நொச்சி நியமம்
---------------
நியமங்கள் என்பவை பழைய கோவில்கள், சமணப் பள்ளிகள் கொண்டதாக இருக்கும். நியமம் என்பது வடசொல். வேதங்களைக் கற்பிப்பது "நியம அத்யாயநம்". வடநாட்டு வணிகர்களும், தமிழ்நாட்டாரும் கலாச்சார, வியாபார ஊடாடல்கள் நிகழ்ந்த ஊர்கள் இவை. வடநாட்டு இலிபி பிராமி தமிழகம் வந்து, பேச்சு மொழி தமிழ் உயர்தனிச் செம்மொழி ஆக இலக்கணம் பெற இந்த வணிக, சமய இடங்களின் பெரும் பங்கு உண்டு. நியமம் சங்க இலக்கியத்தில் உள்ள சொல். மதுரையில் இருபெரும் நியமங்கள் (கோவில்கள்) இருந்தன (மதுரைக்காஞ்சி). நியமம் பிராகிருதத்தில் நிகமம் எனவாதல் உண்டு. நியமம் > நேமம் > நெகமம்/நிகமம் (மாங்குளம் சமணர் கல்வெட்டு). காவேரிக் கழிமுக (டெல்ட்டா) நியமம் மூன்று:
https://groups.google.com/g/vallamai/c/9JytZh5LvxQ/m/Z7Fe9OczEAAJஊரும் பேரும், சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை:
https://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=288"பரிதி நியமம்: தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது. நியமம் என்பது கோயில். எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில் ஆகும். பிற்காலத்தில் பரிதியப்பர் என்னும் பெயர் அக் கோயிற் பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர் கோயில் என மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது."
பரிதியப்பர், பருத்தியப்பர் ஆனது, கொங்குநாட்டில், பரிதிப்பள்ளி பருத்திப்பள்ளி என அழைப்பது போலாகும். மரைக்காடு (> மறைக்காடி) யாழைப் பழித்த மொழியாள் "வாழைப்பழத்து அம்மன்" ஆனதும் ஒக்கும். ஊரும் பேரும் : "நொச்சி நியமங்கிழார் என்னும் புலவர் பாடிய நயஞ்சான்ற பாடல்கள் நற்றிணையிற் காணப் படுகின்றன. நியமம் என்பது கோவிலைக் குறித்தலால் முன்னாளில் நொச்சி நியமம் தெய்வ நலம் பெற்ற ஊர்களில் ஒன்றென்று கொள்ள லாகும். இப்பொழுது அவ்வூர்ப் பெயர் நொச்சியம் என மருவி வழங்குகின்றது."
நொச்சி நியமங்கிழார் பாடியவையாக ஐந்து பாடல்கள் உண்டு. அகம். புறம், நற்றிணையில் மூன்று. ரா.பி.சே. சொல்வதுபோல, நொச்சியத்தில் பழைய கோயிலோ, கல்வெட்டோ எதுவுமில்லை. அதுவும் கல்வெட்டுகளுக்குப் பெயர்போன காவேரி டெல்ட்டாவில் உள்ள நொச்சியத்தில் இவை எதுவுமில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. மேலும், நொச்சி + அம் சாரியை பெற்று நொச்சியம் ஆகியுள்ளது. அலங்கியம், கள்ளிமந்தையம், காங்கயம், நல்லியம் (cf. நல்லியக்கோடு), தனிச்சயம், பிரமியம், தொட்டியம், கொட்டியம், புறம்பியம், நொச்சியம், ... -அம் சாரியை பெற்ற ஊர்ப்பெயர்கள்.
நொச்சி நியமங்கிழாரின் பாடல்களில் அகச்சான்றாகப் பல செய்திகள் பாடித் தந்துள்ளார். அதனைப் பின்னத்தூரார், நற்றிணைப் பதிப்பாசிரியர், குறிப்பிடுகிறார். சங்கப் புலவர் தம் பாடல்களால் ஊர்ப்பெயரை 2000 வருடங்களுக்கு மேலாகப் பேசுபொருளாகச் செய்துள்ளார். சங்க நூல்களைப் பதிப்பித்த வாகீச கலாநிதி கிவாஜ கூறுகிறார் (மனை விளக்கு, சங்க நூற் காட்சிகள்): "பாடிய புலவர் கொச்சி நியமங்கிழார் என்பவர்; நொச்சி நியமம் என்ற ஊர்க்காரர் என்பது அதற்குப் பொருள். மரியாதை யுடையவர்கள் பெயரைக் கூறாமல் வேறு விதமாகக் கூறுவது வழக்கம். 'ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது' என்ற மரியாதையால் இந்தப் புலவருடைய இயற்பெயர் நமக்குத் தெரியவில்லை. ஊரின் பெயர் மாத்திரம் தெரிகிறது. நொச்சி நியமம் என்ற ஊரில் வேறு பல மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் அந்த ஊருக்குப் புகழை உண்டாக்கவில்லை. இந்தப் புலவர் தாம் உண்டாக்கினார்; அந்த ஊர்ப் பெயரைக் காப்பாற்றினார். அதற்கு அவர் பெயரே சான்று."
நற்றிணைப் பதிப்பாசிரியர் பின்னத்தூரார்: "நொச்சி நியமங்கிழார் ஒரு செந்தமிழ்க் கடைச்சங்கப் புலவர். இஃது ஊர்பற்றி வந்த பெயர். நொச்சிநியமம் ஒரூர், இவர் வேளாண் மரபினர். இக்காலத்து ஆராய்ந்து அறிதற்கும் அரிய பூக்கோட்காஞ்சி யியற்றியவர் (புறம் 293). குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளாராதலின் இவரூர் குறிஞ்சியினகத்தது போலும். நீ படும் துயர்தான் யாதென்று வினவிய தாய்க்குத் தலைவன் மார்பணங்கென்று தவறியுரைக்கத் தொடங்கினேனென் தலைவி கூறுவதாகப் படிப்போர்க்கு இன்சுவை யூட்டுகின்றார் (நற். 17). தலைவியின் மொழி கேட்பினுய்வேன் அன்றேல் என்னுயிரோடெல்லாம் ஒருங்கழியுமென்று தலைவன் கூறுவது, இனிய சுவையதாகும், (நற். 209) புதுவதாகப் பூத்த வேங்கைமலரைப் பெற வேண்டி மகளிர், புலி, புலி, யென்று பூசலிடுவதையும் அதனைக்கேட்டுப் புலிபோலு மென்று ஆடவர் வில்லம்புடன் வருவதையும் விரித்துக் கூறியுள்ளார். (அகம் 52) (புலி, புலி என்றால் வேங்கையின் கிளைதாழ்ந்து கொடுக்குமென்பது வழக்கு.) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாடல்களும், அகத்திலொன்றும், புறத்தி லொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன."
https://archive.org/details/naiai00unse/page/n65/mode/2upவெள்ளறை நிகமம் என்று மிகப்பழைய தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்ட ஊர் வெள்ளறைப்பட்டி மதுரை அருகே உள்ளது. அதே போல, நொச்சி நியமம் என்னும் குறிஞ்சித் திணையின் ஊர் நொச்சியூர் (கொல்லங்கோடு, சித்தூர், தத்தமங்கலம்) பாலக்காட்டுக் கணவாயில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகப் பழைய வேத நெறி தழைத்தோங்கும் ஊர்கள் இவை. நொச்சி நியமங்கிழாரின் வம்சாவழியாகக் கருதத்தக்க நம்படிமார் என்னும் தலைவர்கள், அவர்களின் சிறப்பு பார்ப்போம். வேங்கைநாட்டு நம்படிகள் இவர்கள். நம்பன்+அடிகள் ==> நம்படிகள். பேச்சு வழக்கில் நம்பிடி என்பதாகவும் அழைப்பர்.
நொச்சிநியமங்கிழார் தந்த 5 சங்கப் பாக்கள்:
-----------------------------------
(1)
அகநானூறு 52 குறிஞ்சித்திணையில் ஒரு சிறந்த பாடல். உள்ளுறை உவமம் நிறைந்த பாடல். வேங்கை மரங்கள் நிறைந்த பகுதி இந்த நொச்சியூர் ஆகும். எனவே, வேங்கைநாடு என்பது பெயர். வேங்கை எனும் சிறுத்தைப்புலி வந்துவிட்டதாக, பெண்டிர் "புலி, புலி" என்று ஒலியெழுப்ப வில்லுடன் வருவதாக நொச்சிநியமங்கிழார் பாடியுள்ளார். சில மாதங்கள் முன்பு கூட, வேங்கை இவ்வூரில் முள்கம்பி வேலியில் பட்டு இறந்தது. இன்றும் நொச்சியூர்ப் பகுதி வேங்கைநாடு தான். வேங்கநாட்டு ராஜா கொல்லங்கோட்டு ராஜா. நியம அத்யாயநம் (வேதப் பயிற்சி), இந்தியாவிலேயே, ரிக், சாம வேதங்கள் உயிரோடு இருப்பதும் இப்பகுதியே. ஐரோப்பிய வேதவியல் நிபுணர்கள் 1960-களில் இருந்து ஆராய்ந்து எழுதிவருவதால், வேத நியமங்களின் பல வியக்கத்தக்க செய்திகள், யாகசாலைகளின் கணிதம், ... உலகிற்கு முதன்முறையாகத் தெரியவருகின்றன.
பாடலின் பொருளும், உள்ளுறையும் அழகாக விளக்கியுள்ளார் ப. பாண்டியராசா.
http://sangacholai.in/akam52.html பி. எல். சாமி, சங்க நூல்களில் மரங்கள், பக். 177-178
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU6lZUy/page/177/mode/2upபி. எல் சாமி, சங்க நூல்களில் உயிரிகளை ஆய்ந்து பல நூல் செய்துள்ளார். வேங்கைப் பூக்கள் பாறையில் வீழ்ந்து, வேங்கைப் புலி போல் தோற்றம் தந்ததை Lt. Col. Pollock நூலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதனால் தான் Leopard சங்க நூல்களில் வேங்கை எனப்படுகிறது. பாண்டியராசா படங்களையும், நொச்சி நியமம் அருகே முள்வேலியில் பட்ட வேங்கை தோற்றமும் ஒப்பிடுக. "பாலக்காட் கொல்லங்கோட் கம்பிவேலியில் குடுங்ஙிய புலி சத்து"
https://x.com/thatsMalayalam/status/1793209387969855792 பெண்கள் புலி, புலி என்று ஓசைகொடுத்தால், வேங்கை பூக்கொடுக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புலியும், சிறுவனும் கதை போன்ற நிகழ்ச்சியை, வேங்கைநாட்டு நொச்சிநியமங்கிழார் இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். அவரே, அரண்மனைப் பெண்டிர் கற்புக்காக உயிர்க்கடன் இறுத்தல் தற்பலிக்காக, "பூக்கோள் காஞ்சி" பாட்டையும் தந்தவர். இத்துறைக்கு ஒரே பாடல் தான் மேற்கணக்கு நூல்களில் உண்டு. பாடலின் பொருளை, தகடூர் யாத்திரைப் பாக்கொண்டு அடுத்ததாக விளக்கியுள்ளேன்.
(2) 'இக்காலத்து ஆராய்ந்து அறிதற்கும் அரிய பூக்கோட்காஞ்சி யியற்றியவர் (புறம் 293)' நொச்சி நியமங்கிழார் எனும் வேள் என்கிறார் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரவர்கள். இப் புறப்பாட்டுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை. வித்வான் செங்கை பொதுவன் நல்ல உரை தந்துள்ளார். மேலும் ஒரு பாடல் பொருளதிகார உரையினால் கிடைக்கிறது. அதனைத் தருகிறேன். உயிர்க்கடன் இறுத்தல் என்பது போர்க்காலங்களில் நிகழுவது. வீரன் தற்பலி கொடுத்தல் உண்டு. கணவரை இழந்தோர் சககமனம் (சதி), இளம்பெண்கள் கொண்டி மகளிர் ஆதலைத் தடுக்கவும் தீப்பாய்தல் இந்தியா முழுதும் 2500 ஆண்டாய் உண்டு. சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பல பாடல்களில் சங்க நூல்களில் இருப்பதை விளக்கியுள்ளனர். ஆனால் மணமாகாத இளம்பெண் தற்பலி பற்றிய சங்கச் செய்யுள் இதுவொன்றே. இது உயிர்க்காணிக்கை. தோல்வி வந்துற்ற பொழுது, அரண்மனை மகளிர் எதிரி அரசன் பூப்பு அடைந்த மகளிருக்குப் பரிசம் தந்து மணக்க முன்வந்தாலும், ஏற்காமல், கற்பைக் காக்கத் தீப்பாய்தல் என்னும் தற்பலியை விவரிக்கும் பாடல். சங்க இலக்கியத்திலேயே (மேற்கணக்கு நூல்கள்) நுட்பமாக, தற்பலி பற்றி விளக்கும் அரிய பாடல் நொச்சிநியமத்தார் தந்துள்ளார். வேங்கை நாட்டுக்கு அருகே உள்ளது குறும்பர் நாடு. "கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்!" - சுந்தரர். குறும்பு - குறுப்ப நாடு. குறும்பொறைகள் மிக்கது. குறுபர்கள் எனக் கர்நாடகத்திலும், தமிழகத்தில் குறும்பர்கள் எனவழங்கும் மக்கள் பலர். குறும்பனூர், குறும்பன்கோட்டை, குறும்பப்பட்டி, ... என இவர்கள் ஊர்கள் இருக்கும். மைவிடை என்னும் செம்மறி ஆடு வளர்ப்போர். குறும்பொறை என்பது எந்த மலை? குறுப்புநாடு எது? "குறும்பொறைக் கோமான்", கொடுமுடி சண்முகன், 1972.
https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0002171_கொங்கு%201972%20மார்ச்சு.pdfதற்பலி செய்துகொள்ளும் மகளிர் கல்லறை மீது "கை" சின்னம் இட்ட கல் நிறுத்துவது இந்தியா முழுதும் உண்டு. இது திராவிட மக்களின் வழக்கம், பஞ்ச திராவிட தேசங்கள் ஐந்திலும் காணலாம். கை சின்னம், கைம்மை, கைம்பெண்டிர், ... உறவுடைய முத்திரை (Logo). Ancient Indian Linguistic signs,
https://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html புறநானூறு 293
-----------
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின்,
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப்
பிறர் மனை புகுவள்கொல்லோ 5
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
திணை: காஞ்சி; துறை: பூக்கோட் காஞ்சி.
நொச்சி நியமங் கிழார் பாடியது.
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் = நெஞ்சை நிமிர்த்திப் போரிடுவோருக்குத் தளராது யானைமேலிருந்து தாக்கும் வேந்தன் ஆனவன்,
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – குறும்பர்கள் பணிந்து பெண்ணைத் தந்துவிட வேண்டும் என்று முழக்கும் தண்ணுமையானது,
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் = அக் குறும்ப நாட்டாரின் விற்படையின் நாண் உடைந்து, எதிர்த்துத் தாக்க இயலாது அமைவோர்க்கு ஒலிக்குமாயின்,
(வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் (கலித்தொகை))
எம்மினும் பேர் எழில் இழந்து = புலவர் கூறுகிறார், தன்னைக்காட்டிலும் அழகிழந்து,
வினை என = தலைவிதியே என்று,
பிறர்மனைப் புகுவள் கொல்லோ = தம் இனத்து மறக்குடி மகன் அல்லாத எதிரி வேந்தனாகிய பிறர் மனை புகுவாளோ? மாட்டாள்.
அளியள் தானே - இரங்கத் தக்கவள் அவள். பிறர் மனை புகாமல் தீப்பாய்ந்து விட்டாள்.
பூவிலைப் பெண்டு = வேந்தன் தரும் பரிச விலை. பூப்புவிலை.
தொல்காப்பியர் காஞ்சித்திணையை நிலையாமை பற்றிக் கூறும் திணை என்று வரையறுத்துள்ளார். பூக்கோள் - பூவுலகைக் கொள்ளுதல் (போர்க் காரணம்). மேலும், பூக்கோட் காஞ்சி என்பது மகளிர் எதிரி அரண்மனையை ஏற்காமல் தற்பலி என்னும் தியாகம் செய்தல் என்னும் காஞ்சித் திணையின் துறையாகும். பூ என்பது தீ என்ற பொருளிலும் வரும். மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் பூமிதி, பூவோடு போன்றவை காண்க. பூக்கோள் - விருப்பாகத் தீப்பாய்ந்து தற்பலி செய்து சாதல். எனவே, இது காஞ்சித் திணை. இப்பொருளை நான் கொள்ளக் காரணமாக அமைவது, அதியமான் கோட்டையில் பெண்டிர் சேரமான் வெற்றியால் தற்பலி ஆகப் பூக்கோள் (தீக்கொள்ளல்) ஏற்பு. நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டும் பொன்முடியாரின் தகடூர் யாத்திரைப் பாடல் ஆகும். "காஞ்சித்திணைக்கு மட்டும் பூக்கோள்-நிலை உண்டு எனின் பிற போருக்குச் செல்வோர் வெட்சி முதலான பூக்களைச் சூடுதல் பற்றிய துறை இல்லாதது ஏன் என்பது வினா." (செங்கை பொதுவனின் இக் கேள்விக்கு விடை தகடூர் யாத்திரையில் பொன்முடியார் தந்துள்ளார். ~NG)
செங்கை பொதுவன் அவர்களின் உரையை , தகடூர் யாத்திரைச் செய்யுளால் மேலும் விளக்கியுள்ளேன்.
https://vaiyan.blogspot.com/2015/05/293.htmlhttps://ta.wikipedia.org/wiki/பூக்கோட்_காஞ்சி தகடூர் யாத்திரை
ஆசிரியப்பா
மறனுடை மறவர்க் கேறஇடன் இன்றி
நெய்யோ டையவி அப்பிஎவ் வாயும்
எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்
கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லுங் கணையும் பலபடப் பரப்பி
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
என்றிவை பலவும் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை இயற்றிப் பின்றை
எய்பெரும் பகழி வாயில் தூக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்
தாக்கரும் தானை இரும்பொறை
பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே
- இது பொன்முடியார் பாட்டு (நச்சர்)
இதுவும் புறப்பாடல் போல, பூக்கோட் காஞ்சித் துறை.
(எந்திரப் பறவை - இதை இன்றைய Drones-குப் பாவிக்கலாம். சுரும்பர் என்ற சொல் வழக்கு உண்டு).
(3) நற்றிணை 17, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
https://nandinikarky.com/2019/02/04/natrinai-17-rain-in-the-skies-and-eyes/ நொச்சி நியமங்கிழார் தம் நிலத்துப் பெய்யும் கோடை மழையை வர்ணிக்கிறார் (Southwest Monsoon).
வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைவன் ஒரு பொழுது வாராதிருத்தலால் வருத்தமுற்ற தலைவி, பின் ஒரு நாள் அவன் அருகில் இருப்பதை அறிந்து, அவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தனற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘யான் அவனை எதிர்ப்பட்ட இடம் கண்டு அழுதேனாக, அதனைக் கண்டு நீ எவன் செய்தனை என வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேன் எனத் தாய் களவு அறிவுற்றவாறு கூறக் கருதி அவன்வயிற் பரத்தமை கூறிற்று’ என்பர் நச்சினார்க்கினியர். இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காந்தளை ஊதிய தும்பி, இன்னும் தேனசையால் முரன்று இயங்கும் மலை நாடனாக இருந்தும், முன்பு என் நலம் உண்டு துறந்து அகன்றான். அவன் நாட்டு அஃறினைப் பொருள் இயல்பையேனும் நோக்கி அறிந்திலன் என இரங்கியதாம், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – காந்தளை ஊதிய தும்பி, மேலும் விருப்பம் கொண்டு ஊதும் என்றது, களவு ஒழுக்கத்தை நீட்டிக்க விரும்பும் தலைமகன் செயலை உணர்த்தியது. ஒளவை துரைசாமி உரை – அன்னை ‘எவன் செய்தனை நின் இலங்கு எயிறு உண்கு’ என மெல்லிய இனிய கூறலின் என்றும், அன்னை சொல்லின் மென்மையும் இனிமையும் என் அறிவை மயக்கியமையின், உயிரினும் சிறந்த நாணத்தையும் மறக்கும் தன்மை எய்தினேன் என்பாள். காந்தளை ஊதிய தும்பி யாழ் நரம்பு போல இன்னிசை செய்யும் என்றது, காதலன் மார்பில் படிந்து இன்புற்ற உவகையால் என் நெஞ்சம் அவன் திறமே நினைந்து ஒழுகுகின்றது என்றவாறு.
(4) நற்றிணை 209. குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது;
தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன். இதுவும் நொச்சி நியமங்கிழார் தம் குறிஞ்சி நிலத்தைப் பாடியதே.
This poem describes the Slash-and-burn farming by Kurinji landscape folks. குறவர்கள் குறிஞ்சித் திணையில் செய்யும் வெள்ளாமை பற்றிய அரிய பாடல். இம் முறையால் தான் பலவகைக் கூலங்கள் வேளாண்மைப் பயிர் ஆக்கப்பட்டன என்பர் விஞ்ஞானியர். குறவர் தம் செல்ல மகள் குறுமகள்
(5) நற்றிணை 208. இதுவும் பெருமழை பெய்யும் குறிஞ்சி நிலக் குறுமகள் தம் காதலன் பொருள்வயின் பிரிதலுக்காக வாடுகிறாள். எனவே, பாலைத்திணை. செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. நொச்சி நியமங் கிழார் பாடல்.
---------
நொச்சிநியமம் (நொச்சியூர்)
வெள்ளறை நியமம்/நிகமம் (வெள்ளறைப்பட்டி) போல, நொச்சி நியமம், நொச்சியூர் ஆகும். நியம அத்யாயனத்தில் இந்தியாவிலேயே தொன்மையான பகுதி நொச்சியூர்ப் பிரதேசம். பல கிராமங்கள் வேத நியமங்களால் பெயர்பெற்று விளங்குகின்றன. வேத நெறி தழைக்கும் பல கோவில்கள் இங்கே உள்ளன. அகத்தியர் ஆசிரமம் வேத தத்துவங்களைக் கற்பிக்கும் ஆசிரமம். அண்மையில், நொச்சியூர் வேங்கடராமன் சன்னியாசி ஆகத் துறவு ஏற்றார். வேதம், அத்வைதம் நொச்சூர் சுவாமி விளக்கும் காணொளிகள் பல. கவிமாமணி இலந்தை ராமசாமி, ஒருமுறை நொச்சியூர் "அகத்தியர்" பாடிய கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளின் புத்தகம் அனுப்பிவைத்தார். ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி போன்ற பல பிரபலமான கர்நாடகப் பாடல்கள் நொச்சியூர் (நொச்சி நியமம்) "அகஸ்தியர்" இயற்றியவை ஆகும்.
https://www.youtube.com/watch?v=Gz3ghv8E0uI எம்.எல்.வி, மகராஜபுரம் போன்றோர் பிரபலப்படுத்தினர். எம்.எல்.வி. மாணவி சுதா ரகுநாதன்:
https://www.youtube.com/watch?v=KPCVPdZzLtgஅபூர்வமான எம்.எல்.வி. காணொளி:
https://www.youtube.com/watch?v=qlCNC3t8iMwநியம அத்யாயனம்:
https://www.hindutamil.in/news/tamilnadu/517886-vijayendra-saraswati-father-passes-away.htmlநொச்சியூர் அருகே, அருணகிரிநாதர் பாடிய கொடும்பை உள்ளது. மலையாளத்தில் "கொடும்ப" என்கின்றனர். முசிறி, தொண்டி, கொல்லம், கழிகோடு (கள்ளிக்கோட்டை), நறவு, ... போன்ற முக்கியமான துறைமுகளில் இருந்து குதிரைச்செட்டிகள் இவ்வூர் வணிகப் பெருவழி வழியாகக் குதிரைகளைக் கொணர்ந்து வஞ்சி, உறந்தை, மதிரை, ... ஊர்களில் விற்றனர். எனவே, அருணகிரியார், முருகனைக் குதிரைச்செட்டி என்றார்.
https://groups.google.com/g/santhavasantham/c/FWG7Efw0KAg/m/NK1104hAAgAJ தத்தமங்கலம், கொடுவாய், சித்தூர், கொடும்பை, நொச்சியூர் (நொச்சி நியமம்), கொல்லங்கோடு, ... அருகருகே உள்ளன (சித்தூர் வட்டம், பாலக்காடு).
அரிய குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடல்கள் தந்தவர், நொச்சிநியமங்கிழார். அவர் குறிஞ்சித்திணையினர் ஆதல்வேண்டும் என்றார் நற்றிணை அச்சாக்கிய பின்னத்தூரார். நொச்சியூர் அது. நியம சம்பந்தம் காட்டப்பட்டுள்ளது. கோயில்கள், வணிகர் உறையுள்.
பாச்சில் வேள் நம்பன் பாடிய வெண்பா (செந்தலைக் கல்வெட்டு) :
வஞ்சிப்பூச் சூடிய வாளமருள் வாகைப்பூக்
குஞ்சிக் கமழ்கண்ணிக் கோமாறன் - தஞ்சைக்கோன்
கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகளிக்கும் தோள்"
உரை: வஞ்சிப் பூச்சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறனும், தஞ்சை அரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரைச் சினந்து கொன்றளித்தவனுமாகிய சுவரன் மாறனின் தோள்களே இவ்வுலகத்தைக் காக்கும் தோள்கள்! இக் கல்வெட்டுப் பாடலில் சுவரன் மாறனை "தஞ்சைக்கோன்" என்று குறிப்பிடுவது, விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது.
நொச்சியம் - இங்கே பழைய கோயிலும் இல்லை, கல்வெட்டு, தேவாரம் ஒன்றுமில்லை. எனவே இது நொச்சி நியமங்கிழார் ஊரன்று. நொ.நி. கிழார் பாடல்களைப் படித்தால் இம்முடிபு தெளிவாகும். நற்றிணை முதற் பதிப்பாசிரியர் குறிப்புக் காண்க. நியமம் கல்வெட்டில் "பாச்சில் வேள் நம்பன்" பாடியுள்ளான். அதுபோல, நியமங்கிழார் ஊரில் இருக்கும் வேளாளரில் இருந்து மலையாளிகள் ஆக மாறியுள்ளர், நம்படிமார் (நம்படிகள் நம்பன் + அடிகள்) என்று அழைக்கப்படுகின்றனர். நொச்சி நியமம் கிழார் பாடல்கள் அகச்சான்றும், கேரள நியமங்களில் (கோயில்களில்) அவர்கட்கு உள்ள வேத யக்ஞ உரிமை, தம் நாட்டின் சிறப்பைச் சொல்லும் முறை சிறப்பு. அந்நாடு இன்றும் வேங்கைநாடு என அழைக்கப்படுகிறது. வேங்கைநாட்டு நம்பிடிகள் .... அறியச் சில வலைக்கண் (URL-s).
வேங்கைநாடு, நொச்சி நியமம் வட்டாரத்தின் குறிஞ்சி வளமும், வரலாறும் அறியச் சில தரவுகள்.
https://x.com/Atithigva/status/1800052786803200347 SOma lathai
kollengode from nochur
maps.googlehttps://x.com/thatsMalayalam/status/1793209387969855792 leopard, Venganadu
https://x.com/Atithigva/status/1819927668223009234 Venganad royalty
https://x.com/oroyalarchives/status/1800194294487404761 Kollengode raja, 1915 rare photo
https://x.com/Atithigva/status/1782434340301086800 heart of Vedic ritual
https://x.com/Gokerala_/status/1686298020017500160 Kollengode
https://x.com/Atithigva/status/1800031130525303203 Venganad Nambidis
https://x.com/takshakan/status/1553244141995294726 Venganad Vasudevaraja Avargal
https://x.com/Atithigva/status/1411694766023086081 Nambidi-s
https://ml.wikipedia.org/wiki/നമ്പിടിhttps://archive.org/stream/in.ernet.dli.2015.367269/2015.367269.A-History_djvu.txt nambidi
https://x.com/ThanjaiMadhavan/status/1546810645169188864 niyamam, negamam
etc. etc.,
N. Ganesan