ஞானமலை முருகன் திருப்புகழ்

262 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 12, 2022, 7:09:24 AM6/12/22
to Santhavasantham
ஞானமலை முருகன் திருப்புகழ்
-----------------------------------------------------------

கொங்குநாட்டுத் தலங்களோடு ஞானமலைத் திருப்புகழ் இரண்டும் சேர்த்து முதலிலே பதிப்பாசிரியர் வெளியிட்டார்கள். பழனிக்கு ஞானமலை என்ற பேர் உண்டு. ஞானபண்டிதன்,  ஞானதண்டாயுதபாணி என்றெல்லாம் பழனி முருகனுக்குப் பெயர். பழனியை ஞானமலை என வாரியார் சுவாமிகள் திருப்புகழ்: பழனி விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார். "இது மணிபூரக க்ஷேத்திரம். பெரும் புகழுடையது. சிவமலை என்னும் பெயரும் பூண்டது. பல சித்தர்களும், முத்தர்களும் வாழ்கின்ற மகிமையுடையது. போகமுனிவர் அருள் பெற்ற தலம். ஞான தண்டினை ஊன்றிய முருகன் பாலவடிவுடன் எழுந்தருளிய ஞானமலை. “அதிசயம் அநேகம் உற்ற பழநி” என்று சுவாமிமலைத் திருப்புகழிலும் வருகிறது. இன்னும் பழநியின் பெருமைகளை “பதினாலு உலகோர் புகழ் பழநி” (60) “காசிய மீறிய பழநி” (82) “பிரகாசம்புரி பழநி” (83) என்றும், திருவாவினன்குடியின் பெருமைகளை (10) (12) ஆகிய பாடல்களின் விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளது." (வாரியார்). சித்தன்வாழ்வு என்றே பழனியை ஔவை பாடினார். கொங்குநாட்டிலே பழைய சேர நாட்டுத்தலைநகர் வஞ்சி மாநகரம் இருக்கிறது (கரூர்). அம்மன்னர்கள் சக வருஷக் கணக்கீட்டை - ஆடு கோட்பாடு - அறிமுகப்படுத்தினர் என்பது பதிற்றுப்பத்தால் விளங்குகிறது. சித்திரை முதல் திங்களாக ஆவது அக் காலகட்டத்தில் தான். சேரர்கள் பழனியிலே நான்மறை ஓதும் மறையவர்களை நியமித்துள்ளனர். இதனை ஔவை வெண்பாவில் குறித்தார். தீபாராதனையின் போது நாதவிந்து கலாதி நமோநம ... என்னும் திருப்புகழ்ப் பாடல் உலகெங்கும் உள்ள ஹிந்துக்கோவில்களில் கந்தசாமி சன்னிதியில் பாடக்கேட்கலாம். “சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்” என்கிறார் அருணகிரியார். அது பழனி ஞானதெண்டாயுதனுக்குச் சொல்லும் வாழ்த்தே. இன்றும் முருகன் அடியார் பேரவை சார்பாக, பேரூர், சிரவை, பழனி சாதுசாமிகள் மடங்கள் வேண்ட, தைப்பூசம் அரசாங்க விடுமுறை நாள் ஆகியுள்ளது.

      நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
      இல்லம் தொறும்மூன்று எரியுடைத்து; - நல்லரவப்
      பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய!நின்
      நாட்டுடைத்து நல்ல தமிழ்

ஓதிமலைக்கு ஞானமலை என்ற பெயர் உண்டு. 5 முகங்கொண்ட முருகன். கௌமார மடாலயப் புலவர் ஞானமலை முருகன் பதிகம் எனச் சுமார் நூறாண்டு முன் பாடினார். அதனை, 1998-ல் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் காளிங்கராயன் கல்வெட்டைப் பற்றி அறிந்தபின்னர் ஞானமலையில் கல்வெட்டு ஆக்கியுள்ளனர். சிறு கோவிலாக இருந்த ஞானமலை முருகன் கோவில் இன்று பெரிதாக வளர்ந்துவருகிறது. திரு. சிவசிவா அவர்கள் திருவெழுகூற்றிருக்கை அழகாகப் பாடித்தந்துள்ளார். இதனைச் சித்திரவடிவில் ஞானமலையில் கல்லெழுத்து ஆக்கலாம். சந்தவசந்தக் குழு சார்பில், கிருஷ்ணன் அவர்களைக் கொண்டு செய்யலாம். ஆகும் துகையைப் பக்ரிந்துகொள்ள இயலும்.

----------

1998-ல் கல்வெட்டால் அறியலாகும் ஞானமலை! இதில் வரும் டாக்டர் எம். ராமகிருஷ்ணன்  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணனின் சோதரர் அல்லர். ரா. கிருஷ்ணனின் அண்ணன் ரா. ராமசேஷன் அகால மரணம் அடைந்துவிட்டார். பேரா. ரா. ராமசேஷன் தொடங்கிய ஆய்வுகளை இன்றும் செய்கிறார் அவர் தம்பி, வ. ரா. கிருஷ்ணன்.

வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர் பத்திரிகையில் படித்த செய்தியை ஒருமுறை எனக்கு அனுப்பிவைத்தார். அக் கல்வெட்டைக் கல்வெட்டாளர் வழி நன்கு பதிவுசெய்யலாம். மிகத் தேய்ந்த நிலை என்றார். கல்வெட்டு தொடர்பான ஆய்வேடுகளில் (உ-ம்: ஆவணம், தொல்லியல் கழகம்) அச்சாகியுள்ளதா எனக் கேட்டுச் சொல்கிறேன்.  N. Ganesan

https://www.thehindu.com/society/history-and-culture/gnanamalai-the-hill-with-an-eternal-spring/article24705512.ece

Gnanamalai: a hill of Wisdom

Geetha Venkataramanan
August 16, 2018 16:44 IST

It was at Gnanamalai that Arunagirinathar had a glimpse of the feet that once saved his life, at Tiruvannamalai

The hill temple vibrates with the crowd that starts arriving for Adi Krithigai, which is the following day. Thousands come, most of them carrying Kavadi, a phenomenon associated with Murugan. Gnanamalai looks fresh and clean, the ambience typical of a place, where Mandalabishekam is on after consecration. But this hill is special. Muruga is the Lord of Kurinji, the terrain of mountains and he has countless hilltops as His abode. Gnanamalai and the small temple stand out for the fact that this is the place Arunagirinathar mentions in one of his Tiruppugazh verses, a place that had been elusive for many years.


image.png

The Tiruppugazh referred to is ‘Manaiyaval Nagaikka...’ in which Arunagirinathar mentions Gnanamalai. This hill in Vellore district, however, remained as ‘Idam Vilanga Thalam’ until 1998, when an inscription gave a clue,” explains Valayapettai R. Krishnan, Tiruppugazh scholar and Murugan researcher. The author of several books on the subject, he thinks the ‘discovery’ of Gnanamalai, its development and consecration mark a milestone in his journey. On learning about an inscription on a rock of Gnanamalai, V. Muralidharan of Tiruvannamalai visited the spot. He came back with details, which made Krishnan go there for investigation. Convinced that this was the hill Arunagirinathar mentioned in the hymn, he set about the task of making it known to the public. The inscription found on a rock above an eternal spring says that Kalingarayan (1322-1340), son of Sambuvaraya Pazhayariayar, sculpted steps on the hillock to reach the temple of Sri Gnana Panditaswami. It is under the care of HR&CE Department.

image.png

Facilities created

In the past 20 years, the members of Siruvapuri Abisheka Committee and Gnanasramam Trust with the help and guidance of generous donors have built steps to the hill top and a motorable path besides facilitating water supply, etc. In this hill temple, Muruga is in an unusual form. With Valli on his left lap and the right arm round her waist, the deity is seated on his mount, the peacock and hence the name, Kuramagal Thazhuviya Kumaran.

After marrying Valli at Vallimalai, Muruga passes Gnanamalai, where he chooses to spend quiet days with his newly wed wife. “A honeymoon of sorts,” remarks Krishnan, who explains the Tiruppugazh link. A huge depression on the rocky surface here is worshipped as the footprint of Subramanya. Ecstatic on seeing the footprint, Arunagiri in the hymn beseeches to his favourite god to show His feet — the same feet, which saved his life at Tiruvannamalai. ‘Adiyanu Ninaithu Naalum Udaluyir Vidutha Podhu Anugi Mun Alitha Padam Arulvaye... goes the Tiruppugazh. The Lord responds by appearing with Valli on peacock proving right the Kandar Alankaram line — “Neela sigandiyileri Kola Kuratiyudan varuvan...” At a metaphysical level, Valli is the embodiment of Wisdom. The renovation committee has built a hall around the footprint for devotees to meditate.

At the foothill is Gnana Siddi Ganapati, facing West. He holds in his four arms axe, mango, cane and a bunch of flowers. The greenery makes the 150-step climb a pleasant experience. Pointing to the image of Gnana Dakshinamurti beneath a tree, Krishnan says, “The presence of this Kal-aala tree made us place the statue here. The biosphere has rare species of flowers and herbs,” he informs. Nelli is the sthala vriksham. The outline of the twin hills of far away Sholingur is hazily visible in the noon glare. Incidentally, Gnana Malai, Valli Malai and Tiruthani lie in a straight line.

First stop after the ascent is Gnana Saraswati, in a meditative posture. The original Gnana Panditha Swamy temple is a few yards away. Close by stands a huge spear — Gnanavel, a symbol of Wisdom. The Moolavar is Brahma Sasta form. “A common form in most of the temples of the South, built by Cholas and the Pallavas,” informs Krishnan. The deity in this Pallava structure is flanked by Valli and Devasena. South of this shrine is the temple for Kuramagal Thazhuviya Kumaran.

The hill temple has space for Gnanaveli Siddar (Paalai Siddar, whose guru was Arunagirinathar) peetam. This is marked by the presence of Gnanagiriswarar in the form of a lingam. Gnana Poongothai, Gnana Ganapati, Gnana Subramanyar and a beautiful sculpture of Vishnudurga complete the constellation. Paditiruvizha, Adikritigai and Skandasashti are celebrated with great fanfare.

The entire project, including the steps, Yoga Anubhuti Mantapam on the landing, the guest house at the foothill, which includes accommodation for the archaka’s family, and amenities for devotees have all been created over a period of time with generous donations. “Funds are needed to maintain the temple and the infrastructure and to conduct festivals and pujas. The hill, which is special in many ways, should be developed and more devotees should visit the place, where Arunagirinathar had a second glimpse of His feet,” says Krishnan, whose life-long mission is to spread the glory of Tiruppugazh and bring to light more places underlined by saint Arunagirinathar. For details contact 9444418526, 9003232722, 9442671847.








Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Jun 12, 2022, 11:45:56 AM6/12/22
to housto...@googlegroups.com, vallamai
On Sunday, June 12, 2022 at 9:21:50 AM UTC-5 siva siva wrote:
Thanks.

வணக்கம். நீண்டநாளின் பின், நண்பர் ரா. கிருஷ்ணனிடம் பேசினேன். வெங்காலூரில் இருக்கிறார்.  நாளை சென்னை திரும்பிவருகிறார்.
உங்களுக்கு எப்படி வி. சுப்பிரமணியத்தைத் தெரியும் என்றார். சந்தவசந்தம் பற்றிக் கூறினேன். எழுகூற்றிருக்கை எழுதித்தர உங்களைக் கேட்டதாகக் கூறினார். ஒரு கமெண்ட் சொன்னேன் (non-numeral section) என்றார்.

ஞானமலை எழுகூற்றிருக்கைக்குப் படம் எழுதித் தருவதாகச் சொன்னார். பின்னர் கல்லில் வடிக்கலாம் என்றார். அதை எப்படிச் செய்வது என யோசிப்போம் என்றார்.

6. 6. 2022 அன்று நீங்கள் எழுகூற்றிருக்கை அனுப்பிய செய்தி சொன்னார். 6. 6. முக்கியமான நாள். இந்திய பார்லிமெண்ட்டில் பாரத நாட்டின் அரசாங்கம் தமிழை இந்தியாவின் செம்மொழி என்று அறிவித்த நாள் எனக் குறிப்பிட்டேன். ஜார்ஜ் ஹார்ட் மடலையும். மேதகு கலாம் அதனை பார்லிமெண்ட்டில் வாசித்ததும், தமிழ் மொழிபெயர்ப்பை (கவிஞர் சிற்பி) டெல்லி தமிழ்ச் சங்கம் வாசித்ததும் குறிப்பிட்டேன். இதுபற்றி ஒரு குறிப்புத் தாருங்கள். அன்று ஞானமலை முருகனுக்கு எழுகூற்றிருக்கை அமைந்திருப்பது சிறப்பு என்றார் வலயப்பேட்டை திருப்புகழ் அமுதன் ரா. கி.

செங்குன்றாபுரம் பற்றிய பாண்டியர் கால முருகன் படம் அண்மையில் பார்த்தேன் என்றேன். (மறைந்த) பெரும்புலவர் ப. வெ. நாகராஜன் எழுதிய உரையை முன்னரே அவருக்குத் தந்துள்ளேன். அங்கே ஆள் அமையமாட்டேன் என்கிறது. திருப்பணி செய்யச் சில சிக்கல் என்றார். அந்தப் புதிய திருப்புகழ் ஓலையில் கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் தொகுத்த சுவடிகளில் இருந்து. அதையும் கல்வெட்டு ஆக்கணும் என்றேன். முருகன் திருவருளால் நடக்கும் என்றார்.
 
நா. கணேசன்



On Sun, Jun 12, 2022 at 7:09 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஞானமலை முருகன் திருப்புகழ்
-----------------------------------------------------------
....
----------

1998-ல் கல்வெட்டால் அறியலாகும் ஞானமலை! ....

வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர் பத்திரிகையில் படித்த செய்தியை ஒருமுறை எனக்கு அனுப்பிவைத்தார். .... N. Ganesan

N. Ganesan

unread,
Jun 13, 2022, 6:37:12 PM6/13/22
to Santhavasantham

ஞானமலை முருகன் 2 திருப்புகழ் பெற்றான். அருணகிரியார் வழிபட்ட ஞானமலை எது
என்பது ஆய்வுக்குரியதாக உளது. மூன்று முருகன் தலங்களை ஞானமலை என்கின்றனர்.
(1) சுமார் 20 ஆண்டுகளாக, ஞானமலை என சோளிங்கர் அருகே கோவிந்தச்சேரி மலையை
வலயப்பேட்டை ரா. கிருஷ்ணன் எண்ணுகிறார். பிரசித்தி பெற்று வருகிறது.

(2) ஆம்பூர் அருகே சர்க்கரை ஆலை உண்டு. அதன் அருகே உள்ள ஞானமலை திருப்புகழ்
பெற்றது எனப் பம்மல் சம்பந்த முதலியார், Subramania Shrines, (1947 CE) என்னும் நூலில்
எழுதியுள்ளார். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம்.

(3) கொங்குநாட்டிலே ஓதிமலை என்ற தலம், ஊட்டி மலைவாசஸ்தலத்தின் அடிவாரத்தில்
இரும்பொறை என்ற சேரர் ஊருக்கு அருகே உள்ளது. இதனை ஞானமலை எனக் கொள்ளும்
மரபு ஒரு நூற்றாண்டாக உண்டு.

ஓதிமலை முருகனுக்குச் சிரவை ஆதீனப் புலவர் பதிகம்:
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1848
“'மதுரகவி', 'காவியக் கலைமணி' சிரவையா தீனப் புலவர் கோவை க.கி. இராமசாமி ஐயர் அவர்கள் ஞானமலை முருகன் மீது பாடியளித்துள்ள பதிகம் அருமையானது. "ஞானபண்டித ஸ்வாமியே" என்று முடியும் ஒவ்வொரு பதிகத்திலும், திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம் முதலான வற்றிலிருந்து சொற்களும் தொடர்களும் செய்தியும் எடுத்துக் கொண்டு பாடியிருக்கும் அழகை வியக்காமலிருக்க முடியாது.”

http://sanjayankaunian.blogspot.com/2018/12/14-113-114115.html
சஞ்சயன் கௌணியன் எழுதுகிறார்:
“114. ஞானமலை
அடுத்த தலம் ஞானமலை. இது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை.
தணிகைமணி யவர்கள் இதைக்குறிப்பிடவில்லை. இது  ஷோளிங்கருக்கு அருகில் இருக்கிறது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது சரியெனத்  தோன்றவில்லை.ஏனெனில் அருணகிரிநாதர் இப்போது  பார்த்துவரும் தலங்கள் கொங்கு நாட்டில் இருக்கின்றன.”

வ. சு. செங்கல்வராயரும் ஞானமலை கொங்குநாட்டுத் தலம் என்றே கருதினார். எந்தத் தலம் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றவர்,
“நயினாமலை” என்னும் மலைபற்றிக் குறிப்பிடுகிறார் வ.சு.செ. அவர்கள்.
ஞானமலை: “இடம் விளங்கவில்லை. நாமக்கல்லுக்கருகில் நைனாமலை என்று மலையொன்று உண்டு.” வ.சு.செ.

கல்வெட்டியலர் துரை. சுந்தரம் இன்றில்லை. அவரின்மை எனக்குப் பெரிய இழப்பு.
2018-06-02 9:27 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:

    நன்றி கணேசன் ஐயா. ஊதியூர்  பற்றிய கூடுதல் செய்திகள்
    மற்றும் உதியர், ஓதி மரம்,  சொல்லாய்வு ஆகியன அறிந்தேன்.
    மிக்க நன்றி.
    சுந்தரம்.

நல்ல தொல்லியல் கட்டுரையைத் தாங்கள் எழுதியுள்ளீர்கள்.
http://kongukalvettuaayvu.blogspot.com/2018/06/blog-post.html  
தென்கொங்கு சதாசிவத்தை நலம்விழைந்ததாய்க் கூறவும்.

உதி/ஒதி மிகப்பழைய பெயர். கொங்கு போன்ற வறட்சியான பகுதிக்கு ஏற்ற மரம். வெங்கால மரம் வெங்காலூர் (வடகொங்கின் பெங்களூர்),
வெங்கால நாடு (சங்க காலத்தில் இருந்த ஒரே வஞ்சி மாநகரின் நாடு - கொங்கு 24 நாடுகளில் ஒன்று) பெயர் தந்தது.
அதேபோல, உதி/ஒதி மரம் ஊதியூர் என்றும், ஓதிமலை என்றும் பெயர் அளித்துள்ளது.

கடம்ப மரம் குலச்சின்னமாகக் கொண்டவர்கள் கடம்பர்கள். இவர்கள் மேலைக் கடற்கரை அதிபர்கள். கடம்பு கதம்ப- என வடமொழியில்
ஆகும். மீனாட்சி அம்மனுக்கு கதம்பவனவாசினி என்பது கடம்ப மரத்தால் பெற்ற பெயர்தான்.

உதி மரத்தைக் குலச்சின்னமாகக் கொண்ட உதியர்கள் கடம்பர்களை அடக்கி உள்ளதை சங்க இலக்கியங்களில் (பதிற்றுப்பத்து, ...)
காண்கிறோம்.

அருணகிரி நாதர் பெயர்க்காரணத்தை அழகாக ஊதிமலைத் திருப்புகழ்களில் விளக்கியுள்ளார். பொன் போன்ற ஆபரணங்களைப்
பூக்களாகப் பூத்துச் சொரியும் ஓதிமரங்கள் நிறைந்த ஊதிமலை, ஊதியூர் என்று பாடியுள்ளார்.

ரஸவாதம் பற்றிய அறிவு வரவர, இந்தப் பொன்னூதி மலைக்கு கொங்கண சித்தர் ரசவாதம் செய்து பொன்னை உலையில் இட்டு ஊதிச்
செய்தார் என்ற புராணம் ஏற்பட்டுவிட்டது.இரண்டு திருப்புகழ்கள் கொண்ட முருகன் தலம் இது.

இதேபோல, ஓதிமலையும் கொங்கில் உள்ளது. இதுவும் உதி/ஒதி மரத்தால் ஏற்பட்ட மலைப்பெயர்தான். ஆனால், ஓதுதல், ஓத்து (=வேதம்)
என்று கொண்டு மிக அரியதான ஐம்முக முருகன் அருள்பாலிக்கும் தலம் என்று புராணம் உண்டு. அருகேயே, இரும்பறை என்ற ஊர்.
இரும்பொறை என்பது இரும்பறை எனத் திரிந்து வழங்குகிறது. பிரமனை இரும்பு அறையில் சிலை வைத்ததாய்ப் புராணம் ஏற்பட்டுவிட்டது.
ஆனால், பேரூர், தெனமநல்லூர், ... போன்ற ஊர்களின் உதியர் குடிமரபினரும் (உதி/ஒதி), வஞ்சி மாநகரின் கொல்லி இரும்பொறையரும்
இணைந்து சேரநாட்டை ஆண்டதற்குச் சாட்சி இரும்பொறை/இரும்பறை ஊர் ஆகும். பூப்பொலி > பூப்பலி (சிலம்பில் காண்க.)
அதுபோல, ஓதிமலையின் இரும்பொறை > இரும்பறை.

சோலைமலை திருப்புகழ் (444) இந்த ஓதிமலைத் திருப்புகழ் தான். அதற்கான குறிப்புகள் பாட்டிலேயே விரிவாக உள்ளன.
உதி/ஒதி மரங்களால் மலைப்பெயர்களும், உதியன் என்ற குல மரத்தால் வரும் பெயர்,
அம்மரத்தால் உள்ள இரண்டு மலைகள், அங்கே உள்ள ஸ்கந்த ஸ்தலங்கள், அவற்றிற்கான திருப்புகழ்கள் அரியவை.

ஐந்து திருமுகங்களுடன் அருளும் ஓதிமலை முருகன்!
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/29/ஐந்து-திருமுகங்களுடன்-அருளும்-ஓதிமலை-முருகன்-2835176.html
http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3572&id1=50&id2=18&issue=20161101
https://brseetha.blogspot.com/2017/08/blog-post_531.html
https://www.youtube.com/watch?v=Ho3Ckl7ewTc
http://sankardotb.blogspot.com/2017/07/othimalai.html

ஊதியூர் கொங்கண முனிவருடன் தொடர்பானதலம்.  ஊதி மலை முருகனின் மேல் திருப்புகழ் இரண்டு உள்ளது. அதில் அம்மலைக்குப் பெயர்க்காரணம்
அருணகிரி நாதர் சொல்லியுள்ளார். ஓதி மரங்கள் மிகுந்த இடம் எனப் பாடியுள்ளார்.

பழைய காலச் செய்யுளில் ஓ, ஒ ஆதற்குப் புள்ளி பெறும் என்பதற்கு ஓதி, ஒதி சொற்களை உதாரணமாகப் பாடப்பெற்றுள்ளது.

உதி மரம் குலச்சின்னமாக இருந்த குடும்பம் மேலைக் கொங்கில் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் உதியர்கள்.
காஞ்சி நதி பூர்வீகம் என்பது சங்கச் செய்யுள்களால் அறிகிறோம். அயிரை மலை (பழனி மலைத்தொடர்) ஐயை அவர்கள் குலதெய்வம்.
இவர்கள் கொல்லிப் பொறையருடன் மணவினை, ஆள்வினை செய்த குடும்பங்கள் இணைந்து சேர நாட்டை ஆண்டுள்ளனர்.
பெருஞ்சோறு மாபாரத காலத்திலேயே அளித்தவர்கள் என்பார்கள். வடக்கே இருந்து வந்த வேளிர்கள் எனலாம்.
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், .... இவனது தலைநகர் சேரர்களின் வஞ்சி. சங்க காலத்தின் வஞ்சி எனப்பட்ட ஊர் இன்று கரூர்
என அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே உள்ள பழைய முருகன் கோவில்களில் உயரமான மலைக்கோவில் ஓதிமலைதான், 1800 படிகள் ஏறணும்.
சத்தியமங்கலம் - சிறுமுகை வழியில்.

உதி/ஒதி மரம் உதியம்/ஒதியம் என்பதும் உண்டு. பொன்னுதி என்று சொல்லிப்பாருங்கள். அது பொன்னூதி என்றாகிவிடும் பேச்சில்.
இதற்காக ரஸவாத புராணம் பின்னர் சேர்ந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் விளக்கியுள்ளார். ஊதிமலைத் திருப்புகழில்.

சோலைமலைக்கு என்று (444) திருப்புகழ் என வ. சு. செங்கல்வராயபிள்ளை - தமிழின் முதல் எம்.ஏ. - கொடுத்துள்ளார்.
கூடவே, அதன் இன்னொரு பாடமும் கொடுத்துள்ளார். அந்தத் திருப்புகழ் ஓதிமலைக்கான திருப்புகழ்.
கொங்கில் இரண்டு ஊதிமலை உள்ளன. இரண்டிலும் பழைய முருகன் திருப்பதிகள் உண்டு எனப் பலர் அறியார். வ. சு. செங்கல்வராயர் உட்பட.
அருணகிரிநாதர் வாக்கில் கடைசிஅடியைப் பார்த்தால் இந்தப் பழைய ஓதிமலைத் திருப்புகழின் புராணத்தைச் சொல்கிறார் என விளங்கும்.

ஓதி என்ற சொல். உதி/ஒதி (ஊதி/ஓதி) மரம் பூத்துக் குலுங்கும்போது பெண்டிர் தலையங்காரத்தில், பொன்னும் பூக்களும் வைத்திருப்பதுபோல்
இருக்கும். அதனால் ஓதி என்பதற்குக் கூந்தல் என்று ஒரு பொருள் ஆகியுள்ளது. இது உவமையாகுபெயர் என்க.
உதியர்கள் குலச்சின்னம் உதி மரம். ’உதி மரக் கிளவி’ (தொல்காப்பியம்).

உதி/ஒதி ஊதி/ஓதி என்று பேச்சில் வரும்.  
பொன்+உதி = பொன்போன்ற பூக்கள் மலரும் உதிமரம்.
துரைசுந்தரம் சென்ற மலைக்குப் பொன்னுதி பொன்னூதி மலை எனப் பெயருண்டு.
http://www.thehindu.com/thehindu/mp/2003/04/08/stories/2003040800410300.htm
`Odayam' Odina wodier (Lannea coromandelica) are summer flowering trees.
https://herbalplantslanka.blogspot.com/2015/05/hiklannea-coromandelica.html
உதி/ஒதி மரத்துப் பொன்:
https://en.wikipedia.org/wiki/Lannea_coromandelica

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 14, 2022, 7:47:09 AM6/14/22
to Santhavasantham, thiruppug...@gmail.com
எழுகூற்றிருக்கையின் எண்கணிதம்:
---------------------------------------------------------------

கண்ணபிரான் ரவிசங்கர் எழுகூற்றிருக்கை எண்களை Binomial எனக் குறிப்பிட்டார் (2009):
”Folks, If u notice...
11^2=121
111^2=12321
1111^2=1234321
11111^2=123454321
etc....
It is actually about the squares of the numbers consisting of 1s! It is the x^2 transformation in binomial... ”

EzhukuuRRirukkaic ceyyuL numbers are not Binomial coefficients or Binomial numbers.
etc.,

Binomial coefficients are Pascal Triangle:
In mathematics, Pascal's triangle is a triangular array of the binomial coefficients that arise in probability theory, combinatorics, and algebra. In much of the Western world, it is named after the French mathematician Blaise Pascal, although other mathematicians studied it centuries before him in India,[1] Persia,[2] China, Germany, and Italy.[3]

பாஸ்கல் முக்கோணம், மேரு பிரஸ்தாரம் எனப்படுவது. இந்த எண்களை வைத்து யாரும் இதுவரை எழுகூற்றிருக்கை செய்ததில்லை. இனிச் செய்யக் கூடும். மேல்- என்ற தமிழ்/த்ராவிடச் சொல்லில் இருந்து உருவானது மேரு என்ற சம்ஸ்கிருதச் சொல் என்பர் வடமொழி அறிஞர்கள்.

பேரா. அனந்த் கட்டுரை:
”மேலுள்ள எழுகூற்றிருக்கை அமைப்பின் முதல் கூறில் ஒரு அறை, இரண்டாவதில் மூன்று அறைகள் என்ற வகையில் ஏழாவது கூறில் பதின்மூன்று அறைகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த அமைப்பில் தேர்த்தட்டுக்கு மேலுள்ள முக்கோண அமைப்பு, கணித இயலில் உள்ள ‘பாஸ்கல் முக்கோணம்’ (11) போலக் காணப்பட்டாலும், இதன் அறைகளுக்குள் உள்ள எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு மாறுபட்டது. எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321
 [End Quote]

எழுகூற்றிருக்கைச் செய்யுள்களில் இருப்பது பாஸ்கல் திரிகோணம் அன்று. மேரு பிரத்தாரம் என்னும் அதனை வைத்து புதிய எழுகூற்றிருக்கை சிவன், பெருமாள், அம்பிகை, இலக்குமி, பிள்ளையார், முருகன், சாத்தன், அருகன், புத்தன், .... பேரில் உருவாக்கலாம்.

எழுகூற்றிருக்கையில் உள்ள எண் கணிதத்தின் பெயர் என்ன?
----------------------------------------------------------------------------------------------------

எழுகூற்றிருக்கையில் எண்மாலைமாற்று உள்ளது. Numeric Palindrome (எண் மாலைமாற்று) எழுகூற்றிருக்கையில் இருப்பது காணலாம்.

1. Number pyramid (Numerical Palindromes)

 

1 * 1 = 1
11 * 11 = 121
111 * 111 = 12321
1111 * 1111 = 1234321
11111 * 11111 = 123454321
111111 * 111111 = 12345654321

 

Don't you think this is amazing?

In this essay, I want to investigate the beauty of numbers.

Let's start our exploring from the above one.

Do you see the pattern?

First of all, the number of digits of the multiplied numbers are all odd.

Since digit is odd, if we pick the middle number, each side will contain an even number of digits; and those numbers are in reversed symmetrical order.

Let's see if it is really true for the infinite numbers by using EXCEL

(Chart one)

As we can see from the above, it seems true for all numbers.

Now why do you think this is true?

let's look at some smaller examples;

from the examples above, we can easily see the reason for the pattern.

To explain more explicitly, a 1 in a multiplier copies the multiplicand and shifts, so that the product copies the counting order of numbers -- 1, 2, 3, 4, etc. -- up to the number of ones in the multiplier, then reverses this counting order back to the starting 1.

We call this kind of numbers as "NUMERICAL PALINDROMES"

Let's look at some terms so that we can easily understand this.

Palindromic word = a string of letters which reads the same left to right or from right to left. ( for example, "POP", "DAD")

Palindromic sentence = a string of letters that separate as words, left to right or right to left. Thus "Madam Im Adam" is a short Palindromic sentence.

Numerical palindromes result from squares of identity strings, that is each a string of signs all the smae, such as 111, whose square is 111 * 111.

In the DNA code for genes, a palindromic coding prevents certain kinds of errors.

------------

எழுகூற்றிருக்கையில் உள்ளது எண்மாலைமாற்று ஆகும்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Jun 14, 2022, 10:28:25 AM6/14/22
to
On Tue, Jun 14, 2022 at 7:04 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முனைவர் கணேசன், சாதாரணமாக எண்களைப் பார்த்தாலே ஒவ்வாமை கொள்ளும் எனக்கு மேலே உள்ள மடலில் எதுவும் புரியவில்லை. ஆனால் தேரின் அமைப்பு என்றவுடன் சித்திரக்கவி நினைவுக்கு வருகிறது. திருச்செந்தூர் கோயில் வெளிப்பிரகாரச் சுவரில் ஒரு தேர்ச் சித்திரக்கவி வரைந்துள்ளமை நினைவுக்கு வருகிறது. 
தனி மடலாக குழுமத்திற்கு அனுப்பி இருக்கிறேன். 
சக

நீங்கள் அனுப்பிய ரதபந்தம் எழுகூற்றிருக்கை அல்ல.

எழுகூற்றிருக்கையில் உள்ள கணிதம் என்ன என்று கூறியுள்ளேன்: எண்மாலைமாற்று (Numeric Palindrome). இதனைத் தமிழில் யாரும் இதுவரை விளக்கியதாகத் தெரியவில்லை.

மேல்- என்ற தமிழ்/த்ராவிடச் சொல்லில் இருந்து உருவானது மேரு என்ற சம்ஸ்கிருதச் சொல் என்பர் வடமொழி அறிஞர்கள். மேரு பிரஸ்தாரம் (பாஸ்கல் திரிகோணம்) முக்கூற்றிருக்கை, நாற்கூற்றிருக்கை செய்யலாம். எழுகூற்றிருக்கை எண்கள் பெருகிவிடுகின்றன. எனவே, செய்யுள் ஆக்கல் கடினம்.
PascalTriangleAnimated2.gif

மேரு பிரத்தார நாற்கூற்றிருக்கை இவ்வாறு அமையும்:
                                     1 2 1
                         1 3 3 1
                       1 4 6 4 1
                    1 5 10 10 5 1
------------

எழுகூற்றிருக்கையில் உள்ளது எண்மாலைமாற்று ஆகும்.

நா. கணேசன்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfTZ2akzcLMCaYgoaLzRa17HYd_8ujRmQTcbe15Etv_5Q%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcubpA%2BP8%3Dois__nE58dBDn_eiZPmL0ZU-9MgZ-BBuvghA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jun 17, 2022, 5:54:58 PM6/17/22
to Santhavasantham, thiruppug...@gmail.com
On Saturday, October 7, 2017 at 8:35:47 PM UTC+5:30, ananth wrote:
    <> 7-10-2017 <>

 >    ஏழுபத்தி ரண்டா யிரத்துப் பதினேழைச்
 >    சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன் – ஆழ்ந்தஅவ்
 >    எண்ணை இருபுறமாய் வாசித்த போதிலும்
>    கண்ணில் தெரிவதொன்றே காண்!  
>    (*இருபுறமாய் – இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக; . Thanks to Raji Iyer who pointed out the palindrom.)
>    :-)
> அனந்த் 7-10-2017

<<
 அழகு. எண்மாலைமாற்று!

ரமணி
>>

ஆமாம். இது Numeric Palindrome = எண்மாலைமாற்று.
4-10- 2014 , 5-10 -2015 , 6-10-2016, 8-10-2018 , 9-10-2019  ...
https://en.wikipedia.org/wiki/Palindromic_number
அனந்த் சொல்லிய வெண்பாவை எழுகூற்றிருக்கைக்கு மாற்றுகிறேன்.

-------------------
     
    எழுகூற்றிருக்கை எண்மாலைமாற்று
  ---------------------------
 ஏழு தனியடுக்காய்த் தேரில் இயங்கிநன்மை
 சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன், கூற்றிருக்கை
 எண்ணைநாம் நால்விதமாய் எண்ணிய போதிலும்
 கண்ணில் தெரிவதொன்றே காண்!

 நால்விதமாய் ~ (1) இடமிருந்து வலம் (2) வலமிருந்து இடம்
(3) மேலிருந்து கீழ் (4) கீழிருந்து மேல் (*).

அருணகிரிநாதரின் எழுகூற்றிருக்கைச் சித்ரகவி கவி காண்க.
என் வெண்பாவில் குறிப்பிடும் எண்கணிதம் விளங்கும்.

NG
http://nganesan.blogspot.com
* The longest number rows repeat twice just above and below the icon of Sri Muruka Muurthi.
So, one longest number row should be ignored in the vertical columns of the Citrakavi
for uniqueness of the palindrome. Otherwise the middle number will repeat adjacently.

அவலோகிதம் “இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய பல விகற்ப இன்னிசை வெண்பா
என்கிறது.

IMG_20220614_201213(1).jpg

N. Ganesan

unread,
Jun 19, 2022, 8:24:40 AM6/19/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

செம்மொழித் திருநாள் (6-6-2004)
----------------------------------

6-6-2022 செம்மொழித் திருநாள் அன்று ஞானமலை முருகன் திருவெழுகூற்றிருக்கை பெற்ற அரிய நாள். திருப்புகழ் அமுதன் திரு. ரா. கிருஷ்ணனுடன் அண்மையில் பேசும் வாய்ப்பு அமைந்தது. அப்போது, சந்தவசந்தக் கவிஞர் சிவசிவா அவர்கள் தான் கேட்டிருந்தவாறு, ஞானமலைக்கு எழுகூற்றிருக்கைப் பாடல் எழுதி அனுப்பியதைச் சொன்னார். சம்பந்தர் சிவனுக்கும், யாப்பருங்கலத்தில் அருக பரமன், அருணகிரி முருகனுக்கும், இன்னும் பல எழுகூற்றிருக்கைகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றின் கணிதத்தை எண்மாலைமாற்று (Numeric Palindrome) எனலாம்:


          எழுகூற்றிருக்கை எண்மாலைமாற்று
                               ---------------------------
       ஏழு தனியடுக்காய்த் தேரில் இயங்கிநன்மை
       சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன், கூற்றிருக்கை
       எண்ணைநாம் நால்விதமாய் எண்ணிய போதிலும்
       கண்ணில் தெரிவதொன்றே காண்!

 நால்விதமாய் ~ (1) இடமிருந்து வலம் (2) வலமிருந்து இடம்
(3) மேலிருந்து கீழ் (4) கீழிருந்து மேல்.

-----------

ரா.கி. அவர்களிடம் “ஆறுமுகம் அமைந்த ஷண்முகன் ஷடாக்ஷர மந்திரம் உடையான். எழுகூற்றிருக்கை 6-6 அமைந்தது சிறப்பு ஐயா. 6-6-ன் முக்கியமான சிறப்பு, 6-6 அன்று தான் இந்திய அரசாங்கம் தமிழைப் பாரத உபகண்டத்தின் செம்மொழி என அறிவித்த நாள். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட நாள், இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் தமிழைச் செம்மொழி அறிவித்த நாள் இந்த 6 - 6 (ஜூன் 6). எனவே, வருங்கால இந்தியர்கள் தமிழின் சிறப்பை அறிய இந்தச் செம்மொழி ஆய்வுகள், நிறுவனங்கள், ... போன்றன தூண்டும்.” என்று குறிப்பிட்டேன். அதற்கு அவர் “அப்படியா,  செம்மொழி என மத்திய அரசாங்கம் அறிவித்த நாளா? அதைப்பற்றி ஒரு குறிப்பு எழுதி அனுப்புங்கள்” என்று ரா. கிருஷ்ணன் கேட்டார். எனவே, இம்மடல்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. நியூ யார்க் டைம்ஸ் இதுபற்றி ஒருகட்டுரை சில நாள் முன் வெளியிட்டது:
https://www.nytimes.com/2022/06/11/world/asia/india-languages-ganesh-devy.html
ஆயிரக்கணக்கில் இருந்தாலும், பாரத நாட்டின் செம்மொழிகள் இரண்டே: (1) தமிழ் (2) ஸம்ஸ்கிருதம். இதுபற்றி, பேரா. ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி), ஹிந்து நாளிதழுக்கு அனுப்பிய குறிப்பு: https://nganesan.blogspot.com/2010/09/bhk.html

தமிழ் செம்மொழி என்று அரசியல் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டாத காலகட்டம். இந்தாலஜி சபையில் தமிழ் செம்மொழி என்று நானும், பின்னர் சிலரும் பேசிய போது, BhK தமிழ் செம்மொழி அல்ல என்று என்னிடம் வாதாடினார்.

http://nganesan.blogspot.com/2010/01/hart.html
தமிழ் செம்மொழி ஆன வரலாறு - ஜார்ஜ் ஹார்ட் கருத்துக்கோவை! - இணைய விவாதங்களின் ஒரு மலரும் நினைவுகள்

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பற்றிப் பலரும் தமிழ்நாட்டிலும் பதிவுலகிலும் முதன்முறையாக அறிந்து வருகின்றனர். கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மன், ருஸ்ஸியன், சம்ஸ்க்ருதம், மலையாளம், தமிழ், .. என்று பல மொழிகள் பழுதறக் கற்றவர். கம்பனையும், சங்கப்பாடல்கள், ... மொழிபெயர்த்து விருதுகள் அடைந்தவர். புறநானூறு முழு மொழிபெயர்ப்பில் தமிழ்ப் பேராசிரியை வி. எஸ். ராஜம் அவர்களுக்கும், எனக்கும் தொடக்கத் தனிப்பக்கம் ஒன்றில் நன்றி பாராட்டியுள்ளார். அகநானூறு முழு மொழிபெயர்ப்பு வெளிவர இருக்கிறது. சங்க இலக்கியம் முழுதும் வாழ்நாள் முழுக்கப் படித்தும், ஆய்ந்தும், மொழிபெயர்த்தும், ஏனை இந்தியப் பண்டை இலக்கியங்களுடன் ஒப்பிட்டும் எழுதும் பேரா. ஹார்ட் இந்திய சமூக அமைப்பு உருவாக்கத்தில் திராவிடர்களின் பங்கை விளக்கும் கட்டுரை மிக முக்கியமானது. அதனை பெர்க்கிலி பல்கலை ஆய்வுத்தளத்தில் நாம் கற்கலாம்.

பின்னாளில் ஆனந்தவர்த்தனர் (கி.பி. 820-890) போன்றோர் வட இலக்கிய, இலக்கணங்கள் கொண்டு விளக்கிய த்வனிக் கோட்பாடு தமிழில் சங்க இலக்கியத்தில் வேர் கொண்டுள்ளமையைக் காட்டியுள்ளார்.

http://nganesan.blogspot.com/2010/01/hart.html
பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழகம் முழுக்க அறிந்த பெயர் ஆவதற்குக் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தும் முதல்வர் கருணாநிதி கொடுத்துள்ள ஹார்ட் கடித மொழிபெயர்ப்பு ஒரு முக்கியக் காரணம். பேரா. சி. இ. மறைமலை அவர்களை ஹார்ட் பெர்க்கிலி பல்கலைக்கு அழைத்திருந்த வேளை. இந்தாலஜி என்னும் பேராசிரியர்கள் அவையில் நான் முதலிலும், பின்தொடர்ந்து நண்பர் சிலரும் தமிழ் செம்மொழி (Classical Language of India on par with Sanskrit) என்று எழுதினோம். அதை கேள்விக்குள்ளாக்கி திராவிடவியல் பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப. கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார். உ-ம்: Bh. கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்ட மடல்: “Some members make it their mission to sing the glory of one language and one culture (?), i.e. Tamil. The pathetic appeal of one list member to place Tamil on the same footing as the Classical languages-- Sanskrit, Persian and Arabic in India-- sounds ridiculous. Tamil is a modern language and not a classical language. Classical lgs are not the mother tongues of any segment of natives in India. In the western world, only Latin and Greek qualify as classical languages. Classical lgs in India get much less support than modern lgs. The modern lgs are encougared at the state as well as federal levels. Modern lgs are used widely-- in education, media, administration, etc. There are no films made in India in the classical lgs (only two or three in Skt.). I do not know why some of these members childishly say that more funds would come if Tamil were regarded a classical lg. You cannot promote the interests of a lg through internet by quoting things from a lg on every possible pretext. Those who have such love should have stayed back in India instead of going for greener pastures in a foreign country and then start doing this kind of propaganda ad nauseum. What are they gaining? Members are having lot of fun from such postings. This trend has increased recently. I urge upon such members to see reason and and exercise some restraint in their postings. The limit was saying that one particular book must be sold cheaply in India because it made a guess that the Mohanjodaro lg could be an early form of Dravidian. It was nothing more than a guess. Scholars have speculated, writing volumes without proving anything. How this appeal improves the cause or status of Tamil or Dravidian, God alone knows. Isn't this too childish? My friends and compatriots, please stop sending such postings which betray our ignorance. As an elderly person, I think I have the right to correct my younger compatriots.“ (பொங்கல் நாள், 1999). நான் பார்ப்போலா புத்தகம் இந்திய பதிப்பாக குறைந்த விலையில் வரவேண்டும் என்பதை எதிர்த்தும், ’தமிழ் செம்மொழி அன்று’ என்று பேரா. பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி எனக்குச் சொல்லும் கடிதம் பார்த்தீர்களா?. அதுசமயம் பேரா. ஹார்ட் அவர்களிடம் சிலமுறை போனில் பேசினேன். ஓராண்டு தொடர்ந்து உன்னிப்பாய்க் கவனித்துவந்தார் பேரா. ஹார்ட். செந்தமிழின் சாராம்சத்தை வருகைப் பேராசியர் சி. இ. மறைமலை அவர்களுக்கு எழுதிய கடிதம் தமிழ் செம்மொழி என்று தில்லி அரசாங்கத்தில் நிறுவ உறுதுணையானது வரலாறு. வா. செ. கு. (அ) Tamil among the Classical Languages of the World, Chennai, 2005 (ஆ) உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் (2005) நூல்களில் விரிவான காரணங்களைக் காணலாம்.

தமிழ் செம்மொழி (Classical Language of India on par with Sanskrit) என்று எழுதியதைக் கேள்விக்குள்ளாக்கித் திராவிடவியல் பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப⁴. கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார். உ-ம்: ப்⁴(Bh). கிருஷ்ணமூர்த்தி என்னை இந்தாலஜி சபையில் கேட்ட மடல்: “Some members make it their mission to sing the glory of one language and one culture (?), i.e. Tamil. The pathetic appeal of one list member to place Tamil on the same footing as the Classical languages-- Sanskrit, Persian and Arabic in India--sounds ridiculous. Tamil is a modern language and not a classical language. Classical lgs are not the mother tongues of any segment of natives in India.” (ஜனவரி 13, 1999). திராவிடவியலாளர் ப⁴த்ரி. கிருஷ்ணமூர்த்தி முழுமடலையும் பார்க்க:
http://nganesan.blogspot.com/2010/01/hart.html

உலக அரங்கில் தமிழைச் செம்மொழி என்று நிலைநிறுத்த பேரா. ஹார்ட், சுவெலபில், ஏ. கே. இராமானுஜன், ... போன்றோரின் உழைப்புக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிரேக்கமும், இலத்தீனமும் செம்மொழிகளாய்ப் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதேபோல, இந்தியாவின் எல்லாப்பல்கலைகளிலும் Classics Department என்னும் செம்மொழித் துறை ஏற்படுத்தி ஸம்ஸ்கிருதம், தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் ஹார்ட் ஆலோசனை வழங்கிவருகிறார். தெலுங்கு, கன்னடம் போன்றவை தமிழ், ஸம்ஸ்கிருதம் இவைக்கு இணையான செம்மொழிகள் அல்ல என்று அம்மொழிகள் அரசியல் அழுத்தம் காரணமாய் அத் தகுதி தில்லி தர்பாரில் வாங்கியபோது இந்திய நாளிதழ்களுக்கு பேரா. ஹார்ட் அவர்கள் அனுப்ப இருந்தார். அம் மடல்களை பொது அரங்கில் வெளிவருதல் இதுவே முதன்முறையாகும். அவற்றைத் தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம். https://nganesan.blogspot.com/2010/09/bhk.html  This is a note written in 2010, the year in which Classical Tamil conference tookplace in Coimbatore). Hart and Parpola came. I attended also presenting the theory of Indus-Tamil (Makara) connections.

ஸ்ரீ நிரஞ்சன் பாரதி ஒருமுறை கேட்டிருந்தார்:
“முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ? முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?”
https://groups.google.com/g/santhavasantham/c/6zub-vdsMRs/m/ONbySZW1BQAJ
மலைகள் சூழ்ந்த கொங்குநாட்டிலே திருப்புகழ் தலங்கள் மிகுதி. கொங்கு ஆதீனங்கள், சிரவை, பேரூர், பழனி முயற்சியால், தைப்பூச்சம் தமிழ்நாட்டு அரசாங்க விடுமுறை நாள் ஆகிவிட்டது. இது இந்தியாவிலே முதன்முறை. இந்திய மாநிலங்களிலே தொன்றுதொட்டு கார்த்திகேயஸ்வாமி வழிபாடு இருந்தாலும், தமிழர்கள் தவிர, ஏனையோரிடம் கந்தவேள் வழிபாடு மங்கிவிட்டது. ஸ்கந்தகுப்தன், குமாரகுப்தன் எல்லாம் இந்தியா முழுமையும் ஆண்ட குப்த வம்ச ராஜாக்கள்.

Companion Studies to the History of Tamil Literature  By Kamil Zvelebil
நூலின் தொடக்கத்தில் தமிழ்த்தாத்தா உவேசாவின் மகாவாக்கியம் இருக்கிறது:
https://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PR6&lpg=PR6&dq=zvelebil+murukan+teyvam&source=bl&ots=ixxGsuR_4a&sig=g8xPWExBovplpN2-LHQfU49H_lw&hl=en&sa=X&ved=0ahUKEwi0-ob617DJAhVS4mMKHdvaB44Q6AEINDAE#v=onepage&q&f=false

முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
murukak kaṭavuḷ tamiḻukkut teyvam eṉṟu periyōrkaḷ colvārkaḷ.
The ancients say, God Murugan is the deity of Tamil.
(Dr. U. V. Swaminatha Iyer, Autobiography, p. 280).

https://groups.google.com/g/santhavasantham/c/6zub-vdsMRs/m/lAI7PpLrBgAJ
சாலமன் பாப்பையா ஒரு முறை என் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவ்வளவாகப்
பலருக்கும் அவரைத் தெரியாத காலம். என் வீட்டில் பல புஸ்தகங்கள் உண்டு.
சில கலைவரலாற்றுப் புத்தகங்களை எடுத்து வடக்கே பல ஊர்களிலும்
உள்ள முருகன் சிலைகளைக் காட்டினேன். முக்கியமாக வங்காளத்தில்,
பாலர்கள் ஆட்சிக்கால மயில் மேல் இவரும் முருகன் சிற்பம் அவரைக் கவர்ந்தது.
அப்போது சொன்னார்: முருகன் தமிழுக்கு மட்டுமா கடவுள்? - என்றார்.
ஆந்திராவின் 6-7 நூற்றாண்டு சிற்பங்களும் காட்டினேன்.

முருகனின் வரலாறு இந்தியாவின் தொன்மையான வரலாறு.
‘இழை அணி சிறப்பின் பழையோள் குழவி’ - திருமுருகு
ஸ்ரீஸுப்ரமண்யாய நமஸ்தே - விளக்குகிறார் காஞ்சிப் பெரியவர்:
http://amrithavarshini.proboards.com/thread/890/

1940-களில் எளிமையாகச் சொல்லி விளக்கிய கட்டுரைகள் 1952-ல்
புத்தகம் ஆனது. அதனைப் படிக்கவும். வாகீச கலாநிதி கிவாஜ, பெரும்பெயர் முருகன்:
http://tamilvu.org/library/nationalized/pdf/92-ki.va.ja/perumpayarmurugan(107).pdf
காட்டாக, தலைமைப் புலவன் கட்டுரை:
https://archive.org/stream/orr-8769_Perum-Peyar-Murugan#page/n13/mode/2up

குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமர!
                       முத்தம் தருகவே! (பிள்ளைத்தமிழ்)

 சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு
           செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே!  (திருப்புகழ்)

நூலறி புலவ!

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! (திருமுருகு)

சங்கத் தமிழின் தலைமைப் புலவா!
  தாலோ தாலேலோ!   - குமரகுருபர சாமிகள்.

சங்கத் தமிழ்களில் மற்றவை மறைந்திருந்தாலும்,
 திருமுருகாற்றுப்படை மட்டும் தப்பித்து அச்சுக்கு வந்திருக்கும்.
ஏனைய சங்கநூல்கள் மறக்கப்பட்டபோழ்தும், நக்கீரர் தந்த
ஆற்றுப்படை தோத்திரநூலாக 2000 ஆண்டுகளாய் இடையறாது
வாழ்ந்து வருகிறது.

முருகரும் தமிழும், தணிகைமணி எழுதிய நூல் அருமையானது. செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். https://www.hindutamil.in/news/opinion/columns/7758-6-2004.html
https://selliyal.com/archives/211977
https://www.puthiyathalaimurai.com/newsview/105403/Classical-tamil--Today-is-the-day-the-classical-language-is-recognized-by-the-Government-of-India----
https://twitter.com/vikatan/status/474741998323109888

இந்திய மக்களுக்கும், உலகம் முழுதும் தமிழைப் பற்றி அறிய, நூல்களை வாசிக்கத் தூண்டும் திருநாளாக அமைந்துள்ள செம்மொழிநாள் (6-6) கொண்ட்டடுவோம். அன்றுதான், இந்திய ஜனாதிபதி, மேதகு அப்துல் கலாம் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தார். பேரா. ஹார்ட் கட்டுரையை, பத்மஸ்ரீ சிற்பி மொழிபெயர்த்து, அதனையும் டெல்லி தமிழ்ச் சங்க விழாவில் கலந்துகொண்டு தமிழில் அந்த முக்கியக் கட்டுரையை வாசித்தார். திருப்புகழ் அமுதன் 6-6 தேதி எப்படி செம்மொழிநாள் என வினவியிருந்தார். அந்த நாள், தமிழோடும், தமிழ்க்கடவுள் முருகனொடும் தொடர்புடைய நாளாக விளங்குவது சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் 6-6 என்னும் திருநாள் ஆறுமுகத்தின் ஆறெழுத்து மந்திரம் போல, இந்தியச் செம்மொழி தமிழினையும், இரு செம்மொழிகளின் உறவுகளையும், இந்திய தொன்மை வரலாற்றையும் அறிய, ஆராயத் துணைசெய்யும்.

நா. கணேசன்
ஹூஸ்டன், அமெரிக்கா
https://nganesan.blogspot.com

16328418752484.jpg
DfAfSpPUEAEqtf7.jpg
D8XrpbhUIAEiraY.jpg
40.jpg

the-reason-behind-why-tamil-is-classical-language-1528265489.jpg


Reply all
Reply to author
Forward
0 new messages