249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு |
|
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
|
திணையும் துறையும் அவை.
|
|
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
முதலில் மாத்துப் பந்தல் என்பது கட்டும் மண்ணார்கள்தும்பி சேரகீரனார் கலந்துகொண்ட துயர்விழவில் ஈடுபட்டிருக்கலாம்.இதுபோன்ற நாட்களில் மங்கலர் பங்கு என்ன? பார்ப்போம்.முதலில், சுளகு, முறம் பற்றிய செய்திகள்.சுளகு குளகு போல வாய் குறுகி இருக்கும். சேம்பின் இலைபோலஇருப்பது சுளகு (கலித்தொகை). அதன் சொற்பிறப்புதொழில் அடிப்படையில் துள்- எனும் வினை காரணமாக எழுந்தது.வாய் குறுகும் சுளகு பார்த்து எழும் ஓர் வினைச்சொல்:சுளுக்கு-தல். ‘கழுத்து சுளுக்கிக்கிச்சு’ என்பதில் உள்ள சுளுக்குதல் - உள்வாங்குதல்.சுளுக்கு- > உளுக்கு- இது, உளுக்கார்தல் என்னும் வினைச்சொல் ஆகிறது.உளுக்கார்தல் என்னும் இலக்கிய வழக்கை இன்றும் பயன்படுத்துகிறோம்.உட்கார்தல் என்று உளுக்கார்தல் சுருங்கிவிட்டது. “வாங்கோ, உட்காருங்கோ”.சுளகுக்கு மாறாக விரிவான வாயை உடையது முறம்.கூலங்கள் தூற்றப் பயன்படும் முறம். வடமொழியில் தூற்று- என்னும்வினைச்சொல் சூர்ப்பம் எனப் பெயர்ந்தது.முறம்: என்னும் சொல்லாய்வு. முரலுதல் என்றால்வண்டு, தேனீ, சிதர், ஞிமிறு, சுரும்பு, ... என்னும் அளி இனங்கள்,பறவை இனங்கள் றெக்கையை மேலுங்கீழும் அடித்தல்.”வரிவண்டு முரன்று பாட” முரல்தல் = முரன்றுதல்.பல சொற்கள் ர/ற மாற்றமுண்டு. கருப்பு/கறுப்பு; முரிதல்/முறிதல்.முரலுதல் - மேலும் கீழும் விரைந்து அசைத்து தானியங்களைப்புடைத்தல் இதற்கான வேளாண் தொழிற்கருவி: முறம். இது முரம் < முரல்-என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயராகும்.
NG
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறுந்தொகை
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
சங்க இலக்கியத்தில் நீறு என்பது இருபொருளில் வழங்கும்: (1) வெண்ணீறு மற்றும் (2) புழுதி. வெள்ளையான நீறு (உ-ம்: வெண்களர் நிலத்தில்)போல உள்ள புழுதி. சில சமயங்களில் புழுதி என்ற பெயருக்குப் பொதுமை ஆகிறது. நீற்றறை என்றால் சுண்ணாம்புக் காளவாய்.நீற்றுப்போனது என்றால் தூசி படிதலைக் குறிக்கும். உ-ம்: நீற்றுப் பூசணிக்காய். சங்க இலக்கியத்தில் தலைவன் மறைந்தபிறகுதலைவி செய்யும் சடங்கை விவரிக்கும் பாடல்களுள் முக்கியமானது புறம் 249. பெரிய அகல்நாட்டை ஆளும் தலைவன் இறந்துபடுகிறான்.முறம் போன்ற சின்னஞ்சிறிய இடத்தை, சாணத்தால் மெழுகிப் படையல் இடுகிறாள். நடுகல்லை நட்டு வைத்திருப்பர். அதில்பீடும் பெயரும் எழுதுவது வழக்கம் என பிற சங்கப் பாடல்களில் காண்கிறோம்.அக்கால கட்டத்தில் பல்வேறு சமயங்கள் தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வந்து கூடின. ஒன்றுக்கொன்று மோதின, பின்னர்சம நிலை அடைந்தன. அவற்றுள் மாவிரதியர் சமயத்தை, அதுகொண்ட தாக்கத்தை இப்பாடலில் காண்கிறோம்.பக்தி இலக்கியக் காலத்திலும், பின்னரும் இச்சமயக் கூறுகள் தமிழர் வாழ்வில் பெரும்பான்மையாய் இருக்கிறது.மாவிரதிகள், காபாலிகர், காளாமுகர், பாசுபதர், ராசிகணத்தார், சமணர், பௌத்தர், சமணரில் ஒருவகையானஆஜீவகர், வைணவர், வருண வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட வைதிகம் எல்லாம் வந்து அடைந்தன.மாவிரதியர் (மஹாவிராத்ய) சமயம் சுடுகாட்டுச் சுடலையில் வெண்ணீறு, வெள்ளெலும்பு இவற்றுக்குப் பேரிடம்அளித்த சமயம், பாசுபதமும் அவ்வாறே. இதனால் வெண்ணீறு திருநீறு எனப்பட்டது. சைவத்தின் உட்பிரிவுகளாகியமாவிரதியர், காபாலிகர், காளாமுகர், பாசுபதர் போற்றிய வெண்ணீறு வாழ்க்கை நிலையாமை காரணமாக,கணவனை இழக்கும் தலைவிக்குச் செய்யும் சடங்குகளில் ஒன்றாகிவிட்டது என்பது இப்பாடலால் தெரிகிறது.கபிலபரணர், சேரசோழபாண்டியர், ... போல உம்மைத்தொகையாக கிராமங்களில் வழங்கும் தொடர்:வண்ணா(ர)நாவிதர். இவர்கள் இல்லாமல் எச் சடங்கும் நிகழாது. பண்டிதர், மங்கலர் என்னும் மருத்துவர்பங்குபுறம் 249-ல் முக்கியமானது. பண்டிதரில் புகழ்பெற்றார் சிலரைப் பார்த்தோம். சங்க காலப் பாணர்வகையினரில்மங்கல அந்தணர்கள் ஒரு மிக முக்கியமான பிரிவினர். பாணர் என்று படிக்கும் இடங்களில் இவர்கள் பங்கைஇப்போதைய ஆசிரியர்கள் கவனத்துக்குக் கொண்ர்தலைக் காணோம். ராசிகணம் - ராசிபுரம்,பசுபதி (சேரர் தலைநகர் வஞ்சி கோயில் இறைவன் பெயர்), போன்றன மாவிரதிகளுக்கு இருந்தமுக்கியத்துவத்தைக் காட்டும். அண்மைக்காலம் வரை தும்பி என்ற பெயர் பரம்பரைப் புலவர்களுக்குஇருந்தது. தும்பி சேரகீரன் பாடிய பாடல். தும்பி புலவர் பெயராகவும், சேர நாட்டினர் என்பதும், கீரன்என்னும் பூசாரித் தொழிலர் என்றும் கொள்ளலாம்." திருநீறுசிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்." (தே. பாவாணர், ஒப்பியன் மொழிநூல்).
நீறு என்றால் வெண்ணீறு, புழுதி எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. புழுதி/பூழ்தி > பூதி (விபூதி) என்கிறார் பாவாணர்.
தும்பி சேரகீரனார் பாட்டில், முறம் என்பது இடத்தின் சிற்றளவைக் காட்டுதற்கு வரும் உவமைச்சொல் தான். இப்பாட்டில் சுளகுக்கு முக்கியத்துவம் ஒன்றுமில்லை. முக்கியமானவள் இப்பாட்டில் அகல்நாட்டின் தலைவனை இழந்த தலைவிதான். அவள் தவக்கோலம் பூண்டு, வாழ்நாளின் எஞ்சிய பகுதியைச் செலவிடுவாள். அதை ஊராரும், உற்றாரும் அறியச் செய்யும் சடங்கு. இங்கே, தும்பி சேரகீரனார் மாவிரதியர், பாசுபதரின் திரிபுண்டரம் என்னும் கலைச்சொல்லை “வரிநீறு” என்று தமிழர் அழைத்து இருப்பதைப் பதிவுசெய்துள்ளார்.
குறுந்தொகை
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
அதே போன்றது, புறம் 249-ம் பாடல்:வரிநீறு ஆடு, அழுதல் ஆனாக் கண்ணள்;சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்என்றால் பொருள் புரியும்.வரிநீறு ஆடுதல் சுளகுக்கு இல்லை, எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
-------------------------தற்போது, நலம்பொலம் நிகழ்வுகளில் ஶாமியானா எனப்படும் தற்காலிக பந்தலைத் துணியால் (ஜமுக்காளம் போன்றதுணி)விரைவில் அமைத்து மாற்றுகிறோம். ஶாமியானா (ஷாமியானா) பாரசீகச் சொல் ஆகும்.புறநானூற்றுக் காலத்தில் சடங்குகளில் மண்ணார்பங்கு உண்டு. ஷாமியானாவுக்கு நல்ல தமிழ்ச்சொல்லாக, இந்த நிகழ்வுகளில் இருந்து எடுக்கமுடியும். உ-ம்: விழாவில் பங்குபற்றினோர்அமர, உணவுண்ண மாத்து விரிப்பர் மண்ணார்கள். மாத்து = மாற்று. விரைவில் மாற்றிஇதனை ஏற்பாடு செய்யமுடியும். அதேபோல், கம்புகளை நட்டு ஏற்படுத்துவது மாற்றுப்பந்தல்.இதற்கு வன்ணார்கள் சீலைகளைக் கொடுத்துதவுவர். ஷாமியானா = மாற்றுப்பந்தர்.துணியால் அமைக்கப்படும் பந்தலைப்பற்றி, புறம் 249 பாடலில் உள்ளது போன்ற நிகழ்ச்சியில்,சீலைகளை விரித்து அமைக்கப்படும் மாத்துப்பந்தல் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.<<<தற்காலத்தில், "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குப் பந்தல்களாக அமைக்கப்படுகின்றன. இடுதல் மற்றும் அகற்றுதல் என்ற செயல்களின் எளிமை மற்றும் விரைவு பற்றியே இத்தகைய துணிப்பந்தல்கள் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. "சாமியானா' என்பது தமிழ்ச்சொல் அன்று.
"சாமியானா' என்ற பெயரில் அழைக்கப்படும் துணிப்பந்தல்கள் சங்க காலத்தில் புடைவைத் துணிப்பந்தல்களாக இருந்துள்ளன. அது, இறப்பு நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளன. புறநானூற்றுப் பாடலொன்றில் இக்குறிப்பு (பா.260) உள்ளது.
உவமைகளை ஆள்வதில் திறம்மிக்கவரான வடமோதங்கிழார் எனும் புலவரின் அப்பாடல், "துணிப்பந்தல்' பற்றிய குறிப்பினைத் தருகிறது. அதில், போரில் மாண்ட வீரர்களுக்கென நாட்டப்பெறும் நடுகல்லிற்கான மேற்கூரையாகப் புடைவைத் துணிப்பந்தல் அமைக்கப்படும் வழக்கம் குறித்த செய்தி பொதிந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரை நுட்பமிக்கது.
ஒருகாலத்தில், பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றதை அறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வீரனொருவன், பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான். என்றாலும், நிரையை மீட்பதற்காகச் செய்த போரில், பகைவரது அம்பு தைக்க, அவன் புண்பட்டிருந்தான்; ஊரருகே வந்ததும் இறந்தும் போனான்.
பின்பு, அவனது வீரச்செயலை மெச்சிய ஊரார், அவனுக்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் வாழ்ந்த காலத்தில், நிரம்பக் கொடை வழங்கிப் புகழ்பெற்றவன். அவன் போரில் வென்று, நடுகல்லாகிவிட்ட செய்தியை அறியாத பாணன் ஒருவன், வழக்கம்போல் பொருள்பெற அவன் இருப்பிடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப் பாணனைப் பார்த்த உள்ளூர்ப் பாணன் ஒருவன் கூறுகிறான், ""பாணனே! இனி நீ, ஏற்கெனவே அத்தலைவன் உனக்குத் தந்த நிலத்தை உழுது உண்பதோ, வேறொருவரிடம் சென்று இரந்து பெற்று உண்பதோ செய்யலாமே தவிர, வேறெதுவும் செய்வதற்கில்லை. ஏனெனில், நிரை மீட்பதற்காகப் போரிட்டு, தோல் உரிக்கும் பாம்பு போல, புகழுடம்பாகிய சட்டையை விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்று விட்டான். அவனது பெயர், புடைவையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடப்பட்டுள்ள நடுகல்லின்மேல் எழுதப்பட்டுள்ளது. அங்குச் சென்று அதனைப் பார்த்து வழிபடுக'' என்றும் கூறி வருந்துகின்றான்.
"கையறுநிலை' என்ற துறையிலமைந்த அப்புறப்பாடலின் பின்வரும் பகுதிதான், நடுகல்லின் மேற்கூரையாக இடப்பட்ட புடைவைத் துணியாலான "சங்ககாலப் பந்தலைச்' சுட்டுகிறது.
"உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்சை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்
இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும்.
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.
"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)
>> (SVS, Prof. of Tamil Linguistics, Annamalai U.)
குறள் 92-ல் உள்ளதுபோல, இனும் எனும் உவம உருபு “தாயினும் நல்லன்” என்ற தொடரில் காண்கிறோம்.
இன் என்ற உவம உருபு ஒப்புப் பொருளில் வருவது புறம் 249-ல்.
சுளகின் சீறிடம்! (புறம் 249)
[...]
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, | |
10 | அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு | |
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, | |
அழுதல் ஆனாக் கண்ணள், | |
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. | |
திணையும் துறையும் அவை. |
....................தும்பி சேர கீரனார் பாடியது. |
(தற்குறி = தன்+குறி, சுளகு + இன் + சீறிடம் = சுளகிற்சீறிடம், ....)
இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும்.
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.
"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)
இலக்கியங்களில் அன்ன, ஆங்க, ஆங்கு, நிகர்ப்ப முதலிய சொற்கள் உவமைப் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அன்ன, ஒப்ப, போல் நிகர்ப்ப ஆகியவை பெயரைக்கொண்டு முடியும். பால் அன்ன வெண்மை, பால்போல வெண்மை, பால் நிகர்ப்ப வெண்மை என்று சொல்லலாம். ஆனால், ஆங்கு என்பது வினைச்சொல் குறிப்பாகப் பெயரெச்சத்தை ஏற்று வினையைக்கொண்டே முடியும். சொன்னாங்கு (சொன்ன ஆங்கு) செய்தார், பேசியாங்கு பணம் கொடுத்தார் என்றுதான் வழங்கப்படும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)
பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லை என்றாற்போல உயிர்களிடத்து அருள் இல்லாதவருக்கு மேல் உலக இன்பம் இல்லை என்பதில் ஆங்கு உவமைப் பொருளில் வந்துள்ளது.
இலக்கியத்தில் உறழ, நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவையும் உவம உருபாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் உறழ் என்பது மாறுபாடு பற்றி மட்டும் காட்டுவது. "முழவு உறழ் திணி தோள்' (முழவினைப் போன்று திண்ணிய தோள்) எனும் போது உவமையோடு ஒப்புமையை அழுத்திக் கூறுகிற நிலை அமைகிறது.
நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவை கருத்தாடல் நோக்கில் உவமையோடு பேசுபவரின் சில உணர்வுகளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். "நடுங்க படங்கெழு நாக நடுங்கும் அல்குல்' படம் எடுத்து ஆடும் பாம்பு ஒத்த அல்குல் என்ற உவமைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் அல்குலின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாக நடுங்கும் என்பது உவம உருபு போலக் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம். கடுப்ப (கடுக்கும்) "கார்மழை முழக்கு இசை கடுக்கும் முனை' (கார் மேகங்களின் இடி முழக்கம்போல ஒலிக்கும் போர் முனை (அகநா.14:20-21).
எள்ள - எள்ளல் - இகழ்தல். "கோங்கின் அவிர்முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை' (சிறுபா.25-26) கோங்கின் முகையை இகழ்ந்து அணிகலன்களுக்கு இடையே உள்ள முலை). இங்கு இகழ்தல் பொருள் தெளிவாக உள்ளது. உவமேயத்தை நோக்க உவமை இழிந்த பொருள் என்று கருதப்படுகிறது.
வெல்ல - வெல்லுதல் - வெற்றிபெறல். "வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்க் கூந்தல்' (ஐங்குறு. 324.45 வேங்கைப்பூவை வென்ற தேமலை உடைய தேன்சொட்டும் கூந்தல்). எனவே, உவமையை உவமானம் உயர்ந்த பொருளாகக் கருதலாம்.
இங்கும் அவற்றின் அகராதிப் பொருள், உவமேயப் பொருள் உயர்ந்தவை என்பதை உணர்த்துவதால் பொருண்மையியல் நோக்கில் ஒரு புது வகை அதாவது, மீஉயர் உவமை என்று கருதலாம். அதன் சிறப்பை அறிந்துகொள்ள ஆங்கில மொழியின் உவமை பற்றிய அறிவு பயன்படும்.
ஆங்கில மொழியில் பெயரடை (adjective) பகுதியாய் உவமை அமையும். அங்கு ஒப்பு (பாஸிட்டிவ் - comparative), உறழ்வு (கம்பேரட்டிவ் - ஸ்ரீர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங்) மீ உயர்வு (சூப்பர்லேட்டிவ் - superlative) என்று மூன்று நிலையில் உவமை வேறுபடுத்தப்படுகிறது. டால் (taller.... than) இர் விகுதி சேர்த்தால் டாலர்... தென் (talllest) உறழ் உவமை. டாலஸ்டு
(ற்ஹப்ப்ப்ங்ள்ற்) மீ உயர்வு உவமை ஆகும். அங்கு மீ உயர்வு என்பது உருபு மூலம் உணர்த்தப்படுகிறது. மாறாகத் தமிழில் சொல் மூலம் அந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.
தமிழில் மீ உயர்வு உவமை என்ற கருத்து வெல்ல, வியப்ப, மருள போன்றவை உவம உருபுகளாகக் கையாளும்போது வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அது இன்னொரு நிலையிலும் உறுதியாவது அறியத் தகுந்தது. அன்ன, ஆங்கு என்பது சங்க இலக்கியங்களில் உவமை உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது "அ' என்ற சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்த சொல் ஆகும்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று வகை சுட்டுகள் உள்ளன. அவை முறையே சேய்மை, அண்மை, மிக நெடுங்தூரம் என்ற பொருள்படும். இங்கு என்பது பேசுவோர் இடத்தில் உள்ளது என்று பொருள். அங்கு என்று சொன்னால் பேசுவோர் இடத்தைத் தாண்டிய தூரத்தில் உள்ளது என்று பொருள். உது, ஊங்கு என்று சொன்னால் வெகுதூரத்தில் இருக்கிறது என்று பொருள். உகரச் சுட்டு தற்கால வழக்கில் இல்லை. பழங்கால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி ஆங்கு என்பது சேய்மை (தூரம்) உணர்த்தும் அகரச்சுட்டு அடிப்படையாகவும், ஊங்கு வெகுதூரம் உகரச் சுட்டு அடிப்படையாகவும் உண்டான சொற்கள் ஆகும்.
திருக்குறளில் ஊங்கு என்பதும் உவமை உருபாகக் கையாளப்பட்டுள்ளது. 31, 32,122,460,644,1065 ஆகிய குறள்களில் ஊங்கு உவமையாக அமைந்துள்ளது. ஊங்கு என்பது மிக உயர்ந்த பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளது போல் மீஉயர்வு உவமையாகக் கருதலாம். அதாவது வெல்ல, வியப்ப, ஊங்கு முதலியவை தமிழில் மீ உயர்வு உவமைச் சொற்களாகக் கருதலாம்.
பொருள் வேறுபாடு உள்ள சொற்களை உவம உருபுகளாகக் கையாளும்போது, உவமைகளுக்குள் நுண்ணிய பொருள் மாறுபாடு அமைந்திருப்பது கவனத்துக்கு உரியது. அந்த நிலையில் ஒப்பு, உறழ்வு என்று இரண்டு வகையோடு மீ உயர்வு என்ற புதிய வகையும் கொள்ள இடம்கொடுக்கிறது.
On Sat, Mar 28, 2020 at 10:29 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> "திலகம் 'தைஇய 'தேம்கமழ் நுதல்" என்று வரும்போது நீறாடு நுதல் என புலவர் எழுதுவாரா? திருநீற்றை கேழல்போல் கொட்டிக்கொண்டாளா, அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை?
>
> அல்லது, அடங்கிய கற்பின் நீறாடுநுதல் மடந்தை என்றல்லவா எழுதணும்? மடந்தைக்கு இரண்டு அடைமொழிகள்தான், 1. அடங்கிய கற்பு, 2. ஆய் நுதல். அவள் பின்னர் அழுதகண்ணள் ஆனது தலைவனின் பிரிவு.
>இல்லை. ஆராய்தற்குரிய நுதலை உடைய தலைவி திலகம் தைத்தலை விடுத்து, வரிநீறு ஆடும் கோலத்தைக் கண்டுபுலவர் கவல்கிறார். முன்பு இருந்த நுதலின் செம்மைக்கும், இப்போதைய தவ நிலைக்கும் உள்ள வெறுபாட்டைக் குறிக்கிறார்.திலகம் தைஇய தேம்கமழ் நுதல் முடிந்த நிலையை இப்பாடல் பதிகிறது.
வரிநீறாடு அழுகண்ணள், சுளகின் சீறிடம் நீக்கி ஆப்பி மெழுகும் அழுகண்ணள் எனக் கொள்ள வேண்டியுள்ளது.
வரிநீறாடுதல் முறத்துக்கு இல்லை ஆதலால்.
நீறாடி என்றால் சிவபெருமான். திரிபுண்டரம் நெற்றிக்கு மட்டும் இல்லை. ஆய்நுதல் = சிறிய நுதல் பாட்டிலேகூறுதல் வரிவரியாய் நீறாடலுக்கு.நீறாடி என்னும் சிவன் கேழல்போல் கொட்டிக்கொள்கிறானா?சிவன் நீறாடுதல் போல, தலைவி (ஆய்நுதல் மடந்தை) வரிநீறு ஆடுகிறாள் என்கிரது புறநானூறு.
A transitional event in the life of the Heroine of the poem, puRam 249 -
'நல்ல நெய்ப்புடைய கூந்தல்' என்று தோழியர் புகழ்ந்துரைத்த கூந்தலில்
சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களை நடுவே இடு
பூக்களாக இட்டு, பசுமையான குவளை மலர்களின் இதழ்களையும்
கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டு, 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக்
கோலங்களை வைப்பதற்குரிய இடத்தில் வைத்து, திலகமிட்ட நறுமணம்
பொருந்திய அழகிய நெற்றியில் மகர (சுறா) மீனின் திறந்த வாயினைப்
போன்ற வடிவில் அமைந்த தலைக் கோலத்தையும் வைத்து,
முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்
பூவையும் செருகி, கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய
மருதின் ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மீது இட்டு,
கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த
அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில்வளைய வைத்து ..." (திருமுருகு)இப்படி இருந்த நிலை மாறி, வரிநீறாடு ஆய்நுதல் மடந்தை
நற்பெரும் தவத்தள் ஆகும் நிலை.
வரிநீறாடுதல் (புறம் 249) - திரிபுண்டரம் தரித்தல்:பாடல் தெளிவாக அடிகள் 11-12 இருக்கிறது.வரிநீறு என்ற ஈற்றுச்சீர் சிதைத்தால் அடுத்த அடியில் வகையுளி.
புறப்பாட்டு 249:
------------------------------
249
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
பொருள்:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.XnNlcHJOnIU
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).
நா. கணேசன்