இடையர் சிற்பங்கள்

293 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Jul 8, 2017, 6:52:19 AM7/8/17
to mintamil

கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம் வீடாறு மாசம்

முன்னுரை

குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.

“தி இந்து”  தமிழ் நாளிதழ் 

சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.

மேய்ப்பாளரின் கூற்று

அவர் கூறுகிறார்:

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு  கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.

                                                   ஹம்பியில்

                                                 தாரமங்கலத்தில்

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156. 

தேமொழி

unread,
Jul 10, 2017, 10:31:23 PM7/10/17
to மின்தமிழ்
அருமையான பகிர்வு நன்றி திரு. சுந்தரம்.   
எனக்கும் எப்பொழுதோ இது போன்ற ஒரு  சிற்பத்தின் படத்தைப் பார்த்த  நினைவு உள்ளது. 
எதற்கு முக்காடு என நினைத்திருக்கிறேன்.
இது போல சாதாரண மக்களின் வாழ்க்கைமுறையைக் காட்டும்  சிற்பங்களின் படங்களைத்  தொகுப்பதுடன், அதன் பின்னர் உள்ள நடைமுறைகளையும் நாம்  தெரிந்து கொள்ள வேண்டும்ந (நடுகற்கள் கட்டுவது போல உண்மை வரலாறுகளை நாம்  அறிய வேண்டும்.  புராணக்கதைகளின் சித்தரிப்பு எந்தப் பயனைத் தருகிறது என "எனக்குப்" புரியவில்லை).
யாளி, நாலு கை ஆறு கைகள் போன்ற மனித உருவங்கள்,  இயற்கைக்கு மாறான..  உண்மைக்குப் புறம்பான சிலைகளைப் பார்துப் பார்த்து அலுத்துவிட்டது எனக்கு.

நன்றி.

..... தேமொழி 

Suresh Kumar

unread,
Jul 10, 2017, 11:24:02 PM7/10/17
to mint...@googlegroups.com

இந்த சிற்பத்தில் உள்ள காட்சியை என் இளமை பருவத்தில் பலமுறை பார்த்து இருக்கிறேன் . வேலூர்  மாவட்டம் கலவை அருகில் உள்ள மேலப்பழந்தை கிராமத்தில். 

என் உறவுகளின் வாழ்வியல் சிற்பம் அருமை !!!!!!!!!!!!

 சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மட்டுமல்ல 20 ஆண்டு முன்பு கூட இப்படிதான் மழைக்காலத்தில் 

வரலாற்றைத் தேடி 

சுரேஷ் குமார்
தென்கொரியா .

dorai sundaram

unread,
Jul 10, 2017, 11:24:20 PM7/10/17
to mintamil
மிகவும் நன்றி தேமொழி அவர்களே.
எளிய மக்களின் வாழ்க்கைமுறைகளைக் காட்டும் கோயில்
சிற்பங்களை இனம் கண்டு அவற்றைப் பதிவிடலாம். குறவன்,
குறத்தி போன்றவர்களின் சிற்பங்களையும் பார்த்த நினைவு.
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

dorai sundaram

unread,
Jul 10, 2017, 11:25:45 PM7/10/17
to mintamil
நன்றி சுரேஷ் குமார்.
சுந்தரம்.

Singanenjam Sambandam

unread,
Jul 11, 2017, 2:13:42 AM7/11/17
to mint...@googlegroups.com
நல்ல பதிவிற்கு நன்றி 

Malarvizhi Mangay

unread,
Jul 11, 2017, 5:01:26 AM7/11/17
to mint...@googlegroups.com

சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.

On 11-Jul-2017 12:17 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

நல்ல பதிவிற்கு நன்றி 

N. Ganesan

unread,
Jul 11, 2017, 9:06:09 AM7/11/17
to மின்தமிழ், dorai sundaram, vallamai, L Srinivas, housto...@googlegroups.com

On Tuesday, July 11, 2017 at 2:01:26 AM UTC-7, malarmangay64 wrote:

சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.

ஆமாம். இதன் பெயர் கொங்காடை. வரகூர் (பர்கூர்) அருகே ஒரு கிராமத்தின் பெயரே இவ்வுடையால்: கொங்காடை.
துறவியரும் இதுபோன்ற முரட்டுத் துணியால் போர்த்திக்கொள்வர். திருவலம் மௌன சாமிகள் சாக்குத்துணியை
அரையில் கட்டியிருப்பார். பக்கு பக்காக இருப்பதால் “பக்குடுக்கை” என்று அவ்வகைத் துணிகளுக்குப் போலும்.
பக்குடுக்கை நன்கணியார் என்னும் சோதிடர் சங்கப் பெரும்புலவர் பாடலை அறிந்திருப்பீர்கள்.

மரக் கிளைகளை வளைத்து ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கவும், சாய்ந்து தூங்கவும்
இடையன் கோல் வைத்திருப்பான். இடையனும் கோலும், ஐயங்காரும் புளியோதரையும் போல ;-)

சிற்பத்தில் காட்டப்பெறும் இடையனும் கோலும் சங்க இலக்கியம், ஆழ்வார்கள், ... எல்லோரும் பாடியுள்ளனர்.
சிறுவர் பாடல் “கொழுகொழு கன்றே” என தொடங்குவதில் “இடையன் கைக் கோலே” என்று வரும்.

பிற பின்!
நா. கணேசன்
 
On Saturday, July 8, 2017 at 3:52:19 AM UTC-7, dorai sundaram wrote:

கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம் வீடாறு மாசம்

முன்னுரை

குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.

“தி இந்து”  தமிழ் நாளிதழ் 

சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.

மேய்ப்பாளரின் கூற்று

அவர் கூறுகிறார்:

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு  கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.

                                                   ஹம்பியில்

                                                 தாரமங்கலத்தில்

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jul 11, 2017, 9:16:07 AM7/11/17
to மின்தமிழ், doraisu...@gmail.com, vall...@googlegroups.com, lsri...@gmail.com, housto...@googlegroups.com

N. Ganesan

unread,
Jul 11, 2017, 10:14:42 AM7/11/17
to மின்தமிழ், doraisu...@gmail.com, vall...@googlegroups.com, lsri...@gmail.com, housto...@googlegroups.com

On Tuesday, July 11, 2017 at 2:01:26 AM UTC-7, malarmangay64 wrote:

சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.

தலையசைத்தால் போதும்! என்ற கட்டுரையில் (புது டயரி) - ரசிகர்கள் வாழ்த்து கலைஞர்களுக்கு
முக்கியம் என்பதை கூத்தாடி ஒருவன் அரசன் கொடுத்த விலையுயர் பரிசைவிட
இடையன் அளித்த சாக்குக் கொங்காடையைப் போற்றி வைத்ததைச் சொல்லி விளக்குகிறார் கிவாஜ.
கபிலர் மலையமானைப் பாடிய செய்யுளுக்கும் விளக்கம்.

என் மடல்களைப் பாராட்டிய அன்பர் கல்பட்டார் இன்றில்லை. அவர் ஞாபகார்த்தமாக.

இடையன் அளித்த சாக்கே பெரிது!

கிவாஜ, தலையசைத்தால் போதும்!

dorai sundaram

unread,
Jul 11, 2017, 11:46:04 AM7/11/17
to mintamil
இடையர்களோடு  தொடர்புடைய சுவையான செய்திகளைத்
திரு. கணேசன் அவர்கள் த்ந்துள்ளார்.
நன்றி.
சுந்தரம்.

N. Ganesan

unread,
Jul 12, 2017, 10:42:01 AM7/12/17
to மின்தமிழ், vallamai, Srinivasakrishnan ln

2017-07-11 8:48 GMT-07:00 L Srinivas <lsri...@gmail.com>:
Sackcloth, a fabric made of course hemp, is refered to frequently in the Bible (mostly in the Old Testament but very occasionally in the New Testament too). See

Woe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works, which were done in you, had been done in Tyre and Sidon, they would have repented long ago in sackcloth and ashes.  (Matt 11:21) 

The sackcloth was worn during times of mourning, repentance and also, to signify humility. 

The Sufi mystics (Islamic mystics) got their name from a course wool cloak worn by them called 'suf' - this is similar in nature. 

The sackcloth garment is generally supposed to have '4 corners' i.e., it has no stitches.

Srini

Thanks, LS for your note of sack cloth in ancient Near East.

செம்மறி ஆடு மேய்க்கும் குறும்பர்கள் (கன்னடத்தில் குறுபரு) செம்மறியாட்டு மயிரால் கம்பளி செய்து
கொங்காடை தலைக்குப் போர்த்துவர். சணலாலோ, கம்பளியாலோ இவ்வாடை.

குறும்பர் குறிஞ்சி, குறிச்சி சொல்லுடன் தொடர்புடையது முல்லைத்திணை மேட்டு நிலம் குறிச்சி.

மேடாக அமர்வதை Chair - குறிச்சி என்கிறோம் அல்லவா?

நா. கணேசன்

Srinivasakrishnan ln

unread,
Jul 12, 2017, 10:47:26 AM7/12/17
to N. Ganesan, மின்தமிழ், vallamai
'kursi' is Arabic for throne, from which  most Indian words meaning 'chair' are understood to be derived.

Srini

Srini

N. Ganesan

unread,
Jul 13, 2017, 10:04:18 AM7/13/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Saturday, July 8, 2017 at 3:52:19 AM UTC-7, dorai sundaram wrote:

                                                   ஹம்பியில்

செம்மறிக் கம்பளி (அ) கோணிப்பை (கோணி > சணல்) கொண்ட கொங்காடை காட்டும் ஹம்பி சிற்பத்தோடு, இன்னும் சில:

இச் சிற்ப ஒளிப்படம் + விஜயநகர கால தூண் சிற்பங்கள் பல காண,

இடையன் தன் கொங்காடையை அவதானி ஒருவனுக்கு அளித்த கதையை விஸ்தாரமாக
கிவாஜ எழுதியுள்ளார். இடையன் கோல்பற்றிய இலக்கியச் செய்திகளை, சங்கம், ஆழ்வார்
இனிப் பார்க்கலாம்.

-------------------

கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் சமணம் தமிழகம் வந்த கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து வலுத்த தொடர்பு இருந்துவருகிறது.
இப்போதைய கர்நாடகத்தின் தென்பகுதி காவிரி தோன்றும் சையமலைப் பகுதிகள் கொங்குநாடு ஆக இருந்துள்ளது.
அதனைக் கங்க ராஜ்ஜியம் என்பர் கன்னடிகர். இன்றும் கொங்க மாடுகளை (உ-ம்: காங்கயம்) கன்னடிகர் கங்க மாடு
என்கின்றனர். அவர்கள் மாடுகளை பள்ளிகர் (ஹள்ளிகர்) இனம் என்கின்றனர். மிக அதிகமாக, தமிழ்நாடு - கர்நாடகா
தொடர்புகளை விளக்குவது இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் தான். அங்கே புழக்கத்தில் வெகுவாக உள்ள
காவதம்/காதம் என்ற சொல்லை தமிழில் அறிமுகப்படுத்தியவர் அவரே. 

அகத்தியர் கதைகள் போன்ற பிற்காலப் புராணங்களை
மிகுதியும் பாடும் சிலப்பதிகாரம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு எனத் தமிழறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். மாதவி, கோவலன், கண்ணகி,
கனக விஜயர் என்னும் கதாபாத்திரங்களின் பெயர்கள் காரணப்பெயர்களாகக் கொடுத்துள்ளார். மாதவி = குருக்கத்தி.
கண்ணகி = முல்லைத் திணைக்கு நாயகி. கற்புக்கரசி. கற்புடையாள் கொங்கை அணங்கு நிறைந்ததால், திருகி வீசியபோது
மதுரையே எறிந்து பாழ்பட்டது. கற்பின் திறம். முல்லைக்கு பகரி (ஸப்ஸ்டிட்யூட்) குருக்கத்தி. எனவே, மாதவி என்று 
கணிகைமாதுக்கு பெயர் அமைத்தார் இளங்கோ அடிகள். கோவலன் - கிருஷ்ணன். பட்டத்தரசி போன்றவள் கண்ணகி.
முதலும், தலைமை மனைவி. எனவே தான், பத்தினி என்ற வடசொல்லை ஆள்கிறார் அடிகள். தலைமைத் தன்மை
பட்டிமை. அசுவமேத யாகத்தில் பட்டமகிஷியின் பங்கு அதிகம். பட்டம் - பட்டி - பட்டிமை என கண்ணகியின்
தலைவி நிலையைப் பேசுகிறார் காப்பியத்தில்.

சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள். பலவகையாக வளர்ந்துவந்த
எல்லா சமயங்களும் தங்களுடையவன் என்று கொண்டாடியவன் இந்தச் சாத்தன். அதனால் தான் பாசண்டி என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறார் அடிகள். “உலகியற்றியான்” என்று சாத்தனை பிரமதேவ யக்‌ஷனாக கர்நாடகாவில் ஜைநர்களும்,
பிறரும் கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட யக்‌ஷனை சமண மரபில் “உலகியற்றியான்” என்கிறார் வள்ளுவரும்.
அடிப்படையில் இது பாசண்ட சாத்தன் தான். வடபுலத்தில் இருந்து தெற்கே வந்து இரும்பும், குதிரையும்,
நெல் வேளாண்மையும் அறிமுகம் செய்யும் வேளிர்கள், அவர்களின் குறியீடு ஐயனார்/சாத்தன். சாத்தனுக்கு
இன்றும் சைவ உணவே படையல். ஐயனார் வடிவம் பிற்காலத்தில் அவலோகித போதிசத்வருக்கும்,
தக்கிணாமூர்த்திக்கும் (சைவம்) ஏற்படுவதை விரிவாக 20 ஆண்டுமுன் கட்டுரை எழுதியுள்ளேன்:

பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு:

சாத்தன் என்னும் அய்யனார் வழிபாடு. அவனை பாசண்ட சாத்தன் என்று
இளங்கோ அடிகள் அழைப்பது பற்றி தனியிழையில் பார்ப்போம் [1].

நா. கணேசன்

MTL:
பாசண்டச்சாத்தன் pācaṇṭa-c-cāttaṉ

n. < பாசண்டம் +. Aiyaṉār, a deity versed in treatises on heretical religions; சமய நூல்களில் வல்லவரான ஐயனார். (சிலப். 9, 15.)

பாசண்டம் pācaṇṭam

n. < pāṣaṇḍa. 1. Heresy, non-conformity to the orthodox doctrines of religion; புறச்சமயக்கொள்கை. 2. Doctrines relating to 96 heretic sects; தொண் ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9, 15.)

பாசண்டமூடம் pācaṇṭa-mūṭam

n. < id. +. See பாசண்டிமூடம். (W.)

பாசண்டன் pācaṇṭaṉ

n. < pāṣaṇḍa. 1. Heretic; புறச்சமயி. பாசண்டர் நவிற்று வாக்கியத் தில் (விநாயகபு. 83, 77). 2. Person of heterodox conduct; துராசாரமுள்ளவன். Colloq.

பாசண்டி pācaṇṭi

n. < id. See பாசண்டன். பழுதாகும் பாசண்டியார்க்கு (அறநெறி. 17).

பரசண்டிகன் pācaṇṭikaṉ

n. < pāṣaṇḍika. See பாசண்டன். (சங். அக.)

பாசண்டிமூடம் pācaṇṭi-mūṭam

n. < பாசண்டி +. (Jaina.) Folly of reverencing heretical teachers; புறச்சமயத்தினரைப் போற்றும் மடமை. பாசண்டி மூடமாய் . . . நாட்டப்படும் (அற நெறி. 16).

தேமொழி

unread,
Jul 13, 2017, 3:41:11 PM7/13/17
to மின்தமிழ்
சாத்தன் என்பது தமிழ்ச் சொல். 

சாஸ்தா என்ற வடமொழிச்சொல்லினை தமிழில் (வடமொழி தவிர்க்கும் நோக்கில்) சாத்தன் என்று குறிப்பிட்டார்கள் 

சாஸ்தா என்பது புத்தரின் பெயர் என்றும் சாஸ்தா என்பது தமிழில் சாத்தன் என்று கூறப்படுகிறது எனவும்    மயிலை சீனி. வேங்கடசாமி  அவர்களின்  பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இந்தியப்  பின்கோட் தரவுகளில் சாத்தன் என்ற பெயரில் உள்ள ஊர்களைத் தேடியபொழுது, அவை தமிழகப் பகுதிகளில் மட்டும் கிடைத்தன என்பதையும்    நினைவு கூர்கிறேன்.

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 13, 2017, 11:00:24 PM7/13/17
to மின்தமிழ்

On Thursday, July 13, 2017 at 12:41:11 PM UTC-7, தேமொழி wrote:

சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்.

சாத்தன் என்பது தமிழ்ச் சொல். 

சாஸ்தா என்ற வடமொழிச்சொல்லினை தமிழில் (வடமொழி தவிர்க்கும் நோக்கில்) சாத்தன் என்று குறிப்பிட்டார்கள் 

சாஸ்தா என்பது புத்தரின் பெயர் என்றும் சாஸ்தா என்பது தமிழில் சாத்தன் என்று கூறப்படுகிறது எனவும்    மயிலை சீனி. வேங்கடசாமி  அவர்களின்  பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்ச் சொற்களில் பல பிரிவுகளை தொல்காப்பியம், நன்னூல் தருகின்றன. அவற்றில் ஒன்று: வடசொல்.
சாத்தன் என்பது தற்பவமாக இருக்கும் வடசொல். அதனைத் தான்
சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்
என்றேன்.

ஶங்கர > சங்கரன் என்னும் வடசொல் ஆக விளங்குவதுபோல்
ஶாஸ்த > சாத்தன் என்ற வடசொல் ஆக தமிழில் இருக்கிறது.

நா. கணேசன்
 
மேலும் இந்தியப்  பின்கோட் தரவுகளில் சாத்தன் என்ற பெயரில் உள்ள ஊர்களைத் தேடியபொழுது, அவை தமிழகப் பகுதிகளில் மட்டும் கிடைத்தன என்பதையும்    நினைவு கூர்கிறேன்.

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 13, 2017, 11:04:43 PM7/13/17
to மின்தமிழ்

On Thursday, July 13, 2017 at 8:00:24 PM UTC-7, N. Ganesan wrote:

On Thursday, July 13, 2017 at 12:41:11 PM UTC-7, தேமொழி wrote:

சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்.

சாத்தன் என்பது தமிழ்ச் சொல். 

சாஸ்தா என்ற வடமொழிச்சொல்லினை தமிழில் (வடமொழி தவிர்க்கும் நோக்கில்) சாத்தன் என்று குறிப்பிட்டார்கள் 

சாஸ்தா என்பது புத்தரின் பெயர் என்றும் சாஸ்தா என்பது தமிழில் சாத்தன் என்று கூறப்படுகிறது எனவும்    மயிலை சீனி. வேங்கடசாமி  அவர்களின்  பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்ச் சொற்களில் பல பிரிவுகளை தொல்காப்பியம், நன்னூல் தருகின்றன. அவற்றில் ஒன்று: வடசொல்.
சாத்தன் என்பது தற்பவமாக இருக்கும் வடசொல். அதனைத் தான்
சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்
என்றேன்.

Okey Dokey 

C.M உதயன்

unread,
Jul 14, 2017, 6:21:32 AM7/14/17
to mintamil, dorai sundaram
இந்த சிலை விருதுநகர் முருகன் கோவிலில் எடுத்தேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

N. Ganesan

unread,
Jul 14, 2017, 9:13:52 AM7/14/17
to மின்தமிழ்
பெண் துறவி ஆக இருக்கலாம். சாக்குத் துணியாக தெரிகிறது.

வீரசைவர்களுக்கு அக்கம்மாதேவி (அக்க மகாதேவி)
தலைமுடியை மட்டும் தரித்து வாழ்ந்தவர்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Jul 16, 2017, 3:27:29 PM7/16/17
to மின்தமிழ்

ref:

https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ

https://groups.google.com/group/mintamil/attach/8f952210d837f/TimePhoto_20170716_165133.jpg?part=0.1&authuser=0&view=1

முனைவர் காளைராசன்  கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.

அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும். 

N. Ganesan

unread,
Jul 16, 2017, 6:49:14 PM7/16/17
to மின்தமிழ்
Keen eyes!

N. Kannan

unread,
Jul 17, 2017, 12:41:29 AM7/17/17
to மின்தமிழ்
2017-07-11 21:16 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
​ஆகா! அழகு! இதைச் சொல்ல வந்தேன், நீங்கள் சுட்டி கொடுத்துவிட்டீர்கள். நானும் கடலோடி நரசய்யாவும் உ.வே.சா அவர்களின் பேரனுடன் பேசிக்கொண்டிருந்த போது இக்கதையை நினைவு படுத்தினார். அப்போது அவர் சொன்னது, “இடையன் வெட்டு  அரைவெட்டு  என்பது!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Jul 22, 2017, 2:20:02 AM7/22/17
to மின்தமிழ்

On Sunday, July 16, 2017 at 12:27:29 PM UTC-7, தேமொழி wrote:

ref:

https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ

https://groups.google.com/group/mintamil/attach/8f952210d837f/TimePhoto_20170716_165133.jpg?part=0.1&authuser=0&view=1

முனைவர் காளைராசன்  கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.

அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும். 

தண்டுகால் ஊன்றிய தனிநிலை யிடையன்
                                                     - முல்லைத் திணைப் பாட்டு, அகநானூறு

என்னே தமிழின் இளமை!

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 22, 2017, 2:44:23 AM7/22/17
to மின்தமிழ்

இவ்வாறு வலதுகாலை மடித்து இடது பக்கம் ஊன்றி உடலைத் தாங்கி நிற்பது "இடையர்களுக்கு மட்டுமே வழக்கம்" போலும் (நெடுநேரம் நிற்பதால் அவ்வாறு நிற்கும் நிலை பழக்கத்திற்கு வந்திருக்கலாம்) . 
எல்லோரும் கோலும், முக்காடும்/கொங்காடையும், சுரைக்குடுக்கையும்  (?? குடிநீருக்காக??) வைத்திருக்கிறார்கள். 

இது போன்ற காலூன்றும் அமைப்பு இடையரான கண்ணனுக்கு மட்டுமே சிலைகளிலும் படங்களிலும் காட்டப்படுகிறது.

வேறு யாருக்காவது  இது போன்ற நிற்கும் முறை காட்டப்படுகிறதா என்பதை இனி கவனமாகப் பார்க்க வேண்டும்.

.... தேமொழி 

Suba

unread,
Jul 22, 2017, 3:31:51 AM7/22/17
to மின்தமிழ்
திருச்சி திருஆனைக்கா கோவில் இடையர் சிற்பம்

Inline image 1

சுபா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

N. Ganesan

unread,
Jul 24, 2017, 9:44:54 AM7/24/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, R. Radhakrishnan, Radhakrishna Warrier
On Sunday, July 16, 2017 at 12:27:29 PM UTC-7, தேமொழி wrote:

ref:

https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ

https://groups.google.com/group/mintamil/attach/8f952210d837f/TimePhoto_20170716_165133.jpg?part=0.1&authuser=0&view=1

முனைவர் காளைராசன்  கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.

அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும். 

இடைச்சியர் மோர்விற்பது எல்லா இந்திய இலக்கியங்களிலும் காண்கிறோம். தமிழில் கலம்பகங்களில் இடைச்சியர் பாடல்வரும்
காளமேகம் கண்ட அனுபவம் சுவையானது. மோரில்லாமல் நீர்போல இருந்ததை வாங்கிக் குடித்தபின் பாடியுள்ளார்:

           காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
           நீரென்று   பேர்படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
           வாரொன்று மென்னகிலார் ஆய்ச்சியர்கைப் பட்டதற்பின்
           மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

மலையாளத்தில் தாளித்த மோரை ஸம்பாரம் என்கிறார்கள். Buttermilk with condiments, spices.
நாம் நீர் மோர் என்பதை மலையாளத்தில் சம்பாரம் என்பார்கள். வெறும் இஞ்சி, கறிவேப்பிலை மட்டுமன்றி விதம் விதமான மசாலாக்களுடன் இந்த சம்பாரத்தை உருவாக்குவார்களாம் . எனது பாலக்காட்டு நண்பர் ஒருவர் 9 விதமான சம்பாரம் செய்வாராம்.”

இந்த வடமொழிச்சொல் 16-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வெட்டுகளில்
மடைப்பள்ளி மளிகைச்சாமான்களில் ஒன்றாக வந்துவிடுகிறது.
அதில் இருந்து மராட்டியர் கால வளர்ச்சியாக, சாம்பார், சாப்பாடு என்ற
சொற்கள் தமிழிலே உருவாகின்றன. மேலும் பார்ப்போம்.

நா. கணேசன்

 Butter milk സംഭാരം - Sambhaaram | Sambharam
Butter milk and water mix സംഭാരം - Sambhaaram | Sambharam
Butter-milk സംഭാരം - Sambhaaram | Sambharam
Commissariat ആഹാര സംഭാരപവകുപ്പ്‌ - Aahaara Sambhaarapavakuppu | ahara Sambharapavakuppu
Grocer സംഭാരവണികന്‍ - Sambhaaravanikan‍ | Sambharavanikan‍
Output ഉത്‌പാദിതദ്രവ്യസംഭാരം - Uthpaadhithadhravyasambhaaram | Uthpadhithadhravyasambharam
Provider സംഭാരകന്‍ - Sambhaarakan‍ | Sambharakan‍
Provision സംഭാരം - Sambhaaram | Sambharam
Relay മാറിമാറി ഉപയോഗിക്കാനുള്ള സംഭാരം - Maarimaari Upayogikkaanulla Sambhaaram | Marimari Upayogikkanulla Sambharam
Repertory സംഭാരം - Sambhaaram | Sambharam
Reserve സംഭാരം - Sambhaaram | Sambharam
Sorus സംഭാരം - Sambhaaram | Sambharam
Store-ship യുദ്ധസംഭാരക്കപ്പല്‍ - Yuddhasambhaarakkappal‍ | Yudhasambharakkappal‍
Victual ഭക്ഷ്യസംഭാരം - Bhakshyasambhaaram | Bhakshyasambharam
Victualler ഭക്ഷണസംഭാരകന്‍ - Bhakshanasambhaarakan‍ | Bhakshanasambharakan‍
Wardrobe വസ്‌ത്രസംഭാരം - Vasthrasambhaaram | Vasthrasambharam
Wareവ്യാപാരസംഭാരങ്ങള്‍ - Vyaapaarasambhaarangal‍ | Vyaparasambharangal‍

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 24, 2017, 11:49:12 AM7/24/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.
சிவகங்கை மதுரை மாவட்டில் உள்ள அனேக சிவாலங்களில் இடையன் சிற்பங்கள் இருக்கிறன.
யாத்திரை முடிந்ததும் படங்களை இணைக்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 24, 2017, 11:53:37 AM7/24/17
to mintamil, vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, lsri...@gmail.com, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.

On 11-Jul-2017 7:44 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> On Tuesday, July 11, 2017 at 2:01:26 AM UTC-7, malarmangay64 wrote:
>>>
>>> சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
>>> அன்றி சாக்கை இது போலக்
>>> கவிழ்த்துச் செல்வதையும்
>>> கண்டிருக்கிறோம். எனவே
>>> சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
>>> இருக்க வாய்ப்புள்ளது என
>>> எண்ணுகிறேன்.
>>
>>
>
> தலையசைத்தால் போதும்! என்ற கட்டுரையில் (புது டயரி) - ரசிகர்கள் வாழ்த்து கலைஞர்களுக்கு
> முக்கியம் என்பதை கூத்தாடி ஒருவன் அரசன் கொடுத்த விலையுயர் பரிசைவிட
> இடையன் அளித்த சாக்குக் கொங்காடையைப்

சிவகங்கை மாவடத்தில் கொங்காணி என்கின்றர்.
தென்னை ஓலையால் செய்தும் பயன் படுத்துகின்றனர்.  இனிப் பார்க்கும் போது படம் எடுத்துப் பதிவு செய்கிறேன்.

போற்றி வைத்ததைச் சொல்லி விளக்குகிறார் கிவாஜ.
> கபிலர் மலையமானைப் பாடிய செய்யுளுக்கும் விளக்கம்.
>
> என் மடல்களைப் பாராட்டிய அன்பர் கல்பட்டார் இன்றில்லை. அவர் ஞாபகார்த்தமாக.
>
> இடையன் அளித்த சாக்கே பெரிது!
>
> கிவாஜ, தலையசைத்தால் போதும்!
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>  
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>  
>>

>> பிற பின்!
>> நா. கணேசன்
>>  
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> On Saturday, July 8, 2017 at 3:52:19 AM UTC-7, dorai sundaram wrote:
>>>>>>>>
>>>>>>>> கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம்… வீடாறு மாசம்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> முன்னுரை
>>>>>>>>
>>>>>>>> குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> “தி இந்து”  தமிழ் நாளிதழ் 
>>>>>>>>
>>>>>>>> சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> மேய்ப்பாளரின் கூற்று
>>>>>>>>
>>>>>>>> அவர் கூறுகிறார்:
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> ”மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு  கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>                                                    ஹம்பியில்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>

>>>>>>>>                                                  தாரமங்கலத்தில்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>

N. Ganesan

unread,
Jul 25, 2017, 9:44:50 AM7/25/17
to Radhakrishna Warrier, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, R. Radhakrishnan, Srinivasakrishnan ln

2017-07-25 6:03 GMT-07:00 Radhakrishna Warrier <radha_...@yahoo.com>:
Interesting sculpture.  How old is this gopuram?

Thanks, Sri Radhakrishna Warrier. I would think this is an Imperial Pandya period (or, very late Chozha period) sculpture. 12-13th centuries CE.
Now, of course, due to modern Kumbabhishekams, cement coated. In the ancient Vishnu temple of Urayur in Trichy, old Chola capital.

Yes. Our family used to keep two tanneer pandal-s, one in Zamin Kaliapuram, another in Sulakkal for a century or so. Offering free 'niir mOr'
This is considered one of the 32 dharma-s & for travellors. Now Palghat district & entire TN is almost 4-5 degrees hotter than normal.
As u know, for the last three years, SW monsoon is a failure. It is difficult to keep cattle, no fodder. Without mechanization, I wonder
how many lakhs of cattle would have been sent to Kerala due to the current drought.

Cowherds are also iTaiyan-s, the present CM of Tamil Nadu come from a village, iTai-p-pATi. Cowherds' village.

I have to add the Tamil inscriptions of 16th century onwards, using the Sanskrit term, saMbhaara, and how
the words, saambhaar and saappaaDu (with -D- vocalic R of sanskrit, probably a backformation.
Like words in HaDtaal/Hartaal, GauDi/Gauri 'goddess, wild buffalo', GhaDiyaal/Ghariaal 'gangetic croc', ...

NG
 
The word iṭayaṉ (equivalent of Tamil iṭaiyaṉ) is normally used in modern Malayalam in the sense of shepherd, i.e., one who herds sheep.  Did it also have the meaning of cowherd, i.e., one who herds cows?  That meaning might be more applicable in the Indian context because I think there were more cowherds than shepherds in ancient India.

Sambhāram used to be a very popular drink in Kerala.  Very refreshing and cooling.  In the olden days sambhāram used to be kept in the "gate house" (paṭippura = gate with roof and some space to rest) of traditional homes for the free use of "vaẓipōkkar" (wayfarers). This, I think, was considered as a religious offering (vaẓipāṭu).

From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: vallamai <vall...@googlegroups.com>; housto...@googlegroups.com; R. Radhakrishnan <radha...@gmail.com>; Radhakrishna Warrier <radha_...@yahoo.com>
Sent: Monday, July 24, 2017 6:51 AM
Subject: Re: [MinTamil] Re: இடையர் சிற்பங்கள்
Reply all
Reply to author
Forward
0 new messages