மதுரையில் திருக்கலியாணம் (Cosmological Duality in India)

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 12, 2025, 9:17:53 AMMay 12
to Santhavasantham
சோனக ஆசிரியர்கள் கூறும் மதுரைத் தெய்வங்கள் திருமணம்
---------------------------------------------

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கிய சித்ரா பௌர்ணமி! மாசி மாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்த சோமசுந்தரர் - மீனாட்சி திருக்கலியாண விழாவைச் சித்திரைக்கு
மாற்றியவர் திருமலை நாயக்கர் (fl. 1623 - 1659) ஆவார். கிரேக்க
யவனாசிரியர்கள் நூலில், பாண்டிய மன்னனின் திருமகளாக மீனாட்சி
கூறப்பட்டுள்ளாள். ஹெராகில்ஸ் என்னும் கிரேக்கக் கடவுள், அவர் மகள்
பாண்டையா என்பது கிரேக்கர்கள் கூற்று:
https://en.wikipedia.org/wiki/Pandaie கிரேக்கர்கள் பாண்டையே
திருமணத்தைக் கூறுவது முக்கியமானது. மதுரைத் திருக்கலியாண விழா 2300
ஆண்டு முன்பே உலகம் முழுக்க அறிந்துள்ளார்கள் என்பது அதிசயமானது. சோமன்
(சந்திரன்) - ரோஹிணி (மீனாக்ஷி) வானியல் திருமணம் இது. ஆண்டுதோறும்
வேளாண்மை, செல்வம் பெருக நிகழ்த்தப்படும் சாறு/விழா.
https://youtu.be/TWTRu4e6CdA

சோமசுந்தரர் - மீனாட்சி திருமணத்தை, பிரஜாபதி திருமணம் என்னும் வேத
இலக்கியத் திருமணமாகச் சொல்லியுளர் கிரேக்க சோனகாச்சார்யர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது. சீனாவில் யின் - யாங் என்னும் இருமைக் கோட்பாடு
மிகப் பழமையானது. இருளும் ஒளியும், பகலும் இரவும், ஆணும் பெண்ணும், ...
போல Duality principle இயற்கையில் பல வழிகளாக இயங்குகிறது. ரோகிணி -
ஜேஷ்டை என்பது இந்தியாவின் 4500 ஆண்டுகால இருமைக் கோட்பாட்டு வானியல்.
இதனால், தமிழின் திசைப்பெயர் ஆகிய தெற்கு (தெல்- < தேலு/தேள்), தில
(எள்ளின் பெயர்) வெளிச்சம் அடைகின்றன. மேலும், ஆராய அண்மையில் கிடைத்த
"Scorpion Harpoon" பற்றி விரிவாக எழுதியுள்ளேன்:
https://x.com/naa_ganesan/status/1915722469303857514

https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology பாரதத்தில், இந்த
Duality Principle பற்றி யாரும் எழுதவில்லை. நான் குறிப்பிட்ட போது
குருநாதர், ஆஸ்கோ பார்ப்போலா வாழ்த்தினார்: "Dear Ganesan, Many thanks
for your posts. Jyeṣṭhā/Mukaṭi is very probably an originally Harappan
divinity. I have not yet gone through all the lists of my
publications, but here is the list I have now compiled. I have
uploaded to academia.edu the World Archaeology paper (1986), those of
Sāvitrī and SAA 2001 were already there. Thanks also for the new
datings of the Copper Hoards based on soil samples. I appreciate your
contributions. Best wishes, Asokan" (May 8, 2025)

கேட்டை (< கேடு) என்னும் மோடி (> முகடி) பற்றி வள்ளுவர் மூன்று
திருக்குறளில் பாடினார். இது பாரதத்தின் Cosmological Duality கோட்பாடு
பிரபலமாக இருந்ததைக் காட்டும் சான்று.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:167)

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்
(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:617)

அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியால் மூடப்பட் டார்
(அதிகாரம்:சூது குறள் எண்:936)

மோடி > முகடி என்றாகும். யால்/ஆல் (Cf. யானை) > அகல் என்றாதல் போல. mOTaa
(மோட்டா) பருமை, வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சொல். மோட்டெருமை,
மோட்டிறா. மோடி - பருத்த வயிறுடையாள் என்பது பொருள். காக்கைக் கொடியாள்,
கலதி, கெடல் அணங்கு, தூமவதி, கழுதைவாகினி, ... இதேபோல, மெசப்படாமியாவில்,
எரிஷ்கிகல் - இனன்னா என்னும் ஜோடி சகோதரியர் உண்டு. கி.பி. 5-6
நூற்றாண்டுகளில் முதலில் வரும் கேட்டை சிற்பங்களில், ஒலக்கூர்,
சூணாம்பேடு சேட்டை, மோடி என்னும் சேட்டை அருகில் இந்த வாள் ஏந்தி மகன்
மனித முகத்துடன் இருக்கிறான். அடுத்த நூற்றாண்டில் இருந்து மாந்தன்
மாட்டு முகம் பெறுகிறான். கேட்டை என்பவள் காடுகாள் (அ) காடுகிழாள்
என்னும் வனதேவதை. இன்றும் காடுகளில், நீர்நிலை அருகே தான்
நூற்றுக்கணக்கான சிற்பங்கள் கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படை வடுகன்
கடற்கரையில் காலனைத் தடிந்த கதை வருகிறது. இங்கே, மூதணங்கு = சேட்டை.
மேலும், திருமுருகில் "பழையோள் குழவி" என்ற தொடருக்கு, பழையோள் இந்த
மூதணங்கு என்ற குறிப்பு உண்டு. ஊரார் எல்லை அம்மன், துர்க்கை அம்மன் என
வழிபடுகின்றனர். உண்மையில், துர்க்கை/கொற்றிக்கு மூத்தாள் இவள்.
பரிபாடலில் ஒரு பாடல் காடுகிழாள் என்னும் ஜேஷ்டைக்கு இருந்துள்ளது.
போகூழால் அழிபட்டது. பெரும்பாணாற்றுப்படையில், விளக்கமான ஒருவரி,
வள்ளுவர் கூறும் தவ்வை, அவள் மகன், (கால) வைரவன் வாள் கொண்டு (காலன்)
சூரனைத் தடிந்த கதை சொல்லப்பட்டுளது. தகடூர் யாத்திரையில் ஒரு பாடல்
ஜேஷ்டை மீது பாடப்பட்டுள்ளது. பிற்காலங்களில் வேத கால வருணன் "மழு வாள்
நெடியோன்" என்னும் மகர விடங்கர் (துருவ நட்சத்திரம்) தன் இலிங்கக்
குறியீடு (குடிமல்லம் வருண லிங்கம்) சிவ பிரான் ஆனது பற்றி
விளக்கியுள்ளேன். அதுபோல, சேட்டைத் தேவி, காளியுடன் சேர்ந்துவிட்டாள்.
காலப்போக்கில் மறக்கப்பட்ட பழைய தெய்வம் இவள்!

ஆரியபட்டர் ரோமகர், பாலீசர் என்னும் சோனக ஆச்சாரியர்களை ஜோதிஷ வானியல்
சாஸ்திர முன்னோடிகளாக குறிப்பிடுகிறார். இந்த யவனாசிரியர்கள் செய்த
விஞ்ஞானத்தையும் சேர்த்து வானியல் சாஸ்திரம் வளர்ந்துள்ளது. உவச்சர்கள்
காளி கோயில் பூஜாரிகள். கம்பன் இக் குலத்தில் அவதரித்த இந்தியாவின் இரு
செம்மொழிகளும் கற்றுத் துறை போகிய நிபுணன். ஆங்கிலத்துக்கு சேக்ஸ்பியர்
போன்றவன் தமிழுக்குக் கம்பன். இவர்கள் எல்லோரும் இரு செம்மொழிகளும்
கற்றுயர்ந்தோர். உவச்சர்/வேளார்களை சோதிடம், நாடகம் போன்ற துறைகளில்
வடமொழி வல்லுநர்கள் ஆனதால், சோனக சாஸ்திர வல்லுநர்கள் ஆனதால் சோனகர் என
தமிழின் பழைய நிகண்டுகள் கூறுகின்றன. சோனகன் என்றால் யவனர்கள் செய்த
வானியல், நாடக நூல்களில் நிபுணர்கள் எனப் பொருள். சிரமண சமயங்கள் (ஜைனம்,
பௌத்தம்) வளர்ச்சியைக் குன்றச் செய்ய இந்த சாஸ்திரங்கள் கல்வி உதவின
என்பர் இந்தியவியல் பேராசிர்ய்ன்மார். கம்பனுக்கு ஒரு நூற்றாண்டு முன்பு
இருந்த உவச்ச மரபினன், "சோனகன் சாவூர் பரஞ்சோதி" திருமந்திர ஓலைநாயகமாக,
நாட்டியாச்சாரியனாக, கல்வெட்டுகளைச் சரிபார்த்து வெளியிடும் அரசாங்கத்
தலைவனாக இருந்துள்ளான். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலக்
கல்வெட்டுகள் இவன் மீதுள்ளவை முழுதும் தொகுக்கப்படல் வேண்டும்.
https://groups.google.com/g/vallamai/c/G-F9OT-ZZkg/m/6LJP-Bb_CgAJ

இந்தியாவின் பண்டை இருமைக் கோட்பாடு (ரோஹிணி-சேட்டை= கொற்றவை - முகடி =
வள்ளுவரின் செய்யவள் - மா முகடி)
https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology இந்தப் பட்டியலில்
ஏறவேண்டும் . இது பற்றிய என் ஆய்வுக் கட்டுரை தருகிறேன்.
சிந்து - வானி நாகரீகத் தொடர்ச்சி மிக அதிகமாகக் கிடைப்பது தமிழ்நாட்டிலே
தான் என்பதற்குச் சாட்சியாக, வள்ளுவர் 3 குறளால் சிறப்பிக்கும், வானியல்
இருமைக் கோட்பாடு சாட்சியாகும். My earlier articles:
https://x.com/naa_ganesan/status/1911919827746431161

Please send comments, after reading, to naa.g...@gmail.com. Thanks,
நா. கணேசன்
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Duality_principle
https://en.wikipedia.org/wiki/List_of_dualities

N. Ganesan

unread,
May 12, 2025, 5:54:47 PMMay 12
to Santhavasantham
மீனாட்சி திருக்கலியாண விழாவைச் சித்திரைக்கு மாற்றியவர் திருமலை
நாயக்கர் (fl. 1623 - 1659). திருமலை மன்னர் ஆட்சியில் இருந்து எவ்வாறு
மீனாட்சி திருக்கலியாணம் கணக்கிடப்படுகிறது எனப் பார்ப்போம். முன்பு
மாசித் திங்களில் நடைபெற்றது (மாசி மண்டல உற்சவம்).

வரலாற்றுச் செல்வர், புலவர் மாமணி, ஆராய்ச்சிமணி
திரு. R. பஞ்சநதம் பிள்ளையவர்கள், தமிழாசிரியர். திருச்சிராப்பள்ளி
மதுரை ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு, ஆலய வெளியீடு, ஜனவரி
1959. ரூ. 2-00
பக்கம் 73.
" திருவிழாக்களின் விவரம்

சித்திரை: சித்திரைப் பெருவிழா 12 நாட்கள் நடைபெறும். முதல் நாள்
கொடியேற்றமும், 8-ம் நாள் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 9-ம் நாள்
மீனாட்சி திக்குவிஜயமும், 10-ம் நாள் மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணமும், 11-ம் நாள் தேரோட்டமும், 12-ம் நாள் சித்திரை
நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நாளில் தீர்த்த விழாவும், தேவேந்திரன் உச்சிக்
காலப் பூஜை செய்த ஐதீகமும் நடைபெறும். விழா நாட்களில் நான்கு மாசி
வீதிகளிலும் சுவாமி புறப்பட்டு வலம்வரும். திருக்கல்யாணத்தில்
அர்ச்சகர்கள் மீனாட்சி சுந்தரேசுவராக நடித்துக் காட்டுவார்கள்.
சித்திரைப் பரணி நாளில் பைரவ நாடகம் நிகழும். சித்திரைப் பௌர்ணமி நாளில்
திருமாலிருஞ்சோலை அழகர் வைகையாற்றுக்கு எழுந்தருளும் விழா நிகழும்."

இனி, மாசி மண்டல உற்சவம் பற்றியும், திருமலை நாயக்கருக்கு முன்பு, 2000
வருஷமாக, எந்த நாளில் அங்கயற்கண்ணி - சொக்கநாதர் திருமண விழா என்பது
பற்றியும் பார்ப்போம்.

Cosmological Duality in India:
https://groups.google.com/g/vallamai/c/Oo1X9DxXnUs/m/D46HJYjHEgAJ
https://x.com/naa_ganesan/status/1921915040648647007

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 14, 2025, 10:39:35 PMMay 14
to santhav...@googlegroups.com
நன்றி, இமயவரம்பன். இன்னும் விரிவாகச் சொல்லச் சேதிகள் ஏராளம் உள. சங்க இலக்கியத்தில் இரு இடங்களில் "செம்மீன்" வருகிறது. உரையாளர்கள் பல நூற்றாண்டுகள் கழிந்தபின்னர் பிறந்தவர்கள். ஆகையினாலே, பிரபஞ்ச இருமைக் கோட்பாட்டின் செய்யவள் (தாமரையினாள்) இந்தச் செம்மீன் தமிழர்கள் நினைவுகளில் இருந்து மறைந்துவிட்ட காலம். எனவே, அறியாமல் உரை செய்துள்ளனர்.

செம்மீன் செயல், வானியலில் Lunar occultation with star Aldebaran (Rohini) எனப்படுகிறது. பகவத் கீதையில் கண்ணன், "நான் வானத்தில் சந்திரன்" என்கிறான். அவனை உரோகிணி/செம்மீன் சேரும்போது Lunar occultation. கிருஷ்ணனும் ராதையும் என்பர். இதனைத் தொனிப்பொருளாக வைத்து, மருத்துவன் தாமோதரனார் செய்த புறப்பாட்டைப் படித்துப் பாருங்கள்.புரியும்.

மதறாஸ் லெக்சிகானை வைத்து, 5 ஆண்டு முன் பொருள் உரைத்தேன். அது பொருந்தாது.

பிற பின்!
நா. கணேசன்
Cosmological Duality of the Harappans, as seen arts and letters of Tamils:

On Wed, May 14, 2025 at 6:35 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அருமையான பதிவு, திரு.கணேசன். அண்மையின் நான் படித்த அழகான திருவிளையாடற் புராணப் பாடல் ஒன்றை நினைவுறுத்துகிறது.

மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது, சிவபெருமானுக்குப் பக்கத்தில் தடாதகை வீற்றிருந்த காட்சி பண்ணும் இசையும், நீரும் தண்மையும், பாலும் சுவையும், மலரும் மணமும், மணியும் ஒளியும் வெவ்வேறு வடிவு கொண்டிருந்த தன்மையைப் போன்றிருந்ததாகப் பரஞ்சோதியார் கூறுகிறார்.

பண்ணுமின்‌ னிசையும்‌ நீருந் தண்மையும்‌ பாலும்‌ பாலில்‌ 

நண்ணுமின்‌ சுவையும்‌ பூவும்‌ நாற்றமும்‌ மணியும்‌ அங்கேழ்‌ 

வண்ணமும்‌ வேறு வேறு வடிவுகொண்‌ டிருந்தால்‌ ஒத்த(து) 

அண்ணலும்‌ உலகம்‌ ஈன்ற அம்மையும்‌ இருந்த(து) அம்மா

- பரஞ்சோதியார்

On May 12, 2025, at 9:17 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

சோனக ஆசிரியர்கள் கூறும் மதுரைத் தெய்வங்கள் திருமணம்
---------------------------------------------

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A72C3B5C-B809-4B21-9A54-B75A6E4DE11D%40gmail.com.

N. Ganesan

unread,
May 16, 2025, 4:56:15 PMMay 16
to Santhavasantham, George Hart, Asko Parpola
சங்க நூல்களில் செம்மீன் என்னும் உரோகிணி நட்சத்திரம்
----------------------------

சென்னைப் பல்கலைப் பேரகராதி:
செம்மீன் cem-mīṉ , n. < id. +. 1. The star Arundhati. See அருந்ததி. செம்மீ னனைய ணின் றொன்னகர்ச் செல்வி (பதிற்றுப். 31, 28). 2. Mars; செவ்வாய். செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா. 60, 2). 3. The 6th nakṣatra. See திருவாதிரை. (புறநா. 60, 2, உரை.)

புறநானூறு 60-ம் பாடலில், செம்மீன் செவ்வாய் என்றோ திருவாதிரை என்றோ எடுத்துக்கொள்வது பொருத்தமில்லை. முன்பு, சென்னைப் பல்கலைப் பேரகராதி தருவதால்  எழுதினேன் (உ-ம்:  நவம்பர் 12, 2020-ம் தேதி மடல், வல்லமை, சந்தவசந்தம் குழுக்கள்).  செம்மீன் = திருவாதிரை மீன் என்றுதான் புறப்பாட்டின் பழைய உரைகாரர் கூறுகிறார். (மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், பக். 327). ஆனால், உவேசா அவர்கள், ஆதிரையை விடுத்து, செம்மீன் என்பதைச் செவ்வாய்மீன் என்று உரைசெய்கிறார்.  ஏனெனில், செம்மீன் என்று ஆதிரை அறியப்படவில்லை என உவேசா அறிவார். பச்சை மீன் என்றுதான் ஆதிரைக்குச்  சோதிட சாத்திரங்களில் இருக்கிறது. செம்மீன் வேறு, செவ்வாய் வேறு. உ-ம்: பதிற்றுப்பத்து. புறப்பாட்டில் தலைவியின் கற்பின் பொறுமை, தலைவன் விரைவில் மீண்டு தன்னைப் பார்க்க வருவான் என்ற நோக்குள்ளது. ரோகிணி திங்களைச் சேரும் சில மணித்துளிகளை மிகவிரைந்து (வல் விரைந்து) தலைவி, அவள் தோழி ஆகிய விறலி தொழுவது அதனால். செம்மீன் செவ்வாய் என்றால், செவ்வாய் ஒரு ஆண். அதே போல, சந்திரனும் ஆண் தான். இவ்விரு ஆண்களையும் தலைவி தோழியுடன் "மிக விரைந்து" வணங்கக் காரணம் எதுவும் இல்லை.

திருவாதிரையைச்  செம்மீன் என்பது இந்தியச் செம்மொழிகளின்  இலக்கியங்களில் காண முடியாது. "Ardra is the name of a nakṣatra in Hindu astrology, the sixth depending on numbering scheme used. The Sanskrit name Ārdrā translates to "green" or "the moist one". https://www.quora.com/What-are-some-lesser-known-facts-about-Ardra-Nakshatra
"fresh, wet, tear-drop shaped"  எனவே, பைம்மீன் (அ) பசுமீன் (அ) தண்ணீர் நட்சத்திரம் (watery green star) - திருவாதிரை எனலாம் (பாரத மரபு) . ஆதிரை மீன் தன் வண்ணத்தை 2000 ஆண்டுக்கொரு முறை மாற்றிக்கொண்டே உள்ளது. இந்தியாவில் பஞ்சாங்கக் கணிப்பு, வானியல் 4000+ முன்பு வரையறை செய்ததைக் காலங்காலமாய்க் கடத்தி வந்துள்ளது. 4000 ஆண்டு முன்னே, பைம்மீன் (watery  greencolor), சங்க காலத்தில் வெளிர்-மஞ்சள் (light yellow), இப்பொழுது   சூப்பர்நோவா ஆக வெடிப்பதற்கான முதல்படி (red) எடுத்துப் பரிமாண வளர்ச்சியை ஆதிரை மீனில் காண்கிறோம்.    To understand the color change of Tiruvaadirai star, refer to Fiigure 3 and Figure 5 of the Astronomers' research in https://academic.oup.com/mnras/article/516/1/693/6651563
https://www.juniperpaints.com/products/2060-70-tear-drop
https://www.sci.news/astronomy/betelgeuse-color-11164.html

எனவே,   புறம் 60-ல் செம்மீன் என்பது ரோகிணி நட்சத்திரம் தான். இதனை செம்மீன் என வரும் சங்கச் செய்யுள்களை ஆராய்ந்து விளக்கலாம்.

அருந்ததி சிவந்த நிறத்தால் செம்மீன் எனப் பெயர் என்கிறார் பதிற்றுப்பத்து உரையில் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0473_02.html
ஆனால், Alcor (அருந்ததி) நட்சத்திரத்தின் நிறம் வெண்மை (bluish white). எனவே, பதிற்றுப்பத்தில் சேர மன்னனின் புகழைக் கூறும் வரியில் உள்ள செம்மீன் = உரோகிணி நட்சத்திரம். செய்யவள் என்று வள்ளுவர் குறிப்பிடும் Stars of Duality. தாமரையினாள் (= திருமகள்) என்றும் கூறுகிறார் வள்ளுவர்.
https://x.com/naa_ganesan/status/1921915040648647007
   அவ்வித்து அழுக்காறு உடையானைச் *செய்யவள்*

   தவ்வையைக் காட்டி விடும்
 (செய்யவள் - செம்மீன் - ரோகிணி/கொற்றவை/திரு).


   மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
   தாள்உளாள் தாமரையி னாள்
செய்யவள்/தாமரையினாள் (ரோஹிணி) ஆக, பொ.யு. 1815-ல் எழுதிய சித்திரம்.
https://www.christies.com/lot/lot-the-moon-goddess-chandi-pahari-school-india-5901022/
கொற்றவையின் கருமரை (blackbuck antelope) வாகனமாக உள்ள தேர்/ரதம்.  திங்கள் - உரோகிணி தம்பதி உள்ள தந்தச் சிற்பமும் சந்திரகேதுகார் (வங்காளம்) கி.மு. 2ம் நூற்றாண்டினது கிடைத்துள்ளது. நியூ யார்க் மாநகரின் மெட் ம்யூஸியத்தில் காட்சிக்கு வைத்துளர்.

சந்தி, சந்திநி என ரோகிணி அழைக்கப்படுகிறாள். சந்திரனின் மனையாள் எனப் பொருள். உலகிலேயே திங்களும், ரோகிணியும் கூடும் வானியல் நிகழ்வை முதலில் குறிப்பிடுவது சங்க இலக்கியம் ஆகும். பின்னர் குப்தப் பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த மகாகவி காளிதாசர் அபிஞான சாகுந்தலத்தில் கூறுகிறார். அதன் பின்னரே, ஜப்பானிய இலக்கியம் (இதனைத்தான் முதலில்  "Lunar occultation with Aldebaran" எனக் குறிப்பர்.   அதற்கும் முன்னரே, இந்தியச் செம்மொழிகள் இரண்டிலும் கூறப்படுகிறது.

செம்மீன் என சங்க இலக்கியத்தில் வரும் இடங்கள் ரோஹிணி நக்ஷத்திரத்தைக் குறிப்பனவாகும். அதனை ஈண்டுக் காண்போம். செம்மீன் என வரும் இரு சங்கப் பாடல்களுமே கற்பின் திறத்தைப் போற்றுகிற ரோகிணி நட்சத்திரம் பற்றியனவாக உள்ளன. செவ்வாய் கிரகத்துக்கோ, திருவாதிரை நட்சத்திரத்திற்கோ திருமணம், கற்பு தொடர்பாக எதுவும் இல்லை. அருந்துதி சிவந்த நிறத்திலும் இல்லை. திருவாதிரை சிவத்த செம்மீனாக சங்க காலத்தில் இருந்ததில்லை.

மா - இருள், கருமை. மாக விசும்பு - கரிய வானம். திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் - மலைபடுகடாம், 1. மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி - அகம் 175/13.  "இருள் தூங்கு விசும்பின்" நற்றிணை. மா விசும்பு - கரிய வானம் (சங்க நூல்களில் பன்முறை). இரும்புத் தொழில் நுட்பம் கண்டது தமிழர்கள் எனத் தெளிவாகி வருகிறது. இரும்பை அரத்தால்  அறுக்கும்போது சிந்தும் துகள் "மா". இது மாவு என எல்லா மாவுக்கும் பெயர் ஆயிற்று. பறைக் கருவிகளின் கண்ணில் மா (இரும்புத் தூள்) சோற்றுடன் பிசைந்து தடவுவர். இதனை மாக்கிணை என்று பல முறை சொல்லியுளர். மா முகடி - குறள் - கரிய முகடி (பரிமேலழகர்). பாகல்/பாவக்காய், நாவல்/நாகப்பழம், .. மாவு/மாகு (மாகம்) 'இருள், கருமை'.

’பொண்ணு மா நிறமா இருப்பா’. என்றால் கறுப்பாக இருக்கிறாள் எனப் பொருள். கருமையான பிரபஞ்சவெளிக்கு மாகம் என்று காரணப்பெயர். மா - கருமை.
          மாக யானை மருப்பேர் முலையினர்
         போக யானு மவண்புக்க தேபுகத்
         தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
        ஆக யானு மவர்க்கினி யாளதே.
                 மாக யானை - கன்னங்கரிய யானை.
விசும்பு - வியன், வியாபகம் என்னும் விரிந்த பரப்பைக் காட்டும். விசும்பு, மாகம் இரண்டுமே Space-குப் பொருந்தும். விள்-ளுதல், விள்- > விண்ணு > விஷ்ணு. வானத்து நடுவில் நிலையாக உள்ள துருவ நடசத்திரத்தை, சிசுமார (மகர விடங்கர்) மண்டிலம் என்று முதலை வடிவாக, வேத காலத்தில் இருந்து உருவகப்படுத்தியுள்ளனர்.  சிசுமாரம் முதலையின் இரு புறங்களிலும், வளர்பிறை, தேய்பிறை நட்சத்திரங்கள் இருந்தனவாக பாகவதம் கூறுகிறது. கி.பி. முதலாம் ஆயிரத்தில் தெளிவான ஒரு துருவ நட்சத்திரம் இல்லை.  ஆனால், சிந்துவெளிக் காலத்திலே இருந்ததைச் சொல்லிவந்துள்ளனர். இது முன்னர் 4000 வருடம் முன் இருந்த பச்சை நிறத்தையே ஆதிரைக்கு 2000 வருடம் முன்பும் சொல்லி வந்ததை ஒக்கும். துருவ நட்சத்திரமே இல்லாத கி.பி. முதலாயிரத்தில் ஏன் முதலைவடிவம் என்கிறார்கள் இந்தியர்கள் என அல்-பிருனி குறிப்பிட்டுள்ளார்.

புறம் 60-ம் பாடலில், வானியல் செய்தி பாடப்பட்டுள்ளது. In India, Lunar Occultation of the star Aldebaran (Rohini - a red star, Jeshta being the other red star. Jyeshtaa's lunar occultation occurs in the Southern hemisphere (e.g., Australia).

புறநானூறு 60
  - உறையூர் மருத்துவன் தாமோதரனார்

    முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
    செம்மீன் நிமைக்கும் மாக விசும்பின்
    உச்சி நின்ற உவவு மதி கண்டு,
    கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
    சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, (5)
    தொழுதனெம் அல்லமோ, [...]

கடல் நடுவே தோன்றுகின்ற படகு/கப்பலின்  திமிலின்கண் இடப்பட்ட விளக்குப்போலச் செம்மீன் என்னும் உரோகிணி (சகடு) திங்களை உரசும் கணம் என்பது கண்ணிமைகள்  நிமைக்கின்ற (= இமைக்கின்ற, சூடுகிற. கண்ணிமையைக் கண்சூடு எனல் உண்டு)  தருணம் சில மணித்துளிகளே நிகழ்கிறது. மாகமாகிய விசும்பினது (கரிய பெரிய வானம்/Space)  உச்சிக்கண்ணேநின்ற உவாநாளின் மதியத்தைக் கண்டு காட்டுள் வாழும் மயிலைப்போலச் சுரத்திடைப்பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும் *கடிதின் விரைந்து* தொழுதேமல்லேமோ பலகால்?

               [...]பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்,    (10)
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?   (புறம் 60)

பாடாண் திணைப் பாட்டு. துறை: குடைமங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

சோழர் தலைநகரான உறந்தையில் இருந்த மருத்துவனார் போற்றும் சோழன். அவனது வெண்கொற்றக் குடை பௌர்ணமி நிலவு போலக் குளிர்ச்சி தருகிறது. சாகாடு - வண்டி. இவ்வடிவில் உள்ளது ரோகிணி. திங்களுக்கு ஒருமுறை ரோகிணி நக்ஷத்ரத்தில் திங்கள் புகும். அது போது தான் சங்க காலத் தமிழர்கள் திருமணம் செய்துகொண்டனர். 27  விண்மீன்களிலும், ரோகிணி தான் சந்திரனின் அறக்கற்பு மனைவி. தலைவன் போர் (அல்லது) பொருள் வயின் பிரிந்துள்ளான். அகல் விளக்கில் தொடும் சுடர் போல, ரோகிணி நட்சத்திரம் திங்களைத் தொட்டு விளக்குப் போல அமையும் வானியல் நிகழ்வு. தலைவி, தோழி தொழுகின்றனர். காவலன் சோழன் காப்பான். சோழ நாட்டுக் கடற்கரையில் விளையும் உப்பை ஏற்றிச் செல்லும் உமணர் சாத்தின் வண்டிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏறும்போது சுமையையும் பாராது இழுக்கும் எருது போன்றவன் சோழ ராஜன். சாகாடு என்னும் வண்டில் உவமையாகப் பயன்பட்டுள்ளது அரிதினும் அரியது. அவன் பாதுகாப்பில் உள்ள தலைவன் விரைவில் மீண்டும் வந்துவிடுவான் என்பது இவ் அழகிய பாட்டின்  இறைச்சிப் பொருளாம்.

இப்பாடலின் கருத்தோடு, நெடுநல்வாடையில் பாண்டிய அரசி நினைவுகளை ஒப்பிடலாம்.
   விண் ஊர்பு திரிதரு வீங்கு செலல் மண்டிலத்து
  முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
  உரோகிணி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை)

மேலும், சிந்தாமணிப் பாடல்கள்:
  விண்ணகம் இருள்கொள விளங்கு வெண்மதி
 ஒண்ணிற உரோகிணியோடு ஒளித்தது ஒத்தே (198)
 
 ஒண்ணிற உரோணி ஊர்ந்த; ஒளிமதி ஒண்பெண் ஆட்சி (620)
 
தமிழர் கலியாணங்கள் திங்கள், ரோஹிணீ நக்ஷத்ரத்தில் பொருந்தும் நாளிலே தான் நடந்தன. திருமணம் பற்றி இரண்டே இரு பாடல்கள் தாம் சங்க நூல்களில் உண்டு. அகநானூறு 86, 136 ஊன்றிப் படித்தருளுக. கொங்குநாட்டார் திருமணங்கள் போல இருப்பவை இந்தச் சங்கப் பாடல்கள் எனப் பல புலவோர் எழுதியுள்ளனர்.
https://sangamtranslationsbyvaidehi.com/தமிழ்-உரை-அகநானூறு/

சிந்துவெளி நாகரீகத்தில் இருந்த மகர-விடங்கர் வழிபாட்டை, இரு பெரும் சமயங்களான சைவம், வைணவம் வெவ்வேறு வழிகளில் பிற்கால ஹிந்து சமயத்தில் வளர்த்தெடுத்தன. சைவத்தில் லிங்க வழிபாடு முதலில் குடிமல்லத்தில் இருந்து தொடங்குகிறது. குடிமல்லத்தில் இருப்பது வருண லிங்கம். "மழுவாள் நெடியோன்" என மதுரைக்காஞ்சி குறிப்பிடுவது. மதுரை பழைய சொக்கநாதர் கோயில் வடகிழக்கு (ஈசான திசையில்) துருவ நட்சத்திரத்துக்கு இருந்த கோயில். நடுவே, மீனாட்சியின் பாண்டியர் அரண்மனை. ஆண்டுதோறும் திருக்கலியாண விழா நடந்துள்ளது. கிரேக்கர்கள் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளனர். வைணவத்தில், பிரபஞ்சத்தின் நடுவே, சிசுமார மண்டிலம் என்னும் நட்சத்திர மண்டலம் வளைந்து உள்ளது. சிசுமாரம்/சிஞ்சுமாரம் - மகரம் "Baby killer", முதலை குஞ்சுகளைத்   தின்னும்.   சிசுமாரத்தின்   தலை  கீழாக உள்ளது.    வாலில் உள்ளது   துருவ  நட்சத்திரம்.   இதன் இருபுறங்களிலும் நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நாபியாக மஹாவிஷ்ணு விளங்குகிறார் என தைத்திரீய ஆரண்யகம் (வேதம்), முண்டக உபநிததம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், ... எல்லாம் கூறியுள்ளன.  உரோகிணியை கொற்றவை என சைவத்திலும், அவளது அமிசமான திருமகளாக வைணவத்திலும் கொண்டுள்ளனர். வள்ளுவர் ரோகிணியைத் திருவாகக் கொண்டு குறள் இயற்றியுள்ளார்.  The Sanskrit quote "यथा विष्णु तथा राजा" (Yathā Viṣṇu tathā rāja) translates to "As is Vishnu, so is the king" or "The king is like Vishnu". This phrase highlights the divine authority and responsibility attributed to a king in some traditional Indian contexts, drawing parallels to the role and attributes of Vishnu. "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" - நம்மாழ்வார். இதனால் தான், கோவலன் (கோபாலன்) மனைவி கர்ணகி (=திரு) கண்ணகி என்ற கதாபாத்திரங்களை வைத்து முத்தமிழ்க் காப்பியம் செய்தார் இளங்கோ அடிகள்.

வண்டு - சங்கு, சங்கில் அறுத்துச் செய்யும் கைவளை (பிங்கலந்தை). எனவே, வண்டு = வட்டம் என்ற ஒரு பொருளுண்டு. வண்டன் = சந்திரன். வண்டன் என்ற பெயர் சங்க காலத்தில் இருந்து இன்றும் தமிழர்கள் சூடும் பெயர். சங்க காலத்தில் வண்டன் எனும் செல்வன், https:ta.wikipedia.org/wiki/வண்டன்
இன்று, வண்டன் பெரியசாமி பேட்டி: https://youtu.be/kQWWTyHYFgA   சூரியன்,  சந்திரன், செவ்வாய் (சோமன்) போன்ற கோள்களை மக்களுக்குச் சூட்டி மகிழ்தல் மிகப் பழைய வழக்கம்.

 சந்திரன் - ரோகிணி தம்பதி போல, வஞ்சி மாநகரின் தொன்மையான அரண்மனையில் வாழும் சேரனும், அவன் மனைவியையும் வாழ்த்துகிறது பதிற்றுப்பத்து. செம்மீன் = அருந்ததி எனக் கொள்ளச் சான்றில்லை. அருந்ததியின் நிறம் வெண்மை, எனவே, அதனை வெண்மீன் எனலாம். செம்மீன் அன்று.
 
                                                வண்டுபட
ஒலிந்த கூந்த லறஞ்சால் கற்பிற்
குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின்
இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி (பதிற். 31, 23 - 28)

உரை: வண்டு பட ஒலிந்த கூந்தல்-வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும்; அறம் சால் கற்பின்-அறம் நிறைந்த கற்பையும்; குழைக்கு விளக்காகிய ஒள் நுதல்-காதிலணிந்த குழைகட்கு விளக்கத்தை நல்கும் ஒளி பொருந்திய நெற்றியையும்; பொன்னின் இழைக்கு விளக்காகிய (மேனி)-தானணிந்த பொன்னாற் செய்த இழைகட்கு விளக்கந் தரும் மேனியையும்; அவ் வாங்கு உந்தி-அழகிய வளைந்த உந்தியையு முடைய;தொல் நகர் நின் செல்வி-பழைய பெருமனையிடத்தே யுள்ளவளாகிய நின் பெருந்தேவி; விசும்பு வழங்கு மகளிருள்ளும்- விண்ணுலகத்தே இயங்கும் மகளிருள்ளே; சிறந்த-சிறந்தவளான; செம் மீன் அனையள்-சிவந்த விண் மீனாகிய உரோகிணி போன்றவளாவாள் எ-று

குழலும் கற்பும் நுதலும் மேனியும் உந்தியுமுடைய செல்வி என்க. மனையறத்திற்குரிய அறம் பலவும் கற்றுத் தெளிந்த அறிவும் செயலுமுடைய ளென்பது தோன்ற, "அறஞ்சால் கற்பு" என்றார். நுதல் குழைக்கு விளக்கம் தருமெனவே, இழைக்கு விளக்கம் தருவது மேயாதல் பெற்றாம். நுதல் குழைக்கு விளக்கம் தருதலை, "குழை விளங்காய் நுதல்" (குறுந். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சிவந்த ஒளியுடைத் தாதலின், உரோஹிணி  மீன் செம்மீன் எனப்பட்டது. நீ வண்டன் (திங்கள்)  அனையை; நின் மனைவி ரோஹிணி  யனையள் என்றாராயிற்று.  இவ்வடிகட்கு முன்னர் வண்டனைச் (திங்கள்) செல்வன் என்றது ரோஹிணி என்னும் தாமரையாள் கேள்வன் ஆதலால். திரிபுர சங்காரத்தில் சந்திரன் சிவபெருமான் தேர்ச் சக்கரமாக இயங்கினான். திரிபுரசங்காரத்தைப் பாடியிருப்பது, சேர மன்னனின் போர்த்திறத்தைப் போற்றுவதாகும் (பதிற். 31, 18-23).

நா. கணேசன்
 
Lunar Occultation of Aldebaran (Rohini):
https://youtu.be/rQvmNADgbDA
https://youtu.be/YSVpNlBsSLg
Lunar Occultation of Antares (Jyeshta)
https://youtu.be/3IrLdOqDcK0


N. Ganesan

unread,
May 17, 2025, 8:58:06 PMMay 17
to Santhavasantham
பதிற்றுப்பத்து 31 - வண்டன் (= சந்திரன்) சொல்லாராய்ச்சி
---------------------------------

விண்டு = விட்டு = விஷ்ணு. அதுபோல, வட்டில் வண்டில் என்றும் வருகிறது.  ஆதியில் வண்டில் = சக்கரம் ( solid wheel). இதனை 3500 ஆண்டு முந்தைய சனாலி, தில்வாடா போன்ற தொல்லியல் தடயங்களில் காணலாம். குதிரை பூட்டிய வண்டில் என்பது வடநாட்டார் வாதம். இல்லை, எருது பூட்டிய வண்டில் என்று காட்டியுள்ளேன். தமிழ்நாட்டார் வண்டி என்பதை யாழ்ப்பாணத்தர் வண்டில் என அழைக்கின்றனர். வண்டில் ரேஸ் அங்கே நடத்துவர். வண்டில் > வண்டி, சக்கரத்தால் உண்டாகும் சினையாகுபெயர். வண்டு - சங்கு, சங்கில் அறுத்துச் செய்யும் கைவளை (பிங்கலந்தை). நாட்டியத்தில் பெருவிரல், அணிவிரல் சேரும் வட்டம். எனவே, வண்டு = வட்டம் என்ற ஒரு பொருளுண்டு. வட்டமான விளிம்பு கொண்ட சட்டி, பாத்திரத்தைத் துணியால் மூடுவது வண்டுகட்டுதல். எனவே, வட்டமான சந்திரனுக்கு வண்டன் என்ற ஆண்பாற் பெயர் தொல்பழங் காலத்தில் தமிழர்கள் அளித்துள்ளனர். இன்றும், ஆதவன், கதிரவன், சந்திரன், வண்டன், சோமன், ... எனக் கிரகங்களின் பெயர்கள் உண்டு. என் வேண்டுகோளின்படி, வானியல் பெயர்களை மக்கட்பெயராய்க் கொள்ளும் வழக்கத்தின் வரலாறு பற்றிய அரிய கட்டுரை வலையுலாச் செய்துள்ளார் ஆசிரியர்,
https://www.academia.edu/129050653/ASTRAL_PROPER_NAMES_IN_INDIA_An_analysis_of_the_oldest_sources_with_argumentation_for_an_ultimately_Harappan_origin

பதிற்றுப்பத்து ஆசிரியர் சந்திரன் - ரோஹிணி தம்பதி போல வாழும் சேர மன்னனும், அவனது அரசியும் ஆவர் என்று பாடியுள்ளார். செம்மீன் என்பதனை உரோஹிணி என வானியலால் தெரியாமல் உரையாசிரியர்கள் எழுதியதால், வண்டன்  சந்திரன் என்ற பொருள் உரைகாரர்கள் அறிய வாய்ப்பிலாது போயிற்று.  புறநானூறு 60-ல் சோழனின் வெண்கொற்றக்குடைக்குத் திங்கள் உவமையாக வருகிறது. திங்கள் - ரோகிணி சேரும் நிமிஷங்களில் விரைந்து தொழுகின்றாள் தலைவி.

திரிபுரம் சிரித்தே எரித்த  சிவபிரானுக்கு அஞ்சி அசுரர்கள் பின்னர்  அமைத்த வலுவான கோட்டையின் கதவைக் காக்கும் கணைய மரம் போன்றன சேரமன்னனின் பருத்த தோள்கள், அவை வெற்றியையே தாங்குவன எனப் புகழ்கிறார் புலவர். திரிபுர சங்காரத்தில் சூரியன், சந்திரன் தேர்ச்சக்கரங்கள். மனைவியுடன் இல்லற வாழ்வைப் பேசும்போது சூரியனை விடுத்துச்  சந்திரனைப் பாடுவது வழக்கம் (புறம் 60, நெடுநல்வாடை). பிறகு, வண்டன் என்னும் திங்கள்  "வகை சால் செல்வம்" கொண்ட செல்வன் என்று பாடுகிறார். நெடுநல்வாடையிலும் திங்கள் - உரோகிணி பற்றிய வரிகளில் சந்திரன் செல்வன் எனப்படுகிறான். இது ஏன்? சந்திரனின் பெருமை உலகத்தில் வண்புகழ் வாய்ந்தது. வானியல் அடிப்படை நட்சத்திரங்கள். பல கோள்கள் இருந்தாலும், மாதத்துக்கு ஒரு முறை 27 நட்சத்திரங்களையும் அடைந்து வலம் வருபவன் சந்திரன். வகை சால் செல்வம் - சந்திரன் மனைவியராக 27 நட்சத்திரமும், தட்சன் புதல்வியரைச் சொல்வர். கூறுபாடுடைய செல்வம் ஆகிய விண்மீன்களை உடையவன் வண்டன் (=திங்கள்) என்கிறார். திரிபுரம் எரித்த கடவுள் திங்களைச் சூடியது அவன் புகழ் நிறுத்தியது.

புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக,  
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து

முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா - நெடுநல்வாடை

உரை: புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் திங்கள் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது.  கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள்.

இங்கேயும் கதிரவன் காய்வான், திங்கள் தண்ணிய கதிர்களால் குளிர்விப்பவன். தம்பதியரை வாழ்த்தும் போது காயும் கதிரவனைச் சொல்வதில்லை. இதனால், "முரண் மிகு சிறப்பின் செல்வன்" ஆகிய  திங்களைச்  ராசி மண்டலத்தைச் சுற்றி வரும் செல்வன் எனப் பாடப்பட்டுள்ளது ஒப்பிடல் வேண்டும். முருகனைப் பாடும்போது போருக்குச் செல்கையில் செச்சை அணிவோன், ஆனால் அகத்துறையில் கடம்பு சூடுவான். கடம்பு - இன்பத்துக்குரிய மாலை. அது போல, அரசனும் அரசியும் கூடும் வேளையில் சந்திரன்/வண்டன் உவமை ஆகிறான்.

  கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
  தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
  எழூஉநிவந்தன்ன பரேரெறுழ் முழவுத்தோள்
  வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து
  வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
  வண்டன் அனையை மன் நீயே    - பதிற். 31.


அருந்ததி சிவந்த நிறத்தால் செம்மீன் எனப் பெயர் என்கிறார் பதிற்றுப்பத்து உரையில் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0473_02.html
ஆனால், Alcor (அருந்ததி) நட்சத்திரத்தின் நிறம் வெண்மை (bluish white). எனவே, பதிற்றுப்பத்தில் சேர மன்னனின் புகழைக் கூறும் வரியில் உள்ள செம்மீன் = உரோகிணி நட்சத்திரம். செய்யவள் என்று வள்ளுவர் குறிப்பிடும் Stars of Duality. தாமரையினாள் (= திருமகள்) என்றும் கூறுகிறார் வள்ளுவர்.
https://x.com/naa_ganesan/status/1921915040648647007
   அவ்வித்து அழுக்காறு உடையானைச் *செய்யவள்*
   தவ்வையைக் காட்டி விடும்
 (செய்யவள் - செம்மீன் - ரோகிணி/கொற்றவை/திரு).

   மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
   தாள்உளாள் தாமரையி னாள்
செய்யவள்/தாமரையினாள் (ரோஹிணி) ஆக, பொ.யு. 1815-ல் எழுதிய சித்திரம்.
https://www.christies.com/lot/lot-the-moon-goddess-chandi-pahari-school-india-5901022/
கொற்றவையின் கருமரை (blackbuck antelope) வாகனமாக உள்ள தேர்/ரதம்.  திங்கள் - உரோகிணி தம்பதி உள்ள தந்தச் சிற்பமும் சந்திரகேதுகார் (வங்காளம்) கி.மு. 2ம் நூற்றாண்டினது கிடைத்துள்ளது. நியூ யார்க் மாநகரின் மெட் ம்யூஸியத்தில் காட்சிக்கு வைத்துளர்.

N. Ganesan

unread,
May 18, 2025, 1:42:05 PMMay 18
to Santhavasantham, Asko Parpola
வண்டன் (சந்திரன்) - பெயர்க்காரணம் (பதிற்றுப்பத்து 31)
-----------------------------

வண்டு- என்பது தாதுவேர். வட்டம் எனப் பொருள். விண்டு/விட்டு (விஷ்ணு) < விள்- அதுபோல, வள்- (வளைதல்) > வண்டு/வட்டு. இன்றும் யாழ்ப்பாணத்தில் வண்டில் என வண்டியைச் சொல்கின்றனர். வண்டில் = சாகாடு (சினையாகுபெயர்) என குறள் உரைகளிலே காணலாகும் (மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், பரிதி, மல்லர் உரைகள்), வண்டில் பல நூல்களிலே பார்க்கலாம்.

வண்டன் எனச் சந்திரனைச் சங்கப் புலவர் கூற ஓர் காரணம், சந்திரன் 28 நக்ஷத்திரங்களையும் கொண்ட வண்டு/வண்டில்/வட்டு சக்கரத்தைத்  திங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறான். எனவே, கூறுபாடு உடைய - அதாவது 4 வாரம், வாரத்துக்கு 7 நாளாகக் கூறுபட்டு விளங்கும் நக்ஷத்திர வட்டமாகிய செல்வத்துக்கு  உரிமைகொண்டவனான வண்டன் (சந்திரன்). நட்சத்திர வண்டுக்குச் செல்வன் திங்கள் என நெடுநல்வாடையும் கூறுகிறது.

வண்டு - சங்கு, சங்கில் அறுத்துச் செய்யும் கைவளை (பிங்கலந்தை). நாட்டியத்தில் பெருவிரல், அணிவிரல் சேரும் வட்டம்.  வட்டமான விளிம்பு கொண்ட சட்டி, பாத்திரத்தைத் துணியால் மூடுவது வண்டுகட்டுதல்.  வண்டு- வட்ட வடிவில் எருதுகளுக்கு உணவாக வண்டியின் மேல்வைக்கும் வைக்கோல் புரி. எனவே, வண்டு = வட்டம் என்ற ஒரு பொருளுண்டு. வண்டு என்னும் விண்மீன் வட்டத்தைச் சுற்றிவரும் திங்கள் வண்டன் எனப்படுகிறான்.

ஜேஷ்டையும் ரோஹிணியும் விட்டமாக அமையும் நக்ஷத்திர வட்டம். நடுவே துருவ நட்சத்திரம். சந்திரனுக்கு "வண்டன்" என்ற பெயர் அமையக் காரணமான விண்மீன் வண்டில் (Circle of Lunar Mansions, an invention of the Harappans). இதற்கான வான வரைபடங்கள் நான்கைக் கொடுத்துள்ளேன். காண்க.

(1) Syed Mohammad Ashfaque, “Primitive Astronomy in the Indus Civilization”, in Jonathan Mark Kenoyer (ed.), Old Problems and New Perspectives in the Archaeology of South Asia, Department of Anthropology, University of Wisconsin, Madison, WI, USA. 1989, pp. 207–215. Note the position of Aldebaran (Rohini) vs. Antares (Jyeshtaa) in the Nakshatra cycle.

(2) Asko Parpola, “Beginnings of Indian Astronomy, with Reference to a Parallel Development in China” History of Science in South Asia, 2013, Vol. 1, pp. 21-78.

(3) A. Parpola, Deciphering the Indus script, Cambridge University Press, 1994, pg. 202.

வானியல் செய்திகள் நிரம்ப உள்ளவை புறம் 60, பதிற்றுப்பத்து 31, அவற்றை நெடுநல்வாடையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.
மிகப் பழைய இந்திய வானியல் பற்றியும், இப்பாடல் அவற்றைச் சொல்லுவதாக இயற்றினர் என்பதற்கான விரிவான மடல்கள்:

(1)
சங்க நூல்களில் செம்மீன் என்னும் உரோகிணி நட்சத்திரம்
https://groups.google.com/g/santhavasantham/c/7tnfuomX8UE/m/duITL-wpFQAJ

(2)

பதிற்றுப்பத்து 31 - வண்டன் (= சந்திரன்) சொல்லாராய்ச்சி
Reply all
Reply to author
Forward
0 new messages