
நம்ம குழுமத்துல் இருக்கிற யாராவது 9 பேராக இருக்கும்.... :)
2009 ஜனவரி 26 04:25 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
சிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாட்களாய் முயன்று கொண்டிருந்தோம். என்னமோ, தள்ளிப் போயிட்டே இருந்தது. அக்டோபரில் தேதி முடிவு செய்து போக நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி கீழே விழுந்ததில், எங்கேயும் போக முடியாமல் கான்ஸல் பண்ணணுமோனு நினைச்சப்போ, ஜனவரியிலே வாங்கனு சொன்னாங்க. நல்லதாப் போச்சுனு இப்போ வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து சிங்கங்களைப் பார்த்துட்டு இன்று காலை வந்தோம். ஒரு சிங்கம் இல்லை, இரண்டு இல்லை. ஒன்பது சிங்கங்கள். கூடுதலாய் ஒரு சிங்கம். ஆக மொத்தம் பத்து சிங்கம். அவை பற்றிய ஒரு தொகுப்பு விரைவில் வரும். , எப்போ வரும்னு தெரியாது. அலுப்பு இன்னும் தீரலை. மேலும் குழந்தைக் கண்ணன் விளையாடிட்டு இருக்கிறதாலே குழந்தை பயந்துக்கும். ஆகவே அறிவிப்புக் கொடுக்கிறேன். அதுவரையில் எந்த சிங்கம்னு யோசிச்சுட்டு இருங்க. புரிஞ்சவங்க பொறுமையா இருக்கவும்.
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

அங்கே போய் இறங்கிக் கொண்டு எங்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் அறைகளுக்குக் காத்திருந்தோம்.
உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான். இப்பேர்ப்பட்ட அவதார புருஷனைத் தரிசிக்கும் எண்ணத்துடன் கருட பகவான் முன்னொரு காலத்தில் இம்மலைப் பிராந்தியத்தில் தவம் இருந்தார். கருடனின் தவத்துக்குப் பரிசாக நரசிம்மர் இங்கே காட்சி அளித்தார் ஒரு மலைக்குகையில். இனி ஒவ்வொரு மலைக் குகையாகச் சென்று பார்க்கலாமா??
திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.
காட்டினுள் செல்ல வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. நாம் செல்லும் பயண அமைப்பாளர்களே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். தனியாகச் செல்லுவது அவ்வளவு உசிதம் அன்று. அஹோபிலம் மடமே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றது. அதற்கு முந்நூறு ரூபாயில் இருந்து செலவு ஆகும். அஹோபிலம் மடத்தின் தொலை பேசி எண்கள்: 08519- 252025, 252045. குமரன் சாப்பிட்டுட்டாக் குளிச்சீங்கனு கேட்டிருக்கார். ஹிஹிஹி, தட்டச்சுப் பிழை அது. குளிச்சுட்டுத் தான் சாப்பிட்டோம். :))))))) எழுதினதைத் திருப்பி ஒருமுறை சரி பார்க்கும் வழக்கமே இல்லை பள்ளி நாட்களில் இருந்து. அப்படி எல்லாம் செஞ்சிருந்தா எங்கேயோ போயிருக்க மாட்டோமா? :)))))))))). இங்கேயும் எழுதிட்டு preview பண்ணறதே இல்லை, கலர் அடித்தால் ஒழிய! :))))))))) இனிமேல் எல்லாப் பதிவுகளிலேயும் கடைசியா E&OE போட்டுடலாமானு யோசிக்கிறேன். :P
குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.
இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.
வண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா? இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ஒன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள். 
இதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ? இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன?? ஆஹா! ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே?
இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.
தேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.
திரு
கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம்
பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த
கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல
நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி
மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி
மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும்
அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த
ஆலயம். 
மா=
என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல்.
அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை
மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே
மாலோல நரசிம்மர்.
இந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.
ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து "அஹோபிலம், மஹாபலம்" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, "அஹோ!! பலம்!!!, அஹோ!!! பலம்!!!!" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும். 

அஹோபிலம்
மடம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மடங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இது கிட்டத் தட்ட 600 வருடங்கள் முன்பு அஹோபிலத்தில் ஸ்ரீமத் ஆதிவண்
சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவருடைய
பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில்
உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார். ஒரு நாள் ஸ்ரீநிவாஸாச்சார்
அவர்கள் கனவில், லக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். அஹோபிலம் இருக்குமிடம்
சொல்லி, அங்கே இருக்கும் திருமேனி வடிவிலேயே தோன்றி, ஸ்ரீநிவாஸாச்சாரை
அங்கே வரச் சொல்கின்றார். தன்னுடைய ஆசாரியரைக் கேட்டுக் கொண்டு அவர்
சம்மதத்துடன் ஸ்ரீநிவாஸாச்சார் அஹோபிலம் சென்றார்.
நான்காவதாய்த்
தரிசித்த யோக நரசிம்மர் புதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை
கொண்டவராய் வேதாத்திரி மலையின் மேற்குப் பக்கத்தில் எழுந்தருளி
இருக்கின்றார். அடுத்துத் தரிசித்த ஐந்தாவது நரசிம்மர் வாராஹ நரசிம்மர்.
இரு அவதாரங்களையும் ஒருசேரக் கண்டோம். வாராஹ அவதார மூர்த்தம் அருகேயே
நரசிம்ஹரையும் காணமுடியும். படங்கள் என்ன காரணத்தாலோ அப்லோடே ஆக
மாட்டேனென்கிறது. கூகிளாண்டவர் கொடுத்தால் அவர் தயவில் இன்னிக்குப் போட
முயல்கின்றேன். வாராஹ நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும்
போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட
ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள்
ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார். அடுத்தவர் கீழ் அஹோபிலம்
பிரஹலாத வரதர்.
கோயில்
வளாகத்தினுள் நுழையும் முன்னேயே முன் குறிப்பிட்ட ஜயஸ்தம்பத்தைக் காண
முடிகின்றது. ஆலயத்தின் தென்பகுதியில் புஷ்கரணி சதுரவடிவில் அமைந்துள்ளது.
பாறைப் படிகள். திருக்குளம் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் எனவும்,
நீராட வேண்டாம் எனவும் யாத்ரீகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். பிடிவாதம்
பிடிக்கிறவங்க தக்க துணையுடன் நீராடுவதே பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப்
படுகின்றனர். உயரமான ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே போனால் மூன்று
பிரஹாரங்களோடு அமைந்த கோயில். முகப்பில் உள்ள மண்டபம் ரங்க மண்டபம் என
அழைக்கப் படுகின்றது. கோயிலின் சிற்ப அமைப்புகள் மிகச் சமீப
காலத்தியதாய்த் தென் படவே அங்கே உள்ளவர்களை விசாரித்தோம். சரியாய்ச்
சொல்லத் தெரியலை. மொழிப் பிரச்னை அவ்வளவு இல்லை. தமிழ் நன்றாகவே புரிந்து
கொள்கின்றனர். என்றாலும் விடாமல் தேடி விசாரித்ததில் ஒருவேளை 15, 16-ம்
நூற்றாண்டாய் இருக்கலாம் எனத் தெரிய வந்தது. 
மூலவர்
சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி
சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும்
பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய்
உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன்
பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த
உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம்
முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே
அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும்
சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள்
குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர்.
மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இடது பக்கமாய் ஒரு
புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே
ஸ்ரீராமர்.
உள்ளே
பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம்
நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச
யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச்
சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே
வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம்
போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப்
படுவதாயும் சொல்கின்றார்கள்.
ஆலயத்தின்
உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின்
மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம்.
அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும்
மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது.
மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே
அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும்,
ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள்
ஒரு சிறு விவாதம் நடந்தது.
நடந்து
போகிறவங்க பெரும்பாலும் ஜ்வாலா நரசிம்மரிடம் இருந்தே ஆரம்பிக்கிறாங்க. அது
தான் முதலில் தரிசனம் செய்யவேண்டியது என்றும் சொல்கின்றனர். ஆனால் நாம
செளகரியத்துக்காக முதல்நாள்ஜீப்பில்/ ஜீப்பா அது? சும்ம்ம்ம்மா! போக
வேண்டியவற்றுக்குப் போயிட்டு வந்துட்டோம். அங்கேயும் நடந்தே தான்
போகிறவங்க இருக்காங்க என்றாலும் தூரம் அதிகம். நம்மளை மாதிரி சொகுசாப்
பழகினவங்களுக்குக் கஷ்டம். இப்போ ஜ்வாலா நரசிம்மரைப் பார்ப்போம். கையில்
கைத்தடியோடு அனைவருக்கும் பயணம் ஆரம்பிக்கிறது. கொஞ்ச தூரம் போகும்
முன்னரே கூட வந்தவர்களில் ஒரு பெண்மணியின் கணவருக்கு மூச்சுத் தொந்தரவு
அதிகம் ஆக அவங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வரோம்னு சொல்ல,
மற்றவர்கள் நடக்க ஆரம்பித்தோம். வழிகாட்டியான சுப்பராயுடு
முன்னேயும்,பின்னேயும் கவனித்து ஆட்களை ஒழுங்காய் வரச் செய்யப் படாதபாடு
பட்டுக் கொண்டிருந்தார். துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள். செங்குத்தான
மேடுகள். வழுக்கும் இடங்கள். எனப் பல்வேறு கடினமான இடங்களையும் கடந்து
முழுக்க முழுக்க மலை ஏற்றம்.
செருப்பு வழுக்குகின்றது. நடு, நடுவே பவநாசினி நதி மலை மேலிருந்து கீழே இறங்கும் இடங்கள்.
இந்த
ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பாதி தூரத்தில்
தென்படுகின்றது உக்ர ஸ்தம்பம். நாங்கள் நின்று பார்த்த இடத்தில் இருந்து
குறைந்தது ஐந்து கிமீட்டராவது மேலே ஏறவேண்டும். மிக மிகச் செங்குத்தான
பாறைகள். ஒரு அடி எடுத்து வைப்பதே கஷ்டம். முட்புதர்கள். பாதம் படும்போதே
பாறைக் கற்கள் உருளுகின்றன. கவனமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து
வைக்கவேண்டும்.
கொஞ்சம் தப்பினாலும் அதோ கதிதான். வந்தவர்களில் பலரும் அங்கே போவதின்
கஷ்டத்தை அறிந்து கொண்டு வேண்டாம், இங்கே இருந்தே பார்க்கின்றோம் என
முடிவெடுக்க, மிகச் சிலருக்காகக் கூட்டிச் செல்ல பயண ஏற்பாட்டாளரும்
யோசிக்கக் கொஞ்சம் கிட்டே போய் உக்ர ஸ்தம்பம் தரிசிக்கலாம் எனப் பயணம்
மேலே தொடர்ந்தது.
உக்ரஸ்தம்பத்தின்
உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள்
நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம்
இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம்
பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக்
கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார்.
மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு
மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத்
தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால்
உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி
அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே
இருக்கின்றது.
ஆனால்
ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே.
அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக்
கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே
சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது
நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன்.
ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார்.
இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே
சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. 
கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் அசல
சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா
நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து
பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே
செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே
உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம்
தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய
சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக்
கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும்
கொண்டு வந்து தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம்.
சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப்
படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள்
செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்
பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின்
சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை
விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க.
கீழே
கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி
அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில்
கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர
நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை
நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி,
வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு
கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள்
குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது.
மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம்.
அடுத்து
நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும்
சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள்.
படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000
போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில்.
கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது.
அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத
காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு
விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள்.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது
கோயில்.
இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அழைத்துச்
செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி
வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப்
பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால்
பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால்
சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம்.
இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும்,
வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால்
எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.
பார்கவ
தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே
இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே
எங்கே வந்தார்? வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த
யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர்
வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி
மகிழ்வித்திருக்கின்றான். என்ன? அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா? எனத்
தோன்றுகின்றதா? என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த்
தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே
இல்லை அல்லவா? ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை
வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா??
அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம்
சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம்
நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா? சிற்பத்தின்
தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை
பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.
கராஞ்ச
நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச்
செல்லும் வழியிலேயே வண்டிப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது.
என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக்
கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது
கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின்
நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச
நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில்
அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம்
முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம்
ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார்.
இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன்
சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு
கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது?
வில்லா? ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா? வியப்பிலும்
வியப்பாய் உள்ளதே?
இந்த
வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார்.
கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும்
சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு
மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே.
இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச
நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம்
மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே
இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான
சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.