அரற்றின கவிக்குலம், அரக்கர் ஆர்த்தனர்!

282 views
Skip to first unread message

shylaja

unread,
Nov 24, 2014, 5:12:43 AM11/24/14
to mintamil, vallamai

கம்பராமாயணவகுப்பின் மூன்று மணிநேரமும் தமிழ்க்கடலில் முத்துக்குளியல் தான்!

 எடுக்கவோ கோக்கவோ எனும் நிலைமையில் அவ்வப்பொழுது  சில பாடல்களை மட்டும் எடுத்துத்தருவது மனதிற்கு இசைவாக இருக்கிறது.

 மாணவர்கள்சிலரின் வேண்டுகோளுக்காக 
 யுத்த காண்டத்தில் கும்பகர்ணவதைப்படலத்திற்கு தாவிப்போனோம்!
கும்பகர்ணனின்  வீரம் வியப்படைய வைக்கிறது .அண்ணனுக்காக  அண்ணலுடன் போரிட வந்தவன் கும்பகர்ணன். அவன் அமர்ந்த கோலம் இராவணனின் நின்ற நிலையாம் அப்படியானால் பார்த்துக்கொள்ளுங்கள் கும்பகர்ணனின் உருவத்தை.

சுருக்கமாக சில காட்சிகளை மட்டும் பார்ப்போம்.

சுக்ரீவனைக்கவர்ந்துகொண்டு போகிறான் கும்பகர்ணன்

உரற்றின பறவையை யூறு கொண்டெழச்
சிரற்றின பார்ப்பினிற் சிந்தை சிந்திட
விரற்றுறு கைத்தலத்தடித்தி வெய்துயிர்த்து
அரற்றின கவிக்குலம்  அரக்கர் ஆர்த்தனர்

என்கிறார் கம்பர்
 சத்தம் செய்துகொண்டிருந்த தாய்ப்பறவையை வல்லூறு பற்றிக்கொண்டு போய்விட பேரொலிபடக்கதறின குஞ்சுப்பறவைகள்போல சுக்ரீவனை கும்பகர்ணன் கவர்ந்தபோது மனம்முறிந்திட விரல் நெருங்கிய கையினால் அடித்துக்கொண்டு வெப்பமாகப்பெருமூச்சுவிட்டு வாய்விட்டுக்கதறின.
 அரக்கரோ மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். கவியரசன் சுக்ரீவன்(கவி=குரங்கு)
 அவனை வல்லூறாய் தூக்கிக்கொண்டு  போகிறானாம்  கும்பகர்ணன்  இதர வானரசேனையின் நிலையை கம்பரின் வரிகள்  எப்படிக்காட்சியாய் காட்டுகின்றன பாருங்கள்!

சுக்ரீவனை  கும்பகர்ணன் தூக்கிக்கொண்டுபோன செய்தி இராமருக்குதெரியவருகிறது.
இராமனுக்கு சினம் உண்டாகிறது.
தீயெனும் முதிர்வுறச்சிவந்த கண்ணினான்

என்கிறார் கம்பர் இங்கு அண்ணலின் கோபத்தைக்காட்ட.

ஏயெனுமளவினின் இலங்கைமாநகர் வாயில் சென்றெய்தினான் என முடிக்கிறார்.
நொடிப்பொழுதில் அங்கேபோன  தசரத மைந்தன்,
 கும்பகர்ணன்  சுக்ரீவனைத்தூக்கிப்பறக்கும்
ஆகாய வழியெல்லாம் சரமழை விடுகிறார். அம்பு மதிலைக்கடக்க முடியாமல் கும்பகர்ணன்  திகைக்கிறான்.

 அவன் அண்ணலைப்பார்க்கிறானாம்.

கண்டனன் வதனம்  வாய் கண் கை காலெனப்
புண்டரீகத்தடம் பூத்து பொற்சிலை
மண்டலந்தொடர்ந்து மண்வயங்க வந்ததோர்
கொண்டலிற் பொலிதரு கோலத்தான்றனை

வில் வட்டத்தைப்பெற்ற  காளமேகமானது  கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!
’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை  அருளியதுபோல  அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.
அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,

இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது  அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என  வாய்ப்பு தருகிறான்.  இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.
அவன்   போரே குறியாக  இருக்கிறான்.

 இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.
கும்பகர்ணன்  கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை  தூள்தூளாக்குகிறார் இராமன்.

ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம்  விதிர்ப்புற்றான்’ என்கிறார்  கம்பர்.  இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.

 கும்பகர்ணனுக்கு  மனதில் நல் உணர்வு தோன்ற,’ விபீடணனை நீ காக்கவேண்டும் அவன் உமது பக்கம் சேர்ந்துள்ளான்,
    இராவணன் இவனை கொல்லவும் சித்தமாவான்  ஆகவே  ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்,  உன் அம்பினாலேயே என் கழுத்தை அறுத்துவிட்டுபின்என்னைக்கடலில் மூழ்கடிக்கச்செய்.  ‘இது நின்னை வேண்டுகின்ற பொருள்’என்றான். கும்பகர்ண
 சரணாகதியாக  கடைசி சில பாடல்கள்  அமைந்திருக்கின்றன. சரணம் அடைந்தவரின்  வாக்கினை நிறைவேற்றுவது
 இறை கருணை அல்லவா! இராமன் அதனைச்செய்கிறான்.

நாசி துவாரங்கள் மட்டும்  உள்ளமுகம் செவிகளும் இழந்த இரு குழிகள் அங்குகொண்ட அவன் முகம் நீரில் மூழ்கும்போது  குடு குடு என நீர்வெள்ளம்  துவாரங்களில் புகுந்து  வழிய முகமண்டலம்  உள்ளே அமுங்குவதை  கம்பரின் பாடலைப்பாருங்கள் எத்தனை ‘டு’ இட்டிருக்கிறார் என்று!

மாக்கூடு படர்வேலை
    மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
    மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
    புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
    மூழ்கியது அம் முகக் குன்றம்.

(நன்றி  வகுப்பில்  இவை அனைத்தையும் விளக்கிய திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு..)

--
 
அன்புடன்
ஷைலஜா

Hari Krishnan

unread,
Nov 24, 2014, 5:46:11 AM11/24/14
to vallamai, mintamil
2014-11-24 15:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வில் வட்டத்தைப்பெற்ற  காளமேகமானது  கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!
’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை  அருளியதுபோல  அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.
அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,

இல்லம்மா.  மூர்ச்சித்த சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, ‘தலைவனை சிறைப் பிடித்துவிட்டால், படை சிதறும்; போரே முடிந்துவிடும்’ என்ற எண்ணத்தோடு கும்பகர்ணன் திரும்புகையில், சுக்ரீவனை மீட்பதன் பொருட்டு இராமன் அவனுடைய நெற்றிப் பொட்டில் இரண்டு அம்புகளைச் செலுத்தி நிறுத்துகிறான்.  பெருகுகிற குருதி அருவியால் மயக்கம் தெளிந்த சுக்ரீவன், அந்தச் சமயத்தில் தளர்ந்திருந்த கும்பகர்ணனுடைய தோளிலிருந்து நழுவி, அவனுடைய காதுகளையும் மூக்கையும் கடித்து எடுத்துக் கொண்டு திரும்பிவிடுகிறான்.

இது வான்மீகத்தில் உள்ள காட்சிதான்.  ஆனால், வான்மீகத்தில் சுக்ரீவனுக்குத் தானே நினைவு திரும்புகிறது.  நாடகத் தன்மையை மாற்றியது கம்பன்.  இதைச் சொன்னேன் இல்லையா?

இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது  அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என  வாய்ப்பு தருகிறான்.  இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.
அவன்   போரே குறியாக  இருக்கிறான்.

 இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.
கும்பகர்ணன்  கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை  தூள்தூளாக்குகிறார் இராமன்.

முதல் கரத்தை வெட்டிய உடனேயே, அற்றுப் போய் விழுந்த கையை எடுத்துக் கொண்டு, மாபெரும் உலக்கை என்று வர்ணித்தாலும் போதாத அந்த விழுந்த வலது கரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு வானர சேனையை அடித்து துவம்சம் செய்கிறான்.

உள்ள கையினும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம் 

என்று அற்புதமாகப் பாடுகிறான் கம்பன்.  மலையைப் பெயர்த்து எறிந்தது, கை அறுபடுவதற்கு முன்னால்.

ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம்  விதிர்ப்புற்றான்’ என்கிறார்  கம்பர்.  இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.

இரண்டு கையும் இரண்டு காலும் போன நிலையில்,

தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் 
    சிகையினால் திசை தீய 
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் 
    விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, 
    பிலம் திறந்தது போலும் 
வாயினால் செல, வீசினன்; வள்ளலும் 
    மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.  

கழுத்தைத் திருப்பி பக்கத்திலிருக்கும் மலையைக் கடித்து எடுத்து, மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களுக்கிடையில் பற்றிக் கொண்டு, நாவை உண்டிவில் போல வளைத்து உந்தியும், ஊதிச் செலுத்தியும் அந்த மலையைப் பறக்கச் செய்து, வானரசேனையின் மேல் விழச் செய்து நசுக்கிக் கொன்றான்.  இப்படிப்பட்ட எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தன் முயற்சியை விடாது தொடர்ந்த கும்பகர்ணனுடைய செயலைப் பார்த்து இராமனுடைய வில் பிடித்த கை நடுங்கியது என்று கம்பன் எழுதுவானானால், அது அவன் கும்பகர்ணனுக்குக் கொடுத்த மிகப் பெரிய tribute என்றல்லவா பார்த்தோம்.  இத்தனைக்கும் சீதையைத் திரும்பத் தரவேண்டும் என்று வற்புறுத்தியவன், ‘வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன்.  பொன்றுவன்’ என்று விடை பெறும்போதே இராவணனிடம் சொல்லிக் கொண்டு வந்தவன், தான் போரிடும் காரணத்தில் தனக்கே சம்மதமில்லாதவன், ஒரு வீரன் ஆற்ற வேண்டிய கடமைக்காக வந்து, ஏதோ கடமைக்குப் போரிட்டேன் என்றில்லாமல், எல்லா உறுப்புகளையும் இழந்த பின்னாலும் தன் வேகத்தைத் தொடர்ந்தான் அல்லவா.  அதற்கு செலுத்தப்பட்ட பிரமிப்பு நிறைந்த பாராட்டு இது.

கும்பகர்ணன் வதைப்படலத்தின் வரைபடம் என்னவோ வால்மீகியிலிருந்து அப்படியே எடுத்ததுதான் என்றாலும், இந்தக் காட்சியெல்லாம் வால்மீகியில் கிடையாது.  இது முற்ற முழுக்க கம்பனுடைய படைப்பு.  கம்பனுடைய செய் நேர்த்தியில் பெரிதும் உயர்ந்து நிற்பவன் கும்பகர்ணனே என்பதை யாராலும் ஆட்சேபிக்க முடியாத அளவுக்கு வலுவான பாத்திரப் படைப்பு கும்பகர்ணன்.

 கும்பகர்ணனுக்கு  மனதில் நல் உணர்வு தோன்ற,’ விபீடணனை நீ காக்கவேண்டும் அவன் உமது பக்கம் சேர்ந்துள்ளான்,
    இராவணன் இவனை கொல்லவும் சித்தமாவான்  ஆகவே  ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்,  உன் அம்பினாலேயே என் கழுத்தை அறுத்துவிட்டுபின்என்னைக்கடலில் மூழ்கடிக்கச்செய்.  ‘இது நின்னை வேண்டுகின்ற பொருள்’என்றான். கும்பகர்ண
 சரணாகதியாக  கடைசி சில பாடல்கள்  அமைந்திருக்கின்றன. சரணம் அடைந்தவரின்  வாக்கினை நிறைவேற்றுவது
 இறை கருணை அல்லவா! இராமன் அதனைச்செய்கிறான்.

நாசி துவாரங்கள் மட்டும்  உள்ளமுகம் செவிகளும் இழந்த இரு குழிகள் அங்குகொண்ட அவன் முகம் நீரில் மூழ்கும்போது  குடு குடு என நீர்வெள்ளம்  துவாரங்களில் புகுந்து  வழிய முகமண்டலம்  உள்ளே அமுங்குவதை  கம்பரின் பாடலைப்பாருங்கள் எத்தனை ‘டு’ இட்டிருக்கிறார் என்று!

மாக்கூடு படர்வேலை
    மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
    மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
    புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
    மூழ்கியது அம் முகக் குன்றம்.

தலை கடலில் அழுந்தும் போது டுடுடுடுடுடு என்று நீர் மூக்கு, காது தொளைகளின் வழியாக உள்ளே நிரம்புகின்றதல்லவா, அதைக் குறிப்பால் காட்டும் டுகரச் சேர்க்கை.

நான்கு பகுதிகளாக யூட்யூபில் ஏற்றியிருக்கிறேன்.  விரும்பியவர்கள் பார்க்கட்டும்.

பகுதி 1

சுக்ரீவனுக்கும் கும்பகர்ணனுக்கும் நடந்த போர், அனுமன் கையைப் பிசைந்தபடி கும்பகர்ணனைத் தொடர்வது முதலானவை.

பகுதி 2

இராமனுடைய சரக்கூடம் தடுக்க, அவனைத் திரும்பிப் பார்த்த கும்பகர்ணனுடைய வீர உரையிலிருந்து, இராமனுடன் விளைந்த போர் முதலானவை.  இதில் வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் ஒற்றுமைப் பகுதியைப் படித்துக் காட்டியிருக்கிறேன்.  எந்தச் செய்யுளை எங்கிருந்து கம்பன் எடுத்திருக்கிறான் என்பதைக் காட்டினேன்.

பகுதி 3

கும்பகர்ணனுக்கும் இராமனுக்கும் இடையில் நடந்த போர்.

பகுதி 4

கும்பகர்ணன் போர் தொடர்ச்சி, இராமன் ஒவ்வொரு கையாகவும் ஒவ்வொரு காலாகவும் துண்டிக்க, விடாப்பிடியாக கும்பர்ணன்  போரிடுவதும், மேற்படி மலர்க்கை விதிர்ப்புற்றான் பாடலும், கடைசியில் கும்பகர்ணன், வீடணனை ஒரு கணமும் கைவிட்டுவிடாமல் அவனை நெருங்கியிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது முதலானவை..  இந்த டுகரப் பாட்டு, கடைசிப் பாட்டுக்கு முந்திய பாடல்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Nov 24, 2014, 5:58:33 AM11/24/14
to vallamai, mintamil
2014-11-24 2:46 GMT-08:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
2014-11-24 15:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வில் வட்டத்தைப்பெற்ற  காளமேகமானது  கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!
’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை  அருளியதுபோல  அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.
அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,

இல்லம்மா.  மூர்ச்சித்த சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, ‘தலைவனை சிறைப் பிடித்துவிட்டால், படை சிதறும்; போரே முடிந்துவிடும்’ என்ற எண்ணத்தோடு கும்பகர்ணன் திரும்புகையில், சுக்ரீவனை மீட்பதன் பொருட்டு இராமன் அவனுடைய நெற்றிப் பொட்டில் இரண்டு அம்புகளைச் செலுத்தி நிறுத்துகிறான்.  பெருகுகிற குருதி அருவியால் மயக்கம் தெளிந்த சுக்ரீவன், அந்தச் சமயத்தில் தளர்ந்திருந்த கும்பகர்ணனுடைய தோளிலிருந்து நழுவி, அவனுடைய காதுகளையும் மூக்கையும் கடித்து எடுத்துக் கொண்டு திரும்பிவிடுகிறான்.>>.  சுக்ரீவன்   செய்யும் செயல் இது தவறுக்கு வருந்துகிறேன்.

இது வான்மீகத்தில் உள்ள காட்சிதான்.  ஆனால், வான்மீகத்தில் சுக்ரீவனுக்குத் தானே நினைவு திரும்புகிறது.  நாடகத் தன்மையை மாற்றியது கம்பன்.  இதைச் சொன்னேன் இல்லையா?>>ஆமாம்  

இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது  அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என  வாய்ப்பு தருகிறான்.  இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.
அவன்   போரே குறியாக  இருக்கிறான்.

 இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.
கும்பகர்ணன்  கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை  தூள்தூளாக்குகிறார் இராமன்.

முதல் கரத்தை வெட்டிய உடனேயே, அற்றுப் போய் விழுந்த கையை எடுத்துக் கொண்டு, மாபெரும் உலக்கை என்று வர்ணித்தாலும் போதாத அந்த விழுந்த வலது கரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு வானர சேனையை அடித்து துவம்சம் செய்கிறான்.

உள்ள கையினும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம் 

என்று அற்புதமாகப் பாடுகிறான் கம்பன்.  மலையைப் பெயர்த்து எறிந்தது, கை அறுபடுவதற்கு முன்னால்.

ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம்  விதிர்ப்புற்றான்’ என்கிறார்  கம்பர்.  இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.

இரண்டு கையும் இரண்டு காலும் போன நிலையில்,

தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் 
    சிகையினால் திசை தீய 
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் 
    விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, 
    பிலம் திறந்தது போலும் 
வாயினால் செல, வீசினன்; வள்ளலும் 
    மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.  

கழுத்தைத் திருப்பி பக்கத்திலிருக்கும் மலையைக் கடித்து எடுத்து, மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களுக்கிடையில் பற்றிக் கொண்டு, நாவை உண்டிவில் போல வளைத்து உந்தியும், ஊதிச் செலுத்தியும் அந்த மலையைப் பறக்கச் செய்து, வானரசேனையின் மேல் விழச் செய்து நசுக்கிக் கொன்றான்.  இப்படிப்பட்ட எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தன் முயற்சியை விடாது தொடர்ந்த கும்பகர்ணனுடைய செயலைப் பார்த்து இராமனுடைய வில் பிடித்த கை நடுங்கியது என்று கம்பன் எழுதுவானானால், அது அவன் கும்பகர்ணனுக்குக் கொடுத்த மிகப் பெரிய tribute என்றல்லவா பார்த்தோம்.  இத்தனைக்கும் சீதையைத் திரும்பத் தரவேண்டும் என்று வற்புறுத்தியவன், ‘வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன்.  பொன்றுவன்’ என்று விடை பெறும்போதே இராவணனிடம் சொல்லிக் கொண்டு வந்தவன், தான் போரிடும் காரணத்தில் தனக்கே சம்மதமில்லாதவன், ஒரு வீரன் ஆற்ற வேண்டிய கடமைக்காக வந்து, ஏதோ கடமைக்குப் போரிட்டேன் என்றில்லாமல், எல்லா உறுப்புகளையும் இழந்த பின்னாலும் தன் வேகத்தைத் தொடர்ந்தான் அல்லவா.  அதற்கு செலுத்தப்பட்ட பிரமிப்பு நிறைந்த பாராட்டு இது.<<<கும்பகர்ணனின் போர் வேகம்  பிரமிப்பாகவே இருந்தது அவன்  கடைசியில்  வீழும் வரைக்கும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

 சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!
கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!
திருமழிசை

shylaja

unread,
Nov 24, 2014, 6:07:33 AM11/24/14
to vallamai, mintamil
பலமிருகங்கள்  கூடியுள்ள பரவிய மகரவேலையின்(மகரம்=மீன் வேலை=கடல்)  மடங்குகின்ற
திரையை(அப்பால்) தள்ளி மேற்கிலும் கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திக்கிலும் இடையே போதல் தவிர்த்து இருகண்களின் புகையுடன் அஸ்திரப்புகையும் வெளிப்பட  அந்த முகக்குன்றம் (அறுந்த) மூக்கு வழியாக(நீர்) உட்புகப்புக்கு மூழ்கியது.மலைபோன்ற முகம் விழவே சஞ்சார மறுக்கும்படி கடலின் நீர் நான்கு திசைகளிலும் முதலில் விலக, அம்முகம் அறுந்த மூக்கின் வழியே நீர் புகப்பெற்றுப்பிறகு கடலில் அமிழ்ந்துவிட்டதென்பதாகும்......சொற்பொருள் விளக்கம்  இதுதான்  வாசித்த புத்தகத்தில்  உள்ளபடி!

2014-11-24 2:57 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மாக்கூடு படர்வேலை
    மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
    மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
    புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
    மூழ்கியது அம் முகக் குன்றம்.

சொற்பொருள் விளக்கம் கொடுங்க சைலஜா

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

 சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!
கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!
திருமழிசை

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 24, 2014, 7:52:07 AM11/24/14
to vallamai, mintamil, Shylaja Narayan, Hari Krishnan
திருமிகு ஷைலஜா அவர்கள் நன்னூல் கற்றதைப் பகிர்ந்துகொண்ட பாங்கு அருமை. திரு ஹரிகி அவர்களின் மேல் விளக்கம் பாலுக்குச் சுவையூட்டும் கற்கண்டு.
கும்பகர்ணன் பாத்திரப் படைப்பைக் கம்பராமாயணத்தில் பலமுறை வியந்து படித்ததுண்டு. மானுட உளவியல் செய்திகளும் உண்டு.
சுக்கீரவன் குரங்கின் செய்கை போலக் கும்பகர்ணனின் மூக்கையும் காதுகளையும் பறித்தும் கடித்தும் சிதைத்துவிடுகிறான், மூக்கற்றுப் பிணமாக முனிவர்களும் மற்றோரும் காண விழுந்து கிடக்கக் கும்பனின் மான உணர்வு இடங்கொடுக்கவில்லை. எனவே கடலில் அமுக்கக் கேட்டுக்கொள்கிறான். 
அனுபவித்துப் படித்துப் பதிவேற்றியும் தருகிறீர்கள். யுட்யூப் தரவிறக்கம் தான் எனக்கு வேகமில்லை. சேர்த்துத் தேவை வரும்போது படித்துக்கொள்ளலாம் என்ற எண்னமுண்டு.
நன்றி

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Hari Krishnan

unread,
Nov 24, 2014, 8:04:46 AM11/24/14
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil, Shylaja Narayan

2014-11-24 18:22 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
எனவே கடலில் அமுக்கக் கேட்டுக்கொள்கிறான். 
அனுபவித்துப் படித்துப் பதிவேற்றியும் தருகிறீர்கள். யுட்யூப் தரவிறக்கம் தான் எனக்கு வேகமில்லை. சேர்த்துத் தேவை வரும்போது படித்துக்கொள்ளலாம் என்ற எண்னமுண்டு.

மிக்க நன்றி வினைதீர்த்தான் ஐயா.  யுபிஎஸ்ஸி தேர்வு எழுதும் சில சென்னை மாணவர்கள், தேர்வுக்குப் பாடப் பகுதியில் கும்பகர்ணன் வதைப் படலம் இருப்பதாகவும், இந்த அமர்வில் சொல்லப்படும் விளக்கங்கள் நன்றாகப் புரிவதால், டிஸம்பர் மாத நடுப் பகுதியில் வரும் அவர்களுடைய தேர்வுக்காக, யுத்த காண்டத்தை கும்பகர்ணன் வதைப் படலத்தோடு தொடங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் எழுத்தாளர் சொக்கன் தெரிவித்தார்.  அதன் பேரில் பதினான்கு படலங்களை பை-பாஸ் செய்து இந்தப் படலத்தோடு தொடங்கி, நான்கு அமர்வுகளில் முடித்தோம்.

அவர்களுக்குப் பயன்படுகிறது.  எது எப்படி இருந்தாலும் இந்தப் பதிவுகளை வலையேற்றி வைத்துவிட்டால் என்றாவது யாருக்காவது பயன்படும்.  யார் கண்டது... ஒருவேளை அடுத்த பிறப்பில் எனக்கே பயன்பட்டாலும் படலாம்.  திருவருளின் கையில் ஒப்படைத்துவிட்டால் மற்ற சிந்தனைக்கு இடமேது!

மீண்டும் நன்றி ஐயா.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 24, 2014, 8:45:54 AM11/24/14
to வல்லமை, mintamil, Shylaja Narayan
படிக்கும் போதே கண்களில்  நீர் மல்குகிறது!.. அக்காவின் இம்மாதிரியான பகிர்வுகளுக்கும், ஹரிகி அண்ணாவின் விளக்கங்களுக்கும் நன்றி சொல்லி மாளாது!.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-11-24 18:34 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
       
Iyappan Krishnan

unread,
Nov 24, 2014, 9:13:27 AM11/24/14
to vall...@googlegroups.com, karu...@gmail.com, minT...@googlegroups.com, shyl...@gmail.com
நானும் வந்து ரெண்டு வார்த்தை உளறலைன்னா...அப்புறம் தெய்வ குத்தமாகிடுமாம். அக்கா சொன்னாங்க. அதனால நானும் வரேன் இந்த ஆட்டத்துக்கு.  எங்க இருந்து ஆரம்பிக்கிறது ?....

மார்கழி கிட்ட வந்துடுச்சு. அப்ப  ஆண்டாளம்மா கிட்ட இருந்தே தொடங்குவோம்.  அதென்ன ஆண்டாளுக்கும் கும்ப கர்ணனுக்கும் என்னய்யா தொடர்புன்னு கேக்கறீங்களா... 

யோசிச்சுட்டே இருங்க..  இந்தா வந்துட்டேன்.. 

shylaja

unread,
Nov 24, 2014, 9:15:42 AM11/24/14
to Iyappan Krishnan, vallamai, சொ. வினைதீர்த்தான், mintamil
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்....என்கிறாள் ஆண்டாள்  தெரியாதாக்கும் எங்களுக்கு?:)
--
 
அன்புடன்
ஷைலஜா

 சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!
கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!
திருமழிசை

shylaja

unread,
Nov 24, 2014, 9:20:27 AM11/24/14
to சொ. வினைதீர்த்தான், vallamai, mintamil, Hari Krishnan
நன்றி  வினைதீர்த்தான் ஐயா.. சுக்ரீவன்
 செய்கையை  மறந்து அதனை  அண்ணல்மீது  போட்டுவிட்டேன் என்ற உறுத்தல் . அழகாய் நீங்களும் அதனை சுருங்க விளக்கியது மிக அருமை. 
--
 
அன்புடன்
ஷைலஜா

 சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!
கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!
திருமழிசை

shylaja

unread,
Nov 24, 2014, 9:34:17 AM11/24/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, mintamil
நன்றி பார்வதி...வெகுதொலைவிலிருந்து  வாராவாரம் சிரமம் பாராமல் வந்து வகுப்பெடுக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களால் நாங்கள் அடையும் நன்மை  இது.  
--
 
அன்புடன்
ஷைலஜா

 சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!
கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!
திருமழிசை

Iyappan Krishnan

unread,
Nov 24, 2014, 10:05:00 AM11/24/14
to shylaja, vallamai, சொ. வினைதீர்த்தான், mintamil
அது சரி உங்க கிட்ட அதுவும்  திருப்பாவை பத்தி கேட்டு  ஜெயிக்கமுடியுமான்னேன். சரி விஷயத்துக்கு வருவோம்.

திருப்பாவைல  பத்தாவது பாட்டு.  

 - நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
   மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
   நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
   போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
   கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
   தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
   ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
   தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
***

நோற்று - நோன்பிருந்து,  அந்தப் புண்ணியத்தால் சுவர்கம் செல்லும்(செல்லப் போகும் ) அம்மனாய்,  நீ இருக்குமிடம் சொர்க்கமே ஆகட்டும்,  வாசல் திறவாமல் போனாலும், பேசவும் கூடாதா என்ன?   நறுமணமிக்க துளசியை அணிந்த நாராயணன் நம்மால் போற்றப் படும் புண்ணியன் இருக்க, முன்பு ஒருமுறை தான் செய்த பிழையினால் தூக்கத்தை வரமாகப் பெற்றுப் பின் இராவணனுக்காகப் போரிட்டிறந்த கும்பகரணன், தான் இறக்கும் முன் அந்தப் பெருந்துயிலை உனக்கு தந்துவிட்டானோ?  நன்றாக ஆழ்ந்த துயிலை (அனந்தம் = துயில்  ) நல்லாபரணமாய் கொண்டவளே (அல்லது )  ஆழ்ந்த தூக்கத்தை உடையவளே, நல்லாபரணம் போன்றவளே,  தெளிந்து ( தேற்றமாய் ) வந்து கதவைத் திறந்திடு என் பாவையே 

**

இந்தப் பாடல் முழுதும் ஒருவகையான எள்ளல் தொனி  இருப்பதை கவனிக்கலாம். இப்படித் தூங்கியே சொர்க்கம் போகப் போகிறாயா பெண்ணே ?  உன் கிட்ட கும்ப கர்ணனே தோத்துடுவான் போல இருக்கே ? தூக்கத்தையே நல்லாபரணமா போட்டவள் போல இருக்கே... தாயே பரதேவதே.. கொஞ்சம் தூக்கம் தெளிஞ்சு வந்து கதவத் திறடியம்மா... ( ம்ஹூம்.. முடியல்ல ஆண்டாளம்மாவாலயே போல )

**
இராவணாதியர்கள் தவம் கிடக்கிறார்கள் பிரம்மனிடம் சாகா வரம் வேண்டும் என்று. கும்பகர்ணனின் தவம் உக்கிரமாக இருந்தது. பிரம்ம தேவனோ  உடனுக்குடன் மனம் மகிழ்ந்து வரம் கொடுக்கும் வள்ளலாக இருந்தார்.  இந்தாடாப்பா கும்ப கர்ணா உனக்கு என்ன வரம் வேணும்னு மெனு சொல்லு... அப்படின்னு  கைல ஓலைச்சுவடி வச்சுட்டு நிக்கிறார் மெனுவ எழுதிக்க. இராவணன் கிட்ட ஏற்கனவே பட்ட அனுபவம் தான். எம்மாம் பெரிய லிஸ்ட்டுங்கறீங்க.   கும்ப கர்ணன் நித்யத்துவம் வேண்டும் என்று கேட்க நாவெடுக்கிறார். நாமகள் அவன் நாக்கைப் புரட்டி "நித்திரத் துவம்" என்று கேட்க வைத்துவிடுகிறாள். அதன் படி ஆறுமாதம் உறக்கம், ஆறு மாதம் விழிப்பு என்று செல்கிறது அவன் வாழ்க்கை.

இராவணன் படைகளை இழந்து துயருற்று வீழ்ந்து கிடக்கையில் மகோதரன்  வந்து அவனைத் தேற்றுகிறான். அப்போது கம்பனின் பாடல்களைப் பாருங்க.

“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
    வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
    உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
    ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப்
    புகழ்தியோ? புகழ்க்கு மேலோய்!

தோத்துட்டேன்னு அல்லது தோற்றுடுவோம்னு கவலைப் படாதே இராவணா... வென்றவர் தோற்பர்... தோற்றவர் வெல்வார்கள். உயர்ந்தோர் தாழ்வதும் நெறியென்று அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  ஆற்றலுக்கு எல்லை உள்ளதோ...  அப்படி இப்படின்னு சொல்லி ஒரு வழியா இராவணனைத் தேற்றி.. ... அவன் கும்ப கருணனை  எப்படி மறந்தேன்னு கேட்க... அப்பத்தான் கும்ப கர்ணன் நினைவே வருது இராவணனுக்கு. 

கும்பகர்ணனை எழுப்ப என்ன என்ன முயற்சிகள் :))  படிக்கும் போது மலைப்பும் சிரிப்பும் வருகிறது. 

யாளிகள், யானைகள், மல்லர்கள் எல்லாம் முயன்றும் கும்ப கர்ணனை எழுப்ப இயலவில்லை. ஒரு முயற்சியா குதிரைகளை மேலே ஓடவிட்ட்டாங்களாம்.  

கட்டுறு கவன மா ஓர்
    ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன்
    மார்பு இடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி,
    விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத்
    தடம் துயில் கொள்வது ஆனான்.

ஆயிரம் யானைகளோடு அவன் மார்பினிடை மாலை போல வீரர்கள் மேலமர்ந்து  இங்கும் அங்கும் ஓட விட்டார்களாம். அது  ஏற்கனவே நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு, உடம்பு பிடிச்சு விட்டா மாதிரி ஆகிடுச்சாம்.  அதனால இன்னும் ஆழ்ந்து உறங்க ஆரம்பிச்சானாம். 

எழுந்து வரும்  கும்ப கர்ணனின் உருவ வர்ணிப்பு இருக்குதே...

விண்ணையே இடறும் உயரம்... அவன் கண்கள் இரண்டும்  கடல்களை விடப் பெரியன. உலகத்தையே நிறைக்கும்  மேனி..   எப்படி இருக்கான்னாம்னா... முன்பொரு நாள் விண்ணை அளந்து நின்ற மாயவனைப் போல நின்றானாம். 

விண்ணினை இடறும் மோலி;
    விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்
    கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்
    வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற
    மால் என வளர்ந்து நின்றான்

இத்தனை வலிமை... ஆகிருதி இருந்தும், உண்மையில் இராமாயணத்தில் கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமையானது.  இராவணனுக்கு முடிந்த அளவுக்கு அறிவுரைச் சொல்லிப் பார்க்கிறான்.  அவன் அவ்வளவு தூங்கிக் கொண்டிருந்தாலும் அவன்  இராமனைக் குறித்து அறிந்தே இருக்கிறான் என்பதற்கு சான்றாக ஒரு பாடல் பாருங்கள்.

கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா!

உலகத்தில் இருப்பது எல்லாவற்றையும் கற்றுவிடலாம், இந்த உலகுக்கு வேலி கட்டவும் சொல்லலாம், இராமனின் தோள்வலியை வெல்லலாம் என்பதெல்லாம் எப்படி என்றால் தெரியுமா இராவனா... சீதையை நீ அணைக்கலாம் என்பது போன்றது.. அதாவது இதில் எதுவுமே சாத்தியமற்றது. 

ஹ்ம்ஹூம்... இராவணனன் மசியவே இல்லை. சரி அண்ணனுக்காக போருக்குப் போகிறான். அவனின் முடிவு அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.  

இராவணா...  நான் ஜெயிச்சு வருவேன்னு சொல்லல. விதி என் பிடறியைப் பிடித்து உந்தி தள்ளுகிறது.  இந்தப் போரில் நான் இறந்துப் போவேன். அப்படி  இறந்து போன பிறகாவது மனம் திருந்தி சீதை திரும்பக் கொடுத்துவிடு. 

என்னை அவன் வென்று விட்டால், கண்டிப்பாக உன்னையும் வென்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை இந்த நாள் வரைக்கும் நான் ஏதும் குற்றம்  செய்திருந்தால், என் அண்ணனே பொறுத்தருள். இனி உன் முகத்தில் நான் விழிப்பது என்பது . முடிந்து போன ஒன்று. எனக்கு விடை கொடு. என்று விடை பெற்றுப் போகும் போது இராவணன் மட்டுமல்ல. நமக்கும் கண்ணீர்  வழிவதை தடுக்க இயலவில்லை.
  
கும்ப கர்ணன் போர்களம் சென்று, அங்கே போர்க்களத்தில் எதிரில் விபீஷணன் இருப்பதைக் காண்கிறான். அப்பாடா நம் குலம் தழைக்க ஒருத்தனாவது இருக்கானேன்னு மகிழ்ந்திருக்கும் சமயமாகப்  பாத்து விபீஷணன் கும்ப கர்ணனை நோக்கி வருகிறான். 

முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய் 
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.

டேய் அப்பா, என் தம்பியே, என் செல்வமே, நீ ஒருத்தனாவது உயிர் பிழைத்து போனாயேன்னு நினைச்சு மகிழ்ந்திருந்தேன்.   ஓட்டைப் பாத்திரத்துல தண்ணி ஊத்தி வச்சா அது மொத்தமும் சிந்தி வீணா போறா மாதிரி உன் சிந்தனை எல்லாம் வழிஞ்சு போயிடுச்சா? ஏண்டா இங்க தனியா வந்தே.. அப்படின்னு மழை பெய்யறாமாதிரி கண்ணீர் விட்டு அழுதானாம்.  நீயும் இந்தப் பக்கம் வந்துட்டியானா... அந்த ராம பாணம் உன்னை சும்மா விடாதே.. நீயும் எங்க கூட இறந்துட்டியானா... அப்புறம் யாருடா எங்களுக்கு எள்ளும் தண்ணியும் இறைக்கிறதுன்னு உருகும் போது  விபீஷணன் சொல்றான். அண்ணா, நீ நல்லவன். வந்துடு .. ராமன் கிட்ட போயிடலாம்னு. அதுக்கு கும்ப கர்ணன் சொல்லுவதைப் பாருங்க.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.

இந்த வாழ்க்கை நீரினால் போட்டக் கோலம் போன்றது. இதை விரும்பி இத்தனை நாள் என்னை வளர்த்து ஆளாக்கி, எனக்குப் போர்க்கோலம் பூட்டி அனுப்பினவனுக்கு என் உயிரைக் கொடாமல் போவேனா ?   என் மகனைப் போன்ற என் தம்பியே... போடா என் துயரைக் களையனும்னா உடனே அந்த இராமன் கிட்ட போய்டுங்கறான். 

ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்

அந்தப் பக்கம் யார் நிக்கிறாங்கற? உலகத்தைக் காக்கும் பரம்பொருள் இறைவனே நிக்கிறார். அவர் பக்கத்துல அவன் தம்பி, வானரக் கூட்டமும் மட்டுமா நிக்குது.. எங்களைக் கொல்லும் விதியும் எமனும் சேர்ந்து நிக்குது. நான் போனாலும் நீ இருக்கனுண்டா தம்பின்னு அனுப்பி வைக்கிறான்.

கம்பர் எந்த அளவுக்கு கும்ப கருணனை உள்ளத்தில் மதித்தார் என்றால், இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர்  கொடுத்திருக்கிறார். 

தோள் கண்டார் தோளே கண்டார்னு  இராமனைச் சொன்னாரில்லையா ?  அது மாதிரி கும்ப கர்ணனைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க

"
தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "

இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்து முடிக்கவே பல நாளாகுமாம். ஒரு மலைக்கு கைக் காள் முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு :)

அட போங்க... எழுத எழுத போய்ட்டே இருக்கு... இப்போதைக்கு இது போதும். மிச்சத்தை அக்காவும் அண்ணனும் சொல்லுவாங்க. இதுல இருக்கிற தப்பையும் திருத்துவாங்க.  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. தூக்கமா வருது..

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 24, 2014, 10:21:31 AM11/24/14
to வல்லமை, shylaja, mintamil
ரொம்ப அருமையா சொல்லிட்டே வந்துட்டு திடும்னு முடிச்சிட்டீங்களே!.. அக்காவும் அண்ணனும் சொல்லுவாங்க தான்... அதுக்காவ நீங்க நிப்பாட்டணுமா?!.. ஆமா ஒம்பது மணி தான ஆகுது?!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-11-24 20:34 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
 
​  
​              

Dhivakar

unread,
Nov 24, 2014, 10:25:16 AM11/24/14
to vallamai, shylaja, சொ. வினைதீர்த்தான், mintamil
அன்புள்ள ஜீவ்ஸ்,
மிக மிக அருமை என்று ஒரு வார்த்தையால் சொல்லிவிட்டுப் போய்விடமுடியாது.. அனுபவித்து எழுதியதை அனுபவித்து படித்தேன், ஷைலஜா தொடங்கும் எங்தப் பதிவுக்கும்ம் இனிமைக்குக் குறைவே கிடையாதுஎன்ற நிரூபணம் ஒருபுறம். கம்பரின் கவித்துவ மகிமை ஒரு புறம், ஹரிகியின் புலமை, இத்தனையும் நோக்கும்போதும் கூட ஒரு செய்தி கூடவே மனதில் ஒட்டுகின்றது.. அது

இந்த இராவணன் எத்தனைதான் மாற்றான் மனைவியை சிறைபிடித்தது தவறு என உணர்ந்தாலும், அவன் மீது எத்தனை பாசம் இந்தத் தம்பியருக்கு என்பதும், கும்பகர்ணனின் சகோதரபாசத்துக்கு ஏது அளவு, அண்ணனுக்காக உயிர்த்தியாக, தம்பியை மகனாகப் பாவித்துப் பொங்கும் பாசம், ஆஹா, இந்த அரக்கர்கள்தான் எத்தனை சகோதர பாச உணர்வு மிக்கவர்கள்.. மனிதன் இந்த பாச உணர்வை நன்றாகக் கற்கவேண்டும்..

அன்புடன்
திவாகர்
2014-11-24 20:34 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:

Hari Krishnan

unread,
Nov 24, 2014, 10:26:40 AM11/24/14
to vallamai, shylaja, mintamil

2014-11-24 20:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
ரொம்ப அருமையா சொல்லிட்டே வந்துட்டு திடும்னு முடிச்சிட்டீங்களே!.. அக்காவும் அண்ணனும் சொல்லுவாங்க தான்... அதுக்காவ நீங்க நிப்பாட்டணுமா?!.. ஆமா ஒம்பது மணி தான ஆகுது?!..

அவன நல்லா கேளுங்க.  அண்ணன் தலைல கோத்து உடறான்.  நாளைக் காலை சென்னைக்குப் புறப்படுகிறேன்.  இனிமேல் அடுத்த கம்பராமாயண அமர்வுக்குத்தான் பெங்களூரு.    கொஞ்ச நாள் தலை மறைவாயிடுவேன்.  டாடா.

shylaja

unread,
Nov 24, 2014, 10:27:51 AM11/24/14
to Iyappan Krishnan, vallamai, சொ. வினைதீர்த்தான், mintamil
கம்பராமாயண வகுப்புக்குவராமலேயே  புத்தகம் படித்து கம்பனைக்கரைச்சிக்குடிக்கும்  ஐயப்சுக்கு  பாராட்டு!!கும்பகர்ணனை  இத்தனை  விரிவாக உயர்வாக  சித்தரித்தும் ராவணலீலா  என வடக்கே நடக்கும்  நிகழ்ச்சியில் கும்பகர்ணனையும் ராவணனோடு  சிதைப்பது ஏன் என தெரியவில்லை. வானரப்படைகளை அனுமனை சுக்ரீவனை ராமனையே  தாக்கியதால் இருக்குமா?

shylaja

unread,
Nov 24, 2014, 10:28:48 AM11/24/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, mintamil
ஜீவ்சு  எழுதமாட்டார்  எழுதினால்  இப்படித்தான் பொழிஞ்சிதள்ளுவார்! மழை அடிக்கடி பெய்யாதே பார்வதி:):)

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 24, 2014, 10:30:48 AM11/24/14
to shylaja, வல்லமை, mintamil
பெங்களூருல தான் மழையோட குளிரும் சேர்ந்து நடுக்க்க்குதே!..(நானே ஸ்வெட்டர் போட்டு, ஸ்கார்ஃப் கட்டி நடுங்கீட்டு எழுதறேன்!)  அப்படி நினைச்சுக்கிட்டு இலக்கிய மழைய கொட்டலாம்ல!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-11-24 20:58 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​ 

Hari Krishnan

unread,
Nov 24, 2014, 10:30:52 AM11/24/14
to vallamai, Iyappan Krishnan, சொ. வினைதீர்த்தான், mintamil

2014-11-24 20:57 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
கும்பகர்ணனை  இத்தனை  விரிவாக உயர்வாக  சித்தரித்தும் ராவணலீலா  என வடக்கே நடக்கும்  நிகழ்ச்சியில் கும்பகர்ணனையும் ராவணனோடு  சிதைப்பது ஏன் என தெரியவில்லை. வானரப்படைகளை அனுமனை சுக்ரீவனை ராமனையே  தாக்கியதால் இருக்குமா?

கும்பகர்ணனுக்கு இப்படி ஒரு உயரத்தை வால்மீகியோ அதுக்கு மேல முக்கியமா துளசிதாசரோ கொடுக்கலையே.  இது கம்பனுடைய தனிப்பட்ட கைவண்ணமில்லையா.  அது அப்படித்தான்.

shylaja

unread,
Nov 24, 2014, 10:35:33 AM11/24/14
to vallamai, Iyappan Krishnan, சொ. வினைதீர்த்தான், mintamil
கம்பனின் தனிப்பட்ட  கைவண்ணமோ கருணை எண்ணமோ கும்பகர்ணனைப்பற்றிய சில  பாடல் வரிகளில் கண் பனிக்கவைத்துவிட்டது நிஜம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Nov 24, 2014, 10:36:12 AM11/24/14
to vall...@googlegroups.com, shylaja, mintamil

செவிக்குணவு இருக்கும் போது வயிறும் பசிக்குதுங்களே ​ இதோ இன்னும் கொஞ்சம் எழுதிட்டு வரேன்
**************************

Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/BMvEd6--2p8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 24, 2014, 8:34:41 PM11/24/14
to vallamai, mintamil

24 நவம்பர், 2014 ’அன்று’ 6:07 முற்பகல் அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:

பலமிருகங்கள்  கூடியுள்ள பரவிய மகரவேலையின்(மகரம்=மீன் வேலை=கடல்)  மடங்குகின்ற
திரையை(அப்பால்) தள்ளி மேற்கிலும் கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திக்கிலும் இடையே போதல் தவிர்த்து இருகண்களின் புகையுடன் அஸ்திரப்புகையும் வெளிப்பட  அந்த முகக்குன்றம் (அறுந்த) மூக்கு வழியாக(நீர்) உட்புகப்புக்கு மூழ்கியது.மலைபோன்ற முகம் விழவே சஞ்சார மறுக்கும்படி கடலின் நீர் நான்கு திசைகளிலும் முதலில் விலக, அம்முகம் அறுந்த மூக்கின் வழியே நீர் புகப்பெற்றுப்பிறகு கடலில் அமிழ்ந்துவிட்டதென்பதாகும்......சொற்பொருள் விளக்கம்  இதுதான்  வாசித்த புத்தகத்தில்  உள்ளபடி!

2014-11-24 2:57 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மாக்கூடு படர்வேலை
    மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
    மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
    புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு

நன்றி சைலஜா

இது போன்ற பாடல்களால்  எதுகை என்பது அடுத்தடுத்த அடிகளிலும் மோனை ஒரே அடியிலும் இருக்கும் என கருதி இருந்தேன். ஹரி கி ஐயா தெளிவு செய்யும் வரை 

shylaja

unread,
Nov 24, 2014, 11:25:09 PM11/24/14
to vallamai, mintamil
ஒரு கலக்கு கலக்கிவிட்ட ஐயப்பனுக்கு நன்றி.கம்பர் என்றால் அருமைத்தம்பிக்கு  கலியனின்(திருமங்கை ஆழ்வார்)ஆடல்மாவேகம் வந்துவிடும் எனத்தெரியும்! நன்றி மிக அலுவலக வேலையிலும்  அயராமல் எழுதியதற்கு.

சும்மா இல்லாமல்  இந்த ஐயப்பன், ஆண்டாளை  முதலிலேயே  கொண்டுவந்ததால் அதே ஆண்டாள் சொல்லிய பொல்லா அரக்கனின் நினைவுவந்து என்னைக்கொஞ்சம் எழுதத்தூண்டுகிறது!

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தானை என்கிறாள் திருப்பாவை நாயகி.
திருமங்கையாழ்வாரும் திருக்குறுந்தாண்டகத்தில்’ முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து’
இவைகளினின்று இராவணன் பொல்லா அரக்கன் எனத்தெளிவாகிறது.
அப்படியானால் நல்ல அரக்கரும் உண்டா? உண்டு தான்! அசுரர் குலத்தில் பிரஹலாதன் தோன்றியதுபோல அரக்கர் குலத்திலும் நல்ல அரக்கர் உண்டு. உதாரணம் விபீஷணர்.

சூர்ப்பனகையே  தன்வாயால் சக்கரவர்த்தித்திருமகனிடம் ,’விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷச சேஷ்டித’என்கிறாள். விபீஷணன் தர்மாதமாவாக இருப்பவன் ராட்சச செயல்கள் அற்றவன்  என்றபடி   இராவணனோ தவம்  செய்து அஸ்த்ர பலம் பெற்றவன், கும்பகர்ணனோ தவம் செய்து தூக்கத்தைவரமாகபெற்றவன்  என்கிறாள்.

பிரும்மனிடம் தனக்கு தர்ம புத்தியே  உண்டாக வேண்டுமென்றும் தர்மத்தின் தலைவனான  இறைவனிடம் மனம் லயித்திருக்கவேண்டும் என்ற வரம் பெற்றவர்.

இராவணனுக்கு  நல்வழி செல்ல  எவ்வளவோ எடுத்துரைத்தவர் விபீஷணர். எதையும் அண்ணன் கேட்கத்தயாரக இல்லை என தெரிந்ததும்  இலங்கை,நண்பர்கள், செல்வம், ராஜ்ஜியம் என எல்லாவற்றையும்விட்டு  இராமனிடம் சரண் அடைந்தார்.

இலங்கை போரில் விபீஷணர் செய்த பேருதவி மிகவும்  பிரபலமானது.முக்கியமாக இந்திரஜித் செய்ய முயன்ற நிகும்பிலா யாகத்தை அறிந்து அதை லட்சுமணரிடம் சொல்லித்தடுக்கவைத்து அந்த அரக்கனையும் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது

2014-11-24 8:17 GMT-08:00 Iyappan Krishnan <jee...@gmail.com>:

2014-11-24 21:06 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
செவிக்குணவு இருக்கும் போது வயிறும் பசிக்குதுங்களே ​ இதோ இன்னும் கொஞ்சம் எழுதிட்டு வரேன்

​தங்கை மேல் கும்ப கருணனின் பாசத்தை இலக்குவனிடம் போரிடும் போது  வெளிப்படுத்துகிறான்.  எங்களுக்குன்னு ஒரு குலக்கொடி .. அவ எங்க கூட பிறந்தது தான்யா அவ செய்த பாவம்.  நீ அவளை என்ன பண்ண? மூக்க அரிஞ்ச, அவளோட கூந்தலைப் பற்றி இழுத்த..  உரிமை அற்ற பெண்ணின் கூந்தலைப் பற்றி இழுத்தல்   ஆண்மையற்ற செயல் என்பது இதன் மூலம் உணர்த்துகிறான். ( ஹரியண்ணே -  இதைத்தானே இராவணனும் செய்தான் ? வால்மீகியின் படி? )

‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,
    எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள்,
    நாசி வெஞ்சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள்
    கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்;
    காக்குதி ‘என்றான்.

 திவாகர் ஐயா சொன்னா மாதிரி பாசத்தில் இவர்கள் சற்றேனும் குறைந்தவர்கள் இல்லை.   கும்ப கர்ணனின் போர்த்திறன் அளவுக்கு இராமனின் போர்த்திறனை கம்பன் வர்ணித்திருக்கிறானா என்று தெரியவில்லை... அவ்வளவு அவ்வளவு ஆழ்ந்து போகின்றான்.

அங்கதன், அனுமன்,  சுக்ரீவன் என்று அனைவரும் பொருதிப் புறம் செல்கின்றனர்.

அனுமன் போரிடும் போது ஒரு காட்சி ..

மாருதி, ‘வல்லை ஆகின்,
    நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு ‘என்று
    பெருங்கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக்
    காத்திலன், தோள்மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய்
    உக்கது, எவ் உலகும் உட்க.

டாய்... நில்லு... எங்கிட்ட சண்டை போடு...  உயிர் வேணும்னா தள்ள்ளிப் போய்டு.. அப்படின்னுட்டு  ஒரு பெரிய வைரமொத்தக் குன்று ஒன்றை எடுத்து அனுமன் வீச, அதை கும்பகர்ணன் தோளில் ஏற்கும் போது  நூறு துகள்களாய் உதிர்ந்து விழுந்ததாம். அதைக் கண்டு அனுமனே அவனை விட்டு வேறிடம் போரிடப் போனானாம். அதுவுன்ம் “ இராமனின் பாணம் வேண்டுமானா... இவனோட தோளைப் பிளந்தாலும் பிளக்கும் “ அப்படின்னு நினைச்சுக்கிட்டு போனானாம் அனுமன். 

'விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது' என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான்.

விண் இரண்டாக ஆனது.. மலையே இரண்டாக பிளந்து போனது.. பூமியே இரண்டாக கிழிந்தது   என்று தேவர்கள் மனம் உளைய,  கும்ப கர்ணன் கண் இரண்டிலும் தீ வெளிவர .. அவன் அம்புகளை விடுகிறானாம். அப்போது களத்தில் காணப்படும் அழிவுகளை கம்பன் சொல்லுவதை நோக்கினால்... அது பேரழிவாக அல்லவா தோன்றுகிறது. 

சுக்ரீவனை தூக்கிச் சென்றது அவனை பின்பு மீட்டது போன்றவகைளை ஹரியண்ணாவும் ஷைலஜாக்காவும் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றனர். 

சுக்ரீவன் மூக்கையும் காதையும் கடித்துச் சென்றதும் அவன் தன் நிலையை எண்ணி மருகும் போது எதற்கும் கலங்காத கும்பகர்ணன் கலங்கும் போது நம் உள்ளமும் கலங்குகிறது. 

இராமன் உன் விருப்பம் என்ன ? என்று கேட்கும் போது.. அவன் பேசும் வீரம் தான் என்ன ?  உடலுறுப்புகள் இழந்து அவன் போரிடும் போது வெளிப்படுத்தும் விடாப்பிடி போர்க்குணம் என்ன...   விபீடணனைக் காக்க கோரும் போது அவனின் பாசம் மீண்டு எழுவதென்ன.. 

கம்பனின் பாத்திரப் படைப்பில் கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பு அத்தனை வலிமையானது.  படிக்கப் படிக்க  இன்னும் இன்னும் என்று தூண்டும்..  நான் உளறிக் கொட்டினது உங்களுக்குப் படிக்கத் தூண்டியிருந்தால் அது கம்பனின் கவியாற்றலின் பெருமையே அன்றி வேறொன்றும் இல்லை.

இப்ப எனக்கு பசிக்குது... சாப்டப் போறேன்....

Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Nov 25, 2014, 12:23:19 AM11/25/14
to vall...@googlegroups.com, mintamil

2014-11-25 9:54 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஒரு கலக்கு கலக்கிவிட்ட ஐயப்பனுக்கு நன்றி.கம்பர் என்றால் அருமைத்தம்பிக்கு  கலியனின்(திருமங்கை ஆழ்வார்)ஆடல்மாவேகம் வந்துவிடும் எனத்தெரியும்! நன்றி மிக அலுவலக வேலையிலும்  அயராமல் எழுதியதற்கு.

​நேத்து எழுதுனதுல ​ இரண்டு திருத்தங்கள். 

கல்லலாம் உலகை = இதை கற்றல் என்ற அர்த்தத்தில் எடுத்து போட்டிருக்கிறேன். உரையை இப்போது படிக்கும் போது  பெயர்த்தெடுத்தல் என்ற அர்த்தத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 

அடுத்து  அவசரமாய் காப்பி பேஸ்ட் செஞ்சதுல நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்.  சரி செய்யப் பட்ட பகுதி கீழே.

கம்பர் எந்த அளவுக்கு கும்ப கருணனை உள்ளத்தில் மதித்தார் என்றால், இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர் கொடுத்திருக்கிறார்.

தோள் கண்டார் தோளே கண்டார்னு இராமனைச் சொன்னாரில்லையா ? அது மாதிரி கும்ப கர்ணனைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க

"
தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "

என்ன உவமை பாருங்க. சூர்ப்ப நகையின் கண்கள் ஏன் அவ்வளவு நீஈஈஈஈஈண்டு இருக்காம்னு கேட்டா... அவன் தோள் இந்தப்பக்கம் இவ்ளோ நீளம்.. அந்தப் பக்கம் இவ்ளோ நீளம்... இது ரெண்டையும் பார்த்து பார்த்தே என் கண்ணு நீஈண்டு போச்சுங்கறாளாம்.

இராமனைப் பார்த்து சூர்ப்பநகை சொன்னதை , இந்த தோளொடு தோள் செல வை அப்படியே கும்ப கர்ணனுக்கும் கொண்டாந்து போடறார்..

தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்?

இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்து முடிக்கவே பல நாளாகுமாம். ஒரு மலைக்கு கைக் காள் முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு 

கம்பர் தி கிரேட்...

​ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டிய மஹேஷுக்கு நன்றி.

Megala Ramamourty

unread,
Nov 25, 2014, 12:32:39 PM11/25/14
to மின்தமிழ், vallamai

ஆகா ஷைலஜா! கும்பகருணன் வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!

இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?

இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.

அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.

பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.

உடனே கும்பகருணனை எழுப்ப நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர் தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக் கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம்.

கும்பனை எழுப்பும் பாடலும் சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்

இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,

உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)

பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.

என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்

வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்

அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!

புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ?  (6121)

”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

மீண்டும் தொடர்கின்றான்...

ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்

மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)

இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்; ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்; ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி! என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.

அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.

பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான்.  

(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)

அன்புடன்,

மேகலா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 25, 2014, 7:56:56 PM11/25/14
to மின்தமிழ், vallamai
ஆஹா!..அக்கா ஆரம்பிச்ச இழை, இலக்கிய விருந்தாகத் தொடர்கிறது!.. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.. வழக்கம் போல் ' மேகலா டச்' உடன் அருமையானதொரு கருத்துரை!.. 

///(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)///

இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு மேகலா!. அது போல் 'செஞ்சோற்றுக் கடன் தீர்த்த' கர்ணன் கதையும்.. கர்ணனின் கதாநாயக பிம்பம், இயக்குனர் திரு.ஏ.பி.என் அவர்களால் உருவாக்கப்பட்டு, நடிகர் திலகத்தால் உயிரூட்டப்பட்டது.. உண்மை மாறானது.. பல புராணக் கதைகள், திரைக்கதை அமைப்பாளர்களால்
மாறுதலாகச் சித்தரிக்கப்படுகின்றது. 'திருவிளையாடல்' படத்தில், தக்ஷ யாகத்திற்கு பின், தாக்ஷாயணி, கைலாயம் திரும்பி, சிவபிரானுடன் வாதம் செய்வது மாதிரியான காட்சிகள் இதற்கு நல்ல உதாரணம்.. 
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

​  
​     
​  
​  
​  
​  
​  
​  
​   
​   
​  
​   
​   
​  
​ 
​  

Megala Ramamourty

unread,
Nov 25, 2014, 8:25:34 PM11/25/14
to மின்தமிழ், vallamai
//இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு மேகலா!. அது போல் 'செஞ்சோற்றுக் கடன் தீர்த்த' கர்ணன் கதையும்.. கர்ணனின் கதாநாயக பிம்பம், இயக்குனர் திரு.ஏ.பி.என் அவர்களால் உருவாக்கப்பட்டு, நடிகர் திலகத்தால் உயிரூட்டப்பட்டது..//

உண்மைதான் பார்வதி. புராணங்களைத் திரித்ததில் சினிமாவிற்கு பெரிய பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இராவணன் பாத்திரப் படைப்பிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. இராமன் கதையையே பலர் பலமொழிகளில் எழுதியிருக்கின்றனர். அதில் முதல் மூவர் வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகியோர். இவர்களில் முதல்வரான வான்மீகியைத் தழுதித்தான் கம்பர் இராமகாதை செய்ததாகச் சொல்கின்றார்.

இராவணனை நல்லவனாகச் சித்தரித்துச் சீதையை அவன் மகளாகக் காட்டும் இராமாயணக் கதைகளும் உண்டு. அதுபோல் இராம இராவணப் போரையே ஆரியருக்கும் (இராமன்) திராவிடருக்குமான (இராவணன்) போராகக் காட்டி ஆரியர்கள் வேண்டுமென்றே திராவிடர்கள்மீது காழ்ப்புணர்வு கொண்டு அவர்களை நாகரிகமற்றவர்களாகவும், காமுகர்களாகவும் சித்தரித்ததாகச் சொல்லப்படும் செய்திகளும் உண்டு. இவற்றில் எதை நம்புவது?

எனவே இப்பாத்திரங்களின் மீதான நம் புரிதல் நாம் படித்த நூல்கள் மற்றும் நாம் காணும் ஊடகங்களின் செல்வாக்கு அனைத்தையும் சார்ந்தே அமைகிறது. உண்மை நிகழ்வுகள் இவற்றினின்று விலகி வெகுதூரத்தில்கூட நின்றுகொண்டிருக்கலாம்.  :-)

// பல புராணக் கதைகள், திரைக்கதை அமைப்பாளர்களால் மாறுதலாகச் சித்தரிக்கப்படுகின்றது.திருவிளையாடல்' படத்தில், தக்ஷ யாகத்திற்கு பின், தாக்ஷாயணி, கைலாயம் திரும்பி, சிவபிரானுடன் வாதம் செய்வது மாதிரியான காட்சிகள் இதற்கு நல்ல உதாரணம்..//

திருவிளையாடல் படத்தில் கயிலாய நாகராஜனின் திருவிளையாடல்களைவிடப் பூலோக நாகராஜனின் (ஏபிஆர்) திருவிளையாடல்கள் அதிகம். :-)
அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஏழைப் புலவன் தருமியைக் காமெடிப் பாத்திரமாக மாற்றியது.

shylaja

unread,
Nov 25, 2014, 8:44:22 PM11/25/14
to vallamai, மின்தமிழ்
திருவிளையாடல் படத்தில் கயிலாய நாகராஜனின் திருவிளையாடல்களைவிடப் பூலோக நாகராஜனின்>>>>>இந்த வரி படிச்சதும்  நான்   பாசமிகு ஒருவரைத்தான் சொல்றீங்கன்னு முதல்ல நினச்சேன்:)_

(ஏபிஆர்) திருவிளையாடல்கள் அதிகம். :-)
அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஏழைப் புலவன் தருமியைக் காமெடிப் பாத்திரமாக மாற்றியது.

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 25, 2014, 8:50:09 PM11/25/14
to mintamil, vallamai
2014-11-25 9:32 GMT-08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

ஆகா ஷைலஜா! கும்பகருணன் வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!

இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?

இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.

அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.

பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.

உடனே கும்பகருணனை எழுப்ப நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர் தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக் கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம். >>>

ஆஹா   மேகலாவின்   பார்வைக்கோணம்  மிகச்சரி  நானும் இந்தக்கட்டத்தை வாசித்தேன் ஆனால்  பொருளை இப்போதான் இந்த வகையில்  உணர்கிறேன்.

கும்பனை எழுப்பும் பாடலும் சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்

இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,

உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)

பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.

என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்

வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்

அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!

புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ?  (6121)

”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

மீண்டும் தொடர்கின்றான்...

ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்

மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)

இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்; ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்; ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி! என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.

அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.

பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான். >>>பொன்னகரெனப்பொலிந்த இலங்கை!  ஆம் மேகலா  இலங்கையின்  வளமை அன்று  மிக உயரத்தில் இருந்திருக்கிறது! 

(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)>>>> இராவணர்கள் அழியவேண்டும் தான்.. மண்டோதரிக்காக  பரிதாபப்பட்டாலும்  ..!

நன்றி மேகலா இலக்கியப்பரிமாறுதல் உங்கள் கைவண்ணத்தில் என்றுமே    சிறப்புதான்.

அன்புடன்,

மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 8:51:27 PM11/25/14
to mint...@googlegroups.com
//பல புராணக் கதைகள், திரைக்கதை அமைப்பாளர்களால் மாறுதலாகச் சித்தரிக்கப்படுகின்றது.//

உண்மை.  

ஓரளவுக்கு மாற்றம் இருந்ததால், அதுவும் இடக்கரடக்கலுக்காக (R  விதிப்பை PG  ஆக மாற்றும் பொருட்டு) இருந்தால், பரவாயில்லை.  கர்ணன் வந்த காலத்தில், அனைவருக்கும் (குழந்தைகள் உள்பட) இராமாயணமும், மகாபாரதமும் தெரியும்.  எனவே, மாற்றம் செய்தது என்ன என்று அறிவார்கள். 

இப்பொழுது அப்படி இல்லையே!  எனவே, மாற்றம் செய்து காட்டியவையே உண்மை என்ற தோற்றம் ஏற்பட்டு, பழைய இதிகாசங்கள் மீது வெறுப்புத்தொன்ற வாய்ப்பு இருக்கிறதல்லவா!

வேறுகோணத்திலிருந்து காட்டலாம், தவறில்லை.  திரித்து மாற்றாதவரை சரிதான்!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 26, 2014, 2:39:46 AM11/26/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சிறப்பான பார்வை திருமிகு மேகலா, திருமிகு பார்வதி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
On 11/26/14, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:

கர்ணன் கதையும்.. கர்ணனின் கதாநாயக பிம்பம், இயக்குனர் திரு.ஏ.பி.என்
> அவர்களால் உருவாக்கப்பட்டு, நடிகர் திலகத்தால் உயிரூட்டப்பட்டது..//
>
> உண்மைதான் பார்வதி. புராணங்களைத் திரித்ததில் சினிமாவிற்கு பெரிய பங்குண்டு

N. Ganesan

unread,
Nov 26, 2014, 9:17:24 AM11/26/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
கம்பனின் இந்தப் பாட்டிலும் மோனை ஒவ்வொரு அடியிலும், எதுகை சீராக எல்லா அடிகளின் முதற்சீரிலும் உள்ளதே.

நா. கணேசன்

திவாஜி

unread,
Nov 26, 2014, 9:20:06 AM11/26/14
to mint...@googlegroups.com
2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?

​ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?
கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை.​

shylaja

unread,
Nov 26, 2014, 9:24:51 AM11/26/14
to mintamil
2014-11-26 6:19 GMT-08:00 திவாஜி <agni...@gmail.com>:

2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?

​ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?
கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை.​>.மிகச்சரியாக சொன்னீர்கள் திவாஜி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

  மதி-மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
    முற்றும் விட்டகல வேண்டும்.

பாரதி

Megala Ramamourty

unread,
Nov 26, 2014, 9:54:20 AM11/26/14
to மின்தமிழ்
//செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
​ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?
கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை
//

உண்மை திவாஜி. தம்பியாகப் பிறந்தது கும்பகருணனின் தேர்வில்லைதான். ஆனாலும் தன் தம்பி வீடணனைப் போல் அவனும் அண்ணன் இராவணனுக்கு எதிராக இராமனின் அணியில் சேர்ந்துகொள்ள வாய்ப்பிருந்ததே. ஏன்...வீடணனே அவ்வாறு கும்பகருணனை இராமன் பக்கம் வந்துவிடு என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். ஆயினும், கும்பகருணன் அண்ணன் மீது கொண்ட பாசத்தால் தன் அண்ணன் செய்வது அறமற்ற செயல் எனும்போதும் அவனை விட்டு வர மறுக்கின்றான். அண்ணனுக்காக உயிர்விடுவதே தன் கடமை என்கிறான்.

கும்பகருணன் நினைத்திருந்தால் வீடணனைப் போல் தானும் இராமன் அணியில் சேர்ந்துகொண்டு வெற்றி வீரனாக வலம்வந்திருக்கலாம். ஏன் இலங்கை அரசனாகக் கூட முடிசூட்டிக்கொண்டிருக்கலாம்! ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லையே. இராவணனின் செயல்களை ஓர் நல்ல தம்பியாகக் கண்டிக்கிறான்; இராவணன் திருந்தவில்லை எனும்போதும் அவனைவிட்டு விலகாது அவனுக்காகவே உயிர்துறந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவனாகின்றான்.

அதனால்தான் கும்பகருணனும் கர்ணனோடு வைத்து எண்ணப்படுகிறான். அது தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.

அன்புடன்,
மேகலா

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 26, 2014, 12:12:09 PM11/26/14
to mint...@googlegroups.com, vallamai, Megala Ramamourty, திவாஜி
On 11/26/14, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:

> அண்ணன் மீது கொண்ட பாசத்தால் தன் அண்ணன் செய்வது அறமற்ற செயல் எனும்போதும் அவனை விட்டு வர மறுக்கின்றான். அண்ணனுக்காக உயிர்விடுவதே தன் கடமை என்கிறான்.

'சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா!
விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல,
பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால்.

.......விட்டிடு” என்று வரை சொல்லிவிட்டு இராவணன் முகத்தின் வேறுபாடைக்
கண்டதும் “விட்டுவிட்டால் நாம் எளியவர்கள் என எண்ணப்படுவோம்; மானிடர்களை
வென்று கொல்வதும் நல்லது; பழி இல்லை” என முடிக்கிறான் கும்பகர்ணன்.
உணர்வு(பாசம்) சார்ந்த நுண்ணறிவோ?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Nov 26, 2014, 12:26:44 PM11/26/14
to mint...@googlegroups.com
இலக்கியத்தில் எப்படி புலவர்கள் தங்கள் கோணத்தில் கையாண்டார்கள் என்பதைவிட
கதை மாந்தர்கள் என்று மட்டும் எடுத்துக்  கொண்டால்...

சகோதரப் பாசத்திற்காகத் துணையாக நின்றதைவிட 
நட்பிற்காக நன்றியுடன் இருந்ததே எனக்குப் பெரிதாகத் தெரிகிறது. 
மேலும்...
விபீஷணனுடன் ஒப்பிட்டால் சகோதரனே கைவிடும் நிலை இருக்கும் பொழுது...ஒரு நண்பன் துணையாக நின்றது பெரிது 
பாசத்தைவிட நட்பு இங்கு உயர்ந்துவிட்டது.  
அத்துடன் நன்றியுடன் இருந்ததும் விபீஷணன், கும்பகர்ணனைவிட  ஒப்பிடும்பொழுது கர்ணனை மேலும் உயர்த்துகிறது.

..... தேமொழி 

On Wednesday, November 26, 2014 6:54:20 AM UTC-8, megala.ramamourty wrote:
//செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
​ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?
கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை
//

உண்மை திவாஜி. தம்பியாகப் பிறந்தது கும்பகருணனின் தேர்வில்லைதான். ஆனாலும் தன் தம்பி வீடணனைப் போல் அவனும் அண்ணன் இராவணனுக்கு எதிராக இராமனின் அணியில் சேர்ந்துகொள்ள வாய்ப்பிருந்ததே. ஏன்...வீடணனே அவ்வாறு கும்பகருணனை இராமன் பக்கம் வந்துவிடு என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். ஆயினும், கும்பகருணன் அண்ணன் மீது கொண்ட பாசத்தால் தன் அண்ணன் செய்வது அறமற்ற செயல் எனும்போதும் அவனை விட்டு வர மறுக்கின்றான். அண்ணனுக்காக உயிர்விடுவதே தன் கடமை என்கிறான்.

கும்பகருணன் நினைத்திருந்தால் வீடணனைப் போல் தானும் இராமன் அணியில் சேர்ந்துகொண்டு வெற்றி வீரனாக வலம்வந்திருக்கலாம். ஏன் இலங்கை அரசனாகக் கூட முடிசூட்டிக்கொண்டிருக்கலாம்! ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லையே. இராவணனின் செயல்களை ஓர் நல்ல தம்பியாகக் கண்டிக்கிறான்; இராவணன் திருந்தவில்லை எனும்போதும் அவனைவிட்டு விலகாது அவனுக்காகவே உயிர்துறந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவனாகின்றான்.

அதனால்தான் கும்பகருணனும் கர்ணனோடு வைத்து எண்ணப்படுகிறான். அது தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.

அன்புடன்,
மேகலா

2014-11-26 9:24 GMT-05:00 shylaja <shyl...@gmail.com>:
2014-11-26 6:19 GMT-08:00 திவாஜி <agni...@gmail.com>:

2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?

​ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?
கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை.​>.மிகச்சரியாக சொன்னீர்கள் திவாஜி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

  மதி-மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
    முற்றும் விட்டகல வேண்டும்.

பாரதி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 26, 2014, 12:44:28 PM11/26/14
to mintamil
நான்கு போக்கிரிகள் “துரியோதனன்,துச்சாதனன்,சகுனி,கர்ணன்” என்று சொலவடை இந்நாட்டில் உருவாகி நிலைபெற்றது. பெண்ணை நிந்தித்து மானபங்கப்படுத்துவது ஒரு ஆணின் மிகப் பெரிய குற்றம் என்று பழிக்கப்பட்ட செயல். கும்பகர்ணனிடம் இப்பழி இல்லை. பாத்திரப் படைப்பில் கும்பகர்னன் விஞ்சுகிறான்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Nov 26, 2014, 3:31:43 PM11/26/14
to mint...@googlegroups.com
ஆம் ஐயா வேறு கோணத்தில் காணும் பொழுது நீங்கள் சொல்வதே உண்மை.

பொதுவாக இதிகாச மாந்தர்கள் யாவருமே குறையும் நிறையும் உள்ளவராகவே காட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது என்வரையில் நான் புரிந்து கொண்டது.

..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Nov 26, 2014, 10:03:26 PM11/26/14
to vallamai, மின்தமிழ்

26 நவம்பர், 2014 ’அன்று’ 9:17 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.

N. Ganesan

unread,
Nov 26, 2014, 10:04:53 PM11/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Wednesday, November 26, 2014 9:03:26 PM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:

எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.

எதுகை ஒரே அடியில் அல்ல.

N. Ganesan

unread,
Nov 26, 2014, 10:08:25 PM11/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Wednesday, November 26, 2014 9:04:53 PM UTC-6, N. Ganesan wrote:

On Wednesday, November 26, 2014 9:03:26 PM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:

எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.

எதுகை ஒரே அடியில் அல்ல.

கண்ணதாசன் எதுகை பற்றிச் சொல்கிறார்:

shylaja

unread,
Nov 26, 2014, 11:25:14 PM11/26/14
to mintamil
 கர்ணனைப்பற்றி கைக்குள் அடக்கும்  நல்ல புத்தகத்தைவாசித்து ஆன்றோர் பெருமக்கள் கூறியதை அறியமாட்டோம், கண்முன் பிரும்மாண்டமாய் விரியும் மாயத்திரை காட்டுவதை நம்புவோம்.

கர்ணனின் கொடைக்கும் காரணம் உண்டு.

அவன் பிறந்ததிலிருந்து ஒன்றும் கொடைவள்ளல்  குணம் கொண்டவன் அல்ல
பாண்டவர்கள் வனவாசம் ஆரம்பித்த நாட்களில்  ராஜசூயம் செய்ய துரியோதனன் விரும்ப   தர்மன் இருக்கும் போது அதனை  துரியோதனன் செய்யமுடியாது என அனைவரும் எடுத்துரைக்க  பிறகு அவன்  வேறு ஒரு வேள்வியைச்செய்தான்  அப்போது கர்ணன் சொன்னான்.” நண்பா நீ பாண்டவர்களைக்கொல்வாய் .ராஜசூய யாகமும் செய்வாய்  .நானும் அந்த அர்ஜுனனைக்கொல்வேன் அது நடக்கிறவரைக்கும்  என் வாசல்தேடி யார்வந்தாலும்  எதை யாசகமாகக்கேட்டாலும் இல்லை என சொல்லமாட்டேன் என சபதம் செய்தான் நல்ல எண்ணத்துடன் தொடங்கிய கொடை அல்ல இது.  அவனை சூத புத்திரன் என்கிறார்கள் என  பலர்   ஏதோ கெட்டவார்த்தை சொல்லிவிட்டதுபோல  குமுறுகின்றனர்  தேரோட்டிமகன் என்பதே இதற்குப்பொருள்.

தேரோட்டுவது என்ன   எளியபணியா தேரோட்டுபவனுக்கு போர்க்கலையும் தெரிந்திருக்கவேண்டும் நம் ஊர் காரை ஓட்டுபவனோடு  அதை  ஒப்பிட்டால் என்ன செய்வது?

  கிருஷ்ணன் தேர் ஓட்டினார் பலசாலியான சல்லியன்  தேர் ஓட்டினான்  அர்ஜுனனும்  உத்திரனுக்கு தேர் ஓட்டினான்  சூதன் என்பது இழிவானவார்த்தை என சிலர் சொல்வது வேடிக்கை   சேனாதிபதியான  கீசகன்  சூத புத்திரன்  அவனைப்பாஞ்சாலி பல சமயம் சூத புத்ர என அழைப்பாள்,விராட பர்வத்தில்.
.அவன் சகோதரி சுதேஷ்னா தேவி விராட அரசனின் பட்ட மகிஷி  தாழ்ந்தகுலமாக இருந்தால் இப்படி அமையுமா? பீமன் மட்டும்  கர்ணன் மேல் உள்ள வெறுப்பில் உமிழும் எள்ளல் வார்த்தையாக  அது இருந்தாலும் பொதுவாக  அப்படி இல்லை  

மேற்கொண்டு ஐயப்பன்  பார்வதி  இதனை விளக்கவும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 26, 2014, 11:32:09 PM11/26/14
to mint...@googlegroups.com
//கண்ணதாசன் எதுகை பற்றிச் சொல்கிறார்:

நன்றி, கணேசன் அவர்களே!

யானும், தங்களைப்போன்றவர்கள் உதவியால், சிறிது சிறிதாக யாப்பிலக்கணம் கற்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Nov 26, 2014, 11:33:24 PM11/26/14
to mint...@googlegroups.com
// கர்ணனைப்பற்றி கைக்குள் அடக்கும்  நல்ல புத்தகத்தைவாசித்து ஆன்றோர் பெருமக்கள் கூறியதை அறியமாட்டோம், கண்முன் பிரும்மாண்டமாய் விரியும் மாயத்திரை காட்டுவதை நம்புவோம்.//

நன்றாகச் சொன்னீர்கள், உயர்திரு ஷைலஜா அவர்களே!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Nov 27, 2014, 12:03:00 AM11/27/14
to mint...@googlegroups.com
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.

சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் ...

இல்லை இது இப்படி இருக்க வேண்டும்.  சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும்  விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.

இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...

http://panbudan.com/story/krishna-prabhu

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 

கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை 

அம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும் 
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும் 

அவன் துரோணரிடம் தான் படித்தான்.

சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.

தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.

இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...

எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.

ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.

மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.

இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?

மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.

..... தேமொழி

Oru Arizonan

unread,
Nov 27, 2014, 12:38:33 AM11/27/14
to mint...@googlegroups.com
தாங்கள் துவங்கிய இலக்கிய ஆராய்வு இழை இது.  ஆய்வு செய்யுமிடத்தில் ஈதென்ன பதிவு?  எங்கும் சுற்றி அரங்கனைச் சேவி என்பதுபோல இழையைத் திசை திருப்புவானேன்?

//மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.//

கடவுள் நம்பிக்கைக்கும், எங்கள் நம்பிக்கையைப் பரிகசிப்பதுபோல நடந்துகொள்ளாதே என்று புலம்புவதற்கும், இலக்கிய ஒப்பீடு செய்வதற்கும், என்ன தொடர்பு?

எந்த மனிதர்களைச் செருப்பால் அடித்தார்கள்?  ஏன் அடித்தார்கள்?  யார் வாளாவிருந்தார்கள்?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ஜீவ்ஸ்

unread,
Nov 27, 2014, 2:47:46 AM11/27/14
to mint...@googlegroups.com

அன்பின் தேமொழி அவர்களுக்கு ,

On Thursday, November 27, 2014 10:33:00 AM UTC+5:30, தேமொழி wrote:
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.

சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் ...

இல்லை இது இப்படி இருக்க வேண்டும்.  சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும்  விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.

இதைத் தாண்டி ஏதும் பிறரை மனம் நோகும் போக்கில் யாரும் சொல்லி இருக்கிறார்களா ?
 
இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...

http://panbudan.com/story/krishna-prabhu

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 

கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை 

அம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும் 
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும் 

அவன் துரோணரிடம் தான் படித்தான்.

சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.

தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.

இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...

எங்கே யார் கோபப் பட்டார்கள் ?
மேலும் நீங்கள் சொன்னது போல பலருக்கு அவ்வாறே கற்பிக்கப் பட்டிருக்கிறது. கம்பரசம்  எப்படி பரப்பப் பட்டதோ அவ்வாறே. ஆகவே சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆக வேண்டி  இருக்கிறது.  

எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.

ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.

மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.

இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?

மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.

இப்போது யார் மனிதம் தவறி நடந்து விட்டார்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா ?

கர்ணன் பற்றிய அதிநாயகமாக்கச் சிந்தனை குறித்த மாற்றுச் செய்திகள் அவ்வாறு உங்களை நினைக்கத் தூண்டுகிறதா ? உங்களின் மடலில் ஏதோ ஆவேசம் இருக்கிறது புரிகிறது. ஆனால் எதற்கென்று தாங்கள் விளக்கினால் மகிழ்வேன். 

கர்ணனைப் பற்றி -  எழுத வேண்டியது இருக்கிறது -- வருகிறேன்..  

shylaja

unread,
Nov 27, 2014, 2:49:20 AM11/27/14
to mintamil
2014-11-26 21:03 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.

சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் .>>.ஆமாம்  பெயர்களே   பல சம்ஸ்க்ருதம் தான் கும்ப கர்ணன் என்ன அர்த்தம்? கும்பம் போல காதுகளை  உடையவன் ....சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டால் எனன் என்று  கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்  புராணக்கதைகளில்  சம்ஸ்க்ருதப்பெயரே அதிகம். 

இல்லை இது இப்படி இருக்க வேண்டும்.  சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும்  விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.>>>>   கேட்டால் சொல்லலாம் தேமொழி. 
நான்  எனக்கு ஆன்றோர் பெருமக்கள்  சொன்னதை  இங்கு பகிர்ந்தேன், 

இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...>>.இணையமென்ன   அதற்குவெளியே  இருக்கும்பலரின் நினைப்பும் இதுதான்.. 

http://panbudan.com/story/krishna-prabhu

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 

கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை 

அம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும் 
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும் 

அவன் துரோணரிடம் தான் படித்தான்.

சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.

தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.

இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...>>.யாருக்கும் ம்கோபம்  இல்லையே... ஒரு ஆற்றாமையில் சொல்வதுதான்   இந்த இழையில் நீங்கள் என்னைக்குறிப்பிட்டால் எனக்குக்கோபம் என்றில்லை . 

எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.>>>>>வருந்தி  வார்த்தைவிடுவதைவிட  உற்ற உதவி செய்வதை விளம்பரப்படுத்தாத  பலர் உண்டு.

ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.>>கொதிதெழல தாயி.. உள்ளதைச்சொல்வது தான்.. நீங்கள் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது? இதுவும் என் இழை என்பதால் உங்களுக்கு பதில் அளிக்கும் கடமை எனக்கு இப்போது.

மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.<<<<<<யாரையோ மனசில் வச்சி நீங்க இங்கே  பேசுகிறீர்கள் அதற்கு இது அல்ல இடம்.

இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?>
மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.>>அப்படி இருப்பதால்தான் பொறுமையாக பதில் சொல்ல இயல்கிறது  தேமொழி. 

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

  மதி-மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
    முற்றும் விட்டகல வேண்டும்.

பாரதி

தேமொழி

unread,
Nov 27, 2014, 3:58:33 AM11/27/14
to mint...@googlegroups.com
மிகப் பொறுமையாகப் பெருந்தன்மையுடன் பதிலளித்த ஐயப்பனுக்கும் ஷைலஜாவிற்கும் நன்றி.

///
எங்கே யார் கோபப் பட்டார்கள் ?
மேலும் நீங்கள் சொன்னது போல பலருக்கு அவ்வாறே கற்பிக்கப் பட்டிருக்கிறது. கம்பரசம்  எப்படி பரப்பப் பட்டதோ அவ்வாறே. ஆகவே சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆக வேண்டி  இருக்கிறது.  
////

கர்ணனைப்பற்றி கைக்குள் அடக்கும்  நல்ல புத்தகத்தைவாசித்து ஆன்றோர் பெருமக்கள் கூறியதை அறியமாட்டோம், கண்முன் பிரும்மாண்டமாய் விரியும் மாயத்திரை காட்டுவதை நம்புவோம். <<< இதை  அறியாதவர்களைக் கேலி செய்வதாக நான் புரிந்து கொண்டேன், குறிப்பாக என்னை. 
[...]
அவனை சூத புத்திரன் என்கிறார்கள் என  பலர்   ஏதோ கெட்டவார்த்தை சொல்லிவிட்டதுபோல  குமுறுகின்றனர்  தேரோட்டிமகன் என்பதே இதற்குப்பொருள். <<< வண்ணமிட்ட பகுதியில் சினம் இருப்பதாக உணர்ந்தேன், குறிப்பாக குமுறுகின்றனர் என்ற சொல் 
[...]
தேரோட்டுவது என்ன   எளியபணியா தேரோட்டுபவனுக்கு போர்க்கலையும் தெரிந்திருக்கவேண்டும் நம் ஊர் காரை ஓட்டுபவனோடு  அதை  ஒப்பிட்டால் என்ன செய்வது? <<< அதை ஒப்பிட்டவர்களை கேலி செய்வதாக புரிந்து கொண்டேன்.

தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டியதை... நீ நினைப்பது தவறு இதன் பொருள் இதுவல்ல என்ற முறையில்  விளக்கி இருக்கலாம் என்று முன்னரேக் குறிப்பிட்டேனே. நான் ஷைலஜா சொன்னதில் கேலி இருப்பதாக உணர்ந்ததால் ஏன் கோபம் கொள்ளுகிறீர்கள் என்று கேட்டேன். 

நான் சினம் என உணர்ந்த அதே உணர்வை ஷைலஜா ஆற்றாமை என்றுக் குறிப்பிட்டுள்ளார்கள். 

///
கொதிதெழல தாயி.. உள்ளதைச்சொல்வது தான்.. நீங்கள் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது? இதுவும் என் இழை என்பதால் உங்களுக்கு பதில் அளிக்கும் கடமை எனக்கு இப்போது.
///

புரிந்து கொண்டேன் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் வேறு ஒரு  இழையில் நான் பழமைபேசியிடம் குறிப்பிட்டது இந்த இழைக்குத்   தாவியதால் எனக்கு வேறு வழியும்  தெரியவில்லை. கடிந்து கொண்டால் அங்கேயே கடிந்து கொள்ளலாமே ஏனிப்படி என்றுதான் உண்மையில்  தோன்றியது. 
உங்கள் இழையைக் குறுக்கிடும் எண்ணமில்லை. மேற்கொண்டு சொல்ல வேண்டுமானால் அந்த இனவாத இழைக்கேப் போய் விடுவோம். 

///
யாரையோ மனசில் வச்சி நீங்க இங்கே  பேசுகிறீர்கள் அதற்கு இது அல்ல இடம்.
///

இதை அந்த இழையின் தொடராக நினைத்துவிட்டதால் விளைந்த குழப்பம்தான் .  இருப்பினும் இந்த இடத்தில் சந்தேகமின்றி தவறு என்னுடையது..பொதுமைப்படுத்தும் முறையில் இறங்கியிருக்கிறேன்... தவறுக்கு வருந்துகிறேன்.  மன்னிக்கவும். சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஷைலஜா. 

i am signing off from this  thread 

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages