கிராம தேவதைகள் .. சிறு தெய்வங்கள்.. - 2

2,128 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Feb 6, 2010, 10:57:03 AM2/6/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
முதல் மடலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கோயில். இது திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கின்றது. ஒரு சிறு கோயில்.  அதன் வாசலில் front, back, image1  என நான் பெயரிடப்பட்டிருக்கும் வடிவங்கள் இருக்கின்றன.
 
பக்கத்தில் உள்ள கோயிலில் ஏனைய வடிவங்கள்.
 
இது என்ன கோயில் எதற்காக இப்படிப்பட்ட சிலைகள், சிலைகளின் தலைகளில் ஓட்டைகள் போடப்பட்டுள்ளன, கீழே வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடந்ததற்கான தடம் தெரிகிறது.. பானைகள் ஒரு மண் புதர்மேல் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மன்னைக் குவித்து மாலை போட்டு வழிபாடு..
 
விளக்கம் அறிந்தவர்கள் எழுதுங்கள். பிறருக்கும் பயனளிக்கும்.
 
அன்புடன்
சுபா
image4.jpg
back.jpg
front.jpg
image1.jpg
image2.jpg
image3.jpg

Venkatachalam Subramanian

unread,
Feb 6, 2010, 1:13:28 PM2/6/10
to mint...@googlegroups.com
ஓம்.

இந்த இழையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலிறுக்க முடியவில்லை.

இந்தச் சிலாரூபங்கள் மண்சிலைகள்.முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், பலவேசம் இன்னும் பல தெய்வ வடிவங்கள் உள்ளன.
இந்த மூர்த்திகள் கற்சிலையாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர்.விழாதோரும் புதிதுபுதிதாக வேளார் அம்மன் சிலைகளும் மண்குதிரைகளும் உருவாக்குகிறார். அதனால் கழிக்கப்பட்ட யானை, குதிரை, பின்னப்பட்டஅம்மன் சிலைகள் குவிந்து கிடக்கும்.

சங்கிலி பூதத்தார், சுடலைமாடன், அய்யனார்,பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், மொட்டைக கோபுரத்தான், என்ற மூர்த்திகள் உண்டு. 

முகம் கைகால் அங்கங்கள் தெரியாமல் , அடிப்பகுதி சற்றுப் பருத்து, மேலே செல்லச் செல்ல சுருங்கி நான்கு பக்கங்கள் கொண்ட கன ட்ரபீசிய வடிவங்கள் உண்டு. அதில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்களின் பெயர்கள் செவி வழிச் செய்தியாக அறியப்படும்.

  ஒரு வளாகத்தில் பல மூர்த்திகள் இருப்பார்கள்.
 விழாக்காலம் என்பதை ’கோயில் கொடையிட்டுத் தருதல். என்று அழைப்பார்கள்.

 கொடையிடுங் காலங்களில் அந்த தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ;’’தலைக் கட்டு’’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஒரு தலைக் கட்டு, திருமணமான மகன் குடும்பம் ஒரு தலைக்கட்டு ஆகும். கொடையிட்டுக் கொடுக்கும் போது ஆகும் மொத்தச் செலவு அத்தனை தலைக்கட்டுகளுக்கும் சமமாக பகிர்ந்து விதிக்கப்படும்.

 வழக்கமாக ஒவ்வொரு மூர்த்திக்கும் அதன் அடியார்களெனக் கருதப்படும் குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்.

அந்தக் குடும்பத்தில் வழக்கமாக ஆவேசம் வந்து ஆடுபவர் காலமாகிவிட்டால் அவர் குடும்பத்தின் முக்கிய ஆண்மகன் மீது ஆவேசம் வரும். ஆவேசம் கொண்டு ஆடுவோருக்கு அந்தத் தெவத்துக்குரிய ‘சல்லடம்’ என்று அழைக்கப்படும் சீருடைகள் தனித்தனியே உண்டு. அதை அணிவிப்பார்கள். குடிமக்கள் குறைகள் களைய பரிகாரங்கள், இயற்கையின் கொடையான விவசாயியின் கேள்வி மாதமும் பொழியும் மாரியைப் பற்றியதுதான்.

. தேரில் அலங்காரம், பெரிய தோரணக் குடை போன்றவற்றிர்க்கு துணி தைப்பவர் தான் இந்தச் சல்லடமும் தைத்து உருவாக்குவார். பாரம்பரிய வழக்கத்துக்கு மாறுபட்டு வேறு ஒரு விருந்தாளிக்கும் தேவாவேசம் வந்துவிட்டால் ’நீ எந்த பீடம்?’ என்று பூசாரி கேட்பார். 

ஆடுபவர், தான் பலவேசம், சுடலை, கருப்பு என்று ஒன்றைச் சொல்வார்.
ஏளனத்துக்கென எவராவது பொய்யாக ஆவேசம் கொண்டால் சவுக்கினால் அடித்து உண்மையை வரவழைத்துவிடுவார்கள்.வளாகத்திலேயே இல்லாத ஒர் மூர்த்தியின் பெயரை அவர் சொன்னால் சவுக்கடி வழங்கிவிடுவார் ஆவேசம் வந்த மூத்த சாமியாடி .

. இதைத்தான்’பீடம் தெரியாமல் சாமியாடினான்’ என்பது.
 
இந்தச் சொற்றொடர். அடிப்படை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் மேம்போக்காகப் பேசிச் செயற்படு வோரைக் குறிக்கவும் நடைமுறையில்  பயன்படுத்துகிறார்கள். . 

பம்பை; என்ற பெயருடைய ஓன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்ட இரட்டை மேளம்.முக்கியமாக இடம்பெறும். கீழே இருக்கும் கொட்டு மேளம் ’உறுமி’ எனப்படும். வாசிப்பவருடைய இடது கையில் வளைந்த ஒரு குச்சியால் தேய்க்கும் போது ” வ்ரூம் வ்ரூம்” என்று உறுமுதல் போன்று ஒலி எழுப்பும். வலது கையில் மெலிந்த குச்சி யொன்று ‘ரண்டக்க ரண்டக்க’ என்று ஒலிஎழுப்பும்.நாகஸ்வரம் (நாதஸ்வரம் என்று அழைப்பது பிழையானது என்ற கருத்தும் உண்டு) ஒத்து ஜாலரா ஆகியவையும் வாங்கா,என்ற நீண்ட பித்தளைக் குழல்களும் உண்டு. சேகிண்டி, வெண்சங்கு இத்துடன் உண்டு.
உச்சஸ்தாயியில் அனைத்து வாத்தியங்களும் ஒரு சேர ஒலிஎழுப்பி அவசர கதியில் தொனிக்கும் போது ‘ஆடாத மனமும் உண்டோ?

நான் அனுபவப்பட்டவரையில் அங்கங்கள் அற்ற உருவப் பீடங்கள் (செங்கல் குழை சாந்து, ஆகியவற்றால் செய்து சுண்ணாம்பு பூசி வெள்ளையிடித்திருக்கும்).ஆண் தெய்வங்களுகு மட்டுமே இருக்கின்றன. 

பெண் தெய்வத்திற்கு சிற்பி செதுக்காத முழுமையான சிறிய சாதாரணக் கல்லில் ஆவாஹனம் செய்திருப்பார்கள்.’
அய்யனார், முன் கால்கள் தூக்கிய நிலையில் நிற்கும் பெரிய குதிரையில் அமர்ந்திருப்பார். பூதத்தார் பேருருக்கொண்டவர். தலைவன், தலைவி, ஒரு சேய் ஆகிய மூன்று பேருடைய சிலாரூபம் செங்கல்லால், குழை சாந்துச் சுணத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

கற்குவேல் அய்யனார், ஒரு தெய்வம் 
கிளிக்கூண்டு ஐயனார்(கோயில் பட்டியிலிருந்து நாலாட்டின்புதூர் போகும் வழியில்வானரமுட்டி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ளார். அவர் தலைக்கு மேல் ஒரு கூண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.) 

வெங்கலமுடி ஐயனார் (திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து தனியே பிரிந்து அயயாபட்டி என்னும் ஊரில் விளை நிலங்கள் தாண்டி காட்டிற்குள் கோயில் கொண்டிருகிறார்.)’ என்னத்தக் கண்னையா’ என்ற திரை நடிகர் பிறந்த ஊர். 

அய்யனார் கோயிலின் முன்னர் நெடிதுயர்ந்த காட்டு மரங்கள் இரண்டு உள்ளன ஒரு மரத்தில் ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் மாட்டப்பட்டுள்ளன. அவை ஓசை எழுப்பாதவை. காரணம் அந்த மரம் சேவார்த்திகள் கொண்டு மாட்டியிருக்கும் வெண்கல மணிகளை உள்ளே இழுத்து சதை வளர்ந்து வருவது போன்று மரம் வளர்ந்து மணிகளை மூடிவிடுகின்றது.. சிறிய மணிகளை இழுத்துக் கொள்வதைப் போன்று நான்கு அடி நீள இரும்புக் கம்பியில், இரும்புச் சங்கிலியிட்டுத் தொங்கவிட்டிருந்த பெரிய அளவிலான ஒன்றரையடிவெண்கலமணியையும் சட்டம், சங்கிலி,  யாவற்றையும் அதன் இரும்பு நாக்குடன் சேர்த்து மூடியிருக்கின்றது.

இரண்டாவது மரம் அதே இனத்தைச் சேர்ந்ததுதான். அந்த மரத்திற்கு இந்தக் குணம் இல்லை.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம் 

2010/2/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Feb 6, 2010, 8:19:19 PM2/6/10
to mint...@googlegroups.com
ஐயா அருமையான விளக்கம் கொடுத்துள்ளார். இவையே நான் கேள்விப்பட்டவையும். இன்னும் சில கோயில்களில் உருவங்கள் பிரார்த்தனை செய்துகொண்டு செலுத்துவதுண்டு. அவற்றை உருவாரம் செலுத்துதல் என்று சொல்வார்கள். அநேகமாய்க் கிராமக் கோயில்களிலேயே இந்த உருவாரம் செலுத்துவதன் மூலம் பல உருவங்களுடன் கூடிய அம்மன் சிலைகள், ஆண் தெய்வங்கள் சிலைகள், கருப்பண்ணசாமி சிலைகள், குதிரை, யானைகள், போன்றவை காணக்கிடைக்கின்றன. இன்றும் உருவாரம் செலுத்துதல் நடைபெற்று வருகிறது.

2010/2/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Feb 6, 2010, 8:37:19 PM2/6/10
to mint...@googlegroups.com
திரு வெ.சுப்பிரமணியம் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்
நீங்கள் குறிப்பிட்ட ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் மாட்டப்பட்டுள்ள சேவார்த்திகள் கொண்டு மாட்டியிருக்கும் மரத்தின் படத்தைப் பதிவு செய்யமுடியுமா? சேவார்த்தி என்பதற்கு வேண்டுதலுக்காகச் செலுத்தப்படும் காணிக்கை என்பது சரியான விளக்கம் ஆகுமா?

ஆராதி

2010/2/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Feb 6, 2010, 10:07:50 PM2/6/10
to mint...@googlegroups.com
ஓம்
குழும அன்பர்கள் திண்டுக்கல் வட்டத்தில் உள்ளவர்கள் -அருகில் தங்கி உள்ளவர்கள்-  முயன்றால் தற்போதைய படம் எடுத்தால் நலம். அந்த மரத்தின் வயது ஒரு எண்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். சேவார்த்திகள், (உரிமைகொள்ளும் பக்தர்கள்) இன்னமும் இருக்கிறார்கள்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தினை ஒட்டி குறுக்கே புதிய ஃப்ளை ஓவ ர்கட்டியிருகிறார்கள். அதில் சென்று சாணார்பட்டியில் பிரிந்து அய்யாப்பட்டிக்குச் செல்லவேண்டும். 

குடியிருப்புகளில் இருந்து மூன்று கிலோமீட்டர் சென்று தரிசிக்கலாம்.
 படங்கள் இல்லை.
 சாணார்பட்டி அருகில் ’சக்கிலியன் கொடை’ என்ற சிற்றூரில் ’சாரணத்தி’ என்னும் மூலிகை, மற்றும் சில இயற்கையாக அபரிமிதமாக கிடைக்கும். பிற மானிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஓம். அன்புடன்
வெ.சுப்பிரமணியன்.

2010/2/7 ananda rasa thiruma <aara...@gmail.com>

N. Kannan

unread,
Feb 6, 2010, 11:20:28 PM2/6/10
to mint...@googlegroups.com
ஓம் ஐயா:

அபாரமான விளக்கம். கிராமத்தில் சுற்றி அலைந்தவர் என்பது தெள்ளத்தெளிவாக
தெரிகிறது. இது போன்ற விளக்கங்களைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது.
நீங்கள் இன்னும் வழங்க வேண்டிய கொடைகள் உண்டு. மண்ணின் மணம் மின்தமிழில்
வீசட்டும்.

எனக்கென்னவோ வெள்ளைப் புள்ளிகள் குத்திய சட்டிகள் இறந்த போது அனல்
சுமக்கும் மூத்த மகனை நினைவுபடுத்துகிறது. ஏதேனும் சம்பந்தமுண்டோ?

ஏனோ குழந்தையில் சொல்லிச் சொல்லி பயமுறுத்தி, இப்படங்களைப் பார்த்தாலே
பயமாக இருக்கிறது!

க.>

2010/2/7 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

RAJAGOPALAN APPAN

unread,
Feb 7, 2010, 12:26:32 AM2/7/10
to mint...@googlegroups.com

சிலை, சிற்பி ஆகிய சொற்கள், கல்லைக்குறிக்கிற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து வந்தவை. கல்லில் செதுக்கபட்ட வடிவங்களையே சிலை என்று கூற வேண்டும். செங்கல் சுண்ணாம்புச் சாந்து கொண்டு வடிக்கப்பட்ட உருவங்கள் சுதை எனப்படும். உலோகம், மரம், மண் ஆகியவற்றிலும் இறைவடிவங்கள் செய்யப்படுவதுண்டு. வீடுகளில் நடத்தப்படுகிற மங்கள நிகழ்வுகளில், மஞ்சளில் கூட விநாயக வடிவத்தை, கற்பனை செய்து வழிபடுவதுண்டு. அம்மன் வடிவங்கள், விழா முடிந்தவுடன் கரைப்பதற்கு ஏதுவாகப் பச்சை மண்ணிலும், நீண்ட நாள் வழிபட, சுட்ட மண்ணிலும் செய்யப்படுகின்றன. படத்தில் காட்டப்பட்டவை சுட்ட மண்ணில் செய்யப்பட்டவடிவங்கள்.

அ.ரா
2010/2/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Feb 7, 2010, 5:03:36 AM2/7/10
to mint...@googlegroups.com
இந்தப் படங்களைப் பற்றி இல்லாவிடினும் இவ்வகை வழிபாடுகள் பற்றிய கருத்துக்களைத் தந்திருக்கின்றீர்கள். நன்றி.

2010/2/6 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
ஓம்.

இந்த இழையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலிறுக்க முடியவில்லை.

இந்தச் சிலாரூபங்கள் மண்சிலைகள்.முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், பலவேசம் இன்னும் பல தெய்வ வடிவங்கள் உள்ளன.
இந்த மூர்த்திகள் கற்சிலையாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர்.விழாதோரும் புதிதுபுதிதாக வேளார் அம்மன் சிலைகளும் மண்குதிரைகளும் உருவாக்குகிறார். அதனால் கழிக்கப்பட்ட யானை, குதிரை, பின்னப்பட்டஅம்மன் சிலைகள் குவிந்து கிடக்கும்.

இந்தச் சிலைகளைப் பார்க்கும் போது கழிக்கபப்ட்ட சிலைகள் போல தெரியவில்லை. ஒரு சிலையின் கீழ் வாழைப்பழம் வழிபடு பொருட்கள் இருக்கின்றன. இது ஏதாவது ஒன்றினைக் குறிப்பதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
 
அதோடு, இந்த பெண வடிவ சிலைகள் மலையாள முண்டு அணிந்திருப்பது போல தெரிகிறது. வெள்ளை பாவாடை, வர்ணத்தில் மேல் சட்டை. இது எந்த வகை வழிபாடு என்று புலப்பட வில்லை. திருவநெல்வேலி ஆட்களுக்கு இது நிச்சயம் தென்ந்திருக்க் வேண்டும். முயற்சி செய்வோம்.
 
சங்கிலி பூதத்தார், சுடலைமாடன், அய்யனார்,பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், மொட்டைக கோபுரத்தான், என்ற மூர்த்திகள் உண்டு. 

முகம் கைகால் அங்கங்கள் தெரியாமல் , அடிப்பகுதி சற்றுப் பருத்து, மேலே செல்லச் செல்ல சுருங்கி நான்கு பக்கங்கள் கொண்ட கன ட்ரபீசிய வடிவங்கள் உண்டு. அதில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்களின் பெயர்கள் செவி வழிச் செய்தியாக அறியப்படும்.

  ஒரு வளாகத்தில் பல மூர்த்திகள் இருப்பார்கள்.
 விழாக்காலம் என்பதை ’கோயில் கொடையிட்டுத் தருதல். என்று அழைப்பார்கள்.

 கொடையிடுங் காலங்களில் அந்த தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ;’’தலைக் கட்டு’’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஒரு தலைக் கட்டு, திருமணமான மகன் குடும்பம் ஒரு தலைக்கட்டு ஆகும். கொடையிட்டுக் கொடுக்கும் போது ஆகும் மொத்தச் செலவு அத்தனை தலைக்கட்டுகளுக்கும் சமமாக பகிர்ந்து விதிக்கப்படும்.

இது கிராமங்களுக்கு கிராமம் வேறுபடுமா அல்லது பொதுவான முறையா?
 
 வழக்கமாக ஒவ்வொரு மூர்த்திக்கும் அதன் அடியார்களெனக் கருதப்படும் குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்.

அந்தக் குடும்பத்தில் வழக்கமாக ஆவேசம் வந்து ஆடுபவர் காலமாகிவிட்டால் அவர் குடும்பத்தின் முக்கிய ஆண்மகன் மீது ஆவேசம் வரும். ஆவேசம் கொண்டு ஆடுவோருக்கு அந்தத் தெவத்துக்குரிய ‘சல்லடம்’ என்று அழைக்கப்படும் சீருடைகள் தனித்தனியே உண்டு. அதை அணிவிப்பார்கள். குடிமக்கள் குறைகள் களைய பரிகாரங்கள், இயற்கையின் கொடையான விவசாயியின் கேள்வி மாதமும் பொழியும் மாரியைப் பற்றியதுதான்.

இந்த ஆவேசம் வந்து ஆடும் முறையை நான் மலேசியாவிலும் பார்த்திருக்கிறேன்.  சாமி ஆடுதல் என்று சொல்வோம்.  பொதுவாக முனீஸ்வரன், மதுரை வீரன், நாகம்மா, மாரியம்மன் வந்து விட்டதாக சொல்வார்கள். குறிப்பாக பெண்களுக்கு 'சாமி வந்தால்' அவர்கள் நாகம்மை தெய்வம் அல்லது 'ஆத்தா' வந்து விட்டதாக சொல்வார்கள். மலேசிய ரப்பர் செம்பனைத் தோட்டங்கள் உள்ள இடங்களில் தமிழர்களே பெரும்பான்மையினர். அங்கு முனீஸ்வரன், மதுரை வீரன், நாகம்மா, மாரியம்மன் ஆலயங்கள் அதிகம். அங்கு இவ்வகையில் வெள்ளி அல்லது செவ்வாய் தினங்களில் 'சாமி பார்ப்பதற்காக' மக்கள் வருவர். குரைகளுக்கு நிவர்த்தி கேட்க எனந்த்த நிகழ்வுகள் அமையும்.
 
. தேரில் அலங்காரம், பெரிய தோரணக் குடை போன்றவற்றிர்க்கு துணி தைப்பவர் தான் இந்தச் சல்லடமும் தைத்து உருவாக்குவார். பாரம்பரிய வழக்கத்துக்கு மாறுபட்டு வேறு ஒரு விருந்தாளிக்கும் தேவாவேசம் வந்துவிட்டால் ’நீ எந்த பீடம்?’ என்று பூசாரி கேட்பார். 

ஆடுபவர், தான் பலவேசம், சுடலை, கருப்பு என்று ஒன்றைச் சொல்வார்.
ஏளனத்துக்கென எவராவது பொய்யாக ஆவேசம் கொண்டால் சவுக்கினால் அடித்து உண்மையை வரவழைத்துவிடுவார்கள்.வளாகத்திலேயே இல்லாத ஒர் மூர்த்தியின் பெயரை அவர் சொன்னால் சவுக்கடி வழங்கிவிடுவார் ஆவேசம் வந்த மூத்த சாமியாடி .

சவுக்கு என்றதும் ஞாபகம் வருகிறது. நான் மலேசியாவில் பார்த்தவகையில் மதுரை வீரன் முனீஸ்வரன் 'சாமி ஆடுபவர்கள்' சவுக்கு ஒன்றை கையில் வைத்திருப்பர். இவர்கள் தங்களைத் தாமே அடித்துக் கொள்வர் சாமி வந்ததன் அடையாளமாக. இதுவும் தமிழக கிராமங்களில் உண்டா?

Geetha Sambasivam

unread,
Feb 7, 2010, 5:06:48 AM2/7/10
to mint...@googlegroups.com
தமிழகக் கிராமங்களுக்குப் போவானேன்?? பிச்சை எடுப்பவர்களில் கூட இம்மாதிரிச் சவுக்கினால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு பிச்சை கேட்பவர்கள் உண்டு.

2010/2/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Venkatachalam Subramanian

unread,
Feb 7, 2010, 12:00:30 PM2/7/10
to mint...@googlegroups.com
ஓம்.

இது கிராமங்களுக்கு கிராமம் வேறுபடுமா அல்லது பொதுவான முறையா?

  • இந்த வழிமுறைகள் நெல்லை மாவட்டத்தில். நடைமுறையில் உள்ளவை. பிற மாவட்டங்களில் வழிமுறைகள் மாறுபட வாய்ப்புண்டு..

Geetha Sambasivam

)
தமிழகக் கிராமங்களுக்குப் போவானேன்?? பிச்சை எடுப்பவர்களில் கூட இம்மாதிரிச் சவுக்கினால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு பிச்சை கேட்பவர்கள் உண்டு. 

  • பிச்சை எடுப்பவர்கள் என்று அவர்களை ஏகமாகச் சொல்லிவிட முடியாது.இராப் பிச்சைக்காரன் (புரத வண்ணான்) என்ற வகுப்பு ஒன்று கிராமங்களில் உண்டு. செட்யூல்டு வகுப்பினரின் சலவைத் தொழிலாளி. அவர்களின் கிராமியத் தொண்டு மிகவும் பிரஸித்தமானது.. அவர்கள் பகற்பொழுதில் பணியில் ஈடுபட்டு இரவு ஒவ்வொரு குடியானவர் வீட்டிற்கும் வந்து உணவு பெற்றுச் செல்வர்.
  • விழித்திருந்து பிட்சை அளிக்க இயலாதவர்கள். முறத்தில் உணவுப் பொருள்களை வைத்து வீட்டுத் திண்ணையில் தெரியும் படியாக வைத்துச் செல்வார்கள். இராப்பிச்சைக்காரர் இரவு பூசை முடித்துபின்னர்தான் வருவார்கள். மூடிய கதவிற்கு வெளியே குடும்ப அனுகூலச் சங்கதிகளை மொழிந்துவிட்டுச் செல்வார்கள்.
  • அவர்களைப் போன்று குடுகுடுப்பைக் காரன் என்று ஒரு வகுப்பினர் வருவர். அவர்கள் மாந்த்ரீகம் கற்று நியம நிஷ்டைகளுடன் வலம் வருவர். ஒன்பது கம்பளம் , எண்பது கம்பளம் என்றெல்லாம் அவர்களுக்குள் பிரிவுகள் உண்டு. வசதி மிக்க பணக்காரராக அவர் வாழ்ந்தாலும் ஆறு மாதங்கள் வெளியூர் சென்று பழைய ஆடைகள் பெற்று வருவது அவர்களின் தர்மம்.
  • குடும்பச் சிக்கல்கள் நிகழ்ந்து மன உளைச்சலில் இருப்போர்,(  இரவு நடுச் சாமத்தில் இடுகாடு/சுடுகாடு சென்று வழிபாடியற்றி ஆவேச நிலையில் வருகின்ற குடுகுடுப்பை காரரை வாயிலில் நின்று சிறு குடுகுடுப்பையை விரைவாக ஆட்டிக் கவனத்தைத் திருப்பி,சில தெளிவுரைகள் இடையிடையே சுருக்கமாகக் கூறுவர். வீட்டினுள் இருந்தே விவாதித்து கருத்துகள் பரிமாரிக்கொள்வோரும் உண்டு.
  • மறு நாள் வந்து ஜக்கம்மா இவ்வாறு கூறினாள் என்பார்கள்.அந்த சமயங்களில் ஆவேசம் இராது.
  • அவர்கள் இரவில் வரும் போது ஊர் நாய்கள் குரைக்க ஆரம்பித்தால், “ச்சடு”  என்று உரத்த குரலில் ஓங்கரித்துத் காரித் துப்புவது போன்று கத்துவார்கள். நாய் தன்னுடைய குரைக்கும் தொழிலைவிட்டு ஓடிவிடும்.
  • அல்சேஷன் போன்ற பெரியநாய்கள் குரைத்துக்கொண்டு கம்பிக் கதவை விட்டு வெளியே வந்தால் வாய்க்கட்டு என்ற வித்தை உண்டு. அந்தநாய்களின் வாயினைக் கட்டிவிட்டால் அதன் பின்னர் அது குரைக்கவும் முடியாது. இரைஎடுக்கவும் இயலாது. பணி முடிந்தபின்னர் வாய்க்கட்டை நீக்கிவிடுவது அவர்களின் வழுவாத தர்மம்.
  • பயமுறுத்தி பகல் வேளைகளில் வீடுகளுக்கு வந்து, நகைக் கடைத் தெருவில் வாடிக்கையாளர்களை, தக்க நபர்களை அடையாளம் கண்டுகொள்ள மோப்பம் பிடிக்கும் மனிதர்களைப் போல் அசந்து போன பயந்தாங்கொள்ளிகளை வேண்டாத தோஷங்களைச் சொல்லி பரிகாரம் செய்ய வென்று எண்ணெய் மிளகாய் வற்றல் அரிசி பணம் ஆகியவை பெற்று(பிடுங்கிச்) செல்வதும் உண்டு.
  • சவுக்கின் நுனியில் விளார் என்ற பகுதி இருக்கும். த்னக்குத் தானே அடித்துச் சுண்டுவதில் சில வழிமுறைகள் உண்டு. ஓசையப் பெரிதாக எழுப்பி உடலைத் தொட்டுச் செல்லும் படியும் வீசமுடியும். அடி விழாது. சாதாரணமாக அடித்தால் விளார் உடம்பின் மீது பட்ட இடத்தில் சதையைப் பிய்த்துக் கொண்டுவரும். காலில் சலங்கை கட்டிக்கொண்டு சலம் போடும் அன்பர்கள்(கவுண்டமணி ஒரு படத்தில் அவ்வாறு செய்வார்.) அடி விழுவது மாதிரி காட்டுவார்கள். குங்குமக் கரைசல் உடம்பில் வழியும். 
  • சாமியாடுபவர்கள் பிரம்பினாலும், சவுக்கினாலும் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும் ஒரு சம்பிரதாயம்.
 சிலை, சிற்பி ஆகிய சொற்கள், கல்லைக்குறிக்கிற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து வந்தவை. கல்லில் செதுக்கபட்ட வடிவங்களையே சிலை என்று கூற வேண்டும். செங்கல் சுண்ணாம்புச் சாந்து கொண்டு வடிக்கப்பட்ட உருவங்கள் சுதை எனப்படும். உலோகம், மரம், மண் ஆகியவற்றிலும் இறைவடிவங்கள் செய்யப்படுவதுண்டு. வீடுகளில் நடத்தப்படுகிற மங்கள நிகழ்வுகளில், மஞ்சளில் கூட விநாயக வடிவத்தை, கற்பனை செய்து வழிபடுவதுண்டு. அம்மன் வடிவங்கள், விழா முடிந்தவுடன் கரைப்பதற்கு ஏதுவாகப் பச்சை மண்ணிலும், நீண்ட நாள் வழிபட, சுட்ட மண்ணிலும் செய்யப்படுகின்றன. படத்தில் காட்டப்பட்டவை சுட்ட மண்ணில் செய்யப்பட்டவடிவங்கள்.

  • நன்று சுதைகளும் கற்சிலைகளும் உண்டு.

எனக்கென்னவோ வெள்ளைப் புள்ளிகள் குத்திய சட்டிகள் இறந்த போது அனல்
சுமக்கும் மூத்த மகனை நினைவுபடுத்துகிறது. ஏதேனும் சம்பந்தமுண்டோ?

ஏனோ குழந்தையில் சொல்லிச் சொல்லி பயமுறுத்தி, இப்படங்களைப் பார்த்தாலே
பயமாக இருக்கிறது!

க.>
  • உங்கள் அனுமானம் சரியாக இருக்கலாம். வாய்ப்புண்டு.

  • நெல்லையிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது. அங்கே சந்தைகு அருகில் நெடுஞ்சாலையை ஒட்டியே சாய்ந்து மல்லார்ந்து படுத்த நிலையில் மண் செங்கல்லால் வடிக்கப்பட்ட ‘வண்டிமறித்த அம்மன்’ என்ற திருநாமம் கொண்ட இரண்டு பெரிய உருவங்கள். அமைந்த கோயில் திறந்த வெளியில் இருக்கிறது. அந்த அம்மனின் மூக்கின் ஒருதுவாரத்தினுள்ளே சிறு குழந்தை சென்றுவரும் அளவிற்கு பெரிய உருவம் .
  • வெயில் உகந்த அம்மன் கூரையின் அடியில் பிற மூர்த்தங்கள் கோயில் கொண்டிருக்க தான்மட்டும் வெட்ட வெளியில் வெயிலிலும் மழையிலும் நிற்கிறாள்.
  • பாபநாசம் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அகத்தியர் அருவி தாண்டி, வாண தீர்த்தம் அருகில் சொரிமுத்தையன் கோயில் சிறப்பு வாய்ந்தது.
  • மதுரையில் முத்தையா கோயில் , சப்பாணி கோயில் உண்டு.
  • உசிலம்பட்டியில் பேயாண்டி, மாயாண்டி, விரும்பாண்டி கோயில்கள் உள்ளன.மூன்று கோயில் வழிபாடு. அவை முறையே சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் குறிக்கும்.
  • ஓம்.வெ.சுப்பிரமணியன்

2010/2/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Feb 7, 2010, 9:55:06 PM2/7/10
to mint...@googlegroups.com
மிக அருமையான விளக்கங்கள்.

இமையவனின் கோவேறு கழுதையில் இப்படி இராப்பிச்சை வாங்கும் வழக்கு
இலக்கியத்திற்கு வரும்.

எங்களூர் பக்கம் 'பனையூரம்மன்' என்றழைக்கப்படும் பெரிய்வர் ஒருவர்
காற்சலங்கை குலுங்க, சாட்டை வைத்துக் கொண்டு வருவார். அதுவும் ஒருவகையான
உஞ்சவிருத்தி என்றே எம் வீட்டுப் பெரியோர் மரியாதை செய்வர்.

இப்படி எத்தனையோ கிராமத்து வழக்குகள். இவைகளையெல்லாம் நகர மயமாகும்
கலாச்சாரத்தாக்குதல் என்ன செய்யும் என்று கேள்வி.

முடிந்தவரை போட்டோ பிடித்து வைத்துக் கொள்ளலாம்!

க.>

2010/2/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 8, 2010, 6:10:07 AM2/8/10
to mint...@googlegroups.com
அவர்களைப் போன்று குடுகுடுப்பைக் காரன் என்று ஒரு வகுப்பினர் வருவர்.//

இன்னிக்குக் கூட குடுகுடுப்பைக்காரர் வந்தார். :))))))))

மதுரையில் முத்தையா கோயில் , சப்பாணி கோயில் உண்டு.//

மதுரைப்பக்கம் முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், படாளம்மன், முத்தையா சாமி எல்லாருமே உண்டு. என் அப்பா வீட்டின் குலதெய்வம் படாளம்மன் தான். படாளம்மன் தர்பார் என்ற கோலத்திலே இருக்கும்கோயில்களில் கருப்பண்ணசாமியும் இருப்பார். இவரே தளபதி படாளம்மனுக்கு என்பார்கள். படாளம்மனுக்குப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்போது இவருக்கும் உருமால் கட்டி நிலைமாலை சார்த்துவது வழக்கம். வெற்றிலை மாற்றுவது என்பது ஒவ்வொருவர் வீட்டுத் திருமணத்தின் போதும் திருமணப் பத்திரிகையை அடித்ததும் முதல் பத்திரிகையைக் குலதெய்வக் கோயிலில் கொடுத்து வெற்றிலை மாற்றுவார்கள். அதன் பின்னே பத்திரிகை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விநியோகம் செய்யப் படும். இந்த வழக்கம் இன்றைக்கும் உண்டு. திருநெல்வேலிப் பக்கம் சாஸ்தாவும் குலதெய்வமாகக் கொண்டாடுவார்கள்.இவரைத் தவிர சடவுடையார் என்பவரும் உண்டு. இந்தச் சடவுடையாருக்கு வேப்பிலை ஆகாது என்பார்கள். வேப்பிலை இல்லாமலேயே இவரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது வழக்கம்.

2010/2/7 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 8, 2010, 6:47:26 AM2/8/10
to mint...@googlegroups.com
அடியேன் உசிலம்பட்டி ப்ராடக்ட் அல்லவா. கோடாங்கி ஒருவர் வருவார். சிரித்தமுகம். அவருக்கு கிராமத்தில் ஏகப்பட்ட மரியாதை. எனக்கு பிடித்தவர். தந்தைக்கு ஆலோசகர். அதற்கு மேல் நினைவு இல்லை. ஓம் சுப்ரமண்யம் அவர்கள்  கோடாங்கியைப் பற்றி விளக்கினால் நன்று.
இன்னம்பூரான்

2010/2/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Feb 8, 2010, 8:15:57 AM2/8/10
to mint...@googlegroups.com
கீதா:

இதுவொரு மிக முக்கிய தடயம்.

பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், அந்தணர் என்போர் ஏதோ அரேபிய
நாட்டிலிருந்து இங்கு வந்து குதித்தவர்கள் என்று :-))

தமிழகத்தின் அடிமட்ட இறை வழிபாடுகளைப் பார்த்தால் அதில் பார்ப்பன
சம்பந்தம் இருக்கும். நான் கூட நீண்ட காலம், பிராமணர்கள் ஏதோ ivory tower
ஆசாமிகள் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னால்தான் புரிந்தது அவர்கள்
down to earth ஆசாமிகள் என்று ;-) அதாவது மண்ணின் மைந்தர்கள் என்று.

களப்பணியாக போயிருந்த காலத்தில் காலச்சுவடு அலுவலகத்தில் ஒரு அந்தணரைச்
சந்தித்தேன். அவர் இம்மாதிரி சிறுதெய்வ வழிபாடுகள் எவ்வளவு தூரம் பிராமண
சமூகத்தில் வேறூன்றி இருக்கிறது என்று விளக்கமாகச் சொன்ன போது என்னுள்
ஒரு புதிய வாசல் திறந்தது.

இப்போது ஏதோ கோயிலில் பூசாரியாக வந்து விட்டதால் அவர்கள் மேட்டுக்குடி
என்று கதை கட்டி விட்டு விட்டார்கள். அடிப்படையில் அவர்கள் இம்மண்
சார்ந்த அத்தனை சமூக பண்பாட்டிலும் இருக்கின்றனர். இதனால் முன்பொரு முறை
ஆ.மார்க்ஸ் நடத்திய பட்டறையில் வைணவத்தையும், தலித்துகளையும் இணைத்து ஒரு
கட்டுரை வாசிக்கப்பட்டது. பெருமாள் கோயில்கள் பல, ஊருக்கு வெளியில்
வயக்காட்டில் அமைந்திருப்பது, தற்செயல் அல்ல. அவை subaltern society
எனும் விளிம்பு நிலை மாந்தருக்கு அணுக்கமாய் இருந்திருப்பதை அது
உணர்த்துகிறது . பேரா.தொ.பரமசிவம் அவர்கள் இது பற்றி விரிவாக ஆய்வுகள்
செய்திருக்கிறார்.

க.>

2010/2/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Feb 8, 2010, 8:40:41 AM2/8/10
to mint...@googlegroups.com
ஓம்.
கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். 
குறி சொல்லுதல் அவர்களது இயல்பு. 
அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும். ஒரு பட்டையான கயிறு இருபக்கங்களையும் இணைக்கும் கயிற்றுப் பின்னலை இடதுகையினால் தளர்த்தியும் இறுக்கியும் வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலிஎழுப்பும்.
 பேச்சின் நடுவே ஒலிஎழுப்பி பேசுவது ஒரு லயம். 
நோய்க்கும் பார் பேய்க்கும் பார்! என்ற சொற்றொடரின் பிற்பகுதி கோடாங்கி.

ஒருவரே தொடர்ந்து பேசும் போது சுவாரஸியம் குறைவு.  இடையிடையே கவன ஈர்ப்பாக உடுக்கு அடிப்பார் கோடாங்கி.

மனிதமனத்துக்கு அமைதி தேடி செய்யபடும் ஒரு வகை சங்கீதக் கலை இது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவம் சான்றளிக்க வளரும் ஒருகலை.

இதைப் போலவே ’வில்பாட்டு’  ஒரு கிராமிய கதா காலக்ஷேபம்.கோயில்களில் புராண இதிகாசங்களை எளிய முறையில் எளிய மொழியில் பகிர்ந்தளிப்பது அதன் சிறப்பு.

இரவு 11 மணிக்கு மேல்தான் வில்பாட்டு களைகட்டும். ஒரு வயிறகன்ற ம்ண்பானையின் கழுத்தில் நீண்ட வில்லில் ஒரு சலங்கை கோர்த்த கயிற்று நாண்-  கட்டப்பட்டிருக்கும். பானையின் குறுகிய வாயினில் வலதுகையில் மட்டை வைத்து அடித்தும், இடக்கையில் நூல்கண்டு சுற்றும் ராபின் கட்டை ஒன்று விரல்களில் இடுக்கி வைத்தும் தட்டுவார். ஜால்ரா, உடுக்கு, பின்பாட்டுப் பாடும் ஒருவர் ஆகிய குழு உடனிருக்கும். அலுப்புத் தட்டாமல் தூங்கவிடாமல் சங்கீதத்துடன் கதையின் உட்கரு தக்க முறையில் விளக்கப்படும்.

வில்பாட்டு ஆரம்பிக்கும் போது”தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லில் பாட- வில்லில்பாட” என்று முழுமுதல் கடவுள் முந்தி முந்தி விநாயகனைப் பாடி வரிசையாக அனைத்து மூர்த்திகளையும் பாடிகொண்டிருக்கும் போது ஊர்ப் பெரியவரின் மகன் வருவார். மரியாதையின் நிமித்தம் மீண்டும் விநாயகன் தொட்டுப் பாடுவார். சற்று நேரத்தில் மற்றொரு முக்கியஸ்தர் வருவார். 
இவ்வாறாக’ஹசேன் ஹுஸேன்’ என்ற ஆட்டம் போன்று மேற்கொண்டு நகராமல் அந்த இடத்திலேயே பாட்டு நிற்கும். இரவு 10-00 மணி தாண்டிய பின்தான் பாடல் தொடர்ந்து தடையின்றி ஓடும்.

மதுரையில் கள்ளழகரைத் தொடர்ந்து வரும் பக்தகோடிகள் நாய்த்தோலில் நீர் எடுத்துப் பாய்ச்சிக்கொண்டு கள்ளரின் மீதான எளிய சந்தத்தில் பாடல்கள் பாடி ஆராதிப்பர். அந்தப்படல்கள் ஒரு கிராமிய சங்கீதம்.
பழனியில் முருகனைப் பாடி வரும் காவடிச் சிந்து போன்றவை காலத்தால் அழியாதது.
அன்புடன் வெ.சசுப்பிரமணியன் ஓம்

2010/2/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Feb 8, 2010, 9:41:52 AM2/8/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஓம் சுப்ரமண்யம் அவர்களே.
இன்னம்பூரான்

2010/2/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

N. Kannan

unread,
Feb 8, 2010, 9:57:30 PM2/8/10
to mint...@googlegroups.com
ஆனால் இந்தக் கோடாங்கி வந்தாலே பயம்.
அதுவும் திண்ணையில் நானும், என் அண்ணா (சித்தி பையன்)வும் படுத்திருப்போம்.
நாயெல்லாம் குலைத்துக் கொண்டே இருக்கும் (வாயைக் கட்டும் வித்தையெல்லாம் எங்கயூர் கோடாங்கிக்குத் தெரியாது ;-)
பயம் அதனால் அல்ல.
வீட்டு மனிதர்கள், அவன் அபசகுனமாக ஏதாவது சொல்லிவிடப் போகிறானா? என்று பயப்படுவதைப் பார்த்து பயம்.
மரணத்தைக் கண்டு அஞ்சிய காலங்கள் அவை (ஆழ்வாரை அறிந்து கொள்ளும் முன் உள்ள காலங்கள் அறியாக்காலங்களே!)
ம்ம்ம்..ஏதேதோ நினைவுகள்.
 
க.>

2010/2/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
ஓம்.

Subashini Tremmel

unread,
Oct 16, 2013, 3:06:47 AM10/16/13
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு பார்வதி,

நான் சக்தி ரதம் இழையில் குறிப்பிட்டிருண்டஹ் கிராம தெய்வங்கள் பற்றிய இழை இது தான். வாய்ப்பிருக்கும் போது பாருங்கள்.

அன்புடன்
சுபா

2010/2/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 16, 2013, 11:31:35 AM10/16/13
to மின்தமிழ்
அன்பார்ந்த சுபா!!

நிச்சயம் பார்க்கிறேன். உண்மையில் இந்த இழை குறித்து நீங்கள் லிங்க் அனுப்பிய போது அதில் இருந்த உருவாரங்கள் சம்பந்தமாக எங்கோ படித்த நினைவு. தேடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி சுபா!!

அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.

2013/10/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

tsparu2001

unread,
Oct 18, 2013, 4:44:54 AM10/18/13
to mint...@googlegroups.com

இந்த இழையில்  சில சிலாரூபங்களை புகைப்பட வடிவில் பார்த்த போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது ப.கருங்குளம் பறைநாச்சியார் கோயில்.. இது பட்டமங்கலத்திற்கருகில் அமைந்திருக்கிறது.

மிக அரிய தகவல்களுடன் கூடிய பின்னணி இந்தக் கோயிலுக்கு உண்டு. இது குறித்து எந்த இழையிலேனும் தகவல் பகிரப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.

கொஞ்சம் தகவல்கள் கீழே தருகின்றேன். இது குறித்து ஏற்கெனவே பகிரப்படவிலையெனத் தெரிந்தால் நான் அறிந்த வரையில் தகவல்கள் முழுதும் தருகின்றேன்.

இந்தக் கோயிலில் ஒரு ஆச்சரியம் பெண்கள் இங்கே வழிபட உரிமையில்லை. ஆனால் இது ஒரு பெண் தெய்வம் கோலோச்சும் ஆலயம்!!!.

மேல்சாதி என்று அறியப்படுபவர்கள் இங்கு பூஜை செய்ய இயலாது.

அன்னைக்கு நிரந்தர சிலாரூபம் கிடையாது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
புது சிலாரூபம் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றது. பழைய சிலா ரூபங்கள் கோயிலைச் சுற்றிலும் சுவர் போல வைக்கப்படுகின்றன. சந்நிதி விளாறிமாரால் ஆனது. இதுவும் இரு வருடங்களுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Wednesday, 16 October 2013 21:01:35 UTC+5:30, tsparu2001 wrote:
 
Subashini Tremmel

unread,
Oct 18, 2013, 5:42:19 AM10/18/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/18 tsparu2001 <tspar...@gmail.com>

இந்த இழையில்  சில சிலாரூபங்களை புகைப்பட வடிவில் பார்த்த போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது ப.கருங்குளம் பறைநாச்சியார் கோயில்.. இது பட்டமங்கலத்திற்கருகில் அமைந்திருக்கிறது.

மிக அரிய தகவல்களுடன் கூடிய பின்னணி இந்தக் கோயிலுக்கு உண்டு. இது குறித்து எந்த இழையிலேனும் தகவல் பகிரப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
பறைநாச்சியார் கோயில் நான் கேள்விப்பட்டதில்லை.  பார்வதி. நீங்கள் எழுதுங்கள்.
தொகுப்பாக நான் நமது கிராம தெய்வங்கள் தொகுப்பில் சேர்த்து வைக்கின்றேன்.

சுபா 

கொஞ்சம் தகவல்கள் கீழே தருகின்றேன். இது குறித்து ஏற்கெனவே பகிரப்படவிலையெனத் தெரிந்தால் நான் அறிந்த வரையில் தகவல்கள் முழுதும் தருகின்றேன்.

இந்தக் கோயிலில் ஒரு ஆச்சரியம் பெண்கள் இங்கே வழிபட உரிமையில்லை. ஆனால் இது ஒரு பெண் தெய்வம் கோலோச்சும் ஆலயம்!!!.

மேல்சாதி என்று அறியப்படுபவர்கள் இங்கு பூஜை செய்ய இயலாது.

அன்னைக்கு நிரந்தர சிலாரூபம் கிடையாது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
புது சிலாரூபம் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றது. பழைய சிலா ரூபங்கள் கோயிலைச் சுற்றிலும் சுவர் போல வைக்கப்படுகின்றன. சந்நிதி விளாறிமாரால் ஆனது. இதுவும் இரு வருடங்களுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Wednesday, 16 October 2013 21:01:35 UTC+5:30, tsparu2001 wrote:
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 18, 2013, 5:45:17 AM10/18/13
to மின்தமிழ், Subashini Tremmel
மிக்க நன்றி சுபா.. ஒரு கட்டுரை போல் தொகுத்து, முழுமையாக விரைவில் தருகிறேன்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2013/10/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 18, 2013, 5:52:43 AM10/18/13
to மின்தமிழ், Subashini Tremmel
பார்வதி,
இந்தப் பதிவில் நான் பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களைப் பாருங்கள். நெல்லையில் எடுக்கபப்ட்ட படங்கள் தான். இக்கோயில், இதில் உள்ள தெய்வம்  தெரியுமா?

சுபா
image4.jpg
back.jpg
front.jpg
image1.jpg
image2.jpg
image3.jpg

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 18, 2013, 11:24:45 PM10/18/13
to மின்தமிழ்
நேற்றே இதை எழுத நினைத்தேன் சுபா. இதைப் பார்த்துத் தான் பறைநாச்சியார் கோயிலாக இருக்குமோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் திருநெல்வேலி பக்கத்தில் என்று சொன்னதும் வேறு கோயில் என்று தெரிந்து கொண்டேன். பறைநாச்சியார் கோயில் பட்டமங்கலத்திற்கருகில் இருக்கிறது.

இருப்பினும் புகைப்படங்கள் தரவிறக்கி இருக்கிறேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பறை நாச்சியார் கோயில் குறித்தும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2013/10/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

வீம்பன்

unread,
Oct 19, 2013, 2:09:17 AM10/19/13
to mintamil
வணக்கம்.

2013/10/19 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
பறைநாச்சியார் கோயில் காரைக்குடிக்கு அருகேயுள்ள பட்டமங்கலத்திற்கருகில் இருக்கிறது.
புகைப்படங்கள் தரவிறக்கி இருக்கிறேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பறை நாச்சியார் கோயில் குறித்தும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

ஒரு விடுமுறைநாளில் சென்று வணங்கி வர வேண்டும்.
தங்களது பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 21, 2013, 10:13:27 AM10/21/13
to மின்தமிழ்
ஸ்ரீபறை நாச்சியார் அம்மன் திருக்கோவில், ப. கருங்குளம்: 

கோயில் அமைந்திருக்கும் இடம்:
இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு. (திரு.காளைராசன் அவர்கள் கவனத்துக்கு..காரைக்குடியில் இருந்து பட்டமங்கலம் போய், அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்..)

கோயிலின் முக்கிய அம்சங்கள்:

1. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.
2. மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்
3. ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலில் நுழைந்து வழிபட இயலும்.  அதுவும் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மேல்சட்டை அணியாது தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.
4. அன்னை, எட்டுத் திருக்கரங்கள் கொண்ட திருவுருவினள். ஏழு திருக்கரங்களில் சூலம் முதலான வெவ்வேறு விதமான ஆயுதங்கள், கீழ் இடது திருக்கரத்தில் அன்னக் கிண்ணம் தாங்கி அருளுகின்றாள்.
5. அன்னைக்கு நித்தியப்படி பூஜைகள் கிடையாது. வேண்டுதல்களின் படி பூஜை, அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது. இது 'சிறப்புக் கொடுப்பது' என்று அழைக்கப்படுகின்றது.
6. கோயிலுக்கு வெளியே. வெளியே திறந்த வெளியில், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, நொண்டி, சப்பாணி என்ற பெயர்களில் காவல் பூதங்களும், பண்டாரம், சந்நியாசி பாம்பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் என்று பரிவார மூர்த்திகளும் இருக்கின்றனர்.
7. இவர்களின் பிம்பங்களும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.
8. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்திலேயே பிம்பங்கள் புதுப்பித்தலும் நடை பெறுகிறது.

கோயில் குறித்த கர்ண பரம்பரைக் கதை:

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், திண்டுக்கல் அருகில் கரந்தைமலை என்னும் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் இந்த அம்பிகை. அவருக்கு அந்தண அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒரு நாள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த அவர் மனைவி, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு திரும்பி விட்டாள். குழந்தை துறுதுறுப்பானவள். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அவளை கண்காணிக்க, அர்ச்சகரால் இயலவில்லை. வேலைப் பளு வேறு சேர்ந்து கொண்டது. குழந்தை அங்கிருப்பதை மறந்தே போனார் அவர்.

உச்சி கால பூஜை முடிந்தது. கோயிலைப் பூட்டி விட்டுத் திரும்பினார். மனைவி கேட்ட முதல் கேள்வி, 'குழந்தை எங்கே?'.

பொதுவாக, நடை சார்த்தி விட்டால், பின்னர் குறிப்பிட்ட காலத்தில் திறக்கும் வரை நடுவில் திறக்கக் கூடாதென்பது விதி. ஆகவே, கோயிலைத் திறவாமல், சாவித் துவாரம் வழியே, மகளின் பெயர் கூறி வருமாறு அழைத்தார். ஆனால் ஒலித்து ஓர் அசரீரி. 'உன் மகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாலையில் அழைத்துச் செல்'.

அர்ச்சகர் மகிழ்வுடன் வீடு திரும்பினார். ஆனால் 'பெற்ற மனம் பித்து' இல்லையா.. அம்பிகை தன் குழந்தையோடு விளையாடுகிறாள் என்பதை நம்ப மறுத்தது தாயுள்ளம். மனைவி கோபம் மிகக் கொண்டாள். அர்ச்சகரின் கூற்றை நம்பவில்லை. அவர் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டு வந்து, பொய் கூறுவதாகச் சந்தேகித்தாள். உடனே தன் குழந்தை வர வேண்டும் என்றாள். இல்லாவிட்டால், தான் இறக்கப் போவதாகக் கூறி பயமுறுத்தினாள்.

வேறு வழியில்லாமல், அர்ச்சகர் கோயிலுக்குச் சென்றார். தேவியிடம் மன்னிப்புக் கோரி, பூட்டைத் திறந்தார். ஆனால் அந்தோ.. கோயில் சருவறையில், குழந்தை இறந்து கிடந்தது.

'நான் கொடுத்த குழந்தை. இதோடு விளையாடுகிறேன் என்று கூறியும், நம்பாமல் கூட்டிப் போக வந்தாய். இது உனக்குக் கிடைக்காது' என்ற அசரீரி ஒலித்தது.

கோபம் கொண்டார் அர்ச்சகர். வேதனையுடன் சாபமிட்டார். 'நான் உனக்கு ஆத்மார்த்தமாகப் பூஜைகள் செய்தது நிஜமெனில், கற்கோயில் உனக்கில்லாமல் போகட்டும். என் இனத்தார் யாரும் உனக்குப் பூஜை செய்ய மாட்டார்கள்'.

அன்னையின் கற்கோயில் அழிந்தது. மூல விக்ரகம், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஊராரால் உப்பாற்றில் விடப்பட்டது.

இது மிதலைக் கண்மாயில் ஒதுங்கியதாகக் கூறப்படுகின்றது. இதை எடுக்க பலரும் முயன்ற போது, சேரியில் இருப்பவர்களின் கைகளில் மட்டுமே சிக்கியது இந்தப் பெட்டி.

பெட்டி திறக்கப்பட்டு, தேவியின் திருவுருவம் வெளியே எடுக்கபட்டது. ஊர் பெரிய மனிதரான அம்பலக்காரருக்கு ஒரு மனக்காட்சி தென்பட்டது. தனக்கு இந்த ஊரில் இடம் கொடுத்தால், இந்த ஊரை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும், தனக்கு கற்கோயில் அல்லாமல், விளாறிமார் கொண்டு கோயில் கட்ட வேண்டும் எனவும், ஒரு குழந்தையின் மறைவுக்குத் தான் காரணமாக இருந்ததால், தனக்கும் நிரந்தர உருவம் வேண்டுவதில்லை, சிதைந்து மாறும் மண் பொம்மையாகவே வழிபாடு செய்தால் போதும் என்றும், சேரியில் இருப்போரே தன்னை பூஜிக்க வேண்டும் என்றும் அன்னை கூறினாள். மேலும், ஒரு பெண்ணின் கோபத்தாலும் சந்தேகத்தாலுமே தனக்கு இந்த நிலை வந்ததால், தன்னை பெண்கள் தரிசிக்கக் கூடாது என்றும் கூறினாள்.

 அன்னையின் கட்டளைகளை ஊரார் ஏற்றுக் கொண்டனர். விளாறிமாரால் கோயில் கட்டப்பட்டு,   பிம்பம் கோயிலினுள் வைக்கப்பட்டது. அன்னைக்கு 'பறைநாச்சியார்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அம்பலக்காரர் அன்னையுடன் ஐக்கியமானார். அவரது திருவுருவும், சப்த கன்னியர் எழுவரின் திருவுருவங்களும் அன்னையின் அருகில் கோயிலில் இருக்கிறது.

(தொடர்ச்சி நாளை..)

2013/10/19 வீம்பன் <kalair...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 21, 2013, 2:22:09 PM10/21/13
to mintamil
மேற்கொண்டு பரநாச்சியம்மன் பற்றித் தங்கள் பதிவு காண ஆவல். பரநாச்சியம்மன் என்றும் வணங்கப்படுகிறார். இப்பகுதியில் பிள்ளைகளுக்கு  நாச்சியப்பன், நாச்சம்மை என்று பெயர் இடப்படுகிறது. இரண்டு ஆண்டுக்குஒருமுறை மண்ணால் செய்யப்படும் திருஉருவம் ஊர் சதுக்கத்தில் வைக்கப்பட்டு எண்ணை முழுக்குச் செய்யப்பட்டு வலுஏறுகிறது. புரவிகளுடன் ஆலயத்திற்கு எழுந்தருளல் காண்கிறது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அன்னை அருள்பாலிக்கிறாள். தாங்கள் விவரித்துள்ள கர்ண பரம்பரைக் கதி புதிய செய்தி. 
நன்றி. சொ.வினைதீர்த்தான்.

அருட்கவி கு.செ.இராமசாமி அவ்ர்கள் (சிவகங்கை) பாடல் பகிர்ந்துள்ளேன்.
கருங்குளம் ஸ்ரீ பரநாச்சியார் பதிகம்.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! 

சித்திர விதானமுடன் திருமதில் கோபுரம்,
தேவி நீ நாடவில்லை!
செய்பிழை யாதெனிலும் உய்திதருவாய் அன்றிச்
சிறிதேனும் கோபமிலை!

பக்தியொடு நின்பாதம் பாடுவேன்! பாடுவேன்!
பக்கம்வா, வா, அன்னையே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 1

பெருகிப் புறப்பட்ட நதியின் அலை தாலாட்டப்
பெட்டியில் வந்த பெண்ணே!
பேர்கொண்ட கண்மாயில் ஊர்வந்து கொண்டாடப்
பிறை சூடி நின்ற பொன்னே!

பருகிவரும் நீரும் என் பசிதீர்க்கும் சோறும் உன்
பரி வல்லவோ அன்னையே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 2

எங்கள் குலம் காக்கும் ஈஸ்வரியும் அல்லவோ!
என்னம்மை நீ யல்லவோ!
எதுநான் விழைந்தாலும் இந்தா! எனத்தரும்
ஈடற்ற தாயல்லவோ?

பங்குனியில் செவ்வாயில் பொங்கலோடு புரவியும்
படைப்போம் உனக் கன்னையே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 3

கொட்டி குதித்தாடும் கும்மியிம் குரவையும்
கோதையே உனதுயோகம்!
குதிரைகள் வரிசையும் வனிதைகள் கவிதையும்
கூறும் சஹஸ்ரநாமம்!

பட்டுப் பாவடை மலர்மொட்டுப் பூவாடையின்
பரிமளம் கமழ் அன்னையே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 4

பூக்கட்டும் கரகத்தில் பின்முகம் காட்டுவாய்
புகையில் பகை போக்குவாய்!
பொன்கட்டும் பயிரிலே மணிகட்ட நன்றாகப்
பொலி கட்ட விளை வாக்குவாய்!

பாக்கட்டும் நாவினால் பாவாய் உனைக்கட்டப் 
பாடினேன் நலம் ஆக்குவாய்!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 5

மாதா உனைப்போற்றும் மைந்தர்கள் வைரமணி
மகுடபதி செல்வநாதர்!
வருவார்தம் பசிதீர ஒருவாய் கொடுத்தாலும்
மண்ணிலே அவர் குபேரர்!

பாதார விந்தமே பற்றுவேன்! பற்றுவேன்!
பரம கல்யான நிதியே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 6

முத்து முத்தான தமிழ் மூவாத செந்தமிழ்
மொய் குழல் உனது தமிழே!
மொகு மொகுவென வண்டுகள் மொய்க்கும் மணம் தங்கும்
மூடி இல்லாத சிமிழே!

பத்தினிகள் காவலாய் சுற்றி வரும் உத்தமி 
பாலகன் எனக்கும் அருளே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 7

அன்னாய் என் வெற்றிகள் அத்தனையும் உன்னுடைய
அருளால் கிடைத்த வெற்றி!
அதிகாரம் செல்வங்கள் மனைமாதர் மக்களும்
அடியேன் புரிந்த பக்தி!

பதினாறு பேறுகள் தரும் தேவ தேவியே!
படைதாங்கி வருக சுற்றி!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 8

மஞ்சளொடு குங்குமம் மங்கலம்! மங்கலம்!
வண்ணமலர் மாலை தீபம்!
வாயூறும் பானகம்! மதுரம் மனேகரம்!
மனிகள் குலுங்கும் நாதம்!

பஞ்சமும் நோயும் வராது பரிபலிப்பாய்!
பற்றினேன் உனது பாதம்!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 9

திருவாக்கும் சக்தியே! தீராதவல்வினை
தீர்க்கும் மகா சக்தியே!
தேகத்தில் வாக்கில் என் சித்தத்தில் ஜீவனில்
திகழும் பரா சக்தியே!

பரயோக சிவஞான சக்தியே! சக்தியே!
பாடுவேன் உன் வெற்றியே!
பல்கும் கருங்குளம் மல்கவளர் சக்தியே
பரநாச்சி தேவி உமையே! 10

அருட்கவி கு.செ.இராமசாமி.

Subashini Tremmel

unread,
Oct 22, 2013, 3:21:05 AM10/22/13
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு பார்வதி,

தங்களின் முயற்சி எனக்கு நிறைந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.  

இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசித்தேன். சடங்குகள் பிரத்தியேகமாக இக்கோயிலுக்கு அமைந்திருப்பது தெரிகின்றது. வாசித்த போது சில கேல்விகள் எழுந்தன. கட்டுரையை தாங்கள் முழுமையாக்கிய பின்னர் அவற்றை இங்கே பதிகின்றேன். 

கர்ண பரம்பரைக் கதை மறை பொருளாக எளிமைப்படுத்தப் பட்டு வழக்கில் இடம் பெற்றிருப்பது போலத் தெரிகின்றது. 

இப்படி ஒவ்வொரு ஊருக்கும் அங்குள்ள ஆலயங்களுக்கு என பல கதைகள். மக்கள் வழக்கில் அவை எவ்வாறு அறியப்படுகின்றன என்பதைப் பதிய வேண்டிய பணி பெரிது.  நம்மால் இயன்றதைச் செய்வோம்.

சுபா

2013/10/21 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 22, 2013, 3:56:34 AM10/22/13
to mintamil, Subashini Tremmel
திருமிகு பார்வதி விவரித்துள்ள செவிவழிக் கதை போன்று திருப்பூத்தூர் திருத்தளியார் கோவிலும் வழங்கப்படுகிறது. திருப்புத்தூர் பாடல்பெற்ற பாண்டிய நாட்டின் 14 தலங்களில் ஒன்று.
அர்த்தசாமப் பூசைக்குப் பின் கோவில் காவல் வயிரவரிடம் ஒப்படைக்கப்படுவது சிவன் கோவில் முறை. பூசகர் கோவில் அடைத்த பிறகு உள்ளே விடப் பட்ட புதல்வனை அனுப்புமாறு வற்புறுத்தச் சாவித்துவாரத்தின் வழியே வைரவர் பிள்ளையைப் பிய்த்துப் பகுதிகளாக அனுப்பியதாகக் கதை கூறப்படுகிறது. இன்றும் வயிரவருக்குப் பயம் கலந்த பக்தி நிலவுகிறது. 
அன்புமயமான இறைவனுக்கு இதுபோன்ற கதைகள் வழிவழியே உரைக்கப் பெறுவது ஆய்வுக்குரியது.

தொண்டனுக்காக நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறிய கண்ணுதல் என்று தேவாரத்தில் பாடப்பட்டவனுக்குப் பிற்காலத்தில் எழுகிற செவிவழிக் கதை ஆச்சரியமளிக்கிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

திருநாவுக்கரசர் தேவாரம்.

 மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 22, 2013, 5:29:31 AM10/22/13
to மின்தமிழ்
புரவி எடுப்புத் திருவிழா:

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுகிறது. தை  மாதம், கோயில் பூசாரி, 'பிடி மண்' எடுத்து குயவர்களிடம் தருவார். குயவர்கள், பரம்பரையாக இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள். அவர்கள், மண்ணைப் பெற்றுக் கொண்டு, அதைச் சேர்த்து, அன்னைக்குப் புதிய  திருவுருவம்  செய்வர். பங்குனி மாதத்திற்குள்,  தேவிக்கும், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவருக்கும்  திருவுருவங்கள் செய்து விடுவார்கள்.

பங்குனி மாதம், ஊரே விழாக் கோலம் பூணும். பங்குனி கடைசி செவ்வாய் திருவிழா. அதற்கு சுமார் பத்து நாட்கள் முன்பே, ஊர்க்கட்டுப்பாடுகள் செயலுக்கு வரும். கர்ப்பிணிகள், வீட்டு விலக்கானோர், புதிதாகக் குழந்தை பிறந்தோர், ஊருக்கு வெளியே தங்க வைக்கப்படுவார்கள்.

கடைசி செவ்வாய்க்கு முந்தைய வெள்ளியன்று, கோயில் அமைக்கத் தேவையான விளாறிமார் சேகரிப்புத் துவங்கும்.

இதற்காக, நாச்சியார்புரம் என்னும் ஊருக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
போகும் வழியெல்லாம், இவர்களுக்கு  உணவு, நீர் மோர் முதலியவை
வழங்க மக்கள் கூட்டம் காத்திருக்கும்.

நாச்சியார்புரத்தில் இருக்கும் விளாறிமார் தழைகளை சேகரித்துக் கொண்டு, அன்று இரவு கம்பனனூர் ஊருணிக் கரையில் தங்குவார்கள்.  சனிக்கிழமை அதிகாலை மீண்டும் துவங்கும் யாத்திரை, கோயில் வந்து நிறைவுறும்.

சனிக்கிழமை, பழைய கோயில் அமைப்பு களையப்படும்.

ஞாயிறு அதிகாலை, கோயிலில் உரிமையுள்ளோர் புதுக் கோயிலை நிர்மாணிக்கத் துவங்குவார்கள். மாலைக்குள் விளாறிமார் கொண்டு, கோயில் அமைக்கப்படும்.

செவ்வாய் காலையில், கோயில் உரிமை பற்றி, பூசாரிகளுக்கு அம்பலக்காரர் எழுதிக் கொடுத்த பெரிய அரிவாள், ஊர்வலமாக ஊருக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அது திரும்ப கோயிலுக்கு வந்ததும், அனைவரும் அன்னையை அழைத்து வரப் புறப்படுவார்கள்.

ஊர் சதுக்கத்தில்,(இதை சவுக்கை என்றழைக்கிறார்கள்)  தைலாபிஷேகம் முதலியன செய்து அன்னையின் புது  திருவுருவம்  தயாராக இருக்கும்.  அன்னையின் புதிய திருவுருவம், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவ ரையும், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். இது 'புரவி எடுப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

அந்த சமயத்தில், ஊரில் மின் விளக்குகள் அனைத்தும், தெருவிளக்கு உள்பட அணைக்கப்படும்.  எண்ணை தீபங்கள் மட்டுமே எரியும். இந்த ஊர்வலம், கோயிலுக்கு வந்து நிறைவுறும். செவ்வாய் அன்று இரவு முழுவதும் வெளியே தரிசனத்துக்காக அன்னை கொலுவிருப்பாள். அன்று மட்டுமே பெண்கள் தரிசிப்பார்கள். புதன் விடியலில், கோயிலுக்குள் அன்னையின் திருவுரு வைக்கப்படும். பழைய திருவுரு, கோயிலுக்கு வெளியே சார்த்தி வைக்கப்படும்.

புதனன்று, வேண்டுதல்கள், பூசைகள் என்று மிகப் பெரிய விழாவாக நடைபெறும். 

பொதுவாக, அன்னைக்கு சுத்த பூசை என்னும் சாத்வீக பூஜையே நடைபெறுகிறது.  பலிகள் கொடுப்பதானால், பரிவார மூர்த்திகளுக்குக் கொடுப்பது வழக்கம்.

நிவேதனத்துக்கு கைக்குத்தல் அரிசி தான் பயன்படுத்துகிறார்கள். பத்து நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள். பால் பொங்கல் பிரதான நிவேதனம். கோயில் நிவேதனங்கள் வெளியில் இருந்து ஏற்கப்படுவதில்லை. கோயிலில் உள்ளோரே தயார் செய்கிறார்கள்.

அன்னை பறை நாச்சியார், மிகுந்த சக்தியுள்ள கண்கண்ட தெய்வமாக, ஆத்மார்த்தமாக வழிபடப்படுகின்றாள். அருள் தந்து காக்கின்றாள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2013/10/22 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 22, 2013, 5:30:24 AM10/22/13
to மின்தமிழ்
அம்பிகையின் திருவருட் பதிகப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!!. தங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி!!

2013/10/21 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 22, 2013, 5:31:48 AM10/22/13
to மின்தமிழ்
////வாசித்த போது சில கேல்விகள் எழுந்தன. கட்டுரையை தாங்கள் முழுமையாக்கிய பின்னர் அவற்றை இங்கே பதிகின்றேன். 

கர்ண பரம்பரைக் கதை மறை பொருளாக எளிமைப்படுத்தப் பட்டு வழக்கில் இடம் பெற்றிருப்பது போலத் தெரிகின்றது. ////

ஆமாம் சுபா, தாங்கள் சொல்வது போல் நிறைய கேள்விகள் எழுந்தன. அன்னை என்று அறியப்படுபவள் குழந்தையைக் கொல்வாளா?!!. என்ன பின்னணி இது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

2013/10/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Oct 22, 2013, 8:21:48 AM10/22/13
to mintamil
வணக்கம்.

2013/10/22 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

அன்னை என்று அறியப்படுபவள் குழந்தையைக் கொல்வாளா?!!. என்ன பின்னணி இது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

“நடைசாத்திய பிறகு எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.  அவ்வாறு திறந்தால், திறந்தவரின் வம்சாவழி அழியும் நிலை ஏற்படலாம்.“  என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கதைகளாக இருக்கலாம்.

Subashini Tremmel

unread,
Nov 27, 2013, 4:10:03 PM11/27/13
to மின்தமிழ், Subashini Tremmel

ஈரோடு முனியாண்டி சாமி கோயில்.

பன்னாரி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு பவளாவும் நானும் ஈரோட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் சாலையில் கண்களைக் கவரும் வண்ணம் ஒரு கோயில் தென்பட்டது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஓடிச் சென்று கோயிலில் சுவாமியையும் வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். அக்கோயிலின் சில படங்கள்.

Inline image 1
முன்புறம்

Inline image 2
முன்புறம் முனியாண்டி சாமி மேலும் சில விக்ரகங்கள்

Inline image 3
மகுடி ஊதும் மனிதன், 2 மதுரை வீரன் சிலைகள், முனிவர் அருகில் முருகன் - வள்ளியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

இந்தக் கோயில், மக்கள் காலத்துக்கும் தமது தேவைக்கும் ஏற்ப சுவாமி வடிவங்களை உருவாக்கி வழிபாட்டில் இணைத்து வைக்கும் சமூகப்பரிணாமத்தைக் காட்டும் நல்லதொரு உதாரணம்.

மேலும் சில புகைப்படங்கள் நாளை தொடரும்.

சுபா
Erode_muni2.jpg
Erode_muni4.jpg
Erode_muni1.jpg

meenavan2

unread,
Nov 27, 2013, 9:29:35 PM11/27/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், ksuba...@gmail.com

அன்புள்ள சகோதரி சுபா அவர்களே
தாங்கள் அனுப்பிய படத்தில் உள்ள பொம்மைகளை மதலைகள் என்று அழைப்பார்கள்.குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக் கடனுக்
காக அய்யனார் கோவில்களில் நடக்கும்  புரவி எடுப்பு என்று மண்ணால் குதிரை செய்து ஊரிலுள்ள பொது இடத்தில் மக்கள் வழி
பாட்டுக்காக வைத்திருந்து மறு நாள் அய்யனார் கோவிலில் கொண்டு போய் வரிசையாகக் ஆல்யத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ வைப்பர்.அப்போது குழந்தைபோல் செய்யப் பெற்றுள்ள இந்த மதலையும் த்னியாகக் குவியலாக்  வைக்கப்படும்.நாள
டைவில் இந்த மதலைகளின் தலை கை போன்றன விளையட்டுப் பிள்ளைகளாலோ வேறு காரணங்களாலோ உடைந்து போக
வாய்ப்பு உண்டு.தாங்கள் அனுப்பிய படங்களில் உள்ள ஒரு குவியல் சமீபத்தில் வைக்கப் பட்டது.ம்ற்றொன்று பல நாள்களுக்கு
முன்னர் வைக்கப்பட்டவை.அதனால் உடைந்து  போயுள்ளன.இப்பிரார்த்தனையைச் செய்ய இயலாதோர் இவற்றை வணங்க்கி
னாலும் பலிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வணங்கிய காட்சியே தங்களின் படப்பதிவு.

காப்பியக் கவிஞர்.நா,மீனவன்

On Saturday, February 6, 2010 9:27:03 PM UTC+5:30, Suba.T. wrote:
முதல் மடலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கோயில். இது திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கின்றது. ஒரு சிறு கோயில்.  அதன் வாசலில் front, back, image1  என நான் பெயரிடப்பட்டிருக்கும் வடிவங்கள் இருக்கின்றன.
 
பக்கத்தில் உள்ள கோயிலில் ஏனைய வடிவங்கள்.
 
இது என்ன கோயில் எதற்காக இப்படிப்பட்ட சிலைகள், சிலைகளின் தலைகளில் ஓட்டைகள் போடப்பட்டுள்ளன, கீழே வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடந்ததற்கான தடம் தெரிகிறது.. பானைகள் ஒரு மண் புதர்மேல் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மன்னைக் குவித்து மாலை போட்டு வழிபாடு..
 
விளக்கம் அறிந்தவர்கள் எழுதுங்கள். பிறருக்கும் பயனளிக்கும்.
 
அன்புடன்
சுபா

Subashini Tremmel

unread,
Nov 28, 2013, 3:29:13 AM11/28/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/28 meenavan2 <meen...@gmail.com>

தகவல்களுக்கு நன்றி ஐயா. 

ஈரோடு முனியாண்டி சாமி கோயிலின் படங்கள் சிலவற்றை இன்று மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா
 
On Saturday, February 6, 2010 9:27:03 PM UTC+5:30, Suba.T. wrote:
முதல் மடலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கோயில். இது திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கின்றது. ஒரு சிறு கோயில்.  அதன் வாசலில் front, back, image1  என நான் பெயரிடப்பட்டிருக்கும் வடிவங்கள் இருக்கின்றன.
 
பக்கத்தில் உள்ள கோயிலில் ஏனைய வடிவங்கள்.
 
இது என்ன கோயில் எதற்காக இப்படிப்பட்ட சிலைகள், சிலைகளின் தலைகளில் ஓட்டைகள் போடப்பட்டுள்ளன, கீழே வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடந்ததற்கான தடம் தெரிகிறது.. பானைகள் ஒரு மண் புதர்மேல் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மன்னைக் குவித்து மாலை போட்டு வழிபாடு..
 
விளக்கம் அறிந்தவர்கள் எழுதுங்கள். பிறருக்கும் பயனளிக்கும்.
 
அன்புடன்
சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 28, 2013, 5:59:00 AM11/28/13
to மின்தமிழ்
முனிவர் அருகில் இருப்பது,  ஒரு பெண்ணுடன் கூடிய திருவுருவம்,மட்டும் வேலுடன் கூடிய வீரன். ஆகவே, முனியாண்டி சுவாமியின் பத்தினியாகவோ அல்லது பொம்மி/வெள்ளையம்மாளுடன் கூடிய மதுரை வீரனாகவோ இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறதென்று நினைக்கிறேன். முதல் படத்தில் நாய் வாகனத்துடன் இருக்கும் பரிவார தெய்வத்தின் பெயர் தெரிந்து கொள்ள முடியுமா?

மதுரைக்கு அருகில், பாண்டி கோயில் என்னும் தலத்தில்,  கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, ஈசனை நோக்கித் தவமிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனே பாண்டி முனி என்னும் திருநாமத்துடன் வழிபடப்படுகிறார். முனியாண்டி சுவாமி என்னும் திருநாமத்தைக் கேட்டதும் இவ்விரு தெய்வங்களுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

2013/11/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

meenavan2

unread,
Nov 28, 2013, 6:04:20 AM11/28/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், ksuba...@gmail.com

பார்வதி இராமச்சந்திரன் அவர்களே
கருங்குளம் பறனாச்சி கோயில் பற்றி ஒரு செய்தி.புரவி எடுப்புத்
திருவிழா நாளில் கோவிலிலும் வீதிகளிலும் மின்சார விளக்கு
எரியாது.எண்ணெய் விளக்குகள் தான் எரியும்.
காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 28, 2013, 6:12:28 AM11/28/13
to மின்தமிழ்
meenavan2 <meen...@gmail.com>
////கருங்குளம் பறனாச்சி கோயில் பற்றி ஒரு செய்தி.புரவி எடுப்புத் 
திருவிழா நாளில் கோவிலிலும் வீதிகளிலும் மின்சார விளக்கு
எரியாது./////

மிக்க நன்றி ஐயா!!..

நான் கட்டுரையில்,

////ஊர் சதுக்கத்தில்,(இதை சவுக்கை என்றழைக்கிறார்கள்)  தைலாபிஷேகம் முதலியன செய்து அன்னையின் புது  திருவுருவம்  தயாராக இருக்கும்.  அன்னையின் புதிய திருவுருவம், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவ ரையும், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். இது 'புரவி எடுப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

அந்த சமயத்தில், ஊரில் மின் விளக்குகள் அனைத்தும், தெருவிளக்கு உள்பட அணைக்கப்படும்.  எண்ணை தீபங்கள் மட்டுமே எரியும். ////

என்று குறித்திருக்கிறேன். திருவிழா நாள் முழுவதும் மின் விளக்குகள் எரியாது என்பது எனக்குப் புதிய செய்தி. அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2013/11/28 meenavan2 <meen...@gmail.com>
--

Suba.T.

unread,
Mar 18, 2014, 6:51:59 AM3/18/14
to மின்தமிழ், Subashini Tremmel

​ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - 2

இந்தப் பதிவில் மேலும் சில படங்களை இணைக்க நினைத்திருந்தேன். இன்று தான் அதற்கு வேளை அமைந்தது.

இதோ தொடர்ச்சியாக ஈரோடு முனியாண்டி கோயில் படங்கள் சில. 

Inline image 1
சப்தமாதாக்கள்.. கிராமிய வழக்கில் இப்படி காட்சியளிக்கின்றனர்

Inline image 2
சப்தமாதா சன்னிதி

Inline image 3
முனியாண்டி சாமியின் திருவுருவங்கள் என்றே நினைக்கின்றேன். அருகில் காவலாளி வடிவில் இருவர் நிற்பதை பாருங்கள். ஆலய வழிபாட்டில் மக்கள் காணும் காட்சியை பிரதிபலிக்கும் அம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக சமூக வழக்குகள் உள்வாங்கிக் கொள்வதை காட்டும் ஒரு உதாரணம்.

Inline image 4
முனியாண்டி சாமி  வாகனம்

Inline image 5
கோயில் கதவு பூட்டியிருக்கின்றது. கதவின் வர்ணமும் எளிய ஓவியங்களும்  அழகாக கண்களைக் கவர்வதாக இருக்கின்றன.

Inline image 6
மகாலக்‌ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???

Inline image 7
சுவாமிக்கும் ஊஞ்சல்கள்.. கோயிலின் முன்புறம்.

இப்பதிவின் முந்தைய படங்களை காண விரும்புவோர் http://image-thf.blogspot.de/2013/11/blog-post_27.html காணலாம். 

சுபா

2013-11-27 22:10 GMT+01:00 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

​​
ஈரோடு முனியாண்டி சாமி கோயில்.

பன்னாரி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு பவளாவும் நானும் ஈரோட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் சாலையில் கண்களைக் கவரும் வண்ணம் ஒரு கோயில் தென்பட்டது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஓடிச் சென்று கோயிலில் சுவாமியையும் வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். அக்கோயிலின் சில படங்கள்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 7:06:06 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
வேல் வைத்திருக்கும் சிலை, மதுரை வீரனுடையது என்று நினைக்கிறேன்!.. முருகன் இம்மாதிரி சிலாரூபத்தில் இருப்பதை நான் பார்த்ததில்லை..

அது போல், 'சப்த மாதாக்கள்' என்று தாங்கள் குறிப்பிடுபவர்கள், கன்னிமார் தெய்வங்கள் என்று கருதுகிறேன்.. அவர்களின் உடை, சிறுமிகள் அணியும் பாவாடை சட்டையாக இருப்பதைப் பார்க்கும் போது இது சரிதான் என்று தோன்றுகிறது..

கன்னிமார்கள் சிறுதெய்வ வழிபாட்டின் கீழ் வருவார்கள்.. 

அவர்கள் பெயர், பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-18 16:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:19:45 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
//அருகில் காவலாளி வடிவில் இருவர் நிற்பதை பாருங்கள்.  //

மதுரைப்பக்கம் இவர்களைப் பட்டாளம் என்கிறார்கள்.  இவர்கள் சூழ நின்று அருள் புரியும் அம்மனைப் பட்டாளம்மன் என அழைக்கின்றனர்.  தளபதி கருப்பண்ண சாமி. பட்டாளம்மன் தர்பார் என்ற பெயரில் காவலர்கள் புடைசூழ அம்மன் கொலுவிருப்பதைக் காண முடியும்.

2014-03-19 16:36 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
 
Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:20:34 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
மதுரை வீரன் என்றால் பக்கத்தில் இரு மனைவியரும் இருப்பார்கள்.  தனியாக மதுரை வீரனைப் பார்த்ததில்லை. 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 7:24:04 AM3/19/14
to மின்தமிழ், Geetha Sambasivam, Subashini Tremmel
பரிவார தேவதைகள் என்று நாம் சொல்வதையே கிராமீய வழக்கில் பட்டாளம் என்கிறார்கள் கீதாம்மா!.. கருப்பண்ண சாமியின் சிலா ரூபங்கள் அரிவாளுடன் இருப்பார்கள்.. பரங்குன்றத்தில் சிவராத்திரி இரவில், கருப்பண்ணசாமியின் அரிவாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு செய்யப்படுவதுண்டு.. சந்தனம் பூசி, பெட்டியில் எடுத்துச் சென்று வழிபடுவார்கள்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 16:49 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
    
பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 7:26:37 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
தனியாகவும் மதுரை வீரன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. கொஞ்சம்(கொஞ்சம் என்ன.. நிறையவே) யோசிக்கணும்..:)))!! காவல் வீரர்கள் கையில் வேலேந்தி இருப்பது மரபு.. இது வாழ்ந்து மறைந்த காவல் வீரனாகவும் இருக்கலாம்.. ஆனா கண்டிப்பா முருகன்னு தோணலை:))))))!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Wed, Mar 19, 2014 at 4:50 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
                   
coral shree

unread,
Mar 19, 2014, 7:27:58 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பின் சுபா,

அற்புதம். படங்கள் அனைத்தும் மிக அழகாக அமைந்துள்ளது. அதிலும், சப்த கன்னிகளும், முனியப்பசாமி, கருப்பண்ணசாமி படங்களும் மிக அருமை! வாழ்த்துகள் சுபா..நன்றி.

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:28:14 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
முருகன்னு நானும் சொல்லலை. சுடலையாண்டி தென் மாவட்டங்களில் தான் அதிகம். பவளசங்கரியே வந்து சொல்லட்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:29:17 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஆஹா,  விடாது கருப்பே தான். :))) பவளசங்கரியை நினைச்சேன், வந்தாங்க நூறு வயது! 

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:30:24 AM3/19/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
கருப்பண்ணசாமி குலதெய்வமாக இருக்கும் வீடுகளில் அரிவாள், உலக்கை போன்றவற்றை பூஜை அறையில் வைத்து வழிபடுவது உண்டு.  நேரிலேயே பார்த்திருக்கேன்.

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:31:10 AM3/19/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
கிராமிய வழக்கில் தான் (மதுரைப்பக்கம் எனக் குறிப்பிட்டிருந்தேன்) நானும் பட்டாளம் என்றேன். :))))

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 7:31:44 AM3/19/14
to Geetha Sambasivam, மின்தமிழ், Subashini Tremmel
//மகாலக்‌ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???///

அப்படின்னு சுபா கேட்டிருந்தாங்கல்லம்மா!.. நீங்க சொன்னா மாதிரி பவளாக்கா வந்து சொல்லீட்டாங்க!..ரொம்ப நன்றி பவளாக்கா!.. கீதாம்மா சொன்ன மாதிரி ஆயுசு நூறு உங்களுக்கு!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

coral shree

unread,
Mar 19, 2014, 7:32:31 AM3/19/14
to மின்தமிழ், Geetha Sambasivam
கீதாஜி, பொதுவாக கிராமப் புறங்களில் காவல் தெய்வங்கள் வைக்கும்போது, அந்த ஊரில் பட்டாளத்திற்குச் சென்று வீர மரணம் அடைந்தவர்களின் நினைவுச் சின்னங்களாகத் தான் அதை வைத்திருப்பதாக நான் அறிகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்றவாரு உருவம் கொடுத்திருக்கலாம். பொதுவான சில அடையாளங்கள் தவிர..  முனியப்ப சாமி கூட சில இடங்களில் இப்படித்தான் உருவாகியிருக்குமோ என்று தோன்றுகிறது.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Mar 19, 2014, 7:34:33 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஆனாலும் கீதாஜி விடாது கருப்புன்னு சொல்றீங்களே... இது அதுல சேர்த்தியா? அப்டீல்லாம் இல்லைதானே..

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
328.png

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 7:37:18 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஹிஹிஹி, உங்களைச் சொல்லலை பவளசங்கரி, ஏற்கெனவே இவரைக் கறுப்புதான் அப்படினு முகநூலிலே சொல்லி இருக்கேன்.  அதான் இங்கேயும் விடாது கறுப்பே வந்துட்டார்னு சொன்னேன். 

ஆமாம், நீங்க சொல்றாப்போல் பட்டாளம் சென்று வீரமரணம் அடைந்தவர்களின் உருவச் சிலைகள் வைப்பதைக் குறித்து நானும் கேள்விப்பட்டிருக்கேன்.  உருவாரம் வைத்தல் என்று அதைச் சொல்வார்கள்.

coral shree

unread,
Mar 19, 2014, 7:47:30 AM3/19/14
to மின்தமிழ்
நன்றிம்மா பார்வதி. ஆனா, நூறு வயசு மட்டும் இருந்து படணுமோ?

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 19, 2014, 8:05:12 AM3/19/14
to மின்தமிழ்
தமிழகப் பெண் தெய்வங்கள் பற்றிய செதிகளை அலசும்போது தமிழ் பெளத்தம் தமிழ்ச் சமணம் மற்றும் சிரமண சித்தாந்தங்கள் சுட்டும் கருத்துக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்

ஏழு கன்னியர் ஏழு (கார்த்திகைப்) பெண்டிர், அம்பிகை என்ற கருத்துருக்கள் விளக்கப்பட வேண்டும்

காளி என்ற தேவதை கல்கத்தாவிலிருந்தும் கன்னிகா (கண்ணகி) என்ற தேவதை வடஏற்கிலிருந்தும் வந்ததாகக் கூறப்படுவதுண்டு

பழந்தமிழகத்தில் பெண்கள் இறைத் தூதர்களாகவும் சேவகியர்களாகவும் பெண்களுக்கான சங்கத்தில் மங்கைப் பருவத்துக்கு முன்பும் திருமணமாகிச் சிலகாலம் இல்லற வாழ்வில் இருந்து குமுகத்தை விட்டகலாது கல்வி நீதி போதனைகளைச் செய்திருக்கிறார்கள்

கிராமத்தில் கோவில்களில் வைத்துள்ள ஏழு தெய்வங்களும் வலமிருந்து இடமாக இருவம் சிறிதில் இருந்து பெரிதாகவும் வலமிருக்கும் தெய்வத்தின் ஆடை கருப்பாகவும் இடமிருக்கும் தெய்வத்தின் ஆடை வெண்மையாகவும் இருக்கும்.  ஏழு தெய்வங்களுக்கும் ஏழு வர்ண ஆடைகள் அணியப்பட்டிருக்கும்

சும்மா இரு சங்கே

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 8:09:47 AM3/19/14
to மின்தமிழ்
எழுத்துப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது பேராசிரியரே! :(

Geetha Sambasivam

unread,
Mar 19, 2014, 8:10:48 AM3/19/14
to மின்தமிழ்
ஏழு கன்னியர் கன்னிமார் வேறு கார்த்திகைப் பெண்டிர் வேறுனு நினைக்கிறேன்.  கார்த்திகைப் பெண்டிர் ஆறு பேர்கள் தான். நக்ஷத்திரங்களும் ஆறுதான் கூட்டமாக இருக்கும்.

2014-03-19 17:35 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

coral shree

unread,
Mar 19, 2014, 8:34:16 AM3/19/14
to மின்தமிழ்
//பழந்தமிழகத்தில் பெண்கள் இறைத் தூதர்களாகவும் சேவகியர்களாகவும் பெண்களுக்கான சங்கத்தில் மங்கைப் பருவத்துக்கு முன்பும் திருமணமாகிச் சிலகாலம் இல்லற வாழ்வில் இருந்து குமுகத்தை விட்டகலாது கல்வி நீதி போதனைகளைச் செய்திருக்கிறார்கள்//

அன்பின் பேரா ஐயா,

ரிக் வேத காலத்தில் பல கீர்த்தனைகளையும் பெண்கள் இயற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ‘சர்வணுக்கிரமணிக்கா’வில் இது போன்ற இருபது பெண்களைக் குறிப்பிட்டுள்ளனர். லோபமுத்ரா, அபலா, விஷ்வவாரா, சிக்கதா, நிவவாரி மற்றும் கோஷா போன்ற மகளிரின் பெயர்கள் பிற்கால இலக்கியங்களில் பொறிக்கப்பட்டன. பின் வேத காலங்களில் இரு வகையான கல்வியாளர் மகளிரைப் பற்றி அறிய முடிகிறது. ’சாத்யோத்வாஹாஸ்’ என்ற தங்கள் திருமண காலம்வரை கல்வி பயின்றவர்கள், ‘பிரம்மவதினிஸ்’ என்ற கல்விக்காகத் தம் திருமண வாழ்க்கையைத் துறந்து கல்வியைத் தொடர்ந்தவர்கள். பிரம்மயஞ்ன காலத்திய  சிறந்த  வேதகுருமார்களின் பட்டியலில்  கார்கி வசக்னவி,  வதவ ப்ரத்திதேயி, சுலப மைத்ரேயி போன்ற மகளிரின் பெயர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, ஆண், பெண் என்ற பேதமின்றி வேத விற்பன்னர்கள், மட்டுமல்லாமல் பெரும் தத்துவ ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்தே சாதனை புரிந்திருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.

அன்புடன்
பவளா

2014-03-19 17:39 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 8:58:43 AM3/19/14
to மின்தமிழ்
 நிறைய தமிழ்ப் பணிகள், பொதுத் தொண்டுகள் செய்து வரும் தங்களுக்கு நூறு போதுமோ அக்கா!...இறைவன் தங்களோடு இருக்கிறான்!.. ஆகவே 'படுதல்' என்பதே கிடையாது!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 9:31:05 AM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஏழு கன்னிமார் பேர் கொண்டு இணையத்தில் தேடிய போது கிடைத்த கன்னிமார் கதை மற்றும் அவர்கள் கோயில் கொண்டுள்ள இடங்கள்....

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 16:36 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
     
Dhivakar

unread,
Mar 19, 2014, 11:52:06 AM3/19/14
to மின்தமிழ்
பார்வதி!

சப்தமாதருக்கென ஒரு தனிக்கோயிலே மாயூரத்தில் (மெயின் ரோட்) உள்ளது. ஞாயிறு ராகுகால பூஜை விசேஷம் என்று என்னுடன் பயணித்த ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால் வேறொரு கிழமையில் போய் திவ்யமாக தரிசித்துக் கொண்டேன்

அன்புடன்
திவாகர்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 12:22:18 PM3/19/14
to மின்தமிழ்
கோயிலுக்கென்று தனிப்பெயர் ஏதாவது இருக்கிறதா!..அல்லது சப்தமாதர்கள் திருக்கோயில் என்று சொன்னால் விபரங்கள் அறிந்து கொள்ள இயலுமா!..

பரங்குன்றத்தில் ஒரு கன்னிமார் கோயில் உண்டு(மலைக்குப் பின்னால், கொஞ்சம் மலையில் ஏற வேண்டும்)..ஆனால் சப்தமாதர்களும், கன்னிமார்களும் வேறு வேறு என்று தான் தெரிகிறது.. இக்கோயிலில் இருந்து இது சம்பந்தமான புராணம், தகவல்கள் கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 21:22 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
         
Suba.T.

unread,
Mar 19, 2014, 12:51:11 PM3/19/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-03-19 12:06 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
வேல் வைத்திருக்கும் சிலை, மதுரை வீரனுடையது என்று நினைக்கிறேன்!.. முருகன் இம்மாதிரி சிலாரூபத்தில் இருப்பதை நான் பார்த்ததில்லை..

அது போல், 'சப்த மாதாக்கள்' என்று தாங்கள் குறிப்பிடுபவர்கள், கன்னிமார் தெய்வங்கள் என்று கருதுகிறேன்.. அவர்களின் உடை, சிறுமிகள் அணியும் பாவாடை சட்டையாக இருப்பதைப் பார்க்கும் போது இது சரிதான் என்று தோன்றுகிறது..

அப்படியா? மிக நல்ல தகவல் பார்வதி. நான் சப்தமாதர்கள் தான் கிராம வழக்கில் இத்தகைய வடிவில் இருக்கின்றார்களோ என நினைத்து விட்டேன்.

கன்னிமார்கள் பற்றி கந்த குரு கவசத்தில் கேட்ட ஞாபகம், அதில் குறிப்பிடப்படும் ​​கன்னிமார்கள்  என்பது இவர்களைக் குறிப்பதோ?

அவர்கள் பெயர், பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.
​நல்ல தகவல். அப்டேட் செய்து விடுகிறேன்.

சுபா

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-18 16:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Suba.T.

unread,
Mar 19, 2014, 12:53:29 PM3/19/14
to Geetha Sambasivam, மின்தமிழ், Subashini Tremmel
கீதா, பார்வதி, பவளா - 

சரி.. இரண்டு பெரிய வடிவங்களுடன் காட்சி தருபவர்.. இவர் கருப்பண்ண சாமியா, சுடலை மாட சாமியா அல்லது முனியப்பசாமியா?

சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 12:54:45 PM3/19/14
to Suba.T., மின்தமிழ்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.(ஸ்கந்த குரு கவசம்)..

இதைத் தானே சொல்கிறீர்கள் சுபா!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 22:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Suba.T.

unread,
Mar 19, 2014, 12:55:56 PM3/19/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-03-19 12:31 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
//மகாலக்‌ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???///

அப்படின்னு சுபா கேட்டிருந்தாங்கல்லம்மா!.. நீங்க சொன்னா மாதிரி பவளாக்கா வந்து சொல்லீட்டாங்க!..ரொம்ப நன்றி பவளாக்கா!.. கீதாம்மா சொன்ன மாதிரி ஆயுசு நூறு உங்களுக்கு!

​பார்வதி 
முனியப்பசாமி, கருப்பண்ணசாமி என 2 பெயர்களை பவளா குறிப்பிடுகின்றார். இரண்டு வேலுடன் மகாலக்‌ஷ்மி பக்கத்தில் இருப்பவர் யார் சுடலைமாடசாமியா அல்லது முனியப்பசாமி, கருப்பண்ணசாமி ?

சுபா

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 17:00 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

கருப்பண்ணசாமி குலதெய்வமாக இருக்கும் வீடுகளில் அரிவாள், உலக்கை போன்றவற்றை பூஜை அறையில் வைத்து வழிபடுவது உண்டு.  நேரிலேயே பார்த்திருக்கேன்.

2014-03-19 16:54 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பரிவார தேவதைகள் என்று நாம் சொல்வதையே கிராமீய வழக்கில் பட்டாளம் என்கிறார்கள் கீதாம்மா!.. கருப்பண்ண சாமியின் சிலா ரூபங்கள் அரிவாளுடன் இருப்பார்கள்.. பரங்குன்றத்தில் சிவராத்திரி இரவில், கருப்பண்ணசாமியின் அரிவாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு செய்யப்படுவதுண்டு.. சந்தனம் பூசி, பெட்டியில் எடுத்துச் சென்று வழிபடுவார்கள்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Suba.T.

unread,
Mar 19, 2014, 12:56:34 PM3/19/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-03-19 17:54 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.(ஸ்கந்த குரு கவசம்)..

இதைத் தானே சொல்கிறீர்கள் சுபா!

ஆமாம். இதில் குறிப்பிடப்படும் கன்னிமார் இவர்கள் தானா?​​

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 22:21 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 12:56:39 PM3/19/14
to Suba.T., மின்தமிழ்
இம்மாதிரியான வடிவங்களை 'அய்யனார் கோயில்'களில் பார்த்திருக்கிறேன் சுபா!.. சுடலை மாட சாமியாகவும் இருக்கக் கூடும்.. ஊகிக்க முடியவில்லை!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 22:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 19, 2014, 12:59:29 PM3/19/14
to Suba.T., மின்தமிழ்
அப்படித்தான் நினைக்கிறேன்!...பரங்குன்றத்திலும் கன்னிமார் கோயில் இருக்கிறது.. இவ்வாறு முருகன் திருத்தலங்கள் அனைத்திலும் அமைந்திருக்கிறதா என்று தெரியவில்லை!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 22:26 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
       
Nagarajan Vadivel

unread,
Mar 19, 2014, 1:04:23 PM3/19/14
to மின்தமிழ்
சமண, சிரமண, பெளத்தத் தமிழர்கள் வணங்கிய அம்பிகை பற்றித் தெரிந்தவர்கள் கூறவும்

சும்மா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 20, 2014, 2:24:51 AM3/20/14
to மின்தமிழ்
பௌத்தத்தின் தாரா தேவி வழிபாடு பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். தாந்த்ரீக முறையில், ஒவ்வொரு நிற தாரா தேவியையும் ஒவ்வொரு வித பலனுக்காக வழிபடுவதை அறிந்திருக்கிறேன்.. மேலும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு..

தமிழர்களுக்கும் இந்த தேவிக்கும் இருக்கும் தொடர்பு சுட்டியிலேயே இருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் முற்காலத்தில் தாராதேவியின் கோயிலாக இருந்திருக்கலாம் என்னும் கூற்று உள்ளது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-19 22:34 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
     
coral shree

unread,
Mar 20, 2014, 3:29:34 AM3/20/14
to மின்தமிழ்
பார்வதி, நான் அறிந்த வகையில் கன்னிமார்கள் என்பது கிராம தெய்வங்கள், சப்த மாதாக்கள் என்று சொல்லப்படுபவர்களும் இவர்களே என்று நினைக்கிறேன். முருகன் கோவிலில் கன்னிமார் சாமிகள் இருப்பது அரிதுதான். சேலம் அருகில் உள்ள கன்னிமார் ஓடை கோவிலில் முருகன் இருக்கிறார் இல்லையா?

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 27, 2014, 3:05:58 AM3/27/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel

சப்தமாதாக்கள் தொடர்புடைய தகவல் ஒன்று: 

இங்கிருந்து >>>> http://www.subaonline.net/thfebooks/THFkalvettu62007jan.pdf

On Tuesday, March 18, 2014 3:51:59 AM UTC-7, Suba.T. wrote:

​ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - 2

இந்தப் பதிவில் மேலும் சில படங்களை இணைக்க நினைத்திருந்தேன். இன்று தான் அதற்கு வேளை அமைந்தது.

இதோ தொடர்ச்சியாக ஈரோடு முனியாண்டி கோயில் படங்கள் சில. 

Inline image 1
சப்தமாதாக்கள்.. கிராமிய வழக்கில் இப்படி காட்சியளிக்கின்றனர்

Inline image 2
சப்தமாதா சன்னிதி

Suba.T.

unread,
Mar 27, 2014, 3:19:50 AM3/27/14
to மின்தமிழ், Subashini Tremmel

​நல்ல தொரு பகிர்வு.
நாளை வெளியிடப்பட உள்ள குடைவரை​க் கோயில் விழியப் பதிவிலும் ஒரு வரிசை சப்தமாதர் சன்னிதி அமைந்துள்ளதை காணலாம்.

​ஒரு சிற்பம் இல்லாததால் கல் வைத்து வழிபடுதல் என்பது ​நல்ல தகவல்.

சுபா 

Geetha Sambasivam

unread,
Mar 27, 2014, 3:24:24 AM3/27/14
to மின்தமிழ்
புதுக்கோட்டைத் திருக்கோகர்ணம் கோயிலா சுபா?

Suba.T.

unread,
Mar 27, 2014, 3:26:06 AM3/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-27 8:24 GMT+01:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
புதுக்கோட்டைத் திருக்கோகர்ணம் கோயிலா சுபா?

​நாளைய வெளியீடு தானே.. ம்ம்ம்ம்ஹூம் இல்லை. :-)​

2014-03-27 12:49 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

​நல்ல தொரு பகிர்வு.
நாளை வெளியிடப்பட உள்ள குடைவரை​க் கோயில் விழியப் பதிவிலும் ஒரு வரிசை சப்தமாதர் சன்னிதி அமைந்துள்ளதை காணலாம்.

​ஒரு சிற்பம் இல்லாததால் கல் வைத்து வழிபடுதல் என்பது ​நல்ல தகவல்.

சுபா 
 
-- 

Suba.T.

unread,
Mar 27, 2014, 3:27:17 AM3/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-27 8:24 GMT+01:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
புதுக்கோட்டைத் திருக்கோகர்ணம் கோயிலா சுபா?
​​

​இது என்ன கோயில் கீதா? நான் கேள்வி​ப்பட்டதில்லயே? புதுக்கோட்டையில் எந்த கிராமத்தில் உள்ளது?

Geetha Sambasivam

unread,
Mar 27, 2014, 4:19:59 AM3/27/14
to மின்தமிழ்
புதுக்கோட்டையிலேயே இருக்கு சுபா.  பிரகதாம்பாள் கோயில், அரைக்காசு அம்மன் கோயில்னு சொல்றாங்க.  ஒரே தரம் அவசரமாப் பார்த்தது.  இன்னும் நல்லாப் பார்க்கணும்.  மற்றொரு முறை போகணும். புதுக்கோட்டை மன்னர்களின் குல தெய்வம் இந்த பிரகதாம்பாள் தான். 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 29, 2014, 8:45:16 AM3/29/14
to மின்தமிழ்
Inline image 1

கூகுளார் உபயத்தில படம்!..

ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால், அரைக்காசு அம்மனை வேண்டி, வெல்லம் நிவேதிப்பது வழக்கம்.. நானும் நிறைய வேண்டிக் கொண்டு பலன் அடைந்திருக்கிறேன்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-27 13:49 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
            
Geetha Sambasivam

unread,
Mar 29, 2014, 9:19:47 AM3/29/14
to மின்தமிழ்
இங்கேயும் உங்க படம் தெரியவே இல்லை. :)

Suba.T.

unread,
Mar 29, 2014, 5:41:07 PM3/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் தெரியவில்லை பார்வதி.

சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 30, 2014, 5:32:24 AM3/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
Inline image 1

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-30 3:11 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
    
பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 30, 2014, 5:34:11 AM3/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
Inline image 1

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-03-30 15:02 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
  
Suba.T.

unread,
Sep 29, 2014, 3:30:12 PM9/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
சாமி வருதல் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

மலேசிய சூழலில் அங்கு முனீஸ்வரர், முனியாண்டி, சுடலை மாடன், வீரபத்திரன், பேச்சாயி, காளியம்மன், மாரியம்மன் போன்ற கிராம தேவதைகளின் கோயிலுக்குச் சென்றால் திருவிழாவின் போது சாமி வந்து ஆடுபவர்களை ஆங்காங்கே பார்க்கலாம்.

கோயில் பூசாரி தன்னை சாமி வரும் வகையில் தயார் படுத்திக் கொண்டு சாமி வந்து அருள் சொல்வது போல செயல்படுவார். அவரை பயத்துடன் வந்து பார்க்கும் அனைவருக்கும் விபூதி பூசி அருள் வார்த்தைச் சொல்வார்.

மலேசியாவில் உள்ள ஒரு கோயிலில் சங்கிலி கருப்பன் சாமி வருவது போல ஒருவர் செய்கின்றார். சங்கிலியால் தன்னை அடித்துக் கொள்வது பின்னர் சுருட்டு குடிப்பது இவையெல்லாம்.. இந்த பாவனையில் அடங்குகின்றது.
இந்த விழியத்தைப் பாருங்கள் https://www.youtube.com/watch?v=FA_PtcuPnu4

இந்தச் சாமி வருதல் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் வாழ்விலும் இருப்பதை நம்மில் பலர் அறிவோம். ஷமானிசம் என்பது பல இனக்குழு மக்களிடம் உள்ள ஒரு சம்பிரதாயமே. இது பல வகைப்படுகின்றது. மங்கோலிய இனத்து மக்களிடையே இருக்கும் இத்தகைய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி ஒரு கட்டுரையை நேஷனல் ஜியோகிராபி 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. 

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

தேமொழி

unread,
Sep 29, 2014, 9:14:00 PM9/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

இது போன்று உளவியல் மாறுதல்களைக் காட்டும் நடைமுறைகள்  பல மதவழிபாடுகளிலும் வழக்கம்தான்.....http://youtu.be/a54iqEr1flQ (time 2:24)

இங்கு கிறிஸ்துவ மத வழிபாட்டில் ஒரு நிகழ்வு....

..... தேமொழி

Suba.T.

unread,
Feb 27, 2015, 6:12:56 PM2/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
மேலும் ஒரு கிராம தெய்வம்.. வழிபடு சின்னம் பற்றிய ஒரு சிறு தகவல்.

சென்ற ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த போது திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வழுக்கம் சென்று கொண்டிருந்த சாலையில் தற்செயலாக ஒரு கிராமத்து மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து வாகனத்தை நிறுத்தினோம்.
சாலையோரத்திலேயே இருக்கும் ஒரு ஆலயம் இது.

இங்கே மாரியம்மன்   சிலைகள் ஒரு தனி ஆலயம் போன்ற பகுயில் இருக்க மற்றொரு பகுதியில் இப்படி தனியாக ஒரு வடிவத்தை வைத்து அதற்கு பட்டாடை கட்டி அம்மனாக பாவித்து வழிபடும் நிலையக் கண்டேன்.
Inline image 1
தமிழகத்தில் ஆங்காங்கே இவ்வகை வடிவங்களை பலரும் பார்த்திருக்கலாம்.

கிராம தெய்வங்கள் மக்களின் மனதில் ஒன்றாகக் கலந்து இருப்பவை. 

நாளை இதே ஆலயத்தில் நான் பார்த்த மேலும் ஒரு வித்தியாசமான் ஐறைவடிவத்தின் செய்தியை பகிர்ந்து கொள்கின்றேன்.
 
சுபா

--
Suba.T.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 2, 2015, 9:35:33 AM3/2/15
to மின்தமிழ், Subashini Tremmel
இங்கே பெங்களூரில் ஒரு கோயில் வாசலில், சன்னதியின் எதிராக   இப்படியொரு வடிவம் வைத்து வழிபடுகின்றார்கள்.. திருக்கோயிலின் தேவியின் அம்சமாகவே பாவித்து, நீங்கள் தந்திருக்கும் படத்தில் இருப்பது போலவே மஞ்சள் பூசி, புடவை, மாலைகள் சார்த்தி இருக்கிறார்கள்!.. திருக்கோயிலைச் சுற்றிலும் தமிழர்கள்.. வழிபடுவதும்  தமிழர்களே!..

பார்வதி இராமச்சந்திரன்.

2015-02-28 4:42 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​      
​         
​  
​        

Suba.T.

unread,
Mar 6, 2015, 2:43:12 AM3/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே

இப்பதிவில் நான் வெளியிடும் புகைப்படங்கள், மட்டுமன்றி ஏனைய பலரது தொகுப்புக்களையும்  தனி வலைப்பூவில் இணைக்கத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். இந்த முயற்சியில் என்னுடன் பதிவுகளை இணைக்க விரும்புவோர் எனக்கு தெரிவிக்கவும். வலைப்பு  co-author ஆக உங்கள் மின்னஞ்சலையும் இணைத்து வைக்கின்றேன். 

சுபா

தேமொழி

unread,
Mar 6, 2015, 3:00:06 AM3/6/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
என்னுடைய பதிவையும் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் சுபா.  

மேலும் சில படங்களையும் இப்பதிவில் நான் இணைக்க வேண்டியிருக்கிறது.  

அடுத்து நேரம் கிடைக்கும் பொழுது இணைத்துவிடுகிறேன். 

முன்னரே மலேஷிய சிறுதெய்வங்கள் பற்றிய கட்டுரை ஒன்றும் என்னால் எழுதப்பட்டு அதுவும்  மின்தமிழ் மேடையில் இருக்கிறது 

பொருத்தமாக இருந்தால் இக்கட்டுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். 

..... தேமொழி

Suba.T.

unread,
Mar 6, 2015, 4:08:09 AM3/6/15
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
தேமொழி,

இன்று மாலை வலைப்பூ உருவாக்கிவிட்டு உங்கள் மின்னஞ்சலையும் இணைக்கின்றேன். நீங்களே உங்கள் பதிவுகளைப் இணைக்கலாம். 
அதோடு கீதா, பார்வதி போன்றோரும் இணைந்தால் சிரப்பாக தொடரலாம். ஆரவமுள்ள ஏனையோரும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.இணைந்து செய்வோம்.

தலைப்பிடும் போது ஊர் பெயர்- சுவாமி பெயர் என தலிப்பிடலாம் என நினைக்கின்றேன். காரணம் தேடும் போது இது சுலபமகா நகர வாரியாக தகவல் இருக்க உதவும் எனக் கருதுகிறேன்.

சுபா

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 6, 2015, 4:39:52 AM3/6/15
to mintamil, தேமொழி, Subashini Tremmel
பட்டமங்கலம் அருகே கரியமலை சாத்தய்யனார் கோவிலுக்கு சிலநாட்கள் முன்பு சென்று வந்தேன். நானும் பதிவிடுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Mar 6, 2015, 4:45:35 AM3/6/15
to சொ. வினைதீர்த்தான், mintamil, Subashini Tremmel
மகிழ்ச்சி. எதிர்பார்க்கிறேன்.

சுபா

Geetha Sambasivam

unread,
Mar 6, 2015, 4:48:48 AM3/6/15
to மின்தமிழ், தேமொழி, Subashini Tremmel
நன்றி சுபா. நேரம் இருக்கையில் நானும் கலந்து கொள்கிறேன்.

2015-03-06 14:38 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

Malarvizhi Mangay

unread,
Mar 6, 2015, 4:56:42 AM3/6/15
to mint...@googlegroups.com

என்னையும் இணைத்துக் கொள்ளவும்.

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 6, 2015, 6:41:34 AM3/6/15
to மின்தமிழ்
மிக்க நன்றி சுபா!.. என்னையும் இணையுங்கள்!... இயன்றவரை பதிவிடுகின்றேன்!..

பார்வதி இராமச்சந்திரன்.

2015-03-06 15:26 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

​ 
​ 
​ 
​  
​     

Oru Arizonan

unread,
Mar 6, 2015, 3:44:29 PM3/6/15
to mintamil
அன்பின் சுபா,

என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 6, 2015, 3:45:42 PM3/6/15
to mintamil
திருத்தலையூர் என்ற பழைய திருத்தலத்திற்குச் சென்றுவந்தேன்.  அது பற்றி எழுதுகிறேன்.
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Mar 7, 2015, 3:32:24 AM3/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த முயற்சியில் ஆர்வம் கொண்டு எனக்கு அப்தில் எழுதியிருக்கும் மலர்விழி, கீதா, பார்வதி, திரு அரிசோனன் ஆகியோருக்கு என் நன்றி.
நேற்று இரவே வலைப்பூ உருவாக்க நினைத்தேன். அலுவலக வேலை என் மாலை நேரத்தையும் எடுத்துக் கொள்ள இது மறந்து போய்விட்டது. இன்று வலைப்பூ ஆரம்பித்து விட்டு உங்களையெல்லாம் இந்த வலிப்பூவில் துணை ஆசிரியர்களாக ஆக்கி விட்டு தகவல் தருகிறேன்.

சுபா

Suba.T.

unread,
Mar 15, 2015, 6:12:40 AM3/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே,

கிராம தேவதைகள்  வலைப்பூவை ஆரம்த்திருக்கின்றேன். ஒரு பதிவுடன்.

Geetha Sambasivam <geetha...@gmail.com>
Oru Arizonan <oruar...@gmail.com>
பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
தேமொழி <jsthe...@gmail.com>
Malarvizhi Mangay <malarm...@gmail.com>

ஆகிய ஐவரையும் இணை ஆசிரியர்களாக் இந்த் வலைப்பூவில் இணைத்திருக்கின்றேன். நீங்கள் தொடர்ந்து பதிவுகளை ஏற்றலாம்.

தலைப்பிடும் போது 
ஊர் பெயர் - சாமி அல்லது கோயில் பெயர் என வைத்து தலைப்பிடவும்.

அன்புடன்
சுபா

It is loading more messages.
0 new messages