இராவண வதம்!

110 views
Skip to first unread message

shylaja

unread,
Sep 1, 2015, 9:42:05 AM9/1/15
to mintamil, vallamai

இராவண வதம்!

கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு ,காட்சி அமைப்பு போன்றவற்றில் புதுமை செய்து பாடலானான். ஆழ்வார்களின் அருளிச்செயலில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றதாகவே  தோன்றுகிறது.

கம்பனின்  பிரபலமான  பாடலான ’மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன். கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்.

என்பதின்  தாக்கம்  அவன் ஆழ்ந்து நேசித்த ஆழ்வார்பெருமானின் 

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *

பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*

பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*

இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!

என்கிறபாடலை நினைக்கவைக்கிறது.

 இனி யுத்தகளத்தை  பார்க்கலாம்.

. இராம- இராவண யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. இராவணன்  சரமாரியாக அம்புகளை அண்ணல்மீதுவிடுகிறான். இராமரும் எதிரி தளர்ச்சி அடையும்வரை பாணங்களை செலுத்துகிறார். 

இராவணன்  தலை கடலில்  விழும்போது தேவர்கள் நிலையை கம்பன் இப்படிச்சொல்கிறான்.

குதித்தனர்  பாரிடைக்குன்று கூட்டற

மிதித்தனர் வடகமும் தூசும் வீசினர்

துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர்

மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்..

(வடகம்  என்றால்  மெல்லிய ஆடையாம்! தூசு-=அரையாடை)

ஒருகட்டத்தில்  இராமபாணங்களால் இராவணன் தேரில் மூர்ச்சித்து விழுந்துவிட  இராமனின் தேரோட்டி மாதலி சொல்கிறான்.”உணர்வு தெளிந்துவிட்டால் இவனை ஒன்றும் செய்யமுடியாது இதுதான் சமயம்  இப்போதே இவனை அழித்திடுங்கள் ஐயனே” என்கிறான்.

‘அது நீதியல்ல’என்கிறான் இராமன்.

உணர்வு  மீண்ட இராவணன் மறுபடி இராமரைத்தாக்குகிறான். கடைசியில் இராமன் பிரும்மாஸ்திரத்தை எடுத்து இராவணன் மார்பில் செலுத்தவும் அவன்  நிலைகுலைந்து வீழ்கிறான்.இராவண வதம் இறுதியாக  முடிவடைகிறது.

இராகவன் தன்புனித வாளி உடல்புகுந்துதடவியதால் மனச்சிறையில்  சுரந்த காதற்பித்து நீங்க அவன் முகங்கள் மாசு நீங்கி பொன்போல பொலிந்தன என்பதை கம்பன் இப்படி சொல்கிறார்.. அடங்க அடங்க என்று  வரிக்குவரி சொல்லி நம்மை வியப்பில் வாய் அடங்க(அடைக்க) வைக்கிறார்! 

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க 
மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க 
மயல்அடங்க ஆற்றல் தேயத் 
தம்அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.

வீரமும், சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம் இழந்திருந்தது. இன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

இராவணன் சிரத்தைக்கொய்ததை  திருமங்கை ஆழ்வார் இப்படிச்சொல்லுவார்

 . …… இலங்கைக்கோனை

பானுநேர் சரத்தால்பனங்கனிபோலப்

பருமுடி உதிரவில் வளைத்தோன்..’

பனங்கனிபோல என்னும் உவமை அரக்கனின் பத்துதலைகளையும் கொத்தாகப்பறித்து உதிர்த்த எளிமையைக்காட்டுகிறது. ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே ஏற்றுக்கொண்டு கம்பன் இடத்தைமட்டும் மாறி இருக்கிறான்,கதை மாந்தரிலும் மாற்றம் செய்திருக்கிறான்

சடாயு உயிர்நீத்த படலத்தில்  இப்படி ஒரு பாடலை கம்பன் அளிக்கிறான்.

…தத்து உற்று அயரேல்தால பலத்தினேலும்

 கொத்தப்பன கொண்டிவன் கொண்டன வெற்றி வாசை

 பத்திற்கு மின்றே பலியீவது பார்த்தியென்றான்’

.’’  அழாதே சீதை.பனப்பழங்களின் கொத்துபோல ஒரு நிரையாக அடர்ந்துள்ள இவனது பத்துதலைகளையும் நான் அறுத்து  பத்துதிக்குகளுக்கும் பலிகொடுக்கிறேன் பார் ‘என்று ஜடாயு வை பேசவைத்த சிறப்பு கம்பனுக்கே உரியது.

ராவணவதத்தை ஆழ்வார்பெருமக்கள் ராவண வதத்தை புகழ்ந்து பாடினதுபோல ஆண்டாளும்

மாதலிதேர்முன்பு கோல்கொள்ள

 மாயன் இராவணன்மேல்

 சரமாரி தாய்தலை

அற்றற்று வீழத்தொடுத்த

 தலைவன் வரவெங்கும் காணேன்  

என்பதாக  குயிலைநோக்கி நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்..

இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான்.

திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?

(அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து  பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே!)

அன்புடன்

ஷைலஜா

 வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும் 

வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ் 
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ 
வெற்பெடுத்து மாகாத்த மேகவண்ணன் அல்லையே! 

....திருமழிசை ஆழ்வார் 

ஜீவ்ஸ்

unread,
Sep 1, 2015, 10:03:14 AM9/1/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன்

ஆஹா.. அருமை..

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

நல்ல கட்டுரை.. 
பகிர்ந்தமைக்கு நன்றிக்கா

Dhivakar

unread,
Sep 1, 2015, 1:05:45 PM9/1/15
to vallamai, மின்தமிழ், பண்புடன்
ஷைலஜா.. சூபர்..

ஆனால் இந்த வண்ண வார்த்தை ஜாலம் இருக்கே.. இது எத்தனை பேரை மயக்கியுள்ளதோ.. கண்ணதாசனையும் வாலியையும் கூட அதிகம் மயக்கியது கூட..

பால் வண்ணப் பருவம் கண்டு - பாடல் கேட்டிருப்பீர்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Sep 1, 2015, 8:15:07 PM9/1/15
to mintamil, vallamai, பண்புடன்
மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார்,ஷைலஜா. வாழ்த்துக்கள். தொடர்புகள் அருமை. மாதலி-இராமன் சம்பாஷணை பற்றி மேலும் கூறவில்லையே என்று கலங்கினேன். அங்கல்லவோ சூட்சமம் இருக்கிறது.
அன்புடன், 

Oru Arizonan

unread,
Sep 1, 2015, 8:26:04 PM9/1/15
to mintamil
தங்கள் எழுத்துத் திறமைக்கு என் பாராட்டுகள், பெசிமா.

கம்பனின் காவியத்திற்கு, எத்தனை பெர், எந்தெந்தக் கோணத்திலிருந்து விளக்கம்சொன்னாலும், அது கேட்க நன்றாகவே இருக்கிறது.  அவனது கவிதைத் திறனை இரசிப்பதா, காவியத்திறனைப் போற்றுவதா?  வியப்பதைத் தவிர வேறுவழியில்லை.

ஒரு அரிசோனன்

rajam

unread,
Sep 1, 2015, 8:26:18 PM9/1/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
அருமை! நன்றி, ஷைலஜா.

ஒவ்வொரு வாரமும் காத்திருந்து பார்க்கிறேன் காணொலிகளை.

அச்சோ பாவம் பாவம் இராவண-இராம நிலைகள். கவிஞர்களால் சொல்லாட முடிகிறது,

Megala Ramamourty

unread,
Sep 1, 2015, 10:24:05 PM9/1/15
to vallamai, மின்தமிழ்
இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்!

Very good narration Shylu; I thoroughly enjoyed this article. Congrats!   :-)

இராவணன் வதம் செய்யப்பட்டு யுகங்கள் கடந்தபின்னும் அவனைப் பற்றிய (வி)வாதங்களுக்கு ஓய்வில்லை; இராமன் (பெயர்) உள்ளளவும் இராவணனும் நினைவுகூரப்படுவான் இல்லையா?   :-)

யுத்தகாண்டத்திலுள்ள சுவையான பாடல்கள் சில...

இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குச் சளைக்காமல் போர் செய்த பெருவீரன் இராவணன். அவன் விட்ட அம்புகளின் குவியல், விண்ணையும் திசைகளையும், கடலையும் காண்போர் கண்களையும் மறைத்தனவாம்; ”அடடா எப்படிப்பட்ட போர் வீரமிது!” என்று ஆனையின் தோலைப்போர்த்த சிவபிரானே இராவணனின் வீரம்கண்டு வியந்துபோனானாம்!  :-)

விண்போர்த்தன; திசை போர்த்தன;
    மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன;
    படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன;
    இருள்போர்த்தன; ‘என்னே
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின்
    உரி போர்த்தவன் திகைத்தான்.

அதுபோல் யுத்தத்தில் இராமனின் வீரம் கண்டு சிலிர்த்த இராவணன் ”இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று சிந்திக்கிறான். ”சிவனோ?” என்ற எண்ணியவன் ”இல்லையில்லை” என்று தனக்குள் மறுத்து, ”திருமாலோ?”  “இல்லை அவனாகவும் இருக்கமுடியாது!” என்று முடிவுசெய்து, ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு ”ஒருவேளை இவன்தான்  அந்த வேதமுதல் காரணனோ?” என்று ஐயுறுகின்றான்.

சிவனோ? அல்லன்; நான்முகன்
    அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
    எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து
    முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
    காரணன்? ‘என்றான்.

(இவ்வாறு ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு  ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு  (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!)    :-)))

//சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான். திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன? அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து  பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே//

அப்பகுதியைச் சுருக்கமாக இங்கே விளக்கியிருக்கிறேன்; நீங்கள் பின்பு விரிவாக எழுதுங்கள் ஷைலு!  :-)

இராவண வதத்தின் இறுதிப்பகுதி...

இராமன் இராவணனைக் கொன்றுவிடுகின்றான். பிறகு இராவணனின் உடலைப் பார்க்கிறான்; அவன் முதுகில் வடுக்கள் தெரிகின்றன; ”சே! ஏற்கனவே புறமுதுகிட்டுப் புறப்புண்கள் சுமந்த கோழை ஒருவனையா நான் கொன்றேன்? இஃது எனக்குப் பெருமை தராதே!” என்று வருத்தத்தோடு பேசுவதை அருகில் நின்றுகொண்டிருந்த வீடணன் கேட்கிறான். அவனுக்கு பெருவருத்தம் ஏற்படுகின்றது (என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும் இராவணன் அவனுடைய அருமை அண்ணன் அல்லவா?).

தமையனை இராமன் இகழ்ந்து பேசியது பொறாத  வீடணன், ”ஐய! என்ன வார்த்தை சொல்லுகிறீர்? என் தமையனாவது புறப்புண் படுவதாவது? உலகிலுள்ளோர் அனைவரையும் வென்ற அந்த மாவீரன்  ”இனி வெல்வதற்கு யாருமில்லையே!” என்று கோப பரவசனாய்த் திசையானைகளோடு (அவற்றின் தந்தங்கள் தன் உடலில் பாய்ந்து முதுகுப்புறம் வெளிவருமாறு) அழுந்தப் பொருததால் ஏற்பட்டவையே இவ்வடுக்கள்! இவை புறப்புண்கள் அல்ல...அண்ணன் பெற்ற புகழின் கண்கள்! என்று உவகைக் கலுழ்ச்சியோடு பேசுகின்றான்.

நாடு உளதனையும் ஓடி
    நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும்
    பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக்
    கொடும்புறத்து அழுந்து புண்ணின்
பாடு உளது அன்றி, தெவ்வர்
    படைக்கலம்பட்டு என் செய்யும்?

இச்செய்திகளைக் கேட்ட இராமன் தான் இராவணனை இகழ்ந்ததற்கு வருந்துகின்றான்.

இப்படி இராவணனின் புகழ்கூறும் அருமையான பாடல்கள் பலவற்றை ’இராவண வதத்தில்’ படைத்ததன் வாயிலாய் இராமனுக்கு இணையான வீரன்தான் இராவணன் என நிறுவியுள்ளார் கல்வியில் பெரியவரான கம்பர்!

அன்புடன்,
மேகலா

shylaja

unread,
Sep 2, 2015, 12:08:55 AM9/2/15
to mintamil
நன்றி ஜீவ்ஸ்.. கம்பன்காவியம் நமக்குக்கிடைத்த  பொக்கிஷம்.கம்பனின் இராமாயணக்காவியத்தை படித்து அனுபவிப்பது  என்பது  ஒரு பேறாக இருக்கிறது, ஏனென்றால் ஆத்மானுபவத்துக்கு அடுத்த படியில் கவிதானுபவம்தான் மனிதனுக்கு உன்னதமான ஆனந்தத்தைதருகிறது. கவிதையில் தமிழ்மொழியில் மாத்திரமில்லை மற்றெந்தமொழியிலும் கூட  கம்பராமாயணத்துக்கு மேலான கவிதை எங்கும் காணலாகும்’ என்பது கம்பனின் பெருமையை ஆங்கிலத்திலும் பறைசாற்றிய வ வேசு ஐயரின் வாக்குமூலம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

கம்பன்

Sep 2, 2015, 12:09:43 AM9/2/15
to vallamai, மின்தமிழ், பண்புடன்
ஆமாம் திவாகர்! கண்ணதாசன் கம்பனை  ரசித்து  எழுதிய பாடல்கள்  பல!! 
--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 12:11:44 AM9/2/15
to vallamai, mintamil, பண்புடன்
நன்றி இசார்..வகுப்பில்  திருஹரிகிஜீ ஜடாயு சொக்கன் போன்றவர்களின்  வழிநடத்தலால்  எழுத இயல்கிறது. கற்றலின் கேட்டல் நன்று அல்லவா! மாதலி இராமன் சம்பாஷணை  விரிவாக எழுத ஆவல்தான். ஆயினும் எதைச்சொல்ல எதைவிட என்னும் நிலைமைதான் கம்பனில்  எப்போதும்!!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 12:12:56 AM9/2/15
to mintamil
கம்பனை யார் எழுதினாலும்  நன்றாகத்தான் இருக்கும்  அரிசோனரே! வால்மீகி படித்த உங்களுக்கு இராமாயணம் பற்றிய  திறனாய்வு அதிகம் இருக்கும், பகிர்ந்துகொள்ளுங்களேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 12:14:02 AM9/2/15
to vallamai, மின்தமிழ்
நன்றி ராஜம் அம்மா. தவறாமல் தாங்கள் காணொளி(லி) பார்த்து விமர்சனம் செய்வதில் வகுப்பினர் அனைவரும் மகிழ்கிறோம் நன்றி மிக.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 12:19:25 AM9/2/15
to vallamai, மின்தமிழ்
2015-09-01 19:24 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்!

Very good narration Shylu; I thoroughly enjoyed this article. Congrats!   :-)>>ரொம்பபுகழ்ந்தால் நிஜமா  'shy'லஜா ஆகிறேன் அவ்வளவுக்கு  தகுதி இல்லை மேகலா  .. எல்லாப்புகழும் எங்கள்  குருநாதர் ஹரிகிஜீக்கே!!!

இராவணன் வதம் செய்யப்பட்டு யுகங்கள் கடந்தபின்னும் அவனைப் பற்றிய (வி)வாதங்களுக்கு ஓய்வில்லை; இராமன் (பெயர்) உள்ளளவும் இராவணனும் நினைவுகூரப்படுவான் இல்லையா?   :-)

யுத்தகாண்டத்திலுள்ள சுவையான பாடல்கள் சில...

இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குச் சளைக்காமல் போர் செய்த பெருவீரன் இராவணன். அவன் விட்ட அம்புகளின் குவியல், விண்ணையும் திசைகளையும், கடலையும் காண்போர் கண்களையும் மறைத்தனவாம்; ”அடடா எப்படிப்பட்ட போர் வீரமிது!” என்று ஆனையின் தோலைப்போர்த்த சிவபிரானே இராவணனின் வீரம்கண்டு வியந்துபோனானாம்!  :-)

விண்போர்த்தன; திசை போர்த்தன;
    மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன;
    படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன;
    இருள்போர்த்தன; ‘என்னே
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின்
    உரி போர்த்தவன் திகைத்தான்.

அருமை மேகலா!! 

அதுபோல் யுத்தத்தில் இராமனின் வீரம் கண்டு சிலிர்த்த இராவணன் ”இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று சிந்திக்கிறான். ”சிவனோ?” என்ற எண்ணியவன் ”இல்லையில்லை” என்று தனக்குள் மறுத்து, ”திருமாலோ?”  “இல்லை அவனாகவும் இருக்கமுடியாது!” என்று முடிவுசெய்து, ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு ”ஒருவேளை இவன்தான்  அந்த வேதமுதல் காரணனோ?” என்று ஐயுறுகின்றான்.

சிவனோ? அல்லன்; நான்முகன்
    அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
    எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து
    முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
    காரணன்? ‘என்றான்.>>>எளிமையும் அழகுமாய் வார்த்தைகள் எப்படி விழுகின்றன பாருங்கள்!

(இவ்வாறு ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு  ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு  (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!)    :-)))<<பழக்கூடையை  பெறப்போகிறவருக்கு வாழ்த்து இப்போதே! சிலப்பதிகாரம்  மிகச்சிறிய அளவில்  தெரிந்திருப்பதால்  பரிசு எனக்கில்லை:) சிலம்பின் செல்வி மேகலா வாழ்க!

//சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான். திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன? அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து  பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே//

அப்பகுதியைச் சுருக்கமாக இங்கே விளக்கியிருக்கிறேன்; நீங்கள் பின்பு விரிவாக எழுதுங்கள் ஷைலு!  :-)

இராவண வதத்தின் இறுதிப்பகுதி...

இராமன் இராவணனைக் கொன்றுவிடுகின்றான். பிறகு இராவணனின் உடலைப் பார்க்கிறான்; அவன் முதுகில் வடுக்கள் தெரிகின்றன; ”சே! ஏற்கனவே புறமுதுகிட்டுப் புறப்புண்கள் சுமந்த கோழை ஒருவனையா நான் கொன்றேன்? இஃது எனக்குப் பெருமை தராதே!” என்று வருத்தத்தோடு பேசுவதை அருகில் நின்றுகொண்டிருந்த வீடணன் கேட்கிறான். அவனுக்கு பெருவருத்தம் ஏற்படுகின்றது (என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும் இராவணன் அவனுடைய அருமை அண்ணன் அல்லவா?).

தமையனை இராமன் இகழ்ந்து பேசியது பொறாத  வீடணன், ”ஐய! என்ன வார்த்தை சொல்லுகிறீர்? என் தமையனாவது புறப்புண் படுவதாவது? உலகிலுள்ளோர் அனைவரையும் வென்ற அந்த மாவீரன்  ”இனி வெல்வதற்கு யாருமில்லையே!” என்று கோப பரவசனாய்த் திசையானைகளோடு (அவற்றின் தந்தங்கள் தன் உடலில் பாய்ந்து முதுகுப்புறம் வெளிவருமாறு) அழுந்தப் பொருததால் ஏற்பட்டவையே இவ்வடுக்கள்! இவை புறப்புண்கள் அல்ல...அண்ணன் பெற்ற புகழின் கண்கள்! என்று உவகைக் கலுழ்ச்சியோடு பேசுகின்றான்.

நாடு உளதனையும் ஓடி
    நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும்
    பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக்
    கொடும்புறத்து அழுந்து புண்ணின்
பாடு உளது அன்றி, தெவ்வர்
    படைக்கலம்பட்டு என் செய்யும்?

இச்செய்திகளைக் கேட்ட இராமன் தான் இராவணனை இகழ்ந்ததற்கு வருந்துகின்றான்.

இப்படி இராவணனின் புகழ்கூறும் அருமையான பாடல்கள் பலவற்றை ’இராவண வதத்தில்’ படைத்ததன் வாயிலாய் இராமனுக்கு இணையான வீரன்தான் இராவணன் என நிறுவியுள்ளார் கல்வியில் பெரியவரான கம்பர்!
>>>அழகாக  விரிவாக  கம்பனை ஆழ்ந்து ரசித்து எழுதிய மேகலாவுக்குப்பாராட்டும் நன்றியும்!!
அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 2, 2015, 12:43:04 AM9/2/15
to vallamai, மின்தமிழ்
திருமிகு ஷைலஜா அருமை. 
திருமிகு மேகலா அவர்களின் பின்னூட்டமும் சிறப்பு. திரு ஜீவ்ஸ் பாசுரம் சுட்டலும் பொருத்தமானது. கம்பன் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் இந்த மாதக்கூட்டத்தில் 5.9.2015 அன்று “கம்பனில் மக்கள் தொடர்புக்கலை” என்ற பொருளில் உரை நிகழ்த்துகிறேன் என்பதனை நண்பர்களுக்குத்தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Oru Arizonan

unread,
Sep 2, 2015, 12:46:20 AM9/2/15
to mintamil
2015-09-01 21:43 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
//காரைக்குடி கம்பன் கழகத்தின் இந்த மாதக்கூட்டத்தில் 5.9.2015 அன்று “கம்பனில் மக்கள் தொடர்புக்கலை” என்ற பொருளில் உரை நிகழ்த்துகிறேன் என்பதனை நண்பர்களுக்குத்தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.//

உங்கள் உரையைப் பதிவு செய்து வெளியிடுங்கள்.  கேட்டு மகிழ்கிறோம்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Iyappan Krishnan

unread,
Sep 2, 2015, 2:32:29 AM9/2/15
to mintamil, vall...@googlegroups.com, பண்புடன்
​இதுக்கு யாரும் பதில் சொல்லிட்டாங்களா ? இழை முழுசா படிக்கல.  

வாரணம் பொருத மார்பும்,
    வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
    நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
    சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
    வெறும் கையோடு இலங்கை புக்கான்

இப்படியாகச் சென்றவன் தானே இராவணன்...  ஆனால் பின்பு தேவர்களே அச்சமுறுவகையில் அவன் போர் புரிகிறான்..

‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்
ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே.

இராவணனின் வலிமை  இராமனையும்  வருத்தியது என்பதையும் நாம்காண்கிறோம். 

நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும்.

அத்தோடா ? இராமன் இராவணனின் தலையை அறுத்தப் பின்னும் அவை மீண்டும் முளைத்து எழுந்து, இராவணன் இன்னும் வலியுடன் போர் புரிகிறானே ? இராவணனை கடைசியில் பிரம்மாத்திரம் கொண்டல்லவா இராமனால் வீழ்த்த முடிந்தது. அப்படியானால் இராமன், இராவணனைக் குறித்து  இப்படி ஏன் நினைக்க வேண்டும் ?

இராவணன்  குப்புற வீழ்ந்து கிடக்க, அவன் முதுகில், காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவனுக்கு இராவணனின் மீது, அவன் வீரம் மீது இகழ்ச்சித் தோன்றுகிறது. 

இராவணனை  இதற்கு முன் தோற்கடித்தவன் கார்த்தவீரியார்ச்சுனன். அதை கேள்வியுற்ற போதே இராமனுக்கு  அவமானமாக இருந்ததாம், இவனைப் போய் எதிர்க்கிறோமே என்று.  ஒரு வேளை அவனிடம் தோற்று ஓடிய போது ஏற்பட்ட புறமுதுகுப் புண்களோ என்று இராமனுக்கு ஐயம் தோன்றுகிறது.  இப்போது இப்படி புறமுதுகிட்டு ஓடிய ஒருவனிடமா நான் சண்டையிட்டேன் என்று இராமன் நாணுகிறானாம்.  

இதை விபீடணனிடம் கூற, அதற்கு விபீடனன் தன் அண்ணனி வீரத்தை, அவன் வாரணம் பொருத மார்பன் என எல்லாம் கூற, அவனிடம் இராமன் மன்னிப்பு கேட்க... 

இராமன்.. ஒரு சிறந்த அரசன், சிறந்த வீரன். 

ஒளிகளில் நான் ஞாயிறு,
புலன்களில் மனம், 
தளபதிகளில் நான் முருகன்,
அசுரர்களில் நான் பிரகலாதன்
ஆயுதம் ஏந்திய  வீரர்களுள் இராமன் 

என்று கண்ணபிரான் கூறியது இதனால் அல்லவா ?

அன்புடன்
ஐயப்பன்

2015-09-01 19:33 GMT+05:30 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:

இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான்.

திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?

Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

shylaja

unread,
Sep 2, 2015, 2:50:00 AM9/2/15
to vallamai, மின்தமிழ்
நன்றி திருவினைதீர்த்தான் அவர்களுக்கு..  கம்பன் கழகத்தில்  தாங்கள் ஆற்றும் உரை கேட்க  வரவேண்டுமென்றுதான் ஆவல்..  அதுவும் காரைக்குடி கம்பன் கழக சொற்பொழிவைப்பற்றி என் தந்தை மிகவும் பெருமையாக  சொல்வார் ..என்றைக்கு இதையெல்லாம் கேட்க கொடுத்துவைத்திருக்கிறதோ எனக்கு!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 2:52:48 AM9/2/15
to வல்லமை, mintamil

2015-09-01 19:11 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

இராவண வதம்!

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 2:55:59 AM9/2/15
to வல்லமை, mintamil
2015-09-01 19:11 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

இராவண வதம்!

கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

Pasupathi Selvam

unread,
Sep 2, 2015, 3:21:25 AM9/2/15
to மின்தமிழ்
ஆஹா அருமை! இப்படியும் எழுத திறமையும் நுண்ணறிவும் வேண்டும் என்றால் அது மிகையாகாது. இன்னும் வரும் என நம்புகிறேன்!

shylaja

unread,
Sep 2, 2015, 3:44:57 AM9/2/15
to பண்புடன், mintamil, vallamai
மேகலா ஓரளவு சொல்லிவிட்டாலும் ஜீவ்சின் மடல்  மேலும் சில  விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது. இராவணனின் மரணத்தில் இராமனுக்குப்பெருமை இல்லை என்பதுபோன்ற அவனது  நினைப்பை  விபீஷணன்  போக்கும் இடங்களை இன்னும் பார்க்கவில்லை. பாடலுடன் அருமையாக சொல்லிய ஜீவ்சுக்கு நன்றி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 3:47:38 AM9/2/15
to mintamil
நன்றி திருபசுபதி செல்வம்.. .

On 1 September 2015 at 22:00, Pasupathi Selvam <gopalan...@gmail.com> wrote:
ஆஹா அருமை! இப்படியும் எழுத திறமையும் நுண்ணறிவும் வேண்டும் என்றால் அது மிகையாகாது. இன்னும் வரும் என நம்புகிறேன்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 2, 2015, 3:49:46 AM9/2/15
to vallamai, mintamil
அட்டகாசப்படங்களுக்கு நன்றி துரை!  போர்க்களப்படம் என்பதால் அமர்க்களம் என்றும் பாராட்டுகிறேன்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

ஜீவ்ஸ்

unread,
Sep 2, 2015, 8:48:11 AM9/2/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
உங்களுடைய எழுத்தும் மிளிர்ந்து காண்கின்றன மேகலா டீச்சர்..

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 8:55:40 AM9/2/15
to Groups, வல்லமை
2015-09-02 18:18 GMT+05:30 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
உங்களுடைய எழுத்தும் மிளிர்ந்து காண்கின்றன மேகலா டீச்சர்..

​ஆம்​
 
Inline image 1 

On Wednesday, September 2, 2015 at 7:54:05 AM UTC+5:30, megala.ramamourty wrote:
இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 8:59:38 AM9/2/15
to மின்தமிழ்
2015-09-02 18:18 GMT+05:30 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
மேகலா டீச்சர்..

​டீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரா
நல்லவேளை சொன்னீங்க
பிரம்படியும்  பெஞ்ச்மேல் ஏறிநிற்கவும் மதுரைக்கு வந்த சோதனையைத் தடுத்துக் காப்பாத்தீட்டீங்களே ஜீவ்ஸ் ஐயா நீர் வாழ்க​
​அ.த​

Oru Arizonan

unread,
Sep 2, 2015, 5:55:14 PM9/2/15
to mintamil
தாங்கள் தந்த படங்கள் அருமையாக இருக்கின்றன, துரை அவர்களே!
ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,

Satish Kumar Dogra

unread,
Sep 3, 2015, 1:20:08 AM9/3/15
to mint...@googlegroups.com
மேகலா ஜீ,
                       கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களை வழங்கும்போது காண்டம் மற்றும் பாடல் எண் குறிப்பிட்டால் அந்த பாடலை நூலில் கணடுபிடிப்பது வசதிப்படும்.

இன்னும் இதே போன்ற கட்டுரைளை ஆவலுடன் காத்திருப்பேன். கம்பராமாயணத்துக்கு நிகரில்லை.

டோக்ரா.
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

துரை.ந.உ

unread,
Sep 3, 2015, 2:00:45 AM9/3/15
to Groups
2015-09-03 3:25 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தாங்கள் தந்த படங்கள் அருமையாக இருக்கின்றன, துரை அவர்களே!
ஒரு அரிசோனன்

​ நன்றி ஐயா ... போர்க்களத்தின் தீவிரத்தை உணர்த்தவே இந்த மாற்றுப்பார்வை ​
 
​ 

--

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 4:25:35 AM9/3/15
to vallamai, mintamil, பண்புடன்

2015-09-02 12:02 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
இராவணன்  குப்புற வீழ்ந்து கிடக்க, அவன் முதுகில், காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவனுக்கு இராவணனின் மீது, அவன் வீரம் மீது இகழ்ச்சித் தோன்றுகிறது. 

ஏற்கெனவே பிறரால் தோற்கடிக்கப்பட்டவனை வெல்வதில் என்ன பெருமையிருக்கிறது என்று, அதைத் தன் வீரத்துக்குக் குறைவாக எண்ணுகிறானே ஒழிய இராவணனுடைய வீரத்தைக் குறைத்து மதிப்பிட்டான் என்று பொருளன்று.  பல பட்டிமன்றங்களில் இந்த இடத்தில் வரும் பாடல்களைத் திரித்துப் பொருள் சொல்கிறார்கள்.

சரியாச் சொன்ன ஐயப்பா. சபாஷ்.  பெருமைப்படுகிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 10:13:28 AM9/3/15
to மின்தமிழ்
டோக்ரா ஐயா,

பாடல் எண்களைக் குறிப்பிட மறந்தது என் தவறுதான். இனி மறவாமல் பாடல்களை எண்களோடும், அவற்றிற்குரிய காண்டங்களோடும் தந்துவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.  :-)

அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 10:56:56 AM9/3/15
to vallamai, மின்தமிழ்
இராமன் இராவணனின் முதுகில் உள்ள வடுக்கள் குறித்து இகழ்ச்சியோடு பேசுகிறான் வீடணனிடம். ”கார்த்தவீர்யார்ச்சுனனிடம் இராவணன் தோற்றவன் என்ற வார்த்தையை முன்னமே கேட்டிருக்கிறேன். அவ்வாறு ஏற்கனவே ஒருவனால் தோற்கடிக்கப்பட்டு முதுகில் புறப்புண் வடுக்கள் கொண்டவனை நான் வென்றது வென்றியாகாது!” என்று தன் வெற்றி குறித்து வருந்துகின்றான். அவ்வார்த்தைகள் ’சுரீர்’ என்று வீடணனைச் சுடுகின்றன.

”ஐய! ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீரியனும் வாலியும் என் அண்ணனை வென்று பெற்ற வெற்றிகள் மிகவும் அரிதின் முயன்று பெற்றவையே; அவையும் தேவர்கள் என் அண்ணனுக்கு இட்ட சாபத்தின் விளைவே. தாயினும் தொழத்தக்காளான சீதையின் மீது கொண்ட ஆசையும், உன்னுடைய சீற்றமுமே அவனை வீழ்த்தின; இல்லையேல் அவனை வெல்ல வல்லார் யாருளர் இங்கே?” என்று இராமனுக்குச் சுடச்சுட பதிலளிக்கிறான் வீடணன்.

ஆயிரம் தோளினானும்,
    வாலியும் அரிதின் ஐய!
மேயின வென்றி விண்ணோர்
    சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள் மேல்
    தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால்
    வெல்வரோ நுவலற்பாலார்? (யுத்த காண்டம்: இராவண வதைப் படலம் - 10054)

ஹரிகி ஐயா, இராவணனுக்குத் தேவர்கள் இட்ட சாபமாக வீடணன் இங்கே குறிப்பிடுவதன் விளக்கத்தைத் தர இயலுமா? கம்பர் தன் காப்பியத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என அறிய ஆவல்.  :-)

அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 11:36:13 AM9/3/15
to vallamai, மின்தமிழ்
2015-09-03 20:14 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஐய! ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீரியனும் வாலியும் என் அண்ணனை வென்று பெற்ற வெற்றிகள் மிகவும் அரிதின் முயன்று பெற்றவையே; அவையும் தேவர்கள் என் அண்ணனுக்கு இட்ட சாபத்தின் விளைவே. தாயினும் தொழத்தக்காளான சீதையின் மீது கொண்ட ஆசையும், உன்னுடைய சீற்றமுமே அவனை வீழ்த்தின; இல்லையேல் அவனை வெல்ல வல்லார் யாருளர் இங்கே?” என்று இராமனுக்குச் சுடச்சுட பதிலளிக்கிறான் வீடணன்.

வீடணனுக்கு சுரீர் என்று சுட்டதையும் இராமனுக்கு சுடச்சுட பதிலளித்ததையும் பற்றி கம்பன் ஏதாவது குறிப்பு தருகிறானா?

சுரீர், சுடச்சுட இரண்டும் யாருடைய ஜட்ஜ்மென்ட்?

ஆயிரம் தோளினானும்,
    வாலியும் அரிதின் ஐய!
மேயின வென்றி விண்ணோர்
    சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள் மேல்
    தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால்
    வெல்வரோ நுவலற்பாலார்? (யுத்த காண்டம்: இராவண வதைப் படலம் - 10054)

ஹரிகி ஐயா, இராவணனுக்குத் தேவர்கள் இட்ட சாபமாக வீடணன் இங்கே குறிப்பிடுவதன் விளக்கத்தைத் தர இயலுமா? கம்பர் தன் காப்பியத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என அறிய ஆவல்.  :-)

நீள நெடுக எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.  அடுத்த அமர்வில் விளக்கும் போது கேட்கவும்.

சிரிப்பில் ஏளனக் குறிப்பு தெரிகிறது.  நன்றி.

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 11:52:51 AM9/3/15
to vallamai, மின்தமிழ்
2015-09-03 20:14 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஆயிரம் தோளினானும்,
    வாலியும் அரிதின் ஐய!
மேயின வென்றி விண்ணோர்
    சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள் மேல்
    தங்கிய காதல் தன்மை
நோயும் நின்முனிவும் அல்லால்
    வெல்வரோ நுவலற்பாலார்? (யுத்த காண்டம்: இராவண வதைப் படலம் - 10054)

ஹரிகி ஐயா, இராவணனுக்குத் தேவர்கள் இட்ட சாபமாக வீடணன் இங்கே குறிப்பிடுவதன் விளக்கத்தைத் தர இயலுமா? கம்பர் தன் காப்பியத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என அறிய ஆவல்.  :-)

இராமனுக்கு வீடணன் சொன்ன விடை சுடச்சுட என்றால், அதற்கு அடுத்த பாட்டிலேயே இராமன்

அன்னதோ?' என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,

தன்ன தோள் இணையை நோக்கி, 'வீடணா! தக்கது அன்றால்;

என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்

சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி' என்றான்.

என்று சொல்வதன் பொருள் என்ன?  இறந்துளான் மேல் வயிர்த்தல் என்றால் என்ன?  தக்கது அன்றால் என்று இராமன் சொல்வது எதனை?  செய்யத் தகாத எதை வீடணன் செய்தான் அல்லது சொன்னான்?   இராமன் பேச்சில் ஏன் இந்தக் குறிப்பு தென்படுகிறது?

இதற்கு உரிய விடை தேட வேண்டுமானால் வான்மீகத்தில் இணை இடத்தைப் பார்த்தால்தான் புரியும். 

அடுத்த அமர்வின் பதிவில் பார்க்கவும்.

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 11:53:22 AM9/3/15
to vallamai, மின்தமிழ்
அன்பின் ஹரிகி ஐயா,

சுடச்சுட, சுரீர் இரண்டும் என்னுடைய ஜட்ஜ்மெண்ட்தான். இராமனுக்கும் வீடணனுக்குமான அந்த உரையாடலை என் மனக்கண்ணில் கண்டேன். அச்சூழ்நிலைக்கு  இவ்வார்த்தைகள் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் சேர்த்தேன். தவறாயின் மன்னிக்க!

// சிரிப்பில் ஏளனக் குறிப்பு தெரிகிறது.  //

இல்லவேயில்லை ஐயா. உங்கள் விடையை எதிர்பார்க்கும் ஆவலில் நானிட்ட சிரிப்புக்குறி அது! தங்களை நான் ஏன் ஐயா ஏளனம் செய்யவேண்டும்? தங்களின் வார்த்தைகள் என்னை மிகவும் வருத்துகின்றன. 

கம்பராமாயணக் கடலான நீங்கள் எங்கே... நானெங்கே? (தங்களுடைய அமர்வின் காணொலிகள் இப்போதெல்லாம் குழுமத்தில் காணக்கிடைப்பதில்லையே...)

ஐயா, உண்மையில் கம்பராமாயணம் எனக்குப் பரிச்சயம் இல்லாத காப்பியம்; அதில் நான் சிறிதளவேனும் அறிந்துகொண்டிருக்கிறேன் என்றால் அந்தப் பெருமைக்கு உரியவர் நீரே! உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!

--

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 11:59:26 AM9/3/15
to vallamai, மின்தமிழ்

2015-09-03 21:23 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

// சிரிப்பில் ஏளனக் குறிப்பு தெரிகிறது.  //

இல்லவேயில்லை ஐயா. உங்கள் விடையை எதிர்பார்க்கும் ஆவலில் நானிட்ட சிரிப்புக்குறி அது! தங்களை நான் ஏன் ஐயா ஏளனம் செய்யவேண்டும்? தங்களின் வார்த்தைகள் என்னை மிகவும் வருத்துகின்றன. 

வருந்தச் செய்தமைக்கு வருந்துகிறேன்.  மன்னிக்கவும்.  தரையில் அமர்ந்த வண்ணம் மடிக் கணினியில் தட்டுகிறேன்.  முதுகை அளவுக்கு மீறி வருத்துகிறது.  இந்தத் துன்பம் என் வார்த்தையில் வேறு வடிவில் வெளிப்பட்டுவிட்டது போலும்.  மன்னிக்க.

நீங்கள் சொன்ன பாடலை அதற்கு அடுத்த பாடலுடன் இணைத்துப் படிக்க வேண்டும்.  வான்மீகத்தில் இணையான இடத்தில் வீடணன் என்ன சொல்கிறான் என்பதையும் எடுத்துக் கொண்டு ஃபில் இன் த ப்ளாங்க் செய்தால்தான் வீடணன் சொல்லத் தகாத எதைச் சொன்னான், விடுபட்ட லிங்க் என்ன என்பது புரியும்.

இப்போதே எழுத ஆசைதான்.  முடியாமைக்கு வருந்துகிறேன்.

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 12:06:57 PM9/3/15
to vallamai, மின்தமிழ்
உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா. பிறகு எழுதலாம்.
விரைவில் தங்கள் உடல்நிலை பூரண குணமடைய என் பிரார்த்தனைகள்.

(ஐயா, தங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய...நிறைய இருக்கின்றது. தாங்கள் நடத்துகின்ற வகுப்புகளில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு.)

அன்புடன்,
மேகலா

--

Megala Ramamourty

unread,
Sep 3, 2015, 11:57:07 PM9/3/15
to vallamai, மின்தமிழ்
ஹரிகி ஐயா,

ஆயிரம் தோளினானும்,
    வாலியும் அரிதின் ஐய....

என்று தொடங்கும் பாடலையே டோக்ரா ஐயா குறிப்பிடுகின்றார். அப்பாடல் எண்ணாக நான் 10054ஐ என் முந்தைய மடலில் குறிப்பிட்டிருந்தேன். தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஓரிடத்தில் இந்தப் பாடலின் எண் 10054 என்றும், மற்றோரிடத்தில் இதே பாடல் (உரையோடு இடம் பெற்றிருக்கும்போது)  9912 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயலுமானால் எது சரியான எண் என்று தெளிவுபடுத்துங்கள்.

(உரை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
 
அன்புடன்,
மேகலா

2015-09-03 23:35 GMT-04:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-09-04 8:24 GMT+05:30 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:
பாடல் எண் 10054 ல் எவ்வளவு தான் ஒருவனுக்கு ஞானமும், வீரமும், திறமைகளும் இருந்தாலும் தவறான நடத்தையினால் அவன் பலவீனம் அடைகிறான் என்கிறார் கம்பர். யாராலும் வென்றிட முடியாத ராவணன் தன் தவறுகளால் தேவர்களின் சாபத்திற்கு ஆளாகிறான். பலவீனம் அடைகிறான். பிறகு, உலகமே தாயாக போற்றும் சீதையை தவறராக நோக்குகிறான். அதன் விளைவாக ராமரின் கோபத்தை தூண்டுகிறான்.

ஐயா,

தாங்கள் பயன்படுத்தும் பதிப்பு எது?  எந்தப் பதிப்பாக இருந்தாலும் பாடல் 10054 இந்தப் பொருளில் வரமுடியாது.  ஏனெனில் இந்த எண்ணுடைய பாடல் மீட்சிப் படலத்தில் அக்னி பிரவேசத்துக்கெல்லாம் பிறகு வருகிறது.  அந்த இடத்தில் அக்கினிப் பிரவேசம், இன்னபிற செய்திகளைத்தான் பேசமுடியுமே தவிர, இராவணனுடைய வீழ்ச்சி பற்றி பேச இயலாது.  அப்படி ஏதும் இருந்தால் அந்தப் பாடலை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அசஞா அவர்களுடைய பதிப்பில் இந்த 10054ம் பாடல் இது:

'என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 10054.

பாடல் எண்ணில் ஏதோ தவறு இருக்கிறது.  பாடலின் முதல் சீரையோ சொல்லையோ தந்துதவ முடியுமா?  எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைச் சரிபார்த்துக் கொள்ள உதவும்.

நன்றி.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 4, 2015, 3:09:30 AM9/4/15
to vallamai, மின்தமிழ்

2015-09-04 9:27 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இயலுமானால் எது சரியான எண் என்று தெளிவுபடுத்துங்கள்.

(உரை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)

அப்படியா விஷயம்.  புரிந்தது.  அசஞா பதிப்பு எனப்படுவதும் இதுவே.  உரையில்லாமல் உள்ள பாடலில் எண்ணைத் தவறாக இட்டிருக்கிறார்கள்.  யுத்தகாண்டம் நெடுகிலும் இந்த மாறுபாடு இருக்கிறது.  ஏதோ ஓரிடத்தில் தொடங்கிய தவற்றின் தொடர்ச்சி போலும்.  இந்தப் பாடலின் எண் 9912தான் (அதாவது இந்தப் பதிப்பில்).  தொடர் எண்ணைப் பல பதிப்பகத்தார் பின்பற்றுவதில்லை.  படலத்துக்குப் படலம் எண் மாறும்.  வைமுகோ பதிப்பில் காண்டத்துக்குக் காண்டம் எண் மாறும்.  குறிப்பிட்ட பாடலை, எண்ணைச் சொன்னால் எடுக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

Satish Kumar Dogra

unread,
Sep 4, 2015, 4:33:47 AM9/4/15
to mint...@googlegroups.com
ஹரி அவர்களே,
                                அந்த பாடல் இந்த இணைப்பில் உள்ளது--

http://www.tamilvu.org/slet/l3700/l3700ur1.jsp?x=10054

என்னிடம் கம்பராமாயணத்தின் இரண்டு காப்பிகள் இருக்கின்றன ---- ஒன்று 18 புத்தக்கங்களாக மிகவும் விரிவானது, இன்னொன்று 2 புத்தக்கங்களாக வெறும் பாடல்கள். ஆனால் tamilvu.orgல் படிக்க ஆரம்பித்த பிறகு அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துவிட்டேன்.

tamilvu.org யையே நம்பிவிடலாமா? அல்லது பெட்டியை திறப்பது அவசியமா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Sep 4, 2015, 7:12:59 AM9/4/15
to mintamil

2015-09-04 14:03 GMT+05:30 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:

tamilvu.org யையே நம்பிவிடலாமா? அல்லது பெட்டியை திறப்பது அவசியமா?

இந்தப் பாடலுக்கான எண் குழப்பத்தை இன்னொரு மடலில் சொன்னேன்.

முற்றோதலுக்காக வைமுகோ பதிப்புடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துப் பதிப்பையும் பயன்படுத்தி, எழுத்துவிடாமல் படித்த அனுபவத்தில் சொல்கிறேன்.  இந்தப் பதிப்பில் தட்டுப்பிழை நிறைய உள்ளது.  சில இடங்களில் பொருள் தவறாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டு-மூன்று, நான்கைந்து வேறுபட்ட பதிப்புகளையாவது ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ஒருவகையாக தெளிவுக்கு வர முடிகிறது.  

எனவே என் கருத்துப்படி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேறுபட்ட பதிப்புகளைப் பார்ப்பதே நல்லது.  Better to open the Box.  Even Pandora opened her box a second time and out came Hope!

Satish Kumar Dogra

unread,
Sep 4, 2015, 7:29:29 AM9/4/15
to mint...@googlegroups.com
Hari Sir,
             Hopefully I will soon be able to locate my Pandora's box and open it. Six months ago I shifted from my government quarters I had occupied during service to my own house and packed my books in various boxes. One of these boxes has a multi-volume Kamba Ramayanam with detailed analysis. The box must be lying on one of the lofts in the house. The government house was bigger and 'unimportant articles' like books did not have to be pushed to the lofts.

One problem with the multi-volume version is that it has the text of the songs in an ancient style that puts more strain on the mind to read. But I think one must choose the correct rather than the easier path.

We are lucky to have a scholar like you on the forum.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Meenavan M

unread,
Sep 4, 2015, 11:24:41 PM9/4/15
to mint...@googlegroups.com
அன்பிற்கினிய ந்ண்பர்களே!
வணக்க்ம்.தங்களின் எழுத்தில் கம்பன் வரைந்த போர்க்காட்சி போரைக்
கண்டது போலவே இருக்கின்றது.நான் காரைக்குடியில் 1962 இல் இருந்து
வாழ்பவன்.அதனால் தமிழ்க்கடல் இராய.சொ.அவர்களோடும்,கம்பன் அடிப்பொடி
திரு.சா,க.அவர்களோடும் நெருங்கிய தொடர்புடையவன்.அன்பர் அ.ச.ஞா-
தோழர் ஜீவா - பண்டிதமணி கதிரேசனார் - தொ.மு.சிதம்பர ரகுநாதன் -
தொ.மு.பாச்கரத் தொண்டைமான் - நீதிபதி.மு.மு.இசுமாயில் - திருச்சி இரா.
இராதாகிருட்;டினன் - கவியரசு கண்ணதாசன் - காவியக் கவிஞர் வாலி-
இராமகிருட்டினன் - பால் நாடார்- இராமரசன் - சரசுவதி ,இராமநாதன்
போன்ற பெரும்க்களின் பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டவன்.
,இவர்களில் என் குருநாதர் பேசிய போர்க்காட்சி  வ்ட்; நெஞ்சில் இன்றும்
நிழலாடிக் கொண்டிருக்கின்றது.இராம - இராவணப் போரில் இணையற்ற
வீரனாகிய  இராவணன் இராமபாணம் துளைத்து வீழ்ந்த காட்சி பற்றிக்
கம்பன் கூறும் பாடலைக்; க்ண்ணீர் மல்கக் கூறிய காட்சி கண்முன் நிழலாடுகின்றது

அந்தப் பாடல்

வெள்ளெருக்க்ஞ் ச்டைமுடியான் வெற்பெடுத்த
                         திருமேனி மேலும்  கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும்
                          இடம்நாடி இழைத்த வாபோல்
கள்ளிருக்கும் மலர்க்கூந்;தல்  சானகியை
                          மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உட்புகுந்து
                         தடவியதோ ஒருவன் வாளி
மீனவன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 5, 2015, 8:57:27 PM9/5/15
to மின்தமிழ்
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அக்கா!.. மிக அருமையான எழுத்தாக்கம்!.. மேகலா, ஆசான் ஜீவ்ஸ் இருவரும் சுருக்கமாக என்றாலும் முத்துப் போல் தந்திருக்கிறார்கள்!. படிக்கப் படிக்க பரவசம் மேலிடுகிறது..மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.. அடுத்த, விரிவான பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

பார்வதி இராமச்சந்திரன்.

2015-09-05 8:54 GMT+05:30 Meenavan M <meen...@gmail.com>:
​       
​   

nkantan r

unread,
Sep 6, 2015, 1:53:52 PM9/6/15
to மின்தமிழ்
it is always interesting and I may add uplifting reading, pondering over, and rethinking the words used by kamba; though my knowledge of kambaramayanan is very limited as in other literature!

as an aside while reading this post where mr jeeves has mentioned that
தளபதிகளில் நான் முருகன்,
அசுரர்களில் நான் பிரகலாதன்

it is worth remembering that the actual word in gita is skanda (not murugan not karthikeyan); there is a reason for use of that particular word; we all know karthikeya, muruga, aarumuga, skanda all represent same god; but each word connotes different aspect of the same god. (like we all know, kari, vezham, kayam, kaliru, aanai all mean elephant but each has its own ring!

to emphasise, in gita, when Krishna addresses Arjun  he uses different words, partha, Arjun, etc. I remember a discourse long back in Chidambaram by a Sanskrit scholar who explained the meanings. I have forgotten the name of the scholar (he was from kumbokonam that much I remember) and I have forgotten the nuances of these different addresses,

yes mr google would help me in re-learning them; but it would be interesting if some of the learned scholars in this forum explain the meaning

regards
rnkantan

என்று கண்ணபிரான் கூறியது இதனால் அல்லவா ?

On Wednesday, September 2, 2015 at 12:02:29 PM UTC+5:30, ஜீவ்ஸ் wrote:
​இதுக்கு யாரும் பதில் சொல்லிட்டாங்களா ? இழை முழுசா படிக்கல.  

வாரணம் பொருத மார்பும்,
    வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
    நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
    சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
    வெறும் கையோடு இலங்கை புக்கான்

இப்படியாகச் சென்றவன் தானே இராவணன்...  ஆனால் பின்பு தேவர்களே அச்சமுறுவகையில் அவன் போர் புரிகிறான்..

‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்
ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே.

இராவணனின் வலிமை  இராமனையும்  வருத்தியது என்பதையும் நாம்காண்கிறோம். 

நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும்.

அத்தோடா ? இராமன் இராவணனின் தலையை அறுத்தப் பின்னும் அவை மீண்டும் முளைத்து எழுந்து, இராவணன் இன்னும் வலியுடன் போர் புரிகிறானே ? இராவணனை கடைசியில் பிரம்மாத்திரம் கொண்டல்லவா இராமனால் வீழ்த்த முடிந்தது. அப்படியானால் இராமன், இராவணனைக் குறித்து  இப்படி ஏன் நினைக்க வேண்டும் ?

இராவணன்  குப்புற வீழ்ந்து கிடக்க, அவன் முதுகில், காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவனுக்கு இராவணனின் மீது, அவன் வீரம் மீது இகழ்ச்சித் தோன்றுகிறது. 

இராவணனை  இதற்கு முன் தோற்கடித்தவன் கார்த்தவீரியார்ச்சுனன். அதை கேள்வியுற்ற போதே இராமனுக்கு  அவமானமாக இருந்ததாம், இவனைப் போய் எதிர்க்கிறோமே என்று.  ஒரு வேளை அவனிடம் தோற்று ஓடிய போது ஏற்பட்ட புறமுதுகுப் புண்களோ என்று இராமனுக்கு ஐயம் தோன்றுகிறது.  இப்போது இப்படி புறமுதுகிட்டு ஓடிய ஒருவனிடமா நான் சண்டையிட்டேன் என்று இராமன் நாணுகிறானாம்.  

இதை விபீடணனிடம் கூற, அதற்கு விபீடனன் தன் அண்ணனி வீரத்தை, அவன் வாரணம் பொருத மார்பன் என எல்லாம் கூற, அவனிடம் இராமன் மன்னிப்பு கேட்க... 

இராமன்.. ஒரு சிறந்த அரசன், சிறந்த வீரன். 

ஒளிகளில் நான் ஞாயிறு,
புலன்களில் மனம், 
தளபதிகளில் நான் முருகன்,
அசுரர்களில் நான் பிரகலாதன்
ஆயுதம் ஏந்திய  வீரர்களுள் இராமன் 

என்று கண்ணபிரான் கூறியது இதனால் அல்லவா ?

அன்புடன்
ஐயப்பன்

shylaja

unread,
Sep 7, 2015, 11:21:18 PM9/7/15
to mintamil
நன்றி பார்வதி... 
 விபீஷணன்  தன் அண்ணனின்  உடலைக்கண்டு அரற்றும் காட்சி கொண்ட பாடல்களும்  கம்பன் வார்த்தைகளில்  பொன்னாய் மின்னுகின்றன..தமிழால்  கம்பகாவியம் அழகானதா  . கம்பகாவியத்தால் தமிழ் அழகானதா என்று பரவசப்படுகிறமனம் அதனை சிறிதளவில் விவரிக்கும்போதும் கூட பிழை  இன்றி தரவேண்டும் என்கிற பயத்தையும்  பொறுப்பையும் கொடுக்கிறது.

கம்பருடைய  காப்பியத்தின் சுவைகளை எல்லாம் திரட்டி  ‘கம்பராமாயண சாரம்’ என்று நூல் இயற்றினார் வெ.ப. சுப்ரமண்யமுதலியார்.கம்பனின் காவியத்தைபோற்றிபுகழ்வதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர் ரசிகமணி டிகேசி. கம்பனின் பெருமையை ஆங்கிலத்திலும் அகிலம் அறியப்பரப்பியவர் வவேசு ஐயர். அரசியல் மேடைகளில் தமிழைத்தென்றலாகத்தவழவிட்ட சீவானந்தம்  கம்பனைப்போற்றியவர். காரைக்குடி கம்பன் கழகம்  ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா எடுக்கிறது.
இன்னும் பலப்பல சான்றோர்கள்  கம்பகாவியத்தை  வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கம்பன் காவியமும் கற்றகல்விபோல  வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாதுதான்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?
வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 8, 2015, 1:37:23 AM9/8/15
to mintamil
2015-09-08 8:50 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
தமிழால்  கம்பகாவியம் அழகானதா  . கம்பகாவியத்தால் தமிழ் அழகானதா என்று பரவசப்படுகிற மனம் 

அடடா! சித்தம் அழகியார்.

கம்பருடைய  காப்பியத்தின் சுவைகளை எல்லாம் திரட்டி  ‘கம்பராமாயண சாரம்’ என்று நூல் இயற்றினார் வெ.ப. சுப்ரமண்யமுதலியார்.கம்பனின் காவியத்தைபோற்றிபுகழ்வதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர் ரசிகமணி டிகேசி. கம்பனின் பெருமையை ஆங்கிலத்திலும் அகிலம் அறியப்பரப்பியவர் வவேசு ஐயர். அரசியல் மேடைகளில் தமிழைத்தென்றலாகத்தவழவிட்ட சீவானந்தம்  கம்பனைப்போற்றியவர். காரைக்குடி கம்பன் கழகம்  ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா எடுக்கிறது.
இன்னும் பலப்பல சான்றோர்கள்  கம்பகாவியத்தை  வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நன்று திருமிகு ஷைலஜா.
நானறிந்த தங்கள் பட்டியலில் விடுபட்ட அன்றைய பெரியவர்கள்:

கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
நீதிபதி மு.மு.இஸ்மாயில்
கோவை கா.கு.கோதண்டராமா கவுண்டர்.
அ.சீ.ரா
திருச்சி இரா.இராதாகிருஷ்ணன்
சக்தி பெருமாள் - சொல்விளங்கும் பெருமாள்
கவிஞர் கம்பராமன்
பாண்டிச்சேரி அருணகிரி. முதலியோர்.

இன்று மனம் கவர்கிறவர்கள்:

கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன்.
சரசுவதி இராமநாதன்
நெல்லை ஜெயராஜ்
நண்பர் திரு ஹரிகி
நண்பர் திரு அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
சொ.சொ.மீ.சுந்தரம்
அம்பத்தூர் கம்பன் கழக நிர்வாகிகள்

நாளை கம்பனைக் கற்க வழிகாட்டப்போவது:

நண்பர் திரு ஹரிகி வழிகாட்டுதலில் பெங்களூரில் நண்பர்கள் பங்கேற்ற கம்பராமாண முற்றோதல் நிகழ்வு பதிவுசெய்யப்பட்ட காணொலிகள்.

வாழ்த்துக்கள்
சொ.வினைதீர்த்தான்.

Hari Krishnan

unread,
Sep 8, 2015, 1:46:28 AM9/8/15
to சொ. வினைதீர்த்தான், mintamil, Naga Chokkanathan
2015-09-08 11:07 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
இன்று மனம் கவர்கிறவர்கள்:

கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன்.
சரசுவதி இராமநாதன்
நெல்லை ஜெயராஜ்
நண்பர் திரு ஹரிகி
நண்பர் திரு அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
சொ.சொ.மீ.சுந்தரம்
அம்பத்தூர் கம்பன் கழக நிர்வாகிகள்

மிகப் பெரியவர்கள் திருக்கூட்டத்துடன் என்னையும் சேர்த்ததற்கு நன்றி ஐயா,
 
நாளை கம்பனைக் கற்க வழிகாட்டப்போவது:

நண்பர் திரு ஹரிகி வழிகாட்டுதலில் பெங்களூரில் நண்பர்கள் பங்கேற்ற கம்பராமாண முற்றோதல் நிகழ்வு பதிவுசெய்யப்பட்ட காணொலிகள்.

இந்தச் சமயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சொக்கன் தெரிவித்த செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பதிவுகளால் சில ஐஏஎஸ் மாணவர்கள் பயன்பெற்றதைச் சொல்லியிருந்தேன்.  பாங்காக்கில் ஒரு குழுவினர் கம்பராமாயணம் முழுவதும் ஓதப் போகிறார்களாம்.  சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை என்று தேடியதில் இந்தப் பதிவுகள் சிக்கியிருக்கின்றன.  'நீங்கள் முடிக்கப் போகும் சமயத்தில் நாங்கள் தொடங்குகிறோம்.  புத்தகத்தை வைத்துக்கொண்டு, உங்கள் பதிவுகளைப் பெரிய திரையில் போட்டுப் பார்த்தபடி உங்களைப் போலவே வாராவாரம் தொடரப் போகிறோம்.  எங்களுக்கு வரும் ஐயங்களைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு அனுப்பினால் உதவுவீர்களா' என்று சொக்கனிடம் தொலைபேசி மூலமாக அந்தக் குழுவினரி ஒருவர் கேட்டாராம்.  இதைச் சொக்கன் என்னிடம் தெரிவித்ததும், 'ஐயம் களைவதில் நம் உதவி எப்போதும் உண்டு என்று தெரிவிக்கவும்' எனச் சொன்னேன்.

போட்ட விதை முளைக்கலாம் என்ற அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.  இதுபோதும்.

Hari Krishnan

unread,
Sep 8, 2015, 2:00:29 AM9/8/15
to சொ. வினைதீர்த்தான், mintamil

2015-09-08 11:07 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
திருச்சி இரா.இராதாகிருஷ்ணன்

செப்டம்பர் ஆறாம் தேதியன்று நடைபெற்ற 132ம் அமர்வில் என்னருகே அமர்ந்திருக்கும் புலவர் திரு இராமமூர்த்தி, திருச்சி இராதாகிருஷ்ணன் அவர்களின் மாணவர்.  திருச்சியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 8, 2015, 2:22:31 AM9/8/15
to Hari Krishnan, mintamil, Naga Chokkanathan
2015-09-08 11:16 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

இந்தச் சமயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சொக்கன் தெரிவித்த செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பதிவுகளால் சில ஐஏஎஸ் மாணவர்கள் பயன்பெற்றதைச் சொல்லியிருந்தேன்.  பாங்காக்கில் ஒரு குழுவினர் கம்பராமாயணம் முழுவதும் ஓதப் போகிறார்களாம்.  சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை என்று தேடியதில் இந்தப் பதிவுகள் சிக்கியிருக்கின்றன.  'நீங்கள் முடிக்கப் போகும் சமயத்தில் நாங்கள் தொடங்குகிறோம்.  புத்தகத்தை வைத்துக்கொண்டு, உங்கள் பதிவுகளைப் பெரிய திரையில் போட்டுப் பார்த்தபடி உங்களைப் போலவே வாராவாரம் தொடரப் போகிறோம்.  எங்களுக்கு வரும் ஐயங்களைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு அனுப்பினால் உதவுவீர்களா' என்று சொக்கனிடம் தொலைபேசி மூலமாக அந்தக் குழுவினரி ஒருவர் கேட்டாராம்.  இதைச் சொக்கன் என்னிடம் தெரிவித்ததும், 'ஐயம் களைவதில் நம் உதவி எப்போதும் உண்டு என்று தெரிவிக்கவும்' எனச் சொன்னேன்.
போட்ட விதை முளைக்கலாம் என்ற அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.  இதுபோதும்.

மிக்க மகிழ்ச்சி திரு ஹரிகி

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Reply all
Reply to author
Forward
0 new messages