Fwd: ”பள்ளு இலக்கியம் - முக்கூடற் பள்ளு” - சிறப்புரை

346 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 16, 2014, 6:19:06 AM7/16/14
to mintamil, vallamai, தமிழ் மன்றம், muththamiz, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, tamil_ulagam

அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம்.
இத்துடன் “பள்ளு இலக்கியம் - முக்கூடற் பள்ளு” பற்றிய உரை குறித்த என்னுடைய செய்தியை இணைத்துள்ளேன். பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


  “பள்ளு இலக்கியம் - முக்கூடற் பள்ளு” - திரு சொ.வினைதீர்த்தான் உரை

12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் இது எழுபத்து நான்காவது கூட்டமாகும். காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், இலக்கண நூல் வரிசை அனைத்தும் பேசப்பட்டுத் தற்போது சிற்றிலக்கியங்கள் வரிசை தொடங்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாக வகுப்பறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் ‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்’ “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி”, ‘காயக் கண்டது சூரிய காந்தி,’ என்று தொடங்கும் மூன்று பாடல்களே தெரிந்த நிலையில் இணையத்திலிருந்து பள்ளு இலக்கியம் பற்றிய பதிவுகளைப் பார்த்தும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தளத்திலிருந்த உரையைப் படித்தும், முனைவர் நாகநாதன் உதவிய புலியூர்க் கேசிகன் உரையுடன் உள்ள செண்பகா பதிப்பக நூலை உள்வாங்கியும் தன் உரையை அமைத்துக்கொண்டதாகக் கூறித் திரு வினைதீர்த்தான் தன் உரையைத் தொடங்கினார்.

அவர் உரையில் மேலும் கூறிய செய்திகள் வருமாறு: 
பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.

இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.
 
மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.
.
1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை 
2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன். 
3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி. 
5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை. 
6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்
.
12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,

சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

நண்பர்களைக் கீழ்க்கண்ட தளத்தில் நூலைப் படிக்க வேண்டி நன்றி தெரிவித்து உரை நிறைவுசெய்யப்பட்டது.  http://www.tamilvu.org/library/libindex.htm
.
1.சங்கத்தின் செயலர் திரு ஜனநேசனுடன் திரு வினைதீர்த்தான் 2.திரு சொ.வினைதீர்த்தான் துணைவியார் திருமிகு அன்னபூரணியுடன் 3.சங்கத் தலைவர் திரு மாதவன் திரு வினைதீர்த்தானுக்கு நினைவுப்பரிசு வழங்குதல் 4.கற்றறிந்த ஆன்றோர் அவையினர் 5.கருத்துரைக்கும் பேரா. ஆறு.மெய்யாண்டவரும் முன்னிலை வகிக்கும் காப்பியக் கவிஞர் மீனவனாரும் உள்ள ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.




IMG_8587.JPG
IMG_8584.JPG
IMG_8586.JPG
IMG_8597.JPG
IMG_8594.JPG
IMG_8593.JPG

Pandiyaraja Paramasivam

unread,
Jul 16, 2014, 11:55:02 AM7/16/14
to tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, mutht...@googlegroups.com, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, tamil_...@googlegroups.com
பாராட்டுக்கள் ஐயா. தங்கள் உரையின் முழுப்பகுதி கிடைக்காவிடினும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக ஆழமான பார்வையைக் கொண்டவை. மூலத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவை. 1958-இல் SSLC-யில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களைப் படித்திருக்கிறேன். ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி -- ராகத்தோடு சொல்லிக்கொடுத்தார் தமிழாசிரியர் வீ.ப.நடராசன். இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இளமைக்கால நினைவுகளைத் தோண்டியெடுத்து அனுபவிக்க வைத்த தங்கள் செய்திக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 16, 2014, 12:54:42 PM7/16/14
to தமிழ் மன்றம், mintamil, vallamai, muththamiz, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, tamil_ulagam, Dev Raj, Pandiyaraja Paramasivam, Jothi Themozhi, பார்வதி இராமச்சந்திரன்., Nagarajan Vadivel
2014-07-16 21:24 GMT+05:30 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>:
பாராட்டுக்கள் ஐயா. தங்கள் உரையின் முழுப்பகுதி கிடைக்காவிடினும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக ஆழமான பார்வையைக் கொண்டவை. மூலத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவை. 1958-இல் SSLC-யில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களைப் படித்திருக்கிறேன். ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி -- ராகத்தோடு சொல்லிக்கொடுத்தார் தமிழாசிரியர் வீ.ப.நடராசன். இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இளமைக்கால நினைவுகளைத் தோண்டியெடுத்து அனுபவிக்க வைத்த தங்கள் செய்திக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா


தங்கள் இனிய சொற்களுக்கு நன்றி ஐயா.
பாடல்கள் பாடப்பட வேண்டிய இராகங்கள் பைரவி,காம்போதி,சங்கராபரணம்,ஆனந்த பைரவி,கல்யாணி, புன்னாகவராளி,மத்தியமாவதி,நாட்டை என்று பல இராகங்களைக் குறித்துள்ளார்கள். எனக்குப் பண்கள் தெரியவில்லையே என்கிற என் போதாமை குறித்த எண்ணம் எழுந்தது.
திருவாளர்கள் பேரா.நாகராசன், தேவ்,தேமொழி,பார்வதி யாராவது நண்பர்கள் முக்கூடற் பள்ளு பாடல் யுட்யூப் சுட்டி போன்று தேடிப் பதிவிட்டால் மகிழ்வேன்.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான்.    

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 17, 2014, 1:42:18 PM7/17/14
to vallamai, mintamil

2014-07-17 21:31 GMT+05:30 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1790களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.

கருத்துக்கு நனறி திரு சுப்பிரமணியன். கதிரா மலைப் பள்ளு தரவிறக்கம் செய்து சில பகுதிகள் படித்தேன்.

முக்கூடற் பள்ளுவில் காவை அம்பலவாணர் என்பாரின் பெயர் குRiப்பிடப்படுகிறது. அவர் கிளையில் வந்த வடமலைபக் கொழுந்து பிள்ளை பெயரும், சாத்தூர் பெரிய நம்பி அய்யங்கார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாட பேதங்களை - திருமலை நராதிபதி - திருமலை நாயக்கரையும், சொக்கலிங்கேந்திர முகில் - சொக்கநாத நாயக்கரையும் சுட்டுகின்றனவென்றும் பாடபேதங்கல் ஆராயப்பட வேண்டுமென்றும் உரையில் படித்தேன்.

1.காவை அம்பலவாணர் என்ற பெயரில் காவை என்ற சொல் எதனைக் குறிக்கிறது?  
2.வடுகர் வைணவரா?
3.1780ல் நாயக்கர் ஆட்சியா? மன்னர் யாரென்றும் அறிய ஆவல்.
நன்றி.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 18, 2014, 5:16:14 AM7/18/14
to muththamiz, mintamil, housto...@googlegroups.com, maza...@googlegroups.com, தமிழ் மன்றம், vallamai, Subashini Tremmel, coral shree


2014-07-17 21:10 GMT+05:30 Sankarkumar <ommur...@gmail.com>:

ஆழ‌மான‌ க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌ இந்த சுருக்க‌த்தைப் ப‌டித்த‌தும், முழு உரையையும் கேட்க‌ ஆவ‌லாக‌ இருக்கிறேன். ஒலிப்ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருப்பின், அத‌னை இங்கு இடுமாறு என் ந‌ண்ப‌ரை ப‌ணிவுட‌ன் வேண்டுகிறேன்.

[இல்லேன்னா, முழு உரையையும் இங்கு த‌ட்டச்சு செய்து இட‌ணும்னு எங்க‌ தேனு பாணில‌ மிர‌ட்டுகிறேன்!:))]


அருமை நண்பரின் இனிய சொற்களுக்கு மிக்க நன்றி. நான் குறிப்பிட்ட 12 கருத்துக்களையும் ஒவ்வொன்றாகப் பாடல் குறிப்புக் கொடுத்து எழுத தங்கள் அன்பார்ந்த மிரட்டல் ஊக்குவிக்கின்றது. விரைவில் எழுத முயல்கிறேன்.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான்.



.1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை 2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் 

மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே 
என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது 
என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன். 


3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் 
கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி. 5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் 
காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் 
பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை. 


6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி 
கட்டளைகளுக்கும்,
பிறவற்றிற்கும் சென்ற நிலை.7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் 
குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் 
அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
 
10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய 
வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
 
11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். அங்கு இனக்கவர்ச்சியால் எழும் 

சிக்கல்கள்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 18, 2014, 12:30:24 PM7/18/14
to vallamai, mintamil


2014-07-18 2:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

"தமிழிலக்கிய நயம் பாராட்டல்" என்று அரைத்த மாவையே அரைக்காது சிற்றிலக்கியங்கள் வகைகளில் ஒன்றைப் பற்றி உரை அளித்த சொ.வி.  ஐயாவிற்கு வாழ்த்துகள்.

புதியதகவல்கள் அறிந்தேன்..நன்றி. தொடர்க உங்கள் பணி. 
 
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திருமிகு தேமொழி. எனக்குப் படிக்க நல்வாய்ப்பு. 

கூட்ட முடிவில் பார்வையாயளர்கள் கருத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்படும். நான் காரைகுடியில் இருக்கும்போது மாதக் கூட்டங்களுக்கு செல்லும்போது அந்த மாதத்திற்கான் இலக்கியம் பற்றி இணையத்தில் பார்த்துவிட்டே செல்வேன். 
த.மு.எ.கலைஞர் சங்கத்தினர் பல ஊர்களில் ஆரவாரமின்றிச் சிறப்பான பணி செய்கிறார்கள். இலக்கியக் கூட்டங்களில் எந்தவிதமான இயக்கச் சார்பும் இராது.
நன்றி.
சொ.வினைதீர்த்தான். 

..

N. Kannan

unread,
Jul 18, 2014, 10:44:55 PM7/18/14
to மின்தமிழ்
2014-07-19 0:30 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
கூட்ட முடிவில் பார்வையாயளர்கள் கருத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்படும். நான் காரைகுடியில் இருக்கும்போது மாதக் கூட்டங்களுக்கு செல்லும்போது அந்த மாதத்திற்கான் இலக்கியம் பற்றி இணையத்தில் பார்த்துவிட்டே செல்வேன். 
த.மு.எ.கலைஞர் சங்கத்தினர் பல ஊர்களில் ஆரவாரமின்றிச் சிறப்பான பணி செய்கிறார்கள். இலக்கியக் கூட்டங்களில் எந்தவிதமான இயக்கச் சார்பும் இராது.
நன்றி.
சொ.வினைதீர்த்தான். 

எனக்கு இன்னும் கொடுப்பினை இல்லை.

செட்டிநாட்டின் செம்மொழி கேட்கும் வாய்ப்பு எப்போது வரும்?

நா.கண்ணன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 18, 2014, 11:42:43 PM7/18/14
to mintamil
2014-07-19 8:14 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

செட்டிநாட்டின் செம்மொழி கேட்கும் வாய்ப்பு எப்போது வரும்?
 
தங்கள் தமிழகப்பயணம் பற்றியும் நற்பணி குறித்த விவரங்களையும் மடலில் கண்டேன். பயணம் சிறக்க வேண்டுகிறேன். தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.

N. Ganesan

unread,
Jul 26, 2014, 9:45:44 PM7/26/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, Santhavasantham, podhuvan sengai
On Thursday, July 17, 2014 10:42:15 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

2014-07-17 21:31 GMT+05:30 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1790களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.

கருத்துக்கு நனறி திரு சுப்பிரமணியன். கதிரா மலைப் பள்ளு தரவிறக்கம் செய்து சில பகுதிகள் படித்தேன்.

முக்கூடற் பள்ளுவில் காவை அம்பலவாணர் என்பாரின் பெயர் குRiப்பிடப்படுகிறது. அவர் கிளையில் வந்த வடமலைபக் கொழுந்து பிள்ளை பெயரும், சாத்தூர் பெரிய நம்பி அய்யங்கார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாட பேதங்களை - திருமலை நராதிபதி - திருமலை நாயக்கரையும், சொக்கலிங்கேந்திர முகில் - சொக்கநாத நாயக்கரையும் சுட்டுகின்றனவென்றும் பாடபேதங்கல் ஆராயப்பட வேண்டுமென்றும் உரையில் படித்தேன்.

1.காவை அம்பலவாணர் என்ற பெயரில் காவை என்ற சொல் எதனைக் குறிக்கிறது?  

காவை என்பது பொதுவாகக் குறிப்பது - திருவானைக்கா. ஆனால், இங்கே குறிப்பிடுவது காவனூர்
என்னும் மதுரை பரங்குன்று அருகே உள்ள பழைய சைவவேளாளர் கிராமம். அதுவே காவை அம்பலவாணத்தம்பிரானின் ஊர்.
தமிழ்நாட்டில் பல காவனூர்கள் உண்டு. இச் செய்தியினை வையாபுரிப்பிள்ளையின் மாணவர்
மு. அருணாசலம் ஐயா எழுதியுள்ளார்கள். 1940-ல் மிகச் சிறந்த பதிப்பாக முக்கூடற்பள்ளை அச்சிட்டவர்
அவரே. அப் பதிப்பு என்னிடம் உள்ளது.

 முக்கூடற்பள்ளு - பல பதிப்புகள் கண்ட பிரபந்தம். 1680-ல் என்னெயினாப் புலவர்
பாடியது. மிகச் சிறந்த பதிப்பு மு. அருணாசலம், 1940. பின்னர்
பேரா. ந. சேதுரகுநாதன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1957, (2-ம் ப. 1973),
எளிய பதிப்பு: புலியூர்க் கேசிகன் (பாரி நிலையம்). மர்ரே எஸ். ராஜம்
பதிப்பு, சந்தி, வார்த்தை பிரித்தும் உண்டு.

தற்போதைக்கு, கதிர் முருகு பதிப்பு, சாரதா பதிப்பகம் வாங்கிக்கொள்க.
241 பக்கத்தில் விரிவாக உரையுடன் உள்ளது.
http://www.noolulagam.com/product/?pid=5346

நா. கணேசன்

வித்துவான் செங்கை பொதுவன் மு. அருணாசலம் அவர்களின் நூலில் இருந்து தரும் தகவல் உதவும்

அம்பலநாதத் தம்பிரான் (காவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவை என்னும் ஊரில் வாழ்ந்த அம்பலவாணத் தம்பிரான் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப்பெரியார். கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர். காவை என்பது திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள 'காவனூர்' என்னும் ஊர். பழுதை கட்டி-சம்பந்த முனிவரின் மாணாக்கருள் ஒருவர். சீர்காழியில் வாழ்ந்த இந்தச் சம்பந்தரிடம் ஞானம் பெற்று அவர் சமாதி அடைந்த பின் தம் ஊருக்கு வந்து பல மாணாக்கர்களை உருவாக்கி அவர்களுடன் வாழ்ந்தார். அம்பலவாணத் தம்பிரானை 'அம்பலவாணர்' எனவும் அழைக்கப்பட்டார். இவரைக் காவை அம்பலநாதத் தம்பிரான் எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர் பாடிய சைவ நூல்கள் பல.

பிராசாத அகவல்சிவப்பிரகாசக் கொளுசத்தி நிபாத அகவல்உருப சொரூப அகவல், முதலானவை குறிப்பிடத் தக்கவை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அம்பலநாதத் தம்பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவை அம்பலநாதத் தம்பிரான் 14ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு முற்பகுதி வரை வாழ்ந்தவர். தமிழ்நாடு திருப்பரங்குன்றத்தைஅடுத்த காவனூர் (அல்லது காவை) இவரது சொந்த ஊர். இவர் சிவப்பிரகாசத்திற்குக் குறள் வெண்பாவில் 100 கொளுவும், பகுத்துணர்த்தும்கலிவெண்பாவும் பாடியவர். பிரசாத அகவல், உரூபசொரூப அகவல், திருவருட்பயன் உதாரணக் கலித்துறை ஆகியவற்றை இயற்றினார்[1]

அம்பலநாதத் தம்பிரான் சீர்காழி பழுதை கட்டிச் சம்பந்த முனிவரின் மாணாக்கர். மதுரை சிவப்பிரகாசரால் போற்றப்பட்டவர். சிவப்பிரகாசரின் இருபாவிருபது உரை மூலம் இவரது சீடர் மதுரை ஞானப்பிரகாசத் தம்பிரான் என அறியப்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. ↑ Jump up to:1.0 1.1 இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, பொ. பூலோகசிங்கம்1990கொழும்பு


 
2.வடுகர் வைணவரா?

தமிழ்நாட்டை ஆண்ட வடுகநாயக்க மன்னர்கள் (மதுரை, தஞ்சை, செஞ்சி) அனேகமாக வைணவர்கள்.

 
3.1780ல் நாயக்கர் ஆட்சியா? மன்னர் யாரென்றும் அறிய ஆவல்.

1680-ல் மதுரையில் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலம்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 27, 2014, 3:24:34 AM7/27/14
to vallamai, mintamil, Santhavasantham
செய்திகளுக்கும் விவரங்களுக்கும் நன்றி திரு கணேசன். நன்றி திரு தென்காசி சுபிரமணியன்.

1680 ஆட்சி பற்றி அறிந்துகொண்டேன்.
காவை அம்பலவாணர் என்பவர் திரு கணேசன் தந்துள்ள அம்பலநாதத்தம்பிரான் என்பவரில்லை எனக் கருதுகிறேன். ஏனெனில் நூல் குறிப்பிடுபவர் குடும்பம் உடையவர். இவர் வள்ளல். இவருடைய கிளையில் வந்தவர் வடமலையப்ப பிள்ளை.

 “பாவலர்க்கு உபகாரி காவையும் பலவாணான்
    பலகிளையும் தழைக்கவே
    கூவாய் குயிலே”      என்பது பாடல். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2014-07-27 7:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, July 17, 2014 10:42:15 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
2014-07-17 21:31 GMT+05:30 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:

ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1690களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.

N. Ganesan

unread,
Jul 27, 2014, 11:02:10 AM7/27/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Sunday, July 27, 2014 12:24:32 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
செய்திகளுக்கும் விவரங்களுக்கும் நன்றி திரு கணேசன். நன்றி திரு தென்காசி சுபிரமணியன்.

1680 ஆட்சி பற்றி அறிந்துகொண்டேன்.
காவை அம்பலவாணர் என்பவர் திரு கணேசன் தந்துள்ள அம்பலநாதத்தம்பிரான் என்பவரில்லை எனக் கருதுகிறேன். ஏனெனில் நூல் குறிப்பிடுபவர் குடும்பம் உடையவர். இவர் வள்ளல். இவருடைய கிளையில் வந்தவர் வடமலையப்ப பிள்ளை.

 “பாவலர்க்கு உபகாரி காவையும் பலவாணான்
    பலகிளையும் தழைக்கவே
    கூவாய் குயிலே”      என்பது பாடல். 

இல்லை என நினைக்கிறேன் ஐயா. பள்ளின் உரைகாரர்கள் காவை தேசிகரின் உறவினர் என்று பொருள்தருகின்றனர்.

பலவாணான் - 'பலவானான்'என்றிருக்கும் என நினைக்கிறேன். காவை அம்பலவாணர் உறவினர்  வடமலையப்பபிள்ளை. இவரை
இரசை வடமலையப்ப பிள்ளையன் என்பர். இவர் கடலில் குதித்து முக்குவர்களுடன் சேர்ந்து மீட்டதுதான்
ஒல்லாந்தர்கள் கடலில் வீசிய திருச்செந்தூர் முருகன். கர்நாடக சங்கீதத்தில் இன்று பிரபலமாக இருக்கும்
தியாகையார் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆதியாய் தமிழில் கீர்த்தனை வடமலையப்பபிள்ளையன்
செந்தில் முருகனை வெள்ளைக்காரன் கடலில் வீசியதை முக்குவரிடன் சேர்ந்து மீட்டதனால் எழுந்த கீர்த்தனை
தென்னிந்திய கச்சேரிகளுக்கு அடிப்படை. இன்று டிவி, ரேடியோ கச்சேரிகளில் பாடும் தெலுங்குப் பாடல்கள் Staple diet.

குடும்பப் பள்ளர்களுக்கு புரத வண்ணார்கள் உண்டு. மூன்று சமூகங்களின் உறவாடல்களை விளக்கும்
கதையில் தடிவீரய்யன் என்ற கடவுள் அண்மை நூற்றாண்டுகளாய் உருவாகியுள்ளார். தடிவீரய்யன் வரலாற்றை
இங்கே வாசிக்கலாம்:

தடிவீரசாமி கதை


பிற பின்னர்!
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages