வணக்கம் சுபா,மெய்கண்ட சாத்திரங்களின் வழி நாம் பெற்றது சுத்தாத்துவைத சைவம் எனப்படுவது. மெய்கண்டாரின் காலமாகிய 12-ம் நூற்றாண்டு முதல் தோன்றிய 14 மெய்கண்ட சாத்திரங்களைக் குறிக்கும். அதன்வழி வந்ததுதான் பெரும்பாலான தமிழ் நாட்டுச் சைவ ஆதினங்கள். இவர் திருக்கைலாய மரபில் வந்தவர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். இது சந்தான குரவர் மரபில் வந்தவர் என பொருள் படும்.ஆகமச் சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம். பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு முன் விளக்கியது இஞ்ஞான நெறியே. மெய்கண்ட சாத்திரங்கள் இஞ்ஞான நெறியினை தமது தத்துவ நெறியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் முத்திபேறுக்குச் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்பதில் சற்று வேறுபட்டு நிற்கும் மெய்கண்ட சாத்திரங்கள்.ஆகமத்தில் கூறப்படும் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் எனப்படுவது கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப் படுவது. மெய்கண்ட சாத்திரம் குரு லிங்கக சங்கமம் எனும் வழியைக் கொண்டது. ஆங்கே அடியார் ஒரு குருவின் வழி இறைவனை உணர வழிகாட்டுவது. கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. வேண்டியமட்டும் எடுத்துக் கொள்வர். இரண்டுக்கும் இலக்கு ஒன்று. தத்துவ நெறியில் ஒருமைப்பாடு உண்டு. ஆனால் ஆன்மா அதன் இலக்கைச் சென்று சேர்வதற்குரிய சாதனமாகிய சரியை, கிரியை, யோகத்தில் வேறுபாடு உண்டு.இவையே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும்.இனி வரலாற்றுக்கு வருவோம்.காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' - யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.ஆகமங்களின் ஞானபாத சாரத்தைத் தமிழில் திருமூலரால் திருமந்திரத்தின் வழி அருளப்பெற்றது. இது பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முந்தைய நூல். சிலர் திருமூலரின் காலத்தை 4 - 5 -ம் நூற்றாண்டு என்று கூறுவர். திருவாடுத்துறை ஆதினம் திருமூலரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று ஏற்றுக் கொண்டது. அதனால் இன்றைய வடமொழி ஆகமங்கள் அதற்கும் முந்தையது என்பது தெளிவாகும்.திருஞான சம்பந்தர் தொடங்கி மூவர் தேவாரத் திருமுறைகளிலும் திருவாசகத்திலும் சொல்லப் பட்ட அனைத்துச் சித்தாந்த கருத்துக்களுக்கு மூலம் ஆகமச் சித்தாந்தமும், திருமந்திரமுமாகும். மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. அக்காலத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றவில்லை என்பதை கவணிக்க.காளமுக, பாசுபதம், கபாலிகம் தென்னாட்டில் தோன்றிய சைவ மார்க்கங்கள் அல்ல. அவை வடக்கே தோன்றி தெற்கில் தொண்டை மண்டலம் வரை ஒரு காலத்தில் இருந்தது. இவற்றிற்கு முறையான தத்துவ நெறிகள் கிடையா. பாசுபத சைவ மார்க்கத்தை விளக்கும் பாசுபத சூத்திரமும் இன்று வழக்கில் இல்லை. அதனால் இச்சைவ மார்க்கங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போயிற்று.வீர சைவம் தென்னகத்தே தோன்றியது என்றும், வடக்கே இருந்து வந்தது என்றும் இருவகை கூற்றுகள் உண்டு. இந்நெறி தமிழகத்திலும் இன்றைய கன்னடத்திலும் அதற்கு வடக்கேயும் இருந்து வருகின்றது. வீர சைவ நெறி சில ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ளன. அதில் பிரதாணமாக விளங்குவது பரமேஸ்வர ஆகமமாகும். வீர சைவத்திற்கான நெறிகளை வீர ஆகமத்திலும் இன்னும் சில ஆகமங்களில் காணலாம்.தங்களின் இதர கேள்விகளுக்கு இரவில் பதில் கொடுக்கப் படும். பகலில் நேரம் இல்லை.கேள்வி கேட்டமைக்கு நன்றி.கமலநாதன்
2016-11-25 2:22 GMT+01:00 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் சுபா,
ஆகமச் சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம். பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு முன் விளக்கியது இஞ்ஞான நெறியே.
மெய்கண்ட சாத்திரங்கள் இஞ்ஞான நெறியினை தமது தத்துவ நெறியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் முத்திபேறுக்குச் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்பதில் சற்று வேறுபட்டு நிற்கும் மெய்கண்ட சாத்திரங்கள்.
..
இனி வரலாற்றுக்கு வருவோம்.காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' - யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.
ஆகமங்களின் ஞானபாத சாரத்தைத் தமிழில் திருமூலரால் திருமந்திரத்தின் வழி அருளப்பெற்றது. இது பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முந்தைய நூல். சிலர் திருமூலரின் காலத்தை 4 - 5 -ம் நூற்றாண்டு என்று கூறுவர். திருவாடுத்துறை ஆதினம் திருமூலரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று ஏற்றுக் கொண்டது. அதனால் இன்றைய வடமொழி ஆகமங்கள் அதற்கும் முந்தையது என்பது தெளிவாகும்.திருஞான சம்பந்தர் தொடங்கி மூவர் தேவாரத் திருமுறைகளிலும் திருவாசகத்திலும் சொல்லப் பட்ட அனைத்துச் சித்தாந்த கருத்துக்களுக்கு மூலம் ஆகமச் சித்தாந்தமும், திருமந்திரமுமாகும். மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. அக்காலத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றவில்லை என்பதை கவணிக்க.
காளமுக, பாசுபதம், கபாலிகம் தென்னாட்டில் தோன்றிய சைவ மார்க்கங்கள் அல்ல. அவை வடக்கே தோன்றி தெற்கில் தொண்டை மண்டலம் வரை ஒரு காலத்தில் இருந்தது. இவற்றிற்கு முறையான தத்துவ நெறிகள் கிடையா. பாசுபத சைவ மார்க்கத்தை விளக்கும் பாசுபத சூத்திரமும் இன்று வழக்கில் இல்லை. அதனால் இச்சைவ மார்க்கங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போயிற்று.
வீர சைவம் தென்னகத்தே தோன்றியது என்றும், வடக்கே இருந்து வந்தது என்றும் இருவகை கூற்றுகள் உண்டு. இந்நெறி தமிழகத்திலும் இன்றைய கன்னடத்திலும் அதற்கு வடக்கேயும் இருந்து வருகின்றது. வீர சைவ நெறி சில ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ளன. அதில் பிரதாணமாக விளங்குவது பரமேஸ்வர ஆகமமாகும். வீர சைவத்திற்கான நெறிகளை வீர ஆகமத்திலும் இன்னும் சில ஆகமங்களில் காணலாம்.தங்களின் இதர கேள்விகளுக்கு இரவில் பதில் கொடுக்கப் படும். பகலில் நேரம் இல்லை.கேள்வி கேட்டமைக்கு நன்றி.கமலநாதன்
........இறைவன் ஈசன் எனநின்ற சைவ வாதி நேர் படுதலும்பரசும் நின் தெய்வம் எப்படித்து எனஇரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்றுஎட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்கட்டிநிற்போனும் கலையுருவினோனும்படைத்து விளையாடும் பண்பினோனும்துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்அன்னோன் இறைவன் ஆகும்மணிமேகலை காதை 27, வரிகள் 86-95
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
........இறைவன் ஈசன் எனநின்ற சைவ வாதி நேர் படுதலும்பரசும் நின் தெய்வம் எப்படித்து எனஇரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்றுஎட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்கட்டிநிற்போனும் கலையுருவினோனும்படைத்து விளையாடும் பண்பினோனும்துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்அன்னோன் இறைவன் ஆகும்மணிமேகலை காதை 27, வரிகள் 86-95ஆகிய வரிகளே சைவ சித்தாந்தக் கொள்கையைத் தமிழில் தந்த தொடக்க வரிகளாக இன்று வரை அறியப்பட்டுள.இதற்கு முன்பும் சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கும் நூல்கள் இருந்திருக்கவேண்டும். தேடவேண்டும்.பின்னர் காரைக்காலம்மையார் கூறியன நமக்குக் கிடைக்கின்றன.
--
ஆகமச்
சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம்.
பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு
முன் விளக்கியது இஞ்ஞான நெறியே.
கேள்வி: 1
எந்த சாத்திர நூலை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றீர்கள் என அறிய விரும்புகின்றேன். ரௌரவ ஆகமமா?
பதில்:
திருமந்திரத்தின் 5-ம் தந்திரத்தில் நால்வகைச் சைவத்தைக் விளக்கும் பொழுது ‘சுத்த சைவம்’ எனும் முதல் அதிகாரத்தில்:
“வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்”
(பொ.உ) ‘வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே,’ என்றும்
“கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.”
(குறிப்புரை) முதுமுனைவர் சி. அருனை வடிவேல்
“சைவ சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதாயிற்று;
என்று விளக்குவதால் சிவாகம ஞானநெறி சித்தாந்தம் எனப் பெறப்படும்.
மேலும் இவ்வதிகாரத்தின் 2-ம் பாடலில்,
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.
பொருள் சுருக்கம்: (மலேசியவாழ் சித்தாந்த அறிஞர் மு. சோமசுந்தரம், மலேசிய அருள் நெறித் திருக்கூட்டம்)
“பதி, பசு பாசத்தை அருட்கண்ணால் உணர்ந்து இருமாயையும் நீங்கி, அஞ்ஞானமும் சிற்றறிவும் நீங்கப் பெற்ற சுத்த சைவர்க்கு அன்பு செய்யப்படும் என்றுமுள்ளதாகிய பெரும் பொருள் சிவமே.”
மேற்கூறிய பாடலுக்குரிய குறிப்புரையில் ‘சுத்த சைவம்’ தத்துவ ஞானத்தை விரும்புவது என்று முதுமுனைவர் சி. அருனை வடிவேல் விளக்குவார்.
இத்திருமந்திர விளக்கத்தால் சுத்த சைவம் என்பது முப்பொருள் இலக்கண விளக்கத்தையும் என்றும் உளதாகிய சிவத்தை அடையும் சாதனத்தையும் அருளிய சிவாகமத்தை தழுவி நிற்பது எனப் பெறப்படும். சிவசிவ.
காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' - யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.
கேள்வி: 2
எந்தக் குறிப்பிட்ட கட்டுரை என குறிப்புத்தாருங்கள். உதவும்.
பதில்:
‘திருமுறைகளை அருளியோர்’ தலைப்பின் கீழ் தருமை ஆதினம் காரைக்கால் அம்மையார் காலத்தை விளக்கிக் கூறும் பகுதி:
“திருஞானசம்பந்தர் தாம் அருளிய திருஆலங்காட்டுத் திருப்பதிகத்தில்,
வணங்கும் சிறுத்தொண்டர்
வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு
எம் அடிகளே (தி.1 ப.45 பா.7)
எனக் குறித்தருளுவதால் அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது யாப்பமைதி சொற்பொருள் அமைதி முதலியவற்றைக் கொண்டு ஆராயுங்கால் இவரது காலம் இருண்ட காலப்பகுதி எனப்படும். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.”
இதுவன்றி காரைக்கால் அம்மையாரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று குறிப்பிடப்பட்ட கருத்துகளையும் கண்டுள்ளோம். அவசரத்திற்கு அதற்கான ஆதாரத்தைத் தேடி எடுக்க முடியவில்லை. சிவ சிவ.
கேள்வி 3:
சைவ சித்தாந்தம் என்பது எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொள்வது என
வரையறை செய்யப்பட்டது எக்காலம்? எந்த
நிறுவனம் (மடம்) இதனைச் செய்தது?
பதில்:
தங்களின் கேள்வியில் ஏதோ குழப்பம் உள்ளது போல் தெரிகின்றது.
சைவ சித்தாந்தம் என்பதே ஒரு தத்துவ நெறியாகும். இதில் ஆகமத்தின் ஞான நெறியும், மெய்க்கண்டார் நெறியையும் குறிப்பிட்டதால் இந்த குழப்பம் வந்தது போலும்.
ஆகமத்தின் ஞான நெறி சிவபெருமானால் சுத்த மாயையில் குருசிஷ்ய மார்க்கமாக பிரணவர் முதலாகி உபதேசிக்கப் பட்டு ஸ்ரீகண்ட ருத்திரருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் அவர் வழி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசிக்கப் பட்டது என ஆகமங்கள் விளக்கும். அதனால் ஆகமத்தின் ஞான நெறி குரு உபதேசமாக பெறப்பட்டதாகும்.
மெய்கண்டார் வழியில் வந்த மெய்கண்ட சாத்திரங்களினால் விளக்கப்படும் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் ஐம்புலன் அடங்கிய ஞானிகளின் அறிவுக்கு அந்தமாக பெறப்பட்ட உண்மையை சித்தாந்தமாக விளக்குவன. 13-ம் நூற்றாண்டில் மெய்கண்டார் சிவஞானபோதத்தை அருளிய பிறகு குருசிஷ்ய பரம்பரையில் தோன்றிய பிற சந்தான குரவர் 14-ம் நூற்றாண்டு வரை அருளிய 14 மெய்கண்ட சாத்திர நூல்களே இத்தத்துவ நெறிக்குப் பிரமாணம். இதனை அடுத்து வேத உபநிடங்களும் இத்தத்துவ நெறிக்குப் பிரமாணமாகும்.
இவ்விரண்டு தத்துவ நெறிகளுமே சிவனே பரம்பொருள் என்று கொள்வன. ஆனால் இத்தத்துவ நெறிகள் தனித்தனியே இயங்குவன.
‘Two streams of clean water which runs in parallel and reaches the sea’ என்று ஆங்கிலத்தில் சொல்வது போல இவற்றின் இலக்கு ஆன்மா சிவத்தைச் சென்று சார்வதாகும்.
சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்
சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே
(10.1492 திருமந்திரம்)
தமிழ் நாட்டில் தோன்றிய திருக்கைலாய மரபுச் சைவ மடங்கள் மெய்கண்ட சாத்திரங்களையேற்று அதன் வழி நடத்தப் படுவதாகும். இம்மடங்கள் 15-ம் நூற்றாண்டு முதல் குரு பரம்பைரையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றித் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்தும் மடலாயங்களின் வழி சைவ சமயத்தை வளர்த்து வருகின்றனர்.
ஆகம நெறியைப் பின்பற்றிச் சைவ குருமார் திருக்கோயில்களின் வழி சைவ சமயத்தை வளர்த்து வருகின்றனர். ஆக இரு தத்துவங்களுமே ஒன்றுக்கு மற்றொன்று உதவி கரம் நீட்டி சைவத்தை வளர்த்து வருகின்றன. சிவசிவ.
கேள்வி 4:
சைவ சித்தாந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுளர்கள் யாவர்?
பதில்: சிவன். இதனை திருமந்திரத்தின்,
‘சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை”
என்ற திருமூலர் வாக்கால் அறியலாம். ஆகமங்கள் சொல்வதும் அதுவே.
தங்களின் கேள்வி பன்மையில் உள்ளதால். சிவனன்றி பிற தெய்வம் சைவத்தின் கடவுளராக ஏற்றுக் கொள்ளப் படுகின்றதா என்று வினவுவதாக உள்ளது.
ஒரு கடவுள் வழிபாடு (monistic religion) என்று ஆகமத்தில் முதலில் தொடங்கியது பின்னர் கால மாற்றதின் தேவைகேற்ப பல தெய்வ வழிபாடாகியது சைவம். குற்றம் ஆகமத்தில் இல்லை. சைவத்தைக் கொண்டோர் அவரவர் இஷ்ட தெய்வத்தை தனிப்பெரும் கடவுளராக்க முற்பட்டதின் விளைவு இது.
இக்கேள்விக்குப் பதில் சொல்ல சைவத்தை இரு காலகட்டமாக பிரித்துக் கொண்டு பார்த்தல் அவசியம். மெய்கண்ட சாத்திரங்கள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் தோன்றிய 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகும் அதற்கு முந்திய நிலையும் பிரித்து அறிந்தால் சமய அரசியலில் ஏற்பட்ட பல உண்மைகள் நமக்குப் புலப்படும். அது இங்கு தேவையற்றது.
இருப்பினும், சிவஞான சித்தியாரில்,
“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கும் மேல்வினைகள் செய்யும்
ஆதலால் இவையிலாதான் அறிந்து அருள் செய்வனன்றே” (115)
என்று சித்தியார் சொல்லுவதால் சிவப்பரத்துவத்தை நாம் அறியலாம். இக்கேள்விக்கு இப்பதில் போதுமானது. சிவசிவ.
தங்களின் பிற இரண்டு கேள்விகளுக்கு ஓய்வு இருக்கும் பொழுது பதில் அளிப்போம்.
மின் தமிழில் இருக்கும் சைவ பெரியோர் அடியேனின் கருத்தில் குற்றம் குறை இருப்பின் பொருத்தருளுமாறு வேண்டுகிறோம். தேவையேற்படுமின் எம்மைத் திருத்தலாம். சிவ சிவ.
அன்புடன் கமலநாதன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3-QuZTZUxfc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Sunday, November 27, 2016 at 9:48:06 AM UTC-8, Suba.T. wrote://சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது? //
On Nov 28, 2016 3:53 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> On Sunday, November 27, 2016 at 6:29:10 PM UTC-8, தேனீ wrote:
>
>> On Sunday, November 27, 2016 at 9:48:06 AM UTC-8, Suba.T. wrote:
>> //சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
>> அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது? //
>
>
>
> திரு. கமலநாதன் ஐயா,
>
> "சிவம்" என்னும் இறையை ஆண்பாலாக்கி "அவன்" என்று கருதும் முறை ஏற்பட்டது எதனால்?
>
> (இதே கேள்விதான் சுபாவிற்கும் தோன்றியதா எனத் தெரியவில்லை)
>
ஆமாம்
இதுதான் என் கேள்வி.
சுபா
>
> ..... தேமொழி
>
>
>
>>
>> இக்கேள்வியின் பொருள் எமக்குப் புரியவில்லை. கேள்வியை விளக்கினால் பதில் அளிக்க முடியும்.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
திரு. தேவ், ‘மனு தர்மம் இந்து மத நூலா?’ என்ற இழையில் பதிவு செய்த கருத்துக்கு இது பதிலாகும்.
அவர் கண்ணில் பட்ட கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்து எம் பதிலை எதிர்பார்க்கின்றார். அவர் பதிவு செய்த கட்டுரையின் பின்புலம் என்னவென்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் பதிவிட்டக் கருத்துக்குப் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.
அவர் கேள்வி:
· சுமிருதியைப் புடை நூலாக ஏற்றுச் சைவத்தினுள் புகுத்தியது சைவ நூலான ’சிவஞான சித்தியார்’ செய்த சூழ்ச்சியா?
மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்கும் முன் அவர் பதிவு செய்த திருப்பனந்தாள் காசி மடத்தின் கருத்துக்கு மறுமொழியை சில தொடர் கட்டுரைகளாக பதிவிட்டு அவர் கேள்விக்குப் பின் பதில் சொல்லுவோம்.
“வேத மந்திரங்களும், ஆகம மந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன. அதனால் அவை ‘மந்திரங்கள்’ என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் ‘அருள்பழுத்த கனிகள்’ கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத் தருபவை. ஆகையால் இவை ‘பெருமந்திரங்கள்’ என்னும் உயர்தரம் உடையன“
விளக்கம்: பகுதி 1
“வேதம் யஞ்ஞாதி (வேள்வி) கருமங்களைச் செய்து புண்ணிய உலகங்களை அடைய விரும்பும் உலகர் பொருட்டும்;
ஆகமம் சிவசாலோக்கிய சிவ சாமீப்ய சிவசாரூப்ய சிவ சாயுச்சியங்களை அடைய விரும்புஞ் சத்திநிபாத முடையார் பொருட்டும் அருளிச் செய்யப்பட்டன” என்று கூறுவார் காமிகாமத்தின் கிரியாபாத தமிழ் மொழி பெயர்ப்புக்கு முன்னுரை வழங்கிய ஈசான தேவன் பெ.ஏ. கபாலி. இவர் ஆகமங்களையும் வேதத்தையும் கற்றுணர்ந்தவர் என்பது அம்முன்னுரையைப் படித்தோருக்குப் புரியும். மேற்கூறிய கருத்தை ஒட்டியே பிற சைவ சமய அறிஞரும் வேதத்திற்கும் ஆகமத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறுவார்.
வேதம் உலகியல் இன்பத்தை அதிகமாகவும் அருளியலைக் குறைத்து வேண்டி வேள்ளி வழிபாடு செய்யும் நெறி கொண்டது. தேவாதிதேவர்களுக்கு அவிர்பாகத்தைக் கொடுத்து ஆசிகள் பெற்று உலகில் (இம்மையில்) இன்புற வாழ வேண்டுவர். இதனை யசூர் வேதத்தின் கருமகாண்டத்தில் உள்ள மந்திரங்களின் பொருள் அறிந்தோர் அறிவர்.
அவ்வகை வேள்வி வழிபாட்டின்படி பெறும் புண்ணியத்திற்கு கிட்டுவது புண்ணிய உலகங்கள். இவை சிவலோகத்திற்கும் கீழுள்ள உலகங்களென்று ஆகமங்கள் விளக்கும்.
ஆகமம் அருளியலை அதிகமாகவும் உலகியலைக் குறைத்தும் கூறும். சிவாகம மந்திரங்கள் ஓதி சைவ கிரியைகளைப் பின்பற்றி, சிவாகமச் சாத்திர தெளிவு பெற்று ஆன்மா பக்குவமடைந்து சிவலோகம் முதல் சிவாயுச்சியமாகிய உயரிய முத்தி நிலையை அடைய வழிகோலுவது ஆகமம்.
ஆகம முறைப்படி சிவத்தொண்டு செய்வோர், சைவ சமியியாக கோயிற்தொண்டும், குரு, அடியார் தொண்டுமாகிய சரியையில் நிற்பார். புத்திரமார்க்கத்தில் சைவ கிரியையின் வழி புறவழிபாடும், யோகத்தின் வழி அகவழிபாடும் முறைப்படி செய்து, அட்டமா சித்திகள் கைவரப் பெற்று ஆன்ம தத்துவ சுத்திகளடைந்து இறைவன் திருவருளால் எம்பெருமான் திருப்பாதம் சாரும் சாதனத்தைக் கூறுவது ஆகமத்தின் சரியை, கிரியை, யோக பாதமாகும்.
ஆங்கே முறைப்படி விஷேட சிவதீக்கைப் பெற்றோரே சைவ கிரியைகளை மேற்கொள்ள முடியும். ஆகையால் ஆகமம் சைவ கிரியையாளர் முத்தி பெறும் சாதனத்தைக் கூறும்.. இக்கிரியைகளால் சத்திநிபாதப் பயன் பெறுவோர் சைவ கிரியையாளர்களே அன்றி பக்தர் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் காரணம் பொதுவாக பக்தர் என்போர் ஆகமமுறைப்படி சிவதீக்கைப் பெற்று சைவ கிரியைகள் செய்ய தகுதி உடையோர் அல்லர்.
ஆகம முறைப்படி, சிவதீக்கைப் பெற்று சைவ கிரியைகளை மேற்கொள்ளாதவருக்கு அபர முத்திக்கும், சாயுச்சிய முத்திக்கும் வழி ஆகமத்தில் சொல்லப்படவில்லையே! அப்படியானால் பொது சைவர் நிலையென்ன? பொதுச் சைவர் எனப்படுவது சிவ தீக்கைப் பெறாமலும் அல்லது சமய தீக்கை மட்டும் பெற்று சைவ கிரியைகள் செய்யாமல் சைவ நெறிகளையும், அனுட்டானங்களையும், திருமுறை காட்டும் பக்தி நெறியையும் பின்பற்றி வாழுவோர். இப்படி இருதிறப் பட்ட நிலைகள் ஏற்பட்டதால் பொதுச் சைவருக்கும் முத்திக்கு வழி காட்டும் ஒரு முதல் நூல் வேண்டுமல்லவா?
ஆன்மாக்கள் பலதிறப்பட்டு உள்ளதால் அவரவர் அறிவுத் தெளிவுக்கு ஏற்றவாறு பல நெறிகளை இறைவன் அருளினான். அதனால்தான் சமய நெறிகள் பலவாயின என்று சைவம் கூறும். அவ்வாறே வேதத்ததின் ஞானகாண்டமும் கூறும். இப்படி சமய நெறிகள் பலவாக இறைவனால் அருளப்பெற்றது என்பதில் வேதமும் ஆகமுமே முதல் நூலாகும் என்பதை ஆகமம் ஏற்றுக் கொண்டது.
வேதம் சுயம்பு என்று வேதாந்திகள் கூறுவதால் இறைவன் சிவபெருமான் வேதத்தை அருளினான் என்று இதுநாள் வரை அவர் பொதுவாகவும் ஒருமனதாகும் ஏற்றுக் கொண்டாரில்லை.
அனைத்தும் அறிந்த முற்றறிவாளன் சிவபெருமான். ஆன்மாக்களுக்கு எது எவ்வேளையில் தேவை என்பதையறிந்து அது அவரவருக்கு அவ்வவ்வேளையில் கிட்டுமாறு அருள்புரிபவன் சிவபெருமான்.
அவ்வாறே பொதுச்சைவர் நிலையறிந்து எம்பெருமான் சுத்தாத்துவித சைவ சித்தாந்த நெறியை ஞானநெறியில் உயர்ந்தோராகிய சந்தானகுரவர் வழி அருளினான். இதனை,
வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்.
என்று சித்தியார் கூறியதால் அறிவோம். இதன் காரணமாக சித்தாந்தத்தை அருளிய ஆகமத்திற்கு பிறகு அந்நெறியை விளக்கிச் சொல்ல சிவஞானிகளால் அருளப்பெற்றதே மெய்கண்ட சாத்திரங்கள். இதனை,
வேதாந்த தெளிவாம் சைவ சித்தாந்த திறன் இங்கு தெரிக்க லுற்றாம்
மென்று உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசத்தில் கூறியுள்ளமையால் நன்கு விளங்கும்.
வேதாந்தத்தில் அப்படியென்ன குறை? ஆகமச் சித்தாந்தத்தால் ஏற்பட்ட விளைவு என்ன? இவ்விரண்டையும் தெளிவிக்க மெய்கண்ட சாத்திரங்கள் எழ வேண்டிய அவசியமென்ன? இதற்கான காரணத்தை விளக்கினால் திரு தேவ் அவர்களின் கேள்விக்குப் பதில் இலகுவாக கிட்டும்.
அடுத்தடுத்து வரும் கருத்துப் பதிவுகளில் இதனைக் காண்போம். தொடரும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3-QuZTZUxfc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
“வேத
மந்திரங்களும், ஆகம மந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன.
அதனால் அவை ‘மந்திரங்கள்’ என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் ‘அருள்பழுத்த கனிகள்’ கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத் தருபவை. ஆகையால் இவை ‘பெருமந்திரங்கள்’ என்னும் உயர்தரம் உடையன“
விளக்கம்: பகுதி 2
கோயிலில் பரார்த்த பூசை உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் திருவருள் வேண்டி செய்யப் படுவதாகும். சைவ கோயில்களில் ஏற்பட்ட வேதநெறி கலப்பினால் இந்நிலை இன்று இல்லை. இன்று கோயிலில் செய்யப்படும் பெரும்பாலான கிரியைகள் உலகியல் இன்பத்தை வேண்டி செய்யப்படும் காமிய வழிபாடாகி விட்டது. பக்த பதர்களை இவ்வகை காமிய வழிபாட்டிலேயே நிலை நிறுத்தி வைத்தால் அவர் அருளியலை அறிய மாட்டார். அதனால் மேலோர் மேலோராகவே இருக்கவும் கீழோர் கீழோராகவே இருக்கவும் இடைத் தரகர்களால் கோயில் பரார்த்த வழிபாட்டின் நோக்கம் இன்று மடைமாற்றம் செய்யப் பட்டுவிட்டது.
இன்றைய சைவக் கிரியைகளால் பக்தர் சத்திநிபாதமடைய வழியில்லையானால் அக்கிரியைகளில் கலந்து கொள்வதால் பெறும் பயன் யாது? பண நட்டம்!.
அதன் காரணமாகவே, ஆகம மந்திரங்களை ஓதுவித்து சைவ கிரியையாளர் பெறும் அதே சத்திநிபாத பயனைத் தரவல்ல தேவாரத் திருமுறை, திருவாசகம், திருமந்திரமோதி தமிழ் சைவர் ஆத்மார்த்த வழிப்பாட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை உண்மை சரியை, கிரியை, யோக பக்தியின் வழி ஆன்மாக்கள் சிவஞானம்பெற்று முத்திக்கு வழிகாட்டுவன. இது பணச் செலவில்லாத வழிபாடு. இதில் இடைத்தரகர் இல்லை. எம்பெருமான் கருணை வேண்டி அன்பால் உருகி திருமுறைப் பாடி நீரும் பூவும் கொண்டு வழிபட்டு திருப்பாதம் அடைய எளிமையான சாதனத்தை நால்வர் பெருமக்களோடு திருமூலரும் சேர்ந்து வழிகாட்டினார்.
“பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை…” (தி.7:59:1)
பொ.உ: தருமை ஆதினம்
“எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய,”
என்று சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது, எழுதுமறையாகிய தமிழ் வேதத்தால் எம்பெருமானை வாழ்த்திப் பாட உலகின்பத்தையும் வீடுபேற்றையும் ஒருங்கே பெறவியலும் என்பதாகும். அதன் அடிப்படையில்,
“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்” (சிவ.புரா)
என்று மணிவாசகர் சொல்லியது பொருளறிந்து ஓதுவாரே சிவபுரம் சென்று சிவனடிக்கீழ் வீற்றிருக்கும் பயனைப் பெறுவர் என்பதாகும். புரியாத மொழியில் அறியாது போகும் மந்திரத்தால் யாருக்கு என்ன இலாபம்? நாம் அறிந்த மொழியில் சொல்லியப் பாட்டின் பொருள் உணர்ந்து பாடுவதால் கிட்டுவது. இறையருள். புரியாத மொழியில் உத்தரானம் செய்யும் மந்திரத்தால் ஆன்மாக்கள் சிவபுரம் செல்ல இயலாது. இவ்வாறு உணர்த்தியதும் மணிவாசகர்தான்.
அதனால் வேத வேள்வியும் ஆகம முறைப்படி செய்யப்படும் சைவ கிரியைகளின் வழி நிற்காது போனாலும், நால்வர் காட்டிய நல்வழியில் ‘சலம்போடு பூவும்’ கொண்டு அருச்சைனைப் பாட்டாகிய தமிழ்வேதத்தை உள்ளம் உருக பாடி வேண்டினால் பொன்னும் மெய்பொருளும் அருளுவான் எம்பெருமான். வழிதான் வேறே தவிர இறுதிப் பயன் ஒன்றே. இதனை திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புகள் மெய்ப்பிக்கும். இவ்வாறு சொல்லுவதால் யாம் வேதாகமத்துக் கிரியைகளை மறுக்கிறோம் என்றோ அல்லது புறக்கணிக்கிறோம் என்றோ பொருளாகாது. அவ்வழி கிரியைகள் பின்பற்றாது திருமுறைகள் காட்டும் எளிய கிரியைகளை பாமரர் முதல் அனைவரும் பின்பற்றி பொன்னும் மெய்ப்பொருளும் பெறலாம் என்பதே நால்வர் காட்டிய நல்வழி என்றே பொருளாகும். . .
நால்வர் பாடிய தமிழ்வேதத்திற்கு சைவ கோயிலில் இன்று கொடுக்கப் படும் மரியாதை எவ்விதம் உள்ளது?
திருமுறை ‘பெருமந்திரங்கள்’ என்று உதட்டளவில் புகழாரம் சூட்டுவதால் மட்டும் அவற்றின் மான்பு உயர்ந்து விடப் போவதில்லை. அப் ‘பெருமந்திரதிற்கு’ கோயில் பரார்த்த பூசையில் கொடுக்கப் படும் மரியாதையைச் செவி மடுத்துக் கேளுங்கள்.
தமிழர் வழிபடும் சிவாலயங்களில் தமிழில் பூசை செய்வதற்கு ஆகமத்தில் இடமில்லை காரணம் மந்திரங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் உள்ளன. பழக்கத்தின் காரணமாக சிவாலய அர்ச்சகர் அம்மந்திரங்களைச் சமஸ்கிரதத்தில் உள்ளவாறே உச்சரித்துப் பரார்த்தப் பூசை செய்வார். இன்று பல சிவாலயங்களில் சிவ அஷ்டோத்திரமும், நாமவளிகளுமே உத்தரானம் செய்து அருச்சனை செய்யப்படுகின்றது. அம்மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அருச்சனை செய்தால் என்னவென்று கேட்போமானால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அருச்சகரே அது தெய்வ குற்றமாகி விடும் என்று எங்களுக்குப் பாடம் போதிப்பார். சிவாகமத்தில் உள்ள மந்திரங்களை ஓதி சிவவழிபாடு செய்வது பிரம்ம மந்திரங்களும் அங்க மந்திரங்களோடு சரி. அதற்கு மேல் உள்ள ஆகம மந்திரங்களை ஓதி சிவவழிபாடு செய்வது ஒரு சில புராதண சிவாலயங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
12-ம் நூற்றாண்டில் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார் இப்பூவுலகில் தோன்றியதன் காரணத்தை சிவபெருமானின் உரையாகவே இப்பாட்டில் விளக்குகின்றார்,
மற்றுநீ வன்மை பேசி
வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார் (தி.12: தடுத்தாட்கொண்ட பு: 216)
தூய்மையான ஆகமங்களைப் படைப்பிற் காலத்திலேயே அருளிச் செய்த சிவபெருமான்,
“மேலும் நீ என்னுடன் வன்மைய சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், வந்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக” என்றருளிச் செய்ததாகக் கூறுவார் சேக்கிழார் பெருமான்.
ஆகமத்தின் கிரியா பாதம் தினசரி, சிறப்பு நாட்கள் பூசனை விதிகளை வகுத்துக் கூறியுள்ளன. அவற்றில் அபிசேக, அலங்கார, நைவேத்தியம், உபசாரம் என்று வரும் வேளையில் அருச்சகர் வழக்கமாக ஒன்றைச் சொல்லுவார்; ‘”திராவிட கானம் அவதாரிக்க”. அப்படியென்றால் ‘பஞ்சபுராணம்’ பாட அழைக்கின்றார் என்று பொருள். நாமும் பஞ்சபுராணம் பாடுவோம். ஐந்து திருமுறைப் பாடல்களை கனக்கச்சிதமாக பாடி முடிக்க அருச்சகர் முன்னமே சொல்லி விடுவார். *‘மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார்’* என்று சிவபெருமான் சொன்னது அவ்வர்ச்சகர்களைப் பொருத்த மட்டில் 5-10 மணித்துளிகள் மட்டுமே. ஒரு மணி நேரம் நடத்தப் படும் சோடசார பூசையில் சிவவழிபாட்டிற்காக திருமுறைக்கு ஒதுக்கப் படும் நேரம் 5-10 நிமிடம். இதுதான் காசி மடம் சொன்ன ‘பெருமந்திர’த்திற்கு சிவாலயத்தில் இன்று கொடுக்கப் படும் மரியாதை!
சிவாலயங்களில் சிவார்ச்சனையை முடிக்க ‘ஆசிர்வதம்’ எனும் இறுதி பகுதிக்கு முன்னரே பஞ்சபுராணம் பாட வேண்டும் என்ற விதி காமிகா ஆகமத்தில் உண்டு. அதனால் பஞ்சபுராணம் பாடுவது சிவாலய அர்ச்சனை விதிகளில் ஒரு பகுதியாகி சிவபெருமானை தமிழில் பாடி வாழ்த்த வழிவகை செய்கின்றது. ஆனால் பல சிவாலயங்களிலும் மற்ற சைவ கோயில்களிலும் அருச்சகர் அவர்தம் இறுதிக் கிரியையாகிய ஆசிர்வதம் பாடி பூசை முடித்துக் கொண்டு அதன் பின்னர் பஞ்சபுராணம் பாடிக் கொள்ளுங்கள் என்று விட்டுட்டு அவர்தம் சொந்த வேலையைப் பார்ப்பதை நாம் காணுகிறோம். காசி மடாதிபதியார் சொன்ன ‘பெருமந்திர’மாகிய திருமுறைக்குச் சில சிவாலயத்தில் இன்று கிடைக்கும் மரியாதை இதுதான்!
தமிழ் கானத்தைப் பாட வேண்டுவது ஆகமத்தின்படி செய்ய வேண்டிய கிரியைகளில் ஒரு பகுதியாக இருப்பதால், இறைவனுக்குத் தொண்டனாக அர்த்த மண்டபத்தில் நின்று இதனை அருச்சகர்கள் பாடுவதை யாம் காணவில்லை! அதற்கு பதிலாக பக்தர் ஒருவரையோ அல்லது ஓதுவா மூர்த்தி இருப்பின் அவரையோ பாட வேண்டுவார். தமிழில் பாடுவது அவ்வர்ச்சகர்களுக்குத் தீட்டாகி விடுமோ என்னவோ எமக்குத் தெரியாது! ஆனால் அவரில் பலர் சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்து ஓதுவிப்பது போல் திருமுறையை பண்னுடன் பாட கற்றுக் கொண்டவர் அல்லர். அப்படியே திராவிட கானம் ஓத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர் அறிந்த ஓரிரு பாடல்களை விருத்தமாகப் பாடி விட்டு அவர்தம் பூசனையை முடித்துக் கொள்வார். அவ்வளவுதான் ‘பெருமந்திர’மாகிய திருமுறைக்குச் சிவாலயத்தில் கொடுக்கப் படும் மரியாதை.
இவ்வாறு சிவாலயத்திலேயே திருமுறை இரண்டாம் தரமாக்கப் பட்டு விட்டதால் தமிழ் நாட்டுத் தமிழ் சைவர் 21-ம் நூற்றாண்டு முதல் பொங்கத் தொடங்கி விட்டனர். இது 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தமிழ் மூதறிஞர் தமிழுக்காகப் பொங்கியெழுந்தது போல் இன்று தமிழ்வழி சைவ வழிபாடு வேண்டுமென்று இல்ல மற்றும் கோயில் கிரியைகளைத் தமிழ்வேத மந்திரத்தால் வழி நடத்தத் தொடங்கி விட்டனர் தமிழ் நாட்டுத் தமிழரில் ஒரு பகுதியினர். தமிழில் அருச்சனை மற்றும் திருமுறை ஓதி சைவக் கிரியைகளை செய்விப்பதை கண்டிக்க வைதிகச் சைவர்களாகிப் போன ஒரு சில சைவ மடங்கள் மறைமுகமாக அத்தமிழர்களை அவமதிக்கத் தொடங்கி விட்டனர். இத்தகைய பின்புலத்தில் வந்ததுதான் திரு. தேவ் அவர்கள் பதிந்த காசி மட கருத்துக் கட்டுரை. அதில் திரு தேவ் அவர்களின் கருத்துக்குச் சாதகமான ஒரு பகுதியை மட்டும் இங்கே பதிவு செய்துள்ளார் என்பதை அறிவோம்.
திருமுறையில் தக்கப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு சைவக் கிரியையும் செய்வதால், திருமுறையை வேள்வியிலிட்டு எரிப்பதாகவும் குடத்திலிட்டு கரைப்பதாகவும் ஒரு சில சைவ மடங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
திருமுறை தோன்றாத காலத்தில் ஏற்பட்டது ஆகமத்தின் வடமொழி மந்திரங்கள். அவை பொருள் பொதிந்தவை. அம்மந்திரங்களை தோத்திரமாக திருமூலர் திருமந்திரத்தில் அருளியுள்ளதை திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்வதாவது,
“தண்ணிலவார் சடையர்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்ப”
திருமூலர் அருளிய ஆகமப்பொருள் திருமந்திரமாலையாகவும் தமிழில் தோத்திரமாகவும் உள்ளதால் அவற்றை சைவ கிரியைகளில் ஓதி வழிபாடு செய்வது அடாத செயல் என்போரே திருமுறையை படாதுபாடு படுத்துவோராகும் என்பது புரியும். ஆகமத்திற்குப் பின்னர் அருளப்பெற்ற திருமுறையும் பொருள் பொதிந்தவையே. இவையும் சத்திநிபாதத்திற்கு வழிகாட்டுவன.
மந்திரங்களின் ஆற்றல் அச்சொல்லில் இல்லை அதனைச் சொல்லுவோர் நாவன்மையில் உள்ளது. இதனையறிய, ‘நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப’ என்று தொல்காப்பியரும் அதனையொட்டி நிறைமொழி மாந்தருக்கான இலக்கணத்தை திருவள்ளுவர் கூறியதையும் நினைவில் கொள்வோம். சைவ கிரியைகள் வழியாக ஆகம மந்திரங்களோதி சத்திநிபாத பயன்பெற அம்மந்திரங்களை ஓதுவார் அனைவரும் நாவன்மை உடையோரா என்பதை காசி மடம் முதலில் நிறுவி விட்டு தமிழ் நாட்டுத் தமிழ் சைவர்களுக்கு அறிவுரை கூறட்டும். தொடரும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்.