குலதெய்வங்கள்

992 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 2, 2015, 4:17:56 AM2/2/15
to mint...@googlegroups.com
பெரிய நாச்சியம்மன் கோவில்

தம் முன்னோர்களை தெய்வங்களாக ஒரு குலத்தினர் வணங்கும் பொழுது அவர்கள் அக்குலத்தின் குலதெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 
பெரிய நாச்சியம்மன் தெய்வம் அது போன்ற குல தெய்வங்களில் ஒருவர்.  பெரிய நாச்சியம்மனும் அவரது கணவர்  வீரிய பெருமாள் என்பவரும், மகன்  வீரப்ப சாமி என்பவரும் அவ்வாறாக ஒரு குலத்தின் குலதெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.  

திருச்சி தென்னூரில் பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது.  திருச்சி மாநகரின் மிகப்பரபரப்பான சாலைகளின் தரவரிசையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்ற தகுதியில்  இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தென்னூர் ஹை ரோட்டில் (ஆங்கிலத்திற்கு மன்னிக்க, பொதுவாக வழக்கில் உள்ள சொற்களை கட்டுரையின் செய்திகளின் தெளிவு கருதி குறிப்பிடும் எண்ணம்), திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.  போக்குவரத்து தொல்லை என்பதே கிடையாது, நகரின் எப்பகுதியில் இருந்தும் எளிதில் சென்றடையலாம்.  இடத்தின் புவியிடக்குறியீடு: 10.816150, 78.679874.

திருச்சியில் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்தாலும், வசிக்கும் இடத்திற்கு வெகு அருகில் இந்தக் கோவில் இருந்தாலும் சென்று பார்த்து வரும் எண்ணமே தோன்றியதில்லை.  பொதுவாக கோவில்களுக்கு செல்லும் வழக்கமற்ற குடும்பப் பின்னணி என்பதும் இதற்கு ஒரு காரணம்.  திருச்சியின் 'லேண்ட்மார்க்' என்று சொல்லப்படும் மலைக்கோட்டையை திருச்சி செல்லும் பொழுதெல்லாம் தவறாமல்சென்று பார்ப்பது வழக்கம்.  திருச்சிவாசி என்பதால்  மலைக்கோட்டையின் மீது ஒரு தனி அன்பு உண்டு.  ஒவ்வொருமுறையும்  உச்சிக்கு ஏறி திருச்சி நகரைப் பார்த்து அதோ காவிரிப்பலம், இதோ ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், காவிரியில் என்றுதான் தண்ணீர் வருமோ தெரியவில்லையே  என்றெல்லாம் எண்ணிக்கொண்டு திருச்சியை பார்ப்பது ஒரு அருமையான அனுபவம்.  இறங்கும் பொழுது வயதாகிக் கொண்டே வருகிறதே, சிறுவயதில் ஏறிய பொழுது போலல்லாமல் இப்பொழுது இப்படி மூச்சு வாங்குகிறதே!!! அடுத்த முறை திருச்சி வரும்பொழுது ஏறமுடியுமா என்பது போன்ற சிந்தனைகள் வரும்.  

உறவினர்கள் வந்தால், நண்பர்கள் வந்தால் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், வயலூர், கல்லணை, முக்கொம்பு என்று அழைத்து  சென்று ஊரறிமுகம் செய்வதுடன் கோவில் சென்று வருவது ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்தில் முடிந்துவிடும். வீட்டிற்கு வெகு அருகில் இருக்கும் கோவிலான பெரிய நாச்சியம்மன் கோவிலை சென்று பார்க்கும் எண்ணமே இருந்ததில்லை. மதுரை, தஞ்சை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சுவாமிமலை என்று எங்கெங்கோ போய் வந்திருந்தாலும் உள்ளூர் கடவுள் ஏனோ கவனத்தைக் கவரவில்லை.  கடவுள்களுக்கும் பெயர் புகழ் இருந்தால்தான் மக்கள் மதிக்கிறார்கள்.  

இக்கோவில் பொதுவாக  பெரிய நாச்சியம்மன் கோவில் என்று அழைக்கப் பட்டாலும் "அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சியம்மன் சமேத ஸ்ரீ வீரியபெருமாள் திருக்கோவில்" என்பது கோவிலின் முழுப் பெயர். இக்கோவில் வாணிய செட்டியார் சமுகத்தினரின் 5 கோத்திர குடிமக்களான; பருத்திக்குடையான் , தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷிகள்  கோத்திர மக்களுக்கு சொந்தமானது.  

பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள்  ஸ்ரீ வீரிய பெருமாள் பரம்பரையினர்
தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்கள் - ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் வழி வந்தவர்கள்
பயிராலழக மகரிஷி கோத்திர மக்கள் - பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று, பின்னாளில் இணைந்தவர்கள்
பாக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
மாத்துடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் விரிப்பு, ஜமுக்காளம் கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்

தலமரம்: எலுமிச்சை மரம் 

தல தீர்த்தம்: விசுவப்ப நாயக்கர் குளம் அல்லது பொற்றாமறை குளம் என்றழைக்கப்படுகிறது.  தற்போதைய கோர்ட் பாலம் அருகிலிருந்து குடமுருட்டி வாய்க்கால் மூலமாக காவிரி நீர்  வந்து குளத்தை நிறைக்கிறது.  கோவிலின் வடபுறம் ஒரு சுடுகாடு இருந்ததாகவும், அதற்கான பயன்பாட்டில் இருந்த குளம் கோவில் உருவானவுடன் கோவிலுக்காக அளிக்கப்பட்டதாகவும் தகவல்.  அத்துடன் இந்தக் கோவில் வழித்தடத்தில் இருப்பதால் அக்காலத்தில் பயணத்தில் உள்ளவர்கள் மாடுகளுக்கு தண்ணீர் காட்டி இளைப்பாறும் இடமாகவும் இது பயன்பட்டதாகத் தெரிகிறது.  

இந்தக் கோவிலில் இருந்து கூப்பிடுதூரத்தில் ஒரு சத்திரம் உள்ளது (உண்மையிலேயே அது கூப்பிடுதூரம்தான்...அந்நாட்களில் ...  சந்தடியற்ற காலத்தில், "ஏ...ஆச்சி சித்த இங்கன வாரீயளா" ...என்று கூவினால், "தோ வாறேன் ...ஏன் இப்படி தொண்ட கிழிய கத்தறவ...ஆச்சி மேல பாசம் பொத்துக்கிட்டுதான் கொட்டுது .." என்று கூவலில் உரையாடும் அளவிற்கு வெகு அருகில்).  இந்த சத்திரத்தின் வயது  ஒரு நூற்றாண்டிற்கும் மேல்  இருக்கக் கூடும்.   வரலாற்று சிறப்பு மிக்கது என்று கேள்வி.  பெரிய பெரிய புள்ளிகள் அந்நாட்களில் வந்து தங்குவார்களாம். அதனால் தென்னூர் ஹை ரோடின் ஒரு பகுதி கீழ சத்திரம் ரோடு என்று  அழைக்கப் படுகிறது. இந்த சத்திரத்தின் பயணிகளுக்கு பயன்பட்ட குளம் அது என்று தெரிகிறது. 

போக்குவரத்து வசதியற்ற சென்ற நூற்றாண்டுகளில் வழிபடும் வசதிக்காக, இக்கோவிலின் மண்ணெடுத்து சென்று இக்குல மக்கள் தங்கள் ஊர்களில் கோவில் அமைத்தால் இந்த ஊருக்கு மேலும் சில ஊர்களில் கிளைகள் உண்டு.  பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்களுக்காக  வேங்காம்பட்டி, கண்ணூர்பட்டி (நாமக்கல்) ஆகிய ஊர்களிலும்;  தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் புலியூர், நத்தம் ஆகிய ஊர்களிலும்;  பயிராலழக மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் மணமேடு, ஜேடர் பாளையம் ஆகிய ஊர்களிலும் பெரிய நாச்சியம்மன் கோயில்கள் உண்டு. 

இந்த ஐந்து குல மக்களும் தங்கள் குழந்தைகளின் முதல் முடி இறக்குதல், காது குத்துதல் போன்றவற்றை இக்கோவிலில் செய்கிறார்கள்.  ஆண்டிற்கு இருமுறை, சிவராத்திரி, ஆடி 18 என இரு நாட்களும் சிறப்பு மிக்கவை, அன்று சிறப்பு வழிபாடுகளும் முடி இறக்குதல் காத்து குத்துதல் போன்ற வேண்டுதல்களும் இந்த இரு நாட்களில் மட்டும் நிறைவேற்றப்படும்.  சிவராத்திரி அன்று அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.

அத்துடன் மத நல்லிணக்கத்திற்கும் முக்கியமளிக்கும் கோவிலிது.  சிவ-வைணவ  தலம் என்று இருப்பினும் இந்த கோவிலில் 33 தெய்வங்கள் உள்ளனர். 
முஸ்லீம் மதத்தைச் சார்ந்த "மழுங்கு ராவுத்தர்" என்பவருக்கு மூன்று கால வழிப்பாடு  நடைபெறுகிறது. முஸ்லீம் மக்கள் முகரம் பண்டிகை அன்று இந்தக் கோவிலின் தெப்பக் குளத்திலிருந்து அருகிலுள்ள தர்காவிற்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்.  விருது நகர் நாடார்கள் அவர்களது சாமியிடம் குறிகேட்ட பொழுது, கடவுள் கட்டளையிட்டதால் ஆண்டிற்கு  ஒரு முறை வந்து வழிபடுகிறார்கள்  


கோவில் இருப்பிடம்:
ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்
தென்னூர் ஹை ரோடு
தென்னூர், திருச்சி - 620 017
இந்த கோவில் தமிழக அரசினால் 1931-ம் ஆண்டு சட்டத்திலிருந்து விளக்களிக்கப் பட்ட கோவில்(EXCEPTED TEMPLE) என ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கூகுள் வரைபடம்: ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி ( படம் காண சுட்டியை சொடுக்கவும்)

ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் துதி:
வானமும் புவிகள் ஏழும் நான்மறை துதிக்கவேதான்
தானவன் அருளினாலே தணலில் பள்ளிகொண்டாய்
தேன்மொழி பெரிய நாச்சி உன் சீர்பாதம் உறுதியாக யாம்
உன்னை அடைந்தோம் அம்மா எங்களை ஆதரித்தருள் தாயே!

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் துதி:
சொற்பொருளும் உடலுயிருஞ் சுடரொளியும்
      விரைமலரும் சுவையும் பாலும்
நிற்குநிறை யெனக் கலந்து நிகரில்
      வீரிய பெருமாள் நிமலன் தன்னோ(டு)
அற்புதமாம் ஆடல்பல புரிந்தருளித்
      திருச்சி நகர் தென்னூர் மேவும்
பொற்றாமரைக் குளம் வாழ்
      பெரியநாச்சித் தாள் பணிந்து 
 சிறக்க வாழ்வோம்

சீராரும் வணிகர்குலம் சிறக்க வரும்
      தெள்ளமுதே! தேவே இந்தப்
பாருலகம் போற்றுகின்ற பார்வதியே
அடியேங்கள் பாவந்தீர்த்தாளும் பார்வதியே
      பூரணியே! நாயகனாம் பொற்புடை
வீரிய பெருமாள் புகழுந்தேவி
      பேராரும் எமதன்னை
      பெரியநாச்சி தாயே! நின் மலர்த்தாள்
      போற்றி! போற்றி!!


குறிப்பு:  
தகவல்கள் உதவி: ஓட்டுனர் திரு. குணசேகரன், கோவில் அர்ச்சகர் திரு. ஜெயபாலன்,  கோவிலின் இணையதளம்(http://sriperiyanachiammantemple.org/).  
நான் எடுத்த படங்கள் பிறகு வரும்.  
[தொடரும்]


Innamburan S.Soundararajan

unread,
Feb 2, 2015, 4:29:40 AM2/2/15
to mintamil
மிகவும் அருமையான பதிவு. அடுத்ததடவை திருச்சி செல்லும்போது இந்த ஆலயத்துக்கு செல்வேன். உங்கள் தல புராணம்
நன்கு அமைந்துள்ளது. இன்னம்பூர் அம்மன் எங்களுக்கு அருள் பாலிப்பாள். நிஜமாக 50 வருடங்களுக்கு முந்தி நடந்த சம்பவம்.
என் மைந்தனின் முதல் பிறந்த நாள் வைபவத்துக்கு இன்னம்பூர் சென்றபோது, தெருமுனையில் இருக்கும் அம்மனை போற்றி தொழுத 
என் பாட்டியின் வழக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சென்று அம்மனை தொழ நினைத்த என்னை, என் பத்தாம்பசலி அத்திம்பேர் 
தடுத்து விட்டார். அடுத்த கணம் காரின் ஆக்ஸில் முறிந்தது. 4 மணி நேரம் அம்மன் கோயில் வாசலில் தவம் கிடந்தோம். 
அவள் புன்னகை பூத்தாள்.

Geetha Sambasivam

unread,
Feb 2, 2015, 4:52:46 AM2/2/15
to மின்தமிழ்
"இ" சார், நீங்க சொன்னாப்போல் எங்களை ஒரு முறை சமயபுரம் மாரியம்மனும் காக்க வைத்தாள்.  ஐம்பது கிலோ மீட்டர் தாண்டிச் சென்றவர்களைத் திரும்பி அவள் சந்நிதிக்கு வரவழைத்தாள்.  தேமொழி சொல்லி இருக்கும் இந்தக் கோயில் நான் அறியாத ஒன்று.  ஒருமுறை சென்று வருகிறோம். நன்றி தேமொழி. இது எப்போது போனீர்கள்? திருச்சி வந்திருந்தீர்களா?

2015-02-02 14:59 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
  அடுத்த கணம் காரின் ஆக்ஸில் முறிந்தது. 4 மணி நேரம் அம்மன் கோயில் வாசலில் தவம் கிடந்தோம். 
அவள் புன்னகை பூத்தாள்.

-- 

Tthamizth Tthenee

unread,
Feb 2, 2015, 8:52:14 AM2/2/15
to mint...@googlegroups.com
பொதுவாகவே   முன்னோர்கள் வம்சாவளியாக தொடர்ந்து கும்பிட்டு வந்த  குலதெய்வங்களை  பின்னால் வரும் சந்ததியர்  தொடர்ந்து குல வழக்கப்படி கும்பிடுதல் நல்லது என்பார் பெரியோர்

ஏதேனும் கஷ்டங்கள் வரும் போது  ஜோதிடரும்   

நீங்கள்   குலதெய்வத்தை  மறந்து விட்டீர்கள்  ,அதனால் குல தெய்வத்தை கும்பிடுங்கள்  அதைவிடப் பரிகாரம் வேறு எதுவுமில்லை  என்பார்கள்

ஆகவே குல தெய்வங்களைக் கும்பிடுதல்  நன்மையைத் தரும்  என்கிற நம்பிக்கை  இன்னமும்  இருக்கிறது

வருடா வருடம்  குல தெய்வத்தைக் கண்டு      முடி இறக்குதல், போன்ற  வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
குலதெய்வங்களை அவ்வப்போது   கும்பிடாவிட்டால்  தீங்கு நேரும்  என்னும் நம்பிக்கையும்  நிலவுகிறது



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 2, 2015, 9:12:59 AM2/2/15
to மின்தமிழ்
ரொம்ப சந்தோஷம், தேமொழி!.. இதுவரை நான் அறியாத திருத்தலமிது.. திருச்சி செல்லுகையில் சென்று வர முயற்சி செய்கிறேன்!. தாங்கள் கொடுத்துள்ள, கோவிலின் இணைய தளம் குறித்த சுட்டியில், தலவரலாறு முதற்கொண்டு அனைத்துத் தகவல்களும் சிறப்பாக பகிரப்பட்டிருக்கின்றன.  மிக்க நன்றி தங்களுக்கு!..

பார்வதி இராமச்சந்திரன்.


2015-02-02 19:21 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​            

தேமொழி

unread,
Feb 2, 2015, 10:16:50 AM2/2/15
to mint...@googlegroups.com
நன்றி கீதா, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இந்தியா வந்தேன். புத்தாண்டு முடிந்து ஒரு வாரம் வரை அங்கிருந்தேன்.
2011 கோடைக்கு முன்னர் இந்தியா வந்ததுதான். நவம்பரில் அப்பாவிற்கு சிறிது உடல் நலம் குன்றியது, அதனால் அவரைப் பார்க்க வந்தேன்.

.... தேமொழி

தேமொழி

unread,
Feb 2, 2015, 10:28:07 AM2/2/15
to mint...@googlegroups.com
நன்றி தமிழ்த்தேனீ ஐயா.  குலதெய்வ வழபாட்டை அவ்வாறுதான் வலியுறுத்துகிறார்கள்.   நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தி வண்டி ஓடுகிறது.  

அக்கறையுள்ள  முன்னோர்கள்  தன்னை வணங்கி வழிபட்டால்தான் நன்மை செய்வேன் என்றெலாம் சொல்ல மாட்டார்கள் என்பது என் எண்ணம்.  அது பசி என்று வந்து கேட்டால்தான் தாய் சோறு போடுவாள் என்பது போலிருக்கிறது.  தங்களது பரம்பரையினர் துன்பத்தில் இருந்தால் எப்படியும் நம் முன்னோர்கள் நம்மைக் கைவிடவா போகிறார்கள் என்று நம்பலாம்.  மற்றபடி பொய் வணங்கி வா என்பது உளவியல் அடிப்படையில், கும்பிட்டு வந்தோம் இனி கவலை இல்லை என்ற வகையில் நம்பிக்கையை வளர்த்து வாழ்க்கையை எதிர்கொள்ள வைக்க உதவும்.  

இந்த பெரிய நாச்சியம்மன் அம்மையார் எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் அல்லர்.  இவ்வளவு நாட்கள் பக்கத்தில் இருந்திருக்கிறோமே என்ற ஆர்வத்தில் சென்று பார்த்து வந்தது.  ஒரு வகையில் மின்தமிழுக்கு வந்த பிறகு சுபாவின் நடவடிக்கைகளைப் பார்த்து வரலாற்றுக் கோணத்தில், மரபுக் கோணத்தில் காணும் அந்த ஆர்வம் என்னையும்  தொற்றிக்கொண்டு விட்டது நினைக்கிறேன். 

..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 2, 2015, 10:28:41 AM2/2/15
to mint...@googlegroups.com
நன்றி பார்வதி.  


..... தேமொழி

nkantan r

unread,
Feb 2, 2015, 10:37:37 AM2/2/15
to mint...@googlegroups.com
தங்கள் பெயர் காரணம் அறிந்தோம்

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 2, 2015, 11:32:51 AM2/2/15
to mint...@googlegroups.com
:))

தேனீ மொழி என்பதே பொருத்தம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து  


..... தேமொழி

Suba.T.

unread,
Feb 2, 2015, 11:47:45 AM2/2/15
to மின்தமிழ்
அருமை. இப்பதிவிற்கு என் பாராட்டுக்கள்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Feb 2, 2015, 12:00:30 PM2/2/15
to mint...@googlegroups.com
நன்றி சுபா. 


..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Feb 2, 2015, 12:20:49 PM2/2/15
to mint...@googlegroups.com
hmm
( when I was in Gandhi manram, I used to teach reading and writing to poor gal students - branded as dalits; I used to visit their houses; have food- veg only-of course; one particular name I remember is தேன்மகள்

a very beautiful name indeed; and I used to correct her writing; she used to write it as தென்மகள்; that also a nice variation; these days were good days!)


I may add my opinions on kuladeivam (especially in the context of Brahmins, why they started accepting kuladeivam etc--as they stopped nitya karmas, etc; may also add about our family's family-delity Vaideeswaran -- in vaideeswaran koil; one other idea is making people to contribute regularly to maintain the temples... etc;) but may be such write-up may be irrelevant for this group- Mintamil (as advised by mr Arizonan). Still if interested may click on:


regards
rnkantan

தேமொழி

unread,
Feb 2, 2015, 12:53:55 PM2/2/15
to mint...@googlegroups.com
என் பெயரை தேமொழி என்று எழுதும்பொழுது பள்ளி நாட்களில் சில ஆசிரியைகள் நான் தவறாக எழுதியதாக எண்ணி "தேன்மொழி" என்று திருத்தி எழுதியதுண்டு.

கேரள சிறுதெய்வ வழிபாடு தொடர்பாக ஜெயமோகனின் கட்டுரைகள் திரு. ஜடாயு, செல்வன் ஆகியோரால் மின்தமிழில் பகிரப்பட்டுள்ளது 

ref: http://www.jeyamohan.in/7522

(பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பதிவு) 


///

தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன ? அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல் , ஆதிக்க சக்திகளை விட கல்வி , செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ் என் டி பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரு தளங்களில் தீவிரம் கொண்டன.

நாராயணகுரு முதலில் உருவாகிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குல வழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள் . கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை . நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார் . சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி , பெரிங்கோட்டுகரை , வடக்கே தலைச்சேரி கண்ணனூர் , கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.

தற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு , அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல . அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார் .அவற்றில் தெய்வ தசகம், சுப்ரமண்ய சதகம் , காளீநாடகம் , சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [ காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின .

குலதெய்வங்களை இல்லாமல்செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள் , மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கபப்ட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறை மேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.

///

..... தேமொழி 

Megala Ramamourty

unread,
Feb 2, 2015, 6:19:28 PM2/2/15
to மின்தமிழ்
அன்புத் தேமொழி!

நாச்சியம்மன் எனும் பெயர்கொண்ட இந்தச் சிறுதெய்வம் (Demi-Goddess) தமிழகத்தின் பல ஊர்களிலும் இருப்பதாகத் தெரிகின்றது. பெரிய நாச்சியம்மன், அழகு நாச்சியம்மன், மாணிக்க நாச்சியம்மன், பச்சை நாச்சியம்மன்  என்று பல்வேறு அடைமொழிகளுடன்  திகழ்கின்றார் இந்த அம்மன்.

உங்கள் கட்டுரைக்கு நம் குழும நண்பர் ‘வேந்தர்’ பாணியில் கருத்துச் சொல்வதென்றால்
பெரிய நாச்சியம்மன் பதிவைப் பெரிதும் நச்சினேன்!’  :-))
 

அன்புடன்,
மேகலா




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 2, 2015, 10:24:16 PM2/2/15
to mintamil, தேமொழி Themozhi, Megala Ramamourty, Raju Rajendran
எங்களூர் நடுவிலிருந்து அருளாட்சி செய்கிற அம்மன் மாணிக்கநாச்சியம்மன். செட்டிநாட்டின் பல ஊர்களிலும் நாச்சியாரம்மன் கோவில்கள் பிரசித்தம். 
பெரும்பாலும் ஊருக்கு வெளியே  மகிடாசுரமர்த்தினி திருவுரு உள்ள மூலக்கோயிலும் ஊரின் நடுவில் எழுந்தருளப்பண்ணுகிற உலோக திருவுரு அம்மன் இருக்கிற கோயிலும் அமைந்துள்ளன. காரைக்குடியின் நடுவில் அமைந்திருக்கிற கொப்புடையம்மன் உலோகத்திருவுரு. அதன் மூலத்தானம் தெற்கில் 3 கிமீ தொலைவில் உள்ள காட்டுநாச்சியம்மன். பல ஊர்களிலும் இவ்வாறே.
சற்றுமாறுபட்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி மூலவரும் உற்சவரும் ஒரே கோவிலாகவே உள்ளது.

எனவே செட்டிநாட்டிலுள்ள அழகுநாச்சி, மாணிக்கநாச்சி, காட்டுநாச்சி வழிபாடு மாரியம்மன், கருமாரி வழிபாடுகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம் என எண்ணுகிறேன். திருமிகு தேமொழி எழுதியுள்ள பெரியநாச்சி உரு எவ்வாறு  உள்ளது எனத்தெரியவில்லை. சில இடங்களில் மாரியம்மன் கோவில் உரு முதலில் சுதைச்சிற்பமாக பலகாலம் இருந்து பிறகு தலை உருவம் மட்டும் பிற்காலத்தில் சுதைச்சிற்பங்களின் அடியில் வைத்து வழிபாடு செய்யப்படுவதையும் காண்கிறோம். 
இவ்வகை வழிபாடுகள் ஆய்வுக்குரியன.

நம் வேந்தர் நச்சுபூச்சி என்ற சொல்லையும் என் முகநூல் பக்கத்தில் ஒரு பின்னூட்டத்தில் பயன்படுத்தியிருந்தார்! சிலவற்ரை நச்சினால் பூச்சியாய் பிடித்துக்கொண்டுவிடும் போலும்!  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

துரை.ந.உ

unread,
Feb 2, 2015, 10:59:20 PM2/2/15
to Groups
அருமையான பதிவு / பகிர்வு 

வாழ்த்துகள் அக்கா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 3, 2015, 3:40:47 AM2/3/15
to மின்தமிழ்
நானறிந்த வரையில், ஊரின் முக்கியமான குடும்பத்துப் பெண்களை 'நாச்சியார்' என்று அடைமொழியிட்டு அழைப்பது வழக்கம்!..இருவர்   பெண்களாக இருந்தால், பெரிய நாச்சியார், சின்ன நாச்சியார் என்று அழைப்பார்கள்.. இந்தப் பெயர்களே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து  மறைந்தவர்களாக இருக்கக் கூடும் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன.


பார்வதி இராமச்சந்திரன்.


2015-02-03 8:54 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
​ 
​ 
​       

nkantan r

unread,
Feb 3, 2015, 5:03:02 AM2/3/15
to mint...@googlegroups.com
Perfectly apt mrs Parvathi Ramachandran; I was planning to add a line about the meaning and use of nachchi(yar).  you have done that; nachchi(yar) means the "gentle" woman (dame?). And the matching word for male is

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 6, 2015, 12:08:36 AM2/6/15
to mint...@googlegroups.com
மேலதிகத் தகவல்கள் வழங்கிய நண்பர்கள் மேகலா, சொ.வி ஐயா, பாரு, nkantan rஆகியோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

கட்டுரையைப் பாராட்டிய துரைக்கு நன்றி.


..... தேமொழி

தேமொழி

unread,
Feb 6, 2015, 12:26:10 AM2/6/15
to mint...@googlegroups.com
nachchi(yar) means the "gentle" woman...!!!!!!

i think that is debatable

எனக்குப் பிடித்த நாச்சியார் "வேலுநாச்சியார்" 

அவரது படத்தை கூட எனது profile படமாக சில நாட்கள் வைத்திருந்தேன்...

இவரைப் போலவே வாளொன்று கையில் வைத்து படம் எடுத்துக் கொண்டால்  நாம் எப்படி இருப்போம் என்ற கற்பனை செய்தது  உண்டு ...ஆனாலும் ...

ஆகா...கையில்  கிடைத்தது ஒரே ஒரு கத்தி அதை வைத்து போடுவோம் ஒரே ஒரு குத்து என்று மட்டும் ஏனோ  நினைத்ததில்லை.

ஆணுக்கு உள்ள உடையார் என்ற பெயர் நாச்சியார் என்ற பெண்பெயருக்கு பொருத்தமாக இருக்கலாமோ...

இந்தப் பதிலில் புதுக்கோட்டை மன்னர் குடும்பப் பெயர்களின் தாக்கம் உண்டு.


..... தேமொழி

nkantan r

unread,
Feb 6, 2015, 1:07:40 AM2/6/15
to mint...@googlegroups.com
when I wrote "gentle", I did not mean the quality of being gentle or soft; I meant to identify a DAME as against a gentleman (as in British or English usage to denote men of exalted birth, feudal lords etc).

There was a debate in mayyam (See below)  regarding the origin of Nacchi as against Achchi (in nagarathar lingo); Achchi follows from aai, means amma; Naachchi means the queenly woman; the matching male part is Thevar (remember raja raja chola/ also known as Raja Kesari Varman Raja Raja Devar)

(as I am not well qualified in tamil literature or etymology, no idea if Mr Gandhi's statements are acceptable as such:)

'Nachiyar' - has root in 'nachchu' means 'paravuthal'-spread. Nadu,Naadu has same meaning. 'Nanchu'-vidam/visham,poison which is easily spread has same root.

All queen has nachiyar surname. Mathavi nacchiyar, velu nachiyar etc.

'Achchi' in settinadu is to specify ladies who overule house activities as spouse.

A temple nachiyarkovil is near kumbakonam town specifies a goddenss.

'Nachinarkiniyan'- a person who wrote explanatory note for 'Thirukkual' has meaning' nadi varuvabavarukku iniyavan'.

f.s.gandhi
-----------------------------------------------------------------------
dear fsg,
all are acceptable except "naachchiyaar":

aai,aayar
aaichchi,aaichchiyaar,
aaichchiyar
naagar=naayar
;["ka" in middle of a word is a tautomer (interchangeable-look at the beauty of Tamizh language!!), ka=ya;similarly, "sa" is interchangeable with "ya"
sa=ya]]-"kagara-sagaram mayangiya yagaram"

continuing the same , the pen'paal of
naagar[naayar]=naaichchiyar [in plural form]
=naaichchiyaar ="naachchiyaar" [in singular form ]

eg.
naagar [mentioned in puranaanooru]
naagar[nagaland,nagpur,nagapattinam,nagarkoil]
naayar[a section of people in kerala present]
aai[master of a cattle herd,herdsman, eg., "aayarpaadi kannan" description ]
[in puranaanooru, king aai an'diran and aai eyinan - lord of huge cattle fleet] =leader of a group of people ,leader of a family[grandfather,father]="makkalai katti maeippavan," the king,
aaichchi-[herdswoman,eg.,"aachchi thandha moar"-the yoghurt of herdslady;also mean as female leader of a group of people,a family=queen,grandmother,="aaychchi"="aayaal' " ="aayaa"=grandmother;also, "aayi"=mother]]

NAAGAR-one of the five primary groups of ancient Tamizh people(like the 5 major land types of ancient Tamizh country [if you want to call them castes;not like castes-but only called by the following names because of their individual profession] as mentioned in puranaanooru:
(1)vael'ireople who did agriculture,raise cattle;include hunters too[vaeduvar]
(2)mazhavareople who did skilled professions other than food-generators;eg.,artisans,musicians,poets,merchants, ministers and administrators;
(3)naagar:derived from the root word " nagam"-the nail of a finger which protects the extremities of hands and feet;
nagam literally meant to defend the boundaries of the ur,the village/town/city;{like the presentday "border security force " on the boundaries of each country.}
that's why we find naagar settlements in ancient history around Madurai,Nagarkovil around Oliyamangalam[the capitals of Pandyan kingdom in late Koodal period] and Nagapattin'am around old Poompugaar[which stretched almost from Thillai to Nagapattinam in the Koodal period]
naachchiyaar=considered as ladies of royal families, who protect and defend their country,e., veera nachiyaar,kundhavai nachiyaar,mangammaa naachchiyaar;
(4)mar'avar:the soldiers,the kings and generals;"during wartimes atleast one from each family goes to the battlefield as a soldier"-puranaanoru;
(5)otrtrar-the spies-recall "5-aam padai!";,such intense was the aristocratic race for supremacy between the Tamizh kingdoms and empires, that many citizens were official spies serving in their home capital or in their enemy's land ; at any time 1 in 10 men and women among the general population of the capital cities like Poompugaar and Vanji and Madurai, were spies , either native spies or foreign enemies' spies !]
Thus in any family there were all types of people originally, a mazhavan,a naagan, a vael'ir and a mar'avan-all in one famiy based on the job each did! Each member of the family had the independence of doing what they liked and what they did best!
This was the secret of successful continuation of the Tamizh civilization , Tamizh Empires and Kingdoms and brilliant and then (and still) the most advanced social system for more than 10,000 years of continuity!;
But later on each professionals seggregated from each other, as a mar'avan's son became another mar'van and a vael'ir's son continued his father's work of farming and so on.
VAELIR:vael'aan'mai=agriculture, vael=farmers
and vaeduvar=vaedar=hunters;
vael'=one who generates food=the root word "vil'ai";cf. "vil'aiththal,vil'aichchal"
one who did the lighter and easier way of generating food
=farming=vael'ir;paguthi{the root wod} end with mellina "l'agaram";
one who did the harder way(vanmur'ai=to kill=hunt down of generating food
=hunting , killing the forest animals=vaedar;paguthi end with vallina "ta garam".
mellinam=lighter way=agriculturing , farming ;
vallinam=harder way=hunting , gathering ;

Senthilkumara
============================================================

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 6, 2015, 1:29:51 AM2/6/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

முன்குறிப்பு:
பெரிய நாச்சியம்மன் கோவிலின் இணையதளம் வழங்கும் தலவரலாற்றை அப்படியே வெட்டி இங்கு ஒட்டி, கதைக்குப்  பொருந்தும் (நான் எடுத்த) படங்களையும் அடுத்து இங்கு இணைக்கிறேன் 
("பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பாடலை" ஒலிபரப்புவதை சற்றே தாமதிக்கும்படியும் ஆய்வாளர்களை கேட்டுக் கொள்கிறேன் :-)). 

பணிநிறைவு பெற்ற அரசு அலுவலர் திரு.என். ஆர். ஜெயராமன்  (N.R.Jayaraman) அவர்களும் இதே தலவரலாற்றுக் கதையை தனது தளத்தில்: http://santhipriyaspages.blogspot.com/2014/12/blog-post.html மேலும் சற்று விரிவாக்கி விளக்கமாகக் கொடுத்துள்ளார்.  இவர் தமிழக சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதி வரும் ஓர் எழுத்தாளர்.

கோவிலின் இணைய தளத்தில் உள்ள  கதையையே எழுத்து மாறாமல் இங்கு  கொடுப்பது, 
1. இக்கோவிலின்  தலவரலாற்றைப் பற்றி நான் எழுதும் கட்டுரையுடன் பின்னர்  ஒப்பிட உதவியாக  இருக்கும் என்ற காரணத்தினாலும், 
2. கோவிலின் இணையதளம் அதிகாரபூர்வமான தகவலின்  மூலம் என்ற மற்றொரு காரணத்தினாலும்தான்.  

(எனது கட்டுரையை விரைவில்  பகிர்ந்து கொள்வேன்)

______________________________________________________________________________________________

 
தல வரலாறு - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி



ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் தல வரலாறு
தகவல் : ஏழுமலை, திருச்சி(கண்ணூர்பட்டி பருத்திக்குடையான்   கோத்திரம்)
பலநூறு ஆண்டுகளுக்கு(சுமார் 300 வருடங்களுக்கு முன் 1690-1710) முன்பு 
ஸ்ரீ் பெரியநாச்சி அம்மனின் கணவர் ஸ்ரீ வீரிய பெருமாள் உறையூர் பகுதியில் வசித்து திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சென்று எண்ணெய் வாணிகம் செய்து வந்தார்.  

அச்சமயம் உறையூரை மன்னர் திரு. விசுவப்ப நாயக்கர்(மதுரை இராணி மங்கம்மாள் சகோதரர்) மந்திரி திரு. அரிய நாத முதலியாருடன் சேர்ந்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அப்போது மன்னரது மகள் இறந்து விட்டதையடுத்து, மகளை இழந்த விரக்தியில், மன்னரால் சரியாக ஆட்சியில் கவனம் செலுத்த முடிய வில்லை. ஓரு சமயம், உறையூர் கடைவீதி வழியாக மன்னர் வந்தபோது, அவரது மகளைப் போலுள்ள நமது பெரியநாச்சியை பார்த்தார், உடனிருந்த மந்திரி விசுவப்ப நாயக்கரிடம் தகவல் தெரிவித்து பெரியநாச்சியை அழைத்து வரச் சொன்னார். பெரியநாச்சி தனது கணவருடன் சென்று மன்னரை சந்தித்தார். அது சமயம், மன்னர் தான் மகளை இழந்து வாடுவதாகவும், நமது பெரியநாச்சியை மகளாக பாவிப்பாதால், பெரியநாச்சியை அரண்மனையிலேயே தங்குமாறும் சொன்னார். அதற்கு, பெரியநாச்சி மற்றும் வீரிய பெருமாள், மன்னரிடம் தாங்கள் தேவைப்படும் போது, தகவல் தெரிவித்தால் உடன் வருவதாக கூறி விட்டு தங்களது இல்லம் வந்து விட்டனர். 

பின்னர், ஒரு முறை மன்னர் புதுகோட்டை பகுதியில் வேட்டைக்காக சென்று காட்டுப் பன்றியை வேட்டையாடி, திரும்பும் போது, தனது மகளைப் போன்று பாவிக்கும் பெரியநாச்சிக்கு சிறிது பன்றிக் கறியை கொடுத்து வருமாறு சேவகனிடம் சொல்ல, சேவகன் தான் அரண்மனைக்கு திரும்பும் வழியில் வியாபாரம் முடித்து திரும்பும் நமது வீரிய பெருமாளை தற்போதய காந்தி மார்க்கெட்(கமான் ஆர்ச்) பகுதியில் சந்தித்து, மன்னர் பொருள் கொடுக்க சொன்னதாக தகவல் தெரிவிக்க, நமது வீரிய பெருமாள், கொடுக்குமாறு சொல்ல, அச்சேவகன், வீரிய பெருமாளின் எண்ணெய் பானையின் மீது அக்காட்டுப் பன்றியின் கறியை வைத்து விட வீரிய பெருமாளோ என்ன பொருளென தெரியாமல் வீட்டிற்கு வந்துக்  கொண்டிருந்தார். 

அப்போது மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே வந்த போது அங்குள்ள முனீஸ்வரர்(கோட்டை முனி) அடித்து அவர் அந்த இடத்தில் இறந்து விட்டார். அவருடன் சென்ற நாய், அவரது இரத்தம் தோய்ந்த உடலுடன் வீட்டிற்கு வர, நமது பெரியநாச்சி ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, அந்த நாயுடன் சென்று பார்த்து, தனது கணவரின் உடலை மாட்டு வண்டியில் வைத்து உறையூருக்கு எடுத்து வரும்போது,  மாட்டு வண்டி தற்போது பெரியநாச்சி அம்மன் கோவில் கருவரை உள்ள இடத்தை விட்டு நகரவில்லை. அந்த இடத்திலேயே வண்டி சுற்றி கொண்டு இருந்தது. எனவே, வீரிய பெருமாள் சடலத்தை வண்டியில் இருந்து இறக்கி வைத்தனர். 

இந்த சமயத்தில் மன்னர் விசுவப்ப நாயக்கரும் தகவலறிந்து அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர் பெரியநாச்சியிடம் கணவர் வீரிய பெருமாளை அடக்கம் செய்து(எரித்து) விட்டு அரண்மனைக்கு வருமாறு அழைத்தார். ஆனால், நமது பெரியநாச்சியோ, நமது வாணிய இனக் கொள்கைப் படி, உடன்கட்டை ஏறுவதாக பிடிவாதமாகச் சொல்ல, மன்னரும் மற்றும் உடன் இருந்தவர்களும் பெரியநாச்சி உடன்கட்டை ஏற ஏற்பாடு செய்தனர். மறுநாள் சூரியோதய நேரத்தில் சந்தனக் கட்டை முதலான அனைத்து விதமான உயர் ரக மரங்களை வைத்து சிதை மூட்டி, தனது கணவர் வீரிய பெருமாளை கையிலேந்தி சிதையில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

பின்னர், நமது பெரியநாச்சி, மன்னரின் கனவில் தோன்றி, தான் சக்தி சொரூபம் அடைந்து விட்டதாகவும், தனது குடிமக்கள் வழிபட கோவில் அமைக்க உதவுமாறும் கூறியதால், மன்னரும் தற்போது கோயில் உள்ள இடத்தை ஒரு பிராமணரிடமிருந்து வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் உள்ளது. (அரசக் கட்டளையை மீற முடியாத அப்பிராமணர் இந்த இடத்தை சர்ப்ப பூமியாக கடவது என சாபமிட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது)
வீரப்ப சுவாமி : 
நமது பெரியநாச்சி சிதை மூட்டியிறங்கும்போது, தனக்கு வாரிசு இல்லையென வருத்தப் பட்டு வடக்கு நோக்கி தனது கணவரின் இஷ்ட தெய்வமான பெருமாளை கூப்பிட, பெருமாள் மலையிலிருந்து வீரப்ப சுவாமி வாரிசாக வந்ததாக தகவல் உள்ளது (பெருமாள் மலை பிச்சாயியின் கணவர்). எனவே, ஸ்ரீ் வீரப்ப சுவாமி நமது ஸ்ரீ் பெரியநாச்சி அம்மன் கோவிலில் ஆதிக்கம் செலுத்துவதாக தகவல் உள்ளது (முன்னோடும் பிள்ளை).


கோவில் தரும் பொறுப்புத் துறப்பு செய்தி:
இந்த இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள நமது கோவிலின் தகவல்கள் பல நபர்களிடம், பல காலக் கட்டங்களில் சேகரிக்கப் பட்டு, நமது சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கப் பட்டுள்ளது. யாரையும் தனிப் பட்ட முறையில் சொல்ல வில்லை. தெரிவிக்கப் பட்டுள்ள தகவல்களில் தவறுகள் இருந்தால் நிர்வாகம் அல்லது இணையதள நிர்வாகியிடம் தெரியப் படுத்தவும் - மாற்றி பிரசுரிக்க ஏற்பாடு செய்யப் படும். 
______________________________________________________________________________________________

..... தேமொழி




On Monday, February 2, 2015 at 1:17:56 AM UTC-8, தேமொழி wrote:
பெரிய நாச்சியம்மன் கோவில்

தேமொழி

unread,
Feb 6, 2015, 1:46:53 AM2/6/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கோவிலின் மேற்சுவற்றில் வரையப்பட்டுள்ள தலவரலாற்று ஓவியங்கள்:

1.


2.


3.

*** அடுத்து இங்கு வர வேண்டிய அம்மையார் உடன்கட்டை ஏறும் படம் சரிவர விழவில்லை, இயலாமைக்கு வருந்துகிறேன் 


4.



..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 6, 2015, 2:06:37 AM2/6/15
to mint...@googlegroups.com


On Thursday, February 5, 2015 at 10:07:40 PM UTC-8, nkantan r wrote:
when I wrote "gentle", I did not mean the quality of being gentle or soft; I meant to identify a DAME as against a gentleman (as in British or English usage to denote men of exalted birth, feudal lords etc).

There was a debate in mayyam (See below)  regarding the origin of Nacchi as against Achchi (in nagarathar lingo); Achchi follows from aai, means amma; Naachchi means the queenly woman; the matching male part is Thevar (remember raja raja chola/ also known as Raja Kesari Varman Raja Raja Devar)

ஆகா!! ஆமாம் ...தேவர் ...சரியே... ராஜ ராஜ சோழனுக்கும் உடையார் என்ற பெயரும் உண்டு...உடையார் ராஜ ராஜர் 

(as I am not well qualified in tamil literature or etymology, no idea if Mr Gandhi's statements are acceptable as such:)


இந்த தளத்தில் இருப்பது TSCII எழுத்துரு.  முரசு அஞ்சல் அல்ல.  
படிக்க விரும்பும் பகுதியை http://kandupidi.com/converter/  இத்தளத்தில் காப்பி பேஸ்ட் செய்து சரியான எழுத்துருவை தேர்வு செய்து மாற்றி படித்துக் கொள்ளலாம். 
அங்கு குழுமத்தில் முதலில் வருவது வட்டார வழக்குகள் பற்றிய விவாதம்.....

'Nachiyar' - has root in 'nachchu' means 'paravuthal'-spread. Nadu,Naadu has same meaning. 'Nanchu'-vidam/visham,poison which is easily spread has same root.

All queen has nachiyar surname. Mathavi nacchiyar, velu nachiyar etc.


 உறையூர் முகமதிய இளவரசியை துலுக்க நாச்சியார் எனக்குறிப்பிடுவார்கள் 
மதுரையின் ஆலவாய் என்ற பெயருக்கு விளக்கம் இது போன்ற தகவலின் அடிப்படையில் உருவானது போலும்...
 
that's why we find naagar settlements in ancient history around Madurai,Nagarkovil around Oliyamangalam[the capitals of Pandyan kingdom in late Koodal period] and Nagapattin'am around old Poompugaar[which stretched almost from Thillai to Nagapattinam in the Koodal period]
naachchiyaar=considered as ladies of royal families, who protect and defend their country,e., veera nachiyaar,kundhavai nachiyaar,mangammaa naachchiyaar;
(4)mar'avar:the soldiers,the kings and generals;"during wartimes atleast one from each family goes to the battlefield as a soldier"-puranaanoru;
(5)otrtrar-the spies-recall "5-aam padai!";,such intense was the aristocratic race for supremacy between the Tamizh kingdoms and empires, that many citizens were official spies serving in their home capital or in their enemy's land ; at any time 1 in 10 men and women among the general population of the capital cities like Poompugaar and Vanji and Madurai, were spies , either native spies or foreign enemies' spies !]
Thus in any family there were all types of people originally, a mazhavan,a naagan, a vael'ir and a mar'avan-all in one famiy based on the job each did!
Each member of the family had the independence of doing what they liked and what they did best!

இந்த ஐந்து பிரிவில் நாகர் பிரிவில் மட்டும் பெண்பால் பட்டப்பெயர் இருக்கிறது, தலைவி என்ற பொருள் தரும் வகையில் ஒத்துபோகிறது
சிரமம் பாராது இங்கு அத்தகவலை எடுத்து அளித்ததற்கு மிக்க நன்றி nkantan r

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 6, 2015, 4:12:23 AM2/6/15
to mintamil

வணக்கம்.

பெரிய நாச்ச்சியம்மன் பற்றி அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி.

வாய்ப்பு அமையும் போது சென்று வழிபட்டு வருவேன்.

அன்பன்

கி.காளைராசன்


meenavan2

unread,
Feb 6, 2015, 7:15:59 AM2/6/15
to mint...@googlegroups.com

தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி

தங்களுடைய பெரிய நாசியம்மன் பதிவு மிக அருமை.
என்னுடைய ஊர் கண்டரமாணிக்கம்.இங்குள்ள அம்மன்
பெயர் மாணிக்க நாச்சி.பக்கத்தில் பெரிச்சிக் கோயில்
என்று ஒரு கோயில் உள்ளது.முதலாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியன்.காலத்துக் கோயில்.அவனுடைய
பட்டத்தரசி உலகமுழுதுடையாள் என்ற பெரிய நாச்சியார்
கட்டிய கோயில் என்பதால் பெரிய நாச்சியார் கோயில்
என்று அழைக்கப் பெற்றது.பின்னர் அது மருவிப் பெரிச்சிக்
கோயில் என்றைழ்க்கப் பெற்றது.இதுபற்றிப் பின்னர்
தனியாக எழுதுகின்றேன்.
மீனவன்

தேமொழி

unread,
Feb 7, 2015, 6:16:11 PM2/7/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com

நன்றி, செய்யுங்கள்..:))

திருச்சி வரும்பொழுது  என் தம்பி வீட்டிலேயே தங்கிச் செல்லவும் அழைப்பு விடுக்கிறேன். தம்பியின் வீடு நுழைவாயிலில் இருந்து, கொல்லைப்புறம் துளசிமாடம் வரை ஆன்மிகம் தவழும் வீடு.

வரும்பொழுது மறக்காமல் சொல்லுங்கள்.  எங்கள் வீட்டிற்கு மிக அருகில்தான் இந்தக் கோவில்.  

நீங்கள் காசி பாத யாத்திரை சென்ற பொழுதே, வழியில் திருச்சி வந்த பொழுது தம்பியை உங்களை வந்து சந்திக்கச் சொல்ல எண்ணினேன்.  ஆனால் நீங்கள் வந்த நாட்களில் தம்பி ஊரில் இல்லை.

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 7, 2015, 6:17:20 PM2/7/15
to mint...@googlegroups.com
பாராட்டிற்கும் மேலதிகத்தகவலுக்கும் மிக்க நன்றி மீனவன் ஐயா. 


அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Feb 7, 2015, 6:43:06 PM2/7/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கோவிலைப் பற்றி தகவல்கள் தரும் மேலும் சில படங்கள்.....

1. அறங்காவலர்கள்:


2. அறங்காவலர்கள் இருவரின் ஓவியம்:


3.கோவிலைப் பற்றிய தகவல்:


4. கொடை வழங்கப்பட்ட தகவல்:


5. கொடை வழங்கப்பட்ட தகவல் மேலும் சில:


6. வழிபாடுகள் நடத்தப்படும் நேரம்:


7. பக்தர்களிடம் ஒரு வேண்டுகோள்:


தொடரும் ....


On Thursday, February 5, 2015 at 10:46:53 PM UTC-8, தேமொழி wrote:

கோவிலின் மேற்சுவற்றில் வரையப்பட்டுள்ள தலவரலாற்று ஓவியங்கள்:

1.

2.

3.

*** அடுத்து இங்கு வர வேண்டிய அம்மையார் உடன்கட்டை ஏறும் படம் சரிவர விழவில்லை, இயலாமைக்கு வருந்துகிறேன் 

4.

..... தேமொழி 

கூகுள் வரைபடம்: ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி ( படம் காண சுட்டியை சொடுக்கவும்)

N. Ganesan

unread,
Feb 7, 2015, 8:14:54 PM2/7/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Saturday, February 7, 2015 at 3:43:08 PM UTC-8, தேமொழி wrote:

கோவிலைப் பற்றி தகவல்கள் தரும் மேலும் சில படங்கள்.....

அப்பாவுடைய குலதெய்வமா? அம்மாவுடைய குலதெய்வமா?
அப்பாவினது என நினைக்கிறேன்.

அன்புடன்
நா. கணேசன்

தேமொழி

unread,
Feb 7, 2015, 9:38:37 PM2/7/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இல்லையே திரு. கணேசன்.!!!

இந்த செட்டியாரம்மா, செட்டியார் குலமக்களின் குலதெய்வம் என்றுதான் சொல்லப்படுகிறது.

என் அப்பாவும் செட்டியார் கிடையாது...அம்மாவும் செட்டியார் கிடையாது...நானும் செட்டியார் கிடையாது..என் கணவரும் செட்டியார் கிடையாதே.!!!!

ஆனால்  எங்கள் மூதாதையரை எப்படி அழைப்பார்கள் என்பதை  நான் சொல்ல மாட்டேனே.  

Na na na....Na na na....Na na na ....   யாரும் என்னை trick பண்ண முடியாதே    Na na na....Na na na....Na na na .... 


என் அம்மா வீட்டு குலதெய்வம் வேளாங்கண்ணி   பக்கம் ஒரு சிறு கிராமத்திலும்,   
அப்பா வீட்டு குலதெய்வம் வேதாரண்யம் பக்கம் ஒரு  சிறு கிராமத்திலும், 
என் கணவரின் வீட்டு குலதெய்வம் ஆத்தூர் பக்கம் ஒரு சிறு கிராமத்திலும் இருக்கிறார்கள்.

இந்த அம்மா எங்க பக்கத்து வீட்டம்மா ...அவ்வளவுதான், அதற்கு மேல் அவர்களுடன் எனக்குத் தொடர்பு கிடையாது.   

....தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 8, 2015, 5:25:28 AM2/8/15
to தேமொழி, mintamil

வணக்கம்.

தங்களது அன்பான அழைப்பிற்கு நன்றியுடைன்.  அவசியம் அன்னை தேன்மொழியை வழிபட வருவேன். 

நல்லதொரு கோயிலைச் சுட்டிக்காட்டியதற்கு மீண்டும் எனது நன்றிகள்.

அன்பன்

கி.காளைராசன்

Oru Arizonan

unread,
Feb 10, 2015, 12:40:18 AM2/10/15
to mintamil
என் தந்தை பிறந்த ஊரான சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரப் பெண்மணி என்று வேலு நாச்சியார் மீது எனக்கு அளவு கடந்த பற்றும், மதிப்பும் உண்டு.  இரண்டு நாள்கள் முன்பு அதே சிவகங்கைச் சீமைக்குச் சென்று வந்தேன்.  மலரும் நினைவுகளைத் தூண்டிய நிகழ்ச்சி அது.

மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி, தேமொழி!
ஒரு அரிசோனன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 8, 2016, 4:05:57 AM5/8/16
to mintamil

நல்லதொரு பதிவு.
நன்றியுடையேன்.

தேமொழி

unread,
May 8, 2016, 4:53:15 AM5/8/16
to மின்தமிழ், kalair...@gmail.com
ஆகா... நாளை திங்கள் முதல் புதன் வரை திருச்சியில் இருப்பீர்கள் என்று உங்கள் நடைபயணக் கால அட்டவணை கூறுகிறதே. 

வாய்ப்பு கிடைத்தால், இக்கோவில்  உங்கள் தடத்தில் இருந்தால்,  இக்கோவிலுக்குச் சென்று வரவும்.

பாராட்டிற்கு நன்றி.  


..... தேமொழி 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 8, 2016, 9:56:28 AM5/8/16
to mintamil


On 06-Feb-2015 2:42 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> பெரிய நாச்ச்சியம்மன் பற்றி அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி.
>

நாளை 09.05.2016, 10.05.2016 இரண்டு தினங்கள் திருச்சியில் இருப்போம்.

> வாய்ப்பு அமையும் போது சென்று வழிபட்டு வருவேன்
>

> அன்பன்
>
> கி.காளைராசன்
>
>
> On 02-Feb-2015 2:47 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>
>> பெரிய நாச்சியம்மன் கோவில்
>>

>> தம் முன்னோர்களை தெய்வங்களாக ஒரு குலத்தினர் வணங்கும் பொழுது அவர்கள் அக்குலத்தின் குலதெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 
>> பெரிய நாச்சியம்மன் தெய்வம் அது போன்ற குல தெய்வங்களில் ஒருவர்.  பெரிய நாச்சியம்மனும் அவரது கணவர்  வீரிய பெருமாள் என்பவரும், மகன்  வீரப்ப சாமி என்பவரும் அவ்வாறாக ஒரு குலத்தின் குலதெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.  
>>
>> திருச்சி தென்னூரில் பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது.  திருச்சி மாநகரின் மிகப்பரபரப்பான சாலைகளின் தரவரிசையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்ற தகுதியில்  இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தென்னூர் ஹை ரோட்டில் (ஆங்கிலத்திற்கு மன்னிக்க, பொதுவாக வழக்கில் உள்ள சொற்களை கட்டுரையின் செய்திகளின் தெளிவு கருதி குறிப்பிடும் எண்ணம்), திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.  போக்குவரத்து தொல்லை என்பதே கிடையாது, நகரின் எப்பகுதியில் இருந்தும் எளிதில் சென்றடையலாம்.  இடத்தின் புவியிடக்குறியீடு: 10.816150, 78.679874.
>>
>> திருச்சியில் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்தாலும், வசிக்கும் இடத்திற்கு வெகு அருகில் இந்தக் கோவில் இருந்தாலும் சென்று பார்த்து வரும் எண்ணமே தோன்றியதில்லை.  பொதுவாக கோவில்களுக்கு செல்லும் வழக்கமற்ற குடும்பப் பின்னணி என்பதும் இதற்கு ஒரு காரணம்.  திருச்சியின் 'லேண்ட்மார்க்' என்று சொல்லப்படும் மலைக்கோட்டையை திருச்சி செல்லும் பொழுதெல்லாம் தவறாமல்சென்று பார்ப்பது வழக்கம்.  திருச்சிவாசி என்பதால்  மலைக்கோட்டையின் மீது ஒரு தனி அன்பு உண்டு.  ஒவ்வொருமுறையும்  உச்சிக்கு ஏறி திருச்சி நகரைப் பார்த்து அதோ காவிரிப்பலம், இதோ ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், காவிரியில் என்றுதான் தண்ணீர் வருமோ தெரியவில்லையே  என்றெல்லாம் எண்ணிக்கொண்டு திருச்சியை பார்ப்பது ஒரு அருமையான அனுபவம்.  இறங்கும் பொழுது வயதாகிக் கொண்டே வருகிறதே, சிறுவயதில் ஏறிய பொழுது போலல்லாமல் இப்பொழுது இப்படி மூச்சு வாங்குகிறதே!!! அடுத்த முறை திருச்சி வரும்பொழுது ஏறமுடியுமா என்பது போன்ற சிந்தனைகள் வரும்.  
>>
>> உறவினர்கள் வந்தால், நண்பர்கள் வந்தால் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், வயலூர், கல்லணை, முக்கொம்பு என்று அழைத்து  சென்று ஊரறிமுகம் செய்வதுடன் கோவில் சென்று வருவது ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்தில் முடிந்துவிடும். வீட்டிற்கு வெகு அருகில் இருக்கும் கோவிலான பெரிய நாச்சியம்மன் கோவிலை சென்று பார்க்கும் எண்ணமே இருந்ததில்லை. மதுரை, தஞ்சை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சுவாமிமலை என்று எங்கெங்கோ போய் வந்திருந்தாலும் உள்ளூர் கடவுள் ஏனோ கவனத்தைக் கவரவில்லை.  கடவுள்களுக்கும் பெயர் புகழ் இருந்தால்தான் மக்கள் மதிக்கிறார்கள்.  
>>
>> இக்கோவில் பொதுவாக  பெரிய நாச்சியம்மன் கோவில் என்று அழைக்கப் பட்டாலும் "அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சியம்மன் சமேத ஸ்ரீ வீரியபெருமாள் திருக்கோவில்" என்பது கோவிலின் முழுப் பெயர். இக்கோவில் வாணிய செட்டியார் சமுகத்தினரின் 5 கோத்திர குடிமக்களான; பருத்திக்குடையான் , தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷிகள்  கோத்திர மக்களுக்கு சொந்தமானது.  
>>
>> பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள்  ஸ்ரீ வீரிய பெருமாள் பரம்பரையினர்
>> தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்கள் - ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் வழி வந்தவர்கள்
>> பயிராலழக மகரிஷி கோத்திர மக்கள் - பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று, பின்னாளில் இணைந்தவர்கள்
>> பாக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
>> மாத்துடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் விரிப்பு, ஜமுக்காளம் கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
>>
>> தலமரம்: எலுமிச்சை மரம் 
>>
>> தல தீர்த்தம்: விசுவப்ப நாயக்கர் குளம் அல்லது பொற்றாமறை குளம் என்றழைக்கப்படுகிறது.  தற்போதைய கோர்ட் பாலம் அருகிலிருந்து குடமுருட்டி வாய்க்கால் மூலமாக காவிரி நீர்  வந்து குளத்தை நிறைக்கிறது.  கோவிலின் வடபுறம் ஒரு சுடுகாடு இருந்ததாகவும், அதற்கான பயன்பாட்டில் இருந்த குளம் கோவில் உருவானவுடன் கோவிலுக்காக அளிக்கப்பட்டதாகவும் தகவல்.  அத்துடன் இந்தக் கோவில் வழித்தடத்தில் இருப்பதால் அக்காலத்தில் பயணத்தில் உள்ளவர்கள் மாடுகளுக்கு தண்ணீர் காட்டி இளைப்பாறும் இடமாகவும் இது பயன்பட்டதாகத் தெரிகிறது.  
>>
>> இந்தக் கோவிலில் இருந்து கூப்பிடுதூரத்தில் ஒரு சத்திரம் உள்ளது (உண்மையிலேயே அது கூப்பிடுதூரம்தான்...அந்நாட்களில் ...  சந்தடியற்ற காலத்தில், "ஏ...ஆச்சி சித்த இங்கன வாரீயளா" ...என்று கூவினால், "தோ வாறேன் ...ஏன் இப்படி தொண்ட கிழிய கத்தறவ...ஆச்சி மேல பாசம் பொத்துக்கிட்டுதான் கொட்டுது .." என்று கூவலில் உரையாடும் அளவிற்கு வெகு அருகில்).  இந்த சத்திரத்தின் வயது  ஒரு நூற்றாண்டிற்கும் மேல்  இருக்கக் கூடும்.   வரலாற்று சிறப்பு மிக்கது என்று கேள்வி.  பெரிய பெரிய புள்ளிகள் அந்நாட்களில் வந்து தங்குவார்களாம். அதனால் தென்னூர் ஹை ரோடின் ஒரு பகுதி கீழ சத்திரம் ரோடு என்று  அழைக்கப் படுகிறது. இந்த சத்திரத்தின் பயணிகளுக்கு பயன்பட்ட குளம் அது என்று தெரிகிறது. 
>>
>> போக்குவரத்து வசதியற்ற சென்ற நூற்றாண்டுகளில் வழிபடும் வசதிக்காக, இக்கோவிலின் மண்ணெடுத்து சென்று இக்குல மக்கள் தங்கள் ஊர்களில் கோவில் அமைத்தால் இந்த ஊருக்கு மேலும் சில ஊர்களில் கிளைகள் உண்டு.  பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்களுக்காக  வேங்காம்பட்டி, கண்ணூர்பட்டி (நாமக்கல்) ஆகிய ஊர்களிலும்;  தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் புலியூர், நத்தம் ஆகிய ஊர்களிலும்;  பயிராலழக மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் மணமேடு, ஜேடர் பாளையம் ஆகிய ஊர்களிலும் பெரிய நாச்சியம்மன் கோயில்கள் உண்டு. 
>>
>> இந்த ஐந்து குல மக்களும் தங்கள் குழந்தைகளின் முதல் முடி இறக்குதல், காது குத்துதல் போன்றவற்றை இக்கோவிலில் செய்கிறார்கள்.  ஆண்டிற்கு இருமுறை, சிவராத்திரி, ஆடி 18 என இரு நாட்களும் சிறப்பு மிக்கவை, அன்று சிறப்பு வழிபாடுகளும் முடி இறக்குதல் காத்து குத்துதல் போன்ற வேண்டுதல்களும் இந்த இரு நாட்களில் மட்டும் நிறைவேற்றப்படும்.  சிவராத்திரி அன்று அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.
>>
>> அத்துடன் மத நல்லிணக்கத்திற்கும் முக்கியமளிக்கும் கோவிலிது.  சிவ-வைணவ  தலம் என்று இருப்பினும் இந்த கோவிலில் 33 தெய்வங்கள் உள்ளனர். 
>> முஸ்லீம் மதத்தைச் சார்ந்த "மழுங்கு ராவுத்தர்" என்பவருக்கு மூன்று கால வழிப்பாடு  நடைபெறுகிறது. முஸ்லீம் மக்கள் முகரம் பண்டிகை அன்று இந்தக் கோவிலின் தெப்பக் குளத்திலிருந்து அருகிலுள்ள தர்காவிற்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்.  விருது நகர் நாடார்கள் அவர்களது சாமியிடம் குறிகேட்ட பொழுது, கடவுள் கட்டளையிட்டதால் ஆண்டிற்கு  ஒரு முறை வந்து வழிபடுகிறார்கள்  
>>
>>
>> கோவில் இருப்பிடம்:
>> ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்
>> தென்னூர் ஹை ரோடு
>> தென்னூர், திருச்சி - 620 017
>> இந்த கோவில் தமிழக அரசினால் 1931-ம் ஆண்டு சட்டத்திலிருந்து விளக்களிக்கப் பட்ட கோவில்(EXCEPTED TEMPLE) என ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
>>

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 2, 2017, 9:33:47 AM5/2/17
to mintamil, Kalai Email

வணக்கம்.
வரும் 15, 16-07-2017 இருநாட்கள் அறுபடைவீடு பாத யாத்திரிகர் அனைவரும் திருச்சியில் இருப்போம்.
அருள்மிகு பெரியநாச்சி அம்மனைக் கும்பிட வாய்ப்பு அமைய வேண்டிக் கொள்கிறேன்.

>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Malarvizhi Baskaran

unread,
May 2, 2017, 9:40:46 AM5/2/17
to மின்தமிழ்

அருமையான பதிவு

தேமொழி

unread,
May 2, 2017, 7:42:13 PM5/2/17
to மின்தமிழ்


On Tuesday, May 2, 2017 at 6:40:46 AM UTC-7, Malarvizhi Baskaran wrote:

அருமையான பதிவு

பாராட்டிற்கு நன்றி, பாராட்டிற்கு நன்றி மலர்விழி.

இங்கு இன்னொரு மலர்விழியும் உள்ளார்.

மதுரை பேராசிரியர் மலர்விழி மங்கையர்க்கரசி  

நீங்கள் 

மலேசிய எழுத்தாளர் மாயா மலர்விழி பாஸ்கரன்.


அன்புடன்

..... தேமொழி




 

On Monday, February 2, 2015 at 5:17:56 PM UTC+8, தேமொழி wrote:

தேமொழி

unread,
May 2, 2017, 7:58:56 PM5/2/17
to மின்தமிழ்
தென்னூர் சாலையிலேயே இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை: 
(1)மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்று குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர் என்ற தகவலும்,  

(2) அக்காலத்தில் இருந்த உடக்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வரலாற்றுச் சான்றாகவும்  

(3) தலவரலாறாகக் கூறப்படுவது நான்கு நூற்றாண்டுகளுக்கு (420 அண்டுகளுக்கு) முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. வாய்வழிக் கதையாக அக்குல மக்களிடம் வழங்கி வருகிறது என்பதுவுமே நான் முக்கியமாகக் கருதுவது.

மாயா இந்த வரலாற்றுக் குறிப்பும் கொண்டு ஒரு கதை எழுதலாம்.   மேலும் விவரங்கள் உந்தக் கட்டுரையில் இருக்கிறது.  

விசுவப்ப நாயக்கரின் மகள் >>> https://groups.google.com/d/msg/mintamil/Szy_VA_V_bE/BqYN3VjA6jcJ

..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages