முருகன் ஏன் தமிழ்க் கடவுள் ?

565 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Nov 24, 2015, 9:56:03 AM11/24/15
to santhav...@googlegroups.com

வணக்கம் ,

முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?

முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?

நன்றி ,
நிரஞ்சன்

Ramamoorthy Ramachandran

unread,
Nov 27, 2015, 5:26:47 AM11/27/15
to santhav...@googlegroups.com
முருகக் கடவுளைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வது,
ஆர்வத்தால் வருவதே!மூத்த  தமிழ் நூல் திருமுருகாற்றுப்படையே, 

''நெடும் பெருஞ் சிமையத்து  நீலப் பைஞ்சுனை 
 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 
 அறுவர்ப் பயந்த ஆரமர் செல்வ''
என்கிறார்! இது நடந்தது கைலையில் ! 
அந்தப் பிள்ளை தமிழ்ப் பிள்ளை என்று 
கருதுவது அவரது பரத்துவத்திற்கு எவ்வாறு துணை செய்யும்?
 அவர் பன்னிரு கண்களும்உயிரெழுத்துக்கள் என்றும்  
 பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் மெய்யெழுத்துக்கள் 
என்றும் தமிழோடு சார்த்திக் கூறி மகிழும் ஆர்வத்தையே குறிக்கும்! 
அதனாலென்ன? ''ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் ''என்றும் 
''சொற்றமிழ் பாடுக என்றார், தூமறை பாடும் வாயார் '' என்றும் 
சைவ இலக்கியங்கள் கூறி மகிழ்கின்றன ! எல்லாரும் இறைவனை 
எம்மவன் என்று கருதிப் போற்றும் பழக்கம் உள்ளதால் முருகன் 
தமிழரும் ஆவார்! இதில் மொழிச்சார்பு காட்டுவதோ. கருதுவதோ
 வீண் கேள்விக்கு இடம் அளிக்கும்! வடமொழி என்று சம்ஸ்கிருதத்தை
எண்ணுவதும், தென்மொழி என்று தமிழைக் கருதுவதும்புதுப் பழக்கம்!  
அதன்படி, கந்தனும், கண்ணனும், முக்கண்ணனும் தமிழ்க் கடவுளராகவே
போற்றப்படுவதில் சிறிதும் தவறில்லை! போற்றுக! (தூற்றலைத தவிர்த்து! )
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.   
   
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Nov 27, 2015, 7:09:40 AM11/27/15
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கம்!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

ramaNi

unread,
Nov 27, 2015, 7:15:02 AM11/27/15
to சந்தவசந்தம்
புலவரின் அருமையான விளக்கத்தால் வரும் உய்வினைத் தமிழர்கள் உளம்கொண்டு உய்வதற்கு வழி தேடவேண்டும்.

ரமணி

Pas Pasupathy

unread,
Nov 27, 2015, 8:10:28 AM11/27/15
to Santhavasantham
:- )  ஸ்கந்தகுப்தனும், குமாரகுப்தனும் ‘தமிழ்க்கடவுளை’ப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 27, 2015, 8:13:20 AM11/27/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 5:10:28 AM UTC-8, பசுபதி wrote:
:- )  ஸ்கந்தகுப்தனும், குமாரகுப்தனும் ‘தமிழ்க்கடவுளை’ப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்! 

தமிழ்/த்ராவிட மொழிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தன. காலப்போக்கில் ஆர்ய மொழிகளின்
வருகையால் வட இந்தியாவில் அழிந்தன என்பது இந்திய வரலாறு.

அன்புடன்,
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 27, 2015, 8:27:17 AM11/27/15
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai
முருகனின் வரலாற்றில் இந்தியாவின் வரலாறே இருப்பதால் இவ்வாறு சொல்கிறோம். நிறையப் படிக்கவும்.
சில நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லலாம். உ-ம்: இந்த நூல் சென்னையின் பெரிய
நூலகங்களில் கிட்டும். படித்தருளுக.

Companion Studies to the History of Tamil Literature  By Kamil Zvelebil 

நூலின் தொடக்கத்தில் தமிழ்த்தாத்தா உவேசாவின் மகாவாக்கியம் இருக்கிறது:

முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
murukak kaṭavuḷ tamiḻukkut teyvam eṉṟu periyōrkaḷ colvārkaḷ.
The ancients say, God Murugan is the deity of Tamil.
Dr. U. V. Swaminatha Iyer, Autobiography, p. 280).

அன்புடன்
நா. கணேசன்

Kaviyogi Vedham

unread,
Nov 27, 2015, 8:30:58 AM11/27/15
to santhavasantham
அப்பட்டமான பொய். கணேசன் அவர்களே..புலவர் சொன்னபின்னும்தூற்றுதல் கிளப்புகிறீர்களே..
 உங்களை என்ன சொல்ல?முருகனைப் பற்றிய கேள்விக்கு  தமிழ், ஆரியம் என்னல் உமக்கு அழகாமோ?
 புலவரே.. இவருக்குப் பதில் சொல்வீர்..
 யோகியார்

வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி(ஜனவரி 11 வரை), pl. write in English.
( My present Address Till 11th jany 2016)-
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017
.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/

N. Ganesan

unread,
Nov 27, 2015, 8:33:32 AM11/27/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 5:30:58 AM UTC-8, yogiyaar wrote:
அப்பட்டமான பொய். கணேசன் அவர்களே..புலவர் சொன்னபின்னும்தூற்றுதல் கிளப்புகிறீர்களே..
 உங்களை என்ன சொல்ல?முருகனைப் பற்றிய கேள்விக்கு  தமிழ், ஆரியம் என்னல் உமக்கு அழகாமோ?
 புலவரே.. இவருக்குப் பதில் சொல்வீர்..
 யோகியார்

என்ன அப்பட்டமான பொய், யோகியார் அவர்களே.  தமிழ், ஆரியம் என்பது இல்லையா?
வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவதை நீங்கள் படிக்க வேண்டுகிறேன்.

GMAIL

unread,
Nov 27, 2015, 8:43:43 AM11/27/15
to santhav...@googlegroups.com
தேவையில்லாத இந்தச் சர்ச்சை தேவைதானா ?

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய கருத்துகளுக்குச் சுதந்திரம் உண்டு. 

மற்றவரின் கருத்து ஏற்புடையதாக இருந்தால் ஆதரியுங்கள்.

மாற்றுக்கருத்து இருந்தால் அதை முன்வையுங்கள். எது சரி எது சரியல்ல என்று அவரவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

"லோகோ பின்ன ருசி"

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

N. Ganesan

unread,
Nov 27, 2015, 8:49:06 AM11/27/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 5:43:43 AM UTC-8, குமார்(சிங்கை) wrote:
தேவையில்லாத இந்தச் சர்ச்சை தேவைதானா ?

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய கருத்துகளுக்குச் சுதந்திரம் உண்டு. 

எல்லோருக்கும் கருத்துகளுக்குச் சுதந்திரம் உண்டு,
உலகத்திலே ஆராய்ச்சிகளுக்கு என்று பல்கலைக்கழகங்களில்
பல நூறு ஆண்டுகளாக வரலாறு, தொல்லியல், மொழியியல், இலக்கிய,
இலக்கண கல்வெட்டியல் என ஆராய்ந்து முடிபு எடுத்து
பல்கலைக்கழக வெளியீடுகளாக தருகின்றனர். 
அவற்றின் செய்திகளை அவ்வப்போது அறிஞர்கள், கவிஞர்கள்
தரலாம். நானும் தருகிறேன்.

கவியோகியார் மற்ற குழுக்களிலும் அவரது கவிதைகள்,
ஆய்வு முடிபுகள், ... எல்லாம் எழுதினால் பலரும் படித்து
அறிந்துகொள்வார்கள்.

நா. கணேசன்

Swaminathan Sankaran

unread,
Nov 27, 2015, 9:38:19 AM11/27/15
to santhav...@googlegroups.com
பக்தர்களுக்குள் இப்படிப்பட்ட வீண் சர்ச்சையும், 'அடிதடியும்' தேவையில்லை என்று தான் நானும் நினைக்கிறேன். கடவுள் என்று ஒருவனோ அல்லது ஒருவளோ இருந்தால் அவன்/ள் எல்லோர்க்கும் பொதுவாக இருக்க வேண்டும். வடநாட்டுக் கடவுள், தென்னாட்டுக் கடவுள், இஸ்ரேலிக் கடவுள், அராபியக் கடவுள், மருத / முல்லை / நெய்தல் / பாலை நிலக்  கடவுள் என்று இருக்க முடியாது. அப்படியானால் அது கடுவுள் இல்லை. கற்பனையில், கட்டுக்கதையில் மட்டும் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். god, IF ANY, can only be one omnipresent, omnipotent and omniscient one, not many, not differentiated, and not restricted to any one small land or sea area.

சங்கரன் 

இந்த சாத்தானும் வேதம் ஓதுகிறது :-)

Siva Siva

unread,
Nov 27, 2015, 9:42:50 AM11/27/15
to santhavasantham
/போற்றுக! (தூற்றலைத தவிர்த்து! )/

சென்னையில் தூற்றல் நின்றபாடில்லையாம்! :)

Pas Pasupathy

unread,
Nov 27, 2015, 11:42:30 AM11/27/15
to Santhavasantham
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல
          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.  ---- திருப்புகழ் 

Siva Siva

unread,
Nov 27, 2015, 12:23:02 PM11/27/15
to santhavasantham
தென்னா டுடைய முருகா போற்றி
எந்நாட்ட வர்க்கும் குமாரா போற்றி.

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

N. Ganesan

unread,
Nov 27, 2015, 5:01:35 PM11/27/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 9:23:02 AM UTC-8, siva siva wrote:
தென்னா டுடைய முருகா போற்றி
எந்நாட்ட வர்க்கும் குமாரா போற்றி.

2015-11-27 11:42 GMT-05:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல
          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.  ---- திருப்புகழ் 

உலகெங்கும் (அதாவது, இந்தியாவில்) முருகன் இருந்தாலும் பெரும்பான்மையும் மறந்துவிட்டனர் எனலாம்.
தமிழர்கள் தாம் முருகை இடைவெளியின்றிக் கொண்டாடுகின்றனர். அதனாற்றான், உவேசா சொல்கிறார்:
             முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
            murukak kaṭavuḷ tamiḻukkut teyvam eṉṟu periyōrkaḷ colvārkaḷ.
The ancients say, God Murugan is the deity of Tamil.
Dr. U. V. Swaminatha Iyer, Autobiography, p. 280).

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
  கந்தனே உனை மறவேன்

நா. கணேசன்

Kaviyogi Vedham

unread,
Nov 28, 2015, 1:02:34 AM11/28/15
to santhavasantham
இல்லை இல்லை. நீங்கள் சொன்னதே சரி. அதையே வேதமும் குறிக்கிறது.
 எங்கள் கழகத்தலைவர் சுராஜ் அவர்களே யான் ஒருதடவை முருகனை தமிழ்க்கடவுள் என்று ஓர் எதுகைக்காகச் சொன்னபோது,
 வேதம்! அதென்ன ஆங்கிலமுருகன், தமிழ்முருகன்?? என்று கிண்டல் செய்தார். சபையிலேயே..
 ஆகவே நீங்கள் யோகத்தில்  முதிர்ச்சி பெற்றால்,த்யானத்தில் மேன்மேல் வந்தால் சங்கரன் சொல்வதே முடிபு...உண்மை.
 யோகியார்.

வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி(ஜனவரி 11 வரை), pl. write in English.
( My present Address Till 11th jany 2016)-
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017
.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/

Ramamoorthy Ramachandran

unread,
Nov 28, 2015, 4:04:45 AM11/28/15
to santhav...@googlegroups.com
''முருகன் தமிழுக்கு தெய்வம்  என்று  பெரியோர் கூறுவர்''   என்றே டாக்டர் உ,வே,சா, எழுதினார்.
அவர் ''முருகன் தமிழ்க் கடவுள்'' என்று எழுதவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
 
Vis Gop

unread,
Nov 28, 2015, 7:16:22 AM11/28/15
to santhav...@googlegroups.com
தமிழ் மக்கள் அனைவரும் முருகனையே வழிபடுவர் ஆயினும் புலவர் ராமமூர்த்தியின் முதல் விளக்கம் பொருத்தமே!
தமிழ் மக்களுக்கு முருகனே தெய்வம் என்ற நிலை இருக்கவும் கூடும்.
முருகன் தமிழ் மக்களுக்கே தெய்வம் என்ற நிலை பொருள் அற்றது.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

N. Ganesan

unread,
Nov 28, 2015, 8:21:37 AM11/28/15
to சந்தவசந்தம்

On Saturday, November 28, 2015 at 4:16:22 AM UTC-8, visgop wrote:
தமிழ் மக்கள் அனைவரும் முருகனையே வழிபடுவர் ஆயினும் புலவர் ராமமூர்த்தியின் முதல் விளக்கம் பொருத்தமே!
தமிழ் மக்களுக்கு முருகனே தெய்வம் என்ற நிலை இருக்கவும் கூடும்.
முருகன் தமிழ் மக்களுக்கே தெய்வம் என்ற நிலை பொருள் அற்றது.

தமிழ் மக்களுக்கே தெய்வம் முருகன் என யாரும் கூறுவதில்லை.
இந்தியா முழுதும் இருந்த முருகன் வழிபாடு சுருங்கி தமிழரிடையே இருக்கிறது.
இந்தியா முழுதும் இருந்த தமிழ்/த்ராவிட பாஷைகள் சுருங்கி தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பது போல.
இதனை அறிய தொல்லியல், வரலாறு, மொழியியல், மரபணுவியல் துணைசெய்கின்றன.

அன்புடன்
நா. கணேசன்
 
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

N. Ganesan

unread,
Nov 28, 2015, 8:36:39 AM11/28/15
to சந்தவசந்தம்

On Saturday, November 28, 2015 at 1:04:45 AM UTC-8, Trichy Pulavar Ramamoorthy wrote:
''முருகன் தமிழுக்கு தெய்வம்  என்று  பெரியோர் கூறுவர்''   என்றே டாக்டர் உ,வே,சா, எழுதினார்.
அவர் ''முருகன் தமிழ்க் கடவுள்'' என்று எழுதவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

சாலமன் பாப்பையா ஒரு முறை என் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவ்வளவாகப்
பலருக்கும் அவரைத் தெரியாத காலம். என் வீட்டில் பல புஸ்தகங்கள் உண்டு.
சில கலைவரலாற்றுப் புத்தகங்களை எடுத்து வடக்கே பல ஊர்களிலும்
உள்ள முருகன் சிலைகளைக் காட்டினேன். முக்கியமாக வங்காளத்தில்,
பாலர்கள் ஆட்சிக்கால மயில் மேல் இவரும் முருகன் சிற்பம் அவரைக் கவர்ந்தது.
அப்போது சொன்னார்: முருகன் தமிழுக்கு மட்டுமா கடவுள்? - என்றார்.
ஆந்திராவின் 6-7 நூற்றாண்டு சிற்பங்களும் காட்டினேன்.

முருகனின் வரலாறு இந்தியாவின் தொன்மையான வரலாறு.
’இழை அணி சிறப்பின் பழையோள் குழவி’ - திருமுருகு
நிரஞ்சன் போன்ற இளைய தலைமுறை படித்து, சிந்தித்து
 கவிதைகளாய், ஆய்வேடுகளாய் தரவேண்டும்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Nov 28, 2015, 8:52:47 AM11/28/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 2:26:47 AM UTC-8, Trichy Pulavar Ramamoorthy wrote:
முருகக் கடவுளைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வது,
ஆர்வத்தால் வருவதே!மூத்த  தமிழ் நூல் திருமுருகாற்றுப்படையே, 

''நெடும் பெருஞ் சிமையத்து  நீலப் பைஞ்சுனை 
 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 
 அறுவர்ப் பயந்த ஆரமர் செல்வ''
என்கிறார்! இது நடந்தது கைலையில் ! 
அந்தப் பிள்ளை தமிழ்ப் பிள்ளை என்று 
கருதுவது அவரது பரத்துவத்திற்கு எவ்வாறு துணை செய்யும்?
 அவர் பன்னிரு கண்களும்உயிரெழுத்துக்கள் என்றும்  
 பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் மெய்யெழுத்துக்கள் 
என்றும் தமிழோடு சார்த்திக் கூறி மகிழும் ஆர்வத்தையே குறிக்கும்! 

நக்கீரராக சீர்காழி:

N. Ganesan

unread,
Nov 28, 2015, 9:41:06 AM11/28/15
to சந்தவசந்தம்

On Tuesday, November 24, 2015 at 6:56:03 AM UTC-8, Niranjan Bharathi wrote:

வணக்கம் ,

முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?

முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?

சம்சாரம் தமிழ்க் குறத்தி அல்லவோ? அதனால் தான்.

ஸ்ரீஸுப்ரமண்யாய நமஸ்தே - விளக்குகிறார் காஞ்சிப் பெரியவர்:

பாரதத்தின் இரு செம்மொழிகளிலும் பாண்டித்யம் பெறுக.
தமிழ் மரபுச் செய்யுள்கள் எழுத தமிழ் எழுத்து (தொல்காப்பியம், நன்னூல்).
பிற இந்திய மொழிகளை எழுத நம் முன்னோர் கண்ட எழுத்து
கிரந்தம். தென்கிழக்கு ஆசியாவில் எத்தனையோ மொழிகளை
எழுத நம் முன்னோர் கற்பித்த லிபி கிரந்தம் (Grantha is the Laitin script of Asia!).
அதை விட்டுவிட்டதால் தான் பிற இந்திய பாஷைகளின் இலக்கியங்களை
தமிழர் படிப்பது தடையாக உள்ளது. தமிழ் லிபி, கிரந்த லிபி
இரண்டும் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு உதவும். ஆந்திரம், கர்நாடகம்,
கேரளம் எழுத்துக்களை நோக்குங்கள் - ஹிந்தி ஒவ்வொரு எழுத்துக்கும்
நேரான ஒன்று இருக்கிறது. தொன்மையான சங்க, பக்தி இலக்கியம்
போன்ற மரபிலக்கியங்களுக்கு தமிழ் லிபி. ஆனால், மலையாளம், சம்ஸ்கிருதம்,
ஹிந்தி, பிராகிருதம், ... போன்றன படிக்க கிரந்த லிபி உதவும்.
தமிழ்க்கடவுள் ஸுப்ரமண்யர் உதவுவாராக.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 28, 2015, 4:50:37 PM11/28/15
to சந்தவசந்தம்

On Friday, November 27, 2015 at 2:26:47 AM UTC-8, Trichy Pulavar Ramamoorthy wrote:
முருகக் கடவுளைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வது,
ஆர்வத்தால் வருவதே!மூத்த  தமிழ் நூல் திருமுருகாற்றுப்படையே, 

''நெடும் பெருஞ் சிமையத்து  நீலப் பைஞ்சுனை 
 ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 
 அறுவர்ப் பயந்த ஆரமர் செல்வ''
என்கிறார்! இது நடந்தது கைலையில் ! 
அந்தப் பிள்ளை தமிழ்ப் பிள்ளை என்று 
கருதுவது அவரது பரத்துவத்திற்கு எவ்வாறு துணை செய்யும்?

ஆறமர் செல்வ
 
 அவர் பன்னிரு கண்களும்உயிரெழுத்துக்கள் என்றும்  
 பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் மெய்யெழுத்துக்கள் 
என்றும் தமிழோடு சார்த்திக் கூறி மகிழும் ஆர்வத்தையே குறிக்கும்! 
அதனாலென்ன? ''ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் ''என்றும் 
''சொற்றமிழ் பாடுக என்றார், தூமறை பாடும் வாயார் '' என்றும் 
சைவ இலக்கியங்கள் கூறி மகிழ்கின்றன ! எல்லாரும் இறைவனை 
எம்மவன் என்று கருதிப் போற்றும் பழக்கம் உள்ளதால் முருகன் 
தமிழரும் ஆவார்! இதில் மொழிச்சார்பு காட்டுவதோ. கருதுவதோ
 வீண் கேள்விக்கு இடம் அளிக்கும்! வடமொழி என்று சம்ஸ்கிருதத்தை
எண்ணுவதும், தென்மொழி என்று தமிழைக் கருதுவதும்புதுப் பழக்கம்!  

உண்மை. சமஸ்கிருதத்தையும், வேதத்தையும் தமிழர்கள் போற்றி
வளர்த்துள்ளனர் 2500ஆண்டு காலமாக. தமிழ்நாட்டின் பல பிரச்சினைகள்
அம்மரபு துண்டிப்பதாலும், கிரந்த எழுத்து போன்றவை ஆகாது என
சிலர் சொல்வதாலும் ஏற்படுவதாகும். கணினியில் எந்த ஃபாண்ட்டும்
வந்துவிட்டது. எல்லா மாநில எழுத்துக்களும் சமம் என்ற நிலை
தில்லி சர்க்காரில் ஏற்படுத்தினால் பாரதமாதா மகிழ்வாள்.

வடசொல், தமிழ்ச்சொல் என்ற பிரிவு வெகுகாலமாக இலக்கணத்தில்
உண்டே. வடசொல் - வடமொழி, தமிழ்ச்சொல் - தென்மொழி.
இரண்டும் பெருமாளுக்கு உகப்பு என, அப்பரடிகள் போலவே,
ஆழ்வாரும் பாடியுள்ளார். ஹிந்து சமயத்தின் திருக்கோயில்களில்
செம்மொழிகள் இரண்டும், அவற்றின் இலிபிகள் இரண்டும் வளர்ந்தால்
இறைவன் இறைவி மகிழ்வர்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,

செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,

அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த

மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

அன்புடன்
நா. கணேசன்

Niranjan Bharathi

unread,
Nov 29, 2015, 12:04:39 PM11/29/15
to santhav...@googlegroups.com
எம்மைத் தெளிவித்த அறிஞர்களுக்கு நன்றி :) :)

N. Ganesan

unread,
Nov 29, 2015, 12:22:18 PM11/29/15
to சந்தவசந்தம், mintamil, vallamai, மு இளங்கோவன்

On Sunday, November 29, 2015 at 9:04:39 AM UTC-8, Niranjan Bharathi wrote:

தமிழ்க் கடவுள் ஆக முருகன் நிறையப் பாடுபட்டிருக்கிறான்.
சும்மா ஒன்றும் குறவர்கள் தங்கள் வஞ்சிக்கொடியைக் கொடுக்கவில்லை.
வள்ளியின் தகப்பன் கேட்ட கேள்விகளை 
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடுகிறார். பாருங்கள்.
இதே மாதிரி வெளியூர் முருகன் ஒருவனை வாகீச கலாநிதி 
பாடியுள்ளார். பாடலும், அந்நூலும் தருகிறேன். படித்தருளுக.

ராசாமகன் ஒருவன் வந்து வேடுவச்சி ஒருத்தியைப் பெண்கேட்க
அவர்கள் ராசா அரண்மனைக்குப் பெண்கொடுத்து பலர் பட்டபாடு
போதாதா? எங்களிடம் வந்து எச்சில்சோறு உண்டார் சிவபிரான்,
அதற்கப்புறம் அவர் பெற்ற பிள்ளை முருகன். அவன் எங்கள்
பெண் வள்ளியிடம் பல ஜாலமும், வேடமும் காட்டினான்.
போனால் போகுதென்று பெண் கொடுத்தோம் என்கிறான்
வேடர்குலத் தலைவன். வெங்கைக்கோவைச் சுவடிகளில்
கடைசியாக இருக்கும் தனிப்பாடல் இது. கற்பனைக்களஞ்சியம்
என்று புகழப்பெற்ற துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் பாடல்:

   பெற்ற பிள்ளை கொடுப்பரோ!

விற்றதார்? கலை பாதியோடு 
          வனத்திலே அழவிட்டதார்?
    வெஞ்சிறை புக விட்டதார்? 
           துகில் உரியவிட்டு விழித்ததார்?
உற்றதாரமும் வேண்டும் என்றினி 
            மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
    உமியடா! மணமென்ற வாய்கிழித்து
           ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
           வெங்கை மாநகர் வேடர்யாம்!
    விமலரானவர் எமையடுத்து இனிது
            எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
           பெண் வளர்ப்பினில் ஈந்தனம் -
    பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
           பேய் பிடித்திடு தூதரே!! 
                                                    - துறைமங்கலம் சிவப்பிரகாசர்
பிள்ளை - பெண்பிள்ளை - கொங்குநாட்டுவழக்கு.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Dec 10, 2015, 10:30:03 AM12/10/15
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Tuesday, November 24, 2015 at 6:56:03 AM UTC-8, Niranjan Bharathi wrote:

வணக்கம் ,

முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?

முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?

நன்றி ,
நிரஞ்சன்

1940-களில் எளிமையாகச் சொல்லி விளக்கிய கட்டுரைகள் 1952-ல்
புத்தகம் ஆனது. அதனைப் படிக்கவும். வாகீச கலாநிதி கிவாஜ, பெரும்பெயர் முருகன்:

காட்டாக, தலைமைப் புலவன் கட்டுரை:

குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமர!
                       முத்தம் தருகவே! (பிள்ளைத்தமிழ்)

 சிவனைநிகர் பொதியவரை முனிவன்அக மகிழஇரு
           செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே!  (திருப்புகழ்)

நூலறி புலவ!

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! (திருமுருகு)

சங்கத் தமிழின் தலைமைப் புலவா!
  தாலோ தாலேலோ!   - குமரகுருபர சாமிகள்.

சங்கத் தமிழ்களில் மற்றவை மறைந்திருந்தாலும்,
 திருமுருகாற்றுப்படை மட்டும் தப்பித்து அச்சுக்கு வந்திருக்கும்.
ஏனைய சங்கநூல்கள் மறக்கப்பட்டபோழ்தும், நக்கீரர் தந்த
ஆற்றுப்படை தோத்திரநூலாக 2000 ஆண்டுகளாய் இடையறாது
வாழ்ந்து வருகிறது.

முருகரும் தமிழும் தொடர்பு - இன்னொரு 
முக்கியமான புத்தகமும் உண்டு. அதனைப் பார்ப்போம்.

நா. கணேசன்
  
Reply all
Reply to author
Forward
0 new messages