தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் ⁠— ஆகஸ்ட் - 2022 📢

144 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 1, 2022, 4:36:37 PM8/1/22
to மின்தமிழ்
மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத்  தமிழ் வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பயிலரங்கம் ஒன்றை வருகின்ற சனிக்கிழமை 6ஆம் தேதி மலேசிய நேரம் மதியம் 4 மணிக்கு ஜூம் இணையம் வழியாக நடத்த உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
Tamil Inscription Workshop by THFi-Tamil.jpg
Tamil Inscription Workshop by THFi-English.jpg
Tamil Inscription Workshop by THFi-Malay.jpg

இப்பயிலரங்கில் 90 மாணவர்கள் பங்கெடுக்கின்றனர்.  இப்பயிலரங்கினை நமது கடிகை பொறுப்பாளர் டாக்டர்.பாமா மற்றும் மலேசிய நிபோங் திபால் தேசிய தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் டாக்டர்.சங்கர் மற்றும் திரு.நாணா ஆகியோர் பொறுப்பெடுத்து ஏற்பாடுகளைக் கவனிக்கின்றனர்.

இளம் வயதிலேயே முறையாக வரலாற்றை பயிலாததால் தான் இன்றைக்கு கற்பனை செய்திகளையெல்லாம் உண்மை என நினைத்து வரலாறு அறியாத சூழல் நிலவுகிறது.

இந்தப் பயிலரங்கில் பயிலும் மாணவர்கள் நிச்சயம் தேடுதலையும் வாசிப்பையும் வளர்த்துக் கொள்வர். முறையான வரலாற்றையும் அறிந்து கொண்டவர்களாகப் பிறருக்கும் தாங்கள் அறிந்து கொண்ட செய்திகளைச் சொல்லி அறிவார்ந்த சமூகம் வளர தங்கள் பங்களிப்பைச் செலுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
Message has been deleted

தேமொழி

unread,
Aug 4, 2022, 1:34:26 AM8/4/22
to மின்தமிழ்


வணக்கம்,

இத்தாலி, செர்மனி, ருசியா, சீனா, கொரியா, சப்பான் போன்ற நாடுகளில் அறிவியல் படிப்பும், ஆய்வும் தாய்மொழியில் நடக்கின்றன. தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியில் அவ்வாறு நடந்தால் தமிழ்ச் சமுதாயம் முன்னேறும். கட்டிடக்கலை, மருத்துவம், விவசாயம், நீர்ப் பாசனம், உலோகக் கருவிகள் செய்தல், கப்பல் கட்டுதல், கடல் பயணம்– போன்று அறிவியல் அடிப்படையாகக் கொண்ட வாழ்வு முறையை தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டிருந்தனர். அவையெல்லாம் மீண்டும் செழிக்கவேண்டுமானால் அறிவியல் தமிழ் செழிக்கவேண்டும். மேலும் பல 'அறிவியல் தமிழ்' குறித்த கருத்துக்களை இச்சிறப்புரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

297.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
_______________________________________________________
திசைக் கூடல் - 297
ஆகஸ்ட் 6, 2022, சனிக்கிழமை
இந்திய  நேரம் மாலை 8 மணிக்கு... 
அமெரிக்க நேரம்: நியூயார்க், காலை 10:30 மணிக்கு... 
_______________________________________________________
தலைப்பு: 
"அறிவியல் தமிழ்" 
- சிறப்புரை (ம) கலந்துரையாடல்

சிறப்புரையாளர்:
முனைவர். அரசு செல்லையா
பேராசிரியர், மேரிலாந்து பல்கலைக்கழகம் 
பால்டிமோர், மேரிலாந்து, அமெரிக்கா
_______________________________________________________
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி  
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 

செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன், 
கருத்தரங்கப் பொறுப்பாளர், 
தமிழ் மரபு அறக்கட்டளை 
விருதுநகர் / சென்னை

ஒருங்கிணைப்பு: 
முனைவர் மு. பாமா 
தமிழ் மரபு அறக்கட்டளை 
சென்னை
_______________________________________________________
ஜூம் வழி இணைய: 
நுழைவு எண்: 975 817 2120
கடவுச்சொல்: THFi
_______________________________________________________
பேஸ்புக் நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation
_______________________________________________________
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதனச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
_______________________________________________________
மின்னஞ்சல் தொடர்புக்கு : myth...@gmail.com
வாட்சப்: +91 9941955255
_______________________________________________________
_______________________________________________________
தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !
_______________________________________________________
_______________________________________________________


தேமொழி

unread,
Aug 6, 2022, 9:55:51 PM8/6/22
to மின்தமிழ்
297.jpg

திசைக் கூடல் - 297 [ஆகஸ்ட் 6, 2022]
அறிவியல் தமிழ்
— முனைவர். அரசு செல்லையா
https://youtu.be/03jSEdBtp_Q
---------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 6, 2022, 10:20:00 PM8/6/22
to மின்தமிழ்
inscription workshop for malaysia school.jpg

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால்  பயிலரங்கம் ஒன்று  ஆகஸ்ட்  6ஆம் தேதி, 2022 சனிக்கிழமை,  மலேசிய நேரம் மதியம் 4 மணிக்கு ஜூம் இணையம் வழியாக நடத்தப் பட்டது.   இப்பயிலரங்கில் 90 மாணவர்கள் பங்கேற்றனர்.  

இப்பயிலரங்கினை கடிகை பொறுப்பாளர் டாக்டர்.பாமா மற்றும் மலேசிய நிபோங் திபால் தேசிய தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் டாக்டர்.சங்கர் மற்றும் திரு.நாணா ஆகியோர்  ஏற்பாடுகளை முன்னெடுத்து ஒருங்கிணைத்தனர். 

இளம் வயதிலேயே முறையாக வரலாற்றை பயிலாததால் தான் இன்றைக்கு கற்பனை செய்திகளையெல்லாம் உண்மை என நினைத்து வரலாறு அறியாத சூழல் நிலவுகிறது.

இந்தப் பயிலரங்கினால் மாணவர்கள் நிச்சயம் தேடுதலையும் வாசிப்பையும் வளர்த்துக் கொள்வர். முறையான வரலாற்றையும் அறிந்து கொண்டவர்களாகப் பிறருக்கும் தாங்கள் அறிந்து கொண்ட செய்திகளைச் சொல்லி அறிவார்ந்த சமூகம் வளர தங்கள் பங்களிப்பைச் செலுத்துவார்கள் என  உறுதியாக நம்புகிறோம்.

...

தேமொழி

unread,
Aug 7, 2022, 6:09:10 PM8/7/22
to மின்தமிழ்

📌 நண்பர்களே.. தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே உள்ள மொழியியல் தொடர்புகளை ஆய்வு செய்த அறிஞர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அத்தகைய ஆய்வாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேரறிஞராக நம் முன்னே திகழ்ந்தவர் ஜப்பானிய அறிஞர் பேராசிரியர் ஓனோ அவர்கள்.
அவர் மறைந்து விட்டாலும் அவரது நினைவாக பேராசிரியர் ஓனோ அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு திட்டமிட்டும் அது செயல்படுத்த முடியாமல் போனது.

வருகின்ற சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் பேராசிரியர் ஒனோ அவர்களின் நினைவாக இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகளை ஆய்வுப்பூர்வமாக அணுகவும் ஒரு முயற்சியாக இந்தக் கருத்தரங்கம் திகழும்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் இல்லை என்றாலும் சான்றிதழ் வழங்கப்படுவதால் உங்கள் பெயர்களை நீங்கள் பதிந்து கொள்ளுங்கள்.

அழைப்பிதழ் இன்று பகிர்ந்து கொள்கிறோம். வருகின்ற வாரம் 13 ஆம் தேதி 14 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் இந்த முக்கிய நிகழ்விற்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.
- கருத்தரங்கு ஏற்பாட்டு குழு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நிகழ்ச்சி:
"பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்"

இந்திய நேரம்:
ஆகஸ்ட்  13, 2022 06:30 PM
ஆகஸ்ட் 14, 2022 06:30 PM

உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்க...
Zoom Meeting Registration:
https://us02web.zoom.us/meeting/register/tZYrf-Coqz8pGdDnEK98HGdA7CmbfIhlE7jD

Japanese Tamil scholar Susumu Ohno Event.jpg
Japanese Tamil scholar Susumu Ohno Event1.jpg
Japanese Tamil scholar Susumu Ohno Event2.jpg
உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்க...
Zoom Meeting Registration:
https://us02web.zoom.us/meeting/register/tZYrf-Coqz8pGdDnEK98HGdA7CmbfIhlE7jD

தேமொழி

unread,
Aug 11, 2022, 1:52:10 PM8/11/22
to மின்தமிழ்
📗🖍️ வருகின்ற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இந்திய நேரம் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ள ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் ஓனோ அவர்களது நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் ஜப்பானிய ஆய்வுகள் தொடர்பான கருத்தரங்கு பதிவு இன்றுடன் 92 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. மேலும் மூன்று இடங்களே காலியாக இருப்பதால் இவ்வகை மொழியியல் ஆய்வுகளில் ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் பெயர்களை பதிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதோடு ஆய்வாளர்களிடம் உங்கள் கேள்விகளையும் கேட்டு பயன்பெறலாம்.🖍️
விரைந்து பதிவு செய்து கொள்க

https://us02web.zoom.us/meeting/register/tZYrf-Coqz8pGdDnEK98HGdA7CmbfIhlE7jD?fbclid=IwAR0MxgYu1fquiWp7z7b1_hS8OTNttd8tjyl1-_ePVvSUXCwTH0Xgjklmxh0

தேமொழி

unread,
Aug 11, 2022, 3:07:08 PM8/11/22
to மின்தமிழ்



Madras Week.jpg

மெட்ராசை சுற்றிப் பார்க்கப் போறேன்.... 
🙂 தயாராகி விட்டீர்களா.. ?
***********************************************
தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை - `மெட்ராஸ்` என நீண்ட காலமாக வழக்கில் இருந்த இந்த நகர் உலகின் பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து தங்கி வாழ்ந்து வணிகம் செய்து சென்ற நகர்.
இந்த மெட்ராஸின் வரலாறு சுவையானது; புதுமைகளை உட்புகுத்தியது; நமக்குக் கடந்த கால நிகழ்வுகளை கண்முன்னே காட்டி நிற்பது!
மெட்ராஸ் நகரிலேயே வாழ்ந்தாலும் அதன் சிறப்புக்களை அறியாதோர் பலர்.
மெட்ராஸ் அல்லது வட சென்னை என்றால் அடிதடி, சண்டை என படங்களே முத்திரை குத்தும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
ஆனால் இந்த மெட்ராஸ் நகர் கருப்பர் நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு...
இங்கே கண்களைக் கவரும் வண்ணம் எழுந்து நிற்கும் சிவப்பு நிறக் கட்டிடங்கள்...
சென்னை வாசிகள் அறிந்திராத காசி மேட்டு கப்பல் கட்டும் தொழில்...
கேரம், போக்ஸிங், சிலம்பம், காற்பந்து என விளையாட்டுக்கள்..
நெஞ்சைத் தொடும் கானா இசை...
ஏராளமான சுவாரசியமான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த நகரின் சிறப்புகளை அறியாததால் தான் இன்று இதனைக் குப்பைகளைக் கொட்டி அழுக்காக்கிக் கொண்டேயிருக்கின்றோம். இன்றைக்கு 100 ஆண்டு காலம் முன்பு கூட அழகிய நதியாகக் காட்சியளித்த கூவம் இன்று குப்பை மேடாகிக் கிடக்கின்றது என்பது அவலம்!
சென்னையின் வரலாற்றை அறிந்து கொள்வதன் வழி அதன் சிறப்புக்களை நம்மால் அழிவதிலிருந்து பாதுகாக்க முடியும் அல்லவா?
ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் வாரத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுகின்றோம். டிஜிட்டல் மெட்ராஸ் என்ற சிறப்பு வலைப்பக்கமும் 2018 முதல் பல தகவல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மெட்ராஸ் வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்த வகையில் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளன.
20.8.2022 - சனிக்கிழமை காலை : ஜூம் இணைய வழி நிகழ்ச்சி தொடக்கம்.
21.8.2022 - ஞாயிறு: வடசென்னை மரபுப் பயணம் -காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை - நேரடி பயணம்
27.8.2022- சனிக்கிழமை: பழவேற்காடு மரபுப் பயணம் - டச்சு காலணித்துவ ஆட்சிகால வரலாற்றுச் சின்னங்கள்
மேலதிகத் தகவல்களுக்கு அறிப்பில் உள்ள எண்ணைத் தொடர்பு கொள்க: மணிவண்ணன் 94872 20301
வரலாற்றுச் சிறப்பு மிக்க மெட்ராஸின் சிறப்புக்களை அறிந்து கொள்வோம். வாருங்கள்.

-மெட்ராஸ் தின விழா ஏற்பாட்டுக் குழு

தேமொழி

unread,
Aug 15, 2022, 12:08:56 AM8/15/22
to மின்தமிழ்
298-1-2.jpg

பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள்
இணையவழிக் கருத்தரங்கம்-1
ஆகஸ்ட் 13, 2022 - மாலை: 06:30 மணிக்கு
https://youtu.be/VbUMhJy7A5I

சொற்பொழிவாளர்கள்:
 - முனைவர் அ. சண்முகதாசு
 - முனைவர் ச. மனோன்மணி
 - முனைவர் க. சுபாஷிணி
 - முனைவர் நா கண்ணன்

------


பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள்
இணையவழிக் கருத்தரங்கம்-2
ஆகஸ்ட் 14, 2022 - மாலை: 06:30 மணிக்கு
https://youtu.be/qsvkxAqxd9s

சொற்பொழிவாளர்கள்:
- முனைவர் ச. மனோன்மணி
 - முனைவர் அ. சண்முகதாசு
 - திருமிகு செல்வஅம்பிகை நந்தகுமாரன்
 - முனைவர் க. சுபாஷிணி
 - முனைவர் நா கண்ணன்

------

தேமொழி

unread,
Aug 15, 2022, 2:24:36 PM8/15/22
to மின்தமிழ்


MadrasDay2022-Tour.jpg
மெட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போவோமா... 21.8.2022 (ஞாயிற்றுக் கிழமை)
வட சென்னை மரபுப் பயணம்
சந்திக்கும் இடம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பின்நுழைவாயில் : (காலை 6:00)
30 பேருக்கு மட்டுமே - அவரவர் இருச்சக்கர வாகனத்தில் வருக
மெட்ராஸ் நகரிலேயே இருந்தாலும் மெட்ராஸ் நகரின் வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
மெட்ராஸ் கருப்பு நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு.. உலகின் பல பகுதிகளிலிருந்து மெட்ராசுக்கு வந்து இங்கேயே தங்கிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுகள்..
மெட்ராஸ் பற்றி நாம் அறியாத பல தகவல்கள்.. சிவப்பு நிறக் கட்டிடங்கள்... எனப் பலவற்றை விளக்கங்களுடன் அறிந்து கொள்ள...
கருப்பர் நகரம், மரப்பாலம், சட்டைக்காரி நாவலாசிரியர்... கரன் கார்க்கியுடன்..!
-மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Aug 15, 2022, 2:28:41 PM8/15/22
to மின்தமிழ்
மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
-----------------------------------------------------------------
தொடர்புக்கு: மணிவண்ணன் - 94872 20301
பதிவுக்கட்டணம்: ரூ. 100 மட்டும்
நம் மரபுப்பயண வரைபட வழித்தடம் - காணொளிச் சுட்டி
த.ம.அ. வங்கி எண் விபரம்:
Beneficiary Name: Tamil Heritage Foundation International
A/c No.: 1196050014474
IFSC: PUNB0119620 (0 - Zero)
Bank: Punjab National Bank
-------------------------------------------------
GPay - thru' Bank transfer option
---------------------------------------
Registration Form:

-----------------------

மெட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போவோமா... 21.8.2022 (ஞாயிற்றுக் கிழமை)
வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)
சந்திக்கும் இடம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பின்நுழைவாயில் : (காலை 5:45 மணி)
30 பேருக்கு மட்டுமே - அவரவர் இருச்சக்கர வாகனத்தில் வருக (தலைக்கவசம் அவசியம்)
மெட்ராஸ் நகரிலேயே இருந்தாலும் மெட்ராஸ் நகரின் வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
மெட்ராஸ் கருப்பு நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு.. உலகின் பல பகுதிகளிலிருந்து மெட்ராசுக்கு வந்து இங்கேயே தங்கிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுகள்..
மெட்ராஸ் பற்றி நாம் அறியாத பல தகவல்கள்.. சிவப்பு நிறக் கட்டிடங்கள்... எனப் பலவற்றை விளக்கங்களுடன் அறிந்து கொள்ள...
கருப்பர் நகரம், மரப்பாலம், சட்டைக்காரி நாவலாசிரியர்... கரன் கார்க்கியுடன்..!


தேமொழி

unread,
Aug 18, 2022, 5:23:46 PM8/18/22
to மின்தமிழ்
THFi-Tour.jpg
பழவேற்காடு மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)
27.8.2022 (சனிக் கிழமை)
-----------------------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மற்றும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
இணைந்த ஏற்பாட்டில்
பழவேற்காடு மரபுப் பயணம்
--------------------------------------------------------------
பார்க்கப்போகும் இடங்கள்:
பழவேற்காடு டச்சு காலனித்துவக் காலச் சின்னங்கள்
1) டச்சு கோட்டை
2) டச்சு கல்லறை
3) பழவேற்காடு அருங்காட்சியகம்
4) கலங்கரை விளக்கம்
5) தேவாலயம்
6) 25 வது மைல்கல்
7) பறவைகள் சரணாலயம்
-----------------------------------------------------------
வரலாற்றுச் சிறப்புமிக்க பழவேற்காடு:
மெட்ராசின் (சென்னை) வரலாறு 378 ஆண்டுகள். ஆனால், பழவேற்காடு இதைவிட பழமையானது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ‘எரிதேரியன் கடல்பயணக் குறிப்புகள்’ நூலில் இந்த ஊரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சோழர்கள், விஜயநகரப் பேரரசு, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என எல்லோருமே இந்நகரத்தை தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர்.
* இதன் வரலாறு சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சோழ, பல்லவ கோயில்கள் மூலம் இவை அறியப்படுகின்றன.
* 13ம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
* கி.பி.1502ல் முதன்முதலில் போர்த்துக்கீசியர்கள் இங்கே ஒரு வணிக புறமையத்தை அமைத்துள்ளனர்.
* டச்சு வணிகர்களும், அவர்களது கப்பல்களும் பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தில் தரைதட்டியது. அதனால் அவர்கள் இப்பகுதியில் தங்கிவிட்டனர்.
* கிபி 1606ம் ஆண்டு முதல் 1825 வரை டச்சு கிழக்கிந்திய கம்பெனி இங்கே வணிகம் செய்துள்ளது.
* பிறகு, பிரிட்டிஷ் வசமானது பழவேற்காடு.
-------------------------------------------------------
ஏரி
* ஒரிசாவிலுள்ள சில்கா ஏரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரி பழவேற்காடு ஏரிதான்.
* இந்த ஏரியை வடக்கே ஸ்வர்ணமுகி ஆறும், வடமேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி, கொசஸ்தலை ஆறுகளும், கூடுதலாக சில ஓடைகளும் உருவாக்குகின்றன.
* ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.
------------------------------------------------------------
மரபுப் பயணம் புறப்படும் இடம் : கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் : (காலை 6 மணி)
வாகனம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகப் பேருந்து (குளிர்சாதன வசதியுடன்)
30 பேருக்கு மட்டுமே அனுமதி....விரைந்து பதிவு செய்யுங்கள்...
இளம் தொல்லியலாளர் நந்தபாலன் பங்கேற்புடன்...
- மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
-----------------------------------------------------------------
தொடர்புக்கு: மணிவண்ணன் - 94872 20301
--------------------------------------------------------
கட்டணம்: ரூ. 700 மட்டும்
--------------------------------------------------------
த.ம.அ. வங்கி எண் விபரம்:
Beneficiary Name: Tamil Heritage Foundation International
A/c No.: 1196050014474
IFSC: PUNB0119620 (0 - Zero)
Bank: Punjab National Bank
-------------------------------------------------
GPay - thru' Bank transfer option
---------------------------------------

தேமொழி

unread,
Aug 19, 2022, 1:42:34 AM8/19/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3413789658864407&set=a.1631001437143247

Subashini Thf

invitation.jpg
ஜெர்மனி பாடன் ஊர்ட்டம்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்காட் நகரில் அமைந்திருக்கும் லின்டன் அருங்காட்சியகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற இருக்கின்ற ஆறு மாத தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று கண்காட்சி நிகழ்ச்சி திறப்பு விழா நிகழ்ச்சிக்குச் சிறப்பிக்குமாறு லிண்டன் அருங்காட்சியக இயக்குனர் வழங்கிய கடிதத்தையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிதத்தையும் இன்று அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கு வழங்கினோம்.
உடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்கள் குமரகுருபரன், நாணா, ப்ரீத்தி, பாமா, க்ரிஷ் ஆகியோர்

தேமொழி

unread,
Aug 19, 2022, 4:07:14 PM8/19/22
to மின்தமிழ்
நினைவூட்டல் ......

"மெட்ராஸ் வரலாற்று வாரம்" - தொடக்க விழா
Date: 20.8.2022 / Time: 10 AM IST

madras week.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மற்றும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
இணைந்து நடத்தும்
"மெட்ராஸ் வரலாற்று வாரம்" - தொடக்க விழா
Date: 20.8.2022 / Time: 10 AM IST
Meeting ID: 975 817 2120
Passcode: THFi

தேமொழி

unread,
Aug 20, 2022, 1:02:07 AM8/20/22
to மின்தமிழ்
"மெட்ராஸ் வரலாற்று வாரம்" 
நிகழ்ச்சி துவங்கியது, இணைக https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/478648243708834

Anitha Poobalan

unread,
Aug 20, 2022, 3:30:57 AM8/20/22
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய அம்மையார் அவர்களுக்கு வணக்கம்... 

நான் என் பள்ளியில் தமிழுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.. 
உதாரணமாக :- science exhibition, social exhibition மாதிரி

எனக்கு தங்களின் உதவி மற்றும் வழிகாட்டுதல் வேண்டும்.. 

மிக்க நன்றி ☺

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5644371a-65a7-4433-919c-90f87e4d738cn%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 20, 2022, 3:37:47 AM8/20/22
to மின்தமிழ்
Subashini Thf 

Dr Pandiyaraja Paramasivam 1.jpg
Dr Pandiyaraja Paramasivam 2.jpg


சங்கச்சொல்வளம், சங்க இலக்கியத் தொடரடைவு, சங்க இலக்கியப் பாடல்கள் ஆகிய வலைப்பக்கத்தை உருவாக்கியவர் பேராசிரியர் பாண்டியராஜா அவர்கள். அவரது சங்கத்தமிழ் வலைப்பக்கங்கள் தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் சங்கம் பீடியா என்ற பெயரில் உருவாக்கம் கண்டு வருகின்றன. நேற்று அவரது இல்லத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரை விருந்தளித்து உபசரித்தார்.
தம்பதியரின் கனிவான உபசரிப்பும் சுவையான விருந்தும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
பேராசிரியர் பாண்டியராஜா அவர்களின் நூல் பத்துப்பாட்டு தொகுதி ஒன்று, இரண்டு ஆகியவை வெகு விரைவில் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வரவிருக்கின்றது.
அத்தோடு அறிவியல் தமிழை ஊக்குவிக்கும் வகையில் அவரது கணித வரலாறு எனும் தமிழ் நூல் மறு பதிப்பாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வரவிருக்கின்றது என்ற இனிய செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
சுபா

தேமொழி

unread,
Aug 20, 2022, 4:11:05 AM8/20/22
to மின்தமிழ்
MadrasDay2022-Tour.jpg
மெட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போவோமா... 21.8.2022 (ஞாயிற்றுக் கிழமை)
வட சென்னை மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)

சந்திக்கும் இடம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பின்நுழைவாயில் : (காலை 5:45 மணி)
30 பேருக்கு மட்டுமே - அவரவர் இருச்சக்கர வாகனத்தில் வருக (தலைக்கவசம் அவசியம்)

மெட்ராஸ் நகரிலேயே இருந்தாலும் மெட்ராஸ் நகரின் வரலாற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?

மெட்ராஸ் கருப்பு நகரமாகவும் வெள்ளை நகரமாகவும் பிரிக்கப்பட்ட வரலாறு.. உலகின் பல பகுதிகளிலிருந்து மெட்ராசுக்கு வந்து இங்கேயே தங்கிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சுவடுகள்..

மெட்ராஸ் பற்றி நாம் அறியாத பல தகவல்கள்.. சிவப்பு நிறக் கட்டிடங்கள்... எனப் பலவற்றை விளக்கங்களுடன் அறிந்து கொள்ள...

கருப்பர் நகரம், மரப்பாலம், சட்டைக்காரி நாவலாசிரியர்... கரன் கார்க்கியுடன்..!

- மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
-----------------------------------------------------------------
தொடர்புக்கு: மணிவண்ணன் - 94872 20301

பதிவுக்கட்டணம்: ரூ. 100 மட்டும்

நம் மரபுப்பயண வரைபட வழித்தடம்  - காணொளிச் சுட்டி
https://youtu.be/3w8KVCec4xA

தேமொழி

unread,
Aug 20, 2022, 4:42:24 AM8/20/22
to மின்தமிழ்
madrasday2022cover.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்திய  
"மெட்ராஸ் வரலாற்று வாரம்"
ஆகஸ்ட் 20, 2022 – தொடக்க விழா
https://youtu.be/3hkUob2__Vs
---

தேமொழி

unread,
Aug 21, 2022, 12:18:03 AM8/21/22
to மின்தமிழ்

north madras tour by THFi.jpg
மெட்ராஸ் வாரத்தை ஒட்டி தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் இன்று காலை தொடங்கிய வட சென்னை மரபு பயணம்..
இதுவரை... எம்டன் சின்னம், மாடிப் பூங்கா, பழைய தூக்கு மேடை, ஸ்டேன்லி மருத்துவமனை முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்.., கருப்பர் நகரம் வெள்ளை நகரம் எல்லை தூண்..
பயணம் தொடர்கிறது..

தேமொழி

unread,
Aug 22, 2022, 5:39:48 PM8/22/22
to மின்தமிழ்
Pazhaverkadu - Pulicat -Heritage Tour.jpg
பழவேற்காடு மரபுப் பயணம் (மெட்ராஸ் தின சிறப்பு)
27.8.2022 (சனிக் கிழமை)
-----------------------------------------------------
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மற்றும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
இணைந்த ஏற்பாட்டில்  

பழவேற்காடு மரபுப் பயணம்
--------------------------------------------------------------


பார்க்கப்போகும்  இடங்கள்:
பழவேற்காடு டச்சு காலனித்துவக் காலச் சின்னங்கள்  
1) டச்சு கோட்டை
2) டச்சு கல்லறை
3) பழவேற்காடு அருங்காட்சியகம்
4) கலங்கரை விளக்கம்
5) தேவாலயம்
6) 25 வது மைல்கல்
7) பறவைகள் சரணாலயம்
-----------------------------------------------------------

வரலாற்றுச் சிறப்புமிக்க பழவேற்காடு :
மெட்ராசின் (சென்னை) வரலாறு 383 ஆண்டுகள். ஆனால், பழவேற்காடு இதைவிட பழமையானது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ‘எரிதேரியன் கடல்பயணக் குறிப்புகள்’ நூலில் இந்த ஊரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சோழர்கள், விஜயநகரப் பேரரசு, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என எல்லோருமே இந்நகரத்தை தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர்.


* இதன் வரலாறு சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சோழ, பல்லவ கோயில்கள் மூலம் இவை அறியப்படுகின்றன.

* 13ம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

* கி.பி.1502ல் முதன்முதலில் போர்த்துக்கீசியர்கள் இங்கே ஒரு வணிக புறமையத்தை அமைத்துள்ளனர்.

* டச்சு வணிகர்களும், அவர்களது கப்பல்களும் பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தில் தரைதட்டியது. அதனால் அவர்கள் இப்பகுதியில் தங்கிவிட்டனர்.

* கிபி 1606ம் ஆண்டு முதல் 1825 வரை டச்சு கிழக்கிந்திய கம்பெனி இங்கே வணிகம் செய்துள்ளது.

* பிறகு, பிரிட்டிஷ் வசமானது பழவேற்காடு.
-------------------------------------------------------
ஏரி
* ஒரிசாவிலுள்ள சில்கா ஏரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரி பழவேற்காடு ஏரிதான்.

* இந்த ஏரியை வடக்கே ஸ்வர்ணமுகி ஆறும், வடமேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி, கொசஸ்தலை ஆறுகளும், கூடுதலாக சில ஓடைகளும் உருவாக்குகின்றன.

* ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.
------------------------------------------------------------

மரபுப் பயணம் புறப்படும் இடம் : கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் : (காலை 6 மணி)
வாகனம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகப் பேருந்து (குளிர்சாதன வசதியுடன்)
30 பேருக்கு மட்டுமே அனுமதி....விரைந்து பதிவு செய்யுங்கள்...
இளம் தொல்லியலாளர் நந்தபாலன் பங்கேற்புடன்...

- மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
-----------------------------------------------------------------
தொடர்புக்கு: மணிவண்ணன் - 94872 20301
--------------------------------------------------------
கட்டணம்: ரூ. 700 மட்டும்
--------------------------------------------------------
த.ம.அ. வங்கி எண் விபரம்:

Beneficiary Name: Tamil Heritage Foundation International
A/c No.: 1196050014474
IFSC:  PUNB0119620  (0 - Zero)
Bank: Punjab National Bank
-------------------------------------------------
GPay -  thru' Bank transfer option

தேமொழி

unread,
Aug 23, 2022, 4:50:23 AM8/23/22
to மின்தமிழ்
https://www.facebook.com/photo/?fbid=3416966695213370&set=a.1631001437143247


TVA.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் 
தமிழ் இணையக் கல்விக் கழக பொறுப்பாளர்களுடன் மற்றும் 
இயக்குனர் டாக்டர்.ஜெயசீலன் இஆப ஆகியோருடன் சந்திப்பு.

தேமொழி

unread,
Aug 23, 2022, 6:07:44 PM8/23/22
to மின்தமிழ்
 வட சென்னை மரபு பயணநாளில் - பெரியார் திடலில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் 

செய்தி விடுதலை நாளிதழில் இடம் பெற்றுள்ளது. 

viduthalai.jpg

இணைப்பில் விடுதலை நாளிதழ் காண்க. 

---
விடுதலை.pdf

தேமொழி

unread,
Aug 24, 2022, 5:36:10 PM8/24/22
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/siva.ilango.7/posts/pfbid0YxqyGtUe7pT5sDRSpesPToC575jb3uudMKqYGjcMLGLXhNyZEJRe1CtMWACgvbmVl


Manyoshu.jpg

மன்யோஷு (Manyoshu)
மன்யோஷு என்பது ஜப்பான் நாட்டின் பழமையான இலக்கியங்களில் ஒன்று. "பத்தாயிரம் இலைகளின் தொகுப்பு" என்று அதற்குப் பொருள். கிட்டத்தட்ட நமது சங்க இலக்கியப் பாடல்களைப் போன்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சீன மொழி கலந்த எழுத்துருவில் எழுதப்பட்டது. அதற்கு முன்பு வாய்மொழிப் பாடல்களாக இருந்த மன்யோஷுப் பாடல்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியமாதலால், இன்றைய ஜப்பானியர்கள் அதைப் புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. "The Origin of Japanese Language" என்ற ஆய்வு நூலை எழுதிய ஜப்பானியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுசுமு ஓனோ, தங்கள் மொழியில் படிக்கப்படாமல் இருந்த மன்யோஷுப் பாடல்களை இன்றைய ஜப்பான் மொழியில் (நிஹோங்கோ) மொழி பெயர்த்தார்.
இதனால் மொழியைப் படிக்க முடிந்தாலும், பாடலின் கருத்துகள், உள்ளுறைச் செய்திகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. தமிழ் மொழியில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை இன்றைய மாணவர்கள் நேரடியாகப் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்கான திணை, துறை, காதல் பாடல்களாக இருந்தால் அகத்திணை மரபு, கவிதை இலக்கணம் ஆகிய இவ்வளவையும் பேராசிரியர்கள் விளக்கிச் சொல்லும் போதுதான் அதன் முழுமையான விழுமியங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதே சிக்கல் ஜப்பானிய மொழி இலக்கியமான மன்யோஷுவுக்கும் நிகழ்ந்தது.
நமது சங்க இலக்கிய அகத்திணை மரபுகளை ஜப்பானிய இலக்கியமான மன்யோஷுவுக்கும் பொருத்திப் பார்த்தால் அதிலிருக்கும் நுட்பமான செய்திகளை மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படி ஒரு மரபு இருக்கிறது என்று கேள்விப்பட்ட சுசுமு ஓனோ, தமிழ்நாட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பொற்கோவிடம் தமிழ் கற்றார். இலங்கை, தமிழ்நாடு பகுதிகளின் பிற தமிழ்ப் பேராசிரியர்கள் மூலம் சங்க இலக்கியம், அகத்திணை மரபு பற்றி அறிந்தார். இவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் சென்று அங்கு பல கருத்தரங்கங்களையும், ஆய்வுகளையும் நிகழ்த்தினார். இதன் விளைவாக ஜப்பான் மொழியின் தொகை நூல்களான மன்யோஷு, கோஜிகி, ஜென்ஜி உள்ளிட்ட இலக்கியங்களை ஜப்பான் மக்கள் கற்றுத் தேர்ந்தும், புரிந்தும் கொண்டனர். ஜப்பான் - தமிழ் மொழி உறவு குறித்தும், ஜப்பான் மொழியில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தி, அந்த ஆய்வு முடிவுகளையும் மக்கள் அறிய வைத்தார் ஓனோ.
பேராசிரியர் ஓனோ 1919 ஆம் ஆண்டில் பிறந்தார். 1957 ஆம் ஆண்டில் "ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1980 ஆம் ஆண்டு வரை ஜப்பான் மொழியின் தோற்றம், ஒப்பியல் நோக்கில் ஜப்பான் - கொரிய மொழிகள், ஒப்பியல் நோக்கில் ஜப்பான் - தமிழ் என்று பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் தமிழகத்தில் செய்த களப்பணிகளில் கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்திய ஆய்வுரைகளின் தொகுப்பினை ஜப்பான் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதை ஜப்பானிய மக்கள் பெருமளவில் பார்த்து ரசித்தனர். 1981 ஆம் ஆண்டில் ஓனோ தன்னுடன் பணிபுரிந்த மற்றொரு பேராசிரியருடன் இணைந்து "ஜப்பானிய ஒரு பொருட் பன்மொழி அகராதி" ஒன்றை உருவாக்கினார். இம்முடிவுகளைக் கொண்டு, 1981 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு "ஜப்பானிய - தமிழ் மொழி தொடர்பு ஒப்பியல் ஆய்வு" என்ற கட்டுரையை வழங்கினார். அவருடைய இந்தப் புதிய ஆய்வு, தமிழர்கள் பலருக்கும் புதிய ஆய்வுக் களங்களை அறிமுகம் செய்ததுடன், தூரக் கிழக்காசிய நாடுகளில் தமிழ் மொழி உறவு, தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கங்கள் போன்ற வெளியுலகம் அறியாத செய்திகளை அறிய வைத்தது.
மொழியியல் பேராசிரியர் சுசுமு ஓனோ (1919-2008) அவர்களின் பிறந்த நாள் (22.08.1919) இன்று.
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
---------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 24, 2022, 5:46:54 PM8/24/22
to மின்தமிழ்

Arsha FB-post.jpg

சிங்கார சென்னையின் பிறந்தநாள் பயணம்......😍❤️
மதரேசப்பட்டணம், மதராசபட்டணம் மெட்ராஸ், சென்னை எனப் பல பெயர்களையும் பல கதைகளையும் கொண்டிருந்தாலும் வரலாற்றில் துல்லியமான ஆவணங்கள் எதுவும் இருக்கின்றனவா என்று கேட்டால் தெரியவில்லை.
1996ம் ஆண்டு சென்னை என்ற பெயர் மாற்றம் பெற்ற நம் "சிங்கார சென்னை" வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற வாய்மொழிக்குச் சிறிதும் குற்றம் செய்யாமல் பல மொழிகள், பல இனங்கள், பல தொழில்கள், பல உணவு, பண்பாடுகள் வழிபாடுகள் என எல்லாவற்றிலும் பற்பல வேறுபாடுகளோடு வண்ணமயமக அழகுற மிளிர்கின்ற பெருமை மிகு மெட்ராசுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம். 😍😍
மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த வட சென்னையை நோக்கிய மரபு பயணத்தில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற பின் நுழைவாயில் சரியாக 5.45 க்கு பயணம் திட்டமிட்டபடி தொடங்கியது.
வங்கக் கடலின் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரங்களில் மிக முக்கியமானதும் இந்திய தேசத்தின் நான்காவது மிகப் பெரிய தலைநகரம் சென்னை.
தனித்துவமான நகரில் எத்தனையோ வரலாற்றுக் கூறுகளை நாம் தினம் தினம் கடந்து சென்றாலும் அவற்றின் தொன்மையறியாது சாதாரண கட்டிடங்களாய் நகர்ந்து சென்று விடுகிறோம்.
அத்தகைய மனநிலையை மாற்றி ஒவ்வொன்றையும் உற்று நோக்க வைத்த, பயணத்தில் தொடங்கிய இடத்திலேயே அறியக் கிடைத்த முதல் செய்தி,
நெசவுத்தொழில் ஏற்றுமதியை மிக முக்கிய வியாபாரமாகச் செயல்படுத்த விரும்பிய ஆங்கிலேயர்கள், பணியாளர்களுக்கு ப்ளாக் டவுன் என்று வாழ்விடத்தை உருவாக்கி அவர்களை அங்குக் குடியமர்த்திப் பாதுகாப்பு கருதி 6 எல்லை தூண்களையும் கட்டமைக்கின்றார்கள்.
அவற்றுள் இன்று எஞ்சி இருப்பது டேர் ஹவுஸ் முன் நிமிர்ந்து நிற்கும்15 அடி உயரமுள்ள ஒரே ஒரு எல்லைக்கல் மட்டுமே.
அந்த எல்லைக்கல்லின் வடிவமைப்பு மற்றும் நோக்கம் குறித்துப் பல தகவல்களை அறிய முடிந்தது.
முதலாம் உலகப்போரை நேரடியாக எதிர் கொண்ட இந்திய நாட்டின் முக்கிய நகரம் நம் சென்னைதான்.
இங்கிருந்த இங்கிலாந்து படைகளின் கட்டுமான பணிகளைத் தாக்கும் நோக்கில் ஜெர்மனியப்படை
திரண்ட போது களம் இறங்கிய 'எஸ் எம் எஸ்' எம்டன் கப்பல் சென்னை நகரை 150-க்கும் மேற்பட்ட குண்டுகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் செய்தது.
அதன் பின் எஸ் எம் எஸ் எம்டன் ஆஸ்திரேலியா வில் அதே வருடம் வீழ்த்தப்பட்டுக் காணாமல் போனது என்று புன்னகையோடு சொல்லி முடித்தார் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி அவர்கள்.
அதற்கான நினைவுச் சின்னத்தை ஒவ்வொருவரும் தனித்தனியே பின் குழுவாக அலைபேசிக்குள் பதிவு செய்து கொண்டு, அங்கிருந்து மாடிப் பூங்காவில் அமைந்திருக்கும் தூக்கு மேடைகளைப் பார்வையிட விரைந்தோம்.
சென்னை தனக்குள்ளே பல செய்திகளை வைத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் பெயர்கள் மட்டுமே உள்ளது செய்தி சொல்ல வேறெதுவும் மிஞ்சி இருப்பதில்லை.
அப்படித்தான் மாடி பூங்காவும் காட்சியளித்தது. ஆனாலும் காட்சியில் இல்லாதவற்றை வரலாற்றை மிக
அருமையாக
அடுக்கடுக்காய் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்கள் விவரிக்க குழுவினரோடு வாய்ப்பிளக்க நானும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பக்கத்தில் இருக்கும் வால்டன் சாலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, எலிபன்ட் கேட் மற்றும்
மூலக்கொத்தளதிற்குமான தொடர்பு எனப் பல தொடர்புகளை தொடர்ந்து விவரித்தார்.
சென்னைக்கிருந்த அச்சுறுத்தல்களில் தன்னை பாதுகாக்கும் பெரும் பணியை கூவம் நதி செய்ததைச் சென்னை வாசிகள் உணர்ந்திருந்தால் இன்று கூவம் அழுக்கு படிந்த அண்டமருக்கும் அனாதையாக இருந்திருக்காது.
பிரெஞ்சுக்காரர்களினாலும் மற்றும் ஹைதர் அலியின் படைகளாலும் ஏற்படும் முற்றுகை தாக்குதலை எதிர்கொள்ள கிழக்கிந்திய கம்பெனி, சுவர் கட்டி நகரத்தைப் பாதுகாக்கும் எண்ணத்தில் கோட்டைச் சுவர்களில் அமைத்துக் கண்காணிப்பு கோபுரங்களையும் நுழைவாயில்களையும் அமைத்தது.
இதன்படி பழைய சிறைச்சாலை வழியாக சுவர் 1772 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு ஏழு நுழைவாயில்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
இங்கு மிஞ்சி இருக்கும் ஒரே ஒரு எச்சம் இந்த மாடி பூங்கா மட்டுமே இதன் வரலாற்றுப் பின்புலம் அறியாத நாம் இதனை எந்த அளவில் கட்டணமற்ற கழிப்பிடமாக மாற்றியுள்ளோம்?
மூக்கை பிடித்துக் கொண்டு வரலாற்றைக் கேட்டு முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
உயிர்களிடத்தில் பேரன்பு காட்டிய பேரன்பாளன், திருமிகு சென்னை என சென்னைக்குப் புகழாரம் சூடிய இளகிய மனம் படைத்த வள்ளலாரின் இல்லம் நோக்கி பயணம் தொடர்ந்து பின், புத்தகங்களை நோக்கி......
புத்தக வாசனையைச் சுவாசிக்கத் தெரிந்த எவரும் மோர் மோர்க்கெட்டில் கால் பதிக்காமலிருந்திருக்க மாட்டார்கள்.
1900 ஆண்டுகளில் கட்டப்பட்ட வணிக வளாகம் 1985 இல் ஏற்பட்ட பெரும் தீயினால் முற்றிலும் சாம்பலாகிப் போன வரலாற்றுக் கட்டிடத்தை மிக ஏக்கத்தோடு கரன் கார்க்கி தன் சிறுவயது அனுபவங்களையும் சேர்த்து சுவைபட விளக்கினார்.
இன்று மின்சார ரயில்களின் நடைமேடையாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பொம்மை கட்டிடத்தை பார்த்து நீண்ட நெடிய விளக்கம் கேட்டபின் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஏனோ மனம் சற்று தயங்கி நெடுநேரம் அங்கு எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டது.
பின் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காசிமேட்டிற்குள் நுழைந்தோம். தமிழ் திரையுலகம் வடசென்னை பற்றி நம் மனதில் ஒரு பெரிய காட்சியை அமைத்து ஆழப் புதைத்து வைத்திருக்கிறது.
அந்த காட்சிகளை அப்படியே தூர்வாரி புதிய காட்சிகளை உள் செலுத்துவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
பெருங்கடலின் அழகில் வரிசை கட்டி நின்ற படகுகள் அவற்றைப் பயணத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்த மீனவர்கள் கடல் மாதா அழகில் திளைக்க,
மக்களின் பின்புலத்தைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை மறக்காமல் நினைவு படுத்துவது தான் அந்த மக்களுக்குச் செய்யும் பெரும் கடமை.
இந்தியப் பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்களிப்பை நாம் அறிவோம் அந்த வகையில் மிகப்பெரிய மீன்பிடி வளாகத்தைக் கொண்டிருக்கும் காசிமேடு எந்த அளவில் பொருளாதாரத்திற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அதைப்பற்றி நாம் தேடிப் படிக்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிக ஆழமாகத் தனது கருத்தைப் பதிவு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவி சுபாஷினி அவர்கள் தான் எழுதி வெளியிட்ட  மெட்ராஸ் 1726   என்ற புத்தகத்தைக் கரன் கார்க்கி அவர்களுக்கு வழங்கி அந்த நிமிடங்களைச் சிறப்புச் செய்தார்.
நயிம் பிரியாணியைச் சுவைத்து விட்டு, பெரியார் திடல். முற்றிலும் மெய்மறந்து பார்ப்பதற்குக் கேட்பதற்கும் அறிவியலும் ஆர்ப்பாட்டங்களும் ஆச்சரியங்களும் கொட்டி கிடக்க உள்வாங்கிக் கொள்ள, நண்பர் பிரின்ஸ் என்னரசு பங்கு அளப்பரியது.
அருங்காட்சியகத்தைச் சுத்தி காட்டும் பொறுப்புணர்வோடு மிகப் பெருமிதத்தோடும் பணிவோடும் தமிழறிவோடும் தமது கருத்துக்களை அழகாக எடுத்துக் கூறி சில மணி நேரங்கள் எங்களை கட்டி போட்டு விட்டார்.
பெருங்கடலோடு சங்கமித்து அன்றைய தேடல் நிறைவுற்றது.
மிக
அருமையான
ஏற்பாடு அற்புதமான நேரம் மேலாண்மை ஒவ்வொருவரும் தனித்தனி பொறுப்புகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைமைத்துவப் பண்பு என தமிழ் மரபு அறக்கட்டளையின் சகோதரிகள் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்கள்.
மிக
அருமையான
ஆக்கபூர்வமான நாளாக அமைத்துக் கொடுத்தமைக்கு தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் தலைவர் சுபாஷினி அவர்களுக்கும் அன்பும் நன்றிகளும்.

தேமொழி

unread,
Aug 27, 2022, 1:44:20 AM8/27/22
to மின்தமிழ்
source- https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02NuLQMHJr69urgndJNoceBvkgc9piApUvbopdUS9rMzsjVn6fwK8sYZ46rj39dK5pl


பழவேற்காடு வரலாற்றுப் பயணம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாட்டில்..

heritage tour.jpg
------------

தேமொழி

unread,
Aug 29, 2022, 11:12:55 PM8/29/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0356KQ7CZzQcJQK6uwjQLhS4CqJgYtTGfCTGfegomG9msRYJPHu7F1CFwi6nffsxLDl


வரலாற்றுத் தேடல்களில் ஆர்வம் கொண்ட இளைஞர்களைக் காணும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நந்தகோபாலன், அஸ்வின் இருவரும் 11ஆம் வகுப்பு மாணவர்கள். வரலாற்றுத் தேடல்களில் ஆர்வத்துடன் இயங்கி வரும் சிறுவர்கள். அதிலும் குறிப்பாக மெட்ராஸ் வரலாற்றில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. Marvels of Madras என்ற தலைப்பில் 7 இளைஞர்கள் சேர்ந்து ஒரு வரலாற்று ஆவணப் படைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள்.
பழவேற்காடு பயணத்தின் போது பக்கிங்ஹாம் கால்வாய் 25வது மைல்கல் பழவேற்க்காட்டில் இருப்பதை பற்றிய விளக்கத்தை வந்திருந்த ஏனைய வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்த இரண்டு சிறுவர்களும் படத்தொகுப்புடன் விளக்கினார்கள்.
இவர்கள் நம் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
-சுபா

Marvels of Madras2.jpg

Marvels of Madras.jpg
-------------------------------------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Aug 30, 2022, 11:19:50 PM8/30/22
to mint...@googlegroups.com
இத்துணை அர்ப்பணிப்புடன் செயற்படும் முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages