந்திடும் எழிலான இளைஞனே


குருவாயூர் தலைவனே கொடுக்கும் காருண்யமே
திருவடி சரணடைய தீர்ந்திடும் கவலைகளே
விரும்பியதை வழங்கிடும் விருட்சமான கற்பகமே
அருளிடு மோட்சத்தை அழகான கிருஷ்ணனே!

கிருஷ்ணா! காருண்ய சிந்தோ!!
கருணைக்கடலே! கிருஷ்ணனே!!!
அருளிடு மோட்சத்தை அழகான கிருஷ்ணனே !!



மூலம்- நாரயணீயம்- 'அக்ரே பஸ்யாமி'
நாரயணபட்டர் 1587 AD அருளியது

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 2, 2014, 10:22:53 PM11/2/14
to சந்தவசந்தம்

முன்னிடுகையைத் தொடர்ந்து, ஆங்காங்குக் காணும் ஒற்றுப் பிழைகளைச் சரிசெய்யலாம். காட்டாக,

முழுதானக் கடவுளாய், கழலடிப் பணிந்திடக் கால்நுனித் தெரியுமே - ஒற்று மிகை
 

அனந்த்

--

Subbaraman NV

unread,
Nov 2, 2014, 11:02:31 PM11/2/14
to santhav...@googlegroups.com
Absolutely great! May your father continue to bless you all from his heavenly abode!
N V Subbaraman

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

M. Viswanathan

unread,
Nov 2, 2014, 11:18:18 PM11/2/14
to Santhavasantham
படிக்க மனதுக்கு இதமாக இருக்கிறது ...இருக்காதா பின்னே அது கண்ணனின் கவிதை அல்லவா! .
அன்புடன்,
மீ.விசுவநாதன்

N. Ganesan

unread,
Nov 2, 2014, 11:53:58 PM11/2/14
to santhav...@googlegroups.com


On Sunday, November 2, 2014 8:02:31 PM UTC-8, NVSR wrote:
Absolutely great! May your father continue to bless you all from his heavenly abode!
N V Subbaraman

செம்பை வைத்தியநாத பாகவதர் - அக்ரே பஷ்யாமி

யேசுதாஸ் - மலையாளப்பாடல்

நாராயணீயம் - நூறாம் தசகம்:
 
எங்கள் தோட்டத்திலிருந்து சரியாய் 90 மைல் குருவாயூர்.
இரவில் போய் தங்கி யானைகளின் சீவேலி,
காலையில் வாகைசாத்து பலமுறை தரிசித்த நினைவில்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 3, 2014, 12:37:52 AM11/3/14
to santhav...@googlegroups.com


On Sunday, November 2, 2014 8:18:18 PM UTC-8, meev1955 wrote:
படிக்க மனதுக்கு இதமாக இருக்கிறது ...இருக்காதா பின்னே அது கண்ணனின் கவிதை அல்லவா! .
அன்புடன்,
மீ.விசுவநாதன்

குருவாயூர் உண்ணிக் கண்ணனுக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு வாகைப்பொடி சார்த்து:
வாகைசார்த்து - பி. லீலா,

பீ.லீலாவின் ஒரு பாடல் உண்டு. அந்த பாடலின் ஒலிநாடா இணைத்திருக்கிறேன். அதில் ஒரு வரி. நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறப்பதற்கு முன்பே மேல்சாந்தி எனப்படும் தலைமை பூசாரி குளத்தில் குளித்து வந்தாயிற்று என்றிருக்கும். பிறகு பகவானின் எண்ணைக் காப்பு, வாகப் பொடி சார்த்து,, நவகாபிஷேகம், சங்காபிஷேகம், அலங்காரம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கும். அந்த மேல்சாந்தி குளித்து வருவதை யாரும் பார்க்க முடியாது. சிறப்பு நிர்மால்ய தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தாலலொழிய. அப்படி ஒரு நிர்மால்ய தரிசனம் நீ என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? அந்தப் பாடலில் வரும் அத்தனை விஷயங்களையும் நான் பார்க்க வேண்டாமா? அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் இந்தக் கேள்வி எழும். கூடவே பாடலின் அர்த்தத்தில் கண்கள் கலங்கிக் கொட்டும்.

இரண்டு வருடம் முன்பு என் சினேகிதி மைதிலி மற்றும் லலிதா என்பவர்களுடன் குருவாயுருக்குப் போனபோது மைதிலி, “உஷா ஸ்பெஷல் நிர்மால்யம் பார்க்கப் போகிறோம் என்றாள். அவளது உறவினர் ஒருவர் மூலம் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. உடலும் மனமும் பரபரத்தது. விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மேற்கு கலவரா வாதிலுக்கு (கதவு) அருகில் வந்தோம். இரண்டேகால் மணிக்கு அந்தக் கதவு வழியாக உள்ளே அனுமதிக்கப் பட்டோம்.எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவிலுக்குள் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே கொடிமரத்திர்க்கருகில் நின்றிருந்த போது எனக்கு அது கனவா நனவா என்றே புரியவில்லை. நாங்கள் நின்றிருக்க்கையில் இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டாரில் ஒருவரான சுரேஷ் கோபி.

மனசுக்குள் நாம ஜெபத்துடன் நின்றிருக்கையில் அந்தக் காட்சி....! குளித்து ஈர முண்டுடன் சற்றே உடல் உதரவேகமாக வந்து கொண்டிருந்தார் கோவிலின் மேல்சாந்தி. (மேல்சாந்தி ஸ்நானம் கழிஞ்சு வன்னு)பாடல்வரி என் மனசுக்குள் ஓடிற்று. அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம். உடம்பு நடுங்கியது எனக்கு. எதிர்பாராமல் கிடைக்கும் சிறப்பு நிர்மால்ய தரிசனமல்லவா? கோவிலுக்கு வெளியில் இதைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் சன்னிதி முன் அதை முதலில் காண நின்றிருக்கிறோம் என்பது எத்தகைய பேறு.

சடாரென நடை திறக்கப் பட்டது. முந்தைய இரவு அலங்காரங்களோடு நிர்மால்ய தரிசனம் தந்தான் அவன். அவசரமாய் விழி நீரை துடைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தேன். அதேநேரம் கோவில் வெளிக் கதவு திறக்கப்பட பக்தர்கள் கூட்டமும் முண்டியடித்து வந்தது. நான் சட்டென சுரேஷ் கோபியின் அருகில் ஒதுங்கி நிற்க அவரது பிராபல்யத்தால் எங்களுக்கும் அங்கே நிற்க சற்று நேரம் அனுமதி கிடைத்தது.அலங்கராம் கலைக்கப் பட்டு முழு விக்கிரகமும் பளிச்சென எண்ணைக் காப்பில் மின்னியது. அடுத்து வாகப் பொடி சார்த்து.

(கேசவனுண்ணி கண்ணன்டே மேனி கேஸாதி பாதம் எண்ண தேச்சு. வாசன வாகப் பொடிசார்த்தி, வாசுதேவன் மேனி நீராட்டி) உள்ளே பாடல் ஒலித்தது.போதும்டாப்பா போதும். இந்த ஜென்மம் நற்பயனடைந்தது.

தொடர்ந்து சங்காபிஷேகமும் பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியில் வந்து விட்டேன். இப்போதும் என் மனசுக்குள் அந்தக் காட்சிகள் பத்திரமாக இருக்கிறது. தினமும் விடியல் மூன்று மணிக்கு அதைத்தான் பார்க்கிறேன்.”

-------------

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages