ஆனந்த் பிரசாத்:
> கொல்லி மலைச்சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
நிலப்பிரண்டை மூலிகை:
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/f344a52951aec5f8/b535831b74716713
கொல்லிமலையில் மயக்கும்மாது இருக்கிறாள்
என்பது ஐதிஹ்யம், சங்ககாலந்தொட்டு
கொல்லிப்பாவை தமிழில் வர்ணிக்கப்படுகிறாள்
- 2000 வருஷமாய். 20ஆம் நூற்றாண்டில்
நாவலோ, சினிமாவோ ஏற்பட்டிருக்கும்
(யான் அறிகிலேன், தெரிந்தோர் சொன்னால்
தெரிந்துகொள்ள ஆசை). இவள் கண்டவியூக
சூத்திரத்தில் வசுமித்ரா (மகாயான சூத்திரம்,
1-ஆம் நூற்., சீன மொழிபெயர்ப்பு 2-3 நூற்.)
இரும்புத்தாது மிகுதியும் கிடைக்கும் பகுதி.
சேலம் உருக்காலை. எனவே,
கொல்லி மலை என்று பெயர்,
இரும்பூழிக் காலம் உருவாக இரும்புத்தாதை
உருக்கிய பகுதி. கேரளா கொல்லம் ( > கொய்லான்).
(சேரலம் > Zeylon சிலோன் ஆனதுபோல்,
ஆங்கில வார்த்தை serendipityக்கு
வேர் Serendib - சேரன் தீவு).
சேரர்கள் பழைய பெரிய குடியினர்.
வஞ்சி (கரூர்) தலைநகர், கேரளாவும்,
ஈழத்தில் சிலபகுதிகளும் அக்குடியினர்
ஆட்சியில் இருந்தன.
இந்த மலையின் மன்னன் குலசேகர ஆழ்வார்:
அவரே தேவகி புலம்பலில் சொல்கிறார்:
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோலமாம் குல சேகரன் சொன்ன....
இம்மலையின் தலைவனாக குலசேகரனுக்கு
ஆயிரம் வருஷம் முன்னாடி இருந்தவன்
வல்வில் ஓரி. ஓரி தொடுப்பணிந்து
உள்ள சிலை கொல்லிமலைக் கோவிலில்
கேட்பாரற்றுக் கிடந்தது (இராமனுக்கு
தோற்செருப்பு இருக்காது - கோவில்களில்)
பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர் கண்டெடுத்தது. இராம. வீரப்பன்
சொல்லி எம்ஜிஆர், நீதியரசர் செங்கோட்டு
வேலன், ஆணையில் இராசிபுரம் கைலாசநாதர்
கோவிலில் ஓரியின் சிலை பத்திரமாக
வைக்கப்பட்டது.
புறம் 158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5 கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10 ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15 தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20 உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25 அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
====
அன்பின் ஆனந்த்,
கொல்லிமலை அடிவாரத்தில் கூவைமலை
முருகன் கோவில், அதில் சேவலைக்
கையில் இடுக்கி வேடனாய் நிற்பவன் -
அருகே ஓடு ஓடை, .... ஃபோட்டோக்கள்
எடுத்து வலைப்பதிவிலே வைக்கலாமே.
இங்கும் அனுப்பலாம்.
> பழைய வெண்பா;
>
> வள்ளிக் கிசைந்த மணவாளன் வேடுவனாய்
> அள்ளிக் கொளும்பேர் அழகுடனே - துள்ளுகிற
> கோழியினைக் கையிடுக்கிக் கொல்லிமலைச் சாரலிலே
> வாழுகிறான் சென்றே வணங்கு
>
8 ஆண்டுகளுக்கு முந்தைய என் மடலின் பகுதி இது.
----------------
வேளுக்குறிச்சி, குமாரமங்கலம் (ப. சுப்பராயன்,
மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன்
சம்பந்தி வீடுகள், ...) அப்பகுதி தமிழுக்கு
நிறையக் கொடையளித்துள்ளது. குமரமங்கலம் பரமசிவன்
என்னும் வேளிரை பூந்துறைப் புராணம் காளியணப்
புலவரின் இரண்டு நிந்தாஸ்துதி பாடல்களும்
கொடுத்துள்ளேன். காண்க.
கொச்சி சமஸ்தானத்தில் வாரிசில்லாமல் போனால்
பூந்துறைக் காரர்களைத் தத்தெடுக்கும் வழக்கம்
இருந்திருக்கிறது. இரா. நாகசாமி எழுதியிருக்கிறார்,
-----------------------
இன்னொரு வேண்டுகோள்:
சென்னைலைப்ரரி இணையப்பக்கத்தில் இருந்து
கல்கி அவர்களின் பொய்மான் கரடு
கதையை இங்கே இடவும். நன்றி!
http://groups.google.ge/group/minTamil/msg/afb8a7e77113fade
பொய்மான் கரடு:
> சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய
> நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி
> பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது
> போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும்
> இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.
அன்புடன்,
நா. கணேசன்
(அனந்த் அவர்களின் சிவன் மீதான பாட்டில் இவனைச்
சைவன் என்பது எவ்வாறு என்பார். அதற்குக்
காளியணப்புலவரின் "பரம்பரையாச் சைவனென்பான்"
நல்ல ஒப்புமை.)
நீச்சல் வீரன் மைக்கேல் பெல்ப்ஸ் லண்டனில்
பங்கி யுண்டாரா என்று பத்திரிகைகளில் செய்தி
அண்மையில் வந்தது.
--- In RayarKaapiKlub@y..., "naa_ganesan" <naga_ganesan@h...> wrote:
நேற்று, பேரா. பீட்டர் ஷல்க் (உப்சாலா பல்கலை, ஸ்வீடன்) தன்
"தமிழகம், ஈழத்தில் பௌத்தம்" (2 தொகுதி, சுமார் 1000 பக்கம், 2002)
அனுப்பிவைத்ததைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பப்பா, என்ன ஆழமான ஆய்வு,
பல வருட முயற்சி, புதிய புதிய செய்திகள். அதில் பேரா. ஆ. வேலுப்பிள்ளை,
சி. பத்மநாதன், இரா. நாகசாமி, து. தயாளன் (இந்திய அரசு தொல்பொருள்துறை)
கட்டுரைகளும் உள்ளே.
நூல்பற்றிப் பேச, சில ஆய்வுக் கட்டுரைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது,
19ஆம் நூற்றாண்டில் வெளியான காளியணப் புலவரின் பூந்துறைப் புராணம்
கிடைத்தது. பூந்துறை ஈரோட்டுக்குப் பக்கம், காவிரிக் கரியில் உள்ள ஊர்.
வேளுக்குறிச்சியில் புளியங்குடி முத்துவீரக் கவிராயர், வலங்கைப் புலிக்கவிராயர்,
இன்பக் கவிராயர், மாம்பழக் கவிராயர் என்று பலர் கூடுவர். பல கவிராயர்கள் அந்தக்
காலத்திலே ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திலிருந்து தமிழ்பரப்பினார்கள்.
இந்தப் போக்குவரவால், பாரதியார் குழந்தையில் வேளுக்குறிச்சி பற்றிக்
கேட்டிருக்கிறார். சொந்த எட்டையபுரம் என்று தன்வரலாற்றை எழுதாமல் ஊர்ப்பெயரை
மாற்றியிருக்கிறார்.
காளியணப் புலவர்:
வேளுக்குறிச்சி மீது
-------------------------
இருமடந்தை நண்பன் இராசைவள நாடன்
அருவிழியன் வேள்குறிச்சி யாளன் - பரஞ்சேர்
வழிவேலவன் பேரன் வாணஞ் சயன்சேய்
எழில்சுப்ப ராயன் இவன்
தமிழைப் புரந்தார் அந்தக் காலத்தில் மிகக் குறைவு:
---------------------------------------------------------------
சிந்தை மகிழ்ந்திடு மைசூர்ச் சமத்தானத்திற்
. . செயவில்லை, கம்பெனியார் செய்யமாட்டார்
அந்தமிகு செஞ்சி தஞ்சாவூர் கோடற்கோ
. . அரசில்லைச் சேதுவுக்கோ ராணிப்பட்டம்
வந்த வெட்டி யாபுரத்திற் பேட்டியில்லை
. . மற்றவர்க்கோ கொடைகொடுக்க வளம்போதாது
செந்தமிழ்க்கு வேள்குறிச்சி ஒன்றேயல்லால்
. . செய்யுதற்கோ வேறிலைமுச் சகத்தில்தானே.
வந்தவெட்டியாபுரம் = வந்த எட்டையபுரம்.
காளியணப் புலவர் குமரமங்கலத்தார் மீது
பாடிய பாடல்கள் சுவையூறுவன. அவற்றுள் இரண்டு.
பானையிலே சோறுதின்பான் சட்டியிலே கறிநுகர்வான் பங்கியுண்பான்
ஆனெய் தின்பான் பூனெய் தின்பான் பலகாரமாப் பண்ணி அரிந்தேயுண்பான்
தானமது கட்கஞ்சா வவனிகொள்வான் பரம்பரையாய்ச் சைவனென்பான்
மேன்மைபுகழ் குமரமங்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்தானே (1)
(இருபொருள் உள்ள பாடல் இது, பூநெய் = தேன். பங்கி (bhangi - வடசொல் =
போதைப்பொருள் ஒன்று,
பங்குதல் எனினும் அமையும். அவனி = அபினி, உலகு எனினும் அமையும்.)
தேவடியார் தமைக்காணிற் சாமிபுத்தி எனவணங்கித் தெண்டஞ்செய்வான்
ஆவலுட வர்களிட காற்கழுவிக் குடிப்பா னடியின்மீதே
தூவலர்கொண் டருச்சிப்பான வர்களெச்சிறனை நுகர்வான் தூரகோத்திரன்
மேவுபுகழ்க் குமரமக்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்றானே (2).
இன்பகவி கிருத்துவ மதஞ் சார்ந்தவர். யாழ்ப்பாணம் சென்று பல வருடம்
இருந்தவர். நல்லூர் முருகன் மீது கீர்த்தனை பாடியுள்ளார்.
அன்புடன்,
நா. கணேசன்
--- In RayarKaapiKlub@y..., "naga_ganesan" <naga_ganesan@h...> wrote:
>
> பாரதியார் இங்கு விவரிப்பது வேளுகுறிச்சி ஜமீந்தார் வேலப்ப கவுண்டர் (1830-1898)
> ஆவார். அவர் நஞ்சையன் என்பவரது மகன். வேளுக்குறிச்சி பரம்பரையாக
> புலவர்களை ஆதரித்தவர்கள். வெளியன் என்பது அவர்கள் குலப்பெயர்.
> வெளியன் வேண்மாள் என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் வரும்.
> வேளுக்குறிச்சியைப் பற்றி கொங்கு நாட்டுப்புறத்தார் ஒன்று சொல்வர்:
> "பசியாய் இருந்தா குறிச்சிக்குப் போ" என்று. ஏன் தெரியுமா?
> வேளுக்குறிச்சிக்கு வந்தவர்களை உணவிடாமல் அவர்கள் அனுப்பியதில்லை.
> ஒவ்வொரு இரவும், 3-4 ஆள் அரிக்கன் லாந்தருடன் போய் கோயில்
> சத்திரம் சாவடியில் தேடி, தூங்கிக் கொண்டிருப்பவரையும் எழுப்பி
> "சாப்பிட்டாச்சா?" என்று கேட்டுச் சோறிட்ட ஊர் என்பார்கள்.
> ந. வேலப்ப கவுண்டர் அகில இந்திய காங்கிரஸ் அமைத்த
> முதல் கூட்டம் நடந்ததில் கலந்துகொண்டவர். 1885-ஆம் ஆண்டு.
> ஆலன் ஹ்யூமெ, C. F. ஏண்டிருஸ் போன்றோர் நடத்தியது அது.
> அந்த முதல் மாநாட்டுப் போட்டொவில் வேலப்பரைக் காணலாம்.
>
> வேலப்பகவுண்டர் சமஸ்தானத்தில் பல புலவர்கள் இருந்தார்கள். முக்கியமானவர்களாக,
> மாம்பழக் கவிராயர், இன்பகவி என்பவர்களைச் சொல்லலாம்.
> மாம்பழம் (1836-1886) பழனியைச் சேர்ந்த முத்தைய ஆசாரி என்பவர் மகன்.
> கண்பார்வை அற்றவர். ஏகசந்தக்கிராகி. கவிச்சிங்கம் என்ற பட்டத்தை
> சேதுபதி அரசவையில் பெற்றவர். மாம்பழம் சந்திர விலாசம் என்ற
> பிரபந்தத்தை வேலப்பவேள் மேல் பாடியிருக்கிறார். காமச்சுவை சொட்டுவது.
> இன்பகவி பற்றிப் பிறகு சொல்வேன். ஒன்று அவரது கவியில் ஆனந்தம்
> நடமிடும். இன்னொன்று: எப்பொழுதும் மதுக்கலசத்துடன் இருந்தவர்!
> (கண்ணதாசனை நாம் அறிவோமே).
>
> பேளுகுறிச்சி இயற்கைவளம் சூழ்ந்த ஊர். கூவைமலை என்பது
> கொல்லிமலை அடிவாரக் குன்று. சுனை ஒன்று ஓடுகிறது.
> அதில் நீந்தி நீராடி முருகன் கோயிலைப் பார்க்கவேண்டும்.
> முருகன் அங்கே சேவலைக் கையில் பிடித்துக்கொண்டு
> வேடனாய் நிற்கிறான்.
>
> பழைய வெண்பா;
>
> வள்ளிக் கிசைந்த மணவாளன் வேடுவனாய்
> அள்ளிக் கொளும்பேர் அழகுடனே - துள்ளுகிற
> கோழியினைக் கையிடுக்கிக் கொல்லிமலைச் சாரலிலே
> வாழுகிறான் சென்றே வணங்கு
>
> (நினைவுச்சொல் இது. சரியான வடிவைத் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
> எழுதிய கட்டுரையில் காணலாம். பேளுகுறிச்சி முருகன் மீது அவர் எழுதியுள்ளார்.
> தமிழ்நாட்டுக் கோயில்கள் மீது 4 தொகுதிகள் எழுதினார், அதில் ஒன்றில்
> உள்ளது)
>
> கரூர் தான் சங்க கால வஞ்சி என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
> முதல்முதல் எழுதியவர் ரா. ராகவையங்கார் (வஞ்சிமாநகர், 1932).
> அதில் கொல்லிக்கோன், கொல்லி காவலன் என்று சேர
> அரசர்கள் சொல்வதை எழுதியுள்ளார் (உ-ம்: குலசேகர ஆழ்வார்).
> கந்தபுராணம் முருகன் வள்ளியைச் சந்தித்து மணம்கொண்டது
> வள்ளிமலை என்று சொல்லும். ஆனால் அருணகிரி திருப்புகழில்
> பல இடங்களில் கொல்லிமலையில் தான் வள்ளி என்று சொல்லியுள்ளார்.
>
> இதெல்லாம் ஒருபுறம் கிடக்க.
>
> எட்டையபுரம் ஜமீந்தார் வாழ்க்கையைத் தான் பாரதி வருணிக்கிறார்.
> அதை ஒருபூடகமாக வேளுகுறிச்சியார் மீது ஏற்றிச் சொல்கிறார்.
> பாரதி சின்னவயசில் இளசை அரசவைப் புலவரிடமிருந்து
> வேளுக்குறிச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். சொந்த ஊர்க்கதையைச்
> சற்று மாற்றியிருக்கிறார்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
> --- In RayarKaapiKlub@y..., "era.murugan_achwin" <aysh@s...> wrote:
> >
> > முறுக்கு மீசையையும், முண்டாசையும், சுடர் விடும் கண்களையும் பார்த்தால்
> > மனதில் எழும் பாரதியின் பிம்பம் ஒரு வகை. அவருடைய கவிதைகளோடு
> > ஒத்திசையும் உருவம் இது.
> >
> > பாரதியின் உரைநடை வித்தியாசமானது. சீறும். சினக்கும்.
> > நகைக்கும். கதைக்கும். ரகசியம் பேசும். அன்னியோன்யமாகத் தோளோடு
> > அணைத்துக் கொண்டு வார்த்தை சொல்லும். நம்பிக்கையோடு விரல் சுட்டும்.
> > சிநேகிதனாகக் கூட வரும். ஞான குருவாக அறிவுறுத்தும்.
> >
> > நல்ல கவிதை எழுத வேண்டுமா? பாரதியைத் திரும்பத் திரும்பத்
> > திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் படியுங்கள். ஜீவனுள்ள
> > உரைநடை எழுத வேண்டுமா? அதற்கும் பாரதியைப் பாராயணம் செய்தால்
> > போதும்.
> >
> > கண்ணில் குறும்பும், நமுட்டுச் சிரிப்பும், கிண்டலும், கேலியும், கேட்டுக்
> > கொண்டிருப்பன் முதுகில் ஓங்கித் தட்டி ஆர்ப்பாட்டம் குதி போடும்
> > அட்டகாசமான நகைப்புமாகப் பாரதியின் இன்னொரு முகத்தைப் பார்க்க
> > வேண்டுமா?
> >
> > வா இந்தப் பக்கம்!
> >
> > சின்னச் சங்கரன் கதையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே
> > கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். தமிழ் உரைநடையில்
> > நகைச்சுவை எழுத்து அவரிடமிருந்து தான் சுவடு விட்டுக் கொண்டு
> > போகிறது என்பது புலப்படும்.
> >
> > அன்புடன்,
> > மத்தளராயன் (எ)
> > இரா.முருகன்
> > --------------------------------------------------
> > --------------------------
> >
> >
> >
> > ராமசாமிக் கவுண்டர் திருச்சபை
> > ----------------------------
> > ----
> > ('சின்னச் சங்கரன் கதை' குறுநாவலில்
> > இருந்து)
> >
> > மஹாகவி பாரதியார்
> > எழுதியது
> >
> > ----------------------------------------
> > ----------------------
> >
> > மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட
> > அண்டபகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூராதிப ராமசாமிக்
> > கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். நல்ல கருநிறம். நரை
> > பாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்கு போல்
> > தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய
> > முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் குழிந்த
> > கண்கள். இமைப் புறங்களில் காக்கைக் கால் அடையாளங்கள். பொடியினால்
> > அலங்கரிக்கப் பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும் புகையிலைச்
> > சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு.
> > ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகாரமான உடல். பிள்ளையார்
> > வயிறு. ஒருவிதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல்
> > நிறைய மோதிரங்கள். பக்கத்தில் வெற்றிலை துப்புவதற்கு ஒரு
> > காளாஞ்சி. ஒரு அடைப்பைக்காரன் - இதுதான் ராமசாமிக் கவுண்டர்.
> >
--- End forwarded message ---
--- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> வைடூர்யம் தென்னாட்டில் கிடைத்த கல்.
> வடமொழியில், வங்காளியில், மாகதியில் (பீகார் மொழி)
> ளகரம் இiல்லை. பலமுறை ளகரத்தை டகரம் ஆக்குவர்,
> (உதாரணம்: நாளகிரி புத்தரைக் கொல்ல அவர் உறவினன்
> அனுப்பிய யானை. நாளகிரி = கருமலை, இதை நாடகிரி
> என்றும் சில வடமொழி நூல்கள் குறிக்கும்).
>
> அதுபோல, வேளூர் > வேடூர். iஇங்குப் பிறப்பதே,
> வைடூர்யம். (சிவ > சைவ, விஷ்ணு > வைஷ்ணவ,
> தில > தைல, வேத > வைதீக, .... என்னுமாப்போல்).
>
> கொல்லிமலை அடிவாரத்தில் வேளுக்குறிச்சி
> என்ற அருமையான ஊர். இங்கிருந்த வேலப்பன்
> பல புலவர்களை ஆதரித்தவன். மாம்பழக் கவி
> சந்திர விலாசம் பாடினார். ஒருமுறை அவர்கள்
> ஊருக்கு நான் சென்றிருந்தபோது இiன்பகவியின்
> iஇன்பகவியின் சமாதியைப் பார்த்தேன். இன்பகவி
> கிருத்துவர், யாழ்ப்பாணத்தார். இன்பகவி என்று
> ஏன் பேர்? எப்போதும் குடித்து ஆனந்தபோகமாக
> வாழ்ந்ததால்.
>
> கொல்லிமலை சேலம் ஜில்லா இங்குக் கிடைத்த
> Cat's eye பற்றி வடமொழி நூல்கள் பல
> பேசுகின்றன. ரோமானியர் காசுகள் இவையெல்லாம்
> வாங்கவே பயன்பட்டன. தமிழ் நாட்டில் கிடைத்த
> ரோமானியக் காசு 100கு 90 விழுக்காடு கொங்கு
> நாட்டில் தான். மயக்கும் கொல்லிப்பாவை
> பற்றிப் பலசங்க இலக்கியம் பேசுகிறது.
>
> வடமொழியில் புத்த மகாயான சமயம் பற்றி
> கி.பி. 1-2 நூற். எழுந்த நூல் கண்டவ்யூக சூத்திரம்.
> இ இதில் பல ஊர்கள் தென்னாடு, தமிழ்நாடு பற்றி
> வருகிறது. அதில் கொல்லிப்பாவை, வைடூர்யம்,
> எல்லம் உண்டு - அவளுக்கு வசுமித்ரா என்று
> பேர். கண்டவியூகம் போரோபுதூரில்வடிக்கப்
> பட்டுள்ளது (கி. பி. 8ஆம் நூற்.)
>
> Borobudur = Boro + puthuur
> Boro < bihAra < vihAra (Buddhist caitya)
> budUr = புதூர்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
On Feb 23, 12:53 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> இணைப்பிலுள்ள இரண்டு படமும் கொல்லிமலையில் எடுத்தவை. மூலிகை ஆய்வுக்காகச்
> சென்றபோது எடுத்தேன். இந்த அருவிக் காட்சியில் ஒரு மறைவுக்காட்சி தெரியும்.
> அதைக் கண்டு களியுங்கள்.
>
படங்களைப் பார்வையிட முடியவில்லை. JPEG (jpg) (அல்லது) gif கோப்பாக
அனுப்பினால்
பார்க்கலாம்.
நன்றி!
நா. கணேசன்