இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்!
Very good narration Shylu; I thoroughly enjoyed this article. Congrats! :-)
இராவணன் வதம் செய்யப்பட்டு யுகங்கள் கடந்தபின்னும் அவனைப் பற்றிய (வி)வாதங்களுக்கு ஓய்வில்லை; இராமன் (பெயர்) உள்ளளவும் இராவணனும் நினைவுகூரப்படுவான் இல்லையா? :-)
யுத்தகாண்டத்திலுள்ள சுவையான பாடல்கள் சில...
இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குச் சளைக்காமல் போர் செய்த பெருவீரன் இராவணன். அவன் விட்ட அம்புகளின் குவியல், விண்ணையும் திசைகளையும், கடலையும் காண்போர் கண்களையும் மறைத்தனவாம்; ”அடடா எப்படிப்பட்ட போர் வீரமிது!” என்று ஆனையின் தோலைப்போர்த்த சிவபிரானே இராவணனின் வீரம்கண்டு வியந்துபோனானாம்! :-)
விண்போர்த்தன; திசை போர்த்தன;
| கண்போர்த்தன; கடல் போர்த்தன; |
| எண்போர்த்தன; எரிபோர்த்தன; |
| திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின் |
உரி போர்த்தவன் திகைத்தான்.
அதுபோல் யுத்தத்தில் இராமனின் வீரம் கண்டு சிலிர்த்த இராவணன் ”இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று சிந்திக்கிறான். ”சிவனோ?” என்ற எண்ணியவன் ”இல்லையில்லை” என்று தனக்குள் மறுத்து, ”திருமாலோ?” “இல்லை அவனாகவும் இருக்கமுடியாது!” என்று முடிவுசெய்து, ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு ”ஒருவேளை இவன்தான் அந்த வேதமுதல் காரணனோ?” என்று ஐயுறுகின்றான்.
சிவனோ? அல்லன்; நான்முகன்
காரணன்? ‘என்றான்.
(இவ்வாறு ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!) :-)))//சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய இராமனுக்கு இராவணனை வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன் கூறுகிறான். திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு! இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன? அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே//
அப்பகுதியைச் சுருக்கமாக இங்கே விளக்கியிருக்கிறேன்; நீங்கள் பின்பு விரிவாக எழுதுங்கள் ஷைலு! :-)
இராவண வதத்தின் இறுதிப்பகுதி...
இராமன் இராவணனைக் கொன்றுவிடுகின்றான். பிறகு இராவணனின் உடலைப் பார்க்கிறான்; அவன் முதுகில் வடுக்கள் தெரிகின்றன; ”சே! ஏற்கனவே புறமுதுகிட்டுப் புறப்புண்கள் சுமந்த கோழை ஒருவனையா நான் கொன்றேன்? இஃது எனக்குப் பெருமை தராதே!” என்று வருத்தத்தோடு பேசுவதை அருகில் நின்றுகொண்டிருந்த வீடணன் கேட்கிறான். அவனுக்கு பெருவருத்தம் ஏற்படுகின்றது (என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும் இராவணன் அவனுடைய அருமை அண்ணன் அல்லவா?).
தமையனை இராமன் இகழ்ந்து பேசியது பொறாத வீடணன், ”ஐய! என்ன வார்த்தை சொல்லுகிறீர்? என் தமையனாவது புறப்புண் படுவதாவது? உலகிலுள்ளோர் அனைவரையும் வென்ற அந்த மாவீரன் ”இனி வெல்வதற்கு யாருமில்லையே!” என்று கோப பரவசனாய்த் திசையானைகளோடு (அவற்றின் தந்தங்கள் தன் உடலில் பாய்ந்து முதுகுப்புறம் வெளிவருமாறு) அழுந்தப் பொருததால் ஏற்பட்டவையே இவ்வடுக்கள்! இவை புறப்புண்கள் அல்ல...அண்ணன் பெற்ற புகழின் கண்கள்! என்று உவகைக் கலுழ்ச்சியோடு பேசுகின்றான்.
நாடு உளதனையும் ஓடி
| கொடும்புறத்து அழுந்து புண்ணின் |
படைக்கலம்பட்டு என் செய்யும்?
இச்செய்திகளைக் கேட்ட இராமன் தான் இராவணனை இகழ்ந்ததற்கு வருந்துகின்றான்.
இப்படி இராவணனின் புகழ்கூறும் அருமையான பாடல்கள் பலவற்றை ’இராவண வதத்தில்’ படைத்ததன் வாயிலாய் இராமனுக்கு இணையான வீரன்தான் இராவணன் என நிறுவியுள்ளார் கல்வியில் பெரியவரான கம்பர்!
அன்புடன்,
மேகலா