சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்...

622 views
Skip to first unread message

ko.senguttuvan

unread,
Dec 3, 2017, 7:21:42 AM12/3/17
to மின்தமிழ்

“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்

கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற

நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட

எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள். (855)

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.

இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.

பக்கங்கள்: 168 விலை: ரூ.150.

இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.

எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!

இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.

தேமொழி

unread,
Dec 5, 2017, 5:36:22 PM12/5/17
to மின்தமிழ்
பலரைக் கவரும் தலைப்பு.  பாராட்டுகள், நூல் பல பதிப்புகள் காண வாழ்த்துகள்.

..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 5, 2017, 10:46:34 PM12/5/17
to mint...@googlegroups.com
வாழ்த்துகள். உங்கள் தேடலில் புனைவா? உண்மையா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Dec 10, 2017, 7:57:15 AM12/10/17
to மின்தமிழ்
அருமை. நல்ல முயற்சி. நல்வாழ்த்துகள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

Venkatachalam Dotthathri

unread,
Dec 10, 2017, 11:19:36 AM12/10/17
to mintamil
ஒம் காஞ்சி பெரியவர் தனது உரையில் சமணர்கள் தம்மியல்பாகவே கழுவேற்றம் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
வெ.சுப்பிரமணியன் ஓம்

Virus-free. www.avast.com

N D Logasundaram

unread,
Dec 10, 2017, 12:54:49 PM12/10/17
to mintamil
என் இனிய நண்பர் காலம் சென்ற கொடுமுடி ஷண்முகம் அவர்கள் 
ஓர் கருத்துரையில் எண்ணாயிரம் எனும் ஊரின்  கல் வெட்டு புதிதாக
 கண்டெடுக்கும் போது  அதனில் சமணர் கழுவேறியது கா ட்டப்பட்டுள்ளது 

எனவே பலநாள் இந்த எண்ணாயிரம் சமணர் கழுவேற்றம் பற்றி விவாதம்  
எழுந்தது முற்றிற்கு வந்துள்ளது அதாவது இந்த எண்ணாயிரம் எனபது
ஊரின்பெயராகும் என்பது இதில் குறித்த சமணர் கழுவேற்றம்தான்
 எண்ணாயிரம் சமணர்கள் கழு வேறினர் எனபது  ஆகும் என ஐயமின்றி  
கட்ட சான்று  வந்துள்ளது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பே என எழுதினர் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

Suba

unread,
Dec 11, 2017, 12:02:27 AM12/11/17
to மின்தமிழ்
2017-12-10 17:19 GMT+01:00 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
ஒம் காஞ்சி பெரியவர் தனது உரையில் சமணர்கள் தம்மியல்பாகவே கழுவேற்றம் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

​தானாகவே கழுவில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு பைத்தியமா ?

எதுவும் சொல்வார்கள்.. நாம் தான் யோசிக்க வேண்டியுள்ளது. ஏன் எதற்காக சொல்கின்றார்கலள் என்று..

சுபா​

N D Logasundaram

unread,
Dec 11, 2017, 5:08:50 AM12/11/17
to mintamil
​தானாகவே கழுவில் ஏறிக்கொள்ள அவர்களுக்கு பைத்தியமா ?

அன்புள்ள திருமதி சுபா அவர்களுக்கு

நீங்கள் இப்போது குறிக்கும் எண்ணம் இந்நாளில் உங்கள் மனதில் 
நீ ங்கள் வளர்ந்த சூழ் நிலையில் கிட்டியது உணர்வது 
ஆனால்
பொருள்  பேசுவது அன்னநாளில் அம்மக்களின் மனதில் இவ் வாறு
 இருந்திருக்கலாம் எனவும் மரபு கலாச்சாரம் பண்பாடு சூழ் நிலைக்கு 
 சென்று பார்க்கவேண்டும் 
அக்காலத்தில் 
பலவகையில் தன்னை மாய்த்துக்கொள்ளும் வழக்கம் மரபு சமூதாயம்
 ஏற்றுக்கொண்ட பழக்கமாகி இருந்துள்ளது 

(1) உடன் கட்டை ஏறுதல் >>> இதனில் அக்காலத்து பழகிய மரபு வழி தானாக
முன்வ ந்துள்ளதும்தான் அதிகம் எனலாம் 

(2) நவகண்டம் எனும் தன்னுயிர் கத்தியால் தன கழுத்தினையே அறுத்துக்
கொண்டு மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகளும் வரலாற்றில் ஆவணமாகி யுள்ளது
நடுகற்கள் 
 
(3)மதுரையில் முகமதியர் படையெடுப்பின் போது ஊரார் நலனுக்காக திருப்பரன்
குன்ற கோபுரத்தின் மேலேறி பலியாக குதித்து உயிர் விடுதல்ந டந்துள்ளது
பலியிடுவது மக்களை  வைத்தும் ஒண்டு 

(4) அருணகிரிநாதர் கூட கோபுரத்தில் ஏறி குதித்துள்ளார் எழுதப்பட்ட வரலாறு
  மங்கலம்தான் முடிவாக வேண்டும் எனும் சமூதாய முடிவின்படி கடவுளால் உயிர்
 பிழைத்தார் என முடியும் 

(5) தமிழின்மீது அக்கறைகொண்டு உயிர்நீர்த்த சங்கரலிங்கனார் சென்னைநகரம் 
ஆந்திராவிற்கு சேரவேண்டும் என உண்ணா நோன்பிருந்து  உயிர்விட்ட பொட்டி
 ஸ்ரீ ராமுலு  இன்றும் கருணாநிதி யோ MGR போன்ற தலைவர்கள் செயல் மீது நம்பிக்கை
 கொண்டு இறந்து பட தயாராக உள்ளவர்களும் உண்டு

(6)சமண முனிகள் எந்தவித நெருக்குதல் இன்றியே கடைசி காலத்தில் ஏதும் உண்ணாமல
நோன்பில் இருந்து உயிர்விடுதல் என்பதே அவர்களுக்கு நியமித்த முறையாகவே காணலாம் 

(7) சித்தர்கள் சீவசாமந்தி எனும் பழக்கமும் வலாற்றில் மட்டுமல்ல இந்நாளிலும்  செய்தியாக
 வருவது உண்டு 

இன்னும் பலவகை காரணங்களைக் காட்டமுடியும் நா ன் கூற வந்தது என்ன வென்றால் 
சமணர்கள் தானாக முன்வந்து உய்விட்டனர் எனபது நடந்துக்கக்கூடியதே எனலாம்
 
அதாவது அய்யப்பாடுடையது என்பதுடன் நிறுத்தலாம்  மேலும் எண்ணாயிரம் சமணர்கள் எனபது
முற்றிலும் உண்மை இல்லை எனக்கூறத்தக்க சான்றுகள் உண்டு அதாவது இவ்வளவு எண்ணிக்ககையில் 
எங்கும் இருந்ததில்லை 

மக்கள்தொகை மிக மிக மிகுந்துள்ள இந்நாளிலும் எடுத்துக்காட்டாக காசியில் உள்ள ஓர் குறிப்பிட்ட 
ஆடை அணியாத கொளகையினர்  சேர்த்தாலும் ஓராயிராயிரம் கூட ஆகாது ஆகையால் ஒரே இடத்தில் 
8000 சமண ர்கள் கழுவில் ஏறினார் அல்லது ஏற்றப்பட்டனர் என்பது மட்டும் உண்மை யாகாது ஆகாது 

ஆங்கிலேயர் ஆட்சியிலும் தூக்கில் இடப்பட்டவர்கள் உண்டு மறுக்கவில்லை 

ஆ னால் அகிம்சை  ஒன்றை மூல கருத்தாக்க கொண்டவர்களாகிய சமணத்துறவிகள் 
மற்றவர்களை அகிம்ஸை செய்பவர்களாக ஆ க்கா முனை யமாட்டார்கள் என்பது திண்ணம் 

இதைத்தான் முன்பு பலமுறை இந்த மடலாடலில் கழுவேற்றம் வந்தபோதும் திரு பானுகுமார்
 காட்டியது என நினைவு 

நூ த லோ சு
மயிலை
ஊ 

Suba

unread,
Dec 12, 2017, 3:05:32 AM12/12/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
தாங்கல் குறிப்பிடும் அனைத்து உதாரனங்களையும் நான் அறிவேன்.
சம்னர் தம் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது நடக்கும் பட்சத்தில் அவர்கள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல் செய்வதே இயல்பு.

வன்முறையாக கழுவில் ஏறி அமர்ந்து கொள்ளும் சடங்கு என்பது சமணர், பவுத்தர் வழக்கில் இல்லாதது.
இதனை நாம் மறுக்கவியலாது.

சுபா

K R A Narasiah

unread,
Dec 12, 2017, 4:08:27 AM12/12/17
to mintamil
எண்ணாயிரம் என்ற இடத்திலிருந்து வந்த சமணர்கள். எண்ணிக்கையில் அல்ல. இதை ஐராவதம் அவரகளும் தெளிவு படுத்தியுள்ளார்கள். தமது சமயத்தை ஒப்புக் கொள்ளாத மற்ற, எதிர்க்கும்  சமயத்தினரைக் கொல்வது  சாதாரண்மாக நடந்துகொண்டிருந்த,  நடந்ர்துகொண்டிருக்கும், நடக்கப்போகும் உண்மையே. எல்லா நாட்டினருக்கும் இது பொதுவே. அயர்லாந்தில் நான் இருந்தபோதே கத்தோலிக்கர்கள் ப்ராடஸ்டண்டுகளைக் கொல்வதைக் கண்டுள்ளேன். இஸ்லாமியர்கள் இந்துக்களைக் கொன்ற கதையை விரிவாகப் பாதிரிமார்கள் பதிவு செய்துள்ளனர். 
சமணர்கள் கொல்லப்படவில்லை என புறம் தள்ள முடியாது; அதேநேரத்தில் grossly exaggerated figures have to be ignored.
தவிரவும், பின்னர் வந்த (கூன் பாண்டியனுக்கு) மன்னர்கள் சமணர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்; அவர்களது குகைகள் பராமரிக்கப்பட்டன. பிற்காலத்தில் தான், சில இடங்க்ஜளில், (திருப்பரங்குன்றத்து குகைகளில்) சமண சிற்பங்கள்    பைரவர்களாக மாற்றப்பட்டன். ஆலவாயில் இவற்றையெல்லாம் நன்கே பதிவு செய்துள்ளேன்.
நரசய்யா
நரசய்யா

On Tue, Dec 12, 2017 at 1:35 PM, Suba <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info

2017-12-11 11:08 GMT+01:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
தாங்கல் குறிப்பிடும் அனைத்து உதாரனங்களையும் நான் அறிவேன்.
சம்னர் தம் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது நடக்கும் பட்சத்தில் அவர்கள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல் செய்வதே இயல்பு.

வன்முறையாக கழுவில் ஏறி அமர்ந்து கொள்ளும் சடங்கு என்பது சமணர், பவுத்தர் வழக்கில் இல்லாதது.
இதனை நாம் மறுக்கவியலாது.

சுபா

நரசிங்கபுரத்தான்

unread,
Dec 12, 2017, 8:54:37 PM12/12/17
to mintamil, N D Logasundaram
சகோதரி சுபா அவர்களுக்கு 

"வன்முறையாக கழுவில் ஏறி அமர்ந்து கொள்ளும் சடங்கு என்பது சமணர், பவுத்தர் வழக்கில் இல்லாதது.
இதனை நாம் மறுக்கவியலாது."

உண்மை தான் ஆனால்  வன்முறையால் அடுத்தவரை ( பகைவரை ) கழு ஏற்றும் மரபு  திபெத் பவுத்தர்  வழக்கில் உள்ளது .

மேலும் இவர்களின் கடவுள்  வஜ்ர பைரவா ( அ ) வஜ்ர கில்லா   அதற்கான ஆயுதம் தங்கி உள்ளார் .

சைவசமயத்தின் கபாலிக பிரிவைபோன்று  கபாலம் வைத்துக்கொள்ளும் வழக்கம் இந்த தந்திரிக வழக்கில் உள்ளது . இவர்களின் ஆயுதங்கள் பட்டியல் 

வஜ்ர பைரவா எனும்   யமன்  
Inline image 1

இந்த வழிமுறையில் சிவன் ,விஷ்ணு ,முருகன்  யாவரும் இவருக்கு படை வீரர்களாக உள்ளனர் .

Inline image 2

இந்த நூலில் சில செய்திகள் .

Inline image 3
Inline image 4

மேலும்  வஜ்ர கில்லா  வடிவம் 

Inline image 5

பொதுவாக திபெத் தாந்த்ரீக மரபின் இவை இந்தியாவில் இருந்து சென்றவையாக சொல்லப்பட்டாலும் . புத்த மதத்தின் இந்த பிரிவு நடைமுறைகள் தோற்றத்தின் காரணம் சைவ மதப் பிரிவான கபாலிகமா  ? அல்லது  அவர்களில் இடமிருந்து இவர்கள் எடுத்துக்கொண்டனரா என்பதைத்  தெளிவாக் கூற முடியாது என்றே கருதுகின்றேன் .

நன்றி 

சுரேஷ்குமார் .

N. Ganesan

unread,
Dec 12, 2017, 10:44:39 PM12/12/17
to மின்தமிழ்
2017-12-03 4:21 GMT-08:00 ko.senguttuvan <ko.seng...@gmail.com>:

“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்

கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற

நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட

எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள். (855)

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.

வாழ்த்துகள்.

பாரதியார் ஆடுகளின் கழுவேற்றம் பற்றிப் பேசியுள்ளார். சைவ உணவை மக்கள் மேற்கொள்ளப் பரிந்துரை செய்யும் கட்டுரையில்:
'சில தினங்களுக்கு முன்பு, சங்கரநயினார்கோயிலுக்கருகே ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாடன் கோயிலில் பெரிய ஜனத்திரள் கூடிபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மாடசாமி யார் தெரியுமா? அந்த கிராமத்தில் பல வருஷங்களின் முன்னே ஒரு மறவன் இருந்தானாம். அவன் கொலை, களவு முதலிய செயல்களில் மிகுந்த வீரனாகவும் ஏழைஎளியோர் மீது மாத்திரம் கிருபையுடையவனாகவும் இருந்தானாம். அவன் செத்த பின், அவனை அந்த இடத்தில் ஸமாதி வைத்து, அந்த ஸமாதியில் ஓர்கோயில் கட்டி அந்த மறவனையே மாடசாமியாகச் செய்து, அந்தப் பக்கத்துக் கிராமத்தார் கும்பிட்டுவருகிறார்கள். அந்தக் கோயிலில் வேடிக்கை பார்க்கும் பொருட்டாக நான் சில சிநேகிதர்களுடன் போயிருந்தேன்அங்கே இருநூறு, முந்நூறு கழு மரங்கள் நாட்டிஅவற்றில் ஆடுகளைக் கோத்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆடுகள் கழு மரங்களில் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கையிலே நான் பார்க்கவில்லை. அப்போது பார்த்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அறியேன். அவை செத்துப் போய் இரத்தமும் நிணமும் ஒழுகிக் கொண்டிருக்கையிலே நான் பார்த்தேன். அந்தக்காட்சியை நினைக்கும் போது, இப்போதும் என்உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. ஆஹா! என்னகொடும்பாவம்! என்ன மஹாபாதகம்!' என்று கூறி, என் நண்பராகிய கோபால பிள்ளை மிகவும்பரிதாபப்பட்டார்.”

நா. கணேசன்

இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.

பக்கங்கள்: 168 விலை: ரூ.150.

இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.

எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!

இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 2:17:19 AM12/13/17
to mintamil, Subashini Kanagasundaram
வணக்கம்.

“வாதத்தில் தோற்றால், தோற்றவர் கழுவேற வேண்டும் என்பது சமணர்கள் விதித்த விதி.
அவர்கள் இழுத்த வாதில் அவர்களே தோற்றனர்.  அதனால் அவர்களே விதித்த நிபந்தனைப்படி அவர்களாகவே கழுவேறினர்“ 

அன்பன்
கி.காளைராசன்

Suba

unread,
Dec 13, 2017, 2:20:29 AM12/13/17
to mintamil, Subashini Kanagasundaram
இந்த விதி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவலையும் இதன் தொடர்ச்சியாக தானே சமணர் கழுவேறிக்கொண்ட நிகழ்வுகளையும் உதாரணத்துடன் வழங்கினால் உதவும்.

சுபா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 2:25:57 AM12/13/17
to mintamil, Subashini Kanagasundaram
வணக்கம்.

இது முன்பே மின்தமிழிலில் பலரும் விவாதித்ததுதான்.
தேடிப்பார்த்து அந்த இழையைப் பதிவு செய்கிறேன்.

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 2:27:42 AM12/13/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-12-12 14:38 GMT+05:30 K R A Narasiah <naras...@gmail.com>:
எண்ணாயிரம் என்ற இடத்திலிருந்து வந்த சமணர்கள். எண்ணிக்கையில் அல்ல. இதை ஐராவதம் அவரகளும் தெளிவு படுத்தியுள்ளார்கள். தமது சமயத்தை ஒப்புக் கொள்ளாத மற்ற, எதிர்க்கும்  சமயத்தினரைக் கொல்வது  சாதாரண்மாக நடந்துகொண்டிருந்த,  நடந்ர்துகொண்டிருக்கும், நடக்கப்போகும் உண்மையே. எல்லா நாட்டினருக்கும் இது பொதுவே. அயர்லாந்தில் நான் இருந்தபோதே கத்தோலிக்கர்கள் ப்ராடஸ்டண்டுகளைக் கொல்வதைக் கண்டுள்ளேன். இஸ்லாமியர்கள் இந்துக்களைக் கொன்ற கதையை விரிவாகப் பாதிரிமார்கள் பதிவு செய்துள்ளனர். 
சமணர்கள் கொல்லப்படவில்லை என புறம் தள்ள முடியாது; அதேநேரத்தில் grossly exaggerated figures have to be ignored.
தவிரவும், பின்னர் வந்த (கூன் பாண்டியனுக்கு) மன்னர்கள் சமணர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்; அவர்களது குகைகள் பராமரிக்கப்பட்டன. பிற்காலத்தில் தான், சில இடங்க்ஜளில், (திருப்பரங்குன்றத்து குகைகளில்) சமண சிற்பங்கள்    பைரவர்களாக மாற்றப்பட்டன். ஆலவாயில் இவற்றையெல்லாம் நன்கே பதிவு செய்துள்ளேன்.
நரசய்யா

​ 

ஐயா,
எந்தவொரு ஆபரணங்களும் இல்லாமல் இருக்கும் சமணசிற்பத்தை பைரவராக மாற்ற முடியாது எனக் கருதுகிறேன் ஐயா.

N. Ganesan

unread,
Dec 14, 2017, 11:01:51 PM12/14/17
to மின்தமிழ், vallamai
திரு. ஜடாயு, பெங்களூர் எழுதிய விமரிசனம்:

இதனைப் படித்தபின் திரு. செங்குட்டுவன் நூலில் விடப்பட்டுள்ளதாக
நான் கருதும் சில செய்திகளை தரவேண்டும்.

நா. கணேசன்

2017-12-03 4:21 GMT-08:00 ko.senguttuvan <ko.seng...@gmail.com>:

Senguttuvan K

unread,
Dec 15, 2017, 1:12:50 AM12/15/17
to mint...@googlegroups.com
அய்யா கணேசனார் அவர்களுக்கு, வணக்கம். 
மதிப்பிற்குரிய தங்களின் மேம்பட்டத் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா . 
அன்புடன். 
கோ.செங்குட்டுவன். 

நரசிங்கபுரத்தான்

unread,
Dec 15, 2017, 1:34:45 AM12/15/17
to mintamil
மதிப்பிற்குரிய கோ.செங்குட்டுவன். ஐயா 

தங்களின் புத்தகம் ebook  அல்லது  kindle  version  வாங்கக்  கிடைக்குமா  ?
கிடைத்தால் link  பகிரவும் . படிக்க ஆவலாய்  உள்ளேன் .

Senguttuvan K

unread,
Dec 15, 2017, 2:16:47 AM12/15/17
to mint...@googlegroups.com

N. Ganesan

unread,
Dec 15, 2017, 5:40:19 AM12/15/17
to மின்தமிழ், vallamai
2017-12-14 22:12 GMT-08:00 Senguttuvan K <ko.seng...@gmail.com>:
அய்யா கணேசனார் அவர்களுக்கு, வணக்கம். 
மதிப்பிற்குரிய தங்களின் மேம்பட்டத் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா . 
அன்புடன். 
கோ.செங்குட்டுவன். 

ஜடாயு விமர்சனத்தைப் படித்தபின் விடுபட்ட செய்திகள் பல என உணர்கிறேன்.
ஏராளமான செய்திகள். ஊருக்குக் கிளம்பிக்கொண்டுள்ளேன். 
எனவே, சில நாள்கள் கழித்துத் தொடர்வோம்.

சம்பந்தர் சமணரைக் கழுவேற்றியதால் முருகனின் அவதாரம்
எனக் கூறியவர் கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர். மூன்று
சோழ சக்கரவர்த்திகளின் அரசவையை அலங்கரித்தவர்.
அவ்வாறில்லை என்ற கருத்துடையவர் சேக்கிழார்.

இதையெல்லாம் கொண்டு கிறித்தவப் பரப்பலை எதிர்த்தவர்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும், முக்கியமாக அவரது மாணவர்
காசிவாசி ஸ்ரீ செந்திநாதையரும்.  இவைபற்றி
உங்கள் நூலில் குறிப்புகள் கொடுத்துள்ளீரா?

3, 4 ஆண்டுகள் கழிந்தபின் இ-புக் ஆக்குக.

அன்புடன்,
நா. கணேசன்

Suba

unread,
Jan 8, 2018, 7:58:14 AM1/8/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
"காலச்சுவடு" கட்டுரைக்கு பதில்: சமணர்களைக் கழுவேற்றியது மட்டும் பொய்யா?
அருணன்

"சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?" எனும் தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் என்பார் "காலச்சுவடு" ஏட்டில் (நவம்பர், 2013) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே அவர் வருகிற முடிவு: "சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பது புராணக் கதை. ஜைன நூல்களிலோ, கல்வெட்டுகளிலோ அல்லது அப்பர், சம்பந்தர் பாடல்களிலோ இந்தக் கதைக்கு ஆதாரம் கிடையாது".

புராணங்களை எல்லாம் இப்படிக் "கதை" என்று இவரைப் போன்றவர்கள் முடிவு கட்டிப் பிரகடனப்படுத்தி, அதை இந்து மதவாதிகளும், மடாதிபதிகளும் அங்கீகரித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! பெரிய புராணத்தில் வரும் 63 நாயன்மார்களுக்கும் விக்கிரகங்கள் செய்து சிவன் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறார்களே, அறுபத்தி மூவர் திருவிழா நடத்துகிறார்களே, மதுரை சித்திரைத் திருவிழாவின் போது சமணர் கழுவேற்றிய படலத்தை இப்போதும் மக்கள் மத்தியில் ஒலி பெருக்கி மூலம் பாடுகிறார்களே, அவற்றையெல்லாம் நிறுத்த வேண்டியிருக்கும்! அட, அவ்வளவு வேண்டாம், பெரிய புராணத்தில் வரும் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி, குலச்சிறையார் போன்றறோர் எல்லாம் சரித்திர புருஷர்கள் அல்ல, அவர்களைச் சம்பந்தர் சந்தித்தார் என்பதும் வரலாற்று உண்மை அல்ல என்று மட்டும் சொன்னால்கூடப் போதுமே! சொல்லுவார்களா?

அதற்குள் எல்லாம் போகவில்லை இந்தக் கட்டுரையாளர். மதுரையிலே சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் எனப் பெரிய புராணத்தில் வருவது மட்டும்தான் "கதை"! மற்றதெல்லாம்? அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இடைஞ்சலான பகுதிக்கு மட்டுமேதான் நாங்கள் இதர ஆதாரங்களைக் கேட்போம். இல்லையென்றால் வெறும் கதைதான்- புராணக் கதைதான்!

ஏழாம் நூற்றாண்டில் நடந்த பலவற்றில் இந்தக் கழுவேற்றத்திற்கு மட்டும் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறார்! "சமணத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்று கூறுவது முற்றிலும் தவறு" என்று எடுத்த எடுப்பிலேயே ஓங்கிச் சொன்னவர், பின்னர் சமணர்களைப் பற்றி சம்பந்தரும் ஆழ்வார்களும் கரித்துக் கொட்டியிருப்பதைப் பட்டியலிட்டுவிட்டு, அதை நியாயப்படுத்தும் வகையில் "சமணர்களும் இவற்றைப் போலப் பல `வசவு' ப் பாடல்களை எழுதியிருக்கலாம். அவை அழிந்துவிட்டன என்று கமில் சுவலபில் கருதுகின்றார்" என்று தன்னையறியாமல் உண்மையின் இன்னொரு முகத்தைக் காட்டிவிடுகிறார்.

அதுமட்டுமல்லாது, "படுகொலை நடந்ததாகக் குறிப்பிடப்படும் இடத்தில் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குக் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை) கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்கிறார்" பால் முண்டாஸ் எனும் ஆய்வாளர் என்றும் கட்டுரையாளர் கூறுகிறார். கூடவே, "சமணர்கள் அந்த இடத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவர்களாகவே வெளியேறி இருக்கலாம்" என்று அதற்கொரு காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இப்படி எதைப்பற்றியும் கல்வெட்டுகளே கிடைக்காத நிலையில்தான் கழுவேற்றத்திற்கு மட்டும் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறார் இந்தக் கட்டுரையாளர்! கல்வெட்டு ஆதாரம் இல்லாதது எல்லாம் வெறும் கதைதான் என்று முடிவு கட்டினால் சங்க இலக்கியம் தொட்டு பழந்தமிழ் படைப்புலகம் காட்டும் நிகழ்வுகள் எல்லாம் வெறும் கற்பனையே எனச் சொல்ல வேண்டியிருக்கும். கல்வெட்டு ஆதாரம் கிடைத்தால் கூடுதல் வலுதான். அது கிடைக்காத நிலையில் இலக்கியங்கள் காட்டும் சித்திரங்களிலிருந்து சரித்திரத்தை வடித்தெடுக்கிற முயற்சி நடக்கத்தான் செய்யும். அதிலே நுணுக்கமான கவனம் வேண்டும் என்று வற்புறுத்தலாமே தவிர அந்த முயற்சியே கூடாது என்றால் நமக்கு சரித்திர வெறுமையே மிஞ்சும்.

மிகுந்த ஆய்வுப் புலமையோடு "பல்லவர் வரலாறு" எழுதியவர் ம.இராசமாணிக்கனார். ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் திருமங்கை ஆழ்வார் "பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே" என்று பாடியிருக்கிறார். காஞ்சியில் உள்ள அந்த விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் சில பல்லவ மல்லனின் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன. "அரசருக்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவில் ஏற்றப்பட்டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும், அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆழ்வார் சிலை முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்தில் பூசிக்கப்பட்டவர் போலும். சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை அழித்து வைணவத்தை நிலைநாட்ட முயன்றதைத்தான் இச்சிற்பங்கள் உணர்த்துகின்றன" என்கிறார் இராசமாணிக்கனார்.

மாற்றுச் சமயத்தவரைக் கழுவில் ஏற்றுகிற பழக்கம் நடைமுறையில் இருந்திராமல் அது இப்படிக் கோயில் சுவரில் சிற்பங்களால் நின்றிருக்க வாய்ப்பில்லை. பல்லவ ராஜியத்தில் இருந்த இந்தப் பழக்கம் அந்நாளில் பாண்டிய ராஜியத்திலும் இருந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மதுரையில் சமணர்கள் கழுவேற்றப்பட்டது பற்றியும் இதே நூலில் இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புராணம் எழுதிய சேக்கிழாராகிலும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். "திருத்தொண்டர் திருவந்தாதி" பாடிய நம்பியாண்டார் நம்பி 10ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். சம்பவம் நடந்து முந்நூறு ஆண்டுகளிலேயே இதே தமிழகத்தில் வாழ்ந்தவர். இவரைப் பற்றி இதே வரலாற்றாளர் கூறுவதைக் கேளுங்கள்: "இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய சம்பந்தரைப் பற்றிய பாக்களில் பல இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இவர் எதனைச் சான்றாகக் கொண்டு இங்ஙனம் பல இடங்களில் குறித்தார்? இவர் காலத்தில் அச்செய்தி நாடெங்கும் பரவி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ?"
சேக்கிழாரின் பெரிய புராணத்தை முழுக்க முழுக்கப் படைப்பாளியின் கற்பிதம் என்று சொல்லிவிட முடியாது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார் போன்றோர் பற்றிக் கல்வெட்டு ஆதாரம் இல்லையென்றாலும் அவர்கள் பாடிய பாடல்கள் இருப்பதால் அவர்க்ள் மெய்யாலும் வாழ்ந்தார்கள் என்பது நிச்சயமாகிறது. இதுபோல மற்ற நாயன்மார்களும் மெய்யாக வாழ்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களது செயல்பாடுகள் கூடுதல் குறைச்சலான புராணமயப்படுத்தலோடு பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.  

 சமணத்திற்குச் சேவை செய்த 63 பேரின் வாழ்க்கைக் கதைகளை "ஸ்ரீபுராணம்" என எழுதப்பட்டிருக்க, அதற்குப் போட்டியாகவே சைவர்களின் சார்பில் சேக்கிழார் இந்தத் "திருத்தொண்டர் மாக்கதை"யை - பெரிய புராணத்தை - இயற்றினார் எனும் கூற்றிலும் உண்மை இருக்கலாம். 

அதனால்தான் வரலாற்றாளர்கள் இந்த இலக்கியச் சான்றுகளைச் சட்டென்று ஒதுக்கிவிடுவதில்லை. தமிழகத்து இராசமாணிக்கனார் மட்டுமல்லாது வடபுலத்து கைலாஷ் சந்த் ஜெயினும் இதையெல்லாம் கணக்கில் கொண்டுள்ளார். மூன்று பாகங்களைக் கொண்ட பெருநூல் அவருடைய "சமணத்தின் வரலாறு". அதில் "தமிழ்த் தேசம்" எனும் பகுதியில் இந்தக் கழுவேற்றத்தைக் குறித்துள்ளார். தங்களது முன்னோர்கள் இவ்விதமான கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் என்கிற வேதனையோடுதான் இன்றளவும் தமிழகத்துச் சமணர்களும் உள்ளனர் என்பதை அவர்களோடு பழகும் எவரும் உணருவர்.

காலச்சுவடு கட்டுரையாளர் அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முன்பு சமயப் பூசலே இல்லை என்று அடித்து விடுகிறார். மணிமேகலையிலும் இல்லை என்கிறார். அதில் சமய வாதத்திற்காகவே "சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை" என்பது உள்ளதும், பவுத்த மணிமேகலை "நிகண்டவாதி" எனப்பட்ட சமணவாதியைச் சந்தித்து மோதியதையும் அவர் வாசிக்கவில்லை போலும். அங்கே வேதவாதியோடும் கருத்து மோதல் நடக்கும். சமண நூலாகிய நீலகேசியிலும் பவுத்தவாதி, வேதவாதி உள்ளிட்டோரோடு கடும் வாக்குவாதம் நடக்கும். இதன் தொடர்ச்சிதான் மூவர் தேவாரத்தில் சமண - புத்தம் பற்றி வரும் மிக மோசமான இழிமொழிகள். எனினும், மணிமேகலை - நீலகேசியோடு ஒப்பிடும் போது விவாதத்தின் தரம் மிகக் கீழானதாகவும், கருத்தியல் தளத்திலிருந்து இறங்கி சமண - பவுத்தர்களின் பழக்கவழக்கங்களைக் கேலி செய்வதாகவும் மாறிப் போயிருந்தது என்னவோ உண்மை.

ஆனால், இதனைக் கொண்டு மதுரையில் சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் இடையே வாதமே நடந்திருக்காது என்று முடிவு கட்டிவிட முடியாது. மணிமேகலை - நீலகேசி பாணியில் அல்லாது ஏதோவொரு பாங்கில் அது நடந்திருக்கலாம் என்பதையே "அனல்வாதம்", "புனல்வாதம்" என்று பெரிய புராணம் செப்புவது உணர்த்துகிறது. அதன் முடிவில் தோற்றவர்கள் கழுவேறியிருக்கலாம் அல்லது ஏற்றப்பட்டிருக்கலாம். போட்டியில் தோற்றால் அதற்குரிய தண்டனையை ஏற்பது எனும் உறுதிமொழியோடு அதில் பங்கேற்கும் பாரம்பரியம் இந்த "புண்ணிய பூமி"யில் உண்டு. குறிப்பாக, வென்றவர் மதத்திற்கு மாற வேண்டியிருந்தது. அதைத் தாங்க முடியாதவர்கள் மரணத்தைத் தழுவத் தயாராவது அந்தக் காலத்தில் அதிசயம் அல்ல.

அந்த நிலப்பிரபு யுகத்தில் அரசானது மதச்சார்புள்ளதாகவும், அதற்கான பலாத்காரம் சார்ந்ததாகவுமே இருந்தது. கிறிஸ்து அஹிம்சை பேசினார். அவரது மதம் அரச மதமானதும் அதுவும் பலாத்காரத்தைப் பயன்படுத்தியது என்பதே நிலப்பிரபுத்துவ ஐரோப்பிய வரலாறு. பாரதத்தின் வேத மதமோ ஒரு பேச்சுக்குக்கூட அஹிம்சை பேசாதது. அதன் கிளைகளாகிய சைவமும் வைணவமும் ஹிம்சையை ஒரு கருவியாகக் கையில் கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை.

தன்னோடு வாது செய்ய வந்த புத்த நந்தியின் தலையில் இடி விழட்டும் என்று சம்பந்தர் சொன்னதும், அவரது தலை அறுபட்டது என்று சீடர்கள் வந்து சொன்னதும் உற்சாகம் கொண்ட சம்பந்தர் "ஆ! ஆ!" என்று முழக்கமிடுங்கள் என உத்தரவிட்டார் என்கிறது பெரிய புராணம்! இதையும் "புராணக் கதை" என்று காலச்சுவடு கட்டுரையாளர் கூறினால் 

"வெறுப்போடு சமண முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் / 
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகி/ 
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே/ 
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகர் உளானே" 

என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் கொலைவெறியோடு பாடியிருப்பதைத்தான் சமர்ப்பிக்க வேண்டும்.

அன்றைய மெய்யான சரித்திர வாழ்வை மனதில் கொள்ளாமல் இந்து மதத்தைக் கழுவேற்றம் போன்ற பழிகளிலிருந்து எப்படியாகிலும் காப்பாற்றி விடுவது எனக் கங்கணம் கட்டி அந்தக் கட்டுரையாளர் எழுதியிருப்பதால் இந்தச் சமர்ப்பணம் தேவைப்படுகிறது. கழுவேற்றத்திற்குக் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறவர் வலுவான ஆதாரங்கள் உள்ள உண்மைகளைக் கூடக் கூச்சமேயில்லாமல் மறைத்து எழுதுகிறார். நோக்குங்கள் இதை: "அரசர்களைச் சமண வழியிலிருந்து திசை திருப்ப ஒரு கூட்டணி உருவாகியது. இது பிராமண - வெள்ளாளக் கூட்டணி என்று பர் டன்ஸ்டெயின் கூறுகிறார். அப்பர் வெள்ளாளர், சம்பந்தர் பிராமணர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டணி அகிம்சையைப் போதிக்கவில்லை. ஆனால், வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை. சமண மதம் என்றுமே பொதுமக்கள் மத்தியில் அதிக அளவில் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு."

எதை வைத்து இப்படியொரு அதி முக்கியமான முடிவுக்கு வந்தார்? சகலத்திற்கும் கல்வெட்டு ஆதாரம் கேட்கும் இந்த மேதாவி இதற்கு மட்டும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. அவர் சொன்னால் நாம் ஏற்க வேண்டியதுதான்! நல்லது. சமணம் அன்று அதிக செல்வாக்கு பெற்றதில்லை என்றால் வேறு எந்த மதம் அப்படி இருந்தது? அதையும் சொல்லவில்லை. ஆனால், இப்படி யொரு ஆதாரமற்ற முடிவுக்கு அவராகவே வந்து கொண்டு, ஆகவே வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை என்று பிரமாதமாகப் பிரகடனப்படுத்துகிறார்!

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகிய அசிம் குமார் சாட்டர்ஜி "சமணத்தின் விரிவான வரலாறு - கி.பி.1000 வரை" என்று ஓர் ஆய்வுப்பூர்வமான நூலை எழுதியிருக்கிறார். அதில் காலச்சுவடு கட்டுரையாளரின் பிரகடனத்திற்கு மேர்மாறாக இப்படி உள்ளது: "இனித் தமிழ்நாடு பக்கம் நமது கவனத்தைத் திருப்புவோம். மிக ஆதி நாட்களிலிருந்தே இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் சமணம் செழிப்பான நிலையில் இருந்தது என்பதை ஏற்கனவே கண்டு வந்தோம். ஏழாவது நூற்றாண்டிலும் இந்த மதம் தமிழ்நாட்டில் தனது பெரும் பிரபல்யத்தைத் தக்க வைத்திருந்தது. இது யுவான் சுவாங்கின் வாக்குமூலத்தால் நேரடியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சோழ, திராவிட, மல கூட எனும் இந்தியாவின் மூன்று தென் ராஜியங்களிலும் கணக்கற்ற திகம்பரர்களும், அவர்களது வழிபாட்டுத்தலங்களும் இருந்ததை அவர் கண்டார். ஒரு தீவிரமான பவுத்தரும், தனது மத விரோதிகளிடம் நடப்பில் எவ்வித மதிப்பும் கொண்டிராத ஒருவரின் இந்த வாக்குமூலம் மிக முக்கியமானது."
காலச்சுவடு கட்டுரையாளர் இது தொடர்பான வரலாற்றாளர்கள் என்று யார் யார் பெயரையோ குறிப்பிட்டிருக்கிறாரே தவிர இந்த சாட்டர்ஜியைக் கண்டுகொள்ளவில்லை. காரணம், அந்த ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமணமே தழைத்தோங்கியிருந்தது என்று அவர் குறிப்பிட்டது மட்டுமல்லாது, அதனாலேயே அதை ஒழித்துக் கட்ட அரசு பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்கள் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். இதோ அந்த வரிகள்: "சில பல்லவ ராஜாக்களின் ஆட்சியில் ஒரு சில தீவிர சைவ - வைணவ ஆச்சாரியார்கள் பிரபுக்களையும் வெகு மக்களையும் சமணர்கள் - பவுத்தர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்கள் எனச் சந்தேகிக்க காரணம் உள்ளது. சமணர்கள் தீர்த்துக்கட்டப்பட்ட அந்தக் கொடூர விபரங்களைப் பின்னாளைய சில வைணவ - சைவ படைப்புகள் உற்சாகத்தோடு வருணித்தன... தென்னிந்தியாவின் இலக்கியப் பாரம்பரியத்தின் படி தென்னிந்திய சைவ தத்துவாதிகாகிய அப்பரின் செல்வாக்கால் முதலாம் மகேந்திர வர்மன் சைவத்திற்கு மாறினான். இந்த மாற்றத்திற்குப் பிறகு இந்த ராஜா சமணர்களைத் தீர்த்து க்கட்டுகிறவனாக ஆனான்." சேக்கிழாரின் சித்திரத்தை வெறும் "புராணக் கதை" என்று இந்த வரலாற்றாளர் ஒதுக்கித் தள்ளவில்லை என்பதைக் கவனிக்கவும்.
இன்றைக்கு சைவம் - வைணவம் எல்லாம் கலந்த இந்து மதம் எனப்பட்டது தமிழகத்தில் பெரும்பான்மை மதமாக உள்ளது. அந்த ஏழாம் நூற்றாண்டில் நிலைமை அப்படி இல்லை. சைவம், வைணவம் எனப்பட்ட வேத மதங்கள் எல்லாம் சிறுபான்மையாக இருக்க சமணமே பெரும் பான்மையாக இருந்தது. பவுத்தம் கூடச் சிறு பான்மை மதமே. அதுமட்டுமல்ல, பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சமணர்களாக இருந்தார்கள். பெரிய புராணத்துச் சித்திரத்தின்படி பல்லவனை அப்பர் மாற்றினார். சோழனைத் தண்டியடிகள் மாற்றினார், பாண்டியனை சம்பந்தர் மாற்றினார். அப்படி ராஜாக்கள் மாறியும் முனிவர்கள் மாறாத நிலையில், அவர்களையும் மாற்றினால்தான் வெகு மக்களும் மாறுவார்கள் என்ற சூழலில் அரசு பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டது. இதற்கான முன்னறிவிப்பு தேவாரத்திலும், பாசுரங்களிலும் உள்ளது என்றால், அது செயல்வடிவம் பெற்றதன் புராணியப் பதிவு சேக்கிழாரின் நூலில் உள்ளது. பாதிக்கப்பட்ட சமணர்களின் பதிவு அல்ல, ஒடுக்கிய சைவர்களின் பெருமிதப் பதிவு! அதை ஏன் நம்பக் கூடாது?

தமிழகத்தில் சமணம் அன்று தழைத்தோங்கி இருந்த காரணத்தால்தான் அதை ஒழிக்க இருமுனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஒருபுறம் சமணத்திலிருந்த சில பலவீனங்களைச் சுட்டிக்காட்டி மக்களை சைவம் - வைணவத்தின் பின்னால் ஈர்க்கும் மிகப் பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது என்றால், மறுபுறம் தங்கள் பக்கம் முதலில் வந்துவிட்ட மன்னர்களைப் பயன்படுத்தி பலாத்காரத்தில் இறங்கும் வேலையும் நடந்தது.

"பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் / கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்" என்று பல்லவன் மகேந்திர வர்மனைப் புகழ்கிறார் சேக்கிழார். பழையாறை வடதளிக்குச் சென்ற அப்பர் அங்கிருந்த சமணப் பள்ளியை சிவன் கோயில் என்று வம்பு செய்தார். அதாவது, பாபர் மசூதி - ராமன் கோயில் போன்ற விவகாரம் அந்தக் காலத்திலேயே நடந்தது. அன்றைய அரசன் அப்பரின் சொல்லுக்கு ஆட்பட்டு அந்தச் சமணப் பள்ளியை இடித்துக் கோயில் கட்டி "அமணர் வேரறுத்தான்" என்கிறார் அவரே. திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தையொட்டி அந்தக் காலத்தில் சமணப் பாழிகள் இருந்தன. குளத்தை விரிவுபடுத்த அந்தப் பாழிகளை இடிக்க வேண்டும் என்றார் தண்டியடிகள். அதை எதிர்த்த சமணர்களின் கண்களைப் பிடுங்கி ஊரைவிட்டே துரத்தினான் சோழ ராஜா. "பாழி பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து மன்னவனும் மன மகிழ்ந்து வந்து தொண்டர் அணி பணிந்தன" என்று மேலும் உற்சாகமாய்ப் பாடியிருக்கிறார் சேக்கிழார். இவற்றுக்குப் பெயர்தான் "வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை" என்பதோ?

கேட்டால் இவையெல்லாமே "புராணக் கதை" என்ற செப்பக்கூடும் காலச்சுவடு கட்டுரையாளர். இவருக்கு இடையூறான பகுதிகளை மட்டும் நிராகரிப்பது, பெரிய புராணத்தில் உள்ள மற்றவற்றை ஏற்றுக்கொள்வது எனும் ஒரு வினோத பகுத்தாய்வு முறையை பின்பற்றுகிறார் அவர். "மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை சைவத்தை ஆதரித்ததால் பாண்டியநாட்டு மன்னன் நெடுமாறன் ஆதரவும், தந்தையான சோழ மன்னன் ஆதரவும் சைவத்திருக்குக் கிடைத்துவிட்டது" என்று புளகாங்கிதப் பட்டுக் கொள்கிறவர் அதற்கு சம்பந்தர் மங்கையர்க்கரசியோடு சேர்ந்து செய்த திட்டமிடலை மட்டும், அதன் காரணமாக முடிவில் நடந்த கழுவேற்றத்தை மட்டும் ஏற்க மறுக்கிறார்! ஏற்பது, ஏற்க மறுப்பது எல்லாவற்றுக்குமே உள்ளது இலக்கியச் சான்றுதான் என்பதை இங்கே மறந்து போனார்!

உண்மை என்னவென்றால்; தமிழகத்தில் சமணம் பெரிதும் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்ததால் மன்னர்கள் மாறிய உடனே மக்கள் மாறிவிடவில்லை. ஆங்காங்கே பலாத்காரத்தை அரசு பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான சாட்சியங்கள்தாம் திருத்தொண்டர் திருவந்தாதியிலும், பெரிய புராணத்திலும் தட்டுப்படுபவை. சமணர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தின் அளவில் வேண்டுமானால் உயர்வு நவிற்சி இருக்கலாம். உதாரணமாக, "எண்ணாயிரம்" என்பது மெய்யாலும் எண்ணிக்கையைக்குறிக்கிறதா அல்லது பலர் எனும் பொதுப் பன்மையைக் குறிக்கிறதா என்று சந்தேகம் வரலாம். ஆனால், மதுரையைச் சுற்றி சமணர்களின் எண்பெருங் குன்றங்கள் உள்ளன. அவற்றில் இப்போதும் சமணர் விட்டுச் சென்ற அடையாளங்கள் உள்ளன, அந்த எண் பெருங் குன்றங்களைச் சார்ந்த முனிவர்களே கழுவேற்றப்பட்டார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இலக்கிய, பாரம்பரியச் சாட்சியங்கள் மண்டியுள்ளன. இதில் கழுவேற்றத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டு, பெரிய புராணத்தின் மற்ற கூறுகளை ஏற்கும் செலக்டிவ் அம்னீஷியா வியாதியை ஏற்க முடியாது.

இன்னுமொரு விஷயம் ராஜாக்களின் இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்குப் பிறகும் சமணம் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படவில்லை. 8-10ம் நூற்றாண்டுகளில் கூட பல்லவ, சோழ, பாண்டிய சாம்ராஜியங்களில் சமணம் பரவலாக இருந்ததை நிறைய கல்வெட்டுச் சான்றுகள் காட்டுகின்றன என்று சொல்லி, அவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார் அசிம் குமார் சாட்டர்ஜி. அதனால்தான் 12ம் நூற்றாண்டிலும் சேக்கிழார் போன்றவர்கள் கிளம்பி சமண எதிர்ப்பு இலக்கியங்களை ஆற்றியிருக்கிறார்கள், அவற்றின் வழியாக சமண ஒடுக்கு வரலாற்றுப் பதிவுகளைச் செய்து அவற்றை நினைவூட்டியிருக்கிறார்கள் எனலாம்.

மதமாற்றம் என்பது ஆட்சி மாற்றம் போலச் சட்டென்று நடந்து விடுவதில்லை. அதற்குப் பலமுனைத் தாக்குதல்கள் தேவை. சகலத்தையும் பயன்படுத்தித்தான் தமிழகத்தில் சமணம் - பவுத்தத்தை ஒழித்துக் கட்டி சைவம் - வைணவம் வளர்ந்தது. வளர்ந்தவுடன் சைவம் மற்றும் வைணவத்திற்கு இடையேயும் கடும் மோதல் வெடித்தது. இன்னும் வேடிக்கை என்னவென்றால், சைவத்திற்குள்ளேயும், வைணவத்திற்குள்ளேயும்கூட பிரிவுகள் தலைதூக்கின. வைணவத்திற்குள்ளே தென்கலை - வடகலை என்று உரசிக் கொண்டது வெகுகாலம் நீடித்தது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இங்கே அரசியல் அதிகாரம் பெற்ற போதுதான் சைவமும் வைணவமும் தம் பூசலைச் சற்றே ஒதுக்கி வைத்து ஒன்றுபடத் துவங்கின. இன்று வேதமதவாதிகள் பெருமையாகப் பேசிக்கொள்கிற "இந்து மதம்" எனப்பட்டது பிற்காலத்தில் எழுந்த ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுதான்.

இன்றைக்கும் முந்திய காலம் போல பழமைவாதிகள் கிளம்பி தங்களின் வேத மதத்தைக் காத்து நிற்கவும், அதற்கு வெள்ளையடித்து பளபளப்பாக்கவும் முனைகிறார்கள். அந்த வேலையில் தான் காலச்சுவடு கட்டுரையாளரும் இறங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு திடீரென்று புராணீய நோக்கு மறைந்து "வரலாற்று நோக்கு" வந்திருக்கிறத! ஆனால், அந்த வரலாற்று நோக்கு இந்துப் பழமைவாத சார்பு நோக்காக இருப்பது தெளிவாக அம்பலமாகிறது. காத்தவராயனைக் கழுவேற்றியதும், அந்தக் கழுமரம் அவனது கோயில் தோறும் இருப்பதும் மத - சாதிய வாதிகள் தந்த கொடுந் தண்டனை முறைகளில் இதுவும் என்று என்பதற்கு நிலையான சாட்சியாய் இப்போதும் நம் கண்முன்னால் நிற்கிறது. அதைக் கண்ட பிறகும் பெரிய புராணத்தின் அந்தப் பகுதிளை மட்டும எப்படிப் பெரிய பொய்யாகக் கருதுவது? 

தற்காலத்தில் நடந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் வேண்டுமானால் நேரடி சாட்சியம் கேட்டு குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளுக்கு எந்த வரலாற்றுப் பின்புலத்தில் அவை நடந்தன எனும் சூழல் சார்ந்த சாட்சியமே கிடைக்கும், அதிலிருந்து குற்றவாளிகள் ஒரு நாளும் தப்பிவிட முடியாது என்பதை இந்துப் பழமைவாதிகள் உணர வேண்டும்.

Kumaraguruparan Ramakrishnan

unread,
Jan 8, 2018, 9:47:19 AM1/8/18
to mint...@googlegroups.com
     சமணர் கழுவேற்றும் நிகழ்வு என்பது Laughing-stock என்ற ஐரோப்பிய சித்திரவதை முறையை விடக் கொடுமை நிறைந்தது.

 கழுமரத்தில் உயிரோடு குதம் வழியாக செருகப்பட்டு வாய் வழியாக கழுமரம் வெளிவந்து செங்குத்தாக நிற்க, உயிரோடு வதைபடும் மனிதர்களை கழுகுகள் வட்டமிட்டுக்கொத்துவதைக்  கற்பனை பண்ணவே இயலாது.

திருடர்களை கழுவேற்றுவதுடன் இணைத்து சமயரீதியாக சமணர்களைக் கழுவேற்றிவிட்டு, அவர்களாகவே அப்படி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுவது அபத்தமானது.

 பவுத்தமும் சமணமும் சைவத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் தத்துவார்த்த ரீதியில் தர்க்க விவாதம் நடைபெற்றதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ள இயலும். ஆனால் கழுவேற்றப்படும் நிகழ்வு ஸதி என்னும் உடன்கட்டை கொலைமரபைப் போன்று காட்டுமிராண்டித்தனமானது.

ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகுமலையில் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) அக்ரஹாரம் என்ற நடுத்தெருவில் கழுமரம் ஒரு மரக்கடை மூலையில் வைக்கப்பட்டிருந்தது. நான் இளமைப் பருவத்தில் அத்தெருவில் வசித்ததால் அதைப் பார்த்திருக்கிறேன். தினசரி காலண்டரில் கழுவேற்றும் உற்சவம் என்பதாக குறிக்கப்பட்டிருக்கும். 

இந்தக்கழுமரம் போன்று ஒன்று சென்னை கன்னிமாரா மியூசியத்தில் இடம்பெற்றுள்ளது.

சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்லா மதங்களுமே காட்டுமிராண்டித் தனத்தை கடைப்பிடித்த வரலாற்றை முதலாவதாக ஒத்துக்கொண்டு பாரபட்சமற்ற வகையில் இதைப் பதிவு செய்து வரலாற்றை அணுகவேண்டும். 

பைபிளை லத்தீனிலிருந்து மொழிபெயர்த்ததால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட பாதிரியார்கள் பலர். புருனோ, கலிலியோ, கோப்பர்நிக்கஸ் பலருக்கும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தார்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் பலரைப் பலிவாங்கியுள்ளது.

குவின்டநாமா சிறைச்சாலையில் விசாரணைக்கைதிகளாக துன்புறுத்தப்படும் இஸ்லாமியர்கள் உண்டு. சதாம் ஹூசைன் ஆண்ட ஈராக் நாட்டில் இஸ்லாமிய மகளிர், இராணுவம் மற்றும் அரசு நிர்வாகத்தில் உயர்பதவி வகித்தனர். இப்போது நாடே நாசமாகிப் போனது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை இருதரப்பிலும் பல உயிர்களைப் பலிகொண்டது. பாப்ரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதக்கலவரம் நடைபெற்றது. இஸ்லாமியச்சிறுபான்மையினர் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டது கொடுமையானது.

சைவமும் வைணவமும் ஒருகாலத்தில் மோதின. காஞ்சிபுரம் யானைக்கு வைணவ நாமத்தை தென்கலை பாணியிலா வடகலை பாணியிலா என்ற வழக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் தொடரப்பட்டது. ஒருவாரம் தென்கலை, ஒருவாரம் வடகலை என்று முடிவானது.
இறுதியில் யானை இறந்து விட்டபின் பூசல் நின்றது என்று கூறுவார்கள்.

மநுதர்மம் நந்தனையும், திருப்பாணாழ்வாரையும்
வள்ளலாரையும் ஓரங்கட்டி சாதியின் பெயரால் அவமானப்படுத்தியது. எல்லா சாதியினரிடமும் அடிமைப்படுத்தும் வன்மம் தலைவிரித்தாடுகிறது.
சமூக அடுக்குகளில் அடிமூட்டையான தலித்துகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதும், சுடுகாட்டில் அடக்கம் செய்யவும் இடமின்றி ஒதுக்கப்படுவது தொடர்கிறது.

 வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடம் கற்று மனிதநேயத்தை பின்பற்றுவோம்.
முந்தைய சங்க காலத்தில் சாதியமற்ற, பெருமித மரபு இருந்தது! 

கழுமரம் என்பது அரூப வடிவில் டெமாக்ளிஸ் வாளாக அந்தரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது!

-இரா. குமரகுருபரன்

தேனீ

unread,
Jan 8, 2018, 9:05:08 PM1/8/18
to மின்தமிழ்
#அதன் கிளைகளாகிய சைவமும் வைணவமும் ஹிம்சையை ஒரு கருவியாகக் கையில் கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை.#

கருத்துகள் எழுதும் பொழுது இத்தகைய தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சைவமோ வைணவமோ 'இம்சையை' ஒரு கருவியாகக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கொண்டிருக்கவும் சமய நெறிகள் கூறவில்லை. ஆகையால் சமய நெறிகளை பொத்தாம் பொதுவாகக் குறை கூறாது அதனைப் பின் பற்றியவரின் செயல்களைக் கால சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு கருத்து கூறுவது நடுநிலையை உறுதி செய்யும்.     

இக்கட்டுரையில் கூறப்பட்ட தங்களின் கருத்தை தேவை ஏற்படுமின் பின் முழுமையாக ஆய்வு செய்வோம்.

மு. கமலநாதன்

தேனீ

unread,
Jan 8, 2018, 10:26:03 PM1/8/18
to மின்தமிழ்
#சைவம், வைணவம் எனப்பட்ட வேத மதங்கள் எல்லாம் சிறுபான்மையாக இருக்க சமணமே பெரும் பான்மையாக இருந்தது. பவுத்தம் கூடச் சிறு பான்மை மதமே. அதுமட்டுமல்ல, பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சமணர்களாக இருந்தார்கள். பெரிய புராணத்துச் சித்திரத்தின்படி பல்லவனை அப்பர் மாற்றினார். சோழனைத் தண்டியடிகள் மாற்றினார், பாண்டியனை சம்பந்தர் மாற்றினார். அப்படி ராஜாக்கள் மாறியும் முனிவர்கள் மாறாத நிலையில், அவர்களையும் மாற்றினால்தான் வெகு மக்களும் மாறுவார்கள் என்ற சூழலில் அரசு பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டது. இதற்கான முன்னறிவிப்பு தேவாரத்திலும், பாசுரங்களிலும் உள்ளது என்றால், அது செயல்வடிவம் பெற்றதன் புராணியப் பதிவு சேக்கிழாரின் நூலில் உள்ளது. பாதிக்கப்பட்ட சமணர்களின் பதிவு அல்ல, ஒடுக்கிய சைவர்களின் பெருமிதப் பதிவு! அதை ஏன் நம்பக் கூடாது? #

சமணம் புத்தம் தமிழருக்கு அயலார் நெறியா அல்லது பூர்வீக நெறியா?

தொல்காப்பியர் காட்டும் திணைவழிபாடுகள் தமிழரின் பூர்வீகம். அயலார் அவர்தம் நம்பிக்கைகளைப் பரப்ப தென்னகத்தே வந்து அரசர்களைக் கவர்ந்து அன்றைய அரசின் ஆதரவில் அவர்தம் நம்பிக்கைளைப் பரப்பினார். தமிழர் வரலாற்றுப் பாதையில் இது ஒரு குறுகிய காலம்.

இறை நம்பிக்கைக் கொண்டிருந்தவர் மத்தியில் இறை மறுப்பை ஏற்படுத்தியவர் இத்தகைய அயலார்தான். ஆதலால், தமிழரின் சிந்தனை ஒரு கால கட்டத்தில் மடைமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத்தகைய தவறான மடைமாற்றத்தைச் சரி செய்வதும் தவறாகும் என்பது எவ்வகையில் சரியென்று வாதிடுகின்றீர்கள்?

சமண பவுத்தர்களின் புற நடவடிக்கைகளை திருவள்ளுவர் கண்டித்திருப்பதால் திருவள்ளுவரும் மத காழ்ப்புணர்ச்சி கொண்டவர்தானோ? இத்தகைய  பதிவுகள் உணர்ச்சி வசத்தால் ஏற்படும் பேதமை. பிறரைக் குறை சொல்ல புகும் அதே வேளையில் நாமும் அக்குறைகளுக்கு உட்பட்டால் நம் கருத்து எடுபடாமல் போய்விடும். 

மத காழ்ப்புணர்ச்சி கொண்ட பதிவுகள் சைவ வைணவ திருமுறைகளில் வர காரணமென்னவென்று என்றாவது ஆராய்ந்து மின்தமிழில் எழுதியிருப்பீர்களா? ஆய்வு ஒரு சார்பாக இருந்தால் அது நடுநிலையை உணர்த்தாது என்பதை அறிவோம்.

#மதமாற்றம் என்பது ஆட்சி மாற்றம் போலச் சட்டென்று நடந்து விடுவதில்லை. அதற்குப் பலமுனைத் தாக்குதல்கள் தேவை. சகலத்தையும் பயன்படுத்தித்தான் தமிழகத்தில் சமணம் - பவுத்தத்தை ஒழித்துக் கட்டி சைவம் - வைணவம் வளர்ந்தது#

தங்கள் கூற்று உண்மையென்று ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் அயலார் நெறிகளான சமணமும் புத்தமும் இதே வழிமுறைகளைக் கையாண்டுதான் அவர்தம் மத நம்பிக்கைகளைத் தமிழரிடையே வளர்த்தனர் என்பதை தாங்கள் ஏற்றுக் கொண்டு அயலார் அத்தகைய இறை மறுப்பை தமிழரின் மரபுக்குப் புறம்பாகத் திணித்தது தப்பு என்றும் தாங்கள் கூறவேண்டி வரும். ஆனால் இத்தகைய கருத்தை தங்கள் பதிவில் காண இயலாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

'தமிழ் மரபு அறவாரியம்' என்ற உலகலாவிய ஒரு நிறுவனத்தை அமைத்துக் கொண்டு அதில் ஒரு கண்ணில் வெண்ணெயை விட்டுக் கொண்டு மற்றொரு கண்ணில் சுன்னாம்பைக் வைத்துக் கொண்டு பார்ப்பது எப்படி நியாயமான தமிழ் மரபாகும்?

மு. கமலநாதன்
 
மு. கமலநாதன்
     
On Monday, January 8, 2018 at 8:58:14 PM UTC+8, Dr.K.Subashini wrote:

Thenee MK

unread,
Jan 8, 2018, 10:34:48 PM1/8/18
to mintamil
'சுண்ணாம்பை வைத்துக் கொண்டு' என்று திருத்தி வாசிக்கவும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/5OwPFZvNV6k/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mahalingam

unread,
Jan 8, 2018, 11:22:30 PM1/8/18
to மின்தமிழ்
குமரகுருபரன் அவர்கள் கூறுவது உண்மை என்றே எண்ணுகிறேன். வாதத்தில் தோற்றவர்களை கழுவேற்றுவது, காதை அறுப்பது என்பதும், அவர்கள் வடக்கிருந்து உயிர் விட்டதும் நடைமுறையில் இருந்த வழக்கங்கள். சங்க காலத்திலில்லாதிருந்த இப்பழக்கங்கள் எவ்வாறு களப்பிரர் காலத்திற்குப்பின் வந்தன என்பதும் ஆய்வுக்குரியது. 

-மகாலிங்கம் 

On Sunday, December 3, 2017 at 4:21:42 AM UTC-8, ko.senguttuvan wrote:

“பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்

கண்புடைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற

நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட

எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள். (855)

பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்லும் இச்செய்தி வரலாறா? புனைவா? சமணர்களே கழுவேறினார்களா? அல்லது கழுவேற்றப்பட்டார்களா? கழுவேற்றப்பட்டவர்கள் எண்ணாயிரம் குழுவைச் சேர்ந்தவர்களா? எட்டாயிரம் பேர்களா? போன்ற விவாதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த விவாதங்களையெல்லாம் ஓரளவுத் தொகுத்திருக்கிறேன்.

இதனை அழகிய நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள், கிழக்கு பதிப்பகத்தார்.

பக்கங்கள்: 168 விலை: ரூ.150.

இந்நூல் உங்கள் வினாக்களுக்கு ஓரளவு விடைகளைத் தரலாம். அல்லது புதிய வினாக்களை எழுப்பலாம்.

எது எப்படி இருந்தாலும் சமணர் கழுவேற்றம் தொடர்பான விவாதத்தினை இந்நூல் தொடரலாம்..!

இதைப் படித்துவிட்டு, அந்த விவாதத்தினைத் தொடரக்கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம்.

Suba

unread,
Jan 11, 2018, 1:38:48 PM1/11/18
to மின்தமிழ்
2018-01-08 15:47 GMT+01:00 Kumaraguruparan Ramakrishnan <vinci.il...@gmail.com>:
     சமணர் கழுவேற்றும் நிகழ்வு என்பது Laughing-stock என்ற ஐரோப்பிய சித்திரவதை முறையை விடக் கொடுமை நிறைந்தது.

 கழுமரத்தில் உயிரோடு குதம் வழியாக செருகப்பட்டு வாய் வழியாக கழுமரம் வெளிவந்து செங்குத்தாக நிற்க, உயிரோடு வதைபடும் மனிதர்களை கழுகுகள் வட்டமிட்டுக்கொத்துவதைக்  கற்பனை பண்ணவே இயலாது.

திருடர்களை கழுவேற்றுவதுடன் இணைத்து சமயரீதியாக சமணர்களைக் கழுவேற்றிவிட்டு, அவர்களாகவே அப்படி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுவது அபத்தமானது.

 பவுத்தமும் சமணமும் சைவத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் தத்துவார்த்த ரீதியில் தர்க்க விவாதம் நடைபெற்றதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ள இயலும். ஆனால் கழுவேற்றப்படும் நிகழ்வு ஸதி என்னும் உடன்கட்டை கொலைமரபைப் போன்று காட்டுமிராண்டித்தனமானது.

ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகுமலையில் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) அக்ரஹாரம் என்ற நடுத்தெருவில் கழுமரம் ஒரு மரக்கடை மூலையில் வைக்கப்பட்டிருந்தது. நான் இளமைப் பருவத்தில் அத்தெருவில் வசித்ததால் அதைப் பார்த்திருக்கிறேன். தினசரி காலண்டரில் கழுவேற்றும் உற்சவம் என்பதாக குறிக்கப்பட்டிருக்கும். 

இந்தக்கழுமரம் போன்று ஒன்று சென்னை கன்னிமாரா மியூசியத்தில் இடம்பெற்றுள்ளது.

சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்லா மதங்களுமே காட்டுமிராண்டித் தனத்தை கடைப்பிடித்த வரலாற்றை முதலாவதாக ஒத்துக்கொண்டு பாரபட்சமற்ற வகையில் இதைப் பதிவு செய்து வரலாற்றை அணுகவேண்டும். 

பைபிளை லத்தீனிலிருந்து மொழிபெயர்த்ததால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட பாதிரியார்கள் பலர். புருனோ, கலிலியோ, கோப்பர்நிக்கஸ் பலருக்கும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தார்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் பலரைப் பலிவாங்கியுள்ளது.

குவின்டநாமா சிறைச்சாலையில் விசாரணைக்கைதிகளாக துன்புறுத்தப்படும் இஸ்லாமியர்கள் உண்டு. சதாம் ஹூசைன் ஆண்ட ஈராக் நாட்டில் இஸ்லாமிய மகளிர், இராணுவம் மற்றும் அரசு நிர்வாகத்தில் உயர்பதவி வகித்தனர். இப்போது நாடே நாசமாகிப் போனது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை இருதரப்பிலும் பல உயிர்களைப் பலிகொண்டது. பாப்ரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதக்கலவரம் நடைபெற்றது. இஸ்லாமியச்சிறுபான்மையினர் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டது கொடுமையானது.

சைவமும் வைணவமும் ஒருகாலத்தில் மோதின. காஞ்சிபுரம் யானைக்கு வைணவ நாமத்தை தென்கலை பாணியிலா வடகலை பாணியிலா என்ற வழக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் தொடரப்பட்டது. ஒருவாரம் தென்கலை, ஒருவாரம் வடகலை என்று முடிவானது.
இறுதியில் யானை இறந்து விட்டபின் பூசல் நின்றது என்று கூறுவார்கள்.

மநுதர்மம் நந்தனையும், திருப்பாணாழ்வாரையும்
வள்ளலாரையும் ஓரங்கட்டி சாதியின் பெயரால் அவமானப்படுத்தியது. எல்லா சாதியினரிடமும் அடிமைப்படுத்தும் வன்மம் தலைவிரித்தாடுகிறது.
சமூக அடுக்குகளில் அடிமூட்டையான தலித்துகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதும், சுடுகாட்டில் அடக்கம் செய்யவும் இடமின்றி ஒதுக்கப்படுவது தொடர்கிறது.

 வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடம் கற்று மனிதநேயத்தை பின்பற்றுவோம்.
முந்தைய சங்க காலத்தில் சாதியமற்ற, பெருமித மரபு இருந்தது! 

கழுமரம் என்பது அரூப வடிவில் டெமாக்ளிஸ் வாளாக அந்தரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது!

-இரா. குமரகுருபரன்

​உங்கள் கூடுதல் விளக்கம் அருமை நண்பரே.

சுபா​

Kumaraguruparan Ramakrishnan

unread,
Jan 12, 2018, 6:07:00 AM1/12/18
to mint...@googlegroups.com
நன்றி முனைவர் சுபாஷிணி.
நமது வாழ்நாளில் எப்போதுதான் இத்தகைய அவலத்தை எதிர்த்து குரல் எழுப்புவோம்?

மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

ஊக்கமளித்த தங்களுக்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும், மின்தமிழுக்கும் மீண்டும் நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages