http://temple.dinamalar.com/news_detail.php?id=672
"ஹரிவராசனம்
இரவில் கோயிலின் நடை சாத்தப்படுவதற்கு முன்பு பாடப்படுவது ஹரிவராசனம்.
இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாடலாக
ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள், கோயிலில், சுவாமி ஐயப்பனின் சன்னதியில் நின்று
கொண்டு, அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி வந்தார். சுவாமி
விமொசானனந்தா அவர்களின் முயற்சியால், கோயிலின் தந்திரி மற்றும்
மேல்சாந்தி அவர்கள், இப்பாடலை ஒரு தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள்
கொண்டதாகும். அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப் பாடலின்
பதிப்புகள் பல இருந்தாலும் கோயில் நடையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலே
ஒலிபரப்பப்படுகின்றது."
ஸ்ரீனிவாச ஐயர் எனக் குறிப்பிடப்படுபவர் செம்மங்குடி
(ஜேசுதாசின் குரு) என நினைக்கிறேன். ஸ்வாமி விமோசனானந்தா யார்?
தெரிந்துகொள்ள ஆவல்.
அன்புடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Feb 4, 8:07 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> சிறந்த பகிர்வு திரு கணேசன். பதிவில் உள்ள பாடல் வரிகளைப் கேட்க்கிற சமயங்களில்
> எல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறது.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>
ஐயப்பன் தாலாட்டைக் கேட்க:
http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w
தேவ போன்றோர் இதன் சரியான வடிவத்தை
எழுதித்தந்தால் நன்றாயிருக்கும்.
இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகள் - இரா. முருகன், ... -
தருகிறேன்.
கணேசன்
> 2011/2/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
Sabarimala is located in the deep jungle area, and in the past a few
prayful devotees managed the difficult pilgrimage. The temple opened
during the Sabarimala season (November to January) but otherwise was
only open on the first day of every Malayalam month. VR Gopala Menon,
from Alapuzha used to accompany Thirumeni Eashwaran Namboothiri, the
Melshanthi (head priest), to Sannidhanam every time, and would stay
there by himself even when the temple was closed, remaining
undisturbed by the wild animals. Later, when Devaswom Board was
formed, it is believed that he was asked to move out. He eventually
died at a tea estate at Vandiperiyar.
Gopala Menon used to recite "Harivarasanam" with devotion during his
time at Sannidhanam, and when Thirumeni Eashwaran Namboothiri heard
about the passing away of the Revered Menon, he was deeply saddened.
At the end of the day's rituals, the Namboothiri was about to close
the doors of the Sannidhanam when he remembered the dedication and
sacrifice of the Revered Gopala Menon and he then began to recite
"Harivarasanam"' starting a nostalgic tradition that remains unbroken
till date.
http://www.facebook.com/pages/Harivarasanam/143878135626393
dev
தமிழ் மரபு விக்கிக்கு ஹரிவராசனம் தாலாட்டு பற்றி
ஒரு கட்டுரை எழுதி சுபாஷிணி, வினோதுக்கு அனுப்பி வைக்கிறேன்.
நா. கணேசன்
உங்கள் வாக்குறுதிகளைக் கணக்கில் கொள்ள முயன்று தோற்றுவிட்டேன்.
அதையெல்லாம் கோர்த்து மாலையாக்க வேண்டும் :-))
குறையொன்றுமில்லை! மக்கள் மறந்துவிடுவர் என்பதைத் தாங்கள் நினைவில்
வைத்திருக்கிறீர்கள்!! :-)
க.>
On Feb 4, 7:07 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/2/5 N. Ganesan <naa.gane...@gmail.com>:
விக்கி கட்டுரை எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறேனா?
ஹரிவராசனம் - எழுதித் தருகிறேன்.
பழைய பிரபந்தங்கள் - ஸ்கான் தருவதாய் சொல்லியிருக்கிறேன்.
கொடுத்த நூல்கள் (மதுரை திட்டம், ...) படிப்போர் தொகை,
பின்னூட்டம் ... ஏராளம் :-)) அதனால் அவசரமாய்ச் செய்ய
வேண்டிய செயல் இது என்று தெரிகிறது.
உங்கள் இருப்பிற்கு நிறையச் செய்யலாம்.
வாக்குறுதிகள் (வாய்ச்சொல்) மட்டுமே வருகின்றன!
குறை ஒன்றுமில்லை! வேளை வரும் போது எல்லாம் நடக்கும்!
க.>
2011/2/5 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஜேசுதாஸ் பல வருடங்கள் திருவனந்தபுரம் சங்கீத கல்லூரியில்
பிரின்சிபாலாக செம்மங்குடி பணியாற்றியபோது அவரிடம் இசைகற்றவர்.
செம்மங்குடி தான் சுவாதித்திருநாள் பாடியவற்றிற்கு இசைவடிவம் தந்தவர்.
என்னுடன் படித்த நண்பன் சிதம்பரம் சுப்ரமணியனின் (*)
பெரியப்பா திருவனந்தபுரம் சுப்பிரமணிய அய்யர் அங்கே பெரிய
ம்யூஸிக்காலஜிஸ்ட். செம்மங்குடி சென்னை திரும்பியபின்
அவரது தீஸிஸ் அச்சாக்கினார். அதில் தஞ்சை நால்வரில் (வடிவேலு, ...)
பாடியவற்றில் பல சுவாதித் திருநாள் மஹாராஜா
பெயரில் உலவுகின்றன என்று எழுதினார். இது சுப்ரதீபக் கவிராயர்
எழுதியது வீரமாமுனி பெயரில் வெளியானது என்று மு. அருணாசலம் போன்றோர்
எழுதியதற்கொப்பாய் சங்கீத உலகில்
பேசப்பட்டது.
நா. கணேசன்
* - சிதம்பரம் இப்போது வாஷிங்டனில் பெரிய வக்கீல்.
> On Feb 4, 8:46 pm, sharadha subramanian <sharadh...@yahoo.co.in>
> wrote:
>
> > ஜேசுதாஸ் அவர்களின் குரு செம்பை வைத்தியநாதன் இல்லயோ?
>
செம்மங்குடி இறந்தபோது வீட்டுக்கு சென்று அஞ்சலி
செலுத்தியவர் யேசுதாஸ்.
http://thatstamil.oneindia.in/news/2003/10/31/semmangudi.html
”மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட
ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக
நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாக பாடி நடிக்கும் திறன்
கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில்
பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாகவேண்டும் என்ற கனவோடு
வாழ்ந்துவந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும்
நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில்
எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும்
நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும்
சிரமம் நிறைந்த வாழ்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக1940ல்
பிறந்த கட்டச்சேரி ஜோஸப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ்
என்றழைக்கப்பட்டார்.
தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட
அகஸ்டின் ஜோஸப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக்
கொடுத்தார். அவனது தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால்
அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ந்த்தோடு அவனுக்கு இசைப்
பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும்
எல்லாம் நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாக
தேர்ந்தேடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக
இசையை கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.
மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம்
செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக
அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான
மதிப்பெண்களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களை
கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்த்தபுரத்தில் உள்ள
சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில்
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற
புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் என
கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால்
பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி
இல்லாததால் செம்மாங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில்
படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்”
http://musicshaji.blogspot.com/2010/07/blog-post.html
--------------
இன்று சினிமா, மலையாளி -தமிழர் உறவு, மத நல்லிணக்க
பண்பாடு, ... எல்லாம் கலந்து சபரிமலையின் பாண்டிய ராஜகுமாரன்
ஐயப்பன் யேசுதாஸ் தாலாட்டைக் கேட்டபின்னரே
பள்ளிகொள்கிறார். பக்தி இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றுகிறது.
நா. கணேசன்
முதலில் தமிழ் கிரந்த எழுத்தைக் கணினியில் தரும் பணி.
கிரந்த லிபியின் வரலாறு நெடியது, ஏராளமான மொழிக்குடும்பத்தின் பாஷைகளை
எழுதப் பயன்பட்டுள்ளது.
சில சான்றுகள் அளித்துள்ளேன்:
http://groups.google.com/group/mintamil/msg/4f47d51a8632d98c
தவறான புரிதல் கிரந்தம் பற்றி இ-மெயில்கள், இணைய குழுக்களில் வந்தன.
யூனிக்கோடு கிரந்தத்தை விரைவில்
அளிக்கும். அப்பொழுது பயன்படுத்துவோர் பயன்படுத்தலாம்.
பேரா. ஷிப்மன் தமிழர்கள் ஹிந்தியை (கணி)வைரஸ்
போலவும், வைரஸ் புரட்டக்ஷன் என ஆங்கிலத்தை
பாவிப்பதாகவும் ஆய்வேடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஹேல் ஷிப்மனிடம் சொன்னேன்: உங்கள் மாடலை
சற்றே விரிவுபடுத்த விருப்பம். கணிநுட்பு எளிதாகி
விட்டது. ஹிந்தி எழுத்துக்கு “ஆங்கில” எழுத்து (ஐஎஸ்ஓ 15919)
சுலபமாய் பாவிக்கலாம். அல்லது யுனிக்ரந்தத்தை ஹிந்திக்கு
மாற்றாய் பாவிக்கலாம்.
நா. கணேசன்
நா. கணேசன்
http://vembanattukkaayal.blogspot.com/2005/05/blog-post_01.html
ஹரிவராசனம் எப்போது துவங்கியது?
இன்றைய தேசாபிமானி இதழில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அதிகாரபூர்வ ஏடு இது) நான் ரசித்த கட்டுரை -
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது,
கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான்
அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது
இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது.
ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால்
சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த மாவேலிக்கரை
வடக்கத்தில்லத்து ஈச்வரன் நம்பூதிரி (இப்போது அவருக்கு வயது தொண்ணூற்று
ஒன்று) சொல்கிறார் -
"சபரிமலையில் அத்தாழபூஜை (இரவு உணவுக்கு அப்புறமான ஆராதனை) முடிந்து,
பகவான் அய்யப்பனின் உறக்கப் பாட்டான ஹரிவராஸனம் பாடுவதையும், கற்பூர
தீபம் ஏற்றி வணங்கி நடையடைப்பதையும் வழக்கத்தில் கொண்டு வந்தவன் நான்
தான். அத்தாழபூஜை முடிந்து இந்தப் பாட்டைத் துதிப்பாடலாகப் பாடும்
வழக்கத்தை நானும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து தொடங்கி வைத்தோம்.
கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம்
என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். நான் அச்சன்கோவில்
அம்பலத்தில் சாந்தியாக இருந்தபோது அங்கே தரிசனத்துக்காக வந்த ஒரு பக்தர்
எனக்குக் கொடுத்த அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து
வருகிறேன்.
இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக
இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல்
வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. நானும் கோவில் ஊழியர்களும்
ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல்
வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது. அப்புறம் ஒலிப்பேழை.
இந்தப் பாடலை மூன்று விதமான இசையமைப்பில் பாட அறிந்தவன் நான்."
ஐமபதாண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து
போனது சபரிமலைக் கோவில். கோவிலை மறுபடி அமைத்துக் குடமுழுக்காட்டி ஸ்ரீ
அய்யப்ப விக்ரகம் பிரதிட்டை ஆனபோது கோவில் மேல்சாந்தியாக இருந்தவர்
ஈச்வரன் நம்பூதிரி தான்.
அவர் மேல்சாந்தியாகும் காலத்தில் (1950) அப்பதவிக்கு இப்போது போல்
நறுக்கெடுப்போ, தேர்தலோ நடத்தித் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. மாதம்
அறுபத்தியொண்ணு ரூபாய் சம்பளத்தில் ஒண்ணரை வருடத்துக்கான நியமனம்
அப்போதெல்லாம்.
அந்த நியமன உத்தரவோடு, வன விலங்குகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த காட்டு
வழியில் ஒற்றையடிப்பாதை வழியாகத் தனித்து நடந்து வந்து புனிதமான
பதினெட்டுப் படி சவிட்டி ஈச்வரன் நம்பூதிரி சந்நிதானத்தை அடைந்தபோது அவர்
பார்வையில் பட்டது பதினெட்டுப் படிகளின் உச்சியில் கரிந்து போன
கட்டைகளும், சிதறிய கருங்கல் பாளங்களும். செம்பும், ஓடும் உருக்கிக்
கலந்த நிலையில் பழைய கோவிலின் சிதைவுகள். தீ தீண்டி மூன்றாகப் பிளந்து
சிதிலமாகி, வெள்ளிக்கம்பியால் கட்டப்பட்ட ஸ்ரீ அய்யப்பனின் திரு
விக்கிரகம்.
தென்மேற்கு மூலையில் இன்னும் இருந்த இரண்டு ஓலைக் கொட்டகைகளில் ஒன்று
மேல்சாந்தி தங்கியிருக்கும் இடமானது. அவருக்கு ஒத்தாசை செய்ய உள்கழகம்
என்ற விளிப்பேர் (கூப்பிடும் பெயர்) உள்ள ஒருவன் மாத்திரம் உண்டு.
நிம்மதியைக் கெடுக்க அவ்வப்போது காட்டானைக் கூட்டமும், புலிகளும் சுற்றி
வரும்.
இப்போது போல் அந்தக் காலத்தில் பக்தர்களின் பெரும் கூட்டம் கிடையாது. மாத
பூஜைக்கு ஒவ்வொரு ஒண்ணாம் தேதியும் நடை திறக்கும்போது தரிசனத்துக்கு
வரும் பக்தர்கள் சுமார் இருபது பேர். மண்டல பூஜைக்கு அப்படி இப்படி
ஆயிரம் பேர்.
தமிழ்நாட்டில் இருந்து, நாடக நடிகரான நவாப் ராஜமாணிக்கம் குழுவினரோடு
தவறாமல் சபரிமலைக்கு வந்திருந்தது ஈச்வரன் நம்பூதிரியின் நினைவில்
பசுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் அய்யப்பன் கோவில் பிரசித்தி அடையச்
செய்தவர்களில் அவரே முக்கியமானவர்.
அப்போதெல்லாம் அரவணைப் பாயாசமும், திருமதுரம் என்ற இனிப்பும் தான் பிரதான
வழிபாட்டுப் பொருள்கள். ஒரு உருளி திருமதுரமும், இரண்டு வார்ப்பு
அரவணையும் கிடைத்தாலே பெரிது.
அப்போதைய சபரிமலை யாத்திரை இடையூறுகள் நிறைந்ததாக இருந்தது. சாலையோ,
வழியில் வசதிகளோ கிடையாது. வண்டிப்பெரியார் வழியே சாலக்காயம் வந்து
அங்கேயிருந்து ஒரு குறுகிய நடைப்பாதை வழியாகப் பம்பையாற்றங்கரையை அடைய
வேண்டும். மாத பூஜைக்கு வருகிறவர்கள் தனியாளாகத்தான் நடந்து வருவார்கள்
பெரும்பாலும். பம்பையிலிருந்து எட்டு மைல் நீளும் செங்குத்தான காட்டுப்
பாதையில் காட்டு வ்¢லங்குகளுக்கு இடையே யாத்திரை செய்ய வேண்டும்
அப்போதெல்லாம்.
சபரிமலையில் இப்போது உள்ள திருக்கோவிலும், பகவான் அய்யப்பனின்
விக்கிரகமும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஈச்வரன்
நம்பூதிரி. கோவில் அமைக்கும் வேலைகள் நாகர்கோவிலைச் சேர்ந்த சிற்பி
செல்லப்பனாசாரியாரின் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. செங்ஙன்னூர்
தட்டாவிளை அய்யப்பனாசாரியார் பொறுப்பில், செங்ஙன்னூர் மகாதேவர் கோவில்
ஊட்டுபுரையில் புதிய விக்ரகம் வடிவமைக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தின்
கண், மூக்கு, தாடை, செவி முதலியவற்றை துல்யமாகத் தர்ப்பைப் புல்லில்
அளந்து புதிய விக்கிரக வடிவமைப்புக்காகக் கொடுத்ததும், பிரதிட்டை
சடங்குகளை முன் நின்று நடத்தியவரும் ஈச்வரன் நம்பூதிரிதான்.
அதற்கு முந்தைய பிரதிட்டைக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தொன்று ஆண்டுகள்
கழித்துக் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இப்போதைய
பிரதிட்டாதானத்தில் சதுரமான திருக்கோவிலும் அதன் முன்பாக மிகச் சிறிய
மண்டபமும், கிழக்கே பெரிய கோவிலும் அதற்கு வடக்கே கீழ்ப்புறமாக பலா
மரத்தில் செய்து நிறுத்திய நெய்த்தோணியும் (தீபத்தம்பம்), தென்மேற்கு
மூலையில் வினாயகர் சந்நிதியும் அதன் வடக்கே ஒற்றை வரிசையாக நாக
விக்கிரகமும், மாளிகைப்புரத்தம்மைக்கு ஒரு திருக்கோவிலும் அங்கே ஒரு
பீடமும்தான் அன்று இருந்த கோவில். நவக்கிரகங்கள் தவிர மற்ற உபதேவதைகள்
எல்லாம் ஈச்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாக இருந்த காலத்தில் பிரதிட்டை
செய்யப்பட்ட மூர்த்திகள். படிபூஜைக்கும், உத்ராட சத்யை (விருந்து)
வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்தவர் ஈச்வரன் நம்பூதிரி தான்
தொண்ணூற்றியொன்றாம் வயசிலும் அவர் படு சுறுசுறுப்பாக, கேரளத்தில்
எத்தனையோ கோவில்களில் திருப்பணிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
(மே 1, 2005 - தேசாபிமானி ஞாயிறு மலரில் பிரேம்ஜித் காயம்குளம் எழுதிய
கட்டுரையிலிருந்து - நன்றி தேசாபிமானி)
http://paravuronline.com/Devarajan.html
http://www.hindu.com/fr/2009/03/20/stories/2009032050890400.htm
http://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040801960300.htm
http://www.mysticswara.com/devarajan.aspx
http://blogs.rediff.com/countingmydays/2006/03/15/devaragam-its-no-more/
http://www.associatepublisher.com/e/f/fi/filmography_of_g._devarajan.htm
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604211&format=html
To listen to some songs:
http://sangeethasallapam.com/forum/topic.php?id=1337&page=2
~ ng
‘ஹரிஹரஸுதாஷ்டகம்’ என்றுதான் நாமதேயம்.
பலச்ருதிக்கான ஒன்பதாம் ச்லோகம்கூட அதில் இல்லை.
அதை எப்படித் தாலாட்டு என்று கூற முடிகிறது ?
ஒருவேளை அத்தாழ பூஜை முடிந்தபின் சொல்லப்படுவதாலா ?
இடையில் ‘வர கதாயுதம்’ என்னும் சொல்;
ஐயப்பன் கதை தாங்கியவராக எங்கேனும் காட்சி தருகிறாரா ?
‘ஹரிவராஸனம்’ - இதன் பொருள்தான் என்ன ?
தேவ்
On Feb 10, 7:08 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> (கொல்லம் அருகே) பரவூர் ஜி (கோவிந்தன்) தேவராஜன்
> கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக லட்சோபலட்சம் மக்களால்
> ரசிக்கச் செய்தவர். அவரைப் பற்றி:
>
> http://paravuronline.com/Devarajan.htmlhttp://www.hindu.com/fr/2009/03/20/stories/2009032050890400.htmhttp://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040801960300.htmhttp://www.mysticswara.com/devarajan.aspxhttp://blogs.rediff.com/countingmydays/2006/03/15/devaragam-its-no-more/http://www.associatepublisher.com/e/f/fi/filmography_of_g._devarajan.htm
>
> http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604211&format=...
On Feb 11, 4:33 am, devoo <rde...@gmail.com> wrote:
> ’ஹரிவராஸனம்’ ந்னு ஆரமிச்சு தகவல் நவாப் ராஜமாணிகம் பிள்ளை ட்ராமா,
> சினிமான்னு எங்கெல்லாமோ சுத்தி அரவணைப் பாயஸம் வரைக்கும் வந்திருக்கு.
>
> ‘ஹரிஹரஸுதாஷ்டகம்’ என்றுதான் நாமதேயம்.
> பலச்ருதிக்கான ஒன்பதாம் ச்லோகம்கூட அதில் இல்லை.
>
> அதை எப்படித் தாலாட்டு என்று கூற முடிகிறது ?
> ஒருவேளை அத்தாழ பூஜை முடிந்தபின் சொல்லப்படுவதாலா ?
>
நடையடைப்பில் பாடுகிறார்கள்.
> இடையில் ‘வர கதாயுதம்’ என்னும் சொல்;
> ஐயப்பன் கதை தாங்கியவராக எங்கேனும் காட்சி தருகிறாரா ?
>
> ‘ஹரிவராஸனம்’ - இதன் பொருள்தான் என்ன ?
>
கம்பக்குடி குளத்து ஐயரைத்தான் கேட்கவேண்டும் :)
விஷ்ணுவின் வரங்களுக்கு பீடம்/இருக்கையாக
விளங்கும் சாஸ்தா. (என்று சொல்லலாம்).
லோலா, சஞ்சலா என்று அழைக்கப்படும் லக்ஷ்மி
மன்னர்களின், வெர்றியடைந்தவர்களின் இருக்கை
என்று மிகப்பழைய வடமொழி நூலில் இருக்கிறது
என்று படித்திருக்கிறேன். உங்கள் கேள்வியால்
ஞாபகத்திற்கு வருகிறது.
----------
http://vembanattukkaayal.blogspot.com/2005/05/blog-post_01.html
“கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம்
என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். நான் அச்சன்கோவில்
அம்பலத்தில் சாந்தியாக இருந்தபோது அங்கே தரிசனத்துக்காக வந்த ஒரு பக்தர்
எனக்குக் கொடுத்த அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து
வருகிறேன்.”
குளத்து ஐயரின் ஃபோட்டோ அழிவதற்கு முன் யாராவது ஆவணப்படுத்தணும்.
அவர் தொகுத்த (1950?) சாஸ்தா ஸ்துதி கதம்பமும் பிடிஎஃப் செய்யணும்.
இந்தியர்களுக்கு சரித்திரம் காப்பதில் ஆர்வம் குறைவு. ஐரோப்பாவில்
பார்த்து கற்கவேணும்.
நா. கணேசன்
> தேவ்
>
> On Feb 10, 7:08 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > (கொல்லம் அருகே) பரவூர் ஜி (கோவிந்தன்) தேவராஜன்
> > கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக லட்சோபலட்சம் மக்களால்
> > ரசிக்கச் செய்தவர். அவரைப் பற்றி:
>
> >http://paravuronline.com/Devarajan.htmlhttp://www.hindu.com/fr/2009/0...
>
> >http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604211&format=...
>
> > To listen to some songs:http://sangeethasallapam.com/forum/topic.php?id=1337&page=2
>
> > ~ ng- Hide quoted text -