கருநாடக இசை

253 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 27, 2014, 11:54:47 AM9/27/14
to mint...@googlegroups.com, vallamai
பண்டைத் தமிழகத்தின் இசை மரபுகள் பண்கள் மிகப் பழையவை. நிறம், வண்ணம் என்று பெயர் பெறும் ராகம்
என்ற சொல்லே அராகம் என்னும் தமிழ்ச்சொல். அரத்தம் - செவ்வண்ணம். செவ்வழிப்பண்ணும் உண்டு.
தமிழர்கள் வளர்த்த இசை, கூத்து, நடனம் எல்லாம் தமிழராட்சி முடிந்து கன்னட, தெலுங்கர்களின்
ஆட்சிக்கும் வணிகம், நிலம் எல்லாம் கைமாறியபோது கோயில் கட்டிடக் கலை, இசைக்கலை,
நாட்டியக்கலை ஏனைத் திராவிட மொழிகளில் வளர அடிப்படையாக விளங்கின. விளங்கிவருகின்றன.

தமிழிசைக்கு நல்ல இழை ஓடுகிறது. தொடர்புடைய கர்நாடக சங்கீத கீர்த்தனைகளுக்கும்
நல்ல பாடலை, அதன் விளக்கங்களை பகிர்ந்துகொள்ள சங்கீத ஞானமுடைய உங்களை
அழைக்கிறேன்.

கச்சேரி கடைசியில் பாடுவது மங்களம். பாலமுரளிகிருஷ்ணர் யாத்துப் பாடும் மங்களம்:

A superb composition from Balamurali Krushna.

Happy weekend!

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 1, 2014, 9:05:50 PM11/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சரணம் ஐயப்பா! 
பந்தள மன்னா! எந்தனைக் காவாய்!

எழுதியவர்: ‘ஆத்மா’
பாடுவது: எம்.எஸ்.

Dev Raj

unread,
Nov 4, 2014, 8:12:40 AM11/4/14
to mint...@googlegroups.com
Thanjavur Brinda was a grand daughter of the venerable Veena Dhanammal, who was an institution unto herself. She was born on November 5.It is not often that one's contemporaries and equals in reputation and age are willing to become learners, and T Brinda was one such person. Dhanammal was a veritable treasurehouse of compositions, and T Brinda was not far behind. 

mEru samAna dhIra varada raghuvIra .......... 

N D Logasundaram

unread,
Nov 4, 2014, 3:37:07 PM11/4/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai
கருநாடக இசை எனும் சொல்லின் பொருள் என்ன ??

தமிழிசை தொடர்பில்லாதது எனலாமா??

இவ்வகை இசை பிறப்பின் மூலம் ( நாடு  முன்பும் இப் போதும்) எது 

வரலாறு கூறிப்புகள் கொண்டதா? இருந்தால் காட்டமுடியுமா??

இது சுயம்பு  2000  ஆண்டுகள் பழமையானது அல்லது  நாரத முநிக்கு 
பிரமன் துவாபர யுகத்தில் கற்பித்தது சரசுவதியின் இடது கன்னத்தில் லிருந்து
பிறந்தது எனும் விவேகமூல்லவர் ஏற்காத  புராண கதை அல்லாத வற்றை
மட்டும் முடிந்த வரை வைக்கலாம் நன்றியுடையீர் ஆவீர்.

சங்ககால பாணர், சிலப்பைகாரம் குரவையர்  ஞான சம்பந்தர் காட்டும் பண்காலின் காலம் ராஜராஜன் அமர்த்திய கோயில் பிணாப்பிள்ளகள் காலத்தியது என வும் வேண்டாம் 
சம்மீபத்தியது மட்டும் காட்டுக.

இசை என்றா ல் கருவிகலுடையது இணனந்ததே அல்லவா? 

 பொதுவாக ஒரு மன்றத்தில் பலரும்  ர சிக்க   பாடப்படும் ஆடலின்றி வரும் தனித்த
இசையு ம் குலமகளிற்கு இல்லை என்பது உண்மையா? 

அன்புடன்
நூ த லொ சு
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Nov 4, 2014, 9:29:13 PM11/4/14
to mintamil
தென்னாட்டில் வழங்கப்படுவது எனப்பொருள் 

சேசாத்திரி 

Dev Raj

unread,
Nov 4, 2014, 11:09:05 PM11/4/14
to mint...@googlegroups.com
On Tuesday, 4 November 2014 12:37:07 UTC-8, selvi...@gmail.com wrote:
கருநாடக இசை எனும் சொல்லின் பொருள் என்ன ??

இன்றைய கருநாடக இசை என்பது கருநாடகத்தில் தோன்றிய
புரந்தர தாசர் அவர்கள் உருவாக்கிய வழிமுறை;
அதற்கு முன் இசை மரபு கிடையாது என்றில்லை

தேவ்

Nagarajan Vadivel

unread,
Nov 5, 2014, 12:13:59 AM11/5/14
to மின்தமிழ்

On Wed, Nov 5, 2014 at 9:39 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
புரந்தர தாசர் அவர்கள் உருவாக்கிய வழிமுறை;

​புரந்தரதாசர் வாழ்வில் நடந்த இரு நிகழ்வுகள்

ஒரு முறை தாஸர், தன் சிஷ்யர் அப்பண்ணனிடம் கைகால் கழுவ நீர் கொண்டுவா என்று சொன்னார். தூக்கத்தில் இருந்த சிஷ்யர் நீர் கொண்டு வராததால், விட்டலனே சொம்பில் நீர் கொண்டு வர, நேரம் ஆகிவிட்ட காரணத்தால், கோபமுற்ற தாஸர் அந்த சிஷ்யரை கடிந்துகொண்டு, அந்த சொம்பினால், அவர் தலையில் இடித்தார்.

மறு நாள் கோயிலுக்கு சென்று பார்க்கையில், விட்டலனின் தலையில் காயம் இருந்தது. மேலும் கண்களின் கண்ணீர் வந்துகொண்டிருந்தது.

அப்போது அனைத்தும் புரிந்துகொண்ட தாஸர், விட்டலனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த காயத்தை தொட்டவுடன், அது சட்டென்று மறைந்தது.

***

மற்றொரு முறை விட்டலன், தாஸர் வேடமிட்டுக் கொண்டு ஒரு தாசியின் வீட்டிற்கு சென்று, தன் ஒரு கை வளையைக் கொடுத்துவிட்டான்.

இங்கே கோயிலில் விட்டலனின் வளையைக் காணாமல், ஊரெல்லாம் தேட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு வந்த தாசி, நேற்றிரவு தாஸரே என் வீட்டிற்கு வந்து இந்த வளையைக் கொடுத்தார் என்று கூற, தாஸரை கட்டிவைத்து அடித்துவிட்டனர் அதிகாரிகள்.

அப்போது தாஸர் பாடிய பாடல் -

முய்யக்கே முய்ய தீரிது

(பழிக்குப் பழி தீர்ந்தது - நான் உன்னை தலையில் இடித்தேன். அதுக்கு பழியாக எனக்கு அடி கிடைத்தது)

பிறகு விட்டலன் அசரீரியாக பிரச்சினையை விளக்கியதால், தாஸரை விடுவித்தனர்.

ஒரு பாடல் புரந்தரதாசர் இயற்றியது எம்.எஸ் பாடுகிறார்

​கன்னடத்தில் மூன்று லட்சம் கீர்த்தனைகளைப் படைத்தவர்.  அதில் ஒரு லட்சம் கீர்த்தனைகள் இன்றும் வாழ்கிறது.

பாசி​

தேமொழி

unread,
Nov 5, 2014, 12:22:18 AM11/5/14
to mint...@googlegroups.com
விவேகமுள்ளவர் ஏற்காத  புராண கதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மேலும் கூறப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Nov 5, 2014, 12:28:49 AM11/5/14
to மின்தமிழ்
விவேகனோ விவேகியோ கால ஓட்டத்தில் சாதனையாளர்களுக்கு நல்லதோ கெட்டதோ ஒரு புனைவு ஏற்றப்பட்டவர்களாக வரலாற்றில் வாழ்வார்கள்

யார் கண்டார்கள் 25 ஆம் நூற்றாண்டில் இணையத்தில் நீங்கள் கலைவாணியாகவும் நான் நாரதராகவும் புனையப்பட்டு உங்களுக்குப் புகழும் எனக்கு இகழும் கிடைக்க வாய்ப்புண்டு என்று நினைத்துக்கொள்ளவும்

பாசி

திவாஜி

unread,
Nov 5, 2014, 12:43:55 AM11/5/14
to mint...@googlegroups.com

2014-11-05 10:58 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
உங்களுக்குப் புகழும் எனக்கு இகழும் கிடைக்க வாய்ப்புண்டு என்று நினைத்துக்கொள்ளவும்

ஏன்? இப்பவே இல்லையா?
நம்மை யார் என்று மற்றவர் மனதில் இருப்பது புனைவே!
திட்டிக்கொண்டும், புகழ்ந்து கொண்டும்தான் இருக்கிறார்கள்!

Dev Raj

unread,
Nov 5, 2014, 3:04:02 AM11/5/14
to mint...@googlegroups.com
On Tuesday, 4 November 2014 21:22:18 UTC-8, தேமொழி wrote:
விவேகமுள்ளவர் ஏற்காத  புராண கதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மேலும் கூறப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
 
பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை எனப் போர்த்த பண்பின்மிக்க ஏர்கொண்ட மகாவித்துவான் பிள்ளையவர்கள் செய்த எண்ணற்ற பாடல்கள் கொண்ட நூல்கள் ஏறத்தாழ 80 ; தனிச் செய்யுள்கள் பல.

தலபுராணங்கள் 22
சரித்திரம் 3
மான்மியம் 1
காப்பியம் 2
பதிகம் 4
பதிற்றுப்பத்தந்தாதி 6
யமக அந்தாதி 3
மாலை 7
பிள்ளைத்தமிழ் 10
கலம்பகம் 2
கோவை 3
உலா 1
தூது 2
குறவஞ்சி 1
பிறநூல்கள் 7 

புரவலர் கை பாராத தற்சார்புள்ள வாழ்க்கை இவருக்கு
அமைந்திருக்குமானால் மேலும் பல படைப்புகளை
இவர் அளித்திருக்கும் வாய்ப்பதிகம் .
ஆற்றல்மிக்க மாந்தர் அரிதானவர் அல்லர்

தேவ்

தேமொழி

unread,
Nov 5, 2014, 3:26:43 AM11/5/14
to mint...@googlegroups.com

மகாவித்வான் இவ்வாறு எழுதிய படைப்புகளை தனது சொந்தக் கற்பனையில் எழுதினாரா?   அல்லது ...

அவரை வரவழைத்து மரியாதை செய்து தங்கள் ஊர்களில் வழங்கி வரும் தலபுராணங்களை எடுத்துரைத்து அவற்றை பாடித்தரும்படி அவர் புலமையை மெச்சிய மக்கள் வேண்டுகோள் வைத்தனரா?

அவர் எழுதிய புராணங்களில் முன்னர் சொல்லப்படாத புராணக் கதைகளை புகுத்தினாரா என்றும் பார்க்க வேண்டும் அல்லவா?

வழங்கி வந்த கதையை எழுதியவரை அவரே மூலக்கதைக்கு உரிமையாளர் என நாம் சொல்ல முடியுமா?

இன்றும் பிள்ளையார் பால் குடித்ததாக பரப்புபவர் உண்டு.  அதைக் கட்டுரையாக  நான் எழுதினாலும் அந்தக் கட்டுக் கதைகளுக்கு  நான் உரிமை கோர  இயலாது.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Nov 5, 2014, 3:49:55 AM11/5/14
to மின்தமிழ்

2014-11-05 13:56 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இன்றும் பிள்ளையார் பால் குடித்ததாக பரப்புபவர் உண்டு.  அதைக் கட்டுரையாக  நான் எழுதினாலும் அந்தக் கட்டுக் கதைகளுக்கு  நான் உரிமை கோர  இயலாது.

​தனி உரிமை என்பது புதிதாக உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்

பொதுவான கருத்தோ எழுத்தோ மீண்டும் மீண்டும் வலம்வரும்போது தனி உரிமை கோரவியலாது​

சொல்லாதே சொல்லாதே யார்கேட்டாலும் சொல்லாதே 

நான் சொல்லுறேன் நெல்லுக்குள்ளே அரிசி இருக்கு 

என்று நான் புதிதாகப் படைத்ததாக உரிமை கோரினால் 

இது பொதுக்கருத்து எனவே காப்புரிமை இல்லை என்றுதான் சொல்லமுடியும்

பாசி

Dev Raj

unread,
Nov 5, 2014, 4:02:27 AM11/5/14
to mint...@googlegroups.com
On Wednesday, 5 November 2014 00:26:43 UTC-8, தேமொழி wrote:
அவர் எழுதிய புராணங்களில் முன்னர் சொல்லப்படாத புராணக் கதைகளை புகுத்தினாரா என்றும் பார்க்க வேண்டும் அல்லவா?

அதையெல்லாம் பார்க்க வேண்டாம்; பல லக்ஷம் பாடல்களை ஒருவரால் இயற்ற முடியுமா ?
எனும் சிந்தனையை ஒட்டி எழுதப்பட்ட பதிவு. ‘ஆற்றல் மிக்க மாந்தர் அரிதானவர் அல்லர்’
என என் பதிவு முடிந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்

தேவ்

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2014, 6:58:37 AM11/5/14
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai
கருநாடகம் என்றால் பழமை என்ற பொருளும் உண்டல்லவா?

4 நவம்பர், 2014 3:37 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 5, 2014, 10:14:22 AM11/5/14
to mint...@googlegroups.com
On Wednesday, November 5, 2014 1:02:27 AM UTC-8, Dev Raj wrote:
///
பல லக்ஷம் பாடல்களை ஒருவரால் இயற்ற முடியுமா ?
எனும் சிந்தனையை ஒட்டி எழுதப்பட்ட பதிவு. ‘ஆற்றல் மிக்க மாந்தர் அரிதானவர் அல்லர்’
என என் பதிவு முடிந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்
////

"நான் சொன்ன பதிலில் நீங்கள் மேற்கோள் காட்டிய வரிக்கும்", 

On Wednesday, 5 November 2014 00:26:43 UTC-8, தேமொழி wrote:
///
விவேகமுள்ளவர் ஏற்காத  புராண கதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மேலும் கூறப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
///

அதைத் தொடர்ந்து உங்கள் பதிலில் வந்த கருத்துக்கும் மட்டும்தான் நான்  பதில் கருத்து சொன்னேன்.

அதன்படி கொண்டால், ஒருவரால் இத்தனை பாடல்கள் இயற்ற இயலுமா என்ற கேள்வியை நான் ஏழுப்பவே இல்லையே. 

தேமொழி

unread,
Nov 5, 2014, 10:22:48 AM11/5/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

உண்மை வேந்தே, "சரியான கர்நாடகம் இந்த ஆள்" என்றும் பழமை எண்ணங்களைக் கொண்டவர்களைக் குறிப்பார்கள்தான்.

அதன் அடிப்படையில் பழமையான இசை என்ற பொருள் இருக்கலாம்.  பாரம்பரிய இசை = கர்நாடக இசை எனப் பொருள் வருகிறது.

இந்தக் கோணத்தில் கர்நாடகம் = பழமை என்ற பொருளில் ஏன் குறிப்பிடப்படுகிறது? என்பது அடுத்த கேள்வியாகிறது. 

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Nov 5, 2014, 10:26:37 AM11/5/14
to vall...@googlegroups.com, mintamil
உண்மை வேந்தே, "சரியான கர்நாடகம் இந்த ஆள்" என்றும் பழமை எண்ணங்களைக் கொண்டவர்களைக் குறிப்பார்கள்தான்.

ஆம். தன் அன்னையை 'கர்நாடகம்' என் கிறார், திரு.வி.க.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Nov 6, 2014, 3:54:03 PM11/6/14
to mintamil
அன்புள்ள இந்த இழையில் மடல் வைத்தவர்களுக்கு,

(1) திரு நாகரஜன் அவர்களுக்கு,
தலபுராணங்க்களில் வரும் கதைகள் போன்றவைகள் நான் வைத்த வினாக்களுக்கு புறம்பாக வரும் என அறிந்தே 
முன் நீக்கம் செய்ய நினைத்தேன் அய்யா கருநா டக இசை எனும் பொருள் பற்றி மட்டும் தடம் மாறாமல் பேசலாமே 
தேமொழி அவர்கள் இதைதான் குரித்தார் இருந்தும்  தங்களும் புரந்தரதாசர் லட்சம் கீர்தனைகள் எனவெல்லம் மடலின்
கருப்பொருள் ற்றியும் காட்டியுள்ளீர்கள் 

02)திரு தேவ் அவர்களுக்கு
திருச்சிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யின் சேவை போற்றத்தக்கதாக காணும் கோணம் வேறு
நாம் திரைப்படங்களில் பார்கின்றோம் நாயகன் எத்தனை பேருடன்   சண்டையிட்டு வெல்கின்றான் 
நாயகியும் நாயகனும் நல்ல கவிகாளாகியும்  ஆடல் வல்லர்கள்ளக வும் கட்டப்படுகிரார்கள் 
இதனால் 300 ஆண்டுகலுக்கு பின் வருபவர்கள் அந்தக்காலதில் எல்லொரும் பல் திறப்பட்ட திறமை
 உள்ளவர்கள் இருந்தார்கள் என்பதன் ஆவண
ம் எனக் காட்டுவது மெய்யன வரலற்றுச் சான்று ஆகுமா? 

300 ஆண்டுகளுக்கு முன் இருந்த கவிராயர்கள் சிறு சிறு நிலச்சுவாந்தரர்கள்  மீது நூல் இயற்றி வாழ்ந்து
தமிழின் வளம் காத்து வந்துள்ளர்கள் அவர்கள் நூலில் மக்களை முழுக்க முழுக்க மதிகுரைந்தவரளாக்கும்
அதாவது தல புராணங்களைப்போல் அறியாமையை புகுத்தும்  செய்கை மிக மிக குறைவு தனி மனிதனின்
கர்பனை நிரைந்த வீண் பெருமை பேசும்
(பாரதி கூட முதலில்ஒர் ஆஸ்தான  கவியக இருக்க கேட்கப்பட்டான் எனப் படிதுள்ளென்)

நிற்க 
இவையாவும் மடல் இழைக்கு புறமாகி விடட்டது காண்க 

முடிந்த வரை கர்னாடக இசை பற்றிப் (இந்த இழையில்) பேசினால் நலமே

தமிழ் வழங்கும் பெருநாட்டில் தலை நகரில் முயூசிக் அகாடெமி
 (சங்கீத வித்வத் சபை ) மற்றும் நூற்றுக்கணக்கான சபாக்களில்
டிசம்பர் மாதத்தில் (ஒரிரு வாரத்தில் போட்டிகள் வரப்போகிறது
பாருங்கள்) இன்நிறுவனங்கள் எல்லம் தங்கள் இசையை 
கருநாடக இசை என்று தான் மயிலையிலேயே வாழுகின்ற நான் 
50,60 ஆண்டுகளாலகக் நேரடியகக் கண்டது கேட்டது படித்தது வர்கின்றேன் 

இவைகளில்  புரந்தர தாசர் பாடல்களை ப்  பாடுகிரார்களா நான் நேரடியாக
எதுமறியேன்    ஆனால் பத்திரிகைகள் வைக்கும் வழி நோக்கினால்
பெயருக்காகவாவது ஓர் பாடலாவது   கன்னடமொழிப்பாடல் கலைப்
படுவதில்லை எனவத் தோன்றுகின்றது 

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Nov 6, 2014, 8:08:47 PM11/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, November 5, 2014 3:58:37 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
கருநாடகம் என்றால் பழமை என்ற பொருளும் உண்டல்லவா?

இந்த இழையை கர்நாடக சங்கீதத்தின் கேட்பொலி, காணொளிகளுக்குப் பயன்படுத்துவோம்.

அதன் வரலாற்றை தனியாக வேறோர் இழையில் தெரிந்தோர் பேசலாமே. நானும் கலந்துகொள்வேன்.

நன்றி,
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 6, 2014, 8:47:51 PM11/6/14
to mint...@googlegroups.com, vallamai
T. Brindha playing the veena -  "amba neelaambari" by Tanjore Ponniah Pillai, 1969, Seattle, USA.

Maharajapuram Santhanam sings the song,

A disciple of the disciple of Tanjore Ponniah Pillai (Rajeswari Sathish):

Sanjay Subrahmanyan sings

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
Nov 6, 2014, 9:26:51 PM11/6/14
to vallamai, மின்தமிழ்
>>கருநாடக இசை என்ற பெயரில் தமிழிசைத் தழுவலான தெலுங்குப் பாடலையும் சமசுகிருதப் பாடல்களையும் கன்னடப் பாடல்களையும் தமிழ்நாட்;டின் அவைகளில் – சபைகளில் – பாடித் தமிழிசையை ஓரங்கட்டுவதைத்தான் கூடாது என்கிறோம்.

அரங்கத்தின் வெளியே நின்று இப்படி புகாரிப்பதை விட அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து ஒரு துண்டு சீட்டு அனுப்பினால் தமிழ்பாடல்கள் கட்டாயம் பாடுவார்கள்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 6, 2014, 10:34:45 PM11/6/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
மோகன்லால் (1991) யேசுதாஸ் பாடலுக்கு அபிநயித்துக் காட்டல் அருமை.

ஸ்ரீ விநாயகம் நமாம்யகம்:

நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 6, 2014, 11:16:18 PM11/6/14
to mint...@googlegroups.com
On Thursday, 6 November 2014 18:26:51 UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
>>கருநாடக இசை என்ற பெயரில் தமிழிசைத் தழுவலான தெலுங்குப் பாடலையும் சமசுகிருதப் பாடல்களையும் கன்னடப் பாடல்களையும் தமிழ்நாட்;டின் அவைகளில் – சபைகளில் – பாடித் தமிழிசையை ஓரங்கட்டுவதைத்தான் கூடாது என்கிறோம்.
அரங்கத்தின் வெளியே நின்று இப்படி புகாரிப்பதை விட அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து ஒரு துண்டு சீட்டு அனுப்பினால் தமிழ்பாடல்கள் கட்டாயம் பாடுவார்கள்

துண்டுச் சீட்டெல்லாம் அனுப்ப வேண்டாம். நிறையத் தமிழ்க் கீர்த்தனைகளை
ஏராளமாகப் பாடுகிறார்கள். தமிழிசை எனும் துறையில் ஆர்வம் கொண்டு
தேர்ச்சி பெற்ற கருநாடக இசைக் கலைஞர்களும் உள்ளனர். 

மக்கள் தொ கா வெளியிடான குறுந்தகடுகள் இருந்தன; தமிழிசை
வேண்டும் என்போர் எத்தனை பேர் வாங்கி ஆதரவளித்தனர்,
தெரியாது. அந்நிறுவனப் பொறுப்பாளர் குறைப்பட்டுக் கொண்டதையும்
நான் அறிவேன்

தேவ்

Nagarajan Vadivel

unread,
Nov 6, 2014, 11:48:51 PM11/6/14
to மின்தமிழ்
கர்நாடக இசை தமிழகத்தில் வளர்ந்த சூழலைக் கொஞ்சம் உற்று நோக்க வேண்டும்.  ஆங்கில ஆட்சியில் சென்னை ஜார்ஜ் டவுனில் ஆங்கிலேயர்களிடம் வணிகத் தொடர்பில் இருந்த பேரிச் செட்டியார்கள் முதலில் சென்னையில் இசை நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்கள்.  தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்பதால் தெலுகுக் கீர்த்தனைகள் முதன்மை பெற்றது. 

பாடியவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அவர்களின் தெலுங்கு சமஸ்கிரித உச்சரிப்பு படுமட்டம் கர்நாடக இசை பாடுபவர்கள் கட்டாயம் தெலுங்கு சமஸ்கிரிதம் கற்றுக்கொள்ளவேண்டும் அம்மொழிகள் தெரியாதவர்கள் பாடக் கூடாது என்று அங்கே வாழ்ந்த பாரதியார் எழுதினார்

எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்தபோது நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாடல்கள் இயற்றப்பட்டு அதற்கான ராகம் குறியீடு அமைக்கப்பட்டும் சென்னையில் இந்தத் தெலுங்கு பேசுபவர்களும் அதற்குப்பின் தோன்றிய சங்கீத வித்வத்சபையை நடத்திய மயிலாப்பூர் பிராமணர்களும் தமிழ்ப் பாடல்களைப் பாட ஊக்குவிக்கவில்லை.

பெரியார் மறைமலை அடிகள் போன்றோரின் வேண்டுதல் அடிப்படையில் அண்ணாமலை அரசர் அதே ஜார்ஜ் டவுனில் தமிழ் இசைச் சங்கத்தைத் தோற்றுவித்து தமிழ்ப்பாடல்கள் கச்சேரிகளில் பாட ஏற்பாடு செய்தனர்

கர்நாடக இசையில் தமிழ் பாடுவதைவிட பழமையான தமிழ் இசைபற்றி தற்போது ஆராய்ச்சி செய்து சங்கம் சங்கம் மருவிய இலக்கியங்களின் வசனநடையில் இருந்த பாடல்கள் இசைவ்வடிவம்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்க செயலாகும்

பாசி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Nov 7, 2014, 2:11:31 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
எம். எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களில் குரலில்..

சுபா

-- 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2014, 4:07:24 AM11/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் இனிய குரலில், புரந்தரதாசர் கிருதிகளுள் ஒன்று...

பின் குறிப்பு: புரந்தரதாசர் கிருதிகள் திருமதி எம்.எல்.வி யின் ஆதர்சம்!.. அதை மிகப் பிரபலமாகப் பாடி வந்தவர் அவர். ஒரு முறை திருமதி எம்.எஸ் ஸிடம், ஒரு கச்சேரி முழுவதும் புரந்தரதாசர் க்ருதிகளைப் பாடும் அழைப்பு வர, அவரோ, 'அது வசந்தி  (எம்.எல்.வி) பாடிண்டிருக்கறதாச்சே!.. நான் பாடினா சரியா இருக்காது' என்று கூறி மறுத்தார். ஆனால் எம்.எஸ்ஸிற்கு ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பு வந்த போது, அங்கு பாடுவதற்காக, எம்.எஸ்.ஸின் வீட்டுக்கே எம்.எல்.வி வந்து ஒரு புரந்தரதாசர் க்ருதியைக் கற்றுத் தந்து விட்டுச் சென்றார். இப்படியும் ஒரு போற்றத்தகுந்த நட்பு!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-11-07 12:41 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​      

shylaja

unread,
Nov 7, 2014, 5:02:37 AM11/7/14
to mintamil
இருவரும் பிரபலங்கள் ஆனாலும்  பார்வதி சொல்வதுபோல போற்றத்தகுந்த நட்பு  இந்தமாதிரி  அபூர்வமாகத்தான் சிலர் இருப்பார்கள்...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

N. Ganesan

unread,
Nov 7, 2014, 7:35:32 AM11/7/14
to mint...@googlegroups.com, vallamai

On Friday, November 7, 2014 1:07:24 AM UTC-8, tsparu2001 wrote:
திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் இனிய குரலில், புரந்தரதாசர் கிருதிகளுள் ஒன்று...

பின் குறிப்பு: புரந்தரதாசர் கிருதிகள் திருமதி எம்.எல்.வி யின் ஆதர்சம்!.. அதை மிகப் பிரபலமாகப் பாடி வந்தவர் அவர். ஒரு முறை திருமதி எம்.எஸ் ஸிடம், ஒரு கச்சேரி முழுவதும் புரந்தரதாசர் க்ருதிகளைப் பாடும் அழைப்பு வர, அவரோ, 'அது வசந்தி  (எம்.எல்.வி) பாடிண்டிருக்கறதாச்சே!.. நான் பாடினா சரியா இருக்காது' என்று கூறி மறுத்தார். ஆனால் எம்.எஸ்ஸிற்கு ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பு வந்த போது, அங்கு பாடுவதற்காக, எம்.எஸ்.ஸின் வீட்டுக்கே எம்.எல்.வி வந்து ஒரு புரந்தரதாசர் க்ருதியைக் கற்றுத் தந்து விட்டுச் சென்றார். இப்படியும் ஒரு போற்றத்தகுந்த நட்பு!!..

என் பெற்றோர் திருமணத்தின்போது பாடியவர்களில் ஒருவர் எம்.எல்.வி.
அப்போது தமிழ்ப்புலவர் மாரிசெட்டியார் வாழ்த்து,

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Nov 7, 2014, 3:33:41 PM11/7/14
to mint...@googlegroups.com
கர்நாடக சங்கீதத்தில் தமிழ்ப் பாட்டுக்கள் இடம் பெறவில்லை என்பதால், தேவகோட்டையில் "தமிழிசைப் பள்ளி" என்று ஒன்று நடத்தப் பட்டது.  அங்கு கர்நாடக இசை பயிற்றுவிக்கப்பட்டாலும், தமிழ்ப் பாடல்களே கற்றுக்கொடுக்கப் பட்டன.  

வினைதீர்த்தான் அவர்களே, அப்பள்ளி இன்றும் நடைபெறுகிறதா?  இதுபற்றித்  தங்களுக்கு மேலும் தெரிந்திருந்தால், அறிய விரும்புகிறேன்.

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Nov 7, 2014, 8:18:34 PM11/7/14
to vallamai, மின்தமிழ்

7 நவம்பர், 2014 7:35 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, November 7, 2014 1:07:24 AM UTC-8, tsparu2001 wrote:
திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் இனிய குரலில், புரந்தரதாசர் கிருதிகளுள் ஒன்று...

பின் குறிப்பு: புரந்தரதாசர் கிருதிகள் திருமதி எம்.எல்.வி யின் ஆதர்சம்!.. அதை மிகப் பிரபலமாகப் பாடி வந்தவர் அவர். ஒரு முறை திருமதி எம்.எஸ் ஸிடம், ஒரு கச்சேரி முழுவதும் புரந்தரதாசர் க்ருதிகளைப் பாடும் அழைப்பு வர, அவரோ, 'அது வசந்தி  (எம்.எல்.வி) பாடிண்டிருக்கறதாச்சே!.. நான் பாடினா சரியா இருக்காது' என்று கூறி மறுத்தார். ஆனால் எம்.எஸ்ஸிற்கு ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பு வந்த போது, அங்கு பாடுவதற்காக, எம்.எஸ்.ஸின் வீட்டுக்கே எம்.எல்.வி வந்து ஒரு புரந்தரதாசர் க்ருதியைக் கற்றுத் தந்து விட்டுச் சென்றார். இப்படியும் ஒரு போற்றத்தகுந்த நட்பு!!..

என் பெற்றோர் திருமணத்தின்போது பாடியவர்களில் ஒருவர் எம்.எல்.வி.

ஓ நீங்களும் கச்சேரி கேட்டீங்களா?
 
ராம் காமேஸ்வரன்

unread,
Nov 7, 2014, 9:28:12 PM11/7/14
to mint...@googlegroups.com
கர்நாடக இசையைப் பற்றி ஜெயமோகன் வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இது: 

அன்புள்ள இளங்கோவன்,

முதலில் இவ்விஷயத்தில் நிலவும் ஒரு குழப்பத்தைச் சொல்லிவிடுகிறேன். மிகநுட்பமாக கர்நாடக இசையின் அழகியலை அறிந்தவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு அதன் வரலாறு பற்றி ஆரம்ப அறிமுகம் கூட இருப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காணமுடியும்.

காரணம், ஒட்டுமொத்தமாக தென்னக வரலாறு பற்றிய, பண்பாட்டுப்பரிணாமம் பற்றிய அறிதல் அவர்களிடமிருப்பதில்லை. இரண்டு, கர்நாடக சங்கீதம் இன்று சாதியடையாளமாகவே பேணப்படுவதனால் தங்கள் சாதிவரலாற்றின் ஒரு பகுதியாக அதன் வரலாற்றைச் சொல்லவே பெரும்பாலும் இசையறிஞர்கள் முற்படுகிறார்கள்.

புரந்தரதாசர்

ஆகவேதான் கர்ண அடகம் – காதுக்கு இனியது – என்றபொருளில் அப்பெயர் வந்தது என்றும், அதன் மூலம் சாமவேதம் என்றும், அதைக்கேட்டு தப்புதப்பாக பாடியதன் விளைவுகளே நாட்டாரிசை மற்றும் பண்ணிசை மரபுகள் என்றும் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு அசட்டுத்தனமாக அறிஞர்களே பேசி வைத்திருப்பதை நாம் காண்கிறோம்.

நான் இசையறிந்தவன் அல்ல. ஆனால் தென்னக வரலாற்றை இருபதாண்டுகாலமாக ஆர்வத்துடன் பயில்பவன். ஒரு நாவலுக்காக [அசோகவனம்] தென்னகத்தின் நடுக்காலகட்ட வரலாற்றை பத்தாண்டுகாலம் ஆராய்ந்தவன். ஆகவே நான் வாசித்தறிந்த பொதுவான வரலாற்றுச் சித்திரத்தை சுருக்கமாக அளிக்கிறேன்.

சுவாதி திருநாள்

முதலில் நாம் தெளிவுகொள்ளவேண்டிய சில புள்ளிகள் உள்ளன.

1. பண்பாட்டாய்வுசார்ந்த எதையும் வரலாற்றின் பின்புலமில்லாமல் பேசமுடியாது. எந்த ஒரு பண்பாட்டுக்கூறுக்கும் அது உருவான அரசியல் சூழல், பொருளியல் சூழல், சமூகச்சூழல் முக்கியமானது.

2. வரலாற்றின் பின்புலத்தில் வைத்து நோக்கினால் எந்த ஒரு பண்பாட்டுக்கூறும் ஒற்றை ஊற்றுமுகம் கொண்டதாக இருப்பதில்லை என்பதையே காணமுடிகிறது. வெவ்வேறு மக்களின் பல்வேறு பண்பாட்டுச்சரடுகள் வாழ்க்கையின் போக்கில் முயங்கி கொண்டும் கொடுத்தும்தான் அனைத்து பண்பாட்டுக்கூறுகளும் உருவாகியிருக்கும். ஆகவே பண்பாட்டுத் ‘தூய்மை’ யை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுபவை வரலாறுகள் அல்ல.

3. பெரும்பாலான பண்பாட்டு மாற்றங்கள் வலுவான வெளி பாதிப்பினாலோ அல்லது மிகப்பெரிய பொருளியல் மாற்றத்தினாலோ அல்லது அடிப்படையான அரசியல் மாற்றத்தினாலோதான் நிகழ்ந்திருக்கும்.

கர்நாடக சங்கீதம் என இன்று அழைக்கப்படுவது தென்னக சங்கீதம் என்னும் பொருளில்தான். அவ்விசை தனித்தன்மையுடன் உருவான காலகட்டத்தில், அதாவது தோராயமாக பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய முந்நூறு வருடங்களில், இந்தியாவில் முகலாயர் ஆட்சி நிலவியது. அவர்களின் ஆவணங்களில் தென்னகம் கர்நாடகம் என்றே பொதுவாக அழைக்கப்பட்டது. தென்னக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கர்நாடக நவாப்கள் என அழைக்கப்பட்டனர்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி முதல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை ஐநூறாண்டுக்காலம் கர்நாடக சங்கீதத்தின் உருவாக்கக் காலகட்டம் எனலாம். அதாவது சாரங்கதேவர் என்ற இசையிலக்கண அறிஞர் [1210–1247] தென்னகத்தில் நிலவிய இசைமரபுகளை எல்லாம் தொகுத்து சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை உருவாக்கியதை அதன் தொடக்கப்புள்ளியாகக் கொள்ளலாம்.

அதன்பின் ஐநூறாண்டுக்காலத்தில் தென்னகத்தில் பல இடங்களிலாக ஒரு வட்டாரத் தனித்தன்மையுடன் உருவாகி பல்வேறு குருமரபுகள் வழியாக நீடித்து இக்காலகட்டத்தை வந்தடைந்துள்ள கர்நாடக இசையின் முன்னோடி வடிவங்கள் பல உண்டு. பொதுவான ஆய்வாளர்களின் முடிவு என்னவென்றால் அவற்றில் மையமானது சங்ககாலம் முதல் தமிழகத்தில் இருந்துவந்த பண்ணிசை மரபு என்பதுதான்.

அதைப்பாடியவர்கள் பாணர்கள். இவர்கள் நாடோடி இசைக்கலைஞர்களாக சங்ககாலத்தில் பெருமதிப்புடன் இருந்தனர். சங்கம் மருவியகாலகட்டத்தில், அதாவது கிபி இரண்டாம் நூற்றாண்டுமுதல் பௌத்த சமண மதங்களின் ஆதிக்கம் மேலோங்கியபோது மெல்லமெல்ல அவர்கள் சமூக முக்கியத்துவமிழந்தனர். காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட – தீண்டத்தகாத – மக்களாகவும் ஆக்கப்பட்டனர். அவர்கள் சோழர்காலத்தில் பறையர்களின் ஒருபகுதியாகக் கருதப்பட்டிருக்கின்றனர்.

ஷட்கால கோவிந்த மாரார்

பௌத்தமும் சமணமும் வலுவிழந்து பக்தி இயக்கம் மேலெழுந்த ஏழாம் நூற்றாண்டில் மீண்டும் பண்ணிசை புத்துயிர்பெற்றது. சைவநாயன்மார்களும் ஆழ்வார்களும் அதை பக்தியின் முதன்மை ஊடகமாகக் கொண்டனர். சோழ,சேர பாண்டியர்களால் பெரும் ஆலயங்கள் உருவாக்கப்பட்டபோது அங்கே பண்ணிசையைப்பாட ஓதுவார் மரபு உருவாக்கப்பட்டது. பண்ணிசை இலக்கணங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.

இவ்வாறு வாழ்ந்த பண்ணிசைமரபுக்கு மீண்டும் மிகப்பெரிய வீழ்ச்சி 12-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்தது. சேரசோழபாண்டிய அரசுகள் அழிந்தன. ஏராளமான ஆலயங்கள் இடிக்கப்பட்டன. இருந்த ஆலயங்களும் புரவலரின்றி கைவிடப்பட்டன. அது பண்ணிசை மரபை பேணுவாரின்றி அழியச்செய்தது.

அதன்பின்னர் உருவான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் மீண்டும் கட்டி எழுப்பபட்டன. ஆலயவழிபாடும் பக்தி இயக்கமும் மீண்டும் எழுந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து வந்த இசைமரபுகள் தெற்கே பெரிதும் பரவின. இங்கிருந்த பண்ணிசைமரபும் அந்த வடஇந்திய இசைமரபுகளும் கலந்தன. அந்தக் கலவை இசையின் அடுத்த மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

அன்னமாச்சாரியா

அவ்வாறு உருவான புதிய இசைமரபைத்தான் கர்நாடக இசை என்கிறார்கள். சாரங்கதேவரின் நூலை ஒரு இசைக்கணக்கெடுப்பு என்று சொல்லலாம். அன்றிருந்த எல்லா மரபுகளையும் அவர் தொகுக்கிறார். அதன்பின் தென்னக இசை மரபு மெதுவாக மேலெழுந்தது. சாரங்கதேவர் யாதவமன்னர்களின் அரசவையில் இருந்தவர். காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்.

இந்தியா முழுக்க உருவாகி வந்திருந்த பொதுவான இசைமரபில் இருந்து வேறுபடுத்தும்பொருட்டு கர்நாடக சங்கீதம் என்னும் பெயர் உருவானது. அந்தப்பொதுவான இசைமரபு இந்திய இசை என்னும் பொருளில் ஹிந்துஸ்தானி இசை என்று அழைக்கப்பட்டது.

ஆந்திரத்தில் அன்னமாச்சார்யா [1408-1503] கர்நாடகத்தில் புரந்தரதாசர் [1484–1564] போன்றவர்கள் இந்த புதிய கர்நாடக இசை மரபின் முன்னோடிகள். நாயக்கர் ஆட்சிக்கால பண்பாட்டு மறுமலர்ச்சியின் விளைவுகள் இவர்கள்.

கர்நாடக இசையின் தமிழ்நாட்டு மூவர்

நாயக்கர் ஆட்சியும் மராட்டிய ஆட்சியும் தமிழகத்தில் வேரூன்றியபின் அவர்களின் அரசவைகள் வழியாகவே கர்நாடகசங்கீதம் என்னும் இந்த புதிய இசை மரபு தமிழகத்திலும் கேரளத்திலும் பரவியது. கேரளத்தில் ஷட்கால கோவிந்த மாரார் [1798–1843] சுவாதித்திருநாள் [1813-1846] போன்ற இசைநிபுணர்கள் உருவாகி வந்தனர்.

தமிழகத்தில் தியாகராஜர் [1767–1847] சியாமா சாஸ்திரி [1762-1827] முத்துசாமி தீட்சிதர் [1775-1835] ஆகியோர் கிட்டத்தட்ட அம்மரபின் கடைசி நட்சத்திரங்கள். அவர்களின் நேரடி சீடமரபு இன்றும் தொடர்வதனால் அவர்கள் இன்று மையமான இடத்தைப்பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

தமிழிசை மூவர்

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் மறுஎழுச்சி பெற்றபோது ஆலயத்தை ஒட்டி வாழ்ந்து வந்த தமிழ்ப்பண்ணிசையானது அன்றிருந்த நாட்டார் அம்சங்களை கலந்துகொண்டு புதிய எழுச்சி பெற்றது. அந்த புதுப்பண்ணிசை மரபு தமிழக கர்நாடக இசை உருவாவதற்கான ஒரு முன்னோடி வடிவமாக அமைந்தது. அதில் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தா பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகிய மூவரும் முன்னோடிகள் எனப்படுகிறார்கள்.

நாயக்கர் ஆட்சிக்காலம் என்பது இந்திய பக்தி இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காலம். அதை இரண்டாவது பக்திகாலகட்டம் என்றும் சொல்லலாம். அவர்கள் வளர்த்தெடுத்த மிக முக்கியமான கலைசார்ந்த அமைப்பு என்பது ‘பஜனை மரபு’ ஆகும். பலர் கூடிஅமர்ந்து இறைவனைத் துதித்துப்பாடுவது பஜனை. இது பக்தியை ஒரு சமூக இயக்கமாக ஆக்கியது.

நாயக்க மன்னர்கள் எல்லா ஊர்களிலும் பஜனைமடங்களை கட்டினர். சிறுகிராமங்களில்கூட இவ்வாறு அமைந்த பஜனைமடங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை செயலூக்கத்துடன் இருந்தன. இன்றும்கூட தெலுங்குச்சாதியினர் பஜனையில் பேரார்வம் கொண்டவர்களே. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முந்நூறுக்கும் மேற்பட்ட பஜனைமடங்கள் இருந்தன. அவையெல்லாம் இன்று சிறு பெருமாள்கோயில்களாக மாறிவிட்டன.

கர்நாடக சங்கீதம் என்ற மரபு மக்களிடம் சென்றுசேரவும், நிலைபெறவும் பஜனைமரபு பெரிதும் உதவியது. பஜனைமரபு வழியாக கர்நாடக சங்கீதத்தில் நாட்டார் அம்சங்கள் வந்து கலந்தன. கர்நாடக சங்கீதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு மேடைமுறைமை உருவாவது வரை அது பஜனைபோலவே இருந்தது. பழைய கர்நாடகசங்கீத கச்சேரிகளைக் கேட்டால் பஜனை போல பலர் கூடி பாடுவதை கவனிக்கமுடியும். இன்றுகூட கர்நாடக சங்கீதத்தில் இருந்து பஜனை அம்சத்தை நீக்கமுடியவில்லை.

ஆக, கர்நாடக இசை என்பது பழந்தமிழ் பண்ணிசையின் கூறுகளும், இங்கிருந்த நாட்டாரிசைக்கூறுகளும், வடஇந்திய ஹிந்துஸ்தானி இசையின் கூறுகளும் ஆக்கபூர்வமாக கலந்து உருவான ஒரு தனித்த கலைவடிவம் என்று சொல்லலாம். இதுதான் விரிந்த சித்திரம்.

இச்சித்திரத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளவேண்டும் என்றால் நாயக்கர் காலகட்டத்தில் சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் நிகழ்ந்த புத்தெழுச்சியுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். அவர்களின் கோயில்கட்டும் கலை ஏற்கனவே சோழர்காலம் முதல் இங்கிருந்த தட்சிண பாணி கட்டிடக்கலையுடன் நாகர வேசர பாணி அழகியலையும் இணைத்துக்கொண்டு வளர்ந்தது.

அதேபோல் அக்கால ஓவியக்கலை ராஜபுதனச் சிற்றோவிய மரபு, முகலாய சிற்றோவிய மரபு ஆகியவற்றின் அழகியலை உள்வாங்கிக்கொண்டும் சோழர்கால ஓவியமரபை மாற்றியமைத்தும் புதியதோர் ஓவியக்கலையை உருவாக்கியது. தஞ்சாவூர் ஓவியங்கள் அதற்கு பிரபலமான உதாரணங்கள். இந்த ஓவியக்கலை நாயக்கர் கால ஓவியக்கலை என்றே அழைக்கப்படுகிறது.

அன்று தென்னகம் முழுக்க, ஆந்திரம் கர்நாடகம் தமிழகம் கேரளம் ஆகியவற்றில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நாயக்கர் ஆட்சியே நிலவியது. அவர்கள் கலைகளில் உருவாக்கிய மறுமலர்ச்சி ஒரு பண்பாட்டுச்சாதனை. கர்நாடகசங்கீதம் அதில் ஒன்று. ஆனால் அதில் அன்றுவரை முகலாய தர்பாரில் உருவாகி வளர்ந்து வந்த இசைமரபுகளின் வலுவான செல்வாக்கு உண்டு. இதுதான் பொதுவான வரலாற்றுப்பின்னணி. விரிவாக வாசிக்க ஏராளமான நூல்கள் உள்ளன.

N. Ganesan

unread,
Nov 8, 2014, 7:59:22 AM11/8/14
to mint...@googlegroups.com
On Friday, November 7, 2014 6:28:12 PM UTC-8, ராம் காமேஸ்வரன் wrote:
கர்நாடக இசையைப் பற்றி ஜெயமோகன் வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இது: 

ஜெயமோகன் கட்டுரைக்கு நன்றி. தமிழ் இலக்கிய வரலாறு பல ஆயிரம் பக்கங்கள்
கொண்டு பல்தொகுதிகளை எழுதியவரும், ஈங்கோய்மலை எழுபது அழிந்த பாடல்களை
செப்பறை ஆதீனத்தில் ஏடுகளைக் கண்டவரும், சைவசித்தாந்த நூல்கள் பலவற்றை
அச்சிட்டவரும், வையாபுரிப்பிள்ளை மாணவரும், இரு செம்மொழிகளிலும் பாண்டித்யம்
பெற்றவரும், காசி பல்கலையில் சைவசித்தாந்தம் கற்பித்தவரும் ஆன
மு. அருணாசலம் அவர்களின் “கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள்” நூல் (மீண்டும்) படித்தேன்.

காவை வடமலையப்பபிள்ளை ஊர்பற்றி சொ.வி. கேள்விக்குச் சொல்லியிருந்தேன்.
தமிழ்க் கீர்த்தனையில் தேதியிட்ட கீர்த்தனை ஒல்லாந்தர் கடலில் எறிந்த
திருச்செந்தூர் முருகனை காவை பிள்ளையனவர்கள் மீட்டபோது பாடியது - கி.பி. 1653-ல்.

கி. பி. 1525-ல் பிறந்தவர் முத்துத்தாண்டவர். அவர் தான் 16-ஆம் நூற்றாண்டிலும்,
17-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கர்னாடக இசைக்கு கீர்த்தனை என்ற வடிவில்
இசைப்பாடல்களை முதலில் பாடியவர். தமிழ்நாடு மேளக்காரர்கள் தாம்
தமிழிசையை கீர்த்தனையாக பரிணமிக்கச் செய்து முதலில் பாடல்கள் தந்தோர்.
இவ்வழியிலேயே தான் பின்னர் தியாகையர், தீட்சிதர், சாமாசாஸ்திரி விரிவாக
தங்கள் தாய்மொழியிலும், சம்ஸ்கிருதத்திலும் பாடினார்கள். 

சீகாழி மூவர் எனப்ப்படும் கர்நாடக சங்க்கீதத்தின் பிதாமகர்கள் - தஞ்சை மாவட்ட
நட்டுவனார்களுக்கு அரசு அழகான மண்டபம் கட்டியுள்ளது - 1.5 கோடி செலவில்:

முத்துத்தாண்டவர் மரபில் வந்த திருப்பாம்புரம் இசைப் பேரா. சண்முகசுந்தரம்,

தேவரநாமா எனப்படும் புரந்தரதாசர் பாடல்கள் கீர்த்தனை வடிவங்கள் அல்ல
என்கிறாராம் அவர் வரலாற்றை ஆராய்ந்த ராமச்சந்திரராவ் தன் நூலில்.
இதுபோல தான் அன்னமய்யாவின் வேங்கடாசலபதி மீதுபாடியவையும் என்கிறார்.

மதங்கமுனியின் ப்ருகத்தேசியிலும், பின்னர் பூலோகமல்லன் சோமேஸ்வரன்
எழுதிய சங்கீதரத்நாகரம் நூலிலும் தேவாரவர்த்தனி என்று தமிழிசைப்பண்கள்
குறிப்பிட்டுள்ளனர். இசைமரபு ஒருமொழியோடு கூடவே 2000 வருஷமாக
வளர்ந்தது தமிழில் தான். இம்மரபு தன் சகோதரிபாஷைகளின் சங்கீத வளர்ச்சிக்கும்
உதவியது விஜயநகர காலத்திலே. 

தமிழிசையும், கர்நாடக இசையும் வேறல்ல. தமிழிசைதான் கர்நாடக இசையாக
வளர்ந்தது என்கிறார் மு. அருணாசலம். ஆட்சி மாறிய காலத்தில் பாட்டுகளின் மொழிகள் மாறின.

இந்தியா என்னும் பெயருடன் ஒப்பிடுகிறார். ஈரான் போன்ற நாடுகளில் வாழ்ந்தோர்
வசதிக்கு சிந்து நதியின் பெயரால் இந்தியா/ஹிந்துஸ்தான் என்றழைத்ததைபோல்
வடநாட்டு சங்கீதம் (சுல்தான்கள், முகலாய மன்னர்கள் ஆட்சியால் மத்தியகிழக்கு
நாடுகளின் இசையால் மாறியது), அதனின்றும் வேறுபடுத்த தென்னாட்டு சங்கீதத்தை
கர்நாடகசங்கீதம் எனலாயினர். அப்போது தென்னாட்டின் தலைநகர் ஹம்பியிலே
இருந்தததால். வடக்கத்திய சங்கீதம் மிக மாறியது துருக்கர்களின் ஆட்சியிலே,
ஆனால், தென்னாட்டு தமிழிசை (கர்நாடக சங்கீதம்) அப்படி மாறவில்லை.
எனவேதான், ’பழமையானது’ என்று குறிக்க கர்நாடகம் என்ற சொல்லை நாம்
ஆள்கிறோம். இது இசையியலில் இருந்து பொதுவாழ்க்கைக்கு வந்த சொல். 

விரிவு பின்னர். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 8, 2014, 8:15:36 AM11/8/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Thursday, November 6, 2014 5:47:52 PM UTC-8, N. Ganesan wrote:

On Tuesday, November 4, 2014 5:12:40 AM UTC-8, Dev Raj wrote:
Thanjavur Brinda was a grand daughter of the venerable Veena Dhanammal, who was an institution unto herself. She was born on November 5.It is not often that one's contemporaries and equals in reputation and age are willing to become learners, and T Brinda was one such person. Dhanammal was a veritable treasurehouse of compositions, and T Brinda was not far behind. 

mEru samAna dhIra varada raghuvIra .......... 

T. Brindha playing the veena -  "amba neelaambari" by Tanjore Ponniah Pillai, 1969, Seattle, USA.

நீலாம்பரி அராகத்தில் முத்துத்தாண்டவர் கீர்த்தனை (16-ஆம் நூற்றாண்டு):

N. Ganesan

unread,
Nov 8, 2014, 8:13:26 PM11/8/14
to mint...@googlegroups.com

On Friday, November 7, 2014 6:28:12 PM UTC-8, ராம் காமேஸ்வரன் wrote:
கர்நாடக இசையைப் பற்றி ஜெயமோகன் வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இது:

புரந்தரதாசரின் பாடல்கள்:

இவை முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளைப் போல பல்லவி, அனுபல்லவி, சரணம் கொண்டவை அல்ல.
அதற்கும் முந்தைய கர்நாடக இசை.

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages