வட்டு :: நெல்லிக்காய் கல்லாச் சிறுவர் ஆடுவது என்கிறது சங்க இலக்கியம். அதுவே, முதியவர்கள் அறிவுடன் ஆடுவது வல்லு (PreChess) என்றும் பாடியிருக்கிறது.
உருட்டும் காய்களும், நகர்த்தும் நாய்களும் - (Spheroidal Pawns and Translating Pawns)
https://groups.google.com/g/santhavasantham/c/F7k9uZ50fOE/m/A2eUWwHzBQAJஅரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல் - குறள். “அரங்கு - வகுத்த தானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக.” (பரிமேலழகர்).
நெல்லி, கோலிக்குண்டு, ... போல முள்ளிக்காய் இருக்கும். அதற்கும் வட்டு என்ற பெயர் உண்டு. நாலடி வெண்பாவில் வட்டு (=கறிமுள்ளி).
https://groups.google.com/g/santhavasantham/c/jveSFx6aHDg/m/Xr3Ay7IgFAAJநன்றியில் செல்வம்
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து. (264)
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறிமுள்ளியும் கண்டங்கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)
வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல். நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை. அழகான இச் செய்யுளில், வட்டும், வழுதுணையும் எங்கும் இருப்பதும், அவற்றின் சிறுமையும் (முள்) தோன்ற நின்றன.
வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------
(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி, கறிமுள்ளி - கறி சமைக்கப்படும் முள்ளிக்காய்).
Yellow berried Nightshade:
https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshadeSolanum xanthocarpum
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை =
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpumஇதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)
https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_indicum நாலடி வெண்பாவிலே, வழுதுணை என்பது: (Indian nightshade = Solanum indicum (in Botany) )
https://www.flickr.com/photos/dinesh_valke/4745985224 ----------
சூது
------
த்யூதம் என்ற வடசொல்லின் தற்பவம் ‘சூது’ எனக் கோவைகிழார், ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் விளக்கியுள்ளனர். த்யானம் என்ற சொல் சானித்தல் என்றாவது போல எனலாம். இந்த வடசொல் தெலுங்கு, கன்னடத்தில் த்யூதம் > சூத- > ஜூதம் என்றாகிறது. 'சூதுபொரு கழகத்து அருகலும்' (கொங்குவேளிர், பெருங்கதை, இலாவாண. 8, 62).
ஏன் த்யூதம் தூது என்று ஆகாமல், சூது எனத் தமிழில் ஆனது? சூது > ஜூது (தெலுங்கு, கன்னடத்தில்). ஏற்கெனவே, தூது ' 'messenger' இருப்பதால், சூது < த்யூத. சமணர்கள் சூது ஆட்டங்களை மிகக் கடிந்தனர். உ-ம்: குறள்.
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள் 94:1
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் - குறள் 94:6
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் - குறள் 94:10
http://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/soodhu.htmlதூது என்பது நல்ல வடசொல் தான். தொல்காப்பியத்திலேயே நான்கைந்து இடங்களில் தூது, தூதுவர் என்றுள்ளது. மேலும், தூதுவர் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் “வாயில்” என்று படைத்தும் ஆள்கிறார்:
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1498 யார்யாரைத் தூதனுப்பலாம் என்பதைத் தொல்காப்பியர் சூத்திரித்துள்ளார்:
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் – கற்பியல் – 52)
திருவள்ளுவர் திருக்குறளில் தூது, சூது என்ற தலைப்பில் இரு அதிகாரங்களை அமைத்துள்ளார்.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது
~NG