கொடி - ஏற்றம் நீர் இறைப்பில் (தோன்றி மரம், வேழம், வெதிர் மலரும் பருவத்தில் கொடி)

63 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 18, 2020, 11:48:33 AM5/18/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Niranjan Bharathi, podhuvan sengai, S. V. Shanmukam
பருவமழையால் (Monsoon) நீரைப்பெறும் இந்திய வேளாண்மையில் நீர்மேலாண்மை 5000 ஆண்டுகளாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியர்கள் செய்த முதல் எந்திரம் ஏற்றம் எனலாம். சிந்து சமவெளி, சுமேரியா, எகிப்து என்று ஆசியாவின் பழமையான நாகரீகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரம், ஆசிய நாடுகளில் இன்றும் உபயோகத்தில் உள்ளது. ஏற்றத்தில் இரண்டு பாகங்கள் முக்கியமானவை: (1) தாழ்மரம் - இதில் எதிர்எடை (counterweight) பொருந்தியிருக்கும். இதைத் தாழ்த்திக் கிணற்றிலோ, ஆற்றிலோ நீர் சேந்துவர். (2) கொடி - Rope or pole of a well-sweep; ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு. (W.) (MTL)

மரக்கிளையின் பெயர் சினை. தேரில் நிற்கும் கம்பத்தைச் சினை (அ) கொடிஞ்சி (< கொடி) என்பர். இங்கே, கொடி என்பது ஏற்றத்தின் கொடி. யாழ்ப்பாணத்து மௌனகுரு அருளம்பல சுவாமிகளைப் புகழ்கையில், பாரதியார்
“ஆசை யெனும் கொடிக்கு, ஒரு தாழ்மரமே போன்றான்” என்று ஏற்றத்தின் இரு பிரதான பாகங்களையும் பாடுகிறார்.
பாரதி புகழும் குள்ளச்சாமி: https://ta.wikipedia.org/wiki/மௌனகுரு_அருளம்பல_சுவாமிகள்
ஆசையை ஏற்றத்தின் கொடியாக உருவகித்து, குள்ளச்சாமியைத் தாழ்மரமாக உவமிக்கிறார் பாரதியார். ஏற்றத்தின் கொடியைத் நீர்நிலையில் தாழ்த்துவது தாழ்மரம். அப்போது கொடியில் உள்ள கமலை நீரைப் பருகும். உள்ளக் கமலத்தில் அருள்வெள்ளத்தைப் பருகச் செய்து, ஆசையாகிய கொடியைத் தணிக்கிறார் சுவாமிகள் என்று உருவக அணியாகச் சொல்லியுள்ளார். [Ref. 1]

தேரின் பல பாகங்களில் கொடி என்ற கம்பம் உண்டு. சினை என்று சங்க இலக்கியத்தில் இருக்கும். கொடிஞ்சி/கொடுஞ்சி என்றும் தேர்ச்சினைக்குப் பெயர் உண்டு. கொடி > கொடிஞ்சி (Cf. ஏற்றத்தின் கொடி).

சங்க இலக்கியத்தில் கொடிக்கு ஒரு பொருள்:
----------------------------------------------------------

சங்க இலக்கியத்திலும் பின்னரும், Sterculia என்னும் இனத்து மரங்களுக்குத் தோன்றி என்ற பெயரும், அவற்றின் தோடுகள் அவிழ்ந்து மலராக விளக்குகள் போல மலர்தலும் விரிவாகப் பார்த்தோம். ஸ்டெர்குலியா சாதி மரங்கள் பல. அவற்றுள் சிறப்பானது ஸ்கார்லெட் ஸ்டெர்குலியா என்ற அறிவியற்பெயர் கொண்டது. இலையில்லாத வாதுகளில், பவள நிறத்தில் பூக்கள் மலரும் இந்தத் தோன்றி மரங்களில். இதனை விரிவாக 2000 ஆண்டுகளாகத் தமிழ்ப் புலவோர்கள் பாடியுளர். இலையில்லாத தோன்றிச் சினைகள் “விடுகொடி” என்று பரிபாடலில் இறந்தகால வினைத்தொகையாகப் பாடியுள்ளனர். இலைவிடுத்த கொடி என்னும் விடுகொடி எதிர்வரும் மாதங்களில் இலை தழைத்துவிடும். பிறகு இலை விடுக்கும். இந்த வருடாந்திரச் சுழற்சியில் விடுகொடிப் பருவத்தில் தோன்றிப் பூ சுடர்விளக்கு என்கிறது சங்க இலக்கியம். இந்தத் தோன்றியின் மலர்கள் சேவலின் சூட்டுக்கு (> ஜூட/ஜுட்டு, ஸம்ஸ்கிருதம்) உவமையாகின்றன. காந்தள் பூ அடிப்பாகம் மஞ்சளும், அதன் மேல் சிவப்பும் கொண்டவை. எனவே, தோன்றியைச் செவலின் கொண்டைக்கு உவமை சொல்லினர். காந்தள் அதற்குப் பொருந்தாது என்பது கரதலாமலகம்.
தோன்றி மரமும், சிறுதோன்றியும்:

ஏற்றத்தின் தாழ்மரமும், கொடியும் (Lever & Pole in Counterpoise Water-lift):
------------------------------------------------
பாரதத்தில் ஏற்றத்தின் கொடி, தாழ்மரம் காட்டும் சில ஒளிப்படங்கள் இணைத்துள்ளேன். காண்க. சங்க இலக்கியத்தில் கொடி என்று இப்பொருள் வரும் சில இடங்கள் பற்றி மடலாடல் செய்யலாம்.


நா. கணேசன்
Reference 1: ஹரிமொழி, தாழ்மரமும், கொடியும்

REVIEW OF PUMPS AND WATER LIFTNG TECHNIQUES

தாழ்மரம், கொடி - ஏற்றத்தில்.
மாராட்டிரத்தில் ஏற்றம்:
water-lift-irrigation-manually-by-farmer-konkan-maharashtra-india-A9KX80.jpg
ஏற்றத்தின் கொடி:
water-lift-irrigation-manually-konkan-maharashtra-india-A9KX8A.jpg
கொடிக் கமலை (கவலை என்பர் சில இடங்களில்)
kodi-and-woman.jpg
Counterpoise Water-lift (ஏற்றம்): Lever (தாழ்மரம்), Pole (கொடி)
AH810E47.gif


N. Ganesan

unread,
May 19, 2020, 12:08:28 AM5/19/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Niranjan Bharathi, podhuvan sengai, S. V. Shanmukam
கொடி என்றால் மரக்கிளை (branch, pole) என்பதும், அக் கொடி என்பது ஏற்றத்தில் பயன்படுவதும், தேரின் கம்பமாக இருப்பதும் கண்டோம். தோன்றி இன மரங்கள் இலையை உதிர்த்துவிடும் காலத்தில் விளக்குத் தீ போன்ற மலர்களைப் பூப்பவை. அப் பருவகாலத்தில் தோன்றி மரக்கிளைகளை, விடுகொடி என்பது சங்க இலக்கியத்தில் பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோன்றி மரங்களில் சில வகுப்புகளைப் பார்த்தால் பரிபாடல் தொடரின் அர்த்தம் நன்கு புலப்படும்.
தோன்றி மரமும், பூவும் - வர்ணனை:
வள்இதழ் நிரைதொறும்
விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
பவழத் தன்ன செம்பூத் தாஅய்” பரி , 4. 3:16 (கேசவனார்)
பவழம் போன்ற பூக்கள் மரம் முழுதும் அலங்கரிக்கும். அப்போது, தோன்றிமரக் கிளைகளில் இலை உதிர்ந்திருக்கும்.
இலையற்ற வாதுகளை “விடுகொடி” எனக் கூறுகிறார். தோன்றி மரங்களைப் பார்ப்போம். விடுகொடி இறந்தகால வினைத்தொகைக்கு ஓர் உதாரணம். (வறுசோறு - ஃப்ரைட் ரைஸின் தமிழ் போல). தோல் (அதாவது, தோடு) என்பதோடு தோன்றி தொடர்புடையது.
தோன்றி - Sterculia colorata (Scarlet Sterculia) - விடு கொடியில் விளக்கன்ன மலர்கள்!
Scarlet Sterculia-3.jpg
தொண்டி (< தோன்றி, காடர்) - Sterculia guttatta
3-Mullaianagiri_20151203_132923 (25).jpg
Sterculia foetida- கசங்கம்
பிணர் என்று இத் தோன்றி மரத்துக்கு ஒருபெயர். பூ, காய்கள் பினைந்து இருப்பதால்.
பிணர்வாயில் > பிணராயி(ல்) விஜயன் கேரள முதல்வர்.
DSC06507 (15).JPG
Sterculia urens - செந்தணக்கு, பேய்மரம்
The tree remains leafless for more than six months. Leaves start falling in October, and most trees are completely bare by December (left). New leaves appear only by the end of May or early June (right). (Photo: Anish Andheria)
(இந்த விடுகொடிப் பருவத்தில் தோன்றி பூக்கும்.)
Sterculia_urens_raigad_maharashtra_2.jpg
Sterculia villosa (woolly ordure tree)
800px-Sterculia_villosa_fruits,_AJTJ_P1110184.jpg
there are some more Thonri/Thondi (Sterculia) trees in India.

”கொடி என்னும் கருத்துப்பொருளில் சினை, வள்ளி, கொடி எனும் சொற்கள் புறநானூறு, பதிற்றுப்பத்துப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கொடி - பதி.ப. 40-5;43-23;44-10, புறம் 37-3;77-3;120-11
சினை - பதி.ப. 30-4;39-12;41-9, புறம். 11-4;36-8;45-2”

வாங்க சினை பொலிய ஏறி - வளைந்த கொடிஞ்சி பொலிய ஏறி;. அகம் 7-13. சினை அல்லது கொடிஞ்சி =தேரில் இலையில்லாத கம்பம் (Shaft-Pole in a Chariot).
நாணைக் கோக்கும் தண்டம் = கோதண்டம் = வில். (இலை இருக்காது).
தோன்றி மர விடுகொடியில் செம்பூ (பரிபாடல்) = வில்லில் பூக்கும் விளக்கு (பாரதம்.)
விடுகொடி தோன்றி மரத்தில் (Important note: 'viTukoTi' is neither a flag nor a creeper).

ஒவ்வொரு பாடலுக்கும் மகுடமாக ஒரு சொல்/தொடர் அமையும். அதுபோல், விடுகொடி = leafless branch of a thOnri (Sterculia) tree என இப் பரிபாட்டுக்கு அமைந்துள்ளது. எதுபோல் எனில், தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் திராவிட நல்திரு நாடு என அமைத்ததும், தும்பி சேரகீரனார் புறம் 249-ல் வரிநீறு என்று பாசுபத சமயத்தார் அகல்நாட்டில் அறிமுகப்படுத்தியதை முதலில் குறித்ததும், பரணர் நற்றிணை 310-ல் கன்றுபெறு பாணன் என்றதும் அப்பாடல்களின் அரிய மகுடச் சொற்கள் (Key words). இவை எல்லாம் தொகுத்துப் படிக்கிறபோது சங்ககாலத் தமிழர்களின் சமய, சமூக நிலைமை ஒருவாறு விளங்கும். அந்தக் காலத்தைக் காட்டும் கண்ணாடி, Time machine இந்தப்பாடல்கள். தோன்றி என்னும் மரப்பெயரே தற்போது மறைந்துவிட்டது. தாமான் தோன்றி மலை தாந்தோணி மலை ஆகிவிட்டது. Linguistic Archaeology என்னும் துறை புலப்படுத்தும் செய்திகள் இவை. தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன, பூச்சிகள், மீன்கள், மீனலா நீருயிரிகள், செடி, கொடிகள், இட,மலை,யாறு,மக்கட் பெயர்கள் இவற்றைத் தமிழகத்திலும், பிற இந்திய மாநிலங்களின் மொழிகளிலும், கல்வெட்டு, இலக்கியங்களில் ஆய்கிறபோது தமிழ்ச் செம்மொழியின் ஆழம் இந்தியாவெங்கும் காண முடிகிறது. இந்தியாவின் செம்மொழிகள் இரண்டே: http://nganesan.blogspot.com/2010/09/bhk.html  (10 ஆண்டு முந்தைய பதிவு).

N. Ganesan

unread,
May 19, 2020, 8:01:19 AM5/19/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Niranjan Bharathi, podhuvan sengai, S. V. Shanmukam
கொடி என்றால் மரத்தின் சினை/கிளை. இலைகள் இல்லாதது எனக் கண்டோம். தோன்றி மரங்களில் இலை உதிர்ந்து பூக்கும் பருவத்தில் விடு கொடி இருப்பதைச் சங்க இலக்கியம் கூறுகிறது. கொடி என்பது pole என்ற பொருளில் தேர்ப்பாகம், மற்றும் ஏற்றத்தில் பயன்படுகிறது. யாழ்ப்பாணக் குள்ளச்சாமியை “ஆசை என்னும் கொடிக்குத் தாழ்மரம் போன்றான்” எனப் பாடியுள்ளார் பாரதி. ஐங்குறுநூற்றில் கொடி என்னும் சொல் வேழம் (பேய்க்கரும்பு), வெதிர் (வனமூங்கில்) இரண்டுக்கும் பயனாகிறது. வெதிர் - வளைவது எனப் பொருள். வெதிர்த்தல்/விதிர்த்தல். விதிர்ங்கோல் = ட்யூனிங் ஃபோர்க். விதிர்- > விசை. (shooting an arrow off the bow). வில்லில் விசைக்கும் அம்பு.

(1) ஐங்குறுநூறு 91, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்,
கழனி ஊரன் மகள் இவள்,
பழன வெதிரின் கொடிப் பிணையலளே.

இங்கே எருமை தலைவனுக்கு நின்றது. எருமைப் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் ஊரன் என்றது, நல்ல தன்மையை ஆராயாது கெடுக்கும் ஊரன். பழனங்களில் வளரும் மூங்கில் தண்டத்தின் (கொடியின்) உச்சியில் உள்ள பூவைக்கொண்டு மாலையாக அணிந்துள்ளாள் தலைவி. நறுமணம் இல்லாத வெதிர்க் கொடியின் (தண்டின்) பூ மாலை (பிணையல்) என்பதால் ”விளைவிலள் தலைவி” என்கிறது பாடல். தன்னிடம் வந்த தலைவனிடம் வரைவு நீட்டவேண்டா, மணந்துகொள் என்கிறாள் தோழி.:
குறைவேண்டிப் பின்னின்றுவந்த தலைமகற்குத் தோழி, ‘இவள் இளையள், விளைவிலள்’ எனச் சேட்படுத்தது.

(2) ஐங்குறுநூறு 14, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே,
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.

எ-து தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த
தோழி, ‘அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து
ஆற்றாயாகின்றது என்னை?? என்றாட்கு ‘அவன் கொடியனே
யாயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை
யுடைத்து, ஆதலாற்காண்? எனச்சொல்லியது.

(ப-ரை.) நீண்ட கொடியில் பூவினையுடைய வேழம் தீண்டுதலான் வடிக்
கொண்மாத்து வண்டளிர் நுடங்குமென்றது பரத்தையரால் தமக்கு
உளவாகிய மெலிவு கூறியவாறு. வேழம் = பேய்க்கரும்பு.  கொடி = இங்கே, கரும்பின் தண்டு.

(3) கொடிக்கரும்பு உடுத்த வேலி - தண்டுகளை உடைய கரும்பைக்கொண்டு அமைத்த வேலி.
சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 1184

கொடி என்பதற்கு தண்டு/கம்பு ’pole" என்ற பொருளில் உள்ள மூன்று பாடல்கள் இவை. மேலுமிருக்கும்.

N. Ganesan

unread,
May 19, 2020, 8:19:28 AM5/19/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Mon, May 18, 2020 at 11:46 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஏற்றமும் அதை நீர் இறைக்கப் பயன்படுத்தும் முறையும்....
செயல்முறை விளக்கம்:
https://youtu.be/b2zMe5OOu6U

1960 களில் படமாக்கப்பட்ட திரைப்படத்தில்

நனிநன்றி. ஏற்றத்தின் கொடியும் (Pole), தாழ்மரமும் (Lever) தெளிவாகத் தெரிகின்றன. வின்சுலோ அகராதியில் உள்ள “கொடி” என்ற சொல்விளக்கத்தால், தோன்றி மரக்கிளைக்கு ஏன் கொடி என்கிறார் பரிபாட்டில் என்றும், வெதிர் (பேமூங்கில்), வேழம் (பேக்கரும்பு) இவற்றின் தண்டுகளுக்குக் கொடி என ஓரம்போகியார் பாடுதலும், திருத்தக்க தேவர் ’கொடிக் கரும்பு’ என்பதன் பொருள் காணமுடிகிறது. ஏற்றம் பற்றி உருவகமாக, குள்ளச்சாமி புகழ் பாடினார் பாரதி.

இப்போதைய எண்ம நுட்புகொண்டு இன்னும் தெளிவான படங்களாக திரைப்படங்கள் ஆக்கவேண்டும். தியடோர் பாஸ்கரன், கோவை அய்யாமுத்து போன்றோர் எடுத்த படங்களில் பல - உ-ம்: இன்பசாகரன் - மறைந்துவிட்டதாகச் சொன்னார்.

இதே போல் தா, 2-3 இலட்சம் நூல்கள் (1860 - 1980) பிடிஎஃப் ஆகணும். பல்கலைகளில் எம்.ஏ, பிஎச்டி தீஸிஸ் 1985 வரையாவது பிடிஎப் ஆகணும். அப்போது வந்த ஆய்வுகள் போல இப்போது தமிழ்நாட்டுப் பல்கலைகளில் காண்டல் அரிது. பழைய இவையெல்லாம் பிடிஎப் ஆகலைன்னா, விரைவில் காயிதப்பிரதிகள் அழிந்தொழியும்.

நா. கணேசன்

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b35ca5b2-f777-47a8-bec5-9a91192e99f3%40googlegroups.com.

N. Ganesan

unread,
May 23, 2020, 9:57:49 PM5/23/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தமிழில் பழங்காலத்தில் கொடி என்றால் (1) Flag (flexible) (2) Standard (solid). [T. Tu. koḍi, M. koṭi.] Banner, flag, standard, streamer; துவசம். கொடியுங் கவரியும் (பெருங். உஞ்சைக். 57, 57). ஏற்றத்தின் கொடி, தாழ்மரம். கரும்பும், வெதிரும் மூங்கிலுக்கும் கொடி என்ற பெயர் ஐங்குறுநூற்றில் உள்ளமை இதற்குச் சான்று.

இந்தப் பழைய வழக்கத்தால் நேர்ந்த குழப்பத்தைச் சரி செய்ய, மலையாளிகள் திடம்பு என்று தெய்வதத்தின் Banner/Standard-கு ஒருசொல் அமைத்துக்கொண்டனர். கேரள அம்பலங்களில் சீவேலி என்னும் உற்சவத்தில் திடம்பு யானை மீதேறி ஊர்வலம் வரும்.

மணப்புள்ளிக்காவில் திடம்பு (காளியின்) ஏந்தும் களிறு:

திடம்பிறக்கம்:

ஆனையூட்டு உல்சவம் (திருச்சிவப்பேரூர் வடக்குநாதன் கோவில்)

ஒப்பிடுவதற்கு, ஒரு எடுத்துக்காட்டு தரலாம். இது போன்றவற்றை எழுத்தியலில் Disambiguation என்பர். உ-ம்: தமிழின் (தொல்., நன்னூல்) 18 மெய்கள் மாத்திரம் கொண்டு தமிழல்லாத பிற இந்திய, அறபி, ஆங்கில வார்த்தைகளை எழுதும்போது குழப்பம் வரும். தவிர்க்க, 5 மெய்யெழுத்துக்களை நம் முன்னோர் தமிழில் பயன்படுத்தலாயினர். இன்று கணினித் தமிழில் வெகுவாகப் பயன்படும் வடவெழுத்துக்கள் அவை.
83537032_2553613578217117_811910525734778365_n.jpg

On Mon, May 18, 2020 at 10:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Jul 10, 2021, 10:17:19 AM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
கோவையில் மின்சார மோட்டார்களும், பம்ப் செட்களும் பெருந்தொழில் ஆகும் முன்னர் இந்தியாவில் ஏற்றம் இறைத்தல் மூலமாகத்தான் கிணற்று நீர், குளத்து நீர் இறைக்கப்பட்டது. ஏற்றத்தில் தாழ்மரம் தாழ்த்தியும், ஏறியும் செயல்படும். கொடி என்பது கயிற்றில் தாழ்மரத்தில் பொருந்தியது. அதனடியில் கமலை இருக்கும்.
எருதுகளைப் பூட்டிக் கமலையில் நீர் இறைப்பதும் உண்டு. கமலை ஏற்றத்தின் கொடி முழுதும் கயிற்றாலோ, கயிறும், கம்பியும் சேர்ந்ததாகவோ இருக்கும்.

இந்த வாரத்தில், எங்கள் கம்பெனியில் அமெரிக்கக் கடற்படையும் போயிங் நிறுவனமும் இணைந்து செய்துள்ள தொழிநுட்பச் சாதனை சாதித்த
குழுவினர் அதில் உள்ள நுணுக்கங்கள், சந்தித்த சிக்கல்கள் பற்றி விளக்கும் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். எதிர்காலங்களில் போர்களில்
பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய செயல். உ-ம்: காஷ்மீரத்தில் பெரிய நாடுகள் மோதினால் பயன்படக் கூடியதுமாகும்.

சுரும்பர் (drone) எரிநெய்யை ஏற்றிச் செல்கிறது. அதனுள் அடங்கி இருக்கும் கொடியைத் துருத்தி வெளியே நீட்டுகிறது. சுரும்பரும், போர்விமானமும் பறப்பதோ
500 மைல் வேகத்தில்! பல்லாயிரம் அடி உயரத்தில்! சுரும்பரால் விமானம் எரிநெய் பெறுகிறது.
சுரும்பர் தன் கொடிகொண்டு போர்விமானத்தில் எரிநெய் நிரப்பும் காட்சி.
Unmanned MQ-25A Tanker Refuels Super Hornet for the First Time
image003.png
கொடி எனும் சொல் தமிழில் மிக ஆழமான சொல். ஏற்றத்தின் கொடி, தாழ்மரம் பற்றி இவ்விழையில் நிறையச் சொல்லியுள்ளேன்.
கொடிப்புலி = cheetah ; கொடிநாய் = greyhound, e.g., Diana huntress with koDinAy. etc., கொடிக்கறி = jerky ....
பிற பின்!
~NG

On Mon, May 18, 2020 at 10:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages