பிடாகை என்றால் என்ன?

545 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 25, 2018, 12:30:44 AM4/25/18
to mintamil, Kalai Email, thiruppuvanam

கிருஷ்ணன் வகையார் வாழுமிடங்கள் பிடாகை எனப்படும். ஆதியில் வந்த 72
பேரும் 72 ஊர்களில் 72 பிடாகைகளாக வாழ்ந்தனர்.
Ref : http://krishnavaka.in/wp-content/themes/krishnavaga1/images/Krishna-vaka-History.pdf

திருப்பூவணத்திற்கு அருகே  “பூம்பிடாகை” என்ற ஊர் உள்ளது.
பிடாகை என்று முடிவதால் இந்த ஊர் கிருஷ்ணனின் வகையாறாக்கள் வாழும் ஊராக இருக்குமா?

அன்பன்

dorai sundaram

unread,
Apr 25, 2018, 3:36:00 AM4/25/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.
சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்
என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.
ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச் 
சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்
தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர் 
பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்
தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு.  பெரும்பாலும் 
ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் உள்ள  “Hamlet“  என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.
சுந்தரம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

dorai sundaram

unread,
Apr 25, 2018, 4:18:11 AM4/25/18
to mintamil, Kalairajan Krishnan

kanmani tamil

unread,
Apr 25, 2018, 5:15:38 AM4/25/18
to mintamil
பௌத்தர்களின்  பிடக நூல்கள் என்று பெயர் பெறும் நூல்கள் உள்ளன.
அவற்றுக்கும் பிடாகை என்னும் இடப்பெயருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
ஒருவேளை பிடாகை என்று பெயர் பெறும் ஊர்கள் முன்னொரு காலத்தில் பௌத்தம் சார்ந்த வரலாறு உடையனவா ?
கண்மணி  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 25, 2018, 7:08:01 AM4/25/18
to mintamil, Kalai Email, thiruppuvanam, dorai sundaram
வணக்கம் ஐயா.

2018-04-25 13:05 GMT+05:30 dorai sundaram <doraisu...@gmail.com>:
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.
சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்
என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.
ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச் 
சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்
தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர் 
பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்
தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு.  பெரும்பாலும் 
ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் உள்ள  “Hamlet“  என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.
சுந்தரம்.
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 25, 2018, 7:24:24 AM4/25/18
to mintamil
வணக்கம்.

750 பிடாகை உட்பிரிவு; நாஞ்சில் நாட்டின் எல்லை மங்கலம் முதல்

மணக்குடி வரை என்பது மரபு; இதன் 12  பிரிவுகள் காலத்துக்குக் காலம் மாறவும் செய்திருக்கிறது.   ‘பன்னிரண்டு பிடாகைகளிலும் என்னைப்போல் கிடையாது’ எனப் பெருமை பேசும் வழக்குஇன்றும் உள்ளது.

1) மேல் பிடாகை

2) நடுவுப் பிடாகை

3) அழகிய பாண்டியபுரம் பிடாகை

4) அனந்தபுரம் பிடாகை

5) தாழக்குடிப் பிடாகை

6) தோவாளை பிடாகை

7) படப்பற்றுப் பிடாகை

8) கோட்டாற்றுப் பிடாகை

9) பறக்கைப் பிடாகை

10)தேர்ப் பிடாகை

11)சுசீந்திரம் பிடாகை

12) அகஸ்தீஸ்வரம் பிடாகை

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=520

இணையத்தில் எனது தேடலில்,
பௌத்தத்துடன் பிடாகையைத் தொடர்புபடுத்திய கட்டுரை யேதும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

அன்பன்
கி.காளைராசன்

பழமைபேசி

unread,
Apr 25, 2018, 7:41:26 AM4/25/18
to மின்தமிழ்
அறிந்திரா சொல் அறிந்தேன். நன்றி.

சேது

unread,
Apr 26, 2018, 12:13:03 AM4/26/18
to மின்தமிழ்
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி   உள்ள ஊர்  பிடாகை எனல் பொருந்துமா?

N. Ganesan

unread,
Apr 26, 2018, 1:21:27 AM4/26/18
to மின்தமிழ், vallamai
2018-04-25 0:35 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.
சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்
என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.
ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச் 
சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்
தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர் 
பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்
தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு.  பெரும்பாலும் 
ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் உள்ள  “Hamlet“  என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.
சுந்தரம்.

நல்ல விளக்கம்.

இன்னாருக்கு (அ) ஊருக்கு பாத்தியப்/உரிமைப் “பட்டது” என்கிறோம்.
அதிலிருந்து படாகை. பிடாகை எனப் பேச்சுவழக்கில். 
கடா என்பதை விட, கிடா என்றுதானே அதிகம் வழக்கில் உள்ளது.

பிடாகை piṭākai, n. cf. paṭāka. Suburban hamlet; உட்கிடையூர். எங்களூர்க்குப் பிடாகையாகப் பெற்றுடைய ஊர்களில் (S. I. I. iii, 25).

காளை குறிப்பிடும் பூம்பிடாகை, அவ்வூரின் நந்தவனப் பகுதியாக இருக்கலாம்.

---------

பிடகம் = கூடை.  இது படாகை/பிடாகை சொல்லில் இருந்து வேறு என நினைக்கிறேன்.
பெரியோன் பிடகநெறி (மணிமேகலை). பிடகம் திராவிடச் சொல் என்பர் (கால்டுவெல், பர்ரோ, ...)
பிடி- என்ற வினையடிப் பெயர்: பிடகம்.

நா. கணேசன்

Suba

unread,
Apr 26, 2018, 4:27:45 AM4/26/18
to மின்தமிழ்
நல்லதொரு கலந்துரையாடல். இதனை ஒரு சிறு பதிவு அல்லது கட்டுரையாக நாம் தொகுக்கலாம்.
நன்றி
சுபா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

kanmani tamil

unread,
Apr 26, 2018, 11:10:35 AM4/26/18
to mintamil

சேது <sethura...@gmail.com>

09:43 (10 hours ago)
to மின்தமிழ்
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி   உள்ள ஊர்  பிடாகை எனல் பொருந்துமா?

இங்கு குறிப்பிடப்படும் தோவாளை என்னும் ஊரிலிருந்து புலம் பெயர்ந்ததாக மறைந்த  என் தந்தை கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
இன்றும் எங்கள் சமூகத்தில் குலதெய்வத்தின் பெயரால் ஒரு பெட்டி உண்டு.
பெட்டிக்குள் தெய்வத்திற்குரிய உடை ,அணிகலன்கள் இருக்கும்.
இப்பகுதியை ஒட்டி மேற்குமலைமேல் இருக்கும் ஐயப்பன் வழிபாட்டிலும் பெட்டி பேரிடம் வகிக்கிறது. 
ஆனால் பெட்டி தூக்கிச் சென்று வழிபடும் வழக்கம் எந்த சமயத்தில் முதலில் இருந்தது என்று தெரிந்தால் தெளிவு கிடைக்கும்.
கண்மணி 

nkantan r

unread,
Apr 26, 2018, 11:36:35 AM4/26/18
to மின்தமிழ்
pitaka (पिटक  , பிடக) means basket (not exactly the correct word, it means a basket with lid where cereals can be stored)

உள்ளே களிமண் பூசி உள்ள பத்தாயம் போன்றது; ஆனால்  மரத்தால் செய்யாமல் முடையப்பட்டது

regards
rnkantan
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Apr 26, 2018, 12:17:27 PM4/26/18
to மின்தமிழ்
பூம்பிடாகை (பூம்பிடகை) என்றால் மலர்க்கூடை என்று பொருள் கொள்ளலாம்!

rnkantan

தேமொழி

unread,
Apr 26, 2018, 4:55:57 PM4/26/18
to மின்தமிழ்

On Thursday, April 26, 2018 at 8:10:35 AM UTC-7, kanmanitamilskc wrote:

சேது <sethura...@gmail.com>

09:43 (10 hours ago)
to மின்தமிழ்
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி   உள்ள ஊர்  பிடாகை எனல் பொருந்துமா?

இங்கு குறிப்பிடப்படும் தோவாளை என்னும் ஊரிலிருந்து புலம் பெயர்ந்ததாக மறைந்த  என் தந்தை கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
இன்றும் எங்கள் சமூகத்தில் குலதெய்வத்தின் பெயரால் ஒரு பெட்டி உண்டு.
பெட்டிக்குள் தெய்வத்திற்குரிய உடை ,அணிகலன்கள் இருக்கும்.
இப்பகுதியை ஒட்டி மேற்குமலைமேல் இருக்கும் ஐயப்பன் வழிபாட்டிலும் பெட்டி பேரிடம் வகிக்கிறது. 

எனக்கும் ஐயப்பன் 
திருவாபரணப் பெட்டி   https://www.youtube.com/watch?v=CM6qeWrIG5A
நினைவு வந்தது.  

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்த்திட்ட தந்தை பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன். இவர் தனது புத்திரனுக்கு பொன் நகை பூட்டிப் பார்க்கும் ஆசை இருந்தது. இப்படி  ஏராளமான ஆபரணங்கள் பூட்டி அழகு பார்த்த நிகழ்வை நினைவு கூறும் விதமாகவே சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மகரஜோதியன்று ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிப்பது நடக்கிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பெட்டி சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படுவதும் ஓர் அற்புத திருவிழாக் கொண்டாட்டத்தைத் தருகிறது. பந்தளம் வலியக்கோயில் ஐயப்பன் சன்னதியில் இருந்து இந்த ஊர்வலம் துவங்குகிறது. பந்தள மன்னரின் வாரிசு உடைவாள் ஏந்தி முன்னதாக நடையிட, திருவாபரணப் பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி என 3 பெட்டிகள் ஊர்வலத்தில் இடம்பிடிக்கின்றன.

நாட்டார் வழக்காக இருக்கவும் வாய்ப்புள்ளது. புத்தமத பின்னணியும் இருக்க வாய்ப்புள்ளது.

ஐயப்பன் ஒரு சாஸ்தா என்பதும் கருதத் தக்கது.  

ஆனால் பெட்டி தூக்கிச் சென்று வழிபடும் வழக்கம் எந்த சமயத்தில் முதலில் இருந்தது என்று தெரிந்தால் தெளிவு கிடைக்கும்.

இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா குறித்து பொன்னியின் செல்வனில் படித்ததும் நினைவு வந்தது. 

"இன்னும் நேரமிருக்கிறது. சந்திரன் இப்போதுதானே உதயமாயிருக்கிறான்? அதோ அந்தத் 'தாகபா'வின் உச்சிக்கு நேரே சந்திரன் வந்ததும் புறப்பட்டுவிடுவோம்!" என்றார் இளவரசர்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"முதன் முதலில், புத்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஜனங்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வளவு பெரிய சின்னங்களை நிர்மாணித்தார்கள். பின்னால் வந்த அரசர்களோ தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காக முன்னால் கட்டியிருந்த ஸ்தூபங்களைக் காட்டிலும் பெரிதாகக் கட்டினார்கள்!" என்றார் இளவரசர்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், - வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க் கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.

வந்தியத்தேவன், "இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது?" என்றான்.

"இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!" என்றார் இளவரசர்.

ஊர்வலம் நெருங்கி வரவர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.

முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும், தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளை யொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷுக்களின் கைகளில் இருந்த அந்த வெண் சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.

யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களை தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை தான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன!

இந்த ஆட்டக்காரர்களும், அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும், மற்றும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேலும் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவபெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.

"இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"கஜபாகு என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான். அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்!" என்றார் இளவரசர்.

"ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதேமாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.

"அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

மீண்டும் ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும், வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்து கொண்டு வந்தார்கள். தாளத்துக்கும், ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும், வேல்களும் ஒன்றோடொன்று 'டணார் டணார்' என்று மோதிச் சப்தித்தன.

இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து 'கலீர் கலீர்' என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறினார்.

தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமை பாராட்டிய காலங்களும் உண்டு. கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் அவ்விதம் சிநேகமாயிருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது கஜபாகு அங்கே சென்றிருந்தான். அந்நாட்டில் நடந்த மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் விழா நடத்தினான். தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நாலு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். இந்த விழாக்களில் மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு, பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நாலு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்து வருகிறது.

"ஆனால் தெய்வங்களை எங்கும் காணவில்லையே?" என்றான் வல்லவரையன்.

"ஒவ்வொரு யானைக் கூட்டத்திலும் நடுநாயகமாக வந்த யானை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தீரா?"

"பார்த்தேன்! அந்தப் பெட்டிக்குள் தெய்வங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்களா, தப்பித்துக்கொண்டு தமிழகத்துக்குப் போய்விடக் கூடாது என்று?"

இதைக் கேட்ட பொன்னியின் செல்வர் நகைத்து விட்டு, "அப்படியில்லை; முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றைப் பத்திரமாய்ப் பூட்டி வைத்திருக்கிறார்கள். புத்த சமயத்தார் இந்நாட்டில் போற்றிக் காப்பாற்றும் செல்வங்களுக்குள்ளே விலை மதிப்பற்ற செல்வம் அது. ஆகையால் அந்த மனிதப் பொருளை அழகிய பெட்டியில் வைத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றார்கள்!" என்றார்.

"பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே என்ன இருக்கிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அவற்றுக்குப் பதிலாக அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு போகிறார்கள்" என்று இளவரசர் கூறினார்.

வந்தியத்தேவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு,"ஆகா! தங்களுக்குப் பதிலாகப் பெரிய பழுவேட்டரையர் மட்டும் இங்கே படையெடுத்து வந்திருந்தால்?..." என்றான்.

அச்சமயத்தில் திருவிழா ஊர்வலத்தின் கடைசிப் பகுதி அந்த வீதி முடுக்கில் திரும்பிச் சென்றது. வாத்திய முழக்கம், ஜனங்களின் ஆரவாரம்... இவற்றின் ஓசை குறையத் தொடங்கியது.

 ..... தேமொழி

தேமொழி

unread,
Apr 26, 2018, 5:05:18 PM4/26/18
to mint...@googlegroups.com
பிடாகம் பிடாகை என்ற இரு பெயர்களிலும் ஊர்கள் இருக்கிறது. 

பிடாகை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேல் பொருள் இருக்க வாய்ப்புள்ளது 

சிறு குடியிருப்பு
கூடை 
என்பது போல 

மேலும் 

பிடாகை, பிடாகம், என்பவை பெட்டகம் என்பதுடன் உள்ள தொடர்பும் இருப்பதாக (எனக்குத்) தெரிகிறது 

..... தேமொழி

kanmani tamil

unread,
Apr 27, 2018, 1:34:30 PM4/27/18
to mintamil
பீடிகை என்ற சொல்லுக்கும் ,பிடாகை என்ற சொல்லுக்கும் தொடர்பு இருக்குமா?
ஒலியொப்புமை அடிப்படையில் கேட்கிறேன்.
பிடகம் ............பீடிகை .............பிடாகை --------------ஒதுக்க முடியவில்லையே !!!
தேமொழி சுட்டியுள்ள பௌத்தர் வழக்கமும் ஐயத்தை வலுப்படுத்துகிறது.
பிடாகை என்று பெயர் பெறும் ஊர்களில் பெருமாள் கோயில்கள் உள்ளனவா?
கண்மணி  

2018-04-27 2:35 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பிடாகை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேல் பொருள் இருக்க வாய்ப்புள்ளது 

பிடாகம் பிடாகை என்ற இரு பெயர்களிலும் ஊர்கள் இருக்கிறது. 

சிறு குடியிருப்பு
கூடை 
என்பது போல 

மேலும் 

பிடாகை, பிடாகம், என்பவை பெட்டகம் என்பதுடன் உள்ள தொடர்பும் இருப்பதாக (எனக்குத்) தெரிகிறது 

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 27, 2018, 7:23:17 PM4/27/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம் ஐயா.

2018-04-26 9:43 GMT+05:30 சேது <sethura...@gmail.com>:
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி   உள்ள ஊர்  பிடாகை எனல் பொருந்துமா?

நேற்று (27.04.018) திருப்பூவணத்தில் பூம்பிடாகை ஊர்க்காரர் ஒருவரைச் சந்தித்தேன்.

ஊரில் பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 4அடி உயரத்தில் பெருமாள் நின்றபடி அருளுகிறார்.  தேவியர் யாரும் உடன் இல்லை.
அவர்கள் சிங்கம்புணரியில் வசதித்தவர்களாம்.  தங்களது குலப்பெண்களை மாற்றார் பெண்கேட்டு வந்து தொந்தரவுகள் செய்த காரணத்தினால், சிங்கம்புணரி சேவுகப் பெருமாளிடம் முறையீடு செய்துவிட்டு, கோயில் வளாகத்தில் பிடிமண் எடுத்துக் கொண்டு, பெட்டி தூக்கிக் கொண்டு பூம்பிடாகை வந்து குடியேறி யுள்ளதாகக் கூறினார். பூம்பிடாகையில் பெட்டி ஒன்று வழிபாட்டில் உள்ளது. சிங்கம்புணரியில் இருந்து பூம்பிடாகைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இடர்பாடுகளை யெல்லாம் பாடலாகப் பாடினார்.  இந்தப் பாடல் அடங்கிய ஏடு உள்ளதா? என்று கேட்டேன்.  தன்னிடம் இல்லை யென்றும், பூம்பிடாகையின் மேனாள் தலைவர் அவர்களிடம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் கூறினார்.  மேனாள் தலைவரது அலைபேசி எண் அறிந்து என்னிடம் சொல்லுவதாகத் தெரிவித்துள்ளார்.  

நல்லதொரு வரலாற்று ஏடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 27, 2018, 7:25:04 PM4/27/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
2018-04-28 4:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.

2018-04-26 9:43 GMT+05:30 சேது <sethura...@gmail.com>:
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி   உள்ள ஊர்  பிடாகை எனல் பொருந்துமா?

நேற்று (27.04.018) திருப்பூவணத்தில் பூம்பிடாகை ஊர்க்காரர் ஒருவரைச் சந்தித்தேன்.

ஊரில் பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 4அடி உயரத்தில் பெருமாள் நின்றபடி அருளுகிறார்.  தேவியர் யாரும் உடன் இல்லை.
அவர்கள் சிங்கம்புணரியில் வசித்தவர்களாம்.  தங்களது குலப்பெண்களை மாற்றார் பெண்கேட்டு வந்து தொந்தரவுகள் செய்த காரணத்தினால், சிங்கம்புணரி சேவுகப் பெருமாளிடம் முறையீடு செய்துவிட்டு, கோயில் வளாகத்தில் பிடிமண் எடுத்துக் கொண்டு, பெட்டி தூக்கிக் கொண்டு பூம்பிடாகை வந்து குடியேறி யுள்ளதாகக் கூறினார். பூம்பிடாகையில் பெட்டி ஒன்று வழிபாட்டில் உள்ளது. சிங்கம்புணரியில் இருந்து பூம்பிடாகைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இடர்பாடுகளை யெல்லாம் பாடலாகப் பாடினார்.  இந்தப் பாடல் அடங்கிய ஏடு உள்ளதா? என்று கேட்டேன்.  தன்னிடம் இல்லை யென்றும், பூம்பிடாகையின் மேனாள் தலைவர் அவர்களிடம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் கூறினார்.  மேனாள் தலைவரது அலைபேசி எண் அறிந்து என்னிடம் சொல்லுவதாகத் தெரிவித்துள்ளார்.  

நல்லதொரு வரலாற்று ஏடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அன்பன்
கி.காளைராசன்
 
dorai sundaram

unread,
Apr 28, 2018, 2:36:49 AM4/28/18
to mintamil
<பீடிகை என்ற சொல்லுக்கும் ,பிடாகை என்ற சொல்லுக்கும் தொடர்பு இருக்குமா?
ஒலியொப்புமை அடிப்படையில் கேட்கிறேன்.>

பீடிகை என்னும் சொல்லுக்கும் பிடாகை என்னும் சொல்லுக்கும் தொடர்பு 
இருக்காது என நான் எண்ணுகிறேன்.  முதன்மைச் செய்தி ஒன்றை ஒருவருக்குச்
சொல்ல நினைப்பவர்  அதைச் சொல்லுமுன் ஓர் அடித்தளம் அமைத்துத் தொடங்குவதுண்டு. 
அடித்தளத்தை எழுப்பிப் பின்னர் மேலே சொல்லவந்த செய்தியை விளக்குவதைக் காணலாம்.
“என்னப்பா, பீடிகை போடுகிறாய். சொல்லவந்த சேதியைச் சொல்’  என்றும்,  “என்ன, பீடிகை
பலமாயிருக்கிறதே”   என்றும்  நாம் காணும் பேச்சு வழக்குகள்  கருதத் தக்கவை. 
இவ்வாறான “அடித்தளம்”  அமைப்பது  “பீடம்”   என்று கொண்டால்,  பீடம் அமைத்தல்
பீடிகை என்றாகும். ”பீட்”, “பீட”  , ”பீடம்”   ஆகியன சமற்கிருதச் சொற்கள்.  பீடம் என்னும் 
கீழ்ப்பகுதிக்கு மேல்தான்  கட்டடமே. 

சுந்தரம்.

--

kanmani tamil

unread,
Apr 28, 2018, 3:38:26 AM4/28/18
to mintamil
 ///“அடித்தளம்”  அமைப்பது  “பீடம்”   என்று கொண்டால்,  பீடம் அமைத்தல்
பீடிகை என்றாகும். ”பீட்”, “பீட”  , ”பீடம்”   ஆகியன சமற்கிருதச் சொற்கள்.  பீடம் என்னும் 
கீழ்ப்பகுதிக்கு மேல்தான்  கட்டடமே. 
சுந்தரம்.///

இப்போது  என் ஐயம் மேலும் வலுக்கிறது .
'பீடம் ' என்ற சொல் சமஸ்கிருதத்தின் திரிந்த வடிவமாகிய பாலி மொழியில் வழங்குவது இயல்பே அல்லவா?!
அதனால் தான் பௌத்தத்தில் பீடிகை என்ற சொல் வழக்கு இருந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பானுகுமார் ஐயா கூறிய செய்தியின் அடிப்படையில்; ஒரு காலகட்டத்தில்  புத்தர் கோயில்கள்  பெருமாள் கோயில்களாக மாற்றம் பெற்றுள்ளன.  அவ்வாறு மாற்றம் பெற்ற கோயில்கள் இருந்த ஊர்கள் பிடாகை என்று பெயர் பெற்றிருக்கலாம்............/
பிடாகை என்ற பெயர் அங்கு பௌத்தப் பள்ளி இருந்தமைக்குரிய எச்சமாகக் கருதுவதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி ............உற்று நோக்கற்குரியது............. தனித்து நிற்கும் பெருமாள் ...........
அந்தக் கோயிலில் தேவியர் யாரும் இல்லை.
கண்மணி 

dorai sundaram

unread,
Apr 28, 2018, 5:21:11 AM4/28/18
to mintamil
தமிழகத்தின் அனைத்துப்பகுதிக் கல்வெட்டுகளிலும்
நூற்றுக்கணக்கான பிடாகைகள் குறிப்பிடப்பெறுகின்றன. 
எண்ணிக்கை மிகுதி. எனவே, அனைத்துப் பிடாகைகளும் 
பௌத்தம் சார்ந்தன அல்லது பௌத்த எச்சங்களைக் கொண்டுள்ளவையாக 
இருக்கலாம் என்னும் பொது முடிவை எட்ட முடியாது.
சுந்தரம். 

kanmani tamil

unread,
Apr 28, 2018, 10:34:43 AM4/28/18
to mintamil

dorai sundaram <doraisu...@gmail.com>

14:51 (5 hours ago)
to mintamil
///தமிழகத்தின் அனைத்துப்பகுதிக் கல்வெட்டுகளிலும் நூற்றுக்கணக்கான பிடாகைகள் குறிப்பிடப்பெறுகின்றன. 
எண்ணிக்கை மிகுதி. எனவே, அனைத்துப் பிடாகைகளும் பௌத்தம் சார்ந்தன அல்லது பௌத்த எச்சங்களைக் கொண்டுள்ளவையாக 
இருக்கலாம் என்னும் பொது முடிவை எட்ட முடியாது.///

தமிழகம் முழுவதும் ஜைனமும் ,பௌத்தமும் பரவியிருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான பீடிகைகள் தமிழகத்தில் இருந்திருக்கும்.
7ம் நூற்றாண்டிற்குப் பிறகு அவை மக்களிடம் செல்வாக்கை இழந்து............அவற்றுள் சில  வைணவத் தலங்களாகவும்  மாற்றம் பெற்றிருக்கும் .
பிடாகை என்ற இடப்பெயர் பௌத்தத்தின் எச்சம் என்று சொல்வதில் தடை ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை
கண்மணி  .  
 
நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 28, 2018, 11:02:13 AM4/28/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம்.

2018-04-28 20:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

dorai sundaram <doraisundaram18@gmail.com>

14:51 (5 hours ago)
to mintamil
///தமிழகத்தின் அனைத்துப்பகுதிக் கல்வெட்டுகளிலும் நூற்றுக்கணக்கான பிடாகைகள் குறிப்பிடப்பெறுகின்றன. 
எண்ணிக்கை மிகுதி. எனவே, அனைத்துப் பிடாகைகளும் பௌத்தம் சார்ந்தன அல்லது பௌத்த எச்சங்களைக் கொண்டுள்ளவையாக 
இருக்கலாம் என்னும் பொது முடிவை எட்ட முடியாது.///

தமிழகம் முழுவதும் ஜைனமும் ,பௌத்தமும் பரவியிருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான பீடிகைகள் தமிழகத்தில் இருந்திருக்கும்.
7ம் நூற்றாண்டிற்குப் பிறகு அவை மக்களிடம் செல்வாக்கை இழந்து............அவற்றுள் சில  வைணவத் தலங்களாகவும்  மாற்றம் பெற்றிருக்கும் .
பிடாகை என்ற இடப்பெயர் பௌத்தத்தின் எச்சம் என்று சொல்வதில் தடை ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை
இளையாங்குடியில் சுயம்புலிங்கம் உள்ளது.  கேட்பாரற்றுக் கிடந்த சமணர்சிலை ஒன்றை அன்பர் எடுத்து வந்து கோயில் வளாகத்தில்  வைத்துள்ளனர்.  இப்போது சமணர் சிலை இருப்பதால் சுயம்புலிங்கம் உள்ள கோயிலையே சமணர் கோயில் என்று சொல்லும அளவிற்குச் சிலர் சென்று விட்டனர்.
எனவே, அன்புள்ளம் கொண்டு, தங்களது மேற்கண்ட கருத்திற்கு ஏதேனும் ஒரு சான்றாதாரம் கொடுங்கள் போதும்.

nkantan r

unread,
Apr 28, 2018, 2:04:13 PM4/28/18
to மின்தமிழ்
@kanmani.

The Buddhist 'pitaka' has nothing to do with 'peeth'. That pitaka means a basket with lid as i mentioned. As vinayapitaka (a part of tripitaka) means 'Discipline/courteous basket' of 'three baskets'.

rnk

nkantan r

unread,
Apr 28, 2018, 2:12:23 PM4/28/18
to மின்தமிழ்
Saw this in wiki.

https://en.m.wikipedia.org/wiki/Tripiṭaka

rnk

N. Ganesan

unread,
Apr 28, 2018, 7:40:48 PM4/28/18
to மின்தமிழ்

On Thursday, April 26, 2018 at 4:05:18 PM UTC-5, தேமொழி wrote:
பிடாகம் பிடாகை என்ற இரு பெயர்களிலும் ஊர்கள் இருக்கிறது. 

பிடாகை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேல் பொருள் இருக்க வாய்ப்புள்ளது 

சிறு குடியிருப்பு
கூடை 
என்பது போல 

பிடாகை/பிடாகம் = கூடை என்ற பொருள் காணோம்.

நா. கணேசன்

மேலும் 

பழமைபேசி

unread,
Apr 28, 2018, 7:43:28 PM4/28/18
to மின்தமிழ்
’பிடுகை’க்கு எதிர்ச்சொல் பிடாகை. நான் வரட்டுங்ளா? இஃகிஃகி.

N. Ganesan

unread,
Apr 28, 2018, 8:32:57 PM4/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, Apr 28, 2018 at 1:04 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
>
> @kanmani.
>
> The Buddhist 'pitaka' has nothing to do with 'peeth'. That pitaka means a basket with lid as i mentioned. As vinayapitaka (a part of tripitaka) means 'Discipline/courteous basket' of 'three baskets'.
>

Not very sure that   piṭaka &  pīṭham are not connected. The semantics are so close.  Note
pēṭikā. is flower tray and  pīṭhikaa/ pīṭham is seat.
Ultimately, words like piTalikai, a tray where the head of a warrior cutting his own head at the start of a war as an offering to KoRRavai
are related too. 

http://coralsri.blogspot.com/2017/11/blog-post_10.html
https://tamilandvedas.com/tag/கங்கை-குமரி/
படாரிக்கு நவகண்டங் குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்
வைத்தானுக்கு

பிடகம், பெட்பு (பெட்டுதல் = பிடித்துக்கொள்ளல், பெட்டி/பேடிகா), பிடலிகை, பீடம்/பீடிகை : இவை யாவும்
“பிடித்தல்” என்னும் வினைச்சொல்லை தாதுவாகக் கொண்டன எனலாம்.

பிடர்/பிடரி (பொடனி என்பர் பேச்சுத்தமிழில்). பிடர்த்தலை நின்றாயால் - மயிடமர்த்தனியைச் சிலம்பு சொல்லும் தொடர்.
பிடாரி (< பிடரி) - கொற்றவையின் பெயர். பொடாரி என்பர் கிராமங்களில். பிடித்தல் - தலையில் கொம்புகளைத் தாங்கும்
வன எருமையினால் துர்க்கைக்கு ஏற்பட்ட பெயர். அவளும் அக் கொம்புகளை அணிந்திருந்ததை 4000 ஆண்டு முன்பே
காண்கிறோம். ஐராவதம் மகாதேவன் தி ஹிண்டுவில் எழுதியதை மறுத்து “இது மயிடமர்த்தனியின் போர்ப் புராணம்”
என எழுதிய பதிவு:

பீடிகை¹ pīṭikai , n. <  பீடிகை¹ pīṭikai

 n. < pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.

பீடிகை² pīṭikai

, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)

pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.

பீடிகை² pīṭikai

, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)

NG
2018-04-25 0:35 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.
சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்
என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.
ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச் 
சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்
தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர் 
பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்
தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு.  பெரும்பாலும் 
ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் உள்ள  “Hamlet“  என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.
சுந்தரம்.

நல்ல விளக்கம்.

இன்னாருக்கு (அ) ஊருக்கு பாத்தியப்/உரிமைப் “பட்டது” என்கிறோம்.
அதிலிருந்து படாகை. பிடாகை எனப் பேச்சுவழக்கில். 
கடா என்பதை விட, கிடா என்றுதானே அதிகம் வழக்கில் உள்ளது.

பிடாகை piṭākai, n. cf. paṭāka. Suburban hamlet; உட்கிடையூர். எங்களூர்க்குப் பிடாகையாகப் பெற்றுடைய ஊர்களில் (S. I. I. iii, 25).

காளை குறிப்பிடும் பூம்பிடாகை, அவ்வூரின் நந்தவனப் பகுதியாக இருக்கலாம்.

---------

பிடகம் = கூடை.  இது படாகை/பிடாகை சொல்லில் இருந்து வேறு என நினைக்கிறேன்.
பெரியோன் பிடகநெறி (மணிமேகலை). பிடகம் திராவிடச் சொல் என்பர் (கால்டுவெல், பர்ரோ, ...)
பிடி- என்ற வினையடிப் பெயர்: பிடகம்.

நா. கணேசன்

>
> rnk

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 28, 2018, 8:40:01 PM4/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Sat, Apr 28, 2018 at 1:04 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
>
> @kanmani.
>
> The Buddhist 'pitaka' has nothing to do with 'peeth'. That pitaka means a basket with lid as i mentioned. As vinayapitaka (a part of tripitaka) means 'Discipline/courteous basket' of 'three baskets'.
>

Not very sure that   piṭaka &  pīṭham are not connected. The semantics are so close.  Note
pēṭikā. is flower tray and  pīṭhikaa/ pīṭham is seat.
Ultimately, words like piTalikai, a tray where the head of a warrior cutting his own head at the start of a war as an offering to KoRRavai
are related too. 

http://coralsri.blogspot.com/2017/11/blog-post_10.html
https://tamilandvedas.com/tag/கங்கை-குமரி/
படாரிக்கு நவகண்டங் குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்
வைத்தானுக்கு

பிடகம், பெட்பு (பெட்டுதல் = பிடித்துக்கொள்ளல், பெட்டி/பேடிகா), பிடலிகை, பீடம்/பீடிகை : இவை யாவும்
“பிடித்தல்” என்னும் வினைச்சொல்லை தாதுவாகக் கொண்டன எனலாம்.

பிடர்/பிடரி (பொடனி என்பர் பேச்சுத்தமிழில்). பிடர்த்தலை நின்றாயால் - மயிடமர்த்தனியைச் சிலம்பு சொல்லும் தொடர்.
பிடாரி (< பிடரி) - கொற்றவையின் பெயர். பொடாரி என்பர் கிராமங்களில். பிடித்தல் - தலையில் கொம்புகளைத் தாங்கும்
வன எருமையினால் துர்க்கைக்கு ஏற்பட்ட பெயர். அவளும் அக் கொம்புகளை அணிந்திருந்ததை 4000 ஆண்டு முன்பே
காண்கிறோம். ஐராவதம் மகாதேவன் தி ஹிண்டுவில் எழுதியதை மறுத்து “இது மயிடமர்த்தனியின் போர்ப் புராணம்”
என எழுதிய பதிவு:

forgot to this URL. A decade ago, I differed with Iravatham's writing in The Hindu that this is Jallikkattu.
Later, the late Greg Possehl (Univ. of Pennsylvania), J. Kenoyer (Wisconsin) - Indus archaeologists also
wrote this is wild buffalo. Nothing to do with Jallikkattu.

பீடிகை¹ pīṭikai , n. <  பீடிகை¹ pīṭikai

 n. < pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.

பீடிகை² pīṭikai

, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)

pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.

பீடிகை² pīṭikai

, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)

NG
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 29, 2018, 11:42:48 PM4/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Thursday, April 26, 2018 at 1:08:37 AM UTC-5, சக்கரமன் wrote:
பிடலிகை என்பது ஒரு வகை தட்டை குறிக்கிறது.அது குழிவான தட்டா அல்லது மேடான தட்டா என்று தெரியவில்லை.குழிவான தட்டு என்றே தோன்றுகிறது. அந்த வகையில் பிடாகையும் குழிவான பள்ளமான நிலப்பகுதியை குறிக்கலாம்.

பிடர், பிடரி என்ற சொற்களுடன் பிடரிகை/பிடலிகை ஒப்பிடுக.

அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
                                       - சிலம்பு

(1) சவட்டு-/சமட்டு- (cf. சம்மட்டி) : சாமல்/சாவல் - உரலில் குத்திய அரிசி. 
அமலை = Rice ball; சோற்றுத் திரளை. வெண்ணெறந் தியற்றிய மாக்கண் அமலை (மலைபடு. 441) .
சமள்-சமல்- > அமலை. சவள்- > அவல் ‘parched rice'.

(2) சகடு - சக்கரம்; சாகாடு - வண்டியின் பாரம் ஏற்றும் சட்டம். The platform that carries the load, situated above the axle.
அதுபோல்,  பிடரி : பிடாரி. இதனை Bhattaarii என்று வடமொழி மாற்றுகிறது.

வன எருமை - சட்டிஸ்கார் மாநிலத்தின் விலங்கு. இதனுடன் போரிட்டவள் கொற்றி/துருக்கை.
அவளது 4500 வருடம் முந்தைய முத்திரை ஒன்று:

பிடரிகை/பிடலிகை - வன எருமையின் கொம்புகளுக்கிடையே உள்ள குழிவான பகுதி போன்றது.

பிடல்- > பிடனி (பொடனி - பேச்சில்).

பிடி-த்தல் பிடகம், பீடம், பெட்டி, பெட்பு (பெட்டிக்கோ), பிடரி, பிடலிகை, தொடர்புடைய 
த்ராவிட பாஷை வார்த்தைகள்.

நா. கணேசன்
 
http://heritagewiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2

 போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்; தண்டம் - தண்டனைத் தொகை, Fine. பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை பொத்தனுக்கு, அவன் தந்தை *ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன்* பட்டை பொத்தன் .. 

சக்கரமன்   .

தேமொழி

unread,
Apr 30, 2018, 12:17:04 AM4/30/18
to மின்தமிழ்

பாம்பு பிடாரன் என்பவருக்கு பிடாகை/பெட்டி வைத்திருப்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாமோ?
பிடாகை என்பது மூடி கொண்டு மூடும் பெட்டி என்று தெரிகிறது.

பாம்பு பிடாரன் ... ஒட்டப்பிடாரன் ... என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை 

பிடாரிச்சி, பிடாரச்சி, பிடாரத்தி, பிடாரி, பிடாரச்சொல், பிடாரவைத்தியன்

கல்வெட்டில் காணப்படும் `பிடாரர்கள்` என்ற சொல் ஓதுவார்களைக் குறிக்கும் என்று தெரிகிறது.

பிடரி, பிடல், பிடவை, பிடாகை, பிடாம், பிடார், பிடாரி, பிடி, பிடித்தாடி, பிடிப்பு, பிடில், பிடுக்கு, பிடுகு, பிடுங்கு, பிடை, பிண்டக்காப்பு  

பிடங்கு பிடர் பிடர்த்தலை பிடரம் பிடரி பிடரிக்காம்பு பிடரிசன்னி பிடரிசிவு பிடல் பிடவம் பிடவு பிடவை பிடா பிடாகை பிடாந்திரம் பிடாம்

..... தேமொழி

nkantan r

unread,
Apr 30, 2018, 6:17:22 AM4/30/18
to மின்தமிழ்
பிடக என்பதில் ட குறில். ஏன், எப்படி பிடாகை யில் நெடில் ஆனது?

पिटारी in Hindi means the box made of bamboo to keep snakes. ( I vaguely remember seeing पिटारी in Sanskrit but not able Tonkin point..)

rnk

தேமொழி

unread,
Apr 30, 2018, 6:50:30 AM4/30/18
to மின்தமிழ்
  • பிடகை என்பது இக்காலத்தில் பிடாகை என வழங்கப்படுகிறது.

பொருள்

பிடகைபெயர்ச்சொல்.

  1. பூக்கூடை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. flower basket
விளக்கம்
  • பிடகை என்பது இக்காலத்தில் பிடாகை என வழங்கப்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் - மதுரைக்காஞ்சி 397
(இலக்கணப் பயன்பாடு)

------------------------

பிடாகை(பெ)

  • உட்கிடையூர்
  • எங்களூர்க்குப் பிடாகையாகப்பெற்றுடைய ஊர்களில் (S. I. I. iii, 25).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
-----------------------------------------------------------

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 30, 2018, 8:08:43 AM4/30/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
ஐயா நு த லோ சு அவர்கள்  கீழ்க்கண்ட இழையில், பிடாரன் என்ற சொற்தொகுப்பு அடங்கிய கல்வெட்டுகளைத் தொகுத்து அளித்துள்ளார்
https://groups.google.com/d/topic/mintamil/CXVU9_PTc0k/discussion

பிடாரனுக்கும் பிடாகைக்கும் தொடர்பு இருக்கலாமோ?

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 30, 2018, 8:29:16 AM4/30/18
to மின்தமிழ்

On Monday, April 30, 2018 at 7:08:43 AM UTC-5, கி. காளைராசன் wrote:
பிடாரனுக்கும் பிடாகைக்கும் தொடர்பு இருக்கலாமோ?

பாம்பு பிடிப்பவன் பிடாரன். பிடி- > பிடகம்.

ஆனால்,
படாகை (படு-தல்: பாத்தியப்/உரிமைப் படிதல்) > பிடாகை.

நா. கணேசன் 

அன்பன்
கி.காளைராசன்

On 30 April 2018 at 15:47, nkantan r <rnka...@gmail.com> wrote:
பிடக என்பதில் ட குறில்.  ஏன், எப்படி பிடாகை யில் நெடில் ஆனது?

पिटारी in Hindi means the box made of bamboo to keep snakes. ( I vaguely remember seeing पिटारी in Sanskrit but not able Tonkin point..)

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Apr 30, 2018, 8:55:07 AM4/30/18
to mintamil
///பிடாரனுக்கும் பிடாகைக்கும் தொடர்பு இருக்கலாமோ? ///
பிடாரன் கையில் பெட்டி வைத்திருக்கிறான் - எனவே பெட்டி என்று பொருள்படும் 'பிடகம்  ' என்ற சொல்லிலிருந்து பிடாரன் தோன்றியது எனலாம்.
கண்மணி  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages