இந்திர விழா
பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் (ஒரு திங்கள் = Lunar month) நடைபெற்றதாகத் தெரிகிறது. 'நாளேழ் நாளினும் நன்கு இனிது உறைகென' (மணிமேகலை). இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது (ஐங்குறுநூறு 62).
https://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1041-html-p1041333-26426https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=7இந்திர விழாவின் உச்சம் சித்திரை நக்ஷத்திரம் ஆன சித்ரா பௌர்ணமி. இந்திரவிழாக் காலத்தில் தேவரும் வான் உலகை விட்டுக் கீழிறங்கிப் புகார் நகருக்கு வந்து தங்குவர். “தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும் நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்” (மணி. விழாவறைகாதை). எனவே, தான் வானவர்களும், கோவலனும் வானுலகில் இருந்து விமானத்தில் வந்து வேங்கை மர நிழலில், கொற்றவையாய் நின்ற கண்ணகியை அழைத்துச் சென்ற நாள் சித்ரா பௌர்ணமி எனக் கருதப்படுகிறது. சந்திரா என்றும், ஸ்ரீபூரணி நாச்சியார் என்றும் கண்ணகி தெய்வமான பின் வழிபாட்டுக்கு உரியவர் ஆனார். மேலும், கண்ணகி இலக்குமியின் அவதாரம் என்ற குறிப்புகளை அவர் பெயரிலும், விளக்கியும் இளங்கோ அடிகள் பாடியுள்ளார். பாற்கடலை அமுதம் கடைந்தபோது, சோமன் என்னும் சந்திரனும், இலக்குமியில் கடலில் தோன்றினர். சித்ரா பௌர்ணமியும், மங்கலதேவி கண்ணகியும்:
https://groups.google.com/g/vallamai/c/e3apK26n9NMபொதுவாகப் பல 20-ம் நூற்றாண்டு நூல்களில், இந்திரவிழா சித்ரா பௌர்ணமியில் தொடங்கியது என இருக்கும். ஆனால் ஒரு வலைத்தளத்தில், முழுமதி நாளுக்கு ஒரு வாரம் முன்பு கால்கோள் நடைபெற்றதாகப் படித்தேன்,
https://ta.quora.com/intira-vila-enpatu-enna-atu-pantaik-kalattil-evvaru-kontatappattatu “சித்திரை சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்
(சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை, 64)
பொருள்: சித்திரை மாதத்துச் சித்திரைநாளிலே நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே (இந்திராவிழா எடுக்கப்பட்டது).
சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் கணுவெழுந்த பொன்மூங்கில் தண்டு நட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்பட்ட செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது. ”சிலம்பில் மேற்சொன்னவாறு உள்ளதா? அல்லது, உரைகளிலா?
நா. கணேசன்