திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற் பாரப யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.
ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே!
ஆயின் இதே திருப்புகழ், “கௌமாரம்”
(http://www.kaumaram.com/thiru_uni/tpun0944.html) தளத்தில் கொங்கு
நாட்டு திருப்பதியில் (அவிநாசி) அமரும் முருகன் மேல் பாடப்பட்டுள்ளதாகச்
சொல்கிறது!
ஒருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்
தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.
இதில் எது உண்மை?
திருப்புகழின் கடைசி வரிகளை மாற்றியது யார்?
எத்திருப்பதியின் மீது பாடப்பட்டது என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது?
அன்புடன்
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற் பாரப யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.
இதில் எது உண்மை?
திருப்புகழ் ‘திருத்திய பதிப்பு’ (Critical Edition) என்று உண்டா?
கம்ப இராமாயணம், திருமந்திரம் திருத்திய பதிப்புகள் 20ம்
நூற்றாண்டில்தான் வெளி வருகின்றன. பாரதி திருத்திய பதிப்பு இன்னும்
வரவில்லை என்பது டாக்டர் விஜயபாரதியின் கணிப்பு.
நா.கண்ணன்
கம்ப இராமாயணம், திருமந்திரம் திருத்திய பதிப்புகள் 20ம்
நூற்றாண்டில்தான் வெளி வருகின்றன. பாரதி திருத்திய பதிப்பு இன்னும்
வரவில்லை என்பது டாக்டர் விஜயபாரதியின் கணிப்பு.
நா.கண்ணன்
திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற் பாரப யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.
ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே!
ஆயின் இதே திருப்புகழ், “கௌமாரம்”
(http://www.kaumaram.com/thiru_uni/tpun0944.html) தளத்தில் கொங்கு
நாட்டு திருப்பதியில் (அவிநாசி) அமரும் முருகன் மேல் பாடப்பட்டுள்ளதாகச்
சொல்கிறது!
ஒருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்
தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.
இதில் எது உண்மை?
திருப்புகழின் கடைசி வரிகளை மாற்றியது யார்?
எத்திருப்பதியின் மீது பாடப்பட்டது என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது?
இந்தப் பதிப்புகள் வெளியாதன் பிறகு ஆறு திருப்புகழ் பாடல்கள் கிடைத்தன. இவற்றையும் சேர்த்து, சேலத்தைச் சேர்நத சுவாமி குஹாநந்தா சபை வெளியிட்டிருக்கிறது. இதில் வைப்புமுறை சற்றே மாறுபட்டிருக்கிறது. சில தெளிவில்லாத பாடங்களும் காட்டப்பட்டுள்ளன. பாடபேதங்களும் தரப்பட்டுள்ளன.
குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள். கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள். ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள்
வம்புங் கோபமு மேவசு ராதிகள்
. வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
. மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
. ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
. தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
. இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
. மன்றுன் பால்வர மோகம தாவுற வனைவோனே
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
. எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
. செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
திருவனந்தபுரம் பல்கலைக் கழக நூலகத்தில் இருக்கும்
14 சுவடிகளைப் பரிசோதித்து, திருப்புகழ் ஆய்வாளர் வலையப்பேட்டை
கிருஷ்ணன் அண்மையில் கண்டுபிடித்து, அச்சேற்றிய ஒரு திருப்புகழ்.
(சுவடிகளில் இன்னும் சில புதிய பாடல்கள் உள்ளன; ஆனால், ஓலைகள்
சிதைவுற்றதால், அவை முழுமையாக இல்லை.இங்குள்ளது முழுமையாகக் கிடைத்த
ஒன்று.)
"செங்குன்றாபுரம்" என்பது கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள செங்கனூர்
என்பது என்கிறார் கிருஷ்ணன்.
பசுபதி
===================================================திரு காளைராஜன் அவர்கள் பின்பற்றுவது எந்தப் பதிப்பை என்று தெரிந்தால் அதன் பிறகு பாடத்தைப் பற்றி சிந்திக்கலாம்.
முருகனுக்குத் தலமாவது இதயத் தலம் ஒன்றே. அதுதான் ஒவ்வொரு தலத்திலும் பிரகாசிக்கிறது; அங்கிருந்து இதயத் தலத்துக்குள்ளும் தாவுகிறது.
> முருகனுக்குத் தலமாவது இதயத் தலம் ஒன்றே. அதுதான் ஒவ்வொரு தலத்திலும்
> பிரகாசிக்கிறது; அங்கிருந்து இதயத் தலத்துக்குள்ளும் தாவுகிறது.
>
> முருகனடியார்களுக்குத் தலவேறுபாடு கிடையாது.
> --
அன்பின் ஹரிகி.
காளைராஜனின் ஒருங்கிணைந்த திருப்பூவணப் புகழ்மாலைக்கு இப்பாடல்
தேவைப்படுகிறது. திருப்பூவனத்தில், ‘கழுவேற்றும் பொட்டல்’ ஒன்று உள்ளது.
//இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கப்பட்டது,
இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது, இவ்வூர்
திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது, இவ்வூர்
திருவிளையாடற்புராணத்திலும். திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே
பாடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், மேலும். திருப்பூவணத்தில்
10நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6ஆம்நாள் திருவிழாவாகக்
கொண்டாடப்படுவதும் கருத்திற் கொள்ள வேண்டியதாய் உள்ளது,// (காளைராஜன்)
இதையெல்லாம் கொள்ளும் போது அப்பாடல் திருப்பூவணம் சுப்ரமணியர் மேல்
பாடியதாக இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் எந்தப்பதிப்பில் இப்பாடல் உள்ளது என்பது இப்போது முக்கியத்துவம்
பெறுகிறது. திருப்புகழ் பதிப்புகள் பற்றிய உங்கள் இடுகை முக்கியமானது.
இன்னும் புதிய திருப்புகழ்கள் வந்த வண்ணம் இருப்பது நமது தேடல்
முற்றுப்பெறவில்லை என்பதைச் செவ்வனே சுட்டுகிறது.
நா.கண்ணன்
On Jan 11, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> > குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள்.
> > கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக
> > கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள்.
> > ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள்
>
> 2003-2005 காலகட்டத்தில் பேராசிரியர் பசுபதி அவர்கள், ஒரு புதிய திருப்புகழ்
> என்று சந்த வசந்தத்தில் இந்தப் பாடலை இட்டார்கள், யாராவது உரை எழுதவேண்டும்
> என்ற கோரிக்கையுடன்.
திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en
அதற்கொருநாள் முன்னம், அகத்தியரில் அவரது ஈடு இது:
http://www.treasurehouseofagathiyar.net/41500/41595.htm
இந்தியா, (ஐரோப்பாவிலும் ஏதாவது சுவடி இருக்கலாம்) - எல்லா திருப்புகழ்
சுவடிகளில் தேடினாலும் சில புதிய திருப்புகழ்கள் கிடைக்கும்.
இதுபற்றி மு. அருணாசலம் எழுதியுமிருக்கிறார்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
[1] ஜனவரி 2007-ல் சந்தவசந்தம் திஸ்கியில் யாஹூகுழுவாக இயங்கிக்
கொண்டிருந்தது,
தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en
Excellent!The point is: for these 4(?) songs , there are no urai-s by Chengalvaraya Pillai. So nice to do for all of them....Can I publish this in my Blog....one of these days?
Pas
தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
உங்கள் மடலுக்குத் தானே பதில் இட்டுள்ளேன். இப்பாடலை அனுப்பிய
தேதி குறிப்பிட்டிருக்கிறேனே.
இங்கே பார்க்கவும்:
https://groups.google.com/group/santhavasantham/msg/56e96b8de0019fec
நா. கணேசன்
On Jan 12, 5:05 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
> > 2, 2007 [1]
> >https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?...
> மறுசொற்காதுகள்...
>
> read more »
On Jan 12, 5:17 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
> > தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
> > பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
> > கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
>
> சந்தவசந்தம் யுனிகோட் குழுவாக மாறியதற்கு ராஜ தியாகராஜனின் உழைப்பு காரணம்.
>
அன்பு ஹரிகி,
நானும் உழைத்திருக்கிறேன். தங்களுக்குத் தெரியாது போலும்.
இலந்தை, ராஜ தியாகராஜனை கேட்டால் தெரிந்துகொள்ள முடியும்.
நா. கணேசன்