வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?
அப்படி ஒரு பாடல் இதுவரை எனக்குத் தெரியாது. (யானைக்கறியைத் தின்றார்களா?!?!?!)
169. பாலை
[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]
மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட 1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப் புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை | |
5. | ஞெலிகோல் சிறுதீ மாட்டி ஒலிதிரைக் கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டுஞ் சுரம்பல கடந்த நம்வயிற் படர்ந்துநனி பசலை பாய்ந்த மேனியள் நெடிதுநினைந்து |
10. | செல்கதிர் 2மழுகிய புலம்புகொள் மாலை மெல்விரல் சேர்த்திய நுதலள் மல்கிக் கயலுமிழ் நீரிற் கண்பனி வாரப் பெருந்தோள் 3நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால் அளியள் திருந்திழை தானே. |
-தொண்டி ஆமூர்ச்சாத்தனார். |
(சொ - ள்.) நெஞ்சே!
1-8. மரம் தலைகரிந்து நிலம் பயம் வாட - மரங்கள் உச்சிகரியவும் நிலம் வளம் குன்றவும், அலங்கு கதிர்வேய்ந்த அழல் திகழ் நனந்தலை - அசைகின்றஞாயிற்றின் கதிர் குழப்பெற்ற வெம்மை விளங்கும்அகன்ற பாலை நிலத்தே, புலி தொலைத்து உண்ட பெரும்களிற்று ஒழி ஊன் - புலியாற் கொன்றுதின்னப்பெற்ற பெரிய யானையினது எஞ்சிக்கிடந்தஊனில், கலிகெழு மறவர் காழ்கோத்து ஒழிந்ததை -ஆரவாரம் பொருந்திய ஆறலைப்போர் கோலிற்கோத்துக் (கொண்டேகியது போக) எஞ்சியதை,ஒலிதிரை கடல்விளை அமிழ்தின் கணம் சால் உமணர்- ஒலிக்கும் அலை பொருந்திய கடலில் விளையும்உப்பினைக் கொணரம் கூட்டம் மிக்க உப்புவாணிகர், ஞெலிகோல் சிறு தீ மாட்டி - தீக்கடைகோலாலாக்கிய சிறு தீயில் வதக்கி, சுனை கொள்தீ நீர் சோற்று உலை கூட்டும் -சுனையிற்கொண்ட இனிய நீராலாய சோற்றின்உலையில் கூட்டி ஆக்கும், சுரம்பல கடந்த நம் வயின்- பல சுர நெறிகளையும் கடந்து வந்துள நம்மிடத்து,படர்ந்து - தன் உள்ளம் படர்தலால்;
8-14. திருந்து இழை -திருந்திய அணிகளையுடைய நம் தலைவி, செல்கதிர்மழுகிய புலம்புகொள் மாலை - மறையும் கதிர் மங்கியதனிமை கொண்ட மாலையில், நனி பசலை பாய்ந்தமேனியள் - பசலை மிகவும் பரந்த மேனியளாகி, நெடிதுநினைந்து - நீள நினைந்து, மெல் விரல் சேர்த்தியநுதலள் - மெல்லிய விரல்களைச் சேர்த்தநெற்றியினளாய், கயல் உமிழ் நீரில் கண் பனிமல்கி வார - கயல்மீன் உமிழும் நீர்போலக்கண்களில் நீர் நிறைந்து ஒழுக, பெரும் தோள்நெகிழ்ந்த செல்லலொடு - பெரிய தோள்மெலிந்ததாலாய துன்பத்துடன், வருந்தும் -வருந்துவள், அளியள் - இரங்கத்தக்காள்.
(முடிபு) நெஞ்சே! சுரம்பல கடந்த நம்வயின் தன் உள்ளம்படர் தலின், திருந்திழை, மாலையிலே நெடிதுநினைந்து பசலை பாய்ந்த மேனியளாய், விரல்சேர்த்தி நுதலளாய், கண்பனி வாரச் செல்லலொடுவருந்தும்; அளியள்.
(வி - ரை.) கரிந்து - கரிய எனத் திரிக்க. பயம் - ஏனைவளங்கள். காழ் - இருப்புச் சலாகை. கடல்விளைஅமிழ்து - உப்பு. கணம் சால் உமணர் என்றமையின்உமணர் கூட்டமாகவே வருவர் என்பது பெற்றாம்.சினைகொள் தீ நீர் என்றமையால் சுரத்தில் நீர்இன்மை பெறப்படும். படர்ந்து - படாதலால்.
நன்றி.இப்போது தான் யானைக்கறி தின்றமை பற்றிய பாடலை அறிகிறேன்சக
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcoaDOaCJ4TVAwzKWVDb6TQUJ_iWnaAUkUAUC4oDuF8KA%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvQe5q61Yb%3DnXmAoK5O%2BEm2HieLkS-5bQxw1seKoF83nQ%40mail.gmail.com.
கொடைக்குக் கிடா வெட்டி, உப்பு மஞ்சள் தடவி கொடிக்கறி போட்டு வைத்துக் கொள்வார்கள்.
கொடைக்குக் கிடா வெட்டி, உப்பு மஞ்சள் தடவி கொடிக்கறி போட்டு வைத்துக் கொள்வார்கள்.
On Sat, Jul 10, 2021 at 12:39 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:இணையம் தமிழ் அகராதிகளில் இல்லாத, ஆனால் தமிழிலே பலகாலமாக வழக்கில் உள்ள - பரவலாகவோ, வட்டாரமொழியாகவோ - சொற்களைப் பதிவுசெய்ய மிகவும் உதவுகிறது. அவ்வகையில், நான் தெரிந்துகொண்ட ஒரு சொல்: கொடிக்கறி.
On Fri, Jul 9, 2021 at 12:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> குழந்தைகளுக்கு இழை கட்டும் சடங்கு கூடக் கொடி என்றே பெயர் பெறும்; இடுப்புக்கொடி.
> மிகுதியான விலங்கிறைச்சியை வேட்டைச் சமுதாயத்தினர் பதப்படுத்துவர். அதற்கு இலக்கியச் சான்று உள்ளது; வாடூன் என்று அழைத்தனர். இன்று அதன் பெயர் கொடிக்கறி; ஏனென்றால் துணி காயப்போடுவது போல இரண்டு கம்பு நட்டு; இரண்டையும் இணைக்கும் கொடியில் இறைச்சியைக் கோத்துக் காயவைப்பர்.
> சக
வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் இரண்டு வகைகள்:
(1) வாடூன் = கபாப், https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல் சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல் மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட
அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர்
‘கபாப்’ செய்வதற்கு வருணனை கொடுத்துள்ளார்.
பாடகமே , என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் ;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடியிருந்து குளிர்ந்து – ஏலோர் எம்பாவாய்.
169. பாலை
[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]
மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட 1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப் புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை |
NG>3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”> (குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”. இதுவே பாத்திரமாகப் பயன்படுவதால் குழிசி என்றார்.>கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”).
முரியடுப்பு : https://groups.google.com/g/vallamai/c/cACN4vhFXaY
SK wrote:> படத்தில் உள்ள அடுப்பின் பெயர் சூட்டடுப்பு. அது சூட்டு செய்யப் பயன்பட்டது. நெருப்பில் நேரடியாகச் சுடுவதற்குப் பயன்பட்டதாகையால் சூட்டடுப்பு. கபாப், தந்தூர் ஆகியவை செய்யப் பயன்பட்டது.>அதற்கு பதப்படுத்திய வாடூன் தேவை இல்லை. பச்சை ஊனையே கபாப் செய்யலாம்; தந்தூரும் செய்யலாம். நெருப்பில் வாட்டுவது எல்லாம் சூட்டு.
சூடு என்பதைச் சூட்டு என்கிறீர்கள். மேலும், சூட்டடுப்பு என்னும் அடுப்பு, நான் கொடுத்து விளக்கியுள்ள முரியடுப்பு அல்ல.சூட்டடுப்பு என்றால் என்ன என இலக்கியங்களில் இருந்து முன்னர் நான் எழுதிய மடல்களைப் பாருங்கள்.நன்றி.
இது சூட்டடுப்பு, பானை வைக்க மூன்று சூடுகள்.
குமுட்டி அடுப்பு என்றும் சொல்லுவார்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hSvVa9axuXpDsWVV2EO1ystWUNAXMKrgGBDpFAmQzaRQ%40mail.gmail.com.
> நான் எனது கட்டுரைக்காகத் துழாவியதில் நெருப்பில் சுட்டு உண்ண ஒரு அடுப்பு 'தந்தூர் அடுப்பு' என்று அழைக்கப்பட்டதால் தமிழில் சூட்டடுப்பு என்று சொன்னேன்.
> நெருப்பில் சுடுவது 'சூடு' என்றும் 'சூட்டு' என்றும் அழைக்கப்பட்டது (தமிழ் அகராதி Tamil Dictionary சூட்டு | அகராதி).
(1) உலகத்திலேயே தந்தூர் கண்டுபிடித்தது சிந்துவெளி மக்கள். எப்படி அது ஆரியர் கண்டுபிடிப்பு ஆகும்.??குதிரையைத் தேரில் (சாரட்டு < chariot) பூட்டி ஓட்டுவது ஆரியர் கண்டுபிடிப்பு. வேதம் சாட்சி.
(2) சூட்டடுப்பு என மக்களும், இலக்கியங்களும் சொல்வது வேறு. படங்கள் தந்துள்ளேன். இங்கே, சூடு = கொண்டை. சேவற் சூடு என வருதற்போல.
(3) சூடு என்பது தான் சொல். சூட்டு என்பது மிகப் பிற்கால வழக்கு. தற்காலம் ஆக இருக்கலாம். மாட்டுவால் என்கிறதில் இருந்து மாட்டு என ஒரு சொல் மாடு என்னும் கால்நடைக்கு ஆகாது.
’பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி’ - சூடு + ஒடு = சூட்டொடு.
இன்னும் எல்லா உதாரணங்களும் பார்க்கவும். பலவற்றைக் கொடுத்துள்ளேன்.
சங்க இலக்கியச் சமையல் பற்றி எழுதுகையில் “சூடு” தான். எந்த அகராதியும்
சூட்டு என்ற சொல்லைச் சங்க நூலில் காட்டுவதில்லை.
கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/1
சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே
நன்றும் அரவு வெகுண்டன்ன
தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே;
சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து -
நிரயம்போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி;
in a rush, so read hurriedly.
NG
அருமையான மடல். நன்றி.

நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றேநன்றும் அரவு வெகுண்டன்ன
தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே;
சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து -
நிரயம்போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி;
சூடு+இறைச்சி = சூட்டிறைச்சி, மாடு+வால் = மாட்டுவால், ஆடு+கால் = ஆட்டுக்கால், வெருகு+கண் = வெருக்குக்கண், ...
in a rush, so read hurriedly.
NG
On Tue, Jul 13, 2021 at 9:16 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK > தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.> ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.
216. மருதம்
[தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.]
நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள் 2தான்புன லடைகரைப் படுத்த வராஅல் நாரரி நறவுண் டிருந்த தந்தைக்கு வஞ்சி விறகிற் சுட்டுவா யுறுக்குந் | |
5. | தண்டுறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்ப் |
(சொ - ள்.) 1-6. நாண் கொள் நுண்கோலின் மீன்கொள் பாண் மகள் - கயிற்றினைக்கொண்ட நுண்ணிய தூண்டிற் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், புனல் அடைகரைபடுத்த வராஅல்-புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீன், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - பன்னாடையால் அரிக்கப்பெற்ற தன்னையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகில் சுட்டு-வஞ்சிமரத்தின் விறகினாற் சுட்டு, வாய் உறுக்கும் - வாயில் உண்பிக்கும், தண் துறை ஊரன் பெண்டிர் - குளிர்ந்த துறையினையுடைய ஊரனது பெண்டிர்கள், எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப- எம்மைத் தம் மனம் விரும்பியபடி யெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்; http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=477&y=478&bk=216&z=l1270636.htm
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdKaTBOomsRJf_3bdWKFYt0jbopxQWDAJXR0BRzTr4Ruw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvM_8NL%3D3e76BCNiYkGswarFr2AnEc4pBaPwhsXdnc82w%40mail.gmail.com.
On Monday, July 26, 2021 at 10:10:27 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
/வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163 (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)/ முனைவர் கணேசன் எழுதியது.நன்றிகருவாடு சுடுவது பற்றி என் கண்ணில் படாத தரவு.இங்கே 'வறல்' = வாடூன் = பதப்படுத்திய ஊன்
ஆமாம்; குழல்மீன் என்பது எது?
குழல் என்பது ஒரு சில மீன்வகைகளைக் குறிக்கும். pipefish. உ-ம்: பூங்குழல், பால்மீன், பால்கெண்டை
சேல் என்பது கெண்டை (carp) வகை மீன்களில் சில. சிவந்த கண், உடலைப் பெற்றவை. அதுபோல.
சக