இளங்கோ அடிகள் சமயம்

54 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 8, 2012, 10:58:06 AM6/8/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
பிரகாஷ் சுகுமாரன் எழுதினார்:
> சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவும்,
> ஆட்சியதிகாரத்தில் இருந்து, இறந்த பாண்டியனும் சமணர்கள் அல்ல.

இளங்கோ அடிகள் சிலை பாருங்கள்.
இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக.

http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ
அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத
கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில்
நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக்
குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய
காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது
என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப்
பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட
எழுந்த குரல்

கோவலனைச் சமணன் என்று கொலைக்களக் காதையில் பாடுகிறார் இளங்கோ அடிகள்.

”சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற” - கொலைக்களக் காதை (சிலம்பு)

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய
ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது
நீவிர் அளிமின் என்று சொல்ல ;

சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக்
கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி,
நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி,
நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம்
- புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி
மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி
நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க. (பெருமழைப் புலவர்
உரை).

------

விரிவாக, இளங்கோ அடிகள் தந்த காப்பியத்தில் சமணம் பற்றி அறிய:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
&
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 8, 2012, 11:21:39 AM6/8/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com
இளங்கோ அடிகள் நிரபராதியான கோவலனை கொலைதண்டனை
அடைவதைக் காட்டி இப்படி வழங்கும் அரசனின் நீதியில் உள்ள
சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

இன்றைய காலத்திலும் இது நிகழ்கிறது:
தைவான் சீனாவில் ஒறுத்தல் நாகரீகமடைய
இது போன்ற நிகழ்வுகள் உதவும். ஏற்கெனவே,
ஐரோப்பாவின் நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.

Death penalty dilemma dividing Taiwan
http://www.bbc.co.uk/news/world-asia-18202396

பொதுமறை தந்தவர்கள் சமணர்கள்.
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.

நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c

N. Ganesan

unread,
Jun 10, 2012, 10:07:40 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, Theodore Baskaran
On Jun 8, 10:29 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:

> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>

வடக்கே இருந்து தமிழுக்கு வந்த சமணத்தை ஏற்பதை ஏற்றவர்கள் வள்ளுவர்
போன்றோர்.
உழவு செய்யக் கூடாது என்று ஒரு விளிம்புநிலையில் ஒரு வலிய சமணத் துறவி
எழுதினால், தமிழ்மறை, உலகப் பொதுமறை எழுதும் வள்ளுவர் தன் தொழிலே ஆகாது
என்று அறிவிக்கவா முடியும்? வேளாண்மையை விட்டுவிட்டால் மனிதகுலம்
எப்படிப்
பெருகி உயிர்வாழ்வது? கரும்பின் தேனைத் தேன்பாகு என்கிறோம்.
’தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு’
மலரின் தேன் வேண்டாம் என்றால் கரும்பின் தேன் சேர்த்தலாமே.

மேலும் இக்குறள் காமத்துப் பாலைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் படித்தால்
தெரியும்,
தேன்/தேறல் கள் குடி எப்படி இருந்தது என. பூவின் கள்/மது மாத்திரம் தேன்
அல்ல.
கரும்பின் தேன் தேன்பாகு, தேறல் என்பது உண்டு. ’ஆனின் நெய்யை,
கரும்பினின் தேறலை’
- திருவாசகம்.
வள்ளுவர் தமிழ்ச் சமுதாயம் எப்படி மாற வேண்டும்? ஒருதார மணம்,
கள்ளுண்ணாமை,
ஜீவஹிம்சை இன்மை, துறவு, ... என்ற சமண மேனோக்கங்களைத் தமிழர்
கைக்கொள்ள விருப்பிப் பொதுமறை செய்கிறார். நாலடியை வேளாண்வேதம்
என்பதற்குப்
பாடல்கள் உள்ளன. எல்லாப் 18 கீழ்க்கணக்கும் வேளாண்மறை என்று குறிப்பதும்
உண்டு.

விவசாயி வள்ளுவர் வேடன் முயல் அடிப்பதைப் பார்க்காமலா இருந்திருப்பார்?
முயலுக்கும், யானைக்கும் உள்ள எடை வித்தியாசத்தை சத்திரிய மரபினருக்குச்
சொல்கிறார்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.
(காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க
மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது -முவ)

இக்குறளைப் படித்து, வள்ளுவர் கள்ளுண்டால் களிப்பு வரும், காமம் அலரால்
இனிதாதல்
போல். எனவே கள் உண்ணலாம் என்று சொன்னார் என்பது போல் உள்ளது.
அரசன் மனித உயிரைக் கொல்லலாம் என்று வள்ளுவர் சொல்லியுள்ளார் என்று
முரசறைதல். அது “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற தமிழ்மறைக்கு
நேர்மாறானது. மனுநீதியா வள்ளுவர் பாடியுள்ளார்?

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் காடுகள் மிகுதி, காட்டுத் தீ பரவி
விலங்குகள் அழியும். அவற்றின் கறி வேகும், நிணம் தகிக்கும்
காட்சியைத் தமிழ் அகமரபில் அழகாய்ப் பாடியுள்ளார்:
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

இந்தக் அகக் குறளைப் படித்து, வள்ளுவர் கொள்கை
கொழுப்புடன் கூடிய ஊனை Barbeque http://en.wikipedia.org/wiki/Barbeque
செய்யச் சொல்கிறார் வள்ளுவர் என்பதா:?

அக இலக்கிய மரபு தமிழின் சிறப்பு. அதற்காக 25 அத்தியாயம் குறளில்
வள்ளுவர்
சேர்த்துகிறார். இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது - பலர் அறியாதது.
ஐந்திணைக் கோட்பாடு இருக்கிரது. ஒரு திணைக்கு 50 குறள்.
காமத்துப்பாலில் ஐந்திணை பற்றி இணையத்தில் இருக்கிறதா எனப் பார்க்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:16:12 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, மின்தமிழ், Theodore Baskaran
On Jun 8, 10:29 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>

உண்மை. விவசாயி வள்ளுவருக்கு தேனில் வகைகள் பல தெரியும்.
3 உதாரணம் தருகிறேன். பூத் தேன், பனைத் தேன், கரும்புத் தேன்.

(1) இதில் வள்ளுவர் கரும்பின் தேனைச் சொல்லியிருக்கலாம் என்பதற்குச்
சங்கச் சான்றோர் செய்யுளில் ஆதாரம் இருக்கிறது. வள்ளுவர் வாக்கு
குறுந்தொகைச் செய்யுளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

இதைப் பாடுதற்கு முன்னரே தமிழில் கரும்புத் தேனுடன் ஒப்பிடும்
செய்யுள் குறுந்தொகையில் காண்க.

”கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன -
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை
குறுந்தொடிக் குறுமகள்” - காலெறி கடிகையார், குறுந்தொகை 267.

அதாவது, கரும்பின் அடிப்பகுதியை வெட்டும் இரும்பு மழு
கரும்புத் தேனைச் சுவைத்தது போல, காதலியின் எச்சில்
தேனாய்ச் சுவைத்தது என்கிறான் தலைவன்.

சேக்கிழார் பெரியபுரானத்தில் கரும்பின் தேன் பற்றிப்
பாடுகிறார்:

விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்

விரும்புதற்குரிய மெல்லிய கணுக்களைக் கொண்டு,
நீளமாக வளர்ந்தும் இருக்கிற கரும்புகள் பொழியும்
தேன் வளப்பம் கொண்ட கணமங்கலம் - என்பது பொருள்.

முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.

வெல்லத்தின் பின்னால் வரும் தேன் கரும்பினது என்றும் சொல்லலாம்.
அந்த அடியின் கடைசியில் கரும்பைத்தான் சொல்கிறார் ஆழ்வார்.

(2) மலர்த் தேன் எடுத்தல் பிரபலம். இதனைச் சீவ இம்சை
எனச் சமணத் துறவியர் உண்ண மாட்டார்கள்.

(3) பனைத் தேன். இதனை கிராமங்களில் பனந்தேன் என்பது பெருவழக்கு.
கருப்பங்கட்டி - வெல்லம். ஆனால் பாகாக இருப்பது பனைத் தேன்
(அ) பனந்தேன்.
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
காண்க),
கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்
http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f

(சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
ஆகும் என்பதை அறிந்தவர்.)


N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:42:50 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com, pira...@googlegroups.com
வள்ளுவர் வேளாண்மை நன்கறிந்தவர். அவர் பயன்படுத்தும்
தேன் என்பதற்குச் சரியான ஆங்கில நேர் மொழிபெயர்ப்பு ‘sugar liquid'.
தமிழர்கள் கரும்புத் தேன், மலர்த் தேன், பனந் தேன் அறிவர்.
மேலை நாடுகளில் மேப்பிள் மரங்கள் மிகுதி. கனடாவின்
தேசிய மரம். கனடா தங்கக்காசில் இடம்பெறுவது மேப்பிள் மர இலைதான்.
மேப்பிள் மரம்:
http://en.wikipedia.org/wiki/File:Acer_saccharum.jpg

மேப்பிள் தேன்:
http://en.wikipedia.org/wiki/File:Maple_syrup.jpg

மேப்பிள் தேன் பற்றி அறிய,
http://en.wikipedia.org/wiki/Maple_syrup
Nearing, Helen; Nearing, Scott (2000). The maple sugar book (50th
anniversary ed.). Chelsea Green Publishing. ISBN 978-1-890132-63-7.

விலைஉயர்ந்த கடைகளில் தென்னிந்தியாவில் மேப்பிள் தேன் கிடைக்கலாம்.

நா. கணேசன்

பனந்தேன் பற்றி அறிய,
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70

.
>
> ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>

N. Ganesan

unread,
Jun 10, 2012, 6:15:58 PM6/10/12
to tamil_ulagam, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com

Hi Gopi,

How're you?

தமிழ் தன் சொல்வளத்தை இழந்துவருகிறது.
எல்லா திராவிட மொழிகளிலும் பார்க்க வேண்டும்.

தே-/தீ- என்பது தேனின் வேர். இனிமை எனப் பொருள்.
தேங்கனி, தேனிசை, தேம்பா அணி (காப்பியம்),
தீஞ்சுவை, தீந்தமிழ், ...
தேன் = sugar liquid.

இந்தியா வந்தபோது, அலெக்சாண்டரின் சேனாபதி
கரும்பைக் கண்டு வியந்து சொல்லியுள்ளார்:
’தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’

”ஞானக் கரும்பின் தெளிவைப், பாகை,
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப்,
பழச்சுவை ஆயினானனை” - திருவாசகம்
இங்கே மூன்று நிலைகளைச் சொல்கிறார்.
தெளிவான சாறு, இளகலான தேன் பாகு,
வெல்லக் கட்டிக்கு முன்பு உள்ள
highly viscous நிலையில் ‘நந்தாத் தேன்’
என்கிறார். நந்து-நத்து (நத்தை.
நந்திக்கடல் (முள்ளிவாய்க்கால்) )
பின்னர் முப்பழத்தின் சுவை என்கிறார்.
பனைதரும் பனந்தேனிலும் இம் மூநிலைகள்
தெளிவு, பாகு, கெட்டித் தேன் உண்டு.

கரும்புத் தேன் இப்போது நகரங்களில்
தெரியாவிடினும், தமிழ் இலக்கியமும், கிராமங்களும்
காட்டிக் கொண்டுதான் உள.

பறிப்ப வேரொடு முன்றில் வாய்ப் படர் பசும் கொடியைக்
கறிப்ப நாகு இளம் காய் எலாம் கரும்பு தேன் கவிழ - திருவிளையாடற்.

தேவாரம் பாருங்கள்:

கரும்பு தேன்கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார்சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார்அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.

கரும்பின் தேனால் ஆகிய கருப்பங்கட்டி(வெல்லம்)யும், வாழைக் கனிகளும் ....

நா. கணேசன்

On Jun 10, 9:31 am, "Gopalakrishnan (Gopi)" <hig...@gmail.com> wrote:
> கரும்பிலிருந்து வெல்லம் செய்யும் போது கட்டியாகும் பதத்துக்கு முன் வரும்
> பாகை "தேம்பாவு" (தேன் + பாகு) என்று எங்கள் பகுதியில் சொல்வர். சிறு வயதில்
> எங்கள் வீட்டில் இந்த "தேம்பாவில்" வெள்ளைப் பணியாரம் ஊற வைத்து
> சாப்பிட்டிருக்கிறேன்.
>
> எனவே கரும்பு தேன் என்ற சொல் சில தலைமுறைகள் முன் வரை அன்றாட வாழ்விலேயே
> புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பது எனது அறிதல்.
>
> 2012/6/10 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=...


>
> > .
>
> > > ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> > > வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>
> > > ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
> > > பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
> > > காண்க),
> > > கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.
>
> > > நா. கணேசன்
> >http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f
>
> > > (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
> > > சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
> > > பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
> > > பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
> > > ஆகும் என்பதை அறிந்தவர்.)
>

> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to tamil_...@googlegroups.com
> > To unsubscribe from this group,  send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

N. Ganesan

unread,
Jun 10, 2012, 6:33:34 PM6/10/12
to tamil_ulagam, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham
கலம்:கலன், நலம்:நலன், ...
இதுபோல்,

தேம்:தேன் = இனிமை
தேம்/தேன் < தே-/தீ-

தேம்குழல் (தேங்குழல்) - கன்னடத்தில் தேனுகுழல் என்கின்றனர்.

தேம்காய் - தேங்காய் - இனிய காய்.

தேத்தடை = தேம் + அத்து + அடை.

தேனுக்குப் பழந்தமிழில் தேம் என்றும் பெயர்.
தேம்/தேன் < தே- என்ற் காட்டும் proof
தேத்திறால் tē-t-t-iṟāl , n. < தேம்¹ + இறால். Honeycomb; தேனிறால்.
(தொல். எழுத். 344, உரை.)

தேப்பானை - தேன் பெய்த பானை - நன்னூல் உரை (மயிலைநாதர்)
தேப்பெருமாள் - இனிய பெருமாள் (காஞ்சியில்)

தேம்¹ tēm , n. 1. Sweetness, pleasantness; இனிமை. தேங்கொள் சுண்ணம்
(சீவக. 12). 2. Fragrance, odour; வாசனை. (பிங்.) தேங்கமழ் கோதை (பு. வெ.
12, 7). 3. Honey; தேன். தேம் படு நல்வரை நாட (நாலடி, 239). 4. Honey
bee; தேனீ. தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17). 5. Toddy; கள்.
(சூடா.) 6. Must of an elephant; மதம். தேம்படு கவுள . . . யானை
(முல்லைப். 31). 7. Oil; நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்
குஞ்சியின் (குறிஞ்சிப். 111). 8. see தேமம். Loc.

தேமா¹ tē-mā
, n. < தேம் + மா. 1. [M. tēṇ- māvu.] Sweet mango, 1. tr., Mangifera
indica; மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித் தற்றால் (நாலடி,
257). 2. A technical term for the metrical foot of nēr-nēr தேமாங்கனி
tē-māṅ-kaṉi

, n. A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- -
̮̮); நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய் பாடு (காரிகை, உறுப்.
4.)

More later,
N. Ganesan

N. Ganesan

unread,
Jun 10, 2012, 9:23:23 PM6/10/12
to திருவள்ளுவர் சங்கத்தமிழ்

ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
5. தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
10. புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
15. கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
20. நிலவரை யிழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (42)
- puRanAn2URu

அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் -
நெல்லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட
வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்டயாமையும் - உழுவார் படை
வாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; *அறைநர் கரும்பிற் கொண்ட
தேனும்* - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும்;
பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண்
நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென
இவற்றை;

--------------

10. நாடுகாண் காதை

85


கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண்
*கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து*
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவஞ ரெய்திக்
குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்

interesting word, noNDuthal
noNDi/noLLai/noTTu-

could this be for oTTu "curve &stick", OTu "tile"

---------------------

காலெல்லாந் தகட்டுவரால்; கரும்பெல்லாங் கண்பொழிதேன்;
பாலெல்லாங் கதிர்ச்சாலி; பரப்பெல்லாங் குலைக்கமுகு;
சாலெல்லாந் தரளநிரை; தடமெல்லாஞ் செங்கழுநீர்;
மேலெல்லா மகிற்றூபம் விருந்தெல்லாந் திருந்துமனை.

- periyapuranam

N. Ganesan

unread,
Jun 11, 2012, 9:51:17 AM6/11/12
to வல்லமை, tiruva...@googlegroups.com

On Jun 10, 10:13 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Jun 10, 9:31 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> There is no adoration of death sentence in Jaina works <<<
>
>  ...................................... நீள்வெங் கழுவூர்ந்தும்
> குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டும்
> ...................................
>
> கணேசர் சீவக சிந்தாமணியைச் சமண நூல்
> இல்லையென மறுக்கிறார்
>

??

சமணர் இளங்கோ அடிகள் கொலைதண்டனை பிழையாக முடியும்
என்று காட்ட தன் காப்பியம் செய்தார்.
சமணக் காப்பியம் சீவக சிந்தாமணி விருத்தத்தின் ஈற்றடியிலும்
இதே செய்தி உள்ளது. அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம்,
கொலைதண்டனை மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
என்கிறார் சிந்தாமணி தந்த தேவர்.

குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே

திருவள்ளுவ தேவர் கொலை செய்பவர்களைக் கொல்லச்
சொல்லவில்லை.

----------------

தமிழ் சமணம் பற்றி யுனிவெர்ஸிட்டி புஸ்தகங்கள் படிக்க
பரிந்துரை. இல்லாவிட்டால், சர்ச் எவாஞ்சலிஸ்ட் போல்
70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.

தமிழறிஞர்கள் முடிபு குறள், சிலம்பு, சிந்தாமணி பற்றி
எழுதி உள்ளனர். அதைத் தந்துள்ளேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 11, 2012, 10:57:30 PM6/11/12
to வல்லமை, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com

இன்று பார்த்த குறள் விளக்கம். ஈழத் தமிழில்.
உ என்ற சுட்டு (medial deixis) தமிழ்நாட்டில் மறைந்தாலும்
இலங்கையில் இருக்கிறது.

http://www.tamilmurasuaustralia.com/2012/06/36.html

நா. கணேசன்

கொலைதண்டனை தரும் தவற்றை இளங்கோ அடிகளும்
கோவலன் மரணத்தில் காட்டியுள்ளார்.

N. Ganesan

unread,
Jun 12, 2012, 12:34:43 AM6/12/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com

On Jun 11, 9:13 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> மன்னிக்கனும்,
>
> கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப்
> பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட
> எழுத்தில் சொல்லுங்க.
>
> Iyappan Krishnan
>
> http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com
> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **

சரிங்க சார். என் எழுத்தில் நிறைய எழுதியுள்ளேன். இணையத்திலும்,
வலைப்பதிவிலும்.
நீங்கள் பார்க்கலாம்.

நாவலர் புஸ்தகம் படிச்சிருக்கீங்களா? :-)
படித்துப் பாருங்க, என்ன எழுதியுள்ளார்-னு தெரியும்.
BTW, I've read Navalar quite well, and it is recorded
in prestigious University researches.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 14, 2012, 1:28:57 AM6/14/12
to வல்லமை, tiruva...@googlegroups.com
அன்பில் மிகுந்தவர், பண்பில் உயர்ந்தவர், கொடையில் சிறந்தவர், அறத்தில்
பெரியவர்,
தீதில் கொடியவர், மறத்தில் மிகுந்தவர், ... இத் தொடர்கள் தமிழ்
இலக்கணத்துக்கு
ஏற்பானால், தமிழ் தெரிந்த வள்ளுவர் கொலையில் கொடியவர் என்றதன் பொருள்
புரியும்.


> > அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
> > தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
>
> பிரகாஷ்,
>
> மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா?
> எதற்கும் தமிழ் இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.
>
> அன்புடன்
> நா. கணேசன்
>
> > இந்த இலக்கணப்படி வள்ளுவர் எழுதியுள்ளார்.
>
> > கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
> > களைகட் டதனோடு நேர்.
>
> > பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
> > = கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
> > களை பறிப்பதோடு ஒத்தது. (1954-ல் அச்சாகிய
> > உரை).
>
> > வள்ளுவர் முள்மரம் கொல்க என்றவர்.
>
> > கொல்லச் சொல்லியிருந்தால்,
> > இலக்கணம் இடங்கொடுக்கும்:
>
> > கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
> > களைகொல் லலோடு நேர்.
>
> > நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages