புரட்டாசி மாதத்துச் சிறப்பான பகிர்விது. நன்றி பல
இந்த கோயிலில் ஆகாசக் கருப்பர் சன்னதியும் விசேஷம் என்கிறார்கள் மேற்கூரை இல்லாமல் ஆகாயத்தைப் பார்த்தபடி வெட்டவெளியில் காட்சிதரும் ஆகாசக் கருப்பரை வணங்கினால், பில்லி-சூனியம் முதலான ஏவல்கள் , எதிரிகள் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். மேலும், பெருமாள் கோவிலில் சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரம், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது சிறப்புக்கு உரிய ஒன்று எனப் போற்றுகின்றனர். - நன்றி தினமலர்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவாய்மொழி,முதற்பத்து,வீடுமின்
'உடல் நிலையானது அன்று என்றறிந்து, மனம், வாக்கு, செயல்களை பகவானுக்கே இட்டு, அகங்காரம் பற்று முதலியவற்றை நீக்கி, உயர்வற உயர் நலமுடைய ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளை ஆச்ரயிங்கள்' ¢என்று ஆழ்வார் ஈண்டு உபதேசிக்கிறார். இதனில் "வண்புகழ் நாரணன், - திண்கழல் சேரே" என்ற வரிகள் வருகிறது இப்பத்தும் நாரணன் அருளைத் தரும்; வஞ்சித்துறையில் அமைந்தது
பகவானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்று சொல்கிறது
2686. வீடுமின் முற்றவும், - வீடுசெய்து, உம்முயிர்
வீடுடை யானிடை, - வீடு செய்ம்மினே.
ஆக்கைகள் நிலையில் பகவானை நினை
2694. ஒடுங்க அவன்கண், - ஒடுங்கலு மெல்லாம்,
விடும்பின்னு மாக்கை, - விடும்பொழு தெண்ணே
நாரணன் கழல் சேர்
2695. எண்பெருக் கந்நலத்து, - ஒண்பொரு ளீறில,
வண்புகழ் நாரணன், - திண்கழல் சேரே
இப்பத்துப் பாடல்களும் நன்மை தரும்
2696. சேர்த்தடத், தென்குரு - கூர்ச்சட. கோபன்சொல்,
சீர்த்தொடை யாயிரத்து, - ஒர்த்தவிப் பத்தே.
- நன்றி ஸ்ரீ காஞ்சி காமகோடி மட வெளியீடு
தங்கள் கருத்துக்கும் திவ்யப் பிரபந்தம் பாடல் பகிர்வுக்கும் மிக நன்றி ஐயா. பதினெட்டாம் படி கருப்பர் பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. தலவிருட்சமாகப் பவழமல்லி கருப்பர் பீடம் அருகே உள்ளது.
எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறிலவண்புகழ் நாரணன் திண்கழல் சேரே
என்ற ஆழ்வார் திருமொழியுடன் அழகான பதிவு!பெருமாள் அப்படியே மனசில் நிற்கிறார் எத்தனை அழகுஎத்தனை அழகு!
'தூவாய புள் ஊர்ந்து வந்து துறைவேழம்மூவாமை நல்கி முதலைதுணித்தானைதேவாதிதேவனை செங்கமலக்கண்ணானை..என்று ஆழ்வார் அருளீய பாசுரத்தால் அண்ணலை சேவிக்கிறேன்.. புரட்டாசி சனிகிழமை பதிவு தெரிந்தவரை எழுதுகிறேன் நன்றி திருவினைதீர்த்தான் ஐயா.
திருவாசகம் 42.9வம்ப னாய்த்திரி வேனைவாஎன்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளிமெய்யடி
யார்கட் கின்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.பதப்பொருள் : வம்பனாய்த் திரிவேனை - வீணனாய்த் திரிகின்ற என்னை, வா என்று - வா என்று அழைத்து, வல்வினைப் பகை - வலிமையான வினையாகிய பகையினை, மாய்த்திடும் - அழிக்கின்ற, உம்பரான் - மேலிடத்தில் உள்ளவனும், உலகு - உலகங்களையெல்லாம், ஊடு அறுத்து - ஊடுருவிச் சென்று, அப்புறத்தனாய் நின்ற - அப்பாற்பட்டவனாய் நின்ற, எம்பிரான் - எமது தலைவனும், அன்பர் ஆனவர்க்கு அருளி - அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது,
வம்பன் என்ற சொல்லுக்குத் திருவாசகம் தரும் பொருள் "பயனற்றவன் - பிறரிடம் வம்பு செய்து சண்டை செய்பவன் " என்பதாம் வம்பு என்பதற்குப் பொருள் வலியச் சென்று சண்டையிடுதல் என்பதே வம்ப மத வேழம் எனச் சொல்வதில் வரும் "வம்ப " என்பதற்கு வலிமையுடைய என்றொரு பொருளும் கொள்ளலாம்
தொல்காப்பியம் சொல்வது " நிலையாக ஓரிடத்து இல்லாதோர் "நாடோடிகள்" புதியதாக வந்தவர்கள் , அயலவர் என்ற வகையில் குறிப்பிடப்பட்டதே அன்றி புதியது (Fresh )என்ற வகையில் அல்ல. சிலப்பதிகாரம் மணிமேகலை குறும் தொகை முதலான பல தமிழ் காப்பியங்களும் இதே கருத்தையே உறுதிப்படுத்துகிறது
சைவத்தில் வம்ப என்பதற்கு அயலவர், பிறரிடம் வலிந்து சண்டையிடுபவன் என்றெல்லாம் சொல்லப்பட்ட போதும் ஆழ்வார்கள் "வம்பு" என்பதற்கு மணம் என்றொரு சொல் விளக்கம் தருகிறார்கள்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்,
வம்புலாம் சோலை மாமதிள்
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 953.
- திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.மணம் என்பது இங்கு பொருந்தவில்லை எனவே இவ்விறைவனை வலிமையுடையவன் எனும் பொருள் தரும் வம்ப நாராயணன் (வலிமையுடைய நாராயணன் )என்று கொள்வது பொருந்தும் வலிமை இருந்தால் புகழ் தானே வருமில்லையா ? அப்பொழுது "வம்ப நாராயணன் எல்லோரும் போற்றும் வண்புகழ் நாராயணன் ஆகிவிடுவார்
அன்புடன் செபரா
2014-09-21 3:38 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
விவரங்களுக்கும் தகவலுக்கும் அண்ணன் காப்பியக் கவிஞர் மீனவனார் அவர்களுக்கு நன்றி.
2014-09-21 11:38 GMT+05:30 meenavan2 <meen...@gmail.com>:
அன்புள்ள தம்பி வினைதீர்த்தான்.கொங்கரத்திப் பெருமாள் பற்றிய உன்னுடைய
பதிவையும் நிழற்படங்களையும் கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.
வண்புகழ் நாராயணன்,வம்ப நாராயணன் பற்றிய செய்தி கண்டேன்.
கண்டரமாணிக்கம் ஆண்கள் உயர் நிலைப்பள்ள்ளியில் தமிழாசிரிய
ராகப் பணியாற்றிய அமரர் திரு.நா,வேங்கடராமன் தான் வம்ப நாராயணன்
என்ற நாமத்தை வண்புகழ் நாராயணன் என்று மாற்றி எழுதினார்.
அந்தப் பெருமாள் அங்கு வாழ்ந்து வந்த ஆயர்களால் பூமியில் இருந்து
கண்டு எடுக்கப் பெற்றவர்.புதிதாகக் கண்டெடுக்கப் பெற்றவர்.வம்பு என்ற
சொல்லுக்கு மணம்,புதிது என்ற பொருள்கள் உள்ளன.புதிதாகத் தோன்றியவர்
ஆதலால் அவரை வம்ப நாராயணன் என்றே அழைத்தனர். ஆதலால் பெருமாள்
வம்பன் என்று எண்ணுவது பொருத்தமன்று. இதனை நான் அன்றே நா.வேங்கட
ராமன் அவர்கள் இருக்கும் பொழுதே சொன்னேன். அவரும் நீ சொல்வது சரிதான்
ஆனால் அவ்வாறு பெயர்ப்பலகை எழுதிய பிறகு என் செய்வது?அப்படியே
இருக்கட்டும் விட்டுவிடு என்றமையால் அவ்வாதம் அத்துடன் நின்று விட்டது.
சரி அவர் புகழுடையவராய் இருப்பதில் பிழை ஒன்றுமில்லை என்று வாதத்தைத்
தொடரவில்லை.