இளங்கோ அடிகள் சமயம்

145 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 8, 2012, 10:58:06 AM6/8/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
பிரகாஷ் சுகுமாரன் எழுதினார்:
> சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவும்,
> ஆட்சியதிகாரத்தில் இருந்து, இறந்த பாண்டியனும் சமணர்கள் அல்ல.

இளங்கோ அடிகள் சிலை பாருங்கள்.
இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக.

http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ
அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத
கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில்
நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக்
குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய
காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது
என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப்
பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட
எழுந்த குரல்

கோவலனைச் சமணன் என்று கொலைக்களக் காதையில் பாடுகிறார் இளங்கோ அடிகள்.

”சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற” - கொலைக்களக் காதை (சிலம்பு)

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய
ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது
நீவிர் அளிமின் என்று சொல்ல ;

சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக்
கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி,
நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி,
நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம்
- புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி
மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி
நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க. (பெருமழைப் புலவர்
உரை).

------

விரிவாக, இளங்கோ அடிகள் தந்த காப்பியத்தில் சமணம் பற்றி அறிய:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
&
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 8, 2012, 11:26:06 AM6/8/12
to panb...@googlegroups.com, மின்தமிழ்
பேசுவதனால் எப்படியும் பேசலாம்.

கண்ணகி ஊரையே தீவைத்து கொளுத்தி ஊரார் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கியது மரணதண்டனைக்கு ஆதரவளிக்கும் செயல்தானே எனவும் கேட்கலாம்.

மரணதண்டனை தேவையா இல்லையா என்பது 21ம் நூற்றாண்டு விவாதம். இளங்கோ, வள்ளூவர் காலத்தில் அப்படி ஒரு விவாதமே எழுந்ததில்லை.


--
செல்வன்


கி.காளைராசன்

unread,
Jun 8, 2012, 1:03:55 PM6/8/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
வணக்கம்.

தெய்வத் தமிழ்ப் புலவர்களெல்லாம்
பிறப்பால் மனிதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக 
மனிதர்களின் சமயத்திற்குள் அடக்கிக் காட்ட முற்படும் அறிவுடையோர் செயல் வருத்தமளிக்கிறது.

தெய்வப் புலவன் திருவள்ளுவனோ,
இளங்கோ அடிகளோ 
தாங்கள் இச்சமயத்தார் என எங்கும் கூறிக் கொள்ள வில்லை.
அவர்களே கூற மறுத்த கருத்துக்களை வழிந்து அவர்கள் மீது கற்பிப்பதும் முறையல்ல.

இப்படியெல்லாம் அறிபூர்வமாகப் பேசிக் கொண்டே போனால்,
இளங்கோ அடிகள் ஆணா? பெண்ணா? என்று கூட நாளை எழுத முற்படலாம்.

வருத்தத்துடன்.

அன்பன்
கி.காளைராசன்

2012/6/8 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்பன்
கி.காளைராசன்
http://pulikkarai-iyanar.blogspot.in/

N. Ganesan

unread,
Jun 8, 2012, 11:21:39 AM6/8/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com
இளங்கோ அடிகள் நிரபராதியான கோவலனை கொலைதண்டனை
அடைவதைக் காட்டி இப்படி வழங்கும் அரசனின் நீதியில் உள்ள
சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

இன்றைய காலத்திலும் இது நிகழ்கிறது:
தைவான் சீனாவில் ஒறுத்தல் நாகரீகமடைய
இது போன்ற நிகழ்வுகள் உதவும். ஏற்கெனவே,
ஐரோப்பாவின் நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.

Death penalty dilemma dividing Taiwan
http://www.bbc.co.uk/news/world-asia-18202396

பொதுமறை தந்தவர்கள் சமணர்கள்.
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.

நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c

N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:16:12 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, மின்தமிழ், Theodore Baskaran
On Jun 8, 10:29 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>

உண்மை. விவசாயி வள்ளுவருக்கு தேனில் வகைகள் பல தெரியும்.
3 உதாரணம் தருகிறேன். பூத் தேன், பனைத் தேன், கரும்புத் தேன்.

(1) இதில் வள்ளுவர் கரும்பின் தேனைச் சொல்லியிருக்கலாம் என்பதற்குச்
சங்கச் சான்றோர் செய்யுளில் ஆதாரம் இருக்கிறது. வள்ளுவர் வாக்கு
குறுந்தொகைச் செய்யுளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

இதைப் பாடுதற்கு முன்னரே தமிழில் கரும்புத் தேனுடன் ஒப்பிடும்
செய்யுள் குறுந்தொகையில் காண்க.

”கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன -
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை
குறுந்தொடிக் குறுமகள்” - காலெறி கடிகையார், குறுந்தொகை 267.

அதாவது, கரும்பின் அடிப்பகுதியை வெட்டும் இரும்பு மழு
கரும்புத் தேனைச் சுவைத்தது போல, காதலியின் எச்சில்
தேனாய்ச் சுவைத்தது என்கிறான் தலைவன்.

சேக்கிழார் பெரியபுரானத்தில் கரும்பின் தேன் பற்றிப்
பாடுகிறார்:

விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்

விரும்புதற்குரிய மெல்லிய கணுக்களைக் கொண்டு,
நீளமாக வளர்ந்தும் இருக்கிற கரும்புகள் பொழியும்
தேன் வளப்பம் கொண்ட கணமங்கலம் - என்பது பொருள்.

முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.

வெல்லத்தின் பின்னால் வரும் தேன் கரும்பினது என்றும் சொல்லலாம்.
அந்த அடியின் கடைசியில் கரும்பைத்தான் சொல்கிறார் ஆழ்வார்.

(2) மலர்த் தேன் எடுத்தல் பிரபலம். இதனைச் சீவ இம்சை
எனச் சமணத் துறவியர் உண்ண மாட்டார்கள்.

(3) பனைத் தேன். இதனை கிராமங்களில் பனந்தேன் என்பது பெருவழக்கு.
கருப்பங்கட்டி - வெல்லம். ஆனால் பாகாக இருப்பது பனைத் தேன்
(அ) பனந்தேன்.
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
காண்க),
கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்
http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f

(சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
ஆகும் என்பதை அறிந்தவர்.)


DEV RAJ

unread,
Jun 11, 2012, 9:37:04 PM6/11/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
ஐயாவுக்கு நழுவு நிலைமை ஏற்பட்டு விட்டது;
டாக்டர் பட்டம் வாங்கவில்லை என்று
பேசத் தொடங்கி விடுவார், இனிமேல்.

நாமக்கல்லார் போன்றோருக்கு மட்டும்
அது தேவையில்லாதது



தேவ்

DEV RAJ

unread,
Jun 11, 2012, 11:08:53 PM6/11/12
to mint...@googlegroups.com

DEV RAJ

unread,
Jun 11, 2012, 11:28:10 PM6/11/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
>>> ‘கொலையில்’ என்ற சொல்லை அந்தக் குறளில் எந்த இடத்தில் எப்படிப்
பொருத்துவது? <<<


University level question ஆக இருந்தால்தான்
விடை கூறப்படும் :))



தேவ்

கி.காளைராசன்

unread,
Jun 12, 2012, 2:58:35 PM6/12/12
to mint...@googlegroups.com, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com
வணக்கம்.
2012/6/8 N. Ganesan <naa.g...@gmail.com>


சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.
சமணத்திற்கு முன்னர் என்ன சமயம் இருத்ததாம்?
மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள் இது குறித்து என்ன கூறுகின்றனர்?

Prakash Sugumaran

unread,
Jun 12, 2012, 3:52:52 PM6/12/12
to mint...@googlegroups.com
தேவ் சார், கேள்வியை பொருள் மாற்றி கேட்டேனா அல்லது புரிந்து கொல்லப்பட்டதா எனத் தெரியவில்லை. துறவிகள் வாயை துணியால் மூடுவது, பாதையை பெருக்குவது எல்லாம் தமது சமய கொள்கைகளை வெளிக்காட்டும் புற அடையாளங்கள் மட்டுமே. இல்லத்தவர்கள் அப்படி வாழ்வதில்லை.
 
ஸத்யம், அஸ்தேயம், அஹிம்ஸை, அபரிக்ரஹம் போன்ற அறங்களை//
ஹிந்து சமயம் மட்டுமல்லாமல் எல்லா சமயங்களும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. கூடுதல் அழுத்தம் கொடுத்ததாலேயே சமண சமயம் போட்டியில் நிற்க முடியாமல் பின்னால் போனது.
 
நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை, அளறு, உலகியற்றிய இறை, வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும், அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை ஓத்து), தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம், பிறவிப் பெருங்கடல், மற்றீண்டு வாரா நெறி........ //
 
இவை இந்து சமயத்துக்கு மட்டுமே பொருந்தும் என எப்படி கருத முடியும் ? சீக்கிய மதம் பற்றி சரியாகத் தெரியவில்லை. மற்றபடி மீதமுள்ள எல்லா இந்திய மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொருந்தும்.

2012/6/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Prakash Sugumaran

unread,
Jun 12, 2012, 4:01:47 PM6/12/12
to mint...@googlegroups.com
சமணத்திற்கு முன்னர் என்ன சமயம் இருத்ததாம்? மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள் இது குறித்து என்ன கூறுகின்றனர்?//
மேலை நாட்டினர் கூறுவதை விடுங்கள்.. உள்ளூரில் கண்ணெதிரில் அம்மன்கள், அய்யன்கள், காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள்.. இப்படி நிறைய தெரிகின்றன. கோத்திரங்கள், குலங்களை மறைப்பதே சமயங்கள் மதமானதன் அடிப்படை.

2012/6/13 Prakash Sugumaran <praka...@gmail.com>

Uthayakumar Gopalasingam

unread,
Jun 13, 2012, 6:48:53 PM6/13/12
to mint...@googlegroups.com
ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களை
அதன் அழகிய பரிணாமம் தான் சைவம்.
ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.
சமனமாக அல்ல!
தமிழனை கறையான் அரிப்பது போன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்கள் அறுவடை செய்தார்கள்
ஆனாலும் அதனைத் தொடர இனி ஒரு போதும் தமிழன் அனுமதிக்கக்கூடாது
அன்புடன்
கோ.உதயகுமார்
 


 
12 ஜூன், 2012 9:01 pm அன்று, Prakash Sugumaran <praka...@gmail.com> எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Jun 13, 2012, 10:21:20 PM6/13/12
to mint...@googlegroups.com


2012/6/14 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>

ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களை
அதன் அழகிய பரிணாமம் தான் சைவம்.
ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.
சமனமாக அல்ல!

 
தமிழனை கறையான் அரிப்பது போன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்கள் அறுவடை செய்தார்கள் 

அரிப்பது என்பது அழிப்பது. 

அறுவடை என்பது வயலில் விளைச்சலைப் பயன் காண்பது. வாழ்விப்பது. 

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழனை ஆரியர்கள் அழித்தார்கள் என்று சொல்லவருகிறீர்களா? அல்லது வாழ்வித்தார்கள் என்று சொல்லவருகிறீர்களா? 
:-) 

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 10:23:45 PM6/13/12
to mint...@googlegroups.com


2012/6/14 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>

ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களை
அதன் அழகிய பரிணாமம் தான் சைவம்.
ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.
சமனமாக அல்ல!

அருமையாகச் சொன்னீர்கள் ஐயா.  அப்படியே இருக்கட்டும்.  ஆனால், வான்சிறப்பு என்று மழையைப் பற்றி ஓர் முழு அதிகாரம் எழுதிய வள்ளுவர்,

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

என்ற ஒரு குறள் நீங்கலாக, கதிரவனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?  சொன்ன குறளிலும் கதிரவனின் ஒளியைக் காட்டிலும், அவன் அனலனாக நிற்பது மட்டுமல்லவா பேசப்படுகிறது!

மழைக்குப் பத்துப் பாட்டு.  ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்ற இளங்கோவடிகள் பாடிய ஞாயிறு பற்றி இந்த ஒரே ஒரு குறள்.  அப்படியானால், ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களை என்ற தங்களுடைய கூற்றுப்படி, வள்ளுவர் ஆதி தமிழனா, பாதி தமிழனா இல்லை, மீதி தமிழனா?  (இடைக்காலமா, பிற்காலமா என்று கேட்கிறேன்.  வேறு ஒன்றுமில்லை!)

--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Jun 14, 2012, 6:17:12 AM6/14/12
to mint...@googlegroups.com
2012/6/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழனை ஆரியர்கள் அழித்தார்கள் என்று
> சொல்லவருகிறீர்களா? அல்லது வாழ்வித்தார்கள் என்று சொல்லவருகிறீர்களா?
> :-)


ரங்கன்! இந்துக்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் வர்ணாசிரம்
பரவியதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரு குறையும் இல்லாமல் கழகத்தினர்
பரப்பிய இந்த ஆரிய மாயை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் நீக்கமற
பரவியுள்ளது! இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல :-)

க.>

DEV RAJ

unread,
Jun 14, 2012, 6:44:18 AM6/14/12
to mint...@googlegroups.com
On Wednesday, 13 June 2012 15:48:53 UTC-7, uthayakumar gopalasingam wrote:
>>> ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான். நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களை அதன் அழகிய பரிணாமம் தான் சைவம் <<


ஐம்படைத் தாலி அணியும் மரபு யாருடையது ?

சங்க இலக்கிய அகத்துறைப் பாடல் ஒன்றில் மாலவன் பற்றிய
குறிப்பு இருக்கிறதே, என்ன காரணம் ?

முழுக்க முழுக்கச் சைவ சமயச் சார்புடைய ஒரு நூலில்
கூட ஐம்படைத்தாலி கூறப்பட்டுள்ளதே -

நாட்டா ரறிய முன்னாளி னன்னா ளுலந்த *ஐம்படையின்*
பூட்டார் மார்பிற் சிறியமறைப் புதல்வன் றன்னைப் புக்கொளியூர்த்   
தாட்டா மரையின் மடுவின்கட் டனிமா முதலை வாய்நின்றும்   
மீட்டார் கழல்க ணினைவாரை மீளா வழியின் மீட்பனவே.



தேவ்
2012/6/13 Prakash Sugumaran <praka...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

DEV RAJ

unread,
Jun 14, 2012, 7:00:19 AM6/14/12
to mint...@googlegroups.com

On Tuesday, 12 June 2012 12:52:52 UTC-7, Prakash Sugumaran wrote:

>>> நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை, அளறு, உலகியற்றிய இறை,
வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும், அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை
ஓத்து), தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம், பிறவிப் பெருங்கடல்,
மற்றீண்டு வாரா நெறி........ // 


இவை இந்து சமயத்துக்கு மட்டுமே பொருந்தும் என எப்படி கருத முடியும் ? சீக்கிய
மதம் பற்றி சரியாகத் தெரியவில்லை. மற்றபடி மீதமுள்ள *எல்லா* இந்திய
மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொருந்தும். <<<


எழுதா மறை, தென்புலத்தார் - இந்து சமயத்துக்கே.
சீக்கியர்  - க்ரந்த் ஸாஹெப் ( வரி வடிவில்)

எல்லாஆஆஆ... என நீட்டுதற்கு இந்தியாவில்
இருந்த மதங்கள் எத்தனை ஆயிரம் ?
பவுத்தருக்கும், சமணருக்கும் நீத்தார் கடன்
இல்லை; ஹிந்துக்களில் பல வழிபாட்டு
முறைகள் இருப்பினும் அடிப்படைக்
கொள்கைகளில் பெரிய மாற்றம்
கிடையாது



தேவ்



On Tuesday, 12 June 2012 12:52:52 UTC-7, Prakash Sugumaran wrote:
தேவ் சார், கேள்வியை பொருள் மாற்றி கேட்டேனா அல்லது புரிந்து கொல்லப்பட்டதா எனத் தெரியவில்லை. துறவிகள் வாயை துணியால் மூடுவது, பாதையை பெருக்குவது எல்லாம் தமது சமய கொள்கைகளை வெளிக்காட்டும் புற அடையாளங்கள் மட்டுமே. இல்லத்தவர்கள் அப்படி வாழ்வதில்லை.
 
ஸத்யம், அஸ்தேயம், அஹிம்ஸை, அபரிக்ரஹம் போன்ற அறங்களை//
ஹிந்து சமயம் மட்டுமல்லாமல் எல்லா சமயங்களும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. கூடுதல் அழுத்தம் கொடுத்ததாலேயே சமண சமயம் போட்டியில் நிற்க முடியாமல் பின்னால் போனது.
 
நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை, அளறு, உலகியற்றிய இறை, வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும், அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை ஓத்து), தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம், பிறவிப் பெருங்கடல், மற்றீண்டு வாரா நெறி........ //
 
இவை இந்து சமயத்துக்கு மட்டுமே பொருந்தும் என எப்படி கருத முடியும் ? சீக்கிய மதம் பற்றி சரியாகத் தெரியவில்லை. மற்றபடி மீதமுள்ள எல்லா இந்திய மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொருந்தும்.

2012/6/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம்.
2012/6/8 N. Ganesan <naa.g...@gmail.com>


சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.
சமணத்திற்கு முன்னர் என்ன சமயம் இருத்ததாம்?
மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள் இது குறித்து என்ன கூறுகின்றனர்?

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Jun 14, 2012, 7:06:29 AM6/14/12
to mint...@googlegroups.com
தேவ் சார்

ரொம்பக் கஷ்டப்படாதீங்க!

இலங்கைத்தமிழர்களின் சமய அறிவு குறைவு. அவர்கள் அறிந்தது நாவலர் பரப்பிய
சைவ சமயம். அது தமிழ்ச்சமயம். மற்றதெல்லாம் ஆரிய சமயம் என்று
சொல்லுவார்கள் :-) ஆனால் உலகெங்கிலும் சைவ சமயம்தான் சங்கதத்தை
(வடமொழியை) முதன்மைப்படுத்தி கருவறையில் வைத்திருப்பதை அவர்கள் கண்டு
கொள்வதில்லை :-). மெய்கண்ட சாஸ்திரம் 100% தமிழ்மறை என்றுதான்
சொல்வார்கள். அதன் தோற்றம் பற்றிய தெளிவின்மையால். ஆகமங்கள் முதன்மை
என்பார்கள். அது காஷ்மீரத்திலிருந்து வந்தது என்பதை அறியார். அவர்கள்
மனோநிலை கிணற்றுத்தவளை நிலை. பரிதாபம் தான் படமுடியும்!

நா.கண்ணன்

2012/6/14 DEV RAJ <rde...@gmail.com>:

DEV RAJ

unread,
Jun 14, 2012, 7:50:12 AM6/14/12
to mint...@googlegroups.com
On Thursday, 14 June 2012 04:06:29 UTC-7, NaKa wrote:
>>> இலங்கைத்தமிழர்களின் சமய அறிவு குறைவு. அவர்கள் அறிந்தது நாவலர் பரப்பிய
சைவ சமயம். அது தமிழ்ச்சமயம். மற்றதெல்லாம் ஆரிய சமயம் என்று
சொல்லுவார்கள்  <<<



அவ்வாறாக முடியாது.

ஆறுமுக நாவலர் அவர்கள்
”சைவசமயத்துக்கும் பிரமாணநூல்க ளிருத்தல்வேண்டும்.
அவைதான் வடமொழியிலுள்ள இருக்கு முதலிய நான்கு வேதங்களும்,
காமிகமுதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களும்,
தமிழிலுள்ள பன்னிரண்டு திருமுறைகளும்,
பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும்,
சிவஞானமகாபாஷியமுமாம்”
எனும் கோட்பாட்டில் மிக உறுதியாக இருந்தவர்.

ஆரியத்தில் வெறுப்பிருக்கும் பக்ஷத்தில்
வடபாலிருந்து மறையோதும் பரமனை
முழுமுதற்கடவுளாக ஏற்க முடியாது.

”ஆரியன் கண்டாய்
 தமிழன் கண்டாய்

எனும் பாடலை இவர்கள் ஆதரிக்க முடியாது



தேவ்

Prakash Sugumaran

unread,
Jun 14, 2012, 8:14:10 AM6/14/12
to mint...@googlegroups.com
கழகத்தினர் பரப்பிய இந்த ஆரிய மாயை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் நீக்கமற
பரவியுள்ளது! இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல :-)//\
 
கழகத்தினர் வெளிக் கொண்டு வந்த ஆரிய மாயை.. :)) உண்மைதானே . இது வெளிப்பட காரணமே அறிஞர்களின் கூற்றை கீழ்மை படுத்தும் ஆணவ செயல்தான்.
 
எந்த நாடும் இதற்கு விதி விலக்கல்ல//
 
பிற சமய ஆர்வலர்களுக்கு இது போன்ற இழை தொடங்கும் ஆர்வமில்லாதது அவரவர் குறை அல்லவா ? தவிர பொருள் உதவி  என ஒன்றுள்ளது :)) அது சில, பலருக்கு, சில, பலவிதமாக மட்டுமே கிடைக்கும். இந்த பொருளதவிக்காக எதை எதையோ செய்ய வேண்டியதும் இருக்கும்.

 
2012/6/14 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jun 14, 2012, 9:49:58 AM6/14/12
to mintamil, santhavasantham, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம்


---------- Forwarded message ----------
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
Date: 2012/6/14
Subject: Re: [வல்லமை] Re: இளங்கோ அடிகள் சமயம்
To: vall...@googlegroups.com




2012/6/14 N. Ganesan <naa.g...@gmail.com>


கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.

தாங்கள் சொல்வதுதான் பொருள் என்றால் வள்ளுவர் இப்படியல்லவா பாடியிருக்க வேண்டும்?

கொலைசெய் கொடியாரை வேந்தொறுத்தல்....

வெண்டளை பிறழவில்லையே!

கொலையின் கொடியாரை என்பதற்கான விளக்கம் என்ன?  அது ‘கொலை செய்வதாகிய கொடியவர்கள்’ என்று பொருள் பெறுவது எந்த அடிப்படையில்?

பரிமேலழகர் உரை தவறு என்றே வைத்துக் கொண்டாலும்,

“கொடுமை சொ்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று’--மணக்குடவர்

'For a king, to punish criminals with death....' Rev. Drew and John Lazarus translation.

இருவருமே தவறு என்றே வைத்துக் கொள்வோம்.  இந்த உரையைப் பார்க்கவும்:

The king who punishes wicked men with death is a farmer weeding the tender crops.
அரசன் மிகக் கொடியவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல், உழவன் பயிர் வளர்வதற்காகக் களைகளை வெட்டி நீக்குவதற்குச் சமமாகும்.  அது குற்றமாகாது.

ஆங்கிலம், தமிழ் இரண்டும் பி எஸ் சுந்தரம் அவர்களுடைய உரை.  தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு என்ற பெயருடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவர் யார் தெரியுமோ?  தாங்களேதான்!  குறிப்பிட்ட பக்கத்தை இணைத்திருக்கிறேன். 

நீங்கள் பதிப்பாசிரியராக இருந்த ஒரு பதிப்பில், இப்படி ஒரு பிழையான பொருளை எப்படி அனுமதித்தீர்கள்?  பதிப்பிப்பது ஒரு பொருள், இணையத்தில் பரப்புவது வேறொரு பொருளா?

இளையதாக முள்மரம் கொல்க குறளுக்குப் பிறகு வருகிறேன்.



--
அன்புடன்,
ஹரிகி.
img058.jpg

Uthayakumar Gopalasingam

unread,
Jun 14, 2012, 8:10:21 PM6/14/12
to mint...@googlegroups.com
உலக அளவில் பதினொரு தகுதிகளில் ஏழு அல்லது எட்டு தகுதிகளைக் கொண்ட ஈப்ரூ, கிரேக்கம், இலத்தீன் ,பாரசீகம் ,சமக்கிருதம் ஆகிய மொழிகளை விட அதிகமான தகுதிகளைக் (தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தக்கமிலாத்தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு )கொண்ட ஒரே மொழி உலகில் தமிழ் ஒன்றே !
திருக்குறளில் வடசொல் காணப்படும் 17 குறட்பாக்களையும் எடுத்து அச்சொற்களின் இடத்தில் தமிழை இட்டு நிரப்பி அப்போதும் குறளின்பொருள் மாறாமல் படைத்துக் காட்டினார் பாவாணர்
எனவே திருவள்ளுவர் ஒரு தமிழ் மரபில் வந்த ஆதி தமிழன்
அன்புடன்
கோ.உதயகுமார்  

14 ஜூன், 2012 3:23 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

Hari Krishnan

unread,
Jun 14, 2012, 10:28:59 PM6/14/12
to mint...@googlegroups.com


2012/6/15 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>

திருக்குறளில் வடசொல் காணப்படும் 17 குறட்பாக்களையும் எடுத்து அச்சொற்களின் இடத்தில் தமிழை இட்டு நிரப்பி அப்போதும் குறளின்பொருள் மாறாமல் படைத்துக் காட்டினார் பாவாணர்
எனவே திருவள்ளுவர் ஒரு தமிழ் மரபில் வந்த ஆதி தமிழன்

திருக்குறளில் காணப்படும் வடசொற்கள் (திரிந்தும், திரியாமலும் பயன்படுத்தப்பட்டவை) 105.  நான் எண்ணியதில் பிழையிருக்கலாம்.  பட்டியலின் படத்தை இணைத்துள்ளேன்.  எண்ணிப் பார்த்துக் கொள்ளவும். நூற்றுக்கும் நான்கைந்து அதிகமான வடசொற்கள் உள்ளன. 

ஆக, திருவள்ளுவர் வடசொற்களைப் பயன்படுத்தினார்; பாவாணர் அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இட்டு நிரப்பி அவரை ஆதி தமிழனாக்கினார் எனலாமா?  பாவாணர் அவ்வாறு தூய்மைப்படுத்துவதன் முன்னர் வள்ளுவருடைய status quo என்ன?

வள்ளுவருடைய (மட்டுமல்லாமல் மற்ற எந்தக் கவிஞனுடையதாயினும் சரி) சொல்லாட்சியை மாற்றி அமைக்க ஒருவருக்கும் உரிமை கிடையாது.  இந்த விதியைப் பாவாணருக்குப் பொருத்த வேண்டாம்.  விட்டு விடலாம். பேராசான் வ சுப மாணிக்கனார் போன்றோர், இவ்வாறு வள்ளுவருடைய சொல்லாட்சியை மாற்றுவதை ஏற்பார்களா?  (தற்போது ‘வள்ளுவம்’ இரவலுக்குப் போயிருக்கிறது.  வள்ளுவருடைய சொல்லாட்சி, நேர்த்தி முதலானவற்றைப் பற்றிய அவருடைய கருத்தை, புத்தகம் திரும்ப வந்ததும் தருகிறேன்.  அல்லது தாங்களே பார்த்துக் கொள்ளலாம்.  பாவாணரைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்றாலும், சொல்லாட்சியை மாற்றி அமைக்க முயல்வது பற்றிய அவர் எண்ணங்களை அறிந்து கொள்ளலாம்.)

இன்னும், ஆதி தமிழர் வழிபட்ட கதிரவனை வழிபடும் வகையிலோ; அல்லது கதிரவன் ஒளியைக் குறிக்கும் வகையிலோ ஒரே ஒரு குறளைக் கூட வள்ளுவர் ஏன் இயற்றவில்லை, இயற்றிய ஒரு குறளிலும், கதிரவனுடைய சுட்டெரிக்கும் தன்மையை மட்டுமே உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறாரே, அது ஏன் என்ற வினா நிலுவையிலுள்ளது.
DSCF0002.JPG

DEV RAJ

unread,
Jun 15, 2012, 12:42:45 AM6/15/12
to mint...@googlegroups.com
அஃறிணைப் பொருளையோ, ஏதோ ஒரு
உணர்ச்சியையோ பெண்பாலாகச்
சொல்லும் வழக்கம் சங்க இலக்கியத்தில்
உண்டா ?


நாணெணும் நல்லாள் (924)
நிலமெனும் நல்லாள் (1040)

நாணத்துக்கும், பூமிக்கும்
குறள் பெண்மையை
ஏறிடுகிறது



தேவ்

Uthayakumar Gopalasingam

unread,
Jun 14, 2012, 7:11:19 PM6/14/12
to mint...@googlegroups.com
ஈழத்தின் பாடத்திட்டத்தில் சைவசமயம் என்ற பாடம் உள்ளது
ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தேவாரம் தொடங்கி சிவபுராணம் வரை சாதாரணமாகப் பண்ணிசையுடன் பாடத் தெரியும்
ஆனால் தங்களின் வகுப்பறை மாணவர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் ?
சமய அறிவு பற்றிக்கூறும் தங்களின் நாட்டில் அப்படி ஒரு சைவசமய பாடம் பாடத்திட்டத்தில் உள்ளதாகத் தெரியவில்லை?
அறிவு பற்றி அகந்தைப்பட வேண்டாம் .
கற்றது கையளவு கல்லாதது உலகளவு .........
அன்புடன்
கோ.உதயகுமார்  

14 ஜூன், 2012 12:06 pm அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Jun 15, 2012, 10:11:28 AM6/15/12
to mint...@googlegroups.com
அறிவு பற்றி அகந்தைப்பட வேண்டாம் .//

நேரடித் தாக்குதலைக் குறைத்துக் கொண்டால் நலம். மற்றபடி உங்கள் கேள்விக்கு இங்கே பதில் இல்லை என்பதே உண்மை.  சமயச் சார்பற்றது எனக் கூறி எதுவுமே கற்றுக் கொடுக்காத ஒரு பாடத்திட்டம். இங்கு அனைவருமே தனியாகத் தான் அவரவர் தேவாரமோ, திருவாசகமோ அதற்கென தனியாகக் கோயில்களில் உள்ள வகுப்புகளில் சேர்ந்து படிக்க இயலும்.  அதற்கும் மனம் இருந்தால் தான்; படிக்கும் ஆவல் இருந்தால் தான். உண்மையிலேயே வெட்கமாக இருக்கிறது. வருத்தமாக இருக்கிறது.

2012/6/15 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>
ஈழத்தின் பாடத்திட்டத்தில் சைவசமயம் என்ற பாடம் உள்ளது
ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தேவாரம் தொடங்கி சிவபுராணம் வரை சாதாரணமாகப் பண்ணிசையுடன் பாடத் தெரியும்
ஆனால் தங்களின் வகுப்பறை மாணவர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் ?
சமய அறிவு பற்றிக்கூறும் தங்களின் நாட்டில் அப்படி ஒரு சைவசமய பாடம் பாடத்திட்டத்தில் உள்ளதாகத் தெரியவில்லை?
அறிவு பற்றி அகந்தைப்பட வேண்டாம் .
கற்றது கையளவு கல்லாதது உலகளவு .........
அன்புடன்
கோ.உதயகுமார்  


Hari Krishnan

unread,
Jun 15, 2012, 10:19:27 AM6/15/12
to mint...@googlegroups.com


2012/6/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

நேரடித் தாக்குதலைக் குறைத்துக் கொண்டால் நலம்.

மறைமுகத் தாக்கலும் அவசியமற்றது.  தாக்குவதற்காகவா இணையத்துக்குப் பணம் செலவழித்து, குழுக்களில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்?  (நீ தாக்கவில்லையா என்று கேட்டால், என்னுடையது நேரடி மோதல், அது வேறு சப்ஜெக்ட்.  இது வேறு விஷயம்.)

என்னைக் காட்டிலும் அடக்கமானவன் யாரும் இல்லை என்பதும், அடுத்தவரை அகந்தை கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துவதும் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளாக எனக்குப்படவில்லை. 

N. Kannan

unread,
Jun 15, 2012, 10:44:04 AM6/15/12
to mint...@googlegroups.com
நண்பரே:

நீங்கள் கூறுவது உண்மை. தமிழகத்தில் சமயப்பாடங்கள் கிடையாது.

நீங்கள் சைவ சமயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள் என்பதே
வேண்டுகோள். அவசரப்பட்ட முடிவுகள் நம் சமய அன்பவங்களுக்குத் தடையாக
அமையும்.

மற்றபடி எனக்கு எந்த அகந்தையுமில்லை. அதுவொரு அவதானம் மட்டுமே!

நா.கண்ணன்

2012/6/15 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Mohanarangan V Srirangam

unread,
Jun 15, 2012, 11:35:11 AM6/15/12
to mint...@googlegroups.com
அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்


நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 


தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 

நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயின்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

பாடன் முழவும் விழவுமோவாப் பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்டடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 

புனையழ லோம்புகை யந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 



கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் 


மூன்றாம் திருமுறை, 108திரு ஆலவாய்ப் பதிகத்தில் வேதங்களையும், வேள்விகளையும் நிந்தனை செய்து, வைதிகத்தின் வழியொழுகாச் சமணரையும் பௌத்தரையும் வாட்டிட கூடலாலவாய்க்கோனை விடைகொண்ட பாட்டுகள் இவை -- 


இவை திருஞானசம்பந்தர் திருமுறைகளில் ஒரு கைப்பிடி எடுத்துக்காட்டு. இதுபோல் அப்பர், சுந்தரர் என்றபடி மூவர் தேவாரத்திலும் காட்டுகள் மலிவு. 

உங்களுடைய நண்பர் பாடத்திட்டத்தில் இவற்றையெல்லாமும் படித்திருப்பாரே. 

அப்படியென்றால் இவர் பாஷையில் தமிழனை ’அரித்த’, ‘அறுவடை செய்த’ ஆரியர்களில் முதன்மை இடம் திருஞான சம்பந்தர் உள்ளிட்ட மூவர் முதலிகளுக்குத்தான் என்கிறாரா? 

மேலும் மற்ற திருமுறைகளில் இருக்கும் ’ஆரிய அரித்தல்கள்’, சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு, சிவஞான போதத்திற்கு ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் மாபாடியமும் இவர் கணக்குப்படி பெரும் ‘ஆரிய அரித்தல்’களா? 

அத்தனை எடுத்துக்காட்டுகளையும் வரிசையாக இங்கேயே இடவா? 

>>>ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.
>>>> 

தேவாரங்களைப் பாடத்திட்டத்திலேயே படித்த உங்கள் நண்பர் எதன்வழி வந்த சைவத்தைப் பற்றிப் பேசுகிறார்?. 

இவர் படித்ததாகச் சொல்லும் தேவாரம் எங்கும், சைவத் திருமுறை எங்கும், சைவ சாத்திரம் பதினான்கிலும், மாபாடியம் முழுக்கவும், சைவ ஆகமங்கள் ஒன்பதைக் குறித்துக் காட்டி, தமிழில் ஆகமம் விளக்க வந்ததாகக் கூறும் திருமூலரின் திருமந்திரம் தொடக்கம், இடையில், முடிவில் என்று முழுதும் இவர் கருத்துப்படிப் பார்த்தால் ஒரே ’ஆரிய அரித்தல்’களாகவும், ‘ஆரிய அறுவடைகளாகவும்’ இருக்கும் பொழுது தேவார முதலிகள் மூவரைப் பற்றியும், அதன்வழி வந்த சைவத்தைப் பற்றியும் இவர் என்ன செய்யலாம் என்கிறார். 

மரபுக்கு ஆக்க பூர்வமான பங்களிக்க முன்மாதிரியான இவர்களைத் தேடிக் கண்டடையச் சிலரால்தான் முடியும். :-) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*



2012/6/15 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jun 15, 2012, 1:05:07 PM6/15/12
to mint...@googlegroups.com
2012/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

> தேவாரங்களைப் பாடத்திட்டத்திலேயே படித்த உங்கள் நண்பர் எதன்வழி வந்த
> சைவத்தைப் பற்றிப் பேசுகிறார்?.
>
> இவர் படித்ததாகச் சொல்லும் தேவாரம் எங்கும், சைவத் திருமுறை எங்கும், சைவ
> சாத்திரம் பதினான்கிலும், மாபாடியம் முழுக்கவும், சைவ ஆகமங்கள் ஒன்பதைக்
> குறித்துக் காட்டி, தமிழில் ஆகமம் விளக்க வந்ததாகக் கூறும் திருமூலரின்
> திருமந்திரம் தொடக்கம், இடையில், முடிவில் என்று முழுதும் இவர் கருத்துப்படிப்
> பார்த்தால் ஒரே ’ஆரிய அரித்தல்’களாகவும், ‘ஆரிய அறுவடைகளாகவும்’ இருக்கும்
> பொழுது தேவார முதலிகள் மூவரைப் பற்றியும், அதன்வழி வந்த சைவத்தைப் பற்றியும்
> இவர் என்ன செய்யலாம் என்கிறார்.
>
> மரபுக்கு ஆக்க பூர்வமான பங்களிக்க முன்மாதிரியான இவர்களைத் தேடிக் கண்டடையச்
> சிலரால்தான் முடியும். :-)
>

இதுதான் எனக்கும் புரிவதில்லை. எங்கிருந்து இவர்கள் சைவத்தைப் பற்றி
இப்படித்தப்பு, தப்பாகப் படித்தார்கள் என்று. நான் முன்பே சுட்டியபடி
இந்த ஆரியம், பார்ப்பனீயம் என்பதால் இந்தியாவில் குப்பை கொட்ட வந்த
இந்தியச் சரக்குகள். அது எப்படி இலங்கைச் சைவத்துடன் தோள் கோர்த்து
நடக்கிறது? முரண்படும் கருத்தாக்கங்களின் கூட்டுமுயற்சியாக/குழப்பமாக
உள்ளதே!

க.>

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages