திருச்சிற்ற நேமம்

60 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 29, 2025, 7:20:01 AMApr 29
to Santhavasantham
நியமம் என்பது வடசொல். நியமம் என்னும் ஊர்கள் வேத, சமண சமயங்களின்
ஆலயங்கள் கொண்டவையாக இருக்கும். வணிகர்கள் வாழிடங்கள். கடைத் தெருக்கள்
உள்ளவை. பரிதி நியமம் (தஞ்சை), நொச்சி நியமம், வெள்ளறை நியமம் (புகழ்
பெற்ற தமிழ் பிராமிக் கல்வெட்டு) ... உண்டு. நியமம் > நிகமம்/நெகமம்
(உ-ம்: வெள் அறை நிகம(த்)தோர் - மிகப் பழைய தமிழிக் கல்வெட்டு) என்றும்,
நேமம் (நேமத்தான்பட்டி) என்றும் மருவுதலும் உண்டு. கல்வெட்டாளர் துரை.
சுந்தரம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கல்வெட்டுக்களில் நியமம் என்று
இருப்பதைக் கண்டு எழுதினார். இவ்வூர் கோசர்கள் வாழ்ந்த நியமம் என்று பலர்
எழுதியுள்ளனர். மேலைக் கடற்கரையில், துளு நாட்டில், பரசுராமன், வேத
வேள்வி செய்யும் செல்லூர் இருக்கிறது. அதே பாடலில் செல்லூரின் கிழக்கே
கோசர்களின் நியமம் என்றும் வருகிறது. மிகப் பெரிய கோவிலாக ராஜராஜ சோழன்
செல்லூர் அம்பலத்தைக் கட்டியுள்ளான். கேரள மாநிலம் பரசுராம க்ஷேத்திரம்
என்று அழைக்கப்படும் வரலாற்றைக் கூறும் இந்திய இலக்கியங்களின் முதல்
பாடல் இது. இன்னொரு சோழர் காலக் கல்வெட்டும் பார்த்தேன். திருமழபாடி
வணிகக் குழுவினர் கல்வெட்டு. துளு நாட்டு வணிகனும், நியமங் கிழான்
என்பவனும் திருமழபாடி மாதேவருக்கு நிவந்தம் அளித்துள்ளனர். இக்கல்வெட்டு,
சங்க காலத்தில் இருந்து மேலைக் கடற்கரை செல்லூரும், நியமம் ஊரினரும்,
பிறரும் சேர்ந்து வணிக முன்னெடுப்புகளில் ஈடுபட்டமை 1000+ ஆண்டாய்
இருந்தது விளங்குகிறது. ஆதாரம்: நெகமம் என்னும் தொகுப்பு நூல், தமிழ்ப்
பல்கலை. வெள்ளறை நியமம் வெள்ளறைப் பட்டி என்பதுபோல, நொச்சி நியமம்
நொச்சியூர் என்று இன்று அழைக்கப்படுகிறது. அங்கே வேத, சமண நெறிகள் 2000+
ஆண்டுகளாய்த் தழைத்து வாழுகின்றன. நொச்சி + அம் (அம் - சாரியை) =
நொச்சியம். கல்வெட்டோ, பழைய கோயிலோ எதுவும் நொச்சியத்தில் இல்லை.

"ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்து" - ஓவியத்துடன் எல்லாக் கோவிலிலும் கொடி
ஏற்றப் படுகிறது. கருடக் கொடி பெருமாள் கோவிலில் ஏற்றியதை இளங்கோ அடிகள்
சொல்லியுள்ளார். உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் (சிலப். 14, 8)
viL- > viNDu, viNNu, viSNu, solar deity, so, Garudan = kAvi(Tamil name
for Garuda) flag. Ranga + kAvi = Langavi island (arangam = island, >
Lanka)

மதுரைக் காஞ்சி:
365. ஓவு கண்டு அன்ன - சித்திரம் எழுதப்பெற்று, ஊரார் தரிசித்து
வணங்கியும் அருள் பெற நிகழும் துவஜ ஆரோகணமும், அன்ன பிறவும் செய்யப்
பெறும் இரு பெரும் நியமங்கள் (=கோயில்கள்)
கண்டு - தரிசித்து, வணங்குதல் என்ற பொருளில் வந்தது. அன்ன = Such or
similar things, impers. pl.; அத்தன்மையானவை. — v. Are of the same kind,
are similar, impers. pl. of finite appel. v.; ஓர் அஃறிணைப் பன்மைக்
குறிப்பு வினைமுற்று. பிறவும் அன்ன.

366. நச்சர் உரை: சாறு அயர்ந்து எடுத்த உருவம் பல் கொடி-கோயில்களுக்கு
விழாக்களை நடத்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
இதனால் அறங் கூறினார்.

மதுரையில் இருந்த இரு பெரு நியமங்கள் எவை? என்பதி பற்றிய குறிப்பு. இரு
பெரு நியமங்களை இணைக்கும் திருக்கலியாண விழா மாசி மாதத்தில்
நிகழ்ந்திருக்க வேண்டும். ஊர்வலங்கள் பெரிதாக நடந்தமை மாசி வீதிகள்
என்னும் பெயர் இன்றும் இருப்பதால் தெரிகிறது. திருமலை நாயக்க மன்னர்
17-ஆம் நூற்றாண்டில் மாசித் திருவிழாவை, அழகரின் சித்திரைத் திருவிழாவோடு
இணைத்தார் என்பது வரலாறு.
சங்க இலக்கியம் கூறும் மதிரை மாநகரின் இரு பெரும்நியமங்கள் பற்றின
ஆராய்ச்சி (சோனகாசிரியர்கள் கூறும் செய்தி, மதுரைக்காஞ்சி ஒப்பீடு):
https://groups.google.com/g/vallamai/c/wmhlUZFHSKA/m/83ofupAnAwAJ

~NG
-----------

https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/thirukalar/849-nemamsivan

https://web.archive.org/web/20191120125628/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969270
பூட்டிக்கிடக்கும் பழமை வாய்ந்த திருசிற்ற நேமம் சிவன் கோயில்
11/20/2019 7:34:03 AM

திருத்துறைப்பூண்டி நவ.20: கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருசிற்றநேமம்
சிவன் கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற போது கோயில் பூட்டி கிடந்ததை
பார்த்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.திருத்துறைப்பூண்டி
எழிலூர் ஊராட்சி திருசிற்றநேமம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில்
உள்ளது. இந்த கோயிலுக்கு 250 ஏக்கர் சொந்தமாக நிலம் உள்ளது. குத்தகையும்
முழுமையாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள
300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சிவன்
கோயிலுக்கு எழிலூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த
பொதுமக்களும் இங்கு வந்து சிவனை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில்
கார்த்திகை சோமவாரபூஜைக்கு சென்ற கிராம மக்கள் கோயில் பூட்டி கிடப்பதை
பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். இது குறித்து கிராம கமிட்டி
தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராமமக்கள் கூறுகையில், இந்த கோயில்
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. நாள்தோறும் கோயிலில் 4 காலபூஜை
நடைபெற்று வந்தது.

பின்னர் அது ஒரு காலபூஜையாக செய்து வந்தனர்.இங்கு பூஜை வேலைகளை பார்த்து
வந்த குருக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சம்பளம் வழங்கி வந்தது.
கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் குருக்கள் கோயிலுக்கு வருவது
இல்லை. ஏற்கெனவேஇங்கு வேலை பார்த்த குருக்களுக்கு பலமாதசம்பளம்
நிலுவையில் உள்ளது. இந்த கோயிலுக்கு 250 ஏக்கர் சாகுபடி நிலம்
சித்தமல்லி, நேமம் பகுதிகளில் உள்ளது.இதற்கான குத்தகையை முழுமையாக
அனைவரும் ஆண்டு தோறும் செலுத்தி வருவதாகவும் ஆனால் ஒருகால பூஜை செய்ய
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கோயில்
பூட்டியே கிடக்கிறது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை சோமவாரம் என்பதால்
கிராமத்தின் சார்பில் ரூ.5 ஆயிரத்திற்கு பூஜை சாமான்களை வாங்கி கொண்டு
சென்ற போதும் கோயில் பூட்டி கிடந்தது. இதனால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்தோம். உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை
திறந்து வழக்கம் போல் பூஜை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர் .

N. Ganesan

unread,
Apr 29, 2025, 7:48:25 AMApr 29
to Santhavasantham
சிறு நியமம் = சிறுநேமம் >> சிற்றநேமம்.
சிறு > சிற்று-/சற்று- என வருதல் காண்க. சற்றே பொறுத்திரும் பிள்ளாய்.

சற்றே விலகி இரும்! பிள்ளாய்! - திருப்புன்கூர் ஸ்தல புராணம் (நந்தி விலகியுள்ளது).
கோபாலகிருஷ்ணபாரதி கீர்த்தனம், பூர்விகல்யாணி ராகம், ரூபகதாளம்

N. Ganesan

unread,
Apr 29, 2025, 2:47:55 PMApr 29
to Santhavasantham
சிற்றநேமம் = சிறு + நேமம் (நேமம் < நியமம்)
-------------------------------

சிற்றநேமம் என திருத்துறைப்பூண்டி அருகே சிவாலயம் உள்ள ஊர் அழைக்கப்படுகிறது. அக்கோயிலின் அண்மைக்காலமாக பூஜைகள் இல்லாமல் இருக்கின்றன. அதுபற்றிய செய்தி கொடுத்துள்ளேன். காவேரி ஆறுபாயும் சமவெளி, கழிமுகப் பிரதேசங்களில் - திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் -  உள்ள நியமம் என்ற பெயர்களைக் கொண்ட மூன்று ஊர்கள் இருக்கின்றன.  அவற்றுள் ஒன்றான, சிற்றநேமம் பார்த்தோம். மற்றவை இரண்டும் பெரிய ஊர்கள். புகழ்பெற்ற கோயில்கள் கொண்டவை. எனவேதான், இது சிற்ற நேமம்.

(1) நியமம். தற்காலத்தே, நேமம் என்கிறனர். அப்பர் பாடிய வைப்புத்தலம். அழிபட்ட தேவாரப் பதிகம் இருந்திருக்கலாம், ஏனெனில் பெரிய புராணத்தில் தனியாக இவ்வூர் சுட்டப்படுகிறது.  ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, "நியமம்" வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

 பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்
      பன்முகில்போல் மேனிப்ப வந்த நாதர்
 நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
       நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
 கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
       கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
 பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
      புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. - அப்பர் (6.13.4)

இந்த நியமம் கல்வெட்டுகள் சோழர்கள் வென்றபோது செந்தலைக்கு எடுத்துச் சென்று பொருத்தினர். செந்தலைக் கல்வெட்டில் நல்ல செய்யுள்கள் உள்ளன. தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய உதவுகின்றவை அவை. உ-ம்:

   பாச்சில் வேள் நம்பன் பாடிய வெண்பா (செந்தலைக் கல்வெட்டு) :

  வஞ்சிப்பூச் சூடிய வாளமருள் வாகைப்பூக்
  குஞ்சிக் கமழ்கண்ணிக்  கோமாறன் - தஞ்சைக்கோன்
  கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
  தோளால் உலகளிக்கும் தோள்"

உரை: வஞ்சிப் பூச்சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறனும், தஞ்சை அரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரைச் சினந்து  கொன்றளித்தவனுமாகிய சுவரன் மாறனின் தோள்களே இவ்வுலகத்தைக்  காக்கும் தோள்கள்!  இக் கல்வெட்டுப் பாடலில் சுவரன் மாறனை  "தஞ்சைக்கோன்" என்று குறிப்பிடுவது,   விஜயாலயர் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையை கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது.

நொச்சியம் - இங்கே பழைய கோயிலும் இல்லை, கல்வெட்டு, தேவாரம் ஒன்றுமில்லை. எனவே இது நொச்சி நியமங்கிழார் ஊரன்று. நொ.நி. கிழார் பாடல்களைப் படித்தால் இம்முடிபு தெளிவாகும். நற்றிணை முதற் பதிப்பாசிரியர் குறிப்புக் காண்க. நியமம் கல்வெட்டில் "பாச்சில் வேள் நம்பன்" பாடியுள்ளான். அதுபோல, நியமங்கிழார் ஊரில் இருக்கும் வேளாளரில் இருந்து மலையாளிகள் ஆக மாறியுள்ளர், நம்படிமார் (நம்படிகள் நம்பன் + அடிகள்) என்று அழைக்கப்படுகின்றனர். நொச்சி நியமம் ஊர் யாது என்னும் கட்டுரையில் அக் கிழார் பாடல்கள் அகச்சான்றும், கேரள நியமங்களில் (கோயில்களில்) அவர்கட்கு உள்ள வேத யக்ஞ உரிமை, தம் நாட்டின் சிறப்பைச் சொல்லும் முறை பார்ப்போம். அந்நாடு இன்றும் வேங்கைநாடு என அழைக்கப்படுகிறது. வேங்கைநாட்டு நம்பிடிகள் ....

 திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தோகூர் சாலையில் 3 கி.மீ-ல் சாலையோரத்தில் "நேமம்" உள்ளது.  அலங்காரநாயகி அம்பாள் ஸமேத ஐராவதீசுவரர் கோயில்.
https://shivatemples.com/vt/vt_kovil3/vt115.html

(2) பரிதி நியமம்.

அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற தலம். பெரிய கோயில். பாஸ்கரேசுவரர் - மங்களாம்பிகை.  
சம்பந்தர் தேவாரம், தருமபுரம் சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள்: https://www.youtube.com/watch?v=pTznfdtJl8Q

ஊரும் பேரும், சொல்லின் செல்வர்:
https://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=288
பரிதி நியமம்:    தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது.
நியமம் என்பது கோயில்.2 எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில்3
ஆகும். பிற்காலத்தில் பரிதியப்பர் என்னும் பெயர் அக் கோயிற்
பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர் கோயில் என
மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது.

பரிதியப்பர், பருத்தியப்பர் ஆனது, கொங்குநாட்டில், பரிதிப்பள்ளி பருத்திப்பள்ளி என அழைப்பது போலாகும்.
மரைக்காடு (> மறைக்காடி) யாழைப் பழித்த மொழியாள் "வாழைப்பழத்து அம்மன்" ஆனதும் ஒக்கும்.

நொச்சி நியமம் பற்றி விரிவாகப் பார்ப்போம். அவ்வூர்க் கிழார் பாடல்களை ஆராய்வோம்.
நா. கணேசன்


On Tue, Apr 29, 2025 at 6:19 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages