அறப்பளீஸ்வரர்
சில நூறு ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த அருணகிரி நாதர், கொல்லிமலைக்கு
வந்து தரிசித்திருக்கிறார்.அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டுள்ள முருகப் பெருமானின் அழகில்
வியந்து திருப்புகழ் பாடியுள்ளார். கொல்லி மலைக்கு வேறு பல பெயர்களும் உண்டு.
குடதிசையில் (மேற்கு) உள்ளதால், இந்த மலையை 'குடவரை' என்பர். நான்கு புறமும் சதுரமாக இந்த மலை பரவி உள்ளதால் 'சதுரகிரி' என்ற பெரும் உண்டு. . அறப்பளீஸ்வரரை தெய்வமாகக் கொண்டுள்ள மலை என்பதால் 'அறப்பளீஸ்வர மலை' என்றும் அழைப்பர்.
'. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய கல்வெட்டுகளை ஆராயும்போது ஏராளமான மன்னர்கள், இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்து, நிவந்தங்கள் அமைத்த தகவல்களும் கிடைக்கின்றன. தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையின் அறிக்கையின்படி இந்த ஆலயத்தில் இருபது கல்வெட்டுக்கள் இருந்ததாகத் தெரிகிறது.
விஜயநகர அரசர் வேங்கடபதி தேவமகாராஜர், சோழ அரசர் பரகேசரி வர்மன், பொன்னிவர்மன், ராசாதிராசதேவர், ராசகேசரிவர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராசாதிராசதேவர், குலோத்துங்க சோழ தேவர், ராசமகேந்திரர், ராந்தகன் சுந்தரசோழன், வாசிராசு நரசிங்கராசர் துறையூர் தாசில் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுக்கள், அறப்பளீஸ்வரர் ஆலயத்தின் பெருமையையும் புராதனத்தையும் இன்றைக்கும் பறை சாற்றுகின்றன.
மத்ஸ்ய முனிவர் எனும்
மச்சமுனியும் கொல்லிமலையில் வாழ்ந்துள்ளதாகத் தகவல் உண்டு (அறப்பளீஸ்வரர் ஆலயத்தின் அருகே உள்ள 'மீன்பள்ளி' எனும் ஐந்தருவி தீர்த்தத்தில் இப்போதும் மீன் வடிவில் இருந்து வருகிறாராம்
மச்சமுனி. இதனால், இந்த மீன்களை எவரும் பிடிப்பதில்லை.
காலாங்கி முனிவர் கொல்லிமலையில் தவம் இருந்துள்ளார். தன் தவ வாழ்வு சிறப்பதற்கு, இந்த மலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவர் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.
சித்த புருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தாகச் சொல்லப்படும் அறப்பளீஸ்வரர் என்கிற ஈசனின் அருமையான திருத்தலம் கொல்லிமலையில் உள்ளது.
சித்த புருஷரான கோரக்கர் தன் சீடர்களுடன் பல காலம் கொல்லிமலையில் தங்கி தவம் புரிந்துள்ளார். அரிய தவத்தின் பலனாக ஏராளமான மூலிகைகளை இவர் கண்டறிந்துள்ளார். இவற்றை தானும் உண்டு, தன் சீடர்களுக்கும் கொடுத்து உபதேசித்துள்ளார். இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களைக்கொல்லிமலையுடன் இணைத்துச் சொல்லப்படுவது உண்டு. சித்தர்கள் பரவலாக கொல்லிமலையில் வசித்து வந்ததற்கான காரணம் இந்த மலையில் செறிந்து வளர்ந்துள்ள மூலிகை வளம்தான்! அமைதியான இந்த மலையில் சில உட்பிரதேசங்களில் அரிய மூலிகைகள் பலவும் காணப்படுகின்றன. பரந்து விரிந்துள்ள ஆன்மிகம் ததும்பும் மலைப் பிரதேசங்களில் எண்ணிலடங்கா மூலிகைகள் இன்றைக்கும் உள்ளன.
கொல்லிமலையின் அழகைக் கண்டு இலக்கியத்தையும் சரித்திரத்தையும் இயன்றவரை புரட்டினால், கொல்லிமலை என்னென்ன பெயர்களில் எல்லாம் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவு அறிய முடிகிறது. தமிழகத்தில் இலக்கியச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட ஏராளமான மலைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றுள் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சிறப்புகளுக்கு உரிய பல மலைகளும் உண்டு. அவற்றுள் திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருஈங்கோய்மலை, திருக்குற்றாலம் முதலானவை குறிப்பிடத்தக்கவை! இதேபோல், சமயக் குரவர்களின் காலத்துக்கும் முன்னால் அதாவது சங்க காலத்தில் பெருமைமிக்க மலைகள் பலவும் இருந்துள்ளன.
அறப்பளீஸ்வரரை தெய்வமாகக் கொண்டுள்ள மலை என்பதால் 'அறப்பளீஸ்வர மலை' என்றும் அழைப்பர்.
கொல்லிமலை அறப்பளீஸ்வரர்
ஆலய கல்வெட்டுகளை ஆராயும்போது ஏராளமான மன்னர்கள், இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்து, நிவந்தங்கள் அமைத்த தகவல்களும் கிடைக்கின்றன. தென்னிந்தியக்
கல்வெட்டுத் துறையின் அறிக்கையின்படி இந்த ஆலயத்தில் இருபது கல்வெட்டுக்கள்
இருந்ததாகத் தெரிகிறது.
********************************************************
*கடந்த ஆண்டு இரண்டு முறை இம்மலைக்கு சென்று வந்துள்ளேன். இயற்கை எழில் நிறைந்த பொதிகை மலை எனலாம்.மனதுக்கும், உடலுக்கும் இதமளிக்கும் மலை. தனியார் விடுதியும், அரசாங்க விருந்தினர் மாளிகையும் உண்டு.சில,பல விஷயங்கள் அனுபவத்தின் மூலம் அனுபவித்தால்தான் அதன் தனி மகிமை அறிய முடியும். கதியான உலகில், மன உலைச்சலில் உழன்று கொண்டு இருக்கும் மனங்களுக்கு புத்துணர்ச்சி பெற ஒரு முறை சென்று வரவும்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''அறப்பளீ சுரசதகம்''
குரு என்பதன் பன்மை வடிவம் ‘குரவ:’ என்பது; ஸமயம் என்பதும் வடசொல்லே. சமய
குரவர் என்பது வேற்றுமைத்தொகை சார்ந்த வட சொல். இதில் ஒற்று மிகாது. இது
போன்றே சிவக்குமார், ஜெயக்குமார் என்றும் எழுதுகிறார்கள். இது சமீப
காலமாக ஏற்பட்ட வழக்கம்.
கட்டாயம் ஒற்றுத் தேவையாகும் இடங்களில் கவனம் செலுத்துவதில்லை. பரவலாக
இத்தவறு காணப்படுவதால் சுட்டிக்காட்ட நேர்கிறது.
தேவ்
ஒற்றில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.
இன்னும் கூட எனக்கு ஒற்று எங்கு வரவேண்டும் என்று உருப்படியாக
தெரியாது :)
On Jul 27, 1:42 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //சதுரமாக இந்த மலை பரவி உள்ளதால் 'சதுரகிரி' என்ற பெரும் உண்டு. //
>
> ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை இருப்பதாய்ச் சொல்வதுண்டு. இதுவும்
> சதுரகிரி என்பது முற்றிலும் புதிய செய்தி.
>
> 2009/7/27 Krishnan S <krishnan.sin...@gmail.com>
>
> > *அறப்பளீஸ்வரர் *
> ...
>
> read more »
வினோத்ஜீ,
கீழே தந்திருக்கும் இழையைப் பார்க்கவும் -
”வணிக இதழ்களில் தமிழும் இலக்கணமும் ”
Hari Krishnan
'ஆழிமழைக்கண்ணா!' என்று ஆண்டாள் விளிக்கும்போது, அந்த
இடத்தில் பேசப்படுபவன் கண்ணன் அல்லன்; மாறாக வருணன் என்று புரிந்துகொள்ள
ஒற்றுதான் உதவுகிறது. 'ஆழிமழை கண்ணா' என்று அழைத்திருந்தால் அது கண்ணனையே
குறிக்கும். அங்கே ஒரு க் வந்திருக்கிற காரணத்தால், அது கண்ணன் அல்லன்;
'ஆழி மழைக்கு அண்ணா' (தலைவா) என்ற பொருளுடைய வருணன் என்று நாம்
புரிந்துகொள்ள உதவுவதே ஒற்றுதான்.
'இதுதான் தந்த பலகை' என்று எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். இதனை
'யாரோ
என்னிடத்தில் கொடுத்த (தந்த) பலகை இது' என்றும் பொருள் கொள்ள முடியும்.
அல்லது, 'இது தந்தத்தால் செய்யப்பட்ட பலகை' என்றும் பொருள் கொள்ள
முடியும்.
தந்த பலகை என்றால் கொடுத்த பலகை; தந்தப் பலகை என்றால், தந்தத்தால்
செய்யப்பட்ட
பலகை என்ற பொருள் மாறுபாடு இருக்கிறது என்ற அடிப்படை புரிந்துவிட்டால்,
எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் இடையில் பொருள் சேதாரம் இல்லாமல்
இருக்க
முடியும்.
http://groups.google.co.uk/g/d427fcf3/t/eaf98028c276a5d8/d/b83f61ecd2cdc3c5
தேவ்
//அழகைக் கண்டு//
"அழகைகண்டு" என்று எழுதினால் "க" தன்னுடைய non-voiced உச்சரிப்பை
இழந்துவிடும்.
"அழகைக்கண்டு" என்று எழுதினால் "க" உச்சரிப்பு மாறாமல் இருக்கும்.
//முருகப் பெருமானின்//
முருகபெருமான் <> முருகப்பெருமான்
Euphony'க்கு அன்றி வேறெதெற்கும் இவை பயன்படுவதாக தெரியவில்லை.
மேற்கண்டவை சில விதிவிலக்குகள்
இன்னும் பார்த்தால், சொல்லீற்றில் வல்லெழுத்து வரக்கூடாது. ஒற்று
இடவேண்டிமெனில் முறையாக, நிலைமொழியையும் வருமொழியையும் சேர்ந்து எழுதுவது
தான் முறை.
ஆண்டாள் காலத்தில் ; சொற்களிடையில் இடைவெளி விட்டு எழுது பழக்கம் இல்லை,
இல்லையெனில்,
கண்னனை விளிக்க நினைத்திருந்தால், ஆழிமழை கண்ணா என்று தெளிவாக
விளித்திருப்பால். அல்லது ஆழிமழைக்கு அண்ணன் என்று விளித்திருப்பால்.
சந்தி விதிகளால் எப்போது பிரச்சினையே. They always tend to create
Ambiguity.
தற்காலத்தமிழுக்கு ஒற்றெழுத்து தேவையில்லை, அது அவசியமும் இல்லை.
> http://groups.google.co.uk/g/d427fcf3/t/eaf98028c276a5d8/d/b83f61ecd2...
>
> தேவ்
இதே கருத்தை தெரிவித்த இன்னொருவர். நீஈஈஈண்ட இழையில் கடைசியில்
இருந்தது :) இப்போது தான் பார்த்தேன்.
எனினும், மேற்கூறிய அனைத்துக்கும் காப்புரிமை என்னுடையதே !!. எந்தவித
plagiarism நடைபெறவில்லை !!!
///ஏடுகளிலும் கல்வெட்டுகளிலும் சொற்களை இடைவிட்டு எழுதாமல் எழுதும்
வழக்கம்
இருந்ததால் ஒற்று எனப்து தேவை பட்டது. ஆனால் இக்காலத்தே ஒற்று தேவை
இல்லை
அகரமுதலவெழுத்தெல்லாமாதி
பகவன்முதற்றேவுலகு
வேந்தன் அரசு
ஒற்று ஒழிப்போர் சங்க தலைவர்
ஒற்று ஒழி போர்ச்சங்க தலைவர்
ஒற்று ஒழி போர் சங்கத்தலைவர் ///
சங்கத்தில் இணைய வேந்தன் அரசு ஒத்துக்கொள்வாரா :) ?
On Jul 27, 4:03 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ஒற்றொழிப்பு ஓர்சங்கத்து அலைவர்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
நிறைய உண்டு. கற்றுக்கொண்டால் ஏன்? என்று விளங்கும்.
நா. கணேசன்
நிறைய உண்டு. கற்றுக்கொண்டால் ஏன்? என்று விளங்கும்.
நா. கணேசன்
ஒற்றுத்தவறுகளை திருத்தம் பகுதியில் என்றைக்கும் முழு மதிப்பெண்
வாங்கியதாக நினைவில்லை.
MS Word, Spell Check செய்வது போல, ஒற்றுக்களையும் திருத்தினால்
தேவலாம் !!!
அங்கு ’த்’ எதற்கு ? தற்கால தமிழுக்கு என்று உங்களுக்கே எழுத வரவில்லை
பாருங்கள்.
சேர்த்து எழுதினாலும், பிரித்து எழுதினாலும் தமிழ் என்பதிலுள்ள ‘த’
தன்னுடைய non-voiced உச்சரிப்பை இழக்க வாய்ப்பில்லையே.
எப்படி எழுதினாலும்,ஆண்டாள் காலத்திலும் ‘Thamiz’ என்றுதானே
உச்சரிப்பு.’Dhamiz' என்று
யாரும் , எக்காலத்திலும் சொன்னதாகத் தெரியவில்லை.
//சொல்லீற்றில் வல்லெழுத்து வரக்கூடாது//
சொல்லீறில் என்று ஏன் எழுதக்கூடாது.அங்கு ஏன் ஒற்று மிக வேண்டும் ?
ஆறில் வெள்ளம் வந்தது என ஏன் எழுதக்கூடாது ? ஏழைக் காப்பாற்றுங்கள் என்று
கூற நேரும்.
ஆற்றுப்படைக்கும் ஆறுபடைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவது எப்படி ?
தேவ்
On Jul 26, 11:12 pm, devoo <rde...@gmail.com> wrote:
> *சமயக் குரவர்களின் காலத்துக்கும்*
>
> குரு என்பதன் பன்மை வடிவம் ‘குரவ:’ என்பது; ஸமயம் என்பதும் வடசொல்லே. சமய
> குரவர் என்பது வேற்றுமைத்தொகை சார்ந்த வட சொல். இதில் ஒற்று மிகாது. இது
> போன்றே சிவக்குமார், ஜெயக்குமார் என்றும் எழுதுகிறார்கள். இது சமீப
> காலமாக ஏற்பட்ட வழக்கம்.
வடசொல் ஆனாலும் தமிழில் இயையும்போது ஒற்று ஏற்கலாம்.
ஓசைநயத்தைப் போல இடத்துக்கு இடம் மாறிப் பயன்படுத்தல் ஆகும்.
சிவக்குமரன் என்றெல்லாம் வருவதைப் பழைய செய்யுள்களில்
காணமுடியும் (உ-ம்: பழனி மாம்பழக் கவிச்சிங்கம்.
வடசொற்கள் மிகுதியாய் உள்ள திருப்புகழிலும் ஒற்று மிகும் இடங்கள் உள்ளன.)
தமிழில் இருந்தும் பலசொற்கள் வடசொல் ஆகியுள்ளன.
சமைதல் என்றால் பக்குவம் அடைதல். “பெண்ணு சமைந்துவிட்டாள்”
என்பதுபோன்ற தொடர்கள்.
சமையம் சமயம் ஆயிற்று:
அரை- அரைசு (மரம். தொல்.) - அரசு
முரை- முரைசு - முரசு
குழை- குழைந்தை - குழந்தை
புடை- புடைவை - புடவை
சினை- சினைப்பு - சினப்பு (வேர்க்குரு)
பாலை - பாலைக்காடு - பாலக்காடு
அள்ளைக்கை - அள்ளக்கை - அல்லக்கை (பதிவுலகில்) (புல்லாங்குழல் <
புள்ளாங்குழல்)
அரைத்தல் - அரைப்பு - அரப்பு (உசிலந்தளிர்)
உடைமை - உடமை
தகைமை - தகமை
புழைக்கடை - புழக்கடை
குழைவி - குழவி (சட்னி அரைகல். தாய்-சேய் ~ அம்மி:குழவி)
தமையன் - தமயன்
நிரையம் - நிரயம்
அதுபோல்,
சமைதல் என்பதன் ‘verbal noun' சமையம் - சமயம்.
விரிவாக, தமிழறிஞர் எழுதியுள்ளனர்:
முனைவர் இராமகி:
http://www.treasurehouseofagathiyar.net/17500/17577.htm
----------
பாவாணர் -
2. சமயம் என்னும் சொல் வரலாறு
மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள்
நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது
மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம்.
ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.
உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப்
பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.
உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.
உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.
உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.
எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.
உம் - அம் = பொருந்தும் நீர். நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப்
பொருந்துதல் இருவகைத்து.
அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.
அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல்,
நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்
அமை - அவை = கூட்டம்.
அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை
நிகழும் சிறுபோது.
அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி
போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை
முடிதல், அணியமாதல்.
சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.
"சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால்
தெரியும்." (பழமொழி)
சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத்
தக்க வேளை.
சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது
பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.
பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.
வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம்
+ அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது
ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய
பின்பும்,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்"
(குறள். 380)
என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற்
றிரிபேயாதல் காண்க.
நா. கணேசன்
> கட்டாயம் ஒற்றுத் தேவையாகும் இடங்களில் கவனம் செலுத்துவதில்லை. பரவலாக
> இத்தவறு காணப்படுவதால் சுட்டிக்காட்ட நேர்கிறது.
>
இது உண்மை. ஒற்று மிகும் இடங்களைப் பற்றி மக்களுக்குத்
தெரியாமல் போவதற்கு அரைகுறை பத்திரிகையாளர்கள் காரணம்.
தமிழர்களின் காசில் கோடிக்கணக்கில் பணம் செய்யும் பத்திரிகைகள்
தமிழறிந்தவர்கள் சிலரைப் பணிக்கமர்த்தி செய்தி, கட்டுரைகளில்
ஒற்றுச் சந்தியிலக்கணத்தைச் சரிபார்த்துப் பிரசுரித்தல் வேண்டும்.
> தேவ்
MS Word, Spell Check செய்வது போல, ஒற்றுக்களையும் திருத்தினால்
தேவலாம் !!!
அதை மேலேயே கூறினேனே.
தற்கால தமிழ் - சரி
தற்காலத்தமிழ் - சரி
தற்காலத் தமிழ் - என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
சொற்களை பிரித்து எழுதும் போது ஒற்றுக்கு அர்த்தம் இருப்பதாக
தோன்றவில்லை.
//சொல்லீறில் என்று ஏன் எழுதக்கூடாது//
தொல்காப்பியரை கேளுங்கள் :). இலக்குவனார் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சி
நூலில், சொல்லீற்று வல்லொற்றுகள் உச்சரிக்க கடினமாக இருப்பதால் இவ்வாறான
விதி இருப்பதாக , எப்போதோ படித்த நினைவு.
//> சேர்த்து எழுதினாலும், பிரித்து எழுதினாலும் தமிழ் என்பதிலுள்ள ‘த’
> தன்னுடைய non-voiced உச்சரிப்பை இழக்க வாய்ப்பில்லையே.//
ஒரு பக்க தமிழ் உரையை முழுவதுமாக புணர்ச்சி விதிகள் புகுத்தி, இடைவெளி
இல்லாமல் படித்து பாருங்கள். கஷ்டம் புரியும் :).
<< ஏழைக்காப்பாற்றுங்கள் >> :)
ஆறு - ஆற்று - Internal Sandhi.
நாம் பேசுவது - External Sandhi.
வட சொற்கள் புணராது !
அவர்கள் கொடுத்த உதாரணம்:
சங்கீத + சபா > சங்கீத சபா
--
On Jul 27, 3:42 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //சதுரமாக இந்த மலை பரவி உள்ளதால் 'சதுரகிரி' என்ற பெரும் உண்டு. //
>
> ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை இருப்பதாய்ச் சொல்வதுண்டு. இதுவும்
> சதுரகிரி என்பது முற்றிலும் புதிய செய்தி.
>
கொங்குநாட்டின் மிக முக்கியமலை இந்தச் சதுரகிரிதான்.
இங்கே கொல்லிப்பாவை (ஒரு அணங்கு மோகினி. சிறுபேய். கொல்லி/கொற்றி
(துருக்கை)
வாழ்வதாக ஐதிஹ்யம், சங்க இலக்கியம் முழுக்க கொல்லிப்பாவை
பற்றிச் செய்திவரும்.
கொல்லிமலை பற்றிச் சில பாட்டுகளைக் கொடுத்துள்ளேன்:
http://groups.google.com/group/thamizayam/msg/ce5096acce0e69f8
கோவி. மணிசேகரனின் கொல்லிப்பாவை நாவல் படிக்கணும்.
-------
எனக்கு சதுரகிரி என்றால் பாண்டிநாட்டிலும் ஒரு மலை என்று இணையம்
வந்தபிறகு தான் தெரியும்.
நா. கணேசன்
> 2009/7/27 Krishnan S <krishnan.sin...@gmail.com>
>
> > *அறப்பளீஸ்வரர் *
>
> ...
>
> read more »
ஒற்று பற்றிய குழப்பங்கள் எனக்கும் உண்டு.
விதிகள் தெரியும் என்றாலும் அவை குழப்பம்
மிகுந்தவை என்றும் ஏராளமான விதிவிலக்குகளைக்
கொண்டவை என்றும்தான் நினைக்கிறேன்.
ஒற்று போடாமல் விடுவதால் சொற்களின் பொருள்
மாறலாம் என்பது சரி. ஆனால் நவீன அச்சுத் தமிழில்,
அதிலும் செய்தித்தாள் தமிழில், ஒற்று இருந்தாலும்
இல்லாவிட்டாலும் இடம் கண்டு பொருள் அறிந்து
கொள்வது கடினம் அல்ல.
ஆகவே ஒற்று விஷயத்தில் நெகிழ்ந்து கொடுக்கலாம்
என்பதே என் கருத்து. அதை ஒழித்து விடலாம் என்பதில்
இசைவில்லை. பொர்யுளுக்காக இல்லாவிட்டாலும்
ஒசைக்காக அது இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ் அச்சுக் கலைக்கு நமக்கு நிச்சயமாக
ஒரு உறுதியான வழிகாட்டு நூல் வேண்டும்.
ஒற்று மட்டும் அல்லாமல் சொற்களை எப்படிப்
பிரிப்பது சேர்ப்பது என்றும், நிறுத்தக் குறிகள் எப்படி
இடுவது என்றும் விதிகள் வரையறுக்கப்
பட வேண்டும். ("வரையறுக்கப் பட" என்றே நான்
எழுதுகிறேன்.)
இதில் நம் மரபு இலக்கணத்தைப் பேணுவதோடு
அச்சின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்ச்சியான
விதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
ரெ.கா.
On Jul 27, 3:42 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //சதுரமாக இந்த மலை பரவி உள்ளதால் 'சதுரகிரி' என்ற பெரும் உண்டு. //
>
> ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை இருப்பதாய்ச் சொல்வதுண்டு. இதுவும்
> சதுரகிரி என்பது முற்றிலும் புதிய செய்தி.
>
கொல்லிமலையோ, பாண்டிநாட்டு மலையோ சதுரமாக இல்லை.
சதுரர் என்றால் சித்தர், வித்யாதரர். மூலிகைவளர் மலைகளில்,
அணங்கு வாழும் மலையில் தவம் செய்யும் முனிகள் வாழும் மலையாதலால்
சதுரகிரி.
அறைப்பள்ளி - அறப்பள்ளி. அறை - சிறு மலை. தேவார வைப்புத்தலம்.
-----------
உறையூர் அம்பலவாணக் கவிராயர் ஊர் அன்று.
அவர் சீகாழி அருணாசலக் கவிராயர் (இராம நாடகக் கீர்த்தனை, அனுமன்
பிள்ளைத்தமிழ்)
அவர்களின் சற்புத்திரர், அறப்பளீசுர சதகம் பாடியபின்
காங்கயத்தை அடுத்த சிவமலைப் புராணம் பாடினார்.
அச்சாகியிருக்கிறது. பிற பின்.
நா. கணேசன்
>
> தேவ்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
Nichchayamaa !!!!
naanae sollanumnu ninachhaen, adhukkulla neengalae sollitteenga !
enakku endha problem-um irukkura maadhiri theriala.
neenga sonna ellaaththaiyum senjidalaamaa ? :) er.. erkanave
senjaacchu :P
hmm.
daily ippadiththaan college-mates'oda chat panren, thamizh onnum
azhinjozhinju pogalaiyae !!
lolzz..
Anyway Jokes Apart,
எந்த மொழியாக இருந்தாலும் காலத்திற்கேற்ப நெகிழ்ந்து கொடுத்த தான்
தீரும். ஒரு காலத்தில் இடைவெளி இல்லாமல் எழுதினார்கள், புணர்ச்சி
விதிகளில் அதீத பயன்பாடு இருதது,
எ, ஏகார, ஒ, ஓகார, அகர, ஆகாரம், ரகர, ஒற்று வித்தியாசம் ஏதும் இல்லாமல்
மகா குழப்பரீதியாக தமிழ் எழுதப்பட்டது. அப்போது வேண்டுமானால் ஒற்று
பயன்பட்டிருக்கலாம்.
தெள்ள தெளிவாக இடைவெளியுடனும், ஏ/ஏ, ஒ/ஓ, கால்/ர வேறுபாட்டுடனும்
புள்ளியுடனமும் அதீத புணர்ச்சி விதிகள் பயன்படுத்தாத தற்கால தமிழுக்கு
ஒற்று தேவை இல்லை இல்லை இல்லவே இல்லை. அது வெறும் சுமை மட்டுமே.
எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
On Jul 28, 10:15 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/7/27 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> //தற்காலத்தமிழுக்கு ஒற்றெழுத்து தேவையில்லை, அது அவசியமும் இல்லை.//
>
> தற்காலத் தமிழுக்கு எதுவுமே தேவையில்லை.
>
> மரபு தேவையில்லை.
> யாப்பு தேவையில்லை.
> இலக்கணம் தேவையில்லை.
> தனித்தன்மை தேவையில்லை
> றகர ரகர வேறுபாடு தேவையில்லை.
> ளகர லகரமும் தேவையில்லை
> டண்ணகரம் தேவையில்லை
> றன்னகரம் தேவையில்லை
> தந்நகரம் தேவையில்லை
>
> மொத்தத்தில் ஆங்கிலத்துக்கு ஒவ்வாத எதுவுமே தேவையில்லை.
> ஆங்கிலத்திலேயே தட்டச்சிவிடலாமே, தமிழ் எழுத்துக்களே தேவையில்லை.
>
> ஏன் தமிழே தேவையில்லை.
>
> ஆங்கிலம் இல்லாத காலத்தில் பேசுவதற்கு மொழியில்லாமல் எதையோ
> பேசிக்கொண்டிருந்தோம். இப்போதோ சர்வ வல்லமை பொருந்திய உலக மொழி ஆங்கிலம் நமக்கு
> வசப்பட்டிருக்கிறது. அப்பறம் எதற்கு அரதப் பழசெல்லாம்?
>
> ஒற்றுகளை ஒழித்து ஒவ்வொன்றாய் ஒழிப்பதற்கு ஒரேயடியாய் ஒழித்துவிட்டால் என்ன?
> அடுத்த வேலையைப் பார்க்கலாமல்லவா?
>
> நடராஜன்.
>
> 2009/7/27 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
புணர்ச்சி விதியைப் பயன்படுத்தினால் எழுத்துச் சிக்கனம் ஆதாயம். புரிந்து
கொள்வது சிரமம் என்பது வேறு விஷயம்.
தமிழ் இதழியலார் ஒற்றெழுத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெற்றி கண்டு
பல காலம் ஆயிற்று, விழித்துக்கொண்டு பார்ப்பதற்குள். பிழைத்திருத்தத்
திருப்பணியில் உள்ள சோம்பல் காரணம் என்பது விவரமறிந்த வட்டாரம்
தெரிவிக்கும் செய்தி.
இன்றைய காலகட்டத்தில் ரெ.கா அவர்களின் கருத்துப்படி
ஒருமித்து நடப்பது தீர்வு என்று தோன்றுகிறது.
தேவ்