சைவ சித்தாந்தம் அதன் தொடக்க காலம்

701 views
Skip to first unread message

Suba

unread,
Nov 25, 2016, 7:34:51 AM11/25/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே,

மனு தர்மம் பற்றி என்ற இழையில் அதிகமான சைவ சித்தாந்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் வருகின்ரன. அந்த இழையை விட்டு இந்த இழையில்  சைவ சித்தாந்தம் அதன் தொடக்க காலம் என்பது பற்றி கலந்துரையாடுவோம்.

-சுபா

---------- Forwarded message ----------
From: Suba <ksuba...@gmail.com>
Date: 2016-11-25 13:32 GMT+01:00
Subject: Re: [MinTamil] Re: மனு தர்மம் பற்றி
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>




2016-11-25 2:22 GMT+01:00 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் சுபா,

மெய்கண்ட சாத்திரங்களின் வழி நாம் பெற்றது சுத்தாத்துவைத சைவம் எனப்படுவது.     மெய்கண்டாரின் காலமாகிய 12-ம் நூற்றாண்டு முதல் தோன்றிய 14 மெய்கண்ட சாத்திரங்களைக் குறிக்கும். அதன்வழி வந்ததுதான் பெரும்பாலான தமிழ் நாட்டுச் சைவ ஆதினங்கள். இவர் திருக்கைலாய மரபில் வந்தவர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். இது சந்தான குரவர் மரபில் வந்தவர் என பொருள் படும். 

ஆகமச் சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம். பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு முன் விளக்கியது இஞ்ஞான நெறியே. மெய்கண்ட சாத்திரங்கள் இஞ்ஞான நெறியினை தமது தத்துவ நெறியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் முத்திபேறுக்குச் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்பதில் சற்று வேறுபட்டு நிற்கும் மெய்கண்ட சாத்திரங்கள்.

ஆகமத்தில் கூறப்படும் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் எனப்படுவது கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப் படுவது. மெய்கண்ட சாத்திரம் குரு லிங்கக சங்கமம் எனும் வழியைக் கொண்டது. ஆங்கே அடியார் ஒரு குருவின் வழி இறைவனை உணர வழிகாட்டுவது. கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. வேண்டியமட்டும் எடுத்துக் கொள்வர். இரண்டுக்கும் இலக்கு ஒன்று. தத்துவ நெறியில் ஒருமைப்பாடு உண்டு. ஆனால் ஆன்மா அதன் இலக்கைச் சென்று சேர்வதற்குரிய சாதனமாகிய சரியை, கிரியை, யோகத்தில் வேறுபாடு உண்டு.

இவையே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும்.

இனி வரலாற்றுக்கு வருவோம்.

காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' -  யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.

ஆகமங்களின் ஞானபாத சாரத்தைத் தமிழில் திருமூலரால் திருமந்திரத்தின் வழி அருளப்பெற்றது. இது பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முந்தைய நூல். சிலர் திருமூலரின் காலத்தை 4 - 5 -ம் நூற்றாண்டு என்று கூறுவர். திருவாடுத்துறை ஆதினம் திருமூலரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று ஏற்றுக் கொண்டது. அதனால் இன்றைய வடமொழி ஆகமங்கள் அதற்கும் முந்தையது என்பது தெளிவாகும். 

திருஞான சம்பந்தர் தொடங்கி மூவர் தேவாரத் திருமுறைகளிலும் திருவாசகத்திலும் சொல்லப் பட்ட அனைத்துச் சித்தாந்த கருத்துக்களுக்கு மூலம் ஆகமச் சித்தாந்தமும், திருமந்திரமுமாகும். மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. அக்காலத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றவில்லை என்பதை கவணிக்க.

காளமுக, பாசுபதம், கபாலிகம் தென்னாட்டில் தோன்றிய சைவ மார்க்கங்கள் அல்ல. அவை வடக்கே தோன்றி தெற்கில் தொண்டை மண்டலம் வரை ஒரு காலத்தில் இருந்தது. இவற்றிற்கு முறையான தத்துவ நெறிகள் கிடையா. பாசுபத சைவ மார்க்கத்தை விளக்கும் பாசுபத சூத்திரமும் இன்று வழக்கில் இல்லை. அதனால் இச்சைவ மார்க்கங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போயிற்று.

வீர சைவம் தென்னகத்தே தோன்றியது என்றும், வடக்கே இருந்து வந்தது என்றும் இருவகை கூற்றுகள் உண்டு.  இந்நெறி தமிழகத்திலும் இன்றைய கன்னடத்திலும் அதற்கு வடக்கேயும் இருந்து வருகின்றது. வீர சைவ நெறி சில ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ளன. அதில் பிரதாணமாக விளங்குவது பரமேஸ்வர ஆகமமாகும். வீர சைவத்திற்கான நெறிகளை வீர ஆகமத்திலும் இன்னும் சில ஆகமங்களில் காணலாம்.

தங்களின் இதர கேள்விகளுக்கு இரவில் பதில் கொடுக்கப் படும். பகலில் நேரம் இல்லை.

கேள்வி கேட்டமைக்கு நன்றி.

கமலநாதன் 


​வணக்கம் திரு.கமலநாதன் அவர்களே.
உங்கள் பதிலிருந்து மேலும் சிஅல் கேள்விகள் எழுகின்ரன.

இந்த இழையை நாம் ​
 
​மனு தர்மத்தை அலச மட்டுமே என வைத்துக் கொள்வோம். தற்சமயம் அதிகமாக சைவம் தொடர்பான செய்திகள் இங்கே வருவது இழையின் போக்கை மாற்றும். ஆகையினால் தனி இழை உருவாக்குகின்றேன். என் கருத்துக்களை அதில் பதிகின்றேன். சைவம் தொடர்பான கேள்விகள் கேட்க விரும்புவோரும், கருத்து சொல்ல விரும்புவோரும் அதில் தொடருங்கள். இந்த இழையில் தவிர்த்து விடுவோம்.

அன்புடன்
சுபா





--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Nov 25, 2016, 8:06:36 AM11/25/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திரு.கமலநாதன் ஐயா,


2016-11-25 2:22 GMT+01:00 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் சுபா,

​ 

ஆகமச் சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம். பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு முன் விளக்கியது இஞ்ஞான நெறியே.

​எந்த சாத்திர நூலை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றீர்கள் என அறிய விரும்புகின்றேன்.ரௌரவ ஆகமமா?
 ​
 
மெய்கண்ட சாத்திரங்கள் இஞ்ஞான நெறியினை தமது தத்துவ நெறியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் முத்திபேறுக்குச் சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்பதில் சற்று வேறுபட்டு நிற்கும் மெய்கண்ட சாத்திரங்கள்.

​..

இனி வரலாற்றுக்கு வருவோம்.

காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' -  யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.

​எந்தக் குறிப்பிட்ட கட்டுரை என குறிப்புத்தாருங்கள். உதவும்.

 

ஆகமங்களின் ஞானபாத சாரத்தைத் தமிழில் திருமூலரால் திருமந்திரத்தின் வழி அருளப்பெற்றது. இது பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முந்தைய நூல். சிலர் திருமூலரின் காலத்தை 4 - 5 -ம் நூற்றாண்டு என்று கூறுவர். திருவாடுத்துறை ஆதினம் திருமூலரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று ஏற்றுக் கொண்டது. அதனால் இன்றைய வடமொழி ஆகமங்கள் அதற்கும் முந்தையது என்பது தெளிவாகும். 

திருஞான சம்பந்தர் தொடங்கி மூவர் தேவாரத் திருமுறைகளிலும் திருவாசகத்திலும் சொல்லப் பட்ட அனைத்துச் சித்தாந்த கருத்துக்களுக்கு மூலம் ஆகமச் சித்தாந்தமும், திருமந்திரமுமாகும். மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. அக்காலத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றவில்லை என்பதை கவணிக்க.

 சைவ சித்தாந்தம் என்பது எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொள்வது என வரையறை செய்யப்பட்டது எக்காலம்? 

எந்த நிறுவனம் (மடம்) இதனைச் செய்தது?

சைவ சித்தாந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுளர்கள் யாவர்?


 

காளமுக, பாசுபதம், கபாலிகம் தென்னாட்டில் தோன்றிய சைவ மார்க்கங்கள் அல்ல. அவை வடக்கே தோன்றி தெற்கில் தொண்டை மண்டலம் வரை ஒரு காலத்தில் இருந்தது. இவற்றிற்கு முறையான தத்துவ நெறிகள் கிடையா. பாசுபத சைவ மார்க்கத்தை விளக்கும் பாசுபத சூத்திரமும் இன்று வழக்கில் இல்லை. அதனால் இச்சைவ மார்க்கங்கள் இன்று அடையாளம் தெரியாமல் போயிற்று.
இது வடக்கில் தோன்றியது என்றாலும் பிற்காலச் சோழர் காலத்தில் அதிலும் ​ராசராசன் காலத்தில்  பாசுபதமும், காபாலிகமும்  காளாமுகச் சைவமும் ஓங்கி இருந்தன.   இவை   தமிழகத்தில் விரிவாக வழக்கில் இருந்த சைவப் பிரிவுகள்.  எனது கருத்துப்படி இவை நரபலி கொடுத்தல், மாமிசம் உண்ணுதல் என்பன போன்ற நடைமுறைகளைக் கொண்டிருந்ததால் தான் இவை ஓரங்கட்டப்பட்டு சாத்வீக முறையில் வடிவம் பெற்றுவந்த சைவ தித்தாந்தம் மடங்களால் போற்றப்பட்டு பின் பிரபலமடைந்தன என்றே கருதுகிறேன்.
 

 

வீர சைவம் தென்னகத்தே தோன்றியது என்றும், வடக்கே இருந்து வந்தது என்றும் இருவகை கூற்றுகள் உண்டு.  இந்நெறி தமிழகத்திலும் இன்றைய கன்னடத்திலும் அதற்கு வடக்கேயும் இருந்து வருகின்றது. வீர சைவ நெறி சில ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ளன. அதில் பிரதாணமாக விளங்குவது பரமேஸ்வர ஆகமமாகும். வீர சைவத்திற்கான நெறிகளை வீர ஆகமத்திலும் இன்னும் சில ஆகமங்களில் காணலாம்.

தங்களின் இதர கேள்விகளுக்கு இரவில் பதில் கொடுக்கப் படும். பகலில் நேரம் இல்லை.

கேள்வி கேட்டமைக்கு நன்றி.

கமலநாதன் 

​ 

​மேலும் ..

​ப்போது சைவ மடங்களால் ​போற்றி வளர்க்கப்படும் சைவ சித்தாந்தம் எந்தெந்த நூற்களை தமது சமய நூலாகப் பட்டியலிடுகின்றது? 

சைவ சித்தாந்தக் கொள்கையின் படி (14 சாத்திரங்கள் மட்டும்) வர்ணாசிரமம் ஏற்கப்படுகின்றதா? சாதி கடைபிடிக்கப்படுகின்றதா?

சைவ சமய மடங்களில் 
 வர்ணாசிரமம் ஏற்கப்படுகின்றதா? சாதி கடைபிடிக்கப்படுகின்றதா?

Maravanpulavu K. Sachithananthan

unread,
Nov 25, 2016, 9:44:18 PM11/25/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
........இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற்போனும் கலையுருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்
தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்

மணிமேகலை காதை 27, வரிகள் 86-95

ஆகிய வரிகளே சைவ சித்தாந்தக் கொள்கையைத் தமிழில் தந்த தொடக்க வரிகளாக இன்று வரை அறியப்பட்டுள.
இதற்கு முன்பும் சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கும் நூல்கள் இருந்திருக்கவேண்டும். தேடவேண்டும்.

பின்னர் காரைக்காலம்மையார் கூறியன நமக்குக் கிடைக்கின்றன.
மணிமேகலை காலத்திலும் காரைக்காலம்மையார் காலத்திலும் சைவ சித்தாந்தக் கருத்துகள் கூர்மையின் உச்சத்தில் இருந்தன.

இறை என்றால் முழுமை.
உயிர் என்றால் முழுமையற்றது.
உயிரைக் குறைகளுடையதாக்குவன மூன்று மலங்கள்.

இறை, உயிர், மலம் மூன்றும் தொடக்கமற்றன, முடிவுமற்றன.

முழுமை இலக்கு.
முழுமையை நோக்கிய, இலக்கை நோக்கிய உயிரின் பயணம்
பிறவிப் பேறு அதற்கே.

கால வரிசையில்
மணிமேகலைக் காப்பியம் கூறும் கொள்கை, 
காரைக்காலம்மையார் கூறிய கொள்கை
பின் வந்த நாயன்மார் கூறிய கொள்கை
மெய்கண்ட சாத்திரம் கூறும் கொள்கை.
அது
சைவ சித்தாந்தக் கொள்கை.
பகுத்தறிவும் அறிவியலும் சார்ந்த கொள்கை.

நன்றி

Banukumar Rajendran

unread,
Nov 25, 2016, 10:53:14 PM11/25/16
to மின்தமிழ்
2016-11-26 8:14 GMT+05:30 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
........இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற்போனும் கலையுருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்
தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்

மணிமேகலை காதை 27, வரிகள் 86-95

இப்பாட்டு ஒரு இடைசொறுகல்.


முன்னும், பின்னும் வரும் பாட்டுகளை படித்தால் இவ்வுண்மை புரியும். 

நீலகேசி எழுந்த காலத்தில்கூட சைவ சித்தாந்தம் எழவில்லை. நீலகேசி வாதும் செய்யும்
சமயப்பிரிவுகளில் (தரிசனங்கள்) வைணவமும், சைவமும் இடம் பெறவில்லை. நீலகேசி
எழுந்த காலம் என்று கி.பி.9ஆம் நூற்றாண்டும் என்பது அறிஞர் முடிபு. (என் கணிப்பின்படி
நீலகேசியின் காலம் சற்றொப்ப கி.பி.3 அல்லது நான்காம் நூற்றாண்டு). நீலகேசியின்
காலத்தை 9ஆம் நூற்றாண்டும் என்று எடுத்துக்கொண்டாலும் அந்நூற்றாண்டுவரை
சைவ சித்தாந்தம் எழுதப்படவில்லை. 

சைவ சித்தாந்தம், ஜைன சித்தாந்தத்தை அடியொற்றி அவற்றிலுள்ள குறைகளுக்கு தக்க சமாதானம்
கூறி இயற்றப்பட்டது. சைவத்தில் வரும்வினைக்கொள்கைகள் முதலானவைகள் ஜைன சாரத்தை
ஒற்றியே எழுதப்பட்டது.

திருக்குறளில் வரும் வினைக்கொள்கைகள் (தானே பின்சென்று அடும்) போன்ற மெய்யியல் கருத்துக்கள்
ஜைனம் சார்ந்தே அமைந்திருக்கிறது. குறள் எழுந்த காலத்தில் சைவத்திற்கென்று சமய மெய்யியல்
தோன்றாத காலம். அவ்வாறே வைணவத்திற்கும். 

சித்தாந்தம் என்ற சொல்லே சமணப்பிரிவை சார்ந்தது. 

ஈண்டு ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும்!

சமணமும், புத்தமும் தங்கள் வாதங்களை தத்துவங்கள் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டன. சைவமும், ஜைனமும் வாதங்கள் செய்வதாகவரும் தேவாரத்தில், எவ்வடிப்படையில் வாதங்கள் அமைவதாக
வருகிறது என்பதை பார்த்தாலே உண்மை பட்டென்றுத் தெரிந்துவிடும். ஏனெனில், தேவாரம் எழந்த
காலத்தில்க்கூட சைவ சித்தாந்தம் எழுதப்படவில்லை. இதுவும் ஒரு முக்கியமான கருத்து.

சிலர், திருமூலரின் திருமந்திரத்தை இழுக்கலாம். திருமூலரின் காலம் மிக பிந்தையது. நிச்சயம்,
கி.பி.10 நூற்றாண்டிற்கு பிறகுதான். திருமந்திரத்தில் பெரும்பாலான பாடல்கள் புத்த/ஜைனத்தை
ஒற்றியே எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உண்டு.

அன்றைய காலகட்டத்தில், சைவ/சமண மோதல்களை தணிக்கவும், சமயபொறை பேணவும், திருமந்திரம்
எழுந்த்திருக்கலாம். அதனாற்றான், சமண/புத்த சொற்றோடர்கள் திருமந்திரத்தில் விரவிக்கிடக்கின்றன.

இரா.பா



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Nov 26, 2016, 2:36:39 AM11/26/16
to mint...@googlegroups.com
மணிமேகலையின் இந்தப்பகுதி இடைச்செருகலாகலாம் என்பது எனக்குப் புதிய செய்தி. இன்னும் நான் ஆழ்ந்து படிக்கவேண்டும். படிப்பேன். நீலகேசி முந்தையது என்பதையும் நான் ஆழ்ந்துநோக்கவேண்டும். அதுபற்றி வேறு செய்திகள் இருந்தால் தனியிழையில் சொல்லுங்கள். அறிந்துகொள்வேன்.
 
நன்றி. பானுக்குமார்.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Nov 26, 2016, 4:10:59 AM11/26/16
to mintamil
உயர் திரு சச்சிதானந்தம் அய்யா வைத்துள்ள விளக்கம் சிறப்பு 
காலத்தால் இப்போது நமக்கு கிடைத்துள்ள நூக்களில் பழமையானது மணிமேகலை எனும் கருத்தில் வைத்துள்ளார் 

மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எனும் பகுதியில் வெவேறு சமயத்தினரின் கருத்து இது என விள க்குமிடத்து வரும் வரிகள் இவை 

       மணிமேகலை  சீத்தலை சாத்தனார் 
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை


'நவை அறு நன் பொருள் உரைமினோ' என 
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து 
வைதிக மார்க்கத்து அளவை வாதியை 
எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 
'வேத வியாதனும் கிருதகோடியும் 
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் 
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் 
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் 
காண்டல் கருதல் உவமம் ஆகமம் 
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-010
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு 
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் 
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் 
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் 
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் 
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் 
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன 
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று 
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து 
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி 
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது 
கிட்டிய தேசம் நாமம் சாதி                                                     (வைதிக அளவை வாதி )
குணம் கிரியையின் அறிவது ஆகும் 
கருத்து அளவு ஆவது 
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் 
தகைமை உணரும் தன்மையது ஆகும் 
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் 
பொது எனப்படுவது சாதன சாத்தியம் 
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் 
உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் 
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் 
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல் 
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் 
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி 
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி 
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 27-040
உவமம் ஆவது ஒப்புமை அளவை 
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல் 
ஆகம அளவை அறிவன் நூலால் 
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் 
அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை 
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் 
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு 
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் 
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து 
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல் 27-050
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் 
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் 
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என 
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் 
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் 
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் 
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் 
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் 
தேராது தௌிதல் கண்டு உணராமை 
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 27-060
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது 
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் 
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் 
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் 
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா 
மையல் தறியோ? மகனோ? என்றல் 
தேராது தௌிதல் செண்டு வௌியில் 
ஓராது தறியை மகன் என உணர்தல் 
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று 
அண்டலை முதலிய கண்டும் அறியாமை 27-070
இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன 
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் 
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் 
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் 
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது 
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று 
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் 
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் 
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080
தாம் பிருகற்பதி சினனே கபிலன் 
அக்கபாதன் கணாதன் சைமினி 
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் 
உவமானம் அருத்தாபத்தி அபாவம் 
இவையே இப்போது இயன்று உள அளவைகள்' 
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என 
நின்ற சைவ வாதி நேர்படுதலும் 
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று 
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் 27-090
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் 
படைத்து விளையாடும் பண்பினோனும் 
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்                                                   சைவம் 
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் 
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன்
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர்
தேவன் இட்ட முட்டை' என்றனன்                                                             பிரமவாதி 
காதல் கொண்டு கடல்வணன் புராணம் 
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்                                 வைணவன் 
'கற்பம் கை சந்தம் கால் எண் கண் 27-100
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு 
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் 
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு 
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் 
வேதியன் உரையின் விதியும் கேட்டு                                                     வேதியன் 
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற 
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என 
ஆசீவக நூல் அறிந்த புராணனை 
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 27-110                   ஆசீவகன் 
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற 
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து 
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு 
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் 
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின 
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் 
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் 
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே 
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து 27-120
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் 
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் 
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் 
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை 
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் 
ஆதி இல்லாப் பரமாணுக்கள் 
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா 
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா 
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா 
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா 27-130
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா 
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் 
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் 
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் 
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் 
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் 
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் 
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் 
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் 
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் 27-140
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே 
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் 
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் 
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் 
ஆய தொழிலை அடைந்திடமாட்டா 
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் 
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் 
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் 
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் 
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும் 27-150
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் 
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் 
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி 
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் 
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் 
அழியல் வேண்டார் அது உறற்பாலார் 
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் 
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் 
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் 
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 27-160
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் 
கருவில் பட்ட பொழுதே கலக்கும் 
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் 
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது 
மற்கலி நூலின் வகை இது' என்ன 
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு 
நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் 
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,                               
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் 
மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன் 27-170
'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் 
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் 
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் 
தீது இல் சீவனும் பரமாணுக்களும் 
நல்வினையும் தீவினையும் அவ் வினையால் 
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த 
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் நிகண்டன் 
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் 
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று 
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே 27-180
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் 
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் 
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் 
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் 
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் 
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் 
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் 
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா 
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் 
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2 27-190
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் 
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் 
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் 
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் 
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி 
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் 
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் 
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் 
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் 
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் 27-200
அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 
'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 
'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் 
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் 
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் 
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து 
மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு 
அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண்                          சாங்கியன் 
வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி 
ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் 27-210
தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு 
அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு 
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் 
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் 
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் 
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் 
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் 
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் 
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 27-220
ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த 
பூத விகாரத்தால் மலை மரம் முதல் 
ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து 
வந்த வழியே இவை சென்று அடங்கி 
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் 
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் 
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி 
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி 
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி 
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 27-230
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் 
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் 
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள 
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே 
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே 
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் 
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் 
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் 
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு 27-240
'வைசேடிக நின் வழக்கு உரை' என்ன
'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் 
சாமானியமும் விசேடமும் கூட்டமும் 
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது 
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் 
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் 
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை 
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் 
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்                                 'வைசேடிகன் 
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 27-250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை 
மாசு இல் பெருமை சிறுமை வன்மை 
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் 
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு 
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் 
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் 
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 27-260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று 
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 
'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு 
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு 
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் 
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் 
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் 
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்                                     பூத வாதி
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 27-270
அவ் அப் பூத வழி அவை பிறக்கும் 
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் 
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே 
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் 
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே 
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 
'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் 
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் 
அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும் 27-280
'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் 
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை 
ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் 
தந்தை தாயரை அனுமானத்தால் அலது 
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? 
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என 
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என் 27-289


நூ த லோ சு 
மயிலை 

2016-11-26 8:14 GMT+05:30 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Banukumar Rajendran

unread,
Nov 26, 2016, 4:15:57 AM11/26/16
to மின்தமிழ், Suba.T.
2016-11-26 8:14 GMT+05:30 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
........இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற்போனும் கலையுருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்
தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்

மணிமேகலை காதை 27, வரிகள் 86-95

ஆகிய வரிகளே சைவ சித்தாந்தக் கொள்கையைத் தமிழில் தந்த தொடக்க வரிகளாக இன்று வரை அறியப்பட்டுள.
இதற்கு முன்பும் சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கும் நூல்கள் இருந்திருக்கவேண்டும். தேடவேண்டும்.

பின்னர் காரைக்காலம்மையார் கூறியன நமக்குக் கிடைக்கின்றன.

இங்கு மறைந்த சைவதிரு.கோதண்டராமன் ஐயா அவர்கள் எழுதிய “காரைக்கால் அம்மையார்
ஓர் ஆய்வு” என்ற நூலிலிருந்து,

”---சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக்
கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்யவேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்..”

“ இறைவனுக்கு அம்மையார் வழங்கும் பெயர்கள்.

அடிகள், அழகன், அந்தணன், அட்ட மூர்த்தி, அண்டத்தான், அண்டவாணன், அண்ணல், அப்பன்,
அம்மான், அமரர் பிரான், அரவப்புயங்கன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன்,
உம்பர் கோன் தானத்தான், எந்தை, எம்மான், எரியாடி, கங்கை மணவாளன், கண்ணாளன், கண்ணுதலான்,
கறைமிடற்றான், குழகன், சங்கரன், சீராளன், செஞ்சடையான், செம்மேனிப் பேராளன், ஞானத்தான்,
நெய்யாடி, பரமன், பிரான், புன்ணியன், பெரியான், பெருமான், மனிமிடற்றான், மாயன், மைத்தமர்ந்த 
கண்டத்தான், வானத்தான், வானோர் பெருமான், விண்ணோன், விமலன், வெண்ணீற்றன், வேதியன்
முதலிய பெயர்களைப் பயன்படுத்தி அம்மையார் இறைவனைப் போற்றுகிறார்.

ஆலமரத்தடியில் அமர்ந்த நிலையைக் குறிப்பிடும் பெயரையும், பிற்காலத்தில் பெருவழக்காகிய
சிவன் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.”

”சிவன் இராவணனை மலையின் கீழ் அடர்த்து பாதத் தனி விரலால் செற்றதாக அம்மையார்
கூறுகிறார். ஆனால் கைலாயம் என்ற பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாததால்,
சிவனைக் கைலாயத்தில் உறைபவராகச் சொல்லும் வழக்கம் அம்மையார் காலத்துக்குப்
பின்னரே தோன்றியிருக்கக்கூடும்.

தேவாரக் காலத்தில் இறைவன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்க்கு அறம்
உரைத்தது கூறப்படுகிறது. இதுவும் அம்மையருக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.”

“...சமண சாக்கிய சமயங்களின் தாக்கம் அன்றைய தமிழகம் முழுவதும் 
நிறைந்திருந்தது. அவர்களது கொள்கைகளில் சிலவற்றை அக்கால மக்களில்
எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. 
அம்மையாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவரது கால்கள் வேதத்தில்
நிலைபெற்றிருந்தன. அதனால் சமணக் கருத்துகளைச் சைவத்திற்கு ஏற்றபடி மாற்றி
அமைத்துக் கொள்கிறார்.

பிறவியை ஒரு பிணி என கூறிய சமண. காமத்தைப் பெரும் பகையாக கருதியது.
சிவன் தன் மனைவியைப் பிரியாமல் இருப்பது புறச்சமயத்தாரின் விமரிசனத்துக்கு
இலக்கான பின் அதை முறியடிப்பதற்காக சிவன் காமனை எரித்தவர் என்ற ஒரு
கருத்துரு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தகைய எதிர்வினை வைணவத்தில்
ஏற்படாததையும், சமணத்தை முறியடிக்கும் பணியைச் சைவன் மட்டுமே மேற்கோண்டது
என்பதையும் நோக்குக.

சமண சாக்கியங்கள் வலியுறுத்திய கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும்
வேதத்தில் இல்லாதவை. அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முற்பிறவியில் செய்த வினையின்
பயனாகத்தான் தான் மண்ணில் பிறக்க நேர்ந்தது என்று கருதிப் பல முறை வினை என்னும்
சொல்லைப் பயன்படுத்துகிறார்..”

“சாக்கிய சமணர்கள் கூறும் அறவழிகளையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தை கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற்கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர்
என்கிறார்.”

“அரன் எதற்காகக் கபாலம் ஏந்திப் பலி திரிகிறான், எதற்காக ஈமவனத்தில் ஆடுகிறான்
என்று மற்றவர்கள் கேட்டும் கேள்விகளுக்குப் பதிலாக கூறுகிறார். பிறர்
அறியலாகாப் பெருமையனான அவனை புரிந்து கொள்ள நம்மனோர்க்கு இயலாது.
முதலில் அவனை அடையும் வழியைப் பாருங்கள், நேரில் பார்க்கும்போது இந்த
கேள்விகளை எல்லாம் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம்.”

“அப்பரரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்த குறிப்பும் தரவில்லை. தமக்கு
முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள்
காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு ஆகிய தலங்களில்
பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த
இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த
ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையை சொல்கிறாரே அன்றி
அம்மையாரை பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும்..”

இங்கு காரைக்கால் அம்மையார் அவர்களை பற்றிக் கூறும்போது ஒன்றை நினைவில்
இருத்தவேண்டும். ஜைனத்தில் வரும் தர்மதேவியட்சியின் கதையும், காரைக்கால் அம்மையார்
அவர்களின் கதையும் ஒன்றே. சமண யட்சியின் கதையை, மீள் உருவாக்கம் செய்த
கதையே காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் கூறும் சைவ சமயக் கூறுகள்
ஜைன மெய்யியல் அடிப்படையானது. காரைகால் அம்மையாரின் கதையை வைத்து சைவ
சித்தாந்தம் அன்றைய காலத்தில் இருந்தது என்று சொல்ல முடியாது.

[ஒரு கொசுறு செய்தி - தர்மதேவியின் சிலைகள்/புடைப்பு சிற்பங்கள், கி.பி.ஒன்றாம் 
நூற்றாண்டுகளிலிருந்துக் காணக்கிடைக்கின்றது.]

இரா.பா





 

--
karaikkal-ammaiyar-A4.pdf

N D Logasundaram

unread,
Nov 26, 2016, 6:28:34 AM11/26/16
to mintamil
அன்புள்ள பானுகுமார் அவர்களுக்கு 

நீலகேசி எனும் நூலில் கூறப்படும் தத்துவார்த்தங்கள் எல்லாம் தமிழகத்தில் வந்தேறிகலானவர்களால் அவர்களுக்குத்தெரிந்த ஒருசிலரிடையே முற்றிலும் தனித்த வாக்கு வாத பேதங்கள் மட்டுமே ஆகும்

இவை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுக் காட்டமட்டும்  கிடைப்பதால் நாட்டு  மக்களுக்கு எல்லாம் தெரிந்தது என ஆகாது எனபதை நன்காக மனதில் வாங்கி கொள்ளவும் 

இ ற்றவற்றை தமிழக்த்தில் உள்ள மக்களில் 99.99999 சத்தம் மக்கள் உண்மையில் இந்த பொறுக்கி எடுத்த  நான்கைந்து பண்டிதர்கள் தங்களிடையே மட்டும்  பேசிக்
கொள்வ தெல்லாம் என்னவென்றே அறியார்

எனவே முதலில்  தமிழகத்தில் நிலவியவை  அல்ல அல்ல எனவேதான் அவற்றை தமிழகத்துடன் இணைப்பதே தவறு அந்த நான்கைந்து பண்டிதர்களே அவர்கள் வாதங்கள் செய் ந்துளதோ உலகம் அல்ல

நா ன் குறிப்பது வைதீகம் வைசேடிகம்  சாங்கியம் உலோகாயுதம் ஆசீவகம் XYZ YZX zyx  மற்றும் பலபல ஒருவரின் கருத்திற்கு ஆய்வு நிலை வேறுபாடுகளுக்கு இயைந்து
 உருவாக்கிய சொற்களில் மட்டும் நிற்பவை 

இவற்றிற்கெல்லாம் கோயில் பள்ளிகள் கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்று
முப்பரிமாண ( 3D) சான்று கிடையாது  வாதம் செய்யும்போது காற்றில் மிதந்து வந்து காதில் விழுந்து உடன் காற்றில் மறைந்தவை மட்டுமே சிலபோது எழுத்தாக நிற்பவை 

எனவே உள்நாட்டு மக்களால் இன்னவென்று அவர்களால் தன வாயின் சொற்களால்
 விளக்கமுடியாத அனால் உண்மையில்  பயன்கொள்ளப்பட்ட கடவுள் கொள்கை மட்டுமே வாதத்திஇற்கு ஏற்கத்தக்கது

மற்றவை எல்லாம் ஒலிம்பிக்கில் ஓர் ஆட்டத்த்திற்கே சேர்க்க தகுதி உ டையது அல்ல என்பது போலாகும்  

நூ த லோ சு 
மயிலை 

தேனீ

unread,
Nov 27, 2016, 11:18:56 AM11/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

 

 


ஆகமச் சித்தாந்தம் என்பது சுத்த சைவத்தைக் குறிக்கும். இதற்கு மூலம் ஆகமத்தின் ஞானபாதம். பிரபஞ்ச படைப்பையும், பதி, பசு, பாச இலக்கணங்களையும் மெய்கண்ட சாத்திரத்திற்கு முன் விளக்கியது இஞ்ஞான நெறியே.

 

 

​கேள்வி: 1

 

எந்த சாத்திர நூலை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றீர்கள் என அறிய விரும்புகின்றேன். ரௌரவ ஆகமமா?

 

பதில்:

 

திருமந்திரத்தின் 5-ம் தந்திரத்தில் நால்வகைச் சைவத்தைக் விளக்கும் பொழுது சுத்த சைவம் எனும் முதல் அதிகாரத்தில்:

 

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்

நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்

 

(பொ.உ) வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே,’ என்றும்

 

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே

சொற்பதம் மேலித் துரிசற்று மேலான

தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

 

(குறிப்புரை) முதுமுனைவர் சி. அருனை வடிவேல்

 

சை சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதாயிற்று;

 

என்று விளக்குவதால் சிவாகம ஞானநெறி சித்தாந்தம் எனப் பெறப்படும்.  

 

மேலும் இவ்வதிகாரத்தின் 2-ம் பாடலில்,

 

த்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு

சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த

சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற

நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.

 

பொருள் சுருக்கம்: (மலேசியவாழ் சித்தாந்த அறிஞர் மு. சோமசுந்தரம், மலேசிய அருள் நெறித் திருக்கூட்டம்)

 

“பதி, பசு பாசத்தை அருட்கண்ணால் உணர்ந்து இருமாயையும் நீங்கி, அஞ்ஞானமும் சிற்றறிவும் நீங்கப் பெற்ற சுத்த சைவர்க்கு  அன்பு செய்யப்படும் என்றுமுள்ளதாகிய பெரும் பொருள் சிவமே.”

 

மேற்கூறிய பாடலுக்குரிய குறிப்புரையில் சுத்த சைவம்த்துவ ஞானத்தை விரும்புவது என்று முதுமுனைவர் சி. அருனை வடிவேல் விளக்குவார்.

 

இத்திருமந்திர விளக்கத்தால் சுத்த சைவம் என்பது முப்பொருள் இலக்கண விளக்கத்தையும் என்றும் உளதாகிய சிவத்தை அடையும் சாதனத்தையும் அருளிய சிவாகமத்தை தழுவி நிற்பது  எனப் பெறப்படும். சிவசிவ.

 

காரைக்கால் அம்மையார் 3-ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவர் என்பது சைவ சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் துணிபு. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் பல உண்டு. தங்களுக்கு வேண்டுமானால் 'thevaaram.org' -  யின் இறுதிப்பகுதியில் இருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் புரட்டிப் பாருங்கள்.

 

கேள்வி: 2

​எந்தக் குறிப்பிட்ட கட்டுரை என குறிப்புத்தாருங்கள். உதவும்.

 

பதில்:

 

திருமுறைகளை அருளியோர் தலைப்பின் கீழ் தருமை ஆதினம் காரைக்கால் அம்மையார் காலத்தை விளக்கிக் கூறும் பகுதி:

 

“திருஞானசம்பந்தர் தாம் அருளிய திருஆலங்காட்டுத் திருப்பதிகத்தில்,



வணங்கும் சிறுத்தொண்டர்

வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு

அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு

எம் அடிகளே (தி.1 ப.45 பா.7)

 

எனக் குறித்தருளுவதால் அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது யாப்பமைதி சொற்பொருள் அமைதி முதலியவற்றைக் கொண்டு ஆராயுங்கால் இவரது காலம் இருண்ட காலப்பகுதி எனப்படும். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.”

இதுவன்றி காரைக்கால் அம்மையாரின் காலத்தை 3-ம் நூற்றாண்டு என்று குறிப்பிடப்பட்ட கருத்துகளையும் கண்டுள்ளோம். அவசரத்திற்கு அதற்கான ஆதாரத்தைத் தேடி எடுக்க முடியவில்லை. சிவ சிவ.

 

 

கேள்வி 3:


சைவ சித்தாந்தம் என்பது எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொள்வது என வரையறை செய்யப்பட்டது எக்காலம்?
 எந்த நிறுவனம் (மடம்) இதனைச் செய்தது?

 

 

பதில்:

 

தங்களின் கேள்வியில் ஏதோ குழப்பம் உள்ளது போல் தெரிகின்றது.

 

 

சைவ சித்தாந்தம் என்பதே ஒரு தத்துவ நெறியாகும். இதில் ஆகமத்தின் ஞான நெறியும், மெய்க்கண்டார் நெறியையும் குறிப்பிட்டதால் இந்த குழப்பம் வந்தது போலும்.

 

ஆகமத்தின் ஞான நெறி சிவபெருமானால் சுத்த மாயையில் குருசிஷ்ய மார்க்கமாக பிரணவர் முதலாகி உபதேசிக்கப் பட்டு ஸ்ரீகண்ட ருத்திரருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் அவர் வழி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசிக்கப் பட்டது என ஆகமங்கள் விளக்கும். அதனால் ஆகமத்தின் ஞான நெறி குரு உபதேசமாக பெறப்பட்டதாகும்.

   

மெய்கண்டார் வழியில் வந்த மெய்கண்ட சாத்திரங்களினால் விளக்கப்படும் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் ஐம்புலன் அடங்கிய ஞானிகளின் அறிவுக்கு அந்தமாக பெறப்பட்ட உண்மையை சித்தாந்தமாக விளக்குவன. 13-ம் நூற்றாண்டில் மெய்கண்டார் சிவஞானபோதத்தை அருளிய பிறகு குருசிஷ்ய பரம்பரையில் தோன்றிய பிற சந்தான குரவர் 14-ம் நூற்றாண்டு வரை அருளிய 14 மெய்கண்ட சாத்திர நூல்களே இத்தத்துவ நெறிக்குப் பிரமாணம். இதனை அடுத்து வேத உபநிடங்களும் இத்தத்துவ நெறிக்குப் பிரமாணமாகும்.       

 

இவ்விரண்டு தத்துவ நெறிகளுமே சிவனே பரம்பொருள் என்று கொள்வன. ஆனால் இத்தத்துவ நெறிகள் தனித்தனியே இயங்குவன.

 

Two streams of clean water which runs in parallel and reaches the sea’ என்று ஆங்கிலத்தில் சொல்வது போல இவற்றின் இலக்கு ஆன்மா சிவத்தைச் சென்று சார்வதாகும்.

 

 

சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்

சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்

சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்

சைவம் சிவானந்தம் சாயுச் சியமே

(10.1492 திருமந்திரம்)

 

தமிழ் நாட்டில் தோன்றிய திருக்கைலாய மரபுச் சைவ மடங்கள் மெய்கண்ட சாத்திரங்களையேற்று அதன் வழி நடத்தப் படுவதாகும். இம்மடங்கள் 15-ம் நூற்றாண்டு முதல் குரு பரம்பைரையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றித் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்தும் மடலாயங்களின் வழி சைவ சமயத்தை வளர்த்து வருகின்றனர்.

 

ஆகம நெறியைப் பின்பற்றிச் சைவ குருமார் திருக்கோயில்களின் வழி சைவ சமயத்தை வளர்த்து வருகின்றனர். ஆக இரு தத்துவங்களுமே ஒன்றுக்கு மற்றொன்று உதவி கரம் நீட்டி சைவத்தை வளர்த்து வருகின்றன. சிவசிவ.

 

    

 

கேள்வி 4:

 

சைவ சித்தாந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுளர்கள் யாவர்?

 

பதில்: சிவன். இதனை திருமந்திரத்தின்,

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை”

 

என்ற திருமூலர் வாக்கால் அறியலாம். ஆகமங்கள் சொல்வதும் அதுவே.   

 

தங்களின் கேள்வி பன்மையில் உள்ளதால். சிவனன்றி பிற தெய்வம் சைவத்தின் கடவுளராக ஏற்றுக் கொள்ளப் படுகின்றதா என்று வினவுவதாக உள்ளது.

 

ஒரு கடவுள் வழிபாடு (monistic religion) என்று ஆகமத்தில் முதலில் தொடங்கியது பின்னர் கால மாற்றதின் தேவைகேற்ப பல தெய்வ வழிபாடாகியது சைவம். குற்றம் ஆகமத்தில் இல்லை. சைவத்தைக் கொண்டோர் அவரவர் இஷ்ட தெய்வத்தை தனிப்பெரும் கடவுளராக்க முற்பட்டதின் விளைவு இது.

 

இக்கேள்விக்குப் பதில் சொல்ல சைவத்தை இரு காலகட்டமாக பிரித்துக் கொண்டு பார்த்தல் அவசியம். மெய்கண்ட சாத்திரங்கள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் தோன்றிய 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகும் அதற்கு முந்திய நிலையும் பிரித்து அறிந்தால் சமய அரசியலில் ஏற்பட்ட பல உண்மைகள் நமக்குப் புலப்படும். அது இங்கு தேவையற்றது.

 

இருப்பினும், சிவஞான சித்தியாரில்,

 

“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்

வேதனைப்படும் பிறக்கும் இறக்கும் மேல்வினைகள் செய்யும்

ஆதலால் இவையிலாதான் அறிந்து அருள் செய்வனன்றே” (115)

 

என்று சித்தியார் சொல்லுவதால் சிவப்பரத்துவத்தை நாம் அறியலாம். இக்கேள்விக்கு இப்பதில் போதுமானது. சிவசிவ.

 

தங்களின் பிற இரண்டு கேள்விகளுக்கு ஓய்வு இருக்கும் பொழுது பதில் அளிப்போம்.

 

மின் தமிழில் இருக்கும் சைவ பெரியோர் அடியேனின் கருத்தில் குற்றம் குறை இருப்பின் பொருத்தருளுமாறு வேண்டுகிறோம். தேவையேற்படுமின் எம்மைத் திருத்தலாம். சிவ சிவ.

 

அன்புடன் கமலநாதன்.


Suba

unread,
Nov 27, 2016, 12:48:06 PM11/27/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நீண்ட விரிவான பதில். மிக்க நன்றி.
இதிலிருந்து மெய்க்கண்டார் சார்ந்த சைவ சித்தாந்த சாத்திரங்கள் 13ம் நூற்றாண்டில் வடிவம் பெறும் முன் திருமந்திரமே சைவ சமையத்திற்குறிய தத்துவ நூலாக கொள்ளலாம் எனத் தாங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கின்றேன். என் புரிதல் சரிதானா?

அடுத்து, சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது?

இன்று கைலாசபதியின் ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன்.   அதில் சைவத்தின் ஆரம்பகாலத்தோற்றத்தைத்தேட முயல்வோர் சிந்து வெளி நாகரிகம் வரை சென்று அதன் ஆரம்பகால வடிவங்களைக்குறிப்பிடுவதைப்பதிகின்றார். அதில் ..
சிவ வழிபாட்டிற்குறிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்தில் முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ அன்னை வழிபாடே எனச் சொல்கின்றார்.

சிவலிங்கம் என்னும் குறியீடு ஆண்  பெண் இரு தத்துவக்கூறுகளும் இணைந்த ஒரு வடிவம் என்ற ரீதியில் காணலாம் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் சிவபெருமான் என்ற ஆண் தெய்வத்தை இச்சமயம் ஏற்றுக்கொண்டது என்றும், முழுமுதற்கடவுளாக விளங்கிய கொற்றவை  அல்லது தாய் தெய்வத்தை அந்த சிவபெருமானின் துணையாக-மனைவியாக ஆக்கியதும், பின்னர் முருகனை மகனாக ஆக்கியது, பின்னர் பிள்ளையாரை இன்னொரு மகனாக ஆக்கி இணைத்துக் கொண்டது.. பின்னர் கங்கை, புராணக்கதைகள் என கதைகளையெல்லாம் இணைத்துக் கொண்டது..  எனப் பெருகிய கருத்தையும்.. புராணக்கதைகள் சொன்ன நிஜத்துக்கு ஒவ்வாத விசயங்களையும் இணைத்துக் கொண்டதையும்...  அடிப்படை சைவத்தில் அமைந்த ஒரு சலனமாகவே நான் காண்கின்றேன். 

சுபா

Parvathy ramanathan

unread,
Nov 27, 2016, 8:11:41 PM11/27/16
to mint...@googlegroups.com
வணக்கம். திரு தேனீ அவர்களே

நமக்காகவே நாம் போட்டுக் கொள்ளும் வேலி அல்லது மற்றவர்கள் நம்மை அடைக்கப் போடும் வேலி என்று இரு வகை உண்டு.
நம் இந்திய சமுதாயம் தன்னைச்சுற்றிப் பல வட்டங்க்களைப் போட்டுக் கொண்டு அதில் வாழவே விரும்புகிறது என்று உங்க்கள் மடல்களிலிருந்து புரிந்து கொன்டேன்.

கீழே என் கருத்து:- ( ஒரு சாதாரண பெண்ணின் ) நான் அரசியல் வாதியுமல்ல , மத வாதியுமல்ல..

1. சிவன் முழுமுதற்கடவுள் என்றால் அவனை வணங்க்குபவர் எல்லாரும் அவன் குழந்தைகளே ஆவர்.

2. அவனிடமிருந்து கிளைத்தது தான் எல்லாம். தத்துவங்களெல்லாம் மனிதர்கள் சொன்னதுதான்.

எல்லா மத குருமார்களும் அந்தந்த காலக் கட்டத்தில் கேள்விகேட்கப் பட்டவர்கள் தான், கிண்டலுக்கும் ஆளானவர்கள் தான்.
(உலகில் தோன்றிய அனைத்து மதங்களும்/ குமார்களும் அடங்குவர்).

3.யார் பெரியவன் என்று நிறுவ  முயலும் போது வந்த சண்டையில் தான் வல்லவன் மிஞ்சினான்,

4. சிவனுக்கும் விஷ்னுவுக்கும் சண்டை மூட்டிவிட்ட வர்களும் உண்டு.

5. ஆனால் தற்சமயம் அறிவுத் தெளிவுள்ளவர்கள் அரநும் சிவநும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்று புரிந்து கொண்டு , அனைவரையும் ஹிந்து என்ற பெயரால் ஒருங்கிணைக்க முயலு கிறார்கள்.

6. இத்தனை ஆண்டுகள் மலேசியாவில் இருந்து வாழ்ந்து கொண்டு , பலகடவுளர் வழிபாட்டை , சனாதன தர்ம்மமாகப் பின்பற்றும் மக்களை

ஒருகுடைக்கீழ் கொன்டுவர உங்கள் புலமையைப் பயன் படுத்தினால் மலேசிய இந்தியர்களுக்கு நன்மை விளையும்.

பார்வதி

 







28 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:48 அன்று, Suba <ksuba...@gmail.com> எழுதியது:

Parvathy ramanathan

unread,
Nov 27, 2016, 8:15:49 PM11/27/16
to mint...@googlegroups.com, Thenee MK
வணக்கம். திரு தேனீ அவர்களே

நமக்காகவே நாம் போட்டுக் கொள்ளும் வேலி அல்லது மற்றவர்கள் நம்மை அடைக்கப் போடும் வேலி என்று இரு வகை உண்டு.
நம் இந்திய சமுதாயம் தன்னைச்சுற்றிப் பல வட்டங்க்களைப் போட்டுக் கொண்டு அதில் வாழவே விரும்புகிறது என்று உங்கள் மடல்களிலிருந்து புரிந்து கொன்டேன்.

கீழே என் கருத்து:- ( ஒரு சாதாரண பெண்ணின் ) நான் அரசியல் வாதியுமல்ல , மத வாதியுமல்ல..

1. சிவன் முழுமுதற்கடவுள் என்றால் அவனை வணங்க்குபவர் எல்லாரும் அவன் குழந்தைகளே ஆவர்.

2. அவனிடமிருந்து கிளைத்தது தான் எல்லாம். தத்துவங்களெல்லாம் மனிதர்கள் சொன்னதுதான்.

எல்லா மத குருமார்களும் அந்தந்த காலக் கட்டத்தில் கேள்விகேட்கப் பட்டவர்கள் தான், கிண்டலுக்கும் ஆளானவர்கள் தான்.
(உலகில் தோன்றிய அனைத்து மதங்களும்/ குமார்களும் அடங்குவர்).


3.யார் பெரியவன் என்று நிறுவ  முயலும் போது வந்த சண்டையில் தான் வல்லவன் மிஞ்சினான்,

4. சிவனுக்கும் விஷ்னுவுக்கும் சண்டை மூட்டிவிட்ட வர்களும் உண்டு.

5. ஆனால் தற்சமயம் அறிவுத் தெளிவுள்ளவர்கள் அரநும் சிவநும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்று புரிந்து கொண்டு , அனைவரையும் ஹிந்து என்ற பெயரால் ஒருங்கிணைக்க முயலு கிறார்கள்.
6. இத்தனை ஆண்டுகள் மலேசியாவில் இருந்து வாழ்ந்து கொண்டு , பலகடவுளர் வழிபாட்டை , சனாதன தர்ம்மமாகப் பின்பற்றும் மக்களை

ஒருகுடைக்கீழ் கொண்டுவர உங்கள் புலமையைப் பயன் படுத்தினால் மலேசிய இந்தியர்களுக்கு நன்மை விளையும்.

பார்வதி

28 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:11 அன்று, Parvathy ramanathan <praman...@gmail.com> எழுதியது:

Thenee MK

unread,
Nov 27, 2016, 9:29:10 PM11/27/16
to mint...@googlegroups.com
வணக்கம் முனைவர் சுபா,

நம்மிடம் உள்ள குறை உலகியலை அறிந்த அளவுக்கு அருளியலை நாம் அறியவில்லை. ஒரு சமயத்தில் நின்று அச்சமய நெறியை ஆழக் கற்றுத் தெளிந்து அதன் வழி சிவம் எனும் இலக்கை நோக்கி நம் ஆன்மிகப் பயனத்தைத் துவங்கினால் எம்பெருமான் திருவருளால் நமக்கு ஆன்ம பக்குவம் கிட்டும்.

இன்றைய 'திருமந்திரம்' சைவ சமயத்திற்குரிய தத்துவ நூலாக சைவ அறிஞர் ஏற்றுக் கொள்வதில்லை காரணம் 7-ம் நூற்றாண்டுக்கு முன் 
அந்நூல் தமிழறிந்தோரிடையே கொண்டிருந்த வலிமையின் காரணமாக அதில் பல்வேறு நெறிகள் பிற சமயத்தாராலும், பிற நெறியினராலும் இடைச்செருகலாக சேர்க்கப் பட்டுள்ளன. அவரவர் சுயநலம் கருதி செய்த இடைச் செருகலினால் திருமந்திரம் தமிழாகமம் என்ற தன்மையை இழந்து விட்டது. இருப்பினும் அந்நூலின் தொன்மையயும், சைவத்திற்கு அதன் பயனையும் கருதி மேலும் அது சாத்திரமும் தோத்திரமுமாக உள்ளதால் சைவ சான்றோர் அதனை 10-ம் திருமுறையாக சேர்த்தனர்.


//அடுத்து, சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது? //

இறைவன் சொரூபத்தில் ஒரு நாமம் ஓர் உருவம் இலாதவன். தடத்த திருமேனி கொள்ளும் பொழுது அருவம், அருவுருவம், உருவம் எனும் மூன்று நிலைகளில் தோற்றம் அளிக்கிறான். சிவலிங்கத் திருமேனி அருவுருவம். வேற்றொரு தெய்வம் இவ்வகை அருவுருவத் திருமேனி கொண்டதில்லை. அதன் காரணமாகவே சிவன் ஆதியும் அந்தமும் இலாதவன் எனப் புலப்படுத்துவதே பிரமனும் திருமாலும் அடி முடி தேடிய கதை.


//அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது?//

இக்கேள்வியின் பொருள் எமக்குப் புரியவில்லை. கேள்வியை விளக்கினால் பதில் அளிக்க முடியும்.

சிவன் ஈரிலாதவன். அதற்கு ஆதாரம் தேவாரத் திருமுறை. அவன் ஒருவனே அவனன்றி பிற கடவுள் இல்லை என்பதே சைவத்தின் தத்துவார்த்தம். அவனுக்கு ஓர் உவமை காட்ட இயலாது. அதன் காரணமாக 'ஒருவன் எனும் ஒருவனைக் காண்' என்று தமிழ் இலக்கணப் படி சிவனை 'அவன்' என்று கூறுவது உண்டு. 

இதுவன்றி 'நான் அவனாகின்றேன்' என்ற வேதாந்த கோட்பாட்டை குறித்தீர்களானால், அக்கோட்பாட்டிற்கு சித்தாந்த சைவத்தில் இடமில்லை. இதற்கு காரணம் பரான்மாவும், சீவான்மாவும் ஒரு பொருளன்று என்பது சித்தாந்த சைவ கோட்பாடு. 

ஆகமும், மெய்கண்டார் நெறியும் முப்பொருள் சொரூப இலக்கணத்தை விளக்கிக் கூறுவதன் வழி இதனை அறியலாம். திருஞானசம்பந்த பிள்ளையும் 'நான் அவனாகிறேன்' என்ற மாயாவாதத்தையும், ஏகான்மவாதத்தையும் ஒருங்கே தனது மாலை மாற்று பதிகத்தில் மறுத்துள்ளார்.

தனது மாலை மாற்றுப் பதிகத்தில் (தி.3:117;1)   'யாமாமாநீ யாமாமா'  (பொருள்: ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா?) என்று கேள்வி கேட்டமைத்ததால் அவர் மாயாவாதத்தையும், ஏகான்மவாதத்தை மறுத்தது புலனாகும். அவர் மறுத்தார் என்பதை விட ஆகமத்தின் ஞான நெறி அதனை மறுத்தது என்பதும் அவர் அதனை தமது மாலை மாற்று பதிகத்தில் அப்பாடலின் வழி சித்தாந்தத்தை உணர்த்தினார் என்பதே உண்மை. ஆகமத்தில் சொல்லாததை சம்பந்தர் சொல்லவில்லை. ஆகமத்தில் சொன்னததைத்தான் சம்பந்தர் சொன்னார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


தங்களின் இதர சந்தேகங்களுக்கு இரைப் பணி முடிந்ததும் பதில் சொல்வோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3-QuZTZUxfc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 27, 2016, 9:53:08 PM11/27/16
to மின்தமிழ்
On Sunday, November 27, 2016 at 6:29:10 PM UTC-8, தேனீ wrote:

On Sunday, November 27, 2016 at 9:48:06 AM UTC-8, Suba.T. wrote:
//சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது? //

 
திரு.  கமலநாதன்  ஐயா, 

"சிவம்" என்னும் இறையை  ஆண்பாலாக்கி "அவன்" என்று கருதும் முறை ஏற்பட்டது  எதனால்?

(இதே கேள்விதான்  சுபாவிற்கும் தோன்றியதா எனத் தெரியவில்லை)


..... தேமொழி 

Maravanpulavu K. Sachithananthan

unread,
Nov 27, 2016, 10:30:33 PM11/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
சலனங்கள் இயற்கை.

உயிர்கள் முழுமையை நோக்கிப் பயணிக்கக் குறைகள் படிப்படியாக அகல வேண்டும்.

இந்தப் பயணத்தில் உச்சிக்கு வரக்கூடியன குறைகளை நன்றாகக் குறைத்துத் தெளிவன.
தெளிந்த நிலை ஞானம்.

ஞானம் அல்லது தெளிந்த நிலை தலைகீழான பட்டைக்கூம்பபு (பிரமிடு).

சில உயிர்களுக்குப் புள்ளி அளவு
சில உயிர்களுக்கு நிறை அளவு.

புள்ளி அளவிலிருந்து நிறை அளவிற்கு ஞானத்தை வளர்க்க, குறைகளைக் குறைத்துவர, தெளிவூட்டல் தேவை.
காலத்துக்குக் காலம் இத்தெளிவூட்டலுக்குரிய தளங்கள் வேறுவேறாகும்.

அத்தளங்களுக்கேற்ப அவ்வக்காலங்களில் எழுவன இலக்கியங்கள்.
அக்காலத்துக்கு ஏற்றதாக எழுந்தாலும் அவற்றைப் பேணியதால் அக்காலத்துக்குப் பின்னும் அத்தகையோருக்கு அவை பயன்படுவன.

காப்பியங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள், நீதிநூல்கள் யாவும் காலத்துக்கேற்ப அமைந்து காலத்தைக் கடந்தும் பயன்படுவன.

பட்டைக் கூம்பின் உயரத்திற்குச் செல்வோர் தாம் பயனுற்றவை பட்டைக் கூம்பின் கீழுள்ளவருக்கும் பயன்பட விட்டுச் செல்வர்.

எனவே சலனங்கள் இயற்கை. 
சலனங்களுக்கு அப்பால் தெளிவும் தேர்தலும் இயற்கை.
இவை தொடர்ச்சியானவை. 

முழுமையைப் போல (இறை)
உயிர்களைப் போல (உயிர்)
குறைக்கான கராணிகளைப் போல (மலம்)

அவற்றைச் சார்ந்ததால்
தொடக்கமும் முடிவும் அற்றவை.

On Friday, 25 November 2016 18:04:51 UTC+5:30, Suba.T. wrote:

Suba

unread,
Nov 28, 2016, 12:13:08 AM11/28/16
to mint...@googlegroups.com

On Nov 28, 2016 3:53 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> On Sunday, November 27, 2016 at 6:29:10 PM UTC-8, தேனீ wrote:
>
>> On Sunday, November 27, 2016 at 9:48:06 AM UTC-8, Suba.T. wrote:
>> //சிவமே சைவத்தின் மூலக்கடவுள் எனும் போது சிவலிங்கம் சைவத்தின்முக்கிய தெய்வ வடிவமாகின்றது.
>> அப்படியிருக்க சிவம் என்ற தத்துவத்தை அவன் என மாற்றிய போக்கினை எப்படி சைவம் விளக்குகின்றது? //
>
>
>  
> திரு.  கமலநாதன்  ஐயா, 
>
> "சிவம்" என்னும் இறையை  ஆண்பாலாக்கி "அவன்" என்று கருதும் முறை ஏற்பட்டது  எதனால்?
>
> (இதே கேள்விதான்  சுபாவிற்கும் தோன்றியதா எனத் தெரியவில்லை)
>

ஆமாம்
இதுதான் என் கேள்வி.
சுபா

>
> ..... தேமொழி 
>
>
>
>>
>> இக்கேள்வியின் பொருள் எமக்குப் புரியவில்லை. கேள்வியை விளக்கினால் பதில் அளிக்க முடியும்.
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 28, 2016, 4:32:59 AM11/28/16
to mint...@googlegroups.com
இது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லையம்மா.

"சிவன்" ஆண்பால் என்பது நாமாக கற்பனை செய்து கொண்டது. "அன்" எனும் விகுதி ஆண்பாலுக்குரியது எனும் இலக்கண விதியால் இவ்வாறு பொருள் கொண்டால் அது நமது அறியாமையே.

வேதத்தில் 'சிவன்' எனும் சொல்லுக்கு வடமொழியில் 'மங்களம்' என பொருளாகும். மங்களம் என்றால் புனிதமானது. புனிதம் என்றாலே அது குற்றமற்றது எனப் பொருள்படும்.

'சிவன்'  எனும் சொல்லுக்குத் தமிழில் 'செம்பொருள்' எனப் பொருள் படும். செம்பொருள் என்றால் குற்றமற்ற பொருள் என்பதாகும். சிவன் மும்மலங்கள் அற்றவன் என்பது இதன் பொருளாகும்.   

ஆதலின், சிவன் என்பதை ஆண்பால் என கொள்ளாமல் சிவத்தின் பண்பை அல்லது தன்மையைக் குறிக்கும் சொல்லென்று கொள்வதே சமய நெறிகளின் அடிப்படையில் சரியாகும். இதுதான் ஞானத்தெளிவு என்பது. 

அவ்வாராகின், சிவன் சத்தி என்று நாம் ஆணாகவும் பெண்ணாகவும் திருமேனி வடிவத்தில் காண்பதேன் என்ற கேள்வி எழும்!

இறைவன் என்பது ஒரு பொருள். அந்த பொருளின் தன்மையை 'ஆற்றல்' என்று கூறும் சித்தாந்தம். ('Matter and Energy'). அதுவே வடமொழியில் சத்தி என்று கூறுவர். இது நெருப்பும் அதன் சூடும் போல என்று சித்தாந்ததில் ஒரு உவமையைக் கொண்டு விளக்குவார். நெருப்பின் தன்மை சூடு. சூடில்லாமல் நெருப்பிருக்காது. சிவம் எனும் ஒரு பொருள் இல்லாமல் அதன் ஆற்றல் வெளிப்படாது.  அதனால் சிவன் இல்லாமல் அதன் சத்தி (ஆற்றல்) இல்லை எனப் பெறப்படும்.   

உயிர் ஆணவமல மறைப்பால் ஏற்படும் அறியாமையால் படும் துன்பத்தை நீக்க அன்புள்ளம் கொண்டு, 'சிவம்' எனும் உருவமற்ற/செயலற்ற சொரூப நிலையில் இருந்து தடத்த நிலைக்கு வெளிப்படும் பொழுதே 'சிவன்' என்று சொல்கிறோம். இவ்வாறு சிவம் எனும் பொருளிலிருந்து வெளிப்படுவது  அதன் ஆற்றலே (சத்தி). இதனை சித்தாந்தத்தில் குணியும் குணமும் என்பர். ஒரு பொருளும் அதன் தன்மையும் என்பதாகும். குணியும் குணமும் என்றும் பிரியாது என்பதால் சிவமும் அதன் ஆற்றலாகிய சத்தியும் என்றும் பிரியாதது எனப் பொருள்படும்.   

இதன் காரணமாகவே சிவனுக்கு மாதொரு பாகனார் எனும் காரணப் பெயரும் உண்டு. அதானால் நாம் சிவன் என்று சொல்லும் பொழுதே சத்தியும் அதனுள் அடங்கும் என்பதை அறிவோமாக. இது தத்துவார்த்த விளக்கம். சிவனையும் சத்தியும் இரு கூறுகளாக கொள்ளும் கோட்பாடு சித்தாந்த சைவத்தில் இல்லை. அதன் காரணமாகவே சிவாலயத்தில் அவன் திருவருளாகிய அம்மைக்கு ஒரு சன்னிதி அமைத்து வழிபடுவது நமது சைவ மரபு. 

வேத நெறியிலும், சாக்தத்திலும் ஒரு பொருளையும் அதன் ஆற்றலையும் இரு வெவ்வேறு கூறுகளாக காணும் கோட்பாடு உண்டு.

அடியாருக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் கொண்ட தூயத் திருமேனிகள் 25 என்பதாக சிவாகமங்கள் விளக்கும். தூய திருமேனி என்பது அவன் திருவருளைக் கொண்டு பெரும் ஒளி வடிவமானத் திருமேனி. அது அத்திருவளிலேயே ஒடுங்கும். நம் தூல உடலைப் போன்று மாயாக்காரணத்தினால் (தோன்றி நின்று அழியும் தன்மையுடைய பொருள்) ஆனது அல்ல. அதனால் சித்தாந்த சைவத்தில் சிவனுக்கு 'அவதார கோட்பாடு' கிடையாது. சிவன் பிறப்பதும் இல்லை, எவ்வொரு அவதாரம் எடுப்பதுமில்லை.

சித்தாந்த சைவத்தைப் புரிந்து கொண்டு சைவனாக வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

அன்புடன் கமலநாதன்.

 

    



 

--

Oru Arizonan

unread,
Nov 28, 2016, 11:56:41 AM11/28/16
to mintamil
உயர்திருவாளர்கள் மறவன்புலவு ஐயா அவர்களும், கமலநாதன் அவர்களும், தெளிவாக எழுதியுள்ளார்கள்.
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Banukumar Rajendran

unread,
Nov 28, 2016, 10:57:25 PM11/28/16
to மின்தமிழ்
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. தாங்கள் சொல்லும் சில கருத்துக்களை மனதில்
கொள்கிறேன்.  நீலகேசியைப் பற்றி மற்றொரு இழையில் பேசலாம் ஐயா!

நன்றி!

இரா.பா

Thenee MK

unread,
Dec 2, 2016, 1:12:10 AM12/2/16
to mint...@googlegroups.com

திரு. தேவ், ‘மனு தர்மம் இந்து மத நூலா?’ என்ற இழையில் பதிவு செய்த கருத்துக்கு இது பதிலாகும்.

 

அவர் கண்ணில் பட்ட கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்து எம் பதிலை எதிர்பார்க்கின்றார். அவர் பதிவு செய்த கட்டுரையின் பின்புலம் என்னவென்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் பதிவிட்டக் கருத்துக்குப் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.


அவர் கேள்வி:

 

·         சுமிருதியைப் புடை நூலாக ஏற்றுச் சைவத்தினுள் புகுத்தியது சைவ நூலான சிவஞான சித்தியார்செய்த சூழ்ச்சியா?

 

 

மேற்கூறிய கேள்விக்குப் பதில் அளிக்கும் முன் அவர் பதிவு செய்த திருப்பனந்தாள் காசி மடத்தின் கருத்துக்கு மறுமொழியை சில தொடர் கட்டுரைகளாக பதிவிட்டு அவர் கேள்விக்குப் பின் பதில் சொல்லுவோம்.


வேத மந்திரங்களும், ஆகம மந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன. அதனால் அவை மந்திரங்கள்என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் அருள்பழுத்த கனிகள்கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத் தருபவை. ஆகையால் இவை பெருமந்திரங்கள் என்னும் உயர்தரம் உடையன“


விளக்கம்: பகுதி 1

 

 

“வேதம் யஞ்ஞாதி (வேள்வி) கருமங்களைச் செய்து புண்ணிய உலகங்களை அடைய விரும்பும் உலகர் பொருட்டும்;

 

ஆகமம் சிவசாலோக்கிய சிவ சாமீப்ய சிவசாரூப்ய சிவ சாயுச்சியங்களை அடைய விரும்புஞ் சத்திநிபாத முடையார் பொருட்டும் அருளிச் செய்யப்பட்டனஎன்று கூறுவார் காமிகாமத்தின் கிரியாபாத தமிழ் மொழி பெயர்ப்புக்கு முன்னுரை வழங்கிய ஈசான தேவன் பெ.ஏ. கபாலி. இவர் ஆகமங்களையும் வேதத்தையும் கற்றுணர்ந்தவர் என்பது அம்முன்னுரையைப் படித்தோருக்குப் புரியும். மேற்கூறிய கருத்தை ஒட்டியே பிற சைவ சமய அறிஞரும் வேதத்திற்கும் ஆகமத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறுவார்.

 

வேதம் உலகியல் இன்பத்தை அதிகமாகவும் அருளியலைக் குறைத்து வேண்டி வேள்ளி வழிபாடு செய்யும் நெறி கொண்டது. தேவாதிதேவர்களுக்கு அவிர்பாகத்தைக் கொடுத்து ஆசிகள் பெற்று உலகில் (இம்மையில்) இன்புற வாழ வேண்டுவர். இதனை யசூர் வேதத்தின் கருமகாண்டத்தில் உள்ள மந்திரங்களின் பொருள் அறிந்தோர் அறிவர்.

 

அவ்வகை வேள்வி வழிபாட்டின்படி பெறும் புண்ணியத்திற்கு கிட்டுவது புண்ணிய உலகங்கள். இவை சிவலோகத்திற்கும் கீழுள்ள உலகங்களென்று ஆகமங்கள் விளக்கும்.

 

ஆகமம் அருளியலை அதிகமாகவும் உலகியலைக் குறைத்தும் கூறும். சிவாகம மந்திரங்கள் ஓதி சைவ கிரியைகளைப் பின்பற்றி, சிவாகமச் சாத்திர தெளிவு பெற்று ஆன்மா பக்குவமடைந்து  சிவலோகம் முதல் சிவாயுச்சியமாகிய உயரிய முத்தி நிலையை அடைய வழிகோலுவது ஆகமம்.

 

ஆகம முறைப்படி சிவத்தொண்டு செய்வோர், சைவ சமியியாக  கோயிற்தொண்டும், குரு, அடியார் தொண்டுமாகிய சரியையில் நிற்பார்.  புத்திரமார்க்கத்தில் சைவ கிரியையின் வழி புறவழிபாடும், யோகத்தின் வழி அகவழிபாடும் முறைப்படி செய்து, அட்டமா சித்திகள் கைவரப் பெற்று ஆன்ம தத்துவ சுத்திகளடைந்து இறைவன் திருவருளால் எம்பெருமான் திருப்பாதம் சாரும் சாதனத்தைக் கூறுவது ஆகமத்தின் சரியை, கிரியை, யோக பாதமாகும்.

 

ஆங்கே முறைப்படி விஷேட சிவதீக்கைப் பெற்றோரே சைவ கிரியைகளை மேற்கொள்ள முடியும். ஆகையால் ஆகமம் சைவ  கிரியையாளர் முத்தி பெறும் சாதனத்தைக் கூறும்.. இக்கிரியைகளால் சத்திநிபாதப் பயன் பெறுவோர் சைவ கிரியையாளர்களே அன்றி பக்தர் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் காரணம் பொதுவாக பக்தர் என்போர் ஆகமமுறைப்படி சிவதீக்கைப் பெற்று சைவ கிரியைகள் செய்ய தகுதி உடையோர் அல்லர்.

 

ஆகம முறைப்படி, சிவதீக்கைப் பெற்று சைவ கிரியைகளை மேற்கொள்ளாதவருக்கு அபர முத்திக்கும், சாயுச்சிய முத்திக்கும் வழி ஆகமத்தில் சொல்லப்படவில்லையே! அப்படியானால் பொது சைவர் நிலையென்ன? பொதுச்  சைவர் எனப்படுவது சிவ தீக்கைப் பெறாமலும் அல்லது சமய தீக்கை மட்டும் பெற்று சைவ கிரியைகள் செய்யாமல் சைவ நெறிகளையும், அனுட்டானங்களையும், திருமுறை காட்டும் பக்தி நெறியையும் பின்பற்றி வாழுவோர். இப்படி இருதிறப் பட்ட நிலைகள் ஏற்பட்டதால் பொதுச் சைவருக்கும் முத்திக்கு வழி காட்டும் ஒரு முதல் நூல் வேண்டுமல்லவா?

 

ஆன்மாக்கள் பலதிறப்பட்டு உள்ளதால் அவரவர் அறிவுத் தெளிவுக்கு ஏற்றவாறு பல நெறிகளை இறைவன் அருளினான். அதனால்தான் சமய நெறிகள் பலவாயின என்று சைவம் கூறும். அவ்வாறே வேதத்ததின் ஞானகாண்டமும் கூறும். இப்படி சமய நெறிகள் பலவாக இறைவனால் அருளப்பெற்றது என்பதில் வேதமும் ஆகமுமே முதல் நூலாகும் என்பதை ஆகமம் ஏற்றுக் கொண்டது.

 

வேதம் சுயம்பு என்று வேதாந்திகள் கூறுவதால் இறைவன் சிவபெருமான் வேதத்தை அருளினான் என்று இதுநாள் வரை அவர் பொதுவாகவும் ஒருமனதாகும் ஏற்றுக் கொண்டாரில்லை.

 

அனைத்தும் அறிந்த முற்றறிவாளன் சிவபெருமான். ஆன்மாக்களுக்கு எது எவ்வேளையில் தேவை என்பதையறிந்து அது அவரவருக்கு அவ்வவ்வேளையில் கிட்டுமாறு அருள்புரிபவன் சிவபெருமான்.

 

அவ்வாறே பொதுச்சைவர் நிலையறிந்து எம்பெருமான் சுத்தாத்துவித சைவ சித்தாந்த நெறியை ஞானநெறியில் உயர்ந்தோராகிய சந்தானகுரவர் வழி அருளினான். இதனை,

 

வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்

வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்.

 

என்று சித்தியார் கூறியதால் அறிவோம். இதன் காரணமாக சித்தாந்தத்தை அருளிய ஆகமத்திற்கு பிறகு அந்நெறியை விளக்கிச் சொல்ல சிவஞானிகளால் அருளப்பெற்றதே மெய்கண்ட சாத்திரங்கள். இதனை,

 

வேதாந்த தெளிவாம் சைவ சித்தாந்த திறன் இங்கு தெரிக்க லுற்றாம்

 

மென்று உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசத்தில் கூறியுள்ளமையால் நன்கு விளங்கும்.

 

வேதாந்தத்தில் அப்படியென்ன குறை? ஆகமச் சித்தாந்தத்தால் ஏற்பட்ட விளைவு என்ன? இவ்விரண்டையும் தெளிவிக்க மெய்கண்ட சாத்திரங்கள் எழ வேண்டிய அவசியமென்ன? இதற்கான காரணத்தை விளக்கினால் திரு தேவ் அவர்களின் கேள்விக்குப் பதில் இலகுவாக கிட்டும்.

 

அடுத்தடுத்து வரும் கருத்துப் பதிவுகளில் இதனைக் காண்போம். தொடரும். சிவசிவ.

 

அன்புடன் கமலநாதன்


 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3-QuZTZUxfc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Dec 4, 2016, 9:41:46 AM12/4/16
to mint...@googlegroups.com

வேத மந்திரங்களும், ஆகம மந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன. 

அதனால் அவை மந்திரங்கள்என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் அருள்பழுத்த கனிகள்கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத் தருபவை. ஆகையால் இவை பெருமந்திரங்கள் என்னும் உயர்தரம் உடையன“

 

விளக்கம்: பகுதி 2

 

 

கோயிலில் பரார்த்த பூசை உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் திருவருள் வேண்டி செய்யப் படுவதாகும். சைவ கோயில்களில் ஏற்பட்ட வேதநெறி கலப்பினால் இந்நிலை இன்று இல்லை. இன்று கோயிலில் செய்யப்படும் பெரும்பாலான கிரியைகள் உலகியல் இன்பத்தை வேண்டி செய்யப்படும் காமிய வழிபாடாகி விட்டது. பக்த பதர்களை இவ்வகை காமிய வழிபாட்டிலேயே நிலை நிறுத்தி வைத்தால் அவர் அருளியலை அறிய மாட்டார். அதனால் மேலோர் மேலோராகவே இருக்கவும் கீழோர் கீழோராகவே இருக்கவும் இடைத் தரகர்களால் கோயில் பரார்த்த வழிபாட்டின் நோக்கம் இன்று மடைமாற்றம் செய்யப் பட்டுவிட்டது.

 

இன்றைய சைவக் கிரியைகளால் பக்தர் சத்திநிபாதமடைய வழியில்லையானால் அக்கிரியைகளில் கலந்து கொள்வதால் பெறும் பயன் யாது? பண நட்டம்!.

 

அதன் காரணமாகவே, ஆகம மந்திரங்களை ஓதுவித்து சைவ கிரியையாளர் பெறும் அதே சத்திநிபாத பயனைத் தரவல்ல தேவாரத் திருமுறை, திருவாசகம், திருமந்திரமோதி தமிழ் சைவர் ஆத்மார்த்த வழிப்பாட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை உண்மை சரியை, கிரியை, யோக பக்தியின் வழி ஆன்மாக்கள் சிவஞானம்பெற்று முத்திக்கு வழிகாட்டுவன. இது பணச் செலவில்லாத வழிபாடு. இதில் இடைத்தரகர் இல்லை. எம்பெருமான் கருணை வேண்டி அன்பால் உருகி திருமுறைப் பாடி நீரும் பூவும் கொண்டு வழிபட்டு திருப்பாதம் அடைய எளிமையான சாதனத்தை நால்வர் பெருமக்களோடு திருமூலரும் சேர்ந்து வழிகாட்டினார்.  

 

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்

போக மும்திரு வும்புணர்ப் பானைப்

பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்தபி ரானை…”     (தி.7:59:1)

 

பொ.உ: தருமை ஆதினம்

 

எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய,”

 

என்று சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது, எழுதுமறையாகிய தமிழ் வேதத்தால் எம்பெருமானை வாழ்த்திப் பாட உலகின்பத்தையும் வீடுபேற்றையும் ஒருங்கே பெறவியலும் என்பதாகும். அதன் அடிப்படையில்,   

 

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் (சிவ.புரா)

 

என்று மணிவாசகர் சொல்லியது பொருளறிந்து ஓதுவாரே சிவபுரம் சென்று சிவனடிக்கீழ் வீற்றிருக்கும் பயனைப் பெறுவர் என்பதாகும். புரியாத மொழியில் அறியாது போகும் மந்திரத்தால் யாருக்கு என்ன இலாபம்? நாம் அறிந்த மொழியில் சொல்லியப் பாட்டின் பொருள் உணர்ந்து பாடுவதால் கிட்டுவது. இறையருள். புரியாத மொழியில் உத்தரானம் செய்யும் மந்திரத்தால் ஆன்மாக்கள் சிவபுரம் செல்ல இயலாது. இவ்வாறு உணர்த்தியதும் மணிவாசகர்தான்.

 

அதனால் வேத வேள்வியும் ஆகம முறைப்படி செய்யப்படும் சைவ கிரியைகளின் வழி  நிற்காது போனாலும், நால்வர் காட்டிய நல்வழியில் சலம்போடு பூவும் கொண்டு அருச்சைனைப் பாட்டாகிய தமிழ்வேதத்தை உள்ளம் உருக பாடி வேண்டினால் பொன்னும் மெய்பொருளும் அருளுவான் எம்பெருமான். வழிதான் வேறே தவிர இறுதிப் பயன் ஒன்றே. இதனை திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புகள் மெய்ப்பிக்கும். இவ்வாறு சொல்லுவதால் யாம் வேதாகமத்துக் கிரியைகளை மறுக்கிறோம் என்றோ அல்லது புறக்கணிக்கிறோம் என்றோ பொருளாகாது. அவ்வழி கிரியைகள் பின்பற்றாது திருமுறைகள் காட்டும் எளிய கிரியைகளை பாமரர் முதல் அனைவரும் பின்பற்றி பொன்னும் மெய்ப்பொருளும் பெறலாம் என்பதே நால்வர் காட்டிய நல்வழி என்றே பொருளாகும்.      .  .

 

நால்வர் பாடிய தமிழ்வேதத்திற்கு சைவ கோயிலில் இன்று கொடுக்கப் படும் மரியாதை எவ்விதம் உள்ளது?

 

திருமுறை பெருமந்திரங்கள் என்று உதட்டளவில் புகழாரம் சூட்டுவதால் மட்டும் அவற்றின் மான்பு உயர்ந்து விடப் போவதில்லை. அப் பெருமந்திரதிற்கு கோயில் பரார்த்த பூசையில் கொடுக்கப் படும் மரியாதையைச் செவி மடுத்துக் கேளுங்கள்.

 

தமிழர் வழிபடும் சிவாலயங்களில் தமிழில் பூசை செய்வதற்கு ஆகமத்தில் இடமில்லை காரணம் மந்திரங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் உள்ளன. பழக்கத்தின் காரணமாக சிவாலய அர்ச்சகர் அம்மந்திரங்களைச் சமஸ்கிரதத்தில் உள்ளவாறே உச்சரித்துப் பரார்த்தப்  பூசை செய்வார். இன்று பல சிவாலயங்களில் சிவ அஷ்டோத்திரமும், நாமவளிகளுமே உத்தரானம் செய்து அருச்சனை செய்யப்படுகின்றது. அம்மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அருச்சனை செய்தால் என்னவென்று  கேட்போமானால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அருச்சகரே அது தெய்வ குற்றமாகி விடும் என்று எங்களுக்குப் பாடம் போதிப்பார். சிவாகமத்தில் உள்ள மந்திரங்களை ஓதி சிவவழிபாடு செய்வது பிரம்ம மந்திரங்களும் அங்க மந்திரங்களோடு சரி. அதற்கு மேல் உள்ள ஆகம மந்திரங்களை ஓதி சிவவழிபாடு செய்வது ஒரு சில புராதண சிவாலயங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

 

12-ம் நூற்றாண்டில் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார் இப்பூவுலகில் தோன்றியதன் காரணத்தை சிவபெருமானின் உரையாகவே இப்பாட்டில் விளக்குகின்றார்,    

மற்றுநீ வன்மை பேசி

வன்றொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கு மன்பிற்

பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே யாகும் 

ஆதலான் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார்  (தி.12: தடுத்தாட்கொண்ட பு: 216)


தூய்மையான ஆகமங்களைப் படைப்பிற் காலத்திலேயே அருளிச் செய்த சிவபெருமான்,


“மேலும் நீ என்னுடன் வன்மைய சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், வந்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக” என்றருளிச் செய்ததாகக் கூறுவார் சேக்கிழார் பெருமான்.


ஆகமத்தின் கிரியா பாதம் தினசரி, சிறப்பு நாட்கள் பூசனை விதிகளை வகுத்துக் கூறியுள்ளன. அவற்றில் அபிசேக, அலங்கார, நைவேத்தியம், உபசாரம் என்று வரும் வேளையில் அருச்சகர் வழக்கமாக ஒன்றைச் சொல்லுவார்; ‘”திராவிட கானம் அவதாரிக்க”. அப்படியென்றால் பஞ்சபுராணம் பாட அழைக்கின்றார் என்று பொருள். நாமும் பஞ்சபுராணம் பாடுவோம். ஐந்து திருமுறைப் பாடல்களை கனக்கச்சிதமாக பாடி முடிக்க அருச்சகர் முன்னமே சொல்லி விடுவார். *மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார்’* என்று சிவபெருமான் சொன்னது அவ்வர்ச்சகர்களைப் பொருத்த மட்டில் 5-10 மணித்துளிகள் மட்டுமே. ஒரு மணி நேரம் நடத்தப் படும் சோடசார பூசையில் சிவவழிபாட்டிற்காக  திருமுறைக்கு ஒதுக்கப் படும் நேரம் 5-10 நிமிடம். இதுதான் காசி மடம் சொன்ன பெருமந்திரத்திற்கு சிவாலயத்தில் இன்று கொடுக்கப் படும் மரியாதை!

 

சிவாலயங்களில் சிவார்ச்சனையை முடிக்க ஆசிர்வதம் எனும் இறுதி பகுதிக்கு முன்னரே பஞ்சபுராணம் பாட வேண்டும் என்ற விதி காமிகா ஆகமத்தில் உண்டு. அதனால் பஞ்சபுராணம் பாடுவது சிவாலய அர்ச்சனை விதிகளில் ஒரு பகுதியாகி சிவபெருமானை தமிழில் பாடி வாழ்த்த வழிவகை செய்கின்றது. ஆனால் பல சிவாலயங்களிலும் மற்ற சைவ கோயில்களிலும் அருச்சகர் அவர்தம் இறுதிக் கிரியையாகிய ஆசிர்வதம் பாடி பூசை முடித்துக் கொண்டு அதன் பின்னர் பஞ்சபுராணம் பாடிக் கொள்ளுங்கள் என்று விட்டுட்டு அவர்தம் சொந்த வேலையைப் பார்ப்பதை நாம் காணுகிறோம். காசி மடாதிபதியார் சொன்ன பெருமந்திரமாகிய திருமுறைக்குச் சில சிவாலயத்தில் இன்று கிடைக்கும் மரியாதை இதுதான்!

 

தமிழ் கானத்தைப் பாட வேண்டுவது ஆகமத்தின்படி செய்ய வேண்டிய கிரியைகளில் ஒரு பகுதியாக இருப்பதால், இறைவனுக்குத் தொண்டனாக அர்த்த மண்டபத்தில் நின்று இதனை அருச்சகர்கள் பாடுவதை யாம் காணவில்லை! அதற்கு பதிலாக பக்தர் ஒருவரையோ அல்லது ஓதுவா மூர்த்தி இருப்பின் அவரையோ பாட வேண்டுவார். தமிழில் பாடுவது அவ்வர்ச்சகர்களுக்குத் தீட்டாகி விடுமோ என்னவோ எமக்குத் தெரியாது! ஆனால் அவரில் பலர் சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்து ஓதுவிப்பது போல் திருமுறையை  பண்னுடன் பாட  கற்றுக் கொண்டவர் அல்லர். அப்படியே திராவிட கானம் ஓத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர் அறிந்த ஓரிரு பாடல்களை விருத்தமாகப் பாடி விட்டு அவர்தம் பூசனையை முடித்துக் கொள்வார். அவ்வளவுதான் பெருமந்திரமாகிய திருமுறைக்குச் சிவாலயத்தில் கொடுக்கப் படும் மரியாதை.

 

இவ்வாறு சிவாலயத்திலேயே திருமுறை இரண்டாம் தரமாக்கப் பட்டு விட்டதால் தமிழ் நாட்டுத் தமிழ் சைவர் 21-ம் நூற்றாண்டு முதல் பொங்கத் தொடங்கி விட்டனர். இது 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தமிழ் மூதறிஞர் தமிழுக்காகப் பொங்கியெழுந்தது போல் இன்று தமிழ்வழி சைவ வழிபாடு வேண்டுமென்று இல்ல மற்றும் கோயில் கிரியைகளைத் தமிழ்வேத மந்திரத்தால் வழி நடத்தத் தொடங்கி விட்டனர் தமிழ் நாட்டுத் தமிழரில் ஒரு பகுதியினர். தமிழில் அருச்சனை மற்றும் திருமுறை ஓதி சைவக் கிரியைகளை செய்விப்பதை கண்டிக்க வைதிகச் சைவர்களாகிப் போன ஒரு சில சைவ மடங்கள் மறைமுகமாக அத்தமிழர்களை அவமதிக்கத் தொடங்கி விட்டனர். இத்தகைய பின்புலத்தில் வந்ததுதான் திரு. தேவ் அவர்கள் பதிந்த காசி மட கருத்துக் கட்டுரை. அதில் திரு தேவ் அவர்களின் கருத்துக்குச் சாதகமான ஒரு பகுதியை மட்டும் இங்கே பதிவு செய்துள்ளார் என்பதை அறிவோம். 

 

திருமுறையில் தக்கப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு சைவக் கிரியையும் செய்வதால், திருமுறையை வேள்வியிலிட்டு எரிப்பதாகவும் குடத்திலிட்டு கரைப்பதாகவும் ஒரு சில சைவ மடங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

 

திருமுறை தோன்றாத காலத்தில் ஏற்பட்டது ஆகமத்தின் வடமொழி மந்திரங்கள். அவை பொருள் பொதிந்தவை. அம்மந்திரங்களை தோத்திரமாக திருமூலர் திருமந்திரத்தில் அருளியுள்ளதை திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் சொல்வதாவது,


“தண்ணிலவார் சடையர்தாம் தந்தஆ கமப்பொருளை

மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்ப”


திருமூலர் அருளிய ஆகமப்பொருள் திருமந்திரமாலையாகவும் தமிழில் தோத்திரமாகவும்  உள்ளதால் அவற்றை சைவ கிரியைகளில் ஓதி வழிபாடு செய்வது அடாத செயல் என்போரே திருமுறையை படாதுபாடு படுத்துவோராகும் என்பது புரியும். ஆகமத்திற்குப் பின்னர் அருளப்பெற்ற திருமுறையும் பொருள் பொதிந்தவையே. இவையும் சத்திநிபாதத்திற்கு வழிகாட்டுவன.


மந்திரங்களின் ஆற்றல் அச்சொல்லில் இல்லை அதனைச் சொல்லுவோர் நாவன்மையில் உள்ளது. இதனையறிய, நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப என்று தொல்காப்பியரும் அதனையொட்டி நிறைமொழி மாந்தருக்கான இலக்கணத்தை திருவள்ளுவர் கூறியதையும் நினைவில் கொள்வோம். சைவ கிரியைகள் வழியாக ஆகம மந்திரங்களோதி சத்திநிபாத பயன்பெற அம்மந்திரங்களை ஓதுவார் அனைவரும் நாவன்மை உடையோரா என்பதை காசி மடம் முதலில் நிறுவி விட்டு தமிழ் நாட்டுத் தமிழ் சைவர்களுக்கு அறிவுரை கூறட்டும். தொடரும். சிவசிவ.


அன்புடன் கமலநாதன். 

Reply all
Reply to author
Forward
0 new messages