| மாக்கூடு படர்வேலை |
| மறி மகரத் திரை வாங்கி, |
| மேக்கூடு, கிழக்கூடு, |
| மிக்கு இரண்டு திக்கூடு |
| போக்கூடு தவிர்த்து, இருகண் |
| புகையோடு புகை உயிர்க்கும் |
| மூக்கூடு புகப்புக்கு |
| மூழ்கியது அம் முகக் குன்றம். |
வில் வட்டத்தைப்பெற்ற காளமேகமானது கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை அருளியதுபோல அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,
இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என வாய்ப்பு தருகிறான். இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.அவன் போரே குறியாக இருக்கிறான்.இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.கும்பகர்ணன் கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை தூள்தூளாக்குகிறார் இராமன்.
ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம் விதிர்ப்புற்றான்’ என்கிறார் கம்பர். இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.
கும்பகர்ணனுக்கு மனதில் நல் உணர்வு தோன்ற,’ விபீடணனை நீ காக்கவேண்டும் அவன் உமது பக்கம் சேர்ந்துள்ளான்,இராவணன் இவனை கொல்லவும் சித்தமாவான் ஆகவே ஜாக்கிரதையாக பார்த்துக்கொள், உன் அம்பினாலேயே என் கழுத்தை அறுத்துவிட்டுபின்என்னைக்கடலில் மூழ்கடிக்கச்செய். ‘இது நின்னை வேண்டுகின்ற பொருள்’என்றான். கும்பகர்ணசரணாகதியாக கடைசி சில பாடல்கள் அமைந்திருக்கின்றன. சரணம் அடைந்தவரின் வாக்கினை நிறைவேற்றுவதுஇறை கருணை அல்லவா! இராமன் அதனைச்செய்கிறான்.நாசி துவாரங்கள் மட்டும் உள்ளமுகம் செவிகளும் இழந்த இரு குழிகள் அங்குகொண்ட அவன் முகம் நீரில் மூழ்கும்போது குடு குடு என நீர்வெள்ளம் துவாரங்களில் புகுந்து வழிய முகமண்டலம் உள்ளே அமுங்குவதை கம்பரின் பாடலைப்பாருங்கள் எத்தனை ‘டு’ இட்டிருக்கிறார் என்று!
மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
மூழ்கியது அம் முகக் குன்றம்.
| மாக்கூடு படர்வேலை |
| மறி மகரத் திரை வாங்கி, |
| மேக்கூடு, கிழக்கூடு, |
| மிக்கு இரண்டு திக்கூடு |
| போக்கூடு தவிர்த்து, இருகண் |
| புகையோடு புகை உயிர்க்கும் |
| மூக்கூடு புகப்புக்கு |
| மூழ்கியது அம் முகக் குன்றம். |
| சொற்பொருள் விளக்கம் கொடுங்க சைலஜா |
2014-11-24 15:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:வில் வட்டத்தைப்பெற்ற காளமேகமானது கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை அருளியதுபோல அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,
இல்லம்மா. மூர்ச்சித்த சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, ‘தலைவனை சிறைப் பிடித்துவிட்டால், படை சிதறும்; போரே முடிந்துவிடும்’ என்ற எண்ணத்தோடு கும்பகர்ணன் திரும்புகையில், சுக்ரீவனை மீட்பதன் பொருட்டு இராமன் அவனுடைய நெற்றிப் பொட்டில் இரண்டு அம்புகளைச் செலுத்தி நிறுத்துகிறான். பெருகுகிற குருதி அருவியால் மயக்கம் தெளிந்த சுக்ரீவன், அந்தச் சமயத்தில் தளர்ந்திருந்த கும்பகர்ணனுடைய தோளிலிருந்து நழுவி, அவனுடைய காதுகளையும் மூக்கையும் கடித்து எடுத்துக் கொண்டு திரும்பிவிடுகிறான்.>>. சுக்ரீவன் செய்யும் செயல் இது தவறுக்கு வருந்துகிறேன்.இது வான்மீகத்தில் உள்ள காட்சிதான். ஆனால், வான்மீகத்தில் சுக்ரீவனுக்குத் தானே நினைவு திரும்புகிறது. நாடகத் தன்மையை மாற்றியது கம்பன். இதைச் சொன்னேன் இல்லையா?>>ஆமாம்
இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என வாய்ப்பு தருகிறான். இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.அவன் போரே குறியாக இருக்கிறான்.இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.கும்பகர்ணன் கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை தூள்தூளாக்குகிறார் இராமன்.முதல் கரத்தை வெட்டிய உடனேயே, அற்றுப் போய் விழுந்த கையை எடுத்துக் கொண்டு, மாபெரும் உலக்கை என்று வர்ணித்தாலும் போதாத அந்த விழுந்த வலது கரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு வானர சேனையை அடித்து துவம்சம் செய்கிறான்.உள்ள கையினும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம்என்று அற்புதமாகப் பாடுகிறான் கம்பன். மலையைப் பெயர்த்து எறிந்தது, கை அறுபடுவதற்கு முன்னால்.ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம் விதிர்ப்புற்றான்’ என்கிறார் கம்பர். இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.இரண்டு கையும் இரண்டு காலும் போன நிலையில்,தீயினால் செய்த கண்ணுடையான், நெடும்சிகையினால் திசை தீயவேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்விசும்புற வளைத்து ஏந்தி,பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ,பிலம் திறந்தது போலும்வாயினால் செல, வீசினன்; வள்ளலும்மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.
கழுத்தைத் திருப்பி பக்கத்திலிருக்கும் மலையைக் கடித்து எடுத்து, மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களுக்கிடையில் பற்றிக் கொண்டு, நாவை உண்டிவில் போல வளைத்து உந்தியும், ஊதிச் செலுத்தியும் அந்த மலையைப் பறக்கச் செய்து, வானரசேனையின் மேல் விழச் செய்து நசுக்கிக் கொன்றான். இப்படிப்பட்ட எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தன் முயற்சியை விடாது தொடர்ந்த கும்பகர்ணனுடைய செயலைப் பார்த்து இராமனுடைய வில் பிடித்த கை நடுங்கியது என்று கம்பன் எழுதுவானானால், அது அவன் கும்பகர்ணனுக்குக் கொடுத்த மிகப் பெரிய tribute என்றல்லவா பார்த்தோம். இத்தனைக்கும் சீதையைத் திரும்பத் தரவேண்டும் என்று வற்புறுத்தியவன், ‘வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன். பொன்றுவன்’ என்று விடை பெறும்போதே இராவணனிடம் சொல்லிக் கொண்டு வந்தவன், தான் போரிடும் காரணத்தில் தனக்கே சம்மதமில்லாதவன், ஒரு வீரன் ஆற்ற வேண்டிய கடமைக்காக வந்து, ஏதோ கடமைக்குப் போரிட்டேன் என்றில்லாமல், எல்லா உறுப்புகளையும் இழந்த பின்னாலும் தன் வேகத்தைத் தொடர்ந்தான் அல்லவா. அதற்கு செலுத்தப்பட்ட பிரமிப்பு நிறைந்த பாராட்டு இது.<<<கும்பகர்ணனின் போர் வேகம் பிரமிப்பாகவே இருந்தது அவன் கடைசியில் வீழும் வரைக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

எனவே கடலில் அமுக்கக் கேட்டுக்கொள்கிறான்.அனுபவித்துப் படித்துப் பதிவேற்றியும் தருகிறீர்கள். யுட்யூப் தரவிறக்கம் தான் எனக்கு வேகமில்லை. சேர்த்துத் தேவை வரும்போது படித்துக்கொள்ளலாம் என்ற எண்னமுண்டு.
ரொம்ப அருமையா சொல்லிட்டே வந்துட்டு திடும்னு முடிச்சிட்டீங்களே!.. அக்காவும் அண்ணனும் சொல்லுவாங்க தான்... அதுக்காவ நீங்க நிப்பாட்டணுமா?!.. ஆமா ஒம்பது மணி தான ஆகுது?!..
கும்பகர்ணனை இத்தனை விரிவாக உயர்வாக சித்தரித்தும் ராவணலீலா என வடக்கே நடக்கும் நிகழ்ச்சியில் கும்பகர்ணனையும் ராவணனோடு சிதைப்பது ஏன் என தெரியவில்லை. வானரப்படைகளை அனுமனை சுக்ரீவனை ராமனையே தாக்கியதால் இருக்குமா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/BMvEd6--2p8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
செவிக்குணவு இருக்கும் போது வயிறும் பசிக்குதுங்களே இதோ இன்னும் கொஞ்சம் எழுதிட்டு வரேன்
பலமிருகங்கள் கூடியுள்ள பரவிய மகரவேலையின்(மகரம்=மீன் வேலை=கடல்) மடங்குகின்றதிரையை(அப்பால்) தள்ளி மேற்கிலும் கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திக்கிலும் இடையே போதல் தவிர்த்து இருகண்களின் புகையுடன் அஸ்திரப்புகையும் வெளிப்பட அந்த முகக்குன்றம் (அறுந்த) மூக்கு வழியாக(நீர்) உட்புகப்புக்கு மூழ்கியது.மலைபோன்ற முகம் விழவே சஞ்சார மறுக்கும்படி கடலின் நீர் நான்கு திசைகளிலும் முதலில் விலக, அம்முகம் அறுந்த மூக்கின் வழியே நீர் புகப்பெற்றுப்பிறகு கடலில் அமிழ்ந்துவிட்டதென்பதாகும்......சொற்பொருள் விளக்கம் இதுதான் வாசித்த புத்தகத்தில் உள்ளபடி!2014-11-24 2:57 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஒரு கலக்கு கலக்கிவிட்ட ஐயப்பனுக்கு நன்றி.கம்பர் என்றால் அருமைத்தம்பிக்கு கலியனின்(திருமங்கை ஆழ்வார்)ஆடல்மாவேகம் வந்துவிடும் எனத்தெரியும்! நன்றி மிக அலுவலக வேலையிலும் அயராமல் எழுதியதற்கு.
கம்பர் எந்த அளவுக்கு கும்ப கருணனை உள்ளத்தில் மதித்தார் என்றால், இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர் கொடுத்திருக்கிறார்.
தோள் கண்டார் தோளே கண்டார்னு இராமனைச் சொன்னாரில்லையா ? அது மாதிரி கும்ப கர்ணனைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க
"
தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "
என்ன உவமை பாருங்க. சூர்ப்ப நகையின் கண்கள் ஏன் அவ்வளவு நீஈஈஈஈஈண்டு இருக்காம்னு கேட்டா... அவன் தோள் இந்தப்பக்கம் இவ்ளோ நீளம்.. அந்தப் பக்கம் இவ்ளோ நீளம்... இது ரெண்டையும் பார்த்து பார்த்தே என் கண்ணு நீஈண்டு போச்சுங்கறாளாம்.
இராமனைப் பார்த்து சூர்ப்பநகை சொன்னதை , இந்த தோளொடு தோள் செல வை அப்படியே கும்ப கர்ணனுக்கும் கொண்டாந்து போடறார்..
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்?
இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்து முடிக்கவே பல நாளாகுமாம். ஒரு மலைக்கு கைக் காள் முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு
கம்பர் தி கிரேட்...
ஆகா ஷைலஜா! கும்பகருணன்
வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!
இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.
அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.
பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.
உடனே கும்பகருணனை எழுப்ப
நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர்
தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய
முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக்
கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம்.
கும்பனை எழுப்பும் பாடலும்
சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)
பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.
என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்
வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!
புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ? (6121)
”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
மீண்டும் தொடர்கின்றான்...
ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்
மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)
இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்;
ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்;
ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி!
என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.
அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.
பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான்.
(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)
அன்புடன்,
மேகலா
திருவிளையாடல் படத்தில் கயிலாய நாகராஜனின் திருவிளையாடல்களைவிடப் பூலோக நாகராஜனின்>>>>>இந்த வரி படிச்சதும் நான் பாசமிகு ஒருவரைத்தான் சொல்றீங்கன்னு முதல்ல நினச்சேன்:)_
(ஏபிஆர்) திருவிளையாடல்கள் அதிகம். :-)
அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஏழைப் புலவன் தருமியைக் காமெடிப் பாத்திரமாக மாற்றியது.அன்புடன்,மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆகா ஷைலஜா! கும்பகருணன் வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!
இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.
அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.
பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.
உடனே கும்பகருணனை எழுப்ப நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர் தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக் கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம். >>>
ஆஹா மேகலாவின் பார்வைக்கோணம் மிகச்சரி நானும் இந்தக்கட்டத்தை வாசித்தேன் ஆனால் பொருளை இப்போதான் இந்த வகையில் உணர்கிறேன்.
கும்பனை எழுப்பும் பாடலும் சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)
பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.
என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்
வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!
புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ? (6121)
”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
மீண்டும் தொடர்கின்றான்...
ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்
மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)
இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்; ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்; ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி! என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.
அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.
பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான். >>>பொன்னகரெனப்பொலிந்த இலங்கை! ஆம் மேகலா இலங்கையின் வளமை அன்று மிக உயரத்தில் இருந்திருக்கிறது!
(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)>>>> இராவணர்கள் அழியவேண்டும் தான்.. மண்டோதரிக்காக பரிதாபப்பட்டாலும் ..!
அன்புடன்,
மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு மேகலா!. அது போல் 'செஞ்சோற்றுக் கடன் தீர்த்த' கர்ணன் கதையும்.. கர்ணனின் கதாநாயக பிம்பம், இயக்குனர் திரு.ஏ.பி.என் அவர்களால் உருவாக்கப்பட்டு, நடிகர் திலகத்தால் உயிரூட்டப்பட்டது.. உண்மை மாறானது.. பல புராணக் கதைகள், திரைக்கதை அமைப்பாளர்களால்மாறுதலாகச் சித்தரிக்கப்படுகின்றது. 'திருவிளையாடல்' படத்தில், தக்ஷ யாகத்திற்கு பின், தாக்ஷாயணி, கைலாயம் திரும்பி, சிவபிரானுடன் வாதம் செய்வது மாதிரியான காட்சிகள் இதற்கு நல்ல உதாரணம்..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முற்றும் விட்டகல வேண்டும்.
பாரதி
நானும் அன்று சன் டிவில பார்த்தேன் பையன் நல்ல துறுதுறு ஆனா அதுக்காக கம்பரை ஒப்பிடலாமா வேந்தரே?!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.
On Wednesday, November 26, 2014 9:03:26 PM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.எதுகை ஒரே அடியில் அல்ல.